ஒன்பதுல குரு - சினிமா விமர்சனம்

10-03-2013


என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

உக்கார வைச்சு கொல்றதை அனுபவிக்கணுமன்னா இந்தப் படத்தை நீங்க அவசியம் பார்க்கணும்..! சினிமாவுலகில் நேரம் காலம் தெரியாமல் உழைக்கும் உழைப்பாளியென பெயர் எடுத்திருக்கும், நடிகர் விஜய்யின் ஆஸ்தான பி.ஆர்.ஓ., பி.டி.செல்வக்குமார் முதன் முறையாக இயக்கியிருக்கும் படம் இது..! இவர் ஏற்கெனவே ‘பந்தா பரமசிவம்’ என்ற படத்தைத் தயாரித்திருக்கிறார்.. காமெடின்னா அண்ணனுக்கு ரொம்பவே பிடிக்குமாம்..! அதனாலேயே முதல் இயக்கத்திற்கு காமெடியை கையில் எடுத்திருக்கிறார்..! ஆனால் இறுதிவரையில் லேசான கிச்சுகிச்சு மூட்டல்களைத் தவிர, வேறு எந்த வகையிலும் சிரிப்பலை தியேட்டரில் இல்லை..!


கல்யாணமாகி அவஸ்தைப்படும் 3 இளைஞர்கள் அந்த வாழ்க்கையில் இருந்து விடுபட வேண்டும் என்ற எண்ணத்தில் ஒன்று சேர்கிறார்கள்.. 4-வது நண்பனின் கல்யாணத்திற்காக பெங்களூர் வந்தவர்கள் அங்கே தங்களது 5-வது நண்பனையும் சந்தித்து அவன் மூலமாக சொகுசாக வாழ்கிறார்கள்.  லஷ்மிராயை பார்த்து ஆள், ஆளுக்கு ஜொள்ளுவிட்டு நெருங்குகிறார்கள். கடைசியாக லஷ்மிராய் தனது வில்லத்தனத்தைக் காட்ட அடி, உதை வாங்கிவிட்டு மீண்டும் தத்தமது மனைவிகளிடமே வந்து சரணடைகிறார்கள்..! இவ்வளவுதான் கதை..! இதுக்கு ஏன் இத்தனை சுத்தல்..?

‘பவர் ஸ்டார்’ டைட்டில் காட்சியில் ஆடியிருக்கிறார். இதுக்காகவே கூட்டம் அள்ளிக்கிட்டு வரும்ன்னு நினைச்சுட்டாங்க போலிருக்கு..! படத்தை துவக்கி வைப்பதும், முடித்து வைப்பதும் இவரே..! வினய்க்கு குண்டான மனைவி.. சத்யனுக்கு அடிமையாக நடத்தும் மனைவியும், மாமியாரும்.. அரவிந்த் ஆகாஷுக்கு மனைவியால் கூட்டுக் குடும்பத்தில் குழப்பம்.. இதில் வித்தியாசமாக பிரேம்ஜிக்கு தனக்கு பாடம் சொல்லிக் கொடுக்கும் டீச்சர்கள் மீதுதான் லவ்வு.(வெளங்கிரும் தமிழ்ச் சினிமா)  லஷ்மிராய்க்கு தன்னிடம் ஜொள்ளுவிடும் ஆண்களிடம் கொள்ளையடிக்கும் குணம்.. இத்தனையையும் ஒன்று சேர்த்து தன்னால் முடிந்த அளவுக்கு எடுத்துக் கொடுத்திருக்கிறார் இயக்குநர்..!

இருப்பதிலேயே கொஞ்சமாவது நடித்திருப்பவர் சத்யன்தான்..! மனைவி, மாமியாரிடம் மாட்டிக் கொண்டு இவர் படும் அல்லல்கள்.. கொஞ்சமேனும் உதட்டைப் பிரிக்க வைக்கிறது.. பிற்பாதியிலும் இவர் மட்டுமே கொடுத்த வேலையை கச்சிதமாக செய்திருக்கிறார்..! Do what I say என்பதையே சொல்லிச் சொல்லி டார்ச்சர் செய்யும் மாமியாராக மந்த்ரா..! எப்படியோ இருந்து.. இப்போது மறுபடியும் ‘சிக்’ லெவலுக்கு வந்திருக்கிறார்.. ஆனாலும் இவர் மாதிரியான ஹீரோயின்களுக்கு மாமியார் வேடம் கொடுத்து ரிட்டையர்ட்மெண்ட் அளிக்கும் கோடம்பாக்கத்து இயக்குநர்களுக்கு எனது  கண்டனங்கள்..! இதில் கராத்தேயில் பிளாக் பெல்ட் என்று சொல்லி சண்டை காட்சி வேறு..!? 

சத்யன் கதை சொல்கிறார்.. பின்பு வினய் கதை சொல்கிறார்.. பின்பு அரவிந்த் ஆகாஷ் கதை சொல்கிறார்.. இதற்குப் பின்பு மூவரும் பெங்களூர் சென்று பிரேம்ஜியை சந்திக்கிறார்கள். அவரும் ஒரு கதை சொல்கிறார்.. இப்படியே கதை, கதையாகவே போய்க் கொண்டிருக்க முற்பாதியிலேயே படம் வெகுவாக போரடித்துவிடுகிறது..! 

சத்யனி்ன் கதையாவது பரவாயில்லை.. சத்யனின் நடிப்பால் கொஞ்சம் பார்க்க முடிகிறது. அரவிந்த் ஆகாஷ், வினய் கதைகள் செம போர்.. ‘நாயகனை’ இமிடேட் செய்து லொள்ளு சபா காட்சிகளை அப்படியே எடுத்து வைத்திருக்கிறார்கள். இன்னும் எத்தனை நாளைக்குத்தான் இப்படி காட்சிகளையும் காப்பியடித்து எடுப்பது..? ‘நாயகன்’ மட்டும் வழக்கம்போல ஓகே..!

இளையராஜாவை எந்த இடத்திலும் தவற விட முடியாது என்பது உண்மைதான் போலும்.. இசையமைப்பாளர் கே-யால் முடியாததை இளையராஜா இதில் நிரப்பியிருக்கிறார்..! நிரோஷா கேரக்டரில் சோனாவை வைத்து எடுக்கப்பட்டிருக்கும் ‘அக்னி நட்சத்திரம்’ பாடல் காட்சியும், பிரேம்ஜியுடனான லவ்வும் உவ்வே..!  இப்படி டீச்சரை லவ் பண்ணலாம்ன்னு வசனத்திலேயே சொல்லிக் கொண்டு போய், நாட்டில் அது நிறையவே நடக்கப் போகிறது..! இதுக்கும் ஒரு பஞ்சாயத்து சீக்கிரமா வரும்ன்னு நினைக்கிறேன்..!

இடைவேளைக்கு பின்புதான் லஷ்மிராயே கண்ணில் படுகிறார்.. சப்போர்ட்டிங் கேரக்டரையே ஹீரோயினாக்கியிருக்காங்க..! ஒரு பாடலுக்கு தனது பேவரிட் ஸ்டைலில் ஆடியிருக்கிறார்.. இன்னும் காட்ட வேண்டியது எதுவுமில்லை என்பதால் அடுத்து நடிப்பில் என்ன செய்யப் போகிறார் என்று பார்ப்போம்.. கிளைமாக்ஸில் பில்லா-2 நயன்தாரா போல் டிரெஸ்ஸில் கவர்ச்சி காட்ட முயன்றிருக்கிறார்.. ஆனால் கவட்டைக்கால் நடையைப் போல் நடந்து அத்தனையும் வேஸ்ட்டு..!

‘இரும்புக்கோட்டை முரட்டு சிங்க’த்தில் தனது பெயரை வலுவாக பதிவு செய்த சாம்ஸுக்கு இதில் கொஞ்சமாக நடிக்கத்தான் வாய்ப்பு..! காமெடியில் பேசப் பேசத்தான் காமெடி வரும் என்பார்கள்.. அப்படியே இடைவேளைக்கு பின்பு கொஞ்சமாவது டயலாக் டெலிவரியில் காமெடியை கொண்டு வரவே முயற்சி செய்திருக்கிறார்கள். இதில் மனோபாலாவும் அவரது மனைவியும் வேறு லூட்டி அடித்திருக்கிறார்கள். வெண்ணிற ஆடை மூர்த்தி இல்லாத குறையை நிவர்த்தி செய்திருக்கிறார் மனோபாலா..! அவருடைய மனைவியை வைத்து நடத்தும் காமெடியெல்லாம் டூ மச்சு..! பிளாக் காமெடி படம்ன்னா இப்படித்தான் என்றால்.. ஐயா.. சாமி ஆளை விடுங்கப்பூ..!

‘வா மச்சி’ பாடல் ஏற்கெனவே பட்டி தொட்டியெங்கும் ஹிட்டாகிவிட்டது.. இசையமைப்பாளர் கே-வுக்கு நல்லதொரு எதிர்காலம் இருக்கிறது.. இதுபோல் படத்திற்கு ஒரு பாடலை ஹிட் செய்தாலே இப்போதைக்கு போதும்..!  விஜய்யின் பி.ஆர்.ஓ.வாக இருந்து கொண்டு இந்தப் படத்தில் தல அஜீத்தையும், ரஜினியையும், விக்ரமையும் வாரியிருக்கிறார் செல்வக்குமார்.. காமெடிதான் என்றாலும் கொஞ்சம் நெருடலாகவே இருக்கிறது..! அதிகம் அடிபட்டிருப்பது அஜீத்துதான்.. அஜீத் இந்தப் படத்தை பார்க்காமல் இருப்பாராக..!

கொஞ்சம் டிங்கரிங் வேலை செய்து கதையை உருப்பேற்றியிருக்கலாம்..! கதையை மட்டும் கொடுத்துவிட்டு தயாரிப்பை மட்டுமே செய்திருக்கலாம் செல்வக்குமார் அண்ணன்.. காமெடியெல்லாம் அதுக்காகவே உள்ள இயக்குநர்களுக்குத்தான் வரும்.. அதுவொரு வகை கலை.. எல்லோராலும் பண்ண முடியாது..! நகைச்சுவைக்கான அத்தனை வாய்ப்புகள் திரைக்கதையில் இருந்தும் சிரிப்பே வரவில்லையெனில் யாருடைய குற்றம்..? 

இதில் அடுத்த பாகமும் வரப் போவதாக வயிற்றில் புளியைக் கரைத்திருக்கிறார்கள்..! அதிலாவது சிரிக்க வைப்பார்களா என்று பார்ப்போம்..!


14 comments:

ராம்ஜி_யாஹூ said...

பழைய தமிழ்ப் படங்களின் காட்சிகளை வசனங்களை மிமிக்ரி செய்து
கலக்கப் போவது யாரு அசத்தப் போவது யாரு நிகழ்ச்சி செய்கிறார்களே
அதைப் பார்ப்பது போன்ற ஒரு உணர்வே இப்படத்தைப் பார்க்கையில் ஏற்பட்டது.
லக்ஷ்மி ராய் இப்படத்தைத் தவிர்த்து இருக்கலாம் 

வவ்வால் said...

அண்ணாச்சி,

இதெல்லாம் ஹாலிவுட் டைப் காமெடி :-))

லஷ்மி ராயை "முழு திறமை" காட்ட வைத்திருந்தால் ச்சூப்பர் ஹிட் ஆகியிருக்கும் :))

Prem S said...

//அதிகம் அடிபட்டிருப்பது அஜீத்துதான்.. அஜீத் இந்தப் படத்தை பார்க்காமல் இருப்பாராக..!
//

அதிலும் வினய் செய்பவை எல்லாம் வினை தான்

Anonymous said...

//‘வா மச்சி’ பாடல் ஏற்கெனவே பட்டி தொட்டியெங்கும் ஹிட்டாகிவிட்டது.//

sollave illa...

உண்மைத்தமிழன் said...

[[[ராம்ஜி_யாஹூ said...

பழைய தமிழ்ப் படங்களின் காட்சிகளை வசனங்களை மிமிக்ரி செய்து கலக்கப் போவது யாரு அசத்தப் போவது யாரு நிகழ்ச்சி செய்கிறார்களே.. அதைப் பார்ப்பது போன்ற ஒரு உணர்வே இப்படத்தைப் பார்க்கையில் ஏற்பட்டது.]]]

ஹி. ஹி.. எல்லாருக்குமே இப்படித்தாண்ணே..! எப்படிண்ணே படத்தை பார்த்த..? அங்கேயே ரிலீஸாயிருச்சா..?

[[[லக்ஷ்மி ராய் இப்படத்தைத் தவிர்த்து இருக்கலாம்.]]]

ஐயோடா சாமி..? லஷ்மிராய்க்கு இப்படியொரு ரசிகரா..? இலக்கிய உலகம் தாங்காதுடா சாமி..!

உண்மைத்தமிழன் said...

[[[வவ்வால் said...

அண்ணாச்சி, இதெல்லாம் ஹாலிவுட் டைப் காமெடி :-))]]]

அப்போ ஹாலிவுட்டுல மட்டும் ரிலீஸ் செய்யச் சொல்ல வேண்டியதுதானே..?

[[[லஷ்மி ராயை "முழு திறமை" காட்ட வைத்திருந்தால் ச்சூப்பர் ஹிட் ஆகியிருக்கும் :))]]

இவ்ளோதான் திறமை..! இதுக்கு மேல இருந்தாத்தான காட்டுறதுக்கு..?

உண்மைத்தமிழன் said...

[[[Prem s said...

//அதிகம் அடிபட்டிருப்பது அஜீத்துதான்.. அஜீத் இந்தப் படத்தை பார்க்காமல் இருப்பாராக..!//

அதிலும் வினய் செய்பவை எல்லாம் வினைதான்..]]]

அதான.. எப்படி வினய் இதுக்கு ஒத்துக்கிட்டாருன்னு தெரியலை..! பாவம்.. பின்னாடி ரொம்ப வருத்தப்படப் போறாரு..!

உண்மைத்தமிழன் said...

[[[! சிவகுமார் ! said...

//‘வா மச்சி’ பாடல் ஏற்கெனவே பட்டி தொட்டியெங்கும் ஹிட்டாகிவிட்டது.//

sollave illa...]]]

நீ கேக்கவே இல்லையே..?

போன மாசம் திண்டுக்கல் போயிருந்தப்போ டீக்கடைகளில் அதிகம் கேட்டது இந்தப் பாடல்தான்..!

Rafeek said...

husbands in goa and hangover mixing pola!!

உண்மைத்தமிழன் said...

[[[Rafeek said...

husbands in goa and hangover mixing pola!!]]]

ஆனா.. தைரியமா கதை அவரோடதுன்னு சொல்றாரே ஸார்..!?

தமிழ்மகன் said...

உலகின் முதல் இருபது இணைய தளங்கள் ----- http://mytamilpeople.blogspot.in/2013/02/most-popular-websites-on-internet.html

தமிழ்மகன் said...

உலகின் முதல் இருபது இணைய தளங்கள் ----- http://mytamilpeople.blogspot.in/2013/02/most-popular-websites-on-internet.html

தமிழ்மகன் said...

உலகின் முதல் இருபது இணைய தளங்கள் ----- http://mytamilpeople.blogspot.in/2013/02/most-popular-websites-on-internet.html

Unknown said...

அண்ணே! எங்கட மக்கள் சிரிலங்காவில படர துன்பம் சொல்வினம். புலம்பெயர்ந்து ஒஸ்திரேலியா,கனடா, லண்டனில் சொகுசு வாழ்க்கை வாழ்பவர்கள் இங்கன அமைதி வருவதை விரும்பமாட்டார்கள்,காரனம் இங்கன அமைதி வந்தால் அவர்களின் சொகுசு வாழ்ககை பரிபோய் அவர்களின் அகதிபாஸ் ரத்தாகி அவர்களை சொந்தநாட்டுக்கு அனுப்பிவிடுவார்கள். அதனால் தான் புலம்பெயர் சிரிலங்கா தமிழர்கள் ஈழம் என்ற புண்ணை ஆரவிடாமல் கிளரி விடுகின்றனர். கருணாநிதி ஆட்சியில் இருக்கும் போது ஈழ வியாபாரம் மறந்துபோகும். சீமான் வைகோ போன்றவர்கள் ஈழத்தை பயன்படுத்தி இரண்டு சீட்டாவது பிடித்து விட நினைப்பவர்கள். ரிவி சேனல்கள் ஈழத்தை வைத்து தங்கள் ரேட்டிங்கை வளப்படுத்திக் கொள்ளும். ஆனால் இந்த நாட்டில் வாழும் எங்களுக்கு ஈழமும் வேண்டாம் ஒரு எலவும் வேண்டாம். நிம்மதியான பயமற்ற வாழ்க்கை ஒன்றே போதும்.