16-01-2013
என் இனிய வலைத்தமிழ் மக்களே..!
மாதத்திற்கு ஒரு படம் எடுக்கும் அளவுக்கு பணப்பையுடன் செஷல்ஸ் தீவில் இருந்து கோடம்பாக்கத்தில் கால் பதித்திருக்கும் பெரும் கோடீஸ்வரப் பெருமான் வி.ராமதாஸின் முதல் தயாரிப்பு இது..!
சின்னத்திரை நடிகர் விஜய் ஆதிராஜ் பெரிய திரையில் நடிக்க விரும்பாமல் இயக்க விரும்பி அதனை முனைப்போடு செய்திருக்கும் முதல் படம் இது..! கொஞ்சம் கொஞ்சம் சீரியல்தன்மையோடு வித்தியாசமான கதைக்களனோடு தன்னால் முடிந்த அளவுக்கு எடுத்திருக்கிறார்.. நிச்சயம் மோசமில்லை..!
தனது காதலிக்காக வேண்டி லைப்ரரியில் காந்தியின் சத்திய சோதனை புத்தகத்தை எடுக்கிறார் ஹீரோ சத்யா. அந்தப் புத்தகத்திற்குள் இருக்கும் ஒரு பேப்பரில் பெருமளவுக்கு பணம் கல்லறையில் ஓரிடத்தில் புதைக்கப்பட்டிருப்பதை அறிந்து தனது அறை நண்பர்களுடன் சேர்ந்து அதனை கைப்பற்றுகிறார். இன்னொரு பக்கம் இந்தப் பணத்துக்குச் சொந்தக்காரரான முன்னாள் அமைச்சர் இமயப்பன், கில்லாடியான ஜெகபதிபாபு மூலமாக பணத்தைத் தேடியலைகிறார்... பணம் இமயப்பன் கைக்குக் கிடைத்ததா இல்லையா என்பதுதான் கதை..!
ஆர்யாவின் தம்பி சத்யாதான் ஹீரோ. நடிக்கவே தேவையில்லாத இது போன்ற படங்களில்தான் அறிமுகமாக முடியும் என்பதால் கனகச்சிதமாக இந்தப் படத்தைத் தேர்வு செய்திருக்கிறார்..! படத்தில் இவருக்கென்று பெரிய பேக்கிரவுண்ட் இல்லை என்றாலும், மற்ற நண்பர்களில் சந்தானபாரதியின் மகனான சஞ்சய் பாரதிக்கு சீரியல் சோகத்துடன் கூடிய கதை உண்டு.. அது நடுநடுவே ஆடியன்ஸின் கண்ணை குளமாக்க வேண்டும் என்பதற்காகவே செய்திருக்கிறார்கள் போலும்..
சத்யா, சஞ்சய் பாரதிகளுக்கு இன்னும் ஒரு பெரிய ரவுண்டு கிடைத்தால் வரலாம்..! இங்கே புதுமுக நடிகர்கள் யார், எப்படி ஹிட்டடிக்கிறார்கள் என்றே தெரியவில்லை..! ஏதோ ஒரு படத்தில் கிளிக்காகி நல்ல இயக்குநர்களின் கண்ணில் பட்டு, அவர்களது இயக்கத் திறமையினால் மேம்பட்டால்தான் உண்டு..! முயற்சி செய்யட்டும்..!
ஹீரோயினாக ரகுல் பரீத்..! அறிமுகம் என்று சொல்ல முடியாத அளவுக்கு நடிப்புடன், மிகச் சரியான முறையில் டயலாக் டெலிவரியையும் செய்திருக்கிறார்..! வெல்டன்.. அழகு என்று சொல்ல முடியவில்லை என்றாலும் ஏதோ ஒரு கோணத்தில் ஸ்கிரீனில் புதுமையாகத் தோன்றுகிறார்..! பாராட்டுக்கள்..!
சீரியல்களில் பெருமளவு பணியாற்றியிருப்பதால் சீரியல் தன்மையுடனேயே கேரக்டர் ஸ்கெட்ச், அறிமுகங்களுடன் திரைக்கதையையும் அமைத்திருக்கிறார் விஜய் ஆதிராஜ். மனோபாலா இல்லாத புதுமுக இயக்குநர்களின் படங்கள் தமிழ்ச் சினிமாவில் வரவே வராது போலிருக்கிறது..! இதிலும் அவருக்கென்றே ஒரு கரைச்சல் கேரக்டரை கொடுத்து மனோபாலாவை நிறுத்தியிருக்கிறார் இயக்குநர்..!
ஹீரோயின் சத்யாவிடம் பிரண்ட்ஷிப்பை பிரபோஸ் செய்ய ஹோட்டலுக்கு வரவழைத்து பேசுவதும்.. கிப்ட் கொடுப்பதும்.. அங்கிருந்து போக மனசில்லாமல் திரும்பி வரும் காட்சியும் செம ரசனை.. எனக்கு இந்தப் படத்தில் மிகப் பிடித்தமான காட்சியாக இருந்தது இது..! பர்ஸ்ட் பிரெண்ட்ஷிப்.. நெக்ஸ்ட் பிடிச்சிருந்தா லவ்.. என்ற இந்த பார்மெட்டும் இன்றைய இளசுகளுக்குத் தேவையாகத்தான் இருக்கிறது..!
சிற்சில லாஜிக் மீறல்களே படத்தின் நம்பகத்தன்மையை குறைக்கிறது என்று சொல்ல வேண்டும்..! தந்தி டிவியில் வெளியாகும் கவுன்சிலரின் ஊழல் பற்றிய செய்தியே முதலில் கொஞ்சம் நகைச்சுவை.. அமைச்சர் லெவல்.. முதல் அமைச்சர் லெவல்.. பிரதமர் லெவலுக்கெல்லாம் ஊழல் பெருச்சாளி பெரிசாகியிருக்கும், இன்றைய நிலையில் சாதாரண கவுன்சிலர் ஊழலை பெரிதாகக் காட்டுவது கேலியாகிவிட்டது.. அதைவிட கூத்து ஸ்டூடியோவில் இருந்து பேசும் செய்தி வாசிப்பாளர் தனது சக ரிப்போர்ட்டரிடமே “கவுன்சிலரின் ஊழலை உங்களால் நிரூபிக்க முடியுமா?” என்று நேரலையில் கேட்பதுதான்..! வசனகர்த்தா மேலும் ஒரு முறை தான் எழுதியதை படித்துப் பார்த்துவிட்டு ஸ்கிரிப்ட்டை ஷூட்டிங்குக்கு அனுப்பியிருக்கலாம்..!
இந்தக் கவுன்சிலர் ரிப்போர்ட்டர் மீதான பகையை மறக்காமல் பாலோ செய்ய வைத்து இடைவேளைக்கு பின்பு ஜெகபதிபாபுவின் விரட்டலுடன் இணையும்படி திரைக்கதை அமைத்தது பக்கா சினிமா. ஆனால் இது ரொம்ப வருஷத்துக்கு முந்தைய திரைக்கதை என்பதால் டல்லடிக்கிறது..! ஜெகபதிபாபுவின் கேரக்டரை மிகப் பெரிய டானாக காட்டியிருப்பதும் ஏமாற்றம்தான்.. துணைக்கு ஒரு கராத்தே மாஸ்டர் போன்ற பெண்ணை வைத்துக் கொண்டு மட்டுமை தில்லாலங்கடி வேலையை ஜெகபதி பாபு செய்கிறார் என்பதையே முதலில் நம்ப முடியவில்லை..
ஜெகபதிபாபு, தலைவாசல் விஜய்யின் பெங்களூர் நண்பரை முதலில் எப்படி கண்டுபிடிக்கிறார் என்பதே புரியவில்லை.. ஆனாலும் தைரியமாக பாரில் சண்டையிட்டு அவரிடம் உண்மையை வரவழைப்பதும், பாத்திமா பாபுவின் வீட்டிற்கு சென்று அவரது மகனை அடித்து உதைப்பதும், லைப்ரரிக்கு சென்று தான் ஒரு சிபிசிஐடி போலீஸ் என்று புரூடா விடுவதும் நல்ல புரூடாக்கள்..! லாஜிக் எங்கிட்டு எங்கிட்டோ உதைக்குது..! இதுதான் இப்படியென்றால், சஞ்சய் பாரதி வேலை செய்யும் கூரியர் ஆபீஸில் வேலை செய்யும் பெண் நண்பி எப்படி பாரதியுடன் டூயட் பாடும் அளவுக்கு லவ்வரானார் என்பதும் தெரியவில்லை..! ஒரே காட்சியில் அவருக்கு பிரமோஷனா..?
கெட்ட அமைச்சராக சுரேஷும், அவருடைய நண்பராக தலைவாசல் விஜய்யும் கொஞ்சமே நடித்திருக்கிறாகள். கிளைமாக்ஸில் தன் பணம் பறிபோன துக்கத்தில் சுரேஷ் செய்யும் அலம்பல்கள் மட்டும் ஓகே.. தண்ணியடித்த சலம்பலில்தான் சிலருக்கு நடிப்பு வருமோ..?
ஜேம்ஸ் வசந்தனின் இசை. அவ்வளவுதான்..! வழக்கம்போல பாடல்கள்.. எதுவும் மனதில் ஒட்டவில்லை.. ஒளிப்பதிவாளருக்கு செம வேலை போலிருக்கிறது.. காட்சிக்கு காட்சிக்கு கிரேன் ஷாட்டுகளை வைத்து கொளுத்தியிருக்கிறார்..! சில, பல இடங்களில் கேமிராவின் கோணம் பார்க்கவே அழகாக இருக்கிறது..! மிகச் சிரமப்பட்டு திருவல்லிக்கேணி மேன்ஷன் பகுதிகளில் ஷூட்டிங்கை நடத்தியிருக்கிறார்கள்..! புதுமுக இயக்குநர் என்றாலும் ஓரளவுக்கு ஒரு நல்ல கமர்ஷியல் சினிமா என்று சொல்லும் அளவுக்கு படத்தை எடுத்திருக்கிறார் விஜய் ஆதிராஜ்.. அவருக்கு எனது பாராட்டுக்கள்..!
புத்தகம் - ஒரு முறை படிக்கலாம்..!
|
Tweet |
18 comments:
சினிமா விமர்சனமா..நான் ஏதோ புத்தக விமர்சனமா இருக்கும்னு வந்தேன்...பரவாயில்லை..புது இயக்குனர்களை உற்சாகப்படுத்த உங்களை போன்றவர்களின் விமர்சனம் நன்றுதான்...
அண்ணாச்சி,
//கூரியர் ஆபீஸில் வேலை செய்யும் பெண் நண்பி எப்படி பாரதியுடன் டூயட் பாடும் அளவுக்கு லவ்வரானார் என்பதும் தெரியவில்லை..! ஒரே காட்சியில் அவருக்கு பிரமோஷனா..?
//
நீங்க ஆங்கிலப்படங்கள் எல்லாம் பார்த்தும் , இப்படியே இருக்கீங்களே, பல படங்களில் ,ஹீரோ,ஹீரோயின் எப்படி அறிமுகம் ஆகி, பழக்கம் ஆனாங்கன்னே காட்டாமல் ஒரு காட்சியில் பேசிக்கிறாப்போல காட்டிட்டு அடுத்தக்காட்சியில் படுக்கையறையை காட்டிடுவாங்க :-))
அது போல தான் ,பெண் நண்பி, ஏற்கனவே பழக்கம்,லவ்னு எடுத்துக்கணும்.
ஹி..ஹி தமிழ் சினிமாவில் படுக்கையறை காட்சி வைக்க முடியாதுன்னு டூயட் :-))
எல்லாவற்றுக்கும் எஷ்டாபிளிஷ்மெண்ட் காட்சிகள் வைத்து கதையை சொல்வது தான் ரொம்ப பழைய பாணி.
பெரும்பாலான இயக்குனர்கள் ஆங்கிலப்படத்தாங்கங்களால் தான் தற்போது படம் இயக்க வருவதால் ,இப்படியான படங்கள் தான் தமிழிலும் வரும் :-))
ஆனால் இந்த வகை கதையே ரொம்ப பழசு என்பதை நீங்க குறிப்பிடாமல் போயிட்டிங்க :-))
ஒரு பெரும்புள்ளியின் ரகசியம்,அல்லது பொருள் ஒரு சாமனியன் கையில் சிக்கிடும்,அதனை தேடி ஒரு கேங்க் அலைவது இதான் அடிப்படை கதை :-))
கோயன் பிரதர்சின் .. No country for old men film இந்த format கதையில கிளாசிக் வகை.
[[[கோவை நேரம் said...
சினிமா விமர்சனமா. நான் ஏதோ புத்தக விமர்சனமா இருக்கும்னு வந்தேன். பரவாயில்லை. புது இயக்குனர்களை உற்சாகப்படுத்த உங்களை போன்றவர்களின் விமர்சனம் நன்றுதான்.]]]
புரிந்து கொண்டமைக்கு மிக்க நன்றிகள் ஸார்..!
[[[வவ்வால் said...
அண்ணாச்சி,
//கூரியர் ஆபீஸில் வேலை செய்யும் பெண் நண்பி எப்படி பாரதியுடன் டூயட் பாடும் அளவுக்கு லவ்வரானார் என்பதும் தெரியவில்லை..! ஒரே காட்சியில் அவருக்கு பிரமோஷனா?//
நீங்க ஆங்கிலப் படங்கள் எல்லாம் பார்த்தும், இப்படியே இருக்கீங்களே, பல படங்களில், ஹீரோ, ஹீரோயின் எப்படி அறிமுகம் ஆகி, பழக்கம் ஆனாங்கன்னே காட்டாமல் ஒரு காட்சியில் பேசிக்கிறாப் போல காட்டிட்டு அடுத்தக் காட்சியில் படுக்கையறையை காட்டிடுவாங்க :-))
அது போலதான், பெண் நண்பி, ஏற்கனவே பழக்கம், லவ்னு எடுத்துக்கணும். ஹி.. ஹி தமிழ் சினிமாவில் படுக்கையறை காட்சி வைக்க முடியாதுன்னு டூயட் :-))
எல்லாவற்றுக்கும் எஷ்டாபிளிஷ்மெண்ட் காட்சிகள் வைத்து கதையை சொல்வதுதான் ரொம்ப பழைய பாணி.
பெரும்பாலான இயக்குனர்கள் ஆங்கிலப் படத்தாங்கங்களால்தான் தற்போது படம் இயக்க வருவதால், இப்படியான படங்கள்தான் தமிழிலும் வரும் :-))]]]
அதில்ல அண்ணாச்சி.. அந்தப் பொண்ணு அதே கூரியர் ஆபீஸ்ல வேலை பார்க்குற பொண்ணு.. இவனுக்கு சூப்பர்வைஸர்.. ரெண்டு மூணு சீன்ல இவன் தூங்கி வழியறதை பார்த்து திட்டிக்கி்ட்டே இருக்குறா..! திடீர்ன்னு பார்த்தா தாய்லாந்துக்கு டான்ஸ் ஆட போயிட்டாங்க..!
[[[ஆனால் இந்த வகை கதையே ரொம்ப பழசு என்பதை நீங்க குறிப்பிடாமல் போயிட்டிங்க :-))
ஒரு பெரும்புள்ளியின் ரகசியம், அல்லது பொருள் ஒரு சாமனியன் கையில் சிக்கிடும், அதனை தேடி ஒரு கேங்க் அலைவது இதான் அடிப்படை கதை :-)) கோயன் பிரதர்சின் .. No country for old men film இந்த format கதையில கிளாசிக் வகை]]]
அய்ய.. அந்தப் படத்தைப் பார்த்து மண்டை காய்ஞ்சதுதான் மிச்சம்.. என் தளத்துல அதுக்கு விமர்சனம் எழுதியிருக்கேன். கொஞ்சம் சோம்பேறித்தனப்படாம தேடிப் படிச்சுப் பாருங்க..!
அண்ணாச்சி,
//ஜெகபதிபாபுவின் கேரக்டரை மிகப் பெரிய டானாக காட்டியிருப்பதும் ஏமாற்றம்தான்.//
நீங்க டான்னு சொல்லுறிங்க பிராபல்ய கம்பிவடப்பதிவர் ,டிடெக்டிவ்னு சொல்லுறார், யாரு சொல்றது உண்மை, அடேங்கப்பா ஒரு கேரக்டர் என்னனே கண்டுப்பிடிக்கமுடியாத போல படம் எடுத்த டிரக்டர் பெரிய தில்லாலங்கடியா தான் இருப்பார் :-))
# காதலர்கள்னா அப்படித்தான் சண்டைப்போட்டுப்பாங்க, ரியல் லைப்பில அப்படித்தான் இருக்காங்க ;-))
# கோயன் பிரதர்ஸ் படத்துக்கும் விமர்சனமா ,படிச்சிடுவோம். உலக அளவில் நல்ல பேரு வாங்கின படம் எல்லாம் உங்களுக்கு மண்டைய பிச்சிக்க வைக்கும் போல :-))
" வி.ராமதாஸின் முதல் தயாரிப்பு இது..! "
அண்ணே யுவன் யுவதின்னு
ஒரு படம் வந்துச்சே . .
வணக்கம் அண்ணா . நான் உங்கள் ரசிகன் . உங்கள் எழுத்தை விடாமல் படிப்பவன் . ஆனால் சமிபகாலமாக உங்களிடமிருந்து வெறும் சினிமா பதிவுகள் மட்டும் வருகிறது . கொஞ்சம் அதிகமாக எழுத வேண்டுகிறேன் .நானும் இப்பொழுதுதான் ப்ளாக் எழதுத ஆரம்பித்து இருக்கிறேன் . அதுவும் உங்களை பார்த்துதான் . நன்றி
[[[தமிழ்மகன் said...
விண்டோஸ் 8 சிஸ்டம் டிப்ஸ் -
http://mytamilpeople.blogspot.in/2013/01/windows-8-tips.html]]]
விண்டோஸ் எக்ஸ்பியை அப்படியே ஆன்லைன்ல அப்கிரேட் செய்து கொள்ளுமா..?
[[[வவ்வால் said...
அண்ணாச்சி,
//ஜெகபதிபாபுவின் கேரக்டரை மிகப் பெரிய டானாக காட்டியிருப்பதும் ஏமாற்றம்தான்.//
நீங்க டான்னு சொல்லுறிங்க பிராபல்ய கம்பிவடப் பதிவர், டிடெக்டிவ்னு சொல்லுறார், யாரு சொல்றது உண்மை, அடேங்கப்பா ஒரு கேரக்டர் என்னனே கண்டுப்பிடிக்கமுடியாத போல படம் எடுத்த டிரக்டர் பெரிய தில்லாலங்கடியாதான் இருப்பார் :-))]]]
அடங்க மாட்டீரா நீரு..? வம்பிழுத்து விடாதீர்..!
[[[# காதலர்கள்னா அப்படித்தான் சண்டை போட்டுப்பாங்க, ரியல் லைப்பில அப்படித்தான் இருக்காங்க ;-))]]]
காதலர்கள் மாதிரியே இல்லைன்னே.. ச்சும்மா கூட வேலை பார்க்குறவங்க மாதிரிதான் காட்டுறாங்க. திடீர்ன்னு இந்த தாவுதல்...!
[[[# கோயன் பிரதர்ஸ் படத்துக்கும் விமர்சனமா, படிச்சிடுவோம். உலக அளவில் நல்ல பேரு வாங்கின படம் எல்லாம் உங்களுக்கு மண்டைய பிச்சிக்க வைக்கும் போல :-))]]]
ஆங்கில அறிவு கொஞ்சம் கம்மிண்ணே.. அதுனாலதான் பிரச்சினை..!
[[[குரங்குபெடல் said...
"வி. ராமதாஸின் முதல் தயாரிப்பு இது..!"
அண்ணே யுவன் யுவதின்னு ஒரு படம் வந்துச்சே..]]]
இவரா அதுக்கு தயாரி்பபாளர்..?
பட்ஜெட் 4u ஸார்..
ஏன் உங்க கமெண்ட்டையெல்லாம் டெலீட் பண்ணிட்டீங்க..? அப்படியே வைச்சிருந்தீங்கன்னா ஏதாச்சும் பதில் சொல்லியிருப்பேன்..!
[[[rahul p said...
வணக்கம் அண்ணா . நான் உங்கள் ரசிகன். உங்கள் எழுத்தை விடாமல் படிப்பவன். ஆனால் சமிபகாலமாக உங்களிடமிருந்து வெறும் சினிமா பதிவுகள் மட்டும் வருகிறது. கொஞ்சம் அதிகமாக எழுத வேண்டுகிறேன். நானும் இப்பொழுதுதான் ப்ளாக் எழதுத ஆரம்பித்து இருக்கிறேன். அதுவும் உங்களை பார்த்துதான். நன்றி]]]
நன்றி ராகுல்.. எழுத முயல்கிறேன்.. அரசியல் எழுத எரிச்சலாக இருக்கிறது. வேறு பதிவுகள்தான் எழுத வேண்டும்.. நேரம் கிடைக்காமல்தான் அல்லல்படுகிறேன்.. பார்க்கிறேன்.. விசாரித்தமைக்கு மிக்க நன்றிகள் பிரதர்..!
விமர்சனத்துக்கு நன்றி.
sorry boss, maap karo!
[[[மாதேவி said...
விமர்சனத்துக்கு நன்றி.]]]
தங்களது வருகைக்கு நன்றிகள்.!
[[[Budget4U said...
sorry boss, maap karo!]]]
அதுனால ஒண்ணுமில்லை.. கமெண்ட் பாக்ஸ் இருக்கிறதே மத்தவங்களோட கருத்துக்களை கேட்கிறதுக்குத்தானே.. உங்களுடைய கமெண்ட் என்னுடைய ஜிமெயில் பாக்ஸ்ல அப்படியே இருக்கு. நீங்க டெலீட் செஞ்சுட்டதாலதான் நானும் அதை சொல்ல முடியலை..!
Post a Comment