வேட்டை - சினிமா விமர்சனம்..!

14-01-2012

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

புதிய மிக்ஸியில், புது கம்பெனி மசாலாத் தூள்களைச் சேர்த்து பழைய பாணியில், காரமான மீல்ஸை திரும்பவும் கொடுத்திருக்கிறார் லிங்குசாமி. விநியோகஸ்தர்கள் தரப்பில் சந்தோஷப்படுகிறார்கள் படம் தப்பித்துவிட்டது என்று.. பொங்கல் ரிலீஸில் முதலிடத்தில் உள்ளது என்று பூரிக்கிறார்கள் தயாரிப்பாளர்கள் தரப்பு. தியேட்டர்களில் இளசுகளின் கை தட்டல் ஓங்கி ஒலிக்கிறது நண்பனைவிடவும். சந்தேகமேயில்லாமல் இந்த வருடத்தின் முதல் ஹிட் இதுவே என்று சொல்லிவிடலாம்..!



 
கே.பாக்யராஜின் 'அவசர போலீஸ் 100' படத்தின் 2 பாக்யராஜ்களின் கேரக்டர் ஸ்கெட்ச்சை அப்படியே வைத்துக் கொண்டு தற்காலத்திற்கு ஏற்றாற்போல் திரைக்கதைக்கு டிங்கரிங் வேலை செய்திருக்கிறார். திரைக்கதை உருவாக்கத்தில் அஜயன்பாலா சித்தார்த், கிருஷ்ணா டாவின்சி போன்றோரெல்லாம் இருந்திருக்கிறார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்..! பாவம் அண்ணன் பாக்யராஜ்.. ராயல்டி கேக்க முடியாத சோகத்தில் இருப்பார்..!
 
பயந்தாங்கொள்ளி அண்ணன்.. அடிதடிக்கு அஞ்சாத தம்பி.. ஆனாலும் பாசக்கார சகோதர்கள். கண்டிப்புடன் வளர்க்கும் இன்ஸ்பெக்டர் அப்பா.. அவரது மரணத்துக்குப் பின் வீடு தேடி வருகிறது வேலை அண்ணனுக்கு. அண்ணன் பயந்தாலும் தம்பியின் நச்சரிப்பு தாங்காமல் இன்ஸ்பெக்டர் வேலையை ஏற்றுக் கொள்கிறார்.

அடிதடிகளுக்கும், வெட்டுக் குத்துக் கொலைகளுக்கும் அஞ்சாத தூத்துக்குடி நகரின் இன்ஸ்பெக்டராகிறார் அண்ணன் மாதவன். இவர் நடவடிக்கை எடுப்பதற்காக போக வேண்டிய இடங்களுக்கெல்லாம் தம்பி ஆர்யா சென்று தன் புஜபலத்தை வைத்து ரவுடிகளை அடக்க.. பாராட்டெல்லாம் அண்ணனுக்கு போய்ச் சேர்கிறது..!

இடையில் காதலே இல்லாமல் மாதவன்-சமீரா ரெட்டியின் திருமணமும், அதைத் தொடர்ந்து ஆர்யா-அமலாபால் காதலும் தொடர்கிறது. மாவட்டத்தின் பெரிய ரவுடியின் கடத்தல் சரக்கை சகோதரர்கள் பிளான் செய்து பிடித்ததால் கோபப்படும் பெரிய ரவுடி, சகோதரர்களை பழி தீர்க்க முயல்கிறார். சகோதரர்களின் முகமூடி பாசம் ஒரு கட்டத்தில் ரவுடிகளுக்குத் தெரிந்துவிட நேருக்கு நேர் மோதுகிறார்கள். முடிவு உங்களுக்குத் தெரிந்ததுதான்..!

முதல் ஸ்கோர் மாதவனுக்குத்தான்..! எந்த ஹீரோயிஸ வட்டத்துக்குள்ளேயும் இதுவரையில் சிக்காதவர் என்பதால் பயந்த பார்ட்டி கேரக்டர் கச்சிதமாகப் பொருந்துகிறது. தியேட்டரில் ரவுடிகளைப் பார்த்து பயப்படும் காட்சியில் தொடங்குகிறது இவரது அக்கப்போர்..! போலீஸ் ஸ்டேஷன் முன்பாக எரியும் நபரை பார்த்து தம்பி இராமையாவின் பின்பாக பதுங்கும் மாதவனா.. பிற்பாதியில் வெளுத்துக்கட்டுவது என்ற சந்தேகத்தை ஏற்படும் அளவுக்கு அவரது ஆக்டிங் ரொம்பவே மெனக்கெட்டிருக்கிறது..!


 
எந்த ஹீரோவும் செய்யத் துணியாத, சொல்லக் கூச்சப்படும் வார்த்தைகளை அள்ளி வீசி ஆர்யாவுக்கு பட்டுச் சாமரம் வீசியிருக்கிறார் மாதவன்.. கிளைமாக்ஸ் காட்சியி்ல அவர் ஆர்யாவுக்குக் கொடுக்கும் பில்டப்பை கேட்டால் மற்ற ஹீரோக்கள் காதில் மட்டுமில்லை... கண்ணிலும் புகை வரலாம்..! இதற்காகவே மாதவனை தனி மேடை போட்டு பாராட்டலாம்..!

மாதவனுக்குள் ரெளத்ரம் வந்த பின்பு அவருடைய தெனாவெட்டு ஸ்டைல் கொஞ்சம் கவர்ந்தாலும், ஆர்யா இதையே ஆர்ப்பாட்டமில்லாமல் தனியாக ஸ்கோர் செய்து விடுகிறார்..! இறந்து கிடக்கும் அப்பாவின் உடலைப் பார்த்து “நாளைக்கு போகணும்னு சொன்னாரே.. இதுதானா அது..?” என்று சொல்வதிலேயே அவருடைய கேரக்டரை பதிய வைத்துவிட்டார் இயக்குநர். படம் நெடுகிலும் அவருடைய உடலின் ஒவ்வொரு பாகமும் அடிதடியில் இறங்கியிருக்கிறது..!

கூடவே அமலாபாலுடன் அவர் செய்யும் காதல் கலாட்டாவும் ரசிக்க வைக்கத்தான் செய்கிறது..! கண்ணாடியில் அமலாவின் உடலை பார்த்துவிட்டதை மறைமுகமாக ஆர்யா சொல்லிவிட்டுப் போக அதன் பின்பு அமலா படும் வெட்கத்தையும், தொடரும் அக்கப்போரையும் அழகாகப் படம் பிடித்திருக்கிறார் இயக்குநர். அமலாவை மணக்க வரும் அமெரிக்க மாப்பிள்ளைக்கு அமலாவும், ஆர்யாவும் கொடுக்கும் ட்ரீட்டும், அந்தக் கல்யாணக் கலாட்டாவும் செம கலகலப்பு..!

படத்தில் 2 காட்சிகளில் மட்டுமே தியேட்டரே கை தட்டலால் அதிர்ந்தது. சமீராரெட்டி ஆர்யாவின் காலில் விழுந்து கல்யாணத்துக்கு ஒத்துக் கொள்ள கெஞ்சும்போது சமீப காலமாக சினிமாவுலகில் மறக்கடிக்கப்பட்ட ஆணாதிக்கத்தை, இயக்குநர் லிங்குசாமி மீண்டும் கொண்டு வந்துள்ளது தெரிகிறது..! இதற்காக அவருக்கு விரைவி்ல் வெளியுலகத்தில் மண்டகப்படி கிடைக்கும் என்று நினைக்கிறேன். இந்தக் காட்சியில் முதல் தரமான அதிகக் கை தட்டல் கிடைத்ததையும் நினைத்துப் பார்த்தால், தமிழ்நாட்டு இளைஞர்களே இந்த மனப்பான்மையில்தான் இருக்கிறார்களோ என்று தோன்றுகிறது.

2-வதாக மங்காத்தா படத்தின் காட்சியில் அஜீத் தோன்றும்போதும் தியேட்டரே ஆடிப் போனது. ரஜினிக்கு பின்பு ஸ்டைல் என்றால் அது அஜீத்துதான் என்றாகிவிட்டது.. அனைத்துவகை ரசிகர்களுக்கும் பிடித்துவிட்டது.. இதனையே அஜீத் தொடர்ந்தால் அவருக்கும் நல்லது...!
 
 

இரண்டு ஹீரோயின்கள். அக்காவா சமீரா ரெட்டியும், தங்கையாக அமலாபாலும். சமீராவுக்கு டப்பிங் வாய்ஸ் கொடுத்தவர் இப்படி கொலை செய்திருக்க வேண்டாம்..! உதட்டசைவு கூட ஒத்து வரவில்லை..! இதையும்விட குரலின் கொடுமைதான் தாங்க முடியவில்லை. சமீரா ரெட்டி போன்ற அக்காமார்களுக்கு இப்படியொரு கர்ணக் குரல் தேவைதானா..?

பாடல் காட்சிகளில் இருவரும் காட்டியிருக்கும் தாராளத்திற்கு நன்றி..! அமலா பால் இனிமேல் ஆடப் போகும் திரைப்படங்களுக்கெல்லாம் மொத்தமாக இதில் இடுப்பை ஆட்டிவிட்டார் என்றே சொல்லலாம். பாவம்.. சுளுக்கு பிடித்திருக்காது..?

“ச்சும்மாதான் இருக்கேன்..” என்ற ஆர்யாவின் பதிலுக்கு சமீரா காட்டும் கடுமையும், மாதவனை வாடா, போடா என்று கூப்பிடக் கூடாது என்று சொல்லும்போது கதை திசை திரும்பப் போகிறதோ என்று நினைத்தேன். நல்லவேளை.. அந்தத் தவறை இயக்குநர் செய்யவில்லை.. மீண்டும் மசாலாவுக்குள்ளே இறக்கி நம்மைக் கரைத்துவிட்டார்..!

அமலாபாலின் பால் வடியும் முகத்தில் இப்படியொரு டெர்ரர் இருக்குமா என்று நினைக்கவில்லை. அமெரிக்க மாப்பிள்ளையுடன் காரில் சென்று கொண்டிருக்கும்போது ஆர்யாவுக்கு வைக்கின்ற லிப் கிஸ்ஸிலேயே தியேட்டரில் பாதி திட்டுக்கள் ஆர்யாவுக்கு அள்ளி வீசப்பட்டது..! அம்மணி ஏற்கெனவே அவரைக்காயை பாதியாய் அறுத்ததுபோலத்தான் இருக்கிறார். இதில் டான்ஸும் செய்தால் எப்படி..? தாங்க முடியலை.. ஆனாலும் அவருடைய கண்கள் என்னமோ செய்கின்றன..!

3 காட்சிகள் என்றாலும் நச் என்று மனதில் நிற்கிறார் நாசர். முதல் முறை வந்த வேகத்தில் திரும்பும்போது ஸ்டேஷனில் இருக்கும் தப்படிப்பவர்களை அடிக்கச் சொல்லிவிட்டு, தப்பு அடிக்கும் வேகத்தில் தன் தலையை மட்டும் ஆட்டி ஆக்சனும், டான்ஸ் மூவ்மெண்ட்ஸும் கொடுக்கிறாரே மனுஷன்..! வாவ்.. பிறவிக் கலைஞரய்யா இவர்..!

தம்பி இராமையாதான் இன்னொரு குறிப்பிடத்தக்க ஆக்டர். பிழைத்து வந்தவுடன் மாதவன் கேட்கும் “என்னை விட்டுட்டு ஏன் ஓடினீங்க..?” என்ற கேள்விக்குப் பின்பு கதை மாறும் அபாயம் இருந்ததால், “எல்லாம் உங்க மேல இருந்த ஒரு நம்பிக்கைலதான்..” என்ற அவரது பதிலுக்குப் பின்புதான் நமக்கே ஆசுவாசம் ஏற்படுகிறது.. திரைக்கதைக்கு ஒரு பாராட்டு..!

ஒளிப்பதிவு நீரவ்ஷா. பாடல் காட்சிகளில் அக்கா, தங்கைகளையே நளினமாகக் காட்டி திரைக்கு அழகு சேர்த்திருக்கிறார். பப்பரப்பா பாடல் காட்சியில் ஜொலிக்கிறது திரை. ஆனாலும் பாடலுடன் ஒப்பிட்டால் அந்தப் பாடலின் காட்சியமைப்பு சுமார்தான்..!

படத்தில்  ஒட்டவே ஒட்டாதது சண்டைக் காட்சிகள்தான். ஆர்யாவுக்கும், மாதவனுக்கும் அப்படியொன்றும் வயசாகிவிடவில்லையே..! ஏன் இப்படி? மோகன்லாலும், மம்முட்டியும் போடும் சண்டைகள் போல எடுத்துத் திணித்திருக்கிறார்கள்.. ஸ்பீடே இல்லாத ஸ்போர்ட்ஸ் கார் போல..!

லிங்குசாமியின் உடன் பிறவா சகோதரர் நா.முத்துக்குமார் அனைத்து பாடல்களையும் எழுதியிருக்கிறார். சந்தேகமே இல்லாமல் ‘பப்பரப்பா’ பாட்டு ஹிட்டுதான்.  கூடவே  ‘கட்டிப் பிடி என்னை’ மற்றும் ‘தையத் தக்கா’ போன்ற பாடல்களும் லிங்குசாமியின் முந்தைய படங்களைத்தான் நமக்கு நியாபகப்படுத்துகின்றன..!

என்னதான் மசாலா என்றாலும், ஒரு லாஜிக் வேண்டாமா..? போலீஸ் ஸ்டேஷன் வாசலில் கொலை நடக்கிறது..! போலீஸ் இன்ஸ்பெக்டரையே அடித்துத் துவைக்கிறார்கள்..! 10 போலீஸோடு போனாலே டிரவுசர் கிழிந்துவிடும் அபாயத்தில் தப்பி ஓடுவார்களே.. எதற்கு இந்த ஹீரோயிஸம் என்பவர்கள் அமைதியாகிவிடுங்கள்..!

லாஜிக்கே பார்க்கக் கூடாத சினிமா இது என்பதால் இது போன்று யோசித்து தலையைப் பிய்த்துக் கொள்ள வேண்டாம்.. “ச்சும்மா சிறுத்தை மாதிரி சீறுது..” என்கிறார்கள் என்னுடன் படம் பார்த்த இளசுகள். அவர்களுக்கு ஏற்றாற்போலவே காட்சிகளை வைத்து கடைசிவரையிலும் கொஞ்சம் அந்த வேகத்தை இறக்கிவிடாமல் பார்த்துக் கொண்டிருக்கிறார் லிங்குசாமி.!

இப்போதெல்லாம் சினிமா பார்க்கப் போனாலே அது விமர்சனம் எழுதத்தான் என்பதால் உண்மையிலேயே என்னால் பல சினிமாக்களை ரசிக்க முடியவில்லை. சினிமா விமர்சனாகவே என்னை நான் வரித்துக் கொண்டிருப்பதால், சினிமாக்காரனாகவும் இருக்க முடியவில்லை..! ரெண்டுங்கெட்டான் நிலைமை..

ஆனால் திருச்சி ஊர்வசி தியேட்டரில் நான் பார்த்த இந்தக் காட்சியில் ரசிகர்களின் ஆரவாரம், கரகோஷம் அனைத்துமே சில மணி நேர சந்தோஷத்தின் வெளிப்பாடு. அவ்வளவுதான். அவர்களுக்குத் தேவை ஜஸ்ட் டைம் பாஸ்.. அதனை தெளிவாக உணர்ந்து எடுத்திருக்கிறார் லிங்குசாமி..

திருப்பதி பிரதர்ஸ் சார்பில் படத்தை எடுத்து நல்ல விலைக்கு யூ டிவிக்கு விற்றிருக்கிறார். இதிலேயே கணிசமாக, கோடிகளில் லாபம் பார்த்துவிட்ட லிங்குசாமிக்கு இந்தப் படத்தின் வெளியீட்டின்போது கிடைத்திருக்கும் இந்த வெற்றியும் நிச்சயம் லாபம்தான்..!

வேட்டை - மசாலா பிரியர்களுக்கு ஏற்ற வேட்டை..!

36 comments:

கோவை நேரம் said...

பொங்கலுக்கு முதல் ரிலீஸ் ....விமர்சனம் நன்றாக இருக்கிறது.ஆனாலும் நண்பனை விட அதிகம் என்பதில் கொஞ்சம் முரண் பட வேண்டி இருக்கிறது..

CrazyBugger said...

Vettai - theeviramillai

Philosophy Prabhakaran said...

// சந்தேகமேயில்லாமல் இந்த வருடத்தின் முதல் ஹிட் இதுவே என்று சொல்லிவிடலாம்..! //

ரைட்டு... ஒரு பானை பதிவுக்கு இந்த ஒருவரி சாம்பிள்...

பொதினியிலிருந்து... கிருபாகரன் said...

//இப்போதெல்லாம் சினிமா பார்க்கப் போனாலே அது விமர்சனம் எழுதத்தான் என்பதால் உண்மையிலேயே என்னால் பல சினிமாக்களை ரசிக்க முடியவில்லை. சினிமா விமர்சனாகவே என்னை நான் வரித்துக் கொண்டிருப்பதால், சினிமாக்காரனாகவும் இருக்க முடியவில்லை..! ரெண்டுங்கெட்டான் நிலைமை..//
ஒரு மிக‌ பெரிய‌ உண்மைனா..

ஹாலிவுட்ரசிகன் said...

விபரமான விமர்சனம். ஆல் சப்ஜெக்ட் கவரேஜ். நன்றி தல.

// சந்தேகமேயில்லாமல் இந்த வருடத்தின் முதல் ஹிட் இதுவே என்று சொல்லிவிடலாம்..! //

????

Unknown said...

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும்
நண்பர்களுக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

தமிழர் வாழ்வு மேம்படும் என்ற நம்பிக்கையோடு..

a said...

//
இப்போதெல்லாம் சினிமா பார்க்கப் போனாலே அது விமர்சனம் எழுதத்தான் என்பதால் உண்மையிலேயே என்னால் பல சினிமாக்களை ரசிக்க முடியவில்லை. சினிமா விமர்சனாகவே என்னை நான் வரித்துக் கொண்டிருப்பதால், சினிமாக்காரனாகவும் இருக்க முடியவில்லை..! ரெண்டுங்கெட்டான் நிலைமை..
//
Appadiya????



Read more: http://truetamilans.blogspot.com/2012/01/blog-post_14.html#ixzz1jTIABnsA

அக்கப்போரு said...

இப்போதெல்லாம் சினிமா பார்க்கப் போனாலே அது விமர்சனம் எழுதத்தான் என்பதால் உண்மையிலேயே என்னால் பல சினிமாக்களை ரசிக்க முடியவில்லை. சினிமா விமர்சனாகவே என்னை நான் வரித்துக் கொண்டிருப்பதால், சினிமாக்காரனாகவும் இருக்க முடியவில்லை..! ரெண்டுங்கெட்டான் நிலைமை..

சரவனாண்ணே கண்ணத் தொட. சிரி. ம்ம் இப்ப எப்டி இருக்கு அத விட்டுட்டு...

அக்கப்போரு said...

சந்தேகமேயில்லாமல் இந்த வருடத்தின் முதல் ஹிட் இதுவே என்று சொல்லிவிடலாம்///
வெளங்கிரும்.... ஒரு வேள இந்த வருஷம் பிறந்ததே ராகு காலம் தானோ

அக்கப்போரு said...

இரண்டு ஹீரோயின்கள். அக்காவா சமீரா ரெட்டியும், தங்கையாக அமலாபாலும்.//
அண்ணே இத வச்சு தான் படம் ஹிட்டு சொன்னீங்களா? குசும்புன்னே உங்களுக்கு

சேலம் தேவா said...

//இப்போதெல்லாம் சினிமா பார்க்கப் போனாலே அது விமர்சனம் எழுதத்தான் என்பதால் உண்மையிலேயே என்னால் பல சினிமாக்களை ரசிக்க முடியவில்லை. சினிமா விமர்சனாகவே என்னை நான் வரித்துக் கொண்டிருப்பதால், சினிமாக்காரனாகவும் இருக்க முடியவில்லை..! ரெண்டுங்கெட்டான் நிலைமை..//

சினிமான்னு இல்லண்ணே ..எதப்பாத்தாலும் அதிலிருந்து பதிவு தேத்த முடியுமான்னு ஆயிப்போச்சு பொழப்பு...

Anonymous said...

Singer Chinmaye dubbed for Sameera Reddy. I think thats the only voice which can suit Sameera.

Cable சங்கர் said...

//
ரைட்டு... ஒரு பானை பதிவுக்கு இந்த ஒருவரி சாம்பிள்...//]
]

praba,, இவருக்கு ஒரு ப்ளாக் ஓப்பன் பண்ணனும். படம் ரிலீசான முத நாளே.. விநியோகஸ்தர்கள் ரிப்போர்ட்டை கொடுக்கிற ஒரே ஆளு இவருதான் ஒலகத்திலேயே.

அப்புறம். 15 லட்சத்தில எடுத்த படத்தையே 11/2 கோடின்னு சொன்னவருதானே..:))

உண்மைத்தமிழன் said...

கோவை நேரம் ஸார்..

நண்பன் ரிசல்ட் இதுவரையில் கலவையாகத்தான் வந்து கொண்டிருக்கிறது. படத்தின் நீளமும், மேட்டுக்குடி கல்லூரி கதையும் லோக்கல் பார்ட்டிகளை அதிகம் கவரவில்லை என்கிறார்கள்..!

ஆனால் வசூல் ரீதியாகப் பார்த்தால், வேட்டையை முந்திவிடும் என்றே நம்புகிறார்கள்..!

உண்மைத்தமிழன் said...

கிரேஸிபக்கர்

தீவிரமில்லை என்கிறீர்கள். எனக்குத்தான் புரியவில்லை..!

உண்மைத்தமிழன் said...

பிலாசபி ஸார்..

இது அன்றைக்கு படம் பார்த்த வேகத்தில், சுற்றுப்புறச் சூழலையும், கிடைத்தத் தகவலையும் வைத்துச் சொல்கிறேன்.. படம் பாருங்கள். உங்களுக்குப் பிடிக்கலாம்..!

உண்மைத்தமிழன் said...

பொதினியில் இருந்து பிரபாகரன்..

வருகைக்கு நன்றி..!

உண்மைத்தமிழன் said...

ஹாலிவுட் ரசிகன் ஸார்..

எல்லாம் ஒரு எதிர்பார்ப்புதான்..!

உண்மைத்தமிழன் said...

அப்பு ஸார்.. உங்களுக்கும் எனது பொங்கல் நல்வாழ்த்துகள்..!

உண்மைத்தமிழன் said...

வழிப்போக்கன் யோகேஷ்..

உண்மையைத்தான் சொல்றேன்.. தியேட்டரில் ரசிகர்கள் கை தட்டிய பெரும்பாலான காட்சிகளிலெல்லாம் நான் அமைதி காத்தேன்.. அவர்களுடன் ஒன்றிணைய முடியலியே.. என்ன காரணம்..

உண்மைத்தமிழன் said...

அக்கப்போரு..

கண்ணைத் தொடச்சிட்டு, சிரிச்சுக்கிட்டேதான் இந்தப் பதிவை எழுதினேன்..!

உண்மைத்தமிழன் said...

அக்கப்போரு.. வேற வழியில்லை.. மக்கள் ரசனை எப்படியோ அப்படித்தான் கலைஞர்களும் இருப்பார்கள்..!

உண்மைத்தமிழன் said...

அக்கப்போரு.. உம்மோட பெரிய அக்கப்போரா இருக்குய்யா.. சமீரா ரெட்டி அக்காவை பிடிக்கலைன்னாகூட பரவாயில்லை.. நம்ம அமலாபாலையுமா பிடிக்கலை.. நீயெல்லாம் ஒரு தமிழன்தானா..

உண்மைத்தமிழன் said...

சேலம் தேவா..

மிகச் சரியாகச் சொன்னீர்கள். இணையத்திற்கு அடிமையாகிவிட்டோம் நாம்..!

உண்மைத்தமிழன் said...

ஏஸி ஸார்..

நீர் சொல்வது உண்மையாய் இருந்தால் சின்மயியை கொலை செய்தால்கூட தேவலை என்று தோன்றுகிறது..!

உண்மைத்தமிழன் said...

கேபிள் ஸார்..

இது அவர்களது நம்பிக்கையும், எனது நம்பிக்கையும்கூட.. ரசிகர்களின் ஆரவாரத்தை நேரில் பார்த்ததினால் எழுதினேன்.. உங்களுக்குத்தான் நான் உண்மை எழுதினா பிடிக்காதே.. இப்போ ரொம்ப முத்திப் போச்சுன்னு நினைக்கிறேன்..

அப்புறம் அன்னிக்கு 85-ன்னு சொன்னீங்க.. இன்னிக்கு 15-ன்னு சர்ருன்னு இறங்கிட்டீங்க.. நீங்க மொதல்ல 15-க்கு ஏதாவது எடுத்துக் காட்டுங்கண்ணே.. நம்புறேன்..!

ஜெட்லி... said...

வேட்டை - மொக்கை....ணே...
ஒன்னுமே இல்ல படத்தில...

rajasundararajan said...

ஒன்னும் புரியலை, தம்பி: நீங்க 'நல்லா இருக்கு'ன்னு எழுதியிருக்கீங்க; கேபிள் இந்தப் படம் 'குப்பை'ங்கிற மாதிரி எழுதி இருக்காரு.

நீங்க 'தாத்தா'-'ஆத்தா' அரசியலைத் தவிர இதுல எல்லாம் அரசியல் எழுதமாட்டீங்கன்னு நம்புறேன். கேபிள் போற போக்குக்கு, ஒரு தயாரிப்பாளர் மாட்டுனா, தமிழுக்கு ஒரு சத்யஜித் ரே'ன்னு தோணுது.

அவரெ வாசிச்சுட்டுப் படம் பார்க்க வேணாம்னு இருந்தேன். நீங்க ஒருநாள்ப் பொழுதுபோக்கெ உறுதி பண்ணிட்டீங்க. நன்றி, தம்பி.

Anonymous said...

உண்மைத்தமிழன் சார்,
சொல்றேன்னு தப்பா நெனைச்சுக்காதீங்க... நீங்க நெனைச்சுகிட்டாலும் பரவால்ல... உங்களுக்கு விமரிசனம் எழுத வரல சார்... தயவு செஞ்சு இனி விமர்சனம் கிற பேர்ல இப்டி எழுதாதிங்க!

உண்மைத்தமிழன் said...

ஜெட்லி தம்பி..

படத்தில் எதுவுமில்லைதான். ஆனாலும் மக்கள்ஸ் ரசித்தார்கள். அதைத்தான் எழுதினேன்..! நம் பார்வையும், விசிலடிச்சான் குஞ்சுகளின் பார்வையும் வேறு, வேறாகத்தான் உள்ளது..!

உண்மைத்தமிழன் said...

ராஜசுந்தர்ராஜன் ஐயா..

ஒவ்வொருவரின் ரசனையும் வேறு, வேறாக உள்ளது. தியேட்டரில் ரசிகர்களின் ஆரவாரத்தில் அமைதியாக இருந்தது நான்தான்.. படத்தில் எதுவுமே புதிதில்லை என்பது உண்மை. ஆனால் பொழுது போக்கை விரும்பும் ரசிகர்களுக்கு ஏற்றவாறு தந்துள்ளார் லிங்குசாமி..!

விமர்சனம் செய்கின்ற வேலை நமக்குத்தானே.. அவர்களுக்கில்லையே..!

உண்மைத்தமிழன் said...

நந்து ஸார்..

உங்களது கருத்துக்கு நன்றி.. நினைவில் வைத்துக் கொள்கிறேன்..!

Anonymous said...

சார் நானும் படத்த பார்த்தேன்.. வேறு சில விமர்சகர்கள் சொல்ற மாதிரி பாடம் ஒன்னும் அவ்வளவு மொக்க இல்ல(அது என்ன வாக்கா தகராறோ)
நீங்க சொன்ன மாதிரியே நம்மள மாதிரி ரசிகர்களுக்கு பாடம் நல்லாவே புடிச்சிருக்கு... ஆனா "நண்பன்" ஒன்னும் நீங்க சொல்ற மாதிரி பிரச்சினையா இல்லையே.. ஹிந்தி படம் கொடுத்த அதே உணர்வை தமிழ் படமும் கொடுத்துச்சு.. எனக்குனா ரெண்டும் சூப்பர்,,,

உண்மைத்தமிழன் said...

[[[மொக்கராசு மாமா said...
சார் நானும் படத்த பார்த்தேன்.. வேறு சில விமர்சகர்கள் சொல்ற மாதிரி பாடம் ஒன்னும் அவ்வளவு மொக்க இல்ல(அது என்ன வாக்கா தகராறோ)
நீங்க சொன்ன மாதிரியே நம்மள மாதிரி ரசிகர்களுக்கு பாடம் நல்லாவே புடிச்சிருக்கு.]]]

நன்றிங்கண்ணா..! எனக்குப் படம் பிடிக்கலைதான். ஆனால் பெருவாரியான ரசிகர்களுக்கு படம் பிடித்திருக்கிறது என்பதைத்தான் இங்கே பதிவு செய்திருக்கிறேன்..!

[[[ஆனா "நண்பன்" ஒன்னும் நீங்க சொல்ற மாதிரி பிரச்சினையா இல்லையே. ஹிந்தி படம் கொடுத்த அதே உணர்வை தமிழ் படமும் கொடுத்துச்சு. எனக்குனா ரெண்டும் சூப்பர்.]]]

அப்படியா..? சந்தோஷம்..!

Anonymous said...

என் வலையில்;

ஆர்யமாதவனின் 'வேட்டை' – பப்ப பப்பரபாய்ங்!

உண்மைத்தமிழன் said...

[[[Chilled beers said...

என் வலையில்;

ஆர்யமாதவனின் 'வேட்டை' – பப்ப பப்பரபாய்ங்!]]]

வருகைக்கு நன்றிகள் ஸார்..!

பிரிச்சு மேய்ஞ்சிருக்கீங்க..!