06-03-2013
என் இனிய வலைத்தமிழ் மக்களே..!
வழக்கமான கதைதான்.. வேலை வெட்டியில்லாத ஒருவன், பார்த்தவுடன் காதலாக ஒருத்தியை பின் தொடர, அவள் கிடைக்காமல் வேறொருவனுடன் திருமணமாகும் நாளில் அவளுக்கு உதவி செய்யப் போய் என்னாகிறான் என்பதுதான் கதை..!
ஒரு ஹீரோ.. அவனுக்கு உதவும் வெட்டியான அல்லக்கைகள்.. பொறுப்பான அப்பா.. ஊரில் பார்க்கும் பெண்களையெல்லாம் மோகிக்கும் ரவுடி.. அவனது தாதா அண்ணன்.. இப்படியே துண்டு துண்டான காட்சிகள் அவ்வப்போது வந்து போய்க் கொண்டிருக்கிறது..!
ஹீரோ சிவன் ஏற்கெனவே 2 படங்களில் நடித்தவர்தான்.. இருந்தும் இன்னமும் திரைக்கு பொருத்தமானவராக இல்லை..! இப்போதெல்லாம் நம்ம ஹீரோக்களுக்கு நடிப்பெல்லாம் தேவையே இல்லை என்றாகிவிட்டது..! சண்டை காட்சிகள் வந்தால் கோபமாக பேச வேண்டும்.. ஹீரோயினை பார்த்து லவ்வும்போது கொஞ்சம் காதலுடன் பார்க்க வேண்டும்.. டான்ஸ் தெரிந்தால் ஆடலாம்.. இல்லையேல் அப்படியே விட்டுவிடலாம்.. மாண்டேஜ் காட்சிகளாக வைத்து ஒப்பேற்றி விடலாம் என்பதுதான் சூட்சுமம்..! இதுவும் இந்தப் படத்தில் அப்படியே நடந்திருக்கிறது..!
படம் துவங்கியபோது அங்கீதாவாக இருந்த ஹீரோயினின் பெயர் படம் முடிவடையும்போது இடென் என்று மாறியிருக்கிறது.. அவ்வளவுதான்..! கொஞ்சம் வித்தியாசமான முகம்..! இந்தப் படத்தில் கொஞ்சமாவது நடித்திருக்கிறார் என்பதே ஆறுதலான விஷயம்.
லொள்ளு சபா ஜீவாதான் அல்லக்கை பிரெண்ட்.. அவருடைய டூவீலர் ஒர்க்ஷாப்புதான் ஹீரோவுக்கு மண்டபம்.. அங்கேயிருந்துதான் கல்லூரிக்கு போய்வரும் ஹீரோயினை சைட் அடிக்கிறாராம்..! அந்தக் காதல் காட்சிகள் மட்டுமே கொஞ்ச நேரத்துக்கு சுவாரஸ்யமாக இருக்கிறது..!
சிவன் அங்கீதாவிடம் முதன்முதலில் பேசத் துவங்க. அவர் தெலுங்கில் பேசி குழப்பிவிட.. மீண்டும் இவர் போய் தெலுங்கு கற்றுக் கொண்டு வந்து அதில் ஆரம்பிக்க.. ஹீரோயின் தமிழில் அள்ளிவிட.. இந்தக் கலாட்டாவை ரசிக்க முடிகிறது.. அதேபோல் சிவனும், ஜீவாவும் ஹீரோயினின் வீட்டிற்குள் நுழைந்து அவரது பொருட்களை களவாட முயலும் அந்தக் காட்சியையும் ரசிக்கும்படியே எடுத்திருக்கிறார்கள்..!
பாலுமகேந்திராவின் படைப்புகளில் தனி முத்திரை பதித்திருந்த ரிஷி சமீப காலங்களில் வில்லனாகவே நடித்துக் கொண்டிருக்கிறார்.. இதிலும் அப்படியே..! ஆனால் அதுக்காக மருந்துக்குக்கூட அந்த ஊரில் போலீஸ் என்ற ஒரு ஜீவன்களே இல்லை என்பதுபோல் திரைக்கதை எழுதியிருப்பது அநியாயமான பூச்சுற்றல்.. இத்தனை கொலைகள்.. அடிதடி.. கற்பழிப்புகளுக்கு பின்பும் போலீஸை காட்டலைன்னா டூரிங் தியேட்டர்ல சுண்டல் விக்கிறவன்கூட சிரிப்பான்னு இயக்குநருக்கு ஏன் தோணலை..?
கிளைமாக்ஸிற்கான முடிச்சை மிக அழகாக போட்டிருக்கிறார் இயக்குநர். கடைசியாக வைத்திருக்கும் ஒரு டிவிஸ்ட்டும் ஓகேதான்..! ஆனாலும் அது அரதப்பழசு..! ரோபின் சாமுவேலின் ஒளிப்பதிவில் டாஸ்மாக் கடை பாட்டு காட்சியை மட்டும் பரபரப்பாக எடுத்திருக்கிறார்கள்.. பாடல் காட்சிகளில் கொஞ்சமேனும் ஹீரோயினின் அழகை காட்டுவார்களே என்று ஜொள்ளுவிடுபவர்களுக்கு படு ஏமாற்றம்..! ரவிச்சந்திரன் என்ற புதுமுகம் இசை. ஏதோ இருக்கு.. பின்னணி இசையில் காதைக் கிழிக்கும் சவுண்ட்டை போட்டு நம்மை ஒரு வழி பண்ணியிருக்கிறார்கள்..! வழக்கம்போல குத்துப் பாடல் மட்டுமே கேட்கும்படி இருந்த்து..!
கதை, திரைக்கதை, வசனம் எழுதி, எடிட்டிங்கும் செய்து இயக்கியிருக்கிறார் டைரக்டர் ப்ரியன். தன்னை ஏற்காத காதலியின் திருமணத்திற்கு உதவி செய்யப் போய் உபத்திரவமாகிறார் ஹீரோ என்ற இரண்டு வரி லைனை வைத்துக் கொண்டு முடிந்த அளவுக்கு தன் கையில் கொடுக்கப்பட்ட ஹீரோவை வைத்தும், கொடுத்த வசதிகளைக் கொண்டும் ஏதோ எடுத்துக் கொடுத்திருக்கிறார்..! இவரையும் குத்தம் சொல்லி புண்ணியமில்லை..! ஒரு லோ பட்ஜெட் படம் எப்படியிருக்குமோ அப்படியே இருக்கிறது..! பிரியனுக்கு அடுத்த படமாவது பெரிய அளவுக்கு வெற்றிப் படமாக அமையட்டும்..!
|
Tweet |
5 comments:
அண்ணாச்சி,
//ஆனால் அதுக்காக மருந்துக்குக்கூட அந்த ஊரில் போலீஸ் என்ற ஒரு ஜீவன்களே இல்லை என்பதுபோல் திரைக்கதை எழுதியிருப்பது அநியாயமான பூச்சுற்றல்.. இத்தனை கொலைகள்.. அடிதடி.. கற்பழிப்புகளுக்கு பின்பும் போலீஸை காட்டலைன்னா டூரிங் தியேட்டர்ல சுண்டல் விக்கிறவன்கூட சிரிப்பான்னு இயக்குநருக்கு ஏன் தோணலை..?
//
ஆப்கானில் போலீஸ் உண்டா?இந்தப்படம் ஆப்கானிஸ்தானில் எடுக்கப்பட்டது :-))
எப்படி தமிழ் பேசுறாங்கன்னு எல்லாம் கேட்கப்படாது, ஆப்கான் தீவிரவாதிகளே தமிழ் தான் பேசுறாங்க :-))
//பாடல் காட்சிகளில் கொஞ்சமேனும் ஹீரோயினின் அழகை காட்டுவார்களே என்று ஜொள்ளுவிடுபவர்களுக்கு படு ஏமாற்றம்..!
//
காட்டுறாப்போல எதுவுமே இல்லையோ?
இல்லை லோ பட்ஜெட் படம் என்பதால் சூம் லென்ஸ் வாடகைக்கு எடுக்காமல் படம் புடிச்சிட்டாங்களா :-))
ஹீரோ சிவனைப்பார்த்தா சிக்குன் குனியா வந்த பேஷண்ட் போலவே இருக்கார்,ஈரோயின் அங்கிதாவை பார்த்தா "மங்கி"தா போல ரொம்ப மங்கலா இருக்கு,இன்னொரு ஈரோயினை போட்டு சைடுல காட்டியிருக்கலாம் :-))
[[[வவ்வால் said...
அண்ணாச்சி,
//ஆனால் அதுக்காக மருந்துக்குக்கூட அந்த ஊரில் போலீஸ் என்ற ஒரு ஜீவன்களே இல்லை என்பதுபோல் திரைக்கதை எழுதியிருப்பது அநியாயமான பூச்சுற்றல்.. இத்தனை கொலைகள்.. அடிதடி.. கற்பழிப்புகளுக்கு பின்பும் போலீஸை காட்டலைன்னா டூரிங் தியேட்டர்ல சுண்டல் விக்கிறவன்கூட சிரிப்பான்னு இயக்குநருக்கு ஏன் தோணலை?//
ஆப்கானில் போலீஸ் உண்டா?இந்தப் படம் ஆப்கானிஸ்தானில் எடுக்கப்பட்டது :-)) எப்படி தமிழ் பேசுறாங்கன்னு எல்லாம் கேட்கப்படாது, ஆப்கான் தீவிரவாதிகளே தமிழ்தான் பேசுறாங்க :-))]]]
உங்களையெல்லாம்..???????
[[[//பாடல் காட்சிகளில் கொஞ்சமேனும் ஹீரோயினின் அழகை காட்டுவார்களே என்று ஜொள்ளுவிடுபவர்களுக்கு படு ஏமாற்றம்..!//
காட்டுறாப்போல எதுவுமே இல்லையோ? இல்லை லோ பட்ஜெட் படம் என்பதால் சூம் லென்ஸ் வாடகைக்கு எடுக்காமல் படம் புடிச்சிட்டாங்களா :-))]]]
இயக்குநரின் திறமை இவ்வளவுதான்..!
Sir your review super. I feel good
[[[vi jay said...
Sir your review super. I feel good.]]]
வருகைக்கு நன்றிகள் விஜய்..!
Post a Comment