இட்லி-தோசை-பொங்கல்-வடை-சட்னி-சாம்பார்-23-07-2011

23-07-2011

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!



நன்றியோ நன்றி..!

நினைக்கும்பொழுதே நெஞ்சடைக்கிறது. கண்கள் குளமாகின்றன..! விரல்கள் தட்டச்சு செய்ய மறுக்கின்றன.. என்ன எழுதுவது என்பதே தெரியாமல் திகைத்துப் போயுள்ளேன்..! எல்லாம் உங்களால்தான்..

கடந்த 17-ம் தேதியன்று எனது வலைத்தளத்தில் 1000-மாவது நண்பராக திரு.ரபீக் என்பவர் இணைந்திருக்கிறார். தற்போது அது 1005-ஆக உயர்ந்திருக்கிறது.. இதற்காக என்ன தவம் செய்திருக்கிறேன் நான்..? கண்ணீர் சொட்டுச் சொட்டாக வடிகிறது. என்னையும் ஒரு பதிவராக நினைத்து இத்தனை பேர் பின் தொடர்கிறார்கள் என்றால், நானும் ஏதோ 4 பேருக்குப் பிடிப்பதுபோல் எழுதுகிறேன் என்று எனக்கு இப்போதுதான் தன்னம்பிக்கை பிறந்துள்ளது..!

எழுத வந்து 4 ஆண்டுகள் கழித்துதான் இந்த 1000 பேர் இணைந்திருக்கிறார்கள் என்பதே வலையுலகைப் பொறுத்தவரையில் கேவலமானதுதான். ஆனாலும் அதை நாமே  வெளியில் சொல்லிக் கொண்டால், கேவலத்தில் பாதி குறைந்துவிடும் என்பதால் வெட்கமில்லாமல் நானே அதனை இங்கே சொல்லி விடுகிறேன்..!

எனக்குப் பின்பு எழுத வந்தவர்களெல்லாம் 1500-ஐ தாண்டி மின்னல் வேகத்தில் வண்டி ஓட்டிக் கொண்டிருக்க.. நான் மட்டும் கொட்டாம்பட்டி ரோட்டில் ஓடும் கவர்ன்மெண்ட் பஸ் மாதிரி இழுத்துக்கோ, புடிச்சுக்கோன்னு ஓடிக் கொண்டிருப்பதை நினைத்தால் ஒரு பாட்டில் நுவக்ரானை குடிக்கலாம் என்றுதான் தோன்றுகிறது..! ஆனால் தைரியம் இல்லாத்தால் அதனைச் செய்யவில்லை..

இதற்காக யார் மேலேயும் பொறாமைப்படக் கூடாது.. வருத்தப்படக் கூடாது.. என்னதான் எண்ணெய்யை தேய்ச்சுக்கிட்டு மண்ணுல புரண்டு எந்திரிச்சாலும் ஒட்டுற மண்ணுதான் ஒட்டும்னு சொல்வாங்க. நமக்கு இவ்ளோதான்னு நினைச்சுக்க வேண்டியதுதான்..! இருக்கிறவரைக்கும் வண்டி இப்படியே ஓடட்டும்..! பார்த்துக்குவோம்.

நன்றி மக்களே..!


பையனூர் வீடு கட்டும் திட்டம் அம்போ..!

சென்னைக்கு தொலைவில் இருந்தாலும் பரவாயில்லை. கூடியவிரைவில் கிரேட்டர் மெட்ராஸ் சிட்டி வந்து அதுவும் நகரமாகிவிடும். மிக எளிதாக ஒரு வீட்டுக்கு சொந்தக்காரர்களாகிவிடலாம் என்ற கனவில் இருந்த சினிமா தொழிலாளர்களின் நினைப்பில் ஒரு டன் மண்ணையள்ளி போட்டு மூடிவிட்டார்கள்.

பையனூர் வீடு கட்டும் திட்டம் பணால் என்று உறுதியாகச் சொல்லிவிட்டார்கள். வீடு கேட்டு பணம் கட்டியவர்களெல்லாம் பணத்தை திருப்பிக் கொடுங்கள் என்று அனைத்து சங்கங்களிலும் கியூவில் நின்று மனு கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

இனி சினிமா தொழிலாளர்களுக்கு சொந்த வீட்டிற்கான கனவு கானல் நீர்தான்.. இனிமேற்கொண்டு எந்த அரசு வந்தாலும் விலைக்குக் கூட இடத்தை ஒதுக்கித் தர மாட்டார்கள் என்பது உறுதியாகிவிட்டது. காரணம், கருணாநிதிக்கு திரையுலகப் பிரம்மாக்களிடம் இத்தனை ஆதரவிருந்தும் வாக்களித்த மக்கள் மருந்துக்குக்கூட அதனையொரு பொருட்டாக கருதவில்லையே..?

பெரிய திரை, சின்னத்திரை என்று அனைத்துச் சங்கங்களிலும் நிர்வாகிகள் மட்டத்தில் ஏற்பட்ட பூசலும் இதற்கு ஒரு காரணம். பெப்ஸி தலைவராக இருந்த வி.சி.குகநாதன் எனக்கேன் வம்பு என்று ஒதுங்கிக் கொள்ள.. அ.தி.மு.க. கட்சிக்காரரான பெப்ஸியின் செயலாளர் சிவா, மேற்கொண்டு இதனை எந்தப் பக்கம் நகர்த்துவது என்பதே தெரியாமல் இருக்கிறார்.

இதில் அனைவரையும் முந்திக் கொண்டு நல்ல பெயர் எடுக்க நினைத்த நடிகர் சங்கத்தின் செயலாளர் ராதாரவி ஜெயல்லிதாவைச் சந்தித்தபோது, “அந்த இடம் உங்களுக்கு வேண்டாம். விட்ருங்க..” என்று மண்ணை வாரி இறைத்து மூடு விழா நடத்திவிட்டாராம்.

குத்தகை நிலமாகையால் வங்கிக் கடன்கள் கிடைக்காமல் இருந்த சூழலில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய வங்கியான ஹட்கோவே 350 கோடி ரூபாய் நிதியுதவி அளிக்க முன் வந்து அதுவும் கருணாநிதி முன்பாக கையெழுத்தாகியிருந்த்து. ஆனால் இப்போது சிக்கன நடவடிக்கையாக அதில் கை வைத்துவிட்டாராம் ஜெயல்லிதா.

பெப்ஸியில் இருந்தும், தயாரிப்பாளர்கள் சங்கத்தில் இருந்தும் கேட்டதற்கு “இன்னும் நிறைய பார்மாலிட்டீஸ் இருக்கே. எல்லாத்துலேயும் கையெழுத்து வாங்கிட்டு வாங்க. பார்ப்போம்..” என்று பட்டும், படாமலும் சொல்லி வருகிறார்கள் அதிகாரிகள்.

ஆனால் அதற்குள்ள 900 வீடுகள் கட்டுவதாகச் சொல்லியிருந்த சின்னத்திரை யூனியனில், வீடு கேட்டிருந்த சின்னத்திரை நடிகர் சங்கத்தினர் 270 பேரும் இப்போது “வீடு வேண்டாம். கொடுத்த பணத்தைத் திருப்பிக் கொடுங்க..” என்று கேட்டு மனு கொடுத்துவிட.. சின்னத்திரை யூனியனும் குப்புறப்படுத்துவிட்டது..!

இந்த லட்சணத்தில் பையனூரில் கலைஞர் நகரத்தில் 2 கோடி ரூபாய் செலவில் கலைஞர் ஸ்டூடியோ என்ற பெயரில் ஒரு இரண்டு ப்ளோர்கள் கொண்ட ஸ்டூடியோவை கட்டி வைத்துவிட்டார்கள். அதனை பர்ஸ்ட் காப்பி அடிப்படையில்(சினிமா பாணியில்) ஒரு தனியார் நிறுவனம் கட்டிக் கொடுத்த்தாம். இப்போது அதற்கு யார் பணம் கொடுப்பது? பெப்ஸியா..? அல்லது அனைத்து சங்கங்களுமா..? அந்த இடத்திற்கு நிரந்தர பட்டா கிடைக்குமா..? என்றெல்லாம் பஜ்ஜி, சொஜ்ஜி சாப்பிட்டுக் கொண்டே விவாதித்துக் கொண்டிருக்கிறார்கள் சங்கங்களின் தலைவர்கள்..!


போராட்டம்ன்னா இப்படீல்ல இருக்கணும்..!

சிலி நாட்டில் கடந்த வாரம் ஒரு வித்தியாசமான போராட்டம் நடந்திருக்கிறது. அந்த நாட்டின் கல்வித் துறையில் மாற்றம் கொண்டு வர வேண்டும். கல்வித் துறையை மேம்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையுடன் மாணவர்கள், ஆசிரியர்கள், பேராசிரியர்கள் என்று பலரும் தெருவில் இறங்கிவிட்டார்கள்.

வழக்கமாக கோஷம் போட்டு, பதாகை ஏந்தியெல்லாம் செய்தால் இது நாடு முழுவதும் ரீச் ஆகாது என்று நினைத்தார்களோ என்னவோ, முத்தமிடும் போராட்டத்தை கோலாகலமாக நடத்தியிருக்கிறார்கள்.

போராட்டத்தில் கலந்து கொண்ட ஆண்களும், பெண்களுமாக அன்றைய நேரத்தில் மட்டும் காதலர்களாக உருமாறி முத்தமிட்டுக் கொண்டு கல்வித்துறைக்கு எதிர்ப்புத் தெரிவித்திருக்கிறார்களாம். ரொமாண்ட்டிக்காக இருந்த இந்தப் போராட்டம் கடைசியில் கை கலப்பில்தான் போய் முடிந்திருக்கிறது. அது வேறு கதை..!



ம்.. நம்ம ஊர்லேயும்தான் இருக்காங்களே..! நம்மளால முடிஞ்சது.. உண்ணாவிரதம்ன்னா உண்ணும்விரதம்.. அவ்ளோதான்..!


எந்தப் படத்தின் பாடல் நீக்கப்பட்டது..?

சென்ற இட்லி-வடை பதிவில் “கமல்ஹாசனின் ஒரு திரைப்படத்தின் பாடல் காட்சி முழுவதும் படமாக்கப்பட்டு, பின்பு அதில் நடித்த மூத்த நடிகையின் வேண்டுகோளுக்கிணங்க மீண்டும் கடைசி நேரத்தில் வேறு விதமாகப் படம் பிடிக்கப்பட்டு படத்தில் இணைக்கப்பட்டது. அது என்ன படம் என்று  தெரிந்தால் சொல்லுங்கள்..” என்று எழுதியிருந்தேன்.

சத்தியமாகச் சொல்கிறேன். பதிவுலகில் யாரும் இது பற்றி கேட்கவில்லை. ஆனால் பேஸ்புக்கிலும், டிவிட்டரிலும் பலரும் “என்ன படம்? என்ன பாட்டு?” என்று கேட்டு தனி மடல்களை அனுப்பிக் குவித்துவிட்டார்கள். அவர்களுக்கு எனது நன்றி..!

அந்தப் படம் 'மைக்கேல் மதன காமராஜன்'. ரூபிணியுடன், மனோரமாவும் சேர்ந்து ஆடும் அந்த ரொமாண்டிக் பாடல் காட்சிதான் அது. முதல் தடவை ஷூட் செய்தபோது கலைஞானி, ரூபிணியுடன் புகுந்து விளையாடிவிட்டாராம்.. அப்போது எதுவும் சொல்லாமல் உடன் நடித்து முடித்த மனோரமா, சில தினங்கள் கழித்து “அந்தப் பாட்டு சீன் ரொம்ப ஓவரா இருக்கு. உனக்கொண்ணும் இல்லை. என் பேர் கெட்டுப் போயிரும் போலிருக்கு தம்பி..” என்று கமலிடம் லேசாக முனங்கினாராம்.. அதற்காகவே மீண்டும் இன்னொரு முறை அந்தப் பாடல் காட்சியைப் படமாக்கியிருக்கிறார் கமல்.



படத்தில் இப்போது இருப்பதே இப்படி பட்டையைக் கிளப்புதே.. இதுக்கும் மேலே என்றால், நம்ம கமல் அண்ணன் என்ன பண்ணியிருப்பாரு..? யோசிங்க..!


தி.மு.க. பொதுக்குழு

கோவையில் நாளை கூடவுள்ள தி.மு.க. பொதுக்குழு பலத்த சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. தி.மு.க.வின் அடுத்த்த் தலைவர் யார் என்பதை கருணாநிதி சொல்லியாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார். இனியும் தாமதிக்க முடியாது என்று ஸ்டாலின் பிடிவாதத்தில் இருக்கிறாராம். இதைவிட பிடிவாதமாக அழகிரி அண்ணாத்தேயும் முரண்டு பிடிக்கிறாராம்..!

பத்திரிகைகளில் வருகின்ற தகவல்களும், பத்திரிகையாளர்கள் மூலமாக வருகின்ற செய்திகளும் தி.மு.க.வின் அடுத்த பிளவுக்கு அச்சாரம் இந்தப் பொதுக்குழுதான் என்று உறுதியாக எண்ண வைக்கிறது..!

சில ரவுடித்தனமான மாவட்டச் செயலாளர்களும், அழகிரியின் ஆதரவாளர்களும்தான் தி.மு.க.வின் தோல்விக்குக் காரணம் என்று ஸ்டாலின் நினைக்கிறாராம்.. அதனால்தான் அவர்களுக்கு செக் வைக்கும் அளவுக்கு மாவட்டச் செயலாளர் பதவிகளையே ஒழித்துக் கட்டிவிட்டு, நாடாளுமன்ற தொகுதி பொறுப்பாளர் பதவியைக் கொண்டு வரலாமா என்று கேட்டுள்ளார்கள்.

ஆனால் இது நடக்காது என்றே நான் நினைக்கிறேன். தி.மு.க.வின் தற்போதைய மாவட்டச் செயலாளர்கள் அவ்வளவு சீக்கிரம் இதற்கு இணங்க மாட்டார்கள். ஏனெனில் அடுத்தடுத்து சிறைச்சாலைகளுக்கு பாதயாத்திரை செல்லவிருப்பது மாவட்டச் செயலாளர்கள்தான். கட்சிப் பதவி இருந்தால்தான் சிறைக்குள் நுழையும்போதே ஜட்டியுடன் நின்று தப்பிக்கலாம். இல்லாவிட்டால் அதையும் கழட்டித்தான் காட்ட வேண்டி வரும்..! அவரவர்க்கு அவரவர் பிரச்சினை..!

ஸ்டாலின் இன்றைக்கு இவ்வளவு வருத்தப்படுகிறாரே..
ரவுடித்தனத்தில் அயோத்திக்குப்பம் வீரமணியையும் மிஞ்சிய ஈரோடு மாவட்டச் செயலாளர் ராஜாவை அவர்தானே கட்சியில் சேர்த்து, தேர்தலில் நிற்க சீட்டும் கொடுத்தார். குறுநில மன்னர்களாக பிராந்தியத்தில் சர்வாதிகார ஆட்சி நடத்திக் கொண்டிருந்த நேரு, பொன்முடி, பன்னீர்செல்வம் என்று அனைவரையும் இவர்தானே தட்டிக் கொடுத்தார். அப்போது தெரியவில்லையாக்கும் தவறு எங்கே இருக்கிறது என்று..?

இதனூடேயே ஸ்டாலின் இந்த பொதுக்குழுவிலேயே தனக்குப் பட்டாபிஷேகம் நடத்தும்படி கேட்டுள்ளாராம். அது மட்டும் நடந்தால் கலகம் நடப்பது உறுதி. மதுரை அண்ணன் அதனாலேயே தனது தென் மண்டல ஆதரவாளர்களை பொதுக்குழுவுக்கு போக வேண்டாம் என்று தடுத்திருக்கிறார். இதனாலேயே கிச்சன் கேபினட் மூலமாக அழகிரியைச் சமாதானம் செய்து வைத்திருக்கிறார்களாம். ஆனாலும், இந்த முறை ஸ்டாலின் ஆதரவாளர்கள் விடமாட்டார்கள் என்றே நினைக்கிறேன்..!

எப்படியோ தி.மு.க. நான்காக உடைந்தாலும் எனக்கு பரம சந்தோஷமே..!

 
ஏமாற்றிய ரதி நிர்வேதம்..!

நான் இதைத்தான் எதிர்பார்த்தேன்..! அதுவே நடந்த்து. அந்தக் கால விசிலடிச்சான் குஞ்சுகளால் மறக்க முடியாத திரைப்படம் ரதி நிர்வேதம். பரதனின் அற்புதமான இயக்கத்தில் ஜெயபாரதியின் உச்சுக் கொட்ட வைத்த இளமையினால் தமிழகம் முழுவதுமே லட்சம் முறை திரையிடப்பட்ட பெருமையைப் பெற்றிருந்த்து இத்திரைப்படம்.


இதன் மறு ஆக்கம் என்றபோதே எனக்குள் உறுதியாகிவிட்டது, இது தேறாது என்று..! அதுபோலவேதான் ஆனது.. ஸ்வேதாமேன்னை எவ்வளவுதான் கேமிராவின் அத்தனை ஆங்கிள்களில் காட்டினாலும் இயக்கத்தில் படு சுமாராக இருந்து தொலைக்க.. படத்தினை என்னைப் போன்ற ரதியின் தீவிர ரசிகர்களால் ரசிக்க முடியவில்லை. ஆனால் மலையாளத்தில் படம் ஹிட் என்கிறார்கள்..!

ஸ்வேதாவுக்காக ஓடியிருக்கும் என்று நினைக்கிறேன். நான் ஆவலோடு எதிர்பார்த்த அந்த்த் தையல் மிஷின் சீனையும், பெட்ரூம் காட்சியும் படு மொக்கையாக எடுத்துத் தொலைத்து முடித்திருக்கிறார்கள். இயக்குநரால் முடிந்த்து இவ்வளவுதான் போலிருக்கிறது.

என்னுடன் படம் பார்த்த இன்னொரு திரையுலக நண்பர் என்னால் ரசிக்க முடியாமல் போனதற்காக வித்தியாசமான காரணத்தைச் சொன்னார். அன்றையக் காலக்கட்டத்தில் இது போன்ற படங்கள் மட்டுமே நமக்கு கிடைத்த ஒரே வாய்ப்பு. அதனால் ஜெயபாரதியின் அரைகுறையும், பரதனின் தூண்டிவிடும் இயக்கத்தையும் ந்ம்மால் ரசிக்க முடிந்த்து. ஆனால் இப்போதே  ஆயுசு முடிஞ்சாலும் கவலையில்லைன்ற லெவலுக்கு இது போன்ற படங்களை சலிக்கச் சலிக்கப் பார்த்து முடிச்சாச்சு. அதுனால இந்த மாதிரி படத்துல இப்போ கிக் இருக்காது.. உன்னால ரசிக்க முடியாத்தற்கு இதுவும் ஒரு காரணம்..” என்றார்.

யோசித்துப் பார்த்தேன். அவர் சொன்னதிலும் ஒரு உண்மை இருக்கத்தான் செய்கிறது..! ஆனாலும் பரதனின் இயக்கத்தில் இருந்த ஒரு உயர்வு இதில் இல்லை என்பதையும் சொல்லித்தான் ஆக வேண்டும்..!

அந்த கோல்டன் பீரியடு முடிந்தது முடிந்ததுதான்..!


பீர் முகமதுவின் வெறியாட்டம்..!

யாருய்யா இந்த பீர் முகமது..? நான் முன்ன பின்ன கேள்விப்பட்டதே இல்லை.. மனுஷன் போன வாரம் என் தளத்தில் வெறியாட்டம் ஆடியிருக்கிறார். 2 மணி நேரத்தில் 448 பதிவுகளில் ஒரே செய்தியை பின்னூட்டமாக போட்டு உலக சாதனை படைத்திருக்கிறார்.

See who owns mygsmbd.com http://whois.domaintasks.com/mygsmbd.com or any other website:
http://whois.domaintasks.com/mygsmbd.com

இதுதான் அவர் இட்டிருந்த பின்னூட்டம்.. எதுக்கு இந்த லொள்ளு..? நல்லவேளை தமிழ்மணம் மலேரியா காய்ச்சலில் படுத்த்தினால் தப்பித்தேன். இல்லாவிடில் அத்தனையும் முகப்பில் வந்து நின்று உங்களது வயித்தெரிச்சலை வாங்கிக் கட்டியிருப்பேன்..! ஏதோ அவராகவே நினைத்து ஓய்ந்து விட்டுவிட்டார் என்று நினைக்கிறேன்.

நல்லாயிருங்க பீர் முகமது..!


ஒரு கதை..!

எந்த நாடுன்னு சொல்ல மாட்டேன். ஊர் சொல்ல மாட்டேன். பெயர் சொல்ல மாட்டேன். ஆனால் மேட்டரை மட்டும் சொல்றேன்..!

மனுஷன் கட்டைல போற வயசுல இருக்காரு.. ஆனா அந்த நாட்டுல வெளியாகுற “அந்த” மாதிரி படங்கள்ல பட்டையக் கிளப்பிக்கிட்டிருக்காரு இந்த மனுஷன்..!

இந்த வயசுலேயும் இப்படியா? எப்படிய்யா..? என்று கேட்டால் கொஞ்சமும் தயங்காமல் சிரிக்கிறார்.

“இப்ப வர்ற ‘அந்த’ மாதிரி படத்துல எல்லாம் கிஸ்ஸிங் சீன் டோட்டலா சரியில்லை.. ரொம்ப அரதப் பழசானதா இருக்கு. இது பத்தி ரொம்ப நாளா நான் யோசிச்சிக்கிட்டேயிருந்தேன். வீடியோ தயாரிக்கிற கம்பெனிக்காரங்களுக்கு லெட்டர் எழுதிப் போட்டேன். ஒண்ணும் பதிலைக் காணோம். சரி. நேராவே போய் கேட்க்லாம்னு நினைச்சு போய்க் கேட்டேன். நான் பேசினவிதத்துல அசந்துட்டாங்க.. கடைசீல ‘ஏன் நீங்களே இதுல நடிக்க்க் கூடாது?’ன்னு கேட்டாங்க. எனக்கும் அப்போத்தான் அந்த யோசனையே வந்துச்சு. சரி. ச்சும்மாதான இருக்கோம்.. நடிச்சிருவோம்னு சொல்லிட்டு இறங்கிட்டேன்..

“அந்த’ நேரத்துல ஏதாவது மாத்திரை போட்டுக்குவீங்களா..?” என்று கேட்டதற்கு, “அரை மாத்திரைதான் போட்டுக்குவேன். அதுலேயும் ஒரு நாள் விட்டு ஒரு நாள்தான் ஷூட்டிங் வைச்சுக்குவேன். இல்லேன்னா எனக்குச் சிக்கலாயிரும்..” என்கிறார். “இந்த மாதிரி படங்கள்ல நடிக்கிறது உங்க பேமிலிக்குத் தெரிஞ்சா என்னாகும்..?” என்று கேட்டதற்கு சவுடாலாக அடித்து ஆடுகிறார்..

“எனக்கு மனைவியும், மகளும் மட்டும்தான் இருக்காங்க. நல்லவேளை மகன் இல்லை. தப்பிச்சேன். அவங்களுக்கு நான் இப்படி நடிக்கிறது இப்போவரைக்கும் தெரியாது. ஒருவேளை நான் செத்த பின்னாடி தெரிஞ்சாலும் தெரியலாம். அதைப் பத்தி எனக்குக் கவலையில்லை. நான் இப்ப இருக்குற வாழ்க்கையைப் பத்திதான் எப்பவும் கவலைப்படுவேன்..” என்கிறார்.

“எந்த மாதிரி கதைகளில் அதிகம் நடிக்க விருப்பம்..?” என்றதற்கு ஷகீலா டைப் பதிலையே திருப்பித் தருகிறார்.(உலகம் முழுக்க ஒண்ணுதான் போலிருக்கு) “என்ன.. என் மருமகளோட, பக்கத்து வீட்டுப் பொண்ணோட, மகளோட பிரெண்ட்டோட, ஒய்போட பிரெண்ட்டோடன்னு எல்லாம் ரெடிமேட் கதைகளாத்தான் இருக்கும்.. ஆனாலும் எனக்கு சின்னப் பொண்ணுக்கூட நடிக்கத்தான் ரொம்ப விருப்பம். அதுனால இப்போ இது மாதிரி கதைகளில் மட்டும்தான் தேர்ந்தெடுத்து நடிக்கிறேன்..” என்கிறார் இந்த கிழம்..!

இவருக்கு இருக்கின்ற ஒரே கவலை.. படத்தில் நடிப்பதற்கு இவருக்குக் கொடுக்கப்படும் ஊதியம் குறைவாக இருக்கிறதாம். ஒரு படத்துக்கு 500 டாலர்தானாம். அதே நேரத்தில் உடன் நடிக்கும் பெண்களுக்கு 2000 டாலர் கிடைக்கிறதாம்..! ஏன் இந்த ஓரவஞ்சனை என்கிறார்..

இவரால் அந்த நாட்டின் ‘அந்த’ மாதிரி படங்களின் தயாரிப்புத் துறையில் ஒரு புரட்சியே வெடித்துள்ளதாகச் சொல்கிறார், இவரது படங்களைத் தயாரிக்கும் நிறுவனத்தின் தலைவர்..!

நல்லா சொல்லுறாய்ங்கய்யா டீடெயிலு..!


வெளியாகாத திரைப்படங்கள்

2011 ஜனவரி முதல் மே மாதம் வரையிலுமாக தணிக்கை செய்யப்பட்டு தயாராக இருக்கும் படங்களின் லிஸ்ட் இது :

அன்புள்ள மான்விழியே
கொஞ்சம் சிரிப்பு கொஞ்சம் கோபம்
மதுவும், மைதிலியும்
முதல்வர் மகாத்மா
மாமல்லன்
சொன்னதை செய்வேன்
சொந்தமடி பந்தமடி
அன்புள்ள துரோகி
உயிரின் உயிரே
காதலன் காதலி
திகட்டாத காதல்
சக்தி பிறக்குது
ஆயிரம் விளக்கு
யுகம்
பேசு
முன்னவர்
மகாராஜா
கண்டவுடன்
சகாக்கள்
சிவசிவா
குருகுலம்
கருத்தக் கண்ணன்
ஆண்டாள் அழகர்
பாலு தம்பி மனசில்

சென்ற 2010-ம் வருடம் தணிக்கை செய்யப்பட்டு வெளிவராத 41 திரைப்படங்களையும் சேர்த்து கடந்த 2011 மே வரையிலான காலக்கட்டத்தில் 71 படங்கள் திரைக்கு வர காத்திருக்கின்றன..!

ஆனால் சென்ற வருடக் கணக்கைவிட இந்த வருடக் கணக்கு திரைத்துறையின் செழிப்பைத்தான் காட்டுகிறது. கடந்த 2010-ம் ஆண்டு ஜனவரி முதல் ஜூன் வரையிலான காலக்கட்டத்தில் 61 நேரடி படங்களும், 12 டப்பிங் படங்களும் வெளியாகியிருந்தன. ஆனால் இந்த வருடம் 68 நேரடி படங்களும், 21 டப்பிங் படங்களும் வெளியாகி எண்ணிக்கை கூடுதலாயிருக்கிறது.

மேற்சொன்ன லிஸ்ட்டில் உள்ள படங்களில் 99 சதவிகிதப் படங்கள் லோ பட்ஜெட் படங்கள்தான். ‘பேசு’ படத்தைத் தவிர.. ‘பேசு’ படம் மட்டும் 4 கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுத்திருக்கிறார்கள். எஸ்.ராமகிருஷ்ணன் வசனம் எழுதியிருக்கிறார். புதுமுக நடிகர், நடிகையர் என்பதாலும், தயாரிப்பாளர் சங்கம், இயக்குநர்கள் சங்கத்தில் கட்டப்  பஞ்சாயத்தில் சிக்கியிருப்பதாலும் படம் வெளிவரத் தாமதமாகியுள்ளது. இயக்குநருக்கு முதல் படம் என்றாலும், படத்தில் சம்பந்தப்பட்ட அனைவருமே ஆளாளுக்கு கொஞ்சம் கை வைத்து படத்தின் செலவை இரட்டிப்பாக்கிவிட்டார்களாம்.. ம்.. இவர்களை மாதிரி நபர்களால்தான் நல்ல தயாரிப்பாளர்களால் தொடர்ந்து இங்கு இருக்க முடியவில்லை..! கஷ்டகாலம்..!


கண்ணுக்குள்ளேயே இருக்கும் அமுதினி..!

2 வாரங்களுக்கு முன்பாக ஒரு பகல் பொழுதில் கவிஞர் சித்தார்த் திடீரென்று போனில் என்னை அழைத்தார். தானும், காயத்ரியும் சென்னையில் இருப்பதாகவும் மறுநாள் சென்ட்ரல் ரயில் நிலையம் வந்தால் சந்திக்கலாமா என்றும் கேட்டார். மறுநாள் அனைத்து வேலைகளையும் ஒதுக்கிவைத்துவிட்டு ஓடினேன்.

அனைத்துப் பதிவர்களுமே பழைய புகைப்படங்களைத்தான் வெளியிட்டு ஏமாற்றி வருகிறார்கள் போலும்..! நமது சித்தார்த்தும் அப்படித்தான் இருந்தார். ஆனால் என்னைவிட கொஞ்சம் கூடுதலான தொப்பையுடன், குண்டாகவும் இருந்தார்.

கவிதாயினி காயத்ரியும், அசத்தல் அமுதினியும் உடன் இருந்தார்கள். காயத்ரி வலையுலகில் எனக்கு ரொம்பவே சீனியர். அப்போதே சந்திக்க வேண்டும் என்று இருந்தேன். அது இப்போது 4 வருடங்கள் கழித்து முடிந்திருக்கிறது. இவர்களது காதல் திருமணம் என்ற விஷயமே எனக்கு சென்ற வருடம்தான் கூகிள் பஸ் மூலமாகத் தெரிந்தது. பதிவுலகில் இன்னமும் நான் தெரிந்து கொள்ள வேண்டியது நிறையவே  இருக்கு போலிருக்கு..!

குட்டிப் பொண்ணு அமுதினி பார்த்தவுடன் என்னுடன் ஒட்டிக் கொண்டாள்.. இன்னமும் கண்ணுக்குள்ளேயே இருக்கிறாள் அமுதினி..! அதனால்தான் நம்ம குசும்பன் இப்பவே வெத்தலை, பாக்கு கொடுத்து பிக்ஸ் பண்ணி வைச்சிருக்கான் போலிருக்கு..!

அண்ணா நகர் சரவண பவனுக்கு காரில் அழைத்துச் சென்று விருந்து கொடுத்தார் சித்தார்த். அமுதினியைப் பார்த்ததிலேயே அதிகமாக பசிக்காமல் போய்விட்டது..! கொஞ்சமாக சாப்பிட்டோம். வலையுலகைப் பற்றி அதிகம் பேசிக் கொள்ளாமல் பொதுவாகவே பேசிக் கொண்டோம்..! கவனம் முழுக்க அமுதினியிடமே இருந்த்தால் வேறு எதுவும் பெரிய விஷயமாகப் பேசத் தோன்றவில்லை. இன்னொரு முறை சித்தார்த்திடம் ரவுண்டு கட்டி எளக்கியம் பற்றி பேச வேண்டும் என்று நினைத்திருக்கிறேன்..!

அருமையான விருந்தளித்த காயத்ரிக்கும், சித்தார்த்துக்கும் எனது நன்றி..! கவிதாயினி.. அமுதினியைக் கேட்டதாகச் சொல்லவும்..!


படித்ததில் ரசித்தது..!

எழுத்தாளர் பாலகுமாரன் திருவண்ணாமலை அரசுக் கல்லூரி ஆண்டு விழாவிற்கு சிறப்பு அழைப்பாளராக வந்திருந்தார். நட்பின் அடிப்படையில் அவரைப் பார்க்க கல்லூரிக்குப் போயிருந்தோம். விழா முடிந்து கல்லூரி வளாகத்தைக் கடக்கும்வரை மெளனம் காத்தோம். ஆனால் பாய்ச்சலுக்கான பதுங்கல் அது என நான் யூகித்தேன்.

பாலகுமாரன் ஒரு சிகரெட்டை எடுத்துப் பற்ற வைத்துக் கொண்டு, “சொல்லு பவா.. ஜெயமோகன்ற அந்த நாயி யாரு..?” என்றார் உரத்தக் குரலில். அக்குரலின் வன்மம் எங்களைத் தொடர்ந்து வந்து கொண்டிருந்த மூணு, நான்கு பேரின் நடையை நிறுத்தியது. நானும் கொஞ்சம் நிதானித்தேன்.

பாலகுமாரனே தொடர்ந்தார். “அவன் என்ன பெரிய மயிறு நாவல் எழுதியிருக்கான். ரப்பர்ன்னா அதுல இருந்து பால் வடியணும்..” என்று வாசிப்பின்றி தான் கேள்விப்பட்டதை வைத்தே வீடு கட்டிக் கொண்டிருந்தார். “நான் ஸ்டார்.. தமிழ் வாரப் பத்திரிகைகளுக்கு எழுத நேரமில்லாமல் தவிக்கிறேன். பத்து கை வேணும். பத்து வருஷத்துக்கு என்னை விட்டா யாரு இருக்கா..? அரசியல், சினிமா, இலக்கியம் இவற்றின் தொடர் அழைப்புகளுக்கு ஈடு கொடுக்க முடியாம இருக்கும் எனக்கு, எந்தவிதத்தில் அந்த நாயி போட்டி..?”

“ஸார்..” இது நான்..

“கசடதபற காலத்தில் நான் பேசிய கெட்ட  வார்த்தைகளை இவன் என்னை மறுபடியும் பேச வைச்சுட்டான். என்னை மகான்கிட்ட ‘முனிசிபாலிட்டி குப்பை’ன்னு சொன்னானாமே..?”

ரமனாஸ்ரமத்திற்கு முன் இருந்த அவர் நண்பர் எல்.ஐ.சி. ஜெயராமன் வீடுவரை தொடர்ந்த அந்த வசவுகள், அவர் வீட்டுத் தோட்டத்துக் கிணற்றுத் திட்டில் உட்கார்ந்தபோதும் நீடித்தது.

என் பதில் எல்லாமும் தயவு தாட்சண்யமின்றி நிராகரிக்கப்பட்டது. நான் பேச்சற்றுப் போயிருந்தேன்.

பாலகுமாரனுடன் சொல்லிக் கொள்ள எதுவுமில்லையென முடிவு செய்து அங்கிருந்து வெளியேறினேன். மன அலைக்கழிப்புகளிடையே நடந்து கொண்டேயிருந்தேன். அதுதான் நான் பாலகுமாரனைச் சந்தித்த கடைசி தினமென்று நினைக்கிறேன். பாலகுமாரன் நெருக்கம் பொருட்டு சுரத்குமார் மீதும் லேசான வெறுப்பேற்பட்டது. இவர்களுடனான விலகல் எனக்கு அவசியம் என முடிவு செய்தேன். அதன் பிறகு நீண்ட நாட்கள் எங்கள் சந்திப்பு சாத்தியமற்றுப் போயிருந்தது.

(19 டி.எம்.சாரோனிலிருந்து - பவா செல்லத்துரை)


பார்த்த்தில் பிடித்தது

இதுவரையில் நடந்த ஊழல்களின் தொகுப்பு..!


74 comments:

கோகுல் said...

யார் மேலேயும் பொறாமைப்படக் கூடாது.. வருத்தப்படக் கூடாது.. என்னதான் எண்ணெய்யை தேய்ச்சுக்கிட்டு மண்ணுல புரண்டு எந்திரிச்சாலும் ஒட்டுற மண்ணுதான் ஒட்டும்னு சொல்வாங்க. நமக்கு இவ்ளோதான்னு நினைச்சுக்க வேண்டியதுதான்..! இருக்கிறவரைக்கும் வண்டி இப்படியே ஓடட்டும்..! பார்த்துக்குவோம்.\\

பாத்துக்குவோம்! தொடருங்கள் உங்கள் பணியை

கோகுல் said...

\\பையனூர் வீடு கட்டும் திட்டம் அம்போ..!\\
அப்போ விரைவில் பாசத்தலைவிக்கு பாராட்டு விழா நடக்கும்னு சொல்லுங்க
http://gokulmanathil.blogspot.com

muthukumaran said...

அய்யய்யோ, நான் இன்னமும் உங்க follower ஆகவில்லை. இந்த இப்ப சேருகிறேன்.

நம்ம கடமையை செய்வோம். ஏன் வராதவங்கள பத்தி கவலைப்படணும்?

அகில் பூங்குன்றன் said...

1000 thkku valthukkal. sekkiram 10000 adinga...

vasu balaji said...

செமண்ணே:))

Unknown said...

அண்ணே, ரதிநிர்வேதம் பத்தி சொல்லனும்னா இசை அபாரம். மூணு பாடல்கள் மனசுல பச்சக்குன்னு ஒட்டிக்கிச்சு. படத்தைப் பாக்கனும்னு கூட ஆசையில்லை. இசையே திருப்திகரமா இருக்கு.

என் நண்பன் ஒருவனிடம் இந்தப் படம் பத்தி பேசிக் கொண்டிருந்தேன். பையன் பழசையும் புதுசையும் டௌன்லோட் பண்ணிப் பாத்திருக்காப்பிடி. அவரும் நீங்க சொன்னதையே தான் சொன்னார். ஸ்வேதா மேனனுக்கு ஜெயபாரதி எவ்வளவோ பரவால்லைன்னு தான் ஃபீல் பண்றார்.

ஏதுடா மதுரைக்கு வந்த சோதனைன்னு பழைய படக் க்ளைமேக்ச நானும் யூட்யூப்ல பாத்தேன். எனக்கென்னமோ உங்க நண்பர் சொன்ன மாதிரி தான் தோணுச்சு. ஆயிரம் சைட்டுகளில் அள்ளிக் கொட்டின விஷயத்தை மறுபடியும் இலை மறைவு காய் மறைவா பாக்க எவனுக்கு தான் தோணும்.

எல்லாத்துக்கும் மேல இசையமைப்பாளர் ஜெயச்சந்திரனைப் பாராட்டியே ஆகனும். அம்புடுதேன்...

ஒரு கட்டைபிரம்மச்சாரி இப்படி ஜொள்ளு வடிய படம் பாக்கப் போய் ஏமாந்துட்டு வந்துருக்கீங்களே, முருகன் வேல விட்டு விலாவில குத்த மாட்டானா! :))

manjoorraja said...

காரசாரமா இருக்கு சரவணா

உண்மைத்தமிழன் said...

[[[gokul said...

யார் மேலேயும் பொறாமைப்படக் கூடாது. வருத்தப்படக் கூடாது.. என்னதான் எண்ணெய்யை தேய்ச்சுக்கிட்டு மண்ணுல புரண்டு எந்திரிச்சாலும், ஒட்டுற மண்ணுதான் ஒட்டும்னு சொல்வாங்க. நமக்கு இவ்ளோதான்னு நினைச்சுக்க வேண்டியதுதான்..! இருக்கிறவரைக்கும் வண்டி இப்படியே ஓடட்டும்..! பார்த்துக்குவோம்.\\

பாத்துக்குவோம்! தொடருங்கள் உங்கள் பணியை.]]]

நன்றி கோகுல்.. உங்களைப் போன்ற நண்பர்கள் இருக்கும்போது என்ன கவலை..?

உண்மைத்தமிழன் said...

[[[gokul said...

\\பையனூர் வீடு கட்டும் திட்டம் அம்போ..!\\

அப்போ விரைவில் பாசத் தலைவிக்கு பாராட்டு விழா நடக்கும்னு சொல்லுங்க
http://gokulmanathil.blogspot.com]]]

நடக்காது. ஆத்தா வர மாட்டேன்னு சொல்லிருச்சு..!

உண்மைத்தமிழன் said...

[[[முத்து குமரன் said...

அய்யய்யோ, நான் இன்னமும் உங்க follower ஆகவில்லை. இந்த இப்ப சேருகிறேன்.

நம்ம கடமையை செய்வோம். ஏன் வராதவங்கள பத்தி கவலைப்படணும்?]]]

நீங்களே இப்பத்தானா..? இப்படித்தான் நிறைய பேரு நானே கேக்கணும்னு வெயிட் பண்றாங்க போலிருக்கு..!

உண்மைத்தமிழன் said...

[[[அகில் பூங்குன்றன் said...

1000thkku valthukkal. sekkiram 10000 adinga.]]]

1000-த்துக்கே 4 வருஷம்.. 10000-ம்ன்னா 40 வருஷமா..? தாங்குமாண்ணே பிளாக்கு..?

உண்மைத்தமிழன் said...

[[[வானம்பாடிகள் said...

செமண்ணே:))]]]

மிக்க நன்றி வாசு ஸார்..!

உண்மைத்தமிழன் said...

[[[விஜய்கோபால்சாமி said...

அண்ணே, ரதி நிர்வேதம் பத்தி சொல்லனும்னா இசை அபாரம். மூணு பாடல்கள் மனசுல பச்சக்குன்னு ஒட்டிக்கிச்சு. படத்தைப் பாக்கனும்னுகூட ஆசையில்லை. இசையே திருப்திகரமா இருக்கு.]]]

மொழி ஒரு தடங்கலாக இருந்ததால் அதிகம் ரசிக்க முடியவில்லை..! ஆனால் கேட்க இனிமையாகத்தான் இருந்தது..!

[[[என் நண்பன் ஒருவனிடம் இந்தப் படம் பத்தி பேசிக் கொண்டிருந்தேன். பையன் பழசையும் புதுசையும் டௌன்லோட் பண்ணிப் பாத்திருக்காப்பிடி. அவரும் நீங்க சொன்னதையேதான் சொன்னார். ஸ்வேதா மேனனுக்கு ஜெயபாரதி எவ்வளவோ பரவால்லைன்னு தான் ஃபீல் பண்றார். ஏதுடா மதுரைக்கு வந்த சோதனைன்னு பழைய படக் க்ளைமேக்ச நானும் யூட்யூப்ல பாத்தேன். எனக்கென்னமோ உங்க நண்பர் சொன்ன மாதிரிதான் தோணுச்சு. ஆயிரம் சைட்டுகளில் அள்ளிக் கொட்டின விஷயத்தை மறுபடியும் இலை மறைவு காய் மறைவா பாக்க எவனுக்குதான் தோணும். எல்லாத்துக்கும் மேல இசையமைப்பாளர் ஜெயச்சந்திரனைப் பாராட்டியே ஆகனும். அம்புடுதேன்.]]]

கரெக்ட்டுங்கண்ணா.. ஆனாலும் பழசுல இருந்த நடிப்பும், உருக்கமும், இயக்கமும் இதுல இல்லாததும் ஒரு காரணமா சொல்லணும்..!

[[[ஒரு கட்டை பிரம்மச்சாரி இப்படி ஜொள்ளு வடிய படம் பாக்கப் போய் ஏமாந்துட்டு வந்துருக்கீங்களே, முருகன் வேல விட்டு விலாவில குத்த மாட்டானா! :))]]]

குத்துடான்னு நானும் சொல்றேன். ஆனா அவன் செய்ய மாட்டேன்றான். அதுக்காகவேதான் இப்படி செய்யறது..?

உண்மைத்தமிழன் said...

[[[manjoorraja said...

காரசாரமா இருக்கு சரவணா.]]]

ச்சும்மா சொல்லாதீங்கண்ணே.. காரம் கொஞ்சம் கம்மிதான்..!

சிவ.சி.மா. ஜானகிராமன் said...

ஆயிரத்திற்கும் மேற்பட்ட
அன்பு உள்ளங்களை
அணைகட்டி வைத்திருக்கும்

உண்மைத் தமிழருக்கு
உளமார்ந்த வாழ்த்துக்கள்

ஆயிரம் ...
ஆயிரமாயிரம் ஆக வாழ்த்துக்கள்


http://sivaayasivaa.blogspot.com

சிவயசிவ

ஸ்ரீராம். said...

நீங்கள் சொன்ன கமல் பாடல் மகளிர் மட்டும் பாடலாக இருந்திருக்கும் என்று நினைத்திருந்தேன்.
ஆயிரம் பின்தொடர்வாளர்கள் வந்ததற்கு பாராட்டுகள். நாங்கள் எல்லாம் எப்போ அந்த இலக்கை அடைவது?!
ரதிநிர்வேதத்தில் பாட்டு வேற இருக்கா...

அபி அப்பா said...

\\
பையனூர் வீடு கட்டும் திட்டம் பணால் என்று உறுதியாகச் சொல்லிவிட்டார்கள். வீடு கேட்டு பணம் கட்டியவர்களெல்லாம் பணத்தை திருப்பிக் கொடுங்கள் என்று அனைத்து சங்கங்களிலும் கியூவில் நின்று மனு கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

இனி சினிமா தொழிலாளர்களுக்கு சொந்த வீட்டிற்கான கனவு கானல் நீர்தான்.. இனிமேற்கொண்டு எந்த அரசு வந்தாலும் விலைக்குக் கூட இடத்தை ஒதுக்கித் தர மாட்டார்கள் என்பது உறுதியாகிவிட்டது. காரணம், கருணாநிதிக்கு திரையுலகப் பிரம்மாக்களிடம் இத்தனை ஆதரவிருந்தும் வாக்களித்த மக்கள் மருந்துக்குக்கூட அதனையொரு பொருட்டாக கருதவில்லையே..?

பெரிய திரை, சின்னத்திரை என்று அனைத்துச் சங்கங்களிலும் நிர்வாகிகள் மட்டத்தில் ஏற்பட்ட பூசலும் இதற்கு ஒரு காரணம். பெப்ஸி தலைவராக இருந்த வி.சி.குகநாதன் எனக்கேன் வம்பு என்று ஒதுங்கிக் கொள்ள.. அ.தி.மு.க. கட்சிக்காரரான பெப்ஸியின் செயலாளர் சிவா, மேற்கொண்டு இதனை எந்தப் பக்கம் நகர்த்துவது என்பதே தெரியாமல் இருக்கிறார்.

இதில் அனைவரையும் முந்திக் கொண்டு நல்ல பெயர் எடுக்க நினைத்த நடிகர் சங்கத்தின் செயலாளர் ராதாரவி ஜெயல்லிதாவைச் சந்தித்தபோது, “அந்த இடம் உங்களுக்கு வேண்டாம். விட்ருங்க..” என்று மண்ணை வாரி இறைத்து மூடு விழா நடத்திவிட்டாராம\\

என்ன கொடுமை இதலாம் சாரவணா! அந்த கருணாநிதி பண்ணாடை, பொறம்போக்கு, கழிசடைகம்முனாட்டி, அந்த வீட்டை எல்லாம் கட்டி கொடுத்துட்டு போனா அவன் குடியா முழுகிடும். இந்த ஆத்தா தெய்வத்தின் தெய்வம், தங்க தாரகை, புரட்சிதலைவி தான் இதல்லாம் ஊத்தி மூடும்னு தெரியும் தனே அந்த பண்ணாடைக்கு. பின்னே என்ன முன்னடியே கட்டி கொடுத்து தொலைஞ்சுட்டு போனா என்ன கம்முனாட்டி.... இப்படித்தானே நீங்க எழுதி இருக்கனும். என்னவோ போங்க வர வர நீங்க கருணாநிதியை திட்ட சந்தர்ப்பம் அல்வாமாதிரி கிடைச்சாலும் கோட்டை விடுறீங்க. டேக் கேர்...

RS said...

//..என்ன கொடுமை இதலாம் சாரவணா! அந்த கருணாநிதி பண்ணாடை, பொறம்போக்கு, கழிசடைகம்முனாட்டி, அந்த வீட்டை எல்லாம் கட்டி கொடுத்துட்டு போனா அவன் குடியா முழுகிடும். இந்த ஆத்தா தெய்வத்தின் தெய்வம், தங்க தாரகை, புரட்சிதலைவி தான் இதல்லாம் ஊத்தி மூடும்னு தெரியும் தனே அந்த பண்ணாடைக்கு. பின்னே என்ன முன்னடியே கட்டி கொடுத்து தொலைஞ்சுட்டு போனா என்ன கம்முனாட்டி....//

ஊருக்காக வேஷம் கட்டிட்டீங்க, அதனால சொல்ல நினைச்சத இந்த மாதிரி சொல்லி ஆசைய தீத்துக்கிட்டீங்க. நல்லது.

settaikkaran said...

//நினைக்கும்பொழுதே நெஞ்சடைக்கிறது. கண்கள் குளமாகின்றன..! விரல்கள் தட்டச்சு செய்ய மறுக்கின்றன.. என்ன எழுதுவது என்பதே தெரியாமல் திகைத்துப் போயுள்ளேன்..!//

ஊனா தானா அண்ணே, திகைக்காதீங்க, முரசொலி வாசிக்கிறதை நிறுத்தினா நெஞ்சடைக்காது; கண்கள் குளமாகாது! :-)

settaikkaran said...

//எழுத வந்து 4 ஆண்டுகள் கழித்துதான் இந்த 1000 பேர் இணைந்திருக்கிறார்கள் என்பதே வலையுலகைப் பொறுத்தவரையில் கேவலமானதுதான்.//

அண்ணே, புதிதான பதிவர்கள் தவறாமல் வாசிப்பது உங்களது இடுகைகளைத்தான். குறைந்தபட்சம் நான் அப்படித்தான். என்ன, பெரும்பாலும் எனக்கு நேர் மாறான கருத்தாவே எழுதிடறீங்களா, உங்களோட சண்டை போட மனசு வர மாட்டேங்குது. :-)

settaikkaran said...

//இனி சினிமா தொழிலாளர்களுக்கு சொந்த வீட்டிற்கான கனவு கானல் நீர்தான்.. //

சாம்பிளுக்கு இதோ!

சினிமா தொழிலாளர்களுக்கு மட்டும் என்ன கொம்பா முளைத்திருக்கிறது. முறைசாராத் தொழில்களில் எத்தனை ஆயிரமாயிரம் தொழிலாளர்கள் அடிப்படை வசதிகள் கூட இல்லாமல் திணறிக்கொண்டிருக்கிறார்கள்? அந்தத் தொழில்களெல்லாம் நேரடி அல்லது மறைமுக வரிமூலம் அரசுக்கு வருவாய் தருகிறபோது, எந்த வருமானமும் அரசுக்குத் தராத சினிமாத்துறைக்கு என்ன சலுகை வேண்டிக்கிடக்கிறது?

settaikkaran said...

என்ன இருந்தாலும் நீங்கள் எனது ஆதர்ச வலைப்பதிவர்களில் ஒருவர் அண்ணே! உங்களுக்கு அநானிப் பதிவர்கள் பிடிக்காது என்றாலும், எனக்கு உங்க வலைப்பதிவு இட்லி-சாம்பார் மாதிரி! வாழ்த்துகள் அண்ணே!

Muthukumara Rajan said...

in the scam list not included all the scams of state govts.

if included even super computer will crash.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////இவரால் அந்த நாட்டின் ‘அந்த’ மாதிரி படங்களின் தயாரிப்புத் துறையில் ஒரு புரட்சியே வெடித்துள்ளதாகச் சொல்கிறார், இவரது படங்களைத் தயாரிக்கும் நிறுவனத்தின் தலைவர்..!
///////

அந்தக் கம்பெனி பேரு விவிட் (vivid)னு நினைக்கிறேன்,ஆள் படம் போட்டிருந்தா பேர் ஞாபகம் வந்திருக்கும்.......!

Anonymous said...

அது எப்படி கம்பனி பேரு உடனே உங்களுக்கு ஞாபகம் வந்தது

அப்புறம் பதிவரே

அந்த நமது நாடு ஊழல் பற்றிய பேனர் மின்னஞ்சலில் வந்தது .
ஆனாலும் அதை இதிலே போட்டது சூப்பர்

Sivakumar said...

எவ்ளோ பெரிய இட்லி இத்யாதி. சாப்பிடவே ரெண்டு நாள் ஆகும் போல. அந்த காண்டுலதான் பீர் முகம்மது இப்படி செஞ்சிருப்பாறு. இதுவரை 1017 பால்லோயர்ஸ். வாழ்த்துகள் சார். எசகுபிசகான மேட்டரை நீங்கள் எழுதுவது வருத்தமே. கல்கி பத்திரிக்கை சில ஆண்டுகளுக்கு முன் சினிமா பத்திரிக்கை ஆனது போல, உங்களுக்கும் காலத்தின் கட்டாயம். வேறென்ன சொல்ல!!

a said...

virunthu sappadu serichitta illaya....

N.H. Narasimma Prasad said...

hai Anna

N.H. Narasimma Prasad said...

Vanakkam Anne, Today's Idly, Vadai, Dosa is Simply Super.

ராஜரத்தினம் said...

//எப்படியோ தி.மு.க. நான்காக உடைந்தாலும் எனக்கு பரம சந்தோஷமே..!//

என்ன பாஸ்? எனக்கு கூட கருணாநிதியையும் அவர் கட்சியையும் பிடிக்காதுதான். ஆனால் அவர் தோத்துக் கொண்டே இருக்கணும்னு நினைக்கிறவன். அதற்கு திமுக வேணும் பாஸ். ஜெயலலிதா 1989ல் கருணாநிதியை போல் ஜெயிக்ககூடாது.
-

ஸ்ரீகாந்த் said...

எத்தனை பேர் நம் ப்லோகை பின் பற்றுகிறார்கள் என்பது முக்கியமல்ல .......நாம் சமுதாயத்திற்கு என்ன செய்திகளை தருகிறோம் என்பது தான் முக்கியம்.......அப்படி பார்த்தால் பல்லாயிரம் மனிதர்களின் மனசாட்சியாக தங்கள் இருப்பது முற்றிலும் உண்மை ,உண்மை,உண்மை . இந்த 1000 நண்பர்களையும் பழகி பார்த்தல் நிச்சயம் இவர்கள் உண்மையில் சமுதாயத்தின் பால் அக்கறை கொண்டவர்களாகவே இருப்பார்கள்

pichaikaaran said...

ரொம்ப நாள் கழிச்சு , பழைய உ.த வை படிக்கும் இன்பம் ஏற்பட்டது. ரதி நிர்வேதம் விமர்சனம் சூப்பர் . அவளுக்கு அது புதுசு , ரகசியம் , காதல் ஏக்கம் போன்ற படங்களை பற்றி அடுத்து எழுதுங்கள்

R.Gopi said...

வாழ்த்துக்கள் தலைவா...

மேலும் பல ஆயிரம் சொந்தங்களை நீங்கள் அடைய இருக்கிறீர்கள்.....

உங்கள் சந்தோஷத்தில் நானும் இணைகிறேன்.. என் இதயம் இனித்தது.. கண்கள் பனித்தது...

சி.பி.செந்தில்குமார் said...

1000 kku vaazththukkaL வாழ்த்துக்கள் அண்ணே

சீனு said...

சே! கடைசி வரைக்கும் 'அந்த' பாடலோட விஷுவலை காட்டவேயில்லையே...உத-வுக்கு கண்டனங்கள்... :))

உண்மைத்தமிழன் said...

[[[சிவ.சி.மா. ஜானகிராமன் said...

ஆயிரத்திற்கும் மேற்பட்ட
அன்பு உள்ளங்களை
அணைகட்டி வைத்திருக்கும்

உண்மைத் தமிழருக்கு
உளமார்ந்த வாழ்த்துக்கள்

ஆயிரம் ...
ஆயிரமாயிரம் ஆக வாழ்த்துக்கள்


http://sivaayasivaa.blogspot.com

சிவயசிவ]]]

நன்றிகள் ஜானகிராமன் ஸார்.. எல்லாம் உங்களைப் போன்ற அன்பர்களால் விளைந்த நட்புதான்..!

உண்மைத்தமிழன் said...

[[[ஸ்ரீராம். said...

நீங்கள் சொன்ன கமல் பாடல் மகளிர் மட்டும் பாடலாக இருந்திருக்கும் என்று நினைத்திருந்தேன்.]]]

"காளை மாடு ஒண்ணு, கறவை மாடு மூணு" என்ற பாடல் வரிகளுக்கு ரேவதியும், ரோகிணியும் எதிர்ப்புத் தெரிவித்து ஊர்வசியையும் கூட்டணி சேர்த்து நடிக்க மாட்டோம் என்று மறுத்தார்கள்..

அவர்கள் மூவரும் அந்தப் பாடல் காட்சியில் நடிக்காவிட்டால் படத்தையே நிறுத்திவிடுவது என்று கமல்ஹாசனும் தன் நிலையில் உறுதியுடன் இருந்ததால் வேறு வழியில்லாமல் மூன்று நடிகைகளும் நடித்துக் கொடுத்தார்கள்..!

[[[ஆயிரம் பின் தொடர்வாளர்கள் வந்ததற்கு பாராட்டுகள். நாங்கள் எல்லாம் எப்போ அந்த இலக்கை அடைவது?!]]]

தினமும் 1 பதிவாவது போடுங்கள். நிச்சயம் பின் தொடர்வார்கள்..!

[[[ரதி நிர்வேதத்தில் பாட்டு வேற இருக்கா...]]]

ம்.. இருக்கு.. நல்லாவே இருக்கு..!

உண்மைத்தமிழன் said...

அபி அப்பா said...

என்ன கொடுமை இதலாம் சாரவணா! அந்த கருணாநிதி பண்ணாடை, பொறம்போக்கு, கழிசடை, கம்முனாட்டி, அந்த வீட்டை எல்லாம் கட்டி கொடுத்துட்டு போனா அவன் குடியா முழுகிடும். இந்த ஆத்தா தெய்வத்தின் தெய்வம், தங்க தாரகை, புரட்சிதலைவிதான் இதல்லாம் ஊத்தி மூடும்னு தெரியும்தனே அந்த பண்ணாடைக்கு. பின்னே என்ன முன்னடியே கட்டி கொடுத்து தொலைஞ்சுட்டு போனா என்ன கம்முனாட்டி.... இப்படித்தானே நீங்க எழுதி இருக்கனும். என்னவோ போங்க வர வர நீங்க கருணாநிதியை திட்ட சந்தர்ப்பம் அல்வா மாதிரி கிடைச்சாலும் கோட்டை விடுறீங்க. டேக் கேர்.]]]

அண்ணே.. விடுங்கண்ணே.. நாங்க திட்ட வேண்டியதை நீங்களே திட்டிட்டீங்கன்னா எப்படி..? நாங்க சொந்தமா வீடு கட்டிக் குடுங்கன்னு கேக்கலை.. சிட்டிக்குப் பக்கத்துல சகாய விலைல ஒரு இடம் கேட்டோம். அதான் கிடைக்கலை..

உண்மைத்தமிழன் said...

[[[RS said...

//என்ன கொடுமை இதலாம் சாரவணா! அந்த கருணாநிதி பண்ணாடை, பொறம்போக்கு, கழிசடைகம்முனாட்டி, அந்த வீட்டை எல்லாம் கட்டி கொடுத்துட்டு போனா அவன் குடியா முழுகிடும். இந்த ஆத்தா தெய்வத்தின் தெய்வம், தங்க தாரகை, புரட்சிதலைவி தான் இதல்லாம் ஊத்தி மூடும்னு தெரியும் தனே அந்த பண்ணாடைக்கு. பின்னே என்ன முன்னடியே கட்டி கொடுத்து தொலைஞ்சுட்டு போனா என்ன கம்முனாட்டி....//

ஊருக்காக வேஷம் கட்டிட்டீங்க, அதனால சொல்ல நினைச்சத இந்த மாதிரி சொல்லி ஆசைய தீத்துக்கிட்டீங்க. நல்லது.]]]

-ஹி.. ஹி.. ஹி.. அபியப்பா உண்மையான உடன்பிறப்பு. நேரம் கிடைக்கும்போதெல்லாம் பொங்காம வுட மாட்டாரு..!

உண்மைத்தமிழன் said...

[[[சேட்டைக்காரன் said...

//நினைக்கும்பொழுதே நெஞ்சடைக்கிறது. கண்கள் குளமாகின்றன..! விரல்கள் தட்டச்சு செய்ய மறுக்கின்றன.. என்ன எழுதுவது என்பதே தெரியாமல் திகைத்துப் போயுள்ளேன்..!//

ஊனா தானா அண்ணே, திகைக்காதீங்க, முரசொலி வாசிக்கிறதை நிறுத்தினா நெஞ்சடைக்காது; கண்கள் குளமாகாது! :-)]]]

முரசொலி வாசிப்பதை நிறுத்தினால் என் மூச்சே நின்றுவிடும்.. நோ சான்ஸ்.. நான் உயிர்ப்புடன் இருப்பதற்கு முரசொலியும் ஒரு காரணம்..!

உண்மைத்தமிழன் said...

[[[சேட்டைக்காரன் said...

//எழுத வந்து 4 ஆண்டுகள் கழித்துதான் இந்த 1000 பேர் இணைந்திருக்கிறார்கள் என்பதே வலையுலகைப் பொறுத்தவரையில் கேவலமானதுதான்.//

அண்ணே, புதிதான பதிவர்கள் தவறாமல் வாசிப்பது உங்களது இடுகைகளைத்தான். குறைந்தபட்சம் நான் அப்படித்தான். என்ன, பெரும்பாலும் எனக்கு நேர் மாறான கருத்தாவே எழுதிடறீங்களா, உங்களோட சண்டை போட மனசு வர மாட்டேங்குது. :-)]]]

உங்களை மாதிரி அன்பர்களைப் பெறுவதற்கு நான் என்ன பாக்கியம் செய்தேனோ..? நன்றி சேட்டை..!

உண்மைத்தமிழன் said...

[[[சேட்டைக்காரன் said...

//இனி சினிமா தொழிலாளர்களுக்கு சொந்த வீட்டிற்கான கனவு கானல் நீர்தான்.. //

சாம்பிளுக்கு இதோ!

சினிமா தொழிலாளர்களுக்கு மட்டும் என்ன கொம்பா முளைத்திருக்கிறது. முறைசாராத் தொழில்களில் எத்தனை ஆயிரமாயிரம் தொழிலாளர்கள் அடிப்படை வசதிகள் கூட இல்லாமல் திணறிக் கொண்டிருக்கிறார்கள்? அந்தத் தொழில்களெல்லாம் நேரடி அல்லது மறைமுக வரிமூலம் அரசுக்கு வருவாய் தருகிறபோது, எந்த வருமானமும் அரசுக்குத் தராத சினிமாத் துறைக்கு என்ன சலுகை வேண்டிக் கிடக்கிறது?]]]

இல்லை சேட்டை. வருடத்திற்கு சினிமா தியேட்டர்கள் மூலம் கிடைக்கின்ற வருவாயோடு, சேனல்கள் மூலம் கிடைக்கின்ற வருவாயையும் கணக்குப் போட்டுப் பாருங்கள். தெரியும்..!

முறைசாராத் தொழிலாளர்களைப் போலத்தான் பெப்ஸி தொழிலாளர்களும் இருக்கிறார்கள். நீங்கள் நடிகர், நடிகைகள், இயக்குநர்களை மனதில் வைத்துப் பேசுகிறீர்கள்.

உண்மைத்தமிழன் said...

[[[சேட்டைக்காரன் said...

என்ன இருந்தாலும் நீங்கள் எனது ஆதர்ச வலைப்பதிவர்களில் ஒருவர் அண்ணே! உங்களுக்கு அநானிப் பதிவர்கள் பிடிக்காது என்றாலும், எனக்கு உங்க வலைப் பதிவு இட்லி-சாம்பார் மாதிரி! வாழ்த்துகள் அண்ணே!]]]

மிக்க நன்றி சேட்டை.. உங்களது தீவிர அன்பு என்னைத் திகைக்க வைக்கிறது..!

உண்மைத்தமிழன் said...

[[[muthukumar said...

in the scam list not included all the scams of state govts. if included even super computer will crash.]]]

ஆமாம்.. எல்லாத்தையும் லிஸ்ட் போடறதுன்னா அது மாதிரி 5 பதாகைகள் வேணும்..!

உண்மைத்தமிழன் said...

[[[பன்னிக்குட்டி ராம்சாமி said...

//இவரால் அந்த நாட்டின் ‘அந்த’ மாதிரி படங்களின் தயாரிப்புத் துறையில் ஒரு புரட்சியே வெடித்துள்ளதாகச் சொல்கிறார், இவரது படங்களைத் தயாரிக்கும் நிறுவனத்தின் தலைவர்..!//

அந்தக் கம்பெனி பேரு விவிட் (vivid)னு நினைக்கிறேன். ஆள் படம் போட்டிருந்தா பேர் ஞாபகம் வந்திருக்கும்.......!]]]

இல்லை.. வேறு நாடு..!

உண்மைத்தமிழன் said...

[[[சுந்தர் said...

அது எப்படி கம்பனி பேரு உடனே உங்களுக்கு ஞாபகம் வந்தது.]]]

பழக்கம்தான்.. என்ன ராமசாமி ஸார்..?

[[[அப்புறம் பதிவரே.. அந்த நமது நாடு ஊழல் பற்றிய பேனர் மின்னஞ்சலில் வந்தது. ஆனாலும் அதை இதிலே போட்டது சூப்பர்.]]]

எனக்கும் மின்னஞ்சலில்தான் வந்தது சுந்தர்..!

வருகைக்கு மிக்க நன்றி..!

உண்மைத்தமிழன் said...

[[[! சிவகுமார் ! said...

எவ்ளோ பெரிய இட்லி இத்யாதி. சாப்பிடவே ரெண்டு நாள் ஆகும் போல. அந்த காண்டுலதான் பீர் முகம்மது இப்படி செஞ்சிருப்பாறு. இதுவரை 1017 பால்லோயர்ஸ். வாழ்த்துகள் சார்.]]]

மிக்க நன்றி சிவகுமார்..!

[[[எசகுபிசகான மேட்டரை நீங்கள் எழுதுவது வருத்தமே. கல்கி பத்திரிக்கை சில ஆண்டுகளுக்கு முன் சினிமா பத்திரிக்கை ஆனது போல, உங்களுக்கும் காலத்தின் கட்டாயம். வேறென்ன சொல்ல!!]]]

அப்படியல்ல.. எதுவுமே புறந்தள்ள வேண்டியதில்லையே..? வெளிப்படையாக நான் படம் காட்டவில்லையே..? அப்படியும் ஒரு சமூகம் இருக்கிறது என்பதை நாமும் அறிந்து கொள்வதில் தவறில்லை. ஆனால் எப்படி என்பதில்தான் நான் மாறுபட்டிருக்கிறேன்..! அவ்வளவுதான்..!

உண்மைத்தமிழன் said...

[[[வழிப்போக்கன் - யோகேஷ் said...

virunthu sappadu serichitta illaya.]]]

செரிச்சிருச்சா.. சந்தோஷம் யோகேஷ்..!

radhakrishnan said...

நானும் இன்று உங்கள் நண்பனாகசேர்ந்துவிட்டேன்.உங்கள் சலியா உழைப்பைப் பாராட்டுகிறேன்.

உண்மைத்தமிழன் said...

[[[N.H.பிரசாத் said...

hai Anna.]]]

ஹாய் பிரசாத்..!

உண்மைத்தமிழன் said...

[[[N.H.பிரசாத் said...

Vanakkam Anne, Today's Idly, Vadai, Dosa is Simply Super.]]]

மிக்க நன்றி பிரசாத்..!

உண்மைத்தமிழன் said...

[[[ராஜரத்தினம் said...

//எப்படியோ தி.மு.க. நான்காக உடைந்தாலும் எனக்கு பரம சந்தோஷமே..!//

என்ன பாஸ்? எனக்கு கூட கருணாநிதியையும் அவர் கட்சியையும் பிடிக்காதுதான். ஆனால் அவர் தோத்துக் கொண்டே இருக்கணும்னு நினைக்கிறவன். அதற்கு திமுக வேணும் பாஸ். ஜெயலலிதா 1989-ல் கருணாநிதியை போல் ஜெயிக்கக் கூடாது.]]]

தி.மு.க. தோக்கணும்னா அது ஒரே கட்சியாக இருந்தால் முடியாது ராஜரத்தினம்.. பிரிவு ஒன்றுதான் அக்கட்சியின் வலிமையைக் குறைக்கும்..!

உண்மைத்தமிழன் said...

[[[ஸ்ரீகாந்த் said...

எத்தனை பேர் நம் ப்லோகை பின் பற்றுகிறார்கள் என்பது முக்கியமல்ல. நாம் சமுதாயத்திற்கு என்ன செய்திகளை தருகிறோம் என்பதுதான் முக்கியம். அப்படி பார்த்தால் பல்லாயிரம் மனிதர்களின் மனசாட்சியாக தங்கள் இருப்பது முற்றிலும் உண்மை, உண்மை, உண்மை. இந்த 1000 நண்பர்களையும் பழகி பார்த்தல் நிச்சயம் இவர்கள் உண்மையில் சமுதாயத்தின் பால் அக்கறை கொண்டவர்களாகவே இருப்பார்கள்.]]]

அவர்கள் அக்கறைபடும் அளவுக்கு எனது எழுத்தும் இருப்பது குறித்து எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி..! நாகரிகமான முறையில் அன்பான உங்களது பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி..!

உண்மைத்தமிழன் said...

பார்வையாளன் said...

ரொம்ப நாள் கழிச்சு, பழைய உ.த.வை படிக்கும் இன்பம் ஏற்பட்டது. ரதி நிர்வேதம் விமர்சனம் சூப்பர். அவளுக்கு அது புதுசு, ரகசியம், காதல் ஏக்கம் போன்ற படங்களை பற்றி அடுத்து எழுதுங்கள்.]]]

பார்வை.. இதெல்லாம் எனக்குத் தேவையா..? நீங்க பார்த்திட்டு எழுதுங்க. நான் படிச்சுத் தெரிஞ்சுக்குறேன்..!

உண்மைத்தமிழன் said...

[[[R.Gopi said...

வாழ்த்துக்கள் தலைவா. மேலும் பல ஆயிரம் சொந்தங்களை நீங்கள் அடைய இருக்கிறீர்கள். உங்கள் சந்தோஷத்தில் நானும் இணைகிறேன்.. என் இதயம் இனித்தது.. கண்கள் பனித்தது.]]]

கோபி.. என் இதயத்தில் இதற்கு மேல் இடமில்லை. அடுத்த பிறவியில் பார்க்கலாம்..!

உண்மைத்தமிழன் said...

[[[சி.பி.செந்தில்குமார் said...

1000 kku vaazththukkaL வாழ்த்துக்கள் அண்ணே.]]]

நன்றி செந்தில்..!

உண்மைத்தமிழன் said...

[[[சீனு said...

சே! கடைசிவரைக்கும் 'அந்த' பாடலோட விஷுவலை காட்டவேயில்லையே. உத-வுக்கு கண்டனங்கள்... :))]]]

யூ டியூப்ல தேடுங்க சீனு. கிடைக்கும்..!

உண்மைத்தமிழன் said...

[[[radhakrishnan said...

நானும் இன்று உங்கள் நண்பனாக சேர்ந்துவிட்டேன்.உங்கள் சலியா உழைப்பைப் பாராட்டுகிறேன்.]]]

ஆஹா.. வருக வருக ராதாகிருஷ்ணன்.. மிக்க நன்றி..!

பழமைபேசி said...

//பெரிய திரை, சின்னத்திரை //

பெரிய திரைன்னு எழுதும் போது, ‘த்’ செருகலையே? அப்புறம் ஏன் சின்னத்திரைன்னு ‘த்’ செருகு இருகி இருக்கீங்க??

இலை, சூரியன் முதலான சின்னங்கள் பொறித்த திரை என்பதாலா?? அளவில் சின்ன திரை என்றால் அது ‘சின்ன திரை’ எனத்தானே வரும்??

உண்மைத்தமிழன் said...

[[[பழமைபேசி said...

//பெரிய திரை, சின்னத்திரை //

பெரிய திரைன்னு எழுதும்போது, ‘த்’ செருகலையே? அப்புறம் ஏன் சின்னத்திரைன்னு ‘த்’ செருகு இருகி இருக்கீங்க??

இலை, சூரியன் முதலான சின்னங்கள் பொறித்த திரை என்பதாலா?? அளவில் சின்ன திரை என்றால் அது ‘சின்ன திரை’ எனத்தானே வரும்??]]]

வெகு நாட்கள் கழித்து வருகை தந்த அன்புத் தம்பிக்கு எனது நன்றி..!

உன் அளவுக்கு தமிழ் அறிவுக்கு எனக்கில்லை தம்பி.. தப்பா இருந்தா மன்னிச்சுக்க. நடைமுறைத் தமிழில் அனைத்துப் பத்திரிகைகளும் இதனையே குறிப்பிடுவதால் நானும் இப்படியே எழுதுகிறேன்.. தப்பா..?

ரிஷி said...

//யாருய்யா இந்த பீர் முகமது..? நான் முன்ன பின்ன கேள்விப்பட்டதே இல்லை.. மனுஷன் போன வாரம் என் தளத்தில் வெறியாட்டம் ஆடியிருக்கிறார்.//

ஏதாவது POT புரொகிராமா இருக்கும்ண்ணே.. உங்கள் எத்தனை பதிவுகளுக்குப் பின்னூட்டம் போட்டிருந்தேனோ அத்தனை பதிவுகளில் இருந்தும் அப்டேட் மெயில்கள் எனக்கு வந்துருச்சு. அப்போவே இந்த பீர் பாயை நல்லாப் புடிச்சி திட்டி விட்டுட்டேன்.. (மனசுக்குள்ள தான் :-)))

ரிஷி said...

//நட்பின் அடிப்படையில் அவரைப் பார்க்க கல்லூரிக்குப் போயிருந்தோம். விழா முடிந்து கல்லூரி வளாகத்தைக் கடக்கும்வரை மெளனம் காத்தோம். ஆனால் பாய்ச்சலுக்கான பதுங்கல் அது என நான் யூகித்தேன்.//
நான் கூட அது நீங்களோன்னு நினைச்சேன். அம்புட்டு பெரிய ஆளா நீங்க.. அப்படின்னு டவுட்டு ஆகி படிச்சிக்கிட்டே வந்தா கடைசிலதான் தெரியுது பவா செல்லத்துரைன்னு. ஹும்...!!

ரிஷி said...

//அந்த கோல்டன் பீரியடு முடிந்தது முடிந்ததுதான்..!//

ஃபீலிங்க்ஸ்..??
அழக்கூடாது... தம்பிக்கும் இங்க அதே ஃபீலிங்க்ஸ்!!! :-(

ரிஷி said...

//கட்சிப் பதவி இருந்தால்தான் சிறைக்குள் நுழையும்போதே ஜட்டியுடன் நின்று தப்பிக்கலாம்.//

ஜட்டிக் கொள்ளையர்கள் அட்டகாசம் என்ற தலைப்பில் மாவட்டச் செய்தி ஒன்றைப் படித்தேன். இவுகதானே நாளைக்கு அவுகளா மாறுவது..!!!

ரிஷி said...

//நானும் ஏதோ 4 பேருக்குப் பிடிப்பதுபோல் எழுதுகிறேன் என்று எனக்கு இப்போதுதான் தன்னம்பிக்கை பிறந்துள்ளது..!//

அட்லீஸ்ட் இதையாவது ப்ரொஃபைல்ல போடுங்கண்ணே...!

உண்மைத்தமிழன் said...

[[[ரிஷி said...

//யாருய்யா இந்த பீர் முகமது..? நான் முன்ன பின்ன கேள்விப்பட்டதே இல்லை.. மனுஷன் போன வாரம் என் தளத்தில் வெறியாட்டம் ஆடியிருக்கிறார்.//

ஏதாவது POT புரொகிராமா இருக்கும்ண்ணே.. உங்கள் எத்தனை பதிவுகளுக்குப் பின்னூட்டம் போட்டிருந்தேனோ அத்தனை பதிவுகளில் இருந்தும் அப்டேட் மெயில்கள் எனக்கு வந்துருச்சு. அப்போவே இந்த பீர் பாயை நல்லாப் புடிச்சி திட்டி விட்டுட்டேன்.. (மனசுக்குள்ளதான் :-)))]]]

அப்பாடா.. இப்பத்தான் சந்தோஷமா இருக்கு.. சோகத்துலேயும் பங்கு போட்டுக்க ஒரு ஆள் இருக்காங்கப்பா..! தேங்க்ஸ்டா முருகா..!

உண்மைத்தமிழன் said...

[[[ரிஷி said...

//நட்பின் அடிப்படையில் அவரைப் பார்க்க கல்லூரிக்குப் போயிருந்தோம். விழா முடிந்து கல்லூரி வளாகத்தைக் கடக்கும்வரை மெளனம் காத்தோம். ஆனால் பாய்ச்சலுக்கான பதுங்கல் அது என நான் யூகித்தேன்.//

நான்கூட அது நீங்களோன்னு நினைச்சேன். அம்புட்டு பெரிய ஆளா நீங்க.. அப்படின்னு டவுட்டு ஆகி படிச்சிக்கிட்டே வந்தா கடைசிலதான் தெரியுது பவா செல்லத்துரைன்னு. ஹும்...!!]]]

எனக்கும் பாலபாட வாத்தியார் பாலகுமாரனோடு சந்திப்புகள் உண்டு. பிறிதொரு நாளில் சொல்கிறேன்..!

உண்மைத்தமிழன் said...

[[[ரிஷி said...

//அந்த கோல்டன் பீரியடு முடிந்தது முடிந்ததுதான்..!//

ஃபீலிங்க்ஸ்..?? அழக் கூடாது... தம்பிக்கும் இங்க அதே ஃபீலிங்க்ஸ்!!!:-(]]]

ஓ.. அப்படியே? சேம் பிளட்டா..? நன்றி..!

உண்மைத்தமிழன் said...

[[[ரிஷி said...

//கட்சிப் பதவி இருந்தால்தான் சிறைக்குள் நுழையும்போதே ஜட்டியுடன் நின்று தப்பிக்கலாம்.//

ஜட்டிக் கொள்ளையர்கள் அட்டகாசம் என்ற தலைப்பில் மாவட்டச் செய்தி ஒன்றைப் படித்தேன். இவுகதானே நாளைக்கு அவுகளா மாறுவது..!!!]]]

ஆத்தா ஆட்சியில், ஜட்டியோடு நிற்க வைத்து விசாரணை செய்வதுதான் பழக்கம்..!

உண்மைத்தமிழன் said...

[[[ரிஷி said...

//நானும் ஏதோ 4 பேருக்குப் பிடிப்பதுபோல் எழுதுகிறேன் என்று எனக்கு இப்போதுதான் தன்னம்பிக்கை பிறந்துள்ளது..!//

அட்லீஸ்ட் இதையாவது ப்ரொஃபைல்ல போடுங்கண்ணே...!]]]

நோ.. நோ.. இப்போ இருக்கிறதே நல்லாத்தான் இருக்கு. அதுவே போதும் ரிஷி..!

ஒரு வாசகன் said...

பழைய பார்முக்கு வந்திட்டீங்க வாழ்த்துக்கள்

உண்மைத்தமிழன் said...

[[[ஒரு வாசகன் said...

பழைய பார்முக்கு வந்திட்டீங்க வாழ்த்துக்கள்.]]]

எல்லாம் உங்களைப் போன்ற வாசகர்கள் இருப்பதால்தான்..!

Unknown said...

/ ஒரு பாட்டில் நுவக்ரானை குடிக்கலாம் என்றுதான் தோன்றுகிறது./

என்னால முடிஞ்சது! இது கூட பண்ண மாட்டமா! நாங்க ஸ்பான்ஸர் பண்ணுறம்னே!

கோ ஸ்பான்ஸர்ஸ் காண்டாக்ட் அட் arunaiyadi@gmail.com

உண்மைத்தமிழன் said...

[[[அருணையடி said...

/ஒரு பாட்டில் நுவக்ரானை குடிக்கலாம் என்றுதான் தோன்றுகிறது./

என்னால முடிஞ்சது! இதுகூட பண்ண மாட்டமா! நாங்க ஸ்பான்ஸர் பண்ணுறம்னே! கோ ஸ்பான்ஸர்ஸ் காண்டாக்ட் அட் arunaiyadi@gmail.com]]]

அப்படியே கூட சியர்ஸ் சொல்லி குடிக்கிறதுக்கும் ஆள் வேணும்.. வர்றேளா கந்தா, கடம்பா, கதிர்வேலா..?