தா - தரமான தமிழ்ப் படம்..!

03-12-2010

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

சந்தோஷமாக இருக்கிறது.... தமிழ்ச் சினிமாவுலகின் இந்த வருட இறுதியான காலக்கட்டத்தில் மனதைக் கொள்ளை கொள்ளும் திரைப்படங்கள் வெளி வருவதைப் பார்க்கின்றபோது..!

சமீபக் காலக் கட்டங்களில் சுப்ரமணியபுரம் திரைப்படத்தில் துவங்கியது யதார்த்தவாத சினிமாக்கள். அதை அடியொற்றி ஒரு நகரத்தின் நேட்டிவிட்டியோடு அந்த மண்ணின் மைந்தர்களின் கதையை அந்த மண் வாசனையோடு சொல்லும் போக்கு தமிழ்ச் சினிமாவில் அதிகரித்துள்ளது. அந்த வரிசையில் இதுவும் ஒரு திரைப்படம். அதுவும் வெற்றித் திரைப்படம்தான். அதில் சந்தேகமில்லை.


உயிர் ஊருக்கு உடல் பாருக்கு என்கிற தத்துவத்தை போர்டில் எழுதி வைத்து இளைஞர் நற்பணி மன்றத்தை நடத்தி வரும் இளைஞர்களில் ஒருவரான சூர்யா, வீட்டில் தன் அம்மாவிடமே அதிகம் பேசுவதற்கு கூச்சப்படும் இயல்பானவன்.

அவனது நண்பர்களெல்லாம் ஆளுக்கொரு பக்கமாக காதலையும், காதலிகளையும் தேடிக் கொண்டபோது தான் மட்டும் இரும்படிக்கும் வேலையை எந்திரத்தனமாகச் செய்து வருவதைப் பற்றிக் கவலைப்படாமல் இருப்பவனையும் கவலைப்பட வைத்து விடுகிறாள் நண்பனின் தங்கை.

ஆம்பளைத்தனத்தை பொம்பளைங்கதான் சொல்லணும்.. ஒரு பொண்ணு விரும்பினால்தான் அவன் ஆம்பளை என்கிற வார்த்தையில் தாக்கப்பட்டு, அதுவரையில் திருமணத்தையே வெறுத்தவன் அந்தக் கொள்கையைத் தூக்கியெறிகிறான்.


சோதனையாக அவனுக்குப் பெண் கொடுக்கத் தயாராக ஒருவரும் இருக்க.. அவரது மகள் ஜோதி கல்லூரியில் படித்தவளாகவும், அழகானவளாகவும் இருந்து தொலைய.. அவனறியாமல் அவளை ஆழமாக நேசிக்கத் துவங்குகிறான்..!

முதலில் மறுதலிக்கும் அவள், பின்பு குடும்பக் கட்டுப்பாட்டுக்காக அவன் மீது நெருங்கிப் பழக.. சூர்யாவின் அனுபவம் இல்லாத வாழ்க்கையும், இல்லாத கல்வியறிவும் அவனை ஜோதி மீது வெறி கொள்ள வைக்கிறது..!

ஜோதி மீது அவன் கொண்ட பொஸஸிவ்னஸ் என்று சொல்லப்படும் அதீத உரிமையால் அவன் எடுத்த முடிவால் ஜோதி பாதிக்கப்பட்டு நிற்க..! அடுத்தது என்ன என்று நுனி சீட்டுக்கு கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறார் இயக்குநர்..!

முதல் பாராட்டு இயக்குநருக்கு.. பெரிய ஹீரோ இல்லை. பெரிய ஹீரோயின் இல்லை.. படத்தி்ன் பிஸினஸுக்கு ஆவுற விஷயங்கள் எதுவுமே படத்தில் இல்லை. ஆனால் கதை உள்ளது.. இயக்கம் உள்ளது..

தனது குரு சமுத்திரக்கனியிடம் பல ஆண்டுகளாக சீரியல்கள் முதல் சினிமாவரையிலும் உதவியாளராகப் பணியாற்றிய அனுபவம் இயக்குநர் சூரியபிரபாகருக்கு கை கொடுத்துள்ளது..

ஹீரோவாக நடித்திருக்கும் ஹரியின் கேரக்டர் ஸ்கெட்ச்.. இதுவரையில் எந்தத் தமிழ்ப் படத்திலும் நீங்கள் பார்த்திருக்காத விஷயம்..! தலையை நிமிர்த்தாமலேயே ஆத்தாளுக்கும், அப்பனுக்கும் பதில் சொல்லும் தன்மை.. பெண்களை ஏறெடுத்துக்கூடப் பார்க்காத, பார்க்க விரும்பாத வித்தியாசமான இளைஞனாகவும் முன் நிறுத்தியிருக்கிறார்.

ஏர்இந்தியாவில் பைலட்டாக வேலை பார்த்து வந்த ஹரி நடிப்பின் மீதான ஆர்வத்தில் பணியை ராஜினாமா செய்துவிட்டு வந்து நடித்திருக்கிறார். குட் ஜாப். நல்ல முடிவுதான்.


கண்ணை மறைக்கும் முடி.. எப்போதும் பதினைந்து நாள் தாடி.. பீடி குடித்து, குடித்து கருவாடாக மாறியிருக்கும் உதடுகள்.. ஒரு மாக்கான் எப்படி இருப்பானோ அதற்கு உதாரணமாக இவரைக் காட்டியிருக்கிறார்..!

நண்பனின் தங்கையின் சாட்டையடி கேள்வியால் தாக்கப்பட்டு முதல் முறையாக கலங்கி நிற்பதாகட்டும்.. ஜோதியைப் பார்க்க கல்லூரி வாசலுக்கு போய் தயங்கி, தயங்கி நின்று கேள்வி கேட்பதாகட்டும், மருத்துவமனையில் ஹீரோயினுக்கு உதவிகள் செய்வதும், அவளுக்காக அம்மாவை வீட்டுக்கு விரட்டுவதும்  மிக இயல்பாக இருக்கிறது இவரது நடிப்பு. நிச்சயம் ஒரு ரவுண்டு வரலாம்..


இவருடைய நண்பர்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனிக் கதைகள் இருந்தாலும், அது முற்பாதியில் பெரும் நேரத்தைச் சாப்பிட்டுவிட பின்பாதியில் ஹீரோதான் மெயினாக இருக்கிறார். கதையை அதற்குப் பின்பு அலையவிடாமல் கதையின் பின்னால் நம்மை அலைய விட்டிருக்கிறார் இயக்குநர்.

இதற்காக இவர் கையாண்டிருக்கும் கதை சொல்லாடல் முதல் ஷாட்டிலேயே தொடங்கிவிட்டது. ஆர்வத்தைத் தூண்டிவிட்டு என்னதான் நடந்திருக்கிறது இதில் என்கிற வெறியை ஏற்றிவிட்டு அந்த பெப்பை கடைசிவரையில் குறையவிடாமலும் பார்த்துக் கொண்டிருக்கிறார் இயக்குநர்..


நகைச்சுவைக்கென்றே தனி நடிகர்களோ, கதை டிராக்குகளோ தேவையே இல்லாமல் இருப்பவர்களிடத்தில் இருந்தே எடுத்திருக்கிறார். 2-ம் வகுப்பு படித்தவன் அம்சவேணி என்ற பெண்ணை விரும்பி அந்தப் பெண்ணால் ஈர்க்கப்பட்டு தினம்தோறும் ஒரு மாற்றமாக தன்னை உருமாற்றிக் கொண்டு வந்து நிற்பது செம கலகலப்பு.. “அம்சவேணி சொன்னா..” என்று சொல்லும்போதே கை தட்டத் தோன்றுகிறது..! கதையாடலின் முக்கிய அம்சமே இதுதான்.. சொல்லும்விதத்தில் ஜெயித்திருக்கிறார் இயக்குநர்.

இன்னொருவர் சிகப்பு ரோஜாக்கள் கமல் ஸ்டைலில் 40 வயதாகியும் திருமணமாகாதவனாக இன்னும் பெண் தேடுபவனாக காட்டியிருக்கும் விதமும் ரசிக்கக் கூடியது..! இதில் தண்ணி பார்ட்டிக்காக ஒருவன்.. போட்டோ எடுக்க வரும் பெண்களை அவர்கள் விரும்பினால் அணைக்கவும் தயங்காத ஒருவன் என்று எல்லாம் களவாணிகள்தான் என்பதைச் சொல்லாமல் சொல்லியிருக்கிறார்..!


 
இதில் யார் மீதும் தவறு, சரி என்பதையெல்லாம் திணிக்காமல் திரைக்கதையை அமைத்திருப்பது பாராட்டுக்குரியது.. ரேஷன் கடைக்குப் போயிட்டு வாடா என்று சொல்லும் அம்மாவிடம் முடியாது என்று சொல்லும் ஹீரோ பின்னாளில் திருமணம் முடிவானவுடன் பொறுப்பானவனாக மாறி, தனது கல்யாணத்துக்காக எந்தச் சமரசமும் செய்து கொள்ளத் தயாராக இருக்கும் அவனது மனநிலையை காட்டியிருக்கிறார் இயக்குநர்.

அவனுக்கு இப்போதைக்குத் தேவை கல்யாணம்.. ஏன்னா அவன் ஆம்பளைத்தனமா இருக்கணும்னு நினைக்கிறான். அதை நினைக்கக் கூடிய அளவுக்குத்தான் அவனுக்கு புத்தி இருக்கிறது என்பதை இயக்குநர் சொல்லிவிட்டதால் மேற்கொண்டு அதைப் பற்றியே யோசிக்க தேவையில்லை..

ஊரில் தன்னை லுக் விடும் பெண்ணை கவர் செய்வதற்காக கண்ணே கலைமானே பாட்டை ஹீரோ பாடுகின்ற இடத்தில் செம ரகளை.. அதே வேகத்தில் தன்னைப் பார்த்து அனைவரும் சிரிக்கிறார்கள் என்பதை உணர்ந்த வேகத்தில் பாடலை செம ஸ்பீடாக குத்து ஸ்டைலுக்கு மாற்றிப் பாடுகின்ற வேகத்தில் கை தட்டலும் கிடைத்தது..!

கோவை வட்டாரத்திலேயே முழுக்க முழுக்க படமாக்கப்பட்டுள்ளதால் அந்த வகையான உச்சரிப்புகளும், வார்த்தைகளும் படத்தை சுவாரசியப்படுத்துகின்றன.. ஹீரோ, ஹீரோயின் இருவரின் தாய், தந்தை அவர்களது உறவினர்கள் என்று அத்தனை பேரையும் சினிமாத்தனமே இல்லாத வட்டாரத்து மக்களாக உருமாற்றியிருக்கிறார் இயக்குநர்.


ஹீரோவின் அம்மாவாக நடித்தவர் சாமி.. சாமி.. என்று மகனை பாசத்துடனும், பரிவுடனும் அழைக்கும் பக்கா அம்மாவாகத் தோற்றமளிக்கிறார். சட்டையில் இருந்த காண்டத்தை பார்த்துவிட்டு அவசரம், அவசரமாக மகனுக்கு பெண் பார்க்கச் செல்லும் வேகத்தை அடுத்தடுத்த ஷாட்டுகளில் காட்டினாலும் அது அந்தம்மாவுக்குத் தெரிந்திருக்கிறது என்பதைச் சொல்லாமல் காட்டியமைக்கு இயக்குநருக்கு ஒரு ஷொட்டு..!

ஹீரோயினே படம் துவங்கி ஒரு மணி நேரம் கழித்துதான் அறிமுகமாகிறார். ஆனால் படத்தில் குனிந்த தலை நிமிராமல்தான் அதிக நேரம் காட்சியளிக்கிறார். இதுவே மிக ஆச்சரியம்.. என்னதான் படித்தவளாக இருந்தாலும் அம்மா, அப்பா வார்த்தைக்காக கட்டுப்படுவதும், தன்னை கொச்சிவரை தேடி வரும் ஹீரோவைப் பார்த்து அந்த நேரத்திலும் வெட்கப்பட்டு அவன் மீது மெது, மெதுவாக காதல்வயப்படும் காட்சிகளில் நன்றாகவே நடித்துள்ளார். ஆனால் புதுமுகம் என்கிறார்கள். பெயர் நிஷாவாம்.. வாழ்க..


படத்தின் பாடல்களும், பாடல் காட்சிகளும் புதுமுக இயக்குநருக்கு பெயர் சொல்லும்விதத்தில்தான் உள்ளது.. லோக்கல் தெய்வங்களையும், பழக்க வழக்கங்களையும் கோவிலில் ஆடுகின்ற ஆட்டத்தின் மூலம் வெளிப்படுத்தியுள்ளார்.

குத்துப் பாடல்களைத் திணித்திருக்கக்கூடிய இடங்கள் நிறைய இருந்தும் அதைச் செய்யாமல் விட்டதையும், கிராமத்து மக்களுக்கே உரித்தான வசனங்களைக்கூட பார்த்துப் பார்த்து செதுக்கியிருப்பதையும் பார்க்கும்போது இயக்குநர் மேல் மிகுந்த மரியாதையும், நம்பிக்கையும் ஏற்படுகிறது.

இறுதிக் காட்சியில் இப்படித்தான் இருக்குமோ என்றெல்லாம் யூகிக்க முடியாமல் கொண்டு போய் கடைசியில் வழமையான தற்போதைய சினிமா பார்முலாப்படி முடித்திருப்பது சோகத்தைக் கவ்விவிட்டது..

அதற்கு 2 நிமிடங்கள் முன்பாக காட்டப்படும் தம்பதிகள் போஸோடு நிறுத்தியிருந்தால்கூட நிச்சயம் இப்படம் பேசப்பட்டிருக்கும்தான்.

ஆனாலும் தமிழ்நாட்டு மக்களுக்கு சோகத்தை மனதில் ஏற்றினால்தான் அது நிற்கும். மகிழ்ச்சி என்றால் பத்தோடு, பதினொன்றாக நாடகம்போலாகிவிடும் என்று நினைத்து விட்டார்களோ.. விதிவிலக்காக சமீபத்தில் களவாணி மட்டுமே வந்திருந்தது..!

எப்போதும் பிரிவியூ காட்சியில் பத்திரிகையாளர்கள் படம் முடிந்ததும் கை தட்ட மாட்டார்கள். கஞ்சத்தனம் மிக்கவர்கள். எழுத்தில் மட்டுமே பாராட்டுவார்கள். ஆனால் இந்தப் படத்திற்குக் கிடைத்த கை தட்டலே முதல் பாராட்டு.. நிச்சயம் பத்திரிகையுலகமும், திரையுலகமும் இந்தப் படத்திற்கான பாராட்டைச் சொல்லியே தீர வேண்டும்.

பெரிய ஹீரோ, ஹீரோக்களை வைத்து, வெளிநாடுகளில் ஷூட்டிங் செய்து, ரிச்சான செட்டுகளைப் போட்டு, பெரிய இசையமைப்பாளர்களை இசைக்க வைத்து, படத்தின் பிரமோஷனை பெரிய அளவில் செய்து.. படத்தை பிரம்மாண்டமாக்க முனையும் திரையுலக தயாரிப்பு பிரம்மாக்கள் தயவு செய்து இது போன்ற உண்மையான கதையம்சம் உள்ள மக்களுக்கான படங்களை தயாரித்தால் தமிழ்ச் சினிமாவுலகம் நிச்சயம் சுபிட்சம் பெறும்..!

அவசியம் பார்க்க வேண்டிய திரைப்படம் - தா..!

40 comments:

க ரா said...

அவசியம் பார்க்க வேண்டிய திரைப்படம் - தா..!
---
pathuta pochi.. nandri annachi....

ம.தி.சுதா said...

படம் பார்க்கும் ஆர்வத்தை கூட்டி விட்டீர்கள் ஆரம்ப பத்தியெ பதிவை கவர்ந்த ரசிக்க வைத்து விட்டது...
அருமை...

அன்புச் சகோதரன்...
மதி.சுதா.
வன்னிப்போர்க் களத்தில் பொருட்களின் விலைப்பட்டியல்

எஸ்.கே said...

வித்தியாசமான படம்! நல்ல விமர்சனம்!

a said...

நல்ல விமர்சனம்..........

Unknown said...

நல்ல திரைப்படங்களுக்கு ஆதரவு அளிப்போம் ...

சூனிய விகடன் said...

ஒவ்வொரு பதிவிலும் மனசுக்குள்ள புகுந்து என்னமோ பண்றீங்க சார்...

pichaikaaran said...

எவ்வளவு நேரம் விழித்து இருந்தாலும் ஃபர்ஸ்ட் போச்சே :-(

kanagu said...

nalla vimarsanam anna.. kaNdippaa paarka muyarchikiren.. :)

Ambedkar padam patriya vimarsanam epo na??

மாணவன் said...

//அவசியம் பார்க்க வேண்டிய திரைப்படம் - தா..! //

பார்த்துடுவோம் சார்

விமர்சனம் அருமை...

தொடரட்டும் உங்கள் பணி

அகில் பூங்குன்றன் said...

intha padam ellam inga varathe..... vcd / dvd vara varaikkum wait panna vendiyathtthuthann

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

அண்ணே தா டிக்கெட்ட் தா அண்ணே

உண்மைத்தமிழன் said...

[[[இராமசாமி said...

அவசியம் பார்க்க வேண்டிய திரைப்படம் - தா..!
---
pathuta pochi.. nandri annachi....]]]

அவசியம் பாருங்க இராமசாமி..!

உண்மைத்தமிழன் said...

[[[ம.தி.சுதா said...

படம் பார்க்கும் ஆர்வத்தை கூட்டி விட்டீர்கள் ஆரம்ப பத்தியெ பதிவை கவர்ந்த ரசிக்க வைத்து விட்டது... அருமை...

அன்புச் சகோதரன்...
மதி.சுதா.

வன்னிப் போர்க்களத்தில் பொருட்களின் விலைப் பட்டியல்]]]

அவசியம் பார்க்க வேண்டிய படம்தான் சுதா..!

உண்மைத்தமிழன் said...

[[[எஸ்.கே said...
வித்தியாசமான படம்! நல்ல விமர்சனம்!]]]

பார்த்திட்டீங்களா ஸார்.. நன்றி.. நன்றி..!

உண்மைத்தமிழன் said...

[[[வழிப்போக்கன் - யோகேஷ் said...
நல்ல விமர்சனம்.]]]

யோகேஷ்.. அங்க ரிலீஸ் ஆகலையா..?

உண்மைத்தமிழன் said...

[[[கே.ஆர்.பி.செந்தில் said...
நல்ல திரைப்படங்களுக்கு ஆதரவு அளிப்போம்]]]

கண்டிப்பா.. அப்போதுதான் புதிய படைப்பாளிகள் உருவாகுவார்கள்..!

உண்மைத்தமிழன் said...

[[[சூனிய விகடன் said...
ஒவ்வொரு பதிவிலும் மனசுக்குள்ள புகுந்து என்னமோ பண்றீங்க சார்...]]]

அச்சச்சோ.. இதென்ன புது மாதிரியான பாராட்டு..!? எனிவே நன்றி..!

உண்மைத்தமிழன் said...

[[[பார்வையாளன் said...
எவ்வளவு நேரம் விழித்து இருந்தாலும் ஃபர்ஸ்ட் போச்சே :-(]]]

எப்போ வந்தால் என்ன பார்வையாளன்..? வந்தால் படித்தால் போதாதா..?

உண்மைத்தமிழன் said...

[[[kanagu said...
nalla vimarsanam anna.. kaNdippaa paarka muyarchikiren.. :)
Ambedkar padam patriya vimarsanam epona??]]]

திங்களன்று எழுதுவேன்..!

உண்மைத்தமிழன் said...

[[[மாணவன் said...

//அவசியம் பார்க்க வேண்டிய திரைப்படம் - தா..! //

பார்த்துடுவோம் சார்

விமர்சனம் அருமை...

தொடரட்டும் உங்கள் பணி]]]

அவசியம் பாருங்கள் மாணவன்..!

உண்மைத்தமிழன் said...

[[[அகில் பூங்குன்றன் said...
intha padam ellam inga varathe..... vcd / dvd vara varaikkum wait panna vendiyathtthuthann]]]

அப்படியெந்த ஊர்ல இருக்கீங்கண்ணா..?

உண்மைத்தமிழன் said...

[[[ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
அண்ணே தா டிக்கெட்ட் தா அண்ணே...]]]

தியேட்டர்ல கேளுங்க தம்பி.. நிச்சயமா கொடுப்பாங்க..!

Unknown said...

தரமான தமிழ்ப்படம்னு நீங்க சொன்னா அது சரியாத்தான் இருக்கும். பாத்திடலாம்.

சி.பி.செந்தில்குமார் said...

அண்ணே,விமர்சனம் டாப்.படம் வித்தியாசமாத்தான் இருக்கும் போல,இன்னும் பார்க்கலை

CrazyBugger said...

annae eppidi ungalaala mattum eppidi paathu yaeludha mudiyudhu? ithukku course panningalo..

உண்மைத்தமிழன் said...

[[[தஞ்சாவூரான் said...
தரமான தமிழ்ப் படம்னு நீங்க சொன்னா அது சரியாத்தான் இருக்கும். பாத்திடலாம்.]]]

உங்களது நம்பிக்கை பொய்யாகாது ஸார். அவசியம் பாருங்கள்..!

உண்மைத்தமிழன் said...

[[[சி.பி.செந்தில்குமார் said...
அண்ணே, விமர்சனம் டாப். படம் வித்தியாசமாத்தான் இருக்கும் போல, இன்னும் பார்க்கலை]]]

"போல" இல்ல செந்தில். வித்தியாசமாத்தான் இருக்கு. அவசியம் பார்த்திருங்க..!

shabi said...

makizhchi padam patri entha oru vimarsanamum illaye yean

செங்கோவி said...

நல்ல படங்களைத் தொடர்ந்து அடையாளம் காட்டுவதற்கு நன்றி..இப்போல்லாம் விமர்சனத்தைச் சுருக்கீட்ட மாதிரி தெரியுதே..மந்திரப்புன்னகையின் பாதிப்பாண்ணே?

--செங்கோவி

Romeoboy said...

அண்ணே தரமான படம்ன்னு சொல்லிடீங்க.. ப்ரிவ்யூ ஷோ ஏதாவது ஆரேஞ் பண்ண முடியுமா ??

உண்மைத்தமிழன் said...

[[[Maduraimalli said...
annae eppidi ungalaala mattum eppidi paathu yaeludha mudiyudhu? ithukku course panningalo..]]]

எனது விமர்சனத்தை மட்டுமே படிக்கிறீர்களோ..? என்னைவிடவும் கவர்ச்சியாக நிறைய பேர் எழுதுகிறார்கள். தேடிப் பார்த்துப் படியுங்கள். அதன் பின்பு இந்தக் கேள்வியே அபத்தமாக உங்களுக்கே தெரியும்..!

உண்மைத்தமிழன் said...

[[[shabi said...
makizhchi padam patri entha oru vimarsanamum illaye yean]]]

நிறையவே வந்திருக்கிறதே.. நீங்கள் பார்க்கவில்லையோ..?

உண்மைத்தமிழன் said...

[[[செங்கோவி said...
நல்ல படங்களைத் தொடர்ந்து அடையாளம் காட்டுவதற்கு நன்றி. இப்போல்லாம் விமர்சனத்தைச் சுருக்கீட்ட மாதிரி தெரியுதே. மந்திரப்புன்னகையின் பாதிப்பாண்ணே?

--செங்கோவி]]]

ஒரு சில படங்களுக்கு மட்டுமே சுருக்கமான விமர்சனம்..!

உண்மைத்தமிழன் said...

[[[♥ RomeO ♥ said...
அண்ணே தரமான படம்ன்னு சொல்லிடீங்க.. ப்ரிவ்யூ ஷோ ஏதாவது ஆரேஞ் பண்ண முடியுமா??]]]

கேட்டேன். அவர்களால் முடியாமல் போய்விட்டது..

kanagu said...

இன்றைக்கு தான் பார்த்தேன் அண்ணா.. படம் எனக்கு ரொம்ப பிடிச்சு இருந்துது :) நீங்களும் கேபிள் அண்ணாவும் விமர்சனம் எழுதி இருக்காவிட்டால் நான் இந்த படத்திற்க்கு போயிருக்க மாட்டேன்..

நன்றி அண்ணா :)

உண்மைத்தமிழன் said...

[[[kanagu said...
இன்றைக்குதான் பார்த்தேன் அண்ணா.. படம் எனக்கு ரொம்ப பிடிச்சு இருந்துது:) நீங்களும் கேபிள் அண்ணாவும் விமர்சனம் எழுதி இருக்காவிட்டால் நான் இந்த படத்திற்க்கு போயிருக்க மாட்டேன்..
நன்றி அண்ணா :)]]]

நன்றி கனகு.. எப்படியோ பார்த்தால் சரிதான்..!

Anonymous said...

இன்று காலை 'அம்பேத்கர்' சத்யம் தியேட்டரில் பார்த்தேன். அற்புதமான படம். பேரிடி வசனங்கள். மம்முட்டி அசத்தி விட்டார். இப்படம் குறித்து பதிவு எழுதி உள்ளேன். இதை பற்றி கருத்து சொல்ல உங்களை பணிவுடன் அழைக்கிறேன். சராசரி சினிமா அறிவு கூட இல்லாத பாமரனின் பதிவு பற்றி நீங்கள் சொல்லப்போகும் கருத்துதான் என்னை மேலும் எழுத தூண்டும் அல்லது மீண்டும் பயிற்சி பட்டறைக்கு திரும்பி செல்ல வைக்கும். வார்த்தை நடை, பொருள் உள்ளிற்றவற்றில் குறை இருப்பின் கன்னத்தில் அறையுமாறு உரிமையுடன் கேட்டுகொள்கிறேன். உங்கள் தம்பி சிவா. பதிவின் முகவரி: madrasbhavan.blogspot.com

உண்மைத்தமிழன் said...

[[[சிவகுமார் said...
இன்று காலை 'அம்பேத்கர்' சத்யம் தியேட்டரில் பார்த்தேன். அற்புதமான படம். பேரிடி வசனங்கள். மம்முட்டி அசத்தி விட்டார். இப்படம் குறித்து பதிவு எழுதி உள்ளேன். இதை பற்றி கருத்து சொல்ல உங்களை பணிவுடன் அழைக்கிறேன். சராசரி சினிமா அறிவு கூட இல்லாத பாமரனின் பதிவு பற்றி நீங்கள் சொல்லப்போகும் கருத்துதான் என்னை மேலும் எழுத தூண்டும் அல்லது மீண்டும் பயிற்சி பட்டறைக்கு திரும்பி செல்ல வைக்கும். வார்த்தை நடை, பொருள் உள்ளிற்றவற்றில் குறை இருப்பின் கன்னத்தில் அறையுமாறு உரிமையுடன் கேட்டுகொள்கிறேன். உங்கள் தம்பி சிவா. பதிவின் முகவரி: madrasbhavan.blogspot.com]]]

சிவா, இந்தப் பி்ன்னூட்டத்தை அம்பேத்கர் பதிவில் போட்டிருக்கலாமே.. பொருத்தமாக இருந்திருக்கும்..! சரி விடுங்கள்..! வருகைக்கு நன்றி..!

Arun Ambie said...

இம்புட்டுச் சொல்றீக நல்ல படம்னு. டவுன்லோடு தேடாம, ஒலக டிவியில மொதவாட்டிக்கு காத்துகிட்ருக்காம கொட்டாயிக்கே போயி பாபோம்...

உண்மைத்தமிழன் said...

[[[Arun Ambie said...
இம்புட்டுச் சொல்றீக நல்ல படம்னு. டவுன்லோடு தேடாம, ஒலக டிவியில மொதவாட்டிக்கு காத்துகிட்ருக்காம கொட்டாயிக்கே போயி பாபோம்...]]]

அவசியம் பாருங்க. பார்த்திட்டு வந்து சொல்லுங்கோ..