சமச்சீர் கல்வியின் துயரம்..!

19-07-2011

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

முன்னாள் முதல்வர் கருணாநிதி 5 ஆண்டுகளாக அரும்பாடுபட்டு சம்பாதித்த கெட்ட பெயரை, ஆட்சிக்கு வந்த ஒரு மாத்த்திலேயே பெற்றுவிட்டார் புரட்சித் தலைவி.


சமச்சீர் கல்வி முறை தமிழகத்துக்குத் தேவையா? இல்லையா? என்கிற காலக்கட்டத்தையெல்லாம் தாண்டி இப்போது தினமும் பள்ளிக்கூடம் செல்லும் குழந்தைகளுக்கு படிப்புச் சொல்லித் தருவீர்களா? மாட்டீர்களா? என்று கேள்வி கேட்கும் நிலைமைக்குத் தள்ளிவிட்டார் ஜெயல்லிதா.

சமச்சீர் கல்வி புத்தகங்களில் இருக்கும் கருணாநிதியின் கவிதைகள்தான் ஜெயல்லிதாவுக்கு உறுத்தல் என்றால் அந்த ஒன்றை மட்டும் நீக்கிவிட்டு மீதமுள்ளவற்றை அப்போதே அனுமதித்திருக்கலாம்..!

கருணாநிதி கொண்டு வந்த திட்டம் என்ற நோக்கிலேயே இந்தச் சமச்சீர் கல்வித் திட்டத்தை எதிர்கொண்டது தவறானது. ஒரு ஆட்சி போய் மறு ஆட்சி வந்தால் ஊழலை தோண்டலாம்.. துருவலாம்.. அதனால் பாதிப்பு இல்லை.. ஆனால் மக்களின் அடிப்படையான ஒரு விஷயத்தில்.. அதுவும் மாணவர்களின் படிப்பு சம்பந்தமான விஷயத்தில் இந்த அளவுக்கு ஜெயல்லிதா விளையாடியது கொடூரமானது..

பள்ளிக் குழந்தைகள் படிக்காமல் இருப்பதற்கான சூழல்கள் தினம்தோறும் அதிகரித்துக் கொண்டே வரும் இந்தக் காலக்கட்டத்தில் அவர்களை ஒரு மாதம் முழுவதும் அமைதி காத்திருக்க வைத்து, பின்பு அடுத்த 8 மாதங்களில் அனைத்துப் பாடங்களையும் படிக்க வைப்பது எவ்வளவு கடினம் என்பது ஆசிரியர்களுக்கும், பெற்றோர்களுக்கும் தெரியும்..

இந்தப் பதைபதைப்பில் தமிழகம் முழுவதும் கடந்த 2 மாதங்களாக இதுதான் ஹாட் டாபிக்காக ஓடிக் கொண்டிருக்கிறது. இது எதைப் பற்றியும் கவலைப்படாமல் ஏற்கெனவே 250 கோடிக்கு அச்சிடப்பட்டு தயார் நிலையில் இருக்கும் சமச்சீர் கல்வி புத்தகங்களை ஓரமாகத் தூக்கியெறிந்துவிட்டு, பழைய புத்தகங்களை அச்சடிக்க அவசரம், அவசரமாக 100 கோடி ரூபாய் நிதியையும் ஒதுக்கியிருப்பது எவன் என்னைக் கேட்பான்..? யாருக்கு அந்த தகுதி இருக்கு? என்கிற ஆணவம்தான் காரணமேயன்றி, வேறு எதுவுமே இல்லை..

ஜெயல்லிதா முன்பெல்லாம் தனது பேச்சில் ஆணவத்தையும், கர்வத்தையும் காட்டுவார். இப்போது மீடியாக்களின் முன்பு அமைதியாகி, சாந்த சொரூபியாகி, உள்புறம் மட்டும் தனது வேகத்தைக் காட்டிக் கொண்டிருக்கிறார்.

அந்த வேகத்தை, கோபத்தை மாநிலம் முழுவதும் நில மோசடியில் ஈடுபட்டவர்கள் மீது செயல்படுத்தினால் ஊர், ஊருக்கு அவருக்குக் கோவில் கட்ட அப்பாவி தமிழர்கள் ஆயிரம் பேர் காத்திருக்கிறார்கள். அதையெல்லாம் விட்டுவிட்டு அத்தனை பெற்றோர்களையும், ஆசிரியர்களையும் பரிதவிக்கும் செயலாக இப்படியொரு முட்டாள்தனத்தை செய்யும் இவரை திருத்துவது எப்படி..?

பத்தடி தூரம் தள்ளி நின்று வாய் பொத்தி, நேர் பார்வையில்லாமல் அடிமைத்தனத்தில் வாழும் அமைச்சர்களைப் பார்க்கின்றபோது நாம் யாரிடம் போய் இதைச் சொல்லி அழுவது என்றுதான் தெரியவில்லை..

தனிப்பட்ட ஈகோக்களை அரசு விஷயத்திலும், ஆட்சி விவகாரத்திலும் பயன்படுத்த்துதல் நல்ல அரசனுக்கு அழகல்ல.. உயர்நீதிமன்றம் கேள்வி மேல் கேள்வி கேட்டு இடைக்காலத் தடை கொடுத்தபோதே மாணவர்களின் நிலைமை கருதி பிறப்பிக்கப்பட்ட அவசரச் சட்டத்தை வாபஸ் பெற்று பழையபடி சமச்சீர் கல்வியை அமல்படுத்தியிருந்தால் மாநிலமும், கோர்ட் வட்டாரமும் இன்றைக்கு ஜெயல்லிதாவை புகழ்ந்திருக்கும்..

‘மாணவர்கள் நாட்டின் வளமான எதிர்காலம். அரசு அதை கருத்தில் கொண்டு உத்தரவை உடனே அமல்படுத்தும் என்று நம்புகிறோம்’ என்று தீர்ப்பின் இறுதியில் வேண்டுகோள் வைத்துள்ளது உயர்நீதிமன்றம்.

இதன் தீர்ப்பில் தமிழக அரசு நியமித்த கமிட்டியின் சிபாரிசுகளைவிட, அக்கமிட்டியையே நிராகரித்த நீதிபதிகளின் உத்தரவை நான் மிகவும் உயர்வாக நினைக்கிறேன்..!

அந்தக் கமிட்டியில் இருந்தவர்களுக்கும், சாதாரண குடிமக்களுக்கும் என்ன தொடர்பு..? கல்வியை விற்பனை செய்பவர்களை, அதுவும் தனக்குச் சாதகமாக கருத்துச் சொல்வார்கள் என்று உடன்படிக்கை செய்தேதான் இந்தக் கமிட்டியை நியமித்த்து வெட்டவெளிச்சம்..!

உச்சநீதிமன்றத்தில் நாளை அல்லது நாளை மறுநாள் வழக்கு விசாரிக்கப்படும். தீர்ப்பு வழங்க பத்து நாட்களாகும். இத்தனை நாட்கள் பொறுத்த மாணவர்கள் இன்னுமொரு பத்து நாட்கள் பொறுக்க மாட்டார்களா என்று ஆத்தா நினைக்கிறார். ஒருவேளை அங்கேயும் எதிர்ப்பாகவே தீர்ப்பு வந்துவிட்டால் அகிலம் போற்றும் அங்கயற்கண்ணி என்ன செய்வாரோ..? கருப்புப் போர்வையை போர்த்திக் கொண்டு தினமும் கோட்டைக்கு வந்து செல்வாரா? அல்லது மீண்டும் ஏதாவது ரகளைதான் செய்வாரா?

யாருக்குத் தெரியும்..? ஆத்தாவின் குணம் எப்போதும் ஒன்றுபோல் இருந்த்தில்லை. அமாவாசைக்கும், பெளர்ணமிக்கும் ஆடி அடங்கும் அலைகளைப் போல இவரது செயல்களும், பேச்சுக்களும் அலைபாய்ந்து கொண்டிருக்கின்றன..

சென்னை உயர்நீதிமன்றம் தந்துள்ள தீர்ப்பில் ஒரு அம்சம் மட்டுமே குறையாக உள்ளது. மேலும் சேர்க்க வேண்டிய பாடங்கள் ஏதேனும் இருந்தால் அதையும் 3 மாதங்களுக்குள் சேர்த்துக் கொள்ளலாம் என்று அனுமதியளித்துள்ளது.

இந்த ஒரு அனுமதியை வைத்து மீண்டும் 3 மாதங்கள் கழித்து பத்து பாடங்களை சேர்த்துக் கொடுத்தால் என்னாகும்..? படிப்புச் சொல்லித் தர வேண்டியது ஆசிரியர்களின் கடமை என்றாலும், அதற்கு நேரம், கால அவகாசம் தர வேண்டாமா..? நீதிமன்றம் இந்த வரிகளைக் குறிப்பிட்டிருக்கவே தேவையில்லை..!

நாம்தான்.. நன்கு தெரிந்துதான், கண்ணைத் திறந்து கொண்டு பார்த்தநிலையில்தான் ஆத்தாவை கோட்டையில் கொலுவேற்றியிருக்கிறோம். என்ன நடந்தாலும், எது நடந்தாலும் வேறு வழியில்லாமல் இந்தக் கொடுமையையும் இன்னமும் 5 ஆண்டுகளுக்கு நாம் அனுபவித்துதான் ஆக வேண்டும்..!

நேற்றைய தினம் கூகிள் பஸ்ஸிலும், பேஸ்புக்கிலும் இது சம்பந்தமாக நான் எழுதிய ஒரு நான்கு வரி எதிர்ப்பை இங்கே கடைசியாகப் பதிவு செய்ய வேண்டியுள்ளது.

"முருகா.. இந்தம்மாவை சீக்கிரமா பெங்களூர் ஜெயிலுக்கு டிரான்ஸ்பர் செய்யக் கூடாதா..? கொடுமை தாங்கலை.. ஏன் இந்தம்மா கல்யாணம் செஞ்சுக்கிட்டு, புள்ளைக் குட்டிய பெத்துக்கிட்டு குடும்பம் நடத்தாம போச்சு..? மக்களோட பிரச்சினையே தெரிஞ்சுக்காம இருக்கே..? வெளங்காதுய்யா.. இது வெளங்கவே வெளங்காது..!"

56 comments:

saarvaakan said...

/ஜெயல்லிதா முன்பெல்லாம் தனது பேச்சில் ஆணவத்தையும், கர்வத்தையும் காட்டுவார். இப்போது மீடியாக்களின் முன்பு அமைதியாகி, சாந்த சொரூபியாகி, உள்புறம் மட்டும் தனது வேகத்தைக் காட்டிக் கொண்டிருக்கிறார்./
/யாருக்குத் தெரியும்..? ஆத்தாவின் குணம் எப்போதும் ஒன்றுபோல் இருந்த்தில்லை. அமாவாசைக்கும், பெளர்ணமிக்கும் ஆடி அடங்கும் அலைகளைப் போல இவரது செயல்களும், பேச்சுக்களும் அலைபாய்ந்து கொண்டிருக்கின்றன.

/
வணக்கம் சகோ,
.பொதுவாக ஒரு அரசு பதவி ஏற்றூ குறைந்த பட்சம் 6 மாதம் ஆனால்தான் அதன் செயல்பாடுகள்,அதன் பலன்கள் தெரியும் வெளிப்படையாக தெரியும்.இந்த அரசு பல் விதங்களில் எதேச்சாதிகாரமாக செய்வது போல் கொஞ்ச நாட்களிலேயே தோன்ற ஆரம்பித்து விட்டது.
***********
நீங்கள் குறிப்பிட்ட இந்த கருத்து எனக்கு மட்டும் தோன்றுகிறதோ என்று நினைத்தேன் உங்களுக்கும் தோன்றுகிறது என்றால் உண்மையாக் இருக்க அதிக வாய்ப்பு.நன்றி!!!!!!!!!

மதுரை சரவணன் said...

கருத்துக் கூற ஒன்றுமில்லை, இருப்பினும் ஓட்டு மொத்தமாக குறை சொல்வதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. சமச்சீர் என்பது தவறான சொல்லாக படுகிறது , அனைத்து தரப்பு மாணவர்களின் பொதுவான பாடத் திட்டம் என்பதை ஒரு சாரர் மறுக்கின்றனர். ஒரு சாரர் உருவாக்கியது , ஒரு சாரசரை மையப்படுத்தி உருவாக்கப்பட்டது எனவும் ,மெட்ரிக் பள்ளியில் படித் த மாணவன் தற்போது சமச்சீர் பாடத்தினை இரண்டு வருடங்கள் முன்போ படித்து விட்டான் என்பதை பலர்(பெற்றோர்) புலம்புவதை காண முடிகிறது. அதனால் தான் இன்னும் இது மக்களின் பொது பிரச்சனையாக உருவாகவில்லை. மீடியாக்களின் பிரச்சனையாக, மீடியா சார்ந்த மக்களின் பிரச்சனையாக உருவெடுத்துள்ளது. பொது மக்கள் யாரும் மறியல் செய்ததாக, போராடியதாக தெரியவில்லை. அமைப்பு சார்ந்த போரட்டங்கள் தான் காணமுடிகிறது . எந்த ஆசிரிய மன்றங்களும் ஈடுபட்டதாக தெரியவில்லை. அதற்காக நான் சமச்சீர் பாடத்திட்ட்த்திற்கு எதிரியல்ல. அனைத்து தரப்பு ஆசிரியர்களைக் கொண்டு முறைப்படி குறைகள் களைக்கப்பட வேண்டும். அதுவரை எந்த பாடத்திட்டத்தைனையாவது அமல்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். தற்போதைய அரசும் சமச்சீர் கல்விக்கு எதிரியல்ல என வெளீப்படையாக சொல்வதை நாம் மறந்து விடக் கூடாது.

தமிழ்வாசி பிரகாஷ் said...

கோர்ட் தீர்ப்பு பற்றிய செய்திகள் ஜெயா சேனலில் துளியும் சொல்லவில்லை...

Anonymous said...

எல்லாவற்றையும் பதறியபடியே பார்த்துக் கொண்டிருந்த தமிழக மாணவர்களும் பெற்றோரும்... 'அடச்சே...' என்று தற்போது வெறுத்துப் போய் உட்கார்ந்திருக்கிறார்கள்!

ஜூன் முதல் வாரத்தில் திறக்கப்பட வேண்டிய பள்ளிகள், மூன்றாவது வாரத்தில்தான் திறக்கப்பட்டிருக்கின்றன. பாடம் என்று எதுவுமே நடத்தப்படாத பள்ளிக்கு... கையை வீசிக் கொண்டு பரிதாபமாகச் சென்று வருகின்றன குழந்தைகள்!

ஆசிரியர்களுக்கு 'பிரிட்ஜ் கோர்ஸ்’ எனப்படும் பயிற்சி, ஒரே நாளில் (?) கொடுக்கப்பட்டுள்ளது. அதைக் கற்றுக்கொண்டுவிட்ட (?) ஆசிரியர்கள், செயல்முறை கற்றல் கல்வி மூலம் பாடல்கள், நீதிக் கதைகள், மனக் கணக்குகள் என்று மாணவர்களுக்குச் சொல்லிக் கொடுக்கிறார்கள். 'வீட்டில் இருந்து தொல்லை கொடுக்காமல், அங்கே போய் உட்கார்ந்து வந்தால்கூட போதும்' என்று பெற்றோரும் தினமும் அனுப்பி வைத்துக் கொண்டுள்ளனர்.

Anonymous said...

''சரி, உண்மையிலேயே சமச்சீர் கல்விக் கான பாடங்களின் தரம் குறைவானதாகத்தான் இருக்கின்றனவா?'' என்றபடி, அந்த பாடநூல் தயாரிப்புக் குழுவில் இருந்த ஆசிரியர்கள் சிலரைச் சந்தித்தோம். இந்த இக்கட்டான சூழலில் தங்களின் பெயர்கள் வெளிவருவதை விரும்பதாவர்களாகப் பேசிய அவர்களின் குரலில், ஏகத்துக்கும் வேதனை யின் வலி.

''நடைமுறையில் இருக்கும் கல்வி, குருவித் தலையில் பனங்காயை வைத்துப் பார்ப்பதாகத்தான் இருக்கிறது. அதாவது, தேவையற்ற மன அழுத்தத்தை மாணவர்களுக்கு உண்டாக்கும் அளவுக்கு இருக்கிறது. இப்படிப்பட்ட பல காரணங்களுக்காகத்தான் சமச்சீர் கல்வியே உருவானது. ஐந்தாவது படிக்கிற மாணவனுக்கு என்ன தெரிய வேண்டுமோ... அதை, செயல்வழிக் கற்றல் எனும் முறையில் அந்த மாணவன் எளிமையாக கற்றுக்கொள்ளும் வகையில் பாடத் திட்டம் வகுக்கப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு பாடமும் மாணவனின் ஆளுமையை, அறிவை, சுயமாக சிந்திக்கும் திறனை வளர்க்கும் விதமாக அமைக்கப்பட்டுள்ளது. சுயசிந்தனையை வளர்க்காத பாடத் திட்டத்துக்குப் பழக்கப்பட்ட மாணவர்கள், மூன்றே மாதங்களில் மனப்பாடம் செய்து ஒப்பித்து மார்க் வாங்குவதில் என்ன பலன் இருக்கும்?’' என்று கேள்வி எழுப்பியவர்கள்,

Anonymous said...

''இத்தனைக்கும் வெறும் ஆசிரியர் குழு மட்டுமே ஓர் அறையில் அமர்ந்து கொண்டு இவற்றையெல்லாம் தயாரிக்கவில்லை. எழுத் தாளர்கள், குழந்தை மனநல மருத்துவர்கள், சம்பந்தப்பட்ட பாடங்களில் தேசிய அளவில் புகழ் பெற்ற நிபுணர்கள் என்று பலரையும் வைத்துத்தான் பாடத்திட்டம் தயாரிக்கப்பட்டிருக்கிறது.

மெட்ரிக் பள்ளிகளில் ஏற்கெனவே இருக்கும் பாடத் திட்டத்தைத்தான் பெற்றோர் விரும்புகின்றனர் என்பதும் ஏமாற்றுவேலை. தங்களின் பணத்தேவைக்காக பெற்றோர்களையெல்லாம் அதற்கு பழக்கி ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள்'' என்று தங்கள் கடின உழைப்பும் முயற்சிகளும் வீணாகிக் கொண்டிருக்கும் கோபத்தில் பேசினார்கள்.

சமச்சீர் பாடத்திட்டக் குழுவில் இருந்த மெட்ரிக் பள்ளி நிர்வாகியும், கல்வியாளருமான 'ஆயிஷா’ நடராசன் கூறுகையில், ''மெட்ரிக் பள்ளிக் கல்வி என்பது பெற்றோர்களின் டாக்டர், இன்ஜினீயர் ஆசையை நிறைவேற்றும் வகையிலான மனப்பாடம் செய்யும் கல்வியை அடிப்படையாகக் கொண்டது என்பதில் மாற்றுக் கருத்து இல்லை'' என்று சொன்னவர்,

Anonymous said...

''கல்வியே தனியார்மயமாகிவிட்ட சூழலில், 'இதுதான் பொதுவான 'சிலபஸ், இதைப் பின்பற்றுங்கள்' என்று சொல்வதோடு அரசு நிறுத்திக் கொள்வது நல்லது. அதைவிடுத்து, இந்த புத்தகங்களைத்தான் வாங்க வேண்டும் என்று எதற்காகக் கட்டாயப்படுத்த வேண்டும்? 'நேஷனல் கரிகுலம் ஃபிரேம் ஒர்க்’ என்கிற தேசிய கமிட்டி, சமச்சீர் கல்வியை நாடு முழுவதும் பரிந்துரைத்த போது கேரளா, ஆந்திரா போன்ற மாநிலங்களில் மாநில அளவில் அனைத்துப் பள்ளிகளும் பின்பற்றக்கூடிய பொதுவான சிலபஸை உருவாக்கின. அதன்படி தயாராகும் புத்தகங்களை, அரசிடமிருந்தோ.... தனியார் புத்தக நிறுவனங்களிடமிருந்தோ வாங்கிக் கொள்ளலாம் என்றும் அனுமதி அளித்துள்ளன. அதே நடைமுறையை இங்கேயும் பின்பற்றினால் பிரச்னை தீர்ந்துவிடும்'' என்றார் யதார்த்தமாக!

Anonymous said...

'ஒன்றாம் வகுப்புக்கும் ஆறாம் வகுப்புக்கும் ஏற்கெனவே சமச்சீர் பாடங்கள் அமலில் இருப்பதால்... அதுவே தொடரட்டும். மற்ற வகுப்புகளுக்கான சமச்சீர் கல்விப் பாடங்களின் தரம் குறித்து நிபுணர் குழு அமைத்து ஆய்வு செய்யுங்கள்' என்று உச்ச நீதிமன்றம் சொல்லியிருப்பதால், தற்போது நிபுணர் குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழு மூன்று வாரத்தில் முடிவெடுத்து, உயர் நீதிமன்ற ஒப்புதலைப் பெறவேண்டும்.

இது எல்லாமே திட்டமிட்டபடி நடந்து முடிந்து, 'ஏற்கெனவே அச்சடிக்கப்பட்டிருக்கும் சமச்சீர் கல்வி புத்தகங்களே போதும்' என்று முடிவெடுத்தாலே... கிட்டத்தட்ட ஒரு மாதத் துக்கும் மேலான பள்ளி நாட்கள் ஏற்கெனவே வீணாகியிருக்கும். அதேசமயம்... 'அந்தப் பாட புத்தகங்கள் தரமற்றவை' என்று முடிவெடுத்து விட்டால், புதிய புத்தகங்களை அச்சிடுவதற்கு மூன்று, நான்கு மாதங்களாவது தேவைப்படும். அத்தனை பள்ளி நாட்களும் வீண் என்பது ஒருபுறமிருக்க... அதுவரை என்ன செய்வார்கள் மாணவர்களும் ஆசிரியர்களும்? கால் பரீட்சை, அரையாண்டு பரீட்சை என்னாகும்? பொதுத் தேர்வு எழுதும் 7 லட்சம் மாணவர்களின் நிலை என்னாகும்? என்றெல்லாம் பற்பல கேள்விகளுடன் அல்லாடிக் கொண்டு இருக்கிறார்கள் மாணவர்கள்.

சமூகத்தை தெளிவுபடுத்தத்தான் கல்வி. அந்தக் கல்வியே குழப்பத்தில் இருந்தால்

R.Gopi said...

குதிரை கெடச்சா நல்லதுன்னு நெனச்சோம்... கழுதை தான் கெடச்சது... இந்த வருசம் அது வச்சு ஓட்டுவோம்...அடுத்த வருசம் குதிரைக்கு முயற்சிப்போம் - GAP10

நெல்லி. மூர்த்தி said...

இப்போது அமைத்திருந்த ஆய்வுக்குழு கூட ஒட்டு மொத்தமாக சமச்சீர்க்கல்வியைப் புறக்கணிக்கவில்லை. ஆளும் கட்சியின் அழுத்தம் காரணமாகவே / தனியார் கல்விக் கொள்கைக்கு துணை போகவே மேம்போக்காகத் தான் குத்துமதிப்பாக குறை கூறப்பட்டுள்ளது. இப்போதே மாநில அளவில் குறிப்பிடும் படியான வெற்றியை அரசுபள்ளி மாணவர்கள் சாதித்துள்ளார்கள். அனைத்தும் ஒரே சிலபஸ் என்றால் தனியார் துறையினர், பெற்றோர்களிடம் கொள்ளையடிக்க நிறையவே மோடிமஸ்தான் பணிகளை புரிய வேண்டிவரும். ஒன்றாம் வகுப்பும், ஆறாம் வகுப்பும் சென்ற ஆண்டு சமச்சீர்கல்வியினை செயற்படுத்திய போது எதிர்ப்பேதும் காட்டாது பவ்யமாக கொடநாட்டில் ஓய்வெடுத்த இன்றைய முதல்வர் ஜெ. இப்போது மட்டும் வீம்புக்காய் மாணவர்களின் கல்வியை வீணடிப்பது அம் மாணவர்களின் பெற்றோர் மனதில் ஆழமாய் ஒரு எதிர்ப்புணர்வை விதைக்கும் என்பதில் துளியளவும் ஐயமில்லை! இவருடைய பழைய ஆட்சி அனுபவங்களுடன் ஆய்ந்தால் இனி தொழிற்துறையும், நீதித் துறையும் வருங்காலங்களில் என்ன பாடுபடுமோ?!

ராஜரத்தினம் said...

நீங்க என்னபூ சொல்ல வர்றீங்க? சமச்சீர் கல்வி கொடுத்தால் யாரை வேண்டுமானாலும் சவுக்கால் அடிக்கலாம். எந்த போலிஸையும் அடிக்கலாம். யார் தாலியையும் அறுக்கலாம். அப்படிதானே? வெளங்கிடும்.

தறுதலை said...

பசங்க எல்லாம் படிக்க பள்ளிக்கூடம் போய்ட்டா கொடுக்கப்போற ஆடு மாடெல்லாம் யாரு மேய்க்கிறது? எல்லாம் ஒரு தொலை நோக்குத் திட்டத்தோடதான் அரசு செயல்படுது. சும்மா குத்தம் சொல்லனுமேன்னு எதையும் சொல்லக்கூடாது.

-------------------
தறுதலை
(தெனாவெட்டுக் குறிப்புகள் - ஜூலை '2011)

சீனு said...

எனக்கென்னவோ சோ போன்றவர்கள் சொல்லித்தான் இந்த அம்மா இந்த ஆட்டம் ஆடுதோனு தோனுது.

//"முருகா.. இந்தம்மாவை சீக்கிரமா பெங்களூர் ஜெயிலுக்கு டிரான்ஸ்பர் செய்யக் கூடாதா..? கொடுமை தாங்கலை.. ஏன் இந்தம்மா கல்யாணம் செஞ்சுக்கிட்டு, புள்ளைக் குட்டிய பெத்துக்கிட்டு குடும்பம் நடத்தாம போச்சு..?//

சே! இப்படியொரு ஆணாதிக்கவாதியா இருக்கீங்களேனு பொம்பளைங்க துடைப்பத்தோட வந்துட போறாங்க... :)

Prakash said...

ஒரு சந்தேகம், ஜெயா முன்னால் உட்காருபவர்களும், நிற்பவர்களும் ஏன் நுனி சீட்டில் மட்டும் அமர்ந்து, முகத்தை இருக்கமாக வைத்துக்கொண்டு, இரு கைகளையும் சேர்த்து தொடை மற்றும் இடுப்பு பகுதி சேரும் இடத்தில வைத்துகொள்கிறார்கள்.

செங்கோட்டையன், ஓபிஎஸ் - ஜெயா முன்னால் உட்கர்ந்திருக்கும் படங்களை பார்த்தால் புரியும்.

ரிஷி said...

உச்சநீதிமன்றமே சமச்சீர் கல்விதான் கொண்டுவரவேண்டும் என்று தீர்ப்பளித்தாலும் அதை ஏற்று நடந்துகொள்ள வேண்டிய அவசியம் இல்லையாமே! மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் கொள்கை முடிவுகளை மாற்றச் சொல்வதற்கு நீதிமன்றங்களுக்கு அதிகாரம் இல்லையாமே!

அந்த தைரியத்தில்தான் ஜெயலலிதா ஆடிக்கொண்டிருக்கிறார் என நினைக்கிறேன்.

ரிஷி said...

//Prakash said...

ஒரு சந்தேகம், ஜெயா முன்னால் உட்காருபவர்களும், நிற்பவர்களும் ஏன் நுனி சீட்டில் மட்டும் அமர்ந்து, முகத்தை இருக்கமாக வைத்துக்கொண்டு, இரு கைகளையும் சேர்த்து தொடை மற்றும் இடுப்பு பகுதி சேரும் இடத்தில வைத்துகொள்கிறார்கள்.

செங்கோட்டையன், ஓபிஎஸ் - ஜெயா முன்னால் உட்கர்ந்திருக்கும் படங்களை பார்த்தால் புரியும்.//

தொடை நடுங்கும்போது அதைப் பிடித்துக்கொள்ளத்தான் அந்த இடத்தில் கை வைத்துக்கொள்கிறார்கள் என நினைக்கிறேன். அதேபோல மக்களுக்கு ஒன்றும் செய்யாமல் அவர்கள் முன் வந்து அடுத்த தேர்தலில் நிற்கும்போது ஏன் தொடையே நடுங்க மாட்டேன்கிறது!!!

Shabeer said...

மக்காஸ்! போக போக உங்களுக்கு தெரியும். இது தி மு க வுக்கு எதிரான ஆட்சி மட்டும் தான். மக்கள் நலனாவது மாங்காயாவது என்று!.

ராஜ நடராஜன் said...

அண்ணே!சொல்றது நீங்களா விகடனா என்று பதிவின் கீழே பார்த்து உறுதிபடுத்திகிட்டே பின்னூட்டம் போடுறேன்.நீங்களேதான்:)

அரசியல் வசிஷ்டர்களாகிய நீங்க எல்லாம் வாயை மூடிகிட்டிருக்கீங்களேன்னுதான் நான் கூட ஜெயலலிதாவுக்கு பிரம்படி கொடுக்காம வாயை மூடிகிட்டிருக்கேன்.மேலும் 100 நாள் தவணைக்குப் பின்னே கருத்து சொல்லலாமென்று வேண்டுதல் வேற வச்சிருக்கேன்.அதோட ஜெயலலிதாகிட்ட நமக்கு ஒரு காரியமாக வேண்டிய ஜெயலலிதா-ஹில்லாரி கலந்துரையாடலை வேறு கவனிச்சிகிட்டிருப்பதாலும் அ.தி.மு.க அடியாளுக மாதிரி வாய்மூடி மௌனம் வேற.

சமச்சீர் கல்வியில் ஜெயலலிதாவின் வீழ்ச்சி துவங்குகிறதா என்பதை காலம் பதில் சொல்லும்.

ராஜ நடராஜன் said...

மதுரை சரவணன் புதிய கோணத்துல ஏதோ சொல்ல முயற்சிக்கிறாரே!இந்த முறை ஜெயலலிதாவின் நடவடிக்கையில் மாற்றம் தெரிகிற மாதிரி இருப்பதால் சமச்சீர் கல்வியில் மட்டும் எப்படி நீதிமன்றம் மேல்முறையீடு என்று பிடிவாதம் என்பதும் சமச்சீர் கல்வியில் ஜெயலலிதா தரப்பு வாதம் என்ன என்பதையும் மறுமொழியில் சொல்லுங்கள்.

Sundar said...

சம்பந்தம் இல்லாத பின்னூட்டம்... சோனியாவின் மருமகன் பற்றிய இந்த யூடியூப் பார்த்திருக்கீர்களா? இதைப்பற்றியும் எழுதுங்களேன்???

https://www.youtube.com/watch?v=XStbVLNj2ng

உண்மைத்தமிழன் said...

[[[சார்வாகன் said...

வணக்கம் சகோ, பொதுவாக ஒரு அரசு பதவி ஏற்றூ குறைந்த பட்சம் 6 மாதம் ஆனால்தான் அதன் செயல்பாடுகள், அதன் பலன்கள் தெரியும் வெளிப்படையாக தெரியும். இந்த அரசு பல் விதங்களில் எதேச்சாதிகாரமாக செய்வது போல் கொஞ்ச நாட்களிலேயே தோன்ற ஆரம்பித்து விட்டது.
***********

நீங்கள் குறிப்பிட்ட இந்த கருத்து எனக்கு மட்டும் தோன்றுகிறதோ என்று நினைத்தேன் உங்களுக்கும் தோன்றுகிறது என்றால் உண்மையாக் இருக்க அதிக வாய்ப்பு. நன்றி!!!!!!!!!]]]

இது உண்மைதான் சார்வாகன்.. அனைவரும் ஊசியால் குத்திய பின்புதான் நமக்கு வலிக்கும். ஆனால் ஜெயலலிதாவிடம் மட்டும் அவர் ஊசி குத்த வரும் முன்பேயே நமக்கு வலித்துவிடும். அவருடைய ஸ்டெப்ஸ் அப்படி..!

உண்மைத்தமிழன் said...

[[[மதுரை சரவணன் said...

கருத்துக் கூற ஒன்றுமில்லை, இருப்பினும் ஓட்டு மொத்தமாக குறை சொல்வதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. சமச்சீர் என்பது தவறான சொல்லாகப்படுகிறது, அனைத்து தரப்பு மாணவர்களின் பொதுவான பாடத் திட்டம் என்பதை ஒரு சாரர் மறுக்கின்றனர். ஒரு சாரர் உருவாக்கியது, ஒரு சாராரை மையப்படுத்தி உருவாக்கப்பட்டது எனவும், மெட்ரிக் பள்ளியில் படித்த மாணவன் தற்போது சமச்சீர் பாடத்தினை இரண்டு வருடங்கள் முன்போ படித்து விட்டான் என்பதை பலர்(பெற்றோர்) புலம்புவதை காண முடிகிறது. அதனால்தான் இன்னும் இது மக்களின் பொது பிரச்சனையாக உருவாகவில்லை. மீடியாக்களின் பிரச்சனையாக, மீடியா சார்ந்த மக்களின் பிரச்சனையாக உருவெடுத்துள்ளது. பொதுமக்கள் யாரும் மறியல் செய்ததாக, போராடியதாக தெரியவில்லை. அமைப்பு சார்ந்த போரட்டங்கள்தான் காண முடிகிறது. எந்த ஆசிரிய மன்றங்களும் ஈடுபட்டதாக தெரியவில்லை. அதற்காக நான் சமச்சீர் பாடத் திட்ட்த்திற்கு எதிரியல்ல. அனைத்து தரப்பு ஆசிரியர்களைக் கொண்டு முறைப்படி குறைகள் களைக்கப்பட வேண்டும். அதுவரை எந்த பாடத் திட்டத்தைனையாவது அமல்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். தற்போதைய அரசும் சமச்சீர் கல்விக்கு எதிரியல்ல என வெளீப்படையாக சொல்வதை நாம் மறந்துவிடக் கூடாது.]]]

கருணாநிதி ஆட்சியில் தயாரானது என்பதற்காகவே அந்த சமச்சீர் கல்விப் பாடத் திட்டங்கள் தவறானவை என்று சொல்லிவிட முடியாது.. அதனை மறுபரிசீலனை செய்ய வேண்டுமெனில் உண்மையான கல்வியாளர்களை வைத்துத்தான் பரிசோதனை செய்ய வேண்டும். ஆனால் ஜெயலலிதா நியமித்த ஆட்கள் அப்படி கல்வியாளர்களாக இல்லையே.. அனைவரும் பிஸினஸ்மேன்களாகத்தானே இருந்தார்கள். பின்பு எப்படி ஜெயலலிதா அரசு சொல்வதை நாம் ஏற்றுக் கொள்ள முடியும்..?

உண்மைத்தமிழன் said...

[[[தமிழ்வாசி - Prakash said...

கோர்ட் தீர்ப்பு பற்றிய செய்திகள் ஜெயா சேனலில் துளியும் சொல்லவில்லை.]]]

எப்படிச் சொல்லுவாங்க..? சொன்னால் அவமானமாச்சே..!?

உண்மைத்தமிழன் said...

[[[MAHA said...

எல்லாவற்றையும் பதறியபடியே பார்த்துக் கொண்டிருந்த தமிழக மாணவர்களும் பெற்றோரும்... 'அடச்சே...' என்று தற்போது வெறுத்துப் போய் உட்கார்ந்திருக்கிறார்கள்!

ஜூன் முதல் வாரத்தில் திறக்கப்பட வேண்டிய பள்ளிகள், மூன்றாவது வாரத்தில்தான் திறக்கப்பட்டிருக்கின்றன. பாடம் என்று எதுவுமே நடத்தப்படாத பள்ளிக்கு... கையை வீசிக் கொண்டு பரிதாபமாகச் சென்று வருகின்றன குழந்தைகள்!

ஆசிரியர்களுக்கு 'பிரிட்ஜ் கோர்ஸ்’ எனப்படும் பயிற்சி, ஒரே நாளில் (?) கொடுக்கப்பட்டுள்ளது. அதைக் கற்றுக் கொண்டுவிட்ட (?) ஆசிரியர்கள், செயல்முறை கற்றல் கல்வி மூலம் பாடல்கள், நீதிக் கதைகள், மனக் கணக்குகள் என்று மாணவர்களுக்குச் சொல்லிக் கொடுக்கிறார்கள். 'வீட்டில் இருந்து தொல்லை கொடுக்காமல், அங்கே போய் உட்கார்ந்து வந்தால்கூட போதும்' என்று பெற்றோரும் தினமும் அனுப்பி வைத்துக் கொண்டுள்ளனர்.]]]

கொடுமைதான்.. வேறென்ன சொல்ல..?

உண்மைத்தமிழன் said...

[[[MAHA said...

''நடைமுறையில் இருக்கும் கல்வி, குருவித் தலையில் பனங்காயை வைத்துப் பார்ப்பதாகத்தான் இருக்கிறது. அதாவது, தேவையற்ற மன அழுத்தத்தை மாணவர்களுக்கு உண்டாக்கும் அளவுக்கு இருக்கிறது. இப்படிப்பட்ட பல காரணங்களுக்காகத்தான் சமச்சீர் கல்வியே உருவானது. ஐந்தாவது படிக்கிற மாணவனுக்கு என்ன தெரிய வேண்டுமோ அதை, செயல்வழிக் கற்றல் எனும் முறையில் அந்த மாணவன் எளிமையாக கற்றுக் கொள்ளும் வகையில் பாடத் திட்டம் வகுக்கப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு பாடமும் மாணவனின் ஆளுமையை, அறிவை, சுயமாக சிந்திக்கும் திறனை வளர்க்கும் விதமாக அமைக்கப்பட்டுள்ளது. சுய சிந்தனையை வளர்க்காத பாடத் திட்டத்துக்குப் பழக்கப்பட்ட மாணவர்கள், மூன்றே மாதங்களில் மனப்பாடம் செய்து ஒப்பித்து மார்க் வாங்குவதில் என்ன பலன் இருக்கும்?’' என்று கேள்வி எழுப்பியவர்கள்.]]]

மாணவர்களுக்கு சுய சிந்தனையை ஊட்டக் கூடிய கல்வியை சமச்சீர் கல்வி தருமெனில் நாமும் அதனை வரவேற்போம்..!

உண்மைத்தமிழன் said...

[[[MAHA said...

சமச்சீர் பாடத்திட்டக் குழுவில் இருந்த மெட்ரிக் பள்ளி நிர்வாகியும், கல்வியாளருமான 'ஆயிஷா’ நடராசன் கூறுகையில், ''மெட்ரிக் பள்ளிக் கல்வி என்பது பெற்றோர்களின் டாக்டர், இன்ஜினீயர் ஆசையை நிறைவேற்றும் வகையிலான மனப்பாடம் செய்யும் கல்வியை அடிப்படையாகக் கொண்டது என்பதில் மாற்றுக் கருத்து இல்லை'' என்று சொன்னவர்,]]]

இந்த மனப்பாட முறை தவறு என்றால், மேல்படிப்பான தொழில் மற்றும் மருத்துவ படிப்புகளின் கல்வி முறையையும் மாற்ற வேண்டியிருக்கும். இதிலும் அரசு கவனம் செலுத்த வேண்டும்..!

உண்மைத்தமிழன் said...

[[[MAHA said...

''கல்வியே தனியார்மயமாகிவிட்ட சூழலில், 'இதுதான் பொதுவான 'சிலபஸ், இதைப் பின்பற்றுங்கள்' என்று சொல்வதோடு அரசு நிறுத்திக் கொள்வது நல்லது. அதைவிடுத்து, இந்த புத்தகங்களைத்தான் வாங்க வேண்டும் என்று எதற்காகக் கட்டாயப்படுத்த வேண்டும்? 'நேஷனல் கரிகுலம் ஃபிரேம் ஒர்க்’ என்கிற தேசிய கமிட்டி, சமச்சீர் கல்வியை நாடு முழுவதும் பரிந்துரைத்த போது கேரளா, ஆந்திரா போன்ற மாநிலங்களில் மாநில அளவில் அனைத்துப் பள்ளிகளும் பின்பற்றக் கூடிய பொதுவான சிலபஸை உருவாக்கின. அதன்படி தயாராகும் புத்தகங்களை, அரசிடமிருந்தோ, தனியார் புத்தக நிறுவனங்களிடமிருந்தோ வாங்கிக் கொள்ளலாம் என்றும் அனுமதி அளித்துள்ளன. அதே நடைமுறையை இங்கேயும் பின்பற்றினால் பிரச்னை தீர்ந்து விடும்'' என்றார் யதார்த்தமாக!]]]

இப்போது கல்வி வியாபாரிகளுக்கும், அதனை எதிர்ப்பவர்களுக்கும்தான் இப்போது சண்டை நடந்து வருகிறது! கல்வி வியாபாரிகள்தான் தங்களுக்கு இஷ்டமான பாடத் திட்டங்களை தாங்களே வகுத்துக் கொண்டு அதன்படிசெயல்படுகிறார்கள்! அவைகள் அனைத்துமே மேல்படிப்பை மனதில் வைத்து செயல்படுகின்றன.. இதனை அரசும் மனதில் கொள்ள வேண்டும்..!

உண்மைத்தமிழன் said...

[[[MAHA said...

சமூகத்தை தெளிவுபடுத்தத்தான் கல்வி. அந்தக் கல்வியே குழப்பத்தில் இருந்தால்...]]]

கொஞ்சம் வெயிட் பண்ணுங்கள்.. விரைவில் முடிந்துவிடும் இந்த நாடகம்..!

உண்மைத்தமிழன் said...

[[[R.Gopi said...

குதிரை கெடச்சா நல்லதுன்னு நெனச்சோம். கழுதைதான் கெடச்சது... இந்த வருசம் அது வச்சு ஓட்டுவோம். அடுத்த வருசம் குதிரைக்கு முயற்சிப்போம்.]]]

பார்ப்போம். எந்தக் குதிரை களத்துல வந்து நிக்குதுன்னு..?

உண்மைத்தமிழன் said...

[[[நெல்லி. மூர்த்தி said...

இப்போது அமைத்திருந்த ஆய்வுக் குழுகூட ஒட்டு மொத்தமாக சமச்சீர்க் கல்வியைப் புறக்கணிக்கவில்லை. ஆளும் கட்சியின் அழுத்தம் காரணமாகவே / தனியார் கல்விக் கொள்கைக்கு துணை போகவே மேம்போக்காகத்தான் குத்து மதிப்பாக குறை கூறப்பட்டுள்ளது. இப்போதே மாநில அளவில் குறிப்பிடும்படியான வெற்றியை அரசு பள்ளி மாணவர்கள் சாதித்துள்ளார்கள். அனைத்தும் ஒரே சிலபஸ் என்றால் தனியார் துறையினர், பெற்றோர்களிடம் கொள்ளையடிக்க நிறையவே மோடி மஸ்தான் பணிகளை புரிய வேண்டிவரும். ஒன்றாம் வகுப்பும், ஆறாம் வகுப்பும் சென்ற ஆண்டு சமச்சீர் கல்வியினை செயற்படுத்திய போது எதிர்ப்பேதும் காட்டாது பவ்யமாக கொடநாட்டில் ஓய்வெடுத்த இன்றைய முதல்வர் ஜெ. இப்போது மட்டும் வீம்புக்காய் மாணவர்களின் கல்வியை வீணடிப்பது அம் மாணவர்களின் பெற்றோர் மனதில் ஆழமாய் ஒரு எதிர்ப்புணர்வை விதைக்கும் என்பதில் துளியளவும் ஐயமில்லை! இவருடைய பழைய ஆட்சி அனுபவங்களுடன் ஆய்ந்தால் இனி தொழிற் துறையும், நீதித் துறையும் வருங்காலங்களில் என்ன பாடுபடுமோ?!]]]

ஒருவர் 10 சதவிகிதமே நல்லவராக இருக்கிறார். இன்னொருவர் 50 சதவிகிதம் நல்லவராக இருக்கிறார்..! நாம் யாரை தேர்வு செய்வது..?

உண்மைத்தமிழன் said...

[[[ராஜரத்தினம் said...

நீங்க என்னபூ சொல்ல வர்றீங்க? சமச்சீர் கல்வி கொடுத்தால் யாரை வேண்டுமானாலும் சவுக்கால் அடிக்கலாம். எந்த போலிஸையும் அடிக்கலாம். யார் தாலியையும் அறுக்கலாம். அப்படிதானே? வெளங்கிடும்.]]]

தற்போதைய சமச்சீர் கல்வி நடைமுறையை சிக்கலில்லாமல், தாமதமில்லாமல் நடைமுறைப்படுத்துங்கள் என்றுதான் சொல்கிறேன்..!

உண்மைத்தமிழன் said...

[[[தறுதலை said...

பசங்க எல்லாம் படிக்க பள்ளிக்கூடம் போய்ட்டா கொடுக்கப் போற ஆடு மாடெல்லாம் யாரு மேய்க்கிறது? எல்லாம் ஒரு தொலை நோக்குத் திட்டத்தோடதான் அரசு செயல்படுது. சும்மா குத்தம் சொல்லனுமேன்னு எதையும் சொல்லக்கூடாது.

-------------------
தறுதலை
(தெனாவெட்டுக் குறிப்புகள் - ஜூலை '2011)]]]

தறுதலை அதையேதான் நானும் சொல்றேன்.. யாரையும் குருட்டாம்போக்குல குத்தம் சொல்லக் கூடாது. ஆடு, மாடெல்லாம் வீட்ல இருக்குற வேலை வெட்டியில்லாதவங்களுக்கு மட்டும்தான்.]]]

உண்மைத்தமிழன் said...

[[[சீனு said...

எனக்கென்னவோ சோ போன்றவர்கள் சொல்லித்தான் இந்த அம்மா இந்த ஆட்டம் ஆடுதோனு தோனுது.]]]

இன்றைய குமுதம் படித்தீர்களா..? சோ சமச்சீர் கல்வி விஷயத்தில் ஜெயலலிதாவை இடித்துரைத்துள்ளார்.

//"முருகா.. இந்தம்மாவை சீக்கிரமா பெங்களூர் ஜெயிலுக்கு டிரான்ஸ்பர் செய்யக் கூடாதா..? கொடுமை தாங்கலை.. ஏன் இந்தம்மா கல்யாணம் செஞ்சுக்கிட்டு, புள்ளைக் குட்டிய பெத்துக்கிட்டு குடும்பம் நடத்தாம போச்சு..?//

சே! இப்படியொரு ஆணாதிக்கவாதியா இருக்கீங்களேனு பொம்பளைங்க துடைப்பத்தோட வந்துட போறாங்க... :)]]]

வரட்டுமே..? பார்ப்போம். நான் திருப்பியடிக்கிற சென்டிமெண்ட்ல துடைப்பம் காணாமப் போயிரும்..!

உண்மைத்தமிழன் said...

[[[Prakash said...

ஒரு சந்தேகம், ஜெயா முன்னால் உட்காருபவர்களும், நிற்பவர்களும் ஏன் நுனி சீட்டில் மட்டும் அமர்ந்து, முகத்தை இருக்கமாக வைத்துக்கொண்டு, இரு கைகளையும் சேர்த்து தொடை மற்றும் இடுப்பு பகுதி சேரும் இடத்தில வைத்து கொள்கிறார்கள்.

செங்கோட்டையன், ஓபிஎஸ் - ஜெயா முன்னால் உட்கர்ந்திருக்கும் படங்களை பார்த்தால் புரியும்.]]]

பயம் கலந்த மரியாதை..!

உண்மைத்தமிழன் said...

[[[ரிஷி said...

உச்சநீதிமன்றமே சமச்சீர் கல்விதான் கொண்டு வர வேண்டும் என்று தீர்ப்பளித்தாலும் அதை ஏற்று நடந்துகொள்ள வேண்டிய அவசியம் இல்லையாமே! மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் கொள்கை முடிவுகளை மாற்றச் சொல்வதற்கு நீதிமன்றங்களுக்கு அதிகாரம் இல்லையாமே! அந்த தைரியத்தில்தான் ஜெயலலிதா ஆடிக் கொண்டிருக்கிறார் என நினைக்கிறேன்.]]]

இல்லை. அதனைத்தான் உயர்நீதிமன்றம் உடைத்துவிட்டதே.. அரசியல் சட்டத்திற்கு விரோதமான சட்டம் என்று..! உச்சநீதிமன்றத்திலும் இதே தீர்ப்புதான் வரும். பாருங்கள்..!

உண்மைத்தமிழன் said...

ரிஷி said...

தொடை நடுங்கும்போது அதைப் பிடித்துக் கொள்ளத்தான் அந்த இடத்தில் கை வைத்துக் கொள்கிறார்கள் என நினைக்கிறேன். அதேபோல மக்களுக்கு ஒன்றும் செய்யாமல் அவர்கள் முன் வந்து அடுத்த தேர்தலில் நிற்கும்போது ஏன் தொடையே நடுங்க மாட்டேன்கிறது]]]

ரிஷியின் கருத்தை ஓ.பி.எஸ்ஸுக்கு அனுப்பி வைக்கிறேன். அவர் என்ன சொல்கிறார் என்று பார்ப்போம்..!

உண்மைத்தமிழன் said...

[[[Shabeer said...

மக்காஸ்! போக போக உங்களுக்கு தெரியும். இது தி மு க வுக்கு எதிரான ஆட்சி மட்டும்தான். மக்கள் நலனாவது மாங்காயாவது என்று!.]]]

அதையும் பார்ப்போம் சபீர்..! உங்கள் நம்பிக்கை பலிக்காமல் போகட்டும்..!

உண்மைத்தமிழன் said...

[[[ராஜ நடராஜன் said...

அண்ணே! சொல்றது நீங்களா விகடனா என்று பதிவின் கீழே பார்த்து உறுதிபடுத்திகிட்டே பின்னூட்டம் போடுறேன். நீங்களேதான்:)

அரசியல் வசிஷ்டர்களாகிய நீங்க எல்லாம் வாயை மூடிகிட்டிருக்கீங்களேன்னுதான் நான் கூட ஜெயலலிதாவுக்கு பிரம்படி கொடுக்காம வாயை மூடிகிட்டிருக்கேன். மேலும் 100 நாள் தவணைக்குப் பின்னே கருத்து சொல்லலாமென்று வேண்டுதல் வேற வச்சிருக்கேன். அதோட ஜெயலலிதாகிட்ட நமக்கு ஒரு காரியமாக வேண்டிய ஜெயலலிதா-ஹில்லாரி கலந்துரையாடலை வேறு கவனிச்சிகிட்டிருப்பதாலும் அ.தி.மு.க அடியாளுக மாதிரி வாய்மூடி மௌனம் வேற.

சமச்சீர் கல்வியில் ஜெயலலிதாவின் வீழ்ச்சி துவங்குகிறதா என்பதை காலம் பதில் சொல்லும்.]]]

உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை கப்சிப்பாக ஏற்றுக் கொண்டால் துவக்கப் புள்ளிகூட இருக்காது..!

உண்மைத்தமிழன் said...

[[[ராஜ நடராஜன் said...

மதுரை சரவணன் புதிய கோணத்துல ஏதோ சொல்ல முயற்சிக்கிறாரே! இந்த முறை ஜெயலலிதாவின் நடவடிக்கையில் மாற்றம் தெரிகிற மாதிரி இருப்பதால் சமச்சீர் கல்வியில் மட்டும் எப்படி நீதிமன்றம் மேல்முறையீடு என்று பிடிவாதம் என்பதும் சமச்சீர் கல்வியில் ஜெயலலிதா தரப்பு வாதம் என்ன என்பதையும் மறுமொழியில் சொல்லுங்கள்.]]]

தி.மு.க. அரசு கொண்டு வந்த சமச்சீர் கல்வி பாடப் புத்தகங்கள் அத்தனையும் சொத்தை என்கிறது அ.தி.மு.க. அரசு. அதனால் அமல்படு்தத மறுக்கிறது..!

இனி அ.தி.மு.க. அரசு வேறொரு குழுவை அமைத்து அதன் பரிந்துரையின் கீழ் வேறொரு சமச்சீர் கல்வி பாடப் புத்தகங்களை கொண்டு வரப் போகிறதாம்.. இதுதான் பிரச்சினை..!

உண்மைத்தமிழன் said...

[[[Sundar said...

சம்பந்தம் இல்லாத பின்னூட்டம்... சோனியாவின் மருமகன் பற்றிய இந்த யூடியூப் பார்த்திருக்கீர்களா? இதைப் பற்றியும் எழுதுங்களேன்???

https://www.youtube.com/watch?v=XStbVLNj2ng]]]

தகவலுக்கு மிக்க நன்றி சுந்தர்..!

Prakash said...

ஜெயா அரசின் சமசீர் கல்வி குளறுபடியால் ஏற்பட்ட மொத்த இழப்பு - 3890 கோடி

இந்த 2 மாதங்களும், un - productive, பயனட்ற, உற்பத்தி அற்ற மாதங்கள்.

நேரடி செலவு மற்றும் மறைமுக செலவை கணகிட்டால் மொத்த உற்பத்தி இழப்பையும் கணக்கிடலாம்.

நேரடி செலவு - புத்தங்கள் அச்சிடுதல் , பழைய புத்தகங்கள் அசிட்டது - 400 கோடி

மறைமுக செலவு - இந்த 2 மாதங்களும் unproductive days

1 மொத்த மாணவர் எண்ணிக்கை - 13000000
2 40 மாணவர்களுக்கு 1 ஆசிரியர் வீதம் - 325000 ஆசிரியர்கள்
3 மட்டற்ற அலுவலக பணியாளர்கள் - 100000
4 சரசரி ஒரு நாள் சம்பளம் - 1000 ரூபாய்
5 425000 பேர்களின் ஒரு நாள் சம்பளம் - 53 கோடி
6 425000 பேர்களின் 2 மாத சம்பளம் - 2125 கோடி

குறைந்தபட்சம் 70 % மாணவர்கள் சத்துணவு சாபிடுகிறார்கள் என்று வைத்துக்கொண்டால், ஒரு மாணவனுக்கு ஒரு நாள் சத்துணவு செலவு - 30

ரூபாய் (பணியாளர் சம்பளம் உள்பட) என்று வைத்துகொண்டாலும்,

7 மொத்த சத்துணவு செலவு 2 மாதத்துக்கு - 1365 கோடி

மொத்த மறைமுக செலவு = 6 + 7 = 3490 கோடி

சமசீர் கல்வி குளறுபடியால் ஏற்பட்ட மொத்த இழப்பு = 3490 + 400 = 3890 கோடி

உண்மைத்தமிழன் said...

பிரகாஷ்.. இது ரொம்பவே அதிகம்..

சமச்சீர் கல்வி பாடப் புத்தகங்கள் 250 கோடி செலவில் அச்சிடப்பட்டு தயாராக இருந்தது..

பழைய பாடப் புத்தகங்களை 100 கோடி செலவில் அச்சிட ஆர்டர் செய்யப்பட்டு அதில் 50 கோடி பட்டுவாடா செய்யப்பட்டுவிட்டது. இது ஒன்றுதான் செலவாகியுள்ளது.

மற்றபடி நீங்கள் சொல்லியுள்ள கணக்கு பள்ளிகள் நடப்பதால் செலவாகத்தான் செய்யும். சமச்சீர் கல்வி முறை அமலாக்கப்பட்டு பள்ளிகள் நடந்திருந்தாலும் இந்தச் செலவுதான் ஆகியிருக்கும். ஆகவே அதனைக் கணக்கில் எடுக்க வேண்டாம்..!

RAJESH said...

உங்க நேர்மை பிடிச்சிருக்கு. தலை தாழ்ந்த வணக்கங்கள்

உண்மைத்தமிழன் said...

[[[RAJESH said...

உங்க நேர்மை பிடிச்சிருக்கு. தலை தாழ்ந்த வணக்கங்கள்.]]]

இதுல என்னங்க நேர்மை..? பிடிச்சிருந்தா பாராட்டுறோம்.. தப்புன்னு நமக்குத் தோணுச்சுன்னா தப்புன்னு சொல்றோம்.. அம்புட்டுத்தான்..!

Muthukumara Rajan said...

through i supports this Govt. in others activities like transfers. i strongly disagree the Govt. point of view. there is no future forecasting in uniform system of education. Even through text books are upto the standard it is better than the current syllabus.

One more input Jaya plus telecastes the judgement only on the Govt. supporting points (like Committee for revisiting the books and accepting the issues in the current book).

Please God saves us from this Dravidian parties.

உண்மைத்தமிழன் said...

[[[muthukumar said...

through i supports this Govt. in others activities like transfers. i strongly disagree the Govt. point of view. there is no future forecasting in uniform system of education. Even through text books are upto the standard it is better than the current syllabus.

One more input Jaya plus telecastes the judgement only on the Govt. supporting points (like Committee for revisiting the books and accepting the issues in the current book).

Please God saves us from this Dravidian parties.]]]

நமக்கு வாய்த்தத் தலைவர்கள் இப்படித்தான் முத்துக்குமார்..!

தன்னலம் கருதாமல் உழைக்கக் கூடியவர்கள்தான் நமக்குத் தேவை. ஆனால் நமக்குக் கிடைத்தவர்களோ அப்படியே நேரெதிர்..!

Ganpat said...

சரவணன் சார்,

இன்னொரு keட்ட செய்தி..

நில அபகரிப்பு ஒன்றில் தற்போதைய அ.தி.மு க MLA ஒருவரும் involved

ம்ம்ம் இன்னும் முழுசா மூணு மாசம் ஆகல

Muthukumara Rajan said...

Ganpat,

atleast it information comming out adn police investigating on this. (as far i know they are investigating on Meenakshi that lady who raised the complient).

Today Jayalalitha removed some party workers as they involved in Land scams.

land scams will happen inany party rule . only thing is want action is taken.

Why DMK govt not raised any Land scams on previous Govt. in their rule.

I am not supporting Karuppaswamy ( i think he is the one).

Change should come for us. we cant except change from them.

are we clean how many of them declaring current value of land or home in registering.

dont keep on shout at others. First clean to your self. them we have right to shout

உண்மைத்தமிழன் said...

[[[Ganpat said...

சரவணன் சார், இன்னொரு keட்ட செய்தி. நில அபகரிப்பு ஒன்றில் தற்போதைய அ.தி.மு க MLA ஒருவரும் involved.. ம்ம்ம் இன்னும் முழுசா மூணு மாசம் ஆகல.]]]

எல்லா அரசியல்வியாதிகளும் ஒண்ணுதானே..? இனி பாருங்க.. ரெண்டு கட்சிக்காரங்க மேலேயும் புகார்கள் பாயும்..!

உண்மைத்தமிழன் said...

முத்துக்குமார்..

ஜெயலலிதா மேலேயே சிறுதாவூர் நில வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது என்பதை மறந்துவிடாதீர்கள்..!

தவறுகள் நம் மீதும் இருக்கிறது என்றாலும், அப்பாவிகளை மிரட்டி நிலத்தைப் பிடுங்கியதும், அந்த வழக்கினை போலீஸார் பதிவு செய்ய மறுத்ததும் வெட்கக்கேடானது..!

Cool said...

This issues has been taken only by media which has no idea about lot of issues. First let me explain you how media is nothing but full of crap. This shitty media(Except minuscule)predicted DMK victory or hung kind of assembly,ignoring whole host of issues that are completely against DMK and its allies. Secondly this media is getting independent only in the regime of Jayalalitha and they could write whatever they want against, but during the regime of DMK these folks didn't have the balls to write anything against them. These idiots are thinking that this common education scheme is a people issue, which is nothing but holy shit and media are nothing but bunch of craps and biased individuals who doesn't have balls to tell the truth. This is the reality. Who'd accept this kind of education. Would you study in a government school whose teacher come only by quota and are nothing but craps(ofcourse there are always exceptions).

Cool said...

[[[muthukumar said...

through i supports this Govt. in others activities like transfers. i strongly disagree the Govt. point of view. there is no future forecasting in uniform system of education. Even through text books are upto the standard it is better than the current syllabus.

One more input Jaya plus telecastes the judgement only on the Govt. supporting points (like Committee for revisiting the books and accepting the issues in the current book).

Please God saves us from this Dravidian parties.]]]

நமக்கு வாய்த்தத் தலைவர்கள் இப்படித்தான் முத்துக்குமார்..!

தன்னலம் கருதாமல் உழைக்கக் கூடியவர்கள்தான் நமக்குத் தேவை. ஆனால் நமக்குக் கிடைத்தவர்களோ அப்படியே நேரெதிர்..

My Comment: Do TN people deserve good leaders. Do WE (WE includes ME Too, I don't seek any concessions in this criticism ) have the guts to vote for others. Do WE have the guts to come to public. Do WE have the guts to vote on the basis of candidate than caste, creed and religion. Do WE have balls to vote without getting money(I didn't accept money- In this I could seek exception). Till these issues get sorted out WE the public doesn't deserve good politics. In Velacheri constituency a guy from IIM-A Sharath stands as an independent candidate, but he have been completely rejected. Then how the hell WE expect better politicians. Having said this I've to tell you that Jayalalitha is much better than DMK. But she doesn't have second rung leaders who have the balls to tell the truth and discuss it with her.

உண்மைத்தமிழன் said...

கூல் ஸார்..

கோபிக்காதீர்கள். நான் ஆங்கிலத்தில் சற்று வீக்.. உங்களது பின்னூட்டத்தில் பாதி புரிகிறது. மீதம் புரியவில்லை..!

இதனால் பதிலேதும் சொல்லத் தெரியவில்லை. மன்னிக்கவும்..

ஆனாலும் வருகைக்கு நன்றி..!

ரிஷி said...

//Who'd accept this kind of education. Would you study in a government school whose teacher come only by quota and are nothing but craps(ofcourse there are always exceptions).//

கூல்,
நீங்கள் மெட்ரிக்குலேஷனிலோ அல்லது CBSE பாடத்திட்டத்திலோ படித்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன். இப்போது கொண்டுவரப்பட்டிருக்கும் சமச்சீர் பாடத்திட்டத்தில் குறைகள் இல்லாமல் இல்லை, அதே நேரம் நிறைகளும் அதிகம்; ஆனாலும் குறை களைய நமக்கு அவகாசம் இருந்தது.. குறை களைந்து நிறைவான பாடத்தைத் தர ஜெயா அரசாங்கம் தயாராக இல்லை. அரசுப் பள்ளிகளின் ஆசிரியர் தரம் என்பது தனியே விவாதிக்கப்படவேண்டியது. பாடத்திட்டத்தைப் பற்றி மட்டுமே இப்போது வாத விவாதங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. தற்போது சமச்சீர் கல்விக்காக போராடும் அமைப்புகள் ஒன்றும் முழுமையா அக்கல்விக்காக போராடவில்லை. மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் அடிக்கும் கொள்ளையை இதன் மூலம் தடுத்து நிறுத்த முடியும், அப்பள்ளி முதலாளிகளுக்கு சங்கு ஊத முடியும் என்பதற்காகத்தான். கல்வி என்பது குடிமக்களின் அடிப்படை உரிமை, அதை முழுமையாக எவ்வித கட்டணமுமில்லாமல் தரவேண்டியது அரசின் கடமை என்றுதான் சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

ரிஷி said...

//மீடியாக்களின் பிரச்சனையாக, மீடியா சார்ந்த மக்களின் பிரச்சனையாக உருவெடுத்துள்ளது. பொது மக்கள் யாரும் மறியல் செய்ததாக, போராடியதாக தெரியவில்லை. அமைப்பு சார்ந்த போரட்டங்கள் தான் காணமுடிகிறது . //

பொதுமக்கள் எப்போதும் போராடவெல்லாம் மாட்டார்கள். இருக்கும் சூழலுக்கு தகுந்தாற்போல தங்களை தகவமைத்துக் கொள்வது எப்படி என்று மட்டும்தான் பார்ப்பார்கள். பெரும்பான்மை மக்களின் நலன் என்றைக்கு பாதிக்கிறதோ, என்றைக்கு தங்களால் சூழலை சமாளிக்க முடியாத அளவிற்கு கைவிட்டுப் போய்விடுகிறதோ... என்றுதான் உண்மையான மக்கள் புரட்சி வெடிக்கும். இதுதான் யதார்த்தம்!!

ரிஷி said...

//In Velacheri constituency a guy from IIM-A Sharath stands as an independent candidate, but he have been completely rejected. Then how the hell WE expect better politicians. //

வேட்பாளரைப் பார்த்து ஓட்டுப் போடுவது என்பது இங்கு மிகக் குறைந்த சதவீதம். கட்சி பார்த்து மட்டுமே போடுகின்றனர். யாரு வரக்கூடாது என்று மட்டும் பார்த்துப் போடுகின்றனர். சரத்தும் தேமுதிகவில் சிறிது காலம் இருந்திருக்கிறார். அவருக்கு அங்கு நிலவும் உள்ளரசியல் பிடிக்கவில்லை.. அல்லது பிடிபடவில்லை. விலகிவிட்டார். தனியே நின்று ஜெயிக்க விரும்பினால் முதலில் மக்களுடன் கலக்க வேண்டும். அப்பகுதி மக்களின் தலைவனாக தன்னை முன்னிருத்திக்கொண்டு வேலைகளைச் செய்யவேண்டும். அதற்கு மிக நெடிய போராட்டமும், உழைப்பும் வேண்டும். IIM பட்டம் சோறு போடும். ஓட்டு வாங்காது! இதுதான் யதார்த்தம். தனி மனிதனாக சரத்தின் வளர்ச்சி என்பது ஒரு சாதனை. ஆனால் அரசியலுக்கு?