வம்சம் - சினிமா விமர்சனம்

13-08-2010


என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

"தலைக்கட்டுக் குடும்பத்தில் ஒருத்தன்கூட மிஞ்சலைன்னா, அது அந்த வம்சத்துக்கே பாவம்பா.. ஒருத்தனாவது பொழைச்சுக்குங்கடா.." என்பது இன்னமும் கிராமப்புறங்களில் சொல்லப்படும் வார்த்தைகள்..

இதுதான் இத்திரைப்படத்தின் ஒரு வரிக் கதை..


ஊர்க் கோவிலின் தலைக்கட்டுக் குடும்பத்தில் ஒருவரான அருள்நிதியின் அப்பா அந்த ஊரில் இருபத்தைந்து வருடங்களுக்கு முன்பாக ரவுடியிஸத்தின் உச்சத்தில் இருந்தவர். பரம்பரையாக நடைபெறும் ஊர்த் திருவிழாவில் நடத்தப்படும் ரேக்ளா ரேஸ், கம்புச் சண்டை, கோழிச் சண்டை, மங்காத்தா ஆடுதல் என்று அனைத்திலுமே அவர்தான் கில்லி.

வருடாவருடம் இவரிடம் தோல்வியடையும் ஜெயப்பிரகாஷ், வஞ்சகமாக பட்டைச் சாராயத்தில் விஷத்தைக் கலந்து கொடுத்து அருள்நிதியின் அப்பாவை சாகடிக்கிறார். இதன் பின்புதான் அருள்நிதியே பிறக்கிறார். இது தனிக்கதை..

இப்போது மகனும் அதே போன்ற ரவுடியிஸத்துடன் வளர வேண்டாமே என்பதற்காக ஊரைவிட்டு ஒதுக்குப்புறமாக கண்ணை இமை காப்பதைப் போல் அருள்நிதியை காத்து வருகிறாள் அருள்நிதியின் தாய். இப்போது தந்தை செய்துவிட்டுப் போன வினைகள் ஒவ்வொன்றாக அருள்நிதியைத் தேடி வருகின்றன.

போதாக்குறைக்கு ஜென்மப் பகையுள்ள பக்கத்து ஊரில் தனது பசுமாட்டை செகண்ட் ஹேண்ட்டில் வாங்கிய சுனைனாவுடன் காதல் ஏற்பட்டுத் தொலைகிறது அருள்நிதிக்கு. சுனைனாவின் அப்பாவை ஜெயப்பிரகாஷ் ஒரு விரோதத்தில் போட்டுத் தள்ளிவிட.. கோபத்தில் சுனைனா, நட்ட நடுரோட்டில் ஜெயப்பிரகாஷை அவமரியாதை செய்துவிட..

கோபமான ஜெயப்பிரகாஷ் அண்ட் கோ சுனைனாவையும், அவளுடைய காதலனான அருள்நிதியையும் கொலை செய்யப் பார்க்கிறது. இதில் காதலிக்காக அருள்நிதியும் கோபம் கொண்டு அவர்களை போட்டுத் தள்ளப் பார்க்கிறார்.. யார் முந்திக் கொண்டது..? இவர்களது காதல் ஜெயித்ததா..? என்பதுதான் மிச்சம், மீதியிருக்கும் கதை..

'பசங்க' படத்தின் வெற்றியினைத் தொடர்ந்து அதனைத் தக்க வைத்துக் கொள்ளும்விதமாக வித்தியாசமான களத்தில் விளையாட வேண்டிய கட்டாயம் பாண்டிராஜூவுக்கு. பல திரைப்படங்களில் பார்த்த கதைதான் என்றாலும், அதனைச் சொன்ன செய்நேர்த்தி பல இடங்களில் பலே போட வைக்கிறது.

ஊர்த் திருவிழாவைப் பற்றி போலீஸ் கான்ஸ்டபிள், இன்ஸ்பெக்டரிடம் சொல்லி பில்டப் கொடுப்பதிலேயே கதையின் போக்குத் தெரிந்துவிட்டது. நிச்சயம் பாண்டிராஜூக்கு இந்தப் பகுதி மக்களின் கலாச்சாரமும், பழக்க வழக்கங்களும், சாமி கும்பிடுகளும் அத்துப்படியாக தெரிந்திருக்கிறது.. சந்தேகமேயில்லை.. இது விஷயமாக தான் பார்த்த, கேட்ட அத்தனை விஷயங்களையும் இந்தப் படத்தில் படமாக்கியிருக்கிறார்.

சாமி கும்பிடு நடக்கும் நேரத்தில் படப்பிடிப்பை வைத்து அந்தச் சூழலில் இவர் எடுத்துக் காட்டியிரும் விதம், நிச்சயம் பல இயக்குநர்களுக்கு ஒரு சவாலான விஷயம்.. இந்த விஷயத்தில் பாராட்டுக்குரிய இன்னும் இரண்டு நபர்கள் கேமிராமேன் மகேஷ்முத்துச்சாமியும், எடிட்டரும்தான். திருவிழா காட்சிகள் முழுவதும் கண்ணைக் கட்டிப் போட்டுவிட்டன.


படத்தின் திரைக்கதையில் வழக்கம்போலவே சிறுவர்களையும் பல இடங்களில் பயன்படுத்தியிருக்கிறார். அதோடு ஸ்கிரீன்பிளேவுக்காக அவர் காட்டியிருக்கும் சில காட்சியமைப்புகள் ரசிக்கத்தக்கவை..

செல்போன் டவர் சிக்னல் கிடைக்காமல் எல்லார் வீட்டிலும் செல்போனை மரத்தின் உச்சியில் இருந்து கயிறு கட்டித் தொங்கவிட்டிருப்பது.. பசு மாட்டிற்கு 'அசின்' பெயரையும், பூனைக்குட்டிக்கு 'த்ரிஷா' என்ற பெயரையும் வைத்து அடிக்கடி சொல்லிக் காண்பிப்பது.. மாடு காணாமல் போவதாக டேக்கா கொடுத்துவிட்டு அருள்நிதி சுனைனாவை பார்க்க வருவது.. கஞ்சா கருப்பு பூனையை வைத்து காதலியை மடக்குவது.. சுனைனாவும், தோழியும் வாயைப் பொளந்து கொண்டு சவுண்டு கொடுப்பது.. முதல் சண்டைக் காட்சியின்போது கம்பி வேலியைக் காட்டி அருள்நிதி தப்பிப்பது.. அருள்நிதியின் அம்மா-அப்பா பிளாஷ்பேக்கின் சில காட்சிகள் என்று பலதும் மனதில் நிற்கக் கூடியது..

கஞ்சா கருப்புவின் கு.க. திட்டத்திற்கு ஆள் பிடிக்கும் வேலையும், கூடவே காதலுக்காக அலைகின்ற அலைச்சலும் மறக்க முடியாத நகைச்சுவையாகிவிட்டது. கஞ்சா கருப்புவின் கேரியரில் இப்படம் ஒரு சாதனைதான்.

புதுமுகமாகவே தெரியவில்லை அருள்நிதியைப் பார்க்கின்றபோது. கலைந்த தலையும், கசங்கிய சட்டையும், சாயம் போன கைலியுமாக பல காட்சிகளில் கிராமத்தானாகவே காட்சியளிக்கிறார் இந்த சென்னை வாலிபர். அதே சமயம் அழுத்தமான காதல் காட்சிகளும், நடிப்பைக் கொட்ட வேண்டிய காட்சிகளும் படத்தில் இல்லாததால் இந்த முறை தப்பித்துவிட்டார். இனி அடுத்து வரக் கூடிய படங்களில் எப்படியோ..?

ஒவ்வொரு முறை மாட்டைப் பிடித்துக் கொண்டு வந்து சுனைனாவிடம் வந்த நிற்பதும், முதல் முறையாக சுனைனாவைப் பார்த்து காதல் கொள்ளும் காட்சியிலும் டீன் ஏஜ் பையனாக அச்சு அசலாக இருக்கிறார். 


ஆனால் அருள்நிதி தனது முதல் படத்திலேயே சண்டைக் காட்சிகளில் நடித்திருக்கும் வேகத்தையும், காட்டியிருக்கும் ஆக்ஷனையும் பார்த்தால் எங்கே ஆக்ஷன் இளவரசன் என்று பெயர் சூட்டி கமர்ஷியலுக்குள் இழுத்துப் போய்விடுவார்களோ என்று பயமாகவும் உள்ளது. இத்தனைக்கும் முதல் ஷெட்யூலில் எடுக்கப்பட்டது சண்டைக் காட்சிகள்தானாம்.. ஆச்சரியமாக இருக்கிறது.. எப்படி டிரெயினிங் கொடுத்து, எப்படி முடித்தார்கள்..?

சுனைனாவுக்கு சிரிப்பு ஒன்றே போதும் என்று நினைக்கிறேன்.. சிறந்த கலைஞர்கள் நல்லவொரு இயக்குநரிடம் கிடைத்தால் ஷேப் செய்து ஸ்கீரினில் காட்டப்படுவார்கள். சுனைனாவுக்கு இந்த வாய்ப்பு லம்பமாக கிடைத்திருக்கிறது. சுனைனாவுக்கு டைட் குளோஸப் ஷாட்டுகளை அனாசயமாக வைத்து அசத்தியிருக்கிறார் இயக்குநர்..


அசப்பில் கிராமத்து தேவதையைப் போலவே இருக்கும் சுனைனாவை நினைத்தால் ஜொள்ளுவிடத்தான் செய்கிறது.. அதிலும் அந்த சிவப்பு கலர் தாவணியில்.. ம்ம்ம்.. வயசான காலத்துல இதெல்லாம் செய்யக் கூடாதுன்னு முருகன் சொன்னாலும் மனசு விட மாட்டேங்குது.

அடுத்த ஆச்சரியம், அருள்நிதியின் அம்மாவாக நடித்திருக்கும் நந்தினி என்ற புதுமுகம். பல திரைப்படங்களில் நடித்த அனுபவம் போல் தெரிந்தது.. இளமையான தோற்றத்தில் பளிச்சென்று இருந்த அளவுக்கு முதுமையில் அவரால் முடியவில்லை. முதுமையைத் தாண்டிய இளமை அவரது முகத்திலேயே தெரிந்தது.


பையனுக்கு புத்தி சொல்கிற காட்சியிலும், பையனுக்காக விட்டுக் கொடுத்ததில் இறங்குகின்ற காட்சியிலும் எதார்த்தமான அம்மாவாக இருக்கிறார். இவர் சம்பந்தப்பட்ட காட்சியில் அளவுக்கதிகமாக தாய்ப்பாசத்தைக் காட்டிவிடவில்லை இயக்குநர். இதற்காக அவருக்கு ஒரு ஷொட்டு.


அண்ணன் ஜெயப்பிரகாஷ் வழக்கம்போலவே பின்னியிருக்கிறார்.. இரண்டு நிமிடங்களுக்கு முன்பு வேலைக்குச் சேர்ந்த ஆள் விடும் வார்த்தையிலேயே அவரின் ஜாதகத்தைத் தெரிந்ததாகச் சொல்லிப் பணத்தைக் கொடுத்ததுபோல் கொடுத்து வாங்கிக் கொண்டு அனுப்பிவிடும் மிராசுதாரர் கேரக்டர் அண்ணனுக்குக் கச்சிதமாகப் பொருந்துகிறது.

உதயம் தியேட்டரில் காலை காட்சி படம் பார்க்க வந்திருந்த ஜெயப்பிரகாஷ் படம் முடிந்து போகும்போது ரசிகர்கள் வெள்ளத்தில் நீந்திதான் வெளியில் போக வேண்டியதாயிற்று. இதுவரையிலும் வில்லன் என்றாலே கொடூரமான பார்வையோடு கடந்து போக வைக்கும் திரைப்படங்களின் நடுவே, இத்திரைப்படத்தில் அவர் மீது அச்சச்சோ என்று முணுமுணுக்க வைத்த காட்சியொன்று இருக்கிறது. இதைப் பார்த்து கலங்கிப் போன ரசிகர்கள் கூட்டமும் அவருடன் கை குலுக்கி வார்த்தையாலேயே உச்சுக் கொட்ட.. மனிதர் நெகிழ்ந்து, கண் கலங்கிப் போனார்.

இடைவேளைக்குப் முன்பு சுனைனாவின் வீராவேசத்தால் விளையும் திரைக்கதை பல்டி.. இடைவேளைக்குப் பின்பும் அட போட வைத்து திரைக்கதையில் இன்னும் கொஞ்சம் வேகத்தைக் கூட்டிவிட்டன. தன்னைக் கல்யாணம் செய்து கொள்ளாவிட்டால் தான் அருளை விடப் போவதில்லை என்று சுனைனா சொன்னாலும், அடித்து நொறுக்க அரிவாளோடு ஆளை அனுப்புவார் என்று தெரியாமல் வரும் திடீர் காட்சியில் திகைப்பு வந்தது..


மாமன் மகளை மணக்க சம்மதித்து பின்பு அடுத்த அடிதடியில் மறுபடியும் வீரம் கொண்டு மணந்தால் சுனைனாதான் என்று அருள்நிதி சொல்வதெல்லாம் கொஞ்சம் அதிகப்படியான கற்பனை சீன்கள்தான் என்றாலும் ரசிக்கும்படி எடுத்திருக்கிறார் இயக்குநர்.

படத்தின் சண்டைக் காட்சிகள்தான் வயிற்றைக் கலக்கி விட்டன. சண்டைக் கோழி திரைப்படத்தின் இறுதிச் சண்டைக் காட்சிகளைப் போல மடேர்.. மடேர்.. என்று எழுந்த சப்தத்தில் நெஞ்சுக்கூட்டு அடித்துக் கொண்டது.. பசங்க படத்துக்கு யு சர்டிபிகேட் என்பது பொருத்தம்தான். ஆனால் இந்தப் படத்துக்குமா..? 


சென்சார் போர்டுகாரர்கள் ஓர வஞ்சனையாகத்தான் இருக்கிறார்கள். காரணம், இந்தப் படத்தை பார்த்த பெண்மணிகளில் ஒருவர்தான், எனது வரலாற்றுச் சிறப்புமிக்க காவியக் குறும்படமான 'புனிதப்போர்' குறும்படத்திற்கு சென்சார் சர்டிபிகேட்டே தர மாட்டேன் என்று மறுத்து என்னுடன் மல்லுக் கட்டியவர். (அடுத்தப் பதிவு இது பற்றியதுதான்.) ஆனால் இந்தப் படத்திற்கு எதற்காக இவர் 'யு' சர்டிபிகேட்டுக்கு சம்மதித்தார் என்பதையும் கேட்க வேண்டும்.

குழந்தைகள் மேல் பாண்டிராஜிற்கு பிரியம் என்பதால் அவர்களை வைத்தும், அவர்களைப் பயன்படுத்தியும் காட்சிகளை வைத்திருந்தாலும் குழந்தைகள் பார்க்கக் கூடாத அளவிற்குத்தான் சண்டைக் காட்சிகளை அமைத்திருக்கிறார். அதிலும் ஒருவரின் கால் நரம்பினை அறுத்துவிட்டதாக வசனத்திலும், காட்சியிலும் காட்டியிருக்கும் வேகமே இதற்குக் காட்சி.. இப்படிச் செய்யலாமா பாண்டியண்ணே..?

இவ்வளவு தூரம் கண்டு கொள்ளாமல் இருந்திருக்கும் சென்சார் போர்டு சுனைனாவின் அறிமுகக் காட்சியில் “குண்டி கழுவத்தான ஆத்துக்கு வந்திருக்க..?” என்று அருள்நிதியிடம் கேட்கின்ற வசனத்தில், குண்டி என்பதில் மட்டும் கச்சிதமாக கத்திரி போட்டு ஏதோ வேலை செய்வதைப் போல் பாவ்லா காட்டியிருக்கிறது. ஆனாலும் பாண்டிராஜிற்கு ரொம்பத்தான் தைரியம்.

இப்படியெல்லாம் ஊர்க்காரர்கள் எங்கே இருக்கிறார்கள் என்பதைக் காட்டத்தான் துவக்கத்திலேயே புதுக்கோட்டைக்குப் பக்கத்தில் இருக்கும் இரண்டு கிராமங்களை அடையாளம் காட்டியதோடு அங்கே நடக்கின்ற அடிதடி, வெட்டுக்குத்து எல்லாமே தேவர் உறவின் முறை சொந்தங்களுக்கு இடையேதான் என்பதை தெளிவாக வசனத்திலேயே சொல்லித் தப்பித்திருக்கும் பாண்டிராஜின் சாமர்த்தியத்தையும் கொஞ்சம் பாராட்டித்தான் ஆக வேண்டும்.

படத்தில் கொஞ்சம் தொய்வான இடம் கிளைமாக்ஸுக்கு முந்திய திருவிழாக் காட்சிகள்தான். திருவிழா நேரங்களில் ஊருக்குள் ஒரு கொலை நடந்தால், ஊரைக் கூட்டி ஒப்பாரி வைக்காமல், கட்டிலோடு சேர்த்துத் தூக்கிக் கொண்டு போய் யாருக்கும் தெரியாமல் எரித்துவிடுவது அந்த ஊர் வழக்கம் என்று சொல்லிவிட்டதால்தான் திருவிழா சமயத்தில் கொலை என்பது இங்கே பரபரப்பாகிவிட்டது.

ஆனால் அதற்காக 7 நாட்கள் மண்டகப்படி காட்சிகளையும் வரிசையாகக் காட்டுவது கொஞ்சம் போரடித்தது.. அதிலும் ஏதோ ஒரு பில்டப்போடு போலீஸாரையும் அங்கே குவித்து வைத்துவிட்டு, கடைசிவரையில் அவர்களால் விசிலைக்கூட ஊத முடியவில்லை என்பதை நினைத்தால் சிரிப்புதான் வருகிறது..


இறுதி கிளைமாக்ஸ் சண்டைக் காட்சியும் வித்தியாசமாக இருக்க வேண்டுமே என்றெண்ணி வைத்திருந்தாலும் விஷால், தனுஷ் ரேஞ்ச்சுக்கு அருள்நிதியை கொண்டு போயிருக்கும் தைரியத்திற்கு பாண்டிராஜை பாராட்ட வேண்டும்.. வாங்கின காசுக்கு வஞ்சகமில்லாமல் உழைத்திருக்கிறார் இயக்குநர்.

படத்தின் மேக்கிங் என்பதும் ஒரு கலை என்பதை இந்தப் படத்திலும் நிரூபித்துவிட்டார் பாண்டிராஜ்.

இசையமைப்பு புதுமுகம் தாஜ்நூராம்.. 'உசிரே' போடலும், 'என் நெஞ்சே' பாடலும்தான் கேட்கப் பிடித்தது. மற்றது வாத்தியங்களுக்குள் அடங்கிப் போயிருப்பதுபோல் தோன்றியது.

மகேஷ்முத்துச்சாமியின் ஒளிப்பதிவு முன்பே குறிப்பிட்டதுபோல் அதுவே தனியான ஒரு இயக்கமாக இருக்கிறது.. பாடல் காட்சிகளின் ஷாட்டுகளில் தனி ஆவர்த்தனம் செய்திருப்பதுபோல் தோன்றியது. எப்போதுமே புதுமுக நடிகர்களை அறிமுகப்படுத்தும்போது அதிகபட்சம் அவர்கள் எந்தக் கோணத்தில் பார்க்கின்றபோது அழகு தெரியுமோ அதனை மட்டுமே காட்டுவார்கள்.. இது ஒளிப்பதிவாளர்களின் கைகளில்தான் உள்ளது. மகேஷின் பெரும் உதவி அருள்நிதிக்கு நிச்சயம் உதவிகரமாக இருந்திருக்கும்.

இறுதிக் காட்சியில் எடிட்டர் போட்டுத் தாக்கியிருக்கும் கத்திரி வேலைகளுக்கேற்ப இசையமைப்பளர் கொஞ்சம் மிரட்டியிருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்குமோ என்கிற பீலிங் வருவதைத் தவிர்க்க முடியவில்லை.

நிச்சயம் படம் சில கோடிகளைச் சாப்பிட்டிருக்கும் என்று நினைக்கிறேன். படப்பிடிப்பு நாட்கள் அதிகமானதால் ஆன செலவுத் தொகையையெல்லாம் தனது மகனை ஸ்கிரீனில் பார்த்த சந்தோஷத்தில் மறந்து போயிருப்பார் மு.க.தமிழரசு.

பையனை ஹீரோவாக்கும் முயற்சிக்கு பையனும் தனது ஒத்துழைப்பை முடிந்த அளவுக்குக் கொடுத்துவிட்டார். இனி கோடம்பாக்கம் இந்தப் பையனுக்கு எப்படி வரவேற்பை கொடுக்கப் போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்..

கமர்ஷியலோ, கலைப்படமோ.. தன்னை நம்பி வாய்ப்புத் தரலாம் என்கிற நம்பிக்கையை இந்த முறையும் காப்பாற்றியிருக்கிறார் பாண்டிராஜ்.  

பாண்டிராஜின் இந்த 'வம்சம்' தொடர வாழ்த்துகிறேன்..

புகைப்படங்கள் உதவிக்கு நன்றி : www.indiaglitz.com, www.cinesnacks.com

96 comments:

நசரேயன் said...

முத வெட்டு

நசரேயன் said...

//இனி அடுத்து வரக் கூடிய படங்களில் எப்படியோ..? //

வாய்ப்பு கிடைக்குமா ?

ஜோதிஜி said...

சிறப்புக் காட்சி பார்த்து நண்பர் அப்போதே சொல்லிவிட்டார்.

ஹிட்.

நசரேயன் said...

//அசப்பில் கிராமத்து தேவதையைப் போலவே இருக்கும் சுனைனாவை நினைத்தால் ஜொள்ளுவிடத்தான் செய்கிறது.. அதிலும் அந்த சிவப்பு கலர் தாவணியில்.. ம்ம்ம்.. வயசான காலத்துல இதெல்லாம் செய்யக் கூடாதுன்னு முருகன் சொன்னாலும் மனசு விட மாட்டேங்குது.
//

இதெல்லாம் சகஜம் தான்

butterfly Surya said...

சொல்லாம பார்த்துடீங்களே..?

நண்பர் பாண்டிராஜீக்கு வாழ்த்துகள்.

நசரேயன் said...

உங்க விமர்சனம் படிச்சதே படம் பார்த்த திருப்தி

க ரா said...

பாத்துரலாம்ணே :) சுனைனா ரொம்ப உங்கள பாதிச்சுட்டாப்ல இருக்கு :)

ஆட்டையாம்பட்டி அம்பி said...

எங்கடா ஆளைக காணோம் என்று நினைத்தேன். உங்களுக்கு போட்டியாக செந்தில் குமார் என்று ஒருவரும் சினிமா விமர்சன்மம் நீளமாகககககாக எழுதிகிறார்.

சபாஷ்! சரியான போட்டி!

இரும்புத்திரை said...

ennathu punithapor kurumpadamaa cycle gapla container lorryai vittuteengale anne

இரும்புத்திரை said...

neenga twitterlaiye katturai eluthuveenga kurumpadathula kekkavaa venum

antha sensor board ammani unga padam paakka arambichu pathu naal kalichi vettukku pona eppadi certificate kidaikkum.athu pathaathunu unga pathivai vera padikka solli irukkeenga..appuram eppadi kidaikkum

ராம்ஜி_யாஹூ said...

மடிக்கணினி அல்லது Blackberry உடன் திரை அரங்கம் செல்லுவீர்களா. முதல் காட்சி முதல் இறுதி காட்சி வரை, முழுப் படமும் விமர்சனத்தில் வந்து உள்ளது.

Senthilkumar said...

அண்ணே ,

எப்படி முதல் நாளே படம் பாத்துடறீங்க?
டிக்கெட் இருந்தா எனக்கும் குடுங்க.
முருகன் பெயர் உள்ள காரணமாத்தான் கேக்கறேன். ஹா ஹா ஹா.

இது வரை உங்களிடம் பேசியது கிடையாது. என் நண்பர்கள் சொல்லி உங்களை பார்த்திருக்கிறேன்.
(இலங்கை தமிழர்களுக்காக ஊர்வலம் போனபோது)

உங்கள் தம்பி மீது கருணை(கந்தன் கருணை) வைத்து உடன் அழைத்து செல்லுங்கள்.

இப்படிக்கு
உங்கள் செந்தில்குமார்

டுபாக்கூர் பதிவர் said...

பெரியவர் குடும்பத்துல இனி கனிமொழி பையன் மட்டும்தான் பாக்கி போல....

நம்ம கடமைக்கு அருள்நிதிக்கும், பாண்டியராஜுக்கும் வாழ்த்தை சொல்லி வைப்போம்.

நீர்ப்புலி said...

அண்ணே,
ஒரு நாளைக்கு எத்தனை படந்தான் பாப்பீங்க? நல்லா இருங்க.
-தினா

Jey said...

விமர்சனம் வழக்கம்போல நல்லாருக்குண்ணே..

(http://pattikattaan.blogspot.com/2010/08/blog-post_13.html)

ரிஷபன்Meena said...

விமர்சனம் நன்றாக இருந்தது. முழுக்கதையும் நீங்களே சொல்லிவிட்டதால் இனி அதை
இந்திய தொலைக்காட்சிகளில் முதல் முறையாக போடும் போது தான் பார்க்கனும்.

ஆட்டையாம்பட்டி அம்பி said...

///ம்ம்ம்.. வயசான காலத்துல இதெல்லாம் செய்யக் கூடாதுன்னு முருகன் சொன்னாலும் மனசு விட மாட்டேங்குது.///

எங்க அப்பன் ஞானபண்டிதன் ஒன்னும் சொல்ல மாட்டான். அங்கண செய்யாத வேலையா? அப்புறம் இங்கன பாருங்க ஒரு பெரியவர் அறுபது முடிந்தும் பயங்கரமாக பட்டைய கிளப்பறார்.

இதில் எனது ஒட்டு பெரியவருக்கே. இப்பொழுது அவருக்கு ஆண்மைக்கு தேவையான் எல்லா ஹார்மோன்களும் உடம்பில் பெருக்கு எடுத்து ஓடி என்றும் இளைமையாக இருப்பார்.

அவரு மட்டும் பத்து ரூபா கொடுத்து கோத்ரேஜ் டை அடிச்சர்ணா!!!

ஆட்டையாம்பட்டி அம்பி said...

///“குண்டி கழுவத்தான ஆத்துக்கு வந்திருக்க..?” என்று அருள்நிதியிடம் கேட்கின்ற வசனத்தில், குண்டி என்பதில் மட்டும் கச்சிதமாக கத்திரி போட்டு ஏதோ வேலை செய்வதைப் போல் பாவ்லா காட்டியிருக்கிறது. ஆனாலும் பாண்டிராஜிற்கு ரொம்பத்தான் தைரியம்//

வேணுமென்றால் Asshole வாஷ் பண்ண வந்திருக்கேன் என்று சொல்லாமா? ஆங்கிலத்தில் எந்த எழவை சொன்னாலும் அது கெட்ட வார்த்தை இல்லையே?

குண்டி எனபது ஒன்றும் அசிங்கமான வார்த்தை அல்ல. குண்டிக்கு 'ஆசனவாய்" என்று பெயர் வைத்தானே அவன் தான் ஒரு முட்டாள். எதற்க்கு போய் "வாய்" என்று பெயர் வைப்பது! அப்படியே குசுவுக்கும் "ஆசனமூச்சு" என்று பெயர் வைக்க வேண்டியத் தானே? Idiots

ஆட்டையாம்பட்டி அம்பி said...

Contd...from above..
இந்தியாவில் 75 to 80% கிராமத்தில் வாழ்கிறார்கள். ஒரு அப்பா தனது வயதுக்கு வராத மகளிடம் கூட இப்படி பேசுவார். . நகரத்தில் பேசுவது தான் தமிழ் என்று என்னுபவர்களுக்கு: உதாரணமாக, அப்பா, " ஏன் கண்ணியம்மா, எங்க அண்ணனைக் காணோம்" அப்பா, அண்ணன் இந்த செவத்த கண்ணுகுட்டியை காயடிக்க வெள்ளனவே கூட்டிண்டு போச்சு. நீக தானே சொன்நீக அதை வண்டி மாட்டுக்கு தயார் பண்ணனும் என்று? சர்வ சாத்ரனமாக் உபய்போடுத்தும் சொற்கள்..அதே மாதிரி இந்தக் பொட்டைக் கண்னுக்குட்டிக்கு ஊசி (artificial insemination) போடவேண்டாம். அந்த அந்த ஒத்தக் கொம்பன் இதை மெரிச்சதுப்பா. குழநதைகள் கண்ணால் காண்டதை விகல்பம் இல்லாமல் தகப்பனிடம் சொல்லுவார்கள். பிரசவித்த மகளுக்கு அவளுடைய தாயார், "ஏ புள்ள குழந்தைக்கு இரண்டு பாச்சியிலும் இருந்தது பால் கொடு. இல்லாட்டி அந்த பாச்சியில் பால் வற்றி விடும்." இது பொது இடத்திலும் கேட்கின்ற பேச்சு!

அதே மாதிர் ஏலே பாபு மயிறு காடு மாதிர் வளர்ந்திருக்கு. கோடை வந்துடுச்சு. பொய் மசிரை ஓட்ட வெட்டிட்டு வா...இது மாதிர் ஏராளம.

நீங்களா அழகான சுத்தமான மயிறு என்ற தமிழ் சொல்லுக்கு முடி என்று பெயர் வைப்பீர்கள். அப்புறம் நாங்க எங்க சொல் வழக்கு படி மயிறு என்று சொன்னால் அது கெட்ட வார்த்தை.

உண்மைத் தமிழன் சென்னையில் பிறந்து படித்த வளர்ந்த தமிழரோ?

சி.பி.செந்தில்குமார் said...

உண்மைத்தமிழன் அண்ணே,உங்க விமர்சனம் செம நேர்த்தி.சாரு ட்விட்டர்ல படம் அவுட்ட்னு எழுதி இருக்காராம்,நீங்க ஓகேனு எழுதி இருக்கீங்க,பார்ப்போம்.பாண்டிராஜ்&சுனைனா உங்க அபிமானக்க்கலைஞர்கள் போல

ஆட்டையாம்பட்டி அம்பி said...

அப்படியே குண்டலினி யோகா(குதிரை செய்வது மாதிரி) செய்யும் போது வரும் சப்தத்திர்க்கு "ஆசனஏப்பம்" என்றும், "Diarrhea" க்கு "ஆசனவாந்தி" என்றும் பெயர் வைக்கலாம்!

R. Gopi said...

பாண்டிராஜு ஸ்க்ரிப்ட்டத் தொலைச்சாலும் கவலைப்பட வேண்டியதில்லை. உங்க ப்லாக்ல எப்ப வேணா வந்து பாத்துக்கலாம். அவ்வளவு விளக்கமா தெளிவா எழுதிருக்கிங்க.

//அசப்பில் கிராமத்து தேவதையைப் போலவே இருக்கும் சுனைனாவை நினைத்தால் ஜொள்ளுவிடத்தான் செய்கிறது.. அதிலும் அந்த சிவப்பு கலர் தாவணியில்.. ம்ம்ம்.. வயசான காலத்துல இதெல்லாம் செய்யக் கூடாதுன்னு முருகன் சொன்னாலும் மனசு விட மாட்டேங்குது.//

ஒங்க பீலிங்க்ஸ் புரியுது.


//அடுத்த ஆச்சரியம், அருள்நிதியின் அம்மாவாக நடித்திருக்கும் நந்தினி என்ற புதுமுகம். பல திரைப்படங்களில் நடித்த அனுபவம் போல் தெரிந்தது.. இளமையான தோற்றத்தில் பளிச்சென்று இருந்த அளவுக்கு முதுமையில் அவரால் முடியவில்லை. முதுமையைத் தாண்டிய இளமை அவரது முகத்திலேயே தெரிந்தது.//


இதெல்லாம் செய்யக் கூடாதுன்னு ஒங்க முருகன் சொல்லலையா?

பிரபல பதிவர் said...

//ஆக்ஷன் ///
//வயசான காலத்துல இதெல்லாம் செய்யக் கூடாதுன்னு //


இந்தியன் தாத்தாவுக்கு சீனியரா நீங்க....

உபயோகிக்கும் எழுத்துக்களை பாத்தா முதல் சுதந்திர போருக்கு முன்னாடியே பொறந்தா மாதிரி இருக்கு

a said...

//
அதிலும் அந்த சிவப்பு கலர் தாவணியில்.. ம்ம்ம்.. வயசான காலத்துல இதெல்லாம் செய்யக் கூடாதுன்னு முருகன் சொன்னாலும் மனசு விட மாட்டேங்குது.
//

அண்ணே : உங்களுக்கு என்றும் பதினாறு தான்......... ஏன் கவல படுரீங்க.

pichaikaaran said...

நீங்க படம் பார்க்கும்போது படத்தில் சம்பந்தப்பட்டவங்களும் வந்துடுறாங்க . என்னையும் அழைத்து போங்கண்ணே .சுனைனாவ பார்க்கணும் .
புனித போர் பதிவை ஆவலா எதிர்பார்க்கிறோம் .

உண்மைத்தமிழன் said...

[[[நசரேயன் said...
முத வெட்டு]]]

பின்னாடி வந்த பின்னூட்டங்களையெல்லாம் பார்த்தா அப்படித்தான் இருக்கு நசரேயன்..!

உண்மைத்தமிழன் said...

[[[நசரேயன் said...

//இனி அடுத்து வரக் கூடிய படங்களில் எப்படியோ..? //

வாய்ப்பு கிடைக்குமா ?]]]]

கண்டிப்பா கிடைக்கும்.. பெரிய இடத்துப் புள்ளைல்ல..!?

உண்மைத்தமிழன் said...

[[[ஜோதிஜி said...

சிறப்புக் காட்சி பார்த்து நண்பர் அப்போதே சொல்லிவிட்டார்.

ஹிட்.]]]

ஆஹா.. திருப்பூருக்கே முன்னாடியே தெரிஞ்சிருக்கு பாருங்க..!

உண்மைத்தமிழன் said...

[[[நசரேயன் said...

//அசப்பில் கிராமத்து தேவதையைப் போலவே இருக்கும் சுனைனாவை நினைத்தால் ஜொள்ளுவிடத்தான் செய்கிறது.. அதிலும் அந்த சிவப்பு கலர் தாவணியில்.. ம்ம்ம்.. வயசான காலத்துல இதெல்லாம் செய்யக் கூடாதுன்னு முருகன் சொன்னாலும் மனசு விட மாட்டேங்குது.//

இதெல்லாம் சகஜம்தான்]]]

நீங்களும் நம்ம கோஷ்டிதானா..?

உண்மைத்தமிழன் said...

[[[butterfly Surya said...
சொல்லாம பார்த்துடீங்களே..?
நண்பர் பாண்டிராஜீக்கு வாழ்த்துகள்.]]]

அண்ணே.. நீங்கள்லாம் கடமை வீரர்ன்னே..! ஆபீஸ் வேலை இருக்கும்ல.. அதான் சொல்லலை..!

உண்மைத்தமிழன் said...

[[[நசரேயன் said...
உங்க விமர்சனம் படிச்சதே படம் பார்த்த திருப்தி.]]]

தொடர்ச்சியான பி்ன்னூட்டங்களுக்கு மிக்க நன்றி நசரேயன்..!

உண்மைத்தமிழன் said...

[[[இராமசாமி கண்ணண் said...
பாத்துரலாம்ணே :) சுனைனா ரொம்ப உங்கள பாதிச்சுட்டாப்ல இருக்கு :)]]]

ரொம்ப..!!!!!!!!!!!!!

உண்மைத்தமிழன் said...

[[[ஆட்டையாம்பட்டி அம்பி said...
எங்கடா ஆளைக காணோம் என்று நினைத்தேன். உங்களுக்கு போட்டியாக செந்தில் குமார் என்று ஒருவரும் சினிமா விமர்சன்மம் நீளமாகககககாக எழுதிகிறார்.

சபாஷ்! சரியான போட்டி!]]]

அப்ப.. உங்களுக்குச் சரியான விருந்துதானே அம்பி..

கொண்டாடுங்க..!

உண்மைத்தமிழன் said...

[[[இரும்புத்திரை said...
ennathu punithapor kurumpadamaa...?

cycle gapla container lorryai vittuteengale anne.]]]

ஹா.. ஹா.. ஹா.. இரும்புத்திரை நச் கமெண்ட்டு..!

இப்படி நடு ராத்திரில சிரிக்க வைச்சிட்டியேண்ணே..!?

உண்மைத்தமிழன் said...

[[[இரும்புத்திரை said...

neenga twitterlaiye katturai eluthuveenga kurumpadathula kekkavaa venum]]]

கொஞ்சம்தாம்பா டயலாக் எழுதியிருந்தேன்..!

[[[antha sensor board ammani unga padam paakka arambichu pathu naal kalichi vettukku pona eppadi certificate kidaikkum.athu pathaathunu unga pathivai vera padikka solli irukkeenga..appuram eppadi kidaikkum.]]]

படமே மொத்தமா 14 நிமிஷம்தான் ராசா..! அதுக்கு வேற காரணம் இருக்கு.. கொஞ்சம் வெயிட் பண்ணுங்க.. சொல்றேன்..!

உண்மைத்தமிழன் said...

[[[ராம்ஜி_யாஹூ said...
மடிக்கணினி அல்லது Blackberry உடன் திரை அரங்கம் செல்லுவீர்களா. முதல் காட்சி முதல் இறுதி காட்சி வரை, முழுப் படமும் விமர்சனத்தில் வந்து உள்ளது.]]]

ராம்ஜி.. எல்லாம் நினைவில் இருந்து எழுதியதுதான்..! அன்றைக்கே எழுதிவிட்டதால் கொட்டியது போல் தோன்றுகிறது..!

T.V.ராதாகிருஷ்ணன் said...

படம் பார்த்த திருப்தி

உண்மைத்தமிழன் said...

[[[senthilkumar said...

அண்ணே, எப்படி முதல் நாளே படம் பாத்துடறீங்க? டிக்கெட் இருந்தா எனக்கும் குடுங்க. முருகன் பெயர் உள்ள காரணமாத்தான் கேக்கறேன். ஹா ஹா ஹா.]]]

தியேட்டர் ப்ரியாத்தான் இருந்தது.. கடைசில ஹவுஸ்புல் ஆயிருச்சு. முன்னாடியே போய் டிக்கெட் எடுத்தேன்..! அதுவொண்ணும் கஷ்டமில்லை..!

[[[இதுவரை உங்களிடம் பேசியது கிடையாது. என் நண்பர்கள் சொல்லி உங்களை பார்த்திருக்கிறேன்.
(இலங்கை தமிழர்களுக்காக ஊர்வலம் போனபோது)]]]

அட.. பேசியிருக்கலாமே ராசா..!

[[[உங்கள் தம்பி மீது கருணை(கந்தன் கருணை) வைத்து உடன் அழைத்து செல்லுங்கள்.

இப்படிக்கு
உங்கள் செந்தில்குமார்]]]

தம்பி சென்னையா..? போன் நம்பரை கொடுங்க தம்பி.. மொதல்ல பேசுவோம்..!

உண்மைத்தமிழன் said...

[[[பிரபல பதிவர் said...
பெரியவர் குடும்பத்துல இனி கனிமொழி பையன் மட்டும்தான் பாக்கிபோல.
நம்ம கடமைக்கு அருள்நிதிக்கும், பாண்டியராஜுக்கும் வாழ்த்தை சொல்லி வைப்போம்.]]]

ஹா.. ஹா.. ஹா.. காசு இருக்கு. எறக்கி விடுறாங்க.. அந்தக் காசு எங்கேயிருந்து வந்ததுன்னு மட்டும் கேட்டுராதீங்க.. தாத்தா அப்புறம் உங்களை முண்டச்சி, சனியன்னு திட்டி தீர்த்திருவாரு..!

உண்மைத்தமிழன் said...

[[[நீர்ப்புலி said...
அண்ணே, ஒரு நாளைக்கு எத்தனை படந்தான் பாப்பீங்க? நல்லா இருங்க.
- தினா]]]

ஒரு நாளைக்கு ஒரு படந்தான்..

தங்களுடைய முதல் வருகைக்கு மிக்க நன்றி தினா..!

உண்மைத்தமிழன் said...

[[[Jey said...
விமர்சனம் வழக்கம்போல நல்லாருக்குண்ணே..
(http://pattikattaan.blogspot.com/2010/08/blog-post_13.html)]]]

நன்றி ஜெய்..!

உண்மைத்தமிழன் said...

ரிஷபன்Meena said...
விமர்சனம் நன்றாக இருந்தது. முழுக் கதையும் நீங்களே சொல்லிவிட்டதால் இனி அதை இந்திய தொலைக்காட்சிகளில் முதல் முறையாக போடும் போதுதான் பார்க்கனும்.]]]

இல்லையே.. நான் பாதிதான சொல்லியிருக்கேன்.. மிச்சத்தை பார்க்க அவ்ளோ நாள் காத்திருக்கணுமா என்ன..?

உண்மைத்தமிழன் said...

[[[ஆட்டையாம்பட்டி அம்பி said...

//ம்ம்ம்.. வயசான காலத்துல இதெல்லாம் செய்யக் கூடாதுன்னு முருகன் சொன்னாலும் மனசு விட மாட்டேங்குது.///

எங்க அப்பன் ஞானபண்டிதன் ஒன்னும் சொல்ல மாட்டான். அங்கண செய்யாத வேலையா?]]]

அதான..?

[[[அப்புறம் இங்கன பாருங்க ஒரு பெரியவர் அறுபது முடிந்தும் பயங்கரமாக பட்டைய கிளப்பறார்.

இதில் எனது ஒட்டு பெரியவருக்கே. இப்பொழுது அவருக்கு ஆண்மைக்கு தேவையான் எல்லா ஹார்மோன்களும் உடம்பில் பெருக்கு எடுத்து ஓடி என்றும் இளைமையாக இருப்பார்.

அவரு மட்டும் பத்து ரூபா கொடுத்து கோத்ரேஜ் டை அடிச்சர்ணா!!!]]]

யாருங்க இந்தப் பெரியவரு..? "தலைவரா..?"

உண்மைத்தமிழன் said...

[[[ஆட்டையாம்பட்டி அம்பி said...

//“குண்டி கழுவத்தான ஆத்துக்கு வந்திருக்க..?” என்று அருள்நிதியிடம் கேட்கின்ற வசனத்தில், குண்டி என்பதில் மட்டும் கச்சிதமாக கத்திரி போட்டு ஏதோ வேலை செய்வதைப் போல் பாவ்லா காட்டியிருக்கிறது. ஆனாலும் பாண்டிராஜிற்கு ரொம்பத்தான் தைரியம்//

வேணுமென்றால் Asshole வாஷ் பண்ண வந்திருக்கேன் என்று சொல்லாமா? ஆங்கிலத்தில் எந்த எழவை சொன்னாலும் அது கெட்ட வார்த்தை இல்லையே?]]]

எவனுக்குப் புரியும்..?

[[[குண்டி எனபது ஒன்றும் அசிங்கமான வார்த்தை அல்ல. குண்டிக்கு 'ஆசனவாய்" என்று பெயர் வைத்தானே அவன்தான் ஒரு முட்டாள். எதற்க்கு போய் "வாய்" என்று பெயர் வைப்பது! அப்படியே குசுவுக்கும் "ஆசன மூச்சு" என்று பெயர் வைக்க வேண்டியத்தானே? Idiots]]]

ஆத்தி.. அம்பிக்கு ஏன் இம்புட்டு கோவம்..?

உண்மைத்தமிழன் said...

[[[ஆட்டையாம்பட்டி அம்பி said...

Contd...from above..
இந்தியாவில் 75 to 80% கிராமத்தில் வாழ்கிறார்கள். ஒரு அப்பா தனது வயதுக்கு வராத மகளிடம்கூட இப்படி பேசுவார். . நகரத்தில் பேசுவதுதான் தமிழ் என்று என்னுபவர்களுக்கு: உதாரணமாக, அப்பா, " ஏன் கண்ணியம்மா, எங்க அண்ணனைக் காணோம்" அப்பா, அண்ணன் இந்த செவத்த கண்ணுகுட்டியை காயடிக்க வெள்ளனவே கூட்டிண்டு போச்சு. நீகதானே சொன்நீக அதை வண்டி மாட்டுக்கு தயார் பண்ணனும் என்று? சர்வ சாத்ரனமாக் உபய்போடுத்தும் சொற்கள். அதே மாதிரி இந்தக் பொட்டைக் கண்னுக்குட்டிக்கு ஊசி (artificial insemination) போட வேண்டாம். அந்த அந்த ஒத்தக் கொம்பன் இதை மெரிச்சதுப்பா. குழநதைகள் கண்ணால் காண்டதை விகல்பம் இல்லாமல் தகப்பனிடம் சொல்லுவார்கள். பிரசவித்த மகளுக்கு அவளுடைய தாயார், "ஏ புள்ள குழந்தைக்கு இரண்டு பாச்சியிலும் இருந்தது பால் கொடு. இல்லாட்டி அந்த பாச்சியில் பால் வற்றி விடும்." இது பொது இடத்திலும் கேட்கின்ற பேச்சு!

அதே மாதிர் ஏலே பாபு மயிறு காடு மாதிர் வளர்ந்திருக்கு. கோடை வந்துடுச்சு. பொய் மசிரை ஓட்ட வெட்டிட்டு வா...இது மாதிர் ஏராளம.

நீங்களா அழகான சுத்தமான மயிறு என்ற தமிழ் சொல்லுக்கு முடி என்று பெயர் வைப்பீர்கள். அப்புறம் நாங்க எங்க சொல் வழக்குபடி மயிறு என்று சொன்னால் அது கெட்ட வார்த்தை.

உண்மைத் தமிழன் சென்னையில் பிறந்து படித்த வளர்ந்த தமிழரோ?]]]

இல்லை.. திண்டுக்கல்லில் பிறந்தவன்..!

உண்மைத்தமிழன் said...

[[[சி.பி.செந்தில்குமார் said...
உண்மைத்தமிழன் அண்ணே,உங்க விமர்சனம் செம நேர்த்தி. சாரு ட்விட்டர்ல படம் அவுட்ட்னு எழுதி இருக்காராம், நீங்க ஓகேனு எழுதி இருக்கீங்க, பார்ப்போம். பாண்டிராஜ் & சுனைனா உங்க அபிமானக்க் கலைஞர்கள் போல]]]

செந்தில்.. நீங்களும் படத்தைப் பார்த்துவிட்டுச் சொல்லுங்கள்..!

உண்மைத்தமிழன் said...

[[[ஆட்டையாம்பட்டி அம்பி said...
அப்படியே குண்டலினி யோகா(குதிரை செய்வது மாதிரி) செய்யும் போது வரும் சப்தத்திர்க்கு "ஆசன ஏப்பம்" என்றும், "Diarrhea"க்கு "ஆசன வாந்தி" என்றும் பெயர் வைக்கலாம்!]]]

வைச்சிருவோம்ண்ணே..!

உண்மைத்தமிழன் said...

[[[R Gopi said...

பாண்டிராஜு ஸ்க்ரிப்ட்டத் தொலைச்சாலும் கவலைப்பட வேண்டியதில்லை. உங்க ப்லாக்ல எப்ப வேணா வந்து பாத்துக்கலாம். அவ்வளவு விளக்கமா தெளிவா எழுதிருக்கிங்க.]]]

ஹா.. ஹா.. ஹா.. இதுதான் வஞ்சப்புகழ்ச்சி.. கோபி தேறிட்டீங்க..!

//அசப்பில் கிராமத்து தேவதையைப் போலவே இருக்கும் சுனைனாவை நினைத்தால் ஜொள்ளுவிடத்தான் செய்கிறது.. அதிலும் அந்த சிவப்பு கலர் தாவணியில்.. ம்ம்ம்.. வயசான காலத்துல இதெல்லாம் செய்யக் கூடாதுன்னு முருகன் சொன்னாலும் மனசு விட மாட்டேங்குது.//

ஒங்க பீலிங்க்ஸ் புரியுது.]]

ஹி.. ஹி.. ஹி..!

//அடுத்த ஆச்சரியம், அருள்நிதியின் அம்மாவாக நடித்திருக்கும் நந்தினி என்ற புதுமுகம். பல திரைப்படங்களில் நடித்த அனுபவம் போல் தெரிந்தது.. இளமையான தோற்றத்தில் பளிச்சென்று இருந்த அளவுக்கு முதுமையில் அவரால் முடியவில்லை. முதுமையைத் தாண்டிய இளமை அவரது முகத்திலேயே தெரிந்தது.//

இதெல்லாம் செய்யக் கூடாதுன்னு ஒங்க முருகன் சொல்லலையா?]]]

இதுவும் சுனைனாவுக்கு விட்டதுதான்..!

உண்மைத்தமிழன் said...

[[[sivakasi maappillai said...

//ஆக்ஷன் /// //வயசான காலத்துல இதெல்லாம் செய்யக் கூடாதுன்னு //

இந்தியன் தாத்தாவுக்கு சீனியரா நீங்க. உபயோகிக்கும் எழுத்துக்களை பாத்தா முதல் சுதந்திர போருக்கு முன்னாடியே பொறந்தா மாதிரி இருக்கு.]]]

அப்படியா..? சந்தோஷம்.. எழுத்தைப் பார்த்து வயசைக் கண்டு பிடிக்கிறாங்கப்பா..!

உண்மைத்தமிழன் said...

[[[வழிப்போக்கன் - யோகேஷ் said...

//அதிலும் அந்த சிவப்பு கலர் தாவணியில்.. ம்ம்ம்.. வயசான காலத்துல இதெல்லாம் செய்யக் கூடாதுன்னு முருகன் சொன்னாலும் மனசு விட மாட்டேங்குது.//

அண்ணே : உங்களுக்கு என்றும் பதினாறுதான். ஏன் கவலபடுரீங்க.]]]

அப்படிங்கிறீங்க..? முருகா.. எனக்காக ஒருத்தரும் இந்த லோகத்துல இருக்காருப்பா.. நன்றி யோகேஷ்..!

உண்மைத்தமிழன் said...

[[[பார்வையாளன் said...
நீங்க படம் பார்க்கும்போது படத்தில் சம்பந்தப்பட்டவங்களும் வந்துடுறாங்க . என்னையும் அழைத்து போங்கண்ணே. சுனைனாவ பார்க்கணும். புனிதபோர் பதிவை ஆவலா எதிர்பார்க்கிறோம் .]]]

முதல் நாள் பர்ஸ்ட் ஷோவுக்கு உதயம் தியேட்டருக்கு போங்க.. நிச்சயமா ஆர்ட்டிஸ்டுகள் வருவாங்க..!

உண்மைத்தமிழன் said...

[[[T.V.ராதாகிருஷ்ணன் said...
படம் பார்த்த திருப்தி]]]

டிக்கெட் காசு எப்போ தருவீங்க ஸார்..?

pichaikaaran said...

வழக்கமான விமர்சனம் போல இல்லாமல் , நல்லதொரு சுவைமிக்க கட்டுரை போல எழுதுவது எங்களுக்கு மிகவும் பிடித்திருக்கிறது. தயவு செய்து சுருக்கமாக எழுதும் ஸ்டைலுக்கு மாறவேண்டாம்

Anonymous said...

வயசான காலத்துல இதெல்லாம் செய்யக் கூடாதுன்னு முருகன் சொன்னாலும் மனசு விட மாட்டேங்குது//அதான் விட்டுட்டீங்களே அண்ணே.சுனைனா நடிச்ச எல்லாப்படமும் ஹிட்டுன்னு நினைக்கிறேன் ஒரு பெரிய ரவுண்ட் வருவாங்க

Sreenivasan said...

read thro the article.

One thing is sure - cautiously written criticism

Unknown said...

அன்பிற்கினிய அண்ணனே.,

நான் கேட்பதையெல்லாம் நண்பர்கள் கேட்டுவிட்டார்கள் ..ம்..ஒட்டு போட்டாச்சு.

நன்றி..,

மரங்களோடு மனிதம் வளர்ப்போம்..
ச.ரமேஷ்.

பித்தன் said...

appo thalaivar vamsam thazhaikkumnu sollunga.

Panam namma panam thaanne enna athukku kalarum sendra idamumthaan veru.

பித்தன் said...

//காசு இருக்கு. எறக்கி விடுறாங்க.. அந்தக் காசு எங்கேயிருந்து வந்ததுன்னு மட்டும் கேட்டுராதீங்க.. //

ilavasaththil ithellaam illanne

ஜோதிஜி said...

காசு இருக்கு. எறக்கி விடுறாங்க.. அந்தக் காசு எங்கேயிருந்து வந்ததுன்னு மட்டும் கேட்டுராதீங்க.

R. Gopi said...

//உண்மைத் தமிழன்(15270788164745573644) said... .

[[[R Gopi said...

பாண்டிராஜு ஸ்க்ரிப்ட்டத் தொலைச்சாலும் கவலைப்பட வேண்டியதில்லை. உங்க ப்லாக்ல எப்ப வேணா வந்து பாத்துக்கலாம். அவ்வளவு விளக்கமா தெளிவா எழுதிருக்கிங்க.]]]

ஹா.. ஹா.. ஹா.. இதுதான் வஞ்சப்புகழ்ச்சி.. கோபி தேறிட்டீங்க..!//



ரொம்ப நன்றி சார். நான் இப்ப எப்படி பீல் பண்றேன்னா


"ஆத்தா நான் பாசாயிட்டேன்.


விஸ்வாமித்ரா இன்று முதல் நீ பிரம ரிஷியாக அறியப்படுவாய்.


குட்டு வாங்கினாலும் மோதிரக் கையாலதான் குட்டு வாங்கியிருக்க"


இந்த மாதிரி இன்னும் நெறையா.


ஐயோ ஒங்களோட சேர்ந்து நானும் பெரிசு பெரிசா பதிவு, மன்னிக்கவும், பின்னூட்டம் போட ஆரம்பிச்சிட்டேன்:)

Maduraimohan said...

வழக்கம் போல கலக்கலான விமர்சனம்
ரைட் அடுத்த வரம் பார்த்துடுவோம் :)

சிங்கக்குட்டி said...

ரைட்டு பாத்துருவோம், நாமளும் பெரிய தலைக்கட்டு குடும்பம்ல...

யாரோ ஒருவன் said...

வாசிக்க தவறாதீர்கள் : சுதந்திர தின சிறப்பு சிறுகதை

ஆட்டையாம்பட்டி அம்பி said...

///வேணுமென்றால் Asshole வாஷ் பண்ண வந்திருக்கேன் என்று சொல்லாமா? ஆங்கிலத்தில் எந்த எழவை சொன்னாலும் அது கெட்ட வார்த்தை இல்லையே?]]]

எவனுக்குப் புரியும்..?///


தமிழ் நாட்டில் எல்லோருக்கும் புரியும். பிச்சைக்காரனுக்கு கூட ஆங்கிலம் தெரியும். Asshole என்றால் அவனுக்கு புரியும்.

மேலும நான் சொன்னது அதுவல்ல. முட்டாள் censor board ஆங்கிலத்தில் எது சொன்னாலும் சரி என்று விட்டு விடுவார்கள். உதாரணமாக ஆங்கிலப்படத்தில் FxxK சொன்னாலும் U certificate கொடுப்பார்கள். ஆனால் தமிழில் ஒXதா சொல்ல முடியாது. அந்த ஒXதாவை வெட்டினால் தன U certificate. இது தான் நான் சொல்லும முட்டாள் censor செய்யும் வேலை.

ஆகவே "குண்டி" என்ற தமிழ் சொல்லுக்கு கத்திரி போட்டு இருக்ககூடாது. அது ஒன்றும் கெட்ட வார்த்தை அல்ல. அது தான் எனது வாதம்.

pichaikaaran said...

"போன் நம்பரை கொடுங்க தம்பி. மொதல்ல பேசுவோம் "

நாங்களும் இருக்கோம் ல .எங்களோடவும் பேசுங்க .ஓர வஞ்சனை வேண்டாம்

நறுமுகை said...

பாண்டிராஜே இவ்ளோ பெருசா கதை எழுதி இருப்பாரான்னு சந்தேகம்.. ஆனா நீங்க எழுதி இருக்கீங்க.. அருள் நிதியின் கொள்கை பரப்பு செயலாளர் மாதிரி வேலை பார்த்திருக்கீங்களே?? வாழ்த்துக்கள்

www.narumugai.com

பிரபல பதிவர் said...

பாத்தாச்சி... ஃபர்ஸ்ட் ஆஃப் சூப்பர்
செகண்ட் ஆஃப் மொக்கை

உண்மைத்தமிழன் said...

[[[பார்வையாளன் said...
வழக்கமான விமர்சனம் போல இல்லாமல், நல்லதொரு சுவைமிக்க கட்டுரை போல எழுதுவது எங்களுக்கு மிகவும் பிடித்திருக்கிறது. தயவு செய்து சுருக்கமாக எழுதும் ஸ்டைலுக்கு மாற வேண்டாம்.]]]

உங்களது உத்தரவு..!

உண்மைத்தமிழன் said...

[[[ஆர்.கே.சதீஷ்குமார் said...
வயசான காலத்துல இதெல்லாம் செய்யக் கூடாதுன்னு முருகன் சொன்னாலும் மனசு விட மாட்டேங்குது//

அதான் விட்டுட்டீங்களே அண்ணே. சுனைனா நடிச்ச எல்லாப் படமும் ஹிட்டுன்னு நினைக்கிறேன். ஒரு பெரிய ரவுண்ட் வருவாங்க.]]]

வரட்டுமே.. நடிப்புதான் நல்லா வருதே..!? பிறகென்ன..?

உண்மைத்தமிழன் said...

[[[Sreenivasan said...

read thro the article.

One thing is sure - cautiously written criticism.]]]

ம்.. நன்றிகள் ஸார்..!

உண்மைத்தமிழன் said...

[[[S.ரமேஷ். said...

அன்பிற்கினிய அண்ணனே...
நான் கேட்பதையெல்லாம் நண்பர்கள் கேட்டு விட்டார்கள். ஒட்டு போட்டாச்சு.

நன்றி..,

மரங்களோடு மனிதம் வளர்ப்போம்..
ச.ரமேஷ்.]]]

கேள்விகளை கேட்கவில்லையென்றாலும் வருகைக்கு நன்றிகள் ரமேஷ்..!

உண்மைத்தமிழன் said...

[[[பித்தன் said...
appo thalaivar vamsam thazhaikkumnu sollunga. Panam namma panam thaanne enna athukku kalarum sendra idamumthaan veru.]]]

நிச்சயமாகத் தழைக்கும் பித்தன்ஜி..!

உண்மைத்தமிழன் said...

[[[பித்தன் said...

//காசு இருக்கு. எறக்கி விடுறாங்க.. அந்தக் காசு எங்கேயிருந்து வந்ததுன்னு மட்டும் கேட்டுராதீங்க.. //

ilavasaththil ithellaam illanne]]]

நானென்ன முட்டாளா..? அதைப் பத்திக் கேக்குறதுக்கு..?

உண்மைத்தமிழன் said...

[[[ஜோதிஜி said...
காசு இருக்கு. எறக்கி விடுறாங்க.. அந்தக் காசு எங்கேயிருந்து வந்ததுன்னு மட்டும் கேட்டுராதீங்க.]]]

கேட்போமா நாங்க.?

உண்மைத்தமிழன் said...

[[[R Gopi said...

//உண்மைத் தமிழன்(15270788164745573644) said... .

[R Gopi said...

பாண்டிராஜு ஸ்க்ரிப்ட்டத் தொலைச்சாலும் கவலைப்பட வேண்டியதில்லை. உங்க ப்லாக்ல எப்ப வேணா வந்து பாத்துக்கலாம். அவ்வளவு விளக்கமா தெளிவா எழுதிருக்கிங்க.]]]

ஹா.. ஹா.. ஹா.. இதுதான் வஞ்சப் புகழ்ச்சி.. கோபி தேறிட்டீங்க..!//

ரொம்ப நன்றி சார். நான் இப்ப எப்படி பீல் பண்றேன்னா "ஆத்தா நான் பாசாயிட்டேன்.
விஸ்வாமித்ரா இன்று முதல் நீ பிரம ரிஷியாக அறியப்படுவாய்.
குட்டு வாங்கினாலும் மோதிரக் கையாலதான் குட்டு வாங்கியிருக்க"
இந்த மாதிரி இன்னும் நெறையா.
ஐயோ ஒங்களோட சேர்ந்து நானும் பெரிசு பெரிசா பதிவு, மன்னிக்கவும், பின்னூட்டம் போட ஆரம்பிச்சிட்டேன்:)]]]

ஹா.. ஹா.. கோபி.. அந்த அளவுக்கெல்லாம் நான் வொர்த் இல்லீங்கோ..! சாதாரண சின்னப் பையன்..! விட்ருங்க..!

உண்மைத்தமிழன் said...

[[[Maduraimohan said...
வழக்கம் போல கலக்கலான விமர்சனம்
ரைட் அடுத்த வரம் பார்த்துடுவோம் :)]]]

பார்த்திருங்க மோகன்..!

உண்மைத்தமிழன் said...

[[[சிங்கக்குட்டி said...
ரைட்டு பாத்துருவோம், நாமளும் பெரிய தலைக்கட்டு குடும்பம்ல...]]]

அப்படியா? ரொம்ப சந்தோஷம்.. பார்த்ததோட நிறுத்திக்கணும்.. சொல்லிப்புட்டேன்..!

உண்மைத்தமிழன் said...

[[[யாரோ ஒருவன் said...
வாசிக்க தவறாதீர்கள் : சுதந்திர தின சிறப்பு சிறுகதை]]]

எவனோ ஒருவன் போய் இப்போ யாரோ ஒருவனா..?

படிச்சிருவோம்..!

உண்மைத்தமிழன் said...

[[[ஆட்டையாம்பட்டி அம்பி said...

///வேணுமென்றால் Asshole வாஷ் பண்ண வந்திருக்கேன் என்று சொல்லாமா? ஆங்கிலத்தில் எந்த எழவை சொன்னாலும் அது கெட்ட வார்த்தை இல்லையே?]]]

எவனுக்குப் புரியும்..?///

தமிழ்நாட்டில் எல்லோருக்கும் புரியும். பிச்சைக்காரனுக்குகூட ஆங்கிலம் தெரியும். Asshole என்றால் அவனுக்கு புரியும்.]]]

இது உலக மகா காமெடி ஸார்..

[[[மேலும நான் சொன்னது அதுவல்ல. முட்டாள் censor board ஆங்கிலத்தில் எது சொன்னாலும் சரி என்று விட்டு விடுவார்கள். உதாரணமாக ஆங்கிலப்படத்தில் FxxK சொன்னாலும் U certificate கொடுப்பார்கள். ஆனால் தமிழில் ஒXதா சொல்ல முடியாது. அந்த ஒXதாவை வெட்டினால் தன U certificate. இதுதான் நான் சொல்லும முட்டாள் censor செய்யும் வேலை.

ஆகவே "குண்டி" என்ற தமிழ் சொல்லுக்கு கத்திரி போட்டு இருக்க கூடாது. அது ஒன்றும் கெட்ட வார்த்தை அல்ல. அதுதான் எனது வாதம்.]]]

நன்றி..!

உண்மைத்தமிழன் said...

[[[பார்வையாளன் said...
"போன் நம்பரை கொடுங்க தம்பி. தல்ல பேசுவோம் "
நாங்களும் இருக்கோம்ல. எங்களோடவும் பேசுங்க. ஓர வஞ்சனை வேண்டாம்.]]]

அதான் போன் நம்பரை தளத்துலேயே கொடுத்திருக்கனே.. பேசலாமே ஸார்..!

உண்மைத்தமிழன் said...

narumugai said...
பாண்டிராஜே இவ்ளோ பெருசா கதை எழுதி இருப்பாரான்னு சந்தேகம்.. ஆனா நீங்க எழுதி இருக்கீங்க.. அருள்நிதியின் கொள்கை பரப்பு செயலாளர் மாதிரி வேலை பார்த்திருக்கீங்களே?? வாழ்த்துக்கள்

www.narumugai.com]]]

அருள்நிதி மட்டும் இதைப் படிச்சாரு.. உங்களுக்குச் சங்குதான்..!

உண்மைத்தமிழன் said...

[[[sivakasi maappillai said...
பாத்தாச்சி... ஃபர்ஸ்ட் ஆஃப் சூப்பர்
செகண்ட் ஆஃப் மொக்கை.]]]

அப்படியா..? சரி..

பனித்துளி சங்கர் said...

விமர்சனம் நல்ல இருக்கு தல விரைவில் படம் பார்த்துவிடுகிறேன் . இன்னும் அமீரகத்தில் வரவில்லை .

உண்மைத்தமிழன் said...

[[[!♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...
விமர்சனம் நல்ல இருக்கு தல. விரைவில் படம் பார்த்துவிடுகிறேன் . இன்னும் அமீரகத்தில் வரவில்லை.]]]

டிவிடிதான் வரும்..! பாருங்கள்..!

ஆட்டையாம்பட்டி அம்பி said...

///தமிழ்நாட்டில் எல்லோருக்கும் புரியும். பிச்சைக்காரனுக்குகூட ஆங்கிலம் தெரியும். Asshole என்றால் அவனுக்கு புரியும்.]]]

இது உலக மகா காமெடி ஸார்..///

இது காமெடி இல்ல சார். ஒரு தமிழனின் வேதனை. தமிழ் நாட்டில் கிராமத்தில் வாழும் குடியானவர்கள் மற்றும் நரகத்தில் ( சாரி மன்னிக்கனும் நகரத்தில்) உள்ள ஏழைகள் இவர்கள் எல்லாம் ஒரு 80 விழுக்காடு இருப்பார்கள். இவர்கள் வறுமை கோட்டிற்கு கீழ் இருக்கிறார்கள். ஆனால் கோயில் முன்னால் டபரா தட்டு வைத்து பிச்சை எடுப்பவன் அதை விட அதிகமாக சம்பாதிக்கிறான். இப்பொழுது சொல்லுகள் யார் பிசைக்கார்கள் என்று? நிற்க.

80 விழுக்காடு உள்ள இவர்களுக்கு ஆங்கிலம் தெரியாதா? யார் சொன்னது? தமிழ் நாட்டில் உள்ள டெலிவிசன்கள் எல்லாம் நீங்கள் பார்ப்பதில்லை போலும்! (மக்கள் டெலிவிசன் தவிர; மக்கள் டெலிவிசனை அதிகமான மக்கள் பார்ப்பதில்லை என்று கேள்வி). இங்கு நூற்றுக்கு 80 விழுக்காடு பேசுவது ஆங்கிலம் தான். அதுவும் என்ன மாதிர் ஆன ஆங்கில சொற்கள். சில உதாரணங்கள்:

நீங்க ரொம்ப intellectual ஆக பேசுகிறீர்கள். யதார்த்தமாக பேசுங்கள். You should not talk like an intellectual. you know. OK yaa?

நீங்க பேசுவது நிறைய redundant ஆக இருக்கிறது. OK..

உங்க tone அப்படியே top க்கு போகுது. நீங்க High Pitch இல பாடரீங்க. High pitch Low pitch ­simultaneous ஆ balance பண்ணனும்.. Ok வா?

எப்படி நீங்க எல்லாம் memorize பண்ணுகிறீர்கள். I found it extremely difficult yaa when I was in College to memorize my subjects. How you do that? Any special treatment இல்லை ஏதாவது special preparation. ஒரு வேளை உங்களுக்கு God's gift --ஆ? Anyway, I will give you fifteen points. God Bless.

இவை சில உதாரணங்கள். இதில் உபயோகப் படுத்திய சொற்கள் ( intellectual, redundant, extremely, simultaneous, etc ) கடினமான ஆங்கில சொற்கள். தமிழ் நாட்டில் ஆங்கில பாடம் எடுக்கும் ஆசிரியர்களுக்கே அதற்கு "சரியான தமிழ் அர்த்தம" தெரியுமா எனபது சந்தேகம்.

இந்த எழவில இது மாதிரி TV நிகழ்ச்ச்கள் தான் மக்க்ளிடம். மிகவும் பிரபலம்.!

அது சரி இப்ப ஆங்கிலப் படங்கள் தமிழில் டப் செய்து வருவதாக கேள்வி. Out of curiosity! How do they translate Asshole in Tamil? Rarely you see an English picture without these words. Asshole என்று அப்படியே ஆங்கிலத்தில் சொன்னாலும் சென்சாரிலும் கை வைக்க மாட்டார்கள்!
ஆங்கிலத்தில் தான் கெட்ட வார்த்தையே கிடையாதே நமது சென்சார் படி!!!

இதுவாவது பருவா இல்லை (பரவா இல்லை என்பது தமிழ் அல்ல என்பது எனது கருத்து) வரிக்கு வரி ஆங்கிலம். Do you think our village and poor people can understand these sentences?
இந்தமாதிர் எல்லா TV தமிழ் நிகழ்ச்ச்களிலும் கருமாந்திரம் புடித்த ஆங்கிலத்தில (அதுவும் அரை குறை) பேசுவது மக்களுக்கு புரியும் போது மக்கள் "Asshole" என்ற சொல்லை புரிந்து கொள்வது ஜூஜூபி...

Riyas said...

ஒவ்வொரு படத்தை பற்றியும் மிக அருமையாக சொல்கிறீர்கள் உள்ளதை உள்ளபடி.. உங்கள் தளத்தை அன்மையிலேயே பார்வவையிட முடிந்தது.. அன்று முதல் உங்களின் திரை விமர்சனம் ஒவ்வொன்றையும் படித்து வருகிறேன்.. காரணம் நானும் சினிமா ரசிகன். சிங்கள திரைபடததை கூட விடாமல் விமர்சித்தது உங்களின் மொழிதாண்டிய சினிமா ஆர்வத்தை எடுத்துக்காட்டுகிறது தொடர்ந்து எழுதுங்கள்.. எனது முதல் பின்னூட்டம் இதுதான் ஆனால் உங்கள் பதிவுகளை வாசித்துக்கொண்டேயிருக்கிறேன்.. நானும் எனக்கு தெரிந்தவரையில் இரண்டு படத்தை பற்றி எழுதிநேன் முடிந்தால் படித்துப்பாருங்கள்..
http://riyasdreams.blogspot.com/2010/06/blog-post_08.html
http://riyasdreams.blogspot.com/2010/05/blog-post_30.html

ஜோதிஜி said...

Do you think our village and poor people can understand these sentences?

இந்தமாதிர் எல்லா TV தமிழ் நிகழ்ச்சிகளிலும் கருமாந்திரம் புடித்த ஆங்கிலத்தில (அதுவும் அரை குறை) பேசுவது மக்களுக்கு புரியும் போது மக்கள் "Asshole" என்ற சொல்லை புரிந்து கொள்வது ஜூஜூபி...

இத்துடன் and என்ற வார்த்தை தங்கிலீஷ் மக்களிடம் படுகின்ற பாடு சொல்லி மாளாதது?

உண்மைத்தமிழன் said...

///தமிழ்நாட்டில் எல்லோருக்கும் புரியும். பிச்சைக்காரனுக்குகூட ஆங்கிலம் தெரியும். Asshole என்றால் அவனுக்கு புரியும்.]]]

இது உலக மகா காமெடி ஸார்..///

இந்த மாதிர் எல்லா TV தமிழ் நிகழ்ச்ச்களிலும் கருமாந்திரம் புடித்த ஆங்கிலத்தில (அதுவும் அரை குறை) பேசுவது மக்களுக்கு புரியும் போது மக்கள் "Asshole" என்ற சொல்லை புரிந்து கொள்வது ஜூஜூபி...]]]

மறுபடியும் தப்பாவே சொல்றீங்க அம்பி..

நீங்க சொல்ற மத்த உதாரணமெல்லாம் கரெக்ட்டுதான்..!

ஆனால் இந்த வார்த்தையை ஆங்கிலத் திரைப்படங்களைத் தவிர மற்ற இடங்களில் உங்களால் காணவே முடியாது.. தமிழகத்து சாதாரண ஜனங்களுக்குத் தெரியவும் தெரியாது..!

எனக்கே ரொம்பச் சமீபத்தில்தான் தெரிந்தது..!-)))))))))))))))

உண்மைத்தமிழன் said...

[[[Riyas said...

ஒவ்வொரு படத்தை பற்றியும் மிக அருமையாக சொல்கிறீர்கள் உள்ளதை உள்ளபடி.. உங்கள் தளத்தை அன்மையிலேயே பார்வவையிட முடிந்தது.. அன்று முதல் உங்களின் திரை விமர்சனம் ஒவ்வொன்றையும் படித்து வருகிறேன்.. காரணம் நானும் சினிமா ரசிகன். சிங்கள திரைபடததை கூட விடாமல் விமர்சித்தது உங்களின் மொழி தாண்டிய சினிமா ஆர்வத்தை எடுத்துக் காட்டுகிறது.. தொடர்ந்து எழுதுங்கள்.. எனது முதல் பின்னூட்டம் இதுதான். ஆனால் உங்கள் பதிவுகளை வாசித்துக் கொண்டேயிருக்கிறேன்.. நானும் எனக்கு தெரிந்தவரையில் இரண்டு படத்தை பற்றி எழுதிநேன் முடிந்தால் படித்துப் பாருங்கள்..

http://riyasdreams.blogspot.com/2010/06/blog-post_08.html

http://riyasdreams.blogspot.com/2010/05/blog-post_30.html]]]

உங்களுடைய முதல் வருகைக்கும், ஆக்கப்பூர்வமான, உளப்பூர்வமான, உத்வேகமான, உற்சாகப்படுத்திய பின்னூட்டத்திற்கும் எனது இதயங்கனிந்த நன்றிகள்..!

உங்களது தளத்திற்கும் நிச்சயம் வருகிறேன்..!

நன்றிகள் ரியாஸ் ஸார்..!

உண்மைத்தமிழன் said...

[[[ஜோதிஜி said...

Do you think our village and poor people can understand these sentences?

இந்த மாதிர் எல்லா TV தமிழ் நிகழ்ச்சிகளிலும் கருமாந்திரம் புடித்த ஆங்கிலத்தில (அதுவும் அரை குறை) பேசுவது மக்களுக்கு புரியும் போது மக்கள் "Asshole" என்ற சொல்லை புரிந்து கொள்வது ஜூஜூபி...

இத்துடன் and என்ற வார்த்தை தங்கிலீஷ் மக்களிடம் படுகின்ற பாடு சொல்லி மாளாது?]]]

ஹி.. ஹி.. இந்த லட்சணத்துல தமிழ்நாட்டுல தமிழை வாழ வைக்கப் போறாங்களாம்..!

kanagu said...

நானும் படத்த பாத்தேன் அண்ணா.. ஆனா பசங்க படம் அளவுக்கு என்னால இந்த படத்த ரசிக்க முடியல..

காதல் காட்சிகள் ரொம்ப செயற்கையா இருந்துது...

உண்மைத்தமிழன் said...

[[[kanagu said...
நானும் படத்த பாத்தேன் அண்ணா.. ஆனா பசங்க படம் அளவுக்கு என்னால இந்த படத்த ரசிக்க முடியல. காதல் காட்சிகள் ரொம்ப செயற்கையா இருந்துது.]]]

கருத்துக்கு நன்றி கனகு..!

பசங்க படத்தோடு இதனை ஒப்படிவே கூடாது..!

தருமி said...

//ம்ம்ம்.. வயசான காலத்துல இதெல்லாம் செய்யக் கூடாதுன்னு முருகன் சொன்னாலும் மனசு விட மாட்டேங்குது

முருகன் அப்படிவேற சொல்லிட்டாரா ..? அம்புட்டு வயசாகிப் போச்சா, அவருக்கு?!

தனி காட்டு ராஜா said...

94 வது வெட்டு or 94 + வெட்டு

உண்மைத்தமிழன் said...

[[[தருமி said...

//ம்ம்ம்.. வயசான காலத்துல இதெல்லாம் செய்யக் கூடாதுன்னு முருகன் சொன்னாலும் மனசு விட மாட்டேங்குது

முருகன் அப்படி வேற சொல்லிட்டாரா..? அம்புட்டு வயசாகிப் போச்சா, அவருக்கு?!]]]

அவருக்கு இல்லீங்கோ ஸார்.. எனக்குத்தான்..!

உண்மைத்தமிழன் said...

[[[தனி காட்டு ராஜா said...
94 வது வெட்டு or 94 + வெட்டு]]]

ஓகே.. வெட்டினதுவரைக்கும் நன்றிங்கோண்ணா..!