அன்புள்ள தமிழ்மணம் நிர்வாகிகளே, கொஞ்சம் செவி கொடுங்கள்..!

31-12-2010

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

வருடத்தின் கடைசி நாளும் அதுவுமாக என்னை இப்படித் தவிக்கவிட்ட கொடுமை இந்த ஆண்டே கடைசியாக இருக்கட்டும் என்று என் அப்பன் முருகனை வேண்டிக் கொள்கிறேன்.. கசப்பும், இனிப்புமாக, காயமும் உடனடி மருந்துமாக கழிந்துவிட்ட இந்த நாளை நான் மறக்கவே விரும்புகிறேன்.

இப்போதுதான் இணையத்தின் முன்பாக வந்தமர்ந்தவுடன் தமிழ்மணத்தின் புதிய வசதிகளில் ஒன்றாக ரேட்டிங் என்னும் பிரிவைப் பார்த்தேன். அதில் எனது தளம் 2-வது இடத்தைப் பிடித்திருப்பதாக அத்தளம் சொல்கிறது. மிக்க மகிழ்ச்சி.

இதற்கான காரணம் தமிழ் வலைப்பதிவர்களையே சேரும். அவர்கள் அடியேனை இப்படி புரட்டு புரட்டு என்று புரட்டியிருப்பதினால்தான் இந்தத் தளத்திற்கு இந்த இடம் கிடைத்திருக்கிறது என்று நினைக்கிறேன்.

அத்தோடு கூடவே “ம்” என்ற ஓரெழுத்துப் பின்னூட்டத்திற்குக்கூட பொறுப்பாக “மிக்க நன்றிகள் நண்பரே..” என்று கேணத்தனமாகப் பதில் சொல்லி எனது பதிவை நானே சில எண்ணிக்கைகள் கூடுமளவுக்கு உருட்டிப் பெருக்கிக் கூட்டிக் கழித்திருக்கிறேன் என்பதை பகிரங்கமாக ஒப்புக் கொள்கிறேன்.

என் அளவுக்கு இணையத்தின் முன்பாக 18 மணி நேரம் அமர்ந்திருந்து அதில் 17.30 மணி நேரம் வலையுலகத்தையே நோண்டுகின்ற சம்பளத்துடன் கூடிய பணி மற்ற பதிவர்களுக்கும் கிடைத்திருந்தால் அவர்களும் நிச்சயமாக இதனைச் செய்திருப்பார்கள். ஆகவே இந்த எனது ரேட்டிங் புள்ளி விபரத்தைப் பற்றி யாரும் பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டாம். நானே அதனைக் கொண்டாட முடியாது. பல்லு இருக்கிறவன் பக்கோடா சாப்பிடுகிறான் கதைதான்..!

அதே சமயம் நல்ல, நல்ல பதிவுகள் கிடைத்தால் பதிவர்கள் ஆர்வத்துடன் கவனிப்பார்கள் என்கிற ஒரு செய்திக்கு இது ஒரு உத்வேகமாகவும் இருக்கட்டும். எனது இனிய தோழர்கள் 'வினவு கூட்டமைப்பு' இந்த ரேட்டிங் முறையில் முதலிடத்தில் இருப்பது இதற்கான ஒரு சான்று. அவர்களுக்கும் எனது வாழ்த்துக்கள்.

தமிழ்மண நிர்வாகிகளை இந்தச் செயலுக்குக்காக வாழ்த்துகின்ற அதே நேரத்தில், இன்று எனது தளத்திற்கு நேர்ந்த ஒரு கொடூரத்திற்கு தயவு தாட்சண்யமே இல்லாமல் குற்றம் சாட்ட வேண்டிய கட்டாயத்திலும் இருக்கிறேன்.

தமிழ்மணத்தின் கருவிப்பட்டை ஓட்டளிப்பு முறையில் விக்கிலீக்ஸ் கணக்காக ஓட்டையைப் போட்டு, ஆட்டையைப் போட்டு அதைக் கொண்டு வந்ததற்கான நோக்கத்தையே சிதைக்கின்ற அளவுக்கு மாற்றக் கூடிய ஒரு புரோகிராமைத்தான் தமிழ்மணம் இப்போதுவரையிலும் பயன்படுத்தி வருகிறது என்பது வருத்தத்திற்குரியது.

இப்படி மிக எளிதாக ஒரு நிமிடத்தில் பிளஸ் ஓட்டும், மைனஸ் ஓட்டும் போடக் கூடிய சூழலில் இருக்கின்ற சாப்ட்வேர்களை பயன்படுத்தி வருவது பற்றி தமிழ்மணம் நிர்வாகத்தினர் இப்போதுவரையிலும் கவலைப்படாமல் இருப்பது ஏன் என்றும் எனக்குத் தெரியவில்லை.

நண்பன் மாயவரத்தான் என்னுடைய நல்ல நண்பர்களில் ஒருவர் என்றுதான் தான் நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் இன்றைக்குத்தான் தெரிகிறது அவர் ரொம்பவே "நல்ல நல்ல நல்ல" நண்பரென்று..

இன்று எழுதிய கடைசி இட்லி-தோசை பதிவை முதலில் நள்ளிரவு 12.15 மணிக்குப் போட்டுவிட்டு டிவிட்டரில் இதற்கான லின்க்கை கொடுத்தபோது மாயவரத்தான் அங்கே வந்து மைனஸ் ஓட்டுப் போட ஒரு லின்க்கை ஒரு நிமிடத்தில் தயார் செய்து கொடுத்தார்.

அப்போதே நான் அதை தடுத்தேன். “இது வேண்டாம். விட்ருங்க..” என்றேன். அவர் கேட்கவில்லை. நான் என்ன சொல்லியும், நான் ஏதோ பைத்தியம்போல் உளறுகிறேன் எனவும், அவர் நகைச்சுவைக்காக நள்ளிரவில் கும்மியடிப்பதுபோலவும் நினைத்து மைனஸ் குத்துக் கிடைக்கும் சுருக்கமான லின்க்கை ட்வீட் செய்துவிட்டார்.

இது மைனஸுக்கான சுருக்க லின்க் என்பதறியாமல் பல ட்வீட்டர்கள் அதனை கிளிக் செய்துவிட மைனஸ் ஓட்டுக்கள் 6-ஐ தாண்டியது. மாயவரத்தானை கடிந்து கொண்டு கடுப்போடு அந்த எனது அந்த முதல் பதிவினை நீக்கிவிட்டு மீண்டும் அதே பதிவினை புதிதாக இட்டேன்.

காலையில் மீண்டும் டிவிட்டரில் வந்த மாயவரத்தான் எனது புதிய பதிவில் அவரைப் பற்றி “கோமாளித்தனமான” என்ற வார்த்தையால் குறிப்பிட்டதற்கு(வேறு எப்படி அழைப்பார்களாம்?) கோபப்பட்டு மீண்டும் அதேபோல் ஒரு சுருக்க லின்க்கை தயார் செய்து ட்வீட் செய்துவிட்டார்.

ட்வீட்டரில் இருந்த தோழர்கள் பலரும் ஆர்வக் கோளாறில் என்ன..? ஏது..? என்றுகூட கேட்காமல் கிளிக் செய்துவிட தமிழ்ப் பதிவுலக வரலாற்றிலேயும், எனது தளத்தின் வரலாற்றிலேயும் இதுவரை இல்லாத அளவுக்கு இன்றைய இட்லி-தோசை பதிவுதான் அதிக மைனஸ் குத்துக்களை வாங்கியிருக்கிறது.

மாயவரத்தான் ஏற்கெனவே இதேபோல் கோவை என்கவுண்ட்டரை எதிர்த்து நான் போட்டிருந்த இந்தப் பதிவிற்கும் இதேபோல் மைனஸ் ஓட்டுக்கள் கிடைப்பதுபோல் லின்க்கை தயார் செய்து ட்வீட்டரில்விட்டு அதன் மூலம் ஏராளமான மைனஸ்களை பெற்றுக் கொடுத்தார். இதில் அப்படியென்ன இவருக்குச் சந்தோஷம் என்று தெரியவில்லை..

அன்றைக்கு ஏதோ இவர் ஒருவர்தான் போடப் போகிறார் என்று நினைத்து "பிடிக்காவிட்டால் போட்டுக் கொள்ளுங்கள்" என்றேன். அவ்வளவுதான்.. போட்டுத் தாளித்துவிட்டார். எனக்கு அன்றைக்கு சுத்தமாகத் தெரியாது இந்த சாப்ட்வேரை உடைத்தெறிந்து டிவிட்டரில் இருந்தே மைனஸ் ஓட்டுக்களைக் குத்தலாம் என்று..?

இன்றைக்கு 50 மைனஸ்கள் வரும்போது மாயவரத்தானிடம் அந்த லின்க்கை நீக்கும்படி டிவிட்டரில் சொன்னேன். கேட்கவில்லை. இதுதான் கட்டற்ற சுதந்திரமாச்சே.. “உன்னால் முடிந்தால் தடுத்துக் கொள்” என்பதைப் போல் அவரது பேச்சு இருந்தது. எனக்கு அந்த அளவுக்குச் சக்தியில்லை. வேறு வழியில்லாமல் ட்வீட்டரில் அவரைத் தடை செய்துவிட்டு வந்துவிட்டேன். இதுதான் என்னால் முடிந்தது. என்னைப் போன்ற ஏமாளியினால் வேறென்ன செய்ய முடியும்..?

இதைத் தொடர்ந்து நமது பரமார்த்த குருவின் சிஷ்யர்கள் இருவரும் கூகிள் பஸ்ஸிலும், ட்வீட்டிரிலும் இந்த லின்க்கை பார்ப்போரிடத்தில் எல்லாம் கொடுத்து மைனஸ் ஓட்டைப் போட வைத்துவிட்டார்கள். இப்போதுவரையிலும் 105 மைனஸ் ஓட்டுக்கள்.. இதனால் இவர்களுக்கு என்ன திருப்தியோ, என்ன மகிழ்ச்சியோ எனக்குத் தெரியவில்லை. ஆனால் எனது வருத்தமும், கண்ணீரும் இவர்களுக்குப் புரியுமா? தெரியுமா..?

நல்ல நாள்.. அதுவும் புது வருடத் துவக்கம் என்பதால் என்னால் மேற்கொண்டு அவர்களைப் பற்றிச் சொல்ல முடியவில்லை.
 
ஒவ்வொரு பதிவையும் எழுதுவதற்கு எத்தனை தேடல்கள் செய்ய வேண்டியிருக்கிறது? எத்தனை மணி நேரங்கள் ஒதுக்க வேண்டியிருக்கிறது? எத்தனை சிரமங்கள் பட வேண்டியிருக்கிறது. உங்களுக்கே தெரியும்.. அத்தனை பேரும் பதிவர்கள்தானே..?

படித்துப் பார்த்துவிட்டு பிடிக்கவில்லை என்று நினைத்துப் போட்டிருந்தால்கூட நிச்சயமாக நான் இப்படி கேட்க மாட்டேன். படிக்காமலேயே சக பதிவர்களை வம்படியாக ஒருவரின் பதிவில் மைனஸ் ஓட்டுக்களைப் போட வைத்து இவர்கள் அடையும் மகிழ்ச்சிக்கான காரணம்தான் என்ன..?

இதற்கான மூல காரணமான தமிழ்மண நிர்வாகிகளை இங்கே கடிந்து கொள்ள வேண்டியிருக்கிறது.

விட்டால் ஒபாமாவுக்கே அட்வைஸ் செய்யும் அளவுக்கு புத்திசாலிகளான தமிழ்மணத்தின் இயக்குநர் சிகரங்கள்(நேர்ல வாங்கப்பூ.. வைச்சுக்குறேன்..) இப்படி மைனஸ், பிளஸ் ஓட்டுக்களை பதிவுக்கே வராமல், தளத்தையே ஓப்பன் செய்யாத நிலையிலேயே வேறு ஒரு புரோகிராமில் இருந்தும்கூட போடலாம் என்கிற அளவுக்கான ஒரு ஓட்டை சாப்ட்வேரை இதில் வைத்திருக்கலாமா..?  இவர்களுடைய சாப்ட்வேர் நிச்சயம் தவறானதுதானே..? இந்த லட்சணத்துல இவங்க எல்லாருமே பொட்டி தட்டுறவங்கதானாம். இந்தக் கொடுமையை எங்கே போய் சொல்வது..?

கூடுதல் ஓட்டுக்கள் கிடைத்தால் இன்னும் ஒரு 500 பேர் படிப்பார்களே என்கிற ஆதங்கத்தினாலும் வருங்காலத்தில் எனது பதிவைப் படிப்பவர்கள் இதனை எனக்கான தரைக்குறைவான நிலையாக கருதும் வாய்ப்பும் இருப்பதால்தான் இதனைச் சொல்கிறேன். 

பொதுவாக தமிழ்மணத்தில் அதிக வாக்களிப்பு பெற்றவைகள் பட்டியலிலோ, சூடான இடுகைகள் பட்டியலிலோ ஒரு பதிவு இடம் பெற்றால் அது நார்மலான பதிவினைவிட 500 பார்வையாளர்களைக் கூடுதலாகப் பெறும். இது ஒன்றுக்காகவே நான் அதிக ஓட்டுக்களைப் பெற விரும்புகிறேன்.

அதே சமயம் முன்பே பல முறை இந்த ஓட்டளிப்பு முறையையும், சூடான இடுகை பிரிவையும் நீக்கும்படி மேன்மை தாங்கிய தமிழ்மணம் நிர்வாகத்தினருக்கு மடலும் அனுப்பியிருக்கிறேன். தமிழ்மணம் நிர்வாகத்தினர் அதனை இன்றுவரையில் ஏற்கவில்லை.  ஓகே.. கம்பெனியின் முடிவு அது. அந்த நிறுவனத்தின் மூலம் நான் பயன்படுகிறேன் என்றால் நிறுவனத்திற்குக் கட்டுப்பட்டுத்தான் ஆக வேண்டும். நான் ஏற்றுக் கொள்கிறேன். ஆனால் அந்த வாய்ப்பு நீக்கப்படும்வரையிலும் தமிழ்மணத்தின் வாசகன் என்கிற முறையில் அதனை முறையாகப் பயன்படுத்திக் கொள்ளவே விரும்புகிறேன் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இனியாவது தமிழ்மண நிர்வாகிகள் இந்தக் கருவிப் பட்டையில் ஓட்டளிப்பது தொடர்பான சாப்ட்வேர்களைத் திருத்தியோ, சுருக்கியோ வேறு தளங்களில் இருந்து இதற்கு வாக்களிக்க முடியாதபடிக்கும் ஏற்பாடுகளைச் செய்யுமாறு அன்போடு வேண்டி, விரும்பிக் கேட்டுக் கொள்கிறேன். என்னைப் போன்ற எளியவனால் இப்படித்தான் முறையிட முடியும்..

அந்த மூன்று நல்லவர்களுக்கும் எனது நன்றிகளும், வாழ்த்துக்களும் உரித்தாகட்டும்.

நன்றி..!

59 comments:

பழமைபேசி said...

அண்ணே, புத்தாண்டு வாழ்த்துகள்!

உங்களோட உழைப்புக்கும், கடமையுணர்வுக்கும் முன்னால் பரிந்துரை வாக்குகள் ஒரு பொருட்டா?? பொருட்படுத்தாது சென்று கொண்டே இருங்கள்!!

//இப்படி மைனஸ், பிளஸ் ஓட்டுக்களை பதிவுக்கே வராமல், தளத்தையே ஓப்பன் செய்யாத நிலையிலேயே வேறு ஒரு புரோகிராமில் இருந்தும்கூட போடலாம் என்கிற அளவுக்கான ஒரு ஓட்டை சாப்ட்வேரை இதில் வைத்திருக்கலாமா..?

Read more: http://truetamilans.blogspot.com/2010/12/blog-post_31.html#ixzz19iOe6Uoy//


இந்தக் கதைதான வேண்டாங்றது? தானம் குடுத்த மாட்டைப் பல் பிடிச்சி பார்க்குற கதையா இருக்கே?!

இது தமிழ் மணத்தின் குற்றமா?? அவர் எதோ விளையாட்டுக்குச் செய்யுறாரு... அதுக்காக, தமிழ்மணத்தைப் போட்டு வாருறீங்களே?? அஃகஃகா....

பரிந்துரை வாக்கு அப்படிங்ற வசதியே இல்லாம இருந்தா என்னா செய்வீங்களாம்??

Rajan said...

அந்த மூணுல நான் இல்லயே!

Unmaivirumpi said...

நானும் ஆமோதிக்கிறேன், விளையாட்டாக செய்தது இவ்வளவு கஷ்டத்தில் உங்களை ஆழ்த்தி விட்டது என்பது வேதனைக்குரியது, தமிழ்மணம் ஒட்டு போடுவதில் புதிய முறை கொண்டு வரவேண்டும் என்று நானும் வேண்டிக்கொள்கிறேன்

நசரேயன் said...

//
உங்களோட உழைப்புக்கும், கடமையுணர்வுக்கும் முன்னால் பரிந்துரை வாக்குகள் ஒரு பொருட்டா?? பொருட்படுத்தாது சென்று கொண்டே இருங்கள்!!
//

வழிமொழிகிறேன்

தீப்பெட்டி said...

இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.. பாஸ்..

கவலைய விடுங்க பாஸ்.. இதெல்லாம் ஒரு மேட்டரா?..

Rajan said...

ஓட்டுக்கு 5000 ரூவா மார்க்கெட் ரேட்டு! அண்ணன் ஓசில ஓ பாஸிட்டிவ் குடிக்கலாம்னு பாக்குறது எந்த விதத்துல நியாயம்!

நசரேயன் said...

நீங்க சொல்லுற மாதிரி மென்பொருள் செய்ய கொஞ்சமல்ல நிறைய செலவாகும் .. உங்க வங்கி வசதி எப்படி?

Rajan said...

ஒரு நாள் போலி ஐடி;மறுநாள் மைனஸ் ஓட்டு! உனை நான் கொல்லாமல் கொன்று புதைத்தேனே! மன்னிப்பாயா! மன்னிப்பாயா!

ஜோ/Joe said...

அநியாயத்துக்கு நல்லவரா இருக்கீங்களே அண்ணே ..வருத்தப்படாதீங்க ..புத்தாண்டு வாழ்த்துகள்

நசரேயன் said...

http://tamilmanam.net/rpostrating.php?s=P&i=734402

மேல உள்ள நிரலை வைத்து தமிழ்மணத்திலே இணைந்த அனைவரும் யாரும் ஓட்டு போடலாம்

நசரேயன் said...

//ஒவ்வொரு பதிவையும் எழுதுவதற்கு எத்தனை தேடல்கள் செய்ய வேண்டியிருக்கிறது? எத்தனை மணி நேரங்கள் ஒதுக்க வேண்டியிருக்கிறது? எத்தனை சிரமங்கள் பட வேண்டியிருக்கிறது. உங்களுக்கே தெரியும்.. அத்தனை பேரும் பதிவர்கள்தானே..?
//

நான் என்னைக்குமே பதிவருன்னு சொல்லவே இல்லையே ?

Rajan said...

பழய படி வாக்குச்சீட்டு முறையே கொண்டாந்துடலாம்! உடுங்க!

நசரேயன் said...

//என்னைப் போன்ற எளியவனால் இப்படித்தான் முறையிட முடியும்.. //

அண்ணே சங்கம் இல்லாதது எம்புட்டு பிரச்சனைன்னு இப்பத்தான் தெரியுது

senthil said...

ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள்!

தங்களின் இடையறா உழைப்பும், நற் செய்திகளை அனைவருக்கும் கொண்டு சேர்க்கும் ஆர்வத்திற்கும் இடையில் இது போன்ற சிறு இடையூறுகளால் மனமொடையாதீர்!

போட்டுத் தாங்குங்க... சரவணன்!

நசரேயன் said...

// இது ஒன்றுக்காகவே நான் அதிக ஓட்டுக்களைப் பெற விரும்புகிறேன். //

ஓட்டுக்கு பத்து ரூபா கொடுங்க, ஐந்து லட்சம் ஓட்டு விழும் .. ஆனா இதை எல்லாம் வச்சி எம்.எல்.ஏ ஆக முடியாது

நசரேயன் said...

//
கூடுதல் ஓட்டுக்கள் கிடைத்தால் இன்னும் ஒரு 500 பேர் படிப்பார்களே என்கிற ஆதங்கத்தினாலும் வருங்காலத்தில் எனது பதிவைப் படிப்பவர்கள் இதனை எனக்கான தரைக்குறைவான நிலையாக கருதும் வாய்ப்பும் இருப்பதால்தான் இதனைச் சொல்கிறேன்
//

கவலையே படவேண்டாம் .. ரெண்டு மாசத்துக்கு அப்புறமா இந்த ஓட்டே தெரியாது

நசரேயன் said...

//அதே சமயம் முன்பே பல முறை இந்த ஓட்டளிப்பு முறையையும், சூடான இடுகை பிரிவையும் நீக்கும்படி மேன்மை தாங்கிய தமிழ்மணம் நிர்வாகத்தினருக்கு மடலும் அனுப்பியிருக்கிறேன். தமிழ்மணம் நிர்வாகத்தினர் அதனை இன்றுவரையில் ஏற்கவில்லை.
//

எடுக்க சொல்லி இருந்த நீங்களே ஓட்டை பத்தி கவலைப்படலாமா ?

நீச்சல்காரன் said...

அண்ணே, புத்தாண்டு வாழ்த்துக்கள்.
பிரபல ஆங்கில புக்மார்கிங் தளங்களைப் போல ஓட்டு முறையை உருவாக்கலாம் என்று தமிழ்மணத்தைக் கேட்டுக் கொள்கிறேன்.

நசரேயன் said...

//கசப்பும், இனிப்புமாக, காயமும் உடனடி மருந்துமாக கழிந்துவிட்ட இந்த நாளை நான் மறக்கவே விரும்புகிறேன். //

டாஸ்மாக் ??

நசரேயன் said...

//அடியேனை இப்படி புரட்டு புரட்டு என்று புரட்டியிருப்பதினால்தான் இந்தத் தளத்திற்கு இந்த இடம் கிடைத்திருக்கிறது என்று நினைக்கிறேன். //

நாங்க என்ன நினைக்கிறோம்முன்னு நீங்க என்னைக்காவது நினைச்சி இருந்தா .. நீங்க ஏன் நினைக்கணும்

Rajan said...

ராஜன்:சரி சரி மொதல்ல அழுகாச்சிய நிப்பாட்டுங்க....


உ.த:ஹ்ம்ம்ம்ராஜன்:மூஞ்சிய தொடைங்க...உ.த:ஹ்ம்ம்ம்ராஜன்:சிரிங்கஉ.த:ஈஈஈஈஈஈஈஈ


ராஜன்:இப்ப எப்பிடி இருக்கு மொகர!


உ.த:நல்லாருக்கு!


ராஜன்: ஆங்! அது!

நசரேயன் said...

//அத்தோடு கூடவே “ம்” என்ற ஓரெழுத்துப் பின்னூட்டத்திற்குக்கூட பொறுப்பாக “மிக்க நன்றிகள் நண்பரே..” என்று கேணத்தனமாகப் பதில் சொல்லி எனது பதிவை நானே சில எண்ணிக்கைகள் கூடுமளவுக்கு உருட்டிப் பெருக்கிக் கூட்டிக் கழித்திருக்கிறேன் என்பதை பகிரங்கமாக ஒப்புக் கொள்கிறேன்
//

அண்ணே நீங்க ரெம்ப நல்லவரு

நசரேயன் said...

//
என் அளவுக்கு இணையத்தின் முன்பாக 18 மணி நேரம் அமர்ந்திருந்து அதில் 17.30 மணி நேரம் வலையுலகத்தையே நோண்டுகின்ற சம்பளத்துடன் கூடிய பணி மற்ற பதிவர்களுக்கும் கிடைத்திருந்தால் அவர்களும் நிச்சயமாக இதனைச் செய்திருப்பார்கள்.
//

அண்ணே ஊரிலே எல்லாம் மின் வெட்டு இல்லையோ ?

Rajan said...

மைனஸ் கவுண்ட்டிங் ஸ்டார்ட்ஸ் மூணு ஆச்சு!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

vittu thallungka. happy new yr

சீனு said...

அடடா! வினவுக்கு அடுத்ததா நீங்களா? இல்லை, இனி நீங்கள் அடுத்த வினவா? எப்படியிருப்பினும்...வாழ்த்துக்கள்...

சீனு said...

//அண்ணே ஊரிலே எல்லாம் மின் வெட்டு இல்லையோ ?//

அண்ணன் கோபாலபுரம்/அண்ணா நகரா இருக்கும்...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

இந்த ஓட்டுக்களையெல்லாம் தூக்கிப் போடுங்கண்ணே, அதையெல்லாம் பார்த்தா நாங்க உங்க ப்ளாக்குக்கு வர்ரோம்......?

பழமைபேசி said...

http://abcnews.go.com/video/playerIndex?id=6105570

அமெரிக்காவுல வங்கி கொள்ளையடிக்கிறதக் கூட நேரடி ஒளிபரப்புச் செய்யுறாய்ங்க பாருங்க!!

நசரேயன் said...

//
ஆகவே இந்த எனது ரேட்டிங் புள்ளி விபரத்தைப் பற்றி யாரும் பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டாம். நானே அதனைக் கொண்டாட முடியாது.
பல்லு இருக்கிறவன் பக்கோடா சாப்பிடுகிறான் கதைதான்..!
//

வெற்றி விழா எடுக்க முடியலையே என்கிற சோகத்திலே நான் உண்ணு விரதம் இருக்கப் போறேன்

gulf-tamilan said...

புத்தாண்டு வாழ்த்துகள்!

a said...

சொதனை மேல் சோதனை போதுமடா சாமி................ புத்தாண்டு வாழ்த்துகள் அண்ணே,.................

நேசமித்ரன் said...

புத்தாண்டு நல்வாழ்த்துகள் அண்ணே :)

SUREஷ்(பழனியிலிருந்து) said...

எனக்கெல்லாம் மைனஸ் ஓட்டுப் போடக்கூட ஆளில்லை.

ஆனால் சில வாரங்கள் எழுதாமல் போனாலும் 200, 300 ஹிட்ஸ் தினமும் வந்து விடுகிறது. ஒண்ணும் விளங்கல..,

Unknown said...

தங்களுக்கு இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்...

Unknown said...

I think the feature you requested is now implemented in Tamilmanam. Now when you try to vote from the link it will show a message,
"Voting from other sites not allowed
Please vote from the Blog"

I am not sure how much fool-proof this can be, but I beleive they are checking if the link is clicked from the blog or not.

Hope the TM people are listening to your requests.

Happy New Year...!

ILA (a) இளா said...

சொல்லவந்த கருத்தை நச்ன்னு பழமை பேசி சொல்லிட்டதால.. புத்தாண்டு நல்வாழ்த்துகள்! மாயவரத்தான் கிட்ட வெச்சிக்கிறதும், ஓடுற ரயிலுக்கு முன்னாடி தலைய குடுக்கிறதும் ஒன்னு.

மாயம்ஸ் கொலைவெறி படை
புதரகம்

Unknown said...

ஆமாம்.. நானும் அந்த மூன்று பேரையும் வன்மையாகக் கண்டிக்கிறேன் அண்ணே

dunga maari said...

"இந்த ஓட்டுக்களையெல்லாம் தூக்கிப் போடுங்கண்ணே, அதையெல்லாம் பார்த்தா நாங்க உங்க ப்ளாக்குக்கு வர்ரோம்......?"

முற்றிலும் வழிமொழிகிறேன். இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

jigopi

ஸ்ரீராம். said...

புத்தாண்டு வாழ்த்துக்கள்..

Hai said...

இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்.

Hai said...

கவலைய விடுங்க இந்த புத்தாண்டு எல்லாம் சரியாகிப் போகும்

Ganpat said...

புத்தாண்டு வாழ்த்துக்கள்

பிளஸ்?மைனஸ்??

அப்படின்னா?

நான் இங்கு வருவது,சரவணன் நேர்மையை போற்ற!

வாழ்க வளமுடன்.

நன்றியுடன்,

bandhu said...

"இந்த ஓட்டுக்களையெல்லாம் தூக்கிப் போடுங்கண்ணே, அதையெல்லாம் பார்த்தா நாங்க உங்க ப்ளாக்குக்கு வர்ரோம்......?"

அதே! அதே! இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் !

சண்முககுமார் said...

புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்


இதையும் படிச்சி பாருங்க

உடலை கிழித்து உணர்வை காட்டும் ஓவியங்கள்

நீச்சல்காரன் said...

இந்த மாதிரி ஒரு ஓட்டுப் பெட்டியை வைத்தால் normal மைனஸ் ஓட்டுக்கள் பிளாஸ் ஓட்டுக்களாகும்.

ஜோதிஜி said...

ராஜன் நசரேயன் நன்றிங்க.

சரவணன் இப்படி ஓட்டு பின்னால தொங்கிக்கிட்டேயிருந்தா ஒவ்வொருத்தரும் தொங்கவிட்டு பார்க்கனும்ன்னுங்ற ஆசை அதிகமாகிக்கிட்டே தான் இருங்க.

விட்டு வெளியே வாங்க சரவணன்.

Prathap Kumar S. said...

சிரிக்கறதா வருத்தப்படறதான்னு தெரில....இப்படி நெறய நடக்குறதுண்டு. ஒரு அமீரக பி.ப.கூட இப்படி ப்ளஸ் ஓட்டுக்காக செய்ததுண்டு.... யாருன்னு சொல்லவா? :))

உமர் | Umar said...

இன்றும் தொடங்கிவிட்டார்கள்.

மைனஸ் ஓட்டுக்கான பஸ். (அதில் இருப்பவற்றை க்ளிக் செய்யாதீர்கள்)

http://www.google.com/buzz/yuvakrishna/Khpdy1HCsW3/%E0%AE%8A%E0%AE%A9-%E0%AE%A9-%E0%AE%A4-%E0%AE%A9-%E0%AE%A9-%E0%AE%B5-%E0%AE%A9-%E0%AE%87%E0%AE%A8-%E0%AE%A4

எஸ்.கே said...

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்! இவ்வருடத்தில் இனிய நிகழ்வுகள் உங்கள் வாழ்வில் தொடர்ந்து அமையட்டும்!

ம.தி.சுதா said...

தங்களுக்கு எனது இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் சகோதரம்... உண்மையில் இரு வருந்தத் தக்க விடயம் தான்...

ரிஷபன்Meena said...

புத்தாண்டு வாழ்த்துக்கள்.

இந்தப் பின்னூட்டங்கள் ஓட்டுகளில் என்ன பெரிதா கிடைக்கப் போவுதுன்னு இவ்வளவு வருத்தப்படுறீங்க.

! சிவகுமார் ! said...

>>> அண்ணன் உண்மைத்தமிழன் அவர்களுக்கு,
தங்கள் எழுத்துக்களை வாசிக்க பலர் இருக்கையில், எதை பற்றியும் கவலைப்பட வேண்டாம். “நல்ல பதிவை வாசிப்பவர்கள் மட்டும் எனக்கு போதும். ஓட்டு இரண்டாம் பட்சம்தான்” என பதிவுகளை தொடர்ந்து எழுதுங்கள். அதிக ஓட்டின் மூலம் பதிவின் பலன் பலருக்கு சென்றடையும் என எண்ணுவது சரியே. ப்ளாக் அல்லது இ மெயில் ஐ டி இல்லாத பல நண்பர்களுக்கு நான் தங்கள் பதிவுகளை படிக்க சொல்லி அவர்களும் தொடர்ந்து படித்து வருகின்றனர். என்னதான் படத்திற்கு விளம்பரம் முக்கியம் என்றாலும் வாய் வார்த்தை மூலம் செய்யப்படும் நல்ல கருத்துக்களே முழு பலனை கொண்டு சேர்க்கும் என்பது தங்களுக்கு தெரியும். தொடருங்கள் பணியை. நாங்கள் இருக்கிறோம்!!

இராகவன் நைஜிரியா said...

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

இதுவும் கடந்து போகும்.

தமிழ் மணம் 2010 முன்னணி வலைப்பதிவுகளில் 3 இடம் பெற்றதற்கு வாழ்த்துகள்.

Indian Share Market said...

இந்த ஓட்டுக்களையெல்லாம் தூக்கிப் போடுங்கண்ணே, அதையெல்லாம் பார்த்தா நாங்க உங்க ப்ளாக்குக்கு வர்ரோம்......?

Rafeek said...

மாயவரத்தான் என்பவர் ஒரு லூசு பக்கி என்று நன்றாக விளங்குகிறது. அடுத்தவர் உழைப்பை மதிக்காதவனுக்கு தனக்கு ஒரு ஆஆஆப்பு வரும் போது உலகம் புரியும் சரவணன். 2011 மேலும் அருமையான பதிவுகள் உங்களிடமிருந்து தொடர வாழ்த்துக்கள்.

உண்மைத்தமிழன் said...

பின்னூட்டமிட்டு வாழ்த்திய, அறிவுரை சொல்லிய, கருத்துத் தெரிவித்திருக்கும் அத்தனை பதிவர்களுக்கும் எனது நன்றி..!

abeer ahmed said...

See who owns californiacruizers.com or any other website:
http://whois.domaintasks.com/californiacruizers.com

abeer ahmed said...

See who owns 3abkr.com or any other website.