போனால் போகட்டும் போடா..!

21-02-2012

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!








ஆஸ்திரேலியாவில் நடைபெறும் முத்தரப்பு கிரிக்கெட் போட்டியில் இந்திய சோப்ளாங்கிகள் மீண்டும் தோத்துட்டாங்களாமே..? 

இந்த நேரத்தில் எப்பொழுதோ, ஏதோ ஒரு பத்திரிகையில் நான் படித்த “போனால் போகட்டும் போடா” ஸ்டைல் பாடல் நினைவுக்கு வந்தது..!

படித்துதான் பாருங்களேன்..!


போனால் போகட்டும் போடா..
இந்த மேட்ச்சினில் ஸ்டெடியாய் 
அடித்தவர் யாரடா..?
போனால் போகட்டும் போடா..!
போனால்.. போகட்டும் போடா..!


வந்தது பந்து; போனது ஸ்டம்பு 
அவுட்டானதேதான் தெரியாது..!
வந்தவரெல்லாம் தங்கிவிட்டால்
இந்த இன்னிங்ஸ் முடிவது எப்போது..?


நமக்கும் நேரே அம்பயர்டா..!
அவர் எல்லாந் தெரிந்த தலைவனடா..!
இந்த பேட்ஸ்மேனை ஆட்டும் கலைஞனடா..!
போனால் போகட்டும் போ..போ..போ..போடா..!


போனால் போகட்டும் போடா..
இந்த மேட்ச்சினில் ஸ்டெடியாய் 
ஜெயித்தவர் யாரடா..?
போனால் போகட்டும் போடா..


சிக்ஸரும், பவுண்டரியும் லீக்கினில் அடித்தேன்..
இங்கே ஒரு ரன் எடுத்தேனா..?
எடுத்திருந்தால், தலைகுனிந்தே நானும் 
பெவிலியனுக்குள் நுழைவேனா..?


கிரிக்கெட் என்பது வியாபாரம் - இது 
போர்டுக்கு போனால் ஜெயிக்காது - ஆட்டம்
கோட்டை விட்டால் திரும்பாது..! 
போனால் போகட்டும் போடா..!


போனால் போகட்டும் போடா..
இந்த மேட்ச்சினில் ஸ்டெடியாய் 
அடித்தவர் யாரடா..?

குறிப்பு : இதில் இன்னொரு சரணமும் உண்டு. மூளையை எப்படி கசக்கிப் பார்த்தும் அது மட்டும் நினைவுக்கு வர மறுக்கிறது. தெரிந்தவர்கள் சொன்னால் பெரிதும் மகிழ்வேன்..!


19 comments:

RAVI said...

மூளைய ரொம்ப கசக்கிப்புட வேண்டாமய்யா :)))

ஹாலிவுட்ரசிகன் said...

பிழிந்து பார்த்து ஏதாவது வந்தா எழுதிவிடுங்க. தெரிந்து கொள்கிறேன்.

Unknown said...

கிரிக்கெட்டை ஆதரித்து வந்த சஹாரா நிறுவனமே கைகழுவி விட்டு, ஹாக்கியுடன் கரங்கோர்த்துவிட்டது. சமாதானப்பேச்சுக்கள் எடுபடவில்லை. மக்கள் கிரிக்கெட் மோகத்திலிருந்து எப்பொழுது வெளியெறுவார்களோ என்று என்ணினால், உண்மைத் தமிழனுமா?

இ20-02-2012 தினமணி தலையங்கத்தின் வலது புறத்தில் “நியூட்ரினோ’ என்றொரு கட்டுரை வந்துள்ளது. சூரியன் மற்றும் இரவில் கண் சிமிட்டும் தாரகைகளிடமிருந்து வெளிப்படும் அணுத் துகளை அப்படிக் குறிப்பிடுகின்றனர் அறிவியல் வல்லுநர்கள். அது குறித்த ஐந்தாவது ஆய்வுக்கூடம் தேனி மாவட்டம், தேவாரம், பொட்டிப்புரத்தில் உள்ள மே.தொ.மலை உச்சியில் அமைக்கப்போகின்றனர். பசுமை மாறாக் காடுகள் பலிகடாவாகப் போகின்றன. மலைப் பாறைகள் பொடிப் பொடியாக்கப்படும். 120 ஆண்டுகள் இயங்கும் வகையில் அமைக்கப்படுமாம். இயற்கையைச் சீரழித்து இந்த ஆய்வுக்கூடம் அவசியம்தானா? ( அப்பகுதியில் காணாமற்போன ஆற்றிற்காகக் கவலைப்படும் கவிஞருக்கு இது தெரியாதா? அங்கிருந்து வந்து சென்னையில் தடம் பதித்துவிட்ட திறைத்துறைக் கலைஞர்களும் அறியாமலா இருப்பார்கள். செங்கொடி அன்பர்களும் கவனிக்கவில்லையே ) இயற்கை மற்றும் சுர்றுப்புற ஆர்வலர்களும் கண்டுகொளளவில்லை என்று ஏங்குகின்றார், கட்டுரையாளர், ஆர்.ஜி.ஜெகதீஷ். உண்மைதமிழன் இன்று இரவு உண்மைகளை வெளிச்சம் போட்டுக் காட்டினால், கூடங்குளம் போல் தாமதிக்காமல் துவக்கத்திலேயே தடுத்து நிறுத்த முடியும். தமிழகத்திற்கு நல்லது. வேறு அடர்ந்த மலைத் தொடர்களா இல்லை இந்தியாவில்? இன்னுமொரு செய்தி.பாரதி பாடிய தென்பெண்ணை ஆற்றின் பிறப்பிடம், கஎநாடகம். கிருஷ்ணகிரியின் ஜீவநதி என்றும் கூறலாம். சுமார் 120 பகுதிகளுக்கு , தமிழகத்திற்கு வருகின்ற ஆற்று நீரைத் திருப்பி விடப்போகின்றதாம் கர்நாடகம் அவர்கள் திட்டம் நிறைவேற்றப் பட்டால் கிருஷ்ணகிரி மாவட்டமே பாலைவனமாகிவிடும் . உண்மைகளை உண்மைத் தமிழன் உரக்கச் சொல்லட்டும். உணரட்டும் வலைப்பூ அன்பர்கள் பரவட்டும் திக்கெட்டும். உணர்வு பெறட்டும், தமிழ் மக்கள். நன்றியுடன்,

சூனிய விகடன் said...

இதில் கவலைப்பட ஏதுமில்லை.....இன்னும் ஒரு ஆறு மாசம் கழித்து வங்க தேச அணியோ இல்லை ஜிம்பாப்வே அணியோ நமது நாட்டில் சுற்றுப்பயணம் செய்யும் ஆறு டெஸ்ட் மேட்சில் நான்கு டிரா ஆகும்....இந்திய அணி இன்னிங்க்ஸ் ஸ்கோர் 6 விக்கெட் இழப்புக்கு 1036 ரன்கள் டிக்ளேர் என்று வரும். நமது கண்மணிகள் சென்சுரிகளாக வெளுத்து வாங்குவார்கள்...குறிப்பாக நமது பெரியவர் சச்சின் அய்யா அவர்கள் தனது
நூஊஊஊஊராவது செஞ்சுரியை அடித்து உங்களை மகிழ்விப்பார்..அம்பயர்களைத் தவிர எல்லோருமே செஞ்சுரி அடிப்பார்கள்....நாடெங்கும் பேட்டும் ஸ்டம்பும் ஓடும் ... சரத் பவார் கூட கன்னத்தைத் தடவி சந்தோஷப்படுவார்
அதுவரை பொறுத்திருங்கள்

சூனிய விகடன் said...

உங்களின் மூளை கசங்குவதைப் பார்த்து எனக்குள் இருந்த கவிஞன் எழுந்து ஒரு சரணத்தைச் சொல்லி விட்டு தூங்கி விட்டான்.....

அது ----------

எங்களின் சரக்கு தெரிந்த பின்னாலும் ஏம்ப்பா இப்படித் தேம்புறீங்க...
புள்ளை குட்டிகளப் படிக்க வைக்காம பொலம்பி தெருவில திரியறீங்க..

கிரிக்கெட் என்பது மாய்மாலம்
அதில் புலம்பல் என்பது நீர்க்கோலம்
கடைசியில் அனைத்தும் கந்தரகோலம்

போனால் போகட்டும் போங்க சார்
போனால் போகட்டும் போங்க
( உண்மைத்தமிழன் ) சார்

ராஜ் said...

விடுங்க பாஸ்,
BCCI Pvt Ltd கம்பெனி தானே தோத்துச்சு... ஏதோ இந்த சீனா கூட போர்ல தோத்த மாதிரி பீல் பன்னுறேங்க.. விடுங்க பாஸ்...

உண்மைத்தமிழன் said...

[[[RAVI said...

மூளைய ரொம்ப கசக்கிப்புட வேண்டாமய்யா :)))]]]

என்ன செஞ்சும் ஞாபகத்துக்கு வரலியே..?

உண்மைத்தமிழன் said...

[[[ஹாலிவுட்ரசிகன் said...

பிழிந்து பார்த்து ஏதாவது வந்தா எழுதி விடுங்க. தெரிந்து கொள்கிறேன்.]]]

ம்ஹுக்கும்.. ஹெல்ப் ஏதாவது கிடைக்கும்னு பார்த்தா..!??

உண்மைத்தமிழன் said...

[[[சீராசை சேதுபாலா said...

கிரிக்கெட்டை ஆதரித்து வந்த சஹாரா நிறுவனமே கை கழுவிவிட்டு, ஹாக்கியுடன் கரங்கோர்த்துவிட்டது. சமாதானப் பேச்சுக்கள் எடுபடவில்லை. மக்கள் கிரிக்கெட் மோகத்திலிருந்து எப்பொழுது வெளியெறுவார்களோ என்று என்ணினால், உண்மைத் தமிழனுமா...?]]]

நானும் ஆதி காலத்தில் கிரிக்கெட் பைத்தியமாக இருந்தவன்தான். இப்போது இல்லை..!

[[[20-02-2012 தினமணி தலையங்கத்தின் வலது புறத்தில் “நியூட்ரினோ’ என்றொரு கட்டுரை வந்துள்ளது. சூரியன் மற்றும் இரவில் கண் சிமிட்டும் தாரகைகளிடமிருந்து வெளிப்படும் அணுத் துகளை அப்படிக் குறிப்பிடுகின்றனர் அறிவியல் வல்லுநர்கள். அது குறித்த ஐந்தாவது ஆய்வுக் கூடம் தேனி மாவட்டம், தேவாரம், பொட்டிப்புரத்தில் உள்ள மே.தொ. மலை உச்சியில் அமைக்கப் போகின்றனர். பசுமை மாறாக் காடுகள் பலிகடாவாகப் போகின்றன. மலைப் பாறைகள் பொடிப் பொடியாக்கப்படும். 120 ஆண்டுகள் இயங்கும் வகையில் அமைக்கப்படுமாம். இயற்கையைச் சீரழித்து இந்த ஆய்வுக்கூடம் அவசியம்தானா? (அப்பகுதியில் காணாமற்போன ஆற்றிற்காகக் கவலைப்படும் கவிஞருக்கு இது தெரியாதா? அங்கிருந்து வந்து சென்னையில் தடம் பதித்துவிட்ட திறைத்துறைக் கலைஞர்களும் அறியாமலா இருப்பார்கள். செங்கொடி அன்பர்களும் கவனிக்கவில்லையே ) இயற்கை மற்றும் சுற்றுப் புற ஆர்வலர்களும் கண்டு கொளளவில்லை என்று ஏங்குகின்றார், கட்டுரையாளர், ஆர்.ஜி.ஜெகதீஷ்.

உண்மைதமிழன் இன்று இரவு உண்மைகளை வெளிச்சம் போட்டுக் காட்டினால், கூடங்குளம் போல் தாமதிக்காமல் துவக்கத்திலேயே தடுத்து நிறுத்த முடியும். தமிழகத்திற்கு நல்லது. வேறு அடர்ந்த மலைத் தொடர்களா இல்லை இந்தியாவில்?

இன்னுமொரு செய்தி.பாரதி பாடிய தென்பெண்ணை ஆற்றின் பிறப்பிடம், கஎநாடகம். கிருஷ்ணகிரியின் ஜீவநதி என்றும் கூறலாம். சுமார் 120 பகுதிகளுக்கு, தமிழகத்திற்கு வருகின்ற ஆற்று நீரைத் திருப்பி விடப் போகின்றதாம் கர்நாடகம் அவர்கள் திட்டம் நிறைவேற்றப்பட்டால் கிருஷ்ணகிரி மாவட்டமே பாலைவனமாகிவிடும். உண்மைகளை உண்மைத் தமிழன் உரக்கச் சொல்லட்டும். உணரட்டும் வலைப்பூ அன்பர்கள் பரவட்டும் திக்கெட்டும். உணர்வு பெறட்டும், தமிழ் மக்கள். நன்றியுடன்]]]

செய்திகளைக் குறிப்பி்ட்டமைக்கு மிக்க நன்றிகள் ஸார்.. அவசியம் படிக்கிறேன்..!

உண்மைத்தமிழன் said...

[[[சூனிய விகடன் said...

இதில் கவலைப்பட ஏதுமில்லை. இன்னும் ஒரு ஆறு மாசம் கழித்து வங்க தேச அணியோ இல்லை ஜிம்பாப்வே அணியோ நமது நாட்டில் சுற்றுப்பயணம் செய்யும் ஆறு டெஸ்ட் மேட்சில் நான்கு டிரா ஆகும். இந்திய அணி இன்னிங்க்ஸ் ஸ்கோர் 6 விக்கெட் இழப்புக்கு 1036 ரன்கள் டிக்ளேர் என்று வரும். நமது கண்மணிகள் சென்சுரிகளாக வெளுத்து வாங்குவார்கள். குறிப்பாக நமது பெரியவர் சச்சின் அய்யா அவர்கள் தனது நூஊஊஊஊராவது செஞ்சுரியை அடித்து உங்களை மகிழ்விப்பார். அம்பயர்களைத் தவிர எல்லோருமே செஞ்சுரி அடிப்பார்கள். நாடெங்கும் பேட்டும் ஸ்டம்பும் ஓடும். சரத்பவார்கூட கன்னத்தைத் தடவி சந்தோஷப்படுவார்
அதுவரை பொறுத்திருங்கள்.]]]

ஓ.. இளிச்சவாயர்கள் சிக்கினால்தான் நம்மாளுகள் ஜெயிப்பார்களா..?

உண்மைத்தமிழன் said...

[[[சூனிய விகடன் said...

இதில் கவலைப்பட ஏதுமில்லை. இன்னும் ஒரு ஆறு மாசம் கழித்து வங்க தேச அணியோ இல்லை ஜிம்பாப்வே அணியோ நமது நாட்டில் சுற்றுப்பயணம் செய்யும் ஆறு டெஸ்ட் மேட்சில் நான்கு டிரா ஆகும். இந்திய அணி இன்னிங்க்ஸ் ஸ்கோர் 6 விக்கெட் இழப்புக்கு 1036 ரன்கள் டிக்ளேர் என்று வரும். நமது கண்மணிகள் சென்சுரிகளாக வெளுத்து வாங்குவார்கள். குறிப்பாக நமது பெரியவர் சச்சின் அய்யா அவர்கள் தனது நூஊஊஊஊராவது செஞ்சுரியை அடித்து உங்களை மகிழ்விப்பார். அம்பயர்களைத் தவிர எல்லோருமே செஞ்சுரி அடிப்பார்கள். நாடெங்கும் பேட்டும் ஸ்டம்பும் ஓடும். சரத்பவார்கூட கன்னத்தைத் தடவி சந்தோஷப்படுவார்
அதுவரை பொறுத்திருங்கள்.]]]

ஓ.. இளிச்சவாயர்கள் சிக்கினால்தான் நம்மாளுகள் ஜெயிப்பார்களா..?

உண்மைத்தமிழன் said...

[[[சூனிய விகடன் said...

உங்களின் மூளை கசங்குவதைப் பார்த்து எனக்குள் இருந்த கவிஞன் எழுந்து ஒரு சரணத்தைச் சொல்லி விட்டு தூங்கி விட்டான்.....

அது ----------

எங்களின் சரக்கு தெரிந்த பின்னாலும் ஏம்ப்பா இப்படித் தேம்புறீங்க...
புள்ளை குட்டிகளப் படிக்க வைக்காம பொலம்பி தெருவில திரியறீங்க..

கிரிக்கெட் என்பது மாய்மாலம்
அதில் புலம்பல் என்பது நீர்க்கோலம்
கடைசியில் அனைத்தும் கந்தரகோலம்

போனால் போகட்டும் போங்க சார்
போனால் போகட்டும் போங்க
(உண்மைத்தமிழன்) சார்]]]

நன்று.. அருமை.. நன்றி சூனியக்காரன் ஸார்..!

உண்மைத்தமிழன் said...

[[[ராஜ் said...

விடுங்க பாஸ், BCCI Pvt Ltd கம்பெனிதானே தோத்துச்சு... ஏதோ இந்த சீனாகூட போர்ல தோத்த மாதிரி பீல் பன்னுறேங்க.. விடுங்க பாஸ்...]]]

இந்த பிசிசிஐ ஆட்கள்கிட்டேயிருந்து நம்ம வீரர்களை எப்படி விடுவிப்பது..? எல்லா திருடனுங்களும் ஒண்ணா சேர்ந்திருக்காங்களே..?

Marc said...

அருமைப்பதிவு வாழ்த்துகள்

aotspr said...

நம்பிக்கை தான் வாழ்க்க சார்........


"நன்றி,
கண்ணன்
http://www.tamilcomedyworld.com"

Cinema Virumbi said...

உண்மைத் தமிழன் சார்,

அந்த சரணம் இதோ:

இரவல் கொடுத்தவன் கேட்கின்றான்; அதை இல்லையென்றால் அவன் விடுவானா?
உறவைச் சொல்லி அழுவதனாலே உயிரை மீண்டும் தருவானா ?
கூக்குரலாலே கிடைக்காது; அது கோர்ட்டுக்குப் போனால் ஜெயிக்காது!
அந்தக் கோட்டைக்குள் நுழைந்தால் திரும்பாது!
போனால் போகாடும் போடா!

நன்றி!
சினிமா விரும்பி
http://cinemavirumbi.blogspot.com

உண்மைத்தமிழன் said...

[[[DhanaSekaran .S said...

அருமைப் பதிவு வாழ்த்துகள்.]]]

நன்றி தனசேகரன்..!

உண்மைத்தமிழன் said...

[[[Kannan said...

நம்பிக்கைதான் வாழ்க்க சார்.]]]

என்ன பேரு மாத்திட்டீங்களா கண்ணன்? "நன்றி கண்ணன்"ன்னு நீங்களே போட்டுக்கிட்டீங்க.. அப்போ நான் என்ன பதில் போடறது..?

உண்மைத்தமிழன் said...

[[[Cinema Virumbi said...
உண்மைத் தமிழன் சார்,

அந்த சரணம் இதோ:

இரவல் கொடுத்தவன் கேட்கின்றான்; அதை இல்லையென்றால் அவன் விடுவானா?
உறவைச் சொல்லி அழுவதனாலே உயிரை மீண்டும் தருவானா ?
கூக்குரலாலே கிடைக்காது; அது கோர்ட்டுக்குப் போனால் ஜெயிக்காது!
அந்தக் கோட்டைக்குள் நுழைந்தால் திரும்பாது!
போனால் போகாடும் போடா!

நன்றி!
சினிமா விரும்பி
http://cinemavirumbi.blogspot.com]]]

அண்ணே.. நான் இதைச் சொல்லலைண்ணே.. கிரிக்கெட் பாடல்லேயே இன்னொரு சரணம் இருந்தது. அது ஞாபகத்துக்கு வர மாட்டேங்குது..!