14-01-2013
என் இனிய வலைத்தமிழ் மக்களே..!
இதுவொரு வித்தியாசமான கதைதான்..! ஏதோவொரு அன்னிய மொழி திரைப்படத்தின் கருவை மட்டும் சுட்டு எடுக்கப்பட்டுள்ளதாக நினைக்கிறேன்..! படத்தின் முழுக் கதையையும் இதற்காகவே இங்கே தட்டச்சிட்டுள்ளேன்.. உலக சினிமா ரசிகர்கள் படித்துவிட்டு நியாபகப்படுத்தி சொல்லவும்.. விருப்பமில்லாதவர்கள் அப்படியே ஸ்குரால் செய்து கீழே செல்லவும்..!
இந்தக் கதையை முதலில் ஆர்யாவிடம்தான் சொல்லியிருக்கிறார் இயக்குநர் திரு. ஆர்யா கதையைக் கேட்டுவிட்டு பிராஜெக்ட்டை தள்ளிப் போட்டு வைக்க.. இடையில் ஓரிடத்தில் விஷாலை எதேச்சையாக சந்திக்க நேர்ந்தபோது இந்தக் கதையின் அவுட்லைனை மட்டும் சொல்லியிருக்கிறார் திரு. அத்தோடு இதனை ஆர்யாவிடம் சொல்லி ஓகே வாங்கி வைத்துள்ளதாகவும் சொல்லியிருக்கிறார் திரு. ஆனால் இந்தக் கதையில் கவரப்பட்ட விஷால், உடனேயே ஆர்யாவிடம் போனில் பேசி தான் இந்தக் கதையில் நடிக்க விரும்புவதாகச் சொல்லி படத்தைக் கைப்பற்றியிருக்கிறார். சிறந்த முடிவு.. விஷாலை இதற்காகவே பாராட்ட வேண்டும்..! இது போன்று வித்தியாசமான கதைகள் கிடைத்தால் எந்த ஹீரோவும் விட மாட்டார்கள்..! விஷால் முந்திக் கொண்டதால் ஆர்யாவுக்கு ஒரு நல்ல படம் கை கழுவியது என்றுதான் சொல்ல வேண்டும்..!
ஊட்டியில் வனத்துறை அதிகாரியின் மகனான சக்தி என்னும் விஷால் அங்கே சந்தன மரங்களைக் கடத்தும் கும்பலை அடித்து உதைத்துவிரட்டுவதை வழக்கமாக வைத்திருக்கிறார். கூடவே சுனைனாவையும் காதலித்தும் வருகிறார். ஆனால் அவ்வப்போது லவ்வுக்கு லீவு விட்டுக் கொண்டே வந்ததால் எரிச்சலாகும் சுனைனா ஒரேயொரு பாடலோடு விஷாலுடனான லவ்வுக்கு மங்களம் பாடிவிட்டு தாய்லாந்துக்கு பயணமாகிறார். 3 மாதங்கள் கழித்து விஷாலுக்கு சுனைனாவிடம் இருந்து கடிதம் வருகிறது. அவரை மறக்க முடியவில்லை என்றும், உடனே பார்க்க வேண்டும் போல இருப்பதாகவும் சொல்லி பிளைட் டிக்கெட்டையும் இணைத்து அனுப்பி விஷாலை கிளம்பி வரும்படி எழுதியிருக்கிறார். விஷாலும் உடனேயே தாய்லாந்து கிளம்புகிறார்.
சென்னை விமான நிலையத்தில் திரிஷாவை சந்தித்து அவரும் தாய்லாந்து செல்வது தெரிந்து, அவருடைய உதவியால் தாய்லாந்து வந்து சேர்கிறார் விஷால். சுனைனா காத்திருக்க சொன்ன நேரத்தில், இடத்தில் காத்திருந்தும் சுனைனா வரவில்லை. ஆனால் போலீஸ் வருகிறது. போலீஸ் கமாண்டர் சம்பத்தும் தமிழ்நாட்டுக்காரராகவே இருக்கிறார்.தன்னுடைய வீட்டில் ஒரு நாள் தங்க வைத்துவிட்டு சுனைனாவை மறுநாளும் தேடச் சொல்கிறார். விஷால் பல இடங்களில் தேடியும் சுனைனா கிடைக்கவில்லை. ஆனால் அவரைத் தேடித்தான் சில வில்லன்கள் அதுவும் கைகளில் துப்பாக்கியுடனும், கண்களில் கொலை வெறியுடனும் வருகிறார்கள். அந்த நேரத்தில், அந்த இடத்தில் மனோகரன் என்பவர் இன்னொரு அடியாள் படையுடன் வந்து விஷாலை காப்பாற்றி அழைத்துச் செல்கிறார்.
இப்போது மனோகர், விஷாலை சக்தி என்று பெயர் சொல்லியழைத்தும், அவன் தன்னுடைய பாஸ் என்றும் தாய்லாந்துலேயே மிகப் பெரிய கோடீஸ்வரன் என்றும் சொல்ல.. விஷால் குழப்பமாகிறார். மிகப் பெரிய வீடு.. கார்கள்.. வங்கியில் கோடிக்கணக்கான பணம்.. வணிகப் பத்திரிகைகளில் முதல் பக்கத்தில் விஷாலின் புகைப்படம்.. விஷாலின் கையொப்பம் வங்கியில் ஒத்துப் போவது என்று எல்லாமே பக்காவாக இருக்க குழப்பம் கூடுகிறது விஷாலுக்கு..
இடையில் இன்னொரு அடியாள் கும்பல் வந்து திடுக்கென்று விஷாலை தூக்கிச் செல்கிறது..! அங்கே டேனியல் என்பவன் விஷாலை மிரட்டுகிறான். விஷால் சொல்லித்தான் தான் ஒரு கொலை செய்திருப்பதாகவும், அதற்குரிய சன்மானம் இன்னமும் வந்து சேரவில்லை என்றும் திட்டுகிறான். அவர்களிடமிருந்து வாய்தா வாங்கி வந்து தப்பிக்கிறார் விஷால். உடனேயே அருகில் இருக்கும் போலீஸ் ஸ்டேஷனுக்கு திரிஷாவுடன் சென்று இது பற்றி புகார் கொடுக்கிறார் விஷால். அங்கே சாதாரண கான்ஸ்டபிள் முதற்கொண்டு கமாண்டர்வரையிலும் எழுந்து நின்று சல்யூட் அடிக்க விஷாலுக்கு நிஜமாகவே குழப்பம் கூடுகிறது..!
ஆனாலும் தான் தொடர்ந்து இங்கேயிருந்தால் தன்னை கொன்றேவிடுவார்கள் என்று யூகித்த விஷால் ஊருக்குச் செல்ல முடிவெடுக்கிறார். திரிஷாவே ஏர்போர்ட்டுக்கு வந்து விஷாலை அனுப்பி வைக்கிறார். திரிஷாலை நான்கைந்து ரவுடிகள் விரட்டிச் செல்வதை விமான நிலையத்திற்குள் செல்லும்போதுதான் கவனிக்கிறார் விஷால். உடனேயே தன்னை மறந்து வெளியே ஓடி வந்து அவர்களை விரட்டிப் பிடித்து திரிஷாவை மீட்கிறார். அதற்குள் போலீஸும் வந்து அடியாட்களை மிரட்டி அனுப்பி வைக்கிறது. தான் இவ்வளவு பெரிய பணக்காரன் என்றாலும், தன்னை கொல்ல இத்தனை ஆட்களும் இருக்கிறார்களே என்பது புரிந்து ஒரு முடிவுக்கு வருகிறார் விஷால். தான்தான் பணக்கார சக்தி என்று கொஞ்ச நாளைக்கு ஆக்ட் செய்து தன்னைச் சுற்றியுள்ள மர்மத்தைக் கண்டுபிடிக்கப் போவதாகச் சொல்லிவிட்டு ஹோட்டலுக்கு செல்கிறார்.
அடுத்தது இன்னொரு டிவிஸ்ட்..! அங்கே முதல் நாள் கிடைத்த சல்யூட் வரவேற்பு இல்லை. விஷால் தங்கியிருந்த அறையில் வேறு யாரோ தங்கியிருக்கிறார்கள். அவரை யாரென்றே தெரியாது என்று சொல்லி வெளியேற்றுகிறார்கள். மனோகரும் காணவில்லை. போலீஸ் கமாண்டர் முத்துக்குமரன் வீடு பூட்டப்பட்டு, வீடு வாடகைக்கு என்று போர்டு தொங்குகிறது..! ஒரே நாளில் உச்சிக்கு போய் அதே நாள் இரவில் பொத்தென்று விழுந்த உணர்வு விஷாலுக்கு..!
இப்போதும் அவருக்கு துணையாக இருப்பது திரிஷாதான்.. மனோகரை ஒரு சந்தர்ப்பத்தில் சந்தித்தே விடுகிறார் விஷால். படு பயங்கர சேஸிங் காட்சிகளுக்கு பின்பு மனோகரை பிடித்து உலுக்க.. 2 கடவுள்களிடம் தான் சிக்கியிருப்பதாகச் சொல்லிச் சிரிக்கிறான். மேலே சொல்வதற்குள் அடுத்தடுத்து 2 குண்டுகள் அவர் மேல் பாய்ந்து பரலோகம் சென்றடைகிறார் மனோகர்!
திரிஷா இப்போது ஜெயப்பிரகாஷை விஷாலிடம் அறிமுகப்படுத்தி வைக்கிறார். ஜெயப்பிரகாஷ் தான் இந்தியன் எம்பஸியில் வேலை பார்ப்பதாகச் சொல்கிறார். இவர் தனக்கு மாமா என்கிறார் திரிஷா. தான் யாருக்காக தாய்லாந்து வந்தோமோ அந்த சுனைனாவை சந்தித்தே விடுகிறார் விஷால். ஆனால் சுனைனாவோ தான் விஷாலை மறந்துவிட்டதாகவும், தான் ஒருபோதும் அவருக்கு கடிதம் எழுதவில்லையென்றும், பிளைட் டிக்கெட்டையும் தான் அனுப்பவில்லை என்று சொல்லிவிட்டு, தனக்காக இனியும் காத்திருக்க வேண்டாம் என்று சொல்லிவிட்டுச் செல்கிறார்.
காதல் சோகத்தை மறைக்க தண்ணியடித்து பெண்கள் பற்றியும், காதல் பற்றியும் புலம்புகிறார் விஷால். இதேபோல் திரிஷாவும் தண்ணியடித்துவிட்டு விஷாலிடம் “ஐ லவ் யூ” சொல்கிறார்..! விஷால் இதனை அப்போது ஏற்க மறுக்கிறார். தான் உடனே சென்னைக்கு போக வேண்டும் என்று முடிவெடுக்கிறார். ஏர்போர்ட்டுக்கு கிளம்பும்போது திடீரென்று ஒரு கும்பல் திரிஷாவை தூக்கிச் செல்ல.. ஜெயப்பிரகாஷ் மூலமாக லோக்கல் தமிழ் தாதாவிடம் திரிஷாவைத் தூக்கியது எந்தக் கும்பல் என்று தெரிந்து கொண்டு அந்த இடத்திற்குச் சென்று கடும் சண்டையிட்டு திரிஷாவை காப்பாற்றி அழைத்து வருகிறார் விஷால்.
இப்போதுதான் ஸ்கிரீனில் தோன்றுகிறார்கள் 2 கடவுள்கள். மனோஜ் பாஜ்பாய் அண்ட் ஜே.டி.சக்ரவர்த்தி இருவரும்தான் மெயின் வில்லன்கள்..! சிறு வயதில் இருந்தே பெட் கட்டியே விளையாடி பழகிவிட்ட இவர்கள் மேலும் மேலும் வளர்ந்து, மிகப் பெரும் கோடீஸ்வரர்களாக உருமாறிய பின்பும் இந்த பெட் கட்டும் பழக்கம் இவர்களை விட்டு போகவில்லை..! ச்சும்மா ச்சும்மா காய் விழுமா, பழம் விழுமா என்று பெட் கட்டாமல், சுவாரஸ்யமாக விளையாடிப் பார்க்க முடிவெடுக்கிறார்கள்.
அதன்படி முதலில் ஒரு பெண் நடந்து வரும்போது அவள் பார்வையில்படும்படி பணக்கட்டுக்கள் அடங்கிய சூட்கேஸை வைக்கிறார்கள். சபலத்தில் அந்தப் பெண் அந்த சூட்கேஸை தூக்கிச் சென்றவுடன் பின்னாலேயே போலீஸுக்கு போன் செய்து அந்தப் பெண்ணை பிடிக்க வைக்கிறார்கள். பத்திரிகைகளில், டிவிக்களில் அந்தப் பெண்ணை எக்ஸ்போஸ் செய்துவிட்டு இப்போது இந்தப் பெண் தற்கொலை செய்து கொள்வாளா? மாட்டாளா? என்று பெட் கட்டுகிறார்கள் நமது வில்லன்கள். கடைசியில் அந்தப் பெண் தற்கொலைதான் செய்து கொள்கிறாள். இதுதான் இவர்களது விளையாட்டு..!
இப்படியே பலரிடமும் பல வகைகளில் தொடர்ந்து விளையாடிக் கொண்டிருக்கும்போதுதான் ஒரு பிஸினஸ் விஷயமாக ஊட்டிக்கு வரும் சக்கரவர்த்தியின் கண்ணில் படுகிறார்கள் விஷாலும், சுனைனாவும். அவர்களது காதலுக்கு சுனைனா மங்களம் பாடிய அன்றைக்குத்தான் இவர்களுக்கு சனி பிடிக்கிறது. உடனேயே தனது பார்ட்னருக்கு போன் செய்யும் சக்கரவர்த்தி, “நம்முடைய அடுத்த விளையாட்டுக்கு ஆள் பிடிச்சாச்சு. இந்தத் தடவை தமிழ்நாட்டுல இருந்து ஒருத்தனை தூக்குறோம்” என்று சொல்லித்தான் இந்த விளையாட்டை ஆரம்பிக்கிறார்கள்..!
போலீஸ் கமாண்டர் முத்துக்குமரன், மனோகர், மான், போலீஸ் ஸ்டேஷன், வங்கி ஊழியர்கள், ஹோட்டல் ஊழியர்கள் என்று பலரும் இந்த விளையாட்டில் நடிகர்களாக நடித்திருக்க முக்கிய நடிகையே திரிஷாதான்.. அவருடைய தாயாரின் ஆபரேஷனுக்கு அர்ஜெண்ட்டாக 20 லட்சம் ரூபாய் பணம் தேவைப்பட்டு ஜெயப்பிரகாஷிடம் கேட்கும்போது ஜெயப்பிரகாஷ் இந்த லூஸு பார்ட்னர்ஸிடம் திரிஷாவை அறிமுகப்படுத்தி வைக்க.. தங்களது விஷாலின் நாடகத்திற்கு திரிஷாவை பயன்படுத்திக் கொண்டுள்ளார்கள். விஷால் படும் பாட்டில் அவர் தற்கொலை செய்து கொள்வாரா..? அல்லது திரிஷாவை கொலை செய்வாரா என்று பெட் கட்டி விளையாடி வருகிறார்கள் இந்தக் கொலைகார பார்ட்னர்கள்..!
திரிஷாவின் வீடு முழுவதும் கேமிராக்களை வைத்து திரிஷா, விஷால் காட்சிகளை லைவ்வாக பார்த்தும், விஷாலும், திரிஷாவும் காதல் மொழிகளைப் பேசி அல்லல்படும் காட்சிகளை ரசித்தும் ஒரு சேடிஸ்ட்டாகவே வாழ்ந்து காட்டியிருக்கிறார்கள் வில்லன்கள் இருவரும்..!
இப்போது புது டிவிஸ்ட்டாக திரிஷாவின் முன்னாள் காதலனாக ஒருவன் வருகிறான். அவன் திரிஷா விஷாலிடம் பேசியதையெல்லாம் வெளியே எடுத்துவிட.. விஷால் சந்தேகம் கொண்டு திரிஷாவை அடித்துவிடுகிறான். அப்போது தரையில் விழும் திரிஷா இறந்ததுபோல் இருக்க.. திரிஷாவின் சாவுக்கு கங்கணம் கட்டிய சக்கரவர்த்தி துள்ளிக் குதிக்கிறார்.. தான்தான் ஜெயித்துவிட்டோம் என்று கொக்கரிக்கிறார்..!
அன்று இரவு பார்ட்னர்கள் இருவரும் காரில் சந்தோஷமாக வந்து கொண்டிருக்கும்போது எதிரில் சாலையில் திடீரென்று திரிஷா நிற்பதுபோல் வர.. சக்கரவர்த்தி திடுக்கிட்ட உணர்வுடன் காரை கட்டுப்படுத்த முடியாமல் போக கார் குட்டிக்கரணம் போடுகிறது..
விடிந்தால் பார்ட்னர்கள் இருவரும் ஒரு வீட்டில் படுத்திருக்கிறார்கள். வீட்டில் யாருமில்லை.. டிவியில் பார்ட்னர்கள் இருவரின் இறப்புச் செய்தியும் சொல்லப்படுகிறது. வேறு வேறு இடங்களில் இருவரின் மனைவிகளும் கதறி அழுது கொண்டிருக்க இருவருக்கும் இறுதிச் சடங்குகள் நடந்து கொண்டிருப்பது டிவியில் லைவ்வாக டெலிகாஸ்ட் செய்யப்படுகிறது..! இதைப் பார்த்தவுடன் திகைப்பும், பயமுமாக இருவரும் வீட்டில் இருந்து வெளியே தலைதெறிக்க ஓடுகிறார்கள்..!
இவர்கள் ஓடி வரும் பாதையின் முடிவு கடல். நடுவில் திடீரென்று திரிஷாவே வந்து நிற்க.. திடுக்கிடுகிறார்கள் இருவரும். பின்னாலேயே விஷாலும் நிற்கிறார். திரிஷா தன் மீது காதல் கொண்ட நிலையில் உண்மையைச் சொல்லிவிட்டதாகவும், அதனால் இதுவரையில் தானும் நடித்ததாகவும், பார்ட்னர்களை கண்டுபிடிக்கவே திரிஷாவை செத்ததுபோல் நடிக்க வைத்ததாகவும் சொல்கிறார் விஷால்..! இப்போது உலகமே அவர்களது சாவை நம்பிவிட்டது. இப்போது அவர்கள் எப்படி செத்தாலும் யாரும் கவலைப்படப் போவதில்லை என்றும் சொல்கிறார் விஷால்.
இந்த நேரத்தில் மனோகர், சம்பத், மான், ஜெயப்பிரகாஷ் நால்வரும் அங்கே வருகிறார்கள். அவர்கள் தங்களைத்தான் காப்பாற்ற வருகிறார்கள் என்று பார்ட்னர்கள் இருவரும் சந்தோஷப்பட.. துப்பாக்கி பார்ட்னர்களுக்குத்தான் குறி வைக்கப்படுகிறது.. அவர்களது விபரீத சைக்கோத்தனமான விளையாட்டில் தாங்கள் மாட்டிக் கொண்டு முழித்த்து போதுமென்றும், இனிமேல் உங்களைப் போன்ற சைக்கோக்களுக்கு இந்த உலகத்தில் இடமே இல்லை என்றும் ஜெயப்பிரகாஷும் கூட்டாளிகளும் சொல்ல.. திரிஷாவும், விஷாலும் சிரித்தபடியே விலகிச் செல்கிறார்கள்..!
காதலர்கள் இருவரும் பத்தடி தூரம் நடந்தவுடனேயே மனோஜ் பாஜ்பாய் “கேம் இஸ் ஓவர்..” என்று சொல்ல இரு முறை துப்பாக்கிகள் முழங்குகின்றன.. யார், யாரைச் சுட்டார்கள் என்று தெரியவில்லை. திரிஷாவும், விஷாலும் தப்பிச் செல்வதுகூட பார்ட்னர்களின் விளையாட்டு முடிவா என்றும் தெரியவில்லை. ரசிகர்களின் ஊகங்களுக்கே முடிவுகளை விட்டுவிட்டு படத்தினை முடித்துவிட்டார்கள்..!
இந்தப் படம் பெரும் வெற்றி பெற்றால் அதற்கு முழு முதற் காரணம் இயக்குநர்தான். ஒரு சஸ்பென்ஸ் திரில்லர் கதையை இத்தனை டிவிஸ்ட்டுகளுடன் கொண்டு செல்ல வேண்டுமெனில் சிறந்த திரைக்கதை அமைய வேண்டும்.. பெஸ்ட்டாக அமைத்திருக்கிறார் இயக்குநர் திரு. தீராத விளையாட்டு பிள்ளை படத்துக்கு பின்பு இவர் இயக்கியிருக்கும் இரண்டாவது படம் இது..!
டிவிஸ்ட்டுகளை ஒன்றன்பின் ஒன்றாக இவர் அவிழ்ப்பதும் அதில் முடிச்சுகள் சிக்கலாகிக் கொண்டே செல்வதும், இறுதியில் திரிஷாவும் கூட்டாளி என்று தெரியும்போது அட என்ற ஆச்சரிய உணர்வு எழுவதையும் மறுக்க முடியவில்லை..! இறுதியில் கதை எப்படித்தான் முடியும் என்ற எதிர்பார்ப்பை கூட்டிக் கொண்டே போய் பரபரப்பாக முடித்திருக்கிறார் இயக்குநர்..! வெல்டன் திரு ஸார்..!
அடுத்த பாராட்டு கண்டிப்பாக வில்லன்களாகிய பார்ட்னர்களுக்குத்தான். மனோஜ் பாஜ்பாய் பாலிவுட்டின் பிரகாஷ்ராஜ்.. எத்தகைய நடிப்பையும் எகத்தாளமாக செய்யக் கூடியவர்.. சக்கரவர்த்தி தெலுங்குலகில் ஹீரோவாகவும், வில்லனாகவும் ஒரே நேரத்தில் முன்னணியில் இருந்தவர்.. இவர்கள் இருவரின் ஆட்டத்தில்தான் படமே இடைவேளைக்கு பின்பு படு சுவாரஸ்யமாகச் செல்கிறது.. அதிலும் விஷால் படும் அவஸ்தையைப் பார்த்துவிட்டு இவர்கள் இருவரும் ஆடுவதும், துள்ளிக் குதிப்பதுமான காட்சிகளே லாஜிக்கை பற்றியெல்லாம் யோசிக்க வைக்காமல் படத்தினுள் நம்மை இருக்க வைக்கிறது..!
படத்தின் ஒரே மைனஸ் பாயிண்ட் விஷால்தான்..! வேறு வழியில்லை.. சொல்லித்தான் ஆக வேண்டும்.. மனுஷனுக்கு நடிப்பெல்லாம் வித்தியாசமாக வராது என்பது தெரிந்ததுதான்..! இருந்தாலும் முதல் ரீலில் இருந்து கடைசிவரையிலும் அதையே பார்த்துக் கொண்டிருக்க முடியுமா..? சண்டைக் காட்சிகளில் கடினமாக உழைத்திருக்கிறார். ஆனால் நடனக் காட்சிகள் சிம்பு படத்தைவிட கொடுமையாக இருக்கிறது.. திரிஷாவுக்காக பார்க்க வேண்டியிருக்கிறது..!
சுனைனா கொஞ்ச நேரமே வந்து செல்கிறார். ஒரு பாடல் காட்சியிலும் குறுக்கே, வடக்கே, தெற்கே என்று நடந்து காட்டியிருக்கிறார். அவ்வளவுதான்..! திரிஷா.. அம்மணிக்கு வயது 30-ஐ தொடுகிறது என்றாலும் முகத்தில் அது தெரியவில்லை. ஒரு சொட்டு கண்ணீர்விடாமல் சோகக் காட்சியில் நடித்திருக்கிறார் என்பதே பெரும் சாதனை..! பாடல் காட்சிகளிலும் கொஞ்சம் அடக்கியே வாசித்திருக்கிறார்..! வயதான பீலிங்கோ என்னவோ..?
அண்ணன் எஸ்.ராமகிருஷ்ணனின் வசனத்தில் வில்லன்களின் கதை வர்ணனை மிகப் பொருத்தமாக, ஏற்புடையதாக, லாஜிக் பார்க்க விடாமல் இருந்தது..! பெண்கள் குடிக்கக் கூடாதுன்னு யார் சொன்னது என்று பெண்ணியத்திற்காக வக்காலத்து வாங்கியிருக்கும் எஸ்.ரா.வுக்கு எனது பாராட்டுக்கள்.. திரிஷாவை குடிக்கவும் வைத்திருக்கிறார்கள். அதற்கும் ஒரு நியாயமான காரணங்களை அதே இடத்தில் சொல்லியும் இருக்கிறார்கள்..! திரைக்கதை, இயக்கம் இதைத் தாண்டிச் சென்றுவிடாமல் வசனங்களை ஒரு அளவுக்குள் எழுதியிருக்கிறார் எஸ்.ரா..!
யுவன்சங்கர்ராஜாவின் ஆர்ப்பாட்டமான இசையில் நா.முத்துக்குமார், கபிலனின் வார்த்தைகளெல்லாம் அமுங்கிப் போய்விட்டன..! பாடல் காட்சிகளின் நடனங்களும், ஒளிப்பதிவும் மட்டுமே மிளிர பாடல் வரிகளை கொஞ்சம் தெளிவாக கேட்கும்படி வைத்திருக்கக் கூடாதா என்ற ஆதங்கமும் ஏற்படுகிறது.. அதிலும் கடைசி பார் டான்ஸ் பாடலும், டான்ஸும் நிச்சயம் கிலுகிலுப்பை உண்டாக்கும்..!
இந்தப் படத்திலும் மது அருந்தும் காட்சிகளும், புகை பிடிக்கும் காட்சிகளும் நிறைய இருந்தாலும் யு சர்டிபிகேட்டுதான் கொடுத்திருக்கிறார்கள். சென்சார் போர்டு சர்டிபிகேட்டுக்கு என்னதான் அளவுகோல் வைத்திருக்கிறது என்று தெரியவில்லை..! எல்லாமே முறைகெட்டத்தனமாகத்தான் இருக்கிறது..! யார்கிட்ட போய் சொல்றது இதை..?
அலெக்ஸ்பாண்டியன் ஊத்திக் கொள்ள.. சமரும், கண்ணா லட்டு தின்ன ஆசையாவும்தான் இந்த வாரம் பாக்ஸ் ஆபீஸை நிரப்பப் போகின்றன என்று விநியோக தகவல்கள் கூறுகின்றன..! ஒரு வித்தியாசமான கதைக் கருவுடன் தன்னால் முடிந்த அளவுக்கு பெஸ்ட்டாக எடுத்துத் தந்திருக்கும் இயக்குநர் திருவுக்கு எனது பாராட்டுக்கள்..!
சமர் - நிச்சயம் ஒரு முறை பார்க்கலாம்..!
|
Tweet |
47 comments:
போலீஸ் கமாண்டர் சம்பத்தும் தமிழ்நாட்டுக்காரராகவே இருக்கிறார்.(இங்க லாஜிக்கெல்லாம் பார்க்கவே கூடாது..)
//அண்ணன் எஸ்.ராமகிருஷ்ணனின் வசனத்தில் வில்லன்களின் கதை வர்ணனை மிகப் பொருத்தமாக, ஏற்புடையதாக, லாஜிக் பார்க்க விடாமல் இருந்தது..! பெண்கள் குடிக்கக் கூடாதுன்னு யார் சொன்னது என்று பெண்ணியத்திற்காக வக்காலத்து வாங்கியிருக்கும் எஸ்.ரா.வுக்கு எனது பாராட்டுக்கள்.. திரிஷாவை குடிக்கவும் வைத்திருக்கிறார்கள். அதற்கும் ஒரு நியாயமான காரணங்களை அதே இடத்தில் சொல்லியும் இருக்கிறார்கள்..! திரைக்கதை, இயக்கம் இதைத் தாண்டிச் சென்றுவிடாமல் வசனங்களை ஒரு அளவுக்குள் எழுதியிருக்கிறார் எஸ்.ரா..! //
சமரசம் பண்ணிக்கலாம் திரைக்கதையால் !
சுருக்கமாக கதை எழுதினால் நல்லா இருக்கும்; இல்லை விழலுக்கு இரைத்த நீர்.
பாதி கதை படித்சு விட்டு தூங்கிட்டேன்...! எந்த உழைப்பும் வீணாகக் கூடாது என்ற அக்கரியினால் இன்ட்டிஹா கிண்டல்!
When reading ur article, i feel as a good crime novel. I have to go for this visual treat.Thanks sir for ur review.
Sir - This movie's story seems to be inspired(let us not say copied) from the Hollywood movie `The Game' Michael Douglas the hero would have given life to this movie. Since you have seen Samar try to watch this English movie. Excellent one.
Yes The Game Movie theme has been copied.
சரி.. சரி... வெளிநாட்டுப் படங்களிலிருந்து ஐடியாக்களை உருவுவது பெரிய குற்றமே இல்லை என்ற மனநிலை இங்கே வந்துவிட்டது. ஆனால் சுவாரஸ்யமாகச் செய்திருக்கிறார் அதை என்பது உங்கள் விமர்சனத்திலிருந்து புரிகிறது. என்ன செய்ய...? இயக்குனர் இவ்வளவு பாடுபட்டதெல்லாம் விஷாலுக்கு இறைத்த நீர் என்கிறீர்கள். ஹி... ஹி...
[[[ராம்ஜி_யாஹூ said...
போலீஸ் கமாண்டர் சம்பத்தும் தமிழ்நாட்டுக்காரராகவே இருக்கிறார்.(இங்க லாஜிக்கெல்லாம் பார்க்கவே கூடாது..)]]]
ஆஹா.. ராம்ஜியண்ணே.. இப்பத்தான் எனக்குத் தோணுது.. நான்தான் தவறாகக் குறிப்பிட்டிருக்கிறேன் என்று..! குறிப்பிட்டமைக்கு மிக்க நன்றிகள்..!
[[[Geneva Yuva said...
//அண்ணன் எஸ்.ராமகிருஷ்ணனின் வசனத்தில் வில்லன்களின் கதை வர்ணனை மிகப் பொருத்தமாக, ஏற்புடையதாக, லாஜிக் பார்க்க விடாமல் இருந்தது..! பெண்கள் குடிக்கக் கூடாதுன்னு யார் சொன்னது என்று பெண்ணியத்திற்காக வக்காலத்து வாங்கியிருக்கும் எஸ்.ரா.வுக்கு எனது பாராட்டுக்கள்.. திரிஷாவை குடிக்கவும் வைத்திருக்கிறார்கள். அதற்கும் ஒரு நியாயமான காரணங்களை அதே இடத்தில் சொல்லியும் இருக்கிறார்கள்..! திரைக்கதை, இயக்கம் இதைத் தாண்டிச் சென்றுவிடாமல் வசனங்களை ஒரு அளவுக்குள் எழுதியிருக்கிறார் எஸ்.ரா..! //
சமரசம் பண்ணிக்கலாம் திரைக்கதையால்!]]]
விறுவிறுப்பான திரைக்கதையாலும், எளிமையான வசனங்களினாலும் படத்தில் இத்தனை டிவிஸ்ட்டுகள் இருந்தும் குழப்பமில்லாமல் இருக்கிறது..!
[[[நம்பள்கி said...
சுருக்கமாக கதை எழுதினால் நல்லா இருக்கும்; இல்லை விழலுக்கு இரைத்த நீர். பாதி கதை படித்சு விட்டு தூங்கிட்டேன்...! எந்த உழைப்பும் வீணாகக் கூடாது என்ற அக்கரியினால் இன்ட்டிஹா கிண்டல்!]]]
நான்தான் சொல்லிட்டனே..? எதுக்காக முழுக் கதையையும் சொல்லியிருக்கேன் என்று..! இப்போ மிச்சத்தையும் படிச்சு முடிங்கண்ணே..!
[[[Ponmalar S said...
When reading ur article, i feel as a good crime novel. I have to go for this visual treat. Thanks sir for ur review.]]]
அவசியம் பாருங்க மேடம்..! வருகைக்கு நன்றி..!
[[[Unknown said...
Sir - This movie's story seems to be inspired(let us not say copied) from the Hollywood movie `The Game' Michael Douglas the hero would have given life to this movie. Since you have seen Samar try to watch this English movie. Excellent one.]]]
ஓகே.. ஓகே.. நானும் ஜாக்கிரதையாக "கதைக் கரு" மட்டுமே எடுத்தாளப்பட்டிருப்பதாகச் சொல்லியிருக்கிறேன்..!
[[[Sathish Kumar Uthanda said...
Yes The Game Movie theme has been copied.]]]
தகவலுக்கு மிக்க நன்றிகள் நண்பரே..!
[[[பால கணேஷ் said...
சரி.. சரி... வெளிநாட்டுப் படங்களிலிருந்து ஐடியாக்களை உருவுவது பெரிய குற்றமே இல்லை என்ற மனநிலை இங்கே வந்துவிட்டது. ஆனால் சுவாரஸ்யமாகச் செய்திருக்கிறார் அதை என்பது உங்கள் விமர்சனத்திலிருந்து புரிகிறது. என்ன செய்ய...? இயக்குனர் இவ்வளவு பாடுபட்டதெல்லாம் விஷாலுக்கு இறைத்த நீர் என்கிறீர்கள். ஹி... ஹி...]]]
ஹி.. ஹி.. என்னத்த செய்ய..? என்ன முயற்சித்தும் விஷால் மனசுக்குள் ஒட்ட மறுக்கிறாரே..? வருகைக்கு நன்றிகள் ஸார்..!
ஒரு த்ரில்லர் கதையை முழுக்கச் சொல்லிவிட்டால் பார்ப்பவர்களுக்கு சுவராசியம் போய்விடுமே! 90 விழுக்காடு கதையை ச்சொல்லி விட்டு, மீ திமட்டும் விமர்சனமா? சமர் என்றால் என்ன பொருள் என்று சொல்லவேயில்லை. தெரிந்தால் சொல்லவும்.
நானும் படம் பார்த்தேன். கதை புதுமையான மேஜிக் ரியலிசம் வகையைச்சார்ந்தது. தெலுங்கு மாவீரனைப்போல. வரவேற்க வேண்டும். சினிமா ஒரு கலையென்றால், (சில நேரங்களில்) அதில் இதுவும் அடங்கும். த்ரிஷாவின் வயது மட்டுமன்று; அவரின் நடிப்பு நல்ல முதிர்ச்சியைக்காட்டுகிறது. விஷாலைப்பற்றிச்சொன்னது சரி: நடிப்பில் ஒரே சாயல் படம் முழுவது. ஆட்டங்கள் புளித்த மாவுபோல. அதற்காக கொரியோக்ராபரைத்தான் பிடித்து ஆட்ட வேண்டுமில்லையா? விசால் என்ன செய்வார்?
(அண்ணே தம்பி அக்கா தங்கச்சி என்றெல்லாம் என்னை அழைக்கவேண்டாமெனக் கேட்டுக்கொள்கிறேன்
பொங்கல் வாழ்த்துகள்.)
this movie is rip off of the game for sure.(the game is like cult classic Michael Douglas and sean penn acting in the movie was amazing)
i think you guys should watch the original movie then you will know how crappy our movie makers kill the movie.
அண்ணே தலையே சுத்துது
அண்ணே இது அப்படியே தி கேம் ஆங்கிலப்படத்தின் படத்தின் உட்டாலக்கடி.
அண்ணே இது அப்படியே தி கேம் ஆங்கிலப்படத்தின் படத்தின் உட்டாலக்கடி.
அண்ணாச்சி,
ஒரு படத்துல உலகமகா சஸ்பெண்சு வச்சிருக்கிறதா நினைச்சு ஒரு இயக்குனர் சந்தோஷப்பட்டிறக்கூடாதே, உடனே முழுக்கதையும் எழுதி, படத்துல சஸ்பெண்சுலாம் ஒன்னும் பெருசா இல்லைனு வெட்ட வெளிச்சம் ஆக்கிடுங்க, விளங்கிடும் தமிழ் சினிமா, இந்த லட்சணத்துல தமிழ் சினிமா அழியப்போவுதுன்னு சோசியம் வேற சொல்லுங்க, இதே போல முழுக்கதையும் சொல்லிக்கிட்டே இருந்தா தியேட்டார் போற கொஞ்ச நஞ்ச கூட்டமும் காணாமல் போயிடும்ணே :-))
ஏன் சார் திருந்த மாட்டிங்களா?
அவனவன் கோடிக்கணக்கா காசு செலவழித்து படம் எடுப்பான் படம் வெளிவந்து ரெண்டு நாள்லயே கதை முழுவதையும் சொல்லுவிங்க உங்க பிளாக் படிக்கிறவன் எல்லானும் கேனப்பயலுகள்னு நினைச்சிட்டிங்களா இதெல்லாம் படிச்சிட்டு படம் பார்த்தா எங்கே சுவாரசியம் இருக்க போகுது What a fu**ing Review This.. என்ன மண்ணாங்கட்டிக்கு "சினிமா விமர்சனம்" என தலைப்பு சினிமா கதைன்னு வைக்கலாமே! எந்தப்படத்த சுட்டு எடுத்தாங்கன்னு தெரிஞ்சு என்னப்பன்னப்போறீங்க? கதை எழுதாம விமர்சனம் பண்ண தெரியாதுன்னா மூடிக்கிட்டு இருக்க வேண்டியதுதானே!
[[[குலசேகரன் said...
ஒரு த்ரில்லர் கதையை முழுக்கச் சொல்லிவிட்டால் பார்ப்பவர்களுக்கு சுவராசியம் போய்விடுமே! 90 விழுக்காடு கதையை ச்சொல்லி விட்டு, மீதி மட்டும் விமர்சனமா? சமர் என்றால் என்ன பொருள் என்று சொல்லவேயில்லை. தெரிந்தால் சொல்லவும்.]]]
சமர் என்றால் போர் என்று அர்த்தம்..! நான்தான் சொன்னனே.. ஒரிஜினல் கதை எது என்று தெரிந்து கொள்ளவே எழுதியிருக்கிறேன் என்று..!
[[[நானும் படம் பார்த்தேன். கதை புதுமையான மேஜிக் ரியலிசம் வகையைச் சார்ந்தது. தெலுங்கு மாவீரனைப்போல. வரவேற்க வேண்டும். சினிமா ஒரு கலையென்றால், (சில நேரங்களில்) அதில் இதுவும் அடங்கும். த்ரிஷாவின் வயது மட்டுமன்று; அவரின் நடிப்பு நல்ல முதிர்ச்சியைக் காட்டுகிறது. விஷாலைப் பற்றிச் சொன்னது சரி: நடிப்பில் ஒரே சாயல் படம் முழுவது. ஆட்டங்கள் புளித்த மாவுபோல. அதற்காக கொரியோக்ராபரைத்தான் பிடித்து ஆட்ட வேண்டுமில்லையா? விசால் என்ன செய்வார்?]]]
அதான் நமக்குப் பிடிச்சு சாபக்கேடு..!
[[[Unknown said...
this movie is rip off of the game for sure.(the game is like cult classic Michael Douglas and sean penn acting in the movie was amazing) i think you guys should watch the original movie then you will know how crappy our movie makers kill the movie.]]]
தகவலுக்கு மிக்க நன்றி நண்பரே..!
[[[சக்கர கட்டி said...
அண்ணே தலையே சுத்துது.]]]
படம் பாருங்க.. இன்னும் அதிகமாக சுத்தும்..!
[[[கதிர் said...
அண்ணே இது அப்படியே தி கேம் ஆங்கிலப் படத்தின் படத்தின் உட்டாலக்கடி.]]]
அதையாவது உருப்படியா செஞ்சாங்களே.. அதுவரைக்கும் சந்தோஷம்..!
[[[வவ்வால் said...
அண்ணாச்சி, ஒரு படத்துல உலக மகா சஸ்பெண்சு வச்சிருக்கிறதா நினைச்சு ஒரு இயக்குனர் சந்தோஷப்பட்டிறக் கூடாதே, உடனே முழுக்கதையும் எழுதி, படத்துல சஸ்பெண்சுலாம் ஒன்னும் பெருசா இல்லைனு வெட்ட வெளிச்சம் ஆக்கிடுங்க, விளங்கிடும் தமிழ் சினிமா, இந்த லட்சணத்துல தமிழ் சினிமா அழியப் போவுதுன்னு சோசியம் வேற சொல்லுங்க, இதே போல முழுக் கதையும் சொல்லிக்கிட்டே இருந்தா தியேட்டார் போற கொஞ்ச நஞ்ச கூட்டமும் காணாமல் போயிடும்ணே :-))]]]
ஆமாமாம்.. தியேட்டருக்கு போறவங்கள்லாம் பிளாக் படிச்சுட்டுத்தான் போறாங்க பாருங்க.. தியேட்டர் காத்தாட.. ஒரு 500 பேர் படிக்கிறாங்கன்றது்ககாக இப்படியெல்லாம் பில்டப் பண்ணக் கூடாதுண்ணே..!
[[[Rizi said...
ஏன் சார் திருந்த மாட்டிங்களா?
அவனவன் கோடிக்கணக்கா காசு செலவழித்து படம் எடுப்பான் படம் வெளிவந்து ரெண்டு நாள்லயே கதை முழுவதையும் சொல்லுவிங்க உங்க பிளாக் படிக்கிறவன் எல்லானும் கேனப்பயலுகள்னு நினைச்சிட்டிங்களா இதெல்லாம் படிச்சிட்டு படம் பார்த்தா எங்கே சுவாரசியம் இருக்க போகுது What a fu**ing Review This.. என்ன மண்ணாங்கட்டிக்கு "சினிமா விமர்சனம்" என தலைப்பு சினிமா கதைன்னு வைக்கலாமே! எந்தப்படத்த சுட்டு எடுத்தாங்கன்னு தெரிஞ்சு என்னப்பன்னப்போறீங்க? கதை எழுதாம விமர்சனம் பண்ண தெரியாதுன்னா மூடிக்கிட்டு இருக்க வேண்டியதுதானே!]]]
நான்தான் முதல் பாராலேயே சொல்லியிருக்கனே.. முழுக் கதையையும் எழுதியிருக்கேன். இஷ்டம்ன்னா படிங்க. இல்லாட்டி போயிருங்கன்னு..! அப்புறமென்ன..?
முன்னாலேயே கொலை பண்ணப் போறேன் அல்லது ரேப் பண்ணப் போறேன் என்று சொல்லிட்டு செய்தால் குற்றம் குற்றமில்லையா? இப்படி முழுக்கதையையும் எழுதுவதா விமர்சனம்.
[[[மன்சி (Munsi) said...
முன்னாலேயே கொலை பண்ணப் போறேன் அல்லது ரேப் பண்ணப் போறேன் என்று சொல்லிட்டு செய்தால் குற்றம் குற்றமில்லையா? இப்படி முழுக் கதையையும் எழுதுவதா விமர்சனம்.]]]
நான்தான் அதற்கான காரணத்தை முதல் பாராவுலேயே சொல்லியிருக்கனே..? பிறகென்ன ஸார்..?
அண்ணாச்சி,
நல்லாவே சமாளிக்கிறிங்க :-))
இதே போல லோகநாயகர் படத்துக்கும் முழு கதைய சொல்லி ,இதன் ஒரிஜினல் என்னனு கேளுங்களேன், நானே வந்து புட்டு புட்டு வைக்கிறேன் :-))
எனக்கு தெரிந்த வரையில் நேஷனல் ஜியோகிரபி சேனலில் வந்த ஒரு டாகுமெண்டரியை சுட்டு தான் படமே, அந்த டாகுமெண்டரி ஒரு நாவலின் அடிப்படையில் :-))
படம் பார்க்காம கதைய பத்தி பேசக்கூடாதுன்னு சும்மா இருக்கோம், ஏன்னா லோகநாயகர் பல படங்கள், சோர்ஸ்ல இருந்து பிச்சுப்போட்டும் எடுப்பார் ,நாம ஒரு பேர சொல்லி மொக்கையாகிடக்கூடாதுல்ல, எனவே படம் வரட்டும் ஆராய்ச்சி செஞ்சிடுவோம் :-))
எதுக்கும் "zero dark thirty" film பார்த்து வச்சுக்குங்க உதவும் :-))
அந்த படத்தின் நல்ல டிவிடி கேட்டு இருக்கேன் ,பார்த்துட்டு சொல்கிறேன்.
Anne,
This is not a complete copy of "The Game". The main theme was copied from the 1983 movie "Trading Places". 2 rich bothers betting that a man's success coming from the the way they grow up or not. So they dump one well settled guy and give more money to an another poor thief. And they started betting whether they will commit suicide or kill each other. As per the story you wrote here its look like 50-50 mixed cocktail of "Trading Places" and "The Game". See more on IMDB
Trading Places
The Game
I have seen both movies but yet to see "Samar". But according to the story you wrote here i can assure you that this is the perfect 50-50 combination of these two movies.
உங்களுடைய எந்த காரணமும் நியாயமாகாது. ஒரு படத்தின் கதையை எழுதுவது (அதுவும் புதுப் படத்தின் கதை) நியாயமில்லை. மற்றவனின் உழைப்பில் மண் அள்ளிப்போடும் ஒரு பிழைப்பும் பிழைப்பா
[[[வவ்வால் said...
அண்ணாச்சி, நல்லாவே சமாளிக்கிறிங்க:-)) இதே போல லோகநாயகர் படத்துக்கும் முழு கதைய சொல்லி, இதன் ஒரிஜினல் என்னனு கேளுங்களேன், நானே வந்து புட்டு புட்டு வைக்கிறேன் :-))]]]
செஞ்சிருவோம்.. கவலையை விடுங்க..!
[[[எனக்கு தெரிந்தவரையில் நேஷனல் ஜியோகிரபி சேனலில் வந்த ஒரு டாகுமெண்டரியை சுட்டுதான் படமே.. அந்த டாகுமெண்டரி ஒரு நாவலின் அடிப்படையில் :-))]]]
எந்தப் படம்..? விஸ்வரூபமா? சமரா..?
[[[படம் பார்க்காம கதைய பத்தி பேசக் கூடாதுன்னு சும்மா இருக்கோம், ஏன்னா லோகநாயகர் பல படங்கள், சோர்ஸ்ல இருந்து பிச்சுப்போட்டும் எடுப்பார். நாம ஒரு பேர சொல்லி மொக்கையாகிடக் கூடாதுல்ல. எனவே படம் வரட்டும் ஆராய்ச்சி செஞ்சிடுவோம் :-))]]]
நல்லது.. நல்லது.. 25-வரைக்கும் கொஞ்சம் காத்திருங்கண்ணே..!
[[[எதுக்கும் "zero dark thirty" film பார்த்து வச்சுக்குங்க உதவும் :-))
அந்த படத்தின் நல்ல டிவிடி கேட்டு இருக்கேன். பார்த்துட்டு சொல்கிறேன்.]]]
நீங்க பார்த்திட்டு சொல்லுண்ணே.. தெரிஞ்சுக்குறேன்..!
[[[Stock said...
Anne, This is not a complete copy of "The Game". The main theme was copied from the 1983 movie "Trading Places". 2 rich bothers betting that a man's success coming from the the way they grow up or not. So they dump one well settled guy and give more money to an another poor thief. And they started betting whether they will commit suicide or kill each other. As per the story you wrote here its look like 50-50 mixed cocktail of "Trading Places" and "The Game". See more on IMDB
Trading Places
The Game
I have seen both movies but yet to see "Samar". But according to the story you wrote here i can assure you that this is the perfect 50-50 combination of these two movies.]]]
தகவலுக்கு மிக்க நன்றிகள் நண்பரே..! நேரமிருப்பின் நிச்சயம் இந்தப் படத்தையும் பார்த்தர்றேன்..!
[[[மன்சி (Munsi) said...
உங்களுடைய எந்த காரணமும் நியாயமாகாது. ஒரு படத்தின் கதையை எழுதுவது (அதுவும் புதுப் படத்தின் கதை) நியாயமில்லை. மற்றவனின் உழைப்பில் மண் அள்ளிப் போடும் ஒரு பிழைப்பும் பிழைப்பா?]]]
இதில் எந்தவித குற்றமுமில்லை..! இதைப் படித்துவிட்டுத்தான் லட்சக்கணக்கானோர் படம் பார்க்காமல் இருக்கப் போகிறார்களா..? என் தளத்தை அதிகம் 4000 பேர்தான் ஒரு பதிவினைப் படிக்கிறார்கள். இதில் அதிகம்பேர் வெளிநாட்டில் இருக்கிறார்கள். அங்கே அதிகம் பேர் டோரண்ட் டவுன்லோடு.. தமிழ்நாட்டில் இருப்பவர்களில் ஒரு 10 பேர் மட்டும் போகாமல் இருக்கலாம்.. இதனால் இந்தப் படத்தின் வசூல் எந்தவிதத்திலும் கூடவே, குறையவோ போவதில்லை..!
அண்ணாச்சி,
சமருக்கா நான் நேஷனல் ஜியாகிரபி டாகுமெண்டரி ரெபரென்ஸ் சொல்லப்போறேன், எல்லாம் லோகநாயகர் படத்துக்கு தான், டிரெய்லர் வச்சு குன்சா, ஒரு பின்லேடன் பத்திய நாவலும், டாகுமெண்டரியும் நியாபகம் வருது ,அதை சொன்னேன்.
நம்மாளு எல்லாத்தையும் கொத்துக்கறிப்போட்டு படம் எடுப்பதில் சூறர் :-))
தசாவதாரம் படம் ,டாவின்சி கோட் நாவலை துகிலுறுஞ்சி எடுத்தப்படம்னு சொன்னால் நம்பவா போறிங்க :-))
ஆனால் இதுக்கெல்லாம் பயோவார் என்ற விதையையை லோகநாயகர் வச்சு கலைஞனு படம் எடுத்த ஜி.பி.விஜய் என்ற இயக்குனர் போட்டார்னு சொன்னால் புரியுமா?
நாளைய செய்தினு பிரபு வச்சு ஒரு படம் எடுத்தார் ஜி.பி.விஜய்,அதில் பயோவார் தான் கான்செப்ட், அப்போவே லொகநாயகரிடம் சொன்னது தான் எல்லாம், அவரை வச்சு பின்னர் கலைஞன் படம் எடுத்தார்.
பயோவார் கான்செப்டை தூக்கி டாவின்சி கோட்டில் போட்டால் , தசாவதாரம் :-))
[[[வவ்வால் said...
அண்ணாச்சி, சமருக்கா நான் நேஷனல் ஜியாகிரபி டாகுமெண்டரி ரெபரென்ஸ் சொல்லப் போறேன், எல்லாம் லோகநாயகர் படத்துக்குதான், டிரெய்லர் வச்சு குன்சா, ஒரு பின்லேடன் பத்திய நாவலும், டாகுமெண்டரியும் நியாபகம் வருது , அதை சொன்னேன். நம்மாளு எல்லாத்தையும் கொத்துக் கறிப் போட்டு படம் எடுப்பதில் சூறர் :-))]]]
அதையாவது நல்லா செய்றாரேன்னு சந்தோஷப்படும் அண்ணாச்சி.. அவரைவிட்டா வேற யாரு இருக்கா இது மாதிரி படங்கள் எடுக்கிறதுக்கு..?
[[[தசாவதாரம் படம், டாவின்சி கோட் நாவலை துகிலுறுஞ்சி எடுத்த படம்னு சொன்னால் நம்பவா போறிங்க :-))
ஆனால் இதுக்கெல்லாம் பயோவார் என்ற விதையை லோகநாயகர் வச்சு கலைஞனு படம் எடுத்த ஜி.பி.விஜய் என்ற இயக்குனர் போட்டார்னு சொன்னால் புரியுமா? நாளைய செய்தினு பிரபு வச்சு ஒரு படம் எடுத்தார் ஜி.பி.விஜய்.அதில் பயோவார்தான் கான்செப்ட், அப்போவே லொகநாயகரிடம் சொன்னதுதான் எல்லாம், அவரை வச்சு பின்னர் கலைஞன் படம் எடுத்தார். பயோவார் கான்செப்டை தூக்கி டாவின்சி கோட்டில் போட்டால், தசாவதாரம் :-))]]]
உங்களை மாதிரி முடியுமாண்ணே..? நானெல்லாம் இதுல எல்.கே.ஜி.. டாவின்ஸி கோட் படிக்கிற அளவுக்கெல்லாம் நமக்கு ஆங்கில அறிவு இல்ல அண்ணாச்சி..! நாம அதுல கை நாட்டுதான்..! அதாகவே இருந்தாலும் தசாவதாரம் கமலின் சினிமா வாழ்க்கையில் ஒரு மைல் கல்.. அவரைப் போல இன்னொரு கலைஞன் இல்லவே இல்லை..!
அண்ணாச்சி,
//நானெல்லாம் இதுல எல்.கே.ஜி.. டாவின்ஸி கோட் படிக்கிற அளவுக்கெல்லாம் நமக்கு ஆங்கில அறிவு இல்ல அண்ணாச்சி..! நாம அதுல கை நாட்டுதான்..!
//
ஊடகத்துறையில உட்கார்ந்துக்கிட்டு இப்படில்லாம் பேசுங்க, வெளிநாட்டில ஊடகத்துறையில இருக்கவங்க தான் டாப் செல்லிங் புக்ஸ் எழுதுறாங்க, நீங்க சினிமா விமர்சனத்தோட நிறுத்துக்கிறிங்க, வித்தியாசமான கருத்துக்களை தேடி பதிவு செய்து ,அப்படியே புத்தகமாவும் போட்டா ,புலிட்சர் விருதுலாம் உங்களை தேடி வரும்!!!
இந்த சுட்டிய பாருங்க, பீட்டர் ப்ர்ஜென் என்பவர் தான் முதலில் ஒசாமா பின்லேடனை பேட்டி எடுத்து வெளியிட்டு மேற்குலௌ அறிய வச்சார், அவர் எடுத்த டாக்குமெண்டரி, நூல்கள் தான் ஓசமாவைப்பற்றி அனைவரும் முழுசாக அறிய வச்சது, அல்ஜசீரா எல்லாம் பின்னர் தான்.
பல விருதுகள் வாங்கியவர்.
http://peterbergen.com/biography/
முயற்சி செய்தா தமிழ்நாட்டின் பீட்டர் பெர்ஜென் நீங்க தான்!!!
ஹி...ஹி அவார்டு வாங்குறப்போ ,அன்னிக்கே வவ்வால் சொன்னான்னு நினைச்சு பார்க்கணும் சொல்லிட்டேன் :-))
This guy is paid to write good review aout this movie Samar.
Among Pongal release, Santhanam and Powerstar movie is the most successful one. But no review about that movie.
Samar is okay. Kanna Laddu.. is much better one.
[[[வவ்வால் said...
அண்ணாச்சி,
//நானெல்லாம் இதுல எல்.கே.ஜி.. டாவின்ஸி கோட் படிக்கிற அளவுக்கெல்லாம் நமக்கு ஆங்கில அறிவு இல்ல அண்ணாச்சி..! நாம அதுல கை நாட்டுதான்..!//
ஊடகத் துறையில உட்கார்ந்துக்கிட்டு இப்படில்லாம் பேசுங்க. வெளிநாட்டில ஊடகத் துறையில இருக்கவங்கதான் டாப் செல்லிங் புக்ஸ் எழுதுறாங்க, நீங்க சினிமா விமர்சனத்தோட நிறுத்துக்கிறிங்க, வித்தியாசமான கருத்துக்களை தேடி பதிவு செய்து, அப்படியே புத்தகமாவும் போட்டா, புலிட்சர் விருதுலாம் உங்களை தேடி வரும்!!!]]]
உள்ளூர்லேயே ஒரு பதிப்பாளரும் கிடைக்க மாட்டேன்றாங்க.. இதுல நான் உலக அளவு போய் தேடணுமாக்கும்..!
[[[இந்த சுட்டிய பாருங்க, பீட்டர் ப்ர்ஜென் என்பவர்தான் முதலில் ஒசாமா பின்லேடனை பேட்டி எடுத்து வெளியிட்டு மேற்குலௌ அறிய வச்சார். அவர் எடுத்த டாக்குமெண்டரி, நூல்கள்தான் ஓசமாவைப் பற்றி அனைவரும் முழுசாக அறிய வச்சது. அல்ஜசீரா எல்லாம் பின்னர்தான். பல விருதுகள் வாங்கியவர்.
http://peterbergen.com/biography/]]]
அறிமுகத்திற்கு நன்றிகள்ண்ணே..!
[[[முயற்சி செய்தா தமிழ்நாட்டின் பீட்டர் பெர்ஜென் நீங்கதான்!!!
ஹி... ஹி அவார்டு வாங்குறப்போ , அன்னிக்கே வவ்வால் சொன்னான்னு நினைச்சு பார்க்கணும் சொல்லிட்டேன் :-))]]]
இதான வேண்டாங்கிறது..?
[[[AAR said...
This guy is paid to write good review aout this movie Samar.
Among Pongal release, Santhanam and Powerstar movie is the most successful one. But no review about that movie. Samar is okay. Kanna Laddu.. is much better one.]]]
ஸார்.. பிரஸ் ஷோ என்பது அனைத்து பத்திரிகையாளர்களுக்கும் படத்தை போட்டுக் காட்டுவதுதான்.. அதுக்காக அந்தப் படத்தையெல்லாம் நல்லாயிருக்குன்னு நாங்க சொல்றதில்லை. எங்களுக்குப் பிடிச்சிருந்தால்தான்..!
க.ல.தி.ஆசையாவுக்கு எழுதி வைச்சிருக்கேன். கொஞ்சம் கரெக்ஷன் செய்யணும்.. முடிச்சிட்டு போடுறேன்..!
அண்ணே ...எங்க இருந்து உருவினாலும் ,படம் முதல் அரை மணி நேரத்துக்கு பின்பு முடியும் வரை ஒரு விறுவிறுப்பினை தந்த திரைக்கதைக்காகவே 'திரு'வை பாராட்டலாம் தப்பில்லை :)
//தமிழ்நாட்டில் இருப்பவர்களில் ஒரு 10 பேர் மட்டும் போகாமல் இருக்கலாம்.. இதனால் இந்தப் படத்தின் வசூல் எந்தவிதத்திலும் கூடவே, குறையவோ போவதில்லை..!//
இப்படி எடுத்தேன் கவுழ்த்தேன் என்று பதில் சொல்லுவது பத்திரிகை ஆட்களுக்கு நல்லது அல்ல. அதுவும் பிரபலமாக இருக்கும் எழுத்தாளரிடம் இப்படி ஒரு ஆணவமாக விட்டேறியான பதிலை எதிர் பார்க்கவில்லை. அந்த பத்துப் பேர், தங்கள் குடும்பம் உறவினர், நண்பர்கள் என்று இன்னுமொரு பத்து பேரிடம் சொல்லலாம். அவர்கள் இன்னும் ஒரு பத்து பேருக்கு சொல்லலாம்.
இதே போன்றதொரு கதையுள்ள தமிழ்ப் படத்தை 25 வருடம் முன்பு பார்த்திருக்கேன்.
தேங்காய் சீனிவாசன் ஒரு ரூபாய் பந்தயம் கட்டி ஹீரோவை பைத்தியமக்குவர்.
தூர்தர்ஷனில் பார்த்திருக்கேன்.
[[[Babu Palamalai said...
அண்ணே... எங்க இருந்து உருவினாலும், படம் முதல் அரை மணி நேரத்துக்கு பின்பு முடியும் வரை ஒரு விறுவிறுப்பினை தந்த திரைக்கதைக்காகவே 'திரு'வை பாராட்டலாம் தப்பில்லை :)]]]
நிச்சயமாக..! காப்பி செய்தாலும் அதை நல்லவிதமாக இதுபோல் செய்யலாமே..?
[[[மன்சி (Munsi) said...
//தமிழ்நாட்டில் இருப்பவர்களில் ஒரு 10 பேர் மட்டும் போகாமல் இருக்கலாம்.. இதனால் இந்தப் படத்தின் வசூல் எந்தவிதத்திலும் கூடவே, குறையவோ போவதில்லை..!//
இப்படி எடுத்தேன் கவுழ்த்தேன் என்று பதில் சொல்லுவது பத்திரிகை ஆட்களுக்கு நல்லது அல்ல. அதுவும் பிரபலமாக இருக்கும் எழுத்தாளரிடம் இப்படி ஒரு ஆணவமாக விட்டேறியான பதிலை எதிர் பார்க்கவில்லை. அந்த பத்துப் பேர், தங்கள் குடும்பம் உறவினர், நண்பர்கள் என்று இன்னுமொரு பத்து பேரிடம் சொல்லலாம். அவர்கள் இன்னும் ஒரு பத்து பேருக்கு சொல்லலாம்.]]]
ஆணவப் பதில் இல்லை. இதுவே உண்மையும்கூட.. உங்களுக்கு புரிதல் இல்லையெனில் அதற்காக பெரிதும் வருந்துகிறேன்..!
[[[panasai said...
இதே போன்றதொரு கதையுள்ள தமிழ்ப் படத்தை 25 வருடம் முன்பு பார்த்திருக்கேன். தேங்காய் சீனிவாசன் ஒரு ரூபாய் பந்தயம் கட்டி ஹீரோவை பைத்தியமக்குவர். தூர்தர்ஷனில் பார்த்திருக்கேன்.]]]
நமது பழங்கதைகளில்கூட உண்டு.. புத்தகங்களில் உள்ளதை எடுத்தாண்டிருக்கிறார்கள். முன்பே வந்திருக்கும். நம்து ஆள்களுக்குத் தெரிய வாய்ப்பில்லை. இப்போது இங்கே அது பதிவு செய்யப்பட்டுள்ளது. இன்னும் 20 வருடங்கள் கழித்து இது போன்ற படம் வரும்போது இந்தப் பதிவும், நீங்களும் நானும் வெளிப்படுவோம்..!
Post a Comment