03-09-2007
அன்புள்ள திரு.டோண்டு ஸாருக்கு,
வணக்கம்.
வரைமுறை இல்லாமல், காரணமே இல்லாமல் அடுத்தவரைக் கண்மூடித்தனமாக நேரில் தாக்குபவரும், எழுத்தால் தாக்குபவரும், ஆபாச அர்ச்சனைகள் புரிவோரும் கண்டிப்பாகத் தண்டிக்கப்படக் கூடியவர்தான். சந்தேகமில்லை..
அதே சமயம், அந்த வரைமுறையற்ற தாக்குதல் நடத்துபவனை வம்பு சண்டைக்கு இழுத்து “பார்.. பார்.. என்னிடம் சண்டைக்கு வருகிறான்” என்று ஊரைக் கூட்டி ஒப்பாரி வைப்பவரும்கூட ஒரு வகையில் தண்டிக்கப்படக் கூடியவர்தான்..
இந்தப் போலி பிரச்சினைக்கே யார் முதற் காரணம்? நீங்கள்தான்..
உங்களுடைய எழுத்தால் ஒருவன் மனம் பாதிக்கப்படும் அளவுக்குச் சென்று இன்று மதுரைவீரன் சாமிக்கு படையல் வைப்பதைப் போல் எழுத்தில் வடித்துக் கொண்டிருக்கிறான்.
அது அவனது தலையெழுத்து என்று நீங்கள் சொன்னீர்களானால் இந்த நிகழ்வு உங்களை உடன் காரணியாக வைத்து அவனது விதியின் பெயரால் அமைந்தது. மகரநெடுங்குழைநாதனின் தீவிர பக்தரான உங்களுக்கு இது நன்றாகவே புரியும். இந்த நபரை நோயாளியாக்கியதில் உங்களுக்கும் ஒரு பங்கு உண்டு. இதை விதியின் விளையாட்டு என்றோ, நீங்கள் வணங்கும் கடவுளின் விளையாட்டு என்றோ நீங்கள் நினைத்துக் கொள்ளலாம். அதுவும் சரிதான்.
இன்றைக்கு அந்த நபர் மீது வலையுலகமே பரிதாபப்பட்டுக் கொண்டிருக்கிறது. இவருக்கு என்ன ஆனதோ? ஏன் இப்படி.. நாமெல்லாம் சரியானபடி இருக்கும்போது இவருக்கு மட்டும் இப்படியரு நிலையா என்றுதான்.. இது ஒருவகை பரிதாப உணர்ச்சி. வேறு என்ன செய்ய முடியும் என்று எதிர்பார்க்கிறீர்கள்..?
பிரச்சினையை ஆரம்பித்து வைத்த நீங்களே முதலில் சமாதானம் செய்து பின்பு அது எனது கருத்துச் சுதந்திரத்தைப் பாதிக்கிறது என்று சொல்லி அதை மறுத்து மறுபடியும் வேதாளம் முருங்கை மரத்தில் ஏறுவதைப் போல் எழுத ஆரம்பித்து இதனால் போலியும் தனது சத்தியத்தைத் தூக்கிக் கடாசிவிட்டு மீண்டும் எழுத ஆரம்பித்து இதனால் பாதிக்கப்பட்டது நீங்கள் மட்டுமல்ல.. நாங்களும்தான்..
தினமும் காலையில் மெயிலை திறக்கும்போது அக்கம்பக்கம் யாரும் இல்லாமல் இருக்க வேண்டுமே என்றெண்ணி யோசனை செய்யும்போது எங்களுக்கு வரும் கோபம் எங்களுக்குத்தான் தெரியும்..
நான் முன்பே உங்களிடம் ஒரு முறை சொன்னேன்.. “உங்களது வலைத்தளத்தில் ஒரு விட்ஜெட் தயாரித்து வையுங்கள். எனது வலைப்பதிவில் யார் பின்னூட்டம் இட்டாலும் அவர்களுக்கு போலியாரின் ஆபாச கமெண்ட்டுகள் பரிசாக வரும். தொடர்ந்தால் அவர்களின் பெயரில் ஆபாசத் தளம் திறக்கப்படும். எனவே எனது தளத்திற்குள் வருவதும், பின்னூட்டமிடுவதும் அவரவர் சொந்த விருப்பத்தின்பேரிலேயே வாருங்கள். விளைவுகளுக்கு நான் பொறுப்பில்லை...” என்று சொல்லி எழுதி வைக்கும்படி சொன்னேன்.
அதற்கு நீங்கள், “முடியாது..” என்றீர்கள். புதிதாக “வலையுலகில் நுழைபவர்களுக்கு உங்களைப் பற்றியும் தெரியாது.. வலையுலக அரசியலைப் பற்றியும் தெரியாது. அவர்கள் பாதிக்கப்பட்டால் பின்னால் எழுத வந்ததற்கே வருத்தப்படுவார்கள்..” என்றேன். “அது எனக்குத் தேவையில்லாத விஷயம்.. எனக்கு கமெண்ட்ஸ் வந்தால் நான் பதில் போடுவேன்.. அவ்வளவே..” என்று சிம்பிளாக முடித்துக் கொண்டீர்கள்.
இப்போதும் இதையே உங்கள் முன் வைக்கிறேன். புதிதாக வலைத்தளத்திற்குள் வருபவர்களோ ஓய்வு நேரத்தில்தான் எழுதுகிறார்கள். அந்தப் பொன்னான நேரத்தை இது போன்ற முட்டாள்தனமான விஷயங்களில் செலுத்துவதற்கு நாம் உதவிடக்கூடாது.
உங்களுக்கு கமெண்ட்ஸ் போட்ட பாவத்திற்கு அவர்கள் குடும்பத்தினர் மனக்கஷ்டம் அடைய வேண்டுமா? யோசித்துப் பாருங்கள்..
இது ஒன்றும் யுத்த களம் அல்ல. குடும்பம் நடத்துகின்ற இல்லம். உங்களுடைய யோம்கீத்பூரோ, யோம்கீத்துபுரோவோ எதுவாக இருந்தாலும் உங்களுடைய வீட்டோடு வைத்துக் கொள்ளுங்களேன்.. அதற்கெதற்கு தேவையில்லாமல் எங்களை இழுக்குறீர்கள்..?
இப்போதுதான் போலியை வெளிப்படுத்தி உலகத்திற்கு அடையாளம் காட்டி முடித்திருக்கிறோம். இன்னும் செய்ய வேண்டிய விஷயங்கள் நிறைய இருக்கின்றன. அதுவரையிலும் உங்களுக்கு பின்னூட்டமிடும் நண்பர்களுக்கு போலியின் எதிர்ப்புகள் வரத்தான் செய்யும்.
மேலும், மேலும் புதிய புதிய பதிவர்கள் உள்ளே வந்து கொண்டேயிருக்கிறார்கள். ஆனால் தயங்கி நிற்கிறார்கள். யார் எந்தப் பக்கம்? யாருடைய பதிவு பிரச்சினையில்லாதது என்றெல்லாம் யோசிக்கத் துவங்கியிருக்கிறார்கள்.
இது, தமிழ் மொழி இல்லாத நாடில்லை என்ற நிலையை உருவாக்க வேண்டும் என்ற உயரிய நோக்கில் நேரம் செலவழித்து எழுதிக் கொண்டிருக்கும் நம் வலைச் சமுதாயத்திற்கு நல்லதல்ல.
இதுதான் நீங்களும் உங்களுடைய பிடிவாதத்தைக் கைவிட வேண்டிய தருணம்.
நீங்கள் மேற் சொன்னதுபோல் விட்ஜெட்டை உங்களது தளத்தில் போடவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
இல்லையெனில் நான் எனது தளத்தில் நிச்சயம் இடுவேன்..
ஏனெனில் உங்களால் பாதிக்கப்பட்டவர்களில் நானும் ஒருவன்.
இப்போது யோசித்துப் பார்த்தால் யார், யாரை வந்து மிரட்டுவது என்ற எனது சுயமரியாதைக்கு பங்கம் ஏற்பட்டுவிட்டதோ என்ற எண்ணத்தில் உங்களுக்குப் பின்னூட்டமிட்டுத்தான் போலியின் கவனிப்பிற்குள்ளான என்னைப் போன்ற வலைப்பதிவர்கள் பலரும் மாட்டிக் கொண்டுள்ளனர்.
ஆளுக்கொரு பக்கமாக உங்களைத் திரட்டிகளைவிட்டே விலக்க வேண்டும் என்று கூக்குரலிட ஆரம்பித்துவிட்ட நிலையில் எதிர்பாராமல் நிகழ்ந்துவிட்ட ஒரு விதியின் செயலுக்கு நீங்களும் உடன் ஒரு காரணியாக இருந்த காரணத்தால் அதற்கான தீர்வை நோக்கி நீங்களும்தான் சென்றாக வேண்டும். இது உங்களுடைய கடமை.
இந்தக் கடமை எனக்கில்லை.. நான் பல யுத்தக் களங்களைக் கண்டவன் என்று புலம்புவீர்களானால்.. நில்லுங்கள்.. ஆனால் ஒன்று..
உங்களது எதிரில் யாரும் இருக்க மாட்டார்கள். நீங்களே வெறும் காற்றுடன் மோதி, மனநோயாளியான போலிக்கு இன்னொரு துணை நோயாளி போலியாக காட்சி தரும் அவலத்தை உருவாக்கிக் கொள்ளுங்கள்.
வேறு எதுவும் சொல்வதற்கில்லை..
வாழ்க வளமுடன்..
|
Tweet |
18 comments:
அண்ணே முதன் முதலில் முழுதாய் படித்தேன் உங்கள் பதிவை. அத்தனையும் நியாயமான கேள்விகள். உங்களின் மனவலி புரிகிறது. டோண்டு மாமவின் கருத்து சொல்லும் உரிமைக்கு நான் எதிரியல்ல அதே நேரம் அது பிரச்சினைக்குரிய அல்லது சர்ச்சைகுரிய கருத்து என்பதாக இருந்தால் அதை தவிர்த்து பிறருக்கு நலம் பயத்தல் தான் வயதுக்குரிய பக்குவம் . இனியாவது அது குறித்து சிந்திப்பார் என்றே நம்புகிறேன்.
Let them fight leave them alone...
நீங்கள் மூர்த்தியை ஆபாசமாக தொலைபேசியில் திட்டியதும், ஆபாசமாக சேட்டிங் செய்ததும் மின்னஞ்சலாக சுற்றறிக்கை விடப்பட்டிருக்கிறது. எல்லாம் ஒரே குட்டையில் ஊறிய கட்டை தான் போலிருக்கிறதே?
//குழலி / Kuzhali said...
வாய்யா கருப்பு, நீதானா அது, நேற்று பேசும்போதே சொல்லியிருந்திருக்கலாமல்லவா நீ தான் கருப்பு என்று, கடைசி வரை நீங்கள் தான் கருப்பு என்று சொல்லிக்கொள்ளவேயில்லையே!!! வலைப்பதிவு பக்கமே வருவதில்லை என்றீரே? கடைசியில் பார்த்தால் கருப்பே நீராக இருக்கின்றீர்....
//
http://karuppupaiyan.blogspot.com/2007/01/blog-post_08.html
கருப்புவின் பதிவில் குழலியின் பின்னூட்டம். மூர்த்தியை மூன்று முறை சந்தித்தாராம். அப்போதெல்லாம் மூர்த்தி தான் போலி என்று தெரியாதாம். அம்மாவை திட்டியதும் தான் மூர்த்தி தான் போலி என்று தெரிந்ததாம். இந்த விழயம் எல்லாம் நம்பும்படியா இருக்கு?
http://doondu.blogspot.com/2007/09/blog-post.html
செந்தழல் ரவி போலிக்கு அனுப்பிய மடல்கள்.
அதை ரவி ஒத்து கொண்டிருக்கிறார்
//போலி டோண்டு மூர்த்தி உன்னுடன் நடந்த மின்னஞ்சல் கான்வர்சேஷனை வெளியிட்டுள்ளானே என்று ஒரு நன்பர் கேட்டுள்ளார்...அவனுடைய நம்பிக்கையை பெற்று அவனுக்கு "ஸ்பெஷல் ஆப்பு" வைக்க செய்த முயற்சி. அதன் பலனாகத்தான் விடாது கருப்பு, மூர்த்தி, போலி டோண்டு எல்லாம் ஒன்று என்று அறிந்தேன்...//
http://tvpravi.blogspot.com/2007/09/blog-post.html
பெங்களூர் சந்திப்பு வந்தவர்கள் யார் யார் என்ன வேலை செய்கிறார்கள் என்றெல்லாம் மடல் அனுப்பியது "ஸ்பெஷல் ஆப்பு" வைக்க செய்த முயற்சியா? ம்யூஸ் என்பவருக்கு ரவியால் வேலை பாதிக்கபட்டது தெரியுமா?
http://kavithavinpaarvaiyil.blogspot.com/2007/02/with_25.html
http://puthuyugam.blogspot.com/2007/02/blog-post_09.html
விட்ஜட் எல்லாம் போடுவதில் எனக்கு நம்பிக்கை இல்லை. ஆனால் ஒன்று எனக்கு முதலில் பின்னூட்டமிடுபவரின் தளத்துக்கு சென்று அவர் மட்டுறுத்தல் செய்யாது இருந்தால் செய்யும்படி ஆலோசனை கூறுவது எனது வழக்கம்.
//பிரச்சினையை ஆரம்பித்து வைத்த நீங்களே முதலில் சமாதானம் செய்து பின்பு அது எனது கருத்துச் சுதந்திரத்தைப் பாதிக்கிறது என்று சொல்லி அதை மறுத்து மறுபடியும் வேதாளம் முருங்கை மரத்தில் ஏறுவதைப் போல் எழுத ஆரம்பித்து இதனால் போலியும் தனது சத்தியத்தைத் தூக்கிக் கடாசிவிட்டு மீண்டும் எழுத ஆரம்பித்து இதனால் பாதிக்கப்பட்டது நீங்கள் மட்டுமல்ல.. நாங்களும்தான்..//
மேலே கூறியதில் சில தவறுகள் உள்ளன. எனது முதல் யோம்கிப்பூர் பதிவு போட்டு ஐந்து நிமிடத்துக்குள்ளாக மூர்த்தியின் டுண்டூ பதிவில் அசிங்கப்பதிவு போடப்பட்டது. அவன் தாக்குதல் இன்னும் தீவிரப்படுத்தப்பட்டது. ஆக அவன் சத்தியம் ஒன்றும் செய்யவில்லை.
ஆகவே இரண்டாம் யோம் கிப்பூர் பதிவு போட்டு அவனை அலட்சியம் செய்ய ஆரம்பித்தேன். என்னைப் பற்றி ஆர்குட்டில் அசிங்க ப்ரொபைல்கள் போட்டான். இப்போது கூட அது சம்பந்தமாக பல டெலிஃபோன் அழைப்புகள் வருகின்றன.
நீங்கள் பின்னூட்டமிட்டதால்தான் அவன் உங்களை இவ்வளவு அசிங்கமாகத் திட்டினான் ஆகவே நீங்கள்தான் அவனது இச்செய்கைக்கும் பொறுப்பு எனக் கூறுவது எவ்வளவு அபத்தமோ அதே அபத்தம்தான் என்னையும் குறை கூறுவது என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.
மற்றப்படி விட்ஜட் நீங்கள் போட்டுக் கொண்டு "டோண்டுவின் வலைப்பதிவில் யார் பின்னூட்டம் இட்டாலும் அவர்களுக்கு போலியாரின் ஆபாச கமெண்ட்டுகள் பரிசாக வரும். தொடர்ந்தால் அவர்களின் பெயரில் ஆபாசத் தளம் திறக்கப்படும். எனவே அவரது தளத்திற்குள் வருவதும், பின்னூட்டமிடுவதும் அவரவர் சொந்த விருப்பத்தின்பேரிலேயே வாருங்கள். விளைவுகளுக்கு அவர் பொறுப்பில்லை...” என்று போட்டுக் கொள்வதைப் பற்றி எனக்கு எவ்வித ஆட்சேபணையும் இல்லை.
அன்புடன்,
டோண்டு ராகவன்
டோண்ட் வேஸ்ட் யுவர் டைம் நண்பரே. மனசார சொல்லுங்கள், இவர் நிப்பாட்டுவார் என்று நம்புகிறீர்களா?
//dondu(#11168674346665545885) said...
விட்ஜட் எல்லாம் போடுவதில் எனக்கு நம்பிக்கை இல்லை. ஆனால் ஒன்று எனக்கு முதலில் பின்னூட்டமிடுபவரின் தளத்துக்கு சென்று அவர் மட்டுறுத்தல் செய்யாது இருந்தால் செய்யும்படி ஆலோசனை கூறுவது எனது வழக்கம்.//
எதன் காரணமாக உங்களுக்கு விட்ஜெட் மீது நம்பிக்கை இல்லை.. உங்களது பதிவுக்கு வருபவர்கள் விட்ஜெட் எதையும் படிக்கவே மாட்டார்கள் என்று நினைக்கிறீர்களா?
வெறுமனே மட்டுறுத்தல் செய்யுங்கள் என்று மட்டும் சொன்னால் போதுமா? என் பதிவில் பின்னூட்டம் இடுவதால் உங்களது பெயரில் ஆபாசத் தளம் துவக்கப்பட்டு அதில் உங்களது குடும்பத்தினரைப் பற்றிக் காமக் கதைகள் எழுதப்படும். தொடர்ந்து இத்தாக்குதலுக்கு நீங்கள் ஆட்கொள்ளப்படுவீர்கள் என்பதை விளக்கமாகச் சொன்னீர்களா? அப்படிச் சொன்னால்தானே அந்த சைக்கோத்தனத்திலிருந்து அவர்களால் தப்பிக்க முடியும்.. வெறுமனே மட்டுறுத்தல் செய்.. தப்பித்துக் கொள்வாய் என்றால், இப்போது அதியமானின் நிலை என்ன ஸார்..?
//மேலே கூறியதில் சில தவறுகள் உள்ளன. எனது முதல் யோம்கிப்பூர் பதிவு போட்டு ஐந்து நிமிடத்துக்குள்ளாக மூர்த்தியின் டுண்டூ பதிவில் அசிங்கப்பதிவு போடப்பட்டது. அவன் தாக்குதல் இன்னும் தீவிரப்படுத்தப்பட்டது. ஆக அவன் சத்தியம் ஒன்றும் செய்யவில்லை.
ஆகவே இரண்டாம் யோம் கிப்பூர் பதிவு போட்டு அவனை அலட்சியம் செய்ய ஆரம்பித்தேன். என்னைப் பற்றி ஆர்குட்டில் அசிங்க ப்ரொபைல்கள் போட்டான். இப்போது கூட அது சம்பந்தமாக பல டெலிஃபோன் அழைப்புகள் வருகின்றன.//
அவன் உங்களைப் பற்றி என்ன பேசுகிறான்? என்ன எழுதுகிறான் என்பதை வாட்ச் செய்து அதனை வலைப்பதிவர்களிடம் தெரிவிப்பதுதான் இந்தப் பிரச்சினையைத் தீர்க்கும் வழி என்று நினைத்தீர்களா?
//நீங்கள் பின்னூட்டமிட்டதால்தான் அவன் உங்களை இவ்வளவு அசிங்கமாகத் திட்டினான் ஆகவே நீங்கள்தான் அவனது இச்செய்கைக்கும் பொறுப்பு எனக் கூறுவது எவ்வளவு அபத்தமோ அதே அபத்தம்தான் என்னையும் குறை கூறுவது என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.//
நான் தெளிவாகவே சொல்லியிருக்கிறேன். உங்களுடைய பதிவில் பின்னூட்டம் போடுவதால்தான் பலருக்கும் ஆபாச அர்ச்சனைகள் வந்தன. வருகின்றன.. நீங்கள் என் தளத்திற்குள் நிஜப் பெயருடன் யாரும் வராதீர்கள். அப்படி வந்தால் இத்தகைய பரிசுகள் கிடைக்கும் என்று வெளியில் சொல்லியிருந்தால் என்னை மாதிரி புதியவர்கள் மாட்டிக் கொண்டிருக்க மாட்டார்களே என்பதால்தான் இந்த நிகழ்வு உங்களது வீட்டில்(தளத்தில்) நிகழ்ந்ததால் ஒருவகையில் இதற்கு நீங்களும்தான் பொறுப்பாவீர்கள்.. தப்பிக்க நினைக்க வேண்டாம்.
//மற்றப்படி விட்ஜட் நீங்கள் போட்டுக் கொண்டு "டோண்டுவின் வலைப்பதிவில் யார் பின்னூட்டம் இட்டாலும் அவர்களுக்கு போலியாரின் ஆபாச கமெண்ட்டுகள் பரிசாக வரும். தொடர்ந்தால் அவர்களின் பெயரில் ஆபாசத் தளம் திறக்கப்படும். எனவே அவரது தளத்திற்குள் வருவதும், பின்னூட்டமிடுவதும் அவரவர் சொந்த விருப்பத்தின்பேரிலேயே வாருங்கள். விளைவுகளுக்கு அவர் பொறுப்பில்லை...” என்று போட்டுக் கொள்வதைப் பற்றி எனக்கு எவ்வித ஆட்சேபணையும் இல்லை.//
ஆக, "எனக்கு யாரைப் பற்றியும் கவலையில்லை.. என்னைப் பற்றியும், என் குடும்பத்தைப் பற்றியும்தான் எனக்குக் கவலை.. மற்றவர்களுக்கு குடும்பம், தாய், தந்தை, சகோதரன், சகோதரி இருக்கிறார்களா இல்லையா என்பதெல்லாம் எனக்குத் தேவையில்லாதது. ஆனால் அவர்களெல்லாம் எனது வலைத்தோழர்கள்தான்.. எனக்கு பின்னூட்டம் போட வரத்தான் வேண்டும்" என்கிறீர்கள்..
வழியில் ஒரு சாக்கடையில் அடைப்பு இருந்து நாற்றமடித்தால் அதை சுத்தம் செய்யும்வரை அந்தச் சாக்கடை வழியாகச் செல்லாமல் தவிர்க்கலாம். அல்லது மூக்கைப் பொத்திக் கொண்டும் செல்லாம். ஆனால் சாக்கடை இருப்பதையோ சொல்ல மாட்டேன். விழுந்து எழுந்து துடைத்துக் கொண்டு போகிறவர்கள் போகலாம் என்று நீங்கள் சொல்கிறீர்கள்.
பரவாயில்லை.. நல்ல மனதுதான் உங்களுக்கு..
வாழ்க வளமுடன்..
இங்கேயிருந்தா வந்திருக்கீக?
Korea (South)
222.238.62.61
See who owns indiatimes.com or any other website:
http://whois.domaintasks.com/indiatimes.com
Post a Comment