எதிர்நோக்கிக் காத்திருக்கும் வலையுலகப் பதிவரின் திரைப்படம்..!

05-01-2011

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

“நான் சமூகத்தை மீறியவன். தனித்துளி... தனித்துளியாய் இங்கு வந்தேன். ஆடலோடும் பாடலோடும் விடை பெறுவதையே விரும்புகிறேன். சுவாசிப்பதும்,வேட்டை ஆடுவதும் , இன்பம், துன்பம் கொள்வதும், வாழ்வதும் சாவதும் எல்லாம் இயற்கையில். இதில் மதம் என்ன செய்தது? ஆனால் இயற்கையின் தழுவல் நிறைந்திருக்க வேண்டிய மனதில் மதம் அல்லவா குடிகொண்டிருக்கிறது? இந்த முரணை விரும்பாதவன். என் கல்லறையில் எழுதுங்கள் இவன், எந்த நாட்டையும் எந்த மொழியையும், எந்த இனத்தையும், எந்த மதத்தையும் சார்ந்தவன் அல்ல .இயற்கைக்கு சொந்தகாரன். இயற்கையில் நின்று பிளவுபட விரும்பாதவன். வெறும் ஆசை வார்த்தைகளை மட்டும் விதைக்கும் மத, இன, மொழி என  சமூகவாதிகளிடம் நின்று விலகி நிற்பவன். என் சகல இந்திரியங்களின் உணர்வுகளையும் உணர்கிறேன். அது இயற்கையின் உடையது. அதனால் உங்கள் உணர்வுகளையும் அறிவேன். அதுவே எனது எழுத்துகள். எனது எழுத்துகள் அனைத்தும் உங்கள் உணர்வுகளின் முகவரியை சார்ந்தது. அவை அனைத்தும்  உங்கள்  உணர்வுகளின் பிரதிபலிப்பே.”

- இப்படியொரு முன்னுரையோடுதான் அந்த இணையத்தளத்தைப் பார்த்தேன். ஏதோ வித்தியாசமாக இருக்கிறதே.. ஒருவேளை இவரும் பின்னவீனத்துவ வியாதி பீடித்தவராகத்தான் இருப்பாரோ என்றுதான் இவரைப் பற்றி விசாரித்தேன்.


ஏ.சி.வடிவுடையான். திரைப்பட இயக்குநர். விரைவில் வெளிவர இருக்கும் 'தம்பி வெட்டோத்தி சுந்தரம்' படத்தின் இயக்குநர் என்ற தகவல் கிடைத்தது. பேஸ்புக்கில் மேலும் அவரைப் பற்றித் தெரிந்து கொண்டேன். தமிழ்மணத்தின் மூலமாக இவரது வலைத்தளமும் என் கண்ணில்பட்டது. http://vcvadivudaiyan.com/blog உள்ளே புகுந்தால் தலை சுற்றுவதுபோலத்தான் உள்ளது.

காமத்தை தோய்த்தெடுப்பது எப்படி என்று நானெல்லாம் யோசித்து வரும் வேளையில் அதனை வெள்ளாவி போட்டு வெளுத்திருக்கிறார் இங்கே. அகோரிகளை மையப்படுத்தி அவர் எழுதியிருக்கும் தொடர் கட்டுரையைப் படித்துவிட்டு இனி அண்ணனை பார்க்காமல் இருந்தால் அது நமக்குத்தான் கேவலம் என்பதால் நேரில் சந்தித்தே தீர வேண்டும் என்று நினைத்திருந்தேன்.

தம்பி கணபதியின் புண்ணியத்தில் அது கடந்த வாரம் சாத்தியமானது. மதியம் 4 மணி அளவில் அவரது அலுவலகத்தில் சந்தித்துப் பேசினேன். பேச்சுக்குப் பேச்சு, மூச்சுக்கு மூச்சு தனது 'தம்பி வெட்டோத்தி சுந்தரம்' திரைப்படத்தைப் பற்றியே பேசினார்.

“மிக கடுமையாக உழைத்திருக்கிறேன். உருக்கமான கதை.. என்னால் எந்த அளவுக்கு மெனக்கெட முடியுமோ அந்த அளவுக்கு செய்திருக்கிறேன். எங்களது நாஞ்சில் நாட்டில் நடந்த ஒரு உண்மைக் கதையைத்தான் கையாண்டிருக்கிறேன். இந்த மாதக் கடைசியில் படம் ரிலீஸ்..” என்று பேசிக் கொண்டே போனார்.

படத்தின் ஸ்டில்களைப் பார்த்தபோது கரணின் பழகிப் போன திரைப்படங்களில் இருந்து நிறைய வித்தியாசம் தெரிந்தது. தமிழ்ச் சினிமா ரசிகர்களின் நெஞ்சுக்கூட்டைத் துளைத்திருக்கும் அழகி அஞ்சலியின் அழகை முழுக்க முழுக்க முக பாவனையிலேயே எடுத்துக் காட்டியிருக்கிறார். இது வழக்கமான கமர்ஷியல் கம்மர்கட்டு இல்லை என்பது மட்டும் லேசாகப் புரிந்தது.

தனது திரைப்பட அனுபவங்களை வெளிப்படையாகச் சொன்னார். மலையாளத்தின் ஹாட்டான இயக்குநரான ஷாஜி கைலாஷிடம் பத்தாண்டுகள் உதவி இயக்குநராக பணியாற்றியதாகக் கூறினார். தமிழில் 'வாஞ்சிநாதன்', 'சபரி' படங்களுக்கு இணை இயக்குநராகப் பணியாற்றிய கதைகளையும் தெரிவித்தார்.

ஷாஜி கைலாஷின் திரைப்படங்கள் பற்றி இருவரும் பேசினோம்.  தியேட்டரில் இருந்து வெளியே வரும்போது யாராவது சண்டை போட முன் வந்தால் கை நீட்டிவிடும் அளவுக்கு கோபத்தைக் கொப்பளிக்க வைப்பவைதான் ஷாஜியின் திரைப்படங்கள்.

ஷாஜியும், சுரேஷ் கோபியும் இணைந்த அரசியல், போலீஸ் திரைப்படங்கள் மலையாள சினிமாவில் ஒரு டிரெண்ட் செட்டராக அமைந்தவை. அத்திரைப்படங்கள் சிலவற்றில் தான் பணி புரிந்திருக்கிறேன் என்று சொல்லி என்னைப் பொறாமைப்பட வைத்தார்.


கிட்டத்தட்ட 14 படங்களுக்கு மேல் பணியாற்றிவிட்டுத்தான் தனியே படம் செய்ய கிளம்பியிருக்கிறார். இவருடைய முதல் படம் மிகவும் லோ பட்ஜெட்டில் எடுக்கப்பட்டது என்றாலும்கூட அந்தப் படத்தின் மேக்கிங் பார்த்துத்தான் இந்தப் படத்தின் வாய்ப்புக் கிட்டியதாகச் சொன்னார்.

ஷாஜி கைலாஷிடம் பணியாற்றியதன் காரணமாகத்தான் மலையாள இயக்குநர்கள் பாணியில் கதை, திரைக்கதை, உரையாடலுக்குத் தகுதியான எழுத்தாளரை நான் இந்தப் படத்திற்காக நாடியதாகச் சொன்னார். இந்தப் படத்திற்கு திரைக்கதை, வசனம் எழுதும் எழுத்தாளர் நமது வலையுலக பரமார்த்த குருவான திரு.பா.ராகவன்.


நமது குருஜியைப் பற்றி நான் கிண்டலாக பல விஷயங்களைச் சொன்னபோது அதற்கு நேர்மாறாக குருஜி பற்றி நல்ல விஷயங்களைச்(நமக்கா தெரியாது...?) சொல்லித் திருப்பியடித்தார். அவருடைய வேகமான பணியினால்தான் ஷெட்யூல் போட முடிந்தது என்றார். குருஜியின் எழுத்துக்கள் தனது எதிர்பார்ப்புக்கு ஏற்றவகையிலும், படத்தின் கதைக்கு சிறப்புச் சேர்க்கும் வகையிலும் இருந்ததாகச் சொன்னார்.

சரி.. பேச்சை திசை திருப்புவோம் என்று வலையுலகம், இணைய உலகம் என்று திருப்பினால் மறுபடியும் சினிமா பக்கமே கொண்டு வந்து நிறுத்துகிறார். அவ்வளவு வெறியராக இருப்பார் போலிருக்கிறதே என்று நினைத்து கிண்டலடிக்கும்போது, அவருடைய படைப்புலகம் பற்றியும் சொல்ல கொஞ்சம் பயந்துதான் போனேன்..

“இதுவரையில் 9 புத்தகங்களை வெளியிட்டுள்ளேன். இப்ப ரெண்டு புத்தகம் ரெடியா இருக்கு. கற்பகம் புத்தகாலயம் மூலமாத்தான் வெளியிட்டிருக்கிறேன். அவசியம் வாங்கிப் படிங்க..” என்று சொல்லி தன்னுடைய புத்தகங்களின் பெயர்களை மனப்பாடமான ஒப்பித்தார். ஒவ்வொன்றும் ஒரு ரகமாம். தலைப்பே சொல்கிறது..

தீ வளர்க்கும் தியானம்

விடிந்தது எழுந்து நில்
 
வெட்டவெளி தேவதை
 
காமசூத்ராவை கடந்து வா
 
நீ வாழும் உலகம்
 
மனம் ஒரு வெற்றுக் காகிதம்
 
காமமும் தியானமும்
 
சற்று மாறுதலாய் யோசி வாழ்க்கை மாறும்
 
எண்ணம் என்ற வெற்றிப் படகு

இதில் சுயமுன்னேற்ற நூல்களும், சிறுகதைத் தொகுப்புகளும் உள்ளனவாம். “புத்தகக் கண்காட்சியில் அவசியம் வாங்குகிறேன்” என்றேன். கவனிக்க.. "படிக்கிறேன்.." என்று உறுதியளிக்கவில்லை. ஏனெனில் அவரது வலைத்தளத்தில் வாசித்தவைகளை அவதானித்தபோதே இது நம்ம அறிவுக்கு எட்டாதது என்பது போலவே தோன்றியது.

பதிவுலகம் பற்றிப் பேசும்போது “நிறைய விமர்சனங்களைத் தேடித் தேடிப் படித்தேன். இப்போதும் படித்து வருகிறேன்..” என்றார். “அப்ப நல்ல எதிர்பார்ப்போடத்தான் இருக்கீங்க..?” என்றேன். புரிந்து கொண்டு சிரித்தார். “பிடிக்கலைன்னா முதல் வரியிலேயே மொக்கைப் படம் என்று எழுதும் சிலரது நேர்மை தனக்குப் பிடித்திருப்பதாகச்” சொன்னார். “இதையெல்லாம் வெளில சொல்லிராதீங்க ஸார். பய புள்ளைக ஆட ஆரம்பிச்சிருவாங்க..” என்றேன்.

“பத்திரிகைகளைப் புரட்ட நேரம் கிடைக்காததால் வலைப்பதிவுகள் மூலமாகவே பல விஷயங்களைத் தெரிந்து கொள்வதாகவும், இதற்காகவே வலைப்பதிவுகள் பக்கம் அவ்வப்போது வந்து செல்வதாகவும்” கூறினார். “இனிமேல் வரவே வராதீங்க.. முழு மூச்சுடன் சினிமாவே முக்கியம்னு மூழ்கிருங்க.. இந்தப் பக்கம் வந்து உங்களுடைய பொன்னான நேரத்தைச் செலவழித்து ஓய்ஞ்சிராதீங்க..” என்றேன். “அப்படியில்லை. நானே இப்போது எனது எழுத்துக்களை வலைப்பதிவில்தானே பதிந்து வருகிறேன். அதற்காகவாவது வருவேன். எழுதுவேன். பதிவர்களைச் சந்திக்கும் ஆர்வத்துடனும் இருக்கிறேன்..” என்றார்.(தானே தனக்குச் சூனியம் வைச்சுக்குவேன்னு அடம் பிடிக்கிறார்)

மனிதர் எளிமையாக இருக்கிறார். கவர்ச்சியான பேச்சு. மென்மையான, நாகரிகமான நடத்தை. சில இயக்குநர்களிடம் காணாத தன்மையுடன் சட்டென நெருக்கத்தைக் காட்டுகிறார். அவருடன் இருந்த இரண்டரை மணி நேரத்தில் சட்டென நெருங்கிய தோழனாகிவிட்டார். அவருடைய திரைப்படம் வெற்றி பெற வாழ்த்துச் சொல்லிவிட்டு விடைபெற்று வந்தேன்.

எழுத்தாளர், இயக்குநர் என்பதையும் சக வலைப்பதிவராகவும் அவர் எழுத்துலகிலும், சினிமாவுலகிலும் சிறப்பிக்கட்டும். நல்ல நண்பர் ஒருவரை அடையாளம் காட்டிய வலையுலகத்திற்கும், அழைத்து அறிமுகப்படுத்திய நண்பர் கணபதிக்கும் எனது நன்றி.. 

தம்பி வெட்டோத்தி சுந்தரம் படம் பற்றி இயக்குநர் ஏ.சி.வடிவுடையானே சொல்கிறார்  :

37 comments:

அகல்விளக்கு said...

நல்ல அறிமுகம்...

சீனு said...

அட! இப்படி ஒரு தளத்திற்கு அறிமுகம் கொடுத்ததற்கு நன்றி.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

Thanks for sharing. அண்ணே தமிழ்மணம் ல இணைக்காம விடுங்க. எவன் மைனஸ் ஓட்டு போடுறான்னு பாக்கலாம் ஹிஹி

Madurai pandi said...

நல்ல அறிமுகம்!!! ஆன ஹீரோ கரண் நு நினைக்ரப்ப தான் கொஞ்சமா பயம்...

பயபுள்ளைக இதுக்கும் நெகடிவ் போடுதுக!!! நல்ல இருப்பாங்க!!!
--
மதுரை பாண்டி
http://maduraipandi1984.blogspot.com

Unknown said...

வேண்டுமென்றே உங்களுடைய எல்ல பதிவுகளிலும் நெகட்டிவ் ஓட்டுப்போடுவதாகவே தோன்றுகிறது.
அதுவும் பதிவு வெளியான உடனே நெகட்டிவ் ஓட்டுப்போடுகிறார்கள். யாருடைய திருவிளையாடல் இதுவோ?
என்ன இது மதுரைக்கு வந்த சோதனை.

Unknown said...

padam oduma

Indian Share Market said...

பதிவுலகுக்கு ஒரு மரியாதையை உருவாக்கலில் உங்கள் பங்களிப்பு மகத்தானது.இந்த வருடம் உங்கள் இயக்கத்தில் படங்கள் வெளிவரவேண்டும். அதற்கும் எனது வாழ்த்துகள் தலைவா!!

pichaikaaran said...

நல்ல பகிர்வு . அவர் போன் நம்பர் என்ன ?

ஒரு வாசகன் said...

அதெப்படி பாரா வசனம் எழுதும் எல்லாப் படத்திலும் கரண் ஹீரோ??

ஈரோடு கதிர் said...

படம் வெற்றி பெற வாழ்த்துகள்!

உண்மைத்தமிழன் said...

[[[அகல்விளக்கு said...

நல்ல அறிமுகம்...]]]

நன்றி அகல்விளக்கு ஸார்..!

உண்மைத்தமிழன் said...

[[[சீனு said...
அட! இப்படி ஒரு தளத்திற்கு அறிமுகம் கொடுத்ததற்கு நன்றி.]]]

நன்றி சீனு.. படித்துப் பரவசமடையுங்கள்..!

உண்மைத்தமிழன் said...

[[[ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
Thanks for sharing. அண்ணே தமிழ்மணம்-ல இணைக்காம விடுங்க. எவன் மைனஸ் ஓட்டு போடுறான்னு பாக்கலாம் ஹிஹி..]]]

போட்டுட்டுப் போறாங்க விடு தம்பி..!

உண்மைத்தமிழன் said...

[[[மதுரை பாண்டி said...

நல்ல அறிமுகம்!!! ஆன ஹீரோ கரண்-நு நினைக்ரப்பதான் கொஞ்சமா பயம்...]]]

பார்ப்போம். காத்திருப்போம்..

[[[பயபுள்ளைக இதுக்கும் நெகடிவ் போடுதுக!!! நல்ல இருப்பாங்க!!!
--
மதுரை பாண்டி
http://maduraipandi1984.blogspot.com]]]

விடுண்ணே.. போய்த் தொலையட்டும்..!

உண்மைத்தமிழன் said...

[[[பாரத்... பாரதி... said...
வேண்டுமென்றே உங்களுடைய எல்ல பதிவுகளிலும் நெகட்டிவ் ஓட்டுப் போடுவதாகவே தோன்றுகிறது.
அதுவும் பதிவு வெளியான உடனே நெகட்டிவ் ஓட்டுப்போடுகிறார்கள். யாருடைய திருவிளையாடல் இதுவோ?
என்ன இது மதுரைக்கு வந்த சோதனை.]]]

சோதனைதான்.. எத்தனை நாளைக்குப் போடுவாங்க..? இதுல பிடிக்காம போறதுக்கு என்ன இருக்கு சொல்லுங்க..? எல்லாம் காழ்ப்புணர்ச்சிதான்..!

உண்மைத்தமிழன் said...

[[[நெல்லை தமிழன் said...

padam oduma]]]

ஓட வேண்டும் என்ற நம்பிக்கையோடு பேசுகிறார் இயக்குநர்.

நாமும் அதை வாழ்த்துவோமே..!

உண்மைத்தமிழன் said...

[[[Indian Share Market said...
பதிவுலகுக்கு ஒரு மரியாதையை உருவாக்கலில் உங்கள் பங்களிப்பு மகத்தானது.இந்த வருடம் உங்கள் இயக்கத்தில் படங்கள் வெளிவர வேண்டும். அதற்கும் எனது வாழ்த்துகள் தலைவா!!]]]

உங்களுடைய ஆசை பேராசை தலைவா.. இருந்தாலும் முருகன் அருளால் அது நடந்தால் எனக்கும் மகிழ்ச்சியே..!

உண்மைத்தமிழன் said...

[[[பார்வையாளன் said...
நல்ல பகிர்வு . அவர் போன் நம்பர் என்ன ?]]]

அனுப்புறேன்..

உண்மைத்தமிழன் said...

[[[ஒரு வாசகன் said...
அதெப்படி பாரா வசனம் எழுதும் எல்லாப் படத்திலும் கரண் ஹீரோ??]]]

பா.ராகவன் எழுதினால்தான் நான் நடிப்பேன் கரண் அடம் பிடிக்கிறாரோ.. என்னவோ..? அவரிடம்தான் கேட்க வேண்டும்..!

உண்மைத்தமிழன் said...

[[[ஈரோடு கதிர் said...

படம் வெற்றி பெற வாழ்த்துகள்!]]]

நானும் வாழ்த்துகிறேன் கதிர்..!

G.Ganapathi said...

அண்ணா அருமையான பதிவு இத்தனை நாள் அவருடன் நான் இருந்திருந்தாலும் நீங்களும் அவரும் உரையாடியதில் அன்பான பிணைப்பு நெருக்கம் இருந்ததை உணர்ந்தேன் . வடிவு சாரை முதன் முதலில் அதிகம் பேசவைத்தது என் வரையில் நீங்கள் தான் முதல் ஆள் . அவர் அதிகம் பேசி நான் பார்த்தில்லை இதுவரை . அனால் உங்கள் சந்திப்பின் போது அவர் அதிகம் பேசிக்கொண்டே இருந்தார் உங்களிடம் பேசிய போது தான் எனக்கும் படத்தை பற்றியும் அவரின் ஆழ்ந்த என்னங்ககளை பற்றியும் அவதானிக்க முடிந்தது . அதற்க்கு உங்களுக்கு நான் கடமை பட்டு இருக்கிறேன் .

அவரை நான் முதன் முதலில் சந்தித்த போது என்னிடம் பேசியது வணக்கம் நண்பா நீங்க பாருங்க அவளவுதான் பேசினார் . நான் அப்ப எல்லாம் நினைச்சுக்குவேன் இயக்குனர்னு காமிக்கராறு பாரேன்னு . ஒரு பத்து பதினைந்து நாட்களுக்கு பிறகு தான் அவர் ஒரு எழுத்தாளர் என்பதும் தெரிந்தது . அவரே எனக்கு அவருடைய புத்தகங்களை கொடுத்து வாசிக்க செய்தார் . நாம யாரு பெரிய அறிவாளியாச்சே இவர் புத்தகம் எல்லாம் என்னத்த போயின்னு நினைச்சு வாசிக்க ஆரம்பிச்சேன் . முதலில் அவரின் எழுத்து நடை புரிவதற்கு கஷ்டமாக இருந்தது ஆனால் போகப்போக பழகி விட்டது . அதில் இருந்த உண்மைகள் நேரிடையாக சொல்லும் எழுத்து யாரோ ஒரு நண்பர் நமக்கு அருகில் வந்தமர்ந்து உரிமையுடன் உரையாடுவது போல் இருக்கும் . அதற்க்கு பின் அவருக்கு நான் ரசிகன் ஆகிவிட்டேன் என்பதுதான் உண்மை .

G.Ganapathi said...

எனக்கெல்லாம் அனுபவம் என்பது ஒன்றுமில்லைதான் ஆனால் மனுஷன் ஒரு நூறு பேரின் அனுபவங்களை ஒட்டுமொத்தமாக வைத்திருக்கிறார் என்பதை பலகபழக புரிந்துகொண்டேன் . சினிமா இலக்கியம் என்று மட்டும் இல்லை இவரின் பரந்துபட்ட அறிவு என்பதை நினைக்கும் போது ஆச்சரிய படமால் இருக்கமுடிவதில்லை . அவருடன் உங்கள் நட்பு பயணம் முடிவில்லாமல் பயணிக்க எனது வாழ்த்துக்கள் .

செங்கோவி said...

நல்லதொரு பதிவை அறிமுகப்படுத்தியதற்கு நன்றி. அப்போ இன்னொரு பதிவர் ஷோ ரெடி.

pichaikaaran said...

அவரை போன்றோரை அழைத்து பதிவர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்ய்லாமே... செய்வீர்களா?

நசரேயன் said...

அண்ணாச்சி நீங்க எப்ப டைரக்ட் பண்ணுவீங்க ?

உண்மைத்தமிழன் said...

[[[G.Ganapathi said...

அண்ணா அருமையான பதிவு இத்தனை நாள் அவருடன் நான் இருந்திருந்தாலும் நீங்களும் அவரும் உரையாடியதில் அன்பான பிணைப்பு நெருக்கம் இருந்ததை உணர்ந்தேன். வடிவு சாரை முதன் முதலில் அதிகம் பேச வைத்தது என் வரையில் நீங்கள்தான் முதல் ஆள். அவர் அதிகம் பேசி நான் பார்த்தில்லை இதுவரை. அனால் உங்கள் சந்திப்பின்போது அவர் அதிகம் பேசிக் கொண்டே இருந்தார். உங்களிடம் பேசிய போதுதான் எனக்கும் படத்தை பற்றியும் அவரின் ஆழ்ந்த என்னங்ககளை பற்றியும் அவதானிக்க முடிந்தது. அதற்கு உங்களுக்கு நான் கடமைபட்டு இருக்கிறேன்.]]]

நான்தான் உனக்கு நன்றிக்கடன் பட்டிருக்கிறேன். இப்படியொரு அருமையான நண்பரை எனக்கு அடையாளம் காட்டியதற்கு..!

உண்மைத்தமிழன் said...

[[[G.Ganapathi said...

எனக்கெல்லாம் அனுபவம் என்பது ஒன்றுமில்லைதான் ஆனால் மனுஷன் ஒரு நூறு பேரின் அனுபவங்களை ஒட்டு மொத்தமாக வைத்திருக்கிறார் என்பதை பலக பழக புரிந்து கொண்டேன். சினிமா இலக்கியம் என்று மட்டும் இல்லை இவரின் பரந்துபட்ட அறிவு என்பதை நினைக்கும் போது ஆச்சரியபடமால் இருக்க முடிவதில்லை. அவருடன் உங்கள் நட்பு பயணம் முடிவில்லாமல் பயணிக்க எனது வாழ்த்துக்கள்.]]]

நன்றி தம்பி..

வாழ்க்கையின் சிறந்த அனுபவங்கள் மட்டும் உனக்குத் தொடர்ந்து கிடைக்க என் அப்பன் முருகனை வேண்டிக் கொள்கிறேன்..!

உண்மைத்தமிழன் said...

[[[செங்கோவி said...
நல்லதொரு பதிவை அறிமுகப்படுத்தியதற்கு நன்றி. அப்போ இன்னொரு பதிவர் ஷோ ரெடி.]]]

ம்..

உண்மைத்தமிழன் said...

[[[பார்வையாளன் said...
அவரை போன்றோரை அழைத்து பதிவர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்ய்லாமே... செய்வீர்களா?]]]

படம் வரட்டும்.. செஞ்சிருவோம்..!

உண்மைத்தமிழன் said...

[[நசரேயன் said...
அண்ணாச்சி நீங்க எப்ப டைரக்ட் பண்ணுவீங்க?]]]

எதையும் தாங்கும் இதயமுள்ள தயாரிப்பாளர் கிடைத்தால் உடனேயே ஆரம்பித்துவிடலாம்..!

உண்மைத்தமிழன் said...

[[[தமிழ் உலகம் said...
உங்கள் தளத்திற்க்கான வாசகர்களை அதிகமாக்க, உங்கள் பதிவுகளை தமிழ் உலகம் - இல் இணைக்கவும்.]]]

அழைப்புக்கு மிக்க நன்றி..! இணைஞ்சிருவோம்..!

Anonymous said...

தம்பி வெட்டோத்தி சுந்தரம் ஆரோக்யமான தமிழ் சினிமாவாக இருக்கும் பட்சத்தில் வெற்றி பெற வாழ்த்துகள்! உலக சினிமா வாடையோ அல்லது "மசாலா" வாடையோ இல்லாத படம் என்பதை ஓரளவு என்னால் யூகிக்க முடிகிறது. கரண் மற்றும் வடிவுடையான் இருவருக்கும் திருப்பு முனையாக இப்படம் அமையட்டும்.

Anonymous said...

/// அவரது வலைத்தளத்தில் வாசித்தவைகளை அவதானித்தபோதே இது நம்ம அறிவுக்கு எட்டாதது என்பது போலவே தோன்றியது. ///

உஷார் படுத்தியம்மைக்கு நன்றி.

உண்மைத்தமிழன் said...

[[[சிவகுமார் said...
தம்பி வெட்டோத்தி சுந்தரம் ஆரோக்யமான தமிழ் சினிமாவாக இருக்கும் பட்சத்தில் வெற்றி பெற வாழ்த்துகள்! உலக சினிமா வாடையோ அல்லது "மசாலா" வாடையோ இல்லாத படம் என்பதை ஓரளவு என்னால் யூகிக்க முடிகிறது. கரண் மற்றும் வடிவுடையான் இருவருக்கும் திருப்பு முனையாக இப்படம் அமையட்டும்.]]]

நானும் அப்படியே வாழ்த்துகிறேன் சிவா..!

உண்மைத்தமிழன் said...

[[[பன்-பட்டர்-ஜாம் said...

//அவரது வலைத்தளத்தில் வாசித்தவைகளை அவதானித்தபோதே இது நம்ம அறிவுக்கு எட்டாதது என்பது போலவே தோன்றியது.//

உஷார்படுத்தியம்மைக்கு நன்றி.]]]

நீங்களும் என்னை மாதிரிதானா..? வாங்க.. வாங்க..!

ஜோ/Joe said...

எங்க நாஞ்சில் நாட்டுக்காரருக்கு வாழ்த்துகள்!

உண்மைத்தமிழன் said...

[[[ஜோ/Joe said...
எங்க நாஞ்சில் நாட்டுக்காரருக்கு வாழ்த்துகள்!]]]

இவரது சொந்த ஊர் களியாக்காவிளை என்று சொன்னார்..! உங்கள் வாழ்த்துக்களை அவருக்குத் தெரிவிக்கிறேன் ஜோ..!