நன்றியோ நன்றி..!
நினைக்கும்பொழுதே நெஞ்சடைக்கிறது. கண்கள் குளமாகின்றன..! விரல்கள் தட்டச்சு செய்ய மறுக்கின்றன.. என்ன எழுதுவது என்பதே தெரியாமல் திகைத்துப் போயுள்ளேன்..! எல்லாம் உங்களால்தான்..
கடந்த 17-ம் தேதியன்று எனது வலைத்தளத்தில் 1000-மாவது நண்பராக திரு.ரபீக் என்பவர் இணைந்திருக்கிறார். தற்போது அது 1005-ஆக உயர்ந்திருக்கிறது.. இதற்காக என்ன தவம் செய்திருக்கிறேன் நான்..? கண்ணீர் சொட்டுச் சொட்டாக வடிகிறது. என்னையும் ஒரு பதிவராக நினைத்து இத்தனை பேர் பின் தொடர்கிறார்கள் என்றால், நானும் ஏதோ 4 பேருக்குப் பிடிப்பதுபோல் எழுதுகிறேன் என்று எனக்கு இப்போதுதான் தன்னம்பிக்கை பிறந்துள்ளது..!
எழுத வந்து 4 ஆண்டுகள் கழித்துதான் இந்த 1000 பேர் இணைந்திருக்கிறார்கள் என்பதே வலையுலகைப் பொறுத்தவரையில் கேவலமானதுதான். ஆனாலும் அதை நாமே வெளியில் சொல்லிக் கொண்டால், கேவலத்தில் பாதி குறைந்துவிடும் என்பதால் வெட்கமில்லாமல் நானே அதனை இங்கே சொல்லி விடுகிறேன்..!
எனக்குப் பின்பு எழுத வந்தவர்களெல்லாம் 1500-ஐ தாண்டி மின்னல் வேகத்தில் வண்டி ஓட்டிக் கொண்டிருக்க.. நான் மட்டும் கொட்டாம்பட்டி ரோட்டில் ஓடும் கவர்ன்மெண்ட் பஸ் மாதிரி இழுத்துக்கோ, புடிச்சுக்கோன்னு ஓடிக் கொண்டிருப்பதை நினைத்தால் ஒரு பாட்டில் நுவக்ரானை குடிக்கலாம் என்றுதான் தோன்றுகிறது..! ஆனால் தைரியம் இல்லாத்தால் அதனைச் செய்யவில்லை..
இதற்காக யார் மேலேயும் பொறாமைப்படக் கூடாது.. வருத்தப்படக் கூடாது.. என்னதான் எண்ணெய்யை தேய்ச்சுக்கிட்டு மண்ணுல புரண்டு எந்திரிச்சாலும் ஒட்டுற மண்ணுதான் ஒட்டும்னு சொல்வாங்க. நமக்கு இவ்ளோதான்னு நினைச்சுக்க வேண்டியதுதான்..! இருக்கிறவரைக்கும் வண்டி இப்படியே ஓடட்டும்..! பார்த்துக்குவோம்.
நன்றி மக்களே..!

பையனூர் வீடு கட்டும் திட்டம் அம்போ..!
சென்னைக்கு தொலைவில் இருந்தாலும் பரவாயில்லை. கூடியவிரைவில் கிரேட்டர் மெட்ராஸ் சிட்டி வந்து அதுவும் நகரமாகிவிடும். மிக எளிதாக ஒரு வீட்டுக்கு சொந்தக்காரர்களாகிவிடலாம் என்ற கனவில் இருந்த சினிமா தொழிலாளர்களின் நினைப்பில் ஒரு டன் மண்ணையள்ளி போட்டு மூடிவிட்டார்கள்.
பையனூர் வீடு கட்டும் திட்டம் பணால் என்று உறுதியாகச் சொல்லிவிட்டார்கள். வீடு கேட்டு பணம் கட்டியவர்களெல்லாம் பணத்தை திருப்பிக் கொடுங்கள் என்று அனைத்து சங்கங்களிலும் கியூவில் நின்று மனு கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.
இனி சினிமா தொழிலாளர்களுக்கு சொந்த வீட்டிற்கான கனவு கானல் நீர்தான்.. இனிமேற்கொண்டு எந்த அரசு வந்தாலும் விலைக்குக் கூட இடத்தை ஒதுக்கித் தர மாட்டார்கள் என்பது உறுதியாகிவிட்டது. காரணம், கருணாநிதிக்கு திரையுலகப் பிரம்மாக்களிடம் இத்தனை ஆதரவிருந்தும் வாக்களித்த மக்கள் மருந்துக்குக்கூட அதனையொரு பொருட்டாக கருதவில்லையே..?
பெரிய திரை, சின்னத்திரை என்று அனைத்துச் சங்கங்களிலும் நிர்வாகிகள் மட்டத்தில் ஏற்பட்ட பூசலும் இதற்கு ஒரு காரணம். பெப்ஸி தலைவராக இருந்த வி.சி.குகநாதன் எனக்கேன் வம்பு என்று ஒதுங்கிக் கொள்ள.. அ.தி.மு.க. கட்சிக்காரரான பெப்ஸியின் செயலாளர் சிவா, மேற்கொண்டு இதனை எந்தப் பக்கம் நகர்த்துவது என்பதே தெரியாமல் இருக்கிறார்.
இதில் அனைவரையும் முந்திக் கொண்டு நல்ல பெயர் எடுக்க நினைத்த நடிகர் சங்கத்தின் செயலாளர் ராதாரவி ஜெயல்லிதாவைச் சந்தித்தபோது, “அந்த இடம் உங்களுக்கு வேண்டாம். விட்ருங்க..” என்று மண்ணை வாரி இறைத்து மூடு விழா நடத்திவிட்டாராம்.
குத்தகை நிலமாகையால் வங்கிக் கடன்கள் கிடைக்காமல் இருந்த சூழலில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய வங்கியான ஹட்கோவே 350 கோடி ரூபாய் நிதியுதவி அளிக்க முன் வந்து அதுவும் கருணாநிதி முன்பாக கையெழுத்தாகியிருந்த்து. ஆனால் இப்போது சிக்கன நடவடிக்கையாக அதில் கை வைத்துவிட்டாராம் ஜெயல்லிதா.
பெப்ஸியில் இருந்தும், தயாரிப்பாளர்கள் சங்கத்தில் இருந்தும் கேட்டதற்கு “இன்னும் நிறைய பார்மாலிட்டீஸ் இருக்கே. எல்லாத்துலேயும் கையெழுத்து வாங்கிட்டு வாங்க. பார்ப்போம்..” என்று பட்டும், படாமலும் சொல்லி வருகிறார்கள் அதிகாரிகள்.
ஆனால் அதற்குள்ள 900 வீடுகள் கட்டுவதாகச் சொல்லியிருந்த சின்னத்திரை யூனியனில், வீடு கேட்டிருந்த சின்னத்திரை நடிகர் சங்கத்தினர் 270 பேரும் இப்போது “வீடு வேண்டாம். கொடுத்த பணத்தைத் திருப்பிக் கொடுங்க..” என்று கேட்டு மனு கொடுத்துவிட.. சின்னத்திரை யூனியனும் குப்புறப்படுத்துவிட்டது..!
இந்த லட்சணத்தில் பையனூரில் கலைஞர் நகரத்தில் 2 கோடி ரூபாய் செலவில் கலைஞர் ஸ்டூடியோ என்ற பெயரில் ஒரு இரண்டு ப்ளோர்கள் கொண்ட ஸ்டூடியோவை கட்டி வைத்துவிட்டார்கள். அதனை பர்ஸ்ட் காப்பி அடிப்படையில்(சினிமா பாணியில்) ஒரு தனியார் நிறுவனம் கட்டிக் கொடுத்த்தாம். இப்போது அதற்கு யார் பணம் கொடுப்பது? பெப்ஸியா..? அல்லது அனைத்து சங்கங்களுமா..? அந்த இடத்திற்கு நிரந்தர பட்டா கிடைக்குமா..? என்றெல்லாம் பஜ்ஜி, சொஜ்ஜி சாப்பிட்டுக் கொண்டே விவாதித்துக் கொண்டிருக்கிறார்கள் சங்கங்களின் தலைவர்கள்..!
போராட்டம்ன்னா இப்படீல்ல இருக்கணும்..!
சிலி நாட்டில் கடந்த வாரம் ஒரு வித்தியாசமான போராட்டம் நடந்திருக்கிறது. அந்த நாட்டின் கல்வித் துறையில் மாற்றம் கொண்டு வர வேண்டும். கல்வித் துறையை மேம்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையுடன் மாணவர்கள், ஆசிரியர்கள், பேராசிரியர்கள் என்று பலரும் தெருவில் இறங்கிவிட்டார்கள்.
வழக்கமாக கோஷம் போட்டு, பதாகை ஏந்தியெல்லாம் செய்தால் இது நாடு முழுவதும் ரீச் ஆகாது என்று நினைத்தார்களோ என்னவோ, முத்தமிடும் போராட்டத்தை கோலாகலமாக நடத்தியிருக்கிறார்கள்.
போராட்டத்தில் கலந்து கொண்ட ஆண்களும், பெண்களுமாக அன்றைய நேரத்தில் மட்டும் காதலர்களாக உருமாறி முத்தமிட்டுக் கொண்டு கல்வித்துறைக்கு எதிர்ப்புத் தெரிவித்திருக்கிறார்களாம். ரொமாண்ட்டிக்காக இருந்த இந்தப் போராட்டம் கடைசியில் கை கலப்பில்தான் போய் முடிந்திருக்கிறது. அது வேறு கதை..!
ம்.. நம்ம ஊர்லேயும்தான் இருக்காங்களே..! நம்மளால முடிஞ்சது.. உண்ணாவிரதம்ன்னா உண்ணும்விரதம்.. அவ்ளோதான்..!
எந்தப் படத்தின் பாடல் நீக்கப்பட்டது..?
சென்ற இட்லி-வடை பதிவில் “கமல்ஹாசனின் ஒரு திரைப்படத்தின் பாடல் காட்சி முழுவதும் படமாக்கப்பட்டு, பின்பு அதில் நடித்த மூத்த நடிகையின் வேண்டுகோளுக்கிணங்க மீண்டும் கடைசி நேரத்தில் வேறு விதமாகப் படம் பிடிக்கப்பட்டு படத்தில் இணைக்கப்பட்டது. அது என்ன படம் என்று தெரிந்தால் சொல்லுங்கள்..” என்று எழுதியிருந்தேன்.
சத்தியமாகச் சொல்கிறேன். பதிவுலகில் யாரும் இது பற்றி கேட்கவில்லை. ஆனால் பேஸ்புக்கிலும், டிவிட்டரிலும் பலரும் “என்ன படம்? என்ன பாட்டு?” என்று கேட்டு தனி மடல்களை அனுப்பிக் குவித்துவிட்டார்கள். அவர்களுக்கு எனது நன்றி..!
அந்தப் படம் 'மைக்கேல் மதன காமராஜன்'. ரூபிணியுடன், மனோரமாவும் சேர்ந்து ஆடும் அந்த ரொமாண்டிக் பாடல் காட்சிதான் அது. முதல் தடவை ஷூட் செய்தபோது கலைஞானி, ரூபிணியுடன் புகுந்து விளையாடிவிட்டாராம்.. அப்போது எதுவும் சொல்லாமல் உடன் நடித்து முடித்த மனோரமா, சில தினங்கள் கழித்து “அந்தப் பாட்டு சீன் ரொம்ப ஓவரா இருக்கு. உனக்கொண்ணும் இல்லை. என் பேர் கெட்டுப் போயிரும் போலிருக்கு தம்பி..” என்று கமலிடம் லேசாக முனங்கினாராம்.. அதற்காகவே மீண்டும் இன்னொரு முறை அந்தப் பாடல் காட்சியைப் படமாக்கியிருக்கிறார் கமல்.
படத்தில் இப்போது இருப்பதே இப்படி பட்டையைக் கிளப்புதே.. இதுக்கும் மேலே என்றால், நம்ம கமல் அண்ணன் என்ன பண்ணியிருப்பாரு..? யோசிங்க..!
தி.மு.க. பொதுக்குழு
கோவையில் நாளை கூடவுள்ள தி.மு.க. பொதுக்குழு பலத்த சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. தி.மு.க.வின் அடுத்த்த் தலைவர் யார் என்பதை கருணாநிதி சொல்லியாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார். இனியும் தாமதிக்க முடியாது என்று ஸ்டாலின் பிடிவாதத்தில் இருக்கிறாராம். இதைவிட பிடிவாதமாக அழகிரி அண்ணாத்தேயும் முரண்டு பிடிக்கிறாராம்..!
பத்திரிகைகளில் வருகின்ற தகவல்களும், பத்திரிகையாளர்கள் மூலமாக வருகின்ற செய்திகளும் தி.மு.க.வின் அடுத்த பிளவுக்கு அச்சாரம் இந்தப் பொதுக்குழுதான் என்று உறுதியாக எண்ண வைக்கிறது..!
சில ரவுடித்தனமான மாவட்டச் செயலாளர்களும், அழகிரியின் ஆதரவாளர்களும்தான் தி.மு.க.வின் தோல்விக்குக் காரணம் என்று ஸ்டாலின் நினைக்கிறாராம்.. அதனால்தான் அவர்களுக்கு செக் வைக்கும் அளவுக்கு மாவட்டச் செயலாளர் பதவிகளையே ஒழித்துக் கட்டிவிட்டு, நாடாளுமன்ற தொகுதி பொறுப்பாளர் பதவியைக் கொண்டு வரலாமா என்று கேட்டுள்ளார்கள்.
ஆனால் இது நடக்காது என்றே நான் நினைக்கிறேன். தி.மு.க.வின் தற்போதைய மாவட்டச் செயலாளர்கள் அவ்வளவு சீக்கிரம் இதற்கு இணங்க மாட்டார்கள். ஏனெனில் அடுத்தடுத்து சிறைச்சாலைகளுக்கு பாதயாத்திரை செல்லவிருப்பது மாவட்டச் செயலாளர்கள்தான். கட்சிப் பதவி இருந்தால்தான் சிறைக்குள் நுழையும்போதே ஜட்டியுடன் நின்று தப்பிக்கலாம். இல்லாவிட்டால் அதையும் கழட்டித்தான் காட்ட வேண்டி வரும்..! அவரவர்க்கு அவரவர் பிரச்சினை..!
ஸ்டாலின் இன்றைக்கு இவ்வளவு வருத்தப்படுகிறாரே.. ரவுடித்தனத்தில் அயோத்திக்குப்பம் வீரமணியையும் மிஞ்சிய ஈரோடு மாவட்டச் செயலாளர் ராஜாவை அவர்தானே கட்சியில் சேர்த்து, தேர்தலில் நிற்க சீட்டும் கொடுத்தார். குறுநில மன்னர்களாக பிராந்தியத்தில் சர்வாதிகார ஆட்சி நடத்திக் கொண்டிருந்த நேரு, பொன்முடி, பன்னீர்செல்வம் என்று அனைவரையும் இவர்தானே தட்டிக் கொடுத்தார். அப்போது தெரியவில்லையாக்கும் தவறு எங்கே இருக்கிறது என்று..?
இதனூடேயே ஸ்டாலின் இந்த பொதுக்குழுவிலேயே தனக்குப் பட்டாபிஷேகம் நடத்தும்படி கேட்டுள்ளாராம். அது மட்டும் நடந்தால் கலகம் நடப்பது உறுதி. மதுரை அண்ணன் அதனாலேயே தனது தென் மண்டல ஆதரவாளர்களை பொதுக்குழுவுக்கு போக வேண்டாம் என்று தடுத்திருக்கிறார். இதனாலேயே கிச்சன் கேபினட் மூலமாக அழகிரியைச் சமாதானம் செய்து வைத்திருக்கிறார்களாம். ஆனாலும், இந்த முறை ஸ்டாலின் ஆதரவாளர்கள் விடமாட்டார்கள் என்றே நினைக்கிறேன்..!
எப்படியோ தி.மு.க. நான்காக உடைந்தாலும் எனக்கு பரம சந்தோஷமே..!

ஏமாற்றிய ரதி நிர்வேதம்..!
நான் இதைத்தான் எதிர்பார்த்தேன்..! அதுவே நடந்த்து. அந்தக் கால விசிலடிச்சான் குஞ்சுகளால் மறக்க முடியாத திரைப்படம் ரதி நிர்வேதம். பரதனின் அற்புதமான இயக்கத்தில் ஜெயபாரதியின் உச்சுக் கொட்ட வைத்த இளமையினால் தமிழகம் முழுவதுமே லட்சம் முறை திரையிடப்பட்ட பெருமையைப் பெற்றிருந்த்து இத்திரைப்படம்.

இதன் மறு ஆக்கம் என்றபோதே எனக்குள் உறுதியாகிவிட்டது, இது தேறாது என்று..! அதுபோலவேதான் ஆனது.. ஸ்வேதாமேன்னை எவ்வளவுதான் கேமிராவின் அத்தனை ஆங்கிள்களில் காட்டினாலும் இயக்கத்தில் படு சுமாராக இருந்து தொலைக்க.. படத்தினை என்னைப் போன்ற ரதியின் தீவிர ரசிகர்களால் ரசிக்க முடியவில்லை. ஆனால் மலையாளத்தில் படம் ஹிட் என்கிறார்கள்..!
ஸ்வேதாவுக்காக ஓடியிருக்கும் என்று நினைக்கிறேன். நான் ஆவலோடு எதிர்பார்த்த அந்த்த் தையல் மிஷின் சீனையும், பெட்ரூம் காட்சியும் படு மொக்கையாக எடுத்துத் தொலைத்து முடித்திருக்கிறார்கள். இயக்குநரால் முடிந்த்து இவ்வளவுதான் போலிருக்கிறது.
என்னுடன் படம் பார்த்த இன்னொரு திரையுலக நண்பர் என்னால் ரசிக்க முடியாமல் போனதற்காக வித்தியாசமான காரணத்தைச் சொன்னார். அன்றையக் காலக்கட்டத்தில் இது போன்ற படங்கள் மட்டுமே நமக்கு கிடைத்த ஒரே வாய்ப்பு. அதனால் ஜெயபாரதியின் அரைகுறையும், பரதனின் தூண்டிவிடும் இயக்கத்தையும் ந்ம்மால் ரசிக்க முடிந்த்து. ஆனால் இப்போதே ஆயுசு முடிஞ்சாலும் கவலையில்லைன்ற லெவலுக்கு இது போன்ற படங்களை சலிக்கச் சலிக்கப் பார்த்து முடிச்சாச்சு. அதுனால இந்த மாதிரி படத்துல இப்போ கிக் இருக்காது.. உன்னால ரசிக்க முடியாத்தற்கு இதுவும் ஒரு காரணம்..” என்றார்.
யோசித்துப் பார்த்தேன். அவர் சொன்னதிலும் ஒரு உண்மை இருக்கத்தான் செய்கிறது..! ஆனாலும் பரதனின் இயக்கத்தில் இருந்த ஒரு உயர்வு இதில் இல்லை என்பதையும் சொல்லித்தான் ஆக வேண்டும்..!
அந்த கோல்டன் பீரியடு முடிந்தது முடிந்ததுதான்..!
பீர் முகமதுவின் வெறியாட்டம்..!
யாருய்யா இந்த பீர் முகமது..? நான் முன்ன பின்ன கேள்விப்பட்டதே இல்லை.. மனுஷன் போன வாரம் என் தளத்தில் வெறியாட்டம் ஆடியிருக்கிறார். 2 மணி நேரத்தில் 448 பதிவுகளில் ஒரே செய்தியை பின்னூட்டமாக போட்டு உலக சாதனை படைத்திருக்கிறார்.
See who owns mygsmbd.com http://whois.domaintasks.com/mygsmbd.com or any other website:
http://whois.domaintasks.com/mygsmbd.com
இதுதான் அவர் இட்டிருந்த பின்னூட்டம்.. எதுக்கு இந்த லொள்ளு..? நல்லவேளை தமிழ்மணம் மலேரியா காய்ச்சலில் படுத்த்தினால் தப்பித்தேன். இல்லாவிடில் அத்தனையும் முகப்பில் வந்து நின்று உங்களது வயித்தெரிச்சலை வாங்கிக் கட்டியிருப்பேன்..! ஏதோ அவராகவே நினைத்து ஓய்ந்து விட்டுவிட்டார் என்று நினைக்கிறேன்.
நல்லாயிருங்க பீர் முகமது..!
ஒரு கதை..!
எந்த நாடுன்னு சொல்ல மாட்டேன். ஊர் சொல்ல மாட்டேன். பெயர் சொல்ல மாட்டேன். ஆனால் மேட்டரை மட்டும் சொல்றேன்..!
மனுஷன் கட்டைல போற வயசுல இருக்காரு.. ஆனா அந்த நாட்டுல வெளியாகுற “அந்த” மாதிரி படங்கள்ல பட்டையக் கிளப்பிக்கிட்டிருக்காரு இந்த மனுஷன்..!
இந்த வயசுலேயும் இப்படியா? எப்படிய்யா..? என்று கேட்டால் கொஞ்சமும் தயங்காமல் சிரிக்கிறார்.
“இப்ப வர்ற ‘அந்த’ மாதிரி படத்துல எல்லாம் கிஸ்ஸிங் சீன் டோட்டலா சரியில்லை.. ரொம்ப அரதப் பழசானதா இருக்கு. இது பத்தி ரொம்ப நாளா நான் யோசிச்சிக்கிட்டேயிருந்தேன். வீடியோ தயாரிக்கிற கம்பெனிக்காரங்களுக்கு லெட்டர் எழுதிப் போட்டேன். ஒண்ணும் பதிலைக் காணோம். சரி. நேராவே போய் கேட்க்லாம்னு நினைச்சு போய்க் கேட்டேன். நான் பேசினவிதத்துல அசந்துட்டாங்க.. கடைசீல ‘ஏன் நீங்களே இதுல நடிக்க்க் கூடாது?’ன்னு கேட்டாங்க. எனக்கும் அப்போத்தான் அந்த யோசனையே வந்துச்சு. சரி. ச்சும்மாதான இருக்கோம்.. நடிச்சிருவோம்னு சொல்லிட்டு இறங்கிட்டேன்..
“அந்த’ நேரத்துல ஏதாவது மாத்திரை போட்டுக்குவீங்களா..?” என்று கேட்டதற்கு, “அரை மாத்திரைதான் போட்டுக்குவேன். அதுலேயும் ஒரு நாள் விட்டு ஒரு நாள்தான் ஷூட்டிங் வைச்சுக்குவேன். இல்லேன்னா எனக்குச் சிக்கலாயிரும்..” என்கிறார். “இந்த மாதிரி படங்கள்ல நடிக்கிறது உங்க பேமிலிக்குத் தெரிஞ்சா என்னாகும்..?” என்று கேட்டதற்கு சவுடாலாக அடித்து ஆடுகிறார்..
“எனக்கு மனைவியும், மகளும் மட்டும்தான் இருக்காங்க. நல்லவேளை மகன் இல்லை. தப்பிச்சேன். அவங்களுக்கு நான் இப்படி நடிக்கிறது இப்போவரைக்கும் தெரியாது. ஒருவேளை நான் செத்த பின்னாடி தெரிஞ்சாலும் தெரியலாம். அதைப் பத்தி எனக்குக் கவலையில்லை. நான் இப்ப இருக்குற வாழ்க்கையைப் பத்திதான் எப்பவும் கவலைப்படுவேன்..” என்கிறார்.
“எந்த மாதிரி கதைகளில் அதிகம் நடிக்க விருப்பம்..?” என்றதற்கு ஷகீலா டைப் பதிலையே திருப்பித் தருகிறார்.(உலகம் முழுக்க ஒண்ணுதான் போலிருக்கு) “என்ன.. என் மருமகளோட, பக்கத்து வீட்டுப் பொண்ணோட, மகளோட பிரெண்ட்டோட, ஒய்போட பிரெண்ட்டோடன்னு எல்லாம் ரெடிமேட் கதைகளாத்தான் இருக்கும்.. ஆனாலும் எனக்கு சின்னப் பொண்ணுக்கூட நடிக்கத்தான் ரொம்ப விருப்பம். அதுனால இப்போ இது மாதிரி கதைகளில் மட்டும்தான் தேர்ந்தெடுத்து நடிக்கிறேன்..” என்கிறார் இந்த கிழம்..!
இவருக்கு இருக்கின்ற ஒரே கவலை.. படத்தில் நடிப்பதற்கு இவருக்குக் கொடுக்கப்படும் ஊதியம் குறைவாக இருக்கிறதாம். ஒரு படத்துக்கு 500 டாலர்தானாம். அதே நேரத்தில் உடன் நடிக்கும் பெண்களுக்கு 2000 டாலர் கிடைக்கிறதாம்..! ஏன் இந்த ஓரவஞ்சனை என்கிறார்..
இவரால் அந்த நாட்டின் ‘அந்த’ மாதிரி படங்களின் தயாரிப்புத் துறையில் ஒரு புரட்சியே வெடித்துள்ளதாகச் சொல்கிறார், இவரது படங்களைத் தயாரிக்கும் நிறுவனத்தின் தலைவர்..!
நல்லா சொல்லுறாய்ங்கய்யா டீடெயிலு..!
வெளியாகாத திரைப்படங்கள்
2011 ஜனவரி முதல் மே மாதம் வரையிலுமாக தணிக்கை செய்யப்பட்டு தயாராக இருக்கும் படங்களின் லிஸ்ட் இது :
அன்புள்ள மான்விழியே
கொஞ்சம் சிரிப்பு கொஞ்சம் கோபம்
மதுவும், மைதிலியும்
முதல்வர் மகாத்மா
மாமல்லன்
சொன்னதை செய்வேன்
சொந்தமடி பந்தமடி
அன்புள்ள துரோகி
உயிரின் உயிரே
காதலன் காதலி
திகட்டாத காதல்
சக்தி பிறக்குது
ஆயிரம் விளக்கு
யுகம்
பேசு
முன்னவர்
மகாராஜா
கண்டவுடன்
சகாக்கள்
சிவசிவா
குருகுலம்
கருத்தக் கண்ணன்
ஆண்டாள் அழகர்
பாலு தம்பி மனசில்
சென்ற 2010-ம் வருடம் தணிக்கை செய்யப்பட்டு வெளிவராத 41 திரைப்படங்களையும் சேர்த்து கடந்த 2011 மே வரையிலான காலக்கட்டத்தில் 71 படங்கள் திரைக்கு வர காத்திருக்கின்றன..!
ஆனால் சென்ற வருடக் கணக்கைவிட இந்த வருடக் கணக்கு திரைத்துறையின் செழிப்பைத்தான் காட்டுகிறது. கடந்த 2010-ம் ஆண்டு ஜனவரி முதல் ஜூன் வரையிலான காலக்கட்டத்தில் 61 நேரடி படங்களும், 12 டப்பிங் படங்களும் வெளியாகியிருந்தன. ஆனால் இந்த வருடம் 68 நேரடி படங்களும், 21 டப்பிங் படங்களும் வெளியாகி எண்ணிக்கை கூடுதலாயிருக்கிறது.
மேற்சொன்ன லிஸ்ட்டில் உள்ள படங்களில் 99 சதவிகிதப் படங்கள் லோ பட்ஜெட் படங்கள்தான். ‘பேசு’ படத்தைத் தவிர.. ‘பேசு’ படம் மட்டும் 4 கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுத்திருக்கிறார்கள். எஸ்.ராமகிருஷ்ணன் வசனம் எழுதியிருக்கிறார். புதுமுக நடிகர், நடிகையர் என்பதாலும், தயாரிப்பாளர் சங்கம், இயக்குநர்கள் சங்கத்தில் கட்டப் பஞ்சாயத்தில் சிக்கியிருப்பதாலும் படம் வெளிவரத் தாமதமாகியுள்ளது. இயக்குநருக்கு முதல் படம் என்றாலும், படத்தில் சம்பந்தப்பட்ட அனைவருமே ஆளாளுக்கு கொஞ்சம் கை வைத்து படத்தின் செலவை இரட்டிப்பாக்கிவிட்டார்களாம்.. ம்.. இவர்களை மாதிரி நபர்களால்தான் நல்ல தயாரிப்பாளர்களால் தொடர்ந்து இங்கு இருக்க முடியவில்லை..! கஷ்டகாலம்..!
கண்ணுக்குள்ளேயே இருக்கும் அமுதினி..!
2 வாரங்களுக்கு முன்பாக ஒரு பகல் பொழுதில் கவிஞர் சித்தார்த் திடீரென்று போனில் என்னை அழைத்தார். தானும், காயத்ரியும் சென்னையில் இருப்பதாகவும் மறுநாள் சென்ட்ரல் ரயில் நிலையம் வந்தால் சந்திக்கலாமா என்றும் கேட்டார். மறுநாள் அனைத்து வேலைகளையும் ஒதுக்கிவைத்துவிட்டு ஓடினேன்.
அனைத்துப் பதிவர்களுமே பழைய புகைப்படங்களைத்தான் வெளியிட்டு ஏமாற்றி வருகிறார்கள் போலும்..! நமது சித்தார்த்தும் அப்படித்தான் இருந்தார். ஆனால் என்னைவிட கொஞ்சம் கூடுதலான தொப்பையுடன், குண்டாகவும் இருந்தார்.
கவிதாயினி காயத்ரியும், அசத்தல் அமுதினியும் உடன் இருந்தார்கள். காயத்ரி வலையுலகில் எனக்கு ரொம்பவே சீனியர். அப்போதே சந்திக்க வேண்டும் என்று இருந்தேன். அது இப்போது 4 வருடங்கள் கழித்து முடிந்திருக்கிறது. இவர்களது காதல் திருமணம் என்ற விஷயமே எனக்கு சென்ற வருடம்தான் கூகிள் பஸ் மூலமாகத் தெரிந்தது. பதிவுலகில் இன்னமும் நான் தெரிந்து கொள்ள வேண்டியது நிறையவே இருக்கு போலிருக்கு..!
குட்டிப் பொண்ணு அமுதினி பார்த்தவுடன் என்னுடன் ஒட்டிக் கொண்டாள்.. இன்னமும் கண்ணுக்குள்ளேயே இருக்கிறாள் அமுதினி..! அதனால்தான் நம்ம குசும்பன் இப்பவே வெத்தலை, பாக்கு கொடுத்து பிக்ஸ் பண்ணி வைச்சிருக்கான் போலிருக்கு..!
அண்ணா நகர் சரவண பவனுக்கு காரில் அழைத்துச் சென்று விருந்து கொடுத்தார் சித்தார்த். அமுதினியைப் பார்த்ததிலேயே அதிகமாக பசிக்காமல் போய்விட்டது..! கொஞ்சமாக சாப்பிட்டோம். வலையுலகைப் பற்றி அதிகம் பேசிக் கொள்ளாமல் பொதுவாகவே பேசிக் கொண்டோம்..! கவனம் முழுக்க அமுதினியிடமே இருந்த்தால் வேறு எதுவும் பெரிய விஷயமாகப் பேசத் தோன்றவில்லை. இன்னொரு முறை சித்தார்த்திடம் ரவுண்டு கட்டி எளக்கியம் பற்றி பேச வேண்டும் என்று நினைத்திருக்கிறேன்..!
அருமையான விருந்தளித்த காயத்ரிக்கும், சித்தார்த்துக்கும் எனது நன்றி..! கவிதாயினி.. அமுதினியைக் கேட்டதாகச் சொல்லவும்..!
படித்ததில் ரசித்தது..!
எழுத்தாளர் பாலகுமாரன் திருவண்ணாமலை அரசுக் கல்லூரி ஆண்டு விழாவிற்கு சிறப்பு அழைப்பாளராக வந்திருந்தார். நட்பின் அடிப்படையில் அவரைப் பார்க்க கல்லூரிக்குப் போயிருந்தோம். விழா முடிந்து கல்லூரி வளாகத்தைக் கடக்கும்வரை மெளனம் காத்தோம். ஆனால் பாய்ச்சலுக்கான பதுங்கல் அது என நான் யூகித்தேன்.
பாலகுமாரன் ஒரு சிகரெட்டை எடுத்துப் பற்ற வைத்துக் கொண்டு, “சொல்லு பவா.. ஜெயமோகன்ற அந்த நாயி யாரு..?” என்றார் உரத்தக் குரலில். அக்குரலின் வன்மம் எங்களைத் தொடர்ந்து வந்து கொண்டிருந்த மூணு, நான்கு பேரின் நடையை நிறுத்தியது. நானும் கொஞ்சம் நிதானித்தேன்.
பாலகுமாரனே தொடர்ந்தார். “அவன் என்ன பெரிய மயிறு நாவல் எழுதியிருக்கான். ரப்பர்ன்னா அதுல இருந்து பால் வடியணும்..” என்று வாசிப்பின்றி தான் கேள்விப்பட்டதை வைத்தே வீடு கட்டிக் கொண்டிருந்தார். “நான் ஸ்டார்.. தமிழ் வாரப் பத்திரிகைகளுக்கு எழுத நேரமில்லாமல் தவிக்கிறேன். பத்து கை வேணும். பத்து வருஷத்துக்கு என்னை விட்டா யாரு இருக்கா..? அரசியல், சினிமா, இலக்கியம் இவற்றின் தொடர் அழைப்புகளுக்கு ஈடு கொடுக்க முடியாம இருக்கும் எனக்கு, எந்தவிதத்தில் அந்த நாயி போட்டி..?”
“ஸார்..” இது நான்..
“கசடதபற காலத்தில் நான் பேசிய கெட்ட வார்த்தைகளை இவன் என்னை மறுபடியும் பேச வைச்சுட்டான். என்னை மகான்கிட்ட ‘முனிசிபாலிட்டி குப்பை’ன்னு சொன்னானாமே..?”
ரமனாஸ்ரமத்திற்கு முன் இருந்த அவர் நண்பர் எல்.ஐ.சி. ஜெயராமன் வீடுவரை தொடர்ந்த அந்த வசவுகள், அவர் வீட்டுத் தோட்டத்துக் கிணற்றுத் திட்டில் உட்கார்ந்தபோதும் நீடித்தது.
என் பதில் எல்லாமும் தயவு தாட்சண்யமின்றி நிராகரிக்கப்பட்டது. நான் பேச்சற்றுப் போயிருந்தேன்.
பாலகுமாரனுடன் சொல்லிக் கொள்ள எதுவுமில்லையென முடிவு செய்து அங்கிருந்து வெளியேறினேன். மன அலைக்கழிப்புகளிடையே நடந்து கொண்டேயிருந்தேன். அதுதான் நான் பாலகுமாரனைச் சந்தித்த கடைசி தினமென்று நினைக்கிறேன். பாலகுமாரன் நெருக்கம் பொருட்டு சுரத்குமார் மீதும் லேசான வெறுப்பேற்பட்டது. இவர்களுடனான விலகல் எனக்கு அவசியம் என முடிவு செய்தேன். அதன் பிறகு நீண்ட நாட்கள் எங்கள் சந்திப்பு சாத்தியமற்றுப் போயிருந்தது.
(19 டி.எம்.சாரோனிலிருந்து - பவா செல்லத்துரை)
பார்த்த்தில் பிடித்தது
இதுவரையில் நடந்த ஊழல்களின் தொகுப்பு..!

|
|
Tweet |