பேசுவது கிளியா - திரை விமர்சனம்

10-08-2010

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

சென்ற மாதம் புதிதாகப் பொறுப்பேற்ற தமிழ்நாடு திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகிகள், “இனிமேல் வாரத்திற்கு 3 தமிழ்ப் படங்கள் மட்டுமே திரையிட அனுமதி தரப்படும்” என்று தேர்தல் முடிவுகள் வெளிவந்த அன்றைக்கே ஒரு தீர்மானத்தை தெரிவித்தார்கள்.

அதன்படி இப்போது வாரத்திற்கு மூன்று தமிழ்த் திரைப்படங்கள் மட்டுமே திரையிடப்படும். அதில் பெரிய பட்ஜெட் திரைப்படம் ஒன்று.. சிறு பட்ஜெட் திரைப்படங்கள் இரண்டு என்று பேசி முடிவெடுத்திருக்கிறார்கள். இந்த சிறு பட்ஜெட் படங்களில் வெளியிடுவதற்கு தயாராக இருக்கிறோம் என்று அனுமதி கேட்டு பதிவு செய்து காத்திருக்கும் திரைப்படங்களை வரிசையாக வெளியிட அனுமதி தருகிறார்கள்.

அந்த வகையில் இந்த வாரம் வெளிவந்திருக்கும் ஒரு திரைப்படம்தான் பேசுவது கிளியா என்பது..! இப்படத்தை கொஞ்சமாவது வெளியில் பேச வைத்தது இப்படத்தின் இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானின் தங்கை ஏ.ஆர்.ரைஹானா என்பதால்தான்..!


படத்தின் துவக்கமே கரகாட்டம், மயிலாட்டம், ஒயிலாட்டம் என்று போட்டு மாணிக்கவிநாயகத்தின் கணீர் குரலில் “வந்தவரை வாழ வைக்கும் தமிழகம்” என்று ஆரம்பிக்க வித்தியாசமாக எதையோ சொல்லப் போகிறார்கள் என்று நினைத்து மொத்தமாக ஏமாந்து போனேன்..!


காதலைக்கூட இழக்கலாம். ஆனால் எந்தக் காரணத்திற்காகவும் நட்பை இழக்கக் கூடாது என்பதுதான் படத்தின் மையக் கருத்து. ஆனால் இதற்கு இவர்கள் செய்திருக்கும் வழி, டிவி சீரியல் கதாசிரியர்கள்கூட இப்படி யோசித்திருக்க மாட்டார்கள்..!  


சக்தி, தர்ஷினி, சிவா மூவரும் ஒரே கல்லூரியில் படிக்கிறார்கள். தர்ஷினிக்கு சிவா மீது காதல். ஆனால் சிவாவுக்கு இல்லை. சக்தியும் சிவாவும் மிக நெருங்கிய நண்பர்கள். ஆனால் காதல் இல்லை..

சக்தி தனது பணக்கார அப்பா, அம்மாவின் புறக்கணிப்பால் போதை மருந்துக்கு அடிமையாகி தவிக்கிறாள். அவளை ஒரு வழியாக மீட்டெடுத்து சிகிச்சையளித்து காப்பாற்றுகிறான் சிவா. இதனால் அவனுடன் இன்னும் அட்டாச் ஆகிறாள் சக்தி.


அந்த போதை மருந்தை உட்கொண்ட காலக்கட்டத்தில் சக்தியில் உடலில் ஏறிய எய்ட்ஸ் நோய்க்கிருமி கடைசியில் அவளை படுக்க வைக்கிறது. இப்போது தர்ஷினியும், சிவாவும்தான் அவளை மருத்துவனையில் சேர்த்து கவனித்துக் கொள்கிறார்கள். தன்னைக் கவனிக்கவும் பிரெண்ட்டுகள் இருந்ததினால் தன்னை பார்க்க மருத்துவமனைக்கு ஓடி வரும் பெற்றோரைக்கூட சந்திக்க மறுக்கிறாள் சக்தி. 


கடைசியில் மருத்துவம் பலனளிக்காமல் சக்தி இறந்துபோய்விட.. காதலைவிட நட்பே சிறந்தது.. கூடவே பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளுடன் அரவணைப்புடன் வளர்க்க வேண்டும் என்ற உயர்ந்த தத்துவத்தை கண்டுபிடித்துச் சொன்னதோடு வெளியில் விட்டார்கள்..!


கண்ணுகளா.. ரொம்பக் கஷ்டப்பட்டு கதையைச் சொல்லி முடிச்சிருக்கேன். ஆனா உள்ள உக்காந்திருக்கும்போது நான் பட்ட கஷ்டம் இருக்கே..! முடியலடா சாமி..! என்னதான் வீறாப்பா ஒரு பதிவு போடுறதுக்கு இதை பார்த்தே ஆகணும்னு விரும்பிப் போய் கழுத்தறுபட்டு திரும்பி வந்திருக்கேன்..! எனக்குக் கொழுப்புதான்..!

உசுப்பிவிட்ட உத்தமர்களே.. நல்லாயிருங்க..!

லோக்கல் சேனல்ல ஓட்டுற சீரியல்லகூட கொஞ்சம் நடிப்பைக் கொட்டியிருப்பாங்க.. இதுல நடிப்பா.. அப்படின்னா என்னன்னு கேள்விதான்..!


ஏதோ ஒரு ஆர்வக்கோளாறில் இயக்குநர் களமிறங்கியிருக்கிறார். மேடை நாடகம் அளவுக்குக்கூட இல்லாமல் நடிகர்கள் ஏனோ தானோவென்று நடித்து வைத்திருக்க.. சென்சார் போர்டும், டப்பிங் ஆர்ட்டிஸ்டுகளும் எப்படித்தான் இதனை பொறுமையாக பார்த்தார்கள் என்று தெரியவில்லை..? இந்தப் படத்துக்கு சென்சார் சர்டிபிகேட் தர மறுத்திருந்தால்கூட நியாயம் என்றே சொல்லலாம்..!

புதுமுக ஹீரோ, ஹீரோயின்கள்.. ஹீரோயின்கள் அழுகும்போது நமக்கே அழுகை வருகிறது.. இப்படியெல்லாமா அழுவார்கள் என்று.. இன்னொரு ஹீரோயின் அழுவதே ஹீரோ “ஏம்மா அழுகுற..?” என்று கேட்டபோதுதான் தெரிந்தது.. இப்படியொரு இயக்கம்..!

ஒரு கதைக்குள் பத்து கதையாக சமூகக் கண்ணோட்டத்தையெல்லாம் கொண்டு வந்து திணித்து பேஜார் செய்திருக்கிறார்கள்.

போதை மருந்தை உட்கொள்ளக்கூடாது..!

எய்ட்ஸ் நோயின் அபாயத்தை மக்களிடத்தில் சொல்ல வேண்டும்..!


எய்ட்ஸ் நோயாளிகளை புறக்கணிக்கக் கூடாது..! அவர்களை அரவணைக்க வேண்டும்..!

கல்லூரிக்குள் அரசியலைப் புகுத்தி மாணவர்களை திசை திருப்பும் அரசியல்வியாதிகள்..!

வெட்டியான் வாழ்க்கையில் அவனது அன்றாட ஜீவாதாரப் பிரச்சினைகளை ஒரு பக்கம் முன் வைக்கிறார்கள்..

அவனது குழந்தை காணாமல் போன சூழலிலும் கொண்டு வந்திருக்கும் பொணத்தை ஈமச்சடங்கு செய்ய வெட்டியானை வற்புறுத்தும் ஒரு ஆள்..

வெட்டியான்கள் மற்ற ஊர்க்காரர்களுடன் எந்த விதத்திலும் நெருங்க முடியாது.. ஒட்ட முடியாது என்பதை வசனத்திலேயே சொல்கிறார்கள்..!

கேப்பங்கூழ் குடிப்பது உடலுக்கு நல்லது என்று போதை மருந்து பார்ட்டியிடம் சொல்லி நம்மையும் குடிக்கச் சொல்கிறார்கள்..!

திருநங்கைகளும் மனிதர்கள்தான். அவர்களையும் சமூகத்தில் மற்றவர்களைப் போல் அரவணைத்துப் போக வேண்டும் என்பதை நிஜ திருநங்கையான பிரியாபாபுவின் மூலமாகவே சொல்லியிருக்கிறார்கள்..!


கதை இப்படித்தான் போகிறது என்று யோசித்தால் மறு காட்சியிலேயே வேறு இடத்துக்குக் கொண்டு போகிறார்கள்.. இப்படியே ரீலுக்கு ரீல் கதையை மாற்றி, மாற்றி ஓட்டி, நம் பொறுமையைச் சோதிக்கிறார்கள்..

இந்த பிளாக் மட்டும் இல்லைன்னா 60 ரூபா போனா போகுதுன்னு சொல்லி ஓடி வந்திருக்கலாம்..! விட்டானா முருகன்..!

படத்தி்ன் விளம்பரத்திற்காக இவர்கள் பயன்படுத்தியிருக்கும் பெண்ணின் திறந்த முதுகு, உண்மையில் அவள் மருத்துவமனையில் தங்கியிருக்கும்போது ஏற்படும் புண்ணுக்கு மயிலிறகால் எண்ணெய் தடவுகின்ற சீன்.. படத்தின் இயக்குநர் எப்பேர்ப்பட்ட கில்லாடி பாருங்க..


இந்தப் படத்திற்குப் போய் நான் பெற்ற ஒரேயொரு சந்தோஷம்.. சங்கத் தலைவி, தன்மானத் தலைவி, சிங்கத் தலைவி, இனமானத் தலைவி, கவர்ச்சிப் புயல்.. நடிப்பரசி.. ஷகிலாவை நீண்ட நாட்கள் கழித்து பார்த்ததுதான்..!

அதுவும் இரண்டே இரண்டு சீன்கள்.. ஒரு சீனில் முத்துக்காளையை ஒரே கையால் தூக்கி டிஷ்யூம் செய்தது மறக்க முடியாதது..


இன்னுமொரு காட்சியில் கதாநாயகி அழுவதற்கு மடியைக் கொடுத்துவிட்டு, தானும் கொஞ்சூண்டு அழுது இத்திரைப்படத்தில் நடித்த ஒரேயொரு நடிகர் என்கிற பெயரைத் தட்டிச் சென்றார்.. வயது 35 ஆனாலும் இன்னமும் அப்போது போலவேதான் இருக்கிறார் தலைவி.. என்றும் இளமையோடு நீடுழி வாழட்டும்..


இந்தப் படம் பற்றிய இன்னுமொரு புரியாத புதிர். இந்தப் படத்திற்கு இசையமைக்க ரைஹானா எதற்காக ஒத்துக் கொண்டார் என்பதுதான்..!

படத்தில் இருந்த பாடல்களையும், பி்ன்னணி இசையையும் கேட்டீர்கள் எனில் நொந்து போவீர்கள்.. பின்னணி இசை பாதி இடங்களில் காணாமல் போய் வெறும் காற்றுதான் வந்தது..! ரீரெக்கார்டிங்கில் படத்தை ரைஹைனா பார்த்தாரா.. இல்லையா.. என்பதே சந்தேகமாக இருக்கிறது..!

காரணம், நான் போன நேரத்துக்கு ரைஹானாவும் படம் பார்க்க வந்திருந்ததுதான்..

விருகம்பாக்கம், தேவி கருமாரி காம்ப்ளக்ஸிற்கு பொதுவாகவே பெண்கள் அதிகம் வர மாட்டார்கள். அவ்வளவு சுத்தம்.. அதிலும் மூன்றாவது மாடியில் இருக்கும் சக்தி கருமாரி தியேட்டர், மேட்டர் படங்களுக்காகவே ஒதுக்கப்பட்டது..!

ரைஹைனா துணைக்கு ஒரு பெண்ணுடனும், ஒரு சிறுவனுடனும் தன்னுடைய மேனேஜருடனும் வந்திருந்தார். டிக்கெட் வாங்கும் இடத்தில் அவரைப் பார்த்தவுடனேயே எனக்கு பகீரென்றது.. இந்தப் படத்தை இந்தத் தியேட்டரில் பார்த்து இவர் என்ன செய்யப் போகிறார்..? யாரும் தியேட்டரை பற்றி அவரிடம் ஏதும் சொல்லவில்லையோ என்று நினைத்தேன்.. இத்தனைக்கும் தியேட்டரில் ஏஸியும் கிடையாது..!

வேடிக்கையை பார்ப்போம் என்று காத்திருந்தேன். ரைஹானா தியேட்டரின் உள்ளே வந்ததும் ஒரு நிமிடம் ஸ்தம்பித்துப் போனார். தப்பான இடத்துக்கு வந்துவிட்டோமோ என்று பேயறைந்தார்போல் நின்றார். அவரைவிட அதிர்ச்சியில் இருந்தது உள்ளேயிருந்த 15 ஆண்கள்.

ஏற்கெனவே மேட்டர் படம் என்ற சந்தோஷத்தில் வந்தவர்கள் இரண்டு பெண்களை பார்த்து திகைத்துப் போய் நிற்க.. சமாளித்துக் கொண்டு ஒரு ஓரமாகப் போய் உட்கார்ந்தார்கள். அங்கே காற்று வரவில்லை. மேனேஜர் தியேட்டர் முழுக்க நடந்த பேன் காற்று எங்கே வருகிறது என்று தேடிப் பார்த்து, ரைஹானா அண்ட் கோவை அங்கே அழைத்து வந்து உட்கார வைத்தார்.

ஒரு முக்கால் மணி நேரம் நெளிந்து, கிழிந்து அமர்ந்து பார்த்த ரைஹைனாவால் அதற்கு மேல் தாங்க முடியவில்லை போலும்.. மேனேஜரை ஒரு முறை முறைத்துவிட்டு வேகமாக எழுந்து வெளியேற, மேனேஜர் தலையைத் தொங்கப் போட்டுக் கொண்டு பின்னாடியே வெளியேறியது தியேட்டரில் பார்த்த சுவையான காட்சி..!

இனியாவது ரைஹானா ஆள் பார்த்து, கதை கேட்டு இசையமைப்பார் என்று நம்புவோமாக..!

எங்க விட்டேன்..? வேணாம்.. எனக்கே வெறுப்பா இருக்கு.. இதோட போதும்.. பொத்திக்கிட்டு போய் தூங்குங்க..!

உங்களுக்காக நான் படுற கஷ்டம் இருக்கே..!????

60 comments:

க ரா said...

அண்ணே நீங்க பெரிய தியாகிண்ணே :)

Unknown said...

அண்ணே தூங்கபோறேன்...

பாலா said...

ச்சே... அண்ணே.. இன்சப்ஷன் எழுதினதில் பிஸியாகிட்டேன்.

ஏன்னே... இந்தப் பதிவு.. எப்ப எழுதுனீங்க? எழுத்து கூட்டுறதுக்கு முன்னாடியா.. பின்னாடியா?

பாலா said...

//உங்களுக்காக நான் படுற கஷ்டம் இருக்கே..!??//

நானுந்தாண்ணே...... :(

Cable சங்கர் said...

அண்ணே ஆவூன்னா கிளப்பிவிட்டுட்டானுங்கனுபுலம்புறீங்களே.. அவங்க சொன்ன கிளப்பிட்டு போயிருவீங்களோ.:)

Katz said...

உங்களோட பானா காத்தாடி விமர்சனத்த படிச்சுட்டு அதே காம்ப்ளக்ஸ்ல இருக்க தேவி கருமாரி அம்மன் தியேட்டருக்கு போய் பார்த்துட்டு பாதியிலே வெளிய வந்துட்டேன். நீங்க சொன்ன அளவுக்கெல்லாம் படம் ஒண்ணுமே இல்ல. சரி விடுங்க.


ஆனா இந்த படம் பார்த்ததுக்காக உங்களுக்கு மெரீனா பீச்சுல காந்தி தாத்தா பக்கத்துல உங்களுக்கு ஒரு சிலையே வைக்கலாம். வாழ்க உங்கள் திருப்பணி.

kanagu said...

/*கண்ணுகளா.. ரொம்பக் கஷ்டப்பட்டு கதையைச் சொல்லி முடிச்சிருக்கேன். ஆனா உள்ள உக்காந்திருக்கும்போது நான் பட்ட கஷ்டம் இருக்கே..! முடியலடா சாமி..!*/

உண்மையிலேயே நீங்க எழுதனதுலேயே நல்ல சிரிப்பான விமர்சனம்-னா அது இது தான் அண்ணா... :)

இத எப்படி முழுக்க உட்கார்ந்து பாத்தீங்க தான் -னு தெரியல.. இனிமே எழுந்து வந்துருங்க :)

இந்த படம் வந்ததே தெரியமா இருந்தேன்... ஹீம்ம்ம்ம்

ஜெட்லி... said...

//இந்தப் படத்தை இந்தத் தியேட்டரில் பார்த்து இவர் என்ன செய்யப் போகிறார்..?


//


எனக்கு தெரிஞ்சு அந்த படம் அங்க மட்டும் தான் ரீலீஸ்
ஆயிருக்கு... வேற எங்கே போவாங்க...

ஜெட்லி... said...

சரி சரி...உங்க வேதனை ஆதங்கம் எல்லாம் புரியுது...
A னு சர்டிபிகேட் கொடுத்த படத்திலே எதுவும் காட்டறது இல்லை...
இந்த பட விளம்பரத்தில் ஒண்ணும் போடல...
நீங்க முதுகை பார்த்து போனது உங்க தப்பு....
அடுத்த வாரமாவது நல்ல அட்டு படத்துக்கு விமர்சனம்
போடுங்க அண்ணே...!!

pichaikaaran said...

ஒட்டு மொத்த தமிழ் நாட்டின் வேண்டுகோளை ஏற்று , இந்த படத்திற்கு விமர்சனம் எழுதி, தான்தான் உண்மை எழுத்தாளன் .சிலரைப் போல உதார் எழுத்தாளன் அல்ல என நிரூபித்த அண்ணன் உண்மை தமிழனை பாராட்ட வயதில்லை . வணங்கி மகிழ்கிறேன்

pichaikaaran said...

ஏண்ணே சுருக்கமா முடிச்சிட்டீங்க ? விடுங்கண்ணே . அவய்ங்க எப்பவும் இப்படித்தான் . போஸ்டர் ல இருக்கும் சீன் படத்துல இருக்காது. ஆனா அவளின் உணர்ச்சிகள் அந்த மாதிரி இல்ல . பார்க்க வேண்டிய படம்

நசரேயன் said...

நான் தான் முதல்ல ன்னு நினைச்சிகிட்டு வந்தேன்

நசரேயன் said...

இருந்தாலும் முத ஓட்டு என்னுது

நசரேயன் said...

//முடியலடா சாமி..! என்னதான் வீறாப்பா ஒரு பதிவு போடுறதுக்கு இதை பார்த்தே ஆகணும்னு விரும்பிப் போய் கழுத்தறுபட்டு திரும்பி வந்திருக்கேன்..!//

அண்ணே நீங்க ரெம்ப நல்லவரு

நசரேயன் said...

//
வயது 35 ஆனாலும் இன்னமும் அப்போது போலவேதான் இருக்கிறார் தலைவி.. என்றும் இளமையோடு நீடுழி வாழட்டும்..
//


வாழ்க தலைவி

நசரேயன் said...

//
ஆனா இந்த படம் பார்த்ததுக்காக உங்களுக்கு மெரீனா பீச்சுல காந்தி தாத்தா பக்கத்துல உங்களுக்கு ஒரு சிலையே வைக்கலாம்.
//

நான் எப்பவோ சொல்லிட்டேன்

சி.பி.செந்தில்குமார் said...

படத்தோட விமர்சனத்தை விட ரெஹைனா அனுபவம் சூப்பர்.பல பேரோட நேரத்தையும்,பணத்தையும் காப்பாத்தீட்டீங்க.

தருமி said...

இந்த தடவை முழுசா வாசிச்சிட்டேனே ...

உங்களுக்காக நான் படுற கஷ்டம் இருக்கே..!????

பிரபல பதிவர் said...

அப்றம்... நர்ஸ், அவளின் உணர்ச்சிகள் விமர்சனம் எப்போ????...

R. Gopi said...

//உங்களுக்காக நான் படுற கஷ்டம் இருக்கே..!????//

தப்பே இல்ல, ஒரு ஊர் நல்லா இருக்க ஒருத்தர் கஷ்டப்படலாம்.

அன்புடன்

ஆர் கோபி

ramalingam said...

//ஒரு ஊர் நல்லா இருக்க ஒருத்தர் கஷ்டப்படலாம்//
சூப்பர் டயலாக்.

உண்மைத்தமிழன் said...

[[[இராமசாமி கண்ணண் said...
அண்ணே நீங்க பெரிய தியாகிண்ணே :)]]]

உங்களுக்குத் தெரியுது.. மத்தவங்களுக்கு..?

உண்மைத்தமிழன் said...

[[[கே.ஆர்.பி.செந்தில் said...
அண்ணே தூங்கப் போறேன்.]]]

சரி.. சரி..!

உண்மைத்தமிழன் said...

[[[ஹாலிவுட் பாலா said...
ச்சே... அண்ணே.. இன்சப்ஷன் எழுதினதில் பிஸியாகிட்டேன்.
ஏன்னே... இந்தப் பதிவு.. எப்ப எழுதுனீங்க? எழுத்து கூட்டுறதுக்கு முன்னாடியா.. பின்னாடியா?]]]

இன்செப்ஷனுக்கு இப்ப விமர்சனம் எழுதி என்னாகப் போகுது பாலா..?

உண்மைத்தமிழன் said...

[[[ஹாலிவுட் பாலா said...

//உங்களுக்காக நான் படுற கஷ்டம் இருக்கே..!??//

நானுந்தாண்ணே...... :(]]]

ஸேம் பிளட்..!

உண்மைத்தமிழன் said...

[[[Cable Sankar said...
அண்ணே ஆவூன்னா கிளப்பி விட்டுட்டானுங்க னுபுலம்புறீங்களே. அவங்க சொன்ன கிளப்பிட்டு போயிருவீங்களோ.:)]]]

எல்லாம் ஒரு பாசந்தான்..!

உண்மைத்தமிழன் said...

[[[வழிப்போக்கன் said...
உங்களோட பானா காத்தாடி விமர்சனத்த படிச்சுட்டு அதே காம்ப்ளக்ஸ்ல இருக்க தேவி கருமாரி அம்மன் தியேட்டருக்கு போய் பார்த்துட்டு பாதியிலே வெளிய வந்துட்டேன். நீங்க சொன்ன அளவுக்கெல்லாம் படம் ஒண்ணுமே இல்ல. சரி விடுங்க.]]]

பாதில வர்ற அளவுக்கெல்லாம் அந்தப் படம் அப்படியொண்ணும் மோசமில்ல வழிப்போக்கன்ஜி..! நீங்கள் நிச்சயம் சினிமா ரசிகர் இல்லை..!

[[[ஆனா இந்த படம் பார்த்ததுக்காக உங்களுக்கு மெரீனா பீச்சுல காந்தி தாத்தா பக்கத்துல உங்களுக்கு ஒரு சிலையே வைக்கலாம். வாழ்க உங்கள் திருப்பணி.]]]

வைங்க.. வைங்க.. நானே வந்து திறந்து வைக்கிறேன்..!

உண்மைத்தமிழன் said...

[[[kanagu said...

/*கண்ணுகளா.. ரொம்பக் கஷ்டப்பட்டு கதையைச் சொல்லி முடிச்சிருக்கேன். ஆனா உள்ள உக்காந்திருக்கும்போது நான் பட்ட கஷ்டம் இருக்கே..! முடியலடா சாமி..!*/

உண்மையிலேயே நீங்க எழுதனதுலேயே நல்ல சிரிப்பான விமர்சனம்-னா அது இதுதான் அண்ணா... :)

இத எப்படி முழுக்க உட்கார்ந்து பாத்தீங்கதான்னு தெரியல.. இனிமே எழுந்து வந்துருங்க :)

இந்த படம் வந்ததே தெரியமா இருந்தேன்... ஹீம்ம்ம்ம்.]]]

ம்.. நன்றி கனகு தம்பி..!

உண்மைத்தமிழன் said...

[[[ஜெட்லி... said...
//இந்தப் படத்தை இந்தத் தியேட்டரில் பார்த்து இவர் என்ன செய்யப் போகிறார்..?//

எனக்கு தெரிஞ்சு அந்த படம் அங்க மட்டும்தான் ரீலீஸ் ஆயிருக்கு. வேற எங்கே போவாங்க...]]]

அவுட்டர்ல இன்னும் 3 தியேட்டர்ல ரிலீஸ் ஆயிருக்குன்னு சொன்னாங்க..!

பட் நீ சொல்றதும் சரிதான் ஜெட்லி.. அவுங்க வீட்டுக்குப் பக்கத்துல இதுதான் இருக்கு..!

உண்மைத்தமிழன் said...

[[[ஜெட்லி... said...
சரி சரி. உங்க வேதனை ஆதங்கம் எல்லாம் புரியுது. Aனு சர்டிபிகேட் கொடுத்த படத்திலே எதுவும் காட்டறது இல்லை. இந்த பட விளம்பரத்தில் ஒண்ணும் போடல. நீங்க முதுகை பார்த்து போனது உங்க தப்பு. அடுத்த வாரமாவது நல்ல அட்டு படத்துக்கு விமர்சனம் போடுங்க அண்ணே...!!]]]

சரிங்க தம்பி..!

ஆனா ஒரு சந்தேகம்.. நல்ல அட்டு படம் யார் எடுக்குறா..?

அது மாதிரி படம் எடுக்கவும் ஒரு திறமை வேணும்..!

உண்மைத்தமிழன் said...

[[[பார்வையாளன் said...
ஒட்டு மொத்த தமிழ்நாட்டின் வேண்டுகோளை ஏற்று, இந்த படத்திற்கு விமர்சனம் எழுதி, தான்தான் உண்மை எழுத்தாளன். சிலரைப் போல உதார் எழுத்தாளன் அல்ல என நிரூபித்த அண்ணன் உண்மை தமிழனை பாராட்ட வயதில்லை. வணங்கி மகிழ்கிறேன்.]]]

இது நிசமாவே பாராட்டா.. இல்லை மிதியா..?

உண்மைத்தமிழன் said...

[[[பார்வையாளன் said...
ஏண்ணே சுருக்கமா முடிச்சிட்டீங்க? விடுங்கண்ணே. அவய்ங்க எப்பவும் இப்படித்தான். போஸ்டர்ல இருக்கும் சீன் படத்துல இருக்காது. ஆனா அவளின் உணர்ச்சிகள் அந்த மாதிரி இல்ல. பார்க்க வேண்டிய படம்.]]]

அப்படியா? பார்த்திருவோம்..!

உண்மைத்தமிழன் said...

[[[நசரேயன் said...
நான்தான் முதல்லன்னு நினைச்சிகிட்டு வந்தேன்.]]]

ரொம்ப லேட்டுன்னு நினைக்கிறேன் நசரேயன்..!

உண்மைத்தமிழன் said...

[[[நசரேயன் said...
இருந்தாலும் முத ஓட்டு என்னுது.]]]

காலைக் காட்டுங்க நசரேயன்.. தொட்டுக் கும்பிட்டுக்குறேன்..!

மேல பின்னூட்டம் போட்ட மவராசன்களுக்கு இதெல்லாம் தோணுச்சான்னு பாருங்க..!

ஒருத்தன் இவ்ளோ கஷ்டப்பட்டு பொறுமையா படத்தை பார்த்து எழுதியிருக்கான்.. அவனுக்கு நாமளும் ஒரு உதவி செய்வோம்னு ஏன் தோணலை அவங்களுக்கு..?

உண்மைத்தமிழன் said...

[[[நசரேயன் said...

//முடியலடா சாமி..! என்னதான் வீறாப்பா ஒரு பதிவு போடுறதுக்கு இதை பார்த்தே ஆகணும்னு விரும்பிப் போய் கழுத்தறுபட்டு திரும்பி வந்திருக்கேன்..!//

அண்ணே நீங்க ரெம்ப நல்லவரு.]]]

இப்படி உசுப்பேத்தி.. உசுப்பேத்திதான்..?????????????????

உண்மைத்தமிழன் said...

[[[நசரேயன் said...

//வயது 35 ஆனாலும் இன்னமும் அப்போது போலவேதான் இருக்கிறார் தலைவி.. என்றும் இளமையோடு நீடுழி வாழட்டும்..//

வாழ்க தலைவி]]]

வெல்க தலைவி.. வளர்க அவரது புகழ்..!

உண்மைத்தமிழன் said...

[[[நசரேயன் said...
//ஆனா இந்த படம் பார்த்ததுக்காக உங்களுக்கு மெரீனா பீச்சுல காந்தி தாத்தா பக்கத்துல உங்களுக்கு ஒரு சிலையே வைக்கலாம்.//

நான் எப்பவோ சொல்லிட்டேன்]]]

சொன்னது சரி.. யார் நிசமா வைக்கிறதுன்னு பார்க்குறேன்..!

உண்மைத்தமிழன் said...

[[[சி.பி.செந்தில்குமார் said...
படத்தோட விமர்சனத்தைவிட ரெஹைனா அனுபவம் சூப்பர். பல பேரோட நேரத்தையும்,பணத்தையும் காப்பாத்தீட்டீங்க.]]]

அப்படியே நான் நல்லாயிருக்குன்னு சொன்னாலும் யாரும் போயிர மாட்டாங்க செந்தில்..!

வருகைக்கு நன்றி..!

உண்மைத்தமிழன் said...

[[[தருமி said...
இந்த தடவை முழுசா வாசிச்சிட்டேனே.
உங்களுக்காக நான் படுற கஷ்டம் இருக்கே..!????]]]

இதையெல்லாம் முழுசா படிச்சிருங்க..?

ஷகிலான்ற வார்த்தையைப் பார்த்தவுடனேயே படிச்சிருப்பீங்கன்னு நினைக்கிறேன்..!

ஆம் ஐ கரெக்ட்டு..?

உண்மைத்தமிழன் said...

[[[sivakasi maappillai said...
அப்றம்... நர்ஸ், அவளின் உணர்ச்சிகள் விமர்சனம் எப்போ????]]]

நர்ஸ் இன்னும் வெளியாகலை..

அவளின் உணர்ச்சிகள் ஓடியே போயிருச்சு..! பார்க்க முடியாது..!

தப்பிச்சேன் நானு..!

உண்மைத்தமிழன் said...

[[[R Gopi said...

//உங்களுக்காக நான் படுற கஷ்டம் இருக்கே..!????//

தப்பே இல்ல, ஒரு ஊர் நல்லா இருக்க ஒருத்தர் கஷ்டப்படலாம்.

அன்புடன்

ஆர் கோபி]]]

கோபிஜி.. முடியலை..

நீங்க எனக்கு நண்பரா..? இல்லை பகைவரா..?

உண்மைத்தமிழன் said...

[[[ramalingam said...

//ஒரு ஊர் நல்லா இருக்க ஒருத்தர் கஷ்டப்படலாம்//

சூப்பர் டயலாக்.]]]

உண்மைதான் ராமலிங்கம்..!

உண்மைத்தமிழன் said...

அப்படியென்ன தப்பா எழுதிட்டேன்னு இதுக்குப் போயி மைனஸ் குத்து குத்தியிருக்காக..!?

ஏற்கெனவே வீடு காத்தாடுது.. இதுல இது வேறய்யா..?

pichaikaaran said...

அவளின் உணர்ச்சிகள் ஓடியே எல்லாம் போகல. உங்களுக்கு பக்கத்துலயே , போருர் ல ஓடுது. பார்த்து விட்டு விமர்சனம் எழுதவும் . பார்த்து விட்டு , பக்கத்தில் இருக்கும் குன்றத்தூர் முருகன் கோயிலுக்கும் போகலாம்

pichaikaaran said...

விரைவில் வெள்ளி திரையில் _ விலை (செய்யும் தொழிலே தெய்வம் )

உண்மைத்தமிழன் said...

[[[பார்வையாளன் said...
அவளின் உணர்ச்சிகள் ஓடி எல்லாம் போகல. உங்களுக்கு பக்கத்துலயே, போருர்ல ஓடுது. பார்த்து விட்டு விமர்சனம் எழுதவும் . பார்த்து விட்டு, பக்கத்தில் இருக்கும் குன்றத்தூர் முருகன் கோயிலுக்கும் போகலாம்.]]]

நான் போக மாட்டேன்.. எதுக்குப் போகணும்..? ஏன் போகணும்..? இவ்ளோ கஷ்டப்பட்டு நேரத்தைச் செலவழிச்சு, காசைக் கரியாக்கி, போஸ்ட் போட்டா.. மைனஸ் குத்தா குத்துறீங்க..?

உங்களோட டூவூப்பா..!

உண்மைத்தமிழன் said...

[[[பார்வையாளன் said...
விரைவில் வெள்ளி திரையில் _ விலை (செய்யும் தொழிலே தெய்வம் )]]]

இதுக்கும், சாந்திக்கும் இன்னும் நிறைய பேர் எழுதுவாங்க.. பாருங்க..!

Ramesh said...

//எங்க விட்டேன்..? வேணாம்.. எனக்கே வெறுப்பா இருக்கு.. இதோட போதும்.. பொத்திக்கிட்டு போய் தூங்குங்க..!//

கடுப்புல..படிக்க வந்த எங்களையும் சேத்து திட்டிட்டீங்களே பாஸ் நியாயமா?

pichaikaaran said...

முக பாவம் , சிணுங்கல் , ஆடை , இயக்கம் ( 'அந்த' movement அல்ல . i mean direction) என்றெல்லாம் வர்ணித்து எழுதுவீர்கள் .அது இல்லாததால்தான் மைனஸ் ஓட்டு. அவளின் உணர்ச்சிகள் பார்த்துவிட்டு எழுதுங்கள் .அனைவரும் சொந்த ஓட்டு, கள்ள ஓட்டு என பாசிடிவ் ஓட்டு போட்டு தள்ளுகிறோம்

Unknown said...

அன்பிற்கினிய அண்ணனே எங்கள் உண்மை தமிழனே.,

/ / கதை இப்படித்தான் போகிறது என்று யோசித்தால் மறு காட்சியிலேயே வேறு இடத்துக்குக் கொண்டு போகிறார்கள்.. இப்படியே ரீலுக்கு ரீல் கதையை மாற்றி, மாற்றி ஓட்டி, நம் பொறுமையைச் சோதிக்கிறார்கள்../ /

நம் பொறுமையை அல்ல உங்களோடு இந்த படத்தை பார்த்த அந்த 15 பேர்களின் பொறுமையை..


/ / இந்தப் படத்திற்குப் போய் நான் பெற்ற ஒரேயொரு சந்தோஷம்.. சங்கத் தலைவி, தன்மானத் தலைவி, சிங்கத் தலைவி, இனமானத் தலைவி, கவர்ச்சிப் புயல்.. நடிப்பரசி.. ஷகிலாவை நீண்ட நாட்கள் கழித்து பார்த்ததுதான்..! / /

ஷகீலா அக்கா நல்லா நடிசிருக்காங்களா..?

பொறுமையாக இந்த படத்தின் விமர்சனத்தை எழுதி தமிழக மக்களை விழிப்படைய செய்ததிற்கு நன்றிகள், "அலெர்ட் ஆறுமுகம்" விருதினை உங்களுக்கு பரிந்துரை செய்கிறேன்.

நன்றி..,

மரங்களோடு மனிதம் வளர்ப்போம்..

S.ரமேஷ்.

Menaga Sathia said...

//கண்ணுகளா.. ரொம்பக் கஷ்டப்பட்டு கதையைச் சொல்லி முடிச்சிருக்கேன். ஆனா உள்ள உக்காந்திருக்கும்போது நான் பட்ட கஷ்டம் இருக்கே..! முடியலடா சாமி..! என்னதான் வீறாப்பா ஒரு பதிவு போடுறதுக்கு இதை பார்த்தே ஆகணும்னு விரும்பிப் போய் கழுத்தறுபட்டு திரும்பி வந்திருக்கேன்..! எனக்குக் கொழுப்புதான்..!

// ஹா ஹா அண்ணே நீங்க ரொம்ப நல்லாயிருக்கனும்...

R. Gopi said...

இந்த மாதிரி ஒரு படத்தைப் பார்த்துட்டு அதோட நிக்காம,அதுக்கு விமர்சனமும்​போட்டு, அதுக்கான பின்னூட்டத்துக்குப் பதிலும் ​போட்டு








(மூச்சு முட்டுது)




அண்ணே, நீங்க ​தெய்வம்ணே


ஆர் ​கோபி

உண்மைத்தமிழன் said...

[[[ரமேஷ் said...

//எங்க விட்டேன்..? வேணாம்.. எனக்கே வெறுப்பா இருக்கு.. இதோட போதும்.. பொத்திக்கிட்டு போய் தூங்குங்க..!//

கடுப்புல. படிக்க வந்த எங்களையும் சேத்து திட்டிட்டீங்களே பாஸ் நியாயமா?]]]

சரி.. சரி.. இதையெல்லாம் மனசுல வைச்சுக்காதீங்க ரமேஷ்..! நான் ரொம்ப நல்லவனில்லை.. ரொம்ப, ரொம்பக் கெட்டவன்..!

உண்மைத்தமிழன் said...

[[[S.ரமேஷ். said...

அன்பிற்கினிய அண்ணனே எங்கள் உண்மை தமிழனே.,

//கதை இப்படித்தான் போகிறது என்று யோசித்தால் மறு காட்சியிலேயே வேறு இடத்துக்குக் கொண்டு போகிறார்கள்.. இப்படியே ரீலுக்கு ரீல் கதையை மாற்றி, மாற்றி ஓட்டி, நம் பொறுமையைச் சோதிக்கிறார்கள்../ /

நம் பொறுமையை அல்ல உங்களோடு இந்த படத்தை பார்த்த அந்த 15 பேர்களின் பொறுமையை..

// இந்தப் படத்திற்குப் போய் நான் பெற்ற ஒரேயொரு சந்தோஷம்.. சங்கத் தலைவி, தன்மானத் தலைவி, சிங்கத் தலைவி, இனமானத் தலைவி, கவர்ச்சிப் புயல்.. நடிப்பரசி.. ஷகிலாவை நீண்ட நாட்கள் கழித்து பார்த்ததுதான்..!//

ஷகீலா அக்கா நல்லா நடிசிருக்காங்களா..?

பொறுமையாக இந்த படத்தின் விமர்சனத்தை எழுதி தமிழக மக்களை விழிப்படைய செய்ததிற்கு நன்றிகள், "அலெர்ட் ஆறுமுகம்" விருதினை உங்களுக்கு பரிந்துரை செய்கிறேன்.

நன்றி..,

மரங்களோடு மனிதம் வளர்ப்போம்..

S.ரமேஷ்.]]]

நன்றிகள் ரமேஷ்.. தாங்கள் ஆசையோடும், அன்போடு்ம் அளித்திருக்கும் இந்த விருதினை மனமுவந்து ஏற்றுக் கொள்கிறேன்..!

உண்மைத்தமிழன் said...

[[[Mrs.Menagasathia said...

//கண்ணுகளா.. ரொம்பக் கஷ்டப்பட்டு கதையைச் சொல்லி முடிச்சிருக்கேன். ஆனா உள்ள உக்காந்திருக்கும்போது நான் பட்ட கஷ்டம் இருக்கே..! முடியலடா சாமி..! என்னதான் வீறாப்பா ஒரு பதிவு போடுறதுக்கு இதை பார்த்தே ஆகணும்னு விரும்பிப் போய் கழுத்தறுபட்டு திரும்பி வந்திருக்கேன்..! எனக்குக் கொழுப்புதான்..!//

ஹா ஹா அண்ணே நீங்க ரொம்ப நல்லாயிருக்கனும்...]]]

சந்தோஷம்..! வாழ்த்துக்களுக்கு நன்றிங்கோ..!

உண்மைத்தமிழன் said...

[[[R Gopi said...
இந்த மாதிரி ஒரு படத்தைப் பார்த்துட்டு அதோட நிக்காம,அதுக்கு விமர்சனமும்​ போட்டு, அதுக்கான பின்னூட்டத்துக்குப் பதிலும் ​போட்டு
(மூச்சு முட்டுது)
அண்ணே, நீங்க ​தெய்வம்ணே
ஆர் ​கோபி]]]

நீயும் தெய்வந்தான் தம்பி..!

a said...

//
உசுப்பிவிட்ட உத்தமர்களே.. நல்லாயிருங்க..
//
yarunne athu???

உண்மைத்தமிழன் said...

[[[வழிப்போக்கன் - யோகேஷ் said...

//உசுப்பிவிட்ட உத்தமர்களே.. நல்லாயிருங்க..//

yarunne athu???]]]

நீ்ங்கதான்.. வேற யாரு..?

pichaikaaran said...

மைனஸ் ஒட்டு கூடிக்கிட்டே போகுது... சீக்கிரம் அவளின் உணர்ச்சிகள் பார்த்துட்டு உங்க பாணியில எழுதுங்க... அந்த படத்துலதான் எழுத பல விஷயங்கள இருக்கு....

உண்மைத்தமிழன் said...

[[[பார்வையாளன் said...
மைனஸ் ஒட்டு கூடிக்கிட்டே போகுது. சீக்கிரம் அவளின் உணர்ச்சிகள் பார்த்துட்டு உங்க பாணியில எழுதுங்க. அந்த படத்துலதான் எழுத பல விஷயங்கள இருக்கு.]]]

பார்வையாளன் ஸார்..!

நான் அந்தப் படத்தை பார்க்க மாட்டேன். வாய்ப்பில்லை.. நீங்கள் வேண்டுமானால் அதைப் பார்த்துவிட்டு வந்து எழுதுங்கள். படித்துப் பார்த்து கருத்துச் சொல்கிறேன்..

இப்படி மைனஸ் குத்தை குத்தி என் பொழைப்பில் மண்ணையள்ளிப் போடாதீர்கள்..!

நீங்கள் குத்திய இந்த இரண்டு மைனஸ்களையும் பிளஸ்களாக குத்தியிருந்தால் தமிழ்மணத்தில் ஒரு மூன்று மணி நேரமாவது நின்றிருந்து இன்னும் ஒரு ஐநூறு பேராவது இதைப் படித்திருப்பார்கள்..!

புரிந்து கொள்ளுங்கள்..!