27-04-2013
என் இனிய வலைத்தமிழ் மக்களே..!
தமிழ்ச் சினிமா போற போக்கைப் பார்த்தால் பயமாகத்தான் இருக்கிறது..! தற்போதைய டிரெண்ட்டுக்கு ஏற்றாற்போல் படமெடுப்பதாக சொல்லி வைத்தாற்போல் அனைவரும் சொன்னாலும், இவர்கள் சொல்லும் டிரெண்டு.. இன்றைய இளைய சமுதாயத்தினர் பற்றிய சினிமாக்காரர்களின் எண்ணமெல்லாம் கோரமாகத்தான் இருக்கிறது.. இந்தப் படமும் அதற்கொரு சாட்சி..!
கல்லூரி படிப்பையே முழுமையாக முடிக்காத ஒருவன் காதல்வயப்பட்டு திருமணம் செய்து கொண்டு, பிள்ளையையும் பெற்றுவிட்ட பின்பும் பொறுப்பு வராமல் தேமே என்று திரிகிறான். அவனுக்கு புத்தி வருவதற்காக மனைவியின் சகோதரரான ஒரு மனநல மருத்துவர் போடும் நாடகம்.. கடைசியில் அந்தக் குடும்பத்தையே பிரிக்க நினைக்கிறது.. அவனது குழந்தை அவனுக்குப் பிறக்கவில்லை.. யாரோ ஒரு மகேஷ் என்பவனுக்கு பிறந்திருக்கிறது என்று மனைவியே சொல்வது போல டிராமா போட.. கணவன் அதை நம்பி ரொம்ப சீரியஸாக அந்த மகேஷை தேடி, தேடி அலைவதுதான் படம்..! ம்ஹும்.. புதிய சிந்தனைகள் தேவைதான்.. ஆனால் அதற்காக இந்த அளவுக்கு இறங்கணுமா என்ன..?
அத்தோடு படம் முழுவதும் விரவியிருக்கும் டபிள், டிரிபிள் மீனிங் டயலாக்குகளை நினைத்தால் இதன் இயக்குநரை உச்சி முகிர்ந்து பாராட்ட தோன்றுகிறது.. எப்படியும் 'ஏ' சர்டிபிகேட்டுதான்.. டிவியில் காட்ட முடியாது.. குழந்தைகளுடன் வர மாட்டார்கள்.. வரிவிலக்கு கிடைக்காது.. எல்லாம் தெரிந்தும் ''ஏ' படம்தான் எடுத்திருக்கிறேன் என்று தைரியமாக இதன் இயக்குநர் சொல்கிறார்.. இதன் பாதிப்பு சத்தியமாக இவருக்கு இல்லை. ஆனால் சினிமாவுலகத்துக்கு நிச்சயமாக கிடைக்கும்..! ஏற்கெனவே சேட்டை படம் பார்த்து பேஸ்த்தடித்துப் போன குடும்பஸ்தர்கள் இன்னும் 3 மாதங்களுக்கு தியேட்டர் பக்கம் வரப் போவதில்லை.. இப்போது இந்தப் படம்.. இதையும் பார்த்துவிட்டு ஓடுபவர்களால் அடுத்து வரவிருக்கும் சின்ன பட்ஜெட் படங்களுக்குத்தான் பாதிப்பு ஏற்படும்..! இது எங்கே இவர்களுக்குப் புரியப் போகிறது..?
அப்பாவும், மகனும் ஆபாச படம் பார்க்க அலைவது.. ஹீரோ, ஹீரோயினில் துவங்கி படத்தின் அனைத்து கேரக்டர்களும் ஆளுக்கொரு வசனமாக டபுள் மீனிங்கை அள்ளி வீசியிருக்கிறார்கள்..! வழக்கம்போல கல்லூரி ஆசிரியர், ஆசிரியைகளை சம்பந்தப்படுத்தி ஒரு ஆபாச திரைக்கதை..! கல்லூரி ஆசிரியரும் அப்படியே வசனங்களை பேசுகிறாராம்..! ரோபா சங்கர்-அரவாணி சம்பந்தப்பட்ட காட்சிகள் முழுவதும் தேவைதானா..? யாரைத் திருப்திப்படுத்த இப்படியெல்லாம் சீன் வைக்கிறார்கள்..? இப்படி எடுத்தால் இளைஞர் கூட்டம் விழுந்தடித்துக் கொண்டு ஓடி வரும் என்று நினைத்துவிட்டார்கள் போலும்..! நல்ல நினைப்புதான்..!
ஹீரோ சந்தீப்.. திரும்பிப் பார்க்க வைக்காத முகம்.. இது மாதிரியான சப்பையான கேரக்டர்களுக்கு தோதானவர்.. உண்மையாகவே நடித்திருக்கிறார் இடைவேளைக்கு பின்பான காட்சிகளில் மட்டும்..! மச்சி மச்சி என்று அலையும் ஜெகனின் பல கமெண்ட்டுகள் ஆபாசமாகவே இருந்தாலும் தியேட்டரில் கை தட்டல்கள் ஒலிக்கின்றன. ஆச்சரியமாக இருக்கிறது.. எப்படி ரசிக்கிறார்கள் இதையெல்லாம்..? இவரும், இவரது மனைவியும் சம்பந்தப்பட்ட காட்சிகள் நிஜமாகவே நடப்பது போல அழகாக எடுக்கப்பட்டிருக்கிறது..!
அதேபோல் அந்த டிரெம் செட் மகேஷின் ட்ரூப் ஸாங் சீனும் ரசிக்கும்படியிருந்தது..! சிங்கமுத்து காமெடி வழக்கம்போல வழவழவென்றாலும் அந்த இரவு நேர கல்யாணத்தின்போது தியேட்டரே அதிர்ந்தது..! சிற்சில இடங்களில் நகைச்சுவையை மட்டுமே மையப்படுத்தி எடுக்கப்பட்டிருப்பதால் இந்த மாதிரியான வசனங்களையும் மீறி ரசிக்க முடிகிறது..!
ஹீரோவுக்கு நேரெதிராக ஹீரோயின் டிம்பிள்.. அழகோ அழகு.. சின்னப் பொண்ணு.. பாடல் காட்சிகளிலும் நெருக்கமான படுக்கையறை காட்சிகளிலும் வஞ்சகமில்லாமல் நடித்திருக்கிறார்.. காட்டியிருக்கிறார்.. இப்போது வாரத்திற்கு 4 ஹீரோயின்கள் அறிமுகமாகிறார்கள் என்பதால், இப்படி எல்லாவற்றுக்கும் முந்தினால்தான் நிலைக்க முடியுமென்று யாரோ சொல்லிக் கொடுத்திருப்பார்கள் போலும்..!
கோபிசந்தரின் இசையில் பாடல்கள் ஒலித்தன. எதுவும் காதில் விழுகவில்லை.. ஒரு குத்துப் பாட்டுக்கு ஆடிய அம்மணியை வலைவீசித் தேட வேண்டும்.. என்னவொரு ஸ்டிரெச்சர்..? எங்கேயிருந்து பிடித்தார்கள் என்று தெரியலையே..? டூயட் பாடல்களைத் தவிர சோகப் பாடல்களில் இசை மட்டுமே பிரதானமாக இருக்க.. பாவம் ஹீரோ.. கத்தி, கத்தி பாடி தன் தொண்டைத் தண்ணியை வற்ற வைத்திருக்கிறார்..!
'நான் ராஜாவாகப் போகிறேன்' படத்தில் ஹீரோயின் சுய இன்பம் அனுபவிப்பதை நுட்பமாண காட்சியாக திணித்திருந்தார்கள். அடுத்தது இந்தப் படம்.. ஏற்கெனவே தெலுங்கில் இதேபோல பல சின்ன ஹீரோக்களும் நடித்துக் காட்டிவிட்டார்கள். இதில் இந்த ஹீரோ..! இது இப்படியே எங்கே போய் முடியும் என்று தெரியவில்லை..!
அந்த டிரெயின் காட்சிகள்.. சுவாமிநாதனும், பெண் ஆசிரியையும் சம்பந்தப்பட்ட காட்சிகள்.. டிரெயினில் முதல் இரவு செட்டப்பு.. காண்டம் வாங்கி தயாராவது.. என்றெல்லாம் இன்றைய யூத்துகளுக்கான காட்சிகளாக நினைத்து வைத்திருந்தால்.. ஸாரி.. இதன் இயக்குநர் ரொம்பவே பின்னாளில் கண்டிப்பாக ஃபீல் செய்ய வேண்டி வரும்..!
கல்லூரி, படிப்பு, காதல், கல்யாணம் என்று வரிசையாக வந்திருக்க வேண்டியதற்கு முன்பேயே காதல், உடல்சுகம், கல்யாணம் என்று மாற்றியெடுத்து கல்லூரியையும், படிப்பையும் அப்படியே அந்தரத்தில் தொங்க விட்டதில் படத்தின் தன்மையே மாறிவிட்டது..
காதல், கல்யாணம், சந்தேகம் என்றாவது வந்திருந்தால் ஒரு வழக்கமான சினிமாவாக வந்திருக்கும்.. இப்படி ரெண்டுங்கெட்டானாக எடுத்துத் தொலைத்திருப்பதால் இதனை பிட்டு படமாகவும் பார்க்க முடியவில்லை. தியேட்டரில் தைரியமாக முகத்தைக் காட்டி பார்க்க வேண்டிய சினிமாவாகவும் நினைக்க முடியவில்லை..! இதன் இயக்குநர் மதன்குமார், அடுத்த படத்தில் தன்னைத் திருத்திக் கொண்டால் திரையுலகத்துக்கு பெரிதும் நல்லது..!
|
Tweet |
27 comments:
படத்தின் தயாரிப்பாளர்
தயாரிப்பாளரின் தந்தைக்கும் பேரறிஞர் அண்ணாவிற்கும் உள்ள நட்பு
பாரம்பரியம் , கண்ணியம் ,
குறித்து ஒரு வரி கூட இல்லை
"யாருடா மகேஷ் " கண்டிப்பாக பார்க்க வேண்டிய திரைப்படம் தானோ
அண்ணாச்சி,
படம் எடுத்த விதம் நல்லா இருக்கா இல்லையானு சொல்லுங்க அதன் அறம்,தார்மீகம் பற்றி எல்லாம் நீங்க கவலைப்பட வேண்டியதேயில்லை, ஏன் எனில் பிரபல பேனர்,நடிகர், இயக்குனர் என்றால் அதனை நீங்களே கண்டுக்காம படத்தின் நுட்பம் குறித்து பேச கிளம்புறவர் தானே :-))
அப்புறம் இயக்குனரும் தயாரிப்பாளர்களில் ஒருவர் நாலுப்பேரா சேர்ந்து எடுத்திருக்காங்க, படம் யாரு ,எப்படி எடுத்தாங்கன்னு தெரியாமலே தயாரிப்பாளர் பற்றி கவலைப்படுறிங்களே :-))
//இப்படி ரெண்டுங்கெட்டானாக எடுத்துத் தொலைத்திருப்பதால் இதனை பிட்டு படமாகவும் பார்க்க முடியவில்லை. தியேட்டரில் தைரியமாக முகத்தைக் காட்டி பார்க்க வேண்டிய சினிமாவாகவும் நினைக்க முடியவில்லை..!
//
ஏ செர்டிபிகேட் கொடுத்தாலே அது கில்மா படம் தான்னு முடிவு எடுப்பீங்களா, அந்தக்கால பாக்யராஜின் படமெல்லாம் ஏ செர்டிபிகேட் வாங்கி தாய்குலத்தின் ஆதரவோட ஓடி இருக்கு, உ.ம்: முந்தானை முடிச்சு.
[[[ராம்ஜி_யாஹூ said...
படத்தின் தயாரிப்பாளர்
தயாரிப்பாளரின் தந்தைக்கும் பேரறிஞர் அண்ணாவிற்கும் உள்ள நட்பு
பாரம்பரியம், கண்ணியம்,
குறித்து ஒரு வரி கூட இல்லை.]]]
படத்தின் ஒரிஜினல் தயாரிப்பாளர் அன்பு இல்லீங்கண்ணா.. அவர் வாங்கி விநியோகம் மட்டுமே பண்ணியிருக்காரு..!
[[[Prem s said...
"யாருடா மகேஷ் " கண்டிப்பாக பார்க்க வேண்டிய திரைப்படம்தானோ..]]]
அடல்ஸ்ட் ஒன்லி படம்.. நீங்க வயதுக்கு வந்தவர்ன்னா பார்க்கலாம்..!
[[[வவ்வால் said...
அண்ணாச்சி, படம் எடுத்த விதம் நல்லா இருக்கா இல்லையானு சொல்லுங்க.. அதன் அறம்,தார்மீகம் பற்றி எல்லாம் நீங்க கவலைப்பட வேண்டியதேயில்லை, ஏன் எனில் பிரபல பேனர்,நடிகர், இயக்குனர் என்றால் அதனை நீங்களே கண்டுக்காம படத்தின் நுட்பம் குறித்து பேச கிளம்புறவர்தானே :-))]]]
ம்.. ஓகே.. உம்ம கிண்டல் புரியறது..! அப்படி வித்தியாசம் காட்டி வேற ஏதாவது விமர்சனம் எழுதியிருந்தா சொல்லும்..!
[[[அப்புறம் இயக்குனரும் தயாரிப்பாளர்களில் ஒருவர் நாலு பேரா சேர்ந்து எடுத்திருக்காங்க, படம் யாரு, எப்படி எடுத்தாங்கன்னு தெரியாமலே தயாரிப்பாளர் பற்றி கவலைப்படுறிங்களே :-))]]]
இயக்குநரை நம்பித்தானே மற்ற மூவரும் பணம் போட்டிருக்காங்க..!
//இப்படி ரெண்டுங்கெட்டானாக எடுத்துத் தொலைத்திருப்பதால் இதனை பிட்டு படமாகவும் பார்க்க முடியவில்லை. தியேட்டரில் தைரியமாக முகத்தைக் காட்டி பார்க்க வேண்டிய சினிமாவாகவும் நினைக்க முடியவில்லை..!//
ஏ செர்டிபிகேட் கொடுத்தாலே அது கில்மா படம்தான்னு முடிவு எடுப்பீங்களா, அந்தக் கால பாக்யராஜின் படமெல்லாம் ஏ செர்டிபிகேட் வாங்கி தாய்குலத்தின் ஆதரவோட ஓடி இருக்கு, உ.ம்: முந்தானை முடிச்சு.]]]
ஓய்.. அது அந்தக் காலம்.. முந்தானை முடிச்சு படத்தை குடும்பத்தோட உக்காந்து பார்த்தாங்க. இப்ப பேமிலியோட போனா பல தியேட்டர்ல உள்ள விட மாட்டாங்க.. வசூல் குறையும்.. அத்தோட மக்களுக்கும் சினிமா பார்க்குற ஆர்வம் அப்போ இருந்த மாதிரி இப்போ இல்லையே..?
Trailer கலக்கலா இருந்து படம் இப்படி ஊத்திக்கிச்சே... !!!
நமக்கு எப்படியும் இங்க ரிலீஸ் ஆகாது.. தப்பிச்சோம்
நன்றி அண்ணாச்சி....
அட விடுங்க அண்ணாச்சி, வரவர எல்லா படமும் இப்படித்தான் வருது. திறமை இல்லாத டைரக்டருகளும், நடிகர்களும் கோடியில சம்பளம் வாங்க, முட்டாள் தமிழர்கள் காசை வீண் பண்ணி படம் பார்த்தால் இப்பிடித்தான் படம் எடுப்பணுங்கள். நாம எல்லாம், நாலு மாசம் கழித்து டிவியில பார்க்கரதோட நிறுத்துரவரைக்கும் இவனுங்க அடங்க மாட்டானுங்க. ஒரு வழியா வவ்வாலை மறுபடி புடுச்சிட்டண்னே? ஆமா ஹிரோயின் இடுப்பு விகாசாவை விட நல்லா இருக்கா?
நன்றி.
"தமிழ்சினிமா போற போக்கு பயமாகத்தான் இருக்கு".
பொறுமையாக இருந்து பார்ப்பதற்கு :( எமக்கு அவங்கதான் காசு தரவேண்டும்.:)
[[[Nondavan said...
Trailer கலக்கலா இருந்து படம் இப்படி ஊத்திக்கிச்சே... !!! நமக்கு எப்படியும் இங்க ரிலீஸ் ஆகாது.. தப்பிச்சோம். நன்றி அண்ணாச்சி.]]]
நன்றி நொந்தவன் அண்ணாச்சி..! ஒருத்தன் கஷ்டப்படுறான்.. அதுனால பல பேரு சந்தோஷப்படுறாங்க..! இதை விதின்னு சொல்றதா.. அல்லாட்டி ஏமாளித்தனம்னு சொல்றதா..?
[[[joe said...
அட விடுங்க அண்ணாச்சி, வர வர எல்லா படமும் இப்படித்தான் வருது. திறமை இல்லாத டைரக்டருகளும், நடிகர்களும் கோடியில சம்பளம் வாங்க, முட்டாள் தமிழர்கள் காசை வீண் பண்ணி படம் பார்த்தால் இப்பிடித்தான் படம் எடுப்பணுங்கள். நாம எல்லாம், நாலு மாசம் கழித்து டிவியில பார்க்கரதோட நிறுத்துரவரைக்கும் இவனுங்க அடங்க மாட்டானுங்க. ஒரு வழியா வவ்வாலை மறுபடி புடுச்சிட்டண்னே? ஆமா ஹிரோயின் இடுப்பு விகாசாவை விட நல்லா இருக்கா?]]]
ஏத்தி விடுறதையும் ஏத்திவிட்டுட்டு இப்போ வந்து சமாதானம் செய்யறதை பாரு..!?
இதுல இவருக்கு விசாகாவோட இடுப்பு சைஸ் தெரியணுமாம்..? ரொம்ப அவசியம்..!?
[[[மாதேவி said...
நன்றி.
"தமிழ் சினிமா போற போக்கு பயமாகத்தான் இருக்கு".
பொறுமையாக இருந்து பார்ப்பதற்கு:( எமக்கு அவங்கதான் காசு தர வேண்டும்.:)]]]
இனிமா காசு வாங்கிட்டுத்தான் படம் பார்க்கணும்..! அப்படியொரு சூழல் வரும்ன்னு நினைக்கிறேன்..!
// அழகாக எடுக்கப்பட்டிருக்கிறது..! //
// தியேட்டரே அதிர்ந்தது..! //
// ரசிக்க முடிகிறது..! //
அண்ணாச்சி... இதெல்லாம் வஞ்சப்புகழ்ச்சியா அல்லது உண்மையிலேயே ரசித்தீர்களா ? ஒன்னும் புரியலையே...
// ஒரு குத்துப் பாட்டுக்கு ஆடிய அம்மணியை வலைவீசித் தேட வேண்டும்.. என்னவொரு ஸ்டிரெச்சர்..? //
அம்மையார் பெயர் சனா ஒபராய்... மலையாள டிராகுலா (தமிழில் நான்காம் பிறை) படத்தில் ஆட்டம் போட்டவர்...
// ஏற்கெனவே சேட்டை படம் பார்த்து பேஸ்த்தடித்துப் போன குடும்பஸ்தர்கள் இன்னும் 3 மாதங்களுக்கு தியேட்டர் பக்கம் வரப் போவதில்லை.. இப்போது இந்தப் படம்.. இதையும் பார்த்துவிட்டு ஓடுபவர்களால் அடுத்து வரவிருக்கும் சின்ன பட்ஜெட் படங்களுக்குத்தான் பாதிப்பு ஏற்படும்..! இது எங்கே இவர்களுக்குப் புரியப் போகிறது..? //
Well said... புதுமையா டிரைலர் கட் பண்ண வகையில் ஒன்பதுல குரு, யாருடா மகேஷ் பார்த்து ஏமாந்துவிட்டோம்... இது சூது கவ்வும், சுட்ட கதை இன்னபிற நூற்றுக்கணக்கான புதுமை ஆசாமிகள் மீது பயத்தை ஏற்படுத்தியுள்ளது...
// இயக்குநர் மதன்குமார், அடுத்த படத்தில் தன்னைத் திருத்திக் கொண்டால் திரையுலகத்துக்கு பெரிதும் நல்லது..! //
இயக்குனருக்கு அடுத்த படம் கிடைக்கும்ங்குறீங்க ? கிக்கி கிக்கி...
அண்ணாச்சி... நான் படத்தை இங்கே ஒரு லோக்கல் தியேட்டரில் நைட் ஷோ பார்த்தேன்... ஒருவர் பத்து வயதளவில் இரண்டு குழந்தைகளுடன் கூடிய குடும்பத்துடன் திரையரங்கத்திற்கு வந்திருந்தார்... ஆனால் விவரம் தெரியாமல் தான் வந்திருப்பார் என்று நினைக்கிறேன்...
[[[Philosophy Prabhakaran said...
// அழகாக எடுக்கப்பட்டிருக்கிறது..! //
// தியேட்டரே அதிர்ந்தது..! //
// ரசிக்க முடிகிறது..! //
அண்ணாச்சி... இதெல்லாம் வஞ்சப் புகழ்ச்சியா அல்லது உண்மையிலேயே ரசித்தீர்களா ? ஒன்னும் புரியலையே.]]]
வஞ்சப் புகழ்ச்சியில்லை தம்பீ.. உண்மையான புகழ்ச்சி..!
[[[Philosophy Prabhakaran said...
//ஒரு குத்துப் பாட்டுக்கு ஆடிய அம்மணியை வலைவீசித் தேட வேண்டும்.. என்னவொரு ஸ்டிரெச்சர்..?//
அம்மையார் பெயர் சனா ஒபராய்... மலையாள டிராகுலா (தமிழில் நான்காம் பிறை) படத்தில் ஆட்டம் போட்டவர்.]]]
கருணாஸின் ஒரு படத்திலும் ஆடியிருக்கிறாராம்..!
[[[Philosophy Prabhakaran said...
//ஏற்கெனவே சேட்டை படம் பார்த்து பேஸ்த்தடித்துப் போன குடும்பஸ்தர்கள் இன்னும் 3 மாதங்களுக்கு தியேட்டர் பக்கம் வரப் போவதில்லை.. இப்போது இந்தப் படம்.. இதையும் பார்த்துவிட்டு ஓடுபவர்களால் அடுத்து வரவிருக்கும் சின்ன பட்ஜெட் படங்களுக்குத்தான் பாதிப்பு ஏற்படும்..! இது எங்கே இவர்களுக்குப் புரியப் போகிறது..? //
Well said... புதுமையா டிரைலர் கட் பண்ண வகையில் ஒன்பதுல குரு, யாருடா மகேஷ் பார்த்து ஏமாந்துவிட்டோம். இது சூது கவ்வும், சுட்ட கதை இன்ன பிற நூற்றுக்கணக்கான புதுமை ஆசாமிகள் மீது பயத்தை ஏற்படுத்தியுள்ளது.]]]
ஒரு சிலர்தான் இப்படியொரு ஏமாற்றத்தை ஏற்படுத்துகிறார்கள். அது இண்டஸ்ட்ரியையே பாதிக்கிறது..! இது எங்க போய் முடியுமோ..?
[[[Philosophy Prabhakaran said...
//இயக்குநர் மதன்குமார், அடுத்த படத்தில் தன்னைத் திருத்திக் கொண்டால் திரையுலகத்துக்கு பெரிதும் நல்லது..! //
இயக்குனருக்கு அடுத்த படம் கிடைக்கும்ங்குறீங்க ? கிக்கி கிக்கி...]]]
கண்டிப்பா கிடைக்கும்.. அதுதான் கோடம்பாக்கம்..!
[[[Philosophy Prabhakaran said...
அண்ணாச்சி. நான் படத்தை இங்கே ஒரு லோக்கல் தியேட்டரில் நைட் ஷோ பார்த்தேன். ஒருவர் பத்து வயதளவில் இரண்டு குழந்தைகளுடன் கூடிய குடும்பத்துடன் திரையரங்கத்திற்கு வந்திருந்தார். ஆனால் விவரம் தெரியாமல்தான் வந்திருப்பார் என்று நினைக்கிறேன்...]]]
ஆமாம்.. இன்னமும்கூட பத்திரிகைகள் வாசிக்காமல், வெளியுலகம் அறிந்து கொள்ளாமல் இருப்பவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள்..!
அண்ணே, கண்ணா லட்டுக்கு அப்புறம் படம் பார்த்து ரொம்ப நாள் ஆச்சு . ரொம்ப எதிர்பார்த்த எதிர் நீச்சல், சூது கவ்வும், மூன்று பேர் மூன்று காதல் வந்திருக்கு. சீக்கிரம் விமர்சனம் போட்டா பர்சை பதம் பார்க்காம நல்ல படம் மட்டும் பார்க்கலாம். சூது கவ்வும் ஹீரோயின் முகம் சுமார்னாலும் இடுப்பு சுண்டியிழுக்குது.:)
ippadi patta padangal thevaithana....
[[[joe said...
அண்ணே, கண்ணா லட்டுக்கு அப்புறம் படம் பார்த்து ரொம்ப நாள் ஆச்சு . ரொம்ப எதிர்பார்த்த எதிர் நீச்சல், சூது கவ்வும், மூன்று பேர் மூன்று காதல் வந்திருக்கு. சீக்கிரம் விமர்சனம் போட்டா பர்சை பதம் பார்க்காம நல்ல படம் மட்டும் பார்க்கலாம். சூது கவ்வும் ஹீரோயின் முகம் சுமார்னாலும் இடுப்பு சுண்டியிழுக்குது.:)]]]
எதிர்நீச்சல், சூது கவ்வும் ரெண்டுமே நல்லாயிருக்கு. பார்க்கலாம். 3 பேர் 3 காதல் சொதப்பல்.. வேஸ்ட்டு..!
[[[Dooring Talkies said...
ippadi patta padangal thevaithana.]]]
இதையும் ரசிக்க ஆள் இருக்குன்னு சொல்றாரு இயக்குநரு..!
Post a Comment