வலையுலக எழுத்தாளர்களுக்கு வாழ்த்துக்கள்

10-09-2007
என் இனிய வலைத்தமிழ் மக்களே..!
வலையுக எழுத்தாளர்களின் பிம்பங்கள் மீது மீடியா பிம்பங்களின் பார்வை பட ஆரம்பித்துவிட்டது போலும். அதுதான் தொடர்ந்து மூன்றாவது வாரமாக ஆனந்தவிகடனில் வலையுலகத்தினரின் அறிமுகப் படலம் வெளி வந்து கொண்டிருக்கிறது.

நீங்களே பாருங்கள்..

ஆகஸ்ட் 29 இதழில் tedujobs.blogspot.com

செப்டம்பர் 5 இதழில் குட்டீஸ் ஜங்ஷன் arumbugal.blogspot.com

செப்டம்பர் 12 இதழில் jazeela.blogspot.com

நம் கனவு மெய்ப்படத் துவங்கிவிட்டது.

வாழ்த்துக்கள் தோழர்களே.. தோழியர்களே.. ஜமாயுங்கள்.

இதோடு நண்பர் சிந்தாநதி இந்த மாதத்திய தமிழ் கம்ப்யூட்டர் இதழில் தட்டச்சை எளிமையாக்கும் தமிழ் 99 விசைப்பலகை என்று ஒரு கட்டுரையை எழுதியுள்ளார். அவரையும் மனதார வாழ்த்த வேண்டும்.

கூடவே தமிழ் கம்ப்யூட்டர் இதழுடன் கொடுக்கப்பட்டுள்ள சிடியில் தமிழில் வலைப்பதிவுகளை எப்படித் துவக்க வேண்டும்? தமிழில் எவ்வாறு உள்ளீடு செய்ய வேண்டும்? தமிழில் எவ்வாறு டைப்பிங் செய்ய வேண்டும்? அதற்கான வழிமுறைகள் என்னென்ன என்பதைப் பற்றி மிக அழகான வரைபடங்களுடன் விளக்கப்பட்டுள்ளது.

இதற்கான முயற்சிகளை மேற்கொண்டிருக்கும் நண்பர் சிந்திநதியாருக்கு உண்மைத்தமிழனின் சல்யூட்.

வாழ்க வளமுடன்..!

18 comments:

மாசிலா said...

அருமையான செய்தி

இது மட்டும் போதாது. அனைவருக்கும் கணினி மற்றும் இணைய தொடர்பு கிடைக்க வழிவகைகள் செய்து தரப்படவேண்டும்.

பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி உண்மைத் தமிழன்.

துளசி கோபால் said...

//இது மட்டும் போதாது. அனைவருக்கும் கணினி மற்றும் இணைய தொடர்பு கிடைக்க வழிவகைகள் செய்து தரப்படவேண்டும்.//

எப்படி? விளக்கம் ப்ளீஸ்

மாசிலா said...

//எப்படி? விளக்கம் ப்ளீஸ்//
இது மாதிரி ஏடா கோடாமான கேள்வியெல்லாம் கேட்டு என்னை வம்புல மாட்டிவெக்க கூடாது சொல்லி புட்டேன் ஆம்மாம்!
;-D

மாசிலா said...

//எப்படி? விளக்கம் ப்ளீஸ்//
இந்தியா கிட்ட என்ன பணமா இல்லை? அதை சரிவர நிர்வகித்து அனைவருக்கும் சரியான முறையில் பங்கிட்டு கொடுத்தால் மக்களின் வாழ்க்கைத்தரம் எப்பவோ உயர்ந்திருக்கும்.

உண்மைத்தமிழன் said...

//மாசிலா said...
அருமையான செய்தி இது மட்டும் போதாது. அனைவருக்கும் கணினி மற்றும் இணைய தொடர்பு கிடைக்க வழிவகைகள் செய்து தரப்படவேண்டும். பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி உண்மைத் தமிழன்.//

///மாசிலா said...
//எப்படி? விளக்கம் ப்ளீஸ்//
இது மாதிரி ஏடா கோடாமான கேள்வியெல்லாம் கேட்டு என்னை வம்புல மாட்டிவெக்க கூடாது சொல்லி புட்டேன் ஆம்மாம்! ;-D///

///மாசிலா said...
//எப்படி? விளக்கம் ப்ளீஸ்//
இந்தியா கிட்ட என்ன பணமா இல்லை? அதை சரிவர நிர்வகித்து அனைவருக்கும் சரியான முறையில் பங்கிட்டு கொடுத்தால் மக்களின் வாழ்க்கைத்தரம் எப்பவோ உயர்ந்திருக்கும்.///

மாசிலா உங்களது ஆதங்கம் சரிதான். ஆனால் நிஜ வாழ்க்கையில் நடக்காது. கனவு வேண்டுமானால் காணலாம். உலக வங்கியிடம் அதிகமாக கடன் வாங்கியிருக்கும் நம்பர் ஒன் நாடு எது தெரியுமா? நாம்தான்..

இந்தியாவில் இப்போது பிறக்கின்ற ஒவ்வொரு குழந்தையின் மீதும் 181 ரூபாய் கடன் இருக்கிறது என்று புள்ளிவிடும் புலவர்கள் அள்ளி விடுகிறார்கள். யாரோ கடன் வாங்கி வைக்க.. அதற்கு யாரோ வட்டி கட்ட.. அந்த வட்டிக்காக யார் பணத்தையோ யாரோ அள்ளிக் கொடுக்க..

மிச்சம் உங்களுக்குத் தெரியாததா..? கஷ்டம் மாசிலா. நம்ம அரசியல்வாதிகளைப் பத்தித்தான் உங்களுக்கே தெரியுமே?

இன்னுமொரு ஐந்தாண்டு காலத்தில் டெலிபோன் வாங்கினால் இணைய இணைப்பு ப்ரீயாக கிடைக்கும் என்று சூழல் வரலாம் என்று நம்புகிறேன். கம்ப்யூட்டர்களின் விலை குறையும். அதனால் வாங்குபவர்களின் எண்ணிக்கை அதிகமாகி இணையம் பயன்படுத்துவோரின் எண்ணிக்கையும் கூடி, வலைப்பதிவர்களும் அதிகரித்து மாசிலாவுக்கும், எனக்கும் பின்னூட்டமிட தம்பிமார்களின் நிறைய பேர் வருவார்கள் என்று நினைக்கிறேன்..

பகிர்ந்தமைக்கு நான்தான் உங்களுக்கு நன்றி சொல்ல வேண்டும் மாசிலா. நன்றி..

உண்மைத்தமிழன் said...

//துளசி கோபால் said...
//இது மட்டும் போதாது. அனைவருக்கும் கணினி மற்றும் இணைய தொடர்பு கிடைக்க வழிவகைகள் செய்து தரப்படவேண்டும்.//
எப்படி? விளக்கம் ப்ளீஸ்///

மொதல்ல இத்தனை நாள் கழிச்சு உள்ள வந்ததுக்கு 'ஸாரி' லெட்டரை காணோம்.. அதுக்குள்ள விளக்கம் கேட்டு நோட்டீஸா..?

டீச்சரு.. குத்தம் கண்டுபிடிக்காமயே இருக்க முடியாதா..?

Anonymous said...

பகிர்ந்தமைக்கு நன்றி உண்மைத்தமிழரே...

✪சிந்தாநதி said...

தகவலுக்கு நன்றி... இது பதிவர் பட்டறையின் முயற்சி...

பதிவர் பட்டறைக்கென வெளியிடப்பட்ட சிடி மற்றும் கையேட்டையே தமிழ் கம்பியூட்டர் இதழ் தமிழகம் முழுவதும் கொண்டு சேர்த்திருக்கிறது.

வடுவூர் குமார் said...

விகடனாரின் கடைக்கண் பார்வை பட வைத்த வலைப்பதிவர்களுக்கு வாழ்த்துக்கள்.

RATHNESH said...

என்ன உண்மைத் தமிழன் சார், ப்ளஸ் டூ பிள்ளைங்களுக்கு சைக்கிள் கொடுத்த அரசியல், இலவச கலர் டிவி கொடுக்கிற அரசியல், அடுத்த தேர்தலுக்கு இன்னும் ஒருபடி மேலே போக வேண்டாமா? மாணவர்களுக்குக் கணினி. அலைபேசி இலவசமாகலாம். ஏற்கெனவே இப்போதே GPRS மூலமான இணைய இணைப்பிற்கு மாதம் 200 ரூபாய் மட்டுமே. அதுவும் குறையலாம்; அரசியல்வாதி கிழிக்கும் வறுமைக் கோட்டுக்குக் கீழே இருப்பவர்களுக்கு அதுவும் இலவசமாகலாம். மாசிலா சாரின் நல்ல கனவு சீக்கிரமே நிறைவேறுகிறதா இல்லையா பாருங்கள்.

RATHNESH

சிவபாலன் said...

இந்த சீரிய முயற்சிக்கு சிந்தாநதி, பட்டறை நடத்திய நண்பர்கள் மற்றும் தமிழ் கம்யூட்டர் உலகம் இதழ் - அனைவருக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள்.

இதை அறிய தந்த உண்மைத் தமிழன் அவர்களுக்கும் எனது பாராட்டுகளும் நன்றிகளும்!

நன்றி!

மாயா said...

பகிர்ந்தமைக்கு நன்றி

உண்மைத்தமிழன் said...

//RATHNESH said...
என்ன உண்மைத் தமிழன் சார், ப்ளஸ் டூ பிள்ளைங்களுக்கு சைக்கிள் கொடுத்த அரசியல், இலவச கலர் டிவி கொடுக்கிற அரசியல், அடுத்த தேர்தலுக்கு இன்னும் ஒருபடி மேலே போக வேண்டாமா? மாணவர்களுக்குக் கணினி. அலைபேசி இலவசமாகலாம். ஏற்கெனவே இப்போதே GPRS மூலமான இணைய இணைப்பிற்கு மாதம் 200 ரூபாய் மட்டுமே. அதுவும் குறையலாம்; அரசியல்வாதி கிழிக்கும் வறுமைக் கோட்டுக்குக் கீழே இருப்பவர்களுக்கு அதுவும் இலவசமாகலாம். மாசிலா சாரின் நல்ல கனவு சீக்கிரமே நிறைவேறுகிறதா இல்லையா பாருங்கள்.
RATHNESH//

மாசிலாவின் கனவு பலிக்கும்பட்சத்தில் எனக்கும் சந்தோஷம்தான்..

அதென்ன GRPS மூலமான இணைய இணைப்பு.. விளக்குவீர்களா?

உண்மைத்தமிழன் said...

//சிந்தாநதி said...
தகவலுக்கு நன்றி... இது பதிவர் பட்டறையின் முயற்சி... பதிவர் பட்டறைக்கென வெளியிடப்பட்ட சிடி மற்றும் கையேட்டையே தமிழ் கம்பியூட்டர் இதழ் தமிழகம் முழுவதும் கொண்டு சேர்த்திருக்கிறது.//

ஆஹா.. எனக்குப் புரியாமல் போய்விட்டது.. ஆனாலும் பரவாயில்லையே.. எழுத்தாளர் தாங்கள்தானே.. வாழ்த்துக்களைப் பிடியுங்கள்.. திருப்பியனுப்பாதீர்கள்..

உண்மைத்தமிழன் said...

வடுவூர், சிவபாலன், மாயா - வருகைக்கு நன்றிகள்.. இதுபோல் வலைப்பதிவர்களின் அறிமுகம் எங்கு கிடைத்தாலும் பகிர்ந்து கொள்ளுங்கள்..

சிறில் அலெக்ஸ் said...

அட கலக்கல் செய்தி. வாயில சர்க்கரை. வயித்துல பால். மக்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

உண்மைத்தமிழன் said...

//சிறில் அலெக்ஸ் said...
அட கலக்கல் செய்தி. வாயில சர்க்கரை. வயித்துல பால். மக்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.//

இது ஒரு புதுவிதமான வாழ்த்து சிறில் ஸார்..

"வாய்ல சர்க்கரை.. வயித்துல பால்.." அருமையான உவமானம்.. பால் உள்ளே இறங்கிவிட்டாலும் அதனுடன் இருந்த சர்க்கரை மட்டும் வாயில் இன்னமும் இருக்கிறது என்பதை உருவகப்படுத்தி சொல்லியிருக்கிறீர்கள்..

நன்றி. நன்றி.. நன்றி.

abeer ahmed said...

See who owns passion.ru or any other website:
http://whois.domaintasks.com/passion.ru