இலக்கணப் பிழை - சினிமா விமர்சனம்

04-08-2010

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

தினம்தோறும் நாளிதழ்களில் விலைவாசி உயர்வு பிரச்சினையையெல்லாம் பின்னுக்குத் தள்ளிவிட்டு தகாத உறவினால் கணவன் கொலை.. அத்து மீறிய காதலால் மனைவி படுகொலை.. கள்ளக்காதலால் குடும்பமே தற்கொலை என்றெல்லாம் திருமண ஒப்பந்தத்தை மீறிய உறவுகளால் சிதைக்கப்படும் விஷயங்களே பிரதானமாக சொல்லப்பட்டு வருகின்றன.

இது மாதிரியான செய்திகள் மாதந்தோறும் அதிகரித்துக் கொண்டே செல்கிறதே ஒழிய, குறைந்தபாடில்லை.. இது நிறுத்த முடியாதது என்பதை இப்போதுதான் நாம் ஒப்புக் கொண்டிருக்கிறோம்.

காரணம்.. இது மனம் சம்பந்தப்பட்டது. எந்த இடத்தில், எந்த நேரத்தில் தங்களது மனம் தங்களை மீறிய அந்தச் செயலை செய்ய வைத்தது என்று அக்குற்றத்தை செய்தவர்களே யோசிக்க முடியாத அளவுக்கு அவர்களது  அர்த்தமற்ற காதல் இருந்து தொலைக்கிறது..

இது உண்மையில் காதல்தானா அல்லது வெறும் உடற் கவர்ச்சியா என்பதைக்கூட இன்னமும் யாராலும் உறுதியாகச் சொல்ல முடியவில்லை. பல வழக்குகளில் காமமே பிரதானமாகவும், சில விதிவிலக்கான வழக்குகளில் மனம் ஒன்றுபட்ட விஷயம் பிரதானமாகவும் இருக்கிறது.

ஆனால் மணவிலக்கு என்பது நமது சமூகத்தைப் பொறுத்தளவில் உடனுக்குடன் கிடைக்கக் கூடியதாக இல்லை என்பதும் சமூகமே ஆண் சார்ந்த பொதுப்புத்தியை மையமாக வைத்து உழன்று வருவதுமே பெரும்பாலும் இதற்கு புறக்காரணங்களாக இருக்கின்றன.

கணவனிடம் தான் எதிர்பார்த்த அளவுக்கான சுகம் கிடைக்கவில்லை என்று மனைவி படி தாண்டுவது. கணவன் மனைவியிடம் எதிர்பார்த்தது கிடைக்காத விரக்தியில் வேறொரு பெண்ணை நாடிச் செல்வது.. சில சமயங்களில் ஆண், பெண் இருவருக்குமே இயற்கையாகவே அதிகமாக இருந்து தொலைக்கும் காம உணர்ச்சியால் உந்தப்பட்டு தவறுகளைச் செய்துவிட்டு பின்பு அதிலிருந்து மீள முடியாமல் தவித்து இறுதியில் தற்கொலையை நாடுவது என்று பலரையும் பார்த்திருக்கிறோம்.
 
அது மாதிரியான ஒரு காதல் ஜோடிதான் இந்தப் படத்தில் நம் கண் முன்னே உலா வந்திருக்கிறது.

எந்தக் குற்றவாளியும் தானாக உருவாவதில்லை. உருவாக்கப்படுகிறான் என்பதும், இதற்கு அவனைச் சுற்றிலும் இருக்கும் சூழலும் ஒரு காரணமாக அமைந்துவிடும் என்பதும் மறுக்க முடியாத உண்மை. ஆனால் நமது இன்றைய பொய்யான ஒழுக்க விதிகளால் கட்டப்பட்டிருக்கும் சமூக அமைப்பும், வெறும் ஏட்டளவில் எழுதப்பட்டிருக்கும் அரசியலமைப்புச் சட்டத்திற்கும் இது புரியவே புரியாது. அவைகளின் முன்பு இவர்கள் செய்தது குற்றம். இவர்கள் குற்றவாளிகள்தான்.


இது மாதிரியான பிட்டு, மேட்டர் படங்கள் என்று சொல்லப்படுபவைகளில்கூட, சில சமயங்களில் பிலிம் மேக்கிங் பிரமாதமாக அமைந்துவிடும். அந்த வகையில் இத்திரைப்படத்தின் இயக்கம் அருமை.. ஒளிப்பதிவு அருமையிலும் அருமை.. நடிப்பையும் குறை சொல்ல முடியவில்லை. இத்திரைப்படத்தை பார்க்கக் கிடைத்த வாய்ப்பு எனக்குக் கிடைத்த அதிர்ஷ்டம்தான்.

இதுவரையில் தமிழில் வெளி வந்திருக்கும் எந்தவொரு திரைப்படத்திலும் நாம் பார்த்திருக்காத காட்சிதான் இதனுடைய உச்சக்கட்ட கிளைமாக்ஸ்.. அசத்தல் ரகம்.

கண்ணனும், கோபியும் நெருங்கிய நண்பர்கள். கண்ணன் ஆட்டோ ஓட்டுநர். கோபி ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்கிறான். கண்ணன் கவி என்னும் பள்ளி செல்லும் மாணவியை டைம்பாஸூக்காக காதலித்து வருகிறான். அதோடு அவனுக்குள் செக்ஸ் பீலிங் அதிகம் உண்டு. அதனை அவனே உணர்ந்துதான் இருக்கிறான்.


மல்லிகைப் பூவின் நறுமணம், பெண்களின் கைக்குட்டைகளின் மணம், பெண்களின் அருகாமை, கூந்தலின் மணம் என்று பெண் சம்பந்தப்பட்ட எதை நுகர்ந்தாலும் அவனுக்குள் அந்த உணர்வு அதீதமாகிவிடும்..

இந்த நிலையில் கோபி, சுஜா என்னும் சுஜாதாவை திருமணம் செய்கிறான். மிக நெருங்கிய நட்பாக கோபியும், கண்ணனும் இருப்பதால் கோபி வீட்டு சமையல்கட்டுவரையிலும் சென்று தானே காபி போட்டு குடிக்கும் அளவுக்கு நெருக்கமானவாக இருக்கிறான் கண்ணன்.


கோபிக்கும், சுஜாவுக்குமான உடல் உறவு மிதமானதாகவே இருக்கிறது. கோபிக்கு இதில் அதிக ஆர்வமில்லை. ஆனால் சுஜா இதில் நேரெதிர். இந்த நிலையில் சுஜாவின் செக்ஸ் ஆர்வத்தைப் புரிந்து கொள்ளும் கண்ணன் அவளை மடக்க நினைக்கிறான்.

அது அத்துமீறிய காதல் என்பதை உணரும் சுஜாவும் முதலில் தவிர்க்கப் பார்க்கிறாள். ஆனால் முடியவில்லை. அது ஒரு கட்டத்தில் அவர்களது உடல் சங்கமத்தில் போய் முடிகிறது.. இதன் பின்பு கோபி இல்லாத பொழுதுகளில் கண்ணனும், சுஜாவும் சங்கமத்தில் திளைத்து மூழ்குகிறார்கள்.


கண்ணனை பற்றிய கோபியின் குட் சர்டிபிகேட்டை ஒரு நாள் கேட்டுவிடும் சுஜா மனம் மாறுகிறாள். கண்ணனிடம் தாங்கள் செய்வது தவறு என்று எடுத்துச் சொல்லி இனி தன்னை விட்டுவிடும்படி கெஞ்சுகிறாள். கதறுகிறாள். அழுது தீர்க்கிறாள். கண்ணனோ முடியாது என்கிறான். அவளை விட்டுத் தன்னால் ஒரு நொடியும் இருக்க முடியாது என்கிறான் கண்ணன்.

விஷயம் கோபிக்கும், கண்ணனின் காதலி கவிக்கும் தெரிந்து விடுகிறது.  கோபி, சுஜாதாவை வீட்டைவிட்டு வெளியில் அனுப்புகிறான். வழக்கம்போல குடிக்கு ஆளாகிறான் கோபி. கண்ணனுக்கு போன் செய்து தனது வாழ்க்கை பாழானதற்கு அவன்தான் காரணம் என்று சொல்லி அழுகிறாள் சுஜாதா.

அவளுக்காக கோபியிடம் போய் தனக்கும் சுஜாதாவிற்கும் இடையில் எதுவுமே இல்லை என்று பொய் சொல்கிறான் கண்ணன். ஆனால் இதனை பொய் என்று சொல்லி நம்ப மறுக்கிறான் கோபி. கண்ணன் அவனைத் திட்டிவிட்டுப் போக.. மீண்டும் மதுவுக்குள் இறங்குகிறான் கோபி.

கண்ணனின் காதலியான கவி, ஒரு பக்கம் கண்ணனை பிடித்து காய்ச்சியெடுக்க சுஜா இல்லாத நிலையில் தனது உடல் பசிக்கு அவளை பலியாக்கத் துடிக்கிறான் கண்ணன். ஆனால் அது அப்போதைக்கு முடியாமல் போகிறது.


கோபி யோசித்துப் பார்த்து ஒரு முடிவுக்கு வந்தவன், சுஜாதாவை மன்னித்து ஏற்றுக் கொள்ள முடிவெடுத்து அவளை திரும்பவும் அழைத்து வருகிறான். வந்தவளை கண்ணன் சந்தித்து தன்னுடம் இருக்கும்படி வற்புறுத்த, அவளோ தான் தனது கணவனுடன் வாழப் போவதாகச் சொல்லிவிட்டுப் போய் விடுகிறாள். இப்போது வெறி பிடித்தவனாகிறான் கண்ணன்.

இதுநாள் வரையிலும் தனக்கு மிக எளிதாக தீனி கிடைத்த சூழலில், இப்போது கிடைக்காமல் போய் எப்பாடுபட்டாவது தனது உடற்பசியைத் தீர்க்க வேண்டிய சூழலுக்கு ஆளாகிறான். பாலியல் பெண்களிடம் சென்றும் அவனது பசி தீரவில்லை. பாலியல் புத்தகங்களும், சிடிக்களும் அவனது உடற்பசியை இன்னமும் கொஞ்சம் உசுப்பிவிட தவியாய் தவிக்கிறான்.


தனது காதலியான கவியை எவ்வளவோ அழைத்துப் பார்த்தும் முடியாமல் போக.. கடைசியில் வஞ்சமாக ஏமாற்றி அவளை கடத்திச் செல்கிறான். தான் மெல்ல, மெல்ல ஒரு சைக்கோவாக மாறி வருகிறோம் என்பதை உணராமலேயே அந்தச் சூழலுக்குள் இறங்கி விடுகிறான் கண்ணன்.

தான் கடத்தி வந்த காதலியை வன்புணர்ச்சி செய்கிறான். அவளால் தடுக்க முடியாமல் போக.. அந்த புணர்தலின் இறுதியில் அவள் இறந்தும் போகிறாள். அவளுடைய இறப்பை அந்த கணத்தில் எதிர்பார்க்காத கண்ணன் திடுக்கிடுகிறான். அவனால் நம்ப முடியவில்லை.. ஏற்கவும் முடியவில்லை..

இனி கவி எப்போதும் தன்னுடன் இருப்பாள் என்று எதிர்பார்த்திருந்தவனுக்கு இந்த முடிவு அதீதமான வெறுப்பை அவனுக்குள் ஊட்டுகிறது.. எல்லாவற்றுக்கும் காரணம் தனது காம வெறி பிடித்த மனம் என்பதை கடைசி நிமிடத்தில் உணர்ந்து கொள்ளும் கண்ணன் இறுதியில் தனக்குத் தானே கொடுத்துக் கொள்ளும் தண்டனை என்ன என்பதுதான் கிளைமாக்ஸ்..

ஒவ்வொரு காட்சியையும் மிக, மிக வித்தியாசமாக படம் பிடித்திருக்கிறார் ஜோ என்னும் இந்த இயக்குநர். இது மாதிரியான பிட்டு கதைகளை வைத்து எடுக்கப்படும் படங்களில் படுக்கையறை காட்சிகளை விஸ்தாரமாக எடுத்துத் தொலைத்திருப்பார்கள். ஆனால் இதில் அது இல்லவே இல்லை..

மாறாக காட்சியமைப்புகளும், வசனங்களும், நடித்தவர்களின் நடிப்புமே உணர்ச்சியைத் தூண்டுவதைப் போல் அமைக்கப்பட்டுள்ளது. மொத்த நடிகர்களே 5 பேர்தான். கதை முழுவதும் இவர்களைச் சுற்றித்தான் வருகிறது. 



கண்ணன் மீதான ஈர்ப்பு அவன் தனது காதலியுடன் பேசுகின்ற செல்போன் பேச்சை ஒட்டுக் கேட்கும்போதுதான் சுஜாதாவுக்கு ஏற்படுகிறது என்பதையும் அப்போது அவளது ஆக்ஷனையும், மனம் படுத்தும் பாட்டையும் மிக ரம்மியமாக படம் பிடித்திருக்கிறார் இயக்குநர்.

இவர்களது முதல் உறவு ஏற்படக்கூடிய சூழலை மிக பதட்டத்தோடு, ஒருவித எதிர்பார்ப்போடு வைத்திருக்கும் அந்தக் காட்சி டாப் கிளாஸ்.. நிச்சயமாக அதில் குற்ற உணர்வுடனான காமம் வெளிப்படுகிறது.

தனது காதலியான கவியுடன் கண்ணன் பேசுகின்ற இயல்பான பேச்சும், அதைப் படமாக்கியவிதமும் அருமை.. காதலியிடமே அவளுடைய மூன்று நாட்களைப் பற்றிப் பேசி உடன் வந்திருக்கும் அவளது தோழியையும் வெட்கப்பட வைக்கும் காட்சியில் கண்ணனின் உள் மனதின் வெளிப்பாட்டை சொல்லியிருக்கிறார் இயக்குநர்.

தன்னுடனான காதலை மறக்க வைக்க சுஜாதா, கண்ணனை கை கட்டி நிற்க வைத்து நல்ல புத்தி சொல்லி கழுத்தில் சாமி மாலையைப் போடுகின்ற அந்தக் காட்சியும், திரும்பி வந்த சுஜாதாவிடம் அதேபோல் கையைக் கட்டிக் கொண்டு தனக்கு ஒரு முத்தம் கொடுக்கும்படி கெஞ்சிக் கேட்டபடியே கண்ணன் நிற்கும் காட்சியும் இயக்குநரின் இயக்குதல் திறமைக்கு ஒரு அத்தாட்சி..


கவியை தனியே அழைத்துச் சென்று அடையா முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி வந்து மறுபடியும் அவளை பாறை உச்சிக்கு அழைத்துச் சென்று தன்னை மன்னிக்கும்படி கெஞ்சுகின்ற காட்சியும் இன்னொரு டாப் கிளாஸ் ரகம்..

இயக்குநரின் இந்தத் திறமைக்கு முழு பக்கவாத்தியம் வாசித்திருக்கிறார் ஒளிப்பதிவாளர். மிக அருமையான ஒளிப்பதிவு. படம் முழுக்க, முழுக்க கோவை, வால்பாறை எஸ்டேட் பகுதியிலேயே எடுக்கப்பட்டிருக்கிறது. மிகக் குறைவான லைட்டிங் வசதிகளுடன், இயற்கை வெளிச்சத்தையே அதிகம் பயன்படுத்தியிருக்கிறார்.

இரவுக் காட்சிகளிலும், சில படுக்கையறைக் காட்சிகளிலும் கேமிராவின் கோணம் சபாஷ் போட வைக்கிறது. பாலியல் பெண் தனது உடைகளை ஒவ்வொன்றாக அணிந்து கொண்டே கண்ணனுக்கு அட்வைஸ் செய்கின்ற அந்தக் காட்சியில் இயக்குநரும், கேமிராமேனும் போட்டி போட்டிருக்கிறார்கள்.


சிற்சில கிளிஷேக்களைக்கூட விட்டுவிடாமல் அதையும் படமாக்கியிருப்பதில் வெற்றி கண்டிருக்கிறார் இயக்குநர். குறிப்பாக சுஜாதாவிற்காக விடியற்காலை பொழுதில் வீட்டு வாசலில் காத்திருக்கும் கண்ணன், கவியின் தோழியாக வந்து அவர்களது செக்ஸ் பேச்சினால் வெட்கப்படும் தோழியின் அலட்டல் இல்லாத நடிப்பு.. கவியின் தங்கை டூவீலரை ரிப்பேர் செய்துவைத்துவிட்டு அக்கா திட்டுவதை அட்டென்ஷனில் நின்றபடியே கேட்டுவிட்டு அக்கா சென்றவுடன் ஹோ என்று கையை, காலை உதைத்து சந்தோஷக் கூச்சலிடுவது என்பது பல இடங்களில் சபாஷ் போட வைத்திருக்கிறார் இயக்குநர்.


பாடல் காட்சிகள் இரண்டு மட்டுமே என்பதாலும், படத்தின் கதையோட்டமே முடிவு என்ன என்பதை யூகிக்க முடியாத அளவுக்குச் சென்று கொண்டிருந்ததால் பாடல்கள் தேவையில்லாமல் இருந்தது. ஆனாலும் பாடல் காட்சிகளின் ஷாட்டுகளைக்கூட பதம் பிரித்து, ரிதம் சேர்த்து, அழகுணர்ச்சியுடன் கொடுத்திருக்கிறார்.

நடித்த நான்கு பேருக்குமே நன்றாகவே நடிப்பைக் கொட்டியிருக்கிறார்கள். முற்றிலும் புதுமுகங்கள் என்பதால் சில தயக்கங்கள் வெளிக்காட்டிவிடும் என்பதை உணர்ந்து குளோஸப் காட்சிகளைக்கூட பார்த்து, பார்த்து வைத்திருக்கிறார் இயக்குநர்.

அப்படியும் அனைவரையும்விட சுஜாதாவாக நடித்த பெண் மிஞ்சிவிட்டார்.. தன்னுடைய அளவு கடந்த ஆசையினால் தன் கணவனும் சேர்ந்து பாதிக்கப்பட்டிருக்கிறான் என்பதை உணர்ந்து திருந்துகின்ற காட்சியும், கணவரிடம் பேசும்போது அவர் வெளிப்படுத்தும் மிக நாகரிகமான வசனங்களுடைய நடிப்பும் பாராட்டுக்குரியது.

கண்ணன் என்ற பெயரில் சமூகக் குற்றவாளியாக நடித்திருக்கும் ஆறுமுகம் என்பவரை நிச்சயமாக பாராட்ட வேண்டும். கிளைமாக்ஸ் காட்சி பற்றித் தெரிந்திருந்தும் தைரியமாக நடிக்க முன் வந்ததிருக்கும் ஆறுமுகம் நிச்சயம் புகழுக்குரியவர். இந்தப் பெயருடன் ஹீரோவாக நடித்திருக்கும் முதல் நபர் இவராகத்தான் இருப்பார் என்று நினைக்கிறேன்.


நிச்சயம் இந்த இயக்குநரிடம் ஏதோ இருக்கிறது. ஆனால் பெரிய நடிகர்களை வைத்து படமெடுக்க வாய்ப்பு கிடைக்காமல் கிடைத்தவரையிலும் நல்லவிதமாக எடுத்து வைப்போம் என்பதால் இப்படி எடுத்துவிட்டாரோ என்னவோ..? இனி வேறு நல்ல கதையம்சம் உள்ள படங்களை இயக்கும் வாய்ப்பு இவருக்கு நிச்சயம் கிடைக்க வேண்டும் என்று நான் என் அப்பன் முருகனை வேண்டிக் கொள்கிறேன்..

இதுவரையிலும் வெளி வந்த அத்தனை ‘பிட்டு' படங்களிலும் எந்தவித குற்றவுணர்ச்சியையும் காட்டாமல் ‘அவன் நல்லவன்'. ‘இவள் கெட்டவள்' என்றே காட்டிவிட்டு ‘பிட்டு' காட்சிகளையும் அதிகமாக ஓட்டி விடுவதால் ‘சீன் படம்' பார்த்த திருப்தி மட்டுமே நமக்குக் கிடைக்கும்.

ஆனால் இதில் அதையெல்லாம் தாண்டி அது போன்ற மனநிலையில் இருக்கும் ஒருவன் எப்படி அதிலிருந்து தப்பிக்க முடியாமல் மாட்டிக் கொண்டு முழிக்கிறான் என்பதையும், இறுதியில் தன் தவறை உணர்ந்து தனக்குத் தானே தண்டனை கொடுத்துக் கொள்வதையும் இந்தப் படத்தில்தான் முதல் முதலாக பார்க்கிறேன்.

திரைப்படங்களை இயக்கக் காத்திருப்பவர்களும், ஒளிப்பதிவில் சாதனை படைக்க விரும்புவர்களும், வித்தியாசமான படங்களை பார்க்க விரும்புவர்களும் நிச்சயம் ஒரு முறையாவது இதனைப் பார்க்கலாம் என்று பரிந்துரை செய்கிறேன். நிச்சயம் உங்களது நேரம் வீணாகாது.

இது போன்ற தகாத உறவுக் குற்றங்களை, குற்றமாக பார்க்காமல் பின்புலமாக அக்குற்றங்களைச் செய்ய அவனைத் தூண்டியது எது என்பதையும், இக்குற்றங்களைச் செய்யத் தூண்டிய புறச்சூழலையும் நாம் அறிந்து கொண்டால் அதில் குற்றவாளிகளின் பங்கு கால்வாசிதான் இருக்கும் என்பதையும் நாம் நிச்சயம் புரிந்து கொள்ளலாம்.  இதைத்தான் இத்திரைப்படம் நமக்கு உணர்த்துகிறது.

படத்தின் இயக்குநர் திரு.ஜோ அவர்களுக்கும், அவரது இயக்குநர் குழுவிற்கும், ஒளிப்பதிவாளருக்கும், படத்தின் தயாரிப்பாளருக்கும், நடிகர், நடிகைகளுக்கும் எனது நன்றி கலந்த பாராட்டுக்கள் உரித்தாகட்டும்.

புகைப்படங்கள் உதவிக்கு நன்றி : www.indiaglitz.com

46 comments:

க ரா said...

ரொம்ப ரசிச்சு பாத்தீருக்கீங்களோ :)

பாலா said...

அடப்பாவி இராமசாமி!!!!

பாலா said...

//எனது நன்றி கலந்த பாராட்டுக்கள் உரித்தாகட்டும்.//

நீங்க சொல்லிட்டீங்கல்லண்ணே!!! வழக்கம் போல கடைசி வரிதாண்ணே! :)

பாலா said...

//சங்கமத்தில் திளைத்து மூழ்குகிறார்கள்.//

இலக்கியம்ண்ணே!!! ;)

பாலா said...

//நல்ல கதையம்சம் உள்ள படங்களை இயக்கும் வாய்ப்பு இவருக்கு நிச்சயம் கிடைக்க வேண்டும் என்று நான் என் அப்பன் முருகனை வேண்டிக் கொள்கிறேன்..
//

வெளங்கிடும்!! உங்களுக்கு வேற ஆளே கிடைக்கலையா??

க ரா said...

ஹாலிவுட் பாலா said...

அடப்பாவி இராமசாமி!!!!
---
நம்மள பீட் பண்ண முடியாதுல்ல :)

நசரேயன் said...

கண்டிப்பா பார்க்கிறேன்

நசரேயன் said...

//இராமசாமி கண்ணண் said...
ரொம்ப ரசிச்சு பாத்தீருக்கீங்களோ :)//

ஏதும் உள்குத்து இல்லையே

a said...

//
நிச்சயம் இந்த இயக்குநரிடம் ஏதோ இருக்கிறது
//

தங்களின் விமர்சனத்தை படிக்கும்போது இவரிடம் நல்ல திறமை இருப்பது போல் தெரிகிறது...

Katz said...

ஒரு பிட்டு படத்தையே இவ்வளவு புட்டு புட்டு வச்சுட்டிங்க .

க ரா said...

sweatha said...

உங்கள் பதிவுகளை jeejix.com இல் பதிவு செய்யுங்களேன், அரசியல் , சினிமான்னு ஆறுவகை இருக்கு
ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு வகையில் அதிகம் பார்க்கப்பட்ட பதிவுக்கு jeejix பணம் குடுக்குதாம்.
ஆயிரக்கணக்கா என் ஆர் ஐ இருக்காங்கப்பா அந்த சைட்ல.
நீங்க அந்த சைட்ல பதிவு செய்தீங்கன்னா மறக்காம என்னோட ஈமெயில் (sweathasanjana அட் ஜிமெயில் )
ஐடிய அறிமுகபடுதினவங்க அப்படின்னு அவங்க ஈமெயில் ஐடிக்கு அனுப்புங்க. புண்ணியமா போகட்டும்
:)

----

அண்ணாச்சி உடனடியா பஞ்சாயத்த கூட்டி இந்த கொசுவ ஒழிக்கற்துக்கு வழி பண்ணுங்க அண்ணாச்சி.. உங்களுக்கு புன்னியமா போகும்..

Katz said...

ஒரு பிட்டு படத்தை பிட்டு பிட்டு வச்சுட்டிங்க .

பாலா said...

//நம்மள பீட் பண்ண முடியாதுல்ல :)//

அண்ணாச்சி... மொதல்ல இதுக்கு ஒரு பஞ்சாயத்து வைங்க. எங்க போனாலும் இவரு மொதல்ல கமெண்ட் போட்டுடுறாரு!

ரவி said...

இராமசாமி கண்ணன் சார், மெயில் அனுப்பி ஏமாந்தீகளோ ?

உண்மை அண்ணனுக்கு மட்டும் வந்து மாட்டுது இப்படியான பிட்டு இல்லாத படங்கள் !!!

pichaikaaran said...

விமர்சனம் எழுதறேனு சொல்லிட்டு, ஊருல இருக்ற எல்லா பிட்டு படத்தையும் பார்த்தறீங்க ஃ ம்ம் . இந்த கேரக்டர் வைச்சே ஒரு படம் எடுக்கலாம் போல இருக்கே

உண்மைத்தமிழன் said...

[[[இராமசாமி கண்ணண் said...
ரொம்ப ரசிச்சு பாத்தீருக்கீங்களோ:)]]]

உண்மைதான்.. ரசிக்க வைத்திருக்கிறார் இயக்குநர்..!

உண்மைத்தமிழன் said...

[[[ஹாலிவுட் பாலா said...
அடப்பாவி இராமசாமி!!!!]]]

அப்படியில்ல பாலா.. அப்பாவி இராமசாமி..!

உண்மைத்தமிழன் said...

[[[ஹாலிவுட் பாலா said...

//எனது நன்றி கலந்த பாராட்டுக்கள் உரித்தாகட்டும்.//

நீங்க சொல்லிட்டீங்கல்லண்ணே!!! வழக்கம் போல கடைசி வரிதாண்ணே! :)]]]

நல்லாயிரு..!

உண்மைத்தமிழன் said...

[[[ஹாலிவுட் பாலா said...

//சங்கமத்தில் திளைத்து மூழ்குகிறார்கள்.//

இலக்கியம்ண்ணே!!! ;)]]]

ஹி.. ஹி.. ஹி..!

உண்மைத்தமிழன் said...

[[[ஹாலிவுட் பாலா said...

//நல்ல கதையம்சம் உள்ள படங்களை இயக்கும் வாய்ப்பு இவருக்கு நிச்சயம் கிடைக்க வேண்டும் என்று நான் என் அப்பன் முருகனை வேண்டிக் கொள்கிறேன்..//

வெளங்கிடும்!! உங்களுக்கு வேற ஆளே கிடைக்கலையா??]]]

இல்ல பாலா.. மனுஷனுக்கு இயக்குதல் திறமை நிறையவே இருக்கு.. வேற இடத்துல வாய்ப்பு கிடைச்சா நிச்சயம் ஜெயிப்பாரு..!

உண்மைத்தமிழன் said...

[[[இராமசாமி கண்ணண் said...

ஹாலிவுட் பாலா said...

அடப்பாவி இராமசாமி!!!!
---
நம்மள பீட் பண்ண முடியாதுல்ல :)]]]

ஸ்பீடு கமெண்ட்டுக்கு நன்றி இராமசாமி ஸார்..!

உண்மைத்தமிழன் said...

[[[நசரேயன் said...
கண்டிப்பா பார்க்கிறேன்.]]]

அங்கேயெல்லாம் வருமா..?

உண்மைத்தமிழன் said...

[[[நசரேயன் said...

//இராமசாமி கண்ணண் said...

ரொம்ப ரசிச்சு பாத்தீருக்கீங்களோ :)//

ஏதும் உள் குத்து இல்லையே]]]

இருக்காது.. சாதாரணமாத்தான் கேட்டிருக்காருன்னு நினைக்கிறேன்..!

உண்மைத்தமிழன் said...

[[[வழிப்போக்கன் - யோகேஷ் said...

//நிச்சயம் இந்த இயக்குநரிடம் ஏதோ இருக்கிறது//

தங்களின் விமர்சனத்தை படிக்கும்போது இவரிடம் நல்ல திறமை இருப்பது போல் தெரிகிறது...]]]

கண்டிப்பா திறமைசாலிதான் யோகேஷ்..!

உண்மைத்தமிழன் said...

[[[sweatha said...

உங்கள் பதிவுகளை jeejix.com இல் பதிவு செய்யுங்களேன், அரசியல் , சினிமான்னு ஆறுவகை இருக்கு
ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு வகையில் அதிகம் பார்க்கப்பட்ட பதிவுக்கு jeejix பணம் குடுக்குதாம்.
ஆயிரக்கணக்கா என் ஆர் ஐ இருக்காங்கப்பா அந்த சைட்ல.
நீங்க அந்த சைட்ல பதிவு செய்தீங்கன்னா மறக்காம என்னோட ஈமெயில் (sweathasanjana அட் ஜிமெயில் )
ஐடிய அறிமுகபடுதினவங்க அப்படின்னு அவங்க ஈமெயில் ஐடிக்கு அனுப்புங்க. புண்ணியமா போகட்டும்
:)]]]

செஞ்சு பார்த்திட்டு சொல்றேன்..!

உண்மைத்தமிழன் said...

[[[வழிப்போக்கன் said...
ஒரு பிட்டு படத்தையே இவ்வளவு புட்டு புட்டு வச்சுட்டிங்க.]]]

என்ன செய்யறது..? அப்படியீல்ல எடுத்து வைச்சிருக்காங்க..?

உண்மைத்தமிழன் said...

[[[இராமசாமி கண்ணண் said...

sweatha said...

உங்கள் பதிவுகளை jeejix.com இல் பதிவு செய்யுங்களேன், அரசியல், சினிமான்னு ஆறுவகை இருக்கு. ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு வகையில் அதிகம் பார்க்கப்பட்ட பதிவுக்கு jeejix பணம் குடுக்குதாம்.ஆயிரக்கணக்கா என் ஆர் ஐ இருக்காங்கப்பா அந்த சைட்ல.
நீங்க அந்த சைட்ல பதிவு செய்தீங்கன்னா மறக்காம என்னோட ஈமெயில் (sweathasanjana அட் ஜிமெயில்) ஐடிய அறிமுகபடுதினவங்க அப்படின்னு அவங்க ஈமெயில் ஐடிக்கு அனுப்புங்க. புண்ணியமா போகட்டும்:)

----

அண்ணாச்சி உடனடியா பஞ்சாயத்த கூட்டி இந்த கொசுவ ஒழிக்கற்துக்கு வழி பண்ணுங்க அண்ணாச்சி.. உங்களுக்கு புன்னியமா போகும்..]]]

கொஞ்சம் முயற்சி செஞ்சு பார்ப்போம் ஸார்..!

உண்மைத்தமிழன் said...

[[[ஹாலிவுட் பாலா said...

//நம்மள பீட் பண்ண முடியாதுல்ல :)//

அண்ணாச்சி... மொதல்ல இதுக்கு ஒரு பஞ்சாயத்து வைங்க. எங்க போனாலும் இவரு மொதல்ல கமெண்ட் போட்டுடுறாரு!]]]

நண்பர்ன்னா இப்படித்தான் இருக்கோணும் பாலா..!

உண்மைத்தமிழன் said...

[[[செந்தழல் ரவி said...

உண்மை அண்ணனுக்கு மட்டும் வந்து மாட்டுது இப்படியான பிட்டு இல்லாத படங்கள் !!!]]]

தம்பி.. வூட்டுக்குப் பக்கத்துல இருக்குற தியேட்டர்ல ஓடுது.. அதான் பார்த்தேன்..!

Jey said...

இங்கயே படம் பாத்தாச்சி, இனி தியேட்டர் வேற போய் பாக்கனுங்களா?...
என்னமோ போங்க ஒரு படத்தயும் விடாம பாக்குரீங்க போல...

http://pattikattaan.blogspot.com/2010/08/blog-post.html

பிரபல பதிவர் said...

அவளின் உணர்ச்சிகள், பேசுவது கிளியா.....

என்னமோ உங்க காட்ல(!) மழைதான் போங்க......


பஞ்சாயத்து தலைவர்கள் எல்லோரும் என்ன பண்றீங்க.... உ.த. அண்ணன் கல்யானம் ஆகாம ரொம்ப கெட்டு போனதும் இல்லாம... நம்மளயும் கெடுக்க பாக்குறாரு..... பாத்து எதாவது செய்யுங்க நாட்டாமைகளா!!!!!!

உண்மைத்தமிழன் said...

[[[பார்வையாளன் said...
விமர்சனம் எழுதறேனு சொல்லிட்டு, ஊருல இருக்ற எல்லா பிட்டு படத்தையும் பார்த்தறீங்க ஃ ம்ம். இந்த கேரக்டர் வைச்சே ஒரு படம் எடுக்கலாம் போல இருக்கே]]]

நல்ல ஐடியா பார்வையாளன் ஸார்..

நீங்களே தயாரிக்கலாமே..? இதை இயக்கும் வாய்ப்பையாவது எனக்குத் தாருங்கள்..!

உண்மைத்தமிழன் said...

[[[Jey said...
இங்கயே படம் பாத்தாச்சி, இனி தியேட்டர் வேற போய் பாக்கனுங்களா? என்னமோ போங்க ஒரு படத்தயும் விடாம பாக்குரீங்க போல...

http://pattikattaan.blogspot.com/2010/08/blog-post.html]]]

நீங்க பார்த்தாச்சா..? படத்தைப் பத்தி ஒண்ணும் சொல்லலியே ஜெய்..!

ஜெட்லி... said...

ஹ்ம்...நேரம் கிடைச்சா போறேன்....
அடுத்த வாரம் வரைக்கும் படம் தாங்குமா??

அகல்விளக்கு said...

//ஜெட்லி said...
நேரம் கிடைச்சா போறேன்....
அடுத்த வாரம் வரைக்கும் படம் தாங்குமா??//

நல்ல படம் வந்தா (அது பிட்டு படமாவேயிருந்தாலும்) ரொம்ப கஷ்டம்....

சீக்கிரமா பாத்துடணும்... :-)

அகல்விளக்கு said...

நல்லா விமர்சித்திருக்கீறு அண்ணே... :-)

பித்தன் said...

பிட்டுப் படம் அட்டுப் படம் எல்லாத்துக்கும் உங்க உழைப்பு ஒன்னுதாண்ணே...! ரொம்ப சிலாகிச்சி சொல்லுறதப் பார்த்தா படம் ரொம்ப நல்லாத்தான் இருக்குப் போல... இருந்தாலும் பிட்டுப் படத்துக்கு எட்டு கால விமர்சனம் வளர்க நின்றன் புகழ்... அப்புறம் அண்ணே ஆணி புடுங்கும் இடத்தில் ஒட்டு போட அனுமதி இல்லை அதனால் இந்த கமெண்டு.... கொவிச்சுகிராதீக....

உண்மைத்தமிழன் said...

[[[sivakasi maappillai said...

அவளின் உணர்ச்சிகள், பேசுவது கிளியா.....

என்னமோ உங்க காட்ல(!) மழைதான் போங்க......

பஞ்சாயத்து தலைவர்கள் எல்லோரும் என்ன பண்றீங்க.... உ.த. அண்ணன் கல்யானம் ஆகாம ரொம்ப கெட்டு போனதும் இல்லாம... நம்மளயும் கெடுக்க பாக்குறாரு..... பாத்து எதாவது செய்யுங்க நாட்டாமைகளா!!!!!!]]]

சிவகாசி மாப்பிள்ளை..

உங்களுக்குத்தான் என் மேல எம்புட்டு பாசம்..!?

கண்ணுல கண்ணீர் பொங்கிக்கிட்டு நிக்குது..!

வாழ்க.. வளர்க..!

Anonymous said...

உமக்கு மட்டும் எப்படியா இந்த மாதிரி படமா மாட்டுது...ஆங் அது சரி...அடுத்தது நம்ம தலைவர் படம் சாம் அன்டேர்சன் படம் ஒண்ணு எடுக்கிறார்...அதை விட்டு வைக்காத.

உண்மைத்தமிழன் said...

[[[ஜெட்லி... said...
ஹ்ம்...நேரம் கிடைச்சா போறேன்....
அடுத்த வாரம் வரைக்கும் படம் தாங்குமா??]]]

தாங்காது ஜெட்லி.. இந்த வாரமே பார்த்திருங்க..!

ராம்ஜி_யாஹூ said...

நன்றிகள் பகிர்ந்தமைக்கு
எந்த திரை அரங்கம் - கிருஷ்ணவேணி அல்லது சைதை ஜெயராஜ்

உண்மைத்தமிழன் said...

[[[அகல்விளக்கு said...

//ஜெட்லி said...
நேரம் கிடைச்சா போறேன்....
அடுத்த வாரம் வரைக்கும் படம் தாங்குமா??//

நல்ல படம் வந்தா (அது பிட்டு படமாவேயிருந்தாலும்) ரொம்ப கஷ்டம். சீக்கிரமா பாத்துடணும்... :-)]]]

அதைத்தான் நானும் சொல்றேன்..!

உண்மைத்தமிழன் said...

[[[அகல்விளக்கு said...
நல்லா விமர்சித்திருக்கீறு அண்ணே..:-)]]]

அப்படீங்களா..? நன்றிங்கண்ணே..!

உண்மைத்தமிழன் said...

[[[பித்தன் said...
பிட்டுப் படம் அட்டுப் படம் எல்லாத்துக்கும் உங்க உழைப்பு ஒன்னுதாண்ணே...! ரொம்ப சிலாகிச்சி சொல்லுறதப் பார்த்தா படம் ரொம்ப நல்லாத்தான் இருக்குப் போல... இருந்தாலும் பிட்டுப் படத்துக்கு எட்டு கால விமர்சனம் வளர்க நின்றன் புகழ்... அப்புறம் அண்ணே ஆணி புடுங்கும் இடத்தில் ஒட்டு போட அனுமதி இல்லை அதனால் இந்த கமெண்டு.... கொவிச்சுகிராதீக.]]]

ஹி.. ஹி.. பித்தன்ஜி.. இனிமே வீட்டுக்கு வந்துட்டு மறக்காம ஓட்டுப் போட்டிருங்க..!

உண்மைத்தமிழன் said...

[[[சாரு புழிஞ்சதா said...
உமக்கு மட்டும் எப்படியா இந்த மாதிரி படமா மாட்டுது...ஆங் அது சரி. அடுத்தது நம்ம தலைவர் படம் சாம் அன்டேர்சன் படம் ஒண்ணு எடுக்கிறார். அதை விட்டு வைக்காத.]]]

சாம் ஆண்டர்சன் படம் எடுக்கிறாரா..? ஏற்கெனவே எடுத்தப் படத்தையே அவர் ஒருத்தர்தான் பார்த்தாராம்.. இப்போ எடுக்குற படத்தை..?

உண்மைத்தமிழன் said...

[[[ராம்ஜி_யாஹூ said...

நன்றிகள் பகிர்ந்தமைக்கு
எந்த திரை அரங்கம் - கிருஷ்ணவேணி அல்லது சைதை ஜெயராஜ்]]]

கிருஷ்ணவேணி இல்லை..

சைதை ஜெயராஜ் கண்ணை மூடி நாட்களாகிவிட்டது..!

கே.கே.நகர் விஜயா தியேட்டரில் பார்த்தேன் ராம்ஜி ஸார்..!