ஒருவர் மீது இருவர் சாய்ந்து - சினிமா விமர்சனம்

26-04-2013


என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

விஜய்யை வைச்சு 'லவ் டுடே', 'துள்ளித் திரிந்த காலம்', மாதவன் நடிப்பில் 'ஆர்யா'ன்னு படங்களைக் கொடுத்திட்டு அதுக்கப்புறமா  நீண்ட வருடங்களாக படம் இயக்காமல் இருந்த அண்ணன் பாலசேகரனுக்கு, இப்போதைய டிரெண்டுக்கு ஏற்றாற்போல ஒரு படம் செய்யணும்னு ஆசை.. ஆனா அதுக்காக இந்த அளவுக்கு நம்ம யெங்கர்ஸை கேவலப்படுத்தியிருக்க வேண்டாம்..?


ஒரு பையன் ஒரு பொண்ணை லவ் பண்றான்.. அந்தப் பொண்ணு லவ் ஓகே.. பட் கல்யாணம்ன்னா ஒரு கண்டிஷன்னு சொல்லுது.. என்ன்ன்னு பையன் கேக்குறான். நானும் இன்னொருத்தியும் ரொம்ப திக்கஸ்ட்டு பிரெண்ட்ஸ்.. எந்தக் காலத்துலேயும் நாங்க ரெண்டு பேரும் பிரியக் கூடாதுன்னு நினைச்சுக்கிட்டிருக்கோம். அதுனால நீ எங்க ரெண்டு பேரையுமே கல்யாணம் செஞ்சுக்கணும்னு சொல்றா.. பையன் தப்பிச்சான்னா.. மாட்டினானான்றதுதான் கதை..! வித்தியாசமா இருக்குல்ல..?

ம்ஹும்.. இப்படி வித்தியாசம், வித்தியாசம்ன்னு சொல்லித்தான் கதையை இந்த அளவுக்குக் கொண்டு வந்திருக்காங்க.. இது இன்னும் எங்க போய் முடியப் போவுதோ தெரியலை..!

பையன் லகுபரன்.. ராட்டினத்துல அறிமுகமானவரு.. ஒரு ஹீரோயின் ஸ்வாதியும் ராட்டினம் அறிமுகம்தான். இன்னொரு ஹீரோயின் சான்யதாரா..! காவி டிரெஸ்ல பழனில லகுபரனை பார்க்கும்போதே ஏதோ காதல் தோல்வி மாதிரியிருக்கேன்னு பாக்யராஜ் கேட்டு அந்த பிளாஷ்பேக்கை ஓப்பன் பண்ற பிளாக் நல்லாவே இருக்கு..  ஸ்வாதி-லகுபரன் காதல் எபிஸோட் மட்டும் படத்துல பார்க்குறதுக்கு சுவாரஸ்யமாயிருக்கு..! வானிலை அறிக்கையை வாசிக்கும் ஸ்வாதியை மழையைக் காணோம்.. வெயிலைக் காணோம்ன்னு வழி மறித்து வம்பு செய்து காதலை வளர்க்கும் லகுபரனின் அந்தக் காதல் முயற்சிகள் முற்பாதியில் ரொம்பவே படத்தை இண்ட்ரஸ்ட்டா கொண்டு போச்சு.. பட்.. அந்த இண்டர்வெல் பிளாக்ல ஸ்வாதி வைச்ச டிவிஸ்ட்டோட திக்குன்னு ஆகியிருச்சு..!

அதுக்கப்புறமா ஹைதராபாத்ல அக்கா வீட்டுக்கு போயிருக்கும் அங்கே வீட்டுக்குப் பக்கத்துல இருக்குற சான்யதாராவோட லவ்வாகி கல்யாண மேடைல நிக்கும்போது ஸ்வாதி வந்து கல்யாணத்தை நிறுத்துறதுவரைக்கும்கூட ஓகே.. அதுக்கப்புறம்தான் கதையை எப்படி முடிக்கிறதுன்னு தெரியாம, லைட்டா.. ஏதோ பொண்ணுக சின்னப்புள்ளத்தனமா பேசுதுகு.. நாம பெரியவங்க.. நாமதான் சூதுவாதா சொல்லி சமாளிச்சு அவங்களுக்கு புத்திமதி சொல்லணும்ன்னு அகில உலக அறிவுரை கழகத் தலைவர் விசு அவர்களும், அகில உலக குடும்பஸ்தர்கள் சங்கத் தலைவர் கே.பாக்யராஜும் சேர்ந்து வசனமா பேசி அந்தப் புள்ளைகளுக்கு புத்திமதி சொல்லி முடிச்சு வைக்குறாங்க..!

ஸ்வாதி ராட்டினத்துக்கு இப்போ பரவாயில்லைதான்.. கைப்புள்ள பேரைக் கேட்டு கொதிக்கும்போதுதான் நடிப்பே தெரியுது..! அந்த கைப்புள்ள மேட்டரும் சூப்பருதான்.. இனிமே அந்தப் பொண்ணை எங்க பார்த்துலும் அப்படியே கூப்பிட்டிருவாங்களே..? இடைல இடைல வர்ற சிரிப்பு போலீஸ் ராஜ்கபூரை பார்க்கும்போதுதான் பாலசேகரன் அண்ணனுக்கு எவ்வளவு கற்பனை வறட்சில இருந்தாருன்னு தெரியுது.. இப்படியொரு பொழப்பத்த போலீஸை நீங்க மெட்ராஸ்ல எங்கேயுமே பார்த்திருக்க முடியாது..!

குடித்துவிட்டு ரகளை கேஸ்ல லகுபரனை கோர்ட்டுக்கு கொண்டு வந்தா அவரோ காந்தி ஜெயந்தி அன்னிக்கு பிளாக்ல சரக்கு வித்த கவுன்சிலர், மந்திரி எல்லாரையும் கோர்ட்டுக்கு இழுக்குறாராம்.. இதை நீதிபதி விசு தனது டவாலியிடம் திரும்பி ஏதோ ஒரு டீ போடுன்னு சொல்ற மாதிரி ஜாலியா நோட்டீஸ் அனுப்பச் சொல்றாரு..! மந்திரிவரைக்கும் கோர்ட்டுக்கு வர்றாங்களாம்.. இந்த மொக்கை காமெடி திரைக்கதைக்கு டிவி சீரியல்கள் எவ்வளவோ பெட்டர்..!

சான்யதாரா ஹைதராபாத்தில் இருக்கிறார். அவர்தான் ஸ்வாதியின் பெஸ்ட் பிரெண்ட் என்பது ஏதோ தற்செயலா நடந்த மாதிரியும், ஹீரோயின்ஸ் ரெண்டு பேரும் அதையே சூஸ் பண்ணி பிக்கப் பண்ற மாதிரியும் திரைக்கதையில் இருக்கும் ஓட்டை மிகப் பெரியது..!

வீட்ல தனியா இருக்குற பொண்ணுகூட ஒரு பையனை பார்த்த அதிர்ச்சில கோபப்படும் சான்யாவின் குடும்பத்தினர், ரெண்டு கல்யாணத்துக்கு எப்படி ஒத்துக்கிட்டாங்கன்னும் தெரியலை.. ஏதோ சாதாரணமா குழந்தைத் திருமணம் மாதிரி ஏற்பாடு பண்ணி வைச்சு அதுக்கு ஆளாளுக்கு ஒரு நியாயம் சொல்றதை நினைச்சாத்தான் கொடூரமா இருக்கு..! 

இதுல மணமேடைல ஐயர் மதன்பாப், ஹீரோகிட்ட கொஸ்டீன் மேல கொஸ்டீனா கேக்குறாரு.. "சாந்தி முகூர்த்தமெல்லாம் எப்படி..? இன்னைக்கொண்ணு.. நாளைக்கொண்ணா..? இல்லாட்டி ரெண்டுமே ஒரே நேரத்துலயா..? எப்படி சமாளிப்பேள்..? நோக்கு முன் அனுபவம் இருக்கா..?" - ஓ.. நன்னா இருக்கு டயலாக்ஸ்.. பேஷ்.. பேஷ்..!

கடைசீல அதுவரைக்கும் அவ்வளவு குளோஸான பிரெண்ட்ஸா இருந்தவங்க.. யார் கழுத்துல மொதல்ல தாலி கட்டணும்..? யார்கூட மொதல் சாந்தி முகூர்த்தம்..? யார் எச்சிக்கை..? என்றெல்லாம் பேச்சு வந்தவுடன் மனசு மாறி ஈகோ பெரிசாகி தங்களுக்குள் சண்டை போட்டு திருந்துற மாதிரி சீன்ஸ் வைச்சு.. உஷ்.. அப்பாடா.. சீரியஸ் கதாசிரியர்களெல்லாம் கொஞ்சம் இந்தப் பக்கம் காதை திருப்பினா அவங்களுக்கு நல்லது. இது மாதிரி ஏதாவது சீரியல் கதையை சீரிஸயா எடுங்கப்பா.. வருஷக்கணக்கா ஓடும்..!

ஷிவாவின் இசையில் பாடல்களின் வரிகள் பளீச்சென்று கேட்கிறது.. 1995 பாடல்கள் போல் இருக்கின்றன...! பாடல் காட்சிகளை மட்டும் ரம்மியமாக எடுத்திருக்கிறார்..! இளமை சொட்டுகிறது..! ஆனாலும் கதையில் பருப்பு வேகாததால் இன்னும் 4 பாட்டு வைச்சிருக்கலாமேன்னுதான் தோணுது..!

ஏற்கெனவே தோழியுடன் பிரிவு-தற்கொலைன்னு தினத்தந்தில டெய்லி நியூஸ் வந்துக்கிட்டிருக்கு.. இந்த நேரத்துல இப்படியொரு கோணத்தையும் காட்டிட்டீங்களா.. இனிமேல் இப்படியும் சில செய்திகள் நம்ம காதுக்கு வரத்தான் போகுது.. அந்தப் புண்ணியத்தை அண்ணன் பாலசேகரனே அடையட்டும் என்று வாழ்த்துகிறேன்..!

14 comments:

குட்டிபிசாசு said...

இவரு பாலசந்தரோட சிஷ்யனா?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

விஜய்யை வைச்சு லவ் டுடே, மாதவன் நடிப்பில் ஆர்யான்னு ரெண்டு படங்களைக் கொடுத்திட்டு அதுக்கப்புறமா நீண்ட வருடங்களாக படம் இயக்காமல் இருந்த அண்ணன் பாலசேகரனுக்கு
//

துள்ளித்திரிந்த காலம் யார் படம்னே? சினிமால இருந்துக்கிட்டே தப்பு தப்பா டீடைல்ஸ் தர்ரதுக்கு பேசாம இருக்கலாம்ல

Prakaash Duraisamy said...

துள்ளாத மனமும் துள்ளும் Directed by Ezhil....

kanavuthirutan said...

எல்லாப் படங்களையும் பார்த்துவிடுகிறீர்களே... உங்களுக்கு உண்மையிலேயே தைரியம் அதிகம்தான்....

வவ்வால் said...

அண்ணாச்சி,

ஒரு பையன் ரெண்டுப்பொண்ணுலாம் ரொம்ப காலமா சொல்லப்பட்ட கத தானே, தெலுகுல ஒரு பொண்ணு ரெண்டு பையன் கல்யாணம் கட்டிக்கிறாப்போல எடுத்தப்படத்தை தான் இப்படி உல்டா பண்ணியிருக்காங்க,அந்த படத்தை முன்னர் தமிழில் மிட்டாய்னு எடுத்தாங்க ,போஸ்டர் கூட ரெண்டுப்பேரு மாப்பிள்ளை கெட்டப்ல ஒரு பொண்ணோட நிப்பாங்க.

இப்போ அதே வெளங்காத கதையை ரெண்டு பொண்ணு ஒரு பையனு மாத்தி எடுத்திருக்காங்க போல,கேவலமான கதைய கூட சுட்டுத்தான் எடுக்கணுமா அவ்வ்!

வெளங்காத படமா இருந்தாலும் வெளக்கமா விமர்சனம் போட உங்களை விட்டா ஆளேக்கிடையாது :-))

உண்மைத்தமிழன் said...

[[[குட்டிபிசாசு said...

இவரு பாலசந்தரோட சிஷ்யனா?]]]

இல்ல ஸார்..! இந்த மாதிரி கதைன்னவுடனேயே அவர்தான் ஞாபகத்துக்கு வர்றாரா..?

உண்மைத்தமிழன் said...

[[[ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

விஜய்யை வைச்சு லவ் டுடே, மாதவன் நடிப்பில் ஆர்யான்னு ரெண்டு படங்களைக் கொடுத்திட்டு அதுக்கப்புறமா நீண்ட வருடங்களாக படம் இயக்காமல் இருந்த அண்ணன் பாலசேகரனுக்கு//

துள்ளித் திரிந்த காலம் யார் படம்னே? சினிமால இருந்துக்கிட்டே தப்பு தப்பா டீடைல்ஸ் தர்ரதுக்கு பேசாம இருக்கலாம்ல..]]]

அவசரத்துல மறந்திட்டேன் தம்பீ.. இதுக்கெதுக்கு அடிக்க வர்ற மாதிரி கமெண்ட் போடுற..?

ஆமாம்.. படம் பத்தி ஒண்ணுமே சொல்லலையா..? குத்தம் மட்டும்தான் கண்ணுல படுமாக்கும்..?

உண்மைத்தமிழன் said...

[[[Prakaash Duraisamy said...

துள்ளாத மனமும் துள்ளும் Directed by Ezhil....]]]

கரீக்ட்டு ஸார்.. துள்ளித் திரிந்த காலம்ன்னு டைப் செய்றதுக்கு பதிலா இப்படி பண்ணிட்டேன். மன்னிச்சுக்குங்க..!

உண்மைத்தமிழன் said...

[[[kanavuthirutan said...

எல்லாப் படங்களையும் பார்த்து விடுகிறீர்களே. உங்களுக்கு உண்மையிலேயே தைரியம் அதிகம்தான்.]]]

வேலையே இதுதான்.. அப்புறம் எப்படி பார்க்காமல் இருப்பது..?

உண்மைத்தமிழன் said...

[[[வவ்வால் said...

அண்ணாச்சி, ஒரு பையன் ரெண்டு பொண்ணுலாம் ரொம்ப காலமா சொல்லப்பட்ட கததானே... தெலுகுல ஒரு பொண்ணு ரெண்டு பையன் கல்யாணம் கட்டிக்கிறாப்போல எடுத்தப் படத்தைதான் இப்படி உல்டா பண்ணியிருக்காங்க. அந்த படத்தை முன்னர் தமிழில் மிட்டாய்னு எடுத்தாங்க. போஸ்டர்கூட ரெண்டு பேரு மாப்பிள்ளை கெட்டப்ல ஒரு பொண்ணோட நிப்பாங்க. இப்போ அதே வெளங்காத கதையை ரெண்டு பொண்ணு ஒரு பையனு மாத்தி எடுத்திருக்காங்க போல, கேவலமான கதையகூட சுட்டுத்தான் எடுக்கணுமா அவ்வ்! வெளங்காத படமா இருந்தாலும் வெளக்கமா விமர்சனம் போட உங்களை விட்டா ஆளே கிடையாது. :-))]]]

உங்களது வாழ்த்துக்கு மிக்க நன்றி வவ்ஸ்..!

Nondavan said...

அண்ணாச்சி...உங்க விமர்சனம் தான் எங்களுக்கு என்சைக்லோபீடியா, நல்லா சொல்லிருக்கீங்க ப்டத்தைப்பற்றி...

உங்களால் பலபேர் புழச்சுக்குறாங்க... :) :) :)

Nondavan said...

நீங்க சினிமா சார்ந்த துறையில் வேலையில் இருக்கீங்கன்னு தெரியும். அது என்ன வேலையில் இருக்கீங்க என்று தெரிஞ்சுக்கலாமா.. அண்ணாச்சி...??? !!!

உண்மைத்தமிழன் said...

[[[Nondavan said...

அண்ணாச்சி... உங்க விமர்சனம்தான் எங்களுக்கு என்சைக்லோபீடியா, நல்லா சொல்லிருக்கீங்க ப்டத்தைப் பற்றி...
உங்களால் பலபேர் புழச்சுக்குறாங்க... :) :) :)]]]

இதுனால எனக்கென்ன புண்ணியம்..? கைவலிப்பதுதான் மிச்சம்..!

உண்மைத்தமிழன் said...

[[[Nondavan said...

நீங்க சினிமா சார்ந்த துறையில் வேலையில் இருக்கீங்கன்னு தெரியும். அது என்ன வேலையில் இருக்கீங்க என்று தெரிஞ்சுக்கலாமா.. அண்ணாச்சி...??? !!!]]]

தனி மெயிலில் கேளுங்க.. சொல்றேன்.. இது பப்ளிக்கு.. பப்ளிக்கு..!