27-02-2012
என் இனிய வலைத்தமிழ் மக்களே..!
சில சினிமாக்களின் விமர்சனங்களை தனிப் பதிவாகப் போட்டு உங்களை கஷ்டப்படுத்த எனக்கு விருப்பமில்லை. அதனால் மொத்தமாக ஒரே மொக்கையாகப் போட்டு தாளித்துவிட்டேன்.. பொறுத்துக் கொள்ளவும்..!
பாவி-சினிமா விமர்சனம்
ஹீரோ டாக்டராக நடித்திருக்கிறார். ஆனால் ஒரு காட்சியில்கூட ஒரு நோயாளியைக்கூட காட்டவில்லை.. வீட்டில் அக்காவும், வேலைக்காரியும் இருக்கிறார்கள். அக்கா பகலில் பரம பக்தையாகவும், இரவில் பரம பதிவிரதையாகவும் மாறிவிடுகிறார். ஹீரோவுக்கு தொழில் திருமணம் செய்துவிட்டு கொஞ்ச நாளில் புராதானத் தொழலுக்கு விற்றுவிடுவதுதான். இது தெரியாமல் ஹீரோயின் அவரிடம் சிக்குகிறார்.
கொடைக்கானலுக்கு போய் டூயட்டெல்லாம் பாடுகிறார்கள். கொஞ்சுகிறார்கள். திரும்பி வந்த்தும் அக்கா பட்டப் பகலில் அவுத்துப் போட்டு ஆடுவதைப் பார்த்துவிட்டு பயந்து போய் ஹீரோவுக்கு போன் செய்து சொல்கிறாள். ஹீரோவும் நடிக்கிறான். இப்படியே குஜாலுக்காக அக்காவை அவ்வப்போது ஆட விட்டு வேடிக்கை காட்டுகிறார்கள். கடைசியில் பாவமாய் முடித்திருக்கிறார்கள்.
ஹீரோவை பார்த்தாலே படத்தின் தரத்தை நீங்கள் முடிவு செய்து கொள்ளலாம். அதேதான்.. ஏதோ முடிந்த அளவுக்கு எடுத்துத் தள்ளியிருக்கிறார்கள்..! அவ்வளவுதான்..! நமக்குத் தலைவலி வருவதுதான் மிச்சம்..!
ஹீரோயின் பொண்ணு நிஜமாகவே அப்பிராணியாகத்தான் இருக்கிறது. நல்ல நடிப்புதான்.. இந்தப் பொண்ணின் போன் நம்பர் கேட்டு இந்தக் கம்பெனிக்கு போன் மேல் போன் போட்டும் கம்பெனிக்காரர்கள் மசியவில்லை. நம்பரைச் சொல்லவே இல்லையாம்..! ஒரு நல்ல நடிகையை நம் கண்ணில் காட்டவே மறுக்கிறார்கள்..! பாவம்.. என்ன பிரச்சனையோ..?
சூழ்நிலை-சினிமா விமர்சனம்
நிழல்கள் ரவி ஆச்சாரமான ஐயங்கார். லஞ்ச ஊழல் ஒழிப்புத் துறையில் பணியாற்றுபவர். மகளும், மகனும் கல்லூரியில் படிக்கிறார்கள். அலுவலகத்தில் சுத்தத்தையும், ஆச்சாரத்தையும் எதிர்பார்க்கிறார் ரவி. கிடைக்காதபோது எரிந்து விழுகிறார். இன்னொரு பக்கம் அவரது பிள்ளைகள் ஆளுக்கொரு காதலையும் செய்கிறார்கள். தனக்கு வரப் போகும் மருமகள் வேறு மதம் என்றவுடன் கோபமாகி அவர்களது வீட்டிற்கே போய் கத்திவிட்டு வருகிறார். சூழ்நிலைக்கேற்றாற்போல் நாமளும் இப்போ மாறித்தான் ஆகணும் என்கிற தனது குடும்பத்தாரின் பேச்சை காது கொடுத்துக் கேட்க மறுக்கிறார் ரவி.
இந்த நிலையில் சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அனுப்பப்பட்ட நிதியில் பெரும் முறைகேடு என்ற புகாரை விசாரிக்க அந்தமானுக்குச் செல்கிறார் ரவி. அங்கே அவர் பயணம் செய்த ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளாகி ஒரு இடத்தில் விழுகிறது. ரவி உயிர் பிழைக்கிறார். அங்கே செந்தமிழில் பேசும் ஒரு மலைவாசிப் பெண் ரவியைக் காப்பாற்றி தன்னுடன் தங்க வைக்கிறார். சூழ்நிலைக்கேற்றாற்போல் நாமும் மாறத்தான் வேண்டும் என்ற தனது குடும்பத்தாரின் அறிவுறுத்தலை ஏற்காத ரவி, இங்கே சூழ்நிலைக்கேற்றாற்போல் மாறி அந்தப் பெண்ணுடன் கலவித் திருமணம் செய்துவிடுகிறார்.
பின்பு சில நாட்கள் கழித்து வேறு சிலரின் கண்ணில் பட்டு அவர்களால் காப்பாற்றப்பட்டு சென்னைக்கு வருகிறார். சென்னை வந்தவுடன் புத்தி வந்து தனது மகனின் காதலைச் சேர்த்து வைக்கிறார். அப்படியே அவரைக் கடத்த வந்த சுனாமி நிதியைச் சூறையாடிய கும்பலையும் கைது செய்கிறார். இவ்ளோதான் படம்..!
டைரக்சனா..? அப்படின்னா என்ன என்று கேட்க வைத்து நெளிய வைக்கிறார்கள்.. அதிலும் கஞ்சா கருப்பு அண்ட் கோ செய்யும் அலம்பலும் தாங்க முடியவில்லை. யாருக்காவது டென்ஷனாக இருந்தால் கஞ்சா கருப்பு கோஷ்டிக்கு போன் வரும். இந்த டீம் சென்றவுடன், டென்ஷனில் இருப்பவர் ஆத்திரம் தீர கஞ்சா கருப்புவை அடித்து, உதைத்து அனுப்பலாம். கூடவே காசும் தரணும். இதுதான் பிஸினஸாம்.. படத்தின் பிஸினஸுக்குக்கூட கஞ்சா உதவவில்லை..!
இப்படத்தின் மூலம் அனுகூலம் பெற்றவர் இசையமைப்பாளர் தினாதான். படத்தில் வில்லனாக நடிப்புத் திறமையைக் காட்டியவர், நிஜ வாழ்க்கையிலும் "ஒரு மாதிரி" வில்லனாகிவிட்டாராம்..! வாழ்க..!
விளையாட வா-சினிமா விமர்சனம்
கேரம் விளையாட்டை மையப்படுத்தி எடுத்திருக்கிறார்கள். பொன்வண்ணன் வீடுகளுக்கு சென்ட்ரிங் போடும் வேலை. ஒரு மகன்.. லிவிங்ஸ்டன், மயில்சாமியுடன் மாலை வேளைகளில் கேரம் போர்டு விளையாடுகிறார். தெருவில் அனாதையா இருக்கும் ஒரு சிறுவன் மீது பரிதாப்ப்பட்டு அவனையும் மகனாக நினைத்து அவனுக்கு கேரம் போர்டு சொல்லிக் கொடுத்து பெரிய ஆளாக்குகிறார்.
கொடைக்கானலில் டோர்னமெண்ட்டுக்காக போன மகன், அங்கேயே ஒரு லவ்வில் குப்புறடித்து விழுகிறான். வருடா வருடம் அந்த ஊரில் ஜெயித்து வரும் காதலியின் அண்ணன் செய்யும் உள்ளடி வேலையில் காயம்பட்டாலும் இறுதியில் ஜெயிக்கிறார் ஹீரோ. இப்போது ஹீரோவுக்கு ஹீரோயின் தனது கம்பெனியில் வேலை போட்டுக் கொடுக்கிறார். எடுபிடி வேலை. அங்கேயே மேனேஜராக இருக்கும் நெடுநாள் குடும்ப நண்பரின் மகன் ஹீரோயின் தனக்குத்தான் என்று எண்ணியிருக்க.. ஹீரோவின் காதல் தெரிந்து அவனை டார்ச்சர் செய்கிறான். கடைசியில் மேனேஜர் வெளியேற்றப்பட.. ஹீரோவின் குடும்பத்திற்குள்ளேயே கலகம் செய்து குடும்பத்தை இரண்டாக்குகிறான் மேனேஜர்.. இறுதியில் இதற்காக தனது உயிரைக் கொடுத்து குடும்பத்தை ஒன்று சேர்க்கிறார் பொன்வண்ணன்..
இதுவும் ஆர்வக் கோளாறில் எடுத்த படமாகத்தான் இருக்கிறது..! ஒரே ஒரு ஆறுதல் ஹீரோவுக்கு வளர்ப்பு அம்மாவாக வரும் லஷ்மி ராமகிருஷ்ணனும், ஹீரோயின் திவ்யா பத்மினியும்தான்..!
சிற்சில இடங்களில் கவனிக்க வைத்தாலும்.. விளையாட்டில் ஆர்வமுள்ளவர்களை ஊக்குவிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தினாலும், கொஞ்சமாவது இயக்கத்தில் கவனத்தைச் செலுத்தி நல்லவிதமாக எடுத்திருந்தால் இயக்குநருக்காச்சும் பெயர் கிடைத்திருக்கும்..!
ஒரு மழை நான்கு சாரல்-சினிமா விமர்சனம்
கதை இருந்தால் திரைக்கதை இருக்காது. திரைக்கதை இருந்தால் இயக்கம் இருக்காது.. இது மூன்றும் இருந்தால் நடிப்பும் இருக்காது. இதில் ஏதாவது மூன்று இருந்தாலாவது படம் வெளியில் பேச வைக்கும். நமக்கு எது வருதோ, அதை மட்டும் சிறப்பாக செய்துவிட்டு மற்ற வேலைகளுக்கு மற்றவர்களுடன் பகிர்ந்து கொண்டால்தான் சிறப்பான படைப்புகள் வெளியாகும்.
இந்தப் படத்தின் இயக்குநர் கொஞ்சம் சிரத்தையுடன் செயல்பட்டு வேறு யாரிடமாவது இயக்கத்தையும், திரைக்கதை, வசனத்தையும் கொடுத்திருந்தால் கொஞ்சமாவது பேசப்பட்டிருக்கும். எல்லாத்தையும் நானேதான் செய்வேன் என்றால் இப்படித்தான் நடக்கும்.
ரவி, கர்ணா இருவரும் நண்பர்கள். ஒரே அறையில் தங்கியிருக்கிறார்கள். ரவி எதற்கெடுத்தாலும் கமிஷன் அடிக்கும் ஆள். கர்ணா ஆண்ட்டிகளை கவிழ்க்கும் பார்ட்டி. இருவருக்குமே நல்ல காசுதான். சுதர்சன், சதீஷ் என்னும் 2 பேரிடம் கமிஷனை வாங்கிக் கொண்டு தங்களது அறையில் சேர்த்துக் கொள்கிறான் ரவி. இதில் சதீஷ் சினிமாவில் உதவி இயக்குநர். சுதர்சன் பொறியியல் கல்லூரி மாணவர். கோடீஸ்வர்ரான அருள்மணியின் தங்கச்சியான ஹீரோயினை லவ்வித் தொலைக்கிறார்.
சுதர்சன் படிக்க பண உதவிகளை நண்பர்கள் செய்கிறார்கள். ஹீரோயினும் உதவுகிறாள். சுதர்சனுக்கு ஆஸ்திரேலியாவில் வேலை கிடைத்து செல்கிறார். திடீரென்று திரும்பி வருகிறார். வந்தவுடன் மீண்டும் தனது காதலைத் தொடர கோடீஸ்வர அண்ணன் கோபப்படுகிறார். நண்பர்களுக்குள் கலகத்தை உண்டு செய்து நட்பை பிரிக்க முயல்கிறார். சதீஷிற்கு படத் தயாரிப்புச் செலவைத் தான் பார்த்துக் கொள்வதாகக் கூறி, சுதர்சனை கொலை செய்யச் சொல்கிறார். ரவியை போலீஸில் சொல்லி முட்டிக்கு முட்டி அடித்து உள்ளே தள்ளுகிறார். கர்ணாவையும் மடக்குகிறார்.. நண்பனை கொலை செய்ய விரும்பாமல் சதீஷ் தற்கொலை செய்து கொள்ள.. அடுத்தடுத்து ஹீரோயின் உட்பட அனைவருமே வீட்டு ஹாலில் பிணமாகிறார்கள்..! எதிர்பார்க்காத கிளைமாக்ஸ்..!
இதிலும் டைரக்சனை தேடித்தான் பார்க்க வேண்டியிருக்கிறது. ஒரே ஆறுதல் சிங்கமுத்துதான். அவரும் இல்லையெனில் சீட்டைக் கிழித்துவிட்டுத்தான் வெளியில் வர வேண்டியிருக்கும்..! பல இடங்களில் வாய் விட்டுச் சிரிக்க வைக்கிறார் சிங்கமுத்து. மனிதர் முயற்சி செய்தால் பல ரவுண்டுகள் வரலாம்..! எல்லாம் விழலுக்கு இறைத்த நீர்தான்..!
காதல் பாதை-சினிமா விமர்சனம்
இங்கேயிருந்து ஆக்ராவரைக்கும் நம்மை அழைத்துப் போய்க் காட்ட இயக்குநருக்கு ரொம்ப ஆசை. அதனால் தயாரிப்பாளரின் காசில் எடுத்துத் தள்ளிவிட்டார்..!
இதுவரையில் ஹீரோயின்களுக்காக உயிரையும்விடத் தயாராக இருக்கும் ஹீரோக்களை பார்த்திருக்கலாம். இதில் கொஞ்சம் வித்தியாசமாக ஹீரோயினுக்காக கொடைக்கானலில் இருந்து ஆக்ராவரைக்கும் சைக்கிளிலேயே பயணம் செய்கிறார்கள். கூடவே நம்மையும்தான்..! கொஞ்சம், கொஞ்சம் அறுவை, இழுவையுடன்.. எல்லார் வாயிலும் கம் போட்டு ஒட்டினால் என்று நினைக்கும் அளவுக்கு பேசித் தள்ளிவிட்டார்கள். மன்சூர் அலிகானின் கர்ஜனையைக் கேட்டு வயிறு கலங்கியதுதான் மிச்சம். நிஜத்தில் அழகாக பேசும், மன்சூர் திரைப்படத்தில் மட்டும் ஏன் இப்படி..?
என்னமோ காதல் படமென்றால் விழுந்தடித்து ஓடிவிடும் என்று நினைப்பு இவர்களுக்கு. படமாக்கியதிலாவது கொஞ்சம் ஜீவன் வேண்டாமா..? ஒளிப்பதிவை மட்டும் நல்லபடியாக வைத்துவிட்டால் இதற்காகவே கடைசிவரையிலும் அனைவரும் அமர்ந்திருப்பார்கள் என்று ஒரு நப்பாசை..! என்ன இருந்து என்ன புண்ணியம்..? பாடல்களையும், பாடல் காட்சிகளையும் மெனக்கெட்டு இத்தனை பிரமோட் செய்தும், பலனில்லை..! எப்படியோ ஒரு படத்தை எடுத்து முடித்து ரிலீஸ் செய்தாகிவிட்டது என்ற புண்ணிய லிஸ்ட்டில் இந்தப் படமும் சேர்ந்துவிட்டது..! ஒரே ஆறுதல் ஹீரோயின்தான்.. ஹி.. ஹி.. ஹி..!
உடும்பன்-சினிமா விமர்சனம்
அவசியம் இது பத்தி பேசணுமா..? வேணாம்னு நினைச்சேன். பதிவு பண்ணி வைச்சுத் தொலையலாமேன்னு லேசா தோணுது..!
கல்வியின் முக்கியத்துவத்தை வலியுறுத்தியிருக்காங்களாம்..! எப்படின்னு மட்டும் கேக்காதீங்க.. உங்களுக்குத் தைரியம் இருந்தா படத்தை போய் பாருங்க..!
களவாணி தொழில் செய்யும் ஹீரோ ஐ.ஜி.யின் வீட்டில் கொள்ளையடிக்கப் போகிறார். “இப்பத்தான் காலைல பட்டப்பகல்ல ஸ்கூல்ல என் பொண்ணை சேர்க்கப் போனப்ப எல்லாத்தையும் கொள்ளையடிச்சிட்டாங்க”ன்னு ஐ.ஜி. லேசா பொளம்புறாரு. அவ்ளோதான். இந்த ஒரு வார்த்தையே ஹீரோவை தலைகீழா மாத்திருச்சாம். உடனே வீட்டுக்குள்ள புதைச்சு வந்திருந்த கொள்ளையடிச்ச பணத்தை வைச்சு ஸ்கூல் கட்டுறாரு. அதுக்குள்ள
ஜெயிலுக்கு போன அவரோட அண்ணன்காரன் வெளில வர்றாரு.. இடைல ஹீரோ ஜெயிலுக்குப் போக வேண்டியிருக்க.. அதுக்குள்ள அண்ணன் ஸ்கூலை வேற லெவலுக்குக் கொண்டு போய் அசத்திர்றாரு.. கடைசீல அண்ணனையும் விரட்டிட்டு, ஸ்கூலையும் காப்பாத்தி, பிள்ளைகளுக்கு படிப்புச் சொல்லிக் கொடுக்குற கல்வித் தந்தையா உருமாறாராம் ஹீரோ.. இதைத்தான்பா ஒரு அழுத்தமும் இல்லாம சொல்லிருக்காங்க..!
எல்லாத்தையும், எல்லாத்தையும்விட... ஹீரோவோட அண்ணன்காரன் அப்பப்போ முழிச்சிக்கிட்டே, வெறிச்சுக்கிட்டே நிப்பாரு பாருங்க.. அப்படியே அந்த டைரக்டரை.. சரி.. வேணாம்.. விட்டுர்றேன்..! இந்தப் படத்தைப் பார்க்காதவங்கதான் பாக்கியசாலிங்க.. ஒரு பாடலும், பாடல் காட்சியும் எடுக்கப்பட்ட விதம் அருமை. நல்ல பாடல். ஆனால் தேறாத படத்தில் இடம் பெற்று வீணாகிப் போனதுதான் மிச்சம்..!
இயக்கம் தெரிந்த ஒருவரிடம் படத்தின் கதையைக் கொடுத்து எடுக்கச் செய்திருக்கலாம்.. எல்லாம் வீண்..! இந்த லட்சணத்துல இது மாதிரி படத்துக்கெல்லாம் தியேட்டர் கிடைக்கலைன்னு பொலம்பல் வேற.. அடப் போங்கப்பா..!
இது மாதிரி குறைந்த பட்ஜெட் படங்களையெல்லாம் அதிகப்பட்சம் 1 கோடிக்குள் எடுத்துவிடலாம். ஆனால் படத்தை வாங்கத்தான் ஆளில்லாமல் இருக்கிறது. இதனை மட்டும் ஆரம்பத்தில் அவர்கள் உணர்வதில்லை. அல்லது இந்தச் செய்தியே தயாரிப்பாளர்களுக்கு மறைக்கப்படுகிறது. அதிலும் தற்போதைய லோ பட்ஜெட் தயாரிப்பாளர்கள் யார், யார் என்றால், தங்களது மகனையோ அல்லது தங்களையோ முன்னிறுத்தி படம் எடுப்பவர்கள்தான் .
மேற்குறிப்பிட்ட வரிசையில்கூட பாவி படத்தின் ஹீரோதான் தயாரிப்பாளர். விளையாட வா படத்தின் ஹீரோவின் தந்தைதான் தயாரிப்பாளராம். ஒரு மழை நான்கு சாரல் படத்தில் வீட்டு ஓனராக நடித்தவர்தான் தயாரிப்பாளராம். இதற்காகவே இவருக்கு படத்தில் சண்டைக் காட்சி ஒன்றும் உண்டு. பவர் ஸ்டாரெல்லாம் செத்துட்டாரு. அப்படியொரு ஸ்டண்ட்டு..! உடும்பன் படத்தின் தயாரிப்பாளர் பாடம் புத்தகத்தின் பப்ளிஷர், ஆசிரியர். ஏற்கெனவே நாகரிகக் கோமாளி என்ற படத்தைத் தயாரித்து, இயக்கியவர். காதல் பாதையும் இதே கதைதான்.. படத்தின் தயாரிப்பில் ஹீரோவின் பங்களிப்பும் உண்டாம். சூழ்நிலை மட்டுமே இயக்குநருக்கான படமாக தயாராகியிருக்கிறது..!
எல்லாஞ் சரி.. இப்படி படத்தையெல்லாம் எடுத்துவிட்டு படம் பார்க்க வாங்க என்று எந்தத் தைரியத்தில் இவர்கள் கூப்பிடுகிறார்கள் என்று தெரியவில்லை. இந்த மாதிரி படங்களை தியேட்டருக்கு வந்து பார்க்கும் மகா ஜனங்கள் என்ன படம் எடுத்திருக்கானுவ என்று நெஞ்சில் அடித்துக் கொண்டு போனால், செத்தாலும் திரும்பி தியேட்டருக்கு வர மாட்டார்கள். எல்லா படமும் இப்படித்தான் இருக்கும் என்று அவர்கள் நினைத்துக் கொள்வார்கள். ஏற்கெனவே தியேட்டர் கட்டணத்தைக் காட்டி குடும்பத்துடன் வர தயக்கத்துடன் இருக்கும் ரசிகர்களை மேலும், மேலும் சோகத்தில் தள்ளி அவர்களை தியேட்டர் பக்கமே வர விடாமல் தடுப்பதைத்தான் இது போன்ற படங்கள் செய்கின்றன. அதிகப்பட்சம் 10-ல் இருந்து 30 தியேட்டர்களில் ரிலீஸ் ஆகியிருக்கும் இப்படங்கள் அடுத்தடுத்த ரவுண்டுகளில் சொற்ப விலைக்கு விற்கப்பட்டு போஸ்டர் காசு கூட கிடைக்காமல் திருப்தியை மட்டுமே அளிக்கப் போகின்றன..!
லோ பட்ஜெட்டில் இப்படி ஏதோ ஒன்றை எடுத்து வெளியிட்டு பெருமை சேர்த்துக் கொள்வதைவிட இந்தப் பணத்தில் தங்களது பிள்ளைகள் பெயரில் சொத்தாவது வாங்கிக் கொடுத்தால் அவர்களுக்காச்சும் உதவும். எதுக்கு இந்த கலைச் சேவை..?
|
Tweet |
39 comments:
Vadai ennakku
First in my comment History
thalla
in that most of the movie i havnt seen the posters. is that got released or any spl show for you.
உங்களுக்கு ரொம்ப நல்ல மனசு... நல்லாவருவீங்கண்ணே!
இந்த ஆண்டின் திரை உலக அஞ்சானெஞ்சன் அண்ணன் உண்மை தமிழன் வாழ்க... வளர்க...
கதை இருந்தால் திரைக்கதை இருக்காது. திரைக்கதை இருந்தால் இயக்கம் இருக்காது.. இது மூன்றும் இருந்தால் நடிப்பும் இருக்காது.//அநேகமாக இந்தபதிவே இந்த வரிகளுடன் ஆரம்பித்திருக்கலாம்.பொருத்தமான வார்த்தைகள் இப்போதைய தமிழ்சினிமா இருக்கும் இருப்புக்கு.
கேபிள் சங்கர் ஒரு மூணு படத்துக்கு சேர்த்து விமர்சனம் நேத்து போட்டார்.படிச்சுட்டு கமென்ட் போட்டேன். ஆனா நீங்க விமர்சனம் பண்ணின படம் பேரு கூட இது வரைக்கு கேள்விப்பட்டது இல்லை. (அந்த 'சாரல்' 'உடும்பன்' தவிர).மெய்யாலுமே முழுசாப் பாத்தீங்களா எல்லாப் படத்தையும்.தியேட்டர்ல உக்கார்ந்திருக்க முடிஞ்சிருக்காதே!
விமர்சனத்துக்காகவேண்டி இதையெல்லாம் குறும்படமாகத் தயாரிச்சு விடலாம்.
மொத்தமா ஒரே பதிவாப் போட்டதுலயும் ஒரு நன்மை இருக்கு.ஒரேயடியா நாங்களும் பல்லக் கடிச்சிட்டு தாண்டிரலாம்.இல்லன்னா அஞ்சு ஆறு பதிவா வந்து ரொம்ப கஷ்டம்!
ஒரே ஒரு ஆறுதல் ஹீரோவுக்கு வளர்ப்பு அம்மாவாக வரும் லஷ்மி ராமகிருஷ்ணனும், ஹீரோயின் திவ்யா பத்மினியும்தான்..! //குசும்புதான். ஆனாலும் கதாநாயகி அழகாத்தான் இருக்காப்ல.
அந்த 'பாவி' படவிளம்பரத்தை இதுவரை நல்லவேளை இந்தபாவி பாக்கலை.
ஆனால் உடும்பன் ரொம்ப பிரமாதம்.கிட்டத்தட்ட 'களவாணி' மாதிரி சூப்பர் ஹிட்டாகும் என்றெல்லாம் சில விமர்சனபதிவுகள் வந்தன. நானும் நம்பிவிட்டேன்.ஆனால் அதற்குப் பிறகு சத்தமே இல்லை.இப்பதான் தெரியுது நிலவரம்.
சார் நிஜமாவே உடும்பன் சூப்பர்னு ஒரு டாக் வந்துச்சு.படம் பார்க்கலாம்னு முடிவு பண்ணியிருந்தேன்.எப்படி அப்படி ஒரு டாக் க்ரியேட் பண்ண முடிஞ்சது?மொத்தத்துல சினிமாவே தெரியாத ஆளுக அசிஸ்டென்ட் டைரக்டரா இருக்காங்களா கோடம்பாக்கத்துல. இத்தனை படங்கள் குப்பையா வருது.
//ஹீரோவோட அண்ணன்காரன் அப்பப்போ முழிச்சிக்கிட்டே, வெறிச்சுக்கிட்டே நிப்பாரு பாருங்க.. அப்படியே அந்த டைரக்டரை.. சரி.. வேணாம்.. விட்டுர்றேன்..!// its ok...its ok...புரியுது.ஆறுபடம்னா கிட்டத்தட்ட 15 இல்ல 16 மணிநேரம்.த்ஸோ..த்ஸோ...மை காட்.
வாழ்க வளமுடன். எம்மை அட்லீஸ்ட் ரெண்டு படத்துலேர்ந்தாவது காப்பாற்றியிருக்கிறீர்கள்.(எல்லாத்தையும் பார்ப்பதில்லை).அசாத்திய பொறுமை உங்களுக்கு.
chilled beers...என்ன ஐந்து படத்துக்கு ஐந்து கமென்ட்டா?
இந்த இயக்குநர்களைப் பற்றி தோன்றுகிறது என்னவெனில் 'என்ன சொல்லி' இந்த தயாரிப்பாளர்களை கன்வின்ஸ் செய்திருப்பார்கள் என்று. சுஜாதா திரைக்கதை முழுசாக பைண்ட் செய்து கொள்ளாமல் ஷூட்டிங் ஆரம்பிக்ககூடாது என்பது சினிமாவின் அடிப்படை விதியாக இருக்கணும் என்பார். பெஃப்ஸி-தயாரிப்பாளர் பிரச்னைக்கு சமமான பிரச்னை இயக்குநர்களின் திறமையின்மை. இதைப் பற்றி விவாதமே காணோம். தங்க முட்டை இடுகிற வாத்தை கொஞ்சம் கொஞ்சமாக கொல்கிறார்கள்.
தங்க முட்டை இடுகிற வாத்தை கொஞ்சம் கொஞ்சமாக கொல்கிறார்கள்.//அதெல்லாம் ஒன்றுமில்லை.சினிமா மறுபடி பிரகாசமாக இருக்கும். அப்போது திறமையற்றவர்கள் வெளியே தூக்கியெறியப்பட்டிருப்பார்கள். தமிழ்சினிமாவில் இப்போது நடப்பது திறமையற்றவர்களின் ஆக்கிரமிப்பு.இதை மக்கள்தான் மறைமுகமாக 'படங்களை புறக்கணிப்பதன்'மூலம் தண்டிக்கிறார்கள்.களைகள் எடுக்கப்பட்டு புரோபஷனலாக சினிமா வர இது உதவும் என்றே நான் நம்புகிறேன். பார்க்கலாம். 1992 களில் புது டெக்னாலஜி,தாராளமயமாக்கல் என்று வந்த போது இதேபோல ஒரு சுழற்சி ஏற்பட்டு சில நடிகர்கள்,சில இயக்குநர்கள் காணாமல் போய், புதுநபர்கள் புகழ் பெற்று,தமிழ்சினிமாவின் தரமும் வேறுமாதிரியாக மாற ஆரம்பித்தது.(மற்ற தென்னிந்திய மொழிகளைக் காட்டிலும் தமிழில் இது நன்றாகவே நடந்தது)
இப்போதும் அதேபோல என்றே நான் நினைக்கிறேன்.சுதாரிப்பாக இல்லாதவர்கள் காணாமல் போவார்கள்...
இந்த மாதிரி படங்களினால் தயாரிப்பாளரிடமிருந்து பணம் தொழிலாளிகளுக்கும் போய் சேருகிறது.நல்ல விஷயம்.அதுக்காகவே இவைகள் தொடர்ந்து எடுக்கப்படவேண்டும்.அந்த தயாரிப்பாளருக்கு இந்தபணம் ஒரு விஷயமாக இருக்காது.தொழிலாளிகள் வாழ்வார்கள்!
Thanks eNgaL panaththai michchappaduthiyathaRku!
எங்களை காப்பாத்தின தெய்வமே .....வாழ்க
:(((((((((((((((((((((((((((((( why this kolaveri
இதுல பாதி படங்கள் வந்ததே தெரியாதுங்கோ..நல்ல விமர்சனம்.நன்றி.
முழுசா படிச்சிட்டேனே ...!//இந்த மாதிரி படங்களை தியேட்டருக்கு வந்து பார்க்கும் மகா ஜனங்கள் என்ன படம் எடுத்திருக்கானுவ என்று நெஞ்சில் அடித்துக் கொண்டு போனால், செத்தாலும் திரும்பி தியேட்டருக்கு வர மாட்டார்கள்.//
இப்படியெல்லாம் சொல்லிட்டு நீங்க மட்டும் எப்டிங்க எல்லாத்தையும் பார்த்தீங்க ???
அருமைப் பதிவு வாழ்த்துகள்
விமர்சனம் நன்று....
"நன்றி,
கண்ணன்
http://www.tamilcomedyworld.com"
[[[muthukumara Rajan sk said...
Vadai ennakku. First in my comment History]]]
ஆஹா.. இப்படியொரு சந்தோஷமா..? நல்லாயிருங்க..!
[[[muthukumara Rajan sk said...
thalla
in that most of the movie i havnt seen the posters. is that got released or any spl show for you.]]]
பிரிவியூ ஷோவில் பார்த்ததுதான்.. சென்னையில் மட்டும் ஏதாவது ஒரு தியேட்டரில் படத்தை ஓட்டி விடுவார்கள். அத்தோடு சினிமா துறையிலேயே இருப்பதால் கவனிக்க வேண்டியுள்ளது..! போஸ்டர்கள்கூட கண்ணில் படவில்லையெனில் நீங்கள் அதிர்ஷ்டசாலிதான்..!
[[[Caricaturist Sugumarje said...
உங்களுக்கு ரொம்ப நல்ல மனசு... நல்லாவருவீங்கண்ணே!
இந்த ஆண்டின் திரை உலக அஞ்சானெஞ்சன் அண்ணன் உண்மை தமிழன் வாழ்க... வளர்க...]]]
வாழ்த்துகளுக்கு நன்றி தம்பி.. எல்லாம் உங்களை மாதிரியானவர்களின் ஆசீர்வாதம்தான்..!
[[[Chilled Beers said...
கதை இருந்தால் திரைக்கதை இருக்காது. திரைக்கதை இருந்தால் இயக்கம் இருக்காது.. இது மூன்றும் இருந்தால் நடிப்பும் இருக்காது.//
அநேகமாக இந்த பதிவே இந்த வரிகளுடன் ஆரம்பித்திருக்கலாம். பொருத்தமான வார்த்தைகள் இப்போதைய தமிழ் சினிமா இருக்கும் இருப்புக்கு.]]]
மேற்குறிப்பிட்ட படங்கள் அனைத்தும் இந்த வகையில் ஏதேனும் ஒன்றில் அடக்கம்..!
[[[கேபிள் சங்கர் ஒரு மூணு படத்துக்கு சேர்த்து விமர்சனம் நேத்து போட்டார். படிச்சுட்டு கமென்ட் போட்டேன். ஆனா நீங்க விமர்சனம் பண்ணின படம் பேரு கூட இதுவரைக்கு கேள்விப்பட்டது இல்லை. (அந்த 'சாரல்' 'உடும்பன்' தவிர). மெய்யாலுமே முழுசாப் பாத்தீங்களா எல்லாப் படத்தையும். தியேட்டர்ல உக்கார்ந்திருக்க முடிஞ்சிருக்காதே!]]]
முடியலைதான். ஆனால் அதுக்காக பிரிவியூ ஷோல பாதில எழுந்து வெளியேற முடியாது.. கூடாது.. அது நாகரிகமில்லை என்பதால் அடக்கத்துடன் பார்க்க வேண்டியதாகிவிட்டது..!
[[[Chilled Beers said...
ஒரே ஒரு ஆறுதல் ஹீரோவுக்கு வளர்ப்பு அம்மாவாக வரும் லஷ்மி ராமகிருஷ்ணனும், ஹீரோயின் திவ்யா பத்மினியும்தான்..! //
குசும்புதான். ஆனாலும் கதாநாயகி அழகாத்தான் இருக்காப்ல.]]]
சொல்லிட்டீங்கள்லே.. நன்னி..!
[[[அந்த 'பாவி' பட விளம்பரத்தை இதுவரை நல்ல வேளை இந்த பாவி பாக்கலை.]]]
பாருங்க.. உங்க ஊர்ல திடீர்ன்னு போட்டுத் தள்ளிரப் போறாங்க..!
[[[Chilled Beers said...
ஆனால் உடும்பன் ரொம்ப பிரமாதம். கிட்டத்தட்ட 'களவாணி' மாதிரி சூப்பர் ஹிட்டாகும் என்றெல்லாம் சில விமர்சன பதிவுகள் வந்தன. நானும் நம்பிவிட்டேன். ஆனால் அதற்குப் பிறகு சத்தமே இல்லை. இப்பதான் தெரியுது நிலவரம்.]]]
ஆமா ஸார். நானும்தான் நம்பியிருந்தேன். எல்லாம் அந்த "கருப்பசாமி" பாடல் காட்டிய தைரியம்தான். கடைசியில் பார்த்தால் இப்படி..!
[[[Chilled Beers said...
சார் நிஜமாவே உடும்பன் சூப்பர்னு ஒரு டாக் வந்துச்சு. படம் பார்க்கலாம்னு முடிவு பண்ணியிருந்தேன்.எப்படி அப்படி ஒரு டாக் க்ரியேட் பண்ண முடிஞ்சது? மொத்தத்துல சினிமாவே தெரியாத ஆளுக அசிஸ்டென்ட் டைரக்டரா இருக்காங்களா கோடம்பாக்கத்துல. இத்தனை படங்கள் குப்பையா வருது.]]]
எல்லாமே அரைகுறைகள்..! ஏதோ ஒரு படம் கிடைச்சா போதும்.. டைட்டில்ல டைரக்டர்ன்னு கார்டு போட்டா போதும்ன்னு நினைக்கிறவங்க. வெற்றியைப் பத்தி கவலைப்படாதவங்க இவங்க..! திறமையில்லைன்னா இப்படித்தான் இருக்கும்..!
//ஹீரோவோட அண்ணன்காரன் அப்பப்போ முழிச்சிக்கிட்டே, வெறிச்சுக்கிட்டே நிப்பாரு பாருங்க.. அப்படியே அந்த டைரக்டரை.. சரி.. வேணாம்.. விட்டுர்றேன்..!//
its ok. its ok. புரியுது. ஆறு படம்னா கிட்டத்தட்ட 15 இல்ல 16 மணி நேரம். த்ஸோ.. த்ஸோ... மை காட்.]]]
உங்களுடைய பொன்னான நேரத்தை என் தளத்தில் செலவிட்டமைக்கு மிகவும் நன்றிகள் ஸார்..!
[[[மாயன்:அகமும் புறமும் said...
வாழ்க வளமுடன். எம்மை அட்லீஸ்ட் ரெண்டு படத்துலேர்ந்தாவது காப்பாற்றியிருக்கிறீர்கள். (எல்லாத்தையும் பார்ப்பதில்லை) அசாத்திய பொறுமை உங்களுக்கு.]]]
தொழிலே இதுதானே..? வேற வழி.. பார்த்தே தீர வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறேன்..!
[[[மாயன்:அகமும் புறமும் said...
இந்த இயக்குநர்களைப் பற்றி தோன்றுகிறது என்னவெனில் 'என்ன சொல்லி' இந்த தயாரிப்பாளர்களை கன்வின்ஸ் செய்திருப்பார்கள் என்று.
சுஜாதா திரைக்கதை முழுசாக பைண்ட் செய்து கொள்ளாமல் ஷூட்டிங் ஆரம்பிக்க கூடாது என்பது சினிமாவின் அடிப்படை விதியாக இருக்கணும் என்பார்.
பெஃப்ஸி-தயாரிப்பாளர் பிரச்னைக்கு சமமான பிரச்னை இயக்குநர்களின் திறமையின்மை. இதைப் பற்றி விவாதமே காணோம். தங்க முட்டை இடுகிற வாத்தை கொஞ்சம் கொஞ்சமாக கொல்கிறார்கள்.]]]
திறமையின்மையை யாரும் ஒத்துக் கொள்வதில்லை. இது என் படம். என்னோட ஸ்டைல் இதுதான். இப்படித்தான் இருக்கும். இஷ்டம்ன்னா பாரு. இல்லாட்டி போ.. இதைத்தான் சொல்வார்கள் இந்த இயக்குநர்கள்..!
[[[Chilled Beers said...
அதெல்லாம் ஒன்றுமில்லை.சினிமா மறுபடி பிரகாசமாக இருக்கும். அப்போது திறமையற்றவர்கள் வெளியே தூக்கியெறியப்பட்டிருப்பார்கள். தமிழ் சினிமாவில் இப்போது நடப்பது திறமையற்றவர்களின் ஆக்கிரமிப்பு. இதை மக்கள்தான் மறைமுகமாக 'படங்களை புறக்கணிப்பதன்' மூலம் தண்டிக்கிறார்கள். களைகள் எடுக்கப்பட்டு புரோபஷனலாக சினிமா வர இது உதவும் என்றே நான் நம்புகிறேன். பார்க்கலாம். 1992 களில் புது டெக்னாலஜி, தாராளமயமாக்கல் என்று வந்த போது இதேபோல ஒரு சுழற்சி ஏற்பட்டு சில நடிகர்கள்,சில இயக்குநர்கள் காணாமல் போய், புது நபர்கள் புகழ் பெற்று, தமிழ் சினிமாவின் தரமும் வேறு மாதிரியாக மாற ஆரம்பித்தது.(மற்ற தென்னிந்திய மொழிகளைக் காட்டிலும் தமிழில் இது நன்றாகவே நடந்தது) இப்போதும் அதேபோல என்றே நான் நினைக்கிறேன். சுதாரிப்பாக இல்லாதவர்கள் காணாமல் போவார்கள்.]]]
அப்போது நடந்தது புதிய தலைமுறையின் புதிய அலை வரிசையை.. இப்போதும் அது போன்று ஒரு அலை வந்தால் நிச்சயம் இதுவும் மாறிப் போகும்..!
[[[Chilled Beers said...
இந்த மாதிரி படங்களினால் தயாரிப்பாளரிடமிருந்து பணம் தொழிலாளிகளுக்கும் போய் சேருகிறது. நல்ல விஷயம். அதுக்காகவே இவைகள் தொடர்ந்து எடுக்கப்படவேண்டும். அந்த தயாரிப்பாளருக்கு இந்த பணம் ஒரு விஷயமாக இருக்காது.தொழிலாளிகள் வாழ்வார்கள்!]]]
இது சரிதான் என்றாலும், இதனால் இந்தத் துறையில் தேக்க நிலை ஏற்படுகிறதே ஸார்.. அதை எப்படி தவிர்ப்பது..?
[[[middleclassmadhavi said...
Thanks eNgaL panaththai michchappaduthiyathaRku!]]]
ஹலோ செளக்கியமா..? ரொம்ப நாளாச்சு சந்திச்சு.. எப்படி இருக்கீங்க..? அந்த மிச்சம் புடிச்ச காசை எனக்கு அனுப்பி வைங்க.. உண்மையா அது எனக்கு வர வேண்டிய காசு..!
[[[கோவை நேரம் said...
எங்களை காப்பாத்தின தெய்வமே ..... வாழ்க]]]
தெய்வமேன்னு சொல்லிட்டதால என்னால ஒண்ணும் சொல்ல முடியலை.. வாழ்க வளமுடன்..!
[[[G.Ganapathi said...
:(((((((((((((((((((((((((((((( why this kolaveri]]]
கொடுமையை அனுபவிச்சாத்தான் தெரியும்..!
[[[Kumaran said...
இதுல பாதி படங்கள் வந்ததே தெரியாதுங்கோ.. நல்ல விமர்சனம். நன்றி.]]]
நன்றி குமரன் ஸார்..!
[[[தருமி said...
முழுசா படிச்சிட்டேனே ...!]]]
இதை முழுசா நானும் நம்பிட்டேன்..!
//இந்த மாதிரி படங்களை தியேட்டருக்கு வந்து பார்க்கும் மகா ஜனங்கள் என்ன படம் எடுத்திருக்கானுவ என்று நெஞ்சில் அடித்துக் கொண்டு போனால், செத்தாலும் திரும்பி தியேட்டருக்கு வர மாட்டார்கள்.//
இப்படியெல்லாம் சொல்லிட்டு நீங்க மட்டும் எப்டிங்க எல்லாத்தையும் பார்த்தீங்க ???]]]
என் தலைவிதி.. என்ன செய்யறது..?
[[[DhanaSekaran .S said...
அருமைப் பதிவு வாழ்த்துகள்.]]]
வருகைக்கு நன்றிகள் ஸார்..!
[[[Kannan said...
விமர்சனம் நன்று....]]]
பின்னூட்டம் நன்று ))))))))))
தலீவா......
அந்த “பாவி” படத்துல (அதாங்க மொத ஃபோட்டோவுல) இருக்கறது கவுண்டமணியா?
[[[R.Gopi said...
தலீவா...... அந்த “பாவி” படத்துல (அதாங்க மொத ஃபோட்டோவுல) இருக்கறது கவுண்டமணியா?]]]
என்ன லொள்ளா..? அவர் கவுண்டமணி மாதிரியா இருக்காரு..? கவுண்டமணிக்கு இது தெரிஞ்சா என்னாகும் தெரியுமா..?
Post a Comment