04-05-2010
என் இனிய வலைத்தமிழ் மக்களே..!
முதலில் மன்னிக்க வேண்டும் பதிவர்களே..!
இந்தப் பதிவின் தொடக்கத்தில் வரக்கூடியதாக நான் எழுதியிருந்த சிறு பகுதி காப்பி பேஸ்ட் செய்யும்போது தவறிவிட்டதால் குழப்பமாகிவிட்டது.
'அவர்' என்கிற இந்தப் படத்தை இயக்கப் போவது நமது சக வலைப்பதிவரும், கவிஞருமான திரு.செல்வகுமார் அவர்கள். திரு.விவேக் நாராயணன் இந்தப் படத்தின் இசை அமைப்பாளராகப் பணியாற்றுகிறார்.
அவர்கள் சார்பாக வெளியிட வேண்டித்தான் இதனை நான் இங்கே பதிவு செய்தேன்.. அந்தப் பத்தி காணாமல் போனதால் என்னை மையமாக வைத்து பின்னூட்டங்கள் வந்துவிட்டன.
கீழே உள்ளது விவேக் நாராயணன் அவரது தளத்தில் வெளியிட்டிருந்த பதிவு..
Viscom மாணவர்கள், துணை-இணை இயக்குனர்கள் மற்றும் சிறு தயாரிப்பாளர்கள் அனைவருக்கும் ஒரே ஒரு தமிழ் திரைப்படமாவது எடுத்துவிட வேண்டும் என்ற கனவு இருக்கும். ஆனால் கோடிகளில் பேசப்படும் வியாபாரம் காரணமாக கனவுகள் நனவாகாமல் அப்படியே இருக்கும். இனி அந்த நிலை மாறும். நிச்சயம் நமது சினிமா கனவுகள் பலிக்கும். காரணம் டிஜிட்டல் தொழில் நுட்பம்.
'அவர்' - இசையமைப்பாளராக நான்(திரு.விவேக் நாராயணன்) அறிமுகமாகும் முதல் தமிழ் திரைப்படம். இந்தப் படத்தின் இசை முதல் காமிரா மற்றும் எடிட்டிங் வரை அனைத்தும் டிஜிட்டல் மயம். இதனால் என்ன பலன்? திரைப்படத்தின் கதை, திரைக்கதை மற்றும் வசனங்களை எழுதி தயாராக வைத்துக் கொண்டால், அதாவது ஸ்கிரிப்ட் ரெடி என்றால், கோடிகள் பற்றிய பிரமிப்பும் பயமும் இல்லாமல் ஒரு அழகான தெளிவான திரைப்படத்தை டிஜிட்டல் தொழில் நுட்பத்தில் தயாரிக்க முடியும். நாங்கள் அப்படித்தான் பார்த்துப் பார்த்து ”அவர்” திரைப்படத்தை உருவாக்கிக் கொண்டிருக்கின்றோம்.
ஆனால் டிஜிட்டல் தொழில் நுட்பம் பற்றி பலருக்கும் தயக்கமும், பயமும் அதிகமாக இருக்கிறது. காரணம் அது பற்றிய முழுவிபரமும் நமக்கு கோலிவுட்டிலோ, பாலிவுட்டிலோ கிடைக்கவில்லை. ”அவர்” திரைப்படக் குழு கடந்த சில வருடங்களாகவே டிஜிட்டல் தொழில் நுட்பம் பற்றி பல தகவல்களை சேகரித்து வைத்திருக்கிறது.
டிஜிட்டல் மியுசிக், டிஜிட்டல் காமிரா, டிஜிட்டல் எடிட்டிங் மற்றும் டிஜிட்டல் புரொஜக்ஷன் உட்பட அனைத்து பிரிவுகளிலும் ”அவர்” திரைப்படக் குழு விபரங்களை சேகரித்து சோதித்து வைத்திருக்கிறது.
இதை உங்களுடன் நாங்கள் பகிர்ந்து கொள்ள விருப்பப்படுகின்றோம். இன்று எங்கள் கனவு நனவாகிக் கொண்டிருப்பது போல, உங்கள் கனவும் திரை வடிவம் பெற வேண்டுமல்லவா? அதற்க்காகவே நாங்கள் ஒரு கருத்தரங்கு நடத்துகின்றோம்.
நாங்கள் கற்றதை உங்களுடன் பகிர்ந்து கொள்வதன் மூலம், இன்னும் பல திறமைசாலிகள் சினிமாவிற்குள் நுழைய வாயப்பு ஏற்படும். அதன் மூலம் தமிழ் சினிமா மேலும் சிறப்படையும் என்பது எங்கள் எண்ணம்.
எனவே ”அவர்” திரைப்படத்தின் துவக்க விழாவை ஸ்டுடியோக்களில் நடத்தாமல், உங்களை அழைத்து ஒரு கருத்தரங்கமாக நடத்துகிறோம். அனைவரும் வாருங்கள்! பங்கு பெறுங்கள்! டிஜிட்டல் தொழில் நுட்பம் பற்றி தெளிவு பெறுங்கள்!
தலைப்பு

”மினிமம் பட்ஜெட்டில் டிஜிட்டல் சினிமா”
நாள் - நேரம்
நாள் - நேரம்
மே 9, ஞாயிற்றுக் கிழமை, காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை
விலாசம்
விலாசம்
பிளாட் நம்பர் 15,
ஆறுமுகம் நைனார் தெரு,
திருநகர்,
சென்னை - 87.
வழி
வடபழனி ->விருகம்பாக்கம்->ஆழ்வார் திருநகர்-> மெகா மார்ட் பின்புறம், வலது புறத்தில் மூன்றாவது தெரு-> வலப்புறம்15 வது இல்லம்.
தொலை பேசி
விவேக் நாராயண் - 9444166290
|
Tweet |
19 comments:
வாழ்த்துகள் முயற்சிக்கு
அண்ணே ... கிரேட். கற்றுக் கொண்டதை மற்றவர்களுடன் பகிர நல்ல மனது வேண்டும். “அவர்” படம் வெற்றி பெற வாழ்த்துகள்.
நல்ல முயற்சி அண்ணே .. வாழ்த்துக்கள்
வாழ்த்துகள்.
நன்றி - சொ.சங்கரபாண்டி
ஆகா அருமையான ஒரு முயற்சி. நேரில் கலந்து கொன்டு வாழ்த்தவும் ஊக்குவிக்கவும் முடியாமைக்கு வருந்துகிறேன். முயற்சி கட்டாயம் வெற்றி பெறும். உங்கள் கடின உழைப்பும் ஆர்வமும் உற்சாகமுமே அதை பெற்றுத்தரும். வாழ்த்துக்கள்.
//இசையமைப்பாளராக நான் அறிமுகமாகும் முதல் தமிழ் திரைப்படம்.//
Congrats!!!
//இசையமைப்பாளராக நான் அறிமுகமாகும் முதல் தமிழ் திரைப்படம்.//
தல நிசமாத்தான் சொல்லுறீங்களா??
மகிழ்ச்சி & வாழ்த்துகள்!
வாழ்த்துக்கள்!
அன்புடன்,
-ரவிச்சந்திரன்
wishes!
//”அவர்” - இசையமைப்பாளராக நான் அறிமுகமாகும் முதல் தமிழ் திரைப்படம். //
உங்களுக்கு இசைத்திறமை இருப்பதை மறச்சிட்டீங்களே..
அவர் வணிக நோக்கில் வெற்றிபெற வாழ்த்துகள்.
வாழ்த்துகள்!
இம்புட்டு நாளா.. உங்களுக்குள்ள ஒரு இசையமைப்பாளர் தூங்கிட்டு இருந்தாரா???
ஸ்டார்ட் மீஜிக்.!! :) :)
வாழ்த்துகள்.. :)
முதலில் மன்னிக்க வேண்டும் பதிவர்களே..!
இந்தப் பதிவின் தொடக்கத்தில் வரக்கூடியதாக நான் எழுதியிருந்த சிறு பகுதி காப்பி பேஸ்ட் செய்யும்போது தவறிவிட்டதால் குழப்பமாகிவிட்டது.
'அவர்' என்கிற இந்தப் படத்தை இயக்கப் போவது நமது சக வலைப்பதிவரும், கவிஞருமான திரு.செல்வகுமார் அவர்கள். திரு.விவேக் நாராயணன் இந்தப் படத்தின் இசை அமைப்பாளராகப் பணியாற்றுகிறார்.
அவர்கள் சார்பாக வெளியிட வேண்டித்தான் இதனை நான் இங்கே பதிவு செய்தேன்..
அந்தப் பத்தி காணாமல் போனதால் என்னை மையமாக வைத்து பின்னூட்டங்கள் வந்துவிட்டன.
சிரமத்திற்கு பெரிதும் மன்னிக்கவும்..!
நல்ல தகவல், ஊருக்கு வந்தால் அவசியம் கலந்து கொள்வேன்
வந்துடுவோம் தலைவரே,,,
நன்பர்களின் டிஜிட்டல் முயற்சிக்கு வாழ்த்துகள்..
great.... best wishes....
" நாங்கள் கற்றதை உங்களுடன் பகிர்ந்து கொள்வதன் மூலம், இன்னும் பல திறமைசாலிகள் சினிமாவிற்குள் நுழைய வாயப்பு ஏற்படும் "
இப்படி சொல்வதே ஆரோக்யமான மனநிலையை காட்டுகிறது... ஏதோ ஒரு லக் கில், சிறிய முன்னேற்றம் காண்பவர்கள் கூட, சக பதிவர்களை புழுவாகவும், சக மனிதர்களை புழுவை விட அற்பமாகவும் நினைக்கும் பதிவுலகில் , இப்படியும் சிலர் இருப்பது மகிழ்ச்சியாக உள்ளது... கண்டிப்பாக இவர் ஜெயிக்க வேண்டும்...
பகிர்வுக்கு நன்றி.. கண்டிப்பா வந்துடறேன்...
நண்பர்களின் அன்பிற்கும் ஆதரவிற்கும் நன்றி!
”அவர்” திரைப்படம் நிச்சயமாக நீங்கள் அனைவரும் குடும்பத்துடன் அமர்ந்து இரசிக்கும்படி கண்ணியமான, தரமான திரைப்படமாக இருக்கும். ”அவர்” திரைப்படத்தின் இயக்குனர் என்ற முறையில் இதை நான் உறுதிமொழியாகவே சொல்கிறேன்.
கற்போம்! கற்பிப்போம்!
இதுவே எனது வாசகம். நானும் எனது குழுவும் கற்றுக் கொண்டதை உங்களுடன் பகிர்ந்து கொள்வதையே துவக்க விழாவாக நடத்துகிறோம்.
இது உங்களின் ஆதரவினால் நிச்சயமாக இனிய துவக்கமாக இருக்கும்.
நன்றி!
Post a Comment