கமல்ஹாசன் பாராட்டு விழா சர்ச்சை - கேரள நடிகர்களின் தைரியம்..!

25-08-2010

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

“மாமியாருக்கு தொடையில புண்ணாம்.. அடங்கொப்புரானே, மருமகன்தான் ஸ்பெஷலிஸ்ட் டாக்டர்ன்னாங்களாம்..” - அது மாதிரியாயிருச்சு நம்ம உலக நாயகன் கமல்ஹாசனுக்கு.

கமலஹாசனின் நடிப்பு கேரியரின் துவக்கக் காலத்தில், அதாவது அவரது டீன் ஏஜ் பருவத்தில் மலையாளப் படங்களில்தான் அவரது ‘கேரக்டருக்கே' ஏற்றாற்போல் கேரக்டர்கள் கிடைத்தன.

'கன்னியாகுமரி', 'மதனோல்சவம்', 'விருதம்', 'வேளாங்கன்னி மாதா,' 'ஈடா', 'சத்தியவான் சாவித்திரி', 'ஓர் மகள் மரிக்குமோ,' 'டெய்சி', 'சாணக்கியன்' என்று எனக்குத் தெரிந்த லிஸ்ட் குறைவுதான்.. ஆனாலும் ஸ்ரீதேவி, லட்சுமி, சீமா, ஜெயபாரதி, ஷீலா என்று அண்ணனுக்கு ஜோடி கட்டிய நடிகைகள் எல்லாம் பெரிய, பெரிய ஹீரோயின்கள்தான்.


கேரளாவில் வருடந்தோறும் ஓணம் கொண்டாட்டத்தை முன்னிட்டு ஒரு வார காலம் மாநிலம் முழுவதும் விழாக்களை அந்த மாநில அரசே நடத்தும். அதில் ஒரு பகுதியாக மலையாளப் படவுலகத்தின் மூலமாகப் புகழ் பெற்று தமிழ்த் திரையுலகில் இன்னமும் சாதனை படைத்து வரும் நம்ம அண்ணன், உலக நாயகன் கமலஹாசனுக்கு பாராட்டு விழா நடத்த முடிவு செய்தது கேரள அரசு.

இந்த விழாவில் மம்முட்டியும், மோகன்லாலும் கலந்து கொள்வார்கள் என்றும் அறிவித்திருந்தார்கள். இந்த அறிவிப்பு வெளியாகி, ஒரு மாத காலம் கழித்து நிகழ்ச்சி நடைபெறப் போகும் ஐந்து தினங்களுக்கு முன்பாக, கேரள மாநில திரைப்பட நடிகர்கள் சங்கமான ‘அம்மா' அமைப்பின் தலைவரும், நடிகருமான இன்னசென்ட் இதனைக் கண்டித்து ஒரு அறிக்கை வெளியிட்டார்.

“கமலஹாசனைவிட சாதனை செய்தவர்கள் பலர் கேரளாவிலேயே இருக்கிறார்கள். அவர்களையெல்லாம் விட்டுவிட்டு கமல்ஹாசனுக்கு எதற்கு கேரளாவில் பாராட்டு விழா..? நாங்கள் இதனை ஒத்துக் கொள்ளமாட்டோம்.. இந்த விழாவை 'அம்மா' அமைப்பு புறக்கணிக்கிறது.. இதையும் மீறி தனிப்பட்ட முறையில் நடிகர், நடிகைகள் அந்த விழாவில் கலந்து கொண்டால் எங்களுக்கு எந்த ஆட்சேபணையும் இல்லை” என்று சொல்லிவிட்டார்.

இன்னசென்ட் சொன்னதுபோலவே, விழாவுக்கு ஒரு சுமாரான நடிகர்கூட வரவில்லையாம்.. கமல் தற்போது நடித்து வரும் மலையாளப் படத்தின் ஹீரோவான ஜெயராம்கூட வரவில்லை. வாழ்த்துரைப் பட்டியலில் இருந்த மோகன்லாலும், மம்முட்டியும் மரியாதைக்குக்கூட வெளிப்படையாக எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை. ஆனால் ரகசியமாக போனில் “ஸாரி” சொல்லிவிட்டதாக கோடம்பாக்கத்து 'பட்சி'கள் தெரிவிக்கின்றன.

"அம்மா அமைப்பில் இருந்து பெரிய தலைகள் ஒருவராவது வருவார்கள்.. வர வேண்டும்" என்று கேரளாவை ஆள்பவர்கள் மிகப் பிரயத்தனம் செய்தும் ‘அம்மா' அமைப்பின் ஒற்றுமையைச் சிதைக்க முடியவில்லை.

இதனால் கடுப்பான கேரள முதல்வர் அச்சுதானந்தன் அந்த விழாவில் பேசும்போது, “மலையாள நடிகர்கள் விளம்பரக் கலையைத்தான் விரும்புகிறார்கள். உண்மையான கலையை மதிக்கத் தெரியாதவர்களாக இருக்கிறார்கள். இருந்திருந்தால் இன்றைக்கு இங்கே வந்திருப்பார்கள்” என்று தாக்கிவிட்டார்.

இப்படி பேசியது ஒரு மாநிலத்தின் முதலமைச்சர். இதற்காகவெல்லாம் ச்சும்மா இல்லை ‘அம்மா' அமைப்பு.. இன்று அவசரமாகக் கூடிய அதன் நிர்வாகக் குழு கூட்டத்தில் அச்சுதானந்தனை பரேடு எடுத்துப் பேசி முடித்துவிட்டு ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.

அதில் “முதல்வர் அச்சுதானந்தனின் பேச்சு தற்போது கமல்ஹாசனின் ரசிகர்களிடையேயும், தமிழர்களிடையேயும் எங்களை எதிரியாக்கி உள்ளது. நாங்கள் கமல்ஹாசனுக்கு ஒருபோதும் எதிரியல்ல. முதல் மந்திரி தனது பேச்சைக் கடுமையாக்கிக் கொண்டதால் தற்போது தமிழ் ரசிகர்கள் மத்தியில் கொதிப்பான நிலைமை ஏற்பட்டுள்ளது. மலையாள நடிகர்கள் கமல்ஹாசனின் சகோதரர்கள். எதிரிகள் அல்ல. கமல்ஹாசனுக்கு நடத்தப்படும் பாராட்டு விழா குறித்து கேரள அரசு, மலையாள நடிகர்களுடன் கலந்து ஆலோசனை செய்யவில்லை. மேலும் விழாவிற்கும் முறைப்படி அழைப்பு விடுக்கவில்லை. இதனால்தான் புறக்கணிப்பு செய்யப்பட்டது” என்று தெளிவாகத் தெரிவித்துள்ளது.

இதில் எனக்கு இரண்டு விஷயங்கள் பிடித்திருக்கின்றன.

‘அம்மா' அமைப்பு, என்பது மாநிலத்தை ஆளும் அரசின் முடிவை எதிர்த்து, முதலமைச்சரின் பேச்சைக் கண்டிக்கின்ற அளவுக்குத் தைரியமாக குரல் கொடுக்கும் முதுகெலும்புள்ள கலைஞர்கள் சங்கமாக உள்ளது என்பது முதல் விஷயம்.

இரண்டாவது, ஒரு சங்கத்தின் முடிவை அச்சங்கத்தில் உள்ள அத்தனை பேரும் தங்களது சுய விருப்பு, வெறுப்புக்களை ஒதுக்கி வைத்துவிட்டு அதனைப் பின்பற்றுவது.

ஆனால் இங்கே என்ன நடக்கிறது..? யார் ஆட்சிக்கு வந்தாலும், அவர்களுக்கு ஒரு சலாம் போட்டு, குல்லா வைத்து, குத்துப் பாட்டுக்கு நடிகைகளை ஆட வைத்து, அவர் மனம் குளிர வைக்கின்ற அத்தனையையும் செய்கிறார்கள் நமது நடிகர்கள். ஸாரி கலைஞர்கள் என்று சொல்ல என் மனம் வரவில்லை.

ஆட்சியாளர்கள் சினிமாவுலகத்துக்கு நல்லது செய்கிறார்கள் அதனால் வாழ்த்துகிறோம் என்கிறார்கள். வாழ்த்துங்கள் தவறில்லை. அதே சமயம் கண்டிக்கின்ற நேரத்தில் கண்டிக்க வேண்டாமா..?

‘விருமாண்டி' படத்தின் டைட்டிலை மாற்றும்படி டாக்டர் கிருஷ்ணசாமி வெட்டியாக போராட்டம் நடத்தியபோது, அதனை எதிர் நோக்கி கமல் மட்டுமே கோட்டைக்குச் சென்று ஜெயலலிதாவை நேரில் சந்தித்து பாதுகாப்பு கேட்க வேண்டிய நிலைமை இருந்தது. உண்மையில் சட்டம் ஒழுங்கை நிலை நாட்ட வேண்டிய அரசுதான் அன்றைக்கு ஓடோடி வந்திருக்க வேண்டும்.. ஆனால் வரவில்லை. நடிகர்கள் சங்கம் அமைதி காத்தது.

‘பாபா' படத்தின் பெட்டிகளைத் தூக்கிக் கொண்டு ஓடி பாட்டாளி மக்கள் கட்சியினர் ரகளை செய்தபோது ரஜினிக்கு ஆதரவாக அறிக்கை விட்டதோடு சரி.. அந்த விஷயத்தில் நடவடிக்கை எடுக்காமல் கையைக் கட்டி வேடிக்கை பார்த்த காவல்துறையையும், அதன் தலைவரான ஜெயலலிதாவையும் கண்டிக்காமல் விட்டுவிட்டது.

ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் மரணமடைந்த நடிகர் திலகம் சிவாஜிகணேசனுக்கு அரசு மரியாதை வழங்கும்படி எழுத்துப்பூர்வமாக அந்தச் சூழலிலும் எழுதிக் கேட்ட பின்புதான் ஆத்தா மனமிரங்கி அனுமதி தந்தார். அதான் அனுமதி கிடைச்சிருச்சே என்ற நிலையில் நடிகர் சங்கமும் அமைதியானது. ஆனால் உடலை அடக்கம் செய்ய இடம் கேட்டு கிடைக்காததால்தான் பெசன்ட் நகர் மயானத்தில் எரித்தார்கள். இடம் கேட்டதற்கு வந்த பதில் “நாவலர் நெடுஞ்செழியனுக்கே நாங்கள் நினைவாலயம் கட்ட இடம் தேடிக் கொண்டிருக்கிறோம்..” என்று குறிப்பிட்டிருந்தார்கள். இதனைக் கண்டித்திருக்க வேண்டாமா..?

குஷ்பு கற்பு பற்றி பேசியபோது, அவரது வீட்டு முன்பாக விளக்கமாறும், கையுமாக நின்று சில அரசியல் ரவுடிகள் ரவுடித்தனம் செய்தபோது இதே நடிகர் சங்கம் முழு அமைதி காத்தது. போதாக்குறைக்கு ஆளாளுக்கு கற்பு பற்றி லெக்சர் அடித்தது தனிக்கதை..! ஒரு சக நடிகர் வரைமுறை மீறப்பட்டு தாக்கப்படுகிறார் என்கிற போது அவருக்குப் பரிந்து பேசவோ, ஆதரவு தெரிவிக்கவோ, பின்னணியில் அமைதி காக்கும் ஆட்சியாளர்களைக் கண்டிக்கவோ மனமில்லாமல் போய்விட்டது இந்த நடிகர் சங்கத்திற்கு..!

எல்லாவற்றிற்கும் மேலாக மிகச் சமீபத்தில் முரசொலியில் தான் எழுதிய கவிதையில் 'மூன்றாம் தர நடிகை..' 'குலுக்கல் ஆட்டம் ஆடியவர்..' 'ஜிகினா டிரெஸ்ஸில் வந்தவர்..' என்றெல்லாம் நடிகை ஜெயலலிதாவைப் பற்றி கருணாநிதி எழுதிய கவிதையைப் பற்றித் துளியும் கவலைப்படாத இந்த நடிகர் சங்கத்தினர்தான், தினமலர் பத்திரிகை நடிகைகளைப் பற்றி எழுதிய அவதூறு பற்றிச் சிலிர்த்து எழுந்தார்கள்..! 

ஆளுக்கொரு நீதி என்பதிலும்கூட ஆளும் கட்சியினரையோ, முதல்வரையோ குற்றம் குறை சொல்லி எதையும் பேசிவிடக் கூடாது என்பதில் மட்டும் இப்போது வரை உறுதியுடன் இருக்கிறார்கள்.

தமிழகமே அரிதாரம் பூசியவர்களின் மகிமையின் பின்னால் இருப்பதைப் புரிந்து கொண்ட தி.மு.க. அரசு மட்டுமே, சினிமா கலைஞர்களின் பெரிய சங்கங்களில் தங்கள் சார்பான ஆட்களை வைத்து சங்கத்தையே தன் வசம் இழுக்கும் தில்லாலங்கடி வேலையில் ஈடுபட்டு அதில் கிட்டத்தட்ட வெற்றியும் பெற்றுவிட்டது.

நடிகர் சங்கத்தின் செயலாளர் ராதாரவி அ.தி.மு.க.வில் இருந்தாலும் அவரது அம்மா மறைவுக்கு ஜெயலலிதா வராததை காரணம் காட்டியும், ஸ்டாலின வந்ததை நினைத்தும் தாத்தாவிடம் சரண்டராகிவிட்டார். கமலும், ரஜினியும் தலைவர் பதவியை விரும்பாததால், சரத்குமார் தனது கட்சியின் இமேஜிற்காகவும், தனக்காகவும் தலைவர் பதவியைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டிருக்கிறார்.

தயாரிப்பாளர்கள் சங்கத்தில் தி.மு.க.வின் முன்னாள் எம்.எல்.ஏ.வான இராம.நாராயணனே மீண்டும் தலைவராகிவிட்டார். இயக்குநர் சங்கத்தில் பாரதிராஜா தலைவர். அவருக்கான கலைஞர் டிவியின் ஸ்லாட் டைம் உறுதியான பிர்லா சிமெண்ட்டில் கட்டப்பட்டுள்ளது. உடைத்தெறியவே முடியாது. தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர் சம்மேளனமான 'பெப்ஸி'யின் தலைவரான வி.சி.குகநாதன்,  கரை வேஷ்டி கட்டாத உடன்பிறப்பாகவே மாறிவிட்டார். ஆகவே, ஆட்சியாளர்களுக்குக் கவலையில்லாமல் போய்விட்டது..

சமீபத்தில் நடந்த விழாவில் சின்னத்திரை கூட்டமைப்பின் தலைவரான விடுதலை, “நீங்கள்தான் என்றென்றைக்கும் எங்களுக்குத் தலைவர்” என்று ஒத்து ஊதிவிட்டார். பெப்ஸி தலைவர் குகநாதனோ, “அடுத்த முதல்வரும் நீங்கள்தான். கட்டி முடிக்கப்படும் அந்த நகரத்தையும் நீங்கள்தான் திறந்து வைக்கப் போகிறீர்கள். நீங்கள் அங்கு வந்து எங்களோடு தங்குவதற்காக ஒரு வீடே தனியாகக் கட்டப் போகிறோம்..” என்று உறுதியளித்துவிட்டார்.

ஆக மொத்தம்.. ஆளுகின்ற அரசுகளின் அறிவிக்கப்படாத துணை கழக அமைப்புகளாக, கலையுலக சங்கங்களையும் மாற்றிவிட்ட கொடுமைதான் இங்கே நடந்து வருகிறது.  

மலையாளப் படவுலகினர் இந்த அளவுக்காவது தைரியமாக இருக்கிறார்களே.. பரவாயில்லை. உண்மையான கலைஞர்களான அவர்களை நாமும் வாழ்த்துவோம்...!

உங்களுக்காக நம்ம அண்ணன் கமல்ஹாசன் நடித்த 'ஈடா' என்கிற மலையாளப் படத்தின் பாடல் காட்சி இங்கே..


80 comments:

பாலா said...

//“கமலஹாசனைவிட சாதனை செய்தவர்கள் பலர் கேரளாவிலேயே இருக்கிறார்கள். அவர்களையெல்லாம் விட்டுவிட்டு கமல்ஹாசனுக்கு எதற்கு கேரளாவில் பாராட்டு விழா..?
////


////கமல்ஹாசனுக்கு நடத்தப்படும் பாராட்டு விழா குறித்து கேரள அரசு, மலையாள நடிகர்களுடன் கலந்து ஆலோசனை செய்யவில்லை. மேலும் விழாவிற்கும் முறைப்படி அழைப்பு விடுக்கவில்லை
///


என்னண்ணே.. இது??? இப்படி மாறி மாறி பேசியிருக்காங்க. அதை விட்டுட்டு... வேற எதையோ பேசறீங்களே????

நசரேயன் said...

நீங்க சொன்னா சரிதான்

உண்மைத்தமிழன் said...

[[[ஹாலிவுட் பாலா said...

//“கமலஹாசனைவிட சாதனை செய்தவர்கள் பலர் கேரளாவிலேயே இருக்கிறார்கள். அவர்களையெல்லாம் விட்டுவிட்டு கமல்ஹாசனுக்கு எதற்கு கேரளாவில் பாராட்டு விழா..?////

////கமல்ஹாசனுக்கு நடத்தப்படும் பாராட்டு விழா குறித்து கேரள அரசு, மலையாள நடிகர்களுடன் கலந்து ஆலோசனை செய்யவில்லை. மேலும் விழாவிற்கும் முறைப்படி அழைப்பு விடுக்கவில்லை//

என்னண்ணே.. இது??? இப்படி மாறி மாறி பேசியிருக்காங்க. அதை விட்டுட்டு... வேற எதையோ பேசறீங்களே????

எப்போதும் முதல் பின்னூட்டமிட்டு எனக்கு உரமிட்டு, நம்பிக்கையூட்டும் அன்பு பாலாவுக்கு எனது நன்றி கலந்த ஒரு "இச்"..!

நானும் விசாரித்தேன். போறவங்க போய்க்கலாம் என்று அம்மா பெர்மிஷன் கொடுத்த பின்பு அவர்கள் கூடிப் பேசியபோது இது போன்ற கருத்துக்களை நடிகர் சங்க உறுப்பினர்கள் சொன்னார்களாம். அதனால் அதனை குறிப்பிட்டிருக்கிறார் இன்னசென்ட்..!

மேலும் விழாவுக்கு வரும்படியான அழைப்புக்கள் ஒட்டு மொத்தமாக சங்கத்திற்கு அனுப்பப்பட்டு நீங்களே இஷ்யூ செஞ்சிருங்கன்னு சொன்னாங்களாம்..

அதுனால இன்னும் கொஞ்சம் கோவம்.. நியாயம்தானே..!

உண்மைத்தமிழன் said...

[[[நசரேயன் said...
நீங்க சொன்னா சரிதான்.]]]

வந்துட்டீங்களாண்ணே.. ரொம்ப நன்றிண்ணே உங்களுடைய ஊக்கத்திற்கு..!

sriram said...

உ.த அண்ணே..
ஹீரோயினிக்கு ஹஸ்பண்ட் ஆவுறதுக்கு ஐடியா சொன்னேன் - அதத்தான் கேக்கல. இப்போ ஒண்ணு சொல்றேன் கேளுங்க.

உடனே ஆக்‌ஷன் ஹீரோ ஆகி பஞ்ச் டயலாக் பேசி 2011ல முதல்வர் ஆகிடுங்க, கூடவே நடிகர் சங்கத் தலைவராகவும் ஆகிடுங்க. அப்போ நடிகர் சங்கத் தலைவர் முதல்வரைப் புகழ்ந்து பேச முடியாது. எப்பூடி??

என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்

butterfly Surya said...

கண்டிக்கின்ற நேரத்தில் கண்டிக்க வேண்டாமா..? //////

கார் கண்ணாடிய உடைச்சா நீங்க வந்து மாட்டி தருவீங்களா..??

உண்மைத்தமிழன் said...

[[[sriram said...

உ.த அண்ணே.. ஹீரோயினிக்கு ஹஸ்பண்ட் ஆவுறதுக்கு ஐடியா சொன்னேன் - அதத்தான் கேக்கல. இப்போ ஒண்ணு சொல்றேன் கேளுங்க.

உடனே ஆக்‌ஷன் ஹீரோ ஆகி பஞ்ச் டயலாக் பேசி 2011ல முதல்வர் ஆகிடுங்க, கூடவே நடிகர் சங்கத் தலைவராகவும் ஆகிடுங்க. அப்போ நடிகர் சங்கத் தலைவர் முதல்வரைப் புகழ்ந்து பேச முடியாது. எப்பூடி??

என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்]]]

ம்.. ஐடியா நல்லாத்தான் இருக்கு. மொதல்ல தயாரிப்பாளர் கிடைக்கணுமே..?

கொஞ்சம் கிளம்பி வர்றீங்களா ஸார்..?

sriram said...

//butterfly Surya said...
கார் கண்ணாடிய உடைச்சா நீங்க வந்து மாட்டி தருவீங்களா..??//

சூப்பர் கேள்வி சூர்யா.. பதில் சொல்லுங்கப்பு...

என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்

உண்மைத்தமிழன் said...

[[[butterfly Surya said...

கண்டிக்கின்ற நேரத்தில் கண்டிக்க வேண்டாமா..? //////

கார் கண்ணாடிய உடைச்சா நீங்க வந்து மாட்டி தருவீங்களா..??]]]

நியாயம்தான்.. இதெல்லாம் பார்த்தா கலைஞனா இருக்க முடியாதுங்கண்ணா..!

உண்மைத்தமிழன் said...

[[[sriram said...

//butterfly Surya said...
கார் கண்ணாடிய உடைச்சா நீங்க வந்து மாட்டி தருவீங்களா..??//

சூப்பர் கேள்வி சூர்யா.. பதில் சொல்லுங்கப்பு...

என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்]]]

சொல்லிட்டேண்ணே..!

அடடா.. ஆளைக் கவுக்கிறதுக்கு எம்புட்டு ஆர்வம்..?

sriram said...

//அடடா.. ஆளைக் கவுக்கிறதுக்கு எம்புட்டு ஆர்வம்..?//

இருக்காதா பின்னே?? உ.த அண்ணனைக் கலாய்ப்பதில் ஒரு அலாதி ஆனந்தம்..

என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்

பாலா said...

//எப்போதும் முதல் பின்னூட்டமிட்டு எனக்கு உரமிட்டு, நம்பிக்கையூட்டும் அன்பு பாலாவுக்கு எனது நன்றி கலந்த ஒரு "இச்"..!
///

இதெல்லாம் ஒரு உரமாண்ணே?!! நீங்க மட்டும் ‘உம்’-ன்னு சொல்லுங்க. உஜிலாதேவிக்கு குறிப்பு வரைஞ்ச மாறி, இங்க ஒரு 2700 கமெண்ட்டை போட்டுடலாம்.

உண்மைத்தமிழன் said...

[[[sriram said...

//அடடா.. ஆளைக் கவுக்கிறதுக்கு எம்புட்டு ஆர்வம்..?//

இருக்காதா பின்னே?? உ.த அண்ணனைக் கலாய்ப்பதில் ஒரு அலாதி ஆனந்தம்..

என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்]]]

நடத்துங்க.. நடத்துங்க..!

என்னைக் கலாய்ப்பதில் உங்களுக்குச் சந்தோஷம்னா எனக்கும் அதுல மகிழ்ச்சிதாண்ணே..!

sriram said...

//நீங்க மட்டும் ‘உம்’-ன்னு சொல்லுங்க. உஜிலாதேவிக்கு குறிப்பு வரைஞ்ச மாறி, இங்க ஒரு 2700 கமெண்ட்டை போட்டுடலாம்//

பாலா : அடங்க மாட்டியா நீயி??
அண்ணன் பதிவு ஏற்கனவே நாவல் சைஸ்ல இருக்கும், நீ வேற ஆயிரக்கணக்கில பின்னூட்டம் போட்டா பிளாக்கர் சர்வர் தாங்காது மகனே....

என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்

உண்மைத்தமிழன் said...

[[[ஹாலிவுட் பாலா said...
//எப்போதும் முதல் பின்னூட்டமிட்டு எனக்கு உரமிட்டு, நம்பிக்கையூட்டும் அன்பு பாலாவுக்கு எனது நன்றி கலந்த ஒரு "இச்"..!//

இதெல்லாம் ஒரு உரமாண்ணே?!! நீங்க மட்டும் ‘உம்’-ன்னு சொல்லுங்க. உஜிலாதேவிக்கு குறிப்பு வரைஞ்ச மாறி, இங்க ஒரு 2700 கமெண்ட்டை போட்டுடலாம்.]]]

ஐயையோ வேணாம் சாமி.. வர்றதே போதும்.. என்ன இந்த ஓட்டுதான் நமக்கு விழுக மாட்டேங்குது..!

கண்டுக்காம போலாம்னா இத்தனை வருஷமா இங்க எழுதிட்டிருந்தும், ஓட்டு வாங்குற அளவுக்கு எழுத முடியலையேன்னு கொஞ்சம் வருத்தமாவும் இருக்கு..!

ராஜ நடராஜன் said...

//நீங்க சொன்னா சரிதான்//

வள வள இடுகையில் வள வளத்தான் போடுற பின்னூட்டத்துக்கு மூன்றே மூன்று சொற்களா?படிச்சா கருத்து சொல்லணுங்ண்ணா!

கைரளியில் கமலஹாசனுடன் சேச்சிகள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்கிறமாதிரி நேர்காணல் கேட்க நேர்ந்தது.கொடுக்கப்பட்ட நேரத்திற்கும் அதிகமாக சுவாரசியமாக கருத்துப் பரிமாறல் நிகழ்ந்தது.அதில் கமலஹாசன் சொன்ன ஒன்று தமிழ்,மலையாளம்,கன்னடா,தெலுங்கு என்ற எல்லைகளையும் பாகிஸ்தான் என்ற நாடு கூட இருப்பதையும்(கோடுகள் இல்லா உலகம் வேண்டும் என்பதற்கு சொன்ன உதாரணம்)விரும்பவில்லையென்றும் சொன்னார்.இதயம் அகலப்படும் மனிதனுக்கான சிந்தனைகள் இவை.குட்டையிலே ஊறும் சங்கங்களுக்கு மட்டுமே குறுகிய மனப்பான்மைகள்.

தலீவர இடிக்கணுமுன்னா தமிழ்நாட்டுக்குள்ளேயே ஆயிரம் நொள்ளைகள் இருக்கிறது.இன்னாசென்ட் வாங்க துணைக்குன்னு ஏன் கேரளா போய் கூட்டிகிட்டு வர்றீங்க:)

உண்மைத்தமிழன் said...

[[[sriram said...

//நீங்க மட்டும் ‘உம்’-ன்னு சொல்லுங்க. உஜிலாதேவிக்கு குறிப்பு வரைஞ்ச மாறி, இங்க ஒரு 2700 கமெண்ட்டை போட்டுடலாம்//

பாலா : அடங்க மாட்டியா நீயி??
அண்ணன் பதிவு ஏற்கனவே நாவல் சைஸ்ல இருக்கும், நீ வேற ஆயிரக்கணக்கில பின்னூட்டம் போட்டா பிளாக்கர் சர்வர் தாங்காது மகனே....

என்றும் அன்புடன்

பாஸ்டன் ஸ்ரீராம்]]]

ஹா.. ஹா.. ஹா..

அதென்னவோ இதுல ஒரு உண்மை இருக்கு..

என்னோட தளத்தை பேக்கப்பே எடுக்க முடியலை.. அப்படியே பாதியிலேயே நிக்குது..

அதே மாதிரி வேர்ட்பிரஸுக்கு எக்ஸ்போர்ட்டும் செய்ய முடியலை.. சிஸ்டம் ஸ்தம்பிச்சுப் போய் நிக்குது..!

இது எப்படியிருக்கு..?

உண்மைத்தமிழன் said...

[[[ராஜ நடராஜன் said...

தலீவர இடிக்கணுமுன்னா தமிழ்நாட்டுக்குள்ளேயே ஆயிரம் நொள்ளைகள் இருக்கிறது. இன்னாசென்ட் வாங்க துணைக்குன்னு ஏன் கேரளா போய் கூட்டிகிட்டு வர்றீங்க:)]]]

நானும், நீங்களும் இடிக்கிறதுக்கு இன்னசென்ட்டை கூப்பிடலண்ணே..!

நடிகர் சங்கம் கேக்கணுமேன்னுதான் அவரை உதாரணத்துக்கு இழுத்தேன்..!

sriram said...

//ஓட்டு வாங்குற அளவுக்கு எழுத முடியலையேன்னு கொஞ்சம் வருத்தமாவும் இருக்கு..!//

அண்ணே , நீங்களுமா?? தமிழ்மண ஓட்டுகள்னால பத்து பைசா பிரயோசனம் இருக்கா? பாலாவெல்லாம் திரட்டியில இணைக்காமலே எழுதலயா?
படிக்க, ரசிக்க நாங்க இருக்கோம், எழுதுங்கண்ணே. இந்த ஓட்டு கருமாந்திரத்தை எடுத்துத் தொலைத்தால் பதிவுலகம் உருப்படும்

என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்

உண்மைத்தமிழன் said...

[[[sriram said...

//ஓட்டு வாங்குற அளவுக்கு எழுத முடியலையேன்னு கொஞ்சம் வருத்தமாவும் இருக்கு..!//

அண்ணே , நீங்களுமா?? தமிழ்மண ஓட்டுகள்னால பத்து பைசா பிரயோசனம் இருக்கா? பாலாவெல்லாம் திரட்டியில இணைக்காமலே எழுதலயா?
படிக்க, ரசிக்க நாங்க இருக்கோம், எழுதுங்கண்ணே. இந்த ஓட்டு கருமாந்திரத்தை எடுத்துத் தொலைத்தால் பதிவுலகம் உருப்படும்

என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்]]]

ஓட்டு என்னும் சிஸ்டம் இருக்கிறவரைக்கும் அதைப் பயன்படுத்திக்கலாம்னு நினைக்கிறேன்..!

ஏன்னா.. அப்பத்தான் என்னோட எழுத்து சில நூறு பேர்கிட்டயாச்சும் போய்ச் சேர முடியும்..

எழுதி, எழுதி நானே படிச்சுக்கிட்டா நல்லாவா இருக்கும்..

உங்களை மாதிரியே இன்னும் சில நூறு பேரு இருக்காங்க.. ஆனால் இன்னும் நிறைய நூறு பேர்கிட்ட போகணும்னு விரும்புறேன்.. அவ்வளவுதான்..!

இதுனால பத்து பைசா பிரயோசனமில்லைன்றது எனக்கும் தெரியும்.. ஆனால் மனத் திருப்தின்னு ஒண்ணு இருக்கே..!

sriram said...

//என்னோட தளத்தை பேக்கப்பே எடுக்க முடியலை.. அப்படியே பாதியிலேயே நிக்குது.. //

ஊருக்கு வரும்போது 2 டெராபைட் ஹார்ட் டிஸ்க் நாலு வாங்கி வர்றேன் - ரொப்பிடுங்க

என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்

பாலா said...

ஆமாண்ணே... இந்த ஓட்டுப் பெட்டி கருமத்தை எடுத்துத் தொலைங்கண்ணே.

மாங்கு மாங்குன்னு 4-5 மணிநேரம் தட்டியிருப்போம். அதுக்கு நாலு வோட்டு விழும். அதுல ஒன்னு நாமளே போட்டது.

பார்த்தா.. எழுதற ஆர்வமே கம்மியாகிடுது. இப்பல்லாம்.. ஹாயா இருக்கேன். படிச்சா படிங்க. இல்லின்னா.. சூப்பர், அட்டகாசம், கலக்கல்-ன்னு கமெண்ட் போட்டுட்டு போங்கன்னு..

...ஒரு ஞானி மாறி யோசிக்கிறேண்ணே!!

sriram said...

//ஒரு ஞானி மாறி யோசிக்கிறேண்ணே!!//

பொய் சொல்றதுக்கும் ஒரு அளவு வேணும் பாலா. ரெண்டு நாளைக்கு முன்னதான் ஸ்பெயின் எஸ்கார்ட் பெஸ்டா பிரேசில் எஸ்கார்ட் பெஸ்டான்னு ஆராய்ச்சி நடத்தின நீயா ஞானி???

என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்

பாலா said...

//பாலா : அடங்க மாட்டியா நீயி??//

ஆபீஸ்ல வேலையிருந்தா.. நான் ஏன் இதையெல்லாம் பண்ணுறேன் ஸ்ரீராம்?! :)

சரி நாமளே எதுனா.. ‘திங்க்’ பண்ணலாம்னா...

ஹி.. ஹி.. ஹி...

பாலா said...

/ஸ்பெயின் எஸ்கார்ட் பெஸ்டா பிரேசில் எஸ்கார்ட் பெஸ்டான்னு ஆராய்ச்சி நடத்தின நீயா ஞானி??? //

இதுமாதிரியான ஆராய்சிகள் நடத்துறவங்கதான் நாளைக்கு பெரிய ஞானியாவாங்களாம். பின்நவீனத்துவ பட்டறையில் சொன்னாங்க.

பாவம் உ.த அண்ணன். அவரை விட்டுடுவோம். :) :) :)

பாலா said...

//உங்களை மாதிரியே இன்னும் சில நூறு பேரு இருக்காங்க.. ஆனால் இன்னும் நிறைய நூறு பேர்கிட்ட போகணும்னு விரும்புறேன்.. அவ்வளவுதான்..! ///

அந்த “இன்னும் நிறைய நூறு பேர்” கணக்கு எப்பண்ணே முடியும்?

இலவசக்கொத்தனார் said...

இதே அம்மா அவங்க ஊர் பழம்பெரும் நடிகரான திலகனுக்குத் தரும் மரியாதையைப் பற்றி ஒண்ணுமே சொல்லலையே!!

(நீங்க ஆசைப்பட்ட மாதிரி பின்னூட்டம் போட்டாச்சு. அதுக்காக இச் எல்லாம் தரப்பிடாது. ஆமாம்!)

pichaikaaran said...

காதல் இளவரசன் கமலஹாசன் ஆரம்பகாலத்தில் நடித்த மலையாள பிட்டு படங்களுக்கு விமர்சனம் எழுதாமல் இருட்டடிப்பு செய்யாமல் புறக்கணிக்கும் அண்ணன் உ . த க்கு இப்போது கோபப்படும் தார்மீக உரிமை இருக்கிறதா ?

pichaikaaran said...

இருட்டடிப்பு செய்யும் உ. த என திருத்தி கொள்ளவும் .

IKrishs said...

கீழ நீங்க கொடுத்த பாட்டை நானும் ஏற்கனவே பாத்துருக்கேன்.. களத்தூர் கண்ணம்மா படத்துல இதே ஷீலா வோட கைய புடிசிகிட்டு குட்டி பையன் கமல் நடந்து வருவார்!

ஜோதிஜி said...

இதெல்லாம் ஒரு உரமாண்ணே?!! நீங்க மட்டும் ‘உம்’-ன்னு சொல்லுங்க. உஜிலாதேவிக்கு குறிப்பு வரைஞ்ச மாறி, இங்க ஒரு 2700 கமெண்ட்டை போட்டுடலாம்.

என்னடா பய புள்ள ரெண்டு மூணு நாளா ரொம்ப சமத்தா இருக்குன்னு நெனைச்சேன்.

பாலா பின்னு பின்னு பின்னு

a said...

//
கிருஷ்குமார் said...
கீழ நீங்க கொடுத்த பாட்டை நானும் ஏற்கனவே பாத்துருக்கேன்.. களத்தூர் கண்ணம்மா படத்துல இதே ஷீலா வோட கைய புடிசிகிட்டு குட்டி பையன் கமல் நடந்து வருவார்!
//
எவளவு டீப்பா பாத்திருக்காங்க.....

ஜோதிஜி said...

தமிழா உண்மையிலேயே இந்த இடுகை ரொம்பவே நல்லா எழுதி இருக்கீங்க. உங்கள் பாணி இல்லாமல் வித்யாசம எழுதியிருக்கீங்க.

மற்றபடி கேரள மக்களிடம், நடிகர்களிடம் நாம் கற்றுக் கொள்ள வேண்டியது நிறையவே இருக்குது.

Unknown said...

அண்ணே,

வாய்ஸ் உடுறது வேற, ரியலா நடக்குறது வேற இல்லையா? கேரளாவுல எந்த கட்சியும் நேரடியா எந்த நடிகரோடவும் மோதல... மேதினா என்ன செய்யும் அம்மா? சும்மான்னு இருக்கும் :) இதுதானே இந்தியா முழுக்க நிலமை. :)

<<<
யார் ஆட்சிக்கு வந்தாலும், அவர்களுக்கு ஒரு சலாம் போட்டு, குல்லா வைத்து, குத்துப் பாட்டுக்கு நடிகைகளை ஆட வைத்து, அவர் மனம் குளிர வைக்கின்ற அத்தனையையும் செய்கிறார்கள் நமது நடிகர்கள். ஸாரி கலைஞர்கள் என்று சொல்ல என் மனம் வரவில்லை.
>>>
இதுதான் சூப்பர்ன்னே... :) சும்மாவா சலாம் போடுறாங்க அதான் இலவச வீடு கிடைச்சுடுச்சுலே.

Thomas Ruban said...

//‘அம்மா' அமைப்பு, என்பது மாநிலத்தை ஆளும் அரசின் முடிவை எதிர்த்து, முதலமைச்சரின் பேச்சைக் கண்டிக்கின்ற அளவுக்குத் தைரியமாக குரல் கொடுக்கும் முதுகெலும்புள்ள கலைஞர்கள் சங்கமாக உள்ளது//

நம்முடைய நடிகர் சங்கம் தான் எந்த கட்சி ஆட்சியை கைப்பற்றிகிறோதோ அவர்கள் பின்னால் கா..கா..கா....
என்று பின்னால் போகிறர்களே..

ஆட்சியாளர்களும் நடிகர் சங்கத்தை கறிவேப்பிலை போல உபோயோகித்துக் கொள்கிறார்கள்.

//ஒரு சங்கத்தின் முடிவை அச்சங்கத்தில் உள்ள அத்தனை பேரும் தங்களது சுய விருப்பு, வெறுப்புக்களை ஒதுக்கி வைத்துவிட்டு அதனைப் பின்பற்றுவது.//

கேரளா மக்கள் மாநிலத்திற்க்கு வெளியே தான் மிகவும் ஒற்றுமையாக இருப்பார்கள் இப்போது மாநிலத்திற்க்கு உள்ளேயும்
ஒற்றுமையாக இருப்பது பாராட்ட வேண்டிய விசியம் அண்ணே..

பகிர்வுக்கு நன்றி அண்ணே...

rasikan said...

நாட்டமை தலைப்ப மாத்து..
அன்புள்ள உண்மைத்தமிழன் ... தமிழர்களை எதிர்ப்பதில் மலையாள நடிகர்கள் எப்போதுமே ஒற்றுமையாகத் தான் இருப்பார்கள். அம்மாவை எதிர்த்து பேசிய திலகனின் நிலைமை என்ன?? திலகனை ஆதரித்துப் பேசிய சுரேஷ்கோபியும் இப்போது சிக்கலில் இருக்கிறார். மலையாள சினிமாவையும், இலக்கியத்தையும் பாராட்டும் தமிழர்களின் தறந்த மனது மலையாளிகளுக்கு இல்லை என்பதே உண்மை.

உண்மைத்தமிழன் said...

[[[sriram said...

//என்னோட தளத்தை பேக்கப்பே எடுக்க முடியலை.. அப்படியே பாதியிலேயே நிக்குது.. //

ஊருக்கு வரும்போது 2 டெராபைட் ஹார்ட் டிஸ்க் நாலு வாங்கி வர்றேன் - ரொப்பிடுங்க

என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்]]]

மிக்க நன்றி ஸ்ரீராம்.. இதை நான் ரொம்ப ரொம்ப ஞாபகத்துலேயே வைச்சிருப்பேன்..! ஜாக்கிரதை..!

உண்மைத்தமிழன் said...

[[[ஹாலிவுட் பாலா said...

ஆமாண்ணே... இந்த ஓட்டுப் பெட்டி கருமத்தை எடுத்துத் தொலைங்கண்ணே. மாங்கு மாங்குன்னு 4-5 மணிநேரம் தட்டியிருப்போம். அதுக்கு நாலு வோட்டு விழும். அதுல ஒன்னு நாமளே போட்டது. பார்த்தா.. எழுதற ஆர்வமே கம்மியாகிடுது. இப்பல்லாம்.. ஹாயா இருக்கேன். படிச்சா படிங்க. இல்லின்னா.. சூப்பர், அட்டகாசம், கலக்கல்-ன்னு கமெண்ட் போட்டுட்டு போங்கன்னு. ஒரு ஞானி மாறி யோசிக்கிறேண்ணே!!]]]

ஆஹா.. என்னவொரு ஞானித்தனம்..!

பாலா எப்படி இவ்ளோ அறிவு..??????

உண்மைத்தமிழன் said...

[[[sriram said...

//ஒரு ஞானி மாறி யோசிக்கிறேண்ணே!!//

பொய் சொல்றதுக்கும் ஒரு அளவு வேணும் பாலா. ரெண்டு நாளைக்கு முன்னதான் ஸ்பெயின் எஸ்கார்ட் பெஸ்டா பிரேசில் எஸ்கார்ட் பெஸ்டான்னு ஆராய்ச்சி நடத்தின நீயா ஞானி???

என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்]]]

இந்த வேலையையும் செய்றாரா..? ம்.. இந்த லோகத்துல யாரையும் நம்பக் கூடாதுன்றது சரியாத்தான் இருக்கு..!

ஆமா ஸ்ரீராம்.. ஸ்பெயின் பெஸ்ட்டா..? பிரேசில் பெஸ்ட்டா..?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

சூப்பர் வீடியோண்ணே, இந்த மாதிரி அப்பப்போ போட்டீங்கன்னா நல்லாருக்கும்!

உண்மைத்தமிழன் said...

[[[ஹாலிவுட் பாலா said...

//பாலா : அடங்க மாட்டியா நீயி??//

ஆபீஸ்ல வேலையிருந்தா.. நான் ஏன் இதையெல்லாம் பண்ணுறேன் ஸ்ரீராம்?! :) சரி நாமளே எதுனா.. ‘திங்க்’ பண்ணலாம்னா... ஹி.. ஹி.. ஹி...]]]

ஏம்ப்பா பாலா.. உன் கம்பெனில இந்தக் கூட்டுற வேலை.. பெருக்குற வேலை இருந்தா எனக்கு வாங்கிக் குடேன்..

உண்மைத்தமிழன் said...

[[[ஹாலிவுட் பாலா said...

/ஸ்பெயின் எஸ்கார்ட் பெஸ்டா பிரேசில் எஸ்கார்ட் பெஸ்டான்னு ஆராய்ச்சி நடத்தின நீயா ஞானி??? //

இது மாதிரியான ஆராய்சிகள் நடத்துறவங்கதான் நாளைக்கு பெரிய ஞானியாவாங்களாம். பின்நவீனத்துவ பட்டறையில் சொன்னாங்க. பாவம் உ.த அண்ணன். அவரை விட்டுடுவோம். :) :) :)]]]

இப்படி பாவம்.. பாவம்னு சொல்லியே என்னை மூலைல தள்ளுறீங்களேப்பா..

நானும் யூத்துதான்யா.. என்னையும் ஆட்டைல சேர்த்துக்குங்கப்பா..!

உண்மைத்தமிழன் said...

[[[ஹாலிவுட் பாலா said...

//உங்களை மாதிரியே இன்னும் சில நூறு பேரு இருக்காங்க.. ஆனால் இன்னும் நிறைய நூறு பேர்கிட்ட போகணும்னு விரும்புறேன்.. அவ்வளவுதான்..! ///

அந்த “இன்னும் நிறைய நூறு பேர்” கணக்கு எப்பண்ணே முடியும்?]]]

அது முடியவே முடியாது.. போய்க்கிட்டேதான் இருக்கும்..!

உண்மைத்தமிழன் said...

[[[இலவசக்கொத்தனார் said...
இதே அம்மா அவங்க ஊர் பழம்பெரும் நடிகரான திலகனுக்குத் தரும் மரியாதையைப் பற்றி ஒண்ணுமே சொல்லலையே!!

(நீங்க ஆசைப்பட்ட மாதிரி பின்னூட்டம் போட்டாச்சு. அதுக்காக இச் எல்லாம் தரப்பிடாது. ஆமாம்!)]]]

கொத்ஸு.. அப்பாடா.. எத்தனை நாளைச்சு..? நீரு என் வீட்டுக்குள்ள கால் வைசசு.. நல்லாயிரும்..!

திலகன் விஷயத்துல நான் நிச்சயமா அம்மா அமைப்பைத்தான் ஆதரிக்கிறேன்..!

சங்கம்னு ஒண்ணு வைச்சு நடத்துறாங்கன்னா அதுக்கு மரியாதை கொடுக்கணும்.. அதுல உறுப்பினரா இருந்தா மெஜாரிட்ட பேருக்கு கட்டுப்படணும்.. தனியாளாத்தான் இருப்பேன்னா தனியாளா போயிரணும்.. உள்ள இருந்துக்கிட்டே எதிர்ப்பேன்னு சொல்லி கிச்சுமுச்சு மூட்டக் கூடாது.!

திலகன் செய்ததும், பேசியதும் சரியில்லை..!

உண்மைத்தமிழன் said...

[[[பார்வையாளன் said...
காதல் இளவரசன் கமலஹாசன் ஆரம்பக் காலத்தில் நடித்த மலையாளப் பிட்டு படங்களுக்கு விமர்சனம் எழுதாமல் இருட்டடிப்பு செய்யாமல் புறக்கணிக்கும் அண்ணன் உ.த.க்கு இப்போது கோபப்படும் தார்மீக உரிமை இருக்கிறதா?]]]

அந்தப் படங்களோட டிவிடிகூட இப்ப கிடைக்க மாட்டேங்குது.. எங்கிட்டுப் போய் பார்க்கிறது..?

உண்மைத்தமிழன் said...

[[[பார்வையாளன் said...
இருட்டடிப்பு செய்யும் உ. த என திருத்தி கொள்ளவும்.]]]

எழுதினதே ரெண்டு வரி.. அதுலேயும் திருத்தமா..?

உண்மைத்தமிழன் said...

[[[கிருஷ்குமார் said...
கீழ நீங்க கொடுத்த பாட்டை நானும் ஏற்கனவே பாத்துருக்கேன்.. களத்தூர் கண்ணம்மா படத்துல இதே ஷீலா வோட கைய புடிசிகிட்டு குட்டி பையன் கமல் நடந்து வருவார்!]]]

அண்ணே.. கீழ இருக்குற வீடியோல திறமை காட்டுறது ஷீலா இல்லண்ணே.. சீமா..!

ஸ்டில்ல போஸ் கொடுத்தது மட்டும்தான் ஷீலா..!

உண்மைத்தமிழன் said...

[[[ஜோதிஜி said...
இதெல்லாம் ஒரு உரமாண்ணே?!! நீங்க மட்டும் ‘உம்’-ன்னு சொல்லுங்க. உஜிலாதேவிக்கு குறிப்பு வரைஞ்ச மாறி, இங்க ஒரு 2700 கமெண்ட்டை போட்டுடலாம்.

என்னடா பய புள்ள ரெண்டு மூணு நாளா ரொம்ப சமத்தா இருக்குன்னு நெனைச்சேன். பாலா பின்னு பின்னு பின்னு]]]

ஜோதிஜி.. பயபுள்ளை எவ்ளோ ஸ்மூத்தா கொலை பண்றேன்னு சொல்லுது பாருங்க.. ம்.. நமக்கெல்லாம் அந்தத் தைரியம் இல்லியே..?

உண்மைத்தமிழன் said...

[[[வழிப்போக்கன் - யோகேஷ் said...

//கிருஷ்குமார் said...
கீழ நீங்க கொடுத்த பாட்டை நானும் ஏற்கனவே பாத்துருக்கேன்.. களத்தூர் கண்ணம்மா படத்துல இதே ஷீலா வோட கைய புடிசிகிட்டு குட்டி பையன் கமல் நடந்து வருவார்!//

எவளவு டீப்பா பாத்திருக்காங்க]]]

ரொம்ப டீப்பு யோகேஷ்..!

உண்மைத்தமிழன் said...

[[[ஜோதிஜி said...

தமிழா உண்மையிலேயே இந்த இடுகை ரொம்பவே நல்லா எழுதி இருக்கீங்க. உங்கள் பாணி இல்லாமல் வித்யாசம எழுதியிருக்கீங்க.

மற்றபடி கேரள மக்களிடம், நடிகர்களிடம் நாம் கற்றுக் கொள்ள வேண்டியது நிறையவே இருக்குது.]]]

நன்றி ஜோதிஜி ஸார்..!

அவர்களிடம் கற்றுக் கொள்ள வேண்டியது கலையை மட்டும் அல்ல.. தைரியத்தையும்கூட..!

உண்மைத்தமிழன் said...

[[[Mãstän ::.. said...

அண்ணே, வாய்ஸ் உடுறது வேற, ரியலா நடக்குறது வேற இல்லையா? கேரளாவுல எந்த கட்சியும் நேரடியா எந்த நடிகரோடவும் மோதல... மேதினா என்ன செய்யும் அம்மா? சும்மான்னு இருக்கும் :) இதுதானே இந்தியா முழுக்க நிலமை. :)<<<

யார் ஆட்சிக்கு வந்தாலும், அவர்களுக்கு ஒரு சலாம் போட்டு, குல்லா வைத்து, குத்துப் பாட்டுக்கு நடிகைகளை ஆட வைத்து, அவர் மனம் குளிர வைக்கின்ற அத்தனையையும் செய்கிறார்கள் நமது நடிகர்கள். ஸாரி கலைஞர்கள் என்று சொல்ல என் மனம் வரவில்லை.>>>

இதுதான் சூப்பர்ன்னே... :) சும்மாவா சலாம் போடுறாங்க அதான் இலவச வீடு கிடைச்சுடுச்சுலே.]]]

அதுக்காகத் தன்மானத்தை அடகு வைக்கலாமா..?

உண்மைத்தமிழன் said...

[[[Thomas Ruban said...

//‘அம்மா' அமைப்பு, என்பது மாநிலத்தை ஆளும் அரசின் முடிவை எதிர்த்து, முதலமைச்சரின் பேச்சைக் கண்டிக்கின்ற அளவுக்குத் தைரியமாக குரல் கொடுக்கும் முதுகெலும்புள்ள கலைஞர்கள் சங்கமாக உள்ளது//

நம்முடைய நடிகர் சங்கம்தான் எந்த கட்சி ஆட்சியை கைப்பற்றிகிறோதோ அவர்கள் பின்னால் கா..கா..கா....
என்று பின்னால் போகிறர்களே..
ஆட்சியாளர்களும் நடிகர் சங்கத்தை கறிவேப்பிலை போல உபோயோகித்துக் கொள்கிறார்கள்.

//ஒரு சங்கத்தின் முடிவை அச்சங்கத்தில் உள்ள அத்தனை பேரும் தங்களது சுய விருப்பு, வெறுப்புக்களை ஒதுக்கி வைத்துவிட்டு அதனைப் பின்பற்றுவது.//

கேரளா மக்கள் மாநிலத்திற்க்கு வெளியேதான் மிகவும் ஒற்றுமையாக இருப்பார்கள் இப்போது மாநிலத்திற்க்கு உள்ளேயும்
ஒற்றுமையாக இருப்பது பாராட்ட வேண்டிய விசியம் அண்ணே..

பகிர்வுக்கு நன்றி அண்ணே.]]]

பின்னூட்டத்திற்கு நன்றி தாமஸ்..!

உண்மைத்தமிழன் said...

[[[rasikan said...

நாட்டமை தலைப்ப மாத்து..

அன்புள்ள உண்மைத் தமிழன் ... தமிழர்களை எதிர்ப்பதில் மலையாள நடிகர்கள் எப்போதுமே ஒற்றுமையாகத்தான் இருப்பார்கள்.

அம்மாவை எதிர்த்து பேசிய திலகனின் நிலைமை என்ன??

திலகனை ஆதரித்துப் பேசிய சுரேஷ்கோபியும் இப்போது சிக்கலில் இருக்கிறார்.

மலையாள சினிமாவையும், இலக்கியத்தையும் பாராட்டும் தமிழர்களின் தறந்த மனது மலையாளிகளுக்கு இல்லை என்பதே உண்மை.]]]

ரசிகன் ஸார்..

நீங்கள் சொல்கின்ற விஷயத்தை வேறொரு இடுகையில் விவாதிப்போம்..!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

அண்ணே அந்த கமல்-ஷீலா வீடியோ ஓடி முடிஞ்ச உடனே, அதுல வேற சில விடியோ லிங்க் காட்டுது அதுல ரெண்டாவது வீடியோவப் பாருங்க, (குறிப்பா 50- 58 வது செகண்ட், நல்லா கண்ணு முழிச்சி பாருங்க), ஜாக்கிரதை, தனியா இருக்கும் போது பாருங்கண்ணே....ஹி..ஹி....!

உண்மைத்தமிழன் said...

[[[பன்னிக்குட்டி ராம்சாமி said...
சூப்பர் வீடியோண்ணே, இந்த மாதிரி அப்பப்போ போட்டீங்கன்னா நல்லாருக்கும்!]]]

போட்டிருவோம்ண்ணே..!

உண்மைத்தமிழன் said...

[[[பன்னிக்குட்டி ராம்சாமி said...

அண்ணே அந்த கமல்-ஷீலா வீடியோ ஓடி முடிஞ்ச உடனே, அதுல வேற சில விடியோ லிங்க் காட்டுது அதுல ரெண்டாவது வீடியோவப் பாருங்க, (குறிப்பா 50- 58 வது செகண்ட், நல்லா கண்ணு முழிச்சி பாருங்க), ஜாக்கிரதை, தனியா இருக்கும் போது பாருங்கண்ணே.... ஹி.. ஹி....!]]]

நான் எப்பவோ பார்த்துப்புட்டேன் ராமசாமி ஸார்..!

அதான் கவனமா நோட் பண்ணி வைச்சிருந்து இன்னிக்கு எடுத்துப் போடுறேன்.. ஹி.. ஹி.. ஹி..

ஜெ. ராம்கி said...

//பாபா' படத்தின் பெட்டிகளைத் தூக்கிக் கொண்டு ஓடி பாட்டாளி மக்கள் கட்சியினர் ரகளை செய்தபோது ரஜினிக்கு ஆதரவாக அறிக்கை விட்டதோடு சரி.. அந்த விஷயத்தில் நடவடிக்கை எடுக்காமல் கையைக் கட்டி வேடிக்கை பார்த்த காவல்துறையையும், அதன் தலைவரான ஜெயலலிதாவையும் கண்டிக்காமல் விட்டுவிட்டது.//

நடிகர் சங்கம் சம்பிரதாயத்துக்காக வெளியிட்ட அறிக்கையைப் போல் இன்னொரு இரண்டு வரி அறிக்கை கூட வெளியிட முடியாத சூழ்நிலைக்கைதியாக இருந்த கருணாநிதியை நினைத்து இன்றும் பரிதாபப்படுகிறேன்.

பைதபை, கமல் பற்றியோ அம்மா பற்றியோ எனக்கு ஒன்றும் தெரியாது. ஆகையால் கருத்து சொல்வது நன்றாக இருக்காது. ஆனால் உங்கள் பதிவு பற்றி சொல்லவேண்டும். கடைசியில் வந்த கிளிப்பிங்ஸை விட ஆரம்ப வரியில் ஆபாசம் ஜாஸ்தி! :-)

பன்னிக்குட்டி ராம்சாமி said...

சரிதான், அண்ணே நீங்க பழம் தின்னு கொட்டை போட்டவரு, எங்களுக்கே தெரியுறது, நீங்க பாக்காமேயா இருந்திருப்பீங்க?

யாசவி said...

சொல்ல வந்த விசயம் நச் தல!

சரி தப்புன்னு சொல்லாம அவங்க தைரியத்தையும் ஒற்றுமையும் சொன்னீங்களே சூப்பர்

Unknown said...

அன்பிற்கினிய உ.தமிழன் அண்ணே..,

விரிவான அலசல்.நன்றாக இருக்கிறது ஆனால் அஜித் பிரச்னையை சேர்க்காமல் விட்டு விட்டீர்களே..

/ /...ஆக மொத்தம்.. ஆளுகின்ற அரசுகளின் அறிவிக்கப்படாத துணை கழக அமைப்புகளாக, கலையுலக சங்கங்களையும் மாற்றிவிட்ட கொடுமைதான் இங்கே நடந்து வருகிறது.

மலையாளப் படவுலகினர் இந்த அளவுக்காவது தைரியமாக இருக்கிறார்களே.. பரவாயில்லை. உண்மையான கலைஞர்களான அவர்களை நாமும் வாழ்த்துவோம்...!.../ /

உண்மைதான். வாழ்த்துவோம்...!

நன்றி..,

மரங்களோடு மனிதம் வளர்ப்போம்..
அன்புடன் ச.ரமேஷ்.

பித்தன் said...

//கண்டுக்காம போலாம்னா இத்தனை வருஷமா இங்க எழுதிட்டிருந்தும், ஓட்டு வாங்குற அளவுக்கு எழுத முடியலையேன்னு கொஞ்சம் வருத்தமாவும் இருக்கு..!//


அண்ணே நீங்களும் ஓட்டுக்கு துட்டுன்னு ஒரு ஸ்கீம் ஆரம்பிச்சா என்ன.....

கும்மி கன ஜோரா நடக்குது ம்ம் நடக்கட்டும் நடக்கட்டும்.....

pichaikaaran said...

" கடைசியில் வந்த கிளிப்பிங்ஸை விட ஆரம்ப வரியில் ஆபாசம் ஜாஸ்தி! :-)


இதுவே ஆபாசம்னா , நாளைக்கு ரிலிஸ் ஆக போற விலை படத்துக்கு அண்ணன் எழுதபோற விமர்சனத்தை படிச்ச்ட்டு என்ன சொல்ல போறீங்களோ.. ஐயோ ஐயோ...

இந்த மாதிரி படம் பார்த்தால், வார்த்தைகள் கொஞ்சம் அப்படி இப்படி வரத்தான் செய்யும்.... இதை போய் பெருசு பண்ணாதீங்க

Jackiesekar said...

அண்ணே முதல்ல நீங்க வருத்தபடக்கூடாதுன்னு ஓட்டு போட்டுட்டேன்... இனிமேதான் படிக்கனும்...

உண்மைத்தமிழன் said...

[[[J. Ramki said...

//பாபா' படத்தின் பெட்டிகளைத் தூக்கிக் கொண்டு ஓடி பாட்டாளி மக்கள் கட்சியினர் ரகளை செய்தபோது ரஜினிக்கு ஆதரவாக அறிக்கை விட்டதோடு சரி.. அந்த விஷயத்தில் நடவடிக்கை எடுக்காமல் கையைக் கட்டி வேடிக்கை பார்த்த காவல்துறையையும், அதன் தலைவரான ஜெயலலிதாவையும் கண்டிக்காமல் விட்டுவிட்டது.//

நடிகர் சங்கம் சம்பிரதாயத்துக்காக வெளியிட்ட அறிக்கையைப் போல் இன்னொரு இரண்டு வரி அறிக்கைகூட வெளியிட முடியாத சூழ்நிலைக் கைதியாக இருந்த கருணாநிதியை நினைத்து இன்றும் பரிதாபப்படுகிறேன்.]]]

ரஜினியே கருணாநிதியை மன்னித்துவிட்ட பிறகு நாமென்ன செய்ய முடியும்..? ஆனால் அந்த நேரத்தில் கருணாநிதி மெளனம் காத்தது பச்சை நட்பின் துரோகம்..!

[[[கடைசியில் வந்த கிளிப்பிங்ஸை விட ஆரம்ப வரியில் ஆபாசம் ஜாஸ்தி! :-)]]]

ராம்கி ஸார்.. அந்த வார்த்தை என்னுடையதல்ல.. படித்தது.. சொன்னவர் தந்தை பெரியார்..!

உண்மைத்தமிழன் said...

[[[பன்னிக்குட்டி ராம்சாமி said...
சரிதான், அண்ணே நீங்க பழம் தின்னு கொட்டை போட்டவரு, எங்களுக்கே தெரியுறது, நீங்க பாக்காமேயா இருந்திருப்பீங்க?]]]

ஹி.. ஹி.. ஹி..!

உண்மைத்தமிழன் said...

[[[யாசவி said...
சொல்ல வந்த விசயம் நச் தல!
சரி தப்புன்னு சொல்லாம அவங்க தைரியத்தையும் ஒற்றுமையும் சொன்னீங்களே சூப்பர்.]]]

அதான நமக்கு முக்கியம்..? வேறென்ன..?

சரி.. தப்பெல்லாம் ஒவ்வொருத்தர் பார்வையிலேயும்தான் இருக்கு..!

உண்மைத்தமிழன் said...

[[[S.ரமேஷ். said...

அன்பிற்கினிய உ.தமிழன் அண்ணே..,

விரிவான அலசல். நன்றாக இருக்கிறது ஆனால் அஜித் பிரச்னையை சேர்க்காமல் விட்டு விட்டீர்களே.]]]

ஸாரி மறந்துவிட்டேன் ரமேஷ்.. ஞாபகப்படுத்தியமைக்கு நன்றிகள்..!

உண்மைத்தமிழன் said...

[[[பித்தன் said...

//கண்டுக்காம போலாம்னா இத்தனை வருஷமா இங்க எழுதிட்டிருந்தும், ஓட்டு வாங்குற அளவுக்கு எழுத முடியலையேன்னு கொஞ்சம் வருத்தமாவும் இருக்கு..!//


அண்ணே நீங்களும் ஓட்டுக்கு துட்டுன்னு ஒரு ஸ்கீம் ஆரம்பிச்சா என்ன? கும்மி கன ஜோரா நடக்குது ம்ம் நடக்கட்டும் நடக்கட்டும்.]]]

அவ்ளோவ் துட்டு என்கிட்ட இருந்தா நான் ஏன் இங்க பிச்சையெடுத்துக்கிட்டிருக்கேன்..?

உண்மைத்தமிழன் said...

[[[பார்வையாளன் said...

"கடைசியில் வந்த கிளிப்பிங்ஸை விட ஆரம்ப வரியில் ஆபாசம் ஜாஸ்தி! :-)

இதுவே ஆபாசம்னா , நாளைக்கு ரிலிஸ் ஆக போற விலை படத்துக்கு அண்ணன் எழுதபோற விமர்சனத்தை படிச்ச்ட்டு என்ன சொல்ல போறீங்களோ.. ஐயோ ஐயோ. இந்த மாதிரி படம் பார்த்தால், வார்த்தைகள் கொஞ்சம் அப்படி இப்படி வரத்தான் செய்யும். இதை போய் பெருசு பண்ணாதீங்க.]]]

சரி.. சரி.. கூல் டவுன்..!

உண்மைத்தமிழன் said...

[[[ஜாக்கி சேகர் said...
அண்ணே முதல்ல நீங்க வருத்தபடக் கூடாதுன்னு ஓட்டு போட்டுட்டேன். இனிமேதான் படிக்கனும்.]]]

சரிங்கோ தம்பி.. படிச்சி முடிச்சி்ட்டு மறுபடியும் எதிர்பார்க்கிறேன்..!

ச.முத்துவேல் said...

போன வருடம் ஓணத்துக்கு ஒட்டுமொத்த ’தமிழக’ அரசுக்கே விடுமுறை அளித்த ’தமிழின’த்தலைவர், ’முத்தமிழ்’க்காவலர், இம்முறை ஏன் விடல?

முழுக்க முழுக்க தமிழர்கள் மட்டுமே பங்குகொண்ட ஒரு தமிழ்ப்படமாவது வருமா? வாய்ப்பிருக்கிறதா?

ஸ்ரீராம். said...

ஆனால் சமீபத்தில் நான் (போன வாரம் என்று ஞாபகம்) ஆசியா நெட் டிவியில் மோகன்லால், மம்மூட்டி, கே எஸ் சேதுமாதவன் ஜெயராம் என்று பலரும் கமலைப் பாராட்டி இதே தலைப்பில் பேசியதைக் கேட்டேனே..நம்மூரு விவேக், சரத், கௌதமி, கமலில் மகள்கள் எல்லாம் இருந்தார்கள் விழாவில்.

IKrishs said...

அண்ணே.. கீழ இருக்குற வீடியோல திறமை காட்டுறது ஷீலா இல்லண்ணே.. சீமா..!

ஸ்டில்ல போஸ் கொடுத்தது மட்டும்தான் ஷீலா..

///


நீங்க கொஞ்சம் குழப்புற மாதிரி இருக்கே ...பாட்டுல சீமா , ஷீலா ரெண்டு பேருமே குளிகிறாங்க சாரி வராங்க .. "பன்னிகுட்டி " ஸ்டைல் ல சொல்லனும்ன கரெக்டா 01:53 ல பாருங்க !...

ஜெ. ராம்கி said...

//அந்த வார்த்தை என்னுடையதல்ல.. படித்தது.. சொன்னவர் தந்தை பெரியார்..///

அடடே.. சூப்பர்! இந்த விஷயத்தில் கழகத்தவர்களோடு யாரும் போட்டியே போடமுடியாது!

உண்மைத்தமிழன் said...

[[[ச.முத்துவேல் said...

போன வருடம் ஓணத்துக்கு ஒட்டு மொத்த ’தமிழக’ அரசுக்கே விடுமுறை அளித்த ’தமிழின’த் தலைவர், ’முத்தமிழ்’க் காவலர், இம்முறை ஏன் விடல?]]]

கம்யூனிஸ்ட்டு தோழர்களுடன் இப்போது சண்டையில் இருக்கிறார்..! அதனால்தான்..!

[[[முழுக்க முழுக்க தமிழர்கள் மட்டுமே பங்கு கொண்ட ஒரு தமிழ்ப் படமாவது வருமா? வாய்ப்பிருக்கிறதா?]]]

நிச்சயமாக இல்லை..!

உண்மைத்தமிழன் said...

[[[ஸ்ரீராம். said...
ஆனால் சமீபத்தில் நான் (போன வாரம் என்று ஞாபகம்) ஆசியா நெட் டிவியில் மோகன்லால், மம்மூட்டி, கே எஸ் சேதுமாதவன் ஜெயராம் என்று பலரும் கமலைப் பாராட்டி இதே தலைப்பில் பேசியதைக் கேட்டேனே.. நம்மூரு விவேக், சரத், கௌதமி, கமலில் மகள்கள் எல்லாம் இருந்தார்கள் விழாவில்.]]]

அது டிவிக்காக தயாரித்த நிகழ்ச்சியாக இருக்கும்..!

உண்மைத்தமிழன் said...

[[[கிருஷ்குமார் said...

அண்ணே.. கீழ இருக்குற வீடியோல திறமை காட்டுறது ஷீலா இல்லண்ணே.. சீமா..!

ஸ்டில்ல போஸ் கொடுத்தது மட்டும்தான் ஷீலா..///


நீங்க கொஞ்சம் குழப்புற மாதிரி இருக்கே. பாட்டுல சீமா, ஷீலா ரெண்டு பேருமே குளிகிறாங்க சாரி வராங்க. "பன்னிகுட்டி " ஸ்டைல்ல சொல்லனும்ன கரெக்டா 01:53 ல பாருங்க !...]]]

மன்னிக்கணும்..

நீங்க சொல்றது உண்மைதான்.. முழுசா பார்க்காம நான்தான் விட்டுட்டேன்..! இப்போ பார்த்து்டடேன்..! நன்றி..!

உண்மைத்தமிழன் said...

[[[J. Ramki said...

//அந்த வார்த்தை என்னுடையதல்ல.. படித்தது.. சொன்னவர் தந்தை பெரியார்..///

அடடே.. சூப்பர்! இந்த விஷயத்தில் கழகத்தவர்களோடு யாரும் போட்டியே போட முடியாது!]]]

ஹி.. ஹி.. ஹி.. இது தமிழர்களின் பாரம்பரியம்.. திராவிட வழித்தோன்றல் கதை..!

abeer ahmed said...

See who owns 1001freefonts.com or any other website:
http://whois.domaintasks.com/1001freefonts.com

abeer ahmed said...

See who owns propertymarketservice.co.uk or any other website.