கண்ணா லட்டு தின்ன ஆசையா - சினிமா விமர்சனம்

23-01-2013


என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

முன்பே எழுதியிருக்க வேண்டியது.. வழக்கம்போல அதுதான் எல்லாரும் எழுதியாச்சே என்ற அலுப்பும், கூடுதலாக சோம்பேறித்தனமும் கூட தள்ளிப் போட்டே வந்துவிட்டேன்.  இன்றைக்குத்தான் திடீர் ஞானதோயம் வந்தது..! என்றாவது ஒரு நாள் விமர்சனங்களை புத்தகமாக போடும்போது தேவைப்படுமே என்று..! அதனால் இப்போது.. இங்கே..!

நல்லதோ கெட்டதோ.. பழைய படங்களை ரீமேக் செய்வதை கொஞ்சம் நிறுத்திக் கொள்வது சினிமாவுலகத்தினருக்கு நல்லது.. பழைய படங்களின் வெற்றிக்கு முதற் காரணமே அப்போதைய காலக்கட்டம்தான்.. அந்தச் சூழலில் மக்களின் வாழ்க்கை முறைக்கேற்ப.. கிடைத்த வசதிகளுக்கேற்ப.. அந்தந்த இயக்குநர்கள் தங்களால் முடிந்த அளவுக்கு எடுத்துக் காண்பித்த திரைப்படங்களில் ஒரு படம் அமோக வெற்றியென்றால்.. அது அந்த இயக்குநருக்கும், கதாசிரியருக்கும் கிடைத்த வெற்றி..! 

அதையே இப்போதும் எடுப்பதற்கு இப்போதென்ன கதை பஞ்சமா இருக்கிறது..? காமெடியில் இன்னும் எடுக்கப்படாதது நிறையவே இருக்கிறது.. அவற்றையெல்லாம் பொறுக்கி எடுத்து படமாக்கவே இப்போதைய இயக்குநர்களுக்கு ஆயுசு போதாது..! மிக எளிதாக ஒரு வெற்றி பெற்ற படத்தின் கதையைச் சுட்டு நோகாமல் நொங்கு திங்க ஆசைப்படுவது நல்ல கலைஞர்களுக்கு அழகல்ல..!

இன்று போய் நாளை வா படத்தினை நான் முதன் முதலில் மதுரை மிட்லண்ட் தியேட்டரில் பார்த்தபோது என் வயதுக்கேற்ற விருப்பத்துடன் மிக மிக ரசித்தேன்..! பாக்யராஜின் முகமும், அவருடைய நிஜ நண்பர்களான பழனிச்சாமி மற்றும் இன்னொரு நண்பரின்(பெயர் தெரியவில்லை) ஆகியோரின் நடிப்பும், முகங்களும் என் பக்கத்து வீட்டுக்காரர்களை போலவே இருந்ததால் என்னைப் போன்ற ஒரு யூத்துகளின் அக்கப்போர் என்று நினைத்து சந்தோஷப்பட முடிந்தது..!

பாக்யராஜாவது பரவாயில்லை.. இதற்கும் முன்பே படங்களில் நடித்திருந்தார். ஆனால் அவருடைய நண்பர்களுக்கு அதுதான் முதல் படம்.. கடைசி படமும் கூட என்று நினைக்கிறேன்..! அதிலும் பழனிச்சாமி படம் முழுவதும் உதட்டுக்கு லிப்ஸ்டிக் போட்டிருப்பார்..! அந்த பெல்பாட்டம் பேண்ட்டும், கண்ணாடியும், அடுக்கடுக்கான சுருள் முடியும்.. ராதிகாவின் இன்னசென்ட் முகமும், கல்லாபெட்டி சிங்காரத்தின் மூச்சுவிட கஷ்டப்பட்டு பேசும் வசனங்களும், அவருடைய அப்பாவின் ஆக்ரோஷத்தனமான முகமும் மறக்க முடியாதுதான்.. கூடவே பக்கத்து வீட்டு அக்காவாக அட்வைஸராக நடித்திருப்பவும் ஒரு சோடாபுட்டி அளவுக்கு கண்ணாடியை போட்டு அமைதியாக நடித்திருப்பார்.. அவர் யார் என்று யாராவது சொன்னால் தன்யனாவேன்..!

இப்போது இந்தக் கதைக்கு வருவோம்..! 


படத்தின் ஹீரோ சேதுவின் எதிர் வீட்டுக்கு வரும் விசாகாவை காதலிக்க போட்டி போடும்  சந்தானம், பவர் ஸ்டார் சீனிவாசன், சேது மூவரில் ஹீரோதான் ஜெயிக்க வேண்டும் என்பது தமிழ்ச் சினிமாவில் எழுதப்படாத விதி என்பதால் கிளைமாக்ஸிலும் ஹீரோவையம், ஹீரோயினையும் சேர்த்துவைப்பதோடு மங்களம் பாடியிருக்கிறார்கள்.

சந்தானம் இப்போதெல்லாம் ஸ்கிரீனில் தோன்றியவுடனேயே கையைத் தட்டத் துவங்குகிறார்கள். அவர் என்ன டயலாக் பேசுகிறார் என்பதையே கேட்க விரும்பாலேயே கையைத் தட்டி மற்றவர்களையும் கேட்க விடாமலேயே செய்கிறார்கள்..! இதிலும் அப்படியே..? ஆனாலும் வடிவேலு எப்போதும் தன்னை ஒரு நிஜ காமெடியனாக நினைத்து, தன்னை தாழ்த்தியே திரைக்கதை எழுதிக் கொள்வார்.. ஆனால் சந்தானமோ அப்படியே உல்டாவாக தன்னைத் தவிர சினிமாவில் இருக்கும் ஆடு, மாடு, கழுதையைக் கூட திட்டிக் கொண்டே இருக்கிறார்..  ஆனாலும் மக்கள் ரசிக்கத்தான் செய்கிறார்கள்..!

அண்டாவுக்குள் உட்கார்ந்து சாதகம் செய்யும் காட்சியும், அதையொட்டி காமெடிகளும் அல்லல்பட வைப்பதால் ரசிக்க முடிகிறது.. சில நேரங்களில் சந்தானம் சீரியஸாக பேசுகிறாரா அல்லது காமெடியாக சொல்கிறாரா என்பதை அவர் காமெடியாக கடைசியாக பேச்சை முடிக்கும்போதுதான் தெரியும்.. அதே பாணியில் தண்ணியை வாங்கிக் கொடுத்து குடிக்க வைத்து ஆஸ்பத்திரிக்கு அழைத்து வந்து விசாகாவின் முன்னிலையில் மூக்கடைக்கும் காட்சி  நிசமாகவே விறுவிறுப்புதான்..!

ஆளுக்கொன்றை எடுத்துக் கொள்ளும்போது ஜெயிப்பது சந்தேகமேயில்லாமல் பவர் ஸ்டார்தான்..! அவ்வப்போது அவர் காட்டும் கோணங்கித்தனமான முக பாவனைகள்.. வீட்டுக்கு போய் டான்ஸ் கற்றுக் கொள்ள பிளான் செய்து தனது ரசிகர்களை வைத்து அவர் செய்யும் டிராமா.. டான்ஸ் ஆட அவருக்குள் ஒரு வேகம் வந்து ஆடிக் காட்டும் அந்த ஸ்டைலெல்லாம் தமிழ்ச் சினிமாவுக்கு புதிது என்பதால் தியேட்டரில் இன்னமும் கல்லா கட்டிக் கொண்டிருக்கிறார் பவர் ஸ்டார்.!

எப்போதும் தன்னை  ஒருவன் தாழ்த்திக் கொண்டே போய்.. காமெடிக்காரனாகவே காட்டிக் கொண்டால் தமிழ் ரசிகர்களுக்கு மிகவும் பிடிக்கத்தான் செய்யும். கடந்த 3 வருடங்களாக தமிழ் ரசிகர்கள் பவர் ஸ்டாரை எந்த அளவுக்கு இழித்தும், பழித்தும் பேசியும் அதை அவர் காதில் போட்டுக் கொள்ளாமல் தனக்கான நேரம் வரும்வரைக்கும் காத்திருந்து இப்போது கொடுத்திருப்பது சரியான பதிலடி..! வெல்டன் பவர் ஸ்டார்..!

விஜய் டிவியின் நீயா நானாவில் அவரை எவ்வளவு கேவலப்படுத்த வேண்டுமோ அத்தனையையும் செய்தார்கள்.. ஆனாலும் அசராமல் தான் சூப்பர் ஸ்டாருக்கே போட்டி என்று சொன்ன அவரது தைரியம் நிஜமாகவே குருட்டு தைரியமில்லை.. தன்னம்பிக்கை..! தன்னையும் ரசிக்க நாலைந்து பேர் இருப்பார்கள் என்பதை புரிந்து கொண்டு அவர்களை இப்போதுவரையிலும் இழந்துவிடாமல் ரசிகராகவே வைத்திருப்பதுதான் பவர் ஸ்டாரின் சாமர்த்தியம்.. 

புதுமுக நடிகர் சந்தானத்தின் பால்ய நண்பர்.. தான் படம் தயாரித்தால் நீதான் ஹீரோ என்று முன்பே சொல்லி வைத்திருந்த்தை இப்போது படமாக எடுத்தபோது உறுதிப்படுத்தியிருக்கிறார் சந்தானம். இதுவல்லவோ நட்பு..! சந்தானமும், பவர் ஸ்டாரும் முன்னே போய்க் கொண்டிருக்க.. இவர்களாலேயே சேது கொஞ்சம் தெரிகிறார்.. இன்னும் இவருக்கு நிறைய வாய்ப்பிருக்கிறது..!

ஹீரோயின் விசாகாவை எங்கேயிருந்து பிடித்தார்கள் என்று தெரியவில்லை. அசத்தல் முகம்.. அழகு பதுமை.. ரம்மியமா இருக்கே பாப்பா என்று நினைத்து பரவசப்பட்ட 2 நிமிடத்திற்குள் குத்துப் பாட்டில் ஆட வைத்துவிட்டார்கள். என் நினைப்பில் மண்ணையள்ளிப் போட்டு குடும்ப குத்துவிளக்கு இமேஜை துடைத்தெறிந்த இயக்குநருக்கு எனது வன்மையான கண்டனங்கள்..! அதிலும் மூவரிடமும் ஆடும்போதுகூட தனது சிரிப்பிலும், நடிப்பிலும் மில்லி மீட்டர் அளவைக்கூட குறைக்கவில்லையே.. இதுக்காகவே இவருக்கு ஒரு “ஓ” போட வேண்டும்..!

படத்தின் இன்னொரு பலம் சில, பல வசனங்கள்..! எல்லாத்தும் மேலாக கடைசியாக சந்தானம் சொல்லும் “நானாவது காமெடியன்னு தெரிஞ்சே காமெடியனா இருக்கேன். ஆனா நீ அதுகூட தெரியாமலேயே காமெடி பண்ணிக்கிட்டருக்க..?” என்று பவர் ஸ்டாரை  இன்றைய உண்மை நிலையை பொட்டில் அடித்தாற்போல் சொல்லியிருக்கும் வசனத்திற்குத்தான் தியேட்டரே அதிர்கிறது..!

இதையேதான் இப்படத்தின் ஆடியோ ரிலீஸ் பங்ஷனிலும் சந்தானம் சொன்னார். அப்போதும் எவ்வித ரியாக்ஷனும் காட்டாமல் தலைக்கு 500 கொடுத்து அழைத்து வரப்பட்ட தனது ரசிக குஞ்சுகளின் கைதட்டலில் சொக்கிப் போய் உட்கார்ந்திருந்தார் பவர் ஸ்டார்..! இனியாவது தான் ஒரு நடிகர் என்று நினைத்து கொஞ்சம் மரியாதையுடன் நடந்து கொண்டால் அவருக்கும் நல்லது.. திரையுலகத்துக்கும் நல்லது..!

சர்ச்சை நடிகர் சிம்பு இதிலும் அவராகவே வருகிறார். தன்னைப் பற்றி தானே எடுத்துச் சொல்லிக் கொண்டு இவர்களுக்கு அட்வைஸ் செய்து அனுப்பி வைக்கும் நல்ல நடிகரான கேரக்டர்.. இதையே நிஜத்திலும் இவர் செய்தால் நன்றாகவே இருக்குமே..? சிம்புவை கடத்தி வருவதற்கு ஒரு டீமை ரெடி செய்வது மட்டுமே இப்படத்தின் சொதப்பலான திரைக்கதை..! அதையும் சண்டைக் காட்சியுடன் லின்க் ஏற்படுத்திக் கொடுத்து திரைக்கதையை அடுத்தக் கட்டத்திற்கு நகர்த்த உதவியிருப்பதால் சரி போகட்டும் என்று விட்டுவிடலாம்..!

லவ் லெட்டரு கொடுக்க ஆசைப்பட்டேன் பாடலைவிடவும் பாடலை எடுத்தவிதம் மிக அழகு..! நல்ல ரசனையான இயக்குநரிடம்தான் மாட்டியிருக்கிறார்கள் இவர்கள்..! நான்கூட முதலில் சந்தேகப்பட்டேன்.. சந்தானம் இத்தனை இயக்குநர்களிடம் பணியாற்றியிருக்கிறார்.. இவரை எங்கேயிருந்து தேடிப் பிடித்தாரென்று யோசனையாகவே இருந்தது.. சில விளம்பரப் படங்களை இயக்கிய அனுபவம் மட்டுமே கொண்ட இப்படத்தின் இயக்குநர் மணிகண்டனுக்கு எனது வாழ்த்துகளும், பாராட்டுக்களும்..!

இன்றைய யூத்துகளுக்கு ஏற்றாற்போன்று ஒரு நடிகர், நடிகையரை வைத்து, நல்ல முறையில் இயக்கம் செய்து.. வசூலையும் வாரிக் குவித்திருக்கும் இந்தப் படம் இந்தாண்டின் முதல் பிளாக்பஸ்டர்தான்..! 

ஆனால் இதிலும் ஒரு சின்ன நெருடல்.. பவர் ஸ்டார் தனது அடுத்தப் படமான யா, யா-வில் தனது சம்பளமாக 50 லட்சத்தைக் கேட்டு அதையும் தயாரிப்பாளர் கொடுத்துவிட்டதாகக் கேள்விப்பட்டேன்.. இது உண்மையெனில் தமிழ்ச் சினிமாவின் தொடர்ச்சியான சீரழிவுக்கு பவர் ஸ்டாரும், இந்தத் தயாரிப்பாளரும் ஒரு காரணம் என்றுதான் சொல்ல வேண்டும்..!

காற்றுள்ளபோதே தூற்றிக் கொள் என்று தயாரிப்பாளர் கூறினாலும், இதன் லாபத்தை தியேட்டர்கள் மற்றும் விநியோகஸ்தர்களின் தலையில் கட்டி, அவர்கள் பார்வையாளர்களின் தலையில் சுமத்தி.. கடைசியாக தியேட்டர்களுக்கு வரும் ரசிகர்களின் கூட்டத்தை குறைக்கும் பணியில் இவர்களும் இணைகிறார்கள் என்பதுதான் உண்மை..! 

இதை யார் தட்டிக் கேட்பது..?   

39 comments:

Philosophy Prabhakaran said...

அந்த பக்கத்து வீட்டு அக்கா கேரக்டர் சுமித்ரா அம்மையார் இல்லையா ?

வவ்வால் said...

ஓய் பிரபா,

//அந்த பக்கத்து வீட்டு அக்கா கேரக்டர் சுமித்ரா அம்மையார் இல்லையா ?//

வேண்டா வெறுப்பா எழுதினா இப்படித்தான் இருக்கும் :-))
----------------

அண்ணாச்சி,

//3 வருடங்களாக தமிழ் ரசிகர்கள் பவர் ஸ்டாரை எந்த அளவுக்கு இழித்தும், பழித்தும் பேசியும்
//

யார் அந்த தமிழ் ரசிகர்கள்?

இணையத்தில் 10 பேரு கலாய்ச்சுக்கிட்டு இருந்தாங்க, பவர் ஸ்டாருக்கு இணையம் தெரியாது ,எனவே எதுவும் தெரியாது.

என்னமோ கடந்த 3 வருடமா 30 ஹிட் கொடுத்த நடிகரை தமிழ் நாட்டில மருவாதி கொடுக்காம கலாய்ச்சாப்போல, இப்பவும் படம் ஓடுறது சந்தானத்தால் தான், இணையத்தில் தான் பவர் ஸ்டாருன்னு பேசிக்கிட்டு,இணையம் தெரியாத காமன் மேன் எல்லாம், இந்தாள எங்கேருந்து புடிச்சாங்கன்னு பவர் ஸ்டார் பத்திக்கேட்க்கிறாங்க, அவ்ளோ தான் பவரின் ரீச்.

வவ்வால் said...

அண்ணாச்சி,

//புதுமுக நடிகர் சந்தானத்தின் பால்ய நண்பர்.. தான் படம் தயாரித்தால் நீதான் ஹீரோ

//

நீங்க சொல்றத பார்த்தா சந்தானத்துக்கு இதான் முத படம் போல :-))

புலவர் ஒருத்தர் வருவரே காணோம்?

வவ்வால் said...

//வடிவேலு எப்போதும் தன்னை ஒரு நிஜ காமெடியனாக நினைத்து, தன்னை தாழ்த்தியே திரைக்கதை எழுதிக் கொள்வார்.. ஆனால் சந்தானமோ அப்படியே உல்டாவாக தன்னைத்
//

கவுண்டமணி என்ற மாபெரும் காமெடியனை மறந்து விட்டு வடிவேலுவுடன் சந்தானத்தை ஒப்பிடுவதன் நுண்ணரசியல் என்ன?

எம்.ஆர்.ராதா என்னிக்கு தன்னை தாழ்த்தி காமெடி செய்தார், சொல்லப்போனால் தமிழ்நாட்டில் யாருக்குமே அறிவில்லைனு கூட சொல்லுவார் :-))

சிலப்பேர் இன்னொசென்டாக தங்களை குறைத்து பேசி சிரிக்க வைப்பாங்க, சிலர் அடுத்தவங்களை போட்டு தாக்குவாங்க , எம்.ஆர்.ராதா, கவுண்டமணி போல.

வருண் said...

பாக்யராஜ் கதையை திருடியதுக்கு எவ்ளோ தொகை கொடுத்து அவர் வாயை அடச்சாளாம்?

சும்மா ஸ்க்ரீன்ல பேரு போட்டதுனால எல்லாம் பா ராஜ் அடங்கி இருக்க மாட்டாரு. நிச்சயம் ஒரு தொகை கொடுத்துத்தான் அவர் வாயை அடச்சி இருப்பா.

அது எவ்ளோனு கேட்டு சொல்லுங்க!

உண்மைத்தமிழன் said...

[[[Philosophy Prabhakaran said...

அந்த பக்கத்து வீட்டு அக்கா கேரக்டர் சுமித்ரா அம்மையார் இல்லையா?]]]

நிச்சயம் சுமித்ரா இல்லை.. வேறு யாரோ..!?

உண்மைத்தமிழன் said...

[[[வவ்வால் said...

ஓய் பிரபா,

//அந்த பக்கத்து வீட்டு அக்கா கேரக்டர் சுமித்ரா அம்மையார் இல்லையா ?//

வேண்டா வெறுப்பா எழுதினா இப்படித்தான் இருக்கும் :-))]]]

சரி.. அப்போ யாருண்ணே அந்தம்மா..?


உண்மைத்தமிழன் said...

[[[// 3 வருடங்களாக தமிழ் ரசிகர்கள் பவர் ஸ்டாரை எந்த அளவுக்கு இழித்தும், பழித்தும் பேசியும்//

யார் அந்த தமிழ் ரசிகர்கள்? இணையத்தில் 10 பேரு கலாய்ச்சுக்கிட்டு இருந்தாங்க, பவர் ஸ்டாருக்கு இணையம் தெரியாது, எனவே எதுவும் தெரியாது.
என்னமோ கடந்த 3 வருடமா 30 ஹிட் கொடுத்த நடிகரை தமிழ் நாட்டில மருவாதி கொடுக்காம கலாய்ச்சாப்போல, இப்பவும் படம் ஓடுறது சந்தானத்தால்தான், இணையத்தில் தான் பவர் ஸ்டாருன்னு பேசிக்கிட்டு, இணையம் தெரியாத காமன்மேன் எல்லாம், இந்தாள எங்கேருந்து புடிச்சாங்கன்னு பவர் ஸ்டார் பத்தி கேட்கிறாங்க, அவ்ளோதான் பவரின் ரீச்.]]]

இல்லண்ணே.. தமிழ்நாடு முழுக்கவே தியேட்டர்கள்ல பவர் ஸ்டாருக்கு நல்ல ரெஸ்பான்ஸ்..! ஒரு முட்டாள் காமெடியன் என்ற ரீதியில்தான் மற்றவர்கள் அவரைப் பார்க்கிறார்கள். அவரும் அது போலவேதான் நடந்து கொள்கிறார்.. பேசவும் செய்கிறார்..!

உண்மைத்தமிழன் said...

[[[வவ்வால் said...

அண்ணாச்சி,

//புதுமுக நடிகர் சந்தானத்தின் பால்ய நண்பர்.. தான் படம் தயாரித்தால் நீதான் ஹீரோ//

நீங்க சொல்றத பார்த்தா சந்தானத்துக்கு இதான் முத படம் போல :-))]]]

ஸாரி.. டங்ஸ் கொஞ்சம் ஸிலிப்பாயிருச்சு.. "புதுமுக நடிகரும், ஹீரோவுமான சேது"ன்னு படிச்சுக்குங்க..!

உண்மைத்தமிழன் said...

[[[வவ்வால் said...

அண்ணாச்சி,

//புதுமுக நடிகர் சந்தானத்தின் பால்ய நண்பர்.. தான் படம் தயாரித்தால் நீதான் ஹீரோ//

நீங்க சொல்றத பார்த்தா சந்தானத்துக்கு இதான் முத படம் போல :-))]]]

ஸாரி.. டங்ஸ் கொஞ்சம் ஸிலிப்பாயிருச்சு.. "புதுமுக நடிகரும், ஹீரோவுமான சேது"ன்னு படிச்சுக்குங்க..!

உண்மைத்தமிழன் said...

[[[வவ்வால் said...

புலவர் ஒருத்தர் வருவரே
காணோம்?]]]]]]

அது யாருண்ணே..? புது பட்டப் பெயரா இருக்கு..?

உண்மைத்தமிழன் said...

[[[வவ்வால் said...

//வடிவேலு எப்போதும் தன்னை ஒரு நிஜ காமெடியனாக நினைத்து, தன்னை தாழ்த்தியே திரைக்கதை எழுதிக் கொள்வார்.. ஆனால் சந்தானமோ அப்படியே உல்டாவாக தன்னைத்//

கவுண்டமணி என்ற மாபெரும் காமெடியனை மறந்து விட்டு வடிவேலுவுடன் சந்தானத்தை ஒப்பிடுவதன் நுண்ணரசியல் என்ன?

எம்.ஆர்.ராதா என்னிக்கு தன்னை தாழ்த்தி காமெடி செய்தார், சொல்லப் போனால் தமிழ்நாட்டில் யாருக்குமே அறிவில்லைனுகூட சொல்லுவார்:-))

சிலப்பேர் இன்னொசென்டாக தங்களை குறைத்து பேசி சிரிக்க வைப்பாங்க, சிலர் அடுத்தவங்களை போட்டு தாக்குவாங்க, எம்.ஆர்.ராதா, கவுண்டமணி போல.]]]

கவுண்டமணியோட போய் சந்தானத்தை ஒப்பிடலாமாண்ணே.. சந்தானமே சில, பல விஷயங்கள்ல கவுண்டமணியைத்தான் காப்பியடிச்சுக்கிடடிருக்காரு..!

உண்மைத்தமிழன் said...

[[[வவ்வால் said...

//வடிவேலு எப்போதும் தன்னை ஒரு நிஜ காமெடியனாக நினைத்து, தன்னை தாழ்த்தியே திரைக்கதை எழுதிக் கொள்வார்.. ஆனால் சந்தானமோ அப்படியே உல்டாவாக தன்னைத்//

கவுண்டமணி என்ற மாபெரும் காமெடியனை மறந்து விட்டு வடிவேலுவுடன் சந்தானத்தை ஒப்பிடுவதன் நுண்ணரசியல் என்ன?

எம்.ஆர்.ராதா என்னிக்கு தன்னை தாழ்த்தி காமெடி செய்தார், சொல்லப் போனால் தமிழ்நாட்டில் யாருக்குமே அறிவில்லைனுகூட சொல்லுவார்:-))

சிலப்பேர் இன்னொசென்டாக தங்களை குறைத்து பேசி சிரிக்க வைப்பாங்க, சிலர் அடுத்தவங்களை போட்டு தாக்குவாங்க, எம்.ஆர்.ராதா, கவுண்டமணி போல.]]]

கவுண்டமணியோட போய் சந்தானத்தை ஒப்பிடலாமாண்ணே.. சந்தானமே சில, பல விஷயங்கள்ல கவுண்டமணியைத்தான் காப்பியடிச்சுக்கிடடிருக்காரு..!

உண்மைத்தமிழன் said...

[[[வருண் said...

பாக்யராஜ் கதையை திருடியதுக்கு எவ்ளோ தொகை கொடுத்து அவர் வாயை அடச்சாளாம்? சும்மா ஸ்க்ரீன்ல பேரு போட்டதுனால எல்லாம் பா ராஜ் அடங்கி இருக்க மாட்டாரு. நிச்சயம் ஒரு தொகை கொடுத்துத்தான் அவர் வாயை அடச்சி இருப்பா. அது எவ்ளோனு கேட்டு சொல்லுங்க!]]]

இதை யாராச்சும் வெளில சொல்லுவாங்களா வருண்..!

இரு தரப்புமே முதல்ல சில விஷயங்களை வேணும்ன்னே லீக் செஞ்சாங்க.. அதை நம்பி மீடியாவும் அமைதியா இருக்க.. இப்போ பாக்யராஜ் திரும்பவும் தனக்கு பணம் எதுவும் செட்டில்மெண்ட்செய்யப்படவில்லைன்னு சொல்றாரு.. இவங்களுக்கு இடைல இயக்குநர் கேயார் சமரசம் பண்ணினாரு.. கடைசீல என்னாச்சுன்னு தெரியலை.. கோர்ட்ல கேஸ் போட்டிருக்காரு பாக்யராஜ்.. இந்தப் படத்தோட வரவு செலவு கணக்கை என்கிட்ட காட்டணும்ன்னு.. அதைப் பார்த்திட்டு கடைசியா ஒரு பெரிய தொகையை கேட்பாருன்னு நினைக்கிறேன்..!

Prem S said...

//விசாகாவை காதலிக்க போட்டி போடும் சந்தானம், பவர் ஸ்டார் சந்தானம்,
//

பவர் ஸ்டார் சீனிவாசன் அல்லவா ?

Yaathoramani.blogspot.com said...

அருமையாக விமர்சனம் செய்துள்ளீர்கள்
வாழ்த்துக்கள்
கடைசியாகச் சொல்லிப் போன பவர் ஸ்டார் விஷயம்
கொஞ்சம் கவனிக்கப்படவேண்டிய விஷயம்தான்

தமிழ்மகன் said...

ஒரிஜினல் AVG Internet Security 2013 மென்பொருள் - இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

http://mytamilpeople.blogspot.in/2013/01/avg-internet-security-2013-free-download.html

தமிழ்மகன் said...

ஒரிஜினல் AVG Internet Security 2013 மென்பொருள் - இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

http://mytamilpeople.blogspot.in/2013/01/avg-internet-security-2013-free-download.html

மன்சி (Munsi) said...

//! ஒரு முட்டாள் காமெடியன் என்ற ரீதியில்தான் மற்றவர்கள் அவரைப் பார்க்கிறார்கள். அவரும் அது போலவேதான் நடந்து கொள்கிறார்.. பேசவும் செய்கிறார்..!//

நீயா நானாவில் பார்த்திருக்கிறேன் இந்த வடிகட்டின முட்டாளை.

imegery said...

Sir, I'm Nandhini from Kumudam magazine. I want to talk to you about writing an article for Kumudam Penngal malar. Need your contact number. mail me mvnandhini84@gmail.com or snehidhi@kumudam.com

imegery said...

Sir, I'm Nandhini from Kumudam magazine. I want to talk to you about writing an article for Kumudam Penngal malar. Need your contact number. mail me mvnandhini84@gmail.com or snehidhi@kumudam.com

Sindhai said...

அந்தப் படத்தில் என்னை பெரிதும் கவர்ந்த நகைச்சுவை காட்சியான கல்லாபெட்டி சிங்காரத்தை விடியற்காலை நேரத்தில் மடக்கப் பார்த்து “தென்ன மரத்துல தென்றலடிக்குது..” என்று பாடிக் கொண்டே பாக்யராஜ் அவஸ்தைப்படும் காட்சியை போல

சரியன குழப்பம் சார்.. இந்த பாட்டும் sceneம் சுவரில்லா சித்திரங்கள் படத்துல வரும் சார், இன்று போய் நாளை வா படத்துல இல்ல சார்.... கதாநாயகி அதிகாலை நேரத்துல சுதாகரை பார்த்து சிரிப்பார், பாக்கியராஜோ காதாநாயகி தன்னைப் பார்த்து சிரிப்பதாக தாவறாக நினைத்துக்கொண்டு, அந்த கொண்டாட்டத்தில் இந்த பாடலை பாடிக்கொண்டு அந்த தெருவிலேயே cycle-லில் round அடிப்பார். தென்னை மரத்துல தென்றலடிக்குது நந்த வனக்குயிலே, குயிலே உன்னை நினைக்கயிலே...

Sindhai said...

கல்லாபெட்டி சிங்காரம் இந்த scene-இல் வரவே மாட்டார் சார்...

வவ்வால் said...

அண்ணாச்சி,

//சந்தானமே சில, பல விஷயங்கள்ல கவுண்டமணியைத்தான் காப்பியடிச்சுக்கிடடிருக்காரு..!
//

அதான் சொல்லுறேன் , சந்தானம் காமெடி கவுண்டமணி ஸ்டைல்னு , எல்லாரையும் திட்டி மட்டம் தட்டுற ஸ்டைல், சொக்கத்தங்கம் படத்துல ,ஹீரோ வி.காந்த் , செக்கு வச்சிருக்கிற முத்துன்னு சொல்லுங்கனு சொல்வார், உடனே கவுண்டர் "ஆமாம் பெரிய செக்கு , 1000 பேரு வேலை பார்க்கிறாங்க, எதுக்கெடுத்தாலும் செக்கு வச்சிருக்கேனு சொல்லிக்கிட்டுனு ஹீரோவை போட்டுத்தாக்குவார் :-))

எனவே சந்தானம் வடிவேலு போல நடிக்கனும்னு நீங்க சொல்வது சரியான எதிர்ப்பார்ப்பல்ல, கவுண்டர் போல நடிச்சால் என்ன?

இப்போவே சின்ன "கவுண்டர்"னு தான் சொல்லுறாங்க.

#

//பக்கத்து வீட்டு அக்காவாக அட்வைஸராக நடித்திருப்பவும் ஒரு சோடாபுட்டி அளவுக்கு கண்ணாடியை போட்டு அமைதியாக நடித்திருப்பார்.. அவர் யார் என்று யாராவது சொன்னால் தன்யனாவேன்..!
//

சுமித்திரா இல்லை தான், யூடியூபில் பார்த்தேன் , வேற ஒருத்தர், நடித்தவர்கள் பட்டியலை வைத்து தோராயமா வி.கே.பத்மினினு நினைக்கிறேன்.

பழம்பெரும் பதிவர்னு என்பதால் பழம்பெரும் நடிகையரை விசாரிக்கிறிங்களா :-))

உங்க ஃபேவரைட் சோடாப்புட்டியை கண்டுக்களியுங்கள் ...

http://youtu.be/u7xwutbunw4

உண்மைத்தமிழன் said...

[[[Prillass s said...

//விசாகாவை காதலிக்க போட்டி போடும் சந்தானம், பவர் ஸ்டார் சந்தானம்,//

பவர் ஸ்டார் சீனிவாசன் அல்லவா ?]]]

ம்.. குத்தம் கண்டு பிடிக்கவே ஒரு டீம் இருக்காங்க போலிருக்கு.. மன்னிக்கணும்.. திருத்திவிட்டேன்..! நன்றி..!

உண்மைத்தமிழன் said...

[[[Ramani said...

அருமையாக விமர்சனம் செய்துள்ளீர்கள்
வாழ்த்துக்கள். கடைசியாகச் சொல்லிப் போன பவர் ஸ்டார் விஷயம் கொஞ்சம் கவனிக்கப்படவேண்டிய விஷயம்தான்.]]]

இப்போது அள்ளிக் கொடுக்கும் தயாரிப்பாளரின் தனிப்பட்ட முடிவினால் இண்டஸ்ட்ரியே பாதிக்கப்படுகிறது..! இதனை அவர்களும் உணர்வதில்லை.. வாங்குபவர்களும் உணர்வதில்லை..!

உண்மைத்தமிழன் said...

[[[தமிழ்மகன் said...

ஒரிஜினல் AVG Internet Security 2013 மென்பொருள் - இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.]]]

தகவலுக்கு மிக்க நன்றிகள் பிரதர்..!

உண்மைத்தமிழன் said...

[[[மன்சி (Munsi) said...

//!ஒரு முட்டாள் காமெடியன் என்ற ரீதியில்தான் மற்றவர்கள் அவரைப் பார்க்கிறார்கள். அவரும் அது போலவேதான் நடந்து கொள்கிறார்.. பேசவும் செய்கிறார்..!//

நீயா நானாவில் பார்த்திருக்கிறேன் இந்த வடிகட்டின முட்டாளை.]]]

நீங்க முட்டாள்ன்றீங்க.. ஆனால் அவர்தான் இன்னைக்கு தமிழகத்தின் நம்பர் ஒன் காமெடியன் மனிதர்..!

உண்மைத்தமிழன் said...

[[[imegery said...

Sir, I'm Nandhini from Kumudam magazine. I want to talk to you about writing an article for Kumudam Penngal malar. Need your contact number. mail me mvnandhini84@gmail.com or snehidhi@kumudam.com]]]

9840998725. மெயிலும் அனுப்பியிருக்கிறேன். பாருங்கள். வருகைக்கு மிக்க நன்றி..!

உண்மைத்தமிழன் said...

[[[Sindhai said...

அந்தப் படத்தில் என்னை பெரிதும் கவர்ந்த நகைச்சுவை காட்சியான கல்லாபெட்டி சிங்காரத்தை விடியற்காலை நேரத்தில் மடக்கப் பார்த்து “தென்ன மரத்துல தென்றலடிக்குது..” என்று பாடிக் கொண்டே பாக்யராஜ் அவஸ்தைப்படும் காட்சியை போல

சரியன குழப்பம் சார்.. இந்த பாட்டும் sceneம் சுவரில்லா சித்திரங்கள் படத்துல வரும் சார், இன்று போய் நாளை வா படத்துல இல்ல சார்.... கதாநாயகி அதிகாலை நேரத்துல சுதாகரை பார்த்து சிரிப்பார், பாக்கியராஜோ காதாநாயகி தன்னைப் பார்த்து சிரிப்பதாக தாவறாக நினைத்துக் கொண்டு, அந்த கொண்டாட்டத்தில் இந்த பாடலை பாடிக்கொண்டு அந்த தெருவிலேயே cycle-லில் round அடிப்பார். தென்னை மரத்துல தென்றலடிக்குது நந்த வனக்குயிலே, குயிலே உன்னை நினைக்கயிலே.]]]

ஆஹா.. உண்மைதான்.. இப்போதான் நினைவுக்கு வருகிறது.. தவறைச் சுட்டிக் காட்டியமைக்கு மி்கக நன்றிகள் பிரதர்.. திருத்திவிட்டேன்..!

உண்மைத்தமிழன் said...

[[[Sindhai said...

கல்லாபெட்டி சிங்காரம் இந்த scene-இல் வரவே மாட்டார் சார்...]]]

நான் சொல்ல வந்தது என்னன்னா.. கல்லாபெட்டி சிங்காரம் காலை வேளையில் வாக்கிங் போகும்போது செப்டிக் டேங்கை திறந்து வைத்து அதில் அவரை விழுக வைத்து அடிபட வைப்பார்களே.. அந்தக் காட்சியை..

அதுவும் விடியற்காலை.. இதுவும் விடியற்காலை என்று குழப்பமாகிவிட்டது.. ஸாரி..!

உண்மைத்தமிழன் said...

[[[வவ்வால் said...

அண்ணாச்சி,

//சந்தானமே சில, பல விஷயங்கள்ல கவுண்டமணியைத்தான் காப்பியடிச்சுக்கிடடிருக்காரு..!//

அதான் சொல்லுறேன் , சந்தானம் காமெடி கவுண்டமணி ஸ்டைல்னு , எல்லாரையும் திட்டி மட்டம் தட்டுற ஸ்டைல், சொக்கத்தங்கம் படத்துல , ஹீரோ வி.காந்த், செக்கு வச்சிருக்கிற முத்துன்னு சொல்லுங்கனு சொல்வார், உடனே கவுண்டர் "ஆமாம் பெரிய செக்கு , 1000 பேரு வேலை பார்க்கிறாங்க, எதுக்கெடுத்தாலும் செக்கு வச்சிருக்கேனு சொல்லிக்கிட்டுனு ஹீரோவை போட்டுத் தாக்குவார்:-))
எனவே சந்தானம் வடிவேலு போல நடிக்கனும்னு நீங்க சொல்வது சரியான எதிர்ப்பார்ப்பல்ல, கவுண்டர் போல நடிச்சால் என்ன? இப்போவே சின்ன "கவுண்டர்"னுதான் சொல்லுறாங்க.]]]

சந்தானத்தின் நீளமான வசனத்தையும் அதை அவர் உச்சரிக்கும் முறையும் ஒரு முறைக்கு மட்டுமே அந்த காமெடியை ரசிக்க முடிகிறது..! மேலும்.. மேலும்.. டிவியில்கூட பார்க்க முடிவதில்லை..! உங்களுக்கு எப்படி..?

உண்மைத்தமிழன் said...

[[[//பக்கத்து வீட்டு அக்காவாக அட்வைஸராக நடித்திருப்பவும் ஒரு சோடாபுட்டி அளவுக்கு கண்ணாடியை போட்டு அமைதியாக நடித்திருப்பார்.. அவர் யார் என்று யாராவது சொன்னால் தன்யனாவேன்..!//

சுமித்திரா இல்லைதான், யூடியூபில் பார்த்தேன், வேற ஒருத்தர், நடித்தவர்கள் பட்டியலை வைத்து தோராயமா வி.கே.பத்மினினு நினைக்கிறேன். பழம்பெரும் பதிவர்னு என்பதால் பழம்பெரும் நடிகையரை விசாரிக்கிறிங்களா :-))
உங்க ஃபேவரைட் சோடாப்புட்டியை கண்டுக்களியுங்கள் ...
http://youtu.be/u7xwutbunw4]]]

மிக்க நன்றி வவ்ஸ்..! இதுக்குத்தான் உம்மை மாதிரி அண்ணன்-தம்பிகள் இங்கே இருக்கணும்ன்றது..!!!

joe said...

விசாகாவிற்கு என்ன ஒரு இடுப்புடா. நாலு நாளா தூக்கம் போச்சு. இப்படி காமெடியன்கள் ஜோடியா நடிச்சு எதிர்காலத்தை கேடுத்துகிட்டாளே.

உண்மைத்தமிழன் said...

[[[joe said...

விசாகாவிற்கு என்ன ஒரு இடுப்புடா. நாலு நாளா தூக்கம் போச்சு. இப்படி காமெடியன்கள் ஜோடியா நடிச்சு எதிர்காலத்தை கேடுத்துகிட்டாளே.?]]]

என்ன இருந்தாலும் அனுஷ்கா மாதிரி வருமாண்ணே..? பயப்படாதீங்க.. பாப்பாவுக்கு அடுத்தடுத்த படங்கள் ரெடியா இருக்கு..!

joe said...

அண்ணே. நொந்த மனசுலே ஏன் வேல் பாய்ச்சரிங்க. அனுஷ்கா எல்லாம் முத்தல்னே. என்னை பொறுத்தவரை தமன்னாவை தூக்கி சாப்பிட்டது விசகாதாண்ணே. இன்னோரு வாட்டி படம் பாருண்ணே

மெட்ராஸ்காரன் (Madrasi) said...

பாக்யராஜின் நண்பர் பெயர் G ராமலிங்கம் ராம்லி என்று ஸ்டைலாக டைட்டில் வரும்...சோடாபுட்டி பெண்மணி V K பத்மினி - பகோடா காதர் மனைவி...

உண்மைத்தமிழன் said...

[[[joe said...

அண்ணே. நொந்த மனசுலே ஏன் வேல் பாய்ச்சரிங்க. அனுஷ்கா எல்லாம் முத்தல்னே. என்னை பொறுத்தவரை தமன்னாவை தூக்கி சாப்பிட்டது விசகாதாண்ணே. இன்னோரு வாட்டி படம் பாருண்ணே...]]]

அடப்பாவி.. அதுக்காக இன்னொரு தடவை படத்தை பார்க்கணுமா..? பாட்டு சீனை மட்டும் டிவில பார்த்தா போதாதா..?

உண்மைத்தமிழன் said...

[[[மெட்ராஸ்காரன் (Madrasi) said...

பாக்யராஜின் நண்பர் பெயர் G ராமலிங்கம் ராம்லி என்று ஸ்டைலாக டைட்டில் வரும்...சோடாபுட்டி பெண்மணி V K பத்மினி - பகோடா காதர் மனைவி.]]]

தகவல்களுக்கு மிக்க நன்றிகள் ஸார்..!