ஊழல்களின் தாத்தாவும், தாயும் ஒரே கூட்டணியில்..!

13-12-2010

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

நம்முடைய 'ஊழல் தாத்தா' ("தந்தை என்று சொல்ல வேண்டாம்.. அதையெல்லாம் தாண்டிவிட்டார் கலைஞர். இனிமேல் 'தாத்தா'ன்னே கூப்பிடலாம்.." என்று பெரும்பான்மையான பதிவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளதால் இனி கலைஞர் கருணாநிதி 'ஊழல் தாத்தா' என்றே அழைக்கப்படுவார்) நேற்று ஒரு அறிக்கை விட்டுள்ளார்.

அந்த அறிக்கையில் வீட்டு வசதி வாரிய வீடுகளை முதலமைச்சரின் தன் விருப்பப் பிரிவில் வீடுகளை ஒதுக்கியதில் ஊழல் என்று புலம்பியவர்களைப் பார்த்து நாக்கைப் பிடுங்கிக் கொண்டு சாவதைப் போல ஒரு கேள்வி கேட்டிருக்கிறார்..!

அந்தக் கேள்விக்குப் போகும் முன் அவருடைய அறிக்கையை கோபித்துக் கொள்ளாமல் வாசித்து விடுங்களேன்..!

“அ.தி.மு.க. ஆதரவு நாளேடுகளில் 9-ந் தேதி "கருணாநிதி ஆட்சியில் கொள்ளை போகும் அரசு நிலங்கள்'' என்ற தலைப்பில் தி.மு.க. எம்.எல்.ஏ. மற்றும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு வீட்டு மனை வழங்கப்பட்டதாக பெரிய அளவில் செய்தி வெளியிட்டிருக்கிறார்கள்.

இந்த பிரச்சினைக்கு நான் தெளிவாக பதில் அறிக்கை கொடுத்திருந்தபோதிலும், அதே குற்றச்சாட்டு மீண்டும் வந்திருப்பதால், அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் இந்த வீட்டு மனைகள் யார் யாருக்கு வழங்கப்பட்டன என்பதை சுருக்கமாக சொல்கிறேன்.

ஜெயலலிதா ஆட்சியில் தலைமைச் செயலாளராக இருந்த என்.நாராயணன் ஐ.ஏ.எஸ்.க்கு 1993-ம் ஆண்டு 4115 சதுர அடி; முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் மகன் கே.எஸ்.கார்த்தீசன் என்பவருக்கு பெசன்ட் நகர் பகுதியில் 1995-ம் ஆண்டு 4535 சதுர அடி; முன்னாள் அமைச்சர் நாகூர் மீரான் துணைவியார் நூர் ஜமிலாவுக்கு கொட்டிவாக்கத்தில் 1993-ம் ஆண்டு 2559 சதுர அடி; நாடாளுமன்ற உறுப்பினர் தம்பிதுரை மனைவி டாக்டர் பானுமதி தம்பிதுரைக்கு அண்ணாநகரில் 7 கிரவுண்ட் நிலம்; அ.தி.மு.க.வின் தொழிலாளர் பேரவைக்கு அண்ணா நகரில் 3 கிரவுண்ட் நிலம்; அ.தி.மு.க.வின் முன்னாள் அமைச்சர் எஸ்.எம்.வேலுச்சாமியின் மனைவி பானுமதிக்கு கோவையில் 1993-ம் ஆண்டு வீடு, 2004-ம் ஆண்டு தேவாரம் ஐ.பி.எஸ்., கே.விஜயகுமார் ஐ.பி.எஸ்., ஆர்.நடராஜ் ஐ.பி.எஸ். உட்பட பல ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்கு சோளிங்கநல்லூரில் தலா 4800 சதுர அடி;

நீதியரசர் எஸ்.ஆர்.சிங்காரவேலுவுக்கு 2005-ம் ஆண்டு சோளிங்கநல்லூரில் இரண்டு மனைகள், சட்டமன்ற உறுப்பினராக இருந்த கே.செல்வராஜ் என்பவருக்கு 1994-ம் ஆண்டு கொட்டிவாக்கத்தில் 2692 சதுர அடி, முன்னாள் முதலமைச்சரிடம் துணைச் செயலாளராக இருந்த டி.நடராஜன் ஐ.ஏ.எஸ்.க்கு 1995-ம் ஆண்டு திருவான்மியூரில் 6784 சதுர அடி; ஆதி.ராஜாராமுக்கு 1995-ல் 3101 சதுர அடி., 1993-ல் சட்டமன்ற உறுப்பினராக இருந்த சரஸ்வதிக்கு அண்ணா நகரில் 880 சதுர அடி; சட்டப் பேரவை உறுப்பினராக இருந்த மல்லிகாவுக்கு அண்ணா நகரில் 950 சதுர அடி; எம்.ஜி.ஆருடைய ஓட்டுநர் பூபதிக்கு நந்தனத்தில் 3600 சதுர அடி; எஸ்.ஆண்டித்தேவரின் மனைவி பிலோமினாவுக்கு 1994-ல் மதுரையில் 1500 சதுர அடி என்று ஒரு நீண்ட பட்டியல் உள்ளது. 2005-ம் ஆண்டு பலருக்கு இரண்டு மனைகள் கொடுக்கப்பட்ட நீண்ட பட்டியலும் உள்ளது.

எனவே அ.தி.மு.க. ஆட்சியில் அமைச்சர்களின் மனைவி, மகன் பெயர்களிலும், அ.தி.மு.க. தொழிற்சங்க அலுவலகத்தின் பெயரிலும், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள் பெயரிலும், அ.தி.மு.க. சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர் பெயரிலும், அ.தி.மு.க. மாவட்ட செயலாளரின் மனைவி பெயரிலும், நீதியரசர்கள் பெயரிலும் இத்தகைய வீடுகள், மனைகள் வழங்கப்பட்டுள்ளன என்பதற்கு ஒரு சிலவற்றை மட்டும் சான்றாக குறிப்பிட்டுள்ளேன்.

தி.மு.க. ஆட்சியில் வீட்டு மனைகள் ஒதுக்கீட்டில் தவறு நடந்துவிட்டதாக முக்கியத்துவம் கொடுத்து வெளியிட்ட பத்திரிகையாளர்களெல்லாம், அ.தி.மு.க. ஆட்சியில் யார் யாருக்கு இத்தகைய வீடுகள், மனைகள் தரப்பட்டன என்ற முழு விவரத்தையும் தங்கள் புலன் விசாரணையின் மூலம் தெரிந்து இனியாவது வெளியிட்டால், அவர்களின் பத்திரிகா தர்மத்தை பாராட்டலாம்..”

இவண்

“ஊழல் தாத்தா” என்கிற கலைஞர் கருணாநிதி

இனி நான்..!

இந்த விபரத்தை நான் வெளியிடாவிட்டால் பத்திரிகா தர்மத்தை கட்டிக் காப்பாற்றாதவனாகிவிடுவேன்..!  ஆகவே வெளியிட்டு விட்டேன்..!

நம்ம தாத்தா எழுதியிருப்பது எல்லாம் சரிதான். ஆனால் இப்படி அ.தி.மு.க. ஆட்சியில் நடந்திருக்கும் முறைகேட்டை இவர் ஆட்சிக்கு வந்தவுடனேயே இதனை வெளிப்படுத்தி இதற்கு நியாயம் கேட்க முனையாமல்.. அதே கொள்கையை இவரும் பயன்படுத்துவது ஏன் என்பதைச் சொல்லவில்லையே..?

ஒருவர் தனது வாழ்க்கையில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியக் குடியிருப்பு வீடுகளை ஒரு முறைதான் ஏலத்தில் எடுக்க முடியும் என்கிற விதிமுறையை இவர்கள்தான் வைத்திருக்கிறார்கள். நெருங்கியவர்களுக்கு விற்க முடியவில்லை என்பதால் இவர்களே அந்த விதிமுறையை கொஞ்சம் தளர்த்திக் கொண்டு வீடுகளை விற்றதும் மீண்டும் அதே விதிமுறையை சப்தமில்லாமல் கொண்டு வந்திருப்பதாக இப்போது தெரிகிறது..!

எந்தெந்த ஆண்டுகளில் என்னென்ன விதிமுறைகளை தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் கடைப்பிடித்தது என்று கேட்டால் பதில் இல்லை. ஆனால் ஒவ்வொரு ஆண்டும் இந்த முதலமைச்சர் கோட்டாவில் வீடுகளை விற்பனை செய்யும்போது மட்டும் இது போன்ற விதிமுறைகளைத் தளர்த்தி அவர்களுக்குள்ளேயே அட்ஜஸ்ட் செய்து கொண்டுள்ளதாகத் தெரிகிறது..!

இது தொடர்பாக நான் எழுதிய முந்தைய பதிவில் 
எழுதியதன் சாரம்சத்தையே புரிந்து கொள்ளாமல் “இது முதலமைச்சரின் விருப்புரிமை. அவர் பார்த்து என்ன வேண்டுமானாலும் செய்வார். நீ யார் கேட்பதற்கு..” என்றே என்னிடம் பலரும் கேட்டார்கள்.

வீட்டு வசதி வாரியத்தின் மூலமாக வீடோ, நிலமோ ஒதுக்கீடு பெற வேண்டுமென்றால் பொது ஒதுக்கீடு தவிர ஒவ்வொரு ஸ்கீமிலும் பதினைந்து சதவிகித அளவுக்கு அரசு விருப்புரிமை ஒதுக்கீடு என்பதை நமது ஆட்சியாளர்கள் அவர்களது வசதிக்காகவே வைத்திருக்கிறார்கள்.

இதில் தி.மு.க., அ.தி.மு.க.வும் கூட்டுக் களவாணிகள்.. ஒருவர் மாற்றி ஒருவர் என்னதான் திட்டிக் கொண்டாலும் உள்ளுக்குள் இப்படியொரு அண்ட்ர்ஸ்டேண்ட்டிங்கில்தான் இருந்திருக்கிறார்கள். நம்மதான் முட்டாப் பயலுகளாட்டம் “ஆத்தா கொஸ்டீன் கேக்குது..! தாத்தா திருப்பியடிச்சிட்டாரு”ன்னு திருப்திப்பட்டிருக்கோம்..!

முதல்வரின் பரிந்துரையிலேயே இது நடந்தாலும்கூட வீட்டு வசதி வாரியம் விதித்திருக்கும் சில விதிகளை மீறி ஒதுக்கீடு செய்ய முடியாது. அதாவது வீட்டு வசதி வாரியம் விதித்திருக்கும் நிபந்தனைகளை பூர்த்தி செய்திருக்கும் ஒருவருக்குத்தான், முதல்வர் தனது விருப்புரிமை கோட்டாவிற்குள் பரிந்துரை செய்ய முடியும்..!

முதலமைச்சர் கோட்டா என்பதற்காக அண்ணா சிலையின் அருகே பிச்சையெடுப்பவனை அழைத்து வீட்டு வசதி வாரிய நிபந்தனைகள் பூர்த்தியாகாமல் வீட்டைக் கொடுக்க முடியாது.. அம்பானிக்கு அக்கா மகனாக இருந்தாலும் இதேபோலத்தான்..!

முதலில் வாரியம் கிளியரிங் சர்டிபிகேட் கொடுத்தால்தான் முதலமைச்சர் அதில் கையெழுத்திட முடியும். அல்லது கையெழுத்திட வேண்டும். இதுதான் அரசு விதி..!

இதைத்தான் பலரும் முதலமைச்சர் நினைத்தால் வீட்டு வசதி வாரிய நிபந்தனைகளை நிறைவேற்றாமல் போனால்கூட வீட்டை வழங்கலாம் என்று எண்ணிக் கொண்டு தாத்தாவுக்கு ஆதரவு கொடுக்கிறார்கள்.. 

வீடாகவோ அல்லது நிலமாகவோ வீட்டு வசதி வாரியத்தின் மூலம்  ஒதுக்கீடு பெற வேண்டுமெனில் ஒதுக்கீடு பெறுபவருக்கோ அல்லது அவர் தம் குடும்பத்தில் இருக்கும் இருப்பவருக்கோ மாநகராட்சி, நகராட்சி, முதல் நிலை நகராட்சி எல்லைகளுக்குள் எந்த இடத்திலும் வீடோ, நிலமோ சொந்தமாக இருக்கக் கூடாது.. - இது வாரியம் விதித்திருக்கும் பொதுவான நிபந்தனைகளில் ஒன்று..

இதன்படிதான் தற்போது தாத்தாவின் ஆட்சிக் காலத்தில் உளவுத்துறையின் தலைவர் ஜாபர்சேட்டின் மனைவிக்கும், நக்கீரன் இணை ஆசிரியர் அ.காமராஜின் மனைவி ஜெயசுதாவுக்கும் கொடுக்கப்பட்டிருக்கும் நில விற்பனை முறைகேடான விஷயமாகிறது..

ஏற்கெனவே ஜாபர்சேட்டுக்கு சென்னையில் 2 வீடுகள் உள்ளன என்பது நிரூபணமாகியுள்ளது. அத்தோடு இத்தனை வருஷ காவல்துறை பணிக்குப் பின்பும் ஜாபர்சேட்டுக்கு சொந்தமாக வீடே இருக்காது என்பதை நம்புகின்ற அளவுக்கு முட்டாள்கள் யாரும் தமிழ்நாட்டில் இருக்க மாட்டார்கள் என்று நினைக்கிறேன்..! இதேபோலத்தான் காமராஜூக்கும் ஏற்கெனவே சென்னையில் சொந்தமாக வீடுகள் உள்ளன என்பது தெரிய வந்துள்ளது.

சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதியாக இருக்கும் சத்தியநாராயணன் தன்னுடைய மனைவி அம்பிகாவின் பெயரில் மதுராந்தகத்தில் ஒதுக்கீடு பெற்றிருக்கிறார். இவர் பொது ஒதுக்கீட்டின்பேரில் குலுக்கல் முறையில்தான் இந்த வீட்டைப் பெற்றிருக்கிறார்.

ஆனால் இந்த நீதிபதி உயர்நீதிமன்றத்தில் தான் நீதிபதியாக பதவியேற்றபோது தன்னுடைய சொத்துக் கணக்கை வெளிப்படுத்தியிருக்கிறார். அதிலே தனக்குச் சென்னையில் சொந்த வீடு இருப்பதாகக் குறிப்பிட்டிருக்கிறார்.

பொது ஒதுக்கீடாக இருந்தாலும்கூட சொந்த வீடு இருந்தால் நிச்சயம் அவருடைய விண்ணப்பம் நிராகரிக்கப்படுதல் வேண்டும். ஆனால் இவர் குலுக்கலில் எப்படி கலந்து கொண்டார்..?

உயர்நீதிமன்ற நீதிபதி பானுமதி சோழிங்கநல்லூரில் இரண்டு ஒதுக்கீட்டை அடுத்தடுத்து பெற்றிருக்கிறார். ஒருவருக்கு ஒரு வீடுதான் என்பதும் வாரியத்தின் தலையாய விதி. அதைப் புறக்கணித்து இப்படி இரண்டு வீடுகளை விற்பனை செய்திருக்கிறார்கள்.

ஆந்திர உயர்நீதிமன்ற நீதிபதியாக இருக்கும் ராஜ இளங்கோ நொளம்பூரில் மூன்று பிளாட்டுக்களை முதலமைச்சரின் விருப்புரிமை கோட்டாவில் பெற்றிருக்கிறார். இவருக்கு ஏற்கெனவே நுங்கம்பாக்கத்திலும், திருவான்மியூரிலுமாக நான்கு வீடுகள் இருப்பதை தனது சொத்துக் கணக்கில் காட்டியிருக்கிறார்.. இவர் எப்படி இந்த லிஸ்ட்டில் வர முடியும்..?

இன்னொரு அசிங்கம் சமூக சேவகர்கள் யார் என்பதை அரசு வெளிப்படுத்தியிருக்கும்விதம்..! இனிமேல் நாட்டு மக்களாகிய நீங்கள்.. உங்களுக்கு நீங்களே சமூக சேகவர் என்று எழுதி கையெழுத்திட்டு வைத்துக் கொள்ளுங்கள்.. அந்த சர்டிபிகேட்டே செல்லுபடியாகும். எதற்கும் இந்த அரசிடம் போகத் தேவையில்லை..!

சமூக சேவகர் கோட்டா பிரிவில் யார், யாருக்கு வீடுகளை ஒதுக்கியிருக்கிறார்கள் என்கிற லிஸ்ட்டைப் படித்தால் இப்படித்தான் தோன்றுகிறது..

முதல்வரின் செயலாளர் ராஜமாணிக்கத்தின் மகன் துர்கா சங்கர், இன்னொரு செயலாளர் ராஜரத்தினத்தின் மகன் திருமாவளவன், இன்னொரு செயலாளர் தேவராஜின் மகள் தீபா, முத்துவீரன் ஐ.ஏ.எஸ்.ஸின மகன் நவீன்குமார், உளவுத்துறை ஐ.ஜி. ஜாபர்சேட்டின் மனைவி பர்வீன் ஜாபர், முதல்வரின் மக்கள் தொடர்புத் துறை அதிகாரி மருதநாயகத்தின் மகள்கள் வித்யா, சிவசங்கரி, வீரபாண்டி ஆறுமுகத்தின் மருமகள் பிருந்தா செழியன், பேத்தியான 20 வயது சூர்யா - இப்படி இவர்களெல்லாம் சமூக சேவகர்கள் என்ற லிஸ்ட்டில் வீடுகளைச் சுருட்டியிருக்கிறார்கள்.

முதலில் சமூக சேவகர் என்றால் அதற்கு குறைந்தபட்சத் தகுதியாவது வேண்டாமா..? முதலமைச்சரின் விருப்புரிமை கோட்டாவாக இருந்தாலும் அவர்கள் இந்தப் பிரிவின் கீழ் வரும்போது பிரிவின் தலைப்புக்குத் தகுதியானவர்களாக இருத்தல் வேண்டுமே..?

இவர்களையெல்லாம் எந்த முட்டாளாவது சமூக சேவகர் என்று சொல்வானா..? நான் சொல்ல மாட்டேன். எக்ஸ்னோரா நி்ர்மல், டிராபிக் ராமசாமி, அனாதை இல்லம் நடத்தும் ராதாகிருஷ்ணன், வித்யாசாகர்.. இப்படி சிலரைச் சொல்லுங்கள்.. நிச்சயம் ஒத்துக் கொள்ளலாம்.. மாறாக மேற்கண்டவர்களையெல்லாம் எப்படி சமூக சேவகர்கள் என்ற லிஸ்ட்டில் ஒத்துக் கொள்வது..?

அதுலேயும் பாருங்கள்.. இந்த சமூக சேவகர் சர்டிபிகேட்டுக்கு அலைய வேண்டியதில்லையாம். அவர்களுக்கு அவர்களே கொடுத்துக் கொள்ளலாமாம்..? அதாவது நான் ஒரு சமூக சேவகர் என்று எனக்கு நானே எழுதி, கையொப்பமிட்டுக் கொடுத்தால் அரசு ஏற்றுக் கொள்ளுமாம்..? என்ன கேவலம் இது..? இவங்க என்ன ஆட்சியா நடத்துறாங்க..? இப்படி எவனாவது ஒருத்தன் கேணத்தனமான பேசுவானா..?

சமூக சேவகர் என்ற பிரிவையே ஏன் இந்தப் பட்டியலில் வைத்திருக்கிறார்கள்.? கஷ்டப்படும் சமூக சேவகர்களுக்கு இப்படி வீடுகளைக் கொடுத்தால் அவர்கள் மென்மேலும் அவர்களது சேவையில் ஈடுபடுவார்களே என்றுதான்..! ஆனால் இப்படி தெரிந்தவர்கள், கூட இருக்கிறவர்கள், காபி, டீ வாங்கித் தருபவர்கள், அவர்களுடைய பிள்ளைகள் என்று எல்லாருக்கும் இந்தப் பிரிவின் கீழ் வீடுகளை ஒதுக்கியிருப்பது முறைகேடு இல்லையா? இது அதிகாரத் துஷ்பிரயோகம்தானே..!

ஆனால் இதற்குப் பதிலளித்திருக்கும் வீட்டு வசதி வாரிய அமைச்சர் “சமூக சேவகர் சான்றிதழ் குறித்தெல்லாம் அரசு என்னென்ன விதிமுறைகளைப் பின்பற்றியிருக்கிறதோ, அதனைப் பின்பற்றித்தான் சான்றிதழ் பெற்று ஒதுக்கீடுகள் நடந்திருக்கின்றன..” என்று கூறியிருக்கிறார்..

இது ஒன்றே போதும் இந்த ஆட்சியின் லட்சணத்தைத் தெரிந்து கொள்ள..! சமூக சேவருக்கான அளவுகோல் என்ன? அர்த்தம் என்ன..? விதிமுறைகள் என்ன..? என்பதுகூட தெரியாத கபோதிகள்தான் இப்போது நம்மை ஆண்டு கொண்டிருக்கிறார்கள் என்பது இதிலிருந்தே கண்கூடாகத் தெரிகிறது..!

இந்த முட்டாள்கள்தான் திருப்பித் திருப்பிச் சொல்கிறார்கள் இந்தியாவிலேயே நாங்கள்தான் ஒழுக்கமான, நேர்மையான ஆட்சி நடத்தி வருகிறோம் என்று..!

இதில் இன்னொரு கூத்தாக கோடிக்கணக்கான ரூபாயைக் கண்ணால்கூட பார்க்க முடியாதவர்களெல்லாம் இந்த வீடுகளை வாங்கியிருக்கிறார்கள் என்பதுதான்.

ஜெ.ராதாகிருஷ்ணன் என்னும் ஐ.ஏ.எஸ். அதிகாரி 59.29 லட்சம் மதிப்புள்ள நிலத்தைப் பெற்றுள்ளார்.

தற்போதைய தொழில் துறை இணைச் செயலாளர் திருவான்மியூர் திருவள்ளுவர் நகரில் 76.58 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வீட்டு மனையைப் பெற்றுள்ளார்.

உளவுத்துறை ஐ.ஜி. ஜாபர்சேட் தனது மனைவியின் பெயரில் வாங்கியிருக்கும் வீட்டு மனையின் விலை 1.15 கோடி ரூபாய்.

முதல்வரின் பி.ஏ. ராஜமாணிக்கத்தின் மகன் துர்கா சங்கர் பெற்றிருக்கும் வீட்டு மனையின் மதிப்பு 1.12 கோடி ரூபாய்.

நக்கீரன் இணை ஆசிரியர் அ.காமராஜ் தனது மனைவி ஜெயசுதாவின் பெயரில் வாங்கியிருக்கும் வீட்டு மனையின் மதிப்பு 1.15 கோடி ரூபாய்.

மேலும் முதல்வர் அலுவலகத்தில் பணியாற்றும் உதவி பி.ஆர்.ஓ.க்களான பாலசக்திதாசனும், மாறனும் முகப்பேர் ஏரித் திட்டத்தில் வீடு வாங்கியுள்ளார்கள். இதன் மதிப்பு கிட்டத்தட்ட 75 லட்சம் ரூபாய்..!

மேலும், முதல்வரின் வீல்சேரை தள்ளிக் கொண்டு வரும் பாண்டியன், கணேசன், வினோதன் ஆகிய மூவருமே இந்த முறையில் வீடுகளைப் பெற்றிருப்பதை சென்ற பதிவிலேயே குறிப்பிட்டிருந்தேன்..

இதில் மிக சுவாரஸ்யமான விஷயம் ஒன்று.. வீடுகள் இவர்கள் பெயருக்கு பட்டா மாற்றப்பட்டு கொடுக்கப்பட்ட அன்று மாலையே, வேறு ஒருவருக்கு இந்த மூவருமே வீட்டை விற்றிருக்கிறார்கள்.. இது எப்படி இருக்கு..? பின்பு எதற்கு இவர்கள் வீட்டை வாங்கினார்கள்..? ஒரு காரண, காரியம் வேண்டாமா..?

முதலில் இந்த சப்-இன்ஸ்பெக்டர்களுக்கு இந்த வீட்டை வாங்கும் அளவுக்கு பணம் எங்கேயிருந்து வந்திருக்கும்? வரும்? என்றெல்லாம் நமது தாத்தா யோசித்திருக்க மாட்டாரா..?

கையில் கோடிக்கணக்கணக்கில் பணம் வைத்திருப்பவன்.. ஏன் வேலை மெனக்கெட்டு இங்க வந்து நம்ம வீல்சேரைத் தள்ளுகிறான் என்ற யோசனை நம்ம ஊழல் தாத்தாவுக்கு ஏன் எழவில்லை..? “இதெல்லாம் முறைப்படிதான் நடந்ததது. நடக்கிறது..” என்று ஒற்றை வரியில் தாத்தா முடித்திருக்கிறார்.

அப்படியானால் இப்போது அவர்களுக்குப் பணம் கொடுத்தது யார்..? யாரிடம் அவர்கள் விற்பனை செய்தார்கள்..? இதற்காக அவர்கள் பெற்றுக் கொண்ட சன்மானம் என்ன என்கிற கேள்விகள் நமக்குள் எழுபவை நியாயம்தானே..?

சொந்தப் பயன்பாட்டுக்கு மட்டுமே என்று இருந்த நிபந்தனையையும் இவர்களுக்கு வேண்டியவர்களுக்குக் கொடுக்க வேண்டுமே என்கிற ஒரே காரணத்துக்காக திருத்தி, அந்த ஒரு ஒதுக்கீட்டுக்கு மட்டும் என்று வாய் மொழியாகச் சொல்லி, நிபந்தனைகள் தளர்த்தப்பட்டிருப்பதை பகிரங்கப்படுத்தாமல், இணையத்திலும் தெரிவிக்காமல் மிகக் கமுக்கமாக அவர்களுக்குள்ளேயே விஷயத்தைப் பகிர்ந்து கொண்டு வாரியத்தின் நிலங்களையும், வீடுகளையும் விற்றிருக்கிறார்கள்..!

இப்போது நம்ம ஊழல் தாத்தா சொல்கிறார்.. “நிபந்தனைகள் தளர்த்தப்பட்டுத்தான் விற்கப்பட்டன” என்று.. “ஏன்யா தளர்த்துன?ன்னு கேட்டால் “அதிகமான நிலங்கள் விற்பனையாகாமல் இருந்தன. அதனால்தாதன்” என்று மீண்டும் வாய் கூசாமல் புளுகிறார்..

ஒரு நாளைக்கு இவர் எவ்வளவு பொய்தான் பேசுவார்..? இப்போதே இப்படியென்றால் தனது பொது வாழ்க்கையில் எத்தனை பொய்களை அள்ளி வீசியிருப்பார் இவர்.. அண்டப் புளுகன், ஆகாசப் புளுகன் என்றுகூட நாம் இவரைக் கூப்பிடலாம்..!

வீட்டு வசதி வாரிய வீடுகளையாவது விற்பனையாகாமல் இருக்கின்றன என்று சொன்னால் நம்பலாம். ஏனெனில் கமிஷனில் கட்டப்படும் அந்த வீடுகள் எந்த லட்சணத்தில் இருக்கும் நமக்கே தெரியும். ஆனால் நிலங்கள்.. வெற்று இடங்கள்.. யோசித்துப் பாருங்கள்..!

நிலமாக விற்பனை செய்ய முன் வந்தால் எத்தனை பேர் ஓடி வருவார்கள்..? பொது ஏலத்தில் விட்டால் ரியல் எஸ்டேட்காரர்கள் வந்து குவிந்துவிடுவார்களே..! ஏலத்தில் விட்டால் ஏலத் தொகை கூடிக் கொண்டே அல்லவா போகும்..? சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில், அதுவும் திருவான்மியூர் பகுதிகளில் நிலம் விற்பனையாகவில்லை என்று எந்த மடையனாவது சொல்வானா..?

முதல்முறையாக நமது ஊழல் தாத்தாதான் இப்படி புளுகியிருக்கிறார்.. இவரது இந்த அண்டப்புளுகின் மூலம் கிடைத்த நிலத்தில்தான் ஜாபர்சேட், நக்கீரன் இணை ஆசிரியர் அ.காமராஜ், முதல்வரின் பி.ஏ. ராஜமாணிக்கத்தின் மகன் துர்காசங்கர் மூவரும் கூட்டணி வைத்து அடுக்கு மாடி குடியிருப்பு ஒன்றைக் கட்டி வருகிறார்கள்..!

கட்டி முடித்து தனித்தனி பிளாட்டுகளாக விற்று காசு பார்க்கப் போகிறார்கள்.. ஆனால் அரசுக்கு..? எத்தனை கோடி நஷ்டங்கள்..? இந்த விருப்புரிமை கோட்டாவில் இல்லாமல் பொது ஏலத்தில் இந்த நிலத்தை.. அதுவும் திருவான்மியூர் நிலத்தை விற்பனைக்குக் கொண்டு வந்திருந்தால் வாரியம் நிர்ணயித்திருக்கும் விலையைவிடக் கூடுதலாகவே கிடைத்திருக்குமே..? ஏன் செய்யவில்லை..?

நியாயமான முறையில் நடக்காதபட்சத்தில் இதனை நாம் சந்தேகக் கண்ணோடுதானே பார்க்க வேண்டியிருக்கிறது..! 

முதலமைச்சரின் விருப்புரிமை கோட்டாவில் வீடோ, வீட்டு மனையோ கேட்டு விண்ணப்பம் கொடுத்த பலருக்கும் பெயரைத் தவிர முகவரியே இல்லையாம்.. தேதிகூட போடாமல்தான் விண்ணப்பக் கடிதமே கொடுத்திருக்கிறார்களாம்.. அவர்களுக்கு ஒதுக்கீடு செய்து அரசு போட்ட அரசாணையிலும் இதே நிலைதான்..

லீஸ் மற்றும சேல் அக்ரிமெண்ட்டில் மனையோ அல்லது வீடோ வாங்குபவர்களின் புகைப்படத்தை ஒட்ட வேண்டும் என்பது அரசு விதிமுறை. போட்டோ ஒட்டுவதற்காகவே அதில் இடமும் இருக்கிறது. ஆனாலும் சில அக்ரிமெண்ட்டுகளில்ல் படங்களும் மிஸ்ஸிங்காம்..! இப்படியேதான் பத்திரப் பதிவுத் துறையில் பதிவாகியுள்ளது.

தி.மு.க. ஆட்சியிலாவது பரவாயில்லை. தனித்தனி அரசாணைகள் போட்டிருக்கிறார்கள். ஆனால் அதிமுக ஆட்சியில் மொத்தமாகத்தான் அரசாணையை வெளியிட்டிருக்கிறார்கள். 2005-ம் ஆண்டு 21 பேருக்கு ஒரே ஆர்டரில் சமூக சேவகர்களுக்கான வீட்டை ஒதுக்கீடு செய்து கொடுத்திருக்கிறார்கள்.

அப்பாடா.. ஊழல்களின் தாயான செல்வி ஜெ,ஜெயலலிதாவும், ஊழல்களின் தாத்தாவான கலைஞர் மு.கருணாநிதியும் இந்த ஒரு விஷயத்திலாவது நேர்க்கோட்டில் வந்திருக்கிறார்களே.. அந்தவரையிலும் சந்தோஷம்..!

வாழ்க திராவிடம்..! வாழிய தமிழகம்..!! வளர்க அரசியல்வியாதிகள்..!!!

செய்திகள் உதவி : பல்வேறு பத்திரிகைகள், மற்றும் இணையத்தளங்கள்


இதையும் படியுங்கள் :

இந்தியாவின் ஊழல்களின் தந்தை கலைஞர் கருணாநிதி..!

84 comments:

அகில் பூங்குன்றன் said...

me the first?

அகில் பூங்குன்றன் said...

Yarukkum inge vetkam illai....ithuthan namma arasiyal...

Prasanna said...

Nanba, don't worry... தாத்தா உங்களூக்கும் ஒரு வீடு தருவார்.....So dont worry be happy!!!! next election agenda ... தமிழகத்தின் மாமன்னர் தானை தலைவர் ஆட்சியில் எல்லோருக்கும் ஒரு வீடு .......

Philosophy Prabhakaran said...

ஒரு முறை கேப்டனுக்கு வாய்ப்பளித்தால் என்ன என்று தோன்றுகிறது...

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

//ஒரு முறை கேப்டனுக்கு வாய்ப்பளித்தால் என்ன என்று தோன்றுகிறது//
ஒரு முறை அவருக்கும் கொடுத்துத் தான் பாருங்கள்.

மாணவன் said...

//யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

//ஒரு முறை கேப்டனுக்கு வாய்ப்பளித்தால் என்ன என்று தோன்றுகிறது//
ஒரு முறை அவருக்கும் கொடுத்துத் தான் பாருங்கள்.//

எல்லாருமே திருடங்கதான் நம்ம நாட்டுல....

Unknown said...

huts of you really very good. as an yougsters, what we have to do ,to stop all this,to have a helpfull goverment to the public, most of our people will support i guess,i dnt lik to have a actor as an minister,in tamilnadu all politicians from cinema,uneducted selfish idiots,we have to have someone well educated and that person have to help the poor people, when will e hav the solution for this

SurveySan said...

modhalla Soda kudiyunga. type adichu kalachchu poyiruppeenga.

SurveySan said...

modhalla Soda kudiyunga. type adichu kalachchu poyiruppeenga.

ராஜ நடராஜன் said...

நட்ட நடு ராத்திரிக்கு மேல பதிவு ரிலீஸ் செய்வீங்களாக்கும்?

புதுசு அண்ணா புதுசு வருமான்னு பார்த்து தூங்கிட்டு காலைல பார்த்தா பொட்டிக்கடை செய்தித்தாள் மாதிரி பதிவு!

நான் கோவைக்கு போறேன்னு பயந்துட்டு தாத்தா பயணத்தை ரத்து செய்துட்டாரு போல இருக்குதே:)

சேலம் தேவா said...

கேப்டனுக்கு அப்புறம் புள்ளி விவர புலின்னா அது நீங்கதான்ண்ணே..!

pichaikaaran said...

ஊழல் தாத்தாவை துணிச்சலுடன் கண்டிக்கும் பதிவர் தாத்தாவை , வாழ்த்த வயதில்லை...
வனங்கி மகிழ்கிறேன்

R.Gopi said...

//“ஊழல் தாத்தா” என்கிற கலைஞர் கருணாநிதி//

*******

கர்புர்னு நல்லா சவுண்ட் விட்டு பலமாக சிரித்தேன்....

அவரோட ஆட்டம் இன்னும் இருக்கு.. கொஞ்ச கொஞ்சமா வெளில வரும்...

பூங்குழலி said...

ஒரு துண்டு நிலம் வாங்க முடியாத நிலை இருக்கு .வாடகையெல்லாம் வேற எக்கச்சக்கமா ஏறிப் போயிருக்கு ....வயித்தெரிச்சலா இருக்கு .திருநாவுக்கரசர் ஹவுசிங் மினிஸ்டரா இருந்த காலத்துல அண்ணா நகர் டவர் பூங்காவுக்கு சொந்தமான எடத்த பிளாட் போட்டு பெரிய அதிகாரிகளுக்கு தாரை வார்த்தாங்க .இன்னொரு பக்கத்துல ஆற்காடு வீராசாமி தம்பிக்கு டவர் கிளப் ஆரம்பிக்க இன்னொரு பக்கத்த கொடுத்தாங்க .பூங்கா சுருங்கிப் போனது தான் மிச்சம்

ரிஷி said...

ஊழல் ராணி : "அவனை நிறுத்தச் சொல்லு நான் நிறுத்தறேன்.."

ஊழல் ராஜா : "அவளை நிறுத்தச் சொல்லு நான் நிறுத்தறேன்.."

சுரணையுள்ள பொதுஜனம் : "வக்காலி...இப்போ ரெண்டு பேரும் நிறுத்துறீகளா.. இல்லையா..."

ரிஷி said...

மாண்புமிகு முதல்வர் : "டாக்டர்.. என்னோட உடம்பச் செக் பண்ணுங்களேன்.."
டாக்டர் : "ஏன்..என்னாச்சு?"
மா.மு : "தினமும் நான் தமிழ்மணம் போயி ப்ளாக்ஸ் எல்லாம் படிக்கிறேன்.. ஆனால் எனக்கு சொரணை மட்டும் வரலியே..ஏன்?"
டாக்டர் : "அரசியலில் சேர்ந்தவுடனேயே அவரவர் சொரணை நரம்புகள் கட் செய்யப்படும். உங்களுக்கும் அதை அன்றே செய்து விட்டேன். இல்லாவிடில் இந்நேரம் நீங்கள் தூக்கில் நாண்டுக்கொண்டு இருந்திருப்பீர்கள்"

உண்மைத்தமிழன் said...

[[[அகில் பூங்குன்றன் said...

me the first?]]]

Yesssssssssssssssssss.

ராத்திரி ஒன்றரை மணிக்கு நெட்ல என்ன வேலை..?

உண்மைத்தமிழன் said...

[[[அகில் பூங்குன்றன் said...
Yarukkum inge vetkam illai. ithuthan namma arasiyal...]]]

இதை வெறுமனே வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும் நமக்கும் வெட்கமில்லைதான்..!

உண்மைத்தமிழன் said...

[[[prasanna said...
Nanba, don't worry... தாத்தா உங்களூக்கும் ஒரு வீடு தருவார். So dont worry be happy!!!! next election agenda. தமிழகத்தின் மாமன்னர் தானை தலைவர் ஆட்சியில் எல்லோருக்கும் ஒரு வீடு.]]]

ஆமாம்.. அடுத்த இரண்டாண்டுகளில் ஒரு சின்ன மழைக்குக் கூட தாங்காமல் நம் தலை மீது இடிந்து விழப் போகிறது..!

உண்மைத்தமிழன் said...

[[[philosophy prabhakaran said...
ஒரு முறை கேப்டனுக்கு வாய்ப்பளித்தால் என்ன என்று தோன்றுகிறது.]]]

ம்..!

உண்மைத்தமிழன் said...

[[[யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

//ஒரு முறை கேப்டனுக்கு வாய்ப்பளித்தால் என்ன என்று தோன்றுகிறது//

ஒரு முறை அவருக்கும் கொடுத்துதான் பாருங்கள்.]]]

யோகன் பாரிஸின் கோரிக்கை ஏற்கப்படுகிறது..!

உண்மைத்தமிழன் said...

[[[மாணவன் said...

//யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

//ஒரு முறை கேப்டனுக்கு வாய்ப்பளித்தால் என்ன என்று தோன்றுகிறது//

ஒரு முறை அவருக்கும் கொடுத்துதான் பாருங்கள்.//

எல்லாருமே திருடங்கதான் நம்ம நாட்டுல....]]]

ஒரு முறை வாய்ப்புக் கொடுத்து பின்னர் பார்க்கலாம். ஆனால் அதற்கான தகுதிக்காக விஜய்காந்த் இன்னும் நிறைய உழைக்க வேண்டும்..!

உண்மைத்தமிழன் said...

[[[sasikala said...

huts of you really very good. as an yougsters, what we have to do, to stop all this, to have a helpfull goverment to the public, most of our people will support i guess, i dnt lik to have a actor as an minister, in tamilnadu all politicians from cinema, uneducted selfish idiots, we have to have someone well educated and that person have to help the poor people, when will e hav the solution for this.]]]

சாதாரண மக்களின் கஷ்டங்கள் இவர்களுக்குத்தான் தெரியும் என்று சொல்லித்தான் அப்பாவித்தனமாக இவர்களைத் தேர்வு செய்துவிட்டோம்.

ஆட்சிக்கு வந்தவுடன் இவர்கள் தங்களை மட்டுமே வளமாக்கிக் கொண்டனர்..!

எங்களது ஆசை நிராசையாகிவிட்டது..!

உண்மைத்தமிழன் said...

[[[SurveySan said...
modhalla Soda kudiyunga. type adichu kalachchu poyiruppeenga.]]]

ஆமாமாம்.. சோடா ப்ளீஸ்.. சர்வேசன் ஸாரின் பாசத்தைக் கண்டு கண்கள் கலங்குகின்றன..! இதயம் விம்முகிறது..! நன்றிங்கண்ணே..!

உண்மைத்தமிழன் said...

[[[ராஜ நடராஜன் said...

நட்ட நடு ராத்திரிக்கு மேல பதிவு ரிலீஸ் செய்வீங்களாக்கும்?

புதுசு அண்ணா புதுசு வருமான்னு பார்த்து தூங்கிட்டு காலைல பார்த்தா பொட்டிக்கடை செய்தித்தாள் மாதிரி பதிவு!]]]

ராத்திரிதான் நேரம் கிடைக்குது. அதுனாலதான்..!

[[[நான் கோவைக்கு போறேன்னு பயந்துட்டு தாத்தா பயணத்தை ரத்து செய்துட்டாரு போல இருக்குதே:)]]]

இங்க பயங்கரக் குழப்படி ராசா மேட்டர்ல.. அதுனால ரத்தாம்..!

உண்மைத்தமிழன் said...

[[[சேலம் தேவா said...
கேப்டனுக்கு அப்புறம் புள்ளி விவர புலின்னா அது நீங்கதான்ண்ணே..!]]]

மிக்க நன்றிண்ணே.. ஆனால் இதுக்கு மொதல்ல பத்திரிகைகளுக்குத்தான் நன்றி சொல்லணும்.. ஏன்னா அதுல இருந்துதான் நான் எடுத்துக் கொடுக்குறேன்..!

உண்மைத்தமிழன் said...

[[[பார்வையாளன் said...
ஊழல் தாத்தாவை துணிச்சலுடன் கண்டிக்கும் பதிவர் தாத்தாவை , வாழ்த்த வயதில்லை. வனங்கி மகிழ்கிறேன்]]]

நன்றி.. நன்றி.. நன்றி..!

உண்மைத்தமிழன் said...

[[[R.Gopi said...

//“ஊழல் தாத்தா” என்கிற கலைஞர் கருணாநிதி//

*******

கர்புர்னு நல்லா சவுண்ட் விட்டு பலமாக சிரித்தேன். அவரோட ஆட்டம் இன்னும் இருக்கு. கொஞ்ச கொஞ்சமா வெளில வரும்.]]]

இதுக்கு முடிவுதான் எப்போ..?

உண்மைத்தமிழன் said...

[[[பூங்குழலி said...

ஒரு துண்டு நிலம் வாங்க முடியாத நிலை இருக்கு. வாடகையெல்லாம் வேற எக்கச்சக்கமா ஏறிப் போயிருக்கு. வயித்தெரிச்சலா இருக்கு. திருநாவுக்கரசர் ஹவுசிங் மினிஸ்டரா இருந்த காலத்துல அண்ணா நகர் டவர் பூங்காவுக்கு சொந்தமான எடத்த பிளாட் போட்டு பெரிய அதிகாரிகளுக்கு தாரை வார்த்தாங்க. இன்னொரு பக்கத்துல ஆற்காடு வீராசாமி தம்பிக்கு டவர் கிளப் ஆரம்பிக்க இன்னொரு பக்கத்த கொடுத்தாங்க. பூங்கா சுருங்கிப் போனதுதான் மிச்சம்]]]

இது கூட்டுக் களவாணித்தனம்..!

உண்மைத்தமிழன் said...

[[[ரிஷி said...

ஊழல் ராணி : "அவனை நிறுத்தச் சொல்லு நான் நிறுத்தறேன்.."

ஊழல் ராஜா : "அவளை நிறுத்தச் சொல்லு நான் நிறுத்தறேன்.."

சுரணையுள்ள பொதுஜனம் :

"வக்காலி...இப்போ ரெண்டு பேரும் நிறுத்துறீகளா.. இல்லையா..."]]]

கரீக்ட்டு ரிஷி..!

உண்மைத்தமிழன் said...

[[[ரிஷி said...

மாண்புமிகு முதல்வர் : "டாக்டர்.. என்னோட உடம்பச் செக் பண்ணுங்களேன்.."

டாக்டர் : "ஏன்..என்னாச்சு?"

மா.மு : "தினமும் நான் தமிழ்மணம் போயி ப்ளாக்ஸ் எல்லாம் படிக்கிறேன்.. ஆனால் எனக்கு சொரணை மட்டும் வரலியே. ஏன்?"

டாக்டர் : "அரசியலில் சேர்ந்தவுடனேயே அவரவர் சொரணை நரம்புகள் கட் செய்யப்படும். உங்களுக்கும் அதை அன்றே செய்து விட்டேன். இல்லாவிடில் இந்நேரம் நீங்கள் தூக்கில் நாண்டுக் கொண்டு இருந்திருப்பீர்கள்"]]]

ஹா.. ஹா.. அப்படியே சொரணை இருந்திட்டாலும்..............?

சீனு said...

யாருக்கும் வெட்கமில்லை.

டுபாக்கூர் பதிவர் said...

நெஞ்சை தொட்டு சொல்லுங்க, நீங்க முதல்வரா இருந்தாலும் இதையெல்லாம் செய்வீங்கதானே...!

raja said...

ராஜமாணிக்கம் தோட்டம் உங்களுக்கு யாருக்காவது... இதைப்பற்றி தெரியுமா..ஆனால் தெரியும்... சென்னை சிட்டி சென்டர் என்று சொன்னால்.. அந்த பகுதியில் இருந்த அத்தனைபேரையும் விரட்டி கைப்பற்றியது தான் அந்த நிலம் அதுவும் மலினமான விலையில்.. அந்த இடத்தில் இருந்தவர்கள் சிறுவியபாரிகள், விளிம்புநிலைத்தொழில் செய்பவர்கள், இவர்கள் அனைவரையும் விரட்டி சசிகலா கைப்பபற்றி இன்னும் பங்குதாரராக இருக்கிறார்.. இதில் கொடுமை என்னவென்றால்.. அங்கு இருந்தவர்கள் பெரும்பாலும் தலித்துகள்.. அவர்களை விரட்டிய ரவுடிகளும் தலித்துகள்.. கடைசியில் என்கவுண்டரில் சுட்டுக்கொல்லபட்டு அந்த ரவுடிகள் இறந்தார்கள். இதைப்பற்றி எந்த கட்சிகளும் மூச்சு விட்டதில்லை.. திருமா உட்பட.. நம் எல்லோரையும் சீக்கிரம் அயோக்கியார்களாக முயற்சி செய்கிறார்கள்.. நாம் ஏதோ ஒரு விளம்பில் நழுவி விட்டோம்.. அவ்வளவே.. வேறு வழியே இல்லை.. இன்னும் 10 வருடங்களுக்கு இந்த சவக்குழியில் தான் வாழவேண்டும்..

செங்கோவி said...

//ஆனாலும் சில அக்ரிமெண்ட்டுகளில்ல் படங்களும் மிஸ்ஸிங்காம்..! // நாம் ஃபோட்டோ இல்லமல் போனால் துரத்தியடிப்பவர்கள், இவர்களுக்கு மட்டும் எப்படி அனுமதித்தனர்?..போட்டா இல்லாத பத்திரம் செல்லுமா?

--செங்கோவி
நானும் ஹாலிவுட் பாலாவும்

raja said...

இங்கு நண்பர்கள பல பேர் கேப்டனுக்கு ஒரு வாய்ப்பு கொடுத்தால் என்ன என்கிறார்கள்.. மிக சரியான வார்த்தையைத்தான் அவர்கள் சொல்லி இருக்கிறார்கள்.. (வாய்ப்பு) மச்சான் சதீஷ்,அண்ணி பிரேமலதா.. இருவரும் கூறு போட்டு நாட்டை விற்றுவிடுவார்கள்.. எல்லோருக்கும் வாய்ப்பு தமிழர்கள் ஏமாளிப்.... இருப்பதில் தேர்ந்தவர்களாக இருக்கிறார்கள்

Ganpat said...

மிகவும் கஷ்டமான ஒரு காலத்தில் இருக்கிறோம்.1975 இல் காமராஜ் மறைவிற்கு பிறகு தமிழ்நாடு தலையில்லா மாநிலம் ஆனது.
இப்போ மு,க.,சோனியா,திருப்பதி பெருமாள்,பழனி முருகன்,தில்லை நடராஜன் ஆகியோர் ஒரே கூட்டணியில் உள்ளார்கள்.இவர்களை எப்படி வெல்வது என நினைத்தாலே மலைப்பாக உள்ளது.
இதற்கு ஜெயா நிச்சயமாக தீர்வு இல்லை.
மீதி இருப்பது ராமதாசும்,விஜயகாந்த்தும் தான்
ஏதோ ரஜினி வருவார் என நம்பிக்கொண்டு ஒரு கூட்டம் உள்ளது.எனக்கு நம்பிக்கை இல்லை.முதல்வராக நடிக்கக்கூட அஞ்சியவர் அவர்.
எனவே கூட்டி கழித்து பார்த்தால் மனதை தேற்றிக்கொண்டு,மு.க வின் எதிர்ப்பு ஓட்டுக்கள் சிதறாமல் இருக்க ஜெயாவிற்கு ஓட்டளிப்பதை தவிர வேறு வழி இல்லை என்றே தோன்றுகிறது.

அப்புறம் உங்கள் மேல் உள்ள அன்பினால் சொல்கிறேன் சரவணன் சார்!ரொம்ப உணர்ச்சிவசப்படாம வார்த்தைகளை பரிசீலித்து பதிவுகள் போடவும்.ஒரு நல்ல மனிதருக்கு எந்த இன்னலும் வரக்கூடாது.
மு.க வின் யோக்கியதை 1970 லிருந்து எல்லாருக்கும் தெரிந்ததுதான்.என்னமோ தெரியலே அவருக்கு தொய்வு வரவேயில்லை.
அதுவே அவருக்கு ஆணவம் அதிகரிக்க காரணமாக உள்ளது.
கலாச்சார ரீதியிலும்,பொருளாதார ரீதியிலும்,ஒழுக்கம் நேர்மை ரீதியிலும் ஒரு மாநிலத்தையே குட்டிச்சுவராக்கியவர், சகல ஸௌபாக்கியங்களையும் பெற்று பேரன் பேத்திகள் புடை சூழ ஆனந்தமாக 90 வயதை நோக்கி போகிறார் என்பதை நினைத்தாலே தெரியலே எங்கோ ஏதோ தப்பு இருக்குன்னு!

ஈ ரா said...

இந்த பின்னூட்டம் வெளியிட அல்ல...

//தனது மனைவியின் பெயரில் வாங்கியிருக்கும் வீட்டு மனைவியின் விலை 1.15 கோடி ரூபாய்.//


மனை என்பது மனைவி என்று வந்திருக்கிறது..எழுத்துப் பிழை திருத்திக் கொள்ளுங்கள்.

Unknown said...

உங்கள் எழுத்துக்களை முடிந்தால் போராட்டமாக மாற்ற முயற்சியுங்கள்

அரசியலுக்கு உங்களை வரவேற்கிறேன்

உண்மைத்தமிழன் said...

[[[சீனு said...
யாருக்கும் வெட்கமில்லை.]]]

நமக்கும் சேர்த்துத்தான்..!

உண்மைத்தமிழன் said...

[[[டுபாக்கூர் பதிவர் said...
நெஞ்சை தொட்டு சொல்லுங்க, நீங்க முதல்வரா இருந்தாலும் இதையெல்லாம் செய்வீங்கதானே...!]]]

ச்சே.. ச்சே.. எம்ஜிஆர் படத்தை புரொபைல் போட்டோவா வைச்சுக்கிட்டு இப்படியெல்லாம் பேசலாமா தம்பி..?

நானாக இருந்திருந்தால் இந்த கோட்டாவையே ரத்து செய்துவிட்டு இதனையும் பொதுப் பிரிவில் இணைத்திருப்பேன்..!

அத்தோடு ஏற்கெனவே அரசுகள் வழங்கியிருந்த பட்டாக்களையும் ரத்து செய்திருப்பேன்..!

ஊழலுக்கு உடைந்தையாக இருந்தவர்கள் மீது வழக்குத் தொடர்ந்திருப்பேன்..!

உண்மைத்தமிழன் said...

[[[raja said...

ராஜமாணிக்கம் தோட்டம் உங்களுக்கு யாருக்காவது... இதைப் பற்றி தெரியுமா.. ஆனால் தெரியும்... சென்னை சிட்டி சென்டர் என்று சொன்னால்.. அந்த பகுதியில் இருந்த அத்தனை பேரையும் விரட்டி கைப்பற்றியதுதான் அந்த நிலம் அதுவும் மலினமான விலையில்.. அந்த இடத்தில் இருந்தவர்கள் சிறு வியபாரிகள், விளிம்பு நிலைத் தொழில் செய்பவர்கள், இவர்கள் அனைவரையும் விரட்டி சசிகலா கைப்பபற்றி இன்னும் பங்குதாரராக இருக்கிறார்.. இதில் கொடுமை என்னவென்றால்.. அங்கு இருந்தவர்கள் பெரும்பாலும் தலித்துகள்.. அவர்களை விரட்டிய ரவுடிகளும் தலித்துகள்.. கடைசியில் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லபட்டு அந்த ரவுடிகள் இறந்தார்கள். இதைப் பற்றி எந்த கட்சிகளும் மூச்சு விட்டதில்லை.. திருமா உட்பட.. நம் எல்லோரையும் சீக்கிரம் அயோக்கியார்களாக முயற்சி செய்கிறார்கள்.. நாம் ஏதோ ஒரு விளம்பில் நழுவி விட்டோம்.. அவ்வளவே.. வேறு வழியே இல்லை.. இன்னும் 10 வருடங்களுக்கு இந்த சவக்குழியில்தான் வாழ வேண்டும்..]]]

இதைவிடக் கொடுமை. அங்கே ஒரு மாடி கட்டிக் கொள்ளத்தான் அனுமதியாம்.. அதையும் தாண்டி மூன்று மாடிகள் கட்டியிருக்கிறார்கள்..! இதற்காக சமீபத்தில் மாநகராட்சியில் ஏதோ தண்டத் தொகையைக் கட்டிவிட்டு பிரச்சினைக்கு மங்களம் பாடிவிட்டார்களாம்..!

உண்மைத்தமிழன் said...

[[[செங்கோவி said...

//ஆனாலும் சில அக்ரிமெண்ட்டுகளில்ல் படங்களும் மிஸ்ஸிங்காம்..! //

நாம் ஃபோட்டோ இல்லமல் போனால் துரத்தியடிப்பவர்கள், இவர்களுக்கு மட்டும் எப்படி அனுமதித்தனர்? போட்டா இல்லாத பத்திரம் செல்லுமா?

--செங்கோவி
நானும் ஹாலிவுட் பாலாவும்]]]

அவங்கள்லாம் ராசாக்கள் செங்கோவி.. நாம் சோற்றால் அடித்தப் பிண்டங்கள்..!

உண்மைத்தமிழன் said...

[[[raja said...

இங்கு நண்பர்கள பல பேர் கேப்டனுக்கு ஒரு வாய்ப்பு கொடுத்தால் என்ன என்கிறார்கள்.. மிக சரியான வார்த்தையைத்தான் அவர்கள் சொல்லி இருக்கிறார்கள்..

(வாய்ப்பு) மச்சான் சதீஷ்,அண்ணி பிரேமலதா இருவரும் கூறு போட்டு நாட்டை விற்று விடுவார்கள்.. எல்லோருக்கும் வாய்ப்பு தமிழர்கள் ஏமாளிப் இருப்பதில் தேர்ந்தவர்களாக இருக்கிறார்கள்.]]]

பார்ப்போம். பார்க்கலாம்.. ஒரு வாய்ப்பு கொடுப்பதில் தவறில்லை..!

உண்மைத்தமிழன் said...

[[[Ganpat said...

கலாச்சார ரீதியிலும், பொருளாதார ரீதியிலும், ஒழுக்கம் நேர்மை ரீதியிலும் ஒரு மாநிலத்தையே குட்டிச் சுவராக்கியவர், சகல ஸௌபாக்கியங்களையும் பெற்று பேரன் பேத்திகள் புடை சூழ ஆனந்தமாக 90 வயதை நோக்கி போகிறார் என்பதை நினைத்தாலே தெரியலே எங்கோ ஏதோ தப்பு இருக்குன்னு!]]]

எனக்கும் இப்படித்தான் தோணுது.. ஆனால் காரணமில்லாமல் இது போன்ற விதிவிலக்குகள் இருக்க முடியாது. அதுதான் என்ன காரணம் என்று தெரியவில்லை..!

உண்மைத்தமிழன் said...

[[[ஈ ரா said...

இந்த பின்னூட்டம் வெளியிட அல்ல...

//தனது மனைவியின் பெயரில் வாங்கியிருக்கும் வீட்டு மனைவியின் விலை 1.15 கோடி ரூபாய்.//

மனை என்பது மனைவி என்று வந்திருக்கிறது. எழுத்துப் பிழை திருத்திக் கொள்ளுங்கள்.]]]

நன்றி நண்பரே.. திருத்திவிட்டேன்..!

உண்மைத்தமிழன் said...

[[[விக்கி உலகம் said...
உங்கள் எழுத்துக்களை முடிந்தால் போராட்டமாக மாற்ற முயற்சியுங்கள்.
அரசியலுக்கு உங்களை வரவேற்கிறேன்.]]]

எந்தக் கட்சில சேர்றது..? யார் என்னைச் சேர்த்துக்குவா..?

Unknown said...

I don't know how to type in Tamil. so thats why english. Peterunnu ninaikka veendaam...

First of all please tell me why the govt. is giving these homes?are they costing money for that?
If so, on what basis. Why are they giving like this? Is this scheme there in every states?

THANK U VERY MUCH.YOU ARE REALLY GREAT. I THINK EVEN U CAN GET A HOUSE UNDER SOCIAL SERVER QUOTA:-)

also let me know if I have to join in this blog to write comments? because everytime I'm giving my google account for that...

middleclassmadhavi said...

//இதில் தி.மு.க., அ.தி.மு.க.வும் கூட்டுக் களவாணிகள்.. ஒருவர் மாற்றி ஒருவர் என்னதான் திட்டிக் கொண்டாலும் உள்ளுக்குள் இப்படியொரு அண்ட்ர்ஸ்டேண்ட்டிங்கில்தான் இருந்திருக்கிறார்கள். நம்மதான் முட்டாப் பயலுகளாட்டம் “ஆத்தா கொஸ்டீன் கேக்குது..! தாத்தா திருப்பியடிச்சிட்டாரு”ன்னு திருப்திப்பட்டிருக்கோம்..!// ஒரு ஆட்சியில் செய்த தப்புகளைப் பட்டியலிட்டு அதையே இம்ப்ரூவ் செய்வார்களோ என நினைக்கத் தோன்றுகிறது.

Sugumarje said...

உண்மைதமிழன் அய்யா... பெயருக்கேத்த மாதிரி செயல்படுறீங்க... நல்லாயிருக்கீங்களா? உடம்ப பார்த்துக்கங்க... அவ்வளவுதான் சொல்ல முடியும்... (என்னது தம்பியுடையான் படைக்கு அஞ்சானா?... யாருங்க நீங்க....?)

நேரமிருந்தால் இத்த பாருங்க...சுகுமார்ஜிக்கு பதிலனுப்பிய அமேரிக்க ஜனாதிபதியும், இந்திய ஜனாதிபதியும்

Sundar said...

ஒரு சந்தேகம். நீங்கள் இவ்வளவு ஆவேசமாக (எல்லோரையும் போல்) எழுதுவதை பார்த்து, இவ்வளவு (சாதகமான) பின்னூட்டங்களை பார்த்து, தாத்தா உங்களை கூப்பிடுகிறார்...

“தம்பி, அரசுக்கு எதிராக எழுதுவதை நிறுத்திக்கொள்ளுங்கள். மீறினால் வீட்டுக்கு auto வரும். Auto-வில் ஆட்களும், பொருட்களும் வரும். நிறுத்திக்கொள்ளும் பட்சத்தில் உங்களுக்கும் அடுத்த ஒதுக்கீட்டில் ஒரு வீடு அல்லது மனை. என்ன சொல்கிறீர்கள்?” ...

உங்கள் நிலை என்னவாக இருக்கும்?

1. ஒரு போராட்டம் ஆரம்பிப்பீர்கள், இங்கு பின்னூட்டம் இடும் பல நண்பர்களின் துணையுடன் - நான் அதில் இருக்க மாட்டேன், நான் ஒரு கோழை. எனக்கு என் உயிர் மற்றும் என் குடும்பத்தாரின் உயிர் முக்கியம். மன்னிக்கவும்

2. இந்த மாதிரி எழுதுவதை குறைத்துகொண்டு, ஒரு வீடோ, மனையோ வாங்கிக்கொள்வீர்கள்.

3. இந்த மாதிரி எழுதுவதை குறைத்துகொண்டு, மனசாட்சிக்கும், நியாயத்துக்கும் மதிப்பளித்து, வீடோ, மனையோ வேண்டாம் என்று ஒதுங்கிவிடுவீர்கள்

எது உங்கள் choice???

உண்மைத்தமிழன் said...

[[[Sai said...

I don't know how to type in Tamil. so thats why english. Peterunnu ninaikka veendaam...]]]

nhm.in தளத்திற்குச் சென்று nhmwriter என்னும் சாப்ட்வேரை டவுன்லோடு செய்து இன்ஸ்டால் செய்து கொண்டு அதன் மூலம் தமிழில் டைப் செய்து பழகுங்கள்..! இதன் செயல்பாட்டு முறைகளும் இதே வெப்ஸைட்டில் இருக்கின்றன..

[[[First of all please tell me why the govt. is giving these homes? are they costing money for that?
If so, on what basis. Why are they giving like this? Is this scheme there in every states?]]]

அனைத்து மாநிலங்களிலும் உள்ளன. அத்தனையிலும் ஊழல்கள்தான். ஆளுகின்ற அரசியல் கட்சிப் பிரமுகர்கள் குறைந்த விலையில் வாங்கி அதிக விலைக்கு விற்று லாபம் பார்ப்பார்கள். பார்க்கிறார்கள்..!

[[[THANK U VERY MUCH.YOU ARE REALLY GREAT. I THINK EVEN U CAN GET A HOUSE UNDER SOCIAL SERVER QUOTA:-)
also let me know if I have to join in this blog to write comments? because everytime I'm giving my google account for that...]]]

ஆமாம்.. கூகிள் அக்கவுண்ட் இருந்தால்தான் சில தளங்களில் பின்னூட்டம் போட முடியும்..!

உண்மைத்தமிழன் said...

[[[middleclassmadhavi said...

//இதில் தி.மு.க., அ.தி.மு.க.வும் கூட்டுக் களவாணிகள்.. ஒருவர் மாற்றி ஒருவர் என்னதான் திட்டிக் கொண்டாலும் உள்ளுக்குள் இப்படியொரு அண்ட்ர்ஸ்டேண்ட்டிங்கில்தான் இருந்திருக்கிறார்கள். நம்மதான் முட்டாப் பயலுகளாட்டம் “ஆத்தா கொஸ்டீன் கேக்குது..! தாத்தா திருப்பியடிச்சிட்டாரு”ன்னு திருப்திப்பட்டிருக்கோம்..!//

ஒரு ஆட்சியில் செய்த தப்புகளைப் பட்டியலிட்டு அதையே இம்ப்ரூவ் செய்வார்களோ என நினைக்கத் தோன்றுகிறது.]]]

அதேதான்.. கூட்டுக் களவாணித்தனம்..! நான் செய்றதை நீ கண்டுக்காத.. நீ செய்றதை நான் கண்டுக்கலை.. இதுதான் அவங்க டீலிங்..!

உண்மைத்தமிழன் said...

[[[Sugumarje said...

உண்மைதமிழன் அய்யா... பெயருக்கேத்த மாதிரி செயல்படுறீங்க... நல்லாயிருக்கீங்களா? உடம்ப பார்த்துக்கங்க... அவ்வளவுதான் சொல்ல முடியும்... (என்னது தம்பியுடையான் படைக்கு அஞ்சானா?... யாருங்க நீங்க....?)]]]

அக்கறையான விசாரிப்புக்கு மிக்க நன்றி சுகுமார்ஜி..

[[[நேரமிருந்தால் இத்த பாருங்க. சுகுமார்ஜிக்கு பதிலனுப்பிய அமேரிக்க ஜனாதிபதியும், இந்திய ஜனாதிபதியும்]]]

அவசியம் பார்க்கிறேன்..!

உண்மைத்தமிழன் said...

[[[Sundar said...

ஒரு சந்தேகம். நீங்கள் இவ்வளவு ஆவேசமாக (எல்லோரையும் போல்) எழுதுவதை பார்த்து, இவ்வளவு (சாதகமான) பின்னூட்டங்களை பார்த்து, தாத்தா உங்களை கூப்பிடுகிறார்...

“தம்பி, அரசுக்கு எதிராக எழுதுவதை நிறுத்திக் கொள்ளுங்கள். மீறினால் வீட்டுக்கு auto வரும். Auto-வில் ஆட்களும், பொருட்களும் வரும். நிறுத்திக்கொள்ளும் பட்சத்தில் உங்களுக்கும் அடுத்த ஒதுக்கீட்டில் ஒரு வீடு அல்லது மனை. என்ன சொல்கிறீர்கள்?” ...

உங்கள் நிலை என்னவாக இருக்கும்?

1. ஒரு போராட்டம் ஆரம்பிப்பீர்கள், இங்கு பின்னூட்டம் இடும் பல நண்பர்களின் துணையுடன் - நான் அதில் இருக்க மாட்டேன், நான் ஒரு கோழை. எனக்கு என் உயிர் மற்றும் என் குடும்பத்தாரின் உயிர் முக்கியம். மன்னிக்கவும்

2. இந்த மாதிரி எழுதுவதை குறைத்துக் கொண்டு, ஒரு வீடோ, மனையோ வாங்கிக் கொள்வீர்கள்.

3. இந்த மாதிரி எழுதுவதை குறைத்துகொண்டு, மனசாட்சிக்கும், நியாயத்துக்கும் மதிப்பளித்து, வீடோ, மனையோ வேண்டாம் என்று ஒதுங்கி விடுவீர்கள்.

எது உங்கள் choice???]]]

மூன்றுமே செய்ய மாட்டேன். தாத்தாவைச் சந்தித்தையும், பேசியதையுமே 40 பக்கங்களில் கட்டுரையாக எழுதித் தாளித்து விடுவேன்..!

Sundar said...

நன்றி. இங்கு இதுதான் நடக்கிறது. இங்கு எல்லோரும் வெறுமனே எழுதிக்கொண்டுதான் இருக்கிறோம். என்ன பிரயோசனம்? தாத்தா போனால், ஆத்தா... அதுவும் போனால், சுடாலின் அல்லது கிழகிரி அல்லது ராஜாமொழி. நீங்கள் எழுதுவதைக்கண்டு அவர்களுக்கு வருத்தமே இல்லை.

“என் மூஞ்சியிலேயெ நேரே வந்து துப்பிக்கோ, என் வீட்டுவாசல்ல வந்து கக்கா போ. எல்லாம் பன்னு. எனக்கு எந்த வெக்கமும் இல்ல. என்ன, போகும்போது, ஒரு 5c குடுத்துட்டு போயிடு. எனக்கு அதுதான் முக்கியம்”

இந்த மன்நிலையில் இருப்பவர்களை என்னதான் செய்யமுடியும்?

காவல்துறயிடம் இருந்தும் நியாயம் கிடைக்காது, நீதிமன்றம்? அவங்களுக்கும்தான் வீடும் மனையும் போகுதே!

என்னதான் முடிவு?

நீங்கள் நிறைய எழுதி, blog-ல் உங்களுக்கான hit அதிகமானது (மட்டும்) தான் சந்தோஷமான விஷயம்...

Sundar said...

இந்த முறையில் வீடு (அல்லது மனை) வாங்குபவர்கள், அதை இத்தனை வருடங்களுக்கு (25 அல்லது 30) விற்பதோ, அல்லது யாருக்கும் "Power of Attorney" குடுப்பதோ முடியாது என்று ஏதாவது இருக்கிறதா? அப்படியே ஒரு (விற்க்கும்) நிலை வந்தாலும், அதை மீண்டும் அரசுக்கே குடுக்கவேண்டும் என்று எதுவும் உண்டா???

Ganpat said...

சுந்தர் சொல்வது மிகவும் சரி ..
மு .க வை பற்றியோ ஜெயா வைப்பற்றியோ blog எழுதுவது ஒரு டைனோசாரை ஈர்க்குச்சியால் அடிப்பதைப்போல

Ganpat said...

Sundar,

இன்று விலை கொடுத்து வாங்க முடியாதவர்களும் நம் நாட்டில் உள்ளனர்.
சோ,ஞானி,டிராபிக் ராமசாமி, உண்மைத்தமிழன்,டோண்டு,
காவிரிமைந்தன் அவர்களில் சிலர்.

ரிஷி said...

சுந்தரின் கேள்விகள் நியாயமானவை. என்னாலும் இங்கே கருணாநிதி மீதான எரிச்சலை காட்டமான வார்த்தைகள் மூலம் வெளிப்படுத்த முடிகிறதேயன்றி அவர் மீது என்னால் வழக்கு தொடுக்க முடியாது. வார்த்தைகள் வெளிப்படுத்தல் என் கோபத்திற்கு வடிகால்! அவ்வளவே!!

இந்த வடிகால் சமுதாயத்தில் எவ்வித மாற்றத்தையும் ஏற்படுத்திவிட முடியாது!

//Ganpat said...

சுந்தர் சொல்வது மிகவும் சரி ..
மு .க வை பற்றியோ ஜெயா வைப்பற்றியோ blog எழுதுவது ஒரு டைனோசாரை ஈர்க்குச்சியால் அடிப்பதைப்போல//

பல ஆயிரம் ஈர்க்குச்சிகளை ஒன்றிணைத்துக் குத்தினாலும், டைனோசர் அதற்கேற்றாபோல தன் உருவத்தைப் பெருக்கிக் கொள்ளுமே தவிர, செத்து மடியாது.

//Ganpat said...

Sundar,

இன்று விலை கொடுத்து வாங்க முடியாதவர்களும் நம் நாட்டில் உள்ளனர். சோ,ஞானி,டிராபிக் ராமசாமி,உண்மைத்தமிழன்,டோண்டு,
காவிரிமைந்தன் அவர்களில் சிலர்.//

இது பெருமையாக சொல்லிக் கொள்ள உதவும். இலட்சத்தில் ஒருவர் சரியான நிலைநிற்பது பெருமைக்குரிய விஷயம்தான்! ஆனால் அதற்கு அவர் கொடுக்கும் விலை கொடுமையான மன வலி! வீட்டாருக்கு மன உளைச்சல்!

ரிஷி said...

//Sundar said...

நன்றி. இங்கு இதுதான் நடக்கிறது. இங்கு எல்லோரும் வெறுமனே எழுதிக்கொண்டுதான் இருக்கிறோம். என்ன பிரயோசனம்? தாத்தா போனால், ஆத்தா... அதுவும் போனால், சுடாலின் அல்லது கிழகிரி அல்லது ராஜாமொழி. நீங்கள் எழுதுவதைக்கண்டு அவர்களுக்கு வருத்தமே இல்லை.

“என் மூஞ்சியிலேயெ நேரே வந்து துப்பிக்கோ, என் வீட்டுவாசல்ல வந்து கக்கா போ. எல்லாம் பன்னு. எனக்கு எந்த வெக்கமும் இல்ல. என்ன, போகும்போது, ஒரு 5c குடுத்துட்டு போயிடு. எனக்கு அதுதான் முக்கியம்”

இந்த மன்நிலையில் இருப்பவர்களை என்னதான் செய்யமுடியும்?

காவல்துறயிடம் இருந்தும் நியாயம் கிடைக்காது, நீதிமன்றம்? அவங்களுக்கும்தான் வீடும் மனையும் போகுதே!

என்னதான் முடிவு?

நீங்கள் நிறைய எழுதி, blog-ல் உங்களுக்கான hit அதிகமானது (மட்டும்) தான் சந்தோஷமான விஷயம்...//

இதற்கு என்னதான் முடிவு? என்பதற்கு மாற்றுவழிகளில் விடைதேட விவாதிக்கலாம். எப்போதும் தங்கள் உரிமைக்காக பொதுமக்கள் போராடிக்கொண்டோ, வழக்காடிக் கொண்டோ இருக்க முடியாது. அது சரியான ஜனநாயகமும் அல்ல.

Sundar said...

Ganpat,

ஆமோதிக்கிறேன்... இந்த இன்றய காந்திகள் நமக்கு விடுதலை வாங்கிக்கொடுக்கும்முன், அவர்கள் தங்களின் 20வது தலைமுறைக்கும் சேர்த்து சொத்து சேர்த்திருப்பார்கள்..

இந்த பத்திரிக்கைகள், வெறுமனே எழுதிக்கொண்டிருந்து என்ன பிரயோசனம்? யாராவது, நேரிடையாக இந்த கேள்விகளை இந்த அரசியல் வியாதிகளிடம் கேட்கிறார்களா? அவர்கள் தரும் வெத்து அறிக்கைகளை வெளியிட்டு என்ன பிரயோசனம்?

நேர்கானல் அல்லது பத்திரிக்கையாளர் சந்திப்புக்கு போகும்முன், “தலைவரை (அல்லது தலைவியை) சங்கடப்படுத்தாம கேள்வி கேளுங்க” என்று அன்பு (அன்பளிப்புடன்) கோரிக்கை வைக்கிறார்கள். அப்படியே நடக்கிறது...

உண்மைத்தமிழன் said...

[[[Sundar said...

நன்றி. இங்கு இதுதான் நடக்கிறது. இங்கு எல்லோரும் வெறுமனே எழுதிக்கொண்டுதான் இருக்கிறோம். என்ன பிரயோசனம்? தாத்தா போனால், ஆத்தா... அதுவும் போனால், சுடாலின் அல்லது கிழகிரி அல்லது ராஜாமொழி. நீங்கள் எழுதுவதைக் கண்டு அவர்களுக்கு வருத்தமே இல்லை. “என் மூஞ்சியிலேயெ நேரே வந்து துப்பிக்கோ, என் வீட்டு வாசல்ல வந்து கக்கா போ. எல்லாம் பன்னு. எனக்கு எந்த வெக்கமும் இல்ல. என்ன, போகும்போது, ஒரு 5c குடுத்துட்டு போயிடு. எனக்கு அதுதான் முக்கியம்” இந்த மன்நிலையில் இருப்பவர்களை என்னதான் செய்ய முடியும்?
காவல் துறயிடம் இருந்தும் நியாயம் கிடைக்காது, நீதிமன்றம்? அவங்களுக்கும்தான் வீடும் மனையும் போகுதே! என்னதான் முடிவு? நீங்கள் நிறைய எழுதி, blog-ல் உங்களுக்கான hit அதிகமானது (மட்டும்)தான்
சந்தோஷமான விஷயம்...]]]

சுந்தர்..

இப்படியே யோசித்தால் எதைப் பற்றியும், யாரும் எழுத முடியாது..! எழுதுபவர்களையும் சந்தேகித்தால் எப்படி..?

உண்மைத்தமிழன் said...

[[[Sundar said...

இந்த முறையில் வீடு (அல்லது மனை) வாங்குபவர்கள், அதை இத்தனை வருடங்களுக்கு (25 அல்லது 30) விற்பதோ, அல்லது யாருக்கும் "Power of Attorney" குடுப்பதோ முடியாது என்று ஏதாவது இருக்கிறதா? அப்படியே ஒரு (விற்க்கும்) நிலை வந்தாலும், அதை மீண்டும் அரசுக்கே குடுக்க வேண்டும் என்று எதுவும் உண்டா???]]]

இதையும் இந்த அரசியல்வியாதிகள் தங்களுக்கேற்றாற்போல் வளைத்துவிட்டார்கள்..!

வீடுகள் கட்ட மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்கிற மனை விற்பனை ஒப்பந்தத்தைத் திருத்தி என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம் என்று இந்த ஆட்சியில்தான் செய்திருக்கிறார்கள்..!

எப்போது வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளலாம்.. விற்பனை செய்து கொள்ளலாம் என்று இந்த ஆட்சியில்தான் வீடு விற்பனை ஒப்பந்தத்தை திருத்தியிருக்கிறார்கள்..!

உண்மைத்தமிழன் said...

[[[Ganpat said...
சுந்தர் சொல்வது மிகவும் சரி.
மு.க.வை பற்றியோ ஜெயாவைப் பற்றியோ blog எழுதுவது ஒரு டைனோசாரை ஈர்க்குச்சியால் அடிப்பதைப் போல..]]]

அதற்காக நமது எதிர்ப்பை தெரிவிக்காமல் இருக்கலாமா ஸார்..?

உண்மைத்தமிழன் said...

[[[ரிஷி said...

சுந்தரின் கேள்விகள் நியாயமானவை. என்னாலும் இங்கே கருணாநிதி மீதான எரிச்சலை காட்டமான வார்த்தைகள் மூலம் வெளிப்படுத்த முடிகிறதேயன்றி அவர் மீது என்னால் வழக்கு தொடுக்க முடியாது. வார்த்தைகள் வெளிப்படுத்தல் என் கோபத்திற்கு வடிகால்! அவ்வளவே!!

இந்த வடிகால் சமுதாயத்தில் எவ்வித மாற்றத்தையும் ஏற்படுத்திவிட முடியாது!

//Ganpat said...

சுந்தர் சொல்வது மிகவும் சரி ..
மு .க வை பற்றியோ ஜெயாவைப் பற்றியோ blog எழுதுவது ஒரு டைனோசாரை ஈர்க்குச்சியால் அடிப்பதைப்போல//

பல ஆயிரம் ஈர்க்குச்சிகளை ஒன்றிணைத்துக் குத்தினாலும், டைனோசர் அதற்கேற்றாபோல தன் உருவத்தைப் பெருக்கிக் கொள்ளுமே தவிர, செத்து மடியாது.

//Ganpat said...

Sundar, இன்று விலை கொடுத்து வாங்க முடியாதவர்களும் நம் நாட்டில் உள்ளனர். சோ, ஞானி, டிராபிக் ராமசாமி, உண்மைத்தமிழன், டோண்டு, காவிரிமைந்தன் அவர்களில் சிலர்.//

இது பெருமையாக சொல்லிக் கொள்ள உதவும். இலட்சத்தில் ஒருவர் சரியான நிலைநிற்பது பெருமைக்குரிய விஷயம்தான்! ஆனால் அதற்கு அவர் கொடுக்கும் விலை கொடுமையான மன வலி! வீட்டாருக்கு மன உளைச்சல்!]]]

நன்றி.. உண்மைதான் ரிஷி.. மன உளைச்சல் சதாசர்வகாலமும் இருப்பதால்தான் இப்படியெல்லாம் தொடர்ந்து எழுத வைக்கிறது..!

உண்மைத்தமிழன் said...

[[[ரிஷி said...

இதற்கு என்னதான் முடிவு? என்பதற்கு மாற்று வழிகளில் விடை தேட விவாதிக்கலாம். எப்போதும் தங்கள் உரிமைக்காக பொதுமக்கள் போராடிக் கொண்டோ, வழக்காடிக் கொண்டோ இருக்க முடியாது. அது சரியான ஜனநாயகமும் அல்ல.]]]

புதிதாக யாராவது குறைந்தபட்ச நேர்மையுடன் மக்கள் பணியாற்ற வந்து வெற்றி பெற்றால் மட்டுமே இந்தக் கழிவுகளைக் குப்பைத் தொட்டியில் வீச முடியும்..!

உண்மைத்தமிழன் said...

[[[Sundar said...

Ganpat, ஆமோதிக்கிறேன்... இந்த இன்றய காந்திகள் நமக்கு விடுதலை வாங்கிக் கொடுக்கும் முன், அவர்கள் தங்களின் 20-வது தலைமுறைக்கும் சேர்த்து சொத்து சேர்த்திருப்பார்கள்..

இந்த பத்திரிக்கைகள், வெறுமனே எழுதிக்கொண்டிருந்து என்ன பிரயோசனம்? யாராவது, நேரிடையாக இந்த கேள்விகளை இந்த அரசியல் வியாதிகளிடம் கேட்கிறார்களா? அவர்கள் தரும் வெத்து அறிக்கைகளை வெளியிட்டு என்ன பிரயோசனம்?

நேர்கானல் அல்லது பத்திரிக்கையாளர் சந்திப்புக்கு போகும்முன், “தலைவரை (அல்லது தலைவியை) சங்கடப்படுத்தாம கேள்வி கேளுங்க” என்று அன்பு (அன்பளிப்புடன்) கோரிக்கை வைக்கிறார்கள். அப்படியே நடக்கிறது.]]]

சுந்தர்.. நூற்றுக்கு நூறு உண்மை. எப்படி அப்படியே உண்மையை தெரிந்து வைத்திருந்து எழுதியிருக்கிறீர்கள்.. நன்றி..!

Sundar said...

ஐய்யோ, நான் உங்களை சந்தேகிக்கவே இல்லையே? எதனால் இந்த கேள்வி?

நான் என்னுடய ஆதங்கத்தை மட்டுமே (உங்களைப் போல்) கொட்டி இருக்கிறேன்.

நீங்கள் கூடுதலாக ஒன்று செய்யலாம். இப்பிடி எழுதிவிட்டு, நேரில் அரசியல்வியாதிகளிடம் கேள்வி கேட்காத பத்திரிக்கைகளையும் (பேர் சொல்லி) ஒரு பிடி பிடிக்கலாம்.

அவர்கள் போடும் பேட்டிகளும் ஒரே வள வள கொழ கொழ...

தாங்கமுடியல!!!

உண்மைத்தமிழனின் உண்மை வாசகன்,
சுண்டர்

Arun Ambie said...

//அண்டப் புளுகன், ஆகாசப் புளுகன் என்றுகூட நாம் இவரைக் கூப்பிடலாம்..!//
முதல்வரைச் சிறுமைப்படுத்தாதீர்கள் உனா தானா! இனிமேல் அண்டம் ஆகாசம் அதற்கும் மேலேயும் புளுகுகிறவர்களைக் கருணாநிதிப் புளுகர் என்று சொல்லலாம். அதுதான் சரி.

Vijay Vasu said...

Good Article. I have been following you off late. I only hope people of Tamilnadu wil become sensible and get rid of this corrupt chief minister.

Ganpat said...

@Arun Ambie said..
//முதல்வரைச் சிறுமைப்படுத்தாதீர்கள் உனா தானா! இனிமேல் அண்டம் ஆகாசம் அதற்கும் மேலேயும் புளுகுகிறவர்களைக் கருணாநிதிப் புளுகர் என்று சொல்லலாம். அதுதான் சரி.//

அதை விட நல்ல யோசனை!
தூய்மைக்கு வெள்ளை
துக்கத்திற்கு கருப்பு
ஆபத்திற்கு சிவப்பு
என்று உள்ளது போல
ஊழலுக்கு ஊதா என்று வைத்துக்கொள்ளலாம்
(ஊதா=ஊழல் தாத்தா)
=அரசாங்க கட்டிடங்கள் அனைத்தும்
ஊதா நிறத்திலேயே வர்ணம் பூசப்படவேண்டும்

MANO நாஞ்சில் மனோ said...

///ஊழல் ராணி : "அவனை நிறுத்தச் சொல்லு நான் நிறுத்தறேன்.."

ஊழல் ராஜா : "அவளை நிறுத்தச் சொல்லு நான் நிறுத்தறேன்.."

சுரணையுள்ள பொதுஜனம் :

"வக்காலி...இப்போ ரெண்டு பேரும் நிறுத்துறீகளா.. இல்லையா..."////

இதுதான் டாப்பு....



R

உண்மைத்தமிழன் said...

[[[Sundar said...

ஐய்யோ, நான் உங்களை சந்தேகிக்கவே இல்லையே? எதனால் இந்த கேள்வி?

நான் என்னுடய ஆதங்கத்தை மட்டுமே (உங்களைப் போல்) கொட்டி இருக்கிறேன்.

நீங்கள் கூடுதலாக ஒன்று செய்யலாம். இப்பிடி எழுதிவிட்டு, நேரில் அரசியல்வியாதிகளிடம் கேள்வி கேட்காத பத்திரிக்கைகளையும் (பேர் சொல்லி) ஒரு பிடி பிடிக்கலாம்.

அவர்கள் போடும் பேட்டிகளும் ஒரே வள வள கொழ கொழ. தாங்க முடியல!!!

உண்மைத்தமிழனின் உண்மை வாசகன்,
சுண்டர்]]]

சுந்தர்..

பெரும்பாலான பத்திரிகைகளெல்லாம் இப்போது ஆளும்கட்சிக்கு ஊதுகுழலலாக மாறிவிட்டார்கள்..! அவர்கள் என்ன செய்தாலும் தங்களுக்கு ஒரு பாதிப்பும் இல்லையென்றாலே போதும் என்கிறஅளவுக்கு வந்துவிட்டார்கள்.. இனி அவர்களை நம்பியும் பயனில்லை என்றே நினைக்கிறேன்..!

உண்மைத்தமிழன் said...

[[[Arun Ambie said...

//அண்டப் புளுகன், ஆகாசப் புளுகன் என்றுகூட நாம் இவரைக் கூப்பிடலாம்..!//

முதல்வரைச் சிறுமைப்படுத்தாதீர்கள் உனாதானா! இனிமேல் அண்டம் ஆகாசம் அதற்கும் மேலேயும் புளுகுகிறவர்களைக் கருணாநிதிப் புளுகர் என்று சொல்லலாம். அதுதான் சரி.]]]

ஓகே.. அப்படியும் கூப்பிட்டுக்கலாம்..! நன்றி அருண்..!

உண்மைத்தமிழன் said...

[[[VJ said...
Good Article. I have been following you off late. I only hope people of Tamilnadu wil become sensible and get rid of this corrupt chief minister.]]]

மக்கள் திருந்தினால் ஒழிய இவர்களை விரட்ட முடியாது.. தேர்தல் சமயத்தில் பணம் வாங்காமல் ஓட்டளித்தால்தான் இந்தத் திருடர்களை வீட்டுக்கு அனுப்ப முடியும்..!

உண்மைத்தமிழன் said...

[[[Ganpat said...

@Arun Ambie said..

//முதல்வரைச் சிறுமைப்படுத்தாதீர்கள் உனா தானா! இனிமேல் அண்டம் ஆகாசம் அதற்கும் மேலேயும் புளுகுகிறவர்களைக் கருணாநிதிப் புளுகர் என்று சொல்லலாம். அதுதான் சரி.//

அதை விட நல்ல யோசனை!
தூய்மைக்கு வெள்ளை
துக்கத்திற்கு கருப்பு
ஆபத்திற்கு சிவப்பு
என்று உள்ளது போல
ஊழலுக்கு ஊதா என்று வைத்துக் கொள்ளலாம்
(ஊதா=ஊழல் தாத்தா)
=அரசாங்க கட்டிடங்கள் அனைத்தும்
ஊதா நிறத்திலேயே வர்ணம் பூசப்பட வேண்டும்.]]]

ஆஹா.. கண்பத் நல்ல கிரியேட்டிவ் ஐடியா.. மகிழ்ந்தேன்..

ஊழல் தாத்தா = ஊதா

உண்மைத்தமிழன் said...

[[[நாஞ்சில் மனோ said...

///ஊழல் ராணி : "அவனை நிறுத்தச் சொல்லு நான் நிறுத்தறேன்.."

ஊழல் ராஜா : "அவளை நிறுத்தச் சொல்லு நான் நிறுத்தறேன்.."

சுரணையுள்ள பொதுஜனம் :

"வக்காலி...இப்போ ரெண்டு பேரும் நிறுத்துறீகளா.. இல்லையா..."////

இதுதான் டாப்பு.... R]]]

சூப்பரப்பூ..!

Thomas Ruban said...

ஊழல் அரசியல்வியாதிகளை துணிச்சலுடன் கண்டிக்கும் உங்களைப் போன்ற நேர்மையான பதிவர்களுக்கு, எங்களது தார்மீக ஆதரவு, எப்போதும் உண்டு.
இதனால் அரசியல்வியாதிகள் கொஞ்சம் பயப்பட்டால் கூட வெற்றி தான்.

பகிர்வுக்கு நன்றி அண்ணே..

Sundar said...

மன்னிக்கனும்... மறுபடியும் நான் என் முதல் கேள்விக்கு வருகிறேன்...

என்னதான் தீர்வு? நேர்மையான ஒரு தலைவரை இவர்கள் இனி வரவே விடமாட்டார்கள். இவர்கள் என்று நான் சொல்வது, அரசியல்வியாதிகள் மட்டும் அல்ல. ருசி கண்ட அரசு அதிகாரிகளும் தான். நேர்மையானவர்கள் வந்தால் நாட்டை வளர்த்துவிடுவார்கள் என்ற காரணம் கிடையாது. தாங்கள் முன்னம் செய்த தவறுகளுக்கு தண்டனையும் கிடைக்கும் என்ற காரணத்தால் மட்டுமே வரவிடமாட்டார்கள்.

மீண்டும் அதே கேள்வியுடன் (என்னதான் தீர்வு?),

சுந்தர்...

உண்மைத்தமிழன் said...

[[[Thomas Ruban said...
ஊழல் அரசியல்வியாதிகளை துணிச்சலுடன் கண்டிக்கும் உங்களைப் போன்ற நேர்மையான பதிவர்களுக்கு, எங்களது தார்மீக ஆதரவு, எப்போதும் உண்டு.
இதனால் அரசியல்வியாதிகள் கொஞ்சம் பயப்பட்டால்கூட வெற்றிதான். பகிர்வுக்கு நன்றி அண்ணே..]]]

நன்றி தாமஸ்.. பயப்படாமல் எழுதுவதான் நாம் நமது நாட்டுக்கும், சக மக்களுக்கும் செய்யும் உதவியும், நன்றியும்..! அதனை நாம் தவறாது செய்ய வேண்டும்..

உங்களுடைய ஊக்கத்திற்கும், பாராட்டுக்கும் மீண்டும் ஒரு நன்றி..!

உண்மைத்தமிழன் said...

[[[Sundar said...

மன்னிக்கனும்... மறுபடியும் நான் என் முதல் கேள்விக்கு வருகிறேன்...

என்னதான் தீர்வு? நேர்மையான ஒரு தலைவரை இவர்கள் இனி வரவே விடமாட்டார்கள். இவர்கள் என்று நான் சொல்வது, அரசியல்வியாதிகள் மட்டும் அல்ல. ருசி கண்ட அரசு அதிகாரிகளும் தான். நேர்மையானவர்கள் வந்தால் நாட்டை வளர்த்துவிடுவார்கள் என்ற காரணம் கிடையாது. தாங்கள் முன்னம் செய்த தவறுகளுக்கு தண்டனையும் கிடைக்கும் என்ற காரணத்தால் மட்டுமே வரவிடமாட்டார்கள்.

மீண்டும் அதே கேள்வியுடன் (என்னதான் தீர்வு?),

சுந்தர்...]]]

தேர்தலில் இவர்களைத் தோற்கடித்தே தீர வேண்டும். வருகின்ற ஆட்சியாளர்கள் இவர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.. இதுதான் தற்போதைக்கு தேவையான தீர்வு..!

ரிஷி said...

///உண்மைத்தமிழன் said...

[[[Sundar said...

மன்னிக்கனும்... மறுபடியும் நான் என் முதல் கேள்விக்கு வருகிறேன்...

என்னதான் தீர்வு? நேர்மையான ஒரு தலைவரை இவர்கள் இனி வரவே விடமாட்டார்கள். இவர்கள் என்று நான் சொல்வது, அரசியல்வியாதிகள் மட்டும் அல்ல. ருசி கண்ட அரசு அதிகாரிகளும் தான். நேர்மையானவர்கள் வந்தால் நாட்டை வளர்த்துவிடுவார்கள் என்ற காரணம் கிடையாது. தாங்கள் முன்னம் செய்த தவறுகளுக்கு தண்டனையும் கிடைக்கும் என்ற காரணத்தால் மட்டுமே வரவிடமாட்டார்கள்.

மீண்டும் அதே கேள்வியுடன் (என்னதான் தீர்வு?),

சுந்தர்...]]]

தேர்தலில் இவர்களைத் தோற்கடித்தே தீர வேண்டும். வருகின்ற ஆட்சியாளர்கள் இவர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.. இதுதான் தற்போதைக்கு தேவையான தீர்வு..!

///

சரவணன்,
தற்போதைக்கு தேவையான தீர்வைக் கொடுத்துட்டீங்க.. சரிதான்! நிரந்தரத் தீர்வு என்னவென்பதை தொலைநோக்குப் பார்வையோடு ஒரு விவாதம் நடத்திப் பார்க்கலாம்!

அதுவரை, வீடு முழுக்க கக்கூஸ் வாடை வருதுன்னா, அத சரிபண்ணாம, செண்ட் அடிச்சு பழகிக்க சொல்றீங்க..! சரி.. பழகிக்குவோம்!!

உண்மைத்தமிழன் said...

[[[ரிஷி said...
சரவணன், தற்போதைக்கு தேவையான தீர்வைக் கொடுத்துட்டீங்க. சரிதான்! நிரந்தரத் தீர்வு என்னவென்பதை தொலைநோக்குப் பார்வையோடு ஒரு விவாதம் நடத்திப் பார்க்கலாம்!
அதுவரை, வீடு முழுக்க கக்கூஸ் வாடை வருதுன்னா, அத சரி பண்ணாம, செண்ட் அடிச்சு பழகிக்க சொல்றீங்க.! சரி. பழகிக்குவோம்!]]]

நிரந்தரத் தீர்வுன்னா யாராவது குண்டு வைச்சு மொத்தமா கொன்னாத்தான். இல்லாம ஒண்ணும் நடக்காது..! விடுங்க ரிஷி..!