09-03-2013
என் இனிய வலைத்தமிழ் மக்களே..!
கேரம் போர்டு விளையாட்டை மேலும் பரப்புரை செய்யும் விதமாக இப்படம் இருக்கும்ன்னு இயக்குநர் பிரம்மா சொன்னாரு.. ஆனால் படமோ கேரம் போர்டு விளையாடினால் சாவு வருமென்று சொல்கிறது..!
கேரம் போர்டு விளையாட்டில் தொடர்ந்து தோல்வியடையும் ஒரு முழு லூஸு, தனது தோல்வியைத் தாங்கிக் கொள்ள முடியாமல் விளையாட்டில் கில்லியான ஹீரோவை போட்டுத் தள்ள முடிவெடுக்கிறான். முடிவில் யார் ஜெயித்தது என்பதுதான் மிச்ச சொச்சக் கதை..!
விஜய் டிவியின் சூப்பர் ஹிட் சீரியலான ‘கனா காணும் காலங்கள்’ தொடரின் இயக்குநர் பிரம்மாதான் இந்தப் படத்தின் இயக்குநர்..! கேரம் போர்டு, லவ்வு இரண்டையும் தொடர்ந்து கொண்டு சென்றதில் கேரம் போர்டு பின்னுக்குத் தள்ளப்பட்டு.. காதலும், துரோகமும், பொறாமையும் அதிகமாகி படத்தை சராசரியான படமாகவே ஆக்கிவிட்டது..!
புதுமுகம் இர்பான்.. ‘கனா காணும் காலங்கள்’ தொடரில் நடித்தவர்.. ரொம்பச் சின்ன வயதாக இருக்கிறார்.. இவருக்குள்ளும் ஒரு காதல் வருவதைப் போல சொல்வதும்.. அந்தக் காதல் பில்டப் ஆகின்ற சில நிமிடங்களும் அவ்வளவு சுவாரஸ்யமாக இல்லை..! வழக்கம்போலான அம்மாக்களை போல “குடிச்சியா..? எத்தனை பீர்.. ஒண்ணா, ரெண்டா? மூணா? உனக்கு சாப்பாடு இல்லை” என்று குடிப்பதை மிகச் சாதாரணமாக எடுத்துக் கொள்ளும் அம்மாக்களை உருவகப்படுத்துவதில்தான் இந்த இயக்குநர்களுக்கு எத்தனை ஆர்வம்..? படத்தைப் பார்க்கும் அத்தனை பிள்ளைகளும் தங்களது அம்மாக்கள் இப்படித்தான் தங்களிடம் பிரெண்ட்லியாக இருக்க வேண்டும் என்று நினைத்துவிட மாட்டார்களா..?
ஹீரோயின் அருந்ததி.. தீயாக இருக்கிறார். நடிப்பதற்கு நிறைய ஸ்கோப்கள் இருந்தும் இயக்குநர் அனுமதிக்காததால் அடக்கி வாசித்திருக்கிறார்..! இன்னும் நேரமும், இடமும் நிறைய இருக்கிறது.. முயன்றால் நிச்சயம் மேலே வரலாம்..!
பொறுப்பற்ற பையன்.. முழு ஆதரவளிக்கும் அம்மா.. போட்டுக் கொடுக்கும் தங்கச்சி என்று அக்மார்க் மிடில் கிளாஸ் பேமிலியை காட்டியிருக்கிறார் இயக்குநர். இதற்கொரு பாராட்டு அவருக்கு.. ஹீரோவின் தங்கச்சி தன் அண்ணனின் குணமறிந்து ஹீரோயினை எச்சரிப்பதும், அவர்களது காதலை கட் செய்யத் துடிப்பதும் உள்ளபடி பார்த்தால் நியாயம்தான்..! அதெப்படி இப்படி வெட்டியாக ஊரைச் சுற்றும் ஹீரோக்களை பார்த்தவுடனேயே ஹீரோயின்களுக்கு காதல் வந்துவிடுகிறது..?
சினிமா தியேட்டரில் எடை பார்க்கும் மிஷினில் தேவதை வருவாள் என்ற கார்டு கையில் கிடைத்தவுடன் காதில் பூச்சுற்றி ஹீரோயினை அடையாளப்படுத்துவது செம காமெடிதான்.. நானும்தான் எத்தனை முறை எடை பார்த்திருக்கிறேன்.. ஒரு முறைகூட இப்படியொரு கார்டு வந்ததில்லையே.. ஏன்..?!!
நரேனின் கேரக்டர் வந்த பின்புதான் கதையே சூடு பிடிக்கிறது..! வெளிநாடு கிளம்ப தயாரான சூழலில் கேரம் போர்டு விளையாட்டில் போய் வகையமாக மாட்டிக் கொள்வதும்.. அந்த அடிதடி சிச்சுவேஷனும் திரைக்கதையில் வேகத்தைக் கூட்டியிருக்கிறது.. ரவுடிகளிடமிருந்து தப்பிக்க முயன்று கடைசியாக நரேனிடமே சென்று மாட்டிக் கொள்வதும்.. தூக்குடா என்று சொன்னவுடன் தூக்கிக் கொண்டு கிளப்புக்கே வந்து நிற்கும் காட்சியும் செம ஸ்பீடு..!
உயிருக்குயிரான ஸ்டிக்கரை பணயமாக வைத்துத் தோல்வியடைந்து அதனை வெறுப்பாகக் கொடுத்துவிட்டுச் செல்லும் வில்லனின் நடிப்பும் குறிப்பிடத்தக்கதுதான்.. அதே ஸ்டிக்கரை திருப்பிக் கொடுத்துவிட்டு ஹீரோ சண்டையை நிறுத்தும்படி சொல்வதும், பேசுவதும் ஓகேதான்..
நரேனுக்கு முன்பு செல்லப் பிள்ளையாக இருந்த அந்த வில்லனின் கேரக்டர் ஸ்கெட்ச்சும், மாடுலேஷனும் வித்தியாசமாக கவர்கிறது.. அதிகம் போதை மனிதனை முட்டாளாக்கும் என்பதை போல இவரது கேரக்டர் இறுதியில் செய்யும் அந்தக் கொலை.. பதைபதைக்கத்தான் செய்தது..!
நரேனை போட்டுத் தள்ள பாயின் ஆட்கள் முயல்வதும்.. இதற்கு நரேனின் ஆளே துணை போவதுமான அந்த போர்ஷன் மிகக் கச்சிதமாக எடுத்திருக்கிறார்கள். இதற்கு எடிட்டரின் துணை நிறையவே கிடைத்திருக்கிறது..! அந்தச் சதியை கடைசி நிமிடத்தில் கண்டறியும் நரேனையும், அடுத்த ஷாட்டில் துரோகியை நெற்றிப்பொட்டில் சுட்டு காலி செய்துவிட்டு அமைதியாக காரில் செல்லும் நரேனின் ஆக்ட்டிங்கும் மிகையில்லை..! வெல்டன் ஸார்..!
மரண கானா விஜியின் அந்தப் பாடலும் அதற்கான ஆட்டமும் அட என்று ஆச்சரியப்பட வைத்தது.. இந்த வருட குத்துப் பாட்டு லிஸ்ட்டில் முதலிடத்தைப் பிடிக்கும் என்றே நம்புகிறேன்..!
இந்தப் படத்திற்கு யு-ஏ கொடுத்திருக்கிறார்கள். எதற்கு என்றுதான் தெரியவில்லை. நியாயப்படி பார்த்தால் ஏ-தான் கொடுத்திருக்க வேண்டும்..! அளவுக்கதிகமான சிகரெட் பயன்படுத்துதல்.. எக்ஸ்ட்ரா போனஸாக கஞ்சா புகைத்தல்.. கொலைகள் என்று ரவுண்டு கட்டியிருக்க இதற்கு மட்டும் ஏன் விதிவிலக்கு என்று புரியவில்லை..! சென்சார் போர்டை புரிஞ்சுக்கவே முடியலப்பா..!
பிரம்மாவுக்கு இது முதல் படம். படத்தில் ஒரு சில விஷயங்களில் கச்சிதமாக இயக்கத்தைச் செய்திருக்கிறார் என்பது உண்மை..! கேரம் போர்டை பலவித கோணங்களில் காட்சிப்படுத்திய அதே நேரத்தில் கேரம் போர்டின் டெக்னிக்கல் மேட்டர்களை ச்சுத்தமாக லூஸில் விட்டுவிட்டு அடிதடி, வெட்டுக் குத்து, கொலை என்று பாதையை திசை திருப்பியதால் வழக்கமான மசாலா படமாகவே இது ஆகிவிட்டது..!
விளையாட்டின் மீது ஆர்வமாக இருக்க வேண்டும் என்ற கருத்தைச் சொல்லி சென்ற ஆண்டே ‘விளையாட வா’ என்றொரு படம் வெளிவந்திருந்தது.. அதில் இந்த அளவுக்கு கச்சிதமான இயக்கம் இல்லை.. ஆனால் கதை இருந்தது.. இதில் அந்தக் கதையில் மட்டும் ஓட்டை.. ஆனால் இயக்கம் 75 சதவிகிதம் கச்சிதம்..!
அடுத்தடுத்த படங்களில் பிரம்மா நம்மை இன்னமும் கவர்கின்றவிதத்தில் படங்களை கொடுப்பார் என்றே நம்புகிறேன்..!
|
Tweet |
11 comments:
புதுமுகம் இர்பான்.. ‘கனா காணும் காலங்கள்’ தொடரில் நடித்தவர்.//
ivar erkanave PATTAALAM padaththil nadiththavar. therinthu ezhuthavum
[[[ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
புதுமுகம் இர்பான்.. ‘கனா காணும் காலங்கள்’ தொடரில் நடித்தவர்.//
ivar erkanave PATTAALAM padaththil nadiththavar. therinthu ezhuthavum]]]
சினிமால இதுக்கு முன்னாடி இவர் நடிச்சதே இல்லைன்னு நான் சொல்லவே இல்லையே..?
எப்பூடி..???????????
சினிமால இதுக்கு முன்னாடி இவர் நடிச்சதே இல்லைன்னு நான் சொல்லவே இல்லையே..?
எப்பூடி..???????????//
அந்த புதுமுகம் என்பதற்கு விளக்கம் கொடுத்தால் சின்னை பையன் தெரிஞ்சிக்கிடுவேன்
அண்ணாச்சி,
//கேரம் போர்டை பலவித கோணங்களில் காட்சிப்படுத்திய அதே நேரத்தில் கேரம் போர்டின் டெக்னிக்கல் மேட்டர்களை ச்சுத்தமாக லூஸில் விட்டுவிட்டு அடிதடி, வெட்டுக் குத்து, கொலை என்று பாதையை திசை திருப்பியதால் வழக்கமான மசாலா படமாகவே இது ஆகிவிட்டது..!
//
உங்களுக்கு என்ன மாதிரி படம் எடுத்தா புடிக்குமோ,ஒரு வேளை லோகநாயகர் போல படம் எடுத்தா தான் ஒலகப்படம்னு சொல்வீங்கன்னு நினைக்கிறேன் :-))
கேரம் போர்டு விளையாட்டை பின்ப்புலமாக கொண்டு ஒரு , வழக்கமான ,காதல்,மோதல்னு எடுக்க கூடாதா என்ன?
ஸ்ட்ரைக்கர்னு ஹிந்தியில் சித்தார்த்,அனுபம்கெர் எல்லாம் நடித்த "கேரம்" பின்னணிப்படத்தின் தழுவலோ என நினைக்கிறேன்.
அதிலும் கேரத்தில் கில்லியான ஹீரோ ,விளையாட்டை விட்டுவிட்டு வெளிநாட்டுக்கு போக நினைக்கும் வேளையில் ,அதில் ஏமாற்றப்பட மீண்டும் கேரம் விளையாண்டு பணம் சம்பாதிக்க வில்லனுடன் கேரம் ஆடி,அடிதடியாகும்.
யூடியூபில் முழுப்படமும் இருக்கு, ரிலீஸ் ஆன அப்போவே யூடியூபில் போட்ட முதல் படம்.
[[[ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
சினிமால இதுக்கு முன்னாடி இவர் நடிச்சதே இல்லைன்னு நான் சொல்லவே இல்லையே..?
எப்பூடி..???????????//
அந்த புதுமுகம் என்பதற்கு விளக்கம் கொடுத்தால் சின்னை பையன் தெரிஞ்சிக்கிடுவேன்.]]]
எனது வலைப்பதிவின் ரெகுலர் வாசகர்களில் 99 சதவிகிதத்தினருக்கு அவர் புதுமுகம்தானே.. நானே அவரைப் பத்தி இப்போதுதானே எழுதுகிறேன்.. அதுதான் காரணம்..!
எப்பூடி..?
[[[வவ்வால் said...
அண்ணாச்சி,
//கேரம் போர்டை பலவித கோணங்களில் காட்சிப்படுத்திய அதே நேரத்தில் கேரம் போர்டின் டெக்னிக்கல் மேட்டர்களை ச்சுத்தமாக லூஸில் விட்டுவிட்டு அடிதடி, வெட்டுக் குத்து, கொலை என்று பாதையை திசை திருப்பியதால் வழக்கமான மசாலா படமாகவே இது ஆகிவிட்டது..!//
உங்களுக்கு என்ன மாதிரி படம் எடுத்தா புடிக்குமோ,ஒரு வேளை லோகநாயகர் போல படம் எடுத்தாதான் ஒலகப்படம்னு சொல்வீங்கன்னு நினைக்கிறேன் :-))]]]
ஏன்யா.. ஏன்.. இப்படி? கமல் மேல இத்தனை காண்டு..! போய் புள்ளை குட்டிகளை படிக்க வைங்கப்பா..! இம்புட்டு பொறாமையா இருக்காங்க அண்ணன் மேல..!?
[[[கேரம் போர்டு விளையாட்டை பின்ப்புலமாக கொண்டு ஒரு , வழக்கமான, காதல், மோதல்னு எடுக்க கூடாதா என்ன?
ஸ்ட்ரைக்கர்னு ஹிந்தியில் சித்தார்த்,அனுபம்கெர் எல்லாம் நடித்த "கேரம்" பின்னணிப் படத்தின் தழுவலோ என நினைக்கிறேன்.
அதிலும் கேரத்தில் கில்லியான ஹீரோ, விளையாட்டை விட்டுவிட்டு வெளிநாட்டுக்கு போக நினைக்கும் வேளையில், அதில் ஏமாற்றப்பட மீண்டும் கேரம் விளையாண்டு பணம் சம்பாதிக்க வில்லனுடன் கேரம் ஆடி, அடிதடியாகும். யூடியூபில் முழுப் படமும் இருக்கு, ரிலீஸ் ஆன அப்போவே யூடியூபில் போட்ட முதல் படம்.]]]
அதே கதைதான்..! இவரும் வெளிநாட்டுக்குக் கிளம்பும்போதுதான் ஹீரோயின் அவனைத் தேடி வருவா.. அத்தோட வில்லனும் வருவான்.. வெளிநாட்டு டிரிப் கேன்சலாயிரும்..!
அண்ணாச்சி,
காண்டு,வெள்ளைப்பூண்டுனு சொல்லிக்கிட்டு, மொக்கையா காப்பி அடிச்சு படம் எடுத்துட்டு ஒலகப்படம்னு கூசாமல் சொல்லிப்பதால் தான் ,சுட்டிக்காட்டுகிறோம்.
#எல்லாரும் எங்கோ இருந்து தான் உருவுறாங்க :-))
ஆனால் அறிமுக இயக்குனர்களிடம் தான் நீங்க லாஜிக்கா கேள்விலாம் கேட்ப்பீங்க :-))
கேரமில் சுண்டாட்டம் ஆடுவது தெருமுனைப்போட்டிகளில் மட்டுமே, தொழில்முறைப்போட்டிகளில் தடை செய்யப்பட்டது.
thumbing என கட்டை விரலால் ,பின்ப்பக்கமா பாக்கெட் செய்வதை தான் நாங்க சுண்டுறது சொல்வோம், படத்தில் எதை சொல்றாங்கன்னு தெரியலை.
[[[வவ்வால் said...
அண்ணாச்சி, காண்டு, வெள்ளைப் பூண்டுனு சொல்லிக்கிட்டு, மொக்கையா காப்பி அடிச்சு படம் எடுத்துட்டு ஒலகப் படம்னு கூசாமல் சொல்லிப்பதால்தான், சுட்டிக் காட்டுகிறோம். #எல்லாரும் எங்கோ இருந்துதான் உருவுறாங்க :-))
ஆனால் அறிமுக இயக்குனர்களிடம்தான் நீங்க லாஜிக்கா கேள்விலாம் கேட்ப்பீங்க))]]]
அதான் கேட்டாச்சே.. இதுக்கு மேல என்னன்னு சொல்றது..? லூஸ்ல விடும்..!
[[[கேரமில் சுண்டாட்டம் ஆடுவது தெருமுனைப்போட்டிகளில் மட்டுமே, தொழில் முறைப் போட்டிகளில் தடை செய்யப்பட்டது. thumbing என கட்டை விரலால், பின் பக்கமா பாக்கெட் செய்வதைதான் நாங்க சுண்டுறது சொல்வோம், படத்தில் எதை சொல்றாங்கன்னு தெரியலை.]]]
சுண்டி விடுறதுதான் சுண்டாட்டம். இது கேரம் போர்டில் மட்டுமில்லை.. பல விளையாட்டுக்களிலும் இருக்கு..!
[[[கேரமில் சுண்டாட்டம் ஆடுவது தெருமுனைப்போட்டிகளில் மட்டுமே, தொழில் முறைப் போட்டிகளில் தடை செய்யப்பட்டது. thumbing என கட்டை விரலால், பின் பக்கமா பாக்கெட் செய்வதைதான் நாங்க சுண்டுறது சொல்வோம், படத்தில் எதை சொல்றாங்கன்னு தெரியலை.]]]
சுண்டி விடுறதுதான் சுண்டாட்டம். இது கேரம் போர்டில் மட்டுமில்லை.. பல விளையாட்டுக்களிலும் இருக்கு..!
Post a Comment