16-03-2013
என் இனிய வலைத்தமிழ் மக்களே..!
பிரமாண்டமான 20th Century Fox-ன் இந்திய சார்பு நிறுவனமான பாக்ஸ் ஸ்டார் ஸ்டூடியோஸின் இரண்டாவது தமிழ் தயாரிப்பு..! இந்த நிறுவனத்தின் தற்போதைய காப்பாளர் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ்தான் என்பதால், தனது தம்பி திலீபனை ஹீரோவாக வைத்து, பர்ஸ்ட் காப்பி அடிப்படையில் தனது பேனரில் சுலபமாக ஒரு படத்தைத் தயாரித்து வெளியிட்டிருக்கிறார்..!
ஹீரோ சந்தர்ப்பவசத்தால் யாருக்கோ உதவிகளைச் செய்யப் போய், அதனால் பாதிக்கப்படும் மூன்று பேர் ஹீரோவை கொலை செய்ய முயற்சிக்க.. அவர்களிடமிருந்து ஹீரோ எப்படி தப்பிக்கிறார் என்பதுதான் கதைச்சுருக்கம்..!
திலீபன் என்னும் சக்தி ஷேர் ஆட்டோ ஓட்டி வருகிறார். காஞ்சிபுரம் சமத்துவபுரத்தில் தனது வீட்டிற்கு அருகிலேயே குடியிருக்கும் அஞ்சலியை ஒன் சைடாக லவ்விக் கொண்டிருக்கிறார்..! தனது தங்கை பிறந்த நாளுக்காக அனாதை குழந்தைகளை அழைத்துக் கொண்டு பார்ட்டிக்கு போகிறார்கள் திலீபனின் குடும்பத்தினர். ஏடிஎம்மில் பணம் எடுத்துக் கொண்டு வெளியே வரும் திலீபனின் கழுத்தில் கத்தியை வைத்து பணத்தைப் பறித்துச் செல்கிறார்கள் சம்பத்தின் அடியாட்கள்.
அது திலீபனின் அப்பா கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம் என்பதாலும், தனது தந்தை மீதிருந்த மதிப்பினாலும் எப்படியாவது அந்தப் பணத்தை திரும்பவும் பெற்றுவிடத் துடிக்கிறார் திலீபன். இதற்காக ஜிம்முக்கு போய் உடம்பை தேத்தி.. சண்டைப் பயிற்சிகளைக் கற்றுக் கொண்டு சம்பத்தின் அடியாட்களுடன் மோதுகிறார். அவர்களை வீழ்த்திவிட்டு சம்பத்திடமே மோதி பணத்தை பிடுங்கிச் செல்கிறார். இது ஒன்றினாலேயே தனது வாழ்க்கையை இழந்து தவிக்கும் சம்பத், திலீபனை கொலை செய்யத் துடியாய் துடிக்கிறார்..!
வருமான வரித் துறை அதிகாரியை கொலை செய்ய முயற்சிக்கும் நகைக்கடை அதிபரான ஜெயப்பிரகாஷின் பிளானை ஒட்டுக் கேட்ட நிலையில் அதனை தானே முறியடிக்கிறார் திலீபன். இதனால் ஜெயப்பிரகாஷுக்கு திலீபன் மேல் கொலை வெறி..!
அதே சமத்துவபுரத்திலேயே குடியிருக்கும் ஜெகன், ஒரு பெரிய புள்ளியின் மகனைக் கடத்தி பணம் வசூலிக்கத் திட்டமிடுகிறான். அதற்கு தடையாக திலீபன் இருப்பதை அறிந்து அவனை முதலில் போட்டுத் தள்ள திட்டமிடுகிறான்..
இப்படி மூலைக்கு ஒருவராக திலீபனை கொல்ல தயாராக இருக்க.. மூவரிடமும் எப்படித் தப்பிக்கிறான் என்பதை கொஞ்சம், கொஞ்சம் சுவாரஸ்யமாகவே சொல்லியிருக்கிறார் இயக்குநர்..!
பிளாஷ்பேக் உத்திகளை பயன்படுத்தியவிதம் சஸ்பென்ஸாகவும், எதிர்பார்ப்பை கூட்டியதாகவும் இருந்தாலும், படத்தின் முக்கியமான காட்சிகளில் இருக்கும் லாஜிக் ஓட்டைகள் இவ்வளவுதானா என்று அந்த சஸ்பென்ஸை உதறித் தள்ளுகின்றன..!
ஒரே மாதத்தில் யாராவது இப்படி ஜிம்முக்கு போய் உடம்பை தேத்த முடியுமா..? சண்டைப் பயிற்சிகளை கத்துக்க முடியுமா..? அதிலும் இப்படத்தில் இடம் பெறும் சண்டைக் காட்சிகள் எல்லாமே படு பயங்கரமானவை. அலாக்காக தூக்கி வீசுவதுதான் அனைத்து சண்டைகளிலும் இடம் பெற்றுள்ளது.. இந்த அளவுக்கு தாக்குதல் கடுமையாக இருக்குமெனில் ஹீரோவால் எப்படி இதனை ஒரு மாதத்தில்..?
அடுத்தது ஒரு பெரிய மர்டர் அஸைண்ட்மெண்ட்..! இப்படியா டீக்கடை முன்பாக ஊருக்கே கேட்கும்படியாக சத்தமாக பேசுவான்.. “நாளை மறுநாள் காலைல 11 மணிக்கு அவனை போடுறேண்ணே..” என்று அலட்சியமாக பேசுவதைக் கேட்டுவிட்டுத்தான் திலீபன் அங்கே செல்கிறாராம்..! என்ன விந்தை இது..? இப்படியெல்லாம் பப்ளிக்கா சைக்கிள் செயின் திருடன்கூட பேச மாட்டான்னு இயக்குநருக்கு தெரியாதா?
ஒரு அரசு குடியிருப்பு. அங்கேயிருக்கும் அம்மன் கோவிலில் விழா.. வீட்டுக்குள் அடைக்கப்பட்டிருக்கும் திலீபனை நோக்கி துப்பாக்கிக் குண்டுகள் பாய்கின்றன.. திலீபன் எப்படியோ தப்பி வெளியேறும்போது அடிதடி துவங்குகிறது.. அவ்வளவு பெரிய கோவில் திருவிழாவுக்கு ஒரு போலீஸ்கூடவா வந்திருக்க மாட்டாங்க..? தெருவிலேயே துப்பாக்கிக் குண்டுகள் பாய்கின்றன.. சிதறுகின்றன.. துப்பாக்கியின் ஓனர் மிகச் சரியாக அந்த இடத்திற்கு வந்து தனது துப்பாக்கியை பிடுங்கிச் செல்கிறானாம்.. அடுத்த நாள் சென்னையே அமைதியாக இருக்கிறதாம்..! நோ போலீஸ்.. நோ கேஸ்..! நோ பீலிங்..!
துப்பாக்கி கேட்டு வந்த ரவுடியை சுட்டுத் தள்ளுகிறான் ஜெகன்.. அவன் பாடியை அப்படியே போட்டுவிட்டுத்தான் தப்பிக்கிறார்கள். போலீஸ் தேடவில்லையாம்.. அத்தோடு அந்தக் கேஸையும் இழுத்து மூடிவிட்டார்களா என்ன..?
ஜெகனிடம் இருந்து தப்பித்து மிகச் சரியாக ரவிமரியாவிடம் சிக்குகிறார் திலீபன். அவனிடத்தில் “அவுட்டோருக்கு கொண்டு போய் போட்டிரு..” என்கிறார் ஒரு இன்ஸ்பெக்டர். இவருக்கு இன்ஸ்ட்ரக்ஷன் ஜெயப்பிரகாஷாம்..! துரிதமான திரைக்கதை. மிக வேகமாகச் செல்கிறது..!
ரவி மரியா ஆட்களிடம் இருந்து தப்பித்து அரை மணி நேரம் தூங்கி ரெஸ்ட் எடுத்து உடம்பை தேற்றிக் கொண்டாராம் திலீபன்..! ரோட்டோரக் கடையில் இட்லி சாப்பிட்டும், பள்ளிக்கூட மைதானத்தில் தண்டால் எடுத்தும் புஷ்டியை வலுவாக்கிக் கொண்டாராம் ஹீரோ..! டூவீலரில் இருந்து இறங்கி ஓடும்போது எதிர்த்தாற்போல் போக்குவரத்து போலீஸார் 2 பேர் நின்று கொண்டிருந்தார்கள் என்பதையும் இயக்குநர் மறந்துவிட்டார். அவர்களிடத்தில் போய் புலம்பியிருந்தால் கேஸே முடிஞ்சிருக்குமே..?
வெள்ளியங்கிரி மலையில் திலீபனை போட்டுத் தள்ள.. சம்பத் முயற்சி செய்ய.. திலீபன் ஒரு ஹீரோ என்ன செய்வாரோ அதையே செய்துவிட்டு தப்பிச் செல்கிறார். சர்வசாதாரணமாக எனக்கு எதுவுமே தெரியாது என்று போனிலேயே போலீஸிடம் சாதிக்கிறாராம்..! அப்பாடா.. இதுக்கு மேலேயும் யாரும் யோசிக்க முடியாது கண்ணுகளா..!!!
படத்தின் சுவாரஸ்யம் ரவுடி ராக்காயி அஞ்சலியுடனான காதல் போர்ஷனும், இங்கிலீஷ் கோச்சிங் கிளாஸ் பகுதிகளும், ஜெகன் அண்ட் கோ-வின் பிளான் அண்ட் சொதப்பல்ஸும்தான்..! அஞ்சலியை மிகச் சரியாகவே பயன்படுத்தியிருக்கிறார் இயக்குநர். இந்த மாதிரி தெனாவெட்டு மூஞ்சியை யாருக்குத்தான் பிடிக்காது..? அதுலேயும் இங்கிலீஷ் கோச்சிங் கிளாஸில் படித்துவிட்டு அதுக்குவிடும் அலப்பறை கொஞ்சம் சிரிக்க வைக்கிறது..! தான் அவனைக் காதலிக்கவே இல்லை என்பதை திரும்பத் திரும்பச் சொல்லிவிட்டு திலீபனை காதலிக்கத் துவங்கும் சீன்களெல்லாம் ஏ ஒன்.. அஞ்சலிக்காகவே திரும்பத் திரும்பப் பார்க்கலாம் இந்தக் காட்சிகளை மட்டும்..!
திலீபன், ஏ.ஆர்.முருகதாஸின் தம்பியாம்.. பார்த்தால் அப்படி தெரியவில்லை. ஒருவேளை ஒண்ணுவிட்ட தம்பியாகக் கூட இருக்கலாம்.. ரொம்ப மோசமில்லை.. ஷேர் ஆட்டோ டிரைவர் கேரக்டருக்கு பொருத்தமானவர்தான்.. மனிதருக்கு ஆக்சன் நன்கு வருகிறது.. ஆனால் காமெடியும், நடிப்பும்தான் வருமா என்று தெரியவில்லை. இன்னும் 2, 3 படங்கள்வரையிலும் காத்திருந்துவிட்டுத்தான் சொல்ல வேண்டும்..!
சிற்சில இடங்களில் இவரது கேரக்டர் ஸ்கெட்ச் கொஞ்சம் சுவாரஸ்யத்தைக் கூட்டுகிறது.. 14 இட்லியை ஒரே தட்டில் போட்டு ஒரு சொம்பு சாம்பாரையும் மொத்தமாக ஊற்றி சாப்பிடும் இந்த சாப்பாட்டு ராமன், எந்த அடியையும் தாங்குவான்.. எது மாதிரியும் அடிப்பான்னு முன்னாடியே இதை வைச்சுத்தான் சொல்றாங்க..!
சரண்யா தனது மகனின் காதலை அறிந்து கொண்டு “அதெல்லாம் நமக்கு சரிப்பட்டு வராதுடா..” என்று சொல்லி அதற்குச் சொல்லும் காரணங்கள் சிரிக்க வைக்கின்றன.. கவர்ன்மெண்ட்டு வேலையை ஏதோ ஜனாதிபதி லெவலுக்கு ஒப்பிட்டுப் பேசிவிட்டு, அஞ்சலியின் அம்மா மாதந்தோறும் பெரிய லிஸ்ட்டா போட்டு சாமான் வாங்கிட்டுப் போகுது. “அது நமக்கு சரிப்பட்டு வராதுடா தங்கம்” என்று சொல்லும் அக்மார்க் டிபிகல் அம்மா.. வெல்டன் தாயி..!
முதல் தர நடிப்பாளர்ன்னு பார்த்தா அது சம்பத்துதான்.. டயலாக் டெலிவரியில் மனுஷன் பின்றாருய்யா..! இவரும் திலீபனிடம் அடி வாங்கினதை பார்த்தே அவரோட அடியாட்களெல்லாம் அவரைவிட்டு விலகி ஓடினாங்கன்னு ஒரு மொன்னை திரைக்கதையை வைச்சு இவரை மாடிவீட்டு ஏழையாக்கினது காமெடிதான்னாலும், அதுக்கப்புறம் சம்பத் காட்டும் அந்த கோப வெறி.. நமக்குத்தான் பயத்தை ஊட்டுகிறது..!
ஏதோ பிக்னிக் போயிட்டு வர்ற மாதிரி “ஜெயிலுக்கு போறேன்.. வக்கீல்கிட்ட பேசிட்டேன்.. இன்ஸ்பெக்டரும் ஓகே சொல்லிட்டாரு.. செலவுக்கு பணம் கொடுத்து விட்டிருக்கேன். வாங்கிக்க.. ஜெயில் பக்கம் வந்திராத.. ஒரு மாசத்துல வெளில வந்திருவேன்..” என்றெல்லாம் யதார்த்தவாத பிளான் செய்யும் சம்பத்தின் கதை வெகு சுவாரஸ்யம்..! இவருக்கு ஜோடியாக ஈடு கொடுத்து அலப்பறை செய்திருக்கிறார் ரவி மரியா.
குருதேவின் ஒளிப்பதிவு படத்தின் கதைக்கேற்ப தனலாய் கொதிக்கிறது.. படம் முழுக்கவே அனல் பறக்கும் சண்டைக் காட்சிகளும், பொறி கிளப்பும் ஆக்ஷன்களுமாக இருக்க அதற்கேற்றாற்போல வெறித்தனமாக வெள்ளையடித்த எபெக்ட்டை கடைசிவரையிலும் காட்டியிருக்கிறது..! எடிட்டிங்குதான் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியது..! துப்பாக்கிக்காக நடக்கும் சண்டை.. வீட்டுக்குள் நடக்கும் சண்டைகள்.. அடுத்தடுத்து திலீபன் தப்பிக்கும் காட்சிகள் என்று பலவற்றில் எடிட்டிங் வித்தைகளே படத்தை ஈர்க்க வைக்கின்றன..!
கிப்ரான் இசையாம்.. டைட்டிலில் பார்த்தேன்.. ஏதோ வார்த்தைகளை போட்டு பாடல்களை நிரப்பியிருக்கிறார்கள். எதுவும் மனசில் நிற்கவில்லை.. பின்னணி இசை மட்டுமே ஒன்றிரண்டு இடங்களில் தடதடக்க வைத்தது..!
ஆயிரம் லாஜிக் ஓட்டைகள் இருந்தாலும் கதையில் அழுத்தமும், இயக்கமும் இருந்தால் நிச்சயம் அந்தப் படம் வெற்றிதான்.. உதாரணம் துப்பாக்கி.. இதில் இந்த இரண்டுமே இல்லாது போனதாலும், புதுமுக நடிகரின் அவ்வளவாக ஈர்ப்பில்லாத நடிப்பும் சேர்ந்து படத்தை ஓஹோவென்று சொல்லவிடாமல் தடுக்கிறது..! அதற்காக ஆஹாவென்றும் சொல்ல முடியாது.. ஏதோ ஜஸ்ட் டைம் பாஸ்..!
நம்ம அஞ்சலியை பார்க்கணும்னா போயிட்டு வாங்க..!
|
Tweet |
12 comments:
அண்ணாச்சி,
டைரக்டர் யாரு? ஒன்னுமே சொல்லக்காணோம்?
முதல் படத்துக்கு ஓகேவான கதை தான்.
ஒலகப்படம் விஷ்வரூவத்துக்கு கூட இம்புட்டு லாஜிக் பார்க்கலை உள்ளூர் படம் ,முதல் அறிமுகம் அதுக்கு என்னமா லாஜிக் கேட்குறிங்க?
சின்னப்பசங்களை தாண்ணே எல்லாம் சுலுவா கேள்விக்கேட்ப்பீங்க :-))
[[[வவ்வால் said...
அண்ணாச்சி, டைரக்டர் யாரு? ஒன்னுமே சொல்லக் காணோம்?]]]
பேரு கின்ஸ்லின். அறிமுக இயக்குநர்..
[[[முதல் படத்துக்கு ஓகேவான கதைதான். ஒலகப் படம் விஷ்வரூவத்துக்குகூட இம்புட்டு லாஜிக் பார்க்கலை உள்ளூர் படம், முதல் அறிமுகம் அதுக்கு என்னமா லாஜிக் கேட்குறிங்க? சின்னப் பசங்களைதாண்ணே எல்லாம் சுலுவா கேள்வி கேட்ப்பீங்க :-))]]]
ஆமாம்..
அஞ்சலியை பத்தி இன்னும் கொஞ்சம் சொல்லி இருக்கலாம்
Nice. Inch by inch your review good. I watch your short film good attempt. When we will see you are director?
[[[Prem s said...
அஞ்சலியை பத்தி இன்னும் கொஞ்சம் சொல்லி இருக்கலாம்.]]]
இருக்கலாம்தான்.. அடுத்தடுத்து படங்கள் வருதே.. அதுல வைச்சுக்குவோம்..!
[[[vi jay said...
Nice. Inch by inch your review good. I watch your short film good attempt. When we will see you are director?]]]
தயாரிப்பாளரை புடிச்சு கொடுங்க.. நாளைக்கே இயக்குநராயிடறேன்..!
கணனியில் அழிந்த கோப்புக்களை துல்லியமாக மீட்டெடுப்பதற்கு ----- http://mytamilpeople.blogspot.in/2013/03/recover-deleted-files-from-hard-disk.html
அண்ணே!தமிழ் சினிமாவில் லாஜிக்கெல்லாம் தேடக்கூடாது.கதை சுவராசியமாக சொல்லத்தெரியுதான்னு மட்டுமே பார்க்கனும். அக்சய் குமார் இந்தியில் நடிக்கலாம்ன்னு யோசனை செய்துகிட்டிருக்காராம்.
தமிழ்மகன்.
இத்தோட நிறுத்திக்கக் கூடாதா..? அப்படியே போட்டாலும் ஒண்ணு மட்டும் போடக் கூடாதா..?
[[[ராஜ நடராஜன் said...
அண்ணே! தமிழ் சினிமாவில் லாஜிக்கெல்லாம் தேடக்கூடாது. கதை சுவராசியமாக சொல்லத் தெரியுதான்னு மட்டுமே பார்க்கனும்.]]]
காமெடி படத்துல கண்டுக்காம போகலாமாண்ணே.. சீரீயஸ் படத்துல எப்படி முடியும்..?
[[[அக்சய் குமார் இந்தியில் நடிக்கலாம்ன்னு யோசனை செய்துகிட்டிருக்காராம்.]]]
அவர் இப்பவும் நடிச்சுக்கிட்டுத்தாண்ணே இருக்காரு..!
உண்மைத்தமிழன் Annan,
Neenga padatha kooda oru time parunga.
Neenga sonna Kuraiyil moonru kuraium.
[[[ரமேஷ் கார்த்திகேயன் said...
உண்மைத்தமிழன் Annan,
Neenga padatha kooda oru time parunga. Neenga sonna Kuraiyil moonru kuraium.]]]
அப்படியா..? ஒரு தடவை பார்த்ததுக்கே காய்ச்சல் வந்து 2 நாள் லீவு போட வேண்டியதா போச்சு.. இன்னொரு தடவையா..?
Post a Comment