அரசு விதிமுறையை மதிக்காமல் மாணவர்களை மிரட்டும் கோவில்பட்டி பொறியியல் கல்லூரி..!

08-01-2011

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

இன்று எனக்கு ஜிமெயில் மூலமாக வந்திருந்த கடிதம் இது : முதலில் வாசித்து விடுங்கள்..!

வணக்கம் உண்மைத்தமிழன்  அவர்களே,
                             
தங்கள் வாசகனான எனக்கு தங்களிடம் ஒரு முக்கியமான விஷயத்தை பகிர்ந்து கொள்ளும் அவசியம் இன்று வந்துள்ளது. குறிப்பாகச் சொன்னால் தங்கள் உதவி எனக்கு தேவைப்படுகிறது. ஆயிரக்கணக்கான மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் சார்பாக ஒரு உதவியை உங்களிடம் நாடுகிறேன்.

தமிழக அரசு இந்தக் கல்வியாண்டில் குடும்பத்தில் முதல் பட்டதாரிகளுக்கு பொறியியல் கல்லூரிகளில் கல்விக் கட்டணம் செலுத்தத் தேவையில்லை என்று அறிவித்து இருந்தது. இந்த ஆண்டில் அட்மிஷன் போடப்பட்ட மாணவ மாணவிகளில் பெரும்பான்மையானோர் இந்த சலுகையை நம்பி சேர்ந்தவர்கள்தான். பலரும் வறுமையில் வாடும் குடும்பத்தை சேர்ந்தவர்கள்.

கோவில்பட்டியை சேர்ந்த பிரபல "நேஷனல் இன்ஜினியரிங் கல்லூரி" ஆரம்பத்தில் முதல் பட்டதாரி மாணவ மாணவியரிடம் அட்மிசனின்போதே அரசாங்கத்தின் அறிவிப்புக்கு மாறாக பதினைந்தாயிரம் பணத்தை வாங்கிக் கொண்டார்கள்.

எங்கள் பிள்ளைகள் எப்படியாவது இன்ஜினியரிங் படித்தால் போதும் என்ற வேகத்தில் நாங்களும் எப்படியோ பணத்தை கட்டிவிட்டோம்.  இப்போது மிகவும் சூட்சுமமாக கல்வியாண்டிண் நடுப்பகுதியில் மேலும் Rs.12700 கட்ட சொல்லி முதல் பட்டதாரி மாணவ மாணவிகளை வற்புறுத்துகின்றனர். கணக்கு பார்த்தால் வருடத்திற்கு முப்பதாயிரம் ரூபாய்க்கு மேல் வருகிறது. எந்த வகையில் இது நியாயம்..? பெற்றோர்கள் எல்லாம் செத்து சுண்ணாம்பாக ஆகிக் கொண்டு வருகின்றனர்.

அரசாங்கம் "கல்விக் கட்டணம் இலவசம்" என்ற பசப்பு வார்த்தையை நம்பி எங்கள் பிள்ளையை சேர்த்த நாங்கள் இப்போது நடுக்காட்டில் தவிக்கும் நிலைக்கு வந்து விட்டோம்.

தயவு செய்து இந்த கடிதத்தோடு நான் இணைத்துள்ள ஆதாரத்தை பார்த்து, அதை தங்கள் தளத்தில் பிரசுரிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். இந்த அநியாயத்தை எதிர்த்து நீங்கள் பதிவு எழுத வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.

இப்படிக்கு ,
XXXXXXXXXXXX
கோவில்பட்டி





அன்பு XXXXXXXXXXXXXX..

என்னதான் அரசு சட்டங்கள் இயற்றி, விதிமுறைகளை விதித்து உத்தரவிட்டாலும் அதனை மதிக்காத பொது ஜனங்களும், அமைப்புகளும், தனியார் நிறுவனங்களும் இருக்கத்தான் செய்கின்றன.

தமிழக அரசு கொண்டு வந்த இந்தச் சலுகை நிச்சயம் வரவேற்கத்தக்கதே.. ஒரு குடும்பத்தில் ஒருவர்கூட பட்டதாரி இல்லையெனில், அரசு இப்போது தர முன் வந்திருக்கும் இந்தச் சலுகையைப் பயன்படுத்தியாவது அந்தக் குடும்பத்தினர் தங்களது வாரிசுகளைப் படிக்க வைப்பார்களே என்கிற நல்லெண்ணத்தில்தான் இந்த விதிமுறை கொண்டு வரப்பட்டுள்ளது.

இந்த விதிமுறை தங்களுக்குப் பொருந்தாது என்பதுபோல் செயல்படும் நேஷனல் இன்ஜீனியரிங் கல்லூரி நிர்வாகத்தின் செயல் நிச்சயம் கண்டிக்கத்தக்கதுதான். 

இது பற்றி நீங்கள் பாதிக்கப்பட்டிருக்கும் மாணவ, மாணவியரின் பெற்றோர்கள் அனைவரும் ஒன்றுகூடி இது பற்றி உங்களது புகார் மனுவை அரசுக்கு தாமதிக்காமல் அனுப்பி வைக்க வேண்டும். இது விஷயமாக நீங்கள் அண்ணா பல்கலைக்கழகத்திற்கும், தமிழக அரசின் உயர் கல்வித்துறைக்கும் புகார் மனுவை அனுப்பி வையுங்கள்..

உங்களது ஊரில் இருக்கும் நாளிதழ் மற்றும், தொலைக்காட்சி செய்தியாளர்களிடம் நீங்கள் அனைவரும் ஒன்று கூடிய நிலையில் இது பற்றிய செய்தியை வெளிக்கொணர்ந்தால் இதுவே நிச்சயமாக அரசின் கவனத்துக்குப் போய்விடும்..!

அதேசமயம் கல்லூரியில் படிக்கும் உங்களது குழந்தைகளின் மீது ஏதும் நடவடிக்கை எடுக்கப்படுகிறதா என்பதையும் கவனியுங்கள்.. அப்படி எடுக்கப்படும்பட்சத்தில் அது குறித்து கல்லூரி நிர்வாகத்திடம் தைரியமாக விளக்கம் கேளுங்கள். மேற்கொண்டும் பேசுங்கள். எதற்கும் பயப்படாதீர்கள்..!

எந்த நடவடிக்கையும் பலனளிக்காமல் போனால் நிச்சயமாக மதுரை உயர்நீதிமன்றத்தில் பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து மனு தொடுக்கலாம். ஆனால் அந்த அளவுக்குப் போவதற்கு முன்பே அரசின் காதுகளை இந்தச் செய்தி எட்டினாலே போதும்.. ஆட்சியாளர்கள் விரைந்து நடவடிக்கை எடுப்பார்கள் என்றே நான் நம்புகிறேன்..! முயற்சி செய்யுங்கள்..!

முதலில் அவசரமாக பத்திரிகையாளர்களிடம் இந்தச் செய்திகளை கொண்டு செல்லுங்கள். அரசுக்கும், அண்ணா பல்கலைக் கழகத்திற்கும் புகார் மனுவை அனுப்பி வையுங்கள். பதிலுக்குக் காத்திருங்கள்..! அது கிடைக்கவில்லையெனில், வரவில்லையெனில் மேற்கொண்டு நாம் பேசுவோம்..!

நன்றி..!

71 comments:

kanagu said...

:( :(

எல்லொரிடம் இருந்தும் பணம் பறிக்க நினைக்கும் கல்லூரிகள் மாணவர்களுக்கு எதை கற்று தர போகின்றன???? :(

THOPPITHOPPI said...

நல்ல ஆலோசனை, ஆனால் நண்பர் நீங்கள் சொன்னதை முயற்ச்சிப்பாரா என்பது என் சந்தேகமே. முயற்ச்சித்தால் நிச்சயம் வேறு ஒருவர் பாதிக்கப்படாமல் இருப்பார்கள்.




கவனிக்கவேண்டியது:

//கல்லூரியில் படிக்கும் உங்களது குழந்தைகளின் மீது ஏதும் நடவடிக்கை எடுக்கப்படுகிறதா என்பதையும் கவனியுங்கள்.. அப்படி எடுக்கப்படும்பட்சத்தில் அது குறித்து கல்லூரி நிர்வாகத்திடம் தைரியமாக விளக்கம் கேளுங்கள். மேற்கொண்டும் பேசுங்கள். எதற்கும் பயப்படாதீர்கள்..!//

pichaikaaran said...

புத்தககண்காட்சியில் உங்களை எதிர்பார்த்தேன்... நீங்கள் வரவில்லை

புத்தக கண்காட்சியில் கேபிள் சங்கர் அராஜகம்- படத்துடன் நேரடி ரிப்போர்ட்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

எங்க ஊர்ல பிரச்சனையா? இது ரொம்பநாள் நடக்குது அண்ணா. எங்க ஊர்ல இப்படி ஒரு அவலமா?

செங்கோவி said...

உடனடியாக மீடியாவின் கவனத்திற்கு கொண்டுசென்றாலே போதும்..அண்ணன் உ.த.-க்கு மீடியாவில் நண்பர்கள் உண்டே..அவர்களுக்கு நீங்கள் தெரிவித்தால், உதவிகரமாக இருக்கும்.

Unknown said...

நேசனல் எஞ்சினியரிங் கல்லூரி பற்றி அறிந்தவர்களிடம் அவர்கள் மாணவர்களுக்கு கொடுத்துவரும் கல்வி மற்றும் அடிப்படை கட்டிட, லேப், லைப்ரேரி வசதிகள், மாணவர்களின் திறமையை அதிகரிக்க நடக்கும் கருத்தரங்கங்கள் போன்றவற்றை பற்றி தெரிந்தபின் எழுதுவது உங்களைப்போன்ற முக்கிய எழுத்தாளருக்கு பெருமை. ஒரு ஈ-மெயிலில் வந்த செய்தியை வைத்து ஒரு 25 வருடங்களுக்கு மேலாக தரமான கல்வியை அளிக்கும் கல்லூரியை களங்கப்படுத்த நினைப்பது சரியல்ல. கோவில்பட்டியை சேர்ந்த ஒரு குரூப் கல்லூரி இடத்தை வளைப்பதர்க்கும் முயற்சி செய்து வருகிறார்கள் என்றும் ஒரு பேச்சு உண்டு. அதனால் கூட இந்த புகார் இருக்கலாம்.. இப்போது கோவில்பட்டியில் புதிதாக ஒரு கல்லூரி ஏற்படுத்தப்பட்டுள்ளது. அவர்கள் தூண்டுதலின் பேரில்கூட நடக்கலாம்.. இதில் உண்மைத் தமிழன் சிக்கவேண்டாம்.. எல்லாவற்றிர்க்கும் மேலாக இதைப்போல இடையூறுகளை தாண்டியே அந்த கல்வி நிறுவனம் வளர்ந்துள்ளது. அதை சந்திக்கக்கூடிய பக்குவமும் அனுபவமும் அந்தக்கல்லூரிக்கு உண்டு. நான் படித்த கல்லூரியின் மதிப்பில் ஆர்வம் கொண்ட மாணவன் என்கிற முறையில் இந்த கருத்தை தெரிவித்துள்ளேன்..

உண்மைத்தமிழன் said...

[[[kanagu said...

:( :(

எல்லொரிடம் இருந்தும் பணம் பறிக்க நினைக்கும் கல்லூரிகள் மாணவர்களுக்கு எதை கற்று தர போகின்றன???? :(]]]

கொள்ளையடிப்பது எப்படி என்பதைப் பற்றித்தான்..!

உண்மைத்தமிழன் said...

[[[THOPPITHOPPI said...
நல்ல ஆலோசனை, ஆனால் நண்பர் நீங்கள் சொன்னதை முயற்ச்சிப்பாரா என்பது என் சந்தேகமே. முயற்ச்சித்தால் நிச்சயம் வேறு ஒருவர் பாதிக்கப்படாமல் இருப்பார்கள்.]]]

அவருடைய கடிதத்தில் அதற்கான முனைப்பு இருக்கிறது. நிச்சயமாக செய்வார் என்று நம்புவோம்..!

உண்மைத்தமிழன் said...

[[[பார்வையாளன் said...
புத்தக கண்காட்சியில் உங்களை எதிர்பார்த்தேன். நீங்கள் வரவில்லை
புத்தக கண்காட்சியில் கேபிள் சங்கர் அராஜகம்- படத்துடன் நேரடி ரிப்போர்ட்]]]

இன்று செல்கிறேன் பார்வை.. நேற்று வேறு ஒரு வேலை வந்துவிட்டது. அதனால் வர முடியவில்லை..!

உண்மைத்தமிழன் said...

[[[ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
எங்க ஊர்ல பிரச்சனையா? இது ரொம்ப நாள் நடக்குது அண்ணா. எங்க ஊர்ல இப்படி ஒரு அவலமா?]]]

ரொம்ப நாளா கொள்ளையடிக்கிறாங்க போலிருக்கு..!

உண்மைத்தமிழன் said...

[[[செங்கோவி said...
உடனடியாக மீடியாவின் கவனத்திற்கு கொண்டு சென்றாலே போதும். அண்ணன் உ.த.-க்கு மீடியாவில் நண்பர்கள் உண்டே. அவர்களுக்கு நீங்கள் தெரிவித்தால், உதவிகரமாக இருக்கும்.]]]

சொல்லியிருக்கிறேன் செங்கோவி..! நிச்சயம் நல்லதே நடக்கும்..!

உண்மைத்தமிழன் said...

[[[arul said...

நேசனல் எஞ்சினியரிங் கல்லூரி பற்றி அறிந்தவர்களிடம் அவர்கள் மாணவர்களுக்கு கொடுத்துவரும் கல்வி மற்றும் அடிப்படை கட்டிட, லேப், லைப்ரேரி வசதிகள், மாணவர்களின் திறமையை அதிகரிக்க நடக்கும் கருத்தரங்கங்கள் போன்றவற்றை பற்றி தெரிந்த பின் எழுதுவது உங்களைப் போன்ற முக்கிய எழுத்தாளருக்கு பெருமை. ஒரு ஈ-மெயிலில் வந்த செய்தியை வைத்து ஒரு 25 வருடங்களுக்கு மேலாக தரமான கல்வியை அளிக்கும் கல்லூரியை களங்கப்படுத்த நினைப்பது சரியல்ல. கோவில்பட்டியை சேர்ந்த ஒரு குரூப் கல்லூரி இடத்தை வளைப்பதர்க்கும் முயற்சி செய்து வருகிறார்கள் என்றும் ஒரு பேச்சு உண்டு. அதனால் கூட இந்த புகார் இருக்கலாம்.. இப்போது கோவில்பட்டியில் புதிதாக ஒரு கல்லூரி ஏற்படுத்தப்பட்டுள்ளது. அவர்கள் தூண்டுதலின் பேரில்கூட நடக்கலாம்.. இதில் உண்மைத் தமிழன் சிக்க வேண்டாம். எல்லாவற்றிர்க்கும் மேலாக இதைப் போல இடையூறுகளை தாண்டியே அந்த கல்வி நிறுவனம் வளர்ந்துள்ளது. அதை சந்திக்கக் கூடிய பக்குவமும் அனுபவமும் அந்தக் கல்லூரிக்கு உண்டு. நான் படித்த கல்லூரியின் மதிப்பில் ஆர்வம் கொண்ட மாணவன் என்கிற முறையில் இந்த கருத்தை தெரிவித்துள்ளேன்.]]]

நன்றி அருள்.. மெயில் கடிதத்தை சீரியஸாக எடுத்துக் கொள்ள வேண்டாம் என்ற உங்களது கருத்து என்னை ஆச்சரியப்படுத்துகிறது..!

கடிதத்துடன் இணைக்கப்பட்டுள்ள விவரத்தில்தான் தெளிவாக எழுதப்பட்டுள்ளதே.. எந்தெந்த மாணவர்கள் பணம் கட்ட வேண்டும் என்று.. பின்பு ஏன் உங்களுக்குக் குழப்பம்..?

இந்த மாணவர்களுக்கான கல்விக் கட்டணத்தை அரசே ஏற்றுக் கொள்கிறது. அரசும் பணம் கட்டிய பின்பு மாணவர்களிடமும் பணம் கேட்பது நியாயமா..? அரசு கட்டவில்லையெனில் அரசிடம்தானே கேட்க வேண்டும்.

பாரம்பரியம்மிக்க கல்லூரியை அவதூறாக எனது பதிவில் எழுத வேண்டிய அவசியம் எனக்கி்லலையே..?

ஒரு வாசகன் said...

இந்த வார ஜீனியர் விகடனில் வந்த "தெருவில் தெறித்த ரத்த சரித்திரம்" பார்திதீர்களா? on-lene இல் வாசர்கர் ஒருவர் எழுதிய
//அடேங்கப்பா, ஒரு சினிமாப் படம் பார்த்து முடித்தது போலிருந்தது//

பதிவக்கு Anbe Sivam என்பவர் அளித்துள்ள் பதில்
//
இதுக்கே இப்படின்னா எங்க அன்னன் "உன்மை தமிழன்" எழுதினத படிச்சிருந்தா என்ன சொல்லுவிங்கலோ தெரியல.......(புரியாதவங்க லுசுலா விடுங்க//


சூரியின் கதைக்கு ஒரு follow-up போடுங்களேன். யார் கொன்றது? எதற்க்காக? யார் பானு கிரண்?

ரவி said...

பதிவில் உள்ள கடிதம் தெளிவாக உள்ளது. அதுவும், அதர் பீஸ் என்று போட்டு பத்தாயிரம் வசூலிப்பது பகல் கொள்ளை. டைரக்டர் என்று கையொப்பம் கூட உள்ளது. நமக்கு தெரிந்த மீடியாவிடம் கொண்டுசெல்வோம்.

ரவி said...

சம்பந்தப்பட்ட மாணவ மாணவியரை கண்டறிந்து பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபடுவார்கள்.

அதனால் கடிதம் எழுதியவரின் பெயரை நீக்கிவிடவும்

ConverZ stupidity said...

Dear உ.த,

இதுல சொல்லி இருக்கிற fees எல்லாம் யுனிவேர்சிட்டிக்கு கட்டவேண்டிய கட்டணம் (not sure about "Academic Societies"). எல்லாமே இலவசமுன்னு சொல்லுற அரசு (வாய் அளவில்) இத பத்தி யுனிவேர்சிட்டிக்கு G.O மூலமா தெரிவிசிருக்காது. நம்ம ஊரானுங்கதான் இலவசமுன்ன வாயில இருக்குற பல்லெல்லாம் கழட்டி கைல "ஈ"ன்னு வச்சிக்கிட்டு திரிவானுங்கல்ல... யோசிக்கிற அறிவே இல்லாத ஜென்மங்கள்.

இவுங்க முதல் தடவை 15000 கேட்டப்பவே எதிர்த்து இருக்கணும். அப்போ கட்டின பணத்துக்கு ரெசிப்ட் கேளுங்க.. குடுத்திருக்க மாட்டனுங்க. ஸோ, அந்த 15000 ரூபாய்தான் கொலேஜுக்கு. இப்போ கேட்டிருக்குற (இந்நேரம் இத pay பண்ணிருப்பாங்க.. காலேஜ் ஆளுங்க விளக்கம் குடுத்திருப்பாங்க) கட்டண தொகை யுனிவேர்சிட்டிக்கு. இதுதான் மனுஷனோட கேவலமான மனநிலை. வேலை ஆகணுமுன்னா லஞ்சம் கேக்குறது/ குடுக்குறது ரெண்டயுமே குற்ற உணர்வே இல்லாம செஞ்சு( முக்கியமா குடுக்குரவனுக்கு குற்ற உணர்வு தேவையே இல்லைன்னு நினைக்கிறாங்க) entire system- மயுமே failure ஆக்கிடுவானுங்க.

இதுவும் தாத்தாவோட, முட்டளுங்கள சரியா பயன்படுத்திகிட்ட இன்னொரு திருவிளையாடல்.

அடுத்த தடவை ஓட்டுக்கு ரெண்டாயிரம்கிரதுக்கு பதிலா ஐயாயிரமுன்னு குடுக்குறப்போ எல்லாத்தையும் மறந்துட்டு அதையும் வாங்கிகிட்டு பெருசுக்கே ஒட்டு போடுவானுங்க இந்த மானம்கெட்ட ஜென்மங்க.

உண்மைத்தமிழன் said...

[[[ஒரு வாசகன் said...

இந்த வார ஜீனியர் விகடனில் வந்த "தெருவில் தெறித்த ரத்த சரித்திரம்" பார்திதீர்களா? on-lene இல் வாசர்கர் ஒருவர் எழுதிய

//அடேங்கப்பா, ஒரு சினிமாப் படம் பார்த்து முடித்தது போலிருந்தது//

பதிவக்கு Anbe Sivam என்பவர் அளித்துள்ள் பதில்//

இதுக்கே இப்படின்னா எங்க அன்னன் "உன்மை தமிழன்" எழுதினத படிச்சிருந்தா என்ன சொல்லுவிங்கலோ தெரியல.......(புரியாதவங்க லுசுலா விடுங்க//

சூரியின் கதைக்கு ஒரு follow-up போடுங்களேன். யார் கொன்றது? எதற்க்காக? யார் பானு கிரண்?]]]

ஜூ.வி. கட்டுரையை நானும் படித்தேன்..!

பானு கிரண் பற்றிய பாலோ அப் கட்டுரை விரைவில் வரும்..!

உண்மைத்தமிழன் said...

[[[செந்தழல் ரவி said...
பதிவில் உள்ள கடிதம் தெளிவாக உள்ளது. அதுவும், அதர் பீஸ் என்று போட்டு பத்தாயிரம் வசூலிப்பது பகல் கொள்ளை. டைரக்டர் என்று கையொப்பம் கூட உள்ளது. நமக்கு தெரிந்த மீடியாவிடம் கொண்டு செல்வோம்.]]]

செல்வோம்.. செல்லலாம் தம்பி..!

உண்மைத்தமிழன் said...

[[[செந்தழல் ரவி said...
சம்பந்தப்பட்ட மாணவ மாணவியரை கண்டறிந்து பழி வாங்கும் நடவடிக்கையில் ஈடுபடுவார்கள்.
அதனால் கடிதம் எழுதியவரின் பெயரை நீக்கி விடவும்.]]]

இதனை நான் யோசிக்கவே இல்லை.. செய்கிறேன் தம்பி.. நன்றி..!

உண்மைத்தமிழன் said...

[[[ConverZ stupidity said...

Dear உ.த, இதுல சொல்லி இருக்கிற fees எல்லாம் யுனிவேர்சிட்டிக்கு கட்டவேண்டிய கட்டணம் (not sure about "Academic Societies"). எல்லாமே இலவசமுன்னு சொல்லுற அரசு (வாய் அளவில்) இத பத்தி யுனிவேர்சிட்டிக்கு G.O மூலமா தெரிவிசிருக்காது. நம்ம ஊரானுங்கதான் இலவசமுன்ன வாயில இருக்குற பல்லெல்லாம் கழட்டி கைல "ஈ"ன்னு வச்சிக்கிட்டு திரிவானுங்கல்ல... யோசிக்கிற அறிவே இல்லாத ஜென்மங்கள்.]]]

இதற்கு இந்த மாணவர்கள் எப்படி பொறுப்பாக முடியும். அரசின் பொறுப்புதானே அது..?

[[[இவுங்க முதல் தடவை 15000 கேட்டப்பவே எதிர்த்து இருக்கணும். அப்போ கட்டின பணத்துக்கு ரெசிப்ட் கேளுங்க. குடுத்திருக்க மாட்டனுங்க. ஸோ, அந்த 15000 ரூபாய்தான் கொலேஜுக்கு. இப்போ கேட்டிருக்குற (இந்நேரம் இத pay பண்ணிருப்பாங்க.. காலேஜ் ஆளுங்க விளக்கம் குடுத்திருப்பாங்க) கட்டண தொகை யுனிவேர்சிட்டிக்கு. இதுதான் மனுஷனோட கேவலமான மனநிலை. வேலை ஆகணுமுன்னா லஞ்சம் கேக்குறது/ குடுக்குறது ரெண்டயுமே குற்ற உணர்வே இல்லாம செஞ்சு( முக்கியமா குடுக்குரவனுக்கு குற்ற உணர்வு தேவையே இல்லைன்னு நினைக்கிறாங்க) entire system- மயுமே failure ஆக்கிடுவானுங்க.]]]

அவங்க நிலைமையையும் யோசிச்சுப் பாருங்க.. சட்டமும், நீதியும் உடனுக்குடன் கிடைப்பதுபோல் இருந்தால் இந்த மக்கள் ஏன் இப்படி அல்லல்படுகிறார்கள்..?

[[[இதுவும் தாத்தாவோட, முட்டளுங்கள சரியா பயன்படுத்திகிட்ட இன்னொரு திருவிளையாடல். அடுத்த தடவை ஓட்டுக்கு ரெண்டாயிரம்கிரதுக்கு பதிலா ஐயாயிரமுன்னு குடுக்குறப்போ எல்லாத்தையும் மறந்துட்டு அதையும் வாங்கிகிட்டு பெருசுக்கே ஒட்டு போடுவானுங்க இந்த மானம்கெட்ட ஜென்மங்க.]]]

இது வேற விஷயம்.. இந்த நேரத்துல இதையும் சொல்லி இவங்களை நட்டாத்துலவ விடக்கூடாது. இது இவங்களோட படிப்பு சம்பந்தப்பட்ட விஷயம்..!

ஜோதிஜி said...

இது வேற விஷயம்.. இந்த நேரத்துல இதையும் சொல்லி இவங்களை நட்டாத்துலவ விடக்கூடாது. இது இவங்களோட படிப்பு சம்பந்தப்பட்ட விஷயம்..!

ஒழுங்கா சொல்லிக்கிட்டே வர்றீங்க. இடையில இது தேவைதானா?

உண்மைத்தமிழன் said...

[[[ஜோதிஜி said...
இது வேற விஷயம்.. இந்த நேரத்துல இதையும் சொல்லி இவங்களை நட்டாத்துலவ விடக்கூடாது. இது இவங்களோட படிப்பு சம்பந்தப்பட்ட விஷயம்..! ஒழுங்கா சொல்லிக்கிட்டே வர்றீங்க. இடையில இது தேவைதானா?]]]

வேற என்னத்த சொல்றது..? சொல்லுங்க.. பணத்தைக் கட்டிருங்கன்னு சொல்ல முடியுமா? கட்டக் கூடியவங்களா இருந்தா நம்மகிட்ட எதுக்காகச் சொல்றாங்க. இது சட்ட விரோதம்ன்னு தெரியறப்ப அதை எதிர்க்கத்தான் வேண்டும். பிரச்சினைகள் வரத்தான் செய்யும். வேறு வழியில்லை.. எதிர் கொள்ளத்தான் வேண்டும்..!

Ulagu said...

I am also from the same college. It is not true,please verify all the details before you publish(i am good fan of you).It is one of the few colleges in tamilnadu where they won't collect capitation fee.If they issue a circular , then there should be directive from goverenment.Government only give subsidy to tution fees and not the univesity fee which college needs to pay to University

Ulagu said...

follow this link..it clearly says government will be pay only the tuition fee (which is the major portion) and rest should be borne by the students.
http://www.tndte.com/GO_First_Graduate.pdf

தருமி said...

தொடர்ந்து நல்லவை நடைபெற வைக்க உங்களுக்கு வாழ்த்துகள்

உண்மைத்தமிழன் said...

கடிதம் எழுதியவரிடமிருந்து வந்திருக்கும் மடல்..!

அன்பு உண்மைத்தமிழன் அவர்களே,
இந்த ஏழையின் சொல்லை அம்பலத்தில் ஏற்றிக்காட்டிய உங்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்!

கடிதத்தில் நான் குறிப்பிட்டிருந்த எங்கள் பிரச்சனை குறித்து ஆழ்ந்த அக்கறை செலுத்தி வருகிறீர்கள். மிக்க நன்றி. உங்கள் பதிவை இன்று நம்பிக்கையோடு படித்தேன்.படித பின் என் நம்பிக்கை பத்து மடங்கு அதிகரித்தது. நாங்கள் ஒரு சில பெற்றோர்கள் சேர்ந்து இந்த அநியாயத்தை எதிர்த்து போராடி இருந்தாலும் வெற்றி கிடைக்குமா என்பது சந்தேகமே, ஆனால் இப்போது எங்கள் பிரச்னையை நீங்கள் நேரடியாக மக்களுக்கு கொண்டு சேர்த்துள்ளீர்கள். இதன் பலன் விரைவில் எங்களை வந்து அடையும் என்று நம்புகிறேன்.

உங்கள் பதிவில், எனது கடிதத்தின் நம்பகத்தன்மை குறித்து அந்த கல்லூரியின் முன்னாள் மாணவர்களோ அல்லது அனுதாபிகளோ கேள்வி எழுப்பி இருந்தனர். மனம் கஷ்டமாக இருக்கிறது. இந்த கடிதம் கவர்மென்ட் கோட்டா மாணவர்கள் அனைவருக்கும் கொடுக்கப்பட்டு இருக்கிறது. எல்.கே.ஜி அட்மிஷனுக்கு கூட இப்படி தைரியமாக டைரக்டர் கையெழுத்தோடு கடிதம் கொடுப்பார்களா என்பது சந்தேகமே. எந்த அளவு பின்புலம் இருந்தால் இந்த அளவுக்கு தைரியமாக டைரக்டர் கையெழுத்தோடு கடிதம் கொடுக்க முடியும் என்பதை யோசித்து பாருங்கள்.

அதிலும் அதர் பீஸ் என்று போட்டு மொட்டையாக பத்தாயிரம் என்று இருக்கிறது. அது பற்றி கேட்டால் , மாணவ மாணவிகளுக்கு கடைசி வருடம் "கேம்பஸ் இன்டர்வியு" ஏற்பாடு செய்வதற்கு என்று ஒரு பச்சைபொய்யை அவிழ்த்து விடுகின்றனர். இதற்க்கெல்லாம இப்படி பணம் வாங்குவார்களா என்பதை அறிந்தவர்கள் தான் சொல்ல வேண்டும்.

அதுவும், இப்படி கொள்ளை அடிக்க போகிறோம் என்று ஒரு மூன்று மாதம் முன்பே சொல்லி இருந்தால் தலையை அடமானம் வைத்தாவது பணம் புரட்டி இருப்பார்கள் பல பெற்றோர்கள், ஆனால் ஐந்தாம் தேதி பணம் கட்ட வேண்டும் என்று சரியாக ஒரு வாரம் முன்பு அறிவிப்பு கொடுத்தனர். சில பெற்றோர்கள் மிச்சம் சொச்சம் இருக்கும் நகைகளை அடமானம் வைத்து பணம் கட்டி விட்டனர். என்னை போன்ற வக்கில்லாத சிலர் மட்டும் இன்னும் பணம் கட்டாமல் உள்ளோம். இன்னும் மூன்று வருடத்தை எப்படி கழிக்க போகிறோம் என்று தெரியவில்லை.

உங்கள் இந்த பதிவின் மூலம் இந்த பிரச்சனை குறித்து "கல்லூரி கட்டணங்களை " கண்காணிக்கும் அரசாங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தால் "முதல் பட்டதாரி" மாணவ மாணவிகள் கட்டிய ரூபாய் 12700 /- பணத்தை திருப்பி தர நடவடிக்கை எடுப்பார்கள் என்று நம்புகிறேன்.

எனது இந்த கடிதத்தையும் தவறேதும் இல்லாமல் இருந்தால் அந்த பதிவோடு இணைத்து வெளியுடுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

உங்களுக்கு எனது நன்றிகள்!

கேரளாக்காரன் said...

இப்படி தான் மதுரையில் இருக்கற K.L.N கல்லூரில கூட எல்லா பசங்ககிட்டையும் 20000 Per Year வாங்கிகிட்டு அந்த காலேஜ் மைனாரிட்டி சௌராஷ்டிரா பசங்களுக்கு 15000 Per Year அதுல ஸ்காலர்சிப் குடுத்துடறாங்க
கேட்டா ட்ரைனிங் குடுக்கறோம்னு சொல்றாங்க இப்ப எல்லாரும் சென்னைல வேல தேடிகிட்டு சாப்பாட்டுக்கே கூட கஷ்டப்படறாங்க........ அப்போ நாங்க கெட்டுன 80000 ரூபா?

உண்மைத்தமிழன் said...

[[[கேரளாக்காரன்(ஆனாலும் அதிரி புதிரி தமிழன் ) said...

இப்படிதான் மதுரையில் இருக்கற K.L.N கல்லூரிலகூட எல்லா பசங்ககிட்டையும் 20000 Per Year வாங்கிகிட்டு அந்த காலேஜ் மைனாரிட்டி சௌராஷ்டிரா பசங்களுக்கு 15000 Per Year அதுல ஸ்காலர்சிப் குடுத்துடறாங்க.

கேட்டா ட்ரைனிங் குடுக்கறோம்னு சொல்றாங்க இப்ப எல்லாரும் சென்னைல வேல தேடிகிட்டு சாப்பாட்டுக்கே கூட கஷ்டப்படறாங்க. அப்போ நாங்க கெட்டுன 80000 ரூபா?]]]

அரசு அமைப்புகள் சரியில்லை ஸார்.. என்னதான் ஊருக்குச் செய்ததாகச் சொன்னாலும் அதெல்லாம் வெறும் வெளி வேஷத்துக்குத்தான் என்பது இந்த ஒரு விஷயத்திலேயே தெரிகிறது..! வருத்தப்படுவதைத் தவிர என்னிடம் வேறில்லை..!

K.S.Muthubalakrishnan said...

It is not a new problem . but it is not new i have more confident about NEC please check all the colleges and do the same .

Arun Ambie said...

சம்பந்தப்பட்ட மாணவரின் (உங்களுக்குக் கடிதத்தைக் கொடுத்தவர்) எதிர்காலத்துக்கு பதிப்பு வராத வகையில் நடவடிக்கை அமைய வேண்டும். சட்ட நடவடிக்கை காலதாமதமாகும். தேர்தல் நேரம் என்பதால் தேவையற்ற பிரச்சினையைத் தவிர்க்க ஆளும் கட்சி நடவடிக்கை எடுக்க வாய்ப்பிருக்கிறது.
தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசுவுக்கு எழுதுங்கள். (காப்பி டு கபில்சிபல்)
Insurance Premium? யார் யாருக்கு எடுத்தது? பாலிசி எண் இருக்கா?
Academic Societies? 300 ரூபாய வெச்சு எந்த Academic Societyலயும் மெம்பர்ஷிப் வாங்க முடியாது. IEEE சத்தியமாக சாத்தியமில்லை. நேஷனல் கல்லூரி அகடெமிக் சொசைட்டி என்று அவர்களே ஆரம்பித்திருப்பார்களோ?

MANI said...

மிகவும் துணிச்சலாக மக்கள் பிரச்சனைக்காக போராடும் தங்கள் குணம் மிகவும் பிடித்திருக்கிறது. தங்கள் பதிவு மிகவும் அதிகமானவர்களால் பார்க்கப்பட வேண்டிய ஒன்று. ஆனால் தமிழ்10 மற்றும் இண்ட்லி -யில் ஓட்டுப்போட சொடுக்கினால் தங்கள் பதிவு அங்கு காணப்படவில்லை என்று பிழைச் செய்தி வருகிறது. தயவு செய்து கவனிக்கவும்.

பிரபல பதிவர் said...

இலவச கலர் டிவி வாங்கினாலும் கேபிளுக்கும், கரண்ட்டுக்கும் நாமதான் காசு கட்டனும்ங்கிற அடிப்படை அறிவு இல்லாம வந்த கடிதத்த போட்டு ஒரு பதிவ வேஸ்ட் பண்ணிட்டீங்களே தமிழா....

முதல் பட்டதாரிகளுக்கு சில சலுகைகள் வழங்கப்பட்டுள்ளதே தவிர எல்லாமே ஓ.சி. இல்லை.... நல்ல கல்லூரியில் படிக்கனும்னா சில காம்ரமைஸ் செய்துதான் ஆகனும்....


நல்ல வேளை படிப்பு முடியும் வரை பேன்ட், சர்ட், ஜட்டி, பனியன் எல்லாம் ஓ.சி.ல கேக்கலை...
இதுக்கு பதிலா பேசாம அண்ணா யுனிவர்சிடி சர்டிபிகேட் படிக்காமலே குடுக்க சொல்லி போராடலாம்....


ஏற்கனவே ஓசில சீரழியிற நாடு... இதுல பல்ல வேற புடிச்சி பாத்தா விளங்கும்....

உண்மைத்தமிழன் said...

[[[K.S.Muthubalakrishnan said...
It is not a new problem. but it is not new i have more confident about NEC please check all the colleges and do the same.]]]

உண்மைதான். 95 சதவிகிதத் தனியார் கல்லூரிகளில் இதுதான் நிலைமை. அரசுத் தரப்பு தன்னுடைய நிதியுதவியை வெளிப்படையாகச் சொல்லாததுதான் இதற்குக் காரணம் என்று தற்போது தெரிகிறது..!

உண்மைத்தமிழன் said...

[[[Arun Ambie said...

சம்பந்தப்பட்ட மாணவரின் (உங்களுக்குக் கடிதத்தைக் கொடுத்தவர்) எதிர்காலத்துக்கு பதிப்பு வராத வகையில் நடவடிக்கை அமைய வேண்டும். சட்ட நடவடிக்கை காலதாமதமாகும். தேர்தல் நேரம் என்பதால் தேவையற்ற பிரச்சினையைத் தவிர்க்க ஆளும் கட்சி நடவடிக்கை எடுக்க வாய்ப்பிருக்கிறது.

தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசுவுக்கு எழுதுங்கள். (காப்பி டு கபில்சிபல்)

Insurance Premium? யார் யாருக்கு எடுத்தது? பாலிசி எண் இருக்கா?

Academic Societies? 300 ரூபாய வெச்சு எந்த Academic Societyலயும் மெம்பர்ஷிப் வாங்க முடியாது. IEEE சத்தியமாக சாத்தியமில்லை. நேஷனல் கல்லூரி அகடெமிக் சொசைட்டி என்று அவர்களே ஆரம்பித்திருப்பார்களோ?]]]

கொள்ளையடிப்பதற்குத் தலைப்புத் தேடியிருக்கிறார்கள். கிடைத்ததைப் பயன்படுத்துகிறார்கள்.. லைன் இன்ஸூன்ஸுக்கென்று தனியாகப் பணம் கேட்பது மிகப் பெரிய காமெடி கொள்ளை..!

கல்வித் துறை அமைச்சரிடம் புகார் செய்யத்தான் வேண்டும். அதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறோம்..!

உண்மைத்தமிழன் said...

[[[MANI said...
மிகவும் துணிச்சலாக மக்கள் பிரச்சனைக்காக போராடும் தங்கள் குணம் மிகவும் பிடித்திருக்கிறது. தங்கள் பதிவு மிகவும் அதிகமானவர்களால் பார்க்கப்பட வேண்டிய ஒன்று.]]]

இதிலென்ன துணிச்சல் வேண்டிக் கிடக்கிறது..? எல்லாருக்கும் இருக்கின்ற தைரியம்தான். கடிதம் வந்தது. வெளியிட்டுவிட்டேன். அவ்வளவுதான்..!

[[[ஆனால் தமிழ்10 மற்றும் இண்ட்லி -யில் ஓட்டுப் போட சொடுக்கினால் தங்கள் பதிவு அங்கு காணப்படவில்லை என்று பிழைச் செய்தி வருகிறது. தயவு செய்து கவனிக்கவும்.]]]

கவனிக்கிறேன். இது போன்று வரும் வாய்ப்பே இல்லையே..? நான் தொடர்ந்து ஓட்டளித்து வருகிறேனே..?

Unknown said...

தரமான கல்வியை அந்த கல்லூரி அளிக்கிறது, அதனால் அப்படி கேட்டிருக்கலாம். ஏன் முதலிலேயே அந்த பணத்தை கொடுத்திருக்கவேண்டும். முடியாதென்று சொல்லிவிட்டு அப்போதே வேறு கல்லூரிக்கு போகலாமே. சென்னையில்தான் ஏகப்பட்ட டப்பா காலேஜ் இருக்கிறதே. அங்க சேர்ந்திருக்கலாமே. வகுப்புக்குகூட போக வேண்டாம். படிக்கிற வயசுல நாளு பேர கூப்பிட்டுக்கிட்டு நல்லா சுத்தலாமே. எனக்கு தெரிந்து அந்த கல்லூரியில் பணத்தை கொட்டி கொடுத்து சேர்வதர்க்கு பலர் தயாராக இருக்கிறார்கள், அந்த அளவிர்க்கு அவர்கள் நல்லமுறையில் கல்லூரியை நடத்துகிறார்கள். உண்மைதமிழன் முதலில் தமிழகத்தின் அனைத்து கல்லூரிகளுக்கும் சென்று வசதிகள், கல்வி முறையை பார்த்து எழுதினால், அப்போது நேசனல் கல்லூரியின் தரம் உங்களுக்கும் புரியும். இப்போது கூட அந்த மாணவன் வேறு கல்லூரிக்கு மாற முடியும்.

உண்மைத்தமிழன் said...

[[[sivakasi maappillai said...

இலவச கலர் டிவி வாங்கினாலும் கேபிளுக்கும், கரண்ட்டுக்கும் நாமதான் காசு கட்டனும்ங்கிற அடிப்படை அறிவு இல்லாம வந்த கடிதத்த போட்டு ஒரு பதிவ வேஸ்ட் பண்ணிட்டீங்களே தமிழா....

முதல் பட்டதாரிகளுக்கு சில சலுகைகள் வழங்கப்பட்டுள்ளதே தவிர எல்லாமே ஓ.சி. இல்லை.... நல்ல கல்லூரியில் படிக்கனும்னா சில காம்ரமைஸ் செய்துதான் ஆகனும்.]]]

எல்லாமே ப்ரியா கொடுத்து படிக்க வைக்கிறோம்னுதான் இப்போ ஆட்சியாளர்கள் சொல்றாங்க.. அப்போ அது பொய்யா..?

[[[நல்லவேளை படிப்பு முடியும்வரை பேன்ட், சர்ட், ஜட்டி, பனியன் எல்லாம் ஓ.சி.ல கேக்கலை.
இதுக்கு பதிலா பேசாம அண்ணா யுனிவர்சிடி சர்டிபிகேட் படிக்காமலே குடுக்க சொல்லி போராடலாம்....
ஏற்கனவே ஓசில சீரழியிற நாடு. இதுல பல்ல வேற புடிச்சி பாத்தா விளங்கும்.]]]

மக்களைக் குற்றம் சொல்லாதீர்கள்.. எந்த வகையிலும் உடனுக்குடன் லட்சத்தில் சம்பாதிக்க முடியாத வகையில்தான் தற்போதைய வேலை வாய்ப்பு இருந்து வருகிறது. இந்த நேரத்தில் கட்டணங்கள் மட்டும் லட்சணக்கணக்கில் இருந்தால் எப்படி? அப்படி கொஞ்சம் யோசியுங்களேன்..!

உண்மைத்தமிழன் said...

[[[kalimuthu said...

தரமான கல்வியை அந்த கல்லூரி அளிக்கிறது, அதனால் அப்படி கேட்டிருக்கலாம். ஏன் முதலிலேயே அந்த பணத்தை கொடுத்திருக்க வேண்டும். முடியாதென்று சொல்லிவிட்டு அப்போதே வேறு கல்லூரிக்கு போகலாமே. சென்னையில்தான் ஏகப்பட்ட டப்பா காலேஜ் இருக்கிறதே. அங்க சேர்ந்திருக்கலாமே. வகுப்புக்குகூட போக வேண்டாம். படிக்கிற வயசுல நாளு பேர கூப்பிட்டுக்கிட்டு நல்லா சுத்தலாமே. எனக்கு தெரிந்து அந்த கல்லூரியில் பணத்தை கொட்டி கொடுத்து சேர்வதர்க்கு பலர் தயாராக இருக்கிறார்கள், அந்த அளவிர்க்கு அவர்கள் நல்ல முறையில் கல்லூரியை நடத்துகிறார்கள். உண்மைதமிழன் முதலில் தமிழகத்தின் அனைத்து கல்லூரிகளுக்கும் சென்று வசதிகள், கல்வி முறையை பார்த்து எழுதினால், அப்போது நேசனல் கல்லூரியின் தரம் உங்களுக்கும் புரியும். இப்போதுகூட அந்த மாணவன் வேறு கல்லூரிக்கு மாற முடியும்.]]]

காளிமுத்து ஸார்..

அந்தக் கல்லூரியின் தரம் பற்றி நான் ஏற்கெனவே அறிந்ததுதான். இப்போது வந்துள்ள குழப்பம் அரசினால்தான் ஏற்பட்டுள்ளது என்பது இப்போது பல பதிவர்களின் பின்னூட்டத்தையும், செய்திகளையும் அறிந்த பின்பே தெரிகிறது..!

அனைத்துக் கட்டணங்களையும் அரசே ஏற்கிறது என்கிற சொல்வார்த்தையில் மயங்கித்தான் அப்பாவிகள் அந்தக் கல்லூரியில் போய் சேர்த்திருக்கிறார்கள். இப்போது அரசு சொன்னது பொய்.. அவர்கள் முழு கட்டணத்தையும் செலுத்தவில்லை என்று நிர்வாகம் சொன்னால் அதற்கு அப்பாவி மக்கள் எப்படி பொறுப்பேற்பார்கள்..?

ரிஷி said...

நான் ஒரு தனியார் சுயநிதி பொறியியல் கல்லூரியில் பணிபுரிபவன் என்கிற முறையில் எனது கருத்துக்களை முன்வைக்கிறேன். அரசின் இந்தத் திட்டம் பாராட்டத்தக்கதே! உலகு அவர்கள் சுட்டிக்காட்டியபடி கல்விக் கட்டணத்தை அரசு ஏற்றுக்கொள்வது என்பது டியூசன் கட்டணத்தை மட்டுமே சாரும்! அதாவது கல்லூரியில் பாடங்கள் சொல்லித்தருதல் மற்றும் ஆய்வக சம்பந்தமான பணிகளுக்கு இந்த பெரும்பகுதி கட்டணம் பொருந்தும். ஆனால் இது போக நிர்வாகக் காரணங்களுக்கான வகையில் சில பல கட்டணங்களையும் மாணவர்கள் தலையில் தான் கட்டப்படும். கடிதத்தில் காட்டப்பட்டுள்ள வகையிலும் மேலும் சில வகையறாக்களுக்காவும் சில கட்டணங்களைப் போடுவதுண்டு.

இந்தக் கட்டணங்கள் கல்லூரிக்கு கல்லூரிக்கு மாறுபடும். அரசு நிர்ணயம் செய்துள்ள டியூசன் கட்டணம் என்பது சுயநிதி கல்லூரிகளில் ஃப்ரீ சீட் அடிப்படையில் சேர்ந்த மாணவர்களுக்கு ரூ 32500 ம், பேமண்ட் சீட் அடிப்படையில் சேர்ந்த மாணவர்களுக்கு ரூ 62500 என்பதுவும் ஆகும். அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் டியூசன் கட்டணம் என்பதும் மிகக் குறைவானதாக இருக்கும். அதுமட்டுமல்லாது, ஒரு கல்லூரி AICTE accreditation பெற்றிருந்தால் மேலும் பத்தாயிரம் டியூசன் கட்டணத்தில் வசூலிக்கலாம்.

ரிஷி said...

நான் ஒரு தனியார் சுயநிதி பொறியியல் கல்லூரியில் பணிபுரிபவன் என்கிற முறையில் எனது கருத்துக்களை முன்வைக்கிறேன். அரசின் இந்தத் திட்டம் பாராட்டத்தக்கதே! உலகு அவர்கள் சுட்டிக்காட்டியபடி கல்விக் கட்டணத்தை அரசு ஏற்றுக்கொள்வது என்பது டியூசன் கட்டணத்தை மட்டுமே சாரும்! அதாவது கல்லூரியில் பாடங்கள் சொல்லித்தருதல் மற்றும் ஆய்வக சம்பந்தமான பணிகளுக்கு இந்த பெரும்பகுதி கட்டணம் பொருந்தும். ஆனால் இது போக நிர்வாகக் காரணங்களுக்கான வகையில் சில பல கட்டணங்களையும் மாணவர்கள் தலையில் தான் கட்டப்படும். கடிதத்தில் காட்டப்பட்டுள்ள வகையிலும் மேலும் சில வகையறாக்களுக்காவும் சில கட்டணங்களைப் போடுவதுண்டு.

இந்தக் கட்டணங்கள் கல்லூரிக்கு கல்லூரிக்கு மாறுபடும். அரசு நிர்ணயம் செய்துள்ள டியூசன் கட்டணம் என்பது சுயநிதி கல்லூரிகளில் ஃப்ரீ சீட் அடிப்படையில் சேர்ந்த மாணவர்களுக்கு ரூ 32500 ம், பேமண்ட் சீட் அடிப்படையில் சேர்ந்த மாணவர்களுக்கு ரூ 62500 என்பதுவும் ஆகும். அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் டியூசன் கட்டணம் என்பதும் மிகக் குறைவானதாக இருக்கும். அதுமட்டுமல்லாது, ஒரு கல்லூரி AICTE accreditation பெற்றிருந்தால் மேலும் பத்தாயிரம் டியூசன் கட்டணத்தில் வசூலிக்கலாம்.

ரிஷி said...

பின்வரும் லிங்குகளில் உள்ள விவரங்களைப் பாருங்கள்.
http://www.tndte.com/GO_First_Graduate.pdf
http://www.tn.gov.in/citizen/dte.htm
http://www.tndte.com/studentscorner/COLLECTION%20OF%20EXCESS%20FEE%20COMPLAINTS.pdf

ஆக, எங்கள் கல்லூரியைப் பொறுத்தவரை டியூசன் கட்டணம் தவிர்த்து மேலும் பத்திலிருந்து இருபதாயிரம் வரை வாங்கப்படுவதுண்டு.

Book fee, Internet fee, academic societies, university related fees, sports fee..
எனப் பல வகைகளில் கட்டணம் சேர்க்கப்படும். இது தமிழகத்தின் எல்லாக் கல்லூரிகளுக்கும் பொருந்தும்.

இப்போது விஷயம் என்னவென்றால், அரசின் கட்டணச் சலுகை என்பது டியூசன் கட்டணத்திற்கு மட்டும்தான்! இன்னபிற கட்டணங்களுக்கு மாணவன் தான் பொறுப்பேற்க வேண்டும். அந்த இன்னபிற கட்டணங்களும், டியூசன் கட்டணங்களும் மோசமான வகையில் அளவுகதிகமாய் வசூலிக்கப்பட்டால் புகார் செய்யலாம்.

அரசின் அறிவிப்பில் டியூசன் கட்டணம் என்பதுடன் Accreditation கட்டணமும் சேருமா என்ற தெளிவு அதில் இல்லை. Accreditation என்றால் என்ன என்று என்னிடம் உயர்கல்வித் துறை கேட்காமலிருந்தால் சரிதான்!!!

15000+12500 என்பது சற்றே அதிகம்தான்! அவ்வளவே! வேறொன்றும் இல்லை.

ரிஷி said...

பின்வரும் லிங்குகளில் உள்ள விவரங்களைப் பாருங்கள்.
http://www.tndte.com/GO_First_Graduate.pdf
http://www.tn.gov.in/citizen/dte.htm
http://www.tndte.com/studentscorner/COLLECTION%20OF%20EXCESS%20FEE%20COMPLAINTS.pdf

ஆக, எங்கள் கல்லூரியைப் பொறுத்தவரை டியூசன் கட்டணம் தவிர்த்து மேலும் பத்திலிருந்து இருபதாயிரம் வரை வாங்கப்படுவதுண்டு.

Book fee, Internet fee, academic societies, university related fees, sports fee..
எனப் பல வகைகளில் கட்டணம் சேர்க்கப்படும். இது தமிழகத்தின் எல்லாக் கல்லூரிகளுக்கும் பொருந்தும்.

இப்போது விஷயம் என்னவென்றால், அரசின் கட்டணச் சலுகை என்பது டியூசன் கட்டணத்திற்கு மட்டும்தான்! இன்னபிற கட்டணங்களுக்கு மாணவன் தான் பொறுப்பேற்க வேண்டும். அந்த இன்னபிற கட்டணங்களும், டியூசன் கட்டணங்களும் மோசமான வகையில் அளவுகதிகமாய் வசூலிக்கப்பட்டால் புகார் செய்யலாம்.

அரசின் அறிவிப்பில் டியூசன் கட்டணம் என்பதுடன் Accreditation கட்டணமும் சேருமா என்ற தெளிவு அதில் இல்லை. Accreditation என்றால் என்ன என்று என்னிடம் உயர்கல்வித் துறை கேட்காமலிருந்தால் சரிதான்!!!

15000+12500 என்பது சற்றே அதிகம்தான்! அவ்வளவே! வேறொன்றும் இல்லை.

ரிஷி said...

Academic society என்பது உறுப்பினர் கட்டணம் என்று மட்டும் எடுத்துக் கொள்ளல் ஆகாது. பல கல்லூரிகளிலும், Fine arts club, Debate Club, Quiz club, Microsoft campus club, IE(I) student chapter, IEEE forum, CSI forum, Reader club.........

இது போக இன்னும் நிறைய இருக்கிறது. அதாவது பாடம் சார்ந்தவை நீங்கலாக துறை சார்ந்தவற்றில் மென்மேலும் அறிவைப் பெருக்கிக் கொள்வதற்கு இந்த கிளப்கள் உறுதுணையாக இருக்கக்கூடும். அவ்வளவே!

இன்சூரன்ஸ் பிரிமியம் என்பது பற்றி எனக்கு அவ்வளவாக தெரியவில்லை. வேலை செய்யும் எங்களிடமே மெடிக்கல் பிரிமியம் எனக்க் கூறி வருடத்திற்கு ஐந்நூறு ரூபாய் கல்லூரி நிர்வாகம் சம்பளத்தில் பிடிக்கிறது. ஏதேனும் உடல்நலக் குறைவு ஏற்பட்டால் அதிலிருந்து மருத்துவச் செலவுகளை பெற்றுக் கொள்ளலாம். இதில் நிறைய விதிமுறைகள் உள்ளன. மாணவர்களுக்கும் அதுபோல ஏதேனும் இருக்கக் கோடும்.

ரிஷி said...

இது சம்பந்தமாக மேலும் விவரங்கள் எது வேண்டுமானாலும் என்னிடம் கேட்டுப் பெற்றுக் கொள்ளலாம். தெரிந்தவற்றைக் கூறுகிறேன். தெரியாவிடினும் அண்ண யுனிவர்சிடியில் தொடர்பு கொண்டாவது பெற்றுத் தர என்னால் முடியும். ஏஐசிடியில் தென் தமிழக
அளவில் நிர்வாக உறுப்பினராக விளங்கும் டாக்டர்.எம்.எஸ்.பழனிச்சாமி அவர்களையும் என்னால் தொடர்பு கொண்டு பேச முடியும். எனக்கு அவர்களுடன் நட்பு உண்டு. ஆனால் அவர்களிடம் போவதற்கு முன் நாம் தெளிவாக இருந்தாக வேண்டும்.

அரசின் அறிவிப்பில் போதிய தெளிவு வேண்டும் என்றும் சொல்ல கடமை பட்டிருக்கிரேன். யாரேனும் என் கருத்தில் மாறுபடுகிறீர்களா?

படகோட்டி said...

அவசரப்பட்டு கடிதத்தைப் பிரசுரித்திருக்கிறீர்கள். மீடியா என்பது கவனமாகக் கையாள வேண்டிய ஒரு விஷயம். எதையும் அறிந்து கொண்டு, அதைப் பற்றிய ஒரு விசாரணையை மேற்கொண்டு, தீர விசாரித்துக் கொண்டுதான் வாதாட வேண்டும்.நாலட்டின்புதூரில் உள்ள அந்தக் கல்லூரிக்கு நான் நேரில் சென்றிருக்கிறேன். அக்கல்லூரி சர்வதேச கருத்தரங்குகள் பலவற்றை நடத்தியிருக்கிறது. அக்கல்லூரி உட்கட்டமைப்பு சிறப்புமிக்க கல்லூரி.தரமான பொருளுக்கு கூடுதல் விலை தரத்தயாராக இருக்கும் நாம், தரமான கட்டமைப்புடன் கூடிய தரமான கல்விச் சேவைக்கு ஏன் கூடுதல் கட்டணம் தரக்கூடாது. கல்விக்கடன் பெறுவது தற்போது எளிதாக்கப்பட்டு உள்ளது. கல்விக்கடன் பெற்று இந்நிலையை குற்றம் சாட்டுபவர் சமாளித்திருக்கலாம். எல்லாவற்றையும் இலவசமாகவே பெற நினைக்கும் ஒரு சமுதாயத்தை நம் அரசியல் வாதிகள் உருவாக்கி விட்டனர். தற்போது இலவசத்திற்காக போராட மக்கள் துணிந்து விட்டனர்.

இச்சூழ்நிலையில், இந்தக் குற்றச்சாட்டு சம்பந்தமாக நீங்கள் உண்மை அறிந்திருக்க முயற்சித்திருக்க வேண்டும்.

ரிஷி said...

படகோட்டி அவர்கள் சொல்வது உண்மைதான். நான் அவருடன் ஒத்துப் போகிறேன். கோவில்பட்டி கல்லூரி விதிகளுக்குட்பட்டேதான் நடந்திருக்கிறது என்றே என்னால் கூற முடியும்.

உண்மைத்தமிழன் said...

[[[ரிஷி said...

உலகு அவர்கள் சுட்டிக் காட்டியபடி கல்விக் கட்டணத்தை அரசு ஏற்றுக் கொள்வது என்பது டியூசன் கட்டணத்தை மட்டுமே சாரும்! அதாவது கல்லூரியில் பாடங்கள் சொல்லித் தருதல் மற்றும் ஆய்வக சம்பந்தமான பணிகளுக்கு இந்தப் பெரும் பகுதி கட்டணம் பொருந்தும். ஆனால் இது போக நிர்வாகக் காரணங்களுக்கான வகையில் சில பல கட்டணங்களையும் மாணவர்கள் தலையில்தான் கட்டப்படும். கடிதத்தில் காட்டப்பட்டுள்ள வகையிலும் மேலும் சில வகையறாக்களுக்காவும் சில கட்டணங்களைப் போடுவதுண்டு.]]]

இது கொடுமையில்லையா..? அரசின் இந்த உள்ளடி வேலை மாணவர்களின் பெற்றோர்களுக்குத் தெரியுமா..? அரசு ஏன் இதனை வெளிப்படையாகச் சொல்லவில்லை. சொல்லியிருந்தால் பெற்றோர்கள் தயாராக இருந்திருப்பார்களே..! எதற்கு இந்த ஏமாற்று வேலை..!? இதற்கு அந்தப் பெற்றோர்கள் எப்படி பொறுப்பாவார்கள்..?

உண்மைத்தமிழன் said...

[[[ரிஷி said...

பின்வரும் லிங்குகளில் உள்ள விவரங்களைப் பாருங்கள்.
http://www.tndte.com/GO_First_Graduate.pdf
http://www.tn.gov.in/citizen/dte.htm
http://www.tndte.com/studentscorner/COLLECTION%20OF%20EXCESS%20FEE%20COMPLAINTS.pdf

ஆக, எங்கள் கல்லூரியைப் பொறுத்தவரை டியூசன் கட்டணம் தவிர்த்து மேலும் பத்திலிருந்து இருபதாயிரம்வரை வாங்கப்படுவதுண்டு.

Book fee, Internet fee, academic societies, university related fees, sports fee.. எனப் பல வகைகளில் கட்டணம் சேர்க்கப்படும். இது தமிழகத்தின் எல்லாக் கல்லூரிகளுக்கும் பொருந்தும்.

இப்போது விஷயம் என்னவென்றால், அரசின் கட்டணச் சலுகை என்பது டியூசன் கட்டணத்திற்கு மட்டும்தான்! இன்ன பிற கட்டணங்களுக்கு மாணவன்தான் பொறுப்பேற்க வேண்டும். அந்த இன்ன பிற கட்டணங்களும், டியூசன் கட்டணங்களும் மோசமான வகையில் அளவுகதிகமாய் வசூலிக்கப்பட்டால் புகார் செய்யலாம்.

அரசின் அறிவிப்பில் டியூசன் கட்டணம் என்பதுடன் Accreditation கட்டணமும் சேருமா என்ற தெளிவு அதில் இல்லை. Accreditation என்றால் என்ன என்று என்னிடம் உயர்கல்வித் துறை கேட்காமலிருந்தால் சரிதான்!!!

15000+12500 என்பது சற்றே அதிகம்தான்! அவ்வளவே! வேறொன்றும் இல்லை.]]]

தகவலுக்கு மிக்க நன்றிகள் ரிஷி..!

உண்மைத்தமிழன் said...

[[[ரிஷி said...

Academic society என்பது உறுப்பினர் கட்டணம் என்று மட்டும் எடுத்துக் கொள்ளல் ஆகாது. பல கல்லூரிகளிலும், Fine arts club, Debate Club, Quiz club, Microsoft campus club, IE(I) student chapter, IEEE forum, CSI forum, Reader club.........

இது போக இன்னும் நிறைய இருக்கிறது. அதாவது பாடம் சார்ந்தவை நீங்கலாக துறை சார்ந்தவற்றில் மென்மேலும் அறிவைப் பெருக்கிக் கொள்வதற்கு இந்த கிளப்கள் உறுதுணையாக இருக்கக்கூடும். அவ்வளவே!

இன்சூரன்ஸ் பிரிமியம் என்பது பற்றி எனக்கு அவ்வளவாக தெரியவில்லை. வேலை செய்யும் எங்களிடமே மெடிக்கல் பிரிமியம் எனக்க் கூறி வருடத்திற்கு ஐந்நூறு ரூபாய் கல்லூரி நிர்வாகம் சம்பளத்தில் பிடிக்கிறது. ஏதேனும் உடல்நலக் குறைவு ஏற்பட்டால் அதிலிருந்து மருத்துவச் செலவுகளை பெற்றுக் கொள்ளலாம். இதில் நிறைய விதிமுறைகள் உள்ளன. மாணவர்களுக்கும் அதுபோல ஏதேனும் இருக்கக் கோடும்.]]]

இதுவெல்லாம் கொள்ளையடிப்பதுதான் ரிஷி.. மக்கள் நலனின் அக்கறை கொள்ளாத அரசுகள் இருக்கின்றவரையில் இது போன்ற கொள்ளைக்காரர்கள் இருக்கத்தான் செய்வார்கள்..!

உண்மைத்தமிழன் said...

[[[ரிஷி said...

இது சம்பந்தமாக மேலும் விவரங்கள் எது வேண்டுமானாலும் என்னிடம் கேட்டுப் பெற்றுக் கொள்ளலாம். தெரிந்தவற்றைக் கூறுகிறேன். தெரியாவிடினும் அண்ண யுனிவர்சிடியில் தொடர்பு கொண்டாவது பெற்றுத் தர என்னால் முடியும். ஏஐசிடியில் தென் தமிழக
அளவில் நிர்வாக உறுப்பினராக விளங்கும் டாக்டர்.எம்.எஸ்.பழனிச்சாமி அவர்களையும் என்னால் தொடர்பு கொண்டு பேச முடியும். எனக்கு அவர்களுடன் நட்பு உண்டு. ஆனால் அவர்களிடம் போவதற்கு முன் நாம் தெளிவாக இருந்தாக வேண்டும்.
அரசின் அறிவிப்பில் போதிய தெளிவு வேண்டும் என்றும் சொல்ல கடமைபட்டிருக்கிரேன். யாரேனும் என் கருத்தில் மாறுபடுகிறீர்களா?]]]

எனது கருத்தும் இதுதான். அரசின் தெளிவில்லாத அறிவிப்பினால் இப்போது மாணவர்களும், பெற்றோர்களும் அல்லல்படுகின்றனர்..!

உண்மைத்தமிழன் said...

[[[படகோட்டி said...

அவசரப்பட்டு கடிதத்தைப் பிரசுரித்திருக்கிறீர்கள். மீடியா என்பது கவனமாகக் கையாள வேண்டிய ஒரு விஷயம். எதையும் அறிந்து கொண்டு, அதைப் பற்றிய ஒரு விசாரணையை மேற்கொண்டு, தீர விசாரித்துக் கொண்டுதான் வாதாட வேண்டும். நாலட்டின்புதூரில் உள்ள அந்தக் கல்லூரிக்கு நான் நேரில் சென்றிருக்கிறேன். அக்கல்லூரி சர்வதேச கருத்தரங்குகள் பலவற்றை நடத்தியிருக்கிறது. அக்கல்லூரி உட்கட்டமைப்பு சிறப்புமிக்க கல்லூரி. தரமான பொருளுக்கு கூடுதல் விலை தரத் தயாராக இருக்கும் நாம், தரமான கட்டமைப்புடன் கூடிய தரமான கல்விச் சேவைக்கு ஏன் கூடுதல் கட்டணம் தரக் கூடாது. கல்விக் கடன் பெறுவது தற்போது எளிதாக்கப்பட்டு உள்ளது. கல்விக் கடன் பெற்று இந்நிலையை குற்றம்சாட்டுபவர் சமாளித்திருக்கலாம். எல்லாவற்றையும் இலவசமாகவே பெற நினைக்கும் ஒரு சமுதாயத்தை நம் அரசியல்வாதிகள் உருவாக்கி விட்டனர். தற்போது இலவசத்திற்காக போராட மக்கள் துணிந்து விட்டனர்.
இச்சூழ்நிலையில், இந்தக் குற்றச்சாட்டு சம்பந்தமாக நீங்கள் உண்மை அறிந்திருக்க முயற்சித்திருக்க வேண்டும்.]]]

இல்லை. இந்தச் செய்தி இப்படி வெளியான பின்புதானே நமது தமிழக அரசின் மொள்ளமாரித்தனம் வெளியில் வந்துள்ளது..! இல்லாவிடில் உங்களுக்கும், எனக்கும் தெரிந்திருக்குமா..?

உண்மைத்தமிழன் said...

[[[ரிஷி said...
படகோட்டி அவர்கள் சொல்வது உண்மைதான். நான் அவருடன் ஒத்துப் போகிறேன். கோவில்பட்டி கல்லூரி விதிகளுக்குட்பட்டேதான் நடந்திருக்கிறது என்றே என்னால் கூற முடியும்.]]]

இல்லை ரிஷி.. இது நிச்சயம் அதிகமான தொகை.. இதையெல்லாம் கட்டும் நிலையில் அந்த மாணவர்களி்ன் பெற்றோர்கள் இல்லை என்பதுதான் அவர்கள் சொல்கின்ற கருத்து.. நாம் அதனை ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்..!

kanagu said...

அண்ணா.. புத்தக கண்காட்சி பற்றி எழுதவே இல்லயேண்ணா... :(

சீக்கிரம் எழுதுங்க...

ரிஷி said...

///உண்மைத்தமிழன் said...

[[[ரிஷி said...

உலகு அவர்கள் சுட்டிக் காட்டியபடி கல்விக் கட்டணத்தை அரசு ஏற்றுக் கொள்வது என்பது டியூசன் கட்டணத்தை மட்டுமே சாரும்! அதாவது கல்லூரியில் பாடங்கள் சொல்லித் தருதல் மற்றும் ஆய்வக சம்பந்தமான பணிகளுக்கு இந்தப் பெரும் பகுதி கட்டணம் பொருந்தும். ஆனால் இது போக நிர்வாகக் காரணங்களுக்கான வகையில் சில பல கட்டணங்களையும் மாணவர்கள் தலையில்தான் கட்டப்படும். கடிதத்தில் காட்டப்பட்டுள்ள வகையிலும் மேலும் சில வகையறாக்களுக்காவும் சில கட்டணங்களைப் போடுவதுண்டு.]]]

இது கொடுமையில்லையா..? அரசின் இந்த உள்ளடி வேலை மாணவர்களின் பெற்றோர்களுக்குத் தெரியுமா..? அரசு ஏன் இதனை வெளிப்படையாகச் சொல்லவில்லை. சொல்லியிருந்தால் பெற்றோர்கள் தயாராக இருந்திருப்பார்களே..! எதற்கு இந்த ஏமாற்று வேலை..!? இதற்கு அந்தப் பெற்றோர்கள் எப்படி பொறுப்பாவார்கள்..? ///

சரவணன், இந்த லிங்கில் 7வது பாயிண்டை படித்துப் பாருங்கள்.

http://www.tn.gov.in/citizen/dte.htm

கல்விக் கட்டணம் பழையதாக இருக்கிறது. அதை அப்டேட் செய்யவில்லை. அது ஒருபுறமிருக்கட்டும். அதன் கீழே பின் வருமாறு இருக்கிறது.

In addition to the above fees, the students have to pay admission fee, caution deposit, sports fee etc.

இந்த etc. என்பதிலேயே இன்னபிற கட்டணங்களும் அடங்கிவிடுகின்றன. அதனால் மாணவர்களுக்கு வழங்கப்படும் specialized infrastructure, course oriented programmes, trainings, etc. இவற்றின் தரத்திற்காக டியூசன் கட்டணம் தவிர்த்து மேலும் கட்டணம் வாங்கப்படும். இது அனைத்துக் கல்லூரிகளுக்கும் பொருந்தும். காலங்காலமாக இது நடைமுறையில் இருப்பதுதான்.

ரிஷி said...

///உண்மைத்தமிழன் said...

[[[ரிஷி said...
படகோட்டி அவர்கள் சொல்வது உண்மைதான். நான் அவருடன் ஒத்துப் போகிறேன். கோவில்பட்டி கல்லூரி விதிகளுக்குட்பட்டேதான் நடந்திருக்கிறது என்றே என்னால் கூற முடியும்.]]]

இல்லை ரிஷி.. இது நிச்சயம் அதிகமான தொகை.. இதையெல்லாம் கட்டும் நிலையில் அந்த மாணவர்களி்ன் பெற்றோர்கள் இல்லை என்பதுதான் அவர்கள் சொல்கின்ற கருத்து.. நாம் அதனை ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்..! ///

கல்விக் கட்டணம் இலவசம் என்ற உடனே மொத்தப் படிப்பையும் இலவசமாகவே முடித்து விடலாம் போலிருக்கிறது என்றேதான் சராசரி பெற்றோர்கள் எண்ணுவார்கள். அவர்கள் நினைப்பில் தவறொன்றுமில்லை. ஆனால் அதை அரசு தெளிவுபடுத்தியிருக்க வேண்டும்!!

ரிஷி said...

///இல்லை. இந்தச் செய்தி இப்படி வெளியான பின்புதானே நமது தமிழக அரசின் மொள்ளமாரித்தனம் வெளியில் வந்துள்ளது..! இல்லாவிடில் உங்களுக்கும், எனக்கும் தெரிந்திருக்குமா..?///

இதில் உள்ளடி வேலை இருந்தால் இது மொள்ளமாரித்தனம்தான். ஆனால் இதை நிர்வாகத் திறன் இன்மை என்ற வகையில்தான் நான் பார்க்கிறேன். அதாவது எங்கள் கல்லூரி அலுவலகத்தில் இது குறித்து தொடர்பு கொண்டபோது, அவர்கள் தெரிவித்த சேதி என்னவென்றால்.. எங்கள் கல்லூரியில் 183 பேர் இந்தப் பிரிவின் கீழ் சேர்ந்திருக்கிறார்கள். ஒரிஜினலாக ரூ.32500 தந்திருக்கவேண்டிய அரசாங்கம் ரூ.20000ம் தான் எங்கள் கல்லூரிக்கு மான்யம் வழங்கியிருக்கிறது. இதே போல்தான் மற்ற கல்லூரிகளுக்கும் நேர்ந்திருக்கும் என நம்புகிறேன். அதற்குக் காரணம் அரசின் நிதிமுடைதான். அதாவது எங்கள் கல்லூரியிலேயே 183பேர் என்றால் இதுபோல தமிழ்நாட்டில் எத்தனை பேர் அதுபோல சேர்ந்திருப்பர்.. அவர்களுக்கான தொகை என்ன என்று பார்த்தால் கண்ணைக் கட்டும்!! ஆனால் முன்யோசனை இல்லாத நாதாரிகளின் ஆட்சியில்தான் இதுபோன்ற அறிவிப்புகள் வெளியாகும்!

இதுவும் உண்மை!

ரிஷி said...

[[படகோட்டி said...
1. கல்விக் கடன் பெறுவது தற்போது எளிதாக்கப்பட்டு உள்ளது. 2. எல்லாவற்றையும் இலவசமாகவே பெற நினைக்கும் ஒரு சமுதாயத்தை நம் அரசியல்வாதிகள் உருவாக்கி விட்டனர். தற்போது இலவசத்திற்காக போராட மக்கள் துணிந்து விட்டனர். ]]

நூறு சதவீதம் வழிமொழிகிறேன். இலவசமாக கொடுக்கிறேன் பேர்வழி என சொல்லாமல் கல்விக்கடன்களை மேலும் எளிதாக்கி அவர்கள் வேலைக்குச் சென்றபின் அவர்களை வட்டியுடன் திருப்பிக் கட்டச் சொல்லப் பணிக்கலாம். இலவசம் எனக் கொடுத்ததே தவறு!!

இலவசங்கள் வேரறுக்கப்பட வேண்டும் என்பது என் வாதம். அரசிடம் நான் முன்வைக்கும் வேண்டுகோள்/கட்டளை இதுதான்!

மீன் பிடிக்கக் கற்றுக் கொடுங்கள். மீனைப் பிடித்துக் கொடுக்காதீர்கள்.

அவர்கள் படிப்பிற்கு தேவையான செலவை அவர்கள் செய்வதற்கு சூழலை ஏற்படுத்திக் கொடுங்கள். ஆனால் அந்த செலவையே நீங்கள் ஏற்றுக் கொள்ளாதீர்கள்.

ரிஷி said...

///படகோட்டி said...

அவசரப்பட்டு கடிதத்தைப் பிரசுரித்திருக்கிறீர்கள். மீடியா என்பது கவனமாகக் கையாள வேண்டிய ஒரு விஷயம். எதையும் அறிந்து கொண்டு, அதைப் பற்றிய ஒரு விசாரணையை மேற்கொண்டு, தீர விசாரித்துக் கொண்டுதான் வாதாட வேண்டும். ///

பிரசுரித்ததில் தவறொன்றுமில்லை. இதைப் பற்றிப் பேச பேச தெளிவுக்கு வருகிறோம் அல்லவா?

Arun Ambie said...

இந்தச் செய்தியை என் ஆங்கில வ்லைப்பூவில் இட விழைகிறேன். அனுமதிப்பீர்களா, உண்மைத்தமிழரே?

உண்மைத்தமிழன் said...

[[[kanagu said...
அண்ணா.. புத்தக கண்காட்சி பற்றி எழுதவே இல்லயேண்ணா... :(
சீக்கிரம் எழுதுங்க...]]]

எழுதிருவோம்..!

உண்மைத்தமிழன் said...

[[[Philosophy Prabhakaran said...
நூறாவது இடுகை எழுதியிருக்கிறேன்... படித்துவிட்டு கருத்து தெரிவிக்க வேண்டுகிறேன்...
http://philosophyprabhakaran.blogspot.com/2011/01/100.html]]]

அதுக்குள்ள நூறா..? பாராட்டுக்கள்.. வாழ்த்துகள் பிரபாகரன்..!

உண்மைத்தமிழன் said...

ரிஷி said...
சரவணன், இந்த லிங்கில் 7வது பாயிண்டை படித்துப் பாருங்கள்.

http://www.tn.gov.in/citizen/dte.htm

கல்விக் கட்டணம் பழையதாக இருக்கிறது. அதை அப்டேட் செய்யவில்லை. அது ஒருபுறமிருக்கட்டும். அதன் கீழே பின் வருமாறு இருக்கிறது.

In addition to the above fees, the students have to pay admission fee, caution deposit, sports fee etc.

இந்த etc. என்பதிலேயே இன்னபிற கட்டணங்களும் அடங்கிவிடுகின்றன. அதனால் மாணவர்களுக்கு வழங்கப்படும் specialized infrastructure, course oriented programmes, trainings, etc. இவற்றின் தரத்திற்காக டியூசன் கட்டணம் தவிர்த்து மேலும் கட்டணம் வாங்கப்படும். இது அனைத்துக் கல்லூரிகளுக்கும் பொருந்தும். காலங்காலமாக இது நடைமுறையில் இருப்பதுதான்.]]]

திருப்பித் திருப்பி இதையேதான் சொல்றீங்க..? டியூஷன் பீஸை மட்டுமே அரசு ஏற்றுக் கொள்ளும். மீதியை அந்த மாணவர்கள்தான் ஏற்க வேண்டும்னு அரசு வெளிப்படையாக அறிக்கை விடவே இல்லையே..? இதற்கு அந்தப் பெற்றோர்கள் எப்படி பொறுப்பாவார்கள்..?

உண்மைத்தமிழன் said...

[[[ரிஷி said...

கல்விக் கட்டணம் இலவசம் என்ற உடனே மொத்தப் படிப்பையும் இலவசமாகவே முடித்து விடலாம் போலிருக்கிறது என்றேதான் சராசரி பெற்றோர்கள் எண்ணுவார்கள். அவர்கள் நினைப்பில் தவறொன்றுமில்லை. ஆனால் அதை அரசு தெளிவுபடுத்தியிருக்க வேண்டும்!!]]]

எந்தவொரு அரசுமே கல்வியை இலவசமாகத்தான் கொடுத்தாக வேண்டும். அது அடிப்படை உரிமை. அதனை வைத்து பணம் சம்பாதிக்க வாய்ப்பளித்து தாங்களும் அதில் குளிர் காய்வதுதான் அரசியல்வியாதிகளின் வேலை..!

உண்மைத்தமிழன் said...

[[[ரிஷி said...

///இல்லை. இந்தச் செய்தி இப்படி வெளியான பின்புதானே நமது தமிழக அரசின் மொள்ளமாரித்தனம் வெளியில் வந்துள்ளது..! இல்லாவிடில் உங்களுக்கும், எனக்கும் தெரிந்திருக்குமா..?///

இதில் உள்ளடி வேலை இருந்தால் இது மொள்ளமாரித்தனம்தான். ஆனால் இதை நிர்வாகத் திறன் இன்மை என்ற வகையில்தான் நான் பார்க்கிறேன்.]]]

நான் சொன்னது தமிழக அரசை. கல்லூரியில் இன்ன பிற கட்டணங்கள் இருக்கும். அதை அந்த மாணவர்கள்தான் ஏற்க வேண்டும் என்பதை அரசு தெளிவுபடுத்தவில்லை. அதனால்தான் இவ்வளவு குழப்பம்..!

உண்மைத்தமிழன் said...

ரிஷி said...

நூறு சதவீதம் வழிமொழிகிறேன். இலவசமாக கொடுக்கிறேன் பேர்வழி என சொல்லாமல் கல்விக் கடன்களை மேலும் எளிதாக்கி அவர்கள் வேலைக்குச் சென்ற பின் அவர்களை வட்டியுடன் திருப்பிக் கட்டச் சொல்லப் பணிக்கலாம். இலவசம் எனக் கொடுத்ததே தவறு!!]]]

கடன்களை அடைக்கும் அளவுக்கு சம்பளம் கொடுத்தால் நிச்சயம் அந்த மாணவர்கள் அடைத்துவிடுவார்கள்..!

[[[இலவசங்கள் வேரறுக்கப்பட வேண்டும் என்பது என் வாதம். அரசிடம் நான் முன்வைக்கும் வேண்டுகோள்/கட்டளை இதுதான்!
மீன் பிடிக்கக் கற்றுக் கொடுங்கள். மீனைப் பிடித்துக் கொடுக்காதீர்கள். அவர்கள் படிப்பிற்கு தேவையான செலவை அவர்கள் செய்வதற்கு சூழலை ஏற்படுத்திக் கொடுங்கள். ஆனால் அந்த செலவையே நீங்கள் ஏற்றுக் கொள்ளாதீர்கள்.]]]

நல்லதுதான்.. அந்த அளவுக்குப் பணம் சம்பாதிக்கும் திறமை இருந்தால் நம் நாடு இந்நேரம் சுவிட்சர்லாந்து போல் ஆகியிருக்கும். இல்லாததால்தான் பிச்சையெடுத்துக் கொண்டிருக்கிறார்கள்..!

உண்மைத்தமிழன் said...

[[[ரிஷி said...

///படகோட்டி said...

அவசரப்பட்டு கடிதத்தைப் பிரசுரித்திருக்கிறீர்கள். மீடியா என்பது கவனமாகக் கையாள வேண்டிய ஒரு விஷயம். எதையும் அறிந்து கொண்டு, அதைப் பற்றிய ஒரு விசாரணையை மேற்கொண்டு, தீர விசாரித்துக் கொண்டுதான் வாதாட வேண்டும். ///

பிரசுரித்ததில் தவறொன்றுமில்லை. இதைப் பற்றிப் பேச பேச தெளிவுக்கு வருகிறோம் அல்லவா?]]]

ஆமாம்.. இதைப் பிரசுரித்ததுகூட நல்லதுதான்..

உண்மைத்தமிழன் said...

[[[Arun Ambie said...
இந்தச் செய்தியை என் ஆங்கில வ்லைப்பூவில் இட விழைகிறேன். அனுமதிப்பீர்களா, உண்மைத்தமிழரே?]]]

தாராளமாக செய்து கொள்ளுங்கள் நண்பரே..!

ரிஷி said...

//எந்தவொரு அரசுமே கல்வியை இலவசமாகத்தான் கொடுத்தாக வேண்டும். அது அடிப்படை உரிமை. அதனை வைத்து பணம் சம்பாதிக்க வாய்ப்பளித்து தாங்களும் அதில் குளிர் காய்வதுதான் அரசியல்வியாதிகளின் வேலை..!//

கல்வியை இலவசமாக கொடுக்கணுமா?!!! அண்ணே.. நடைமுறையில் இது சாத்தியமா??

பொறியியலையே எடுத்துக் கொள்ளுங்கள். ஒரு கல்லூரிக்கு தலா 10 கோடி செலவாகிறது ஒரு வருடத்திற்கு என எடுத்துக் கொண்டால் அத்தனையும் அரசே கொடுப்பதாக வைத்துக் கொண்டால் 4000 கோடி ரூபாய் வேண்டுமே!!! இது போக பள்ளிக் கல்வி, கலை மற்றும் அறிவியல் கல்லூரிக் கல்வி, மருத்துவக் கல்வி மற்றும் இன்னபிற கல்வி வகையறாக்கள் இருக்கின்றனவே!!?

///நான் சொன்னது தமிழக அரசை. கல்லூரியில் இன்ன பிற கட்டணங்கள் இருக்கும். அதை அந்த மாணவர்கள்தான் ஏற்க வேண்டும் என்பதை அரசு தெளிவுபடுத்தவில்லை. அதனால்தான் இவ்வளவு குழப்பம்..!///

நானும் தமிழக அரசின் மட்டரகமான நிர்வாகத் திறனைத்தான் குறைகூறுகிறேன்.

///கடன்களை அடைக்கும் அளவுக்கு சம்பளம் கொடுத்தால் நிச்சயம் அந்த மாணவர்கள் அடைத்துவிடுவார்கள்..!///

இதை நாம் சொல்லமுடியாது. டிப்ளமோ/சிவில் படித்துவிட்டு 40000 சம்பளம் வாங்கும் என் நண்பனும் இருக்கிறான். பி.ஈ./சிவில் முடித்து விட்டு 15000லேயே குப்பை கொட்டும் என் நண்பனும் இருக்கிறான். தடைகளைத் தகர்த்தெறிந்து உழைத்து முன்னேறும்வகையில் தகுதிகளை வளர்த்தெடுத்துக் கொண்டால் லட்சியம் சாத்தியமே!

உண்மைத்தமிழன் said...

[[[ரிஷி said...

கல்வியை இலவசமாக கொடுக்கணுமா?!!! அண்ணே.. நடைமுறையில் இது சாத்தியமா??
பொறியியலையே எடுத்துக் கொள்ளுங்கள். ஒரு கல்லூரிக்கு தலா 10 கோடி செலவாகிறது ஒரு வருடத்திற்கு என எடுத்துக் கொண்டால் அத்தனையும் அரசே கொடுப்பதாக வைத்துக் கொண்டால் 4000 கோடி ரூபாய் வேண்டுமே!!! இது போக பள்ளிக் கல்வி, கலை மற்றும் அறிவியல் கல்லூரிக் கல்வி, மருத்துவக் கல்வி மற்றும் இன்ன பிற கல்வி வகையறாக்கள் இருக்கின்றனவே!!?]]]

கொடுத்துத்தான் ஆகணும்.. சட்டப்படி மக்களின் அடிப்படை உரிமைகளான கல்வி, இருப்பிடம், உணவு, உடை இவற்றை அரசு இலவசமாகத்தான் தர வேண்டும்.. இதற்கான வழிகளை ஆராயவில்லையெனில் இவர்கள் எதற்கு ஆட்சியில் இருக்க வேண்டும்..?

Arun Ambie said...

அனுமதிக்கு நன்றி உ.த. இதோ தங்கள் பார்வைக்கு என் பதிவு:
http://arunambie.blogspot.com/2011/01/free-education-pathway-to-loot-in.html

உண்மைத்தமிழன் said...

[[[Arun Ambie said...
அனுமதிக்கு நன்றி உ.த. இதோ தங்கள் பார்வைக்கு என் பதிவு:
http://arunambie.blogspot.com/2011/01/free-education-pathway-to-loot-in.html]]]

நன்றி அருண்..!