07-07-2011
என் இனிய வலைத்தமிழ் மக்களே..!
தோண்டத் தோண்ட ஊழல்கள் என்ற ரீதியில் இதுவரையில் அதிகம் வெளியில் சொல்லப்படாத வேளாண்மைத் துறை ஊழல்களைப் பற்றி இந்த மாதத்திய சூரியக்கதிர் பத்திரிகையில் விரிவான கட்டுரை வெளியாகியுள்ளது.
அது உங்களுக்காக இங்கே..
கடந்த வாரம் வேளாண்துறையின் கூட்டத்தை கூட்டினார் முதல்வர் ஜெயலலிதா. ‘இந்த நாட்டின் முதுகெலும்பே விவசாயிகளும், விவசாயமும்தான். எனவே, வேளாண்துறையை வளர்க்க, விவசாயிகளுக்கு உண்மையாகவே நன்மை செய்திட என்ன செய்யலாம்?’ என்று விவாதித்தார். அதேபோன்று வாக்களித்த மக்களுக்கு நன்றி சொல்லும் விதமாக ஸ்ரீரங்கம் சென்ற முதல்வர், அங்கும் தொகுதி மக்களின் குறைகளைக் கேட்டறிந்து ரூ.190 கோடி அளவிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியதோடு மட்டுமல்லாமல், அந்த பகுதி மக்களின் அடிப்படை தேவையான விவசாயத்தை வளர்க்கும் விதமாக தோட்டக்கலை பல்கலைக்கழகத்தையும் தொடங்கப் போவதாக அறிவித்தார்.
முதல்வர் ஜெயலலிதாவின் நடவடிக்கைகள் எல்லாம் விவசாயம் சார்ந்த வளர்ச்சிப் பணிகளில் இருக்க, நடந்து முடிந்த தி.மு.க ஆட்சியில் வேளாண் துறையில் மெகா ஊழல்கள் நடந்திருப்பது கண்டு தமிழகத்தின் தோட்டக்கலை துறை அதிர்ந்து போயிருக்கிறது.
என் இனிய வலைத்தமிழ் மக்களே..!
தோண்டத் தோண்ட ஊழல்கள் என்ற ரீதியில் இதுவரையில் அதிகம் வெளியில் சொல்லப்படாத வேளாண்மைத் துறை ஊழல்களைப் பற்றி இந்த மாதத்திய சூரியக்கதிர் பத்திரிகையில் விரிவான கட்டுரை வெளியாகியுள்ளது.
அது உங்களுக்காக இங்கே..
கடந்த வாரம் வேளாண்துறையின் கூட்டத்தை கூட்டினார் முதல்வர் ஜெயலலிதா. ‘இந்த நாட்டின் முதுகெலும்பே விவசாயிகளும், விவசாயமும்தான். எனவே, வேளாண்துறையை வளர்க்க, விவசாயிகளுக்கு உண்மையாகவே நன்மை செய்திட என்ன செய்யலாம்?’ என்று விவாதித்தார். அதேபோன்று வாக்களித்த மக்களுக்கு நன்றி சொல்லும் விதமாக ஸ்ரீரங்கம் சென்ற முதல்வர், அங்கும் தொகுதி மக்களின் குறைகளைக் கேட்டறிந்து ரூ.190 கோடி அளவிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியதோடு மட்டுமல்லாமல், அந்த பகுதி மக்களின் அடிப்படை தேவையான விவசாயத்தை வளர்க்கும் விதமாக தோட்டக்கலை பல்கலைக்கழகத்தையும் தொடங்கப் போவதாக அறிவித்தார்.
முதல்வர் ஜெயலலிதாவின் நடவடிக்கைகள் எல்லாம் விவசாயம் சார்ந்த வளர்ச்சிப் பணிகளில் இருக்க, நடந்து முடிந்த தி.மு.க ஆட்சியில் வேளாண் துறையில் மெகா ஊழல்கள் நடந்திருப்பது கண்டு தமிழகத்தின் தோட்டக்கலை துறை அதிர்ந்து போயிருக்கிறது.
நாடு முழுவதும் உள்ள சிறு மற்றும் குறு விவசாயிகளுக்காக வேண்டி இந்த தோட்டக்கலைத் துறையில் ஆர்வம் காட்டியது மத்திய அரசு. ஒரு வருடத்திற்கு அறுபது கோடி ரூபாயை மானியமாகவே தமிழகத்திற்குக் கொடுத்து வருகிறது. இது தவிர, ஐம்பது சதவீத மானிய விலையில் வேறு அறுபது கோடியை கொடுத்து வருகிறது. ஐந்து ஏக்கர், பத்து ஏக்கர் என்று வைத்திருக்கும் விவசாயிகள் அந்தந்த மாவட்ட நிலைக்கு ஏற்ப வாழை, மா, முந்திரி, நெல்லி, மல்லிகை என்று தங்கள் வசதிக்கேற்றதைப் பயிர்செய்து கொள்ளலாம். அதற்கான விதை, பூச்சி மருந்து உரம், தேவையான கருவிகள் என்று தேவையான அனைத்தையும் மத்திய அரசு பணத்தில் இலவசமாகவே கொடுக்க வேண்டும். தோட்டக்கலைத் துறையின் கோப்புகள் அப்படி கொடுத்ததாக மட்டுமே கணக்கு காட்டியுள்ளது. உண்மையில் அப்படி ஏதும் அதிசயம் நடந்தேறவில்லை. விவசாயிகளின் வாழ்வும் செழிக்கவில்லை என்பதுதான் வேதனையான ஒன்று. கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும் இப்படி ரூ.450 கோடிகளை ‘ஊழலாகவே’ பயிர் செய்திருக்கிறார் முன்னாள் வேளாண் துறை அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம்.
இனி எப்படியெல்லாம் அந்த ஊழல் விவசாயம் நடந்தேறியது என்பதைப் பார்க்கலாம்.
அந்தந்த பகுதிகளில் உள்ள பயன்பெறும் விவசாயிகளின் பெயர் பட்டியல் இருக்கும். அவர்களுக்குத் தேவையான விதை கொடுப்பதில் தொடங்கி, அது விளைச்சலாகும் வரையிலான எல்லாவிதப் பொருட்களையும் மாநில அரசின் தோட்டக்கலைத் துறையே கொடுக்க வேண்டும். இதில நீரில் கரையும் உரத்திற்கு மட்டுமே ஆண்டுக்கு அறுபது கோடி கொடுக்கப்படுகிறது. பொட்டாசியம் நைட்ரேட், மோனோ அம்மோனியம் பாஸ்பேட் போன்ற உரங்களை நீரில் கலந்து சொட்டு நீர்ப் பாசன முறையில் விவசாயிகளுக்கு தரவேண்டும். அதற்கான கருவிகள்கூட இலவசமே. தோட்டக்கலைத் துறை கொடுத்திருக்க வேண்டும். விவசாயிகள் வாங்கியிருக்க வேண்டும். ஆனால், அப்படி ஏதும் நடக்கவே இல்லை. எந்தவித அங்கீகாரமும் இல்லாத லெட்டர் பேட் கம்பெனிகளுக்குதான் அதற்கான டெண்டர் கொடுக்கப்பட்டிருக்கிறது. அவர்கள் யார் என்பதை தோண்டினாலே அமைச்சரின் நிஜமுகம் அம்பலத்திற்கு வந்துவிடும் என்பது வேறு செய்தி. அந்த லெட்டர்பேட் கம்பெனிகள் ‘எல்லாமும் கொடுக்கப்பட்டு’ வந்ததாக சொல்கிறார்கள். சில மாவட்டங்களில் உள்ள அதிகாரிகள் போதிய(!) ஒத்துழைப்புத் தரவில்லை என்றால் வேறு வழியைக் கையாள்வார்கள். அதாவது மார்க்கெட்டில் உள்ள டி.ஏ.பி, மற்றும் பொட்டாஷ் உரங்களை வாங்கி, அதை நீரில் கலந்து, உண்மையாகவே அந்த பகுதிகளில் உள்ள விவசாயிகளுக்கு கொடுப்பார்கள். அதைதான் விவசாயிகள் சொட்டுநீர் மூலம் தெளித்து வருவார்கள்.
பொட்டாசியம் நைட்ரேட், மோனோ அம்மோனியம் பாஸ்பேட் ஆகிய மருந்துகள் ஒரு கிலோ நூறு ரூபாய். ஆனால், இந்த கலப்பட உரங்களின் மதிப்பு ஒரு கிலோ 7.50 மட்டுமே. பெரும்பாலான விவசாயிகள் போலி நபர்களாக, வெறும் பெயர் பதிவில் மட்டுமே இருப்பார்கள். இருக்கும் ஒரு சிலருக்கும் உண்மையான உரம் மருந்துகளை கொடுப்பதில்லை. சூப்பர் தோட்டக்கலை புரட்சி! பல கோடிகள் கோவிந்தா...
இதில் வேடிக்கை என்னவென்றால் தோட்டக்கலை துறையில் இருந்து உரம் போன்றவைகளை டெண்டர் மூலம் பெறும் இந்த லெட்டர் பேட் கம்பெனிகள்தான் வேளாண்துறைக்கு மருந்துகளை சப்ளை செய்து வருகிறார்கள். ஆண்டுக்கு பதினைந்து கோடி ரூபாய் அளவிற்கு இந்த நபர்களிடம் இருந்துதான் வேளாண் துறைக்கு பூச்சி மருந்து உரங்களை பெற்றுக்கொண்டிருக்கிறார்கள்(!?) என்ற வேதனையும் ஒன்று.
அடுத்து வேப்பம் புண்ணாக்கு சப்ளை. இது ஆண்டுக்கு ரூபாய் ஐந்து கோடி சப்ளை. தோட்டக்கலை பயிர்களுக்கு பூச்சிகள் பிடித்துவிடக்கூடாது என்பதற்காகவும் சிறந்த சத்து உரமாகவும் உபயோகிக்கப்படுவது. கடந்த ஐந்து ஆண்டுகளில் சுமார் 20,000 டன் கொள்முதல் செய்து தோட்டக்கலை விவசாயிகளுக்கு கொடுத்திருக்கிறார்களாம். வேடிக்கை என்னவென்றால் மத்திய அரசின் புள்ளி விபரப்படி இவ்வளவு புண்ணாக்கு உற்பத்தி கிடையாது என்று சொல்கிறது. ஆனாலும், வீரபாண்டி ஆறுமுகத்திற்கு மட்டும் எங்கிருந்தோ கிடைத்திருக்கிறது!
ரம்பத்தூள்களை வாங்கி, மக்கிப்போன வேறு புண்ணாக்கு தூள்களை வாங்கி அதில் வேப்பம் எண்ணெய்யை ஸ்பிரே மூலம் தெளித்து ‘வேப்பம் புண்ணாக்கு’ என்று கொடுத்து வந்தார்கள். இது ஏதோ கட்டுக்கதை அல்ல. கடந்த காலங்களில் ஜெயா டி.வி யில் செய்தியாக காட்டப்பட்டதுதான். அந்தந்த பகுதிகளில் உள்ள தோட்டக்கலை பயிர் விவசாயிகளுக்கு வந்த ‘வேப்பம் புண்ணாக்கு’ பாக்கெட்டுகளை பார்த்து அதிர்ந்து போய் ஊடகத்தை அழைத்துக் காட்டினார்கள். அப்போது எந்த ஊடகமும் அதற்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை. ஜெயா டி.வி மட்டுமே ஒளிபரப்பியது.
அடுத்ததும் அக்கப்போர் ஊழல்தான். தோட்டக்கலை விவசாயிகளுக்கு கொடுக்கப்பட்ட மண் புழு உரம்! ஆண்டுக்கு ரூபாய் ஐந்து கோடி, இதற்கு மட்டுமே. இந்த உரத்தை மண் புழுவின் எச்சத்திலிருந்து தயாரிக்க வேண்டும். ஒரு ஆண்டுக்கு 5,000 டன் முதல் 15,000 டன் மண்புழு உரம் வாங்கி விவசாயிகளுக்கு கொடுத்ததாக கணக்குக் காட்டியிருக்கிறது லெட்டர்பேட் கம்பெனிகள். இந்தியா முழுக்க உள்ள மண்புழு உரம் உற்பத்தியே அவ்வளவு இல்லை என்கிறது மத்திய அரசின் புள்ளி விபரம். அப்படியிருக்க தி.மு.க அரசுக்கு மட்டும் எங்கிருந்து எப்படி கிடைத்தது? வேறு என்ன.? வெறும் மாட்டுச்சாணத்தையே மணலில் கலந்து ‘இதுதான்பா அது’ என்று கொடுத்திருக்கிறார்கள். இதற்கு ஆதாரமும் கடந்த கால ஜெயா டி.வி.தான். நடப்பதிலேயே மட்டமான, கேவலமான ஊழல் இதுதான் என்று மக்கள் பேசும் அளவிற்கு ஜெயா டி.வி அதிர வைத்தது.
அதேபோன்று தோட்டக்கலை விவசாயிகளுக்கு மா, வாழை, நெல்லி, போன்ற விதைகள், செடிகள், மரக்கன்றுகள் வழங்கிய விவகாரம். இதற்கு மட்டுமே ஆண்டிற்கு ஆறு கோடி ரூபாய். விதைகளை நட்டு நீர் ஊற்றி வளர்க்க வேண்டிய பாலிதீன் பை, கீழே அதற்கான பிளாஸ்டிக் விரிப்பு, அதிகம் வெயில் படாமல் வளர்வதற்கான நெட், ஷீட்டுகளுக்கு என்று ஆண்டிற்கு ரூபாய் ஒரு கோடி. ஆவணங்களின்படி பார்த்தால் டெண்டர் எடுத்த கம்பெனிகள், ‘எங்கேயோ வாங்கியிருக்கிறார்கள். கொடுத்தும் இருக்கிறார்கள்.’ ஆனால், எந்த விவசாயிகளுக்கு என்பதுதான் கேள்விக்குறி. சுத்தமாக அடித்து சுருட்டியிருக்கிறார்கள்.
அடுத்து உயர் உரம் என்கிற பயோ ஃபெர்டிலைசர்ஸ் சப்ளை செய்த விதம். தோட்டக்கலை பயிருக்குப் பயன்படுத்தும் உரம். இந்த உரத்தை தமிழக வேளாண்துறையே எட்டு மையங்களில் தயாரிக்கிறது. தவிர ஓராண்டுக்கு முன்புதான் மேலும் ஒன்பது யூனிட்டுகளை நிறுவியது. ஆனால், உற்பத்தியை தொடங்கவில்லை என்பது வேறு விஷயம். ஏற்கெனவே எட்டு உற்பத்தி மையங்களிலேயே இந்த பயோ ஃபெர்டிலைசர்ஸ் உரம் தயாராகிறது. தோட்டக்கலைத் துறைக்கான உரத்தை இங்கிருந்தே வாங்கி விவசாயிகளுக்கு கொடுக்க முடியும். அப்படி ஏதும் செய்யவில்லை. முன்னாள் அமைச்சருக்கு லாபம் வேண்டுமல்லவா? அதனால், அந்த லெட்டர்பேட் கம்பெனிகளுக்கே உரிமை கொடுக்கப்பட்டது! அவர்கள் தனியார் கம்பெனியில் வாங்கி இந்த உரத்தை கொடுத்தார்களாம். எந்த தனியார் கம்பெனி என்று பார்த்தால் மேலும் அதிர்ச்சி. அந்த தனியார் கம்பெனிகளுக்கு பயோ ஃபெர்டிலைசர்ஸ் உரம் தயாரிக்கும் கருவிகளே கிடையாது என்பதுதான். அப்படியானால் அந்த மாதிரி உரம கொடுக்கப்படவில்லையா என்று கேட்டால்.. அட கொடுத்தால்தானே விவசாயிகளுக்கு தெரியும் என்ற வேதனை குரல்தான் மிஞ்சுகிறது. இதில் மட்டுமே ஆண்டிற்கு மூன்று கோடி ரூபாய் சுருட்டப்பட்டிருக்கிறது.
இதுபோக செம்மொழி பூங்கா ஏற்காடு, மாதவரம், தென்காசி, ஊட்டி ஆகிய இடங்களில் அமைக்கப்பட்ட பூங்காக்களுக்கு பெங்களூரைச் சேர்ந்த ஒரு கம்பெனிக்கு பூங்கா வேலைகளை செய்யும் பணி ஒதுக்கி கொடுக்கப்பட்டது. பூங்கா வேலைகளை தொடங்குவதற்கு முன்பாகவே டெண்டர் விலையில் 40 சதவீதத் தொகையை முன் பணமாகவே கொடுத்து முடித்துள்ளதிலும் ‘வில்லங்கக்’ கதை. இந்த பெங்களூரு கம்பெனியும் சட்டத்திற்கு முரணாக வேறு கம்பெனிக்கு சப்-காண்டிராக்ட் கொடுத்தருக்கிறது. சென்னை செம்மொழி பூங்காவிற்கு சென்னையிலேயே உள்ள ஒரு காண்டிராக்டருக்கு மிக அதிக விலையில் பணி ஒப்பந்தம் கொடுக்கப்பட்டிருக்கிறது. அது எப்படி என்ற விவரம் கோப்புகளில் உள்ளது.
இப்படி தோட்டக்கலை துறையில் நடந்தேறியது எல்லாமும் அப்பட்டமான ஊழல். அதுவும் 2-ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில் எப்படி திடீர் கம்பெனிகள் பெயரில் அலைக்கற்றை ஒதுக்கி கொடுத்து, போகாத ஊருக்கு பணம் சென்று, சேராத நபர்களிடம் சேர்ந்ததோ அதே பாணியில் இந்த துறையிலும் நடந்தேறியிருக்கிறது. முன் அனுபவம் உள்ள டெண்டர்தாரர்களுக்குதான் டெண்டர் கொடுக்க வேண்டும் என்ற விதிமுறைகளும் காற்றில் பறந்திருக்கிறது. அனுபவமே இல்லாத, தகுதியே இல்லாத கம்பெனிகளை எல்லாம் விளையாட விட்டிருக்கிறது முன்னாள் தி.மு.க அரசு.
ஆக, கடந்த ஐந்து ஆண்டுகளில் சுமார் ரூ.350 கோடிகளில் இருந்து ரூ.400 கோடிகள் வரையிலும் அப்பட்டமான ஊழல், தோட்டக்கலைத் துறையில் மட்டுமே நடந்தேறியிருக்கிறது. பயனாளிகள் என்ற விவசாயிகளின் பெயர் பட்டியலை பார்த்து விசாரணை நடத்தினாலே சந்தி சிரிக்க தொடங்கிவிடும். இதில் வேடிக்கை என்னவென்றால் கடந்த ஐந்தாண்டு காலத்தில் எந்த அதிகாரிகள் இப்படியான ஊழலுக்கு உடைந்தையாக துணை நின்றார்களோ, அதே அதிகாரிகள்தான் இப்போதும் தோட்டக்கலைத் துறையில் இருக்கிறார்கள்.
ஊழலற்ற ஆட்சியைக் கொடுப்பேன் என்று உறுதி செய்துவிட்டு ‘மக்கள் நலம்பெற வேண்டும்’ என்ற முனைப்போடு செயல்படும் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் இதை கவனத்தில் கொள்ளவேண்டும் என்பதே பொதுநலன் விரும்புவோரின் கருத்தாக உள்ளது. மேற்கண்ட ஊழல்கள் அனைத்திற்கும் கோப்புகளே ஆதாரமாக உள்ளது. சப்ளை செய்த கம்பெனிகள் எங்கே? அவர்கள் யார்? அவர்களுக்குப் பின்னணி யார்? என்ற தேடல்கள் எல்லாம் முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் வீட்டு விலாசத்திற்கே கொண்டு போய்விடும். அடுக்கடுக்கான ஆதாரங்கள் முதல்வரின் பார்வைக்குப் போக இருக்கிறது. அதிரப்போகும் உண்மைகளை மக்கள் அறியப் போகிறார்கள் என்பதே அடுத்த எதிர்பார்ப்பு.
இருப்பதிலேயே பாவப்பட்டவன் விவசாயிதான். அந்த பாவப்பட்டவர்களின் வயிற்றிலேயே மணல் அடித்து ஊழல் செய்தவர்களை அம்மாதான் தண்டிக்க வேண்டும் என்ற குரலும் கேட்காமலில்லை!
நன்றி : சூரியக்கதிர்-ஜூலை-1-15
|
Tweet |
45 comments:
me the first :)
super!!appo aduththa aalu ivarthaanaa!
அண்ணா காலத்தில் மொழி எதிர்ப்பு போரில் , வீரமாக சிறை சென்ற திமுகவினர் , இன்று ?் , வீரமாக சிறை சென்ற திமுகவினர் , இன்று ?
Like I heard his first son Chezhiyan died in AIDS, His second one also go soon with his dedicated scam politics. Ping back from http://www.jeejix.com
raittu..
[[[அகில் பூங்குன்றன் said...
me the first :)]]]
கருத்தைச் சொல்லுங்கப்பான்னா மீ தி பர்ஸ்ட்டாம்..
[[[thamizhan said...
super!! appo aduththa aalu ivarthaanaa!]]]
உள்ளே தள்ளப்பட வேண்டியதற்கான காரணங்கள் நிறைய இருக்கு.. அதுல இதுவும் ஒண்ணு..!
[[[பார்வையாளன் said...
அண்ணா காலத்தில் மொழி எதிர்ப்பு போரில் வீரமாக சிறை சென்ற திமுகவினர், இன்று வீரமாக சிறை சென்ற திமுகவினர், இன்று ?]]]
இன்றைக்கும் அதே வீரமாகத்தான் ஜெயிலுக்குப் போறாங்க. ஆனால் காரணம்தான் வேற..!
[[[admin said...
Like I heard his first son Chezhiyan died in AIDS, His second one also go soon with his dedicated scam politics.
Ping back from http://www.jeejix.com]]]
இல்லை. செழியன் நுரையீரல் புற்றுநோயால் இறந்தார்.
[[[!* வேடந்தாங்கல் - கருன் *! said...
raittu..]]]
அவ்ளோதானா..?
இப்படி எல்லாரும் கொள்ளையடிச்சு எத்தனை தலைமுறைக்கு சொத்து சேர்த்து வைக்கப்போறாங்க..?!! இன்னும் எத்தனை நூற்றாண்டு ஆனாலும் மனுசனுக்கு ஒரு சாண் வயிறுதானே! ஒரு பக்கம் மேடு ஏறிட்டே போனா பத்து இடத்துல பள்ளம் விழும்னு தெரியாதா!
அட பாவிங்களா? 1996ல ஜெயலலிதா ஊழல் சொல்லி என்னமா சன் டீவியில் காட்னாங்க. தெ..... இவனுங்கலாம் நல்ல அப்பா அம்மாவுக்குதானே பிறந்தார்கள்? அப்புறம் எப்படி இப்படி?
மானங்கெட்டா பொணந்தைன்னி நாய்கள். பணமா தின்னா கூட ஒரு லட்சத்திற்கு மேல திங்கமுடியாது டா..!! விவசாயிங்க கிட்டே இருந்தும் பிடிங்கி தின்னு.. பணம் சம்பாதித்தால் விலைவாசி ராக்கெட் வேகத்துல போகாம என்ன பண்ணும்?
என்ன தலைவா
கொஞ்சம் கூட மனசாட்சியே இல்லாம எழுதுறீங்க
தன்மான தலைவருக்கு ரெண்டு மனைவி
அவங்களுக்கே அவர் ௦௦௦௦௦௦௦1760000000000 கோடி ஊழல் செஞ்சிரிக்கும் போது ( எதனை ஜீரோ என்று கூட எனக்கு தெரியல )
வீரபண்டியாருக்கு ரெண்டு இல்ல மூணு மனைவி என்று நினைக்கிறேன்
எப்படி தலைவா 400 கோடி பத்தும் ??????????????,
[[[ரிஷி said...
இப்படி எல்லாரும் கொள்ளையடிச்சு எத்தனை தலைமுறைக்கு சொத்து சேர்த்து வைக்கப் போறாங்க..?!! இன்னும் எத்தனை நூற்றாண்டு ஆனாலும் மனுசனுக்கு ஒரு சாண் வயிறுதானே! ஒரு பக்கம் மேடு ஏறிட்டே போனா பத்து இடத்துல பள்ளம் விழும்னு தெரியாதா!]]]
இது உங்களுக்குத் தெரியும் ரிஷி.. ஏன்னா உமக்கு அனுபவம் இருக்கு. இவங்களுக்கு இல்லையே..?
[[[ராஜரத்தினம் said...
அட பாவிங்களா? 1996-ல ஜெயலலிதா ஊழல் சொல்லி என்னமா சன் டீவியில் காட்னாங்க. இவனுங்கலாம் நல்ல அப்பா அம்மாவுக்குதானே பிறந்தார்கள்? அப்புறம் எப்படி இப்படி?]]]
எல்லாம் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்தான்..!
[[[Rafeek said...
மானங்கெட்டா பொணந்தைன்னி நாய்கள். பணமா தின்னாகூட ஒரு லட்சத்திற்கு மேல திங்க முடியாதுடா..!! விவசாயிங்ககிட்டே இருந்தும் பிடிங்கி தின்னு.. பணம் சம்பாதித்தால் விலைவாசி ராக்கெட் வேகத்துல போகாம என்ன பண்ணும்?]]]
எல்லாம் செஞ்சிட்டு நாங்க யோக்கியம்ன்னு கதை விடுறாங்க பாருங்க..!
[[[rse said...
என்ன தலைவா கொஞ்சம்கூட மனசாட்சியே இல்லாம எழுதுறீங்க
தன்மான தலைவருக்கு ரெண்டு மனைவி அவங்களுக்கே அவர் 1760000000000 கோடி ஊழல் செஞ்சிரிக்கும்போது ( எதனை ஜீரோ என்று கூட எனக்கு தெரியல )
வீரபண்டியாருக்கு ரெண்டு இல்ல மூணு மனைவி என்று நினைக்கிறேன்
எப்படி தலைவா 400 கோடி பத்தும் ??????????????,]]]
ம்.. மக்கள்ஸ் வர வர எவ்வளவு தப்பு நடந்தாலும், அதை ஜீரணிக்கப் பழகிட்டாங்க..
வீரபாண்டியாருக்கு 2 மனைவிகள்தான். ஆனால் வாரிசுகள் நிறைய..!
யப்பா....
இந்த 5 வருஷத்துக்குள்ள எல்லாத்தையும் தோண்டி எடுத்திட முடியுமா தல?
உண்மையை தயங்காமல் தோலுரித்து பதிவிடும் தங்களின் செயல் பாராட்டிற்குரியது! ஆனால், வெறும் தி.மு.க. எதிர்ப்பு தன்மையோடு மட்டும் இன்றி, எவரெவர் என்னென்ன தவறு செய்திடினும் அதனை வெளிச்சத்திற்கு கொண்டு வரவோ அல்லது அது குறித்த தங்களின் பதிவினையோ தங்களிடமிருந்து எதிர்நோக்குகின்றேன். தினமணி போன்றே சமச்சீர்கல்வி (மாணவச் சந்ததியினர் படும் பாடு) உட்பட தற்போதைய ஆளுங்கட்சியின் சறுக்கல்களை, அரசியற் காழ்ப்புணர்வினை கண்டும் காணாமல் இருப்பது உண்மைத் தமிழனுக்கு அழகல்ல. தவறு இழைத்தால் கொட்டுவதும், நன்மைப் புரிந்தவுடன் ஷொட்டுவதும் தான் நடுநிலையாளர்க்கு அழகு.
அம்மாவின் சமச் சீர்(கெட்ட) கல்வி பற்றி ஏதாவது எழுதலாமே? வழக்கம்போல ஏதாவது பத்திரிக்கையில் இருந்து நகல் எடுக்கலாமே...
[[[R.Gopi said...
யப்பா.... இந்த 5 வருஷத்துக்குள்ள எல்லாத்தையும் தோண்டி எடுத்திட முடியுமா தல?]]]
அம்மா நினைச்சா செய்யலாம். ஆனால் அதுக்குள்ள உள்ளடி வேலை நடந்திருச்சுன்னா முடியாது..!
[[[நெல்லி. மூர்த்தி said...
உண்மையை தயங்காமல் தோலுரித்து பதிவிடும் தங்களின் செயல் பாராட்டிற்குரியது! ஆனால், வெறும் தி.மு.க. எதிர்ப்பு தன்மையோடு மட்டும் இன்றி, எவரெவர் என்னென்ன தவறு செய்திடினும் அதனை வெளிச்சத்திற்கு கொண்டு வரவோ அல்லது அது குறித்த தங்களின் பதிவினையோ தங்களிடமிருந்து எதிர்நோக்குகின்றேன். தினமணி போன்றே சமச்சீர்கல்வி (மாணவச் சந்ததியினர் படும்பாடு) உட்பட தற்போதைய ஆளுங்கட்சியின் சறுக்கல்களை, அரசியற் காழ்ப்புணர்வினை கண்டும் காணாமல் இருப்பது உண்மைத்தமிழனுக்கு அழகல்ல. தவறு இழைத்தால் கொட்டுவதும், நன்மைப் புரிந்தவுடன் ஷொட்டுவதும்தான் நடுநிலையாளர்க்கு அழகு.]]]
என்னைப் பற்றிய உங்களது மதிப்பிட்டீற்கு மிக்க நன்றி நண்பரே..!
சமச்சீர் கல்வி, மற்றும் தலைமைச் செயலக விஷயத்தில் எனக்கு மாற்றுக் கருத்து உண்டு. எதுவாக இருந்தாலும் 2 மாதமாவது காத்திருந்து திட்டத் துவங்கலாம் என்று நினைத்தேன். அதனால்தான் தாமதம்.
இப்போது எனது கவனமெல்லாம் முந்தைய ஆட்சியின் அலங்கோலங்களை வெளிப்படுத்துவது என்பதில்தான் இருக்கிறது..!
[[[Sundar said...
அம்மாவின் சமச்சீர்(கெட்ட) கல்வி பற்றி ஏதாவது எழுதலாமே? வழக்கம்போல ஏதாவது பத்திரிக்கையில் இருந்து நகல் எடுக்கலாமே.]]]
நல்ல ஐடியாவா இருக்கே.. சுட்டிரலாம் சுந்தர்..!
சிலமாதங்களுக்கு முன் தி.மு.க கட்சி ஆளிடம் தன வீட்டை பறிகொடுத்த மேற்கு மாம்பலம் நண்பர் ஒருவரைப்பற்றி பதிவிட்டிருந்தீர்.
போலீஸ் கூட அந்த புகாரை ஏற்க மறுப்பதாகவும் குறிப்பிட்டிருந்தீர்கள்.
இப்போ நிலைமை என்ன ?
விசாரித்து கூற இயலுமா?
நன்றி
இறைவா..புண்ணாக்கு ஊழல் செய்வோர் நாக்கை நிரந்தரமாக புண் ஆக்கு!
தலைவா....
ஒரே ஒரு யோக்கியன கூட கண்ணுல காணலியே தி.மு.க. கட்சியில...
[[[சிந்திப்பவன் said...
சில மாதங்களுக்கு முன் தி.மு.க கட்சி ஆளிடம் தன வீட்டை பறி கொடுத்த மேற்கு மாம்பலம் நண்பர் ஒருவரைப் பற்றி பதிவிட்டிருந்தீர்.
போலீஸ்கூட அந்த புகாரை ஏற்க மறுப்பதாகவும் குறிப்பிட்டிருந்தீர்கள். இப்போ நிலைமை என்ன? விசாரித்து கூற இயலுமா?
நன்றி]]]
தற்போது வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது. வாய்தாவுக்கு அலைந்து கொண்டிருக்கிறார் அந்த அப்பாவி..! அந்தக் கொடுமைக்காரன் தற்போது அ.தி.மு.க. யூனியன் தலைவருடன் ஐக்கியமாகி தனக்குப் பாதுகாப்பைத் தேடிக் கொண்டானாம்..! என்ன கொடுமை பாருங்க..!
[[[! சிவகுமார் ! said...
இறைவா.. புண்ணாக்கு ஊழல் செய்வோர் நாக்கை நிரந்தரமாக புண் ஆக்கு!]]]
நானும் வேண்டிக் கொள்கிறேன்..!
[[[R.Gopi said...
தலைவா.... ஒரே ஒரு யோக்கியன கூட கண்ணுல காணலியே தி.மு.க. கட்சியில.]]]
எத்தனை வழக்குகள்.. எத்தனை புகார்கள் பாருங்கள்.. இந்த ஆட்சி போனது நியாயமானதுதான்..!
Dear TT,
The P.A's of Veerapandi like Murugesa Boopathi who is now VC of Tamil Nadu Agricultural Univ,His brother Mr.Kousika Boopathi a right hand man all have amassed wealth which is un imaginable.When side kicks have made so much money no wonder the minister has plundered the Agricultural Dept.
This man Kousika Boopathi is the fixer for all tenders.I have seen this when i went for one import tender of phospate from South Africa which was worth 15 crores.
சென்னையில் சிறுவனை சுட்ட ராணுவ அதிகாரி அவனை வேண்டுமென்ற சுடவில்லை என்றும், பயமுறுத்துவதற்காக வேறு திசையில் சுட்டதாகவும் அது தவறிப் போய் அச்சிறுவன் மேல் குண்டு பட்டுவிட்டதாகவும் சொல்லியுள்ளார்.
நான் என் சிறுவயதில் மாங்காய் அடிக்க கல் எறிவேன். மாங்காயை குறி வைத்து எறிந்தால் மாங்காயே விழாது. ஆக, ஏதோ ஒரு திசையில் கல்லை எறிந்தால் அது போய் மாங்காய் மேல் பட்டு அது விழும். இதை வைத்து பார்க்கும் போது அந்த ராணுவ அதிகாரி சொல்வதில் உண்மை இருக்க வாய்ப்புண்டு என்பது புரிகிறது.
ஆகவே நீங்கள் யாரையாவது உண்மையிலேயே சுட விரும்பவில்லை எனில் அந்த குறிப்பிட்ட நபரை குறி வைத்து மட்டுமே சுடுங்கள். அப்போதுதான் குண்டு அவரை விட்டு விட்டு வேறு திசையில் போய் விழும். தப்பித்தவறி வேறு எங்கேயோ சகட்டுமேனிக்கு சுட்டு தொலைத்து மட்டும் விடாதீர்கள்.
Unmai Tamilan, Kannaal kaanbathuvum poi, Kaathaal ketpavathum poi. Theera visaarippathe mei.
-DMK thondan.
சரவணன்,
உங்கள் பதிவில் Email Subscription option கொடுத்தால் நல்லாருக்குமே! கொடுப்பீர்களா?
அப்புறம் ஒரு அன்பு வேண்டுகோள். பின்வரும் வரியை தூக்கிவிடுங்கள். நல்லாவேயில்லை.
"பிறந்து, வளர்ந்ததில் சொல்லிக் கொள்ளும்படியான சாதனைகள் எதுவும் இதுவரை இல்லை; உயிருடன் இருப்பதைத் தவிர.."
[[[San said...
Dear TT,
The P.A's of Veerapandi like Murugesa Boopathi who is now VC of Tamil Nadu Agricultural Univ, His brother Mr.Kousika Boopathi a right hand man all have amassed wealth which is un imaginable. When side kicks have made so much money no wonder the minister has plundered the Agricultural Dept.
This man Kousika Boopathi is the fixer for all tenders.I have seen this when i went for one import tender of phospate from South Africa which was worth 15 crores.]]]
என்ன செய்வது..? ஒருவர் மட்டுமே ஊழல்வாதி என்றால்கூட சகித்துக் கொண்டிருக்கலாம். ஒட்டு மொத்தக் கட்சியும், மகன்களும், மகள்களும், பேரன்களும், பேத்திகளுமாக குடும்பமே ஊழல் குடும்பமாக இருப்பதைத்தான் சகிக்க முடியவில்லை..!
[[[d said...
சென்னையில் சிறுவனை சுட்ட ராணுவ அதிகாரி அவனை வேண்டுமென்ற சுடவில்லை என்றும், பயமுறுத்துவதற்காக வேறு திசையில் சுட்டதாகவும் அது தவறிப் போய் அச்சிறுவன் மேல் குண்டுபட்டுவிட்டதாகவும் சொல்லியுள்ளார்.
நான் என் சிறுவயதில் மாங்காய் அடிக்க கல் எறிவேன். மாங்காயை குறி வைத்து எறிந்தால் மாங்காயே விழாது. ஆக, ஏதோ ஒரு திசையில் கல்லை எறிந்தால் அது போய் மாங்காய் மேல் பட்டு அது விழும். இதை வைத்து பார்க்கும் போது அந்த ராணுவ அதிகாரி சொல்வதில் உண்மை இருக்க வாய்ப்புண்டு என்பது புரிகிறது.
ஆகவே நீங்கள் யாரையாவது உண்மையிலேயே சுட விரும்பவில்லை எனில் அந்த குறிப்பிட்ட நபரை குறி வைத்து மட்டுமே சுடுங்கள். அப்போதுதான் குண்டு அவரை விட்டு விட்டு வேறு திசையில் போய் விழும். தப்பித் தவறி வேறு எங்கேயோ சகட்டுமேனிக்கு சுட்டு தொலைத்து மட்டும் விடாதீர்கள்.]]]
நண்பர் டி அவர்களே..
அவருடைய இந்த வாக்குமூலத்தை நான் நம்புகிறேன்.. தூக்கம் கெடுகிறதே என்ற கோபத்தில் சுட்டு விரட்டலாம் என்று சுட்டிருப்பார். அவர் நேரத்துக்கு அந்தப் பையன் இறந்துவிட்டான்.. ஆனால் அதற்கான தண்டனையை அவர் அனுபவித்துதான் ஆக வேண்டும்..! வேறு வழியில்லை..!
[[[ABCD said...
Unmai Tamilan, Kannaal kaanbathuvum poi, Kaathaal ketpavathum poi. Theera visaarippathe mei.
- DMK thondan.]]]
இதுக்கு மேலேயும் உங்க கட்சித் தலைவர்கள் யோக்கியர்கள் என்று நம்புகிற உங்களைப் பார்த்து பரிதாபப்படுகிறேன்..!
[[[ரிஷி said...
சரவணன், உங்கள் பதிவில் Email Subscription option கொடுத்தால் நல்லாருக்குமே! கொடுப்பீர்களா?]]]
எப்படி கொடுப்பது? கொஞ்சம் சொல்லிக் கொடுங்களேன்..!
[[[அப்புறம் ஒரு அன்பு வேண்டுகோள். பின்வரும் வரியை தூக்கி விடுங்கள். நல்லாவேயில்லை.
"பிறந்து, வளர்ந்ததில் சொல்லிக் கொள்ளும்படியான சாதனைகள் எதுவும் இதுவரை இல்லை; உயிருடன் இருப்பதைத் தவிர.."]]]
உண்மைதானே..? நான் ஏதாவது ஒரு சாதனை செய்ததாக நினைத்துவிட்டால் நிச்சயமாக அன்றைக்கு அந்த வார்த்தைகளை நீக்கி விடுவேன்.. ஆனால் இப்போது முடியவே முடியாது ரிஷி..!
ரொம்ப நாளாக களத்தில் காணவில்லையே ஏதாவது உடம்பு சுகவீனமா? நலமாக உள்ளீர்களா?
[[[ஒரு வாசகன் said...
ரொம்ப நாளாக களத்தில் காணவில்லையே ஏதாவது உடம்பு சுகவீனமா? நலமாக உள்ளீர்களா?]]]
உண்மைதான் நண்பரே.. ஒற்றைத் தலைவலி.. உயிரை எடுத்துவிட்டது. இப்போது கொஞ்சம் பரவாயில்லை.. விசாரிப்புக்கு மிக்க நன்றி..!
//[[[ரிஷி said...
சரவணன், உங்கள் பதிவில் Email Subscription option கொடுத்தால் நல்லாருக்குமே! கொடுப்பீர்களா?]]]
எப்படி கொடுப்பது? கொஞ்சம் சொல்லிக் கொடுங்களேன்..! //
http://www.simplebloggertutorials.com/2011/03/email-subscription-widget-for-blogger.html
http://www.bloggertricks.com/2008/01/how-to-add-email-subscription-form-to.html
http://blogknowhow.blogspot.com/2009/06/add-email-subscription-blogger-blogspot.html
இவை உங்களுக்கு உதவக்கூடும்.
//[[[அப்புறம் ஒரு அன்பு வேண்டுகோள். பின்வரும் வரியை தூக்கி விடுங்கள். நல்லாவேயில்லை.
"பிறந்து, வளர்ந்ததில் சொல்லிக் கொள்ளும்படியான சாதனைகள் எதுவும் இதுவரை இல்லை; உயிருடன்
இருப்பதைத் தவிர.."]]]
உண்மைதானே..? நான் ஏதாவது ஒரு சாதனை செய்ததாக நினைத்துவிட்டால் நிச்சயமாக அன்றைக்கு அந்த
வார்த்தைகளை நீக்கி விடுவேன்.. ஆனால் இப்போது முடியவே முடியாது ரிஷி..!//
சாதனைக்கு எவ்வித அளவுகோல்களும் கிடையாது சரவணன்! உங்களுக்கு நிறைய எனர்ஜி இருக்கிறது. அந்த வாக்கியம் எதிர்மறையாகப் படுகிறதெனக்கு. பாஸிட்டிவாக மாற்றிக்கொண்டே ஆகவேண்டும்.
தகவலுக்கு மிக்க நன்றி ரிஷி. உடனே மாற்றிவிடுகிறேன்..!
[[[ரிஷி said...
சாதனைக்கு எவ்வித அளவுகோல்களும் கிடையாது சரவணன்! உங்களுக்கு நிறைய எனர்ஜி இருக்கிறது. அந்த வாக்கியம் எதிர்மறையாகப்படுகிறதெனக்கு. பாஸிட்டிவாக மாற்றிக் கொண்டே ஆக வேண்டும்.]]]
ரிஷி, பாஸிட்டிவ்வாக நினைப்பதாலேயே ஒருவருக்கு துன்பங்கள் நேராமல் இருக்கப் போவதில்லை. எனக்கு துன்பம் வரப் போகிறது என்று நான் நினைப்பதிலேயே வரும் துன்பத்தில் பாதி குறைந்துவிடும் அனுபவம் எனக்குள் உண்டு..!
:-)))
Post a Comment