அம்புலி 3-D - சினிமா விமர்சனம்

18-02-2012என் இனிய வலைத்தமிழ் மக்களே..!


மை டியர் குட்டிச்சாத்தானில் அறிமுகமான 3 டி திரைப்படம் அப்போதைய வயதில் ஒரு புதிய அனுபவத்தைக் கொடுத்தது என்பதில் யாருக்கும் சந்தேகம் இருக்காது.. அடுத்து வந்த அன்னை பூமி, யானையின் தும்பிக்கை நம் மூக்கைத் தொட வருவதையும், குரங்கின் வால் நம் முன்னால் ஆடுவது போலவும், இடையிடையே விஜய்காந்தின் கால் ஷூ நம் முகத்தில் படுவது போலவும் எபெக்ட்ஸாக காட்டி அப்போதைக்கு ஒரு சாதனையாக கருதி முடித்திருந்தார்கள்.


இப்போது, இத்தனையாண்டுகள் கழித்து மீண்டும் ஒரு 3-டி. இடையில் ஆங்கிலப் படங்கள் நிறையவும் பார்த்தாகிவிட்டது. அவதார்கூட 3 டி பார்மெட்டில் வந்து இன்னொரு பக்கம் காசை அள்ளிவிட்டது..! தமிழில் தற்போதைய டிஜிட்டல் தரத்துக்கேற்ப மீண்டும் ஒரு 3-டியை கொண்டு வருவது என்கிற நினைப்புடன் சாதித்துக் காட்டியிருக்கும் அந்த இரண்டு இளைஞர்களுக்கும் எனது நன்றி..!

வெற்றியோ, தோல்வியோ ஏதாவது புதிய முயற்சிகள் செய்தால்தான் அத்துறையின் வளர்ச்சி கிடைக்கும். யாரோ ஒருவர் முயன்று தோற்றுப் போக, அடுத்தவர் வந்து ஜெயித்துக் காட்டுவதுதான் உலக நியதி. இதில் அனைத்துத் துறையின் வளர்ச்சிகளும் அடக்கம். அந்த வரிசையில் இந்த இரட்டை இயக்குநர்களான ஹரிசங்கர், ஹரிஷ் நாராயணனின் இந்த முயற்சி பாராட்டுக்குரியது..!

இரண்டாம் உலகப் போரின்போது ஆங்கிலேயே ராணுவத்தில் மருத்துவ ஆராய்ச்சியாளராக இருந்த விஞ்ஞானி ஒருவர் இந்தியாவுக்கு பிரிட்டிஷ் காலத்திலேயே வந்து சேர்கிறார். இந்தியா சுதந்திரமான பிறகும், ஒரு கல்லூரியை நிறுவி அதை நடத்திவருகிறார். அப்போது தான் ராணுவத்தில் இருந்தபோது செய்து பார்த்து பாதியிலேயே நிற்கும் ஒரு ஆராய்ச்சியை தன்னிடம் மருத்துவச் சிகிச்சைக்காக வந்த மாடந்திபுரத்து கர்ப்பிணிப் பெண்ணான உமா ரியாஸிடம் செய்து பார்க்கிறார். விளைவு.. உமா ரியாஸுக்கு வினோதமான விலங்கு முகத்துடன் குழந்தை பிறக்கிறது..! இதைப் பார்த்த அதிர்ச்சியிலும், வேதனையிலும் உமா ரியாஸ் தற்கொலை செய்து கொண்டு உயிரைவிட.. அந்தக் குழந்தை அப்போதே கிராமத்து மக்களிடமிருந்து தப்பித்து ஓடுகிறது..


அந்த ஊரின் எல்லையில் இருக்கும் சோளக்காட்டுக்குப் பின்பக்கம் இருக்கும் ஒரு பாழடைந்த கோவிலுக்குள் குடியிருக்கும் அந்த மனித-விலங்கு பிறவி, சோளக்காட்டு வழியாக வருபவர்களை தாக்கிக் கொல்கிறது. இதனால் அந்தப் பாதையை மறித்து சுவர் எழுப்பிவிட்டு தங்களுடைய ஊரையே காலி செய்துவிட்டு கொஞ்சம தள்ளி புது மாடந்திபுரம் என்றொரு ஊரை உருவாக்கி தங்களைக் காத்துக் கொள்கிறார்கள் மாடந்திபுரத்து மக்கள்..!

அந்தச் சோளக்காட்டின் எல்லையை ஒட்டியுள்ள பகுதியில் இருக்கும் கல்லூரியில் படிக்கும் காதலர்கள் அந்தச் சோளக்காட்டை கிராஸ் செய்ய.. மனித விலங்கின் பார்வையில் பட்டு பயப்படுகிறார்கள். ஏதோ ஒன்று உள்ளுக்குள் இருக்கிறது என்பது மட்டும் அவர்களுக்குத் தெரிய வர.. வாலிப வயசுக்கேற்றவாறு அதனை எப்படியாவது கண்டறிய வேண்டும் என்று துடிக்கிறார்கள். கண்டறிந்தார்களா என்பதுதான் மிச்சச் சொச்சக் கதை..!

3-டி கண்ணாடி அணியாமல் பார்த்தால் இரண்டிரண்டாகத் தெரிகிறது. அணிந்து பார்த்தால் பளபளவென்ற வெல்வெட் கண்ணாடியில் நம் கண்ணுக்கு மிக அருகில் நடப்பதாகவே தெரிகிறது..! பெரிய நகரங்களில் இருக்கும் டீலக்ஸ் தியேட்டர்களில் 3-டியின் அழகை ரசிக்கலாம்..! சிற்றூர்களில் எப்படியோ தெரியவில்லை..!

சின்னக் குழந்தைகளின் பரவசத்திற்காக பாம்பு கண்ணின் அருகே வருவது, பூக்கள் நம் மீதே விழுவது.. செடி, கொடிகளுக்கிடையே நாம் செல்வது.. வேல் கண்ணைக் குத்த வருவது.. என்று 3-டி எபெக்ட்ஸ் படத்தில் ஆங்காங்கே உள்ளன..! இருந்தாலும் போதவில்லை என்றே தோன்றுகிறது..!


காதலோடு சேர்த்து திரில்லரையும் சேர்த்தால்தான் பெட்ரோலையும், தீப்பெட்டியையும் ஜோடி சேர்த்தது போலாகும் என்பதால் காதல் கதைக்காக அஜய், ஸ்ரீஜித், சனம் மற்றும் திவ்யா நாகேஷ் என்று இரண்டு ஜோடிகள். இரண்டு ஹீரோயின்களும் மாடந்திபுரத்திலேயே வசிக்கிறார்கள். அஜய் தனது ஹீரோயினை பார்க்க சோளக்காட்டு வழியாக நள்ளிரவில் செல்லும்போதுதான் மனித விலங்கை பார்த்து பயப்படுகிறான். இதில் இருந்து துவங்குகிறது படத்தின் வேகம். அந்த விலங்கை காட்டுகின்றவரையில் எப்படித்தான் அது இருக்கும் என்கிற சஸ்பென்ஸை அப்படியே டெப்த் குறையாமல் கொண்டு சென்றிருக்கிறார்கள் இயக்குநர்கள்..!

இருக்கா, இல்லையா என்ற கேள்விக்குறியை கருப்புச் சட்டைக்கார தோழருடன் கூடிய உரையாடலில் அப்படியே தொங்கலில் விட்டுவிட்டு, கலைராணியுடன் பேச வைத்திருப்பது செம ட்விஸ்ட்டு.. கலைராணியின் அறிமுகக் காட்சி சிறந்த இயக்கத்திற்கு ஒரு சான்று. அவர் காட்டும் தழும்பிற்கு பிறகே உருவம் என்ற ஒன்று இருப்பதையே லேசுபாசாக உணர முடிகிறது..!


அந்த சோளக்காட்டுக்குள் பார்த்திபனை பார்த்தவுடன் ஒருவேளை இவர்தானோ என்கிற எண்ணமும் ஏற்படுகிறது. ஆனால் அவருக்கு அதிக வேலையில்லை. அவருடைய கேரக்டர் ஸ்கெட்ச்சும் அவசரத்தனமாக இருப்பதும் படத்தில் ஒரு மைனஸ்..! தன் தாய்க்கு இரண்டாவதாக பிறந்த மனித விலங்கை தீர்த்துக் கட்ட இத்தனை நாட்களாக இவர் ஏன் காத்திருக்க வேண்டும்..? உடனேயே போட்டுத் தள்ளியிருக்கலாமே..? அம்மாவுக்கு வைத்தியம் பார்த்த அந்த ஆங்கில ஆராய்ச்சியாளரை கொலை செய்துவிட்டு ஜெயிலுக்கு போய் திரும்பியிருக்கும் பார்த்திபனின் இந்தத் தாமதம் பல சந்தேகங்களை எழுப்புகிறது. அதுவும் மனித விலங்கின் இருப்பிடத்தைத் தெரிந்து வைத்திருந்தும் அவர் ஏன் அதனைக் கொல்லாமல் விட்டுவிட்டார் என்பதும் சரியாகச் சொல்லப்படவில்லை..! நான் கடவுள் ராஜேந்திரனை பார்த்திபன் கொலை செய்வதும், அதற்கான பழியை மனித விலங்கின் மீது திணிப்பதும் சர்ரென்று நம் மண்டையில் ஏற மறுக்கிறது..!

ராஜேந்திரனின் மகளின் கெஞ்சல், அவளுடைய பார்வை.. ராஜேந்திரனின் பார்வையில் மகளின் கால் மட்டும் தெரிவது, மனித விலங்கை பார்த்துவிட்டு இளசுகள் ஓடும் ஓட்டம்.. திவ்யா நாகேஷின் கிராமத்து அப்பாவித்தனம்.. லைப்ரரியில் அவர்களது காதல் மொழிகள்.. கிராமத்து வீட்டில் திவ்யா அப்பாவியாய் கேட்கும் கேள்வி... மனித விலங்கிற்கு பெளர்ணமியன்று பலியாடு கொடுக்கும் விதம்.. என்னதான் செய்வது என்று பஞ்சாயத்து போட்டு பேசும் யதார்த்தம்..! இறுதிக் காட்சியில் நடக்கும் யுத்தம்.. என்று பல காட்சிகள் இடையிடையே ரசிக்கும்வகையில்தான் இயக்கியிருக்கிறார்கள்.


ஒரு திரில்லர் படத்திற்கேற்றாற்போன்று திரைக்கதை இருந்தும் இறுதிக் காட்சியில் கேரக்டர்களின் வருகைக்கு லாஜிக் இல்லாமல் போனதுதான் மிகப் பெரிய துரதிருஷ்டம். தேசிய பாதுகாப்புப் படையும், காவல்துறையும் பெரும் போராட்டம் நடத்தி மீட்பதுவரையிலும் ஓகேதான். ஆனால் அவர்கள் எப்படி இங்கே நுழைந்தார்கள் என்ற கேள்விக்கு இன்ஸ்பெக்டரிடம் சொல்கின்ற ஒற்றை வரி வசனத்தையே அடையாளம் காட்டுகிறார்கள் இயக்குநர்கள்.  அந்த இணைப்புக் காட்சிகளை எடுத்திருந்தும் சென்சார் எதிர்ப்பு காரணமாக வைக்க முடியவில்லை என்று குறைப்பட்டுக் கொண்டார்கள் இயக்குநர்கள். பரவாயில்லை என்று விட முடியாத காட்சிகள் அவை என்பதால் அதனை மன்னித்து விடுவதே சிறந்தது..!  


பெரும்பாலும் இரவுக் காட்சிகள்தான் என்பதால் ஒளிப்பதிவாளர் சதீஷிற்கு நிறையவே வேலை கொடுத்திருக்கிறார்கள். சோளக்காட்டின் பிரமாண்டத்தையும், பார்த்திபனின் வீட்டையும் காட்டியிருக்கும்விதமும், பலியாட்டை அனுப்பி வைக்கும் காட்சியிலும், கிளைமாக்ஸிலும் கேமிரா பட்டையைக் கிளப்பியுள்ளது.

110 நாட்கள் ஷூட்டிங்கில் மிகுந்த கஷ்டத்திற்கிடையில், கடும் உடல் உழைப்புடன் இதனைச் சாதித்திருக்கிறார்கள். 3 டி படங்களால் ஒரு பெரிய உதவி தயாரிப்பாளர்களுக்கு உண்டு. அது திருட்டு டிவிடியில் இதனை யாரும் காப்பி செய்ய முடியாது என்பதுதான்.. இது ஒன்றுக்காகவே இந்த தொழில் நுட்பத்தைக் கையாளலாமே என்றாலும், திரில்லிங் வகைகளும், குழந்தைகளுக்கான படங்கள் மட்டுமே இதுவரையில் 3-டியில் உலக அளவில் வெளிவந்திருக்கிறது. நம்முடைய மசாலா படங்களுக்கும், குடும்ப படங்களும் இதில் வெளிவந்தால் எப்படியிருக்கும் என்பதை நாம் இனிமேல் சோதித்துதான் பார்க்க வேண்டும்..!

இது போன்ற முயற்சிகளுக்கு ஆதரவளிப்பது தமிழ்த் திரையுலகத்தின் வளர்ச்சிக்கு நாம் கொடுக்கும் உரமாக இருக்கும்.. கை கொடுப்போம்..!  20 comments:

PARAYAN said...

arumai

bandhu said...

spoiler alert கொடுக்கவும்..இல்லையேல் சஸ்பென்சை உடைப்பதை தவிர்க்கவும்..

அகில் பூங்குன்றன் said...

idly vadai intha varusham varumungla illaingla....

உண்மைத்தமிழன் said...

[[[PARAYAN said...

arumai]]]

மிக்க நன்றிகள் ஸார்..!

உண்மைத்தமிழன் said...

[[[bandhu said...

spoiler alert கொடுக்கவும். இல்லையேல் சஸ்பென்சை உடைப்பதை தவிர்க்கவும்..]]]

முடியலியே பிரதர்.. அப்படிச் செய்தால் விமர்சனமும் முழுமையாக இருக்காதே..?

உண்மைத்தமிழன் said...

[[[அகில் பூங்குன்றன் said...

idly vadai intha varusham varumungla illaingla....]]]

ஆஹா.. இட்லிவடைக்கு இப்படியொரு ரசிகரா..? அடுத்த வாரத்துல இருந்து முயல்கிறேன்..!

கேரளாக்காரன் said...

Idly vadakku rasigaraavaa? Koththu parotta, sandwitch,aviyal,kuviyal, wine shop ithellathayum vuda idly vadai thaan taste jaasthi... :D

ராஜ் said...

பாஸ் (உங்கள இப்படி குப்பிடலாமா, இல்லாட்டி சார் போட்டுக்கவா..??)
நல்ல விமர்சனம். உங்க விமர்சனத்தை படிச்சு முடிச்சா முழு படம் பார்த்த எபக்ட் கிடைக்குது. என்ன கேட்டா இந்த மாதிரி படத்தை முழு பரீட்சை லீவுல ரிலீஸ் பண்ணலாம். தப்பான நேரத்துல ரிலீஸ் பண்ண மாதிரி தெரியுது..

ஹாலிவுட்ரசிகன் said...

நல்ல விமர்சனம். இங்கு படம் பார்க்கமுடியாத குறையை உங்கள் விமர்சனம் தீர்த்து வைக்கிறது. நன்றி.

N.H. Narasimma Prasad said...

விமர்சனம் சூப்பர் அண்ணே.

உண்மைத்தமிழன் said...

[[[மௌனகுரு said...

Idly vadakku rasigaraavaa? Koththu parotta, sandwitch, aviyal, kuviyal, wine shop ithellathayum vuda idly vadaithaan taste jaasthi... :D]]]

ஆஹா.. இது ரொம்ப அதிகமா இருக்கே..!!!!

உண்மைத்தமிழன் said...

[[[ராஜ் said...

பாஸ் (உங்கள இப்படி குப்பிடலாமா, இல்லாட்டி சார் போட்டுக்கவா..??)
நல்ல விமர்சனம். உங்க விமர்சனத்தை படிச்சு முடிச்சா முழு படம் பார்த்த எபக்ட் கிடைக்குது. என்ன கேட்டா இந்த மாதிரி படத்தை முழு பரீட்சை லீவுல ரிலீஸ் பண்ணலாம். தப்பான நேரத்துல ரிலீஸ் பண்ண மாதிரி தெரியுது..]]]

ராஜ் ஸார்.. இந்தப் படம் சென்ற ஆண்டு நவம்பரிலேயே ரிலீஸ் செய்ய வேண்டியது.. இதுவே ரொம்ப லேட்டு..! வேறு வழியில்லை. வியாபாரம்ன்னு ஒண்ணு இருக்குல்ல. அதையும் பார்க்கணும்ல்ல..!

உண்மைத்தமிழன் said...

[[[ஹாலிவுட்ரசிகன் said...

நல்ல விமர்சனம். இங்கு படம் பார்க்க முடியாத குறையை உங்கள் விமர்சனம் தீர்த்து வைக்கிறது. நன்றி.]]]

விரைவில் அங்கு வந்துவிடும் என்று இயக்குநர்கள் சொல்கிறார்கள் ஸார்.. அவசியம் பாருங்கள்..!

உண்மைத்தமிழன் said...

[[[N.H.பிரசாத் said...

விமர்சனம் சூப்பர் அண்ணே.]]]

நன்றிகள் பிரசாத் ஸார்..!

சூனிய விகடன் said...

ராதாக்ரிஷ்ணன் பார்த்திபனை 3D யில் பார்க்கனுமா....எதற்கும் கொஞ்சம் யோசித்து முடிவெடுக்கிறேன்

உண்மைத்தமிழன் said...

[[[சூனிய விகடன் said...

ராதாக்ரிஷ்ணன் பார்த்திபனை 3D யில் பார்க்கனுமா....எதற்கும் கொஞ்சம் யோசித்து முடிவெடுக்கிறேன்.]]]

சூனிய விகடனாரே.. என்னாச்சு கொஞ்ச நாளா பார்க்கவே முடியலை..? பார்த்திபன் மேல இவ்ளோ பாசமா..?

Anonymous said...

படத்தின் விமர்சனங்கள் கொஞ்சம் பாஸிடிவ்வாகவே இருக்கின்றன. அடுத்தவாரம்தான் பாக்கணும்.தியேட்டரில் ஓடணும்.

Anonymous said...

என் வலையில்;

மாப்பிள்ளை - நாட்டுப்புற பாலியல் கதை (18+)

மூணுஷோவும் உன் கற்பனைகள் - சினிமா விமர்சனம்

aotspr said...

விமர்சனத்திற்கு நன்றி...


"நன்றி,
கண்ணன்
http://www.tamilcomedyworld.com"

Unknown said...

Just Before watched the movie in Sathyam... A very Good Attempt.... Very interesting story flow is the Big plus of this movie. Songs are very Big minus of this movie. 3D is another plus.. But comparing to the Hollywood standard, watching movie experience is pain full,, Too much 3D effects. lot of powerful lights very near to our eye... too much of fast moving objects very near to our eye. So its results headache and pain for me.. i dont know these kind of movies needs any health measure before releasing the movies... Anyway.. This is first attempt.. Only negatives are songs and too much of "near to eye 3D effects". Verdict : Two thumps up.. Please encourage this movie.. then only more standard movies will come after this... My rating : 3.5/5


@unmaithamizhan : Too much of spoilers in ur review... Before watching ur movie, i read ur review.. While watching movie i realized, reading ur review is very big mistake. inimey kandippa film paakkama unga review padikka maten... Sir, Mokka padam na scene by scene explain pannidunga... nalla film na suspense open pannama review pannunga... mudiyalana, nalla film ku review panradha vittudunga... Because... இது போன்ற முயற்சிகளுக்கு ஆதரவளிப்பது தமிழ்த் திரையுலகத்தின் வளர்ச்சிக்கு நாம் கொடுக்கும் உரமாக இருக்கும்.. கை கொடுப்போம்..!

unga line dhan.. Please think.. Sorry if my words hurts u...