07-01-2011
என் இனிய வலைத்தமிழ் மக்களே..!
பகையாளிகள் எப்போதும் ஒருவர் மாற்றியொருவர் முறைத்தபடியேதான் இருந்து வருகிறார்கள். எந்த நேரத்தில் யார், யாரைத் தாக்குவார்கள் என்பது தெரியாமலேயே இருவரின் முனைப்புகள் மட்டும் அந்த நோக்கில்தான் இருந்து வருகின்றன. நக்கீரன் கோபால் என்றாலே ஆத்தாவுக்கு கசப்பு. ஆத்தா என்றாலே நக்கீரனுக்குக் கசப்பு. இந்தக் கசப்புணர்வை சென்ற 5 ஆண்டு கால ஆட்சியில் தனது பத்திரிகையில் சகல வழிகளிலும் காட்டியிருந்தது நக்கீரன். ஆட்சி மாற்றத்தை அவர்களே எதிர்பார்த்துதான் உடனடியாக யுத்தம் 2-ம் பாகத்தைத் துவக்கினார்கள்..!
ஆத்தா ஆட்சிப் பொறுப்பேற்ற பின்பு, தி.மு.க. கூடாரத்தில் மாறன்களைத் தவிர மற்ற அனைவரையும் இப்போதுவரையிலும் தாங்கிப் பிடித்து வருகிறது நக்கீரன். அவரவர் பட்ட பாடு அப்படியென்று ‘நடுநிலைமை’யோடு சொல்லிவிட்டுப் போகலாம். தனி மனிதர்களெனில் இப்படித்தான் சொல்வார்கள். ஆனால் ‘மூன்றாவது கண்’ என போற்றப்படும் பத்திரிகையை கையில் வைத்திருக்கும்போது தங்களது விருப்பு, வெறுப்புக்கு இடமளிக்காமல் எழுதுவதும், செயல்படுவதும்தான் பத்திரிகைகளுக்கு அழகு..!
இன்று வெளிவந்திருக்கும் நக்கீரனின் போஸ்டரை காலையில் பார்த்தவுடனேயே எனக்குப் பகீரென்றது..! ஆத்தாவைப் பிடிக்காத எனக்கே இப்படியென்றால், ஆத்தாவை, நிஜ ஆத்தாவாக பாவிக்கும் ரத்தத்தின் ரத்தங்களுக்கு எப்படியிருந்திருக்கும்..? ஆள் பலம், படை பலம் மிக்க சக்திகள் என்ன செய்வார்களோ அதைத்தான் இன்று காலையில் செய்திருக்கிறார்கள் அதிமுகவினர். ஆத்தாவின் உத்தரவும், ஆசியும் இல்லாமல் இதனை அவர்கள் செய்திருக்கவே மாட்டார்கள் என்று உறுதியுடன் நம்புகிறேன்.
கல்வீச்சுக்களில் நக்கீரன் அலுவலகத்தின் கண்ணாடி ஜன்னல்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளன. நிறுத்தப்பட்டிருந்த கார்களும் தாக்கப்பட்டுள்ளன. இன்னமும் அலுவலகத்தின் முன்பாக மறியல் தொடர்ந்து நடந்து வருகிறதாம். தமிழகம் முழுவதுமே இன்றைய நக்கீரன் இதழை நடுரோட்டில் கொளுத்தும் போராட்டங்கள் நடந்துதான் வருகிறது. அதிமுக சட்டமன்ற உறுப்பினர் கலைராஜன், ஜாம்பஜார் காவல் நிலையத்தில் அமர்ந்து கொண்டு தாக்குதலுக்குத் தகுந்த உத்தரவுகளை பிறப்பித்ததாக ஸ்பாட்டில் இருந்த பத்திரிகையாளர்கள் சொல்கிறார்கள்.
அப்படியென்னதான் எழுதியிருக்கிறது நக்கீரன்..? ‘மயிலாப்பூர் மாபியாவா’ என்ற துணைத் தலைப்புடன் எழுதப்பட்டிருப்பதை நீங்களே படியுங்கள்..!
மயிலாப்பூர் மாஃபியாவா?
ஜெ.வுடன் ஆலோசனையில் ஈடுபட்டவர்களின் பேச்சு, சசிகலா விவகாரம் பற்றித் திரும்பியுள்ளது. அதை விரும்பாத ஜெ., "அதைப் பற்றி பேசாதீங்க. நான் தவறான விதையை விதைச்சிட்டு விஷத்தை அறுவடை பண்ணிக்கிட்டிருக்கேன்…'' என்று சொல்லிவிட்டு, கலைஞர் மீதும் வீரமணி மீதும் கோபத்தைத் திருப்பியிருக்கிறார். "இவங்க இரண்டு பேரும், என்கூட இருக்கிறவங்களை மயிலாப்பூர் மாஃபியான்னு பிரச்சாரம் பண்ணுறாங்க. அதாவது நான் மாமியாம்.. என் கூட இருக்கிறவங்க மாமிகள் அதிகமுள்ள மயிலாப்பூர் மாஃபியாவாம். இந்த விமர்சனம் எம்.ஜி.ஆர். காலத்திலேயே கட்சிக்குள்ளே வந்தது. அப்ப அவர் என்ன சொன்னார் தெரியுமா..?'' என்று தன் முன்னே இருந்தவர்களைக் கேட்டுவிட்டு, அந்த சம்பவத்தை விளக்க ஆரம்பித்திருக்கிறார் ஜெ.
"நான் அரசியலுக்கு நுழைஞ்ச நேரம் அது. எம்.ஜி.ஆர். என்னைக் கூப்பிட்டு, இனி தன்னால ஊர், ஊரா சுற்ற முடியாதுன்னும், கருணாநிதிக்குப் போட்டியா ஜானகியை கொண்டு வர முடியாதுன்னும் சொல்லி, அம்முதான் சரியான ஆள்னு என்னைக் காட்டி, கட்சி நிர்வாகிகள்கிட்டே சொன்னார். அதோடு, கொள்கை பரப்புச் செயலாளர் பதவியையும் கொடுத்தார். கே.ஏ.கே., எஸ்.டி.எஸ் போன்றவங்க கடுமையா எதிர்த்தாங்க. அப்ப பொன்னையன் இருந்தாரு. அவரு, "நம்ம கட்சியும் திராவிட இயக்கம்ங்கிற அடையாளத்தோடு இருக்கு. இதனோட கொள்கையை பரப்ப ஒரு பிராமினை நியமிக்கிறது சரியா இருக்காது'ன்னு சொன்னார். அப்ப எம்.ஜி.ஆர். "நீங்க அம்முவை பிராமின்னு நினைக்கிறீங்களா? பிராமின்னா குழைஞ்சு, குழைஞ்சு பேசி காரியம் சாதிப்பாங்க. அம்மு எதையும் பட்பட்டுன்னு நேரில் பேசிடும். அப்புறம், இங்கே இருக்கிற நீங்க யாரும் மாட்டுக் கறி சாப்பிட்டிருக்க மாட்டீங்க. ஆனா, அம்மு ஸ்பென்சரிலிருந்து ஸ்பெஷல் பீஃப் வாங்கி எனக்கு சமைச்சிக் கொடுத்திருக்கு. நான்தான் பழக்கமில்லாததால அதை சாப்பிடலை. மாட்டுக் கறி சாப்பிடுற அம்முவை எப்படி பிராமின்னு நினைக்கிறீங்க'ன்னு சொன்னார். இன்னைக்கு கருணாநிதியும் வீரமணியும் நான் பிராமின்னும் என் கூட இருக்கிறவங்களை மயிலாப்பூர் மாஃபியான்னும் சொல்றாங்க'' என்றபடி சிரித்திருக்கிறார்.
இவ்வளவுதான் தலைப்புப் பற்றிய செய்தி இந்தக் கட்டுரையில் உள்ளது..!
ஜெயலலிதா மாட்டுக் கறி சாப்பிடுவார். சமைக்கவும் தெரியும் என்பதெல்லாம் எந்த அளவுக்கு அவரைப் பாதிக்கும் என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் அதே சமயம் எல்லோரும் ஒரே மாதிரி இருக்க மாட்டார்களே..? ஒன்றுபோலவே எதிர்க்கருத்துக்களை தாங்கிக் கொள்ள மாட்டார்களே..? இப்போது என்னை குடிகாரன் என்று தவறாகச் சொன்னால், “தப்பாச் சொல்றாங்க. சொல்லிட்டுப் போறாங்க..” என்று போய்க் கொண்டேயிருப்பேன். இப்போது ஆத்தாவால் இதனைத்தான் தாங்க முடியவில்லை என்று நினைக்கிறேன்.
எதிர்க்கருத்தாக பத்திரிகை அலுவலகங்களைத் தாக்குவது என்பது கட்சிகளுக்குப் புதிதல்ல. மதுரை தினகரன் அலுவலகத்தைத் தி.மு.க.வினர் தாக்கினார்கள். மக்கள் டிவி அலுவலகத்தை மார்க்சிஸ்டு கம்யூனிஸ்ட் கட்சியினர் தாக்கினார்கள். பதிலுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலத் தலைமையகத்தை பாட்டாளி மக்கள் கட்சியினர் தாக்கினார்கள். தினமலர் அலுவலகத்தை பல கட்சியினரும், பல்வேறு சந்தர்ப்பங்களில் தாக்கியிருக்கிறார்கள். ஆத்தாவின் முதல் பொற்கால ஆட்சியில் தினம்தோறும் தாக்குதல்கள் பல்வேறு இடங்களில் நடந்தது..! இதெல்லாம் அரசியல்வியாதிகளின் எதிர்க்கருத்து கலாச்சாரம் என்ற போதிலும், ஆத்தாவின் இன்றைய ஆட்சிக் காலத்தில் இது முதல் சம்பவம் என்பதால் முக்கியத்துவம் பெறுகிறது..!
நக்கீரனின் அலுவலகத்தைத் தாக்கியது சரிதானா என்கிற கேள்வி அனைவருக்குள்ளும் எழும்போது, நக்கீரன் எழுதியது மட்டும் சரிதானா என்ற எதிர்க் கேள்வியும் எழுகிறது. நாளைய ‘நமது எம்.ஜி.ஆரி.’ல் இதற்குப் பதில் சொல்லிவிட்டால் போகிறது.. எதற்கு இந்த ரவுடித்தனம்..? இது போன்ற செயல்களே அரசியல்வியாதிகளுக்கு ரவுடித்தனமான தன்னம்பிக்கையை ஊட்டிவிடுகிறது.
இன்றைக்கு ஒரு முதலமைச்சரை தாக்கி எழுதியதற்காக.. நாளை ஒரு நகரத்தில் அமைச்சருக்காக.. சிறிய ஊர்களில் கட்சியின் செயலாளர்களுக்காக.. இப்படி அனைவருமே ரவுண்டு கட்டி தாக்குதல் நடத்தினால் பேச்சு சுதந்திரம், எழுத்துச் சுதந்திரம் என்னாவது..?
நக்கீரன் எழுதியிருப்பது தவறெனில் ஜெயலலிதா பிரஸ் கவுன்சிலில் புகார் கொடுக்கலாம். நீதிமன்றத்தை நாடலாம். காவல்துறையில் புகார் கொடுக்கலாம். ஆனால் அதையெல்லாம் விட்டுவிட்டு வீட்டுக்குள் உட்கார்ந்து கொண்டு அம்புகளை ஏவிவிட்டு அமைதி காப்பதெல்லாம் அவருடைய எதிர்காலத்துக்கும், தமிழக பத்திரிகையுலகத்துக்கும் நல்லதல்ல..!
|
Tweet |
68 comments:
ஹை ... வட
// இன்றைக்கு ஒரு முதலமைச்சரை தாக்கி எழுதியதற்காக.. நாளை ஒரு நகரத்தில் அமைச்சருக்காக.. சிறிய ஊர்களில் கட்சியின் செயலாளர்களுக்காக.. இப்படி அனைவருமே ரவுண்டு கட்டி தாக்குதல் நடத்தினால் பேச்சு சுதந்திரம், எழுத்துச் சுதந்திரம் என்னாவது..? //
இங்கு பிரச்சினையே பவர். நக்கீரனுக்கு எழுத்து சுதந்திரம் எனும் பவர். அம்மாவுக்கு முதலமைச்சர் எனும் பவர். Both misuse. Public suffer.
மாட்டு கறி சாப்பிடுவது என்ன அவ்வளவு கேவலமான செயலா?, அதுவும் மாமி சாப்பிடுவது அவ்வளவு பாவமா? இதற்க்கு ஏன் இப்படி பொங்க வேண்டும்? உங்களுக்கு ஏன் பகீர் என்று வரனும்.... ஜெயலலிதாவுக்கு பார்ப்பனீயம் இருக்கோ இல்லையோ மாட்டு கறி சாப்பிடுவது கேவலம் என நினைக்கும் ஒவ்வொருத்தனுக்குள்ளும் இருப்பது பார்ப்பனீயம் தான்.
தனிமனிததாக்குதல் எனும் அறிவற்ற ஆயுதம் ஏந்தினால் வரும் எதிர் விளைவுகள் அகிம்சை,சட்டம்,பொறுமை,நிதானம்,போன்ற வரையறைகளை மீறியே வரும்.
அரவரசன்.
//நக்கீரன் தாக்கப்பட்டதும் சரிதானா..? எழுதியதும் சரிதானா..?//
ரெண்டுமே தவறுதான் :((
ஒரு விதத்துல பார்த்தா....ரொம்ப லேட்டா அடி வாங்குது நக்கீரன்......எப்பவோ நடந்திருக்க வேண்டிய மேட்டர்...
மறுபுறம்...நக்கீரனையெல்லாம் யாரு நம்புறது...அதைப் போய் எதுக்கு சீரியசா எடுத்துக்குறாங்க அம்மா ந்னு தெரியல...வீரப்பன் செத்ததோடு நக்கீரனும் இறந்து பல ஆண்டுகள் ஆயிடுச்சு...
maattukari saappittal enna marakkari saappittal enna.oru pulanaivu(!)paththirikkaiyin velaiyenna? ithuthaan pulanaaivaa?oozhalai parri seithi poduvathu paththirikkaiyin urimai.athai vittuputtu, itha sonnaanga,atha sonnanga enru pakkaththileye ukkaanthu paththa mathiri seithi pottaal ipadiththaan nadakkum.munbu dmk atchiyil,alai osai,dinakaran admk atchiyil nakkeeran!
என்ன தான் இமிடேட் பண்ண முயற்சித்தாலும் திமுகவுக்கு இயற்கையாகவே கைவருகிற அராஜகம், அதிமுகவைப் பொறுத்தவரை வெறும் காமெடியாகத்தான் முடிகிறது!
எனக்கு நக்கீரன், அதிமுக அராஜகத்தை விட, உதவி இவ்வளவு சுருக்கமாப் பதிவெழுத வச்சுட்டாங்களேன்றது தான் பெரிய அதிர்ச்சி, ஆச்சரியம்!
ஆத்தாவைப் பிடிக்காத எனக்கே இப்படியென்றால்,
//
போங்கண்ணே உங்களுக்கு கமெடி வர மாட்டங்குது :))
மிக சரியாக சொன்னீர்கள்...!!!
//மாட்டு கறி சாப்பிடுவது என்ன அவ்வளவு கேவலமான செயலா?, அதுவும் மாமி சாப்பிடுவது அவ்வளவு பாவமா? இதற்க்கு ஏன் இப்படி பொங்க வேண்டும்? உங்களுக்கு ஏன் பகீர் என்று வரனும்.... ஜெயலலிதாவுக்கு பார்ப்பனீயம் இருக்கோ இல்லையோ மாட்டு கறி சாப்பிடுவது கேவலம் என நினைக்கும் ஒவ்வொருத்தனுக்குள்ளும் இருப்பது பார்ப்பனீயம் தான்.// +1
மாட்டுகறி சாப்பிடுவது ஒரு மோசமான செயல் என்பது போல எழுதியிருக்கும் நீர் இதைப் பற்றியெல்லாம் பேசுவதே காமெடி
நக்கீரன் சமூக நச்சுக்களை பரப்பி வந்தாலும் நக்கீரன் அலுவலகம் தாக்கப்பட்டதற்கு எனது க்ண்டனங்கள்.
மாட்டுக்கறி தின்னும் மாமி என்று எழுதிய நக்கீரனை தாக்கியது சரி என்றால், கருணாநிதி குடும்பத்தை பற்றியும் , கனிமொழி , ராசா போன்றவர்களை குறித்து இல்லாததை பொல்லாததை , ஆபாசமாக, விரசமாக தொடர்ந்து எழுத்தும் பூணுல் பத்திரிகைகளுக்கு என்ன தண்டனை.....
முதலில் அந்தக்கட்டுரையில் இவர்கள் தாக்குமளவிற்கு ஒரு புண்ணாக்கும் இல்லை..( ஏக்சுவலி , புலனாய்வு என்ற பெயரில் நக்கீரன் , ஜூவி போன்றவை தமக்குத் தோணியவற்றை எழுதிக்குவிக்கும் , அதில் பாதி கூட உண்மையில்லை என்பது கிளைக்கதை.)
நக்கீரன் எதை எழுதி இருந்தாலும் அந்த பத்திரிக்கையை , அலுவலக்த்தை தாக்குவது கொஞ்சம் கூட சரியில்லை....அதற்கான கண்டணங்கள்.....
மீண்டும் ஒருமுறை 'அம்மா' என்கிற சூப்பர் டூப்பர் நிர்வாகிக்கு ( உபயம் : தினமலர்.) தங்கள் சொந்தக்கட்சிக் காரங்களைக் கூட அடக்கத் தெரியவில்லை என்ற உண்மை நிருபிக்கப்பட்டிருக்கிறது...
மாட்டுக்கறி சாப்பிட்டதாலேயே திராவிடர் என்ற உணர்வில் எம்.ஜி.ஆர் அம்மாவை அடுத்த வாரிசாக்கியதை அறிந்து புல்லரிக்கிறது....
தமிழ்நாட்டைச் சீரழிக்க உதவிய அந்த மாட்டுக்கறியின் மேல் கோவங்கோவமாகவும் வருகிறது. !!
எதோ நக்கீரன் மட்டும் தான் இதுபோல எழுதுவது போலவும் மற்ற பத்திரிகைகள், பத்ரிக்கா தர்மத்தை தூக்கி பிடிப்பதை போலவும் இருப்பதாய் நடுநிலை வியாதிகள் கூவிகொண்டுள்ளார்கள்....
நேரில் விளக்கு பிடித்தது பார்த்தது போல, பல விஷயங்களில் தினமலம், ஜால்ரா மணி, ரிபோர்டர் மாமா, வெத்து விகடன் போன்ற பூணுல் பத்திரிகைகள் தினமும் கலைஞர் குடும்பத்தை குறித்து இல்லாததும் பொல்லாததும் எழுதுகின்றன....
ஒரு தலைபட்சமான பதிவு.
//ஆனால் அதையெல்லாம் விட்டுவிட்டு வீட்டுக்குள் உட்கார்ந்து கொண்டு அம்புகளை ஏவிவிட்டு அமைதி காப்பதெல்லாம் அவருடைய எதிர்காலத்துக்கும், தமிழக பத்திரிகையுலகத்துக்கும் நல்லதல்ல..!//
வந்திட்ராருடா வசிட்டர்! அந்த அம்மாவோட எதிர்காலத்த சொல்றதுக்கு! உங்கள் சமீப புகைப்படம் என்னை கடினமான வார்த்தைகள் உபயோகிப்பதை தடுக்கிறது! என்ன கோவாலுகிட்ட application போட்டிருந்தீங்களா? வேலைக்கு நல்லா அடிக்கிறீரே ஜால்ரா! ridiculous!!
ஹரிஷ் அவர்களே பசு மாடு தெய்வம் என்றால் அதை ஏன் தொழுவதத்ில் காட்டுகிறீர்கள் வீட்டின் உள்ளே அல்லவா கட்ட வேண்டும்
கையில் பேனா இருக்கிறது என்று எதை வேணுமானாலும் எழுதி யாருடைய மனதையும் புண்படுத்த் எந்த புலனாய்வு பத்திரிக்கைக்கும் அதிகாரமில்லை.இப்படப்ப்ட்ட தான் தோன்றிகளுக்கு இது தேவைதான்.
[[[ஹாலிவுட்ரசிகன் said...
ஹை... வட...]]]
ஹாலிவுட் ரசிகா.. சினிமாவைத் தவிர வேற எதையும் ரசிக்க மாட்டீங்களா..? இப்படில்லாம் பின்னூட்டம் போட்டு நேரத்தை வீணாக்காதீர்கள் அப்பனே..!
[[[ஹாலிவுட்ரசிகன் said...
//இன்றைக்கு ஒரு முதலமைச்சரை தாக்கி எழுதியதற்காக.. நாளை ஒரு நகரத்தில் அமைச்சருக்காக.. சிறிய ஊர்களில் கட்சியின் செயலாளர்களுக்காக.. இப்படி அனைவருமே ரவுண்டு கட்டி தாக்குதல் நடத்தினால் பேச்சு சுதந்திரம், எழுத்துச் சுதந்திரம் என்னாவது..? //
இங்கு பிரச்சினையே பவர். நக்கீரனுக்கு எழுத்து சுதந்திரம் எனும் பவர். அம்மாவுக்கு முதலமைச்சர் எனும் பவர். Both misuse. Public suffer.]]]
ம்.. இது பின்னூட்டம்.. எனக்கும் ஊட்டம் அளிக்கிறது. நன்றி..!
[[[குழலி / Kuzhali said...
மாட்டு கறி சாப்பிடுவது என்ன அவ்வளவு கேவலமான செயலா?, அதுவும் மாமி சாப்பிடுவது அவ்வளவு பாவமா? இதற்க்கு ஏன் இப்படி பொங்க வேண்டும்? உங்களுக்கு ஏன் பகீர் என்று வரனும்.... ஜெயலலிதாவுக்கு பார்ப்பனீயம் இருக்கோ இல்லையோ மாட்டு கறி சாப்பிடுவது கேவலம் என நினைக்கும் ஒவ்வொருத்தனுக்குள்ளும் இருப்பது பார்ப்பனீயம்தான்.]]]
ஒவ்வொருவரின் விருப்பமும் வேறு, வேறாக அல்லவா இருக்கிறது.. மாட்டுக் கறி அத்தனை எளிதாக எந்த வீட்டிலும் சமைத்து சாப்பிடுவதில்லையே..? கடைகளில்தானே கிடைக்கிறது..! அதனால் அந்த பீலிங் வருவது இயற்கைதானே..?
[[[NAGA INTHU said...
தனி மனித தாக்குதல் எனும் அறிவற்ற ஆயுதம் ஏந்தினால் வரும் எதிர் விளைவுகள் அகிம்சை, சட்டம், பொறுமை, நிதானம் போன்ற வரையறைகளை மீறியே வரும்.
அரவரசன்.]]]
நன்றி அரவரசன். நானும் இதனையே சொல்கிறேன்..!
[[[RAVI said...
//நக்கீரன் தாக்கப்பட்டதும் சரிதானா..? எழுதியதும் சரிதானா..?//
ரெண்டுமே தவறுதான் :((]]]
உண்மைதான்..! எழுதுபவர்களும் தனி மனிதச் சுதந்திரம் எது, கருத்துச் சுதந்திரம் எது என்ற எல்லை அறிந்து எழுதுதல் இரு தரப்பாருக்குமே நல்லது..!
[[[கபிலன் said...
ஒரு விதத்துல பார்த்தா.... ரொம்ப லேட்டா அடி வாங்குது நக்கீரன்...... எப்பவோ நடந்திருக்க வேண்டிய மேட்டர்...]]]
ஏங்க.. ஏன் இப்படியெல்லாம் யோசிக்குறீங்க..?
[[[ssr sukumar said...
maattukari saappittal enna marakkari saappittal enna. oru pulanaivu(!)paththirikkaiyin velaiyenna? ithuthaan pulanaaivaa?oozhalai parri seithi poduvathu paththirikkaiyin urimai. athai vittuputtu, itha sonnaanga,atha sonnanga enru pakkaththileye ukkaanthu paththa mathiri seithi pottaal ipadiththaan nadakkum. munbu dmk atchiyil, alai osai, dinakaran admk atchiyil nakkeeran!]]]
இரு தரப்பினருக்கும் அதிகார போதையைத் தவிர வேறில்லை..!
[[[Krishna Moorthy. S. said...
என்ன தான் இமிடேட் பண்ண முயற்சித்தாலும் திமுகவுக்கு இயற்கையாகவே கை வருகிற அராஜகம், அதிமுகவைப் பொறுத்தவரை வெறும் காமெடியாகத்தான் முடிகிறது!]]]
இதுவே தி.மு.க.வாக இருந்தால் பாதிப்பு இன்னும் அதிகமாகத்தான் இருந்திருக்கும்..!
[[[எனக்கு நக்கீரன், அதிமுக அராஜகத்தைவிட, உதவி இவ்வளவு சுருக்கமாப் பதிவெழுத வச்சுட்டாங்களேன்றதுதான் பெரிய அதிர்ச்சி, ஆச்சரியம்!]]]
ஹா.. ஹா.. கண்ணு வைக்காதீங்க ஸார்.. அடுத்தவங்க கஷ்டத்துலயா நாம சிரிக்கிறது..?
[[[மின்னுது மின்னல் said...
ஆத்தாவைப் பிடிக்காத எனக்கே இப்படியென்றால்,//
போங்கண்ணே உங்களுக்கு கமெடி வர மாட்டங்குது :))]]]
மின்னலு.. இதுவும் காமெடியா உமக்குத் தெரியுதா..? கண்ணாடியை மாத்தும்யா..!
[[[MANO நாஞ்சில் மனோ said...
மிக சரியாக சொன்னீர்கள்...!!!]]]
அப்பாடா.. நம்ம தம்பி வந்து காப்பாத்திட்டாரு.. இதுக்குத்தான் தம்பிகளும் கொஞ்சம் வேணும்கிறது.. நன்றியோ நன்றி..!
[[[ஜோ/Joe said...
//மாட்டு கறி சாப்பிடுவது என்ன அவ்வளவு கேவலமான செயலா?, அதுவும் மாமி சாப்பிடுவது அவ்வளவு பாவமா? இதற்க்கு ஏன் இப்படி பொங்க வேண்டும்? உங்களுக்கு ஏன் பகீர் என்று வரனும்.... ஜெயலலிதாவுக்கு பார்ப்பனீயம் இருக்கோ இல்லையோ மாட்டு கறி சாப்பிடுவது கேவலம் என நினைக்கும் ஒவ்வொருத்தனுக்குள்ளும் இருப்பது பார்ப்பனீயம்தான்.//
மாட்டு கறி சாப்பிடுவது ஒரு மோசமான செயல் என்பது போல எழுதியிருக்கும் நீர் இதைப் பற்றியெல்லாம் பேசுவதே காமெடி.]]]
சுத்தமா புரியலை.. நீர் யாரைத் திட்டுறீரு என்னயவா? அல்லது குழலியவா..?
[[[ராஜ நடராஜன் said...
நக்கீரன் சமூக நச்சுக்களை பரப்பி வந்தாலும் நக்கீரன் அலுவலகம் தாக்கப்பட்டதற்கு எனது க்ண்டனங்கள்.]]]
ஓகே அண்ணே..!
[[[Prakash said...
மாட்டுக் கறி தின்னும் மாமி என்று எழுதிய நக்கீரனை தாக்கியது சரி என்றால், கருணாநிதி குடும்பத்தை பற்றியும், கனிமொழி, ராசா போன்றவர்களை குறித்து இல்லாததை பொல்லாததை, ஆபாசமாக, விரசமாக தொடர்ந்து எழுத்தும் பூணுல் பத்திரிகைகளுக்கு என்ன தண்டனை.]]]
சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டியதுதானே..?
[[[மதிபாலா said...
முதலில் அந்தக் கட்டுரையில் இவர்கள் தாக்குமளவிற்கு ஒரு புண்ணாக்கும் இல்லை..(ஏக்சுவலி, புலனாய்வு என்ற பெயரில் நக்கீரன், ஜூவி போன்றவை தமக்குத் தோணியவற்றை எழுதிக் குவிக்கும். அதில் பாதி கூட உண்மையில்லை என்பது கிளைக் கதை.)
நக்கீரன் எதை எழுதி இருந்தாலும் அந்த பத்திரிக்கையை, அலுவலக்த்தை தாக்குவது கொஞ்சம்கூட சரியில்லை. அதற்கான கண்டணங்கள்.
மீண்டும் ஒரு முறை 'அம்மா' என்கிற சூப்பர் டூப்பர் நிர்வாகிக்கு( உபயம் : தினமலர்.) தங்கள் சொந்தக் கட்சிக்காரங்களைக் கூட அடக்கத் தெரியவில்லை என்ற உண்மை நிருபிக்கப்பட்டிருக்கிறது. மாட்டுக் கறி சாப்பிட்டதாலேயே திராவிடர் என்ற உணர்வில் எம்.ஜி.ஆர் அம்மாவை அடுத்த வாரிசாக்கியதை அறிந்து புல்லரிக்கிறது. தமிழ்நாட்டைச் சீரழிக்க உதவிய அந்த மாட்டுக் கறியின் மேல் கோவங் கோவமாகவும் வருகிறது.!!]]]
நீங்கள் நக்கீரனின் வாசகங்களை நம்பியே இந்தப் பின்னூட்டத்தை எழுதியிருப்பதால் நான் கருத்துச் சொல்ல விரும்பவில்லை..!
[[[Prakash said...
எதோ நக்கீரன் மட்டும்தான் இது போல எழுதுவது போலவும் மற்ற பத்திரிகைகள், பத்ரிக்கா தர்மத்தை தூக்கி பிடிப்பதை போலவும் இருப்பதாய் நடுநிலை வியாதிகள் கூவி கொண்டுள்ளார்கள்.. நேரில் விளக்கு பிடித்தது பார்த்தது போல, பல விஷயங்களில் தினமலம், ஜால்ராமணி, ரிபோர்டர் மாமா, வெத்து விகடன் போன்ற பூணுல் பத்திரிகைகள் தினமும் கலைஞர் குடும்பத்தை குறித்து இல்லாததும் பொல்லாததும் எழுதுகின்றன.]]]
ம்.. அதான் கட்சில வழக்கறிஞர் பிரிவு பலமாத்தான இருக்கு. கேஸ் போட்டு ஒரு வழி பண்ணிரலாமே..?
[[[ilavarasan said...
ஒரு தலைபட்சமான பதிவு.]]]
மிக்க நன்றி..!
[[[ராஜரத்தினம் said...
//ஆனால் அதையெல்லாம் விட்டுவிட்டு வீட்டுக்குள் உட்கார்ந்து கொண்டு அம்புகளை ஏவிவிட்டு அமைதி காப்பதெல்லாம் அவருடைய எதிர்காலத்துக்கும், தமிழக பத்திரிகையுலகத்துக்கும் நல்லதல்ல..!//
வந்திட்ராருடா வசிட்டர்! அந்த அம்மாவோட எதிர்காலத்த சொல்றதுக்கு! உங்கள் சமீப புகைப்படம் என்னை கடினமான வார்த்தைகள் உபயோகிப்பதை தடுக்கிறது! என்ன கோவாலுகிட்ட application போட்டிருந்தீங்களா? வேலைக்கு நல்லா அடிக்கிறீரே ஜால்ரா! ridiculous!!]]]
நோ.. தவறாகப் புரிந்து கொண்டுள்ளீர்கள்..! எழுத்துக்கு பதில் எழுத்தாக இருக்க வேண்டும் என்றுதான் சொல்கிறேன்..! நக்கீரனில் வந்திருப்பதையோ, எழுதுகின்ற அனைத்தையுமே உண்மை என்று நான் சொல்லவில்லை..!
[[[Barari said...
ஹரிஷ் அவர்களே பசு மாடு தெய்வம் என்றால் அதை ஏன் தொழுவதத்ில் காட்டுகிறீர்கள் வீட்டின் உள்ளே அல்லவா கட்ட வேண்டும்.]]]
வீடு என்பதே ஒரு குடிசைதான். அதுக்குள்ள மாட்டையும் கட்டிட்டு மனுஷங்க எங்க இருப்பாங்களாம்..?
[[Barari said...
கையில் பேனா இருக்கிறது என்று எதை வேணுமானாலும் எழுதி யாருடைய மனதையும் புண்படுத்த் எந்த புலனாய்வு பத்திரிக்கைக்கும் அதிகாரமில்லை. இப்படப்ப்ட்ட தான்தோன்றிகளுக்கு இது தேவைதான்.]]]
இப்படியெல்லாம் பேசாதீர்கள் நண்பரே.
இது சரியென்றால் அப்பாவிகள் மீது அரசியல்வியாதிகளும், அதிகாரவர்க்கமும் தொடுக்கும் அராஜகமும் சரியென்றாகிவிடும்..!
மொதல்ல பத்திரிக்கை சுதந்திரம்னா என்ன என்பதை நம்ம பத்திரிகை நண்பர்களுக்கு யாராவது புரிய வைத்தால் இது போன்ற நிகழ்வுகளை தவிர்க்கலாம் என்பது இந்த அடியேனின் சிறு கருத்து
கெடக்க கெடக்க கிழவன தூக்கி மனையில் (திருமண மனை) உட்கார வச்ச கதையா இப்ப திடும்னு இந்த மாதிரி செய்திய நக்கீரன் வெளியிடத்தில் பாகிஸ்தானின் ISI சதி இருக்குமோ
மாட்டு கறி சாப்பிடுவது என்ன அவ்வளவு கேவலமான செயலா?, அதுவும் மாமி சாப்பிடுவது அவ்வளவு பாவமா? இதற்க்கு ஏன் இப்படி பொங்க வேண்டும்? உங்களுக்கு ஏன் பகீர் என்று வரனும்.... ஜெயலலிதாவுக்கு பார்ப்பனீயம் இருக்கோ இல்லையோ மாட்டு கறி சாப்பிடுவது கேவலம் என நினைக்கும் ஒவ்வொருத்தனுக்குள்ளும் இருப்பது பார்ப்பனீயம்நக்கீரன் செய்து வரும் தனிநபர் விமர்சனம் பிராமணீயம் அதரவு உள்ளது, தீண்டாமை குற்றம் எனும் நாட்டில் நக்கீரனின் தீண்டாமையை காட்டுகிறது! அந்த பத்திரிகையின் கேட்ட நோக்கத்தை காட்டுகிறது!
உண்மையில் ஆடு,மாடுகளுடன் வந்த ஆரியர்களின் பிரமாதமான,பிடித்த,முக்கிய உணவே மாட்டு கரிதான்! புத்தரின் கொல்லாமைத் தத்துவத்தை ஜீரணிக்க, மாட்டு கறியை சாப்பிடுவதை விட்டு,பால்,நெய்,வெண்ணை,என்று உருமாறினார்கள்! வேள்விகளில் இன்றும் பலியிடப்படும் உயிர்களில் மாடு முக்கியமானது! மாட்டை எப்படி பலியிட வேண்டும்,எப்படி அறுக்க வேண்டும், எப்படி எதனுடன் சேர்த்துச் சமைகவேண்டும் என்று வழிமுறை நூல்கள் எல்லாம் ஆரியர்களான பிராமணர்கள் ஆதியில் எழுதி வைத்து உள்ளானர்! அதுகுறித்த பதிவை நாளை இடுவேன்!
சூனிய விகடன் ஸார்..!
அவன், இவன் என்ற ஏக வசனம் வேண்டாமே..? அது ஒன்றுக்காகவே உங்களுடைய பின்னூட்டத்தை நீக்க வேண்டியதா போச்சு. கோச்சுக்காதீங்க..!
[[[ஸ்ரீகாந்த் said...
மொதல்ல பத்திரிக்கை சுதந்திரம்னா என்ன என்பதை நம்ம பத்திரிகை நண்பர்களுக்கு யாராவது புரிய வைத்தால் இது போன்ற நிகழ்வுகளை தவிர்க்கலாம் என்பது இந்த அடியேனின் சிறு கருத்து.]]]
சிறந்த பின்னூட்டம்.. அதுதான் இங்க யாருக்குமே தெரியலை. ஆளாளுக்கு இது மாறுபடுகிறது..!
ஜனத்திரள் மிக்க ரங்கநாதன் தெருவில் எவர்மீதும் இடிபடாமல் பயணிப்பதுபோல் எத்தனை நடுநிலையோடு உங்கள் பேனா நர்த்தனமாடுகிறது.ஜெ யையும் அவர் அரசையும் தினமணியைவிட எத்தனை மெல்ல தட்டியிருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்!
பாண்டியன்ஜி - வேர்கள்.
[[[ஸ்ரீகாந்த் said...
கெடக்க கெடக்க கிழவன தூக்கி மனையில் (திருமண மனை) உட்கார வச்ச கதையா இப்ப திடும்னு இந்த மாதிரி செய்திய நக்கீரன் வெளியிடத்தில் பாகிஸ்தானின் ISI சதி இருக்குமோ?]]]
எல்லாம் ஒரு எதிர்காலத்திய நன்மைக்காகத்தான்..! நக்கீரனின் பாதுகாப்புக்காகவே இது போன்ற அரசியல் தரமற்ற கட்டுரைகளை தொடர்ந்து வெளியிடுகிறது நக்கீரன்..!
[[[ஓசூர் ராஜன் said...
மாட்டு கறி சாப்பிடுவது என்ன அவ்வளவு கேவலமான செயலா? அதுவும் மாமி சாப்பிடுவது அவ்வளவு பாவமா? இதற்க்கு ஏன் இப்படி பொங்க வேண்டும்? உங்களுக்கு ஏன் பகீர் என்று வரனும்.... ஜெயலலிதாவுக்கு பார்ப்பனீயம் இருக்கோ இல்லையோ மாட்டு கறி சாப்பிடுவது கேவலம் என நினைக்கும் ஒவ்வொருத்தனுக்குள்ளும் இருப்பது பார்ப்பனீயம். நக்கீரன் செய்து வரும் தனிநபர் விமர்சனம் பிராமணீயம் அதரவு உள்ளது,
தீண்டாமை குற்றம் எனும் நாட்டில் நக்கீரனின் தீண்டாமையை காட்டுகிறது! அந்த பத்திரிகையின் கேட்ட நோக்கத்தை காட்டுகிறது!]]]
மாட்டுக் கறி சப்ஜெக்ட்டை தொட்டால் அது போகும் இன்னொரு கிராமாயணம்..!
[[[ஓசூர் ராஜன் said...
உண்மையில் ஆடு,மாடுகளுடன் வந்த ஆரியர்களின் பிரமாதமான, பிடித்த,முக்கிய உணவே மாட்டு கரிதான்! புத்தரின் கொல்லாமைத் தத்துவத்தை ஜீரணிக்க, மாட்டு கறியை சாப்பிடுவதை விட்டு, பால், நெய், வெண்ணை, என்று உருமாறினார்கள்! வேள்விகளில் இன்றும் பலியிடப்படும் உயிர்களில் மாடு முக்கியமானது! மாட்டை எப்படி பலியிட வேண்டும், எப்படி அறுக்க வேண்டும், எப்படி எதனுடன் சேர்த்துச் சமைக வேண்டும் என்று வழிமுறை நூல்கள் எல்லாம் ஆரியர்களான பிராமணர்கள் ஆதியில் எழுதி வைத்து உள்ளானர்! அது குறித்த பதிவை நாளை இடுவேன்!]]]
நன்றி.. படிக்கக் காத்திருக்கிறேன்..
சிரிப்பு சிங்காரம் ஸார்..!
கோபால் பற்றிய உங்களது அவன், இவன் என்ற அடைமொழியுடன் தனி நபர் விமர்சனம் தேவையில்லாதது..! நீக்கிவிட்டேன்..!
[[[பாண்டியன்ஜி said...
ஜனத்திரள் மிக்க ரங்கநாதன் தெருவில் எவர் மீதும் இடிபடாமல் பயணிப்பதுபோல் எத்தனை நடுநிலையோடு உங்கள் பேனா நர்த்தனமாடுகிறது. ஜெ.யையும் அவர் அரசையும் தினமணியைவிட எத்தனை மெல்ல தட்டியிருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்!
பாண்டியன்ஜி - வேர்கள்.]]]
அப்படியா..? எனக்கு அப்படித் தெரியவில்லை..! இரு தரப்பினர் மீதும் தவறுகள் உள்ளது..! இவர் முதலில் இப்படி எழுதியிருக்கக் கூடாது. அவர்களும் ரவுடித்தனத்தில் இறங்கியிருக்கக் கூடாது..!
உண்மைதமிழன் அண்ணன் மாட்டுகறி சாப்பிடுவது தவறு என்று எழுதவில்லை...பகீரென்றது என்றுதான் கூறியுள்ளார், அனைவருக்கு அந்த உணர்வு வந்த காரணம்....கோபால் நிலைமை என்னாகுமோ என்கிற பகீர்தான், வெளிநாட்டில் வாழும் பிராமின்ஸ் சிலர் பீப் உண்கிறார்கள்...இந்த சம்பவத்தில் பிராமின் எங்கு வருகிறார்கள்...
அம்மா மாட்டுகறி சாப்பிடுவது பெரிய விசயம் அல்ல பகுத்தறிவு பேசிக்கொண்டு முக்காடு போட்டு கொண்டு கோயிலுக்கு போவதுதான் பெரிய விசயம்......
ஒரு முதல்வரைப் பற்றி அவதூராக எழுதுவது தான் பத்திரிக்கை தர்மமா?... இதற்கு முன்னாள் முதல்வர் வக்காலத்து வேர... போங்கடா நீங்களும் உங்க ஜனநாயகமும்!
ஜெயலலிதா ஒரு பிராமின் என்பது அல்ல ஒரு பிரச்னை! அவர் அப்படி சொன்னாரா என்பதுதான்! இதற்கு அந்த கோவலுவிடம் தரவுகள் இருக்குதா?
அதற்கு பொன்னையன் ஒரு மறுப்பு அறிக்கை வி்ட்டார்! இந்த கோவலு தாமரைக்கனியாகி விடுவாரோ என்று நான் ஐயுறுகிறேன்!
பத்திரிக்கைகளும் ஊடகங்களும் தங்கள் எல்லைகளை மீறி இப்படி எழுதுவதும் பரப்புவதும் இன்றைக்கு மட்டுமே நிகழ்வதல்ல.பிளிட்ஸ காலத்திலிருந்தே பார்த்திருக்கிறேன்.தமிழில் நாத்தீகமும் தராசும் நினைவுக்கு வருகிறது.அதற்கெல்லாம் தடியை எடுப்பதென்றால் இன்னமும் நாம் நம்பிக்கொண்டிருக்கிற ஜனநாயகத்தில் பொருள் இல்லை.இதைவிட மோசமாக எழுதப்பட்ட எழுத்துகளை பார்த்திருக்க முடியும்.
இப்போது கண்டிக்கப்படவேண்டியது வனமுறையைத்தான்..ஏனெனில் இது நாளை எவருக்கும் நிகழும். திறனாய்வு இருபக்கம் மட்டும் பேசுவதல்ல.
கொடிதிலும் கொடிதை சுட்டிக்காடுதலே !
பாண்டியன்ஜி
வீடு ஸார்..
மாட்டுக் கறி சாப்பிடுவது நல்லதோ கெட்டதோ.. அதனை ஜெயலலிதா விரும்பிச் சாப்பிடுவார் என்று அர்த்தம் தொனிக்க எழுதுவதற்கு என்ன காரணம் என்று தெரியவில்லை..! அதோடு நீங்கள் சொல்லியிருப்பதுபோல் முக்காடு போட்டுக் கொண்டு கோவிலுக்குச் செல்வதைவிடவும் இது ஒன்றும் அசிங்கமில்லைதான்..!
பூங்கதிர் ஸார்..
நக்கீரன் இந்த வாரம் எழுதியிருப்பதைப் பார்த்தால் இதனை எதிர்பார்த்துதான் எழுதியிருக்கிறார்களோ என்று சந்தேகிக்கத் தோன்றகிறது..!
ராஜரத்தினம்..
பெரும்பாலான பத்திரிகைகள் இப்படித்தான் எழுதி வருகின்றன..! இதில் சில சமயங்கள் உண்மையும் கலந்து வந்துவிடுவதால், பொய்யைப் பிரித்துப் பார்க்கத் தெரியவில்லை மக்களுக்கு..!
நம்ம கோவாலு இல்ல கொவாலு.. ஏதோ ஒரு நாளு நாலு மணிக்கு மேல துணிச்சலா செஞ்சு பாப்போமேனு செஞ்சானாம்.. அன்னிக்கினு பாத்து எல்லா சாமான் செட்டும் திடீர் திடீர்னு உடையுதாம் சாயுதாம்.. அன்னிலெருந்து கொவாலு 4 மணிக்கெல்லாம் எச்கேப் ஆயிடுவானாம்.. ஏன் மாப்பிள இவ்ளோ பயம் இருக்கிரவன் எதுக்கு.....
[[[rse said...
நம்ம கோவாலு இல்ல கொவாலு.. ஏதோ ஒரு நாளு நாலு மணிக்கு மேல துணிச்சலா செஞ்சு பாப்போமேனு செஞ்சானாம்.. அன்னிக்கினு பாத்து எல்லா சாமான் செட்டும் திடீர் திடீர்னு உடையுதாம் சாயுதாம்.. அன்னிலெருந்து கொவாலு 4 மணிக்கெல்லாம் எச்கேப் ஆயிடுவானாம்.. ஏன் மாப்பிள இவ்ளோ பயம் இருக்கிரவன் எதுக்கு.....?]]]
நியாயமான கேள்வி..! அவர் முன் ஜாமீன் கோரியிருக்கவே கூடாது..!
நக்கீரன் ..'ஜெ' .வை பற்றி ........எழுதியது தவறு !...என்று
பத்திரிகை தர்மம் ..(!?) பேசும் ..(அ) யோக்கிய சிகாமணிகளே !
துக்ளக் - 'சோ' + 'ஜூ.வி' +'தாபா'+ ஆரியகும்பல்களே....!
கொழுப்பெடுத்த ...'சோ' ...துக்ளக் ....மேல் அட்டையிலேயே ..!
பிற்படுத்தப்பட்ட மக்களின் காவலர் ..."வி.பி.சிங்" அவர்கள்
பிரதமராக இருந்தபோதே ! 'கழுதை ' யாக படம் போட்டானே !
'ஜெயில்சிங்' ஜனாதிபதியாக இருக்கும்போதே . 'கழுதை' யாக
படம் போட்டான்! முதல்வராக இருந்தபோதே 'கருணாநிதி' யை
'கழுதை' யாக..படம் போட்டான்! இன்னும் எவ்வளவோ மக்கள்
தலைவர்களை இழிவு படுத்தியிருக்கிறான் ! 'சசிகலா' நீக்கத்தை
ஆ.தி.மு.க. வை ..'ஜெ' சுத்தப்படுத்துகிறார்........ (!?) என்று ......
நடுநிலை (!?) தந்திரசிகாமணி ...'ஜூ.வி'....எழுதுகிறது ...!
(உண்மையில் 'ஜெ' தலையில் தண்ணீர் ஊற்றி 'சசி'தான்...
சுத்தப்படுத்தினார் எனலாம் ! ) ' 2 ஜி 'தொடங்கி .இன்று முடிய
கருணாநிதி.......முதல்வராக இருந்தபோதே .கூட ..!
இந்த ...'சோ'... 'ஜூ.வி.. 'குமுதம் ரிபோர்டர்' .etc .,. வரை ...
கனிமொழி... கருணாநிதி...ராஜா ..குடும்பம் ..குழந்தைகளை!
ஆதாரமே இல்லாமல் ! எவ்வளவு ...இழிவாக ..குருரமாக ..
எழுதிவருகிறார்கள்? ஆனால் -- கருணாதி ...யாருக்காவது
குடிநீர் ..மின்சாரம் ...கழிவுநீர் தொடர்பு (என்ன ஒரு குரோதம் !)
எதையாவது துண்டிதிருப்பாரா ? அல்லது போலீஸ் மூலம் ....
தண்டித்திருப்பாரா ? ஆனால் -- இந்த அட்டுழியத்தை செய்யும்
'ஜெ' வை ..கண்டிக்காமல் ..நக்கீரனுக்கு ...போதனை செய்யும்
இந்த புனித புத்தர்களை ....எதைக்கொண்டு ... ..................து ?
குடந்தை அரசு ஸார்..
இரு தரப்பினருமே ஒருவர் மேல் ஒருவர் சேறுகளை அள்ளி வீசிக் கொண்டுதான் இருக்கின்றனர்.
ஜூ.வி., குமுதம் ரிப்போர்ட்டர், நக்கீரனைவிடவும் நமது எம்.ஜி.ஆர். சித்ரகுப்தனும், முரசொலி ஆண்டியும், போண்டியும் பேசும் பேச்சுக்கள் அத்தனையும் கெட்ட ரகம்தான்..!
மொதல்ல அவங்க 2 பேரையும் மாத்தச் சொல்லுங்க..!
கோபால், காமராஜ்... இன்னும் இவிய்ங்கள உள்ளார புடிச்சு போடலியா?
[[[R.Gopi said...
கோபால், காமராஜ்... இன்னும் இவிய்ங்கள உள்ளார புடிச்சு போடலியா?]]]
உடனே இல்லியாம்.. மெதுவா நடக்குமாம்..!
எப்பவுமே நக்கீரனின் தரம் ஒரு நூல் குறைவு தான்.ஏற்கனவே அவர்களின் கார்டூன், அட்டை பட கிராபிக்ஸ்களிலும் ஜெயலலிதாவை போல வேறு யாரையும் மோசமாக காண்பிப்பது இல்லை.
ஐயா சரவணன் அவர்களுக்கு,இன்று முதன் முறையாக உங்கள் வலை பக்கம் பார்த்தேன்.மிக அருமை.ஒரே ஒரு விசயம்.யாராக இருந்தாலும் அவர்களின் பெயரை சொல்லாமே.
பல வலைப்பூக்களில் ஆத்தா என்றும் கிலவன் என்றும் தமிழக அரசியல் தலைவர்களை அழைக்கிறார்கள்.இவர்கள் இல்லாவிட்டால் தமிழ்நாடு ஒன்றும் அமெரிக்கா ஆகியிருக்காது.பீகார் போல காங்கிரஸ் தமிழகத்தை மாற்றி இருக்கும்.
பின்னூட்டங்களில் யாரோ எழுதட்டும்.
உங்கள் வலைபூவிலாவது இதை தவிர்க்கலாமே.
[[[tamilsenthil said...
எப்பவுமே நக்கீரனின் தரம் ஒரு நூல் குறைவுதான்.ஏற்கனவே அவர்களின் கார்டூன், அட்டை பட கிராபிக்ஸ்களிலும் ஜெயலலிதாவை போல வேறு யாரையும் மோசமாக காண்பிப்பது இல்லை.
ஐயா சரவணன் அவர்களுக்கு, இன்று முதன் முறையாக உங்கள் வலை பக்கம் பார்த்தேன். மிக அருமை. ஒரே ஒரு விசயம். யாராக இருந்தாலும் அவர்களின் பெயரை சொல்லாமே.
பல வலைப்பூக்களில் ஆத்தா என்றும் கிலவன் என்றும் தமிழக அரசியல் தலைவர்களை அழைக்கிறார்கள். இவர்கள் இல்லாவிட்டால் தமிழ்நாடு ஒன்றும் அமெரிக்கா ஆகியிருக்காது. பீகார் போல காங்கிரஸ் தமிழகத்தை மாற்றி இருக்கும். பின்னூட்டங்களில் யாரோ எழுதட்டும். உங்கள் வலைபூவிலாவது இதை தவிர்க்கலாமே.]]]
தங்களின் முதல் வருகைக்கு மிக்க நன்றிகள் ஐயா..!
ஜெயலலிதா, கருணாநிதி என்றுதான் பல இடங்களில் எழுதி வருகிறேன். சிற்சில இடங்களில் மட்டுமே இப்படியாகிவிடுகிறது. இனிமேல் மாற்ற முயல்கிறேன்..!
Post a Comment