சகோதரர் சுரதா யாழ்வாணனுக்கு நன்றி..!

26-09-2007

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

"பக்கம், பக்கமாக எழுதித் தள்றீங்களே எப்படி ஸார்..?" இப்படி என்னிடம் கேட்காத வலைப்பதிவர்கள் கொஞ்சம் பேர்தான்..

அந்த அளவுக்கு என்னுடைய கட்டுரைகளின் நீளம் உங்களுக்கு அலுப்பையும், ஆச்சரியத்தையும் தந்திருக்கலாம்.

ஆனால் அந்தப் பக்கம் பக்கமாக டைப் செய்வது எப்படியெனில், நான் முதலில் MS-WORD-ல் டைப் செய்து பின்பு, அதனை suratha.com/reader.htm-ற்கு கொண்டு வந்து tsc font-ல் convert செய்து அதை copy செய்து, பின்பு வலைப்பதிவின் post பக்கத்திற்கு வந்து, அதனை paste செய்வேன்.

இப்படித்தான் நேற்று வரையிலும் பதிவுகளை பதிவு செய்து கொண்டிருந்தேன்.

காரணம் எனது typing method தமிழிலேயே மிகப் பழமையான method - Inscript Method.

இதனை உடனடியாகக் கைவிட்டு வேறு method-ஐ கையில் எடுக்க எனது இன்றைய பொருளாதாரச் சூழல் ஒத்துழைக்காததால், இதனையே கட்டி அழுது கொண்டிருந்தேன்.

வலையுலகில் அனைவரும் மின்னல் வேகத்தில் கமெண்ட்ஸ்களை போடும்போது என்னால் அந்தளவிற்கு வேகமாக இயங்க முடியாமல் தவித்ததுண்டு. அதற்கெல்லாம் மொத்தமாக இப்போது ஒரு முடிவு கிடைத்திருக்கிறது.

இதற்கு முடிவு கட்டியவர் அருமை நண்பர் திரு.சுரதா யாழ்வாணன் அவர்கள்.

சென்ற மாதம் உட்லண்ட்ஸ் டிரைவ் இன் ஹோட்டலில் மாலை நேரத்தில் நடந்த ஒரு வலைப்பதிவர் கூட்டமொன்றில்தான் அவரை முதன்முறையாக நான் சந்தித்தேன்.

அப்போதே அவரிடம் "உங்களால்தான் நான் வலையுலகில் எழுதிக் கொண்டிருக்கிறேன்.." என்றேன். ஆர்வத்துடன் எனது டைப்பிங் முறைகள் பற்றி விசாரித்தார். முழுவதையும் சொன்னேன்.

"unicode-ல் டைப் செய்யும் அளவுக்கு உங்களது டைப்பிங்லேயே ஒரு கீபோர்டை நான் வடிவமைத்துத் தருகிறேன். காத்திருங்கள்.." என்று நான் கேட்காமலேயே ஒரு வாக்குறுதியை எனக்கு அளித்தார்.

சில நாட்கள் கழித்து அவர் ஜெர்மனி செல்வதற்கு முதல் நாள் அவருடைய வீட்டருகே சந்தித்துப் பேசியபோதும், "உங்களுடைய கீபோர்ட் மேட்டர் என் நினைவில் உள்ளது. நிச்சயம் செய்து தருவேன்.." என்றார்.

சொல்லியது போலவே ஊர் போய்ச் சேர்ந்து சில நாட்களுக்குள் எனக்காக unicode-ல் type செய்யும் அளவுக்கு கீபோர்ட் ஒன்றை வடிவமைத்து அனுப்பி வைத்துள்ளார்.

இதோ, இந்த நன்றி பதிவுகூட அண்ணன் யாழ்வாணன் அவர்களின் கீபோர்டை வைத்து நேரடியாக வலைப்பதிவின் post Box-ல் Type செய்யப்பட்டதுதான்.

பார்த்ததே இரண்டு நாட்கள்தான்..

பேசியதோ அரை மணி நேரம்தான்.

செய்து கொடுத்ததோ பெரும் உதவி.

பிரதிபலன் எதிர்பாராமல் செய்த உதவிக்கு கைமாறு என்னால் முடிந்த இந்த ஒரு நன்றி அறிவிப்புதான்..

உதவுகின்ற எண்ணத்தை உள்ளுக்குள் தோற்றுவித்த நம் அன்னைத் தமிழுக்கும்,

உதவிய பெரும் நெஞ்சம் அண்ணன் சுரதா யாழ்வாணனுக்கும் எனது இதயங்கனிந்த நன்றிகள்..

சுரதா யாழ்வாணன் போன்ற திறமைசாலிகள் எங்கிருந்தோ தமிழுக்காக உழைத்துக் கொண்டிருக்க..

இங்கே தமிழ்நாட்டிலேயே இருப்பவர்கள், தமிழை வைத்தே தமிழர்களிடமே வியாபாரம் செய்வது நமது சாபக்கேடு..

23 comments:

வடுவூர் குமார் said...

உங்களுக்கு உதவி செய்ததற்காக "இவ்வளவு சின்ன பதிவாக" போட்டு எங்களை மாதிரி படிப்பவர்களை ஏமாற்றிவிட்டீர்களே!
சுரதா உங்களுக்கு மட்டும் அல்ல எனக்கும் கை கொடுக்க நினைத்தார்,சரியாக வரவில்லை,அதனால் வருத்தம் இல்லை.

உண்மைத்தமிழன் said...

//வடுவூர் குமார் said...
உங்களுக்கு உதவி செய்ததற்காக "இவ்வளவு சின்ன பதிவாக" போட்டு எங்களை மாதிரி படிப்பவர்களை ஏமாற்றிவிட்டீர்களே!
சுரதா உங்களுக்கு மட்டும் அல்ல எனக்கும் கை கொடுக்க நினைத்தார்,சரியாக வரவில்லை,அதனால் வருத்தம் இல்லை.//

வடுவூரார்.. நன்றி என்கின்ற இந்த மூன்றெழுத்து சிறியதுதான். ஆனால் அதன் அர்த்தம் விலை மதிக்க முடியாதது. பலரையும் வாழ வைப்பது இந்த நன்றி என்கின்ற மூன்றெழுத்துதான்.

பதிவு சின்னதாக இருந்தால் என்ன.. இனி நான் எழுதுகின்ற அனைத்துமே அண்ணன் சுரதாவுக்கு சமர்ப்பணம்தான்..

துளசி கோபால் said...

அவர் அனுப்புன கீ போர்டை என்ன, எப்படின்னு சொல்லலையே(-:

இன்னும் சரியா விளங்கலை.

ராவணனும் எனக்குச் சரியா வரலை.

அழுகைப்பதிவு ஒண்ணு நாலைக்குப் போடறேன்:-)

Subbiah Veerappan said...

இ-கலப்பையை வைத்துத்தான் நான் கடந்த ஒருவருடமாகத்
தட்டச்சிக்கொண்டிருக்கிறேன். இலவச மென்பொருள் அது. அட்டகாசமாக இருக்கும். பயிற்சி எதுவும் வேண்டாம். word pad, excel powerpoint, gamil compose menu, comment box என்று எங்கே வேண்டுமென்றாலும் அனாயசமாகத் தட்டச்சலாம். நீங்கள் கேள்விப்பட்டதில்லையா?

உண்மைத்தமிழன் said...

//துளசி கோபால் said...
அவர் அனுப்புன கீ போர்டை என்ன, எப்படின்னு சொல்லலையே(-:
இன்னும் சரியா விளங்கலை.//

டீச்சர், யாழ்வாணன் அனுப்பினது inscript typing method keyboard.

//ராவணனும் எனக்குச் சரியா வரலை.//

ராவணனா..? ராமனா..? நீங்க யார் பக்கம் மேடம்..

//அழுகைப்பதிவு ஒண்ணு நாலைக்குப் போடறேன்:-)//

அதுக்கேன் நாளைக்கு.. இன்னிக்கே டீடெயிலா போட்டிருங்க.. நான் யாழ்வாணன்கிட்ட பேசுறேன்..

உண்மைத்தமிழன் said...

//SP.VR. SUBBIAH said...
இ-கலப்பையை வைத்துத்தான் நான் கடந்த ஒருவருடமாகத்
தட்டச்சிக்கொண்டிருக்கிறேன். இலவச மென்பொருள் அது. அட்டகாசமாக இருக்கும். பயிற்சி எதுவும் வேண்டாம். word pad, excel powerpoint, gamil compose menu, comment box என்று எங்கே வேண்டுமென்றாலும் அனாயசமாகத் தட்டச்சலாம். நீங்கள் கேள்விப்பட்டதில்லையா?//

வாத்யாரே.. நீங்க சொல்றது Software.. நான் சொல்றது keyboard. இது இருந்தாத்தான் இ-கலப்பைல டைப் செய்ய முடியும்.. நீங்க அடிக்கிற டைப்பிங் மெத்தெட் வேற.. நான் அடிக்கிறது வேற..

இ-கலப்பைக்கு இப்படியொரு பக்தரா? வாழ்க கோவை சுப்பையா வாத்தியார்..

தகடூர் கோபி(Gopi) said...

உண்மைத் தமிழன்,

அப்பாடா ஒரு வழியா உங்க பிரச்சனை தீர்ந்தது... அப்ப எ-கலப்பையில இந்த விசைப்பலகையை மெதுவா சேக்கலாங்கறீங்க....?

//பார்த்ததே இரண்டு நாட்கள்தான்..
பேசியதோ அரை மணி நேரம்தான்.
செய்து கொடுத்ததோ பெரும் உதவி.
//

சுரதாவை நான் இதுவரை நேரில் பார்த்ததோ பேசியதோ கிடையாது. ஆனால் அவரது பொங்குதமிழ் நிரலை எடுத்து நான் எனது தகடூர் மொழிமாற்றி உருவாக்கிய போது ஆட்சேபம் ஏதும் சொல்லாமல் அனுமதித்தது மட்டுமல்ல ஒவ்வொரு நிலையிலும் ஆலோசனை வழங்கி வழிநடத்தினார்.

உண்மைத்தமிழன் said...

//கோபி(Gopi) said...
உண்மைத் தமிழன், அப்பாடா ஒரு வழியா உங்க பிரச்சனை தீர்ந்தது... அப்ப எ-கலப்பையில இந்த விசைப்பலகையை மெதுவா சேக்கலாங்கறீங்க....?//

தப்பிக்கலாம்னு பாக்குறியாப்பூ.. விடமாட்டோம்ல.. சுரதாவுக்கு மெயில் அனுப்பியிருக்கேன். அவர் அனுப்பினதை keyman 6.2, developer-ல் மட்டுமே பயன்படுத்த முடிகிறது. எ-கல்லபையில் அல்ல.. சீக்கிரமே வேணும் தம்பி..

///பார்த்ததே இரண்டு நாட்கள்தான்..
பேசியதோ அரை மணி நேரம்தான்.
செய்து கொடுத்ததோ பெரும் உதவி.
//
சுரதாவை நான் இதுவரை நேரில் பார்த்ததோ பேசியதோ கிடையாது. ஆனால் அவரது பொங்குதமிழ் நிரலை எடுத்து நான் எனது தகடூர் மொழிமாற்றி உருவாக்கிய போது ஆட்சேபம் ஏதும் சொல்லாமல் அனுமதித்தது மட்டுமல்ல ஒவ்வொரு நிலையிலும் ஆலோசனை வழங்கி வழிநடத்தினார்.///

ஆஹா.. இவுங்கதான்யா உண்மையான தமிழர்கள்.. எத்தனை பாராட்டினாலும் தகும்..

தமிழ்பித்தன் said...

நானும் அவரின் யுனிக்கோடு மாற்றி பயன்படுத்திதான் தட்டச்சு செய்கிறனான்

suratha yarlvanan said...

கோபி(Gopi), உண்மைத் தமிழன்

என்னை வைத்து காமெடி கீமெடி ஒண்ணும் பண்ணலியே :)

உண்மைத் தமிழனுக்கு கொடுத்தது பரிசோதித்து பார்க்க மட்டுமே.அதில் தவறுகள் இருக்கும், இல்லாத பட்சத்தில் வழக்கம்போல முகுந்திற்கு அனுப்பி ஈ கலப்பையில் சேர்க்க சொல்வேன்.

கோபி நீங்களும் இதற்கு பயர்பொக்ஸிற்கு ஒரு நீட்சி செய்துவிடுங்களேன்

நன்றி

✪சிந்தாநதி said...

//இதனை உடனடியாகக் கைவிட்டு வேறு method-ஐ கையில் எடுக்க எனது இன்றைய பொருளாதாரச் சூழல் ஒத்துழைக்காததால், இதனையே கட்டி அழுது கொண்டிருந்தேன்.//

இதற்கும் பொருளாதாரச்சூழலுக்கும் என்ன தொடர்பு? இதில் விலை கொடுத்து வாங்க வேண்டிய பொருள் எது?

//நீங்க சொல்றது Software.. நான் சொல்றது keyboard.//

கீபோர்ட்? கீபோர்ட் என்பது ஒரு பொருள்.

//உண்மைத் தமிழனுக்கு கொடுத்தது பரிசோதித்து பார்க்க மட்டுமே.அதில் தவறுகள் இருக்கும், இல்லாத பட்சத்தில் வழக்கம்போல முகுந்திற்கு அனுப்பி ஈ கலப்பையில் சேர்க்க சொல்வேன்.//

கீபோர்ட் என்ற (திடப்) பொருளை எப்படி எகலப்பையில் சேர்க்க முடியும். ஐயா உண்மைத்தமிழன் கொஞ்சம் விளங்கும்படி சொல்லுங்கள்.

சுரதா உங்களுக்கு அனுப்பியது கீபோர்ட் செயலியா? அல்லது உண்மையிலேயே ஒன்றரையடி நீள விசைப்பலகையா? மென்பொருளா? html கோப்பா? அல்லது வேறுவகை கோப்பா (file)

அதை அவர் கூரியரில் அல்லது தபால் பார்சலில் அனுப்பினாரா? அல்லது மின்னஞ்சலில் அனுப்பினாரா?

ஒண்ணுமே விளங்கலை அய்யா

வவ்வால் said...

தமிழா... தமிழா நாளை உன் நாளே ...(சுரதா யாழ்வாணன் , மற்றும் உண்மைத்தமிழர் தான் அந்த தமிழா) நல்ல தகவலா சொல்லி இருக்கிங்க உண்மைத்தமிழர்!

Anonymous said...

இ-கலப்பை வேற, கீபோர்டு வேறயா? எனக்கு நெஜமாவே புரியலடா செவிடா?

உண்மைத்தமிழன் said...

//தமிழ்பித்தன் said...
நானும் அவரின் யுனிக்கோடு மாற்றி பயன்படுத்திதான் தட்டச்சு செய்கிறனான்.//

நன்றி தமிழ்ப்பித்தன்..

உண்மைத்தமிழன் said...

//suratha said...
கோபி(Gopi), உண்மைத் தமிழன் என்னை வைத்து காமெடி கீமெடி ஒண்ணும் பண்ணலியே:)//

என்ன சகோதரரே.. இகோபியை வைச்சு வேணா பண்ணலாம்.. உங்களை வைச்சு பண்ண முடியுமா..? அந்த முருகனே என்னை மன்னிக்க மாட்டான்..

//உண்மைத் தமிழனுக்கு கொடுத்தது பரிசோதித்து பார்க்க மட்டுமே. அதில் தவறுகள் இருக்கும், இல்லாத பட்சத்தில் வழக்கம்போல முகுந்திற்கு அனுப்பி ஈ கலப்பையில் சேர்க்க சொல்வேன்.//

அப்படியா சந்தோஷம்ண்ணேன்.. ஒரே ஒரு மாற்றம்தாண்ணேன்..

'shift key'-ஐயையும் 'V'-ஐயையும் ஒரு சேர அழுத்தினால் 'ந' என்ற எழுத்து வர வேண்டும்.

அதே போல் வெறுமனே 'V'-ஐ அழுத்தினால் 'ன' வர வேண்டும்.

இந்த ஒரு மாற்றத்தை மட்டும் செய்து கொடுங்கள் போதும்ண்ணேன்..

//கோபி, நீங்களும் இதற்கு பயர்பொக்ஸிற்கு ஒரு நீட்சி செய்துவிடுங்களேன்.. நன்றி//

இதை வழிமொழிகிறேன்.. தம்பி கோபி தப்பிக்கலாம்னு பார்க்காதப்பூ.. நல்ல புள்ளையா அண்ணன் சொன்ன மாதிரி செஞ்சுக் கொடுத்து நல்ல பேர் எடுத்துக்க.. சொல்லிட்டேன்..

உண்மைத்தமிழன் said...

///சிந்தாநதி said...
//இதனை உடனடியாகக் கைவிட்டு வேறு method-ஐ கையில் எடுக்க எனது இன்றைய பொருளாதாரச் சூழல் ஒத்துழைக்காததால், இதனையே கட்டி அழுது கொண்டிருந்தேன்.//

இதற்கும் பொருளாதாரச் சூழலுக்கும் என்ன தொடர்பு? இதில் விலை கொடுத்து வாங்க வேண்டிய பொருள் எது?//

தமிழில் டைப்பிங் வேலைகள் செய்து தருவதால் உடனடியாக வேறு கீபோர்டு டைப்பிங் முறைக்கு மாற முடியவில்லை. அப்படி மாறினால் ஸ்பீட் உடனே வராது.. ஸ்பீட் வராவிட்டால் டைப்பிங் வேலைகள் நின்று போகும். வேலை நின்றால்...................? அதைத்தான் இப்படிச் சொன்னேன்..

///நீங்க சொல்றது Software.. நான் சொல்றது keyboard.//

கீபோர்ட்? கீபோர்ட் என்பது ஒரு பொருள்.///

//உண்மைத் தமிழனுக்கு கொடுத்தது பரிசோதித்து பார்க்க மட்டுமே.அதில் தவறுகள் இருக்கும், இல்லாத பட்சத்தில் வழக்கம்போல முகுந்திற்கு அனுப்பி ஈ கலப்பையில் சேர்க்க சொல்வேன்.//

கீபோர்ட் என்ற (திடப்) பொருளை எப்படி எகலப்பையில் சேர்க்க முடியும். ஐயா உண்மைத்தமிழன் கொஞ்சம் விளங்கும்படி சொல்லுங்கள்.

சுரதா உங்களுக்கு அனுப்பியது கீபோர்ட் செயலியா? அல்லது உண்மையிலேயே ஒன்றரையடி நீள விசைப்பலகையா? மென்பொருளா? html கோப்பா? அல்லது வேறுவகை கோப்பா (file).

அதை அவர் கூரியரில் அல்லது தபால் பார்சலில் அனுப்பினாரா? அல்லது மின்னஞ்சலில் அனுப்பினாரா?

ஒண்ணுமே விளங்கலை அய்யா.///

ஐயையோ.. சிந்தாநதி ஸார்.. உங்க அளவுக்கு தமிழ்ப் புலமை எனக்கில்லை. சுரதா அனுப்பியது கீபோர்ட் செயலிதான்.. அதாவது kmx file. இதை எப்படிச் சொல்வது 'செயலி' என்றுதானே..

மின்னஞ்சலில் அனுப்பினார் ஸார்.. 4kb-தான் இருந்தது.. அவ்வளவுதான்..

இந்தச் செயலி-மென்பொருள்-கோப்பு போன்ற தமிழ் வார்த்தைகளை நான் அடிக்கடி பயன்படுத்துபவன் அல்ல. அதுதான் உங்களுக்குக் குழப்பம் வந்திருச்சு.. ஸாரி ஸார்..

(உஷ்.. அப்பாடா.. ஒரு பதிவுலயாவது 'மண்டகப்படி' வாங்காம இருக்கலாம்னு பார்த்தா முடியல சாமி.. முடியல..)

உண்மைத்தமிழன் said...

//வவ்வால் said...
தமிழா... தமிழா நாளை உன் நாளே ...(சுரதா யாழ்வாணன் , மற்றும் உண்மைத்தமிழர தான் அந்த தமிழா) நல்ல தகவலா சொல்லி இருக்கிங்க உண்மைத்தமிழர்!//

வவ்வால்ஜி.. நீங்க கொடுத்த 'ஒத்தடத்திற்கு' மிக்க நன்றி.. இப்பத்தான் கொஞ்சம் ஆறுதலா இருக்கு..

உண்மைத்தமிழன் said...

//மடிப்பாக்கம் said...
இ-கலப்பை வேற, கீபோர்டு வேறயா? எனக்கு நெஜமாவே புரியலடா செவிடா?//

முத்தமிழ்மன்றத்துல இதை copy பண்ணி போடுங்க மூர்த்தி ஸார்.. அங்க இருக்குற உங்க பிரெண்ட்ஸ் இன்னும் விளக்கமாச் சொல்வாங்க.. கேட்டுக்குங்க..

பகீ said...

நம்ம ஊரில இைணயம் தமிழ் என்றாேல சுராதா தான் ெதரியுமா......

Anonymous said...

ஈகலப்பைன்னா என்னா, கீமேன் என்றால் என்ன, தட்டச்சு பலகைன்னா என்ன. செயலின்னா என்னன்னுகூட தெரியாத மாடு மேய்க்கிற பசங்க எல்லாம் இணையத்துக்கு எழுத வந்துட்டானுங்கடா.

கொடுமை!

உண்மைத்தமிழன் said...

//பகீ said...
நம்ம ஊரில இைணயம் தமிழ் என்றாேல சுரதாதான் ெதரியுமா....//

சகோதரரின் அருமை, பெருமைகளை இப்போதுதான் உணர்கிறேன் பகீ.. வருகைக்கு நன்றி..

உண்மைத்தமிழன் said...

//Anonymous said...
ஈகலப்பைன்னா என்னா, கீமேன் என்றால் என்ன, தட்டச்சு பலகைன்னா என்ன. செயலின்னா என்னன்னுகூட தெரியாத மாடு மேய்க்கிற பசங்க எல்லாம் இணையத்துக்கு எழுத வந்துட்டானுங்கடா. கொடுமை!//

மாடு மேய்க்குற பசங்கதான்.. நிசமாவே முத்தமிழ்மன்றத்துக்குள்ள போய் மேய்ச்சுக்கிட்டுத்தான் இருக்கோம் மூர்த்தி.. சந்தேகம்னா அங்கேயே கேட்டுப் பாரு..

abeer ahmed said...

See who owns 100mleaudetoilette.com or any other website:
http://whois.domaintasks.com/100mleaudetoilette.com