20-08-2010
என் இனிய வலைத்தமிழ் மக்களே..!
ஜெயலலிதா மற்றும் சசிகலா அவரது சொந்தங்கள் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு தமிழகம், மற்றும் கர்நாடக நீதிமன்றங்களில் கடந்த 14 வருடங்களாக இழு.. இழு என்று இழுத்தடிக்கப்பட்டு வருகிறது.
“இந்த இழுத்தடிப்புக்குக் காரணம் ஜெயலலிதாதான்” என்று தி.மு.க.வினரும், “இல்லை.. இல்லை. தி.மு.க.வினர் தொடர்ந்த வழக்கால்தான் தாமதம்” என்று ஜெயலலிதாவும் மாறி மாறி வாய்ப்பாட்டு பாடிக் கொண்டிருக்கின்றனர்.
இந்நிலையில் இந்த வழக்கில் ஜெயலலிதா வாய்தா வாங்கியே காலம் கடத்துவதாகக் கூறி கடந்த 4-ம் தேதி தி.மு.க.வின் இளைஞரணியினர் தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இந்த ஆர்ப்பாட்டத்திற்குத் தலைமை தாங்கிய துணை முதல்வர் ஸ்டாலின், ஜெயலலிதாவை வாய்தா ராணி என்று புதுப் பட்டப் பெயர் சூட்டி அழைத்திருக்கிறார்.
உண்மையில் இந்த அளப்பறைக்குக் காரணமான ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் 14 வருடங்களாக அப்படி என்னதான் நடக்கிறது என்பதை மிகச் சமீபத்தில் நக்கீரன் பத்திரிகையில் வெளியான ஒரு கட்டுரை விரிவாக விளக்கியுள்ளது.
அது நமது பதிவுலகத்திற்காக இங்கே வைக்கப்படுகிறது..
“இந்த இழுத்தடிப்புக்குக் காரணம் ஜெயலலிதாதான்” என்று தி.மு.க.வினரும், “இல்லை.. இல்லை. தி.மு.க.வினர் தொடர்ந்த வழக்கால்தான் தாமதம்” என்று ஜெயலலிதாவும் மாறி மாறி வாய்ப்பாட்டு பாடிக் கொண்டிருக்கின்றனர்.
இந்நிலையில் இந்த வழக்கில் ஜெயலலிதா வாய்தா வாங்கியே காலம் கடத்துவதாகக் கூறி கடந்த 4-ம் தேதி தி.மு.க.வின் இளைஞரணியினர் தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இந்த ஆர்ப்பாட்டத்திற்குத் தலைமை தாங்கிய துணை முதல்வர் ஸ்டாலின், ஜெயலலிதாவை வாய்தா ராணி என்று புதுப் பட்டப் பெயர் சூட்டி அழைத்திருக்கிறார்.
உண்மையில் இந்த அளப்பறைக்குக் காரணமான ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் 14 வருடங்களாக அப்படி என்னதான் நடக்கிறது என்பதை மிகச் சமீபத்தில் நக்கீரன் பத்திரிகையில் வெளியான ஒரு கட்டுரை விரிவாக விளக்கியுள்ளது.
அது நமது பதிவுலகத்திற்காக இங்கே வைக்கப்படுகிறது..
18-09-1996
முதல் தகவல் அறிக்கை வழக்கு குற்ற எண் : 13 ஏ.சி./96/ ஹெட் குவார்ட்டர்ஸ் Charge w/s 13(1) (e) r/w 13(2) of the P.C. Act and u/s.120-B r/w 109 IPC கணக்கில் காட்டப்படாத வருமானத்துக்கு அதிகமான கணக்கு காட்ட முடியாத அளவில் சேர்த்த சொத்துக்கள் இந்தியாவிற்குள் உள்ளவை..
04-06-1997
சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
05-06-1997
நீதிமன்றம் குற்றப்பத்திரிகையை விசாரணைக்கு ஏற்றுக் கொண்டு குற்றவாளிகளுக்கு சம்மன் அனுப்பியது.
21-10-1997
2,3 மற்றும் 4-ம் குற்றவாளிகளான சசிகலா, சுதாகரன், இளவரசி தாக்கல் செய்த விடுவிப்பு மனுவை தள்ளுபடி செய்து 4 குற்றவாளிகள் மீதும் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது.
02-09-2000
இரண்டாவது வழக்கு குற்ற எண் : 2 ஏ.சி./2000/ஹெட் குவார்ட்டர்ஸ் Charge u/s.13(1) (e) r/2 13(2) of the P.C. Act and u/s.120-B r/w 109 IPC (கணக்கில் காட்டப்படாத வருமானத்துக்கு அதிகமான கணக்கு காட்ட முடியாத அளவில் சேர்த்த சொத்துக்கள் லண்டனில் உள்ளவை.
23-03-2001
2-வது வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
17-04-2001
குற்றப் பத்திரிகை நீதிமன்றத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்டது. (முதல் குற்றவாளி ஜெயலலிதாவை தலைமையைகக் கொண்ட அ.தி.மு.க. தமிழகத்தில் ஆட்சிப் பொறுப்பேற்றது. முதல் குற்றவாளி ஜெயலலிதா மே 21-ல் முதலமைச்சரானார். இதைத் தொடர்ந்து உச்சநீதிமன்றத்தின் கண்டனத்தால் முதல் குற்றவாளியான ஜெயலலிதா 21-09-2001-ல் முதலமைச்சர் பதவியில் இருந்து விலகினார். அதே சமயம் முதல் குற்றவாளி ஜெயலலிதா 02-03-2002-ல் இடைத்தேர்தலில் வெற்றி பெற்றதன் மூலம் மீண்டும் முதலமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார்.
நவம்பர் 2002 - பிப்ரவரி 2003
76 சாட்சிகள் திரும்ப அழைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டனர். அவர்கள் ஏற்கெனவே கொடுத்த வாக்குமூலத்தில் இருந்து பல்டி அடித்தனர்.
21-02-2003
அரசுத் தரப்புச் சாட்சிகள் விசாரணை முடிவுற்றது.
24-02-2003
குற்றவாளிகளிடம் 313 சி.ஆர்.சி.பி.சி படி கேள்விகள் கேட்கப்பட்டன.
27-02-2003
குற்றவாளிகள் தரப்பில் சாட்சிகள் 1 மற்றும் 2 விசாரிக்கப்பட்டு விவாதம் நடைபெற்றது.
28-02-2003
கடந்த தேதியில் நடைபெற்ற விவாதம் தொடர்ந்தது. இதே நாளில் தி.மு.க. பொதுச் செயலாளர், பேராசிரியர் க.அன்பழகன் உச்சநீதிமன்றத்தில் ஜெயலலிதா மீதான வழக்குகளை வேறு மாநிலத்திற்கு மாற்றும்படி மனுவைத் தாக்கல் செய்தார். இதனை விசாரித்த உச்சநீதிமன்றம், டிரான்ஸ்பர் பெட்டிஷன் 77-78/2003-ன்படி இந்த வழக்கிற்குத் தடை விதித்தது.
18-11-2003
இரண்டு வழக்குகளும் சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் இருந்து பெங்களூர் நீதிமன்றத்திற்கு சிறப்பு வழக்கு எண் 208/2004 மற்றும் 209/2004 ஆக உச்சநீதிமன்றத்தால் மாற்றம் செய்யப்பட்டது.
28-03-2005
சாட்சிகளின் வாக்குமூலங்களும், வழக்கு ஆவணங்களும் ஆங்கிலத்தில் மொழி மாற்றம் செய்யப்பட்டு அனைத்து குற்றவாளிகளுக்கும் மற்றும் தமிழக அரசிற்கும் வழங்கப்பட்டது.
27-06-2005
முதல் குற்றவாளி ஜெயலலிதா 11-02-2002-ல் சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்து நிலுவையில் இருந்த மனுவை பெங்களூர் நீதிமன்றம் விசாரித்து 2 வழக்குகளையும் ஒன்றாகச் சேர்த்து விசாரிக்க உத்தரவிட்டது.
ஜூலை 2005
2 வழக்குகளையும் சேர்த்ததை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் எஸ்.எல்.பி. 3828/2005 - என்ற மனு, அன்பழகனால் தாக்கல் செய்யப்பட்டது.
05-08-2005
உச்சநீதிமன்றம், அன்பழகனின் வழக்கை ஏற்றுக் கொண்டு பெங்களூர் நீதிமன்ற வழக்கின் விசாரணைக்குத் தடை விதித்தது.
07-12-2009
உயர்நீதிமன்றம் அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு எண் : 938/2009-ஐ ஏற்றுக் கொண்டு 2-வது வழக்கை வாபஸ் பெற அனுமதியளித்தது.
30-01-2010
சிறப்பு அரசு வழக்கறிஞர் 45 சாட்சிகளைத் திரும்ப அழைப்பதற்கு அனுமதி கேட்டு மனு எண் : 321/2010 தாக்கல் செய்தார். அதே நாளில் குற்றவாளிகள் தரப்பில் வழக்கு விசாரணைக்கு அனுமதித்த உத்தரவில் காட்டப்பட்டிருந்த 2 அறிக்கைகள் வழக்கில் தாக்கல் செய்வதற்காக அனுமதி கேட்டு மனு எண் : 322/2010 தாக்கல் செய்யப்பட்டது.
25-02-2010
சிறப்பு வழக்கறிஞர் தாக்கல் செய்த மனு எண் : 321/2010 நீதிமன்றத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்டது. குற்றவாளிகள் தரப்பில் தாக்கல் செய்த மனு எண் : 322/2010 நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டது.
03-03-2010
அரசுத் தரப்புச் சாட்சிகள் 42 பேரும் நேரில் ஆஜராகுமாறு விசாரணை நீதிமன்றம் சம்மன் அனுப்பியது. சாட்சிகள் விசாரணை 18-03-2010 முதல் 26-03-2010 வரை நடைபெறும் என்று நீதிமன்றம் அறிவித்தது.
இதே நாளில் குற்றவாளிகள் தரப்பில் மனு எண் : 340 மற்றும் 341 தாக்கல் செய்யப்பட்டது. இதன் மூலம் சம்மன்களை ஒப்புதல் அட்டையுடன் கூடிய பதிவு அஞ்சல் வழியாக அனுப்பப்பட வேண்டும் என்று குற்றவாளிகள் கோரினர்.
04-03-2010
03-03-2010-ல் 42 அரசு சாட்சிகளுக்கு சம்மன் அனுப்ப உத்தரவிட்டதை மாற்றம் செய்யக் கோரி மனு எண் : 346-ல் குற்றவாளிகள் மனு தாக்கல் செய்தனர். அதே நாளில் 340, 341 மற்றும் 346 மனுக்களின் மீது விவாதம் நடைபெற்றது.
05-03-2010
மனு எண் : 340, 341, 346 இம்மூன்று மனுக்களையும் தள்ளுபடி செய்தது விசாரணை நீதிமன்றம்.
08-03-2010
05-06-1997-ல் சென்னை சிறப்பு நீதிமன்றத்தால் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டதை எதிர்த்து மனு எண் : 79/2010 கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மனுவைத் தாக்கல் செய்தனர் குற்றவாளிகள்.
10-03-2010
79/2010 மனு கர்நாடக உயர்நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டது.
19-03-2010
மனு எண் 79/2010 தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் எஸ்.எல்.பி. 2248/2010 மனுவொன்றை குற்றவாளிகள் தாக்கல் செய்தனர். அப்போது இந்த வழக்கு பற்றி சில கருத்துக்களைத் தெரிவித்தது உச்சநீதிமன்றம்.
22-03-2010
உச்சநீதிமன்ற வழிகாட்டுதல்படி தேதிகள் மற்றும் விசாரணையை மறு பட்டியலிட்டு 03-05-2010-க்கு வழக்கை மீண்டும் துவக்க நாள் குறித்தது விசாரணை நீதிமன்றம்.
18-04-2010
இந்த வழக்கின் விசாரணை அதிகாரிக்கு அனுமதி வழங்கப்படவில்லை. அதனால் இதன் விசாரணை முழுவதும் சட்டவிரோதமானது என்றும் வழக்கு விசாரணை முழுவதையும் இத்துடன் நிறுத்த வேண்டும் என்றும் குற்றவாளிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டு மனு எண் 359-ஐ தாக்கல் செய்தனர்.
27-04-2010
ஆனால் இந்த மனுவை (மனு எண் :359) விசாரணை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
07-05-2010
11-05-2010-ல் உச்சநீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு வருகிறது. அதனால் இந்த வழக்கை ஒத்திவைக்க வேண்டும் என்று விசாரணை நீதிமன்றத்தில் முதல் குற்றவாளியான ஜெயலலிதா கோரிக்கை வைத்தார். அதனால் வழக்கு 11-05-2010-க்கு ஒத்தி வைக்கப்பட்டது.
11-05-2010
விசாரணை நீதிமன்றத்தில் மனு எண் : 359 தள்ளுபடி செய்யப்பட்டதால் அதனை எதிர்த்து குற்றவாளிகள் உச்சநீதிமன்றத்தில் எஸ்.எல்.பி.3836/2010 மனுவைத் தாக்கல் செய்தனர். இதனை விசாரித்த உச்சநீதிமன்றம், இந்த வழக்கில் உயர்நீதிமன்றத்தில் குற்ற நடைமுறைச் சட்டம் 482-ன்படி தாக்கல் செய்யலாம் என தெரிவித்தது. இதனால் குற்றவாளிகள் இந்த மனுவை வாபஸ் பெற்றுக் கொண்டார்கள்.
மே-2010
70000 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையில் கண்ட ஆவணங்களில் 3 நகல்கள் தேவையென முதல் குற்றவாளி ஜெயலலிதா மனு தாக்கல் செய்தார்.
21-07-2010
3-ம் குற்றவாளி சுதாகரன் சார்பிலும் அதே மனு தாக்கல் செய்யப்பட்டது.
22-07-2010
மனு எண் : 396. விசாரணை நீதிமன்றத்தால் சில வழிகாட்டுதல்களுடன் இந்த மனு நிராகரிக்கப்பட்டது. நீதிமன்றத்தில் சாட்சிகள் ஆஜராகியிருந்த போதிலும் குற்றவாளிகள் வழக்கை ஒத்தி வைக்க கேட்டுக் கொண்டதால் வழக்கு விசாரணை 06-08-2010, 09-08-2010, 11-08-2010 மற்றும் 13-08-2010 ஆகிய தேதிகளில் சாட்சிகளை விசாரணை செய்வதற்கு நீதிமன்றம் ஆணை பிறப்பித்தது.
29-07-2010
மனு எண் : 396 நிராகரிக்கப்பட்டதை எதிர்த்து முதல் குற்றவாளியான ஜெயலலிதா, கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். வழக்கு எண் : 3748/2010
30-07-2010
மனு எண் : 396-ல் வழங்கப்பட்ட உத்தரவில் நீதிமன்றத்தால் தெரிவிக்கப்பட்ட கருத்துக்களின் ஒரு பகுதிக்கு அரசு சார்பில் அரசின் சிறப்ப வழக்கறிஞர் எதிர்ப்பு தெரிவித்து மனு தாக்கல் செய்தார். இதன் வழக்கு எண் : 3766/2010.
16-08-2010
மனு எண் : 396 நிராகரிக்கப்பட்டதை எதிர்த்து ஜெயலலிதா கர்நாடக உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கு எண் : 3766/2010 மீதான விசாரணை இன்று நடந்தது. தொடர்ந்து அடுத்த விசாரணை ஆகஸ்ட் 19-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
19-08-10
கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மனு எண் : 3766/2010 மீதான விசாரணை இன்றும் தொடர்ந்து நடந்தது.. வழக்கறிஞர்களின் வாதம் தொடர்ந்து நடைபெற வேண்டியிருப்பதால் வழக்கு ஆகஸ்ட் 24-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
இனி நான்..!
இந்த அளவுக்கு வருடக்கணக்காக இந்த வழக்கை இழுத்தடிப்பதற்கு ஜெயலலிதா மட்டும்தான் காரணமா..? அரசுத் தரப்பு காரணமில்லையா என்கிற கேள்விக்குறியோடுதான் இதனை தேடிப் பிடித்துப் படிக்க வேண்டியதாகியிருந்தது.
ஜெயலலிதா மீதான முதல் வழக்கில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்ட தேதி 18-09-1996. இதன் பின்பு இந்த வழக்கில் விசாரணை அதிகாரிகள் விசாரணை செய்து குற்றப்பத்திரிகையை. 1997-ம் ஆண்டு ஜூன் 4-ம் தேதியன்றுதான் தாக்கல் செய்துள்ளனர். இதில் 9 மாதங்கள் கழிந்துவிட்டன.
முதல் வழக்கில் குற்றவாளிகள் மீது குற்றச்சாட்டுக்களை பதிவு செய்யவே மேலும் 4 மாதங்கள் ஓடி 21-10-1997 அன்றுதான் குற்றச்சாட்டுக்கள் நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இதற்கு முழு முதற் காரணங்கள் குற்றவாளிகள்தான். பெரும்பாலான வழக்குகளில் அனைத்து குற்றவாளிகளுமே குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டதும், தங்களை அதில் சேர்த்தது தவறு.. தங்களை விடுவிக்க வேண்டும் என்று கோரி அதே நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்வார்கள். இவர்களும் அதையேதான் செய்திருக்கிறார்கள். ஆனால் நீதிமன்றம் அந்த மனுவைத் தள்ளுபடி செய்துவிட்டு குற்றச்சாட்டுக்களை பதிவு செய்திருக்கிறது.
இதற்கடுத்து கிட்டத்தட்ட 6 ஆண்டுகள் நீதிமன்றத்தில் குறட்டை விட்டுத் தூங்கத் துவங்கியது இந்த முதல் வழக்கு.
இடையில் 3 ஆண்டுகள் கழித்து திடீரென்று 02-09-2000 இரண்டாவதாக ஒரு புது வழக்கு ஜெயலலிதா மீதும் இதர குற்றவாளிகள் மீதும் சுமத்தப்பட்டு முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் மேலும் 6 மாதங்கள் கழித்து 23-03-2001 அன்றுதான் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதாவது தேர்தல் பிரச்சாரம் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது..
இதைத் தொடர்ந்து ஜெயலலிதாவே முதலமைச்சராக பதவியேற்றுவிட அண்டாவுக்குள் விழுந்த குண்டூசியைப் போல கும்பகர்ணத் தூக்கத்தில் ஆழ்ந்துவிட்டன இந்த இரண்டு வழக்குகளும்..
21-09-2001-ல் அ.தி.மு.க. அரசு பதவியேற்ற பின்பு 1 வருடம் கழித்தே சாட்சிகள் விசாரணை தொடங்கின. ஆனால் அதற்குத் தெளிவான காரணங்களும் இருந்தன. சாட்சிகள் அனைவரும் மிரட்டப்பட்டார்கள். அல்லது விலைக்கு வாங்கப்பட்டார்கள் என்பது அப்போதே தெள்ளத் தெளிவாகத் தெரிந்திருந்தது.
சொல்லி வைத்தாற்போல் மிகச் சரியாக 76 சாட்சிகளும் 2003 பிப்ரவரி மாதம் வரையிலும் பல்வேறு நாட்களில் நடத்தப்பட்ட விசாரணைகளின்போது பல்டி அடித்து தங்களது விசுவாசத்தைக் காட்டினார்கள்.
வழக்கு விசாரணை செல்லும் வேகத்தைப் பார்த்தால் ஜெயலலிதா தப்பித்துவிடுவார் என்பது போல் தோன்றிய நேரத்தில்தான் பேராசிரியர் க.அன்பழகன் உச்சநீதிமன்றத்தில் மனு செய்து வழக்கினை பெங்களூருக்கு மாற்றும்படியான உத்தரவை பெற்றுக் கொடுத்தார்.
இந்த வகையில் அன்பழகனுக்கு நாம் நிச்சயம் நன்றிக் கடன்பட்டிருக்க வேண்டும். அவர் மட்டும் உரிய நேரத்தில் தலையிட்டு வழக்குத் தொடர்ந்திருக்காவிட்டால் நிச்சயம் ஜெயலலிதா இந்த வழக்கை காலில் போட்டு மிதித்து ஜெயித்திருப்பார்.
பெங்களூருக்கு மாற்றியதை எதிர்த்து உச்சநீதிமன்றத்திலேயே ரிவ்யூ பெட்டிஷன் என்று சொல்லி காலத்தை கடத்தியதும் ஜெயலலிதாதான். இதனால் இன்னும் 2 ஆண்டுகள் கழித்து 28-03-2005-ம் தேதியில்தான் பெங்களூர் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகைகளும், வாக்குமூலங்களும் மொழி பெயர்க்கப்பட்டு குற்றவாளிகள் தரப்பிற்குத் தரப்பட்டன.
இடையில் “எனக்குத் தமிழ் மட்டுமே தெரியும். ஆங்கிலம் தெரியாது. எனவே தமிழில் எனக்குக் குற்றப்பத்திரிகையை மொழி மாற்றம் செய்து கொடுங்கள்” என்று சசிகலா கொடுத்த மனுவோடு, மறுவாரம் சுதாகரனும், இளவரசியும் சேர்ந்து மனுவைக் கொடுத்து இன்னும் கொஞ்சம் லேட்டாக்கினார்கள்.
2005 ஜூலை மாதத்தில் இரண்டு வழக்குகளையும் ஒன்றாகச் சேர்த்து நடத்த முடிவு செய்த பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தின் முடிவை எதிர்த்து அன்பழகன் உச்சநீதிமன்றத்தில் தொடுத்த வழக்குதான் இந்த வழக்கை நீண்ட வருடங்கள் தூங்க வைத்தது.
அன்பழகன் தொடர்ந்த வழக்கினால் 05-08-2005-ல் இந்த வழக்கிற்குத் தடை விதித்த உச்சநீதிமன்றம், நான்கு ஆண்டுகள் கழித்து, 2009 டிசம்பர் 7-ம் தேதி மனுவை திரும்பப் பெற்றுக் கொள்வதாகக் கூறி அன்பழகன் தாக்கல் செய்த மனுவை ஏற்றுக் கொண்டு வழக்கினை பைசல் செய்தது.
இந்த 4 ஆண்டு காலம் என்பது நிச்சயம் மிக அதிகமானதுதான். அன்பழகன் என்ன காரணத்திற்காக அப்போது அதனை எதிர்த்தார்.. இப்போது மனுவை வாபஸ் பெற்றார் என்பதற்கு பெரிய அளவிலான காரணத்தையெல்லாம் நாம் தேட வேண்டாம்.
தற்போதைய அரசியல் சூழலில் அ.தி.மு.கவுக்கு எதிராக தேர்தல் களத்தில் பிரச்சாரம் செய்ய தி.மு.க.வுக்கு ஏதேனும் செய்தி வேண்டும். அதற்காகத்தான் நான்காண்டுகள் கழித்து இப்போதுதான் தூங்கியெழுந்ததைப் போல இந்த வழக்கை வாபஸ் பெற்று, அடுத்து இந்த வழக்குத் தொடர்பான செய்திகள் தினம்தோறும் பத்திரிகைகளில் வெளி வர வேண்டும் என்ற ஆர்வத்திலும், வேகத்திலும் வழக்கு விசாரணையை சூடு பிடிக்க வைத்திருக்கிறது மைனாரிட்டி தி.மு.க. அரசு.
இதன் பின்பு 2010 ஜனவரி மாதம் தொடங்கி மாதந்தோறும் இந்த வழக்கில் விசாரணைகள் நடைபெற்று, ஏதேனும் ஒரு முன்னேற்றங்கள் நடந்து கொண்டுதான் வந்திருக்கின்றன. இப்போது தன் பங்கிற்கு, தான் மட்டும் சளைத்தவளா என்பதைப் போல இந்த வழக்கின் மீது மீண்டும் ஒரு முறை கல்லைத் தூக்கிப் போட்டிருக்கிறார் ஜெயலலிதா.
2005-ம் ஆண்டு மார்ச் மாதம் 28-ம் தேதி தமிழில் மொழி பெயர்த்துக் கொடுக்கப்பட்ட குற்றப்பத்திரிகையில் இருக்கும் வாசகங்கள் தவறான அர்த்தங்களைக் கொடுக்கின்றன என்பதை கிட்டத்தட்ட 6 ஆண்டு காலம் கழித்துத்தான் ஜெயலலிதாவின் வழக்கறிஞர்கள் கண்டுபிடித்திருக்கிறார்களாம்.. என்ன ஒரு அரியக் கண்டுபிடிப்பு..?
எந்தெந்த இடங்களில் குற்றம்,, குறைகள் இருக்கின்றன என்று சொல்லி அவற்றைப் பட்டியலிட்டு கேட்டால், கோர்ட்டிலேயே அதனைத் திருத்திக் கொள்ளலாம். மாறாக, இனிமேல் புதிதாக நீதிமன்றமே தனது நேரடி கண்காணிப்பில் மறுபடியும் முதல் பக்கத்தில் இருந்து கடைசி பக்கம் வரையிலும் மொழி பெயர்க்க வேண்டும் என்று கோரி சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கைத் தாக்கல் செய்தார்கள் ஜெயலலிதாவின் வழக்கறிஞர்கள்.
சிறப்பு நீதிமன்றம் இந்த வழக்கைத் தள்ளுபடி செய்யவே, இப்போது கர்நாடக உயர்நீதிமன்றத்தில் வாதிட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
இது நிச்சயமாக ஏமாற்று வேலைதான்.. வழக்கை காலம் தாழ்த்தும் சூழ்ச்சி என்பதைத் தவிர வேறில்லை.. மக்களுடைய வரிப் பணத்தில்தான் நீதிமன்றங்களும் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன என்கிற வகையில் இந்த வழக்கிற்காக ஆகின்ற செலவுத் தொகை முழுவதும் தண்டத்திற்கு நம் தலையில்தான் மறைமுகமாக விழுகிறது.
இப்படி கடந்த 14 ஆண்டுகளாக பல்வேறு காரணங்களைக் கூறி விசாரணையை ஜெயலலிதா இழுத்தடித்துக் கொண்டேயிருந்தாலும் இறுதியில் இவ்வழக்கில் தனக்கு எதிராகவே தீர்ப்பு வரும் என்றும், இந்த வழக்கில் இருந்து நாம் தப்பிக்கவே முடியாது என்பதையும் ஜெயலலிதா உணர்ந்தே இருப்பதால்தான், இப்படி மனு மேல் மனு போட்டு வழக்கை இழுத்தடித்துக் கொண்டிருக்கிறார் என்பது கண்கூடு.
ஊழல் செய்வதிலும், கூட்டாக கொள்ளையடிப்பதிலும் கருணாநிதிக்கு ஒரு படி கீழே இரண்டாவது இடத்தைப் பிடித்திருக்கும் ஜெயலலிதா, கருணாநிதி அளவுக்கு செய்கின்ற தவறை மறைக்கத் தெரியாதவராக இருப்பதால் இப்போது கோர்ட் படியேறிக் கொண்டு தவிக்கிறார்.
2005-ம் ஆண்டு மார்ச் மாதம் 28-ம் தேதி தமிழில் மொழி பெயர்த்துக் கொடுக்கப்பட்ட குற்றப்பத்திரிகையில் இருக்கும் வாசகங்கள் தவறான அர்த்தங்களைக் கொடுக்கின்றன என்பதை கிட்டத்தட்ட 6 ஆண்டு காலம் கழித்துத்தான் ஜெயலலிதாவின் வழக்கறிஞர்கள் கண்டுபிடித்திருக்கிறார்களாம்.. என்ன ஒரு அரியக் கண்டுபிடிப்பு..?
எந்தெந்த இடங்களில் குற்றம்,, குறைகள் இருக்கின்றன என்று சொல்லி அவற்றைப் பட்டியலிட்டு கேட்டால், கோர்ட்டிலேயே அதனைத் திருத்திக் கொள்ளலாம். மாறாக, இனிமேல் புதிதாக நீதிமன்றமே தனது நேரடி கண்காணிப்பில் மறுபடியும் முதல் பக்கத்தில் இருந்து கடைசி பக்கம் வரையிலும் மொழி பெயர்க்க வேண்டும் என்று கோரி சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கைத் தாக்கல் செய்தார்கள் ஜெயலலிதாவின் வழக்கறிஞர்கள்.
சிறப்பு நீதிமன்றம் இந்த வழக்கைத் தள்ளுபடி செய்யவே, இப்போது கர்நாடக உயர்நீதிமன்றத்தில் வாதிட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
இது நிச்சயமாக ஏமாற்று வேலைதான்.. வழக்கை காலம் தாழ்த்தும் சூழ்ச்சி என்பதைத் தவிர வேறில்லை.. மக்களுடைய வரிப் பணத்தில்தான் நீதிமன்றங்களும் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன என்கிற வகையில் இந்த வழக்கிற்காக ஆகின்ற செலவுத் தொகை முழுவதும் தண்டத்திற்கு நம் தலையில்தான் மறைமுகமாக விழுகிறது.
இப்படி கடந்த 14 ஆண்டுகளாக பல்வேறு காரணங்களைக் கூறி விசாரணையை ஜெயலலிதா இழுத்தடித்துக் கொண்டேயிருந்தாலும் இறுதியில் இவ்வழக்கில் தனக்கு எதிராகவே தீர்ப்பு வரும் என்றும், இந்த வழக்கில் இருந்து நாம் தப்பிக்கவே முடியாது என்பதையும் ஜெயலலிதா உணர்ந்தே இருப்பதால்தான், இப்படி மனு மேல் மனு போட்டு வழக்கை இழுத்தடித்துக் கொண்டிருக்கிறார் என்பது கண்கூடு.
ஊழல் செய்வதிலும், கூட்டாக கொள்ளையடிப்பதிலும் கருணாநிதிக்கு ஒரு படி கீழே இரண்டாவது இடத்தைப் பிடித்திருக்கும் ஜெயலலிதா, கருணாநிதி அளவுக்கு செய்கின்ற தவறை மறைக்கத் தெரியாதவராக இருப்பதால் இப்போது கோர்ட் படியேறிக் கொண்டு தவிக்கிறார்.
ஆனாலும், தன் மீது தவறில்லை என்றால், தன் மடியில் கனமில்லையென்றால்.. நீதிமன்றத்தில் துணிந்து நின்று வாதாடி வெற்றி பெற்று தனது நேர்மையைக் காட்டுவதைவிட்டுவிட்டு, எப்பாடுபட்டாவது வழக்கில் இருந்து ஜெயிக்க வேண்டும் என்று நினைப்பில் தனது சகல அஸ்திரங்களையும் பயன்படுத்தி ஜனநாயகத்தை இப்படி கேலிக்கூத்தாக்குவது ஜெயலலிதாவுக்கு ஒருபோதும் வெற்றியைத் தேடித் தராது.
இதற்காக இவர் எத்தனை கோயில், குளம் என்று ஏறி இறங்கினாலும் செய்த பாவம் சும்மாவா விடும்..?
இதற்காக இவர் எத்தனை கோயில், குளம் என்று ஏறி இறங்கினாலும் செய்த பாவம் சும்மாவா விடும்..?
இவருக்குக் கிடைக்கப் போகின்ற தண்டனையால், இவரைவிடவும் பெரும் தவறுகளைச் செய்து அந்தப் பாவத்தை முழுங்கிவிட்டு உத்தமர்களைப் போல முக்காலியில் உட்கார்ந்திருப்பவர்களுக்கு தினம்தோறும் நிம்மதியான நித்திரையைத் தராது என்பதும் மட்டும் நிச்சயம்..!
|
Tweet |
16 comments:
பெரிய இவன் ஸார்..!
அதுதான் நக்கீரன் பத்திரிகை என்று சொல்லித்தானே போட்டிருக்கிறேன்.. பிறகென்ன..?
முதல் பின்னூட்டமே செந்தமிழில் போட்டுத் தாக்கியிருக்கிறீர்கள்..?
உங்களுடைய கோபம் யார் மீது..? கருணாநிதி மீதா.. ஜெயலலிதா மீதா.. அல்லது என் மீதா..?
நமது அரசு அமைப்பின் கால தாமதம் திமுகவின் தனிப்பட்ட காரணம் ஜெ யின் காரணம் என்று தெளிவாக விளக்கிவிட்டீர்கள்.. ஆனால் ஒரு கேள்வி... ஒரு சாதாரணக் குடிமகனுக்கும் இதைப் போன்று நடக்குமா என்பதுதான் இதில் தொக்கி நிற்கும் கேள்வி
அண்ணா யார் அது!
உண்மைய மக்களுக்கு யார் சொன்னா என்ன
அவருக்குமட்டும்தான் அப்படி பேச தெரியுமா.
ஒரு ஊடகத்துல எப்படி நட்டக்கனும்னு தெரியதா.
கல்வியாலர்கலாய் இருந்து என்ன பயன்.
இது வன்மையாக கண்டிக்கதக்கது!
[[[KANTHANAAR said...
நமது அரசு அமைப்பின் கால தாமதம் திமுகவின் தனிப்பட்ட காரணம் ஜெயின் காரணம் என்று தெளிவாக விளக்கிவிட்டீர்கள்.
ஆனால் ஒரு கேள்வி.
ஒரு சாதாரணக் குடிமகனுக்கும் இதைப் போன்று நடக்குமா என்பதுதான் இதில் தொக்கி நிற்கும் கேள்வி.]]]
இதென்ன கேள்வி ஸார்..?
அரசியல்வியாதிகள் என்பவர்கள் தேவலோகத்தில் இருந்து பறந்து வந்திருக்கும் தேவர்கள்..! அவர்கள் சட்டத்திற்கெல்லாம் அப்பாற்பட்டவர்கள்..! கேள்விகள் கேட்கப்பட முடியாதவர்கள்..!
நாம் அவர்களது அடிமைகள்..! அவ்வளவுதான்..!
[[[Rams said...
அண்ணா யார் அது!
உண்மைய மக்களுக்கு யார் சொன்னா என்ன? அவருக்கு மட்டும்தான் அப்படி பேச தெரியுமா. ஒரு ஊடகத்துல எப்படி நட்டக்கனும்னு தெரியதா.
கல்வியாலர்கலாய் இருந்து என்ன பயன். இது வன்மையாக கண்டிக்கதக்கது!]]]
விடுங்க ராம்ஸ்.. வலையுலகத்துல இப்படியும் நாலைஞ்சு பேர் இருக்கத்தான் செய்யுறாங்க..! போயிட்டுப் போறாங்க.. நாம ஒதுங்கிப் போறதுதான் பெட்டர்..!
உங்களின் ஆற்றாமையும் கோபமும் படிக்கும்போது நன்றாக தெரிகிறது...
[[[வழிப்போக்கன் - யோகேஷ் said...
உங்களின் ஆற்றாமையும் கோபமும் படிக்கும்போது நன்றாக தெரிகிறது.]]]
பின்ன வராதா யோகேஷ்..? யார் வீட்டுக் காசுன்னு நினைச்சு செலவழிக்கிறாங்க..? இதுவே அவங்க சொந்தக் காசுன்னா செய்வாங்களா..?
அப்படியே திருக்குவளை தீயசக்தி பற்றியும் எழுதவும்
[[[செந்தழல் ரவி said...
அப்படியே திருக்குவளை தீயசக்தி பற்றியும் எழுதவும்.]]]
இன்னும் எத்தனைதான் எழுதறது அவரைப் பத்தி..!
வெறுப்பா இருக்கு சாமி..!
//கருணாநிதி அளவுக்கு செய்கின்ற தவறை மறைக்கத் தெரியாதவராக இருப்பதால்// உண்மையில் ஜெயலலிதா நினைத்தது வேறு, நடந்தது வேறு. நம்மை யாராலும் பதவியில் இருந்து அசைக்க முடியாது, ஆகையால் யாரு என்னத்தை பிடுங்கி விடப் போகிறார்கள், என்ற மப்பில் எதற்கும் பயபடாமல் பண்ணிய அட்டகாசம் அத்தனைக்கும் சாட்சி வைத்து கூத்தடித்தார் இந்த அம்மா. வழக்கு நடக்கும் போதே போன ஆட்சி திரும்ப வந்ததால் சாட்சிகள் அத்தனை பேரையும் மிரட்டி பணிய வைத்தார். [இதற்க்கு சோ கூறியது, "சாட்சிகள் மிரட்டப் பட்டதால் வழக்கில் ஜெயலலிதா ஜெயித்தார் என்றால், தி.மு.க. ஆட்சியில், அதே காரணத்திற்காகத்தான் ஜெயலலிதாவுக்கு எதிராகச் சாட்சி சொன்னார்கள் என்றும் சொல்லலாம் அல்லவா?"- எப்பேற்பட்ட நடு நிலையான பத்திரிகையாளர் பாருங்கள்!]. கிண்டி தொழில் பேட்டையில் வாங்கிய சொத்துக்கு போட்ட கையெழுத்தையே தன்னுடைதல்ல என்று சொன்னதையும் நீதி மன்றத்தில் ஏற்றார்கள். [நீங்களோ, நானோ அவ்வாறு சொல்ல முடியுமா? எடுபடுமா? ஏழை சொல் அம்பலத்தில் ஏறாது என்பது இதுதானோ? பணக்காரனைச் சுமந்து செல்லும் ஏழையைக் கண்டால் எட்டி உதைக்கும் கழுதைக்குப் பெயர்தான் சட்டம் என்ற சீனப் பழமொழி இதுதானோ?]. இந்த வழக்கு ஏன் தி.மு.க. ஆட்சியிலும் நத்தை வேகத்திலேயே போகிறது? இவருக்கு உண்மையில் தண்டனை வாங்கித் தர வேண்டும், நீதியை நாட்ட வேண்டும் என்ற எண்ணமெல்லாம் தி.மு.க.வுக்குக் கிடையாது. நீ களவாணி என்று அந்தமாவைச் சொல்லுமளவுக்கு இவர்கள் ஒன்னும் யோக்கியமானவர்கள் கிடையாது, ஆதாரம் இல்லாமல் களவாடத் தெரிந்தவர்கள் அவ்வளவுதான்.
நீங்களே கட்டுரையில் சொன்ன மாதிரி, அவர்கள் செய்ய வேண்டியதெல்லாம் கவனமாக செய்து, ஆசியாவின் மிகப் பெரிய பணக்காரர்களாக ஆகிவிட்டார்கள், சொல்லப் போனால் இந்தம்மா சேர்த்ததைவிட பலமடங்கு அதிகம் சேர்த்துவிட்டனர். எது எப்படியோ, கடைசியில் வழக்கு ஒன்றுக்குமே இல்லாமல் தான் போகும்.
ஏனென்றால் ஜெயலலிதா ஒரு மாதம் சிறையில் இருந்தாலும், தி.மு.க. அடுத்த தேர்தலில் காலி.
மக்கள் அனுதாப ஒட்டு இந்தம்மாவுக்கு வந்துவிடும், தி.முக திரும்ப ஆட்சியையே பிடிக்க முடியாத மாதிரி ஆகிவிடும், இந்தம்மா பதவிக்கி வந்தவுடன் எல்லா கேசும் பூட்ட கேசு ஆகிவிடும். அதனால, இரண்டு கலைவாணிகளுமே நாடகம் தான் போடுகிறார்கள், இதுல ஏதோ உண்மை இருக்குதுன்னு நினைத்து பதிவு போடும் நீங்களும், அதுக்கு பின்னூட்டம் போடும் நானும், மக்களும் தான் இளித்தவாயர்கள்.
//கருணாநிதி அளவுக்கு செய்கின்ற தவறை மறைக்கத் தெரியாதவராக இருப்பதால்// உண்மையில் ஜெயலலிதா நினைத்தது வேறு, நடந்தது வேறு. நம்மை யாராலும் பதவியில் இருந்து அசைக்க முடியாது, ஆகையால் யாரு என்னத்தை பிடுங்கி விடப் போகிறார்கள், என்ற மப்பில் எதற்கும் பயபடாமல் பண்ணிய அட்டகாசம் அத்தனைக்கும் சாட்சி வைத்து கூத்தடித்தார் இந்த அம்மா. வழக்கு நடக்கும் போதே போன ஆட்சி திரும்ப வந்ததால் சாட்சிகள் அத்தனை பேரையும் மிரட்டி பணிய வைத்தார். [இதற்க்கு சோ கூறியது, "சாட்சிகள் மிரட்டப் பட்டதால் வழக்கில் ஜெயலலிதா ஜெயித்தார் என்றால், தி.மு.க. ஆட்சியில், அதே காரணத்திற்காகத்தான் ஜெயலலிதாவுக்கு எதிராகச் சாட்சி சொன்னார்கள் என்றும் சொல்லலாம் அல்லவா?"- எப்பேற்பட்ட நடு நிலையான பத்திரிகையாளர் பாருங்கள்!]. கிண்டி தொழில் பேட்டையில் வாங்கிய சொத்துக்கு போட்ட கையெழுத்தையே தன்னுடைதல்ல என்று சொன்னதையும் நீதி மன்றத்தில் ஏற்றார்கள். [நீங்களோ, நானோ அவ்வாறு சொல்ல முடியுமா? எடுபடுமா? ஏழை சொல் அம்பலத்தில் ஏறாது என்பது இதுதானோ? பணக்காரனைச் சுமந்து செல்லும் ஏழையைக் கண்டால் எட்டி உதைக்கும் கழுதைக்குப் பெயர்தான் சட்டம் என்ற சீனப் பழமொழி இதுதானோ?].
இந்த வழக்கு ஏன் தி.மு.க. ஆட்சியிலும் நத்தை வேகத்திலேயே போகிறது? இவருக்கு உண்மையில் தண்டனை வாங்கித் தர வேண்டும், நீதியை நாட்ட வேண்டும் என்ற எண்ணமெல்லாம் தி.மு.க.வுக்குக் கிடையாது. நீ களவாணி என்று அந்தமாவைச் சொல்லுமளவுக்கு இவர்கள் ஒன்னும் யோக்கியமானவர்கள் கிடையாது, ஆதாரம் இல்லாமல் களவாடத் தெரிந்தவர்கள் அவ்வளவுதான்.
நீங்களே கட்டுரையில் சொன்ன மாதிரி, அவர்கள் செய்ய வேண்டியதெல்லாம் கவனமாக செய்து, ஆசியாவின் மிகப் பெரிய பணக்காரர்களாக ஆகிவிட்டார்கள், சொல்லப் போனால் இந்தம்மா சேர்த்ததைவிட பலமடங்கு அதிகம் சேர்த்துவிட்டனர். எது எப்படியோ, கடைசியில் வழக்கு ஒன்றுக்குமே இல்லாமல் தான் போகும்.
ஏனென்றால் ஜெயலலிதா ஒரு மாதம் சிறையில் இருந்தாலும், தி.மு.க. அடுத்த தேர்தலில் காலி.
மக்கள் அனுதாப ஒட்டு இந்தம்மாவுக்கு வந்துவிடும், தி.முக திரும்ப ஆட்சியையே பிடிக்க முடியாத மாதிரி ஆகிவிடும், இந்தம்மா பதவிக்கி வந்தவுடன் எல்லா கேசும் பூட்ட கேசு ஆகிவிடும். அதனால, இரண்டு கலைவாணிகளுமே நாடகம் தான் போடுகிறார்கள், இதுல ஏதோ உண்மை இருக்குதுன்னு நினைத்து பதிவு போடும் நீங்களும், அதுக்கு பின்னூட்டம் போடும் நானும், மக்களும் தான் இளித்தவாயர்கள்.
//இந்த வழக்கில் இருந்து நாம் தப்பிக்கவே முடியாது என்பதையும் ஜெயலலிதா உணர்ந்தே இருப்பதால்தான்,...//
அட போங்க சார், ஜோக்கடிக்கிறீங்க. நம்ம ஊரு நீதியரசர்களா அப்படியெல்லாம் நீதி சொல்லுவாங்க ..!
[[[Jayadeva said...
//கருணாநிதி அளவுக்கு செய்கின்ற தவறை மறைக்கத் தெரியாதவராக இருப்பதால்//
உண்மையில் ஜெயலலிதா நினைத்தது வேறு, நடந்தது வேறு. நம்மை யாராலும் பதவியில் இருந்து அசைக்க முடியாது, ஆகையால் யாரு என்னத்தை பிடுங்கி விடப் போகிறார்கள், என்ற மப்பில் எதற்கும் பயபடாமல் பண்ணிய அட்டகாசம் அத்தனைக்கும் சாட்சி வைத்து கூத்தடித்தார் இந்த அம்மா. வழக்கு நடக்கும்போதே போன ஆட்சி திரும்ப வந்ததால் சாட்சிகள் அத்தனை பேரையும் மிரட்டி பணிய வைத்தார். [இதற்கு சோ கூறியது, "சாட்சிகள் மிரட்டப்பட்டதால் வழக்கில் ஜெயலலிதா ஜெயித்தார் என்றால், தி.மு.க. ஆட்சியில், அதே காரணத்திற்காகத்தான் ஜெயலலிதாவுக்கு எதிராகச் சாட்சி சொன்னார்கள் என்றும் சொல்லலாம் அல்லவா?"- எப்பேற்பட்ட நடு நிலையான பத்திரிகையாளர் பாருங்கள்!].
கிண்டி தொழில் பேட்டையில் வாங்கிய சொத்துக்கு போட்ட கையெழுத்தையே தன்னுடைதல்ல என்று சொன்னதையும் நீதிமன்றத்தில் ஏற்றார்கள். [நீங்களோ, நானோ அவ்வாறு சொல்ல முடியுமா? எடுபடுமா? ஏழை சொல் அம்பலத்தில் ஏறாது என்பது இதுதானோ? பணக்காரனைச் சுமந்து செல்லும் ஏழையைக் கண்டால் எட்டி உதைக்கும் கழுதைக்குப் பெயர்தான் சட்டம் என்ற சீனப் பழமொழி இதுதானோ?]. இந்த வழக்கு ஏன் தி.மு.க. ஆட்சியிலும் நத்தை வேகத்திலேயே போகிறது?
இவருக்கு உண்மையில் தண்டனை வாங்கித் தர வேண்டும், நீதியை நாட்ட வேண்டும் என்ற எண்ணமெல்லாம் தி.மு.க.வுக்குக் கிடையாது.
நீ களவாணி என்று அந்தமாவைச் சொல்லுமளவுக்கு இவர்கள் ஒன்னும் யோக்கியமானவர்கள் கிடையாது, ஆதாரம் இல்லாமல் களவாடத் தெரிந்தவர்கள் அவ்வளவுதான்.
நீங்களே கட்டுரையில் சொன்ன மாதிரி, அவர்கள் செய்ய வேண்டியதெல்லாம் கவனமாக செய்து, ஆசியாவின் மிகப் பெரிய பணக்காரர்களாக ஆகிவிட்டார்கள்,
சொல்லப் போனால் இந்தம்மா சேர்த்ததைவிட பலமடங்கு அதிகம் சேர்த்துவிட்டனர். எது எப்படியோ, கடைசியில் வழக்கு ஒன்றுக்குமே இல்லாமல்தான் போகும்.
ஏனென்றால் ஜெயலலிதா ஒரு மாதம் சிறையில் இருந்தாலும், தி.மு.க. அடுத்த தேர்தலில் காலி.
மக்கள் அனுதாப ஒட்டு இந்தம்மாவுக்கு வந்துவிடும், தி.முக திரும்ப ஆட்சியையே பிடிக்க முடியாத மாதிரி ஆகிவிடும், இந்தம்மா பதவிக்கி வந்தவுடன் எல்லா கேசும் பூட்ட கேசு ஆகிவிடும். அதனால, இரண்டு கலைவாணிகளுமே நாடகம்தான் போடுகிறார்கள், இதுல ஏதோ உண்மை இருக்குதுன்னு நினைத்து பதிவு போடும் நீங்களும், அதுக்கு பின்னூட்டம் போடும் நானும், மக்களும்தான் இளித்தவாயர்கள்.]]]
அன்பின் உடன்பிறப்பு ஜெயதேவ்..
நான் நினைத்ததை, நினைப்பதை அப்படியே நீங்களும் சொல்கிறீர்கள்..! எப்படிங்கோ ஸார்..?
வருகைக்கு மிக்க நன்றி..!
See who owns proboards.com or any other website:
http://whois.domaintasks.com/proboards.com
See who owns 3gpsearch.com or any other website.
Post a Comment