தலைவர்கள் தப்பிக்க.. தொண்டர்கள் தூக்கில் தொங்கும் கொடூரம்..!

30-08-2010

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

தமிழகமே ஆவலுடன் எதிர்பார்த்த தர்மபுரி பஸ் எரிப்பு வழக்கில் இன்று உச்சநீதிமன்றம் தனது இறுதித் தீர்ப்பை வழங்கிவிட்டது.  தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட 3 அ.தி.மு.க. தொண்டர்களுக்கும் தண்டனையை உறுதி செய்துள்ளது உச்சநீதிமன்றம்.

2 ஆண்டு கால தண்டனையைக் குறைக்கும்படி மற்ற 25 பேர் விடுத்த கோரிக்கையையும் நிராகரித்து அந்தத் தண்டனையும் சரியானதுதான் என்று சொல்லிவிட்டது..!

தலைவன் அடிபட்டால், தொண்டன் பொங்கி எழுவதும், தொண்டன் அடிபட்டால் தலைவன் அறிக்கை விட்டு அமைதியாவதும் தமிழ்நாட்டில் எப்போதும் நடக்கின்ற அரசியல் சூத்திரம்தான்..!

கொடைக்கானல் பிளசண்ட் ஸ்டே ஹோட்டல் ஊழல் தொடர்பான வழக்கில் அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவுக்கு எதிராக சிறை தண்டனை விதிக்கப்பட்டதை தொலைக்காட்சிகள் பிளாஷ் நியூஸில் வெளியிட்டபோது கூடவே தமிழகமெங்கும் ரத்தத்தின் ரத்தங்கள் சாலை மறியல், போராட்டத்தில் குதித்தார்கள் என்றும் பெருமையுடன் சொல்லிக் கொண்டது ஜெயா டிவி.

அன்றைய ஜெயா டிவியில் வந்த ஸ்கிரால் நியூஸை பார்த்தவுடனேயே கட்சித் தலைமையே நம்மை போராடச் சொல்கிறது என்பதைப் புரிந்து கொண்ட தொண்டர் படையினர் அம்மாவின் ஆணையை தமிழகம் முழுவதும் கச்சிதமாகச் செயல்படுத்தினார்கள்.

முடிந்த அளவுக்கு முடிந்த இடங்களிலெல்லாம் சாலை மறியலும், பஸ் மறியலும், பேருந்துகள் தாக்கப்படுவதுமாக சென்ற இவர்களின் அராஜகம் தர்மபுரி, இலக்கியப்பட்டி அருகே நடந்த அந்தக் கொடூரம் பற்றிய செய்தி வெளியானவுடன்தான் அமைதியானது.

தர்மபுரிக்கு சுற்றுலா வந்த கோவை வேளாண்மைப் பல்கலைக்கழக மாணவிகளின் பேருந்து இலக்கியம்பட்டி என்னும் ஊரின் அருகே அந்தப் பகுதி அ.தி.மு.க.வினரால் தடுத்து நிறுத்தப்பட்டு எரிக்கப்பட்டது.

பேருந்தில் இருந்த மாணவிகள் பேருந்தைவிட்டு இறங்குவதற்கு கொஞ்சமும் வாய்ப்பளிக்காமல் “கொழுத்துங்கடா” என்றெழுந்த ஒற்றை வார்த்தைக்குக் கட்டுப்பட்டு பேருந்தை சுற்றி வளைத்து சொக்கப்பானை கொழுத்தியதில், கோகிலவாணி, காயத்ரி, ஹேமலதா ஆகிய 3 மாணவிகள் உயிரோடு எரிந்து பலியாயினர்.




அது கருணாநிதியின் ஆட்சிக் காலம் என்பதால், ஜெயலலிதா மற்றும் அவர்தம் கட்சியினரின் யோக்கியதையை மக்களிடத்தில் தெரிவிக்க இதனை ஒரு நல்ல வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொண்டது அப்போதைய தி.மு.க. அரசு.

ஆனாலும் கோவை வேளாண்மை பல்கலைக்கழக மாணவர்களும், மாணவிகளும் இந்தக் கொடுமையை எதிர்த்து சாலை மறியல், உண்ணாவிரதப் போராட்டம் என்றெல்லாம் ஆரம்பித்தபோது என்ன காரணத்தினாலோ அவர்கள் மீது தடியடி நடத்தி, மாணவர்களும், மாணவிகளும் கை, கால்களில் கட்டுப் போடுகின்ற அளவுக்கு மிருகத்தனமாக அடித்து உதைத்தது ஏன் என்றுதான் எனக்கு இப்போதுவரையிலும் தெரியவில்லை.

அதுவொரு கிராமப் பகுதி என்பதாலும், பேருந்து கொழுந்துவிட்டு எரிந்த போது அதனை அணைப்பதற்கு அந்தப் பகுதி மக்களும் ஓடோடி வந்துதான் உதவியிருக்கிறார்கள். அந்த மக்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில்தான் போராட்டம் நடத்திய அ.தி.மு.க.வினரை மிக எளிதாக அடையாளம் கண்ட காவல்துறை அவர்களைக் கைது செய்தது.

குற்றம் சுமத்தப்பட்டவர்களில் ஒருவரைத் தவிர மீதி நபர்கள் அனைவருமே இந்தக் குற்றச் செயலில் ஈடுபட்டிருக்கிறார்கள் என்பதை நீதிமன்றம் உறுதிபடச் சொன்னதற்குக் காரணம் அந்தப் பகுதி மக்கள்தான்..!

உள்ளூர் தொண்டர்கள் என்பதால் நி்ச்சயம் அந்தப் பகுதி மக்களுக்கு அவர்களைத் தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை என்பதால் அரசுத் தரப்பு வாதத்தை நீதிமன்றம் அப்படியே ஏற்றுக் கொண்டிருக்கிறது.

இதில் குற்றம் சுமத்தப்பட்டிருப்பவர்களெல்லாம் கொடூரமானவர்களோ.. இதற்கு முன் சீரியஸ் கொலைகளைச் செய்யும் கொலைகாரர்களோ அல்ல.. ஒரு கட்சியின் தொண்டர்கள்.

தங்களது கட்சி விசுவாசத்தைக் காட்டுவதற்காகவும், கட்சியில் தங்களுடைய இருப்பைத் தக்க வைத்துக் கொள்ளவும், பெருமையைடவையும், கட்சித் தலைமையின் கவனத்தைக் கவரவும் அவர்கள் நடத்திய கொடூரம்தான் இது என்பதில் எனக்குச் சந்தேகமில்லை.

இவர்களைக் கண்டிக்கின்ற, தண்டிக்கின்ற அதே சமயம் இந்தத் தூக்கில் போடுகின்ற அளவுக்கான குற்றத்தின் முதல் குற்றவாளி அவர்களுடைய கட்சித் தலைமைதான்.. இவர்கள் வெறும் அம்புகள்தான்.. எய்தவர்கள் கட்சித் தலைமையில் இருந்தவர்களும், இருப்பவர்களும்தான்..!

அவர்கள் வெளிப்படையாகச் சொல்லவில்லையே தவிர.. அன்றைய தினம் அத்தனை மாவட்டச் செயலாளர்களுக்கும், நகரச் செயலாளர்களுக்கும் தலைமையிடத்தில் இருந்துதான் போராட்டம் நடத்தும்படி ஆணை வந்துள்ளது.

ஆனால் விசுவாசமிக்க இந்தத் தொண்டர்கள் தங்களது தலைமையைக் கடைசிவரையில் காட்டிக் கொடுக்காத காரணத்தினால்தான் அடுத்து கொடுநாடு எஸ்டேட்டுக்கு போய் ஓய்வெடுப்பதா அல்லது சிறுதாவூர் அரண்மனைக்குச் சென்று ஓய்வெடுப்பதா என்று இவர்களது அரசியார் ரகசிய ஆலோசனை செய்து வருகிறார்.

இந்தக் குற்றச்சாட்டினாலும், தீர்ப்பினாலும் ஏதோ அ.தி.மு.க. கட்சி மட்டுமே வன்முறையில் ஈடுபடும் கட்சி எனவும் மற்றைய கட்சிகள் எல்லாம் சாந்தமான குணமுடையவை என்றும் நாம் நம்பிவிடக் கூடாது..

இவர்களையும் தாண்டிய வன்முறையை எனக்கு நினைவு தெரிந்த நாளில் இருந்தே செய்து வந்தது தி.மு.க. அதற்கடுத்ததுதான் அ.தி.மு.க.

மு.க.அழகிரியை தி.மு.க.வில் இருந்து நீக்குவதாக அக்கட்சியின் தலைவர் அறிவித்தபோது அடுத்த மூன்று நாட்கள் மதுரை நகரமே பற்றி எரிந்ததெல்லாம், அங்கே வாழ்ந்து கொண்டிருந்த என்னைப் போன்றவர்களுக்கெல்லாம் நன்கு தெரியும்..

பல அரசுப் பேருந்துகள் தீயிட்டுக் கொளுத்தப்பட்டன. பட்டப் பகலில் கோரிப்பாளையம் மீனாட்சி கல்லூரி வாசலில் ஒரு அரசுப் பேருந்து தீயிடப்பட்டது. நல்ல வேளையாக அதிலிருந்த பயணிகள் அனைவரும் அதிலிருந்து வெளியேற்றப்பட்டு அதன் பின்புதான் அங்கே கூடியிருந்த அத்தனை பேரின் கண் முன்பாகவே எரிக்கப்பட்டது.

இன்றுவரையில்கூட அந்தக் கலவரங்களின்போது செயல்பட்ட குற்றவாளிகள் யார் என்பதை நமது இந்திய ஸ்காட்லாந்து போலீஸான தமிழ்நாடு காவல்துறை கண்டறியவே இல்லை என்பதும் ஒரு குறிப்பிடத்தக்க விஷயம்..!

பொதுவாகவே எந்த ஒரு அமைப்பாக இருந்தாலும் சரி.. கட்சியாக இருந்தாலும் தலைவன் தாக்கப்பட்டான்.. தலைவனுக்கு அவமரியாதை என்றால் உடனேயே தாக்கப்படுவது பேருந்துகளாகவும், அரசுச் சொத்துக்களாகவும்தான் உள்ளன.

ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் திருமாவளவன் கைது செய்யப்பட்டபோது கடலூர் டெல்டா பகுதிக்குள் ஒரு பேருந்துகூட செல்ல முடியவில்லை. சென்ற பேருந்துகள் அனைத்தும் கரியாக்கப்பட்டு காட்சியளித்தன. வேறு வழியில்லாமல் திருமாவளவனை விடுதலை செய்துதான் அந்தக் கலவரத்தை அடக்கினார்கள்.

பாட்டாளி மக்கள் கட்சியைப் பற்றிச் சொல்லவே தேவையில்லை. அவர்கள் வளர்ந்ததே இது மாதிரியான ஒரு கொடூரச் செயல் மூலமாகத்தான்.. எம்.ஜி.ஆர். ஆட்சிக் காலத்தில் தங்களுடைய செல்வாக்கைக் காட்ட வேண்டி அவர்கள் நடத்திய காட்டு தர்பாரில் வெட்டப்பட்ட மரங்கள் எத்தனை? எத்தனை..? கொளுத்தப்பட்ட பேருந்துகளின் எண்ணிக்கைதான் எவ்வளவு..?

அண்ணா அறிவாலயத் திறப்பு விழாவில் கலந்து கொண்டு ஊர் திரும்பிக் கொண்டிருந்த உடன்பிறப்புக்களை விழுப்புரத்தில் வழிமறித்து தாக்குதல் நடத்தியபோது எரிந்துபோன அரசுப் பேருந்துகள் எத்தனை..? எத்தனை..?

இந்த மாதிரியான சம்பவங்களில் கைது செய்யப்படும் குற்றவாளிகள் ஒரு முறை சிறையில் இருப்பதோடு சரி.. அவ்வளவுதான்.. ஜாமீனில் வெளி வந்துவிட்டால் அந்த வழக்கு அதோ கதிதான்..

அந்தக் கட்சிக்கு தோதான பெரிய கட்சி ஆட்சிக்கு வந்துவிட்டால் உடனேயே அவர்களுடன் இணக்கமாகி தங்களது கட்சிக்காரர்கள் மீதிருக்கும் வன்முறை வழக்குகளை உடனேயே வாபஸ் வாங்கிக் கொள்வார்கள். இப்படித்தான் தி.மு.க., அ.தி.மு.க. பாட்டாளி மக்கள் கட்சி, விடுதலைசிறுத்தைகள் கட்சி என்று அத்தனை பேரும் தப்பித்துக் கொண்டே போகிறார்கள்.

ஆனால் இந்த வழக்கில் மட்டுமே 3 மாணவிகளும் சேர்ந்து பலியான துக்கத்தைக் கொடுத்ததால் தப்பிக்க முடியாமல் மாட்டிக் கொண்டனர்.

இனி என்ன ஆகும்..? முருகன், பேரறிவாளனைப் போல ஜனாதிபதிக்கு கருணை மனுவைக் கொடுத்துவிட்டு எப்போது சாவு வரும் என்று எதிர்பார்த்துக் காத்திருக்கும் கொடூரத்தை, இவர்கள் அனுபவிக்கப் போகிறார்கள்.

இவர்களைவிட இவர்களது குடும்பத்தினர் என்ன மாதிரியான உணர்வுகளை அனுபவிப்பார்கள் என்பது இவர்களை ஏவி விட்ட தலைவர்களுக்குத் தெரியுமா..? தங்களது குடும்பத்தில் சம்பாதிக்கும் நிலையில் இருக்கும் ஒருவரை சிறைக்குள் அனுப்பிவிட்டு என்னதான் உதவிகள் கிடைத்தாலும், அந்த பிரிந்த சூழலும், மனநிலைக்கும் எதனால் ஆறுதல் கொடுக்க முடியும்..?

உச்சநீதிமன்ற நீதிபதிகள் தங்களது தீர்ப்பில், “இந்தப் பேருந்து திட்டமிட்டே எரிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் சமூகத்துக்கு எதிரான காட்டுமிரண்டித்தனமான கொடூர செயல். இது போன்ற செயல்கள் இனி நடக்கவே கூடாது. தங்களது சுய லாபத்துக்காக அப்பாவி மாணவிகளை படுகொலை செய்தது கொடூரமானது. இந்த வழக்கில் ஏற்கனவே இவர்களுக்கு அளிக்கப்பட்ட தூக்கு தண்டனை நியாயமானதே” என்று தெள்ளத் தெளிவாக கூறியுள்ளார்கள்.

எனவே தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டவர்கள் மறுபடியும் உச்சநீதிமன்றத்தில் தீர்ப்பை பரிசீலிக்கும்படியாக மனு அளித்தாலும் இவர்களுக்கான தண்டனை குறைக்கப்படாது என்றே நான் கருதுகிறேன்..!

அரசுகளும், சட்டங்களும் மக்களைத் திருத்த வேண்டுமே ஒழிய மீண்டும், மீண்டும் தவறுகளைச் செய்யத் தூண்டுவதாக இருந்துவிடக் கூடாது..!

நான் தூக்குத் தண்டனையை வன்மையாக எதிர்ப்பவன். எந்தக் குற்றத்திற்கும் தூக்குத் தண்டனை கூடாது என்னும் கொள்கையுடையவன். ஆகவே இந்தத் தண்டனையை நான் வன்மையாக எதிர்க்கிறேன்..

இதற்குப் பதிலாக இவர்களுக்கு ஆயுள் தண்டனை வழங்கலாம். இந்த ஆயுள் தண்டனையும் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் அமைப்பு விதித்துள்ள ஆயுள் தண்டனைக்கான கால கட்டமான எட்டு ஆண்டுகளைக் கடந்துவிடக் கூடாது என்பதையும் சுட்டிக் காட்ட விரும்புகிறேன்.

இந்த வழக்கு பற்றி இதுவரையிலும் வாய் திறக்காத இவர்களுடைய தங்கத் தலைவி ஜெயலலிதா இனிமேலும் வாய் திறப்பார் என்று எனக்கு நம்பிக்கையில்லை.

எவ்வளவுதான் பணத்தினை அந்தக் குடும்பங்களுக்கு அள்ளிக் கொடுத்து சமாதானம் செய்தாலும், அவர்களைக் கொலைப் பலிபீடத்திற்கு அனுப்பி வைத்த ரத்தக் கறை ஜெயலலிதாவின் கையை விட்டுப் போகாது என்பது நிச்சயம்..!


138 comments:

Sugumarje said...

Me the First :)நானும் போட்டில கலந்துக்கறேனே! ஓகேவா சார்? அடுத்தபடி, ஆனால் சற்றும் யோசிக்காத மந்தை உடன்பிறப்புகள் பாவம் ஐயா!

Ahamed irshad said...

தலைப்புதான் யோசிக்க வைக்கிறது..தெளிவான விளக்கம். நல்லவேளை பேருந்தோடு நிறுத்திக்கொண்டார்கள்...

தமிழ் உதயன் said...

அரசியல் வியாபாரம் எல்லை கடந்த பயங்கரவாத்ததைவிட கொடியது என்பதை இந்த நிகழ்வு நமக்கு உணர்த்தியுள்ளது.....

dunga maari said...

"நான் தூக்குத் தண்டனையை வன்மையாக எதிர்ப்பவன். எந்தக் குற்றத்திற்கும் தூக்குத் தண்டனை கூடாது என்னும் கொள்கையுடையவன். ஆகவே இந்தத் தண்டனையை நான் வன்மையாக எதிர்க்கிறேன்.."

வழி மொழிகிறேன்.


"இதற்குப் பதிலாக இவர்களுக்கு ஆயுள் தண்டனை வழங்கலாம். இந்த ஆயுள் தண்டனையும் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் அமைப்பு விதித்துள்ள ஆயுள் தண்டனைக்கான கால கட்டமான எட்டு ஆண்டுகளைக் கடந்துவிடக் கூடாது என்பதையும் சுட்டிக் காட்ட விரும்புகிறேன்."

முரண்படுகிறேன். குறைந்தபட்ச தண்டனை என்பது குறைந்த தண்டனையாக இருக்கக்கூடாது.


gopi g

Ramesh said...

தெளிவான அலசலாக இருக்கிறது உங்கள் பதிவு...ஆனால் உங்கள் கருத்தில் நான் முரண்படுகிறேன்...இந்தளவுக்குக் கொடுமையைச் செய்த அவர்களுக்கு...தலைவரின் தூண்டுதலால் அவர்கள் செய்வதாகவே இருந்தாலும்...உயிரை எடுக்குமளவுக்கு (எரிக்குமளவுக்கு) கண்ணை மறைத்த அவர்களது காட்டுமிராண்டித்தனத்துக்கு தக்க தண்டனைதான் இது....உண்மையில் இந்தியாவில் கொடுக்கப்படும் தண்டனைகள் குறைவே...நீங்கள் சொல்வது போல் 8 ஆண்டுகள் சிறை அனுபவித்தால் இத்தகைய நபர்கள் திருந்தப் போவது இல்லை....சிறை சென்று திரும்பி வந்து திருந்திய நபர்கள் எத்தனை பேர் சொல்லுங்கள் பார்ப்போம்...அங்கு சென்று இன்னும் பல தகிடுதத்தங்களைக் கற்றுக் கொண்டுதான் திரும்பவருகிறார்கள்...நமக்கும் மேல இவ்லோ பேர் இருக்காங்களே நாமெல்லாம் ஒன்னுமே இல்லடான்னு...இன்னும் தைரியமாக தப்பு செய்கிறார்கள்...அதனால் இது போல் நான்கு பேரை தூக்கிலேற்றினால்தான்...அடுத்துவருபவன் பயந்து...எச்சரிக்கையாக...தவறு செய்யும் போது அளவோடு இருப்பான்....(தவறே செய்யாமல் இருக்க வேண்டும் என்று யோசிக்கக்கூட முடியாது இந்த காலத்தில்)

Unknown said...

உங்களது கருத்துக்களை சிறப்பாகக் கூறி இருக்கிறீர்கள்..

கொல்லப்பட்ட மூன்று உயிர்களும் தீயில் கருகியபோது எவ்வளவு துடித்து இருக்கும்.. அந்த வேதனையைக் கண்டிப்பாக அவர்கள் உணர வேண்டும்..

தீர்ப்பு சரியே..

பாலா said...

//நான் தூக்குத் தண்டனையை வன்மையாக எதிர்ப்பவன். எந்தக் குற்றத்திற்கும் தூக்குத் தண்டனை கூடாது என்னும் கொள்கையுடையவன். ஆகவே இந்தத் தண்டனையை நான் வன்மையாக எதிர்க்கிறேன்..
//

நீங்க சொன்னது உண்மைதான்ணே. அவங்களுக்கு தூக்கு தண்டனை கொடுத்தது தப்பு.

அந்த பொண்ணுங்களை எரிச்ச மாறியே, இந்த பண்ணாடைகளையும் இன்னொரு பஸ்ஸில் போட்டு எரிக்கணும்.

அந்த செலவுக்கு நான் வேணும்னா காசு அனுப்பறேன்.

உண்மைத்தமிழன் said...

[[[Sugumarje said...
Me the First :) நானும் போட்டில கலந்துக்கறேனே! ஓகேவா சார்? அடுத்தபடி, ஆனால் சற்றும் யோசிக்காத மந்தை உடன்பிறப்புகள் பாவம் ஐயா!]]]

தங்களுடைய முதல் வருகைக்கும், பின்னூட்டத்திற்கு மிக்க நன்றிகள்..!

உண்மைத்தமிழன் said...

[[[அஹமது இர்ஷாத் said...
தலைப்புதான் யோசிக்க வைக்கிறது. தெளிவான விளக்கம். நல்லவேளை பேருந்தோடு நிறுத்திக் கொண்டார்கள்.]]]

நன்றி அஹமது..!

இந்த ஒரு நிகழ்ச்சியோடு இன்றைக்கு மறியல் போராட்டம் என்றாலே அனைத்துக் கட்சிகளும் கொஞ்சம் யோசிக்கத்தான் செய்கின்றன..!

உண்மைத்தமிழன் said...

[[[தமிழ் உதயன் said...
அரசியல் வியாபாரம் எல்லை கடந்த பயங்கரவாத்ததைவிட கொடியது என்பதை இந்த நிகழ்வு நமக்கு உணர்த்தியுள்ளது.]]]

உண்மைதான் தமிழ் உதயன்..

இந்த எரிப்பைவிட பயங்கரமான கொடுமை சமீபத்தில் பாராளுமன்றத்தில் ஊதிய உயர்வு கேட்டு எம்.பி.க்கள் போராட்டம் நடத்தியதுதான்..!

உண்மைத்தமிழன் said...

[[[gopi g said...

"நான் தூக்குத் தண்டனையை வன்மையாக எதிர்ப்பவன். எந்தக் குற்றத்திற்கும் தூக்குத் தண்டனை கூடாது என்னும் கொள்கையுடையவன். ஆகவே இந்தத் தண்டனையை நான் வன்மையாக எதிர்க்கிறேன்.."

வழி மொழிகிறேன்.

"இதற்குப் பதிலாக இவர்களுக்கு ஆயுள் தண்டனை வழங்கலாம். இந்த ஆயுள் தண்டனையும் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் அமைப்பு விதித்துள்ள ஆயுள் தண்டனைக்கான கால கட்டமான எட்டு ஆண்டுகளைக் கடந்துவிடக் கூடாது என்பதையும் சுட்டிக் காட்ட விரும்புகிறேன்."

முரண்படுகிறேன். குறைந்தபட்ச தண்டனை என்பது குறைந்த தண்டனையாக இருக்கக்கூடாது.

gopi g]]]

கோபி..

ஒரு ஆத்திரத்திலும், அவசரத்திலும் செய்த தவறு திட்டமிட்டு இவர்கள் செய்யும் கொள்ளை, மற்றும் ஊழல் போன்ற குற்றங்களுக்குச் சமமாகாது.

ஊழல் குற்றத்திற்கு சிறைத் தண்டனைக்கே வழியில்லை என்னும்போது இதற்கு எதற்குத் தூக்குத் தண்டனை..?

உண்மைத்தமிழன் said...

[[[பிரியமுடன் ரமேஷ் said...

தெளிவான அலசலாக இருக்கிறது உங்கள் பதிவு.

ஆனால் உங்கள் கருத்தில் நான் முரண்படுகிறேன். இந்தளவுக்குக் கொடுமையைச் செய்த அவர்களுக்கு தலைவரின் தூண்டுதலால் அவர்கள் செய்வதாகவே இருந்தாலும் உயிரை எடுக்குமளவுக்கு (எரிக்குமளவுக்கு) கண்ணை மறைத்த அவர்களது காட்டுமிராண்டித்தனத்துக்கு தக்க தண்டனைதான் இது.]]]

ஆட்களையும் சேர்த்து எரிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் அவர்கள் பஸ்ஸை மறிக்கவில்லை. ஆவேசம் அந்த நேரத்தில் அவர்கள் கண்ணை மறைத்திருக்கிறது எனலாம்.

[[[உண்மையில் இந்தியாவில் கொடுக்கப்படும் தண்டனைகள் குறைவே. நீங்கள் சொல்வது போல் 8 ஆண்டுகள் சிறை அனுபவித்தால் இத்தகைய நபர்கள் திருந்தப் போவது இல்லை. சிறை சென்று திரும்பி வந்து திருந்திய நபர்கள் எத்தனை பேர் சொல்லுங்கள் பார்ப்போம். அங்கு சென்று இன்னும் பல தகிடுதத்தங்களைக் கற்றுக் கொண்டுதான் திரும்ப வருகிறார்கள்.]]]

இவ்வாறு செய்பவர்கள் தொழில் முறையிலான சாதாரண திருடர்கள்தானே தவிர.. இவர்கள் அல்ல.. இவர்கள் மீது இதைத் தவிர வேறு கிரிமினல் வழக்குகள் இல்லை. கட்சி ரீதியான வழக்குகள் மட்டுமே..!

[[[நமக்கும் மேல இவ்லோ பேர் இருக்காங்களே நாமெல்லாம் ஒன்னுமே இல்லடான்னு. இன்னும் தைரியமாக தப்பு செய்கிறார்கள். அதனால் இது போல் நான்கு பேரை தூக்கிலேற்றினால்தான் அடுத்து வருபவன் பயந்து எச்சரிக்கையாக தவறு செய்யும்போது அளவோடு இருப்பான். (தவறே செய்யாமல் இருக்க வேண்டும் என்று யோசிக்கக்கூட முடியாது இந்த காலத்தில்)]]]

இப்படி யோசித்தால் இங்கே ஆள்பவர்கள்கூட வெளியில் இருக்க முடியாது.. முதலில் தூக்கில் போடப்பட வேண்டியது அவர்களைத்தான்..!

தமிழ் செல்வா said...

dinakaran office la erikkappatta 3 perukku enna nyayam kidachirukku?

உண்மைத்தமிழன் said...

[[[பதிவுலகில் பாபு said...

உங்களது கருத்துக்களை சிறப்பாகக் கூறி இருக்கிறீர்கள்..

கொல்லப்பட்ட மூன்று உயிர்களும் தீயில் கருகியபோது எவ்வளவு துடித்து இருக்கும்.. அந்த வேதனையைக் கண்டிப்பாக அவர்கள் உணர வேண்டும்..

தீர்ப்பு சரியே..]]]

அது வேதனை என்பதை உணர இவர்களுக்கு எட்டாண்டு கால சிறைத் தண்டனையே போதுமானது என்பது எனது கருத்து..!

உண்மைத்தமிழன் said...

[[[ஹாலிவுட் பாலா said...

//நான் தூக்குத் தண்டனையை வன்மையாக எதிர்ப்பவன். எந்தக் குற்றத்திற்கும் தூக்குத் தண்டனை கூடாது என்னும் கொள்கையுடையவன். ஆகவே இந்தத் தண்டனையை நான் வன்மையாக எதிர்க்கிறேன்.//

நீங்க சொன்னது உண்மைதான்ணே. அவங்களுக்கு தூக்கு தண்டனை கொடுத்தது தப்பு. அந்த பொண்ணுங்களை எரிச்ச மாறியே, இந்த பண்ணாடைகளையும் இன்னொரு பஸ்ஸில் போட்டு எரிக்கணும். அந்த செலவுக்கு நான் வேணும்னா காசு அனுப்பறேன்.]]]

ம்.. கோபம் வேண்டாம் பாலா.. கொஞ்சம் அவர்கள் நிலையில் இருந்து யோசித்துப் பாருங்கள்..!

எப்போதும் மறியல் என்றவுடன் பஸ்ஸைத் தாக்குகிறார்கள். எரிக்கிறார்கள். ஒவ்வொரு முறையும் பயணிகளுமா மரிக்கிறார்கள். இந்த முறை அவர்களை மீறி நடந்துவிட்டது இது..!

உண்மைத்தமிழன் said...

[[[selvaraj said...
dinakaran office la erikkappatta 3 perukku enna nyayam kidachirukku?]]]

அப்பீல்கூட செய்யாம ஒப்பேத்திட்டாங்களே செல்வராஜ்..! இவர்களுக்கு என்ன தண்டனையைக் கொடுக்கலாம்..?

Selvaraj said...

தம்பி, இன்னும் ஒரு கட்சியை விட்டிட்டீங்களே! அது தாங்க நம்ம இந்திரா காங்கிரஸ். அவர்களும் பேருந்தில் பயணிகளை உயிரோடு வைத்து கொளுத்தியவர்கள்தான். இதோ அவர்கள் செய்த கொடூரத்தை
போலீசின் அடிக்கு நாட்டு மருந்து என்னும் என் பதிவில் காணலாம்.

Ramesh said...

சிறு தவறு செய்பவர்கள் கூட பரவாயில்லைங்க...இந்த மாதிரி பெரிய தவறு செய்பவர்கள் எல்லோருமே...ஆவேசத்தில் கண்ணை மறைப்பதால் செய்பவர்கள்தான்...அதனால் அவர்களுக்கு குறைந்தபட்ச தண்டனை என்று கொடுக்க ஆரம்பித்தால்...இது போல் ஆவேசப்படும் நபர்கள்...தொடர்ந்து நீடித்துக் கொண்டுதான் இருப்பார்கள். தண்டனைகள் கடுமையாக இருந்தால்தான்..ஆவேசப்படும் தருணத்திலும் யோசிக்கத் தோன்றும்..இல்லீங்களா...

ஆர்வா said...

என்ன செய்தாலும் இவர்கள் திருந்தப்போவது இல்லை

தருமி said...

(வழக்கம் போல்) உங்கள் கருத்தினை ஒப்புக் கொள்ள முடியவில்லை.

பிரியமுடன் ரமேஷ், ஹாலிவுட் பாலா இவர்களின் கருத்தே என் கருத்தும்.

பாலா said...

அண்ணே.. கோபம் வேணாம்னு சொல்லுறது ஈஸி.

சின்னப் பையனா இருந்தப்ப இந்திராகாந்தி செத்ததுக்கு, இந்த நாய்ங்க அடிச்ச கல்லு, நாங்க போய்கிட்டு இருந்த பஸ்ஸில் விழுந்துச்சி. என் சித்தி வீட்டுக்கு கட்டு போட்டுகிட்டு வந்தாங்க.

அப்பதான்ணே உயிர் பயமெல்லாம் தெரிஞ்சது.

அதுக்கு அடுத்து, ராஜீவ் காந்தி. திமுக கொடியை பாதி கம்பத்துல இறக்கலைன்னு சொல்லிட்டு ஒரு ஊரே திரண்டு வந்து, இன்னொரு ஊரை அடிச்சது. அங்கயும் நானிருந்தேன். இந்த ரெண்டு இடத்திலும் உயிர் சேதமில்லை. அன்னிக்கு, என் அம்மா-அப்பா அல்லது நானுன்னு யாராவது போயிருந்தா?

இவங்களுக்கு எல்லாம் நீங்க பாவ-புண்ணியம் பார்க்க சொல்லுறீங்க. போங்கண்ணே.

ஆயுள் தண்டனை கொடுத்தா 7-8 வருசத்துல வெளிய வந்துடலாம்னு சொல்லிக் கொடுத்தே கொளுத்த கத்துக் கொடுப்பானுங்க.

தலைவனுக்கு தீக்குளிக்கிற ஒரே நாடு நம்மளுதுதான். ஆயுள்தண்டனையெல்லாம் இவனுங்களுக்கு ஜுஜுபின்ணே.

பாலா said...

//எப்போதும் மறியல் என்றவுடன் பஸ்ஸைத் தாக்குகிறார்கள். எரிக்கிறார்கள். ஒவ்வொரு முறையும் பயணிகளுமா மரிக்கிறார்கள். இந்த முறை அவர்களை மீறி நடந்துவிட்டது இது..!
///

இன்னும் எத்தனை முறை நடந்தா.. தூக்குதண்டனை கொடுக்கலாம்னு நீங்க ஒத்துக்குவீங்கண்ணே?

வெத்துத் துப்பாக்கியை தூக்கினாலே, இந்த ஊர்ல ஆறு ஏழு வருசத்துக்கு உள்ள போடுவாங்க.

அப்படி கடுமையான சட்டம் இருக்கறப்பவே இந்த ஊர்ல எத்தனை துப்பாக்கி சாவுன்னு உங்களுக்குத் தெரியும்.

நம்மூர்ல இருக்கற சட்டதிட்டத்துக்கு, இப்படியே அடிச்சிகிட்டு சாக வேண்டியதுதான். நாமளும் பரிதாபப் பட்டு, ஆத்திரம் கண்ணை மறைச்சிடுச்சின்னு சொல்லிகிட்டு திரிய வேண்டியதுதான்.

டுபாக்கூர் பதிவர் said...

தலைமையின் அங்கீகாரம் கிடைக்க வேண்டும், தலைவியின் அருள்பார்வை பட்டு பதவி, பணம் என செட்டிலாக வேண்டிய ஆர்வக் கோளாறு தூக்குமேடை வரை கொண்டு போய்விட்டது.

priyamudanprabu said...

//நான் தூக்குத் தண்டனையை வன்மையாக எதிர்ப்பவன். எந்தக் குற்றத்திற்கும் தூக்குத் தண்டனை கூடாது என்னும் கொள்கையுடையவன். ஆகவே இந்தத் தண்டனையை நான் வன்மையாக எதிர்க்கிறேன்..
//

நீங்க சொன்னது உண்மைதான்ணே. அவங்களுக்கு தூக்கு தண்டனை கொடுத்தது தப்பு.

அந்த பொண்ணுங்களை எரிச்ச மாறியே, இந்த பண்ணாடைகளையும் இன்னொரு பஸ்ஸில் போட்டு எரிக்கணும்.

அந்த செலவுக்கு நான் வேணும்னா காசு அனுப்பறேன்.

priyamudanprabu said...

anne thappana pathivu

ningalellam nallavanganu kaaddavaa ithu ??


antha ..... payalukalukku ithu kuraivu

seththathu ungka kudumpaththu ala iruntha ippadi antha naaikal mithu karunai kaduvingala ??

Ramesh said...

ஹாலிவுட் பாலா, பிரியமுடன் பிரபு கேட்டதுதான் சரியான கேள்வி...அடுத்தவர் இறப்பென்றால் மட்டும் உணர்ச்சிவசப்பட்டு செய்துவிட்டான், ஆவேசப்பட்டு செய்துவிட்டான்..என்று சப்பைகட்டு கட்டி..அவர்களுக்கு வக்காளத்து வாங்குவது நிச்சயம் சரியானதல்ல...

உண்மைத்தமிழன் said...

[[[Selvaraj said...

தம்பி, இன்னும் ஒரு கட்சியை விட்டிட்டீங்களே! அது தாங்க நம்ம இந்திரா காங்கிரஸ். அவர்களும் பேருந்தில் பயணிகளை உயிரோடு வைத்து கொளுத்தியவர்கள்தான். இதோ அவர்கள் செய்த கொடூரத்தை
போலீசின் அடிக்கு நாட்டு மருந்து என்னும் என் பதிவில் காணலாம்.]]]

படித்தேன்.. தெளிந்தேன் ஸார்..!

இ.காங்கிரஸார் மட்டுமல்ல.. அனைத்துக் கட்சியினருமே இது போன்ற போராட்ட உயிர்ப் பலிக் கொடுமைகளைச் செய்திருக்கிறார்கள்.

யார்தான் இங்கே ஒழுக்கம்.. சொல்லுங்கள்..?

உண்மைத்தமிழன் said...

[[[பிரியமுடன் ரமேஷ் said...

சிறு தவறு செய்பவர்கள் கூட பரவாயில்லைங்க. இந்த மாதிரி பெரிய தவறு செய்பவர்கள் எல்லோருமே. ஆவேசத்தில் கண்ணை மறைப்பதால் செய்பவர்கள்தான். அதனால் அவர்களுக்கு குறைந்தபட்ச தண்டனை என்று கொடுக்க ஆரம்பித்தால். இது போல் ஆவேசப்படும் நபர்கள். தொடர்ந்து நீடித்துக் கொண்டுதான் இருப்பார்கள். தண்டனைகள் கடுமையாக இருந்தால்தான். ஆவேசப்படும் தருணத்திலும் யோசிக்கத் தோன்றும். இல்லீங்களா...]]]

இருக்கலாம். ஆனால் திருந்துவதற்கு ஒரு முறை வாய்ப்பளிப்பதில் தவறில்லையே ரமேஷ்..!

உண்மைத்தமிழன் said...

[[[கவிதை காதலன் said...
என்ன செய்தாலும் இவர்கள் திருந்தப் போவது இல்லை.]]]

இல்லை.. இந்த விஷயத்தில் இவர்கள் நிறைய பட்டுவிட்டார்கள். நிச்சயம் திருந்துவார்கள்.. திருந்தியிருப்பார்கள் என்றே நான் நம்புகிறேன்..!

உண்மைத்தமிழன் said...

[[[தருமி said...

(வழக்கம் போல்) உங்கள் கருத்தினை ஒப்புக் கொள்ள முடியவில்லை.

பிரியமுடன் ரமேஷ், ஹாலிவுட் பாலா இவர்களின் கருத்தே என் கருத்தும்.]]]

ஆனாலும் வருகைக்கு நன்றிங்க ஐயா..!

உண்மைத்தமிழன் said...

[[[ஹாலிவுட் பாலா said...

அண்ணே.. கோபம் வேணாம்னு சொல்லுறது ஈஸி.

சின்னப் பையனா இருந்தப்ப இந்திராகாந்தி செத்ததுக்கு, இந்த நாய்ங்க அடிச்ச கல்லு, நாங்க போய்கிட்டு இருந்த பஸ்ஸில் விழுந்துச்சி. என் சித்தி வீட்டுக்கு கட்டு போட்டுகிட்டு வந்தாங்க.
அப்பதான்ணே உயிர் பயமெல்லாம் தெரிஞ்சது.

அதுக்கு அடுத்து, ராஜீவ் காந்தி. திமுக கொடியை பாதி கம்பத்துல இறக்கலைன்னு சொல்லிட்டு ஒரு ஊரே திரண்டு வந்து, இன்னொரு ஊரை அடிச்சது. அங்கயும் நானிருந்தேன். இந்த ரெண்டு இடத்திலும் உயிர் சேதமில்லை. அன்னிக்கு, என் அம்மா-அப்பா அல்லது நானுன்னு யாராவது போயிருந்தா?

இவங்களுக்கு எல்லாம் நீங்க பாவ-புண்ணியம் பார்க்க சொல்லுறீங்க. போங்கண்ணே.

ஆயுள் தண்டனை கொடுத்தா 7-8 வருசத்துல வெளிய வந்துடலாம்னு சொல்லிக் கொடுத்தே கொளுத்த கத்துக் கொடுப்பானுங்க.

தலைவனுக்கு தீக்குளிக்கிற ஒரே நாடு நம்மளுதுதான். ஆயுள் தண்டனையெல்லாம் இவனுங்களுக்கு ஜுஜுபின்ணே.]]]

எல்லோருமே ஒரே நினைப்போடேயே இருக்கிறீர்கள்..!

எல்லாருமே நல்லவனாகவோ, எல்லாம் தெரிந்தவர்களாகவோ, அனுபவஸ்தர்களாகவோ இருந்து விடுவதில்லை..

வாழ்க்கையில் ஏதேனும் ஒரு அனுபவம் கிடைத்த பின்புதான் பட்டறிவோடு இருப்பார்கள். அப்படி இவர்களுக்கு ஒரு வாய்ப்பு தரலாமே என்பதுதான் எனது கருத்து..!

இப்போது இவர்கள் முழுக்க, முழுக்க பொருளாதார ரீதியாக அவர்கள் சார்ந்த கட்சியின் பிடியில் இருப்பதால் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்ததையோ, குற்றத்தை ஒப்புக் கொள்ளாததையோ ஒரு குறையாக நாம் எடுத்துக் கொள்ளக் கூடாது..!

இவர்கள் குற்றத்தை ஒப்புக் கொண்டால், அ.தி.மு.க. கட்சிக்குக் கெட்ட பெயர் என்பதால்தான் கட்சியே இவர்களது வழக்கை நடத்தி வருகிறது..! இதுதான் உண்மை..!

உண்மைத்தமிழன் said...

[[[ஹாலிவுட் பாலா said...

//எப்போதும் மறியல் என்றவுடன் பஸ்ஸைத் தாக்குகிறார்கள். எரிக்கிறார்கள். ஒவ்வொரு முறையும் பயணிகளுமா மரிக்கிறார்கள். இந்த முறை அவர்களை மீறி நடந்துவிட்டது இது..!///

இன்னும் எத்தனை முறை நடந்தா.. தூக்குதண்டனை கொடுக்கலாம்னு நீங்க ஒத்துக்குவீங்கண்ணே?

வெத்துத் துப்பாக்கியை தூக்கினாலே, இந்த ஊர்ல ஆறு ஏழு வருசத்துக்கு உள்ள போடுவாங்க. அப்படி கடுமையான சட்டம் இருக்கறப்பவே இந்த ஊர்ல எத்தனை துப்பாக்கி சாவுன்னு உங்களுக்குத் தெரியும்.

நம்மூர்ல இருக்கற சட்ட திட்டத்துக்கு, இப்படியே அடிச்சிகிட்டு சாக வேண்டியதுதான். நாமளும் பரிதாபப்பட்டு, ஆத்திரம் கண்ணை மறைச்சிடுச்சின்னு சொல்லிகிட்டு திரிய வேண்டியதுதான்.]]]

ம்.. எல்லாரும் ஒரு முடிவோடதான் இருக்கீங்க..!

உண்மைத்தமிழன் said...

[[[டுபாக்கூர் பதிவர் said...
தலைமையின் அங்கீகாரம் கிடைக்க வேண்டும், தலைவியின் அருள்பார்வை பட்டு பதவி, பணம் என செட்டிலாக வேண்டிய ஆர்வக் கோளாறு தூக்குமேடை வரை கொண்டு போய்விட்டது.]]]

நிஜம்தான் டுபாக்கூர் ஸார்..! பாவம்.. வேறென்ன சொல்றது..? அரசியல்வியாதிகளின் லட்சணம் இதுதான்..!

உண்மைத்தமிழன் said...

[[[பிரியமுடன் பிரபு said...

//நான் தூக்குத் தண்டனையை வன்மையாக எதிர்ப்பவன். எந்தக் குற்றத்திற்கும் தூக்குத் தண்டனை கூடாது என்னும் கொள்கையுடையவன். ஆகவே இந்தத் தண்டனையை நான் வன்மையாக எதிர்க்கிறேன்..//

நீங்க சொன்னது உண்மைதான்ணே. அவங்களுக்கு தூக்கு தண்டனை கொடுத்தது தப்பு. அந்த பொண்ணுங்களை எரிச்ச மாறியே, இந்த பண்ணாடைகளையும் இன்னொரு பஸ்ஸில் போட்டு எரிக்கணும். அந்த செலவுக்கு நான் வேணும்னா காசு அனுப்பறேன்.]]]

ஏன் இந்தக் கொலை வெறி..?

உண்மைத்தமிழன் said...

[[[பிரியமுடன் பிரபு said...

anne thappana pathivu. ningalellam nallavanganu kaaddavaa ithu?? antha payalukalukku ithu kuraivu
seththathu ungka kudumpaththu ala iruntha ippadi antha naaikal mithu karunai kaduvingala ??]]]

அப்படியல்ல.. என்னுடைய இயல்பே இப்படித்தான்..!

இதே நோக்கில்தான் ராஜீவ் கொலை வழக்கில் தூக்குக் கயிற்றை எதிர்நோக்கியிருக்கும் முருகன், மற்றும் பேரறிவாளன் மீதும் எனது அனுதாபம் உள்ளது..! புரிந்து கொள்ளுங்கள்..!

உண்மைத்தமிழன் said...

[[[பிரியமுடன் ரமேஷ் said...
ஹாலிவுட் பாலா, பிரியமுடன் பிரபு கேட்டதுதான் சரியான கேள்வி. அடுத்தவர் இறப்பென்றால் மட்டும் உணர்ச்சிவசப்பட்டு செய்துவிட்டான், ஆவேசப்பட்டு செய்துவிட்டான் என்று சப்பைக் கட்டு கட்டி அவர்களுக்கு வக்காலத்து வாங்குவது நிச்சயம் சரியானதல்ல...]]]

என் குடும்பத்திலேயே இது நடந்திருந்தால் நிச்சயம் நானும் இதைத்தான் சொல்லியிருப்பேன்..!

எய்தவன் இருக்க அம்பை ஏன் நோவானேன்..?

தருமி said...

//திருந்துவதற்கு ஒரு முறை வாய்ப்பளிப்பதில் தவறில்லையே ரமேஷ்..! //
//வாழ்க்கையில் ஏதேனும் ஒரு அனுபவம் கிடைத்த பின்புதான் பட்டறிவோடு இருப்பார்கள். அப்படி இவர்களுக்கு ஒரு வாய்ப்பு தரலாமே என்பதுதான் எனது கருத்து..!//

அதற்கு இன்னும் எத்தனை உயிர் வேணும்னு ஒரு கணக்கு போட்டு சொல்லுங்களேன்.

/எய்தவன் இருக்க அம்பை ஏன் நோவானேன்..?//
அம்புக்கே உங்களிடம் இம்புட்டு சப்போர்ட். வில்லை அடிச்சா மறுபடி 'கூண்டோடு எரிப்பு'தான்.

Sanjai Gandhi said...

//தர்மபுரிக்கு சுற்றுலா வந்த கோவை வேளாண்மைப் பல்கலைக்கழக மாணவிகளின் பேருந்து இலக்கியம்பட்டி என்னும் ஊரின் அருகே அந்தப் பகுதி அ.தி.மு.க.வினரால் தடுத்து நிறுத்தப்பட்டு எரிக்கப்பட்டது //

பல்கலைக் கழகத்தின் கட்டுபாட்டில் செயல்படும் பையூர் விவசாய ஆராய்ச்சி நிலையத்துக்கு கல்வி சுற்றுலா வந்தார்கள்.

Sanjai Gandhi said...

//அதுவொரு கிராமப் பகுதி என்பதாலும், பேருந்து கொழுந்துவிட்டு எரிந்த போது அதனை அணைப்பதற்கு அந்தப் பகுதி மக்களும் ஓடோடி வந்துதான் உதவியிருக்கிறார்கள். //

கிராமப் பகுதி எல்லாம் இல்லை.. நகரப் பகுதி தான்.. அதை தாண்டி தான் ஆட்சியர் அலுவலகம் , வணிகவரி அலுவலகம் உள்ளிட்ட முக்கிய அலுவலகங்களும் அரசு கலைக்கல்லூரியும் இருக்கு.

பாலா said...

//வாழ்க்கையில் ஏதேனும் ஒரு அனுபவம் கிடைத்த பின்புதான் பட்டறிவோடு இருப்பார்கள். அப்படி இவர்களுக்கு ஒரு வாய்ப்பு தரலாமே என்பதுதான் எனது கருத்து..!
//

அதாவது... குஜராத்தில் நடந்த இனக்கலவரத்தில் ரெண்டு பக்கமும் கொன்னவங்க எல்லாம்.. உணர்ச்சிவசப்பட்டு குத்திகிட்டாங்க.

அவங்களை எல்லாம் மன்னிச்சி விட்டுடலாம்னு சொல்லுறீங்க?

நாளைக்கு.. ஒருவேளை தாவூத் இப்ராகீமை கைது பண்ணி தூக்கு தண்டனை கொடுத்தாலும்... இதே மாறி.. அதுக்கு எதிர்ப்பு தெரிவிப்பீங்களாண்ணே?

இங்க பணத்தை பத்தி நான் சொல்ல வரலை. பழிக்குப்பழி தப்புன்னு தெரிஞ்சனாலதானே... அந்த பொண்ணுங்க வீட்டுல இருந்து இவங்களை போட்டுத்தள்ளாம, கோர்ட்டுக்கு போனாங்க? அங்கயும் இதுக்கு 8 வருசத்துல வெளிய வந்துடுன்னு சொன்னா.... எப்படிண்ணே?

இந்த எட்டு வருசத்துல, கேஸ் நடந்த நாள்ல இருந்து, ஜாமீன்ல ஜம்முன்னு சுத்துன நாள் வரைக்கும் கணக்குல வச்சிக்குவீங்க.

அப்புறம்.. தலைவர்கள் பிறந்தநாள், நன்னடத்தைன்னு சொல்லி 4 வருசத்துல வெளிய வந்துட்டா...

ஏற்கனவே கட்சி கொடுத்த காசு கண்ணுல தெரியும் போது, இன்னும் நாலு பஸ்ஸை எரிக்கத்தான் செய்வான்.

அவனே எரிக்கலைன்னாலும்... அவனைத்தான் போஸீஸ் புடிச்சி உள்ளப் போடப் போகுது. அதுக்கு நாமே எரிச்சி, கல்லா கட்டிகிட்டா என்னன்னுதான்... இவனுங்க நினைப்பானுங்க.

மூணு பேரை.. உயிரோட எரிச்சி கொன்னவனுங்களை, லஞ்சம் - கொள்ளை -அரசியல்வாதிகளோட சேர்த்து வச்சி பேசறீங்களேண்ணே?

பாலா said...

//இதே நோக்கில்தான் ராஜீவ் கொலை வழக்கில் தூக்குக் கயிற்றை எதிர்நோக்கியிருக்கும் முருகன், மற்றும் பேரறிவாளன் மீதும் எனது அனுதாபம் உள்ளது..! புரிந்து கொள்ளுங்கள்..!
///


இப்படியே.. அத்தனை பேருக்கும் அனுதாபம் காட்டிகிட்டே இருங்க. அவனவன் ஆளுக்கொரு பாமை வெடிச்சி, இன்னும் 100-200 பேரை கொல்லட்டும்.

Sanjai Gandhi said...

//ஆனாலும் கோவை வேளாண்மை பல்கலைக்கழக மாணவர்களும், மாணவிகளும் இந்தக் கொடுமையை எதிர்த்து சாலை மறியல், உண்ணாவிரதப் போராட்டம் என்றெல்லாம் ஆரம்பித்தபோது என்ன காரணத்தினாலோ அவர்கள் மீது தடியடி நடத்தி, மாணவர்களும், மாணவிகளும் கை, கால்களில் கட்டுப் போடுகின்ற அளவுக்கு மிருகத்தனமாக அடித்து உதைத்தது ஏன் என்றுதான் எனக்கு இப்போதுவரையிலும் தெரியவில்லை
//

போராட்டம் நடத்தியது அரசு கலைக்கல்லூரி மாணவர்கள். கண்ட இடங்களில் அடிவாங்கியதும் நாங்கள் தான். கோவை மாணவர்களை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பிவிட்டோம். அந்த இடத்தில் இருந்து கலெக்டர் கிளம்ப முயற்சித்ததால் ஆத்திரம் அடைந்த மாணவர்கள் சிலர் கலெக்டர் கார் கண்ணாடியை உடைத்துவிட்டார்கள். அதை காரணமாக வைத்து தடியடி நடத்தினார்கள்..

என் நினைவில் இருந்ததை தொகுத்து எழுதிய பதிவு :
http://www.blog.sanjaigandhi.com/2010/08/blog-post_30.html

Sanjai Gandhi said...

//நான் தூக்குத் தண்டனையை வன்மையாக எதிர்ப்பவன். எந்தக் குற்றத்திற்கும் தூக்குத் தண்டனை கூடாது என்னும் கொள்கையுடையவன். ஆகவே இந்தத் தண்டனையை நான் வன்மையாக எதிர்க்கிறேன்..//

அது சரி.. பல்வலியும் தலைவலியும் தனக்கு வந்தா தான் உணர முடியும்னு சொல்வாங்க.. அடுத்தவன் மட்டுமே பாதிக்கப் படற வரைக்கும் நாம எல்லா உரிமையும் பேசிட்டு தான் அண்ணே இருப்போம்.

//இதற்குப் பதிலாக இவர்களுக்கு ஆயுள் தண்டனை வழங்கலாம். இந்த ஆயுள் தண்டனையும் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் அமைப்பு விதித்துள்ள ஆயுள் தண்டனைக்கான கால கட்டமான எட்டு ஆண்டுகளைக் கடந்துவிடக் கூடாது என்பதையும் சுட்டிக் காட்ட விரும்புகிறேன்
//

அப்டியே தினம் மெக் டொனால்ட்ல சீஸ் பர்கரும் பிஸ்ஸ ஹட்ல சிக்கன் பிஸ்ஸாவும் ஒரு லிட்டர் கோக்கும் மதியம் சரவனபவன் சாப்பாடும் 3 மாசத்துக்கு ஒரு வாட்டி ஐரோப்பிய சுற்றுலாவும் மாசத்துக்கு ஒருவாட்டி மானாட மயிலாடவும் பரிந்துரை பண்ணுங்கண்ணே.. வரலாறு வாழ்த்தும்.

தருமி said...

//...ஆயுள் தண்டனைக்கான கால கட்டமான எட்டு ஆண்டுகளைக் கடந்துவிடக் கூடாது என்பதையும் சுட்டிக் காட்ட விரும்புகிறேன்//

நல்லா சுட்டுறீங்க ..! உங்களைப் போன்ற மகாத்மாக்களையும் புத்தர்களையும் பார்க்கும்போது, அப்படியே ....

Sanjai Gandhi said...

//ஆட்களையும் சேர்த்து எரிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் அவர்கள் பஸ்ஸை மறிக்கவில்லை. ஆவேசம் அந்த நேரத்தில் அவர்கள் கண்ணை மறைத்திருக்கிறது எனலாம். //

கலக்கிட்டிங்கண்ணே.. அவர்கள் நோக்கம் அதில் இருப்பவர்களை கொல்வதே.. அன்றைய தினம் அங்கே தான் இருந்தேன். முழுசா எழுதி இருக்கேன் வந்து படிங்க. ஆட்களை எரிக்கும் நோக்கம் இல்லாத நாய்ங்க எதுக்கு ஜன்னலில் தப்பிக்க முயற்சி பண்ணவங்க மேல கல் வீசினாங்கன்னும் எதும் சப்பைக் கட்டு காரணம் சொல்றிங்களாண்ணே?

தருமி said...

//ஆவேசம் அந்த நேரத்தில் அவர்கள் கண்ணை மறைத்திருக்கிறது எனலாம். //

இதை வாசிக்கும்போது எனக்கு கூட ஆவேசம் வருது :(

பாலா said...

நெசமா சொல்லுறேண்ணே. நீங்க பதிவுல எழுதினதை விட, கீழ பின்னூட்டத்தில் எழுதியிருக்கறதுதான்

கொடுமை!!!

தருமி said...

உங்களைப் போன்ற மகாத்மாக்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். ஆகவே நீங்கள் சஞ்சய், பாலா, தருமி போன்றவர்களை "மன்னித்து விடுங்கள்"!

priyamudanprabu said...

அய்யா துக்கு தண்டனையை எதிர்க்கும் உலக மகா உத்தமர்களே காந்திய வாதிகளே
ரொம்ப நல்லவன்கைய நீங்களெல்லாம்
என் என்றால் செத்தது யாரும் உங்க அக்காவோ தங்கையோ இல்லை .......
போங்kaiya நீங்களும்

.......... உங்க நியாயமும்


http://www.google.com/buzz/priyamudan.prabu83/bL989y4sqgz/%E0%AE%85%E0%AE%AF-%E0%AE%AF-%E0%AE%A4-%E0%AE%95-%E0%AE%95-%E0%AE%A4%E0%AE%A3-%E0%AE%9F%E0%AE%A9-%E0%AE%AF

தருமி said...

//உங்களைப் போன்ற மகாத்மாக்கள் நிறைய பேர் இருக்கிறார்கள்//

காரணம்: தமிழ்மணம் பரிந்துரை : 6/6

வாழ்க ..

Sanjai Gandhi said...

பின்னூட்டங்களுக்கான உங்கள் பதிலை எல்லாம் படிச்சா ஆத்திரம் ஆத்திரமா வருதுண்ணே.. என் தான் இப்டி இருக்கிங்களோ? எல்லாரும் நல்லாருங்க.. புனிதர் பட்டம் நெறைய ஸ்டாக்ல வைக்க சொல்றேன்.

தருமி said...

//புனிதர் பட்டம் நெறைய ஸ்டாக்ல வைக்க சொல்றேன்.//

ஆமென் .......!

பாலா said...

அண்ணே சாப்பிட்டு வர்றேன். பின்னூட்டத்துக்கு பதில் போட்டு வைங்க.

இன்னிக்கு உங்களை தூங்க விடுறதா இல்லை.

Sanjai Gandhi said...

//ம்.. கோபம் வேண்டாம் பாலா.. கொஞ்சம் அவர்கள் நிலையில் இருந்து யோசித்துப் பாருங்கள்..!

எப்போதும் மறியல் என்றவுடன் பஸ்ஸைத் தாக்குகிறார்கள். எரிக்கிறார்கள். ஒவ்வொரு முறையும் பயணிகளுமா மரிக்கிறார்கள். இந்த முறை அவர்களை மீறி நடந்துவிட்டது இது..!
//

அவர்களையும் மீறியுமா? அண்ணே தயவு செஞ்ச உண்மையை தெரிஞ்சிட்டு எழுதுங்க.. என்னோட பதிவை வந்து படிங்க.. அதுக்கப்புறம் இங்க பதில் சொல்லுங்க.. உங்க மேல எனக்கு கொலைவெறி வருது..

உண்மைத்தமிழன் said...

[[[தருமி said...

//திருந்துவதற்கு ஒரு முறை வாய்ப்பளிப்பதில் தவறில்லையே ரமேஷ்..! //

//வாழ்க்கையில் ஏதேனும் ஒரு அனுபவம் கிடைத்த பின்புதான் பட்டறிவோடு இருப்பார்கள். அப்படி இவர்களுக்கு ஒரு வாய்ப்பு தரலாமே என்பதுதான் எனது கருத்து..!//

அதற்கு இன்னும் எத்தனை உயிர் வேணும்னு ஒரு கணக்கு போட்டு சொல்லுங்களேன்.]]]

இத்தோடு இது முடிய வேண்டும் என்றுதான் நானும் நினைக்கிறேன்..! ஆனாலும் இது நமது கையில் இல்லை. அரசியல்வியாதிகளின் கைககளில்தான் உள்ளது..!

[[[/எய்தவன் இருக்க அம்பை ஏன் நோவானேன்..?//

அம்புக்கே உங்களிடம் இம்புட்டு சப்போர்ட். வில்லை அடிச்சா மறுபடி 'கூண்டோடு எரிப்பு'தான்.]]]

நோ.. ஏன் இப்படி என்னைத் தப்புத் தப்பாவே புரிஞ்சுக்குறீங்க பெரிசு..! இதற்கு ஜெயலலிதாதான் தார்மீகப் பொறுப்பேற்க வேண்டும்..!

உண்மைத்தமிழன் said...

[[[SanjaiGandhi™ said...

//தர்மபுரிக்கு சுற்றுலா வந்த கோவை வேளாண்மைப் பல்கலைக்கழக மாணவிகளின் பேருந்து இலக்கியம்பட்டி என்னும் ஊரின் அருகே அந்தப் பகுதி அ.தி.மு.க.வினரால் தடுத்து நிறுத்தப்பட்டு எரிக்கப்பட்டது //

பல்கலைக் கழகத்தின் கட்டுபாட்டில் செயல்படும் பையூர் விவசாய ஆராய்ச்சி நிலையத்துக்கு கல்வி சுற்றுலா வந்தார்கள்.]]]

சரி.. ஓகே..!

உண்மைத்தமிழன் said...

[[[SanjaiGandhi™ said...

//அதுவொரு கிராமப் பகுதி என்பதாலும், பேருந்து கொழுந்துவிட்டு எரிந்த போது அதனை அணைப்பதற்கு அந்தப் பகுதி மக்களும் ஓடோடி வந்துதான் உதவியிருக்கிறார்கள். //

கிராமப் பகுதி எல்லாம் இல்லை. நகரப் பகுதிதான்.. அதை தாண்டி தான் ஆட்சியர் அலுவலகம், வணிகவரி அலுவலகம் உள்ளிட்ட முக்கிய அலுவலகங்களும் அரசு கலைக் கல்லூரியும் இருக்கு.]]]

அவுட்டர் ஏரியா என்று நினைக்கிறேன். கரெக்ட்டா..? ஆனாலும் இது தவறா..?

உண்மைத்தமிழன் said...

[[[ஹாலிவுட் பாலா said...

அதாவது... குஜராத்தில் நடந்த இனக் கலவரத்தில் ரெண்டு பக்கமும் கொன்னவங்க எல்லாம்.. உணர்ச்சிவசப்பட்டு குத்திகிட்டாங்க.
அவங்களை எல்லாம் மன்னிச்சி விட்டுடலாம்னு சொல்லுறீங்க?
நாளைக்கு ஒரு வேளை தாவூத் இப்ராகீமை கைது பண்ணி தூக்கு தண்டனை கொடுத்தாலும்... இதே மாறி.. அதுக்கு எதிர்ப்பு தெரிவிப்பீங்களாண்ணே?]]]

நான் இப்போது இந்தச் சம்பவத்தை பற்றி மட்டும்தான் பேசினேன் பாலா..! குஜராத்தை எதுக்கு இழுக்குறீங்க..? மும்பை கலவரம் மாதிரியே குஜராத் கலவரமும் நன்கு திட்டமிடப்பட்டு நடத்தப்பட்டதுதான்.

[[[இங்க பணத்தை பத்தி நான் சொல்ல வரலை. பழிக்குப்பழி தப்புன்னு தெரிஞ்சனாலதானே... அந்த பொண்ணுங்க வீட்டுல இருந்து இவங்களை போட்டுத் தள்ளாம, கோர்ட்டுக்கு போனாங்க? அங்கயும் இதுக்கு 8 வருசத்துல வெளிய வந்துடுன்னு சொன்னா.... எப்படிண்ணே?]]]

பழிக்குப் பழியா..? அந்த எண்ணமே வரக்கூடாதுன்னுதானே அரசு, அரசமைப்பு, சட்டம்னு இருக்கு.. தூக்கிப் போட்டுட்டு போயிட்டா.. எல்லாருமே இதை பாலோ செய்ய ஆரம்பிச்சா இது எங்க போய் முடியும்..?

[[[இந்த எட்டு வருசத்துல, கேஸ் நடந்த நாள்ல இருந்து, ஜாமீன்ல ஜம்முன்னு சுத்துன நாள் வரைக்கும் கணக்குல வச்சிக்குவீங்க.
அப்புறம்.. தலைவர்கள் பிறந்தநாள், நன்னடத்தைன்னு சொல்லி 4 வருசத்துல வெளிய வந்துட்டா...
ஏற்கனவே கட்சி கொடுத்த காசு கண்ணுல தெரியும் போது, இன்னும் நாலு பஸ்ஸை எரிக்கத்தான் செய்வான். அவனே எரிக்கலைன்னாலும்... அவனைத்தான் போஸீஸ் புடிச்சி உள்ளப் போடப் போகுது. அதுக்கு நாமே எரிச்சி, கல்லா கட்டிகிட்டா என்னன்னுதான். இவனுங்க நினைப்பானுங்க. மூணு பேரை.. உயிரோட எரிச்சி கொன்னவனுங்களை, லஞ்சம் - கொள்ளை -அரசியல்வாதிகளோட சேர்த்து வச்சி பேசறீங்களேண்ணே?]]]

இதைவிட மிகப் பயங்கரமான குற்றமாக நான் லஞ்சம், ஊழலைத்தான் சொல்வேன்..!

ஏனெனில் அது நன்கு திட்டமிடப்பட்டு மக்கள் சொத்தைக் கொள்ளையடிக்கிறோம் என்று உணர்ந்து செய்வது..!

உண்மைத்தமிழன் said...

[[[ஹாலிவுட் பாலா said...

//இதே நோக்கில்தான் ராஜீவ் கொலை வழக்கில் தூக்குக் கயிற்றை எதிர்நோக்கியிருக்கும் முருகன், மற்றும் பேரறிவாளன் மீதும் எனது அனுதாபம் உள்ளது..! புரிந்து கொள்ளுங்கள்..!///

இப்படியே.. அத்தனை பேருக்கும் அனுதாபம் காட்டிகிட்டே இருங்க. அவனவன் ஆளுக்கொரு பாமை வெடிச்சி, இன்னும் 100-200 பேரை கொல்லட்டும்.]]]

ஒவ்வொரு குற்றத்தின் பின்னாலும், சந்தர்ப்பமும், சூழ்நிலையும்கூட குற்றத்தைத் தூண்டுவதாக அமைந்திருக்கும்..!

ராஜீவ் கொலை வழக்கையே எடுத்துக் கொள்.. ராஜீவை விட்டுவிட்டு உடன் இறந்தவர்களைக் கணக்கிட்டு குற்றம் சுமத்தினால்கூட பேரறிவாளன் செய்தது, ஏன், எதற்கு என்றுகூட தெரியாமல் இரண்டு பேட்டரிகளை வாங்கி வந்து கொடுத்ததுதான்..

இதற்குத் தூக்குத் தண்டனையா..? அ

Unknown said...

//ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் அமைப்பு விதித்துள்ள ஆயுள் தண்டனைக்கான கால கட்டமான எட்டு ஆண்டுகளைக் கடந்துவிடக் கூடாது//

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் அமைப்பு ஆயுள் தண்டனையை எட்டு ஆண்டுகளாக வரையறுத்தாக தெரியவில்லையே? சுட்டி தர இயலுமா?(எனக்கு தெரிந்த வரையில் ஐக்கிய நாடுகள் சபையின் ரோம் குற்ற நீதிமன்ற சர்வதேச உடன்படிக்கைபடி ஆயுள் தண்டனை 25 ஆண்டுகள், இதில் இந்திய உட்பட பலநாடுகள் கையெழுத்திடவில்லை)

உண்மைத்தமிழன் said...

[[[SanjaiGandhi™ said...

//ஆனாலும் கோவை வேளாண்மை பல்கலைக்கழக மாணவர்களும், மாணவிகளும் இந்தக் கொடுமையை எதிர்த்து சாலை மறியல், உண்ணாவிரதப் போராட்டம் என்றெல்லாம் ஆரம்பித்தபோது என்ன காரணத்தினாலோ அவர்கள் மீது தடியடி நடத்தி, மாணவர்களும், மாணவிகளும் கை, கால்களில் கட்டுப் போடுகின்ற அளவுக்கு மிருகத்தனமாக அடித்து உதைத்தது ஏன் என்றுதான் எனக்கு இப்போதுவரையிலும் தெரியவில்லை
//

போராட்டம் நடத்தியது அரசு கலைக்கல்லூரி மாணவர்கள். கண்ட இடங்களில் அடிவாங்கியதும் நாங்கள் தான். கோவை மாணவர்களை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பிவிட்டோம். அந்த இடத்தில் இருந்து கலெக்டர் கிளம்ப முயற்சித்ததால் ஆத்திரம் அடைந்த மாணவர்கள் சிலர் கலெக்டர் கார் கண்ணாடியை உடைத்துவிட்டார்கள். அதை காரணமாக வைத்து தடியடி நடத்தினார்கள்..

என் நினைவில் இருந்ததை தொகுத்து எழுதிய பதிவு :

http://www.blog.sanjaigandhi.com/2010/08/blog-post_30.html]]]

அன்றைய சன் டிவியின் செய்திகளில், பல்கலைக்கழகத்திற்குள் நுழைந்து போலீஸார் மாணவர்களைத் தாக்கிய காட்சிகளை பார்த்த ஞாபகம் இருக்கிறது..!

அடுத்த வார ஜூனியர் விகடனில்கூட புகைப்படத்துடன் கட்டுரை வெளியாகியிருந்தது..!

உண்மைத்தமிழன் said...

[[[SanjaiGandhi™ said...

அது சரி.. பல்வலியும் தலைவலியும் தனக்கு வந்தாதான் உணர முடியும்னு சொல்வாங்க.. அடுத்தவன் மட்டுமே பாதிக்கப்படறவரைக்கும் நாம எல்லா உரிமையும் பேசிட்டு தான் அண்ணே இருப்போம்.]]]

இல்லை. எனது குடும்பத்தில் நடந்திருந்தால்கூட நான் நிச்சயம் மன்னிப்பேன்..!

//இதற்குப் பதிலாக இவர்களுக்கு ஆயுள் தண்டனை வழங்கலாம். இந்த ஆயுள் தண்டனையும் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் அமைப்பு விதித்துள்ள ஆயுள் தண்டனைக்கான கால கட்டமான எட்டு ஆண்டுகளைக் கடந்துவிடக் கூடாது என்பதையும் சுட்டிக் காட்ட விரும்புகிறேன்//

அப்டியே தினம் மெக் டொனால்ட்ல சீஸ் பர்கரும் பிஸ்ஸ ஹட்ல சிக்கன் பிஸ்ஸாவும் ஒரு லிட்டர் கோக்கும் மதியம் சரவனபவன் சாப்பாடும் 3 மாசத்துக்கு ஒரு வாட்டி ஐரோப்பிய சுற்றுலாவும் மாசத்துக்கு ஒருவாட்டி மானாட மயிலாடவும் பரிந்துரை பண்ணுங்கண்ணே. வரலாறு வாழ்த்தும்.]]]

ச்சும்மா வாதத்துக்காக கோபத்துடன் கிண்டலைக் காட்டக் கூடாது..

ஆயிரம் குற்றவாளிகள் தப்பித்தாலும், ஒரு நிரபராதி குற்றவாளியாகிவிடக் கூடாது என்பதற்காகத்தான் ஆயுள் தண்டனையை எட்டு ஆண்டுகள் என்று ஐ.நா. அமைப்பு முடிவு செய்துள்ளது..!

இதன் மூலம் குற்றவாளிகள் சீக்கிரமே விடுவிக்கப்பட்டாலும், சந்தர்ப்ப சூழலால் குற்றவாளியாக்கப்பட்ட ஏதாவது ஒரு நிரபராதியும் விடுவிக்கப்படுவானே.. இதனை மனதில் வைத்துத்தான் அது சொல்லப்பட்டது..!

உண்மைத்தமிழன் said...

[[[தருமி said...

//ஆயுள் தண்டனைக்கான கால கட்டமான எட்டு ஆண்டுகளைக் கடந்துவிடக் கூடாது என்பதையும் சுட்டிக் காட்ட விரும்புகிறேன்//

நல்லா சுட்டுறீங்க..! உங்களைப் போன்ற மகாத்மாக்களையும் புத்தர்களையும் பார்க்கும்போது, அப்படியே....]]]

சுட்டுக் கொல்லலாம் போல இருக்கா.. செய்யுங்க..!

கடித்துக் குதறலாம் போல இருக்கா.. செய்யுங்க..!

புத்தம் சரணம் கச்சாமி.. சங்கம் சரணம் கச்சாமி..

உண்மைத்தமிழன் said...

[[[SanjaiGandhi™ said...

//ஆட்களையும் சேர்த்து எரிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் அவர்கள் பஸ்ஸை மறிக்கவில்லை. ஆவேசம் அந்த நேரத்தில் அவர்கள் கண்ணை மறைத்திருக்கிறது எனலாம். //

கலக்கிட்டிங்கண்ணே.. அவர்கள் நோக்கம் அதில் இருப்பவர்களை கொல்வதே.. அன்றைய தினம் அங்கேதான் இருந்தேன். முழுசா எழுதி இருக்கேன் வந்து படிங்க. ஆட்களை எரிக்கும் நோக்கம் இல்லாத நாய்ங்க எதுக்கு ஜன்னலில் தப்பிக்க முயற்சி பண்ணவங்க மேல கல் வீசினாங்கன்னும் எதும் சப்பைக் கட்டு காரணம் சொல்றிங்களாண்ணே?]]]

அதுதான் சொல்கிறேன்.. அன்றைக்கு நடந்தது அவர்களை மீறிய செயல் என்று.. வாழ்க்கையில் எல்லாருக்குமே ஒரு நாள் இது போல் ஏதாவது ஒரு விஷயத்தில் நடந்துதான் தீரும்..!

வீடியோவில் பார்த்தனே.. அப்படியில்லையே.. ஜன்னல் வழியாக மாணவர்கள் கீழே குதிப்பதும், மாணவிகள் பஸ்ஸுக்குள் அங்குமிங்கும் ஓடுவதையும், மாணவர்கள் பதற்றத்துடன் சத்தம் போடுவதையும்தான் பார்த்தேன்.. கல் வீச்சை நான் பார்க்கவில்லை. பார்த்திருந்தால் நிச்சயம் நான் இப்படி எழுதியிருக்க மாட்டேன்..!

Chennai boy said...

உங்கள் கருத்தை(தூக்கு தண்டனை) முழுக்க ஏற்றுக் கொள்ள முடியவில்லை. உலகில் எந்த ஒரு உயிரையும் பறிக்கும் உரிமை நமக்கு இல்லை. இப்படியே விட்டு விட்டால் அப்பாவிகள், நல்லவர்களின் உயிர்களுக்கு என்ன உத்ரவாதமும் பாதுகாப்பும் இருக்கிறது. உயிர் பயம் வந்தால் தான் அவர்களுக்கு ஆத்திரம் கண்ணை கட்டாது. பயம் தான் முன் வந்து நிற்கும். என்னை பொறுத்தவரை இவ்வளவு நாள் விட்டு வைத்ததே தவறு. இத்தனை நாள் பாடுபட்டு ஆசையாக வளர்த்த பெற்ற உள்ளங்கள் என்ன பாடுபட்டிருக்கும். அவர்களுக்காக பரிதாபப்பட மாட்டீர்கள். கொலையாளியிடம் என்ன கருணை வேண்டியிருக்கு.

ஆனா வூன்னா பஸ்ஸ கொளுத்துறது இவனுங்களுக்கு வேலையாக போய்விட்டது. இந்த மாதிரி செய்யும் கட்சிகள் தான் நஷ்ட்ட ஈடு கொடுக்க வேண்டுமென்று தீர்ப்பு வந்தும் இதை எந்த கட்சியும் கண்டுக் கொண்டதாக தெரியவில்லை.

உண்மைத்தமிழன் said...

[[[தருமி said...

//ஆவேசம் அந்த நேரத்தில் அவர்கள் கண்ணை மறைத்திருக்கிறது எனலாம்.//

இதை வாசிக்கும்போது எனக்குகூட ஆவேசம் வருது :(]]]

எதையாவது எடுத்துக்கிட்டு சீக்கிரமா வாங்க.. முருகன்கிட்ட போறதுக்கு எனக்கு ரொம்ப ஆசையா இருக்கு..!

உண்மைத்தமிழன் said...

[[[ஹாலிவுட் பாலா said...
நெசமா சொல்லுறேண்ணே. நீங்க பதிவுல எழுதினதை விட, கீழ பின்னூட்டத்தில் எழுதியிருக்கறதுதான்.]]]

ரொம்பக் கொடுமையா..? சரி.. சரி..!

உண்மைத்தமிழன் said...

[[[தருமி said...
உங்களைப் போன்ற மகாத்மாக்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். ஆகவே நீங்கள் சஞ்சய், பாலா, தருமி போன்றவர்களை "மன்னித்து விடுங்கள்"!]]]

நான் மகாத்மா இல்ல ஸார்..! யாரையும் மன்னிக்கும் அளவுக்கு எனக்கு அருகதையும் கிடையாது..! ஆனால் குறைந்தபட்சம் எல்லா விஷயத்திலேயும் மனித நேயம் வேண்டும் என்கிறேன்..

உண்மைத்தமிழன் said...

[[[பிரியமுடன் பிரபு said...
அய்யா துக்கு தண்டனையை எதிர்க்கும் உலக மகா உத்தமர்களே காந்தியவாதிகளே
ரொம்ப நல்லவன்கைய நீங்களெல்லாம் என் என்றால் செத்தது யாரும் உங்க அக்காவோ தங்கையோ இல்லை .......
போங்kaiya நீங்களும்

.......... உங்க நியாயமும்


http://www.google.com/buzz/priyamudan.prabu83/bL989y4sqgz/%E0%AE%85%E0%AE%AF-%E0%AE%AF-%E0%AE%A4-%E0%AE%95-%E0%AE%95-%E0%AE%A4%E0%AE%A3-%E0%AE%9F%E0%AE%A9-%E0%AE%AF]]]

-)))))))))))))))))))

உண்மைத்தமிழன் said...

[[[தருமி said...

//உங்களைப் போன்ற மகாத்மாக்கள் நிறைய பேர் இருக்கிறார்கள்//

காரணம்: தமிழ்மணம் பரிந்துரை : 6/6

வாழ்க ..]]]

ஐயா.. பெரியவரே.. 6 ஓட்டுலேயே ஆறு மணி நேரமா நிக்குதுங்க.. ஒரு ஓட்டு.. ஒரே ஓட்டு.. போட்டு விடுங்க சாமி.. இன்னும் ஒரு ஐநூறு பேராவது படிப்பாங்க..!

உண்மைத்தமிழன் said...

[[[SanjaiGandhi™ said...
பின்னூட்டங்களுக்கான உங்கள் பதிலை எல்லாம் படிச்சா ஆத்திரம் ஆத்திரமா வருதுண்ணே.. என்தான் இப்டி இருக்கிங்களோ? எல்லாரும் நல்லாருங்க.. புனிதர் பட்டம் நெறைய ஸ்டாக்ல வைக்க சொல்றேன்.]]]

உணர்ச்சிவசப்படாத தம்பி..! இதுவும் கடந்து போகும்..!

Sanjai Gandhi said...

//வீடியோவில் பார்த்தனே.. அப்படியில்லையே.. ஜன்னல் வழியாக மாணவர்கள் கீழே குதிப்பதும், மாணவிகள் பஸ்ஸுக்குள் அங்குமிங்கும் ஓடுவதையும், மாணவர்கள் பதற்றத்துடன் சத்தம் போடுவதையும்தான் பார்த்தேன்.. கல் வீச்சை நான் பார்க்கவில்லை. பார்த்திருந்தால் நிச்சயம் நான் இப்படி எழுதியிருக்க மாட்டேன்..! //

கேமராமென் எல்லாம் வந்தது தாமதமா தான். பசங்க திரும்பி வரத பார்த்து பன்னாடைங்க ஓடிடிச்சிங்க.. அதுக்கப்புறம் தான் கண்ணாடியை உடைத்தும் கொஞ்சம் பேர் ஜன்னல் வழியாவும் காப்பாற்றப்பட்டாங்க. அது தான் நீங்க பார்த்திருக்க முடியும்.

உள்ளே மாணவிகள் இருந்ததை பார்த்து பெட்ரோல் ஊத்தி எரிச்சது, தெரியாம நடந்த செயல்னு சொல்ற நீங்க புத்தரை எலலாம் தூக்கி சாப்ட்டுட்டிங்க அண்ணே..

உண்மைத்தமிழன் said...

[[[தருமி said...

//புனிதர் பட்டம் நெறைய ஸ்டாக்ல வைக்க சொல்றேன்.//

ஆமென் .......!]]]

அல்லேலூயா..!

உண்மைத்தமிழன் said...

[[[ஹாலிவுட் பாலா said...
அண்ணே சாப்பிட்டு வர்றேன். பின்னூட்டத்துக்கு பதில் போட்டு வைங்க. இன்னிக்கு உங்களை தூங்க விடுறதா இல்லை.]]]

தம்பி.. அண்ணன் பாவமில்லையா..? தூங்க வேணாமா..? இதுக்கும் மேல என்ன தம்பி வாதாடுறது..? ஏப்பம்தான் வருது..!

உண்மைத்தமிழன் said...

[[[SanjaiGandhi™ said...

//ம்.. கோபம் வேண்டாம் பாலா.. கொஞ்சம் அவர்கள் நிலையில் இருந்து யோசித்துப் பாருங்கள்..!
எப்போதும் மறியல் என்றவுடன் பஸ்ஸைத் தாக்குகிறார்கள். எரிக்கிறார்கள். ஒவ்வொரு முறையும் பயணிகளுமா மரிக்கிறார்கள். இந்த முறை அவர்களை மீறி நடந்துவிட்டது இது..!//

அவர்களையும் மீறியுமா? அண்ணே தயவு செஞ்ச உண்மையை தெரிஞ்சிட்டு எழுதுங்க.. என்னோட பதிவை வந்து படிங்க.. அதுக்கப்புறம் இங்க பதில் சொல்லுங்க.. உங்க மேல எனக்கு கொலைவெறி வருது..]]]

தம்பி படிச்சிட்டேன்..!

உணர்ச்சிவசப்படுதலின் விளைவுதான் இது..!

இந்திராகாந்தி கொலையின்போது டெல்லியில் சீக்கியர்களுக்கு எதிராக இதுதான் நடந்தது..!

உண்மைத்தமிழன் said...

[[[thenali said...

//ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் அமைப்பு விதித்துள்ள ஆயுள் தண்டனைக்கான கால கட்டமான எட்டு ஆண்டுகளைக் கடந்துவிடக் கூடாது//

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் அமைப்பு ஆயுள் தண்டனையை எட்டு ஆண்டுகளாக வரையறுத்தாக தெரியவில்லையே? சுட்டி தர இயலுமா?

(எனக்கு தெரிந்த வரையில் ஐக்கிய நாடுகள் சபையின் ரோம் குற்ற நீதிமன்ற சர்வதேச உடன்படிக்கைபடி ஆயுள் தண்டனை 25 ஆண்டுகள், இதில் இந்திய உட்பட பல நாடுகள் கையெழுத்திடவில்லை)]]]

ஐ.நா. மூலமாக நான் அதனைப் படிக்கவில்லை. தினமணியில் ஒரு முறை அரசியல் கட்டுரை எழுதியிருந்தார்கள். அதில் படித்ததுதான்..!

பாலா said...

//
இதைவிட மிகப் பயங்கரமான குற்றமாக நான் லஞ்சம், ஊழலைத்தான் சொல்வேன்..!

ஏனெனில் அது நன்கு திட்டமிடப்பட்டு மக்கள் சொத்தைக் கொள்ளையடிக்கிறோம் என்று உணர்ந்து செய்வது..
///

அண்ணே அந்த பொண்ணுங்களோட குடும்பத்துல யாராவது இதை படிச்சா, கண்ணுல தண்ணி விட்டுடுவாங்க.

நம்மளமாறி யூத்தா இருந்திருந்தா கூடப் பரவாயில்லை.

லைஃபை ஆரம்பிக்கக்கூட இல்லாத பசங்களை, ஒரு சனியன் அரஸ்ட் ஆனதுக்கு, இத்தனை சனியனுங்க சேர்ந்து ப்ளான் பண்ணி, வெளிய வரவிடாம கூட எரிச்ச விசயத்தை எத்தனை அசால்டா, பார்லிமெண்ட்ல எம்.பிக்கள் செஞ்ச போராட்டத்தோட கம்பேர் பண்ணுவீங்க?

அதுக்கு இவ்ளோ சப்பை கட்டுவேற கட்டுறீங்க.

பழிவாங்கற எண்ணம்னு நான் சொன்னதை வேற மாறி புரிஞ்சிருக்கீங்க.

நாம கோர்ட்டுக்கு போவது, நமக்கு கிடைக்க வேண்டிய நியாயம் மட்டுமில்லை. இனிமே நடக்கப் போறதுக்கும் சேர்த்துதான். இப்படி இவங்களை எட்டு வருசத்தில் வெளிய விட்டா.. அதுவெல்லாம் ஒரு மோசமான முன்னுதாரணமா தெரியாதாண்ணே?

இயற்கையா நோய்வாய்ப்பட்டு இறந்த ஒரு பொண்ணுக்கு, அத்தனை இரக்கப்பட்டு நீங்க பதிவெழுதினீங்களே? எதுக்கு?? அந்தப் பொண்ணு உங்களுக்கு தெரிஞ்சவங்கன்னுதானே?

அப்ப அதே மாதிரி அந்த பொண்ணுங்களுக்கு தெரிஞ்சவங்களுக்கு, உயிரோட எரிச்சவங்க மேல எத்தனை இருந்திருக்கும்?

எப்படிண்ணே.. நமக்கொரு நியாயம்னு சொல்லுறீங்க?

குஜராத்தை இழுக்கலை சரி!! ஆனா நாளைக்கு குஜராத் மேட்டர்ல எதாவது தீர்ப்பு வந்தா (வந்துடுச்சான்னு தெரியலை) நீங்க இதே ஸ்டாண்ட்ல நிப்பீங்களான்னு தான் கேட்டேன்.

உண்மைத்தமிழன் said...

[[[சீனி said...

உங்கள் கருத்தை(தூக்கு தண்டனை) முழுக்க ஏற்றுக் கொள்ள முடியவில்லை. உலகில் எந்த ஒரு உயிரையும் பறிக்கும் உரிமை நமக்கு இல்லை. இப்படியே விட்டு விட்டால் அப்பாவிகள், நல்லவர்களின் உயிர்களுக்கு என்ன உத்ரவாதமும் பாதுகாப்பும் இருக்கிறது. உயிர் பயம் வந்தால்தான் அவர்களுக்கு ஆத்திரம் கண்ணை கட்டாது. பயம்தான் முன் வந்து நிற்கும். என்னை பொறுத்தவரை இவ்வளவு நாள் விட்டு வைத்ததே தவறு. இத்தனை நாள் பாடுபட்டு ஆசையாக வளர்த்த பெற்ற உள்ளங்கள் என்ன பாடுபட்டிருக்கும். அவர்களுக்காக பரிதாபப்பட மாட்டீர்கள். கொலையாளியிடம் என்ன கருணை வேண்டியிருக்கு.]]]

மன்னிப்பு ஒரு முறை வழங்கலாமே..?

[[[ஆனா வூன்னா பஸ்ஸ கொளுத்துறது இவனுங்களுக்கு வேலையாக போய்விட்டது. இந்த மாதிரி செய்யும் கட்சிகள்தான் நஷ்ட்ட ஈடு கொடுக்க வேண்டுமென்று தீர்ப்பு வந்தும் இதை எந்த கட்சியும் கண்டுக் கொண்டதாக தெரியவில்லை.]]]

அதெப்படி..? கட்சிக்காரனுக அனுபவிக்கிறதுக்காகத்தானே நாடே இருக்கு.. இதுல நீங்க அவுங்ககிட்ட போயி நஷ்ட ஈடு கேட்டா எப்படி..?

உண்மைத்தமிழன் said...

[[[SanjaiGandhi™ said...

//வீடியோவில் பார்த்தனே.. அப்படியில்லையே.. ஜன்னல் வழியாக மாணவர்கள் கீழே குதிப்பதும், மாணவிகள் பஸ்ஸுக்குள் அங்குமிங்கும் ஓடுவதையும், மாணவர்கள் பதற்றத்துடன் சத்தம் போடுவதையும்தான் பார்த்தேன்.. கல் வீச்சை நான் பார்க்கவில்லை. பார்த்திருந்தால் நிச்சயம் நான் இப்படி எழுதியிருக்க மாட்டேன்..! //

கேமராமென் எல்லாம் வந்தது தாமதமாதான். பசங்க திரும்பி வரத பார்த்து பன்னாடைங்க ஓடிடிச்சிங்க.. அதுக்கப்புறம் தான் கண்ணாடியை உடைத்தும் கொஞ்சம் பேர் ஜன்னல் வழியாவும் காப்பாற்றப்பட்டாங்க. அதுதான் நீங்க பார்த்திருக்க முடியும். உள்ளே மாணவிகள் இருந்ததை பார்த்து பெட்ரோல் ஊத்தி எரிச்சது, தெரியாம நடந்த செயல்னு சொல்ற நீங்க புத்தரை எலலாம் தூக்கி சாப்ட்டுட்டிங்க அண்ணே..]]]

ஐயையோ.. அப்படியெல்லாம் இல்ல தம்பி.. நான் பார்க்கலேன்னுதான் சொன்னேன்.. நடக்க வாய்ப்பில்லை என்றோ, நடக்கவே இல்லையென்றோ சப்பைக் கட்டுக் கட்டவில்லை. நான்தான் நேரில் பார்த்திருக்கவில்லையே..?

பாலா said...

//மன்னிப்பு ஒரு முறை வழங்கலாமே..? //

அதாவது.. ஒருமுறை மன்னிப்பு வழங்கிட்டா... அடுத்த முறை கவனக்குறைவா மாட்டிக்காம பஸ்ஸை எரிக்கலாம். அப்படியாண்ணே?

ஒருவேளை அடுத்த முறையும் இவனுங்க மாட்டிகிட்டா... அப்பவும் நீங்க தூக்கு தண்டனையை எதிர்ப்பீங்க. அப்படியா?

உண்மைத்தமிழன் said...

[[[ஹாலிவுட் பாலா said...

//இதைவிட மிகப் பயங்கரமான குற்றமாக நான் லஞ்சம், ஊழலைத்தான் சொல்வேன்..!

ஏனெனில் அது நன்கு திட்டமிடப்பட்டு மக்கள் சொத்தைக் கொள்ளையடிக்கிறோம் என்று உணர்ந்து செய்வது..///

அண்ணே அந்த பொண்ணுங்களோட குடும்பத்துல யாராவது இதை படிச்சா, கண்ணுல தண்ணி விட்டுடுவாங்க.]]]

இது எல்லார் குடும்பத்திலும் இருப்பதுதான்..! என் அக்கா, தங்கையாக இருந்தாலும் நானும் கண்ணீர் விடத்தான் செய்வேன்..!

[[[நம்மள மாறி யூத்தா இருந்திருந்தா கூடப் பரவாயில்லை.
லைஃபை ஆரம்பிக்கக் கூட இல்லாத பசங்களை, ஒரு சனியன் அரஸ்ட் ஆனதுக்கு, இத்தனை சனியனுங்க சேர்ந்து ப்ளான் பண்ணி, வெளிய வர விடாம கூட எரிச்ச விசயத்தை எத்தனை அசால்டா, பார்லிமெண்ட்ல எம்.பிக்கள் செஞ்ச போராட்டத்தோட கம்பேர் பண்ணுவீங்க?]]]

பின்ன..? ராத்திரில கன்னம் வைச்சுத் திருடுறவனை விரட்டிப் பிடிச்சு உள்ள போடுற போலீஸ் இருக்குற நாட்டுல.. தெரிஞ்சே நம்ம பாக்கெட்டுல கைய விட்டுத் திருடிட்டு சொகுசா போலீஸ் மரியாதையோட வர்றவனுகளை பார்த்தா எனக்கு அப்படித்தான் தோணுது..!

பழி வாங்கற எண்ணம்னு நான் சொன்னதை வேற மாறி புரிஞ்சிருக்கீங்க. நாம கோர்ட்டுக்கு போவது, நமக்கு கிடைக்க வேண்டிய நியாயம் மட்டுமில்லை. இனிமே நடக்கப் போறதுக்கும் சேர்த்துதான். இப்படி இவங்களை எட்டு வருசத்தில் வெளிய விட்டா.. அதுவெல்லாம் ஒரு மோசமான முன்னுதாரணமா தெரியாதாண்ணே?]]]

இப்போது அவர்கள் பட்டதே மிகப் பெரிய தண்டனைதான்.. அவரவர் குடும்பத்தில் போய் கேட்டுப் பாருங்கள். சொல்வார்கள்..! இனி இவர்கள் அரசியலில் தலையெடுக்கவே முடியாது.. ஒரு வட்டச் செயலாளராககூட இருக்க முடியாது. அவர்களைப் பொறுத்தவரையில் ஒரு நடமாடும் பிணம்தான்..!

[[[இயற்கையா நோய்வாய்ப்பட்டு இறந்த ஒரு பொண்ணுக்கு, அத்தனை இரக்கப்பட்டு நீங்க பதிவெழுதினீங்களே? எதுக்கு?? அந்தப் பொண்ணு உங்களுக்கு தெரிஞ்சவங்கன்னுதானே? அப்ப அதே மாதிரி அந்த பொண்ணுங்களுக்கு தெரிஞ்சவங்களுக்கு, உயிரோட எரிச்சவங்க மேல எத்தனை இருந்திருக்கும்?
எப்படிண்ணே.. நமக்கொரு நியாயம்னு சொல்லுறீங்க?]]]

நான் தண்டனையே தரக் கூடாதுன்னு சொல்லலியே..! கொடுங்க.. அதுக்கு ஒரு அளவு வைச்சுக்குங்கன்னு சொல்றேன்..!

[[[குஜராத்தை இழுக்கலை சரி!! ஆனா நாளைக்கு குஜராத் மேட்டர்ல எதாவது தீர்ப்பு வந்தா (வந்துடுச்சான்னு தெரியலை) நீங்க இதே ஸ்டாண்ட்ல நிப்பீங்களான்னுதான் கேட்டேன்.]]]

நிச்சயமா.. தூக்குத் தண்டனையை நான் எந்த ரூபத்திலும் எதிர்க்கிறேன்..!

உண்மைத்தமிழன் said...

[[[ஹாலிவுட் பாலா said...

//மன்னிப்பு ஒரு முறை வழங்கலாமே..? //

அதாவது, ஒரு முறை மன்னிப்பு வழங்கிட்டா அடுத்த முறை கவனக்குறைவா மாட்டிக்காம பஸ்ஸை எரிக்கலாம். அப்படியாண்ணே? ஒரு வேளை அடுத்த முறையும் இவனுங்க மாட்டிகிட்டா... அப்பவும் நீங்க தூக்கு தண்டனையை எதிர்ப்பீங்க. அப்படியா?]]]

மறுபடியும் எந்த முட்டாள் செய்வான்..? செய்தால், அவனை பைத்தியக்கார ஆஸ்பத்திரியில்தான் சேர்க்க வேண்டும்..!

San said...

Dear TT
Whether it is ADMK or DMK or Congress all are orey kuttaiyil oorina mattaigal!
What happened to the three souls who died for no fault of theirs in Dinakaran Office case/
Has any of the people involved in Sikh riots or Gujarat riots has been punished?
Only people like us who care for manidabimanam will keep cribbing about it.
But our makkal will forget these scoundrels for just rupees 1000 during polls.
Idhu ellam nam vidhi endru sollanuma or we have to start a revolution to kick these a........

பாலா said...

//மறுபடியும் எந்த முட்டாள் செய்வான்..? செய்தால், அவனை பைத்தியக்கார ஆஸ்பத்திரியில்தான் சேர்க்க வேண்டும்..!//

அப்படி செஞ்சா உங்க ஸ்டேண்ட் என்னன்னுதான் கேட்டேன். ஆனா நீங்க அதுக்கும்..

//நிச்சயமா.. தூக்குத் தண்டனையை நான் எந்த ரூபத்திலும் எதிர்க்கிறேன்..//

-ன்னு போன பின்னூட்டத்துக்கு பதில் சொல்லிட்டீங்க. அப்படின்னா.. உங்க சட்டத்துல.. மன்னிச்சி விட்டுகிட்டே இருக்கலாம். அவன் கொளுத்தி போட்டுகிட்டே இருக்கலாம்.

அப்படி நடந்தா.. கடைசியா நீங்க சொன்ன மாறி...

பைத்தியக்கார ஆஸ்பித்திரியில் சேர்த்துடலாம். அப்பதான்.. தூக்கு தண்டனை கொடுக்க முடியாது. தூக்கு என்ன... வேற எந்த எழவயும் கொடுக்க முடியாது.

வாழ்க.. உங்க மனிதாபிமானம்.

Chennai boy said...

தூக்கு தண்டனையே கூடாது என்கிற தத்துவம், மிக உயர்ந்த தத்துவம் நடைமுறை என்று சில அறிவுஜீவிகள் அவ்வப்போது வைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஒரு வேளை இந்த தத்துவம் எல்லோராலும் ஆதரிக்கப்பட்டு நடைமுறைப் படுத்தப்பட்டால்(அதாவது குறைந்த தண்டனை) என்னவாகும். நாட்டின் சட்டம் ஒழுங்கு கட்டுக்குள் இருக்குமா? கற்ப்பழிப்பு, கொலை சர்வசாதாரணமாக நடக்கும். காசு உள்ளவன் கூலிக்கு ஆள் பிடித்து தனக்கு பதில் வேறு ஆளை அனுப்பிவிடுவான். உயிர் கொடுக்க தான் எவானும் தயங்குவான், ஜெயிலுக்கு போக எவனும் தயங்கமாட்டான்ன். சிறைத்தாண்டனையும் முழுமையாக நடைமுறை படுத்த படுகிறதா என்றால் அதுவும் இல்லை. தலைவர் பிறந்த நாள், அது இது என்று பாதி தண்டனையை கழித்து விடுவார்கள். மனிதன் சந்தர்ப சூழல் பார்த்த்து தான் குற்றவாளி ஆகிறான். இங்கிலாந்தில் ஒரு ஆட்டோமேட்டிக் காஃபி மிஷின் வைத்து அதில் நீங்களே காஃபி எடுத்துக் கொள்ளுங்கள் காசை பக்கத்தில் உள்ள பெட்டியில் நீங்களாக போட்டுவிடுங்கள் என்று அறிவிப்பு வைத்தார்கள் அந்த நாளின் முடிவில் பெட்டியை பார்த்த போது ஒருவர் கூட காசு போடவில்லை. அடுத்த நாள் உங்களை ஒரு கேமரா கண்காணித்து கொண்டிருக்கிறது என்ற அறிவிப்பு வைத்தவுடன் எல்லோரும் காசு போட்டார்களாம். தண்டனை இல்லை என்று தெரிந்தால் மனிதன் தவறு செய்ய தயங்குவதில்லை. இது தான் மனிதனின் அடிப்படை குணம். குற்றவாளிகளை நாமே ஊக்குவிப்பதாக ஆகிவிடும்.

Thamiz Priyan said...

நடக்கும் போதே அடுத்த ஸ்டெப்பில் கீழே விழக் கூடாதுன்னு கவனமா வைக்கும் போது என்ன உணர்ச்சிவசப்படல்??? துரத்தி வந்து பஸ்ஸைக் கொளுத்தி இருக்கின்றார்கள். வெளியே மாணவிகள் தப்பிவிடாதபடி கற்களைக் கொண்டு எரிந்து உள்ளேயே இருக்கும்படி செய்து சாவடித்து இருக்கின்றார்கள்.. உடனே தூக்குத் தண்டனை தர வேண்டிய மிருகச் செயல் இது. இவர்களுக்கு எல்லாம் வக்காலத்து தேவையில்லை.

க ரா said...

ம்.. கோபம் வேண்டாம் பாலா.. கொஞ்சம் அவர்கள் நிலையில் இருந்து யோசித்துப் பாருங்கள்..!

எப்போதும் மறியல் என்றவுடன் பஸ்ஸைத் தாக்குகிறார்கள். எரிக்கிறார்கள். ஒவ்வொரு முறையும் பயணிகளுமா மரிக்கிறார்கள். இந்த முறை அவர்களை மீறி நடந்துவிட்டது இது..!

---
இதெல்லாம் நியாயன்றீங்களா அண்ணாச்சி.. இந்த பன்னாடைகளுக்கு வக்கலாத்து வேறயா..உங்கள ஒரு பாம்பு கடிக்க வந்துச்சுன்னா இப்படித்தான் பேசிட்டு இருப்பிங்களா ....

க ரா said...

என்னிக்காது இந்த மாதிரி உயிர் போற்த நேர்ல பாத்துருக்கிங்களா நீங்க..

க ரா said...

////வாழ்க்கையில் ஏதேனும் ஒரு அனுபவம் கிடைத்த பின்புதான் பட்டறிவோடு இருப்பார்கள். அப்படி இவர்களுக்கு ஒரு வாய்ப்பு தரலாமே என்பதுதான் எனது கருத்து..!
//

இன்னும் பத்து தடவ எரிச்சதுக்கு அப்புறம் தண்டன தரலாமா அண்ணாச்சி :)... என்னத்த பேசறீங்க நீங்க..

க ரா said...

இது வரைக்கும் அந்த கட்சிய சேர்ந்த யாராவது அது நடந்தது தப்புன்னு சொல்லிருக்காங்களா.. இது வரைக்கும் சொன்னது எல்லாம் நாங்க சம்பவம் நடந்த இடத்துலயே இல்லன்னுதான்.. இவனுங்க எல்லாம் இன்னொரு வாய்ப்பு கொடுத்தா திருந்திருவாங்களாம்.. நீஙக் என்ன இந்த பன்னாடைகளுக்கு sympathy உருவாக்கிறீங்களா :)

ஸ்ரீராம். said...

விசாரணை அப்பீல் என்ற பெயரில் நீண்டுகொண்டே போகும் நடைமுறைகள். இவர்களை இவ்வளவு நாள் விட்டு வைத்ததே தவறு.

ஜோ/Joe said...

தருமி சொன்னது ...

//...ஆயுள் தண்டனைக்கான கால கட்டமான எட்டு ஆண்டுகளைக் கடந்துவிடக் கூடாது என்பதையும் சுட்டிக் காட்ட விரும்புகிறேன்//

நல்லா சுட்டுறீங்க ..! உங்களைப் போன்ற மகாத்மாக்களையும் புத்தர்களையும் பார்க்கும்போது, அப்படியே ...

*********************
+1

rse said...

வணக்கம் சார்
எதவச்சு நீங்க இவங்களுக்கு 8 ஆண்டு சிறை தண்டனை போதும்னு சொல்றீங்க

வெளியில் நடமாடுறதவிட சிறையில் இவங்களுக்கு ராஜபோக மரியாதையை கிடைக்கும் சார்

சிறையில் எல்லாம் கொடுப்பதற்குத்தான் போலிஸ் இருக்கே

இத விட கொடுமை நம்ப அம்மா !!!!! ( அதாங்க ஜெயலலிதா ) ஆட்சிக்கு வந்தாகன்ன அவங்க பிறந்த நாளுக்கு ரிலீஸ் பண்ணிடுவாங்க .

தங்கள் தலைவிக்காக இந்த மாதிரி காட்டுமிராண்டி செயல் செயனும்னா ஏங்க அவங்களோட அம்மா, அக்கா, தங்கை, மனைவி, பிள்ளைகள், உற்றார் உறவினர்கள ஒரு பஸ்ல ஏத்தி கொளுத்தவேண்டியதுதானே ?????


என்னை கேட்டா பிரான்சிலேர்ந்து கில்லடின் அனுப்பி தலைய வெட்டனும். இல்லேன்னா CAPTAIN PRABHAKARAN படத்துல MANSSOR ALIKHAN ஒரு ஆல ரெண்டு கம்பத்துல கட்டி ---- ( படத்துல பார்த்து இருப்பீங்க ) அந்த மாதிரி செய்யணும் .

சாரி சார் எனக்கு அவ்வளோ கோபம்

kumar said...

மூன்று பெண்களில் ஒன்று உங்களுடையதாக இருந்தாலும் தூக்கு தண்டனையை எதிர்ப்பீர்களா?

Jerry Eshananda said...

உங்கள் கருத்துகள் வன்மையாய் கண்டிக்கத்தக்கது..

பிரபல பதிவர் said...

நல்லா யோசித்து பாத்தா... இந்த தூக்கு தண்டணை கூடாது என்ற கூட்டம் உருவானது (வலுவானது) ராஜீவ் கொலையாளிகளின் தண்டனைக்கு பிறகுதான்....

இவர்கள் விருப்பபட்டவர்களுக்கு ஆயுள் தண்டனை... பொதுமன்னிப்பு... விடுதலை என்று தனி நீதிமன்றம் போல புலம்பி கொண்டிருப்பார்கள்... உ.த மற்றும் சில பதிவர்களை தொடர்ந்து படிப்பவர்களுக்கு இது புரியும்.... தடை செய்யப்பட்ட இயக்கத்தின் ப‌ண‌ம் விளையாடும் சில‌ரால் தூண்ட‌ப்ப‌டும் சில‌ரின் ப‌திவுக‌ளை ப‌டித்து உண்ர்ச்சிவ‌ச‌ப்ப‌டுப‌வ‌ர்க‌ளை க‌ண்டால் சிரிப்புதான் வ‌ருகிற‌து.....

எண்ணங்கள் 13189034291840215795 said...

எவ்வளவுதான் பணத்தினை அந்தக் குடும்பங்களுக்கு அள்ளிக் கொடுத்து சமாதானம் செய்தாலும், அவர்களைக் கொலைப் பலிபீடத்திற்கு அனுப்பி வைத்த ரத்தக் கறை ஜெயலலிதாவின் கையை விட்டுப் போகாது என்பது நிச்சயம்..!
-----------------


அதே..

தண்டனையினால் வலி மாறாது மறையாது..:(

Unknown said...

madurai dinakaran office torched by minister alagiri&co. but the verdict came as a air-conditioner fault? innocent people killed. who cares about innocent people.

உண்மைத்தமிழன் said...

[[[San said...

Dear TT
Whether it is ADMK or DMK or Congress all are orey kuttaiyil oorina mattaigal!
What happened to the three souls who died for no fault of theirs in Dinakaran Office case/
Has any of the people involved in Sikh riots or Gujarat riots has been punished?
Only people like us who care for manidabimanam will keep cribbing about it.
But our makkal will forget these scoundrels for just rupees 1000 during polls.
Idhu ellam nam vidhi endru sollanuma or we have to start a revolution to kick these a]]]

அரசியல்வியாதிகளுக்காக உயிரைக் கொடுக்க முன் வரும் தொண்டர்களும், கண்ணை மூடிக் கொண்டு அவர்களுக்காக கலவரத்தில் இறங்க நினைக்கும் தொண்டர்களும் இருக்கின்றவரையில் இது போன்ற கசப்புகள் நமக்குள் இருக்கத்தான் செய்யும்..!

இந்த அரசியல்வியாதிகளை முற்றாக மக்கள் புறக்கணித்தால் மட்டுமே இது போன்ற நிகழ்வுகள் மீண்டும் நடக்காமல் பார்த்துக் கொள்ள முடியும்..!

உண்மைத்தமிழன் said...

[[[ஹாலிவுட் பாலா said...

//மறுபடியும் எந்த முட்டாள் செய்வான்..? செய்தால், அவனை பைத்தியக்கார ஆஸ்பத்திரியில்தான் சேர்க்க வேண்டும்..!//

அப்படி செஞ்சா உங்க ஸ்டேண்ட் என்னன்னுதான் கேட்டேன். ஆனா நீங்க அதுக்கும்..

//நிச்சயமா.. தூக்குத் தண்டனையை நான் எந்த ரூபத்திலும் எதிர்க்கிறேன்..//

-ன்னு போன பின்னூட்டத்துக்கு பதில் சொல்லிட்டீங்க. அப்படின்னா.. உங்க சட்டத்துல.. மன்னிச்சி விட்டுகிட்டே இருக்கலாம். அவன் கொளுத்தி போட்டுகிட்டே இருக்கலாம். அப்படி நடந்தா.. கடைசியா நீங்க சொன்ன மாறி...
பைத்தியக்கார ஆஸ்பித்திரியில் சேர்த்துடலாம். அப்பதான்.. தூக்கு தண்டனை கொடுக்க முடியாது. தூக்கு என்ன. வேற எந்த எழவயும் கொடுக்க முடியாது. வாழ்க.. உங்க மனிதாபிமானம்.]]]

இது மனிதாபிமானம் அல்ல.. குற்றவாளிகள் திருந்துவதற்கு நாம் தரும் ஒரு சிறிய வாய்ப்பு.... அவ்வளவுதான்..!

உண்மைத்தமிழன் said...

[[[சீனி said...

தூக்கு தண்டனையே கூடாது என்கிற தத்துவம், மிக உயர்ந்த தத்துவம் நடைமுறை என்று சில அறிவுஜீவிகள் அவ்வப்போது வைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஒரு வேளை இந்த தத்துவம் எல்லோராலும் ஆதரிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டால் (அதாவது குறைந்த தண்டனை) என்னவாகும். நாட்டின் சட்டம் ஒழுங்கு கட்டுக்குள் இருக்குமா?

கற்ப்பழிப்பு, கொலை சர்வசாதாரணமாக நடக்கும். காசு உள்ளவன் கூலிக்கு ஆள் பிடித்து தனக்கு பதில் வேறு ஆளை அனுப்பிவிடுவான். உயிர் கொடுக்கத்தான் எவானும் தயங்குவான், ஜெயிலுக்கு போக எவனும் தயங்க மாட்டான்.

சிறைத் தாண்டனையும் முழுமையாக நடைமுறைபடுத்தபடுகிறதா என்றால் அதுவும் இல்லை. தலைவர் பிறந்த நாள், அது இது என்று பாதி தண்டனையை கழித்து விடுவார்கள். மனிதன் சந்தர்ப சூழல் பார்த்த்துதான் குற்றவாளி ஆகிறான்.

இங்கிலாந்தில் ஒரு ஆட்டோமேட்டிக் காஃபி மிஷின் வைத்து அதில் நீங்களே காஃபி எடுத்துக் கொள்ளுங்கள் காசை பக்கத்தில் உள்ள பெட்டியில் நீங்களாக போட்டு விடுங்கள் என்று அறிவிப்பு வைத்தார்கள் அந்த நாளின் முடிவில் பெட்டியை பார்த்த போது ஒருவர் கூட காசு போடவில்லை. அடுத்த நாள் உங்களை ஒரு கேமரா கண்காணித்து கொண்டிருக்கிறது என்ற அறிவிப்பு வைத்தவுடன் எல்லோரும் காசு போட்டார்களாம்.

தண்டனை இல்லை என்று தெரிந்தால் மனிதன் தவறு செய்ய தயங்குவதில்லை. இதுதான் மனிதனின் அடிப்படை குணம். குற்றவாளிகளை நாமே ஊக்குவிப்பதாக ஆகிவிடும்.]]]

அந்தத் தண்டனை எப்படிப்பட்டது என்பதில்தான் நமக்குள் இருக்கின்ற பிரச்சினை..!

உண்மைத்தமிழன் said...

[[[தமிழ் பிரியன் said...

நடக்கும்போதே அடுத்த ஸ்டெப்பில் கீழே விழக் கூடாதுன்னு கவனமா வைக்கும்போது என்ன உணர்ச்சிவசப்படல்???

துரத்தி வந்து பஸ்ஸைக் கொளுத்தி இருக்கின்றார்கள். வெளியே மாணவிகள் தப்பி விடாதபடி கற்களைக் கொண்டு எரிந்து உள்ளேயே இருக்கும்படி செய்து சாவடித்து இருக்கின்றார்கள்.. உடனே தூக்குத் தண்டனை தர வேண்டிய மிருகச் செயல் இது. இவர்களுக்கு எல்லாம் வக்காலத்து தேவையில்லை.]]]

துரத்தித் துரத்தி நடுரோட்டில் வெட்டிக் கொலை செய்வதும்கூட இதே பாணியிலான படுகொலைகள்தான்..!

ஆனால் இது போன்ற எத்தனை கொலைகளுக்கு மரண தண்டனை கொடுக்கப்பட்டிருக்கிறது..!

திட்டமிட்டு செய்யப்படும் படுகொலைகளுக்குக்கூட ஆயுள் தண்டனை கொடுக்கப்படு்ம்போது இதற்கு ஏன் தரக் கூடாது..?

உண்மைத்தமிழன் said...

[[[இராமசாமி கண்ணண் said...

ம்.. கோபம் வேண்டாம் பாலா.. கொஞ்சம் அவர்கள் நிலையில் இருந்து யோசித்துப் பாருங்கள்..!

எப்போதும் மறியல் என்றவுடன் பஸ்ஸைத் தாக்குகிறார்கள். எரிக்கிறார்கள். ஒவ்வொரு முறையும் பயணிகளுமா மரிக்கிறார்கள். இந்த முறை அவர்களை மீறி நடந்துவிட்டது இது..!
---
இதெல்லாம் நியாயன்றீங்களா அண்ணாச்சி. இந்த பன்னாடைகளுக்கு வக்கலாத்து வேறயா. உங்கள ஒரு பாம்பு கடிக்க வந்துச்சுன்னா இப்படித்தான் பேசிட்டு இருப்பிங்களா]]]

அந்தச் சமயத்தில், அந்த இடத்தில் மோதல் ஏற்பட்டு இப்போது தூக்குக் கைதிகளாக இருப்பவர்கள் மாண்டிருந்தால்கூட அது கொலையாகத்தான் பதிவு செய்யப்படும்..!

இங்கே குற்றம் இரண்டாவதுதான்.. உயிர்தான் முதலில் மதிக்கப்படுகிறது..!

உண்மைத்தமிழன் said...

[[[இராமசாமி கண்ணண் said...
என்னிக்காது இந்த மாதிரி உயிர் போற்த நேர்ல பாத்துருக்கிங்களா நீங்க..]]]

பார்த்திருக்கேன்.. மதுரைல.. பட்டப் பகலில் படுகொலை..!

உண்மைத்தமிழன் said...

[[[இராமசாமி கண்ணண் said...

//வாழ்க்கையில் ஏதேனும் ஒரு அனுபவம் கிடைத்த பின்புதான் பட்டறிவோடு இருப்பார்கள். அப்படி இவர்களுக்கு ஒரு வாய்ப்பு தரலாமே என்பதுதான் எனது கருத்து..!//

இன்னும் பத்து தடவ எரிச்சதுக்கு அப்புறம் தண்டன தரலாமா அண்ணாச்சி :)... என்னத்த பேசறீங்க நீங்க..]]]

ஜெயிலில் இருந்து விடுதலையாகும் நபர்களையெல்லாம் இனி குற்றம் செய்ய மாட்டார்கள் என்கிற நம்பிக்கையில்தான் விடுவிக்கப்படுகிறார்கள்..!

உண்மைத்தமிழன் said...

[[[இராமசாமி கண்ணண் said...

இதுவரைக்கும் அந்த கட்சிய சேர்ந்த யாராவது அது நடந்தது தப்புன்னு சொல்லிருக்காங்களா.. இது வரைக்கும் சொன்னது எல்லாம் நாங்க சம்பவம் நடந்த இடத்துலயே இல்லன்னுதான். இவனுங்க எல்லாம் இன்னொரு வாய்ப்பு கொடுத்தா திருந்திருவாங்களாம். நீஙக் என்ன இந்த பன்னாடைகளுக்கு sympathy உருவாக்கிறீங்களா :)]]]

நோ.. இவர்கள் மட்டுமல்ல.. எந்தவொரு தூக்குத் தண்டனை கைதிக்கும் நான் குரல் கொடுப்பேன்.

ஏனெனில் நான் தூக்குத் தண்டனையை எதிர்ப்பவன்..!

உண்மைத்தமிழன் said...

[[[ஸ்ரீராம். said...
விசாரணை அப்பீல் என்ற பெயரில் நீண்டு கொண்டே போகும் நடைமுறைகள். இவர்களை இவ்வளவு நாள் விட்டு வைத்ததே தவறு.]]]

யாரையும் வெறுக்க வேண்டாம்.. அதிலும் சக மனிதர்களை வெறுக்காத உள்ளமே வேண்டும் என்று வேண்டிக் கொள்ளுங்கள் நண்பரே..!

உண்மைத்தமிழன் said...

[[[ஜோ/Joe said...

தருமி சொன்னது ...

//...ஆயுள் தண்டனைக்கான கால கட்டமான எட்டு ஆண்டுகளைக் கடந்துவிடக் கூடாது என்பதையும் சுட்டிக் காட்ட விரும்புகிறேன்//

நல்லா சுட்டுறீங்க ..! உங்களைப் போன்ற மகாத்மாக்களையும் புத்தர்களையும் பார்க்கும்போது, அப்படியே ...

*********************
+1]]]

கொல்லலாம் போலிருக்கா..? ஹா.. ஹா.. ஹா..

மனித உரிமைகள் கைதிகளுக்கும் உண்டு ஜோ..!

உண்மைத்தமிழன் said...

[[[julie said...

வணக்கம் சார்

எத வச்சு நீங்க இவங்களுக்கு 8 ஆண்டு சிறை தண்டனை போதும்னு சொல்றீங்க. வெளியில் நடமாடுறதவிட சிறையில் இவங்களுக்கு ராஜபோக மரியாதையை கிடைக்கும் சார்.]]]

அதனைவிட அதிகமான மன வேதனையை இனிமேல் இவர்கள் தாங்கள் சாகின்றவரையிலும் அனுபவிக்கப் போகிறார்கள்.. இந்தத் தண்டனையே போதாதா..?

உண்மைத்தமிழன் said...

[[[basheer said...
மூன்று பெண்களில் ஒன்று உங்களுடையதாக இருந்தாலும் தூக்கு தண்டனையை எதிர்ப்பீர்களா?]]]

நிச்சயமாக எதிர்ப்பேன்..!

உண்மைத்தமிழன் said...

[[[ஜெரி ஈசானந்தன். said...

உங்கள் கருத்துகள் வன்மையாய் கண்டிக்கத்தக்கது..]]]

நன்றி ஜெரி..!

உண்மைத்தமிழன் said...

[[[sivakasi maappillai said...

நல்லா யோசித்து பாத்தா... இந்த தூக்கு தண்டணை கூடாது என்ற கூட்டம் உருவானது (வலுவானது) ராஜீவ் கொலையாளிகளின் தண்டனைக்கு பிறகுதான்.

இவர்கள் விருப்பபட்டவர்களுக்கு ஆயுள் தண்டனை. பொதுமன்னிப்பு. விடுதலை என்று தனி நீதிமன்றம் போல புலம்பி கொண்டிருப்பார்கள்...

உ.த மற்றும் சில பதிவர்களை தொடர்ந்து படிப்பவர்களுக்கு இது புரியும். தடை செய்யப்பட்ட இயக்கத்தின் ப‌ண‌ம் விளையாடும் சில‌ரால் தூண்ட‌ப்ப‌டும் சில‌ரின் ப‌திவுக‌ளை ப‌டித்து உண்ர்ச்சி வ‌ச‌ப்ப‌டுப‌வ‌ர்க‌ளை க‌ண்டால் சிரிப்புதான் வ‌ருகிற‌து.]]]

அப்படியென்றால், நான் புலிகளிடம் பணம் வாங்கிக் கொண்டு அவர்களுக்கு ஆதரவாக எழுதுகிறேன் என்கிறீர்களா..?

உண்மைத்தமிழன் said...

[[[புன்னகை தேசம். said...

எவ்வளவுதான் பணத்தினை அந்தக் குடும்பங்களுக்கு அள்ளிக் கொடுத்து சமாதானம் செய்தாலும், அவர்களைக் கொலைப் பலிபீடத்திற்கு அனுப்பி வைத்த ரத்தக் கறை ஜெயலலிதாவின் கையை விட்டுப் போகாது என்பது நிச்சயம்..!
-----------------

அதே.. தண்டனையினால் வலி மாறாது மறையாது..:(]]]

அவர் அதனை நினைக்கணுமே..?

உண்மைத்தமிழன் said...

[[[jagadeesh said...
madurai dinakaran office torched by minister alagiri&co. but the verdict came as a air-conditioner fault? innocent people killed. who cares about innocent people.]]]

இதையெல்லாம் கேக்கப்படாது ஜெகதீஷ்.. அவர்களெல்லாம் தேவாதிதேவர்கள்.. கொலை செய்வதற்கு அவர்களுக்கு முழு அனுமதி தரப்பட்டிருக்கிறது..! இதையெல்லாம் எந்த நீதிமன்றமும், அரசும் கேள்வி கேட்க முடியாது..!

Paleo God said...

அந்தக் கொழந்தையே நீங்கதான் சார்...




--

படிச்சதும் இதுதாண்ணே சொல்லத் தோணிச்சி! :(

Paleo God said...

ஒரு நிரபராதி தண்டிக்கப் படக்கூடாது அதானேண்ணே நீங்க சொல்ல வர்றது அப்ப நிரபராதிங்கள எரிச்சா ஓக்கேயாண்ணே?


போங்கண்ணே இன்னமும் கண்லயே நிக்கிது உயிர்களோட அலறல்..!

பிரபல பதிவர் said...

//அப்படியென்றால், நான் புலிகளிடம் பணம் வாங்கிக் கொண்டு அவர்களுக்கு ஆதரவாக எழுதுகிறேன் என்கிறீர்களா..?
//

கண்டிப்பாக, சர்வ நிச்சயமாக‌ உங்களை தவறாக சொல்லவில்லை தமிழா......


தூக்குதண்டணை எதிர்ப்பு வரலாறின் ஆணிவேரைத்தான் குறிப்பிட்டேன்

m.prabhu6@gmail.com said...

hi this is prabhu from coimbatore
covaikusumbu.blogspot.com

pichaikaaran said...

தூக்கு தண்டனை சரியா , தவறா என்பது தனி விவாத்துக்கு உரிய விஷயம்..
ஆனால் தூக்கு தண்டனை என்ற உடனேயே மனித உரிமை , அது இது என களத்தில் இறங்கும் சிலர் , இப்போது மவுனம் சாதிப்பது குறிப்பிட்த்தக்கது..
பாதிக்கபடுபவர் யார் என்பதை பொருத்தே இவர்கள் மனிதாபிமானம் வேலை செய்யும் போலும்..
எது எப்படியோ.. இந்த விவாகாரம் தேசிய பிரச்சினையாக மாறினாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை...

பாலா said...

//மனித உரிமைகள் கைதிகளுக்கும் உண்டு ஜோ..!//

ரைட்டுங்கண்ணே!! மனித உரிமைங்கறது கைதிகளுக்கு மட்டுமல்ல.

நீங்க எப்பவும் திட்டும் அரசியல்வியாதிகளுக்கும், இன்னும் ஒவ்வொரு அயோக்கியத்தனம் செய்பவனுக்கும் இருக்கு.

இனிமே நீங்களும் கோபமா எதாவது அநியாயத்தை கண்டு பொங்க வேணாம்.

ஏன்னா அந்த அநியாயம் திட்டமிட்டே நடந்திருந்தாலும்... அதுக்கும் நீங்க முன்னாடி சொன்னமாறி ‘சந்தர்ப்ப சூழ்நிலை’-ன்னு ஒன்னு இருக்கும்.

ஏன்... நாளைக்கு பதிவர்களுக்கே எதாவது ஒன்னுன்னா கூட, நாம யாரும் கண்டுக்க வேணாம். அதுவும் எதாவது சந்தர்ப்ப சூழ்நிலையாவே இருந்திருக்கும்.

=========

ரோட்டுல வெட்டி கொன்னவனுக்கும் ஆயுள்தண்டனைதானேண்ணே உங்க சட்டத்துல கொடுக்க முடியும். அப்படியே தூக்கு கொடுத்தாலும்..

.. உங்களை மாறி மனித உரிமை காப்பாளர்கள் எல்லாம் ஒன்னு சேர்ந்து, அதை எதிர்த்து, ஒரு நாலு வருசத்தில் வெளிய கொண்டு வந்துடுவீங்க. அப்படிதானே?

நீங்க இன்னும் என்னோட எந்த கேள்விக்கும் பதில் சொல்லலை. இதே ஆள் மன்னிச்சி வெளிய வந்து, இன்னொரு பஸ்ஸை எரிச்சா.. என்னப் பண்ணுவீங்க?

பைத்தியக்கார ஆஸ்பித்திரின்னு திரும்ப ஆரம்பிக்காதீங்கண்ணே!

ஸ்ரெய்ட் ஆன்ஸர் சொல்லுங்க.

Thomas Ruban said...

//கோவை வேளாண்மை பல்கலைக்கழக மாணவர்களும், மாணவிகளும் இந்தக் கொடுமையை எதிர்த்து சாலை மறியல், உண்ணாவிரதப் போராட்டம் என்றெல்லாம் ஆரம்பித்தபோது என்ன காரணத்தினாலோ அவர்கள் மீது தடியடி நடத்தி, மாணவர்களும், மாணவிகளும் கை, கால்களில் கட்டுப் போடுகின்ற அளவுக்கு மிருகத்தனமாக அடித்து உதைத்தது ஏன் என்றுதான் எனக்கு இப்போதுவரையிலும் தெரியவில்லை.//

Read more: http://truetamilans.blogspot.com/2010/08/blog-post_30.html#ixzz0yBv1qvSX


http://tamilfuser.blogspot.com/2010/08/blog-post_29.html

இதை நேரம் கிடைக்கும்போது அவசியம் படியுங்கள் நன்றி

Thomas Ruban said...

எய்தவன்(ள்) இருக்க அம்பை நொந்து என்ன பயன்...

Chandru said...

ஹாலிவுட் பாலா கேட்ட கேள்விக்கு பதில் சொல்லுங்க

சாதாரண பிரச்சனைகளுக்கெல்லாம் பொங்கி எழும் நீங்களா இப்படி???

இந்த பஸ் எரிப்பு ஒரு பெரிய குற்றம்.

அ) இதற்கு தூக்கு தண்டனை கொடுத்தால் பிற்காலத்தில் இது போன்ற குற்றம் நிகழாமல் இருக்க வாய்ப்புள்ளது அல்லது வெகு அரிதாக நடக்கலாம்

ஆ) மன்னித்தால் திரும்ப நிகழ அதிக வாய்ப்புள்ளது

உண்மை தமிழன்!!!! எதை தேர்ந்தெடுப்பிர்கள்??

Chandru said...

///எய்தவன்(ள்) இருக்க அம்பை நொந்து என்ன பயன்...///

எய்தவனின் நோக்கம் உயிர் பலியாக இருக்காது.. அதை செய்தது இந்த முட்டாள் தொண்டர்கள்.. ஆதலால் இவர்கள் வெறும் அம்பல்ல.. குற்றவாளிகள்

Thomas Ruban said...

//@Chandru

எய்தவனின் நோக்கம் உயிர் பலியாக இருக்காது.. அதை செய்தது இந்த முட்டாள் தொண்டர்கள்.. ஆதலால் இவர்கள் வெறும் அம்பல்ல.. குற்றவாளிகள்//

வன்முறையை ஆதரிக்கலாமா!!!
அப்படி பார்த்தால் குற்றம் செய்தவனைவிட குற்றம் செய்ய தூண்டியவர்களுக்கு தானே அதிகம் தண்டனை கொடுக்க வேண்டும்.(மக்கள் கொடுத்து விட்டார்கள் அது வேறு விசியம்)
நன்றி.

Thomas Ruban said...

//அதை செய்தது இந்த முட்டாள் தொண்டர்கள்//

தலைவற்காக தீக்குளிக்கிற வேண்டியது இந்த முட்டாள்!!தொண்டர்கள...

பாலா said...

அண்ணே.. வெளிய வாங்க..!

இன்னும் எம்புட்டு நேரம்தான் நான் ரீஃப்ரெஷ் பண்ணிகிட்டே இருக்கறது?

தருமி said...

தல ... நீங்க ஒண்ணும் பேஜாராக வேணாம். ரெண்டு விஷயம் --

1.
பாருங்க உங்க பதிவுக்கு 33 பேரு likes போட்டுருக்காங்க
12 பேர் + போட்ருக்காங்க.

(உங்கள மாதிரி அறிவு ஜீவிகள் இம்புட்டு இருப்பாங்கன்னு எனக்குத் தெரியாது.)உலகமே உங்க பின்னால நிக்கிறது மாதிரி எனக்குத் தெரியுது.

2.
உங்களுக்கு எதுக்கு கவலை; ஒண்ணும் ஆகாது. அடுத்தது நம்ம மம்மிதான் ஆட்சி புடிக்குது. வந்ததும் முதல் காரியமா இந்த மூணு நாய்களுக்கும் .. சாரி .. தலைகளுக்கும் எப்டியோ அங்க இங்க போய் ஒரு மன்னிப்பு வாங்கிறாதா நம்ம மம்மி. அதுக்குப் பிறகு இந்த மூணும் மார்க்கண்டேயர்கள்தான்.

முடிஞ்சா கட்சிக்கு செய்த காரியத்துக்காக இவுகளுக்கு சிலை நம்ம மம்மி வச்சாலும் வைக்கும். அதுக்குக் கீழே நாம பதிவர் மீட்டிங் போட்டிருவோம்.

என்ன சொல்லுதிய ...?

உண்மைத்தமிழன் said...

தாமஸ் ரூபன், பார்வையாளன், சிவகாசி மாப்பிள்ளை, சந்துரு, ஹாலிவுட் பாலா, தருமி..

மன்னிக்கணும்.. மன்னிக்கணும்..!

இதுவே போதும்னு நினைக்கிறேன். சொன்னதையே திருப்பித் திருப்பிச் சொல்றதால என்ன புண்ணியம்..?

உங்களுடைய கொள்கையை என்னால மாத்த வைக்க முடியாது. ஏன்னா நான் முருகன் இல்லை. மனுஷன்..!

என் கொள்கையை நான் அனுபவப்பூர்வமாக உணர்ந்து சொல்கிறேன்.. சட்டப் புத்தகத்தை வைத்து அல்ல. ஒரு சில விஷயங்களில் சட்டத்தை கண்ணை மூடிக் கொண்டு பின்பற்றுவது தேவையில்லை என்பது எனது கருத்து..!

விட்டுவிடுங்கள்..!

அடுத்தப் பதிவு போட்டிருக்கிறேன். அங்கு வாருங்கள்.. சந்திப்போம்..!

R. Gopi said...

பின்னூட்டம் இடலாம் என்றுதான் நினைத்தேன். மிகவும் பெரிதாகப் போனதால் தனிப் பதிவாகவே போட்டுவிட்டேன்

http://ramamoorthygopi.blogspot.com/2010/08/blog-post_31.html

geethappriyan said...

ஏண்ணே
நீங்க எவ்ளோ மூத்த பதிவரு?
நீங்க போயி இப்புடி பன்னாடைகளுக்கு பரிஞ்சு பேசலாமா?சரியில்லண்ணே.
ஹாலிபாலியின் கோபம் முற்றிலும் உண்மையானது,நான் சூடு ஆறிய பின்னர் வந்துவிட்டேன்.நேற்றே வந்திருக்கனும்.கண்ணை மூடி முருகன் கிட்ட கேளுங்க,

geethappriyan said...

ஏண்ணே
நீங்க எவ்ளோ மூத்த பதிவரு?
நீங்க போயி இப்புடி பன்னாடைகளுக்கு பரிஞ்சு பேசலாமா?சரியில்லண்ணே.
ஹாலிபாலியின் கோபம் முற்றிலும் உண்மையானது,நான் சூடு ஆறிய பின்னர் வந்துவிட்டேன்.நேற்றே வந்திருக்கனும்.கண்ணை மூடி முருகன் கிட்ட கேளுங்க,

geethappriyan said...

ஏண்ணே
நீங்க எவ்ளோ மூத்த பதிவரு?
நீங்க போயி இப்புடி பன்னாடைகளுக்கு பரிஞ்சு பேசலாமா?சரியில்லண்ணே.
ஹாலிபாலியின் கோபம் முற்றிலும் உண்மையானது,நான் சூடு ஆறிய பின்னர் வந்துவிட்டேன்.நேற்றே வந்திருக்கனும்.கண்ணை மூடி முருகன் கிட்ட கேளுங்க,

பாலா said...

யாருப்பா இது?? முடிஞ்ச மேட்டர்ல மூணு தபா எக்கோ கொடுக்கறது?

உண்மைத்தமிழன் said...

கோபி.. பார்த்திட்டேன். எனது பின்னூட்டத்தையும் போட்டுவிட்டேன்.. நன்றி..!

கீதப்பிரியன்.. இத்தனை தூரம் பேசிய பின்பு மீண்டும் முதலில் இருந்து எப்படி துவக்குவது.. போதுமே..!

உண்மைத்தமிழன் said...

[[[ஹாலிவுட் பாலா said...
யாருப்பா இது?? முடிஞ்ச மேட்டர்ல மூணு தபா எக்கோ கொடுக்கறது?]]]

அண்ணே.. முடிச்சிட்டேண்ணே.. விட்ருங்கண்ணே..!

abeer ahmed said...

See who owns hyperdrug.co.uk or any other website:
http://whois.domaintasks.com/hyperdrug.co.uk

abeer ahmed said...

See who owns seositemanager.com or any other website.