தமிழ்மணம் நிர்வாகத்திற்கு நன்றியும், ஒரு கோரிக்கையும்..!

15-01-2011

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

பாராட்டுக்கு மயங்காதவர்கள் உண்டா..? அதுலேயும் என்னை மாதிரியான சராசரிகளுக்கு வலைத்தளங்களில் இத்தனை மணி நேரங்கள் செலவழித்து எழுதுவதற்கு ஏதேனும் ஒரு அங்கீகாரம் கிடைத்துவிட்டால் அது நிச்சயம் எங்களை மென்மேலும் எழுதத்தான் வைக்கும்.

தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக இந்தாண்டும் தமிழ்மணம் நடத்திய வருடாந்திரப் போட்டியில் கலந்து கொண்டேன். இந்த முறை மூன்று பிரிவுகளில் போட்டியிட்டும் சினிமா விமர்சனப் பிரிவில் மட்டும் இரண்டாம் பரிசு கிடைத்துள்ளது.


இந்தாண்டு "மகளிர் பிரிவிற்கு" என்றே தனிப் பிரிவை ஒதுக்கி அதற்கு விருது கொடுத்தமைக்கும் தமிழ்மணம் நிர்வாகிகளுக்கு ஒரு ஸ்பெஷல் நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன்..!

இந்த முறை தமிழ்மணம் நிர்வாகம் பதிவுகளைத் தேர்வு செய்ததில் சிறிதளவு மாற்றம் செய்திருந்தது. பதிவர்கள், வாசகர்கள் இவர்களையும் தாண்டி நடுவர்களாக சிலரையும் ஈடுபடுத்தி வடித்துக் கட்டும் வேலையையும் செய்திருப்பது நல்லதுதான்..

என்றாலும் இந்த நடுவர்கள் விஷயத்தில் பதிவர்களையே பயன்படுத்தியிருப்பது எனக்குச் சரியான விஷயமாகப்படவில்லை. தமிழ்மணம் நிர்வாகம் எனக்கும் கடிதம் மூலம் இது பற்றித் தெரிவித்தது.

அப்போது நான் அவர்களுக்குக் கொடுத்த பதிலில், “அழைப்பு விடுத்தமைக்கு தமிழ்மணம் குழுவினருக்கு மிக்க நன்றிகள்..! ஆனால் இந்த ஆண்டும் நான் போட்டியில் கலந்து கொள்ளவிருக்கிறேன். இதனால் நான் நடுவராக பணியாற்றுவது கொஞ்சமும் பொறுத்தமாக இருக்காது என்பதால் தங்களுடைய அழைப்பை ஏற்க முடியாமைக்கு வருந்துகிறேன்.

இந்த நேரத்தில் தங்களிடம் ஒரு கோரிக்கை.. போட்டியில் கலந்து கொள்பவர்களை தயவு செய்து நடுவர்களாக வைக்காதீர்கள். அதோடு கூடவே இங்கேயே குழு, குழுவாக இருப்பதால் தங்களுடைய குழுவைச் சேர்ந்தவர்களுக்கு அவர்கள்  வாக்களிக்கும் வாய்ப்பு நிறையவே உண்டு..! சற்று யோசியுங்கள்..!” என்று குறிப்பிட்டிருந்தேன்.

இதற்குப் பதிலளித்த தமிழ்மணம் நிர்வாகம், “உங்கள் மடலுக்கும் பரிசீலனைக்கும் நன்றி. கவனத்தில் கொள்ள வேண்டிய சில கருத்துக்களைச் சொல்லி இருக்கிறீர்கள். ஆனால், இவ்வருடம் முதலில் இம்முறையைச் சோதனை செய்ய முனைகிறோம். ஒரு பிரிவில் போட்டியிடும் பதிவர் நிச்சயமாய் அந்தப் பிரிவுக்கு நடுவராய் இருக்க முடியாது. ஆனால், இருபது பிரிவுகள் இருக்கிற நிலையில், ஒருவர் அதிகபட்சம் மூன்று பிரிவுகளுக்கு மட்டும் போட்டியிடலாம் எனும்போது, மற்ற பிரிவுகளில் நடுவராய் இருப்பது குறையாக இருக்காது என நினைக்கிறோம். அதோடு, முதல் இரண்டு சுற்றுக்களில் பதிவர்-வாசகர் வாக்குகளின் முடிவில் தெரிவாகும் ஐந்து படைப்புக்களே நடுவர் சுற்றுக்குச் செல்லும் என்பதால் அங்கேயே குழுச் சார்பு சற்று விடுபட்டுப் போய்விடும். அதோடு நடுவர் சுற்றிலும் ஒன்றிற்கும் மேற்பட்ட நடுவர்கள் இருப்பதால், மொத்தத்தில் தேர்வு நியாயமானதாகவே இருக்கும் என நாங்கள் நம்புகிறோம். ஏதேனும் பிரச்சினைகள் ஏற்பட்டால் அடுத்த முறை சரி செய்து கொள்ளலாம்.” என்று சொல்லியிருந்தார்கள்.

ஆனாலும் என் மனம் இதற்கும் ஒப்பவில்லை. இதனால் மீண்டும் அவர்களுக்கு இவ்வாறு பதிலளித்தேன்.

“தங்களுடைய பதிலுரைக்கு மிக்க நன்றிகள் ஸார்..! எனக்குத் தெரிந்த விஷயம் கட்டுரைகள் எழுதுவது மட்டுமே.. நான் வேறு எந்தப் பிரிவிலும் தெளிவானவனோ, மிகப் பெரும் பண்டிதனோ இல்லை. அத்தோடு மற்ற பிரிவுகளில் நான் வித்தகனும் இல்லை. தகுதியே இல்லாமல் நடுவராக இருந்து பணியாற்ற என் மனம் ஒப்பவில்லை.. உங்களது அழைப்புக்கு மிக்க நன்றி.. என்னை நடுவர் குழுவில்  பரிசீலிக்கக்கூட வேண்டாம்..! விட்டுவிடுங்கள்..”

- இவ்வாறு குறிப்பிட்டிருந்தேன்.

தமிழ்மணம் நான் போட்டியிடாத பிரிவுகளை எனக்கு அனுப்பினாலும் அதனை பரிசீலிக்கும் அளவுக்கு எனக்குத் திறமையுள்ளதா? தகுதியுள்ளதா? என்பதே எனக்குத் தெரியாத நிலையில் அதனை ஏற்றுக் கொள்வது நியாயமில்லைதானே?

ஆனாலும் அழைப்பு விடுத்தமைக்கு மிக்க நன்றிகளை தமிழ்மணம் நிர்வாகிகளுக்கு தெரிவித்துக் கொள்கிறேன். அடுத்த வருடம் இந்த சிறிய குறையையும் நிவர்த்தி செய்து பதிவுகளைத் தேர்ந்தெடுப்பார்கள் என்றே நம்புகிறேன்.

இன்னொரு முக்கிய விஷயம். சென்ற ஆண்டே "2008-தமிழ்மணம் விருது" பெற்றவர்களின் பதிவுகளை ஒரு புத்தகமாகக் கொண்டு வருவதாக தமிழ்மணம் நிர்வாகிகள் கூறியிருந்தார்கள். அதற்கான ஒப்புதலைக்கூட 2009, ஏப்ரல் 20-ம் தேதிக்குள் அனுப்பி வைக்கும்படி இமெயிலில் கேட்டிருந்தார்கள். நானும் அனுப்பியிருந்தேன். இதோ இப்போது.. ஓராண்டை நெருங்கிவிட்டது.. அந்தப் புத்தகம் என்ன ஆனது என்று தெரியவில்லை.

நிச்சயம் அதுவொரு நல்ல முயற்சிதான்..! தமிழ்மணம் நிர்வாகம் விரைந்து செயலாற்றி அந்தப் புத்தகத்தை வெளிக்கொணர வேண்டுகிறேன். தொடர்ந்து இந்த வருடம் வெற்றி பெற்ற பதிவர்களின் புத்தகத்தையும் சேர்த்து வெளியிட்டால் சிறப்பாக இருக்கும்.

சென்னை பதிப்பாளர்களிடம் நேரில் சென்று பேசும் வேலைகள், மற்றும் பதிப்பு வேலைகள் தொடர்பாக தமிழ்மணம் நிர்வாகத்தினருக்கு உதவிக்கு ஆள் தேவையெனில் அந்த உதவியையும் செய்ய நான் தயாராக இருக்கிறேன்..! எப்படியோ புத்தக வடிவில் அவைகள் வெளிவந்தால் போதும்..!

மேலும், சீனியர் பதிவர்கள் என்ற ரீதியிலும், ஏற்கெனவே இரண்டு வருடங்களாகத் தொடர்ந்து விருதுகளைப் பெற்று வந்திருக்கிறார்கள் என்பதாலும் இந்த ஆண்டு அண்ணன்மார்கள் வினவு, கோவியார் இருவரும் இந்தப் போட்டியில் கலந்து கொள்ளவில்லையாம்.

இவர்கள் இருவரைப் பற்றியும் வலையுலகமே நன்கறியும். இவர்கள் அளவுக்கு நான் எழுத்திலும், பேச்சிலும் பெரியவன் இல்லை. தொடர்ந்து எழுதி வந்து இப்போதுதான் அனைவரும் படிப்பதுபோல் சீர்ப்படுத்தி வரும் மாணவனாகவே என்னை நான் உணர்கிறேன். எனவே அடுத்தாண்டு நடக்கும் தமிழ்மண விருதுப் போட்டிகளில்கூட நான் நிச்சயம் கலந்து கொள்வேன் என்பதை எனது அப்பன் முருகனின் தலை மீது அடித்து சத்தியம் செய்கிறேன்..!

எனக்கு வாக்களித்த பதிவுலகத் திலகங்களுக்கும், வாசகர் செல்லங்களுக்கும், உற்சாகமளித்த தோழர்களுக்கும், எப்போதும் தட்டிக் கொடுக்கும் தமிழ்மணம் நிர்வாகத்திற்கும், பரிசளிக்கக் காத்திருக்கும் நிறுவனங்களின் உரிமையாளர்களுக்கும் எனது கோடானு கோடி நன்றி..! 

59 comments:

vasu balaji said...

வாழ்த்துக்கள் தலைவரே:)

எஸ்.கே said...

மனமார்ந்த வாழ்த்துக்கள்!
இனிய பொங்கல் வாழ்த்துக்கள்!

Unknown said...

விருது பெற்றமைக்கு வாழ்த்துக்கள்..
மேலும் பல விருதுகள் பெற வாழ்த்துக்கள்..

Unknown said...

சல்யூட் அண்ணே...

Jackiesekar said...

வாழ்த்துக்கள் அண்ணே...

நசரேயன் said...

வாழ்த்துக்கள் அண்ணே

R. Gopi said...

வாழ்த்துகள் சரவணன்.

ஸ்ரீராம். said...

வாழ்த்துக்கள்..வாழ்த்துக்கள்.

தீப்பெட்டி said...

வாழ்த்துகள் பாஸ்..

வில்லங்கம் விக்னேஷ் said...

தமிழமணம் திரைமானத்தைப்பொல உன்மைதமிழன் தமிழ்மன்ம் என்ரு தனி திரடி ஆரம்பிகவேண்டும் என்ரு கோரிகை விடுகிரோம்

kanagu said...

போட்டியில் வென்றமைக்கு வாழ்த்துக்கள் அண்ணா.. :)

புத்தகம் வெளிவந்தால் நன்றாக இருக்கும் :)

Unknown said...

மனமார்ந்த வாழ்த்துக்கள்!
இனிய பொங்கல் வாழ்த்துக்கள்!

ஜோதிஜி said...

போதும் என்றே மனமே பொன் செய்யும் மருந்தாமே சரவணன். அடுத்த வருடமும் இந்த பதக்கம் வாங்கி எங்கே மாட்டப் போறீங்க. நீங்க தான் அகில உலக புகழ் அடைந்த அப்பன் முருகன் போல ஆயிட்டீங்களே. புதியவர்களுக்கு வழிவிடலாமே?

கலையன்பன் said...

பரிசு பெற்றமைக்கு வாழ்த்துக்கள்!
உங்களுக்கும் அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்கள்!
-கலையன்பன்.

(இது பாடல் பற்றிய தேடல்!)
ஆரம்பக் காலம் ஒருபக்கத் தாளம்!!

Menaga Sathia said...

வாழ்த்துக்கள் அண்ணா!!

பிரதீபா said...

விருது பெற்றமைக்கு வாழ்த்துக்கள்.

நடுவர் குழுவின் பெயர்களைப் பார்த்து எனக்கும் நீங்கள் கேட்ட இதே சந்தேகம் எழுந்தது.
அதுபோக ஒரு கேள்வி இருந்தது. இருபது பிரிவில் தலா ஐந்தென்று வைத்தால் கூட நூறு பதிவுகளை மக்கள் படித்தா ஓட்டுப் போட்டிருப்பார்கள்? சில பிரிவுகள் படிக்கப்பட்டு வாக்குகள் பெற்றிருக்கும்; சில பதிவர்களின் பெயர்,எழுத்துத் தரத்துக்காக; சில விளம்பரங்களால்; சில நட்புக்காக.. முடிவுகளைப் பார்த்த வரையில் எதிர்பார்த்த மிகச்சிலரே பரிசு பெற்றிருக்கிறார்கள் (நீங்களும் சந்தேகமின்றி அதில் ஒருவர்). மற்றவர்கள்?

T.V.ராதாகிருஷ்ணன் said...

விருது பெற்றமைக்கு வாழ்த்துக்கள்..

Unknown said...

தமிழமண விருதுக்கு வாழ்த்துக்கள்..
இனிய பொங்கல் வாழ்த்துக்கள்!

உமர் | Umar said...

வாழ்த்துகள் அண்ணே. அடிக்கடி முருகன் தலையிலடித்து சத்தியம் செய்யாதீர்கள். நீங்க அடிச்சி அடிச்சி தலை உள்ள போயிறப் போவுது.

உண்மைத்தமிழன் said...

[[[வானம்பாடிகள் said...

வாழ்த்துக்கள் தலைவரே:)]]]

யார் தலைவரு..? நீங்கதாண்ணே தலைவரு.. நான் சாதாரணத் தொண்டன் மட்டும்தான்.. நன்றிங்கண்ணே..!

உண்மைத்தமிழன் said...

[[[எஸ்.கே said...
மனமார்ந்த வாழ்த்துக்கள்! இனிய பொங்கல் வாழ்த்துக்கள்!]]]

நன்றிகள் எஸ்.கே. ஸார்..! உங்களுக்கும் எனது பொங்கல் நல்வாழ்த்துகள்..!

உண்மைத்தமிழன் said...

[[[பாரத்... பாரதி... said...
விருது பெற்றமைக்கு வாழ்த்துக்கள். மேலும் பல விருதுகள் பெற வாழ்த்துக்கள்..]]]

நன்றி பாரத் பாரதி..!

உண்மைத்தமிழன் said...

[[[முகிலன் said...
சல்யூட் அண்ணே...]]]

இதுக்கெதுக்கு சல்யூட்.. வணக்கம்ண்ணே..! நன்றிகள்ண்ணே..!

உண்மைத்தமிழன் said...

[[[ஜாக்கி சேகர் said...
வாழ்த்துக்கள் அண்ணே...]]]

நன்றி தம்பி..!

உண்மைத்தமிழன் said...

[[[நசரேயன் said...
வாழ்த்துக்கள் அண்ணே..]]]

நன்றிகள் அண்ணே..!

உண்மைத்தமிழன் said...

[[[Gopi Ramamoorthy said...

வாழ்த்துகள் சரவணன்.]]]

நன்றி கோபி..!

உண்மைத்தமிழன் said...

[[[ஸ்ரீராம். said...
வாழ்த்துக்கள்..வாழ்த்துக்கள்.]]]

மிக்க நன்றி..!

உண்மைத்தமிழன் said...

[[[தீப்பெட்டி said...

வாழ்த்துகள் பாஸ்..]]]

நன்றி பாஸ்..!

உண்மைத்தமிழன் said...

[[[வில்லங்கம் விக்னேஷ் said...
தமிழமணம் திரைமானத்தைப்பொல உன்மைதமிழன் தமிழ்மன்ம் என்ரு தனி திரடி ஆரம்பிகவேண்டும் என்ரு கோரிகை விடுகிரோம்.]]]

ஏன் இப்படியொரு வில்லங்கமான கோரிக்கை விக்னேஷ்..!

இது நல்லதுக்கில்லீங்கண்ணா.. குப்புறக் கவுக்குற மாதிரியிருக்கு..!

உண்மைத்தமிழன் said...

[[[kanagu said...

போட்டியில் வென்றமைக்கு வாழ்த்துக்கள் அண்ணா.. :)

புத்தகம் வெளிவந்தால் நன்றாக இருக்கும் :)]]]

தமிழ்மணம் நிர்வாகம் நிச்சயம் நடவடிக்கை எடுக்கும் என்று எதிர்பார்க்கிறேன்..!

உண்மைத்தமிழன் said...

[[[விக்கி உலகம் said...
மனமார்ந்த வாழ்த்துக்கள்! இனிய பொங்கல் வாழ்த்துக்கள்!]]]

விக்கி.. உமக்கும் எனது பொங்கல் வாழ்த்துகள்..!

உண்மைத்தமிழன் said...

[[[ஜோதிஜி said...
போதும் என்றே மனமே பொன் செய்யும் மருந்தாமே சரவணன். அடுத்த வருடமும் இந்த பதக்கம் வாங்கி எங்கே மாட்டப் போறீங்க. நீங்கதான் அகில உலக புகழ் அடைந்த அப்பன் முருகன் போல ஆயிட்டீங்களே. புதியவர்களுக்கு வழிவிடலாமே?]]]

அடப் போங்கண்ணே.. இதுவரைக்கும் அகில உலகமெல்லாம் புகழடையலை.. அதுவரைக்கும் எனது போட்டி ஆர்வம் குறையாது..!

உண்மைத்தமிழன் said...

[[[கலையன்பன் said...

பரிசு பெற்றமைக்கு வாழ்த்துக்கள்!
உங்களுக்கும் அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்கள்!
-கலையன்பன்.

(இது பாடல் பற்றிய தேடல்!)
ஆரம்பக் காலம் ஒரு பக்கத் தாளம்!!]]]

நன்றி கலையன்பன்..!

உண்மைத்தமிழன் said...

[[[S.Menaga said...
வாழ்த்துக்கள் அண்ணா!!]]]

நன்றி மேனகா..!

உண்மைத்தமிழன் said...

[[[பிரதீபா said...
விருது பெற்றமைக்கு வாழ்த்துக்கள்.
நடுவர் குழுவின் பெயர்களைப் பார்த்து எனக்கும் நீங்கள் கேட்ட இதே சந்தேகம் எழுந்தது. அதுபோக ஒரு கேள்வி இருந்தது.
இருபது பிரிவில் தலா ஐந்தென்று வைத்தால்கூட நூறு பதிவுகளை மக்கள் படித்தா ஓட்டுப் போட்டிருப்பார்கள்? சில பிரிவுகள் படிக்கப்பட்டு வாக்குகள் பெற்றிருக்கும்; சில பதிவர்களின் பெயர், எழுத்துத் தரத்துக்காக; சில விளம்பரங்களால்; சில நட்புக்காக.. முடிவுகளைப் பார்த்தவரையில் எதிர்பார்த்த மிகச் சிலரே பரிசு பெற்றிருக்கிறார்கள்(நீங்களும் சந்தேகமின்றி அதில் ஒருவர்). மற்றவர்கள்?]]]

வணக்கம் பிரதீபா.. நானும் ஆவலோடு எதிர்பார்த்த பலரது பெயர்கள் தேர்வுப் பட்டியலில் இல்லை.. பதிவர்களைவிடவும் வாசகர்கள் அதிகம்பேர் முகம் காட்டாமல் ஓட்டளித்திருப்பது போல் எனக்குத் தோன்றுகிறது..!

உண்மைத்தமிழன் said...

[[[T.V.ராதாகிருஷ்ணன் said...
விருது பெற்றமைக்கு வாழ்த்துக்கள்..]]]

நன்றி டிவிஆர் ஐயா..!

உண்மைத்தமிழன் said...

[[[ஜிஜி said...
தமிழமண விருதுக்கு வாழ்த்துக்கள்.. இனிய பொங்கல் வாழ்த்துக்கள்!]]]

நன்றி ஜிஜி..!

உண்மைத்தமிழன் said...

[[[middleclassmadhavi said...

வாழ்த்துக்கள்]]]

நன்றி மாதவிஜி..!

உண்மைத்தமிழன் said...

[[[கும்மி said...
வாழ்த்துகள் அண்ணே. அடிக்கடி முருகன் தலையிலடித்து சத்தியம் செய்யாதீர்கள். நீங்க அடிச்சி அடிச்சி தலை உள்ள போயிறப் போவுது.]]]

ச்சே.. ச்சே.. அப்படியெல்லாம் ஆகாது.. அவன் தலையை எவனாவது உடைக்க முடியுமா..? நம்ம கைதான் உடையும்..!

CS. Mohan Kumar said...

வாழ்த்துக்கள் உண்மைத்தமிழன் Sir..

ராம்ஜி_யாஹூ said...

அருமை

பன்னிக்குட்டி ராம்சாமி said...

வாழ்த்துக்கள் அண்ணே.... உங்களை வாழ்த்துவதே எங்களுக்கு பெருமைதான்!

தமிழ் உதயம் said...

மகிழ்ச்சி. வாழ்த்துக்கள் சார்.

உண்மைத்தமிழன் said...

[[[மோகன் குமார் said...
வாழ்த்துக்கள் உண்மைத்தமிழன் Sir..]]]

நன்றி மோகன் ஸார்..!

உண்மைத்தமிழன் said...

[[[ராம்ஜி_யாஹூ said...

அருமை]]]

பின்னூ்ட்டப் புயலுக்கு நன்றிகள்..!

உண்மைத்தமிழன் said...

[[[பன்னிக்குட்டி ராம்சாமி said...
வாழ்த்துக்கள் அண்ணே.... உங்களை வாழ்த்துவதே எங்களுக்கு பெருமைதான்!]]]

உங்களை மாதிரி தம்பிகள் இருப்பதே எனக்குப் பெருமைதான்..!

உண்மைத்தமிழன் said...

[[[தமிழ் உதயம் said...
மகிழ்ச்சி. வாழ்த்துக்கள் சார்.]]]

நன்றிகள் ஸார்..!

Indian Share Market said...

மனமார்ந்த வாழ்த்துக்கள் தலைவரே. இனிய பொங்கல் வாழ்த்துக்கள்!]

Prabu Krishna said...

மனமார்ந்த வாழ்த்துக்கள்!
அதீதம் இணைய இதழில் உங்களை அறிமுகப் படுத்தி உள்ளனர். வாழ்த்துக்கள் அதற்க்கும்.

http://www.atheetham.com/net.htm

Prasanna Rajan said...

இன்றைக்கு நாமெல்லாம் பல வேலைகளுக்கு நடுவே பதிவெழுதுகிறோம். நானும் தமிழ்மண நடுவராக பணியாற்றினேன். நான் பங்கு பெற்ற பிரிவுகள் தவிர்த்த மூன்று பிரிவுகளில், எனக்கு இரு பிரிவுகள் ஓதுக்கப்பட்டது. இரு வருடங்களாக பதிவெழுதும் நானே நடுவராக இருக்கையில், மூத்த பதிவரான நீங்கள் நடுவராக இருப்பதில் தவறில்லையே?

தமிழ்மண நிர்வாகிகள் தங்கள் அன்றாட வேலைகளுக்கு நடுவில் இதை சாத்தியமாக்கி உள்ளனர். நீங்களாவது பரவாயில்லை. நாசூக்காக சொல்லியிருக்கிறீர்கள். சிலர் வேறு விதமாக பதிவு செய்கின்றனர்.

இரா. செல்வராசு (R.Selvaraj) said...

உண்மைத்தமிழன், தமிழ்மண விருதுகளில் பரிசு பெற்ற இடுகைகளின் தொகுப்பினை நூலாக்கும் முயற்சி இன்னும் நடைபெறாமல் இருப்பதற்கு நானே முழுப் பொறுப்பையும் ஏற்கிறேன். அது நல்லதொரு விசயமாகவும் எல்லோர்க்கும் ஊக்கமளிக்கும் ஒன்றாகவும் தான் எண்ணிச் செயல்பட்டோம். இருப்பினும் அதனை என்னால் செவ்வனே செய்து முடிக்க இயலவில்லை. எண்ணியபடி செயல்கள் நடக்கவில்லை. நீங்கள் உதவ முன்வந்ததற்கு நன்றி. தேவைப்பட்டால் பிறகு தொடர்பு கொள்கிறோம்.

-/பெயரிலி. said...

செல்வராஜ் பேருள்ளத்தோடு தான் பொறுப்பேற்றுக்கொண்டாலுங்கூட, தமிழ்மணத்தின் செயற்குழுவிலிருக்கும் எல்லோருமே பொறுப்பெடுப்பதுதான் சரியானதாகும். நடைமுறை நிகழ்வுகளின் காரணமாக முடியவில்லை. எதிர்காலச்செயற்பாடு பற்றி மிகுதியைச் செல்வராஜே சொல்லியிருக்கின்றார்.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

வாழ்த்துக்கள் :)

உண்மைத்தமிழன் said...

[[[Indian Share Market said...
மனமார்ந்த வாழ்த்துக்கள் தலைவரே. இனிய பொங்கல் வாழ்த்துக்கள்!]]]

நன்றி தலைவரே..! தொடர்ச்சியான உங்களது பின்னூட்டங்கள் எனக்கு மகிழ்வைத் தருகின்றன..!

உண்மைத்தமிழன் said...

[[[பலே பிரபு said...
மனமார்ந்த வாழ்த்துக்கள்! அதீதம் இணைய இதழில் உங்களை அறிமுகப்படுத்தி உள்ளனர். வாழ்த்துக்கள் அதற்கும்.
http://www.atheetham.com/net.htm]]]

நானும் பார்த்தேன்.. தகவலுக்கு மிக்க நன்றி பிரபு..!

உண்மைத்தமிழன் said...

[[[Prasanna Rajan said...

இன்றைக்கு நாமெல்லாம் பல வேலைகளுக்கு நடுவே பதிவெழுதுகிறோம். நானும் தமிழ்மண நடுவராக பணியாற்றினேன். நான் பங்கு பெற்ற பிரிவுகள் தவிர்த்த மூன்று பிரிவுகளில், எனக்கு இரு பிரிவுகள் ஓதுக்கப்பட்டது. இரு வருடங்களாக பதிவெழுதும் நானே நடுவராக இருக்கையில், மூத்த பதிவரான நீங்கள் நடுவராக இருப்பதில் தவறில்லையே?

தமிழ்மண நிர்வாகிகள் தங்கள் அன்றாட வேலைகளுக்கு நடுவில் இதை சாத்தியமாக்கி உள்ளனர். நீங்களாவது பரவாயில்லை. நாசூக்காக சொல்லியிருக்கிறீர்கள். சிலர் வேறுவிதமாக பதிவு செய்கின்றனர்.]]]

எனது கருத்தை நான் தெளிவாக அவர்களுக்கு அனுப்பினேன் பிரசன்னா. அந்தக் கொள்கையில் இப்போதும் உறுதியாகவே இருக்கிறேன்..!

உண்மைத்தமிழன் said...

[[[இரா. செல்வராசு (R.Selvaraj) said...

உண்மைத்தமிழன், தமிழ்மண விருதுகளில் பரிசு பெற்ற இடுகைகளின் தொகுப்பினை நூலாக்கும் முயற்சி இன்னும் நடைபெறாமல் இருப்பதற்கு நானே முழுப் பொறுப்பையும் ஏற்கிறேன். அது நல்லதொரு விசயமாகவும் எல்லோர்க்கும் ஊக்கமளிக்கும் ஒன்றாகவும்தான் எண்ணிச் செயல்பட்டோம். இருப்பினும் அதனை என்னால் செவ்வனே செய்து முடிக்க இயலவில்லை. எண்ணியபடி செயல்கள் நடக்கவில்லை. நீங்கள் உதவ முன் வந்ததற்கு நன்றி. தேவைப்பட்டால் பிறகு தொடர்பு கொள்கிறோம்.]]]

நன்றி செல்வராசு ஸார்.. இந்த விஷயத்தில் உங்களுக்கு உதவிகள் செய்ய எப்போதும் நான் தயாராக உள்ளேன்..!

உண்மைத்தமிழன் said...

[[[-/பெயரிலி. said...

செல்வராஜ் பேருள்ளத்தோடு தான் பொறுப்பேற்றுக் கொண்டாலுங்கூட, தமிழ்மணத்தின் செயற்குழுவிலிருக்கும் எல்லோருமே பொறுப்பெடுப்பதுதான் சரியானதாகும். நடைமுறை நிகழ்வுகளின் காரணமாக முடியவில்லை. எதிர்காலச் செயற்பாடு பற்றி மிகுதியைச் செல்வராஜே சொல்லியிருக்கின்றார்.]]]

எல்லாத்துக்கும் நீங்கதான் காரணமா? ம்.. நல்லாயிருங்க.. செல்வராசு அண்ணனை மாட்டிவிட்டு மத்த எல்லாரும் ஜாலியா இருக்கீங்க..!

உண்மைத்தமிழன் said...

[[[முத்துலெட்சுமி/muthuletchumi said...
வாழ்த்துக்கள் :)]]]

நன்றி முத்தக்கா..! பரிசு பெற்றமைக்காக உங்களுக்கும் எனது வாழ்த்துக்கள்..!