இரும்புக்கோட்டை முரட்டுச் சிங்கம் - திரை விமர்சனம்


08-05-2010

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!
இத்திரைப்படத்தைத் தயாரித்திருக்கும் கல்பாத்தி பிரதர்ஸ்களுக்கு முதற்கண் எனது நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தற்போதைய நடைமுறையில்லாத, சினிமாத்தனமில்லாத, யதார்த்த வாழ்வைக் காட்டாத ஒரு வேற்று வாழ்க்கையைக் காட்டப் போகிறார்கள் என்பது பற்றி நன்கு தெரிந்திருந்தும் இயக்குநர் சிம்புத்தேவனின் திறமை மீது நம்பிக்கை வைத்து படத்தினை தயாரித்திருக்கும் கல்பாத்தி சகோதரர்களை பாராட்டியே தீர வேண்டும்.

தனது முதல் படமான ‘இம்சை அரசன் 23-ம் புலிகேசி'யில் புகழையும், பணத்தையும் வாரிக் குவித்து, இரண்டாவது படமான ‘'அறை எண் 305-ல் கடவுளில்' அது இரண்டையும் பாதியாக இழந்த நிலையிலும், தன்னம்பிக்கையுடன் தனது படத்தின் கதை வித்தியாசமாகத்தான் இருக்கும் என்பதில் இருந்து வழுவாமல் இத்திரைப்படத்தை வழங்கியிருக்கும் சிம்புத் தேவனுக்கும் ஒரு நன்றி..

‘தமிழ்ப்பட'த்தின் கதைப் போக்கு போலவே தெரிந்தாலும், வழிமுறை ஒன்றுதான்.. பழசை ஞாபகப்படுத்துவது.. திறம்பட அந்த spoof முறையைக் கையாண்டிருக்கிறார் இயக்குநர் சிம்புத்தேவன்.

ஆரம்பக் காட்சியிலேயே படம் இப்படித்தான் இருக்கும் என்பதை பதிய வைத்துவிட்டதால், எந்த லாஜிக்கும் பார்க்காமல் இது வேறொரு கிரகப் படம் என்றொரு நோக்கில் படத்தைப் பார்க்க வைத்துவிட்டார்கள்.


தனது அஜாக்கிரதையால் ஒரு விலையுயர்ந்த வைரத்தை தொலைத்துவிடும் ஹீரோ லாரன்ஸுக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்படுகிறது. தமிழ்ச் சினிமா பாணியில் கயிற்றில் தொங்குகிற நேரத்தில் மெளலி தலைமையில் இளவரசு, வையாபுரி டீம் அவரைக் காப்பாற்றி இழுத்துச் செல்கிறார்கள்.

அந்த வைரம் போலவே தங்களிடத்தில் வேறொரு வைரம் இருப்பதாகவும், அதனை லாரன்ஸுக்குத் தர சம்மதித்து, அதற்குப் பிரதிபலனாக லாரன்ஸ் தாங்கள் சொல்படி சில நாட்கள் சிங்கம் என்ற அவர்களுடைய முன்னாள் தலைவனைப் போல் நடிக்க வேண்டும் என்று நிபந்தனை விதிக்கிறார்கள்.

ஜெய்சங்கர்புரம் என்ற அந்த ஊருக்குள் வரும் லாரன்ஸ் சிங்கமாக அவதாரமெடுத்து ஷோ காட்டத் துவங்குகிறார். இடையிடையே பொழுது போகவில்லை என்பதற்காக பத்மபிரியாவிடம் டூயட்டும் ஆடுகிறார். பாடுகிறார்.

ஜெய்சங்கர்புரத்து மக்களை அடிமையாக்கி நடத்திவரும் இரும்புக்கோட்டை சமஸ்தானத்தின் தலைவன் கிழக்குக்கட்டையும் அவனது அல்லக்கை உலக்கையும் சிங்கத்தையும், அவன் கூட்டத்தையும் அழிக்க முனைய..

இந்தக் களேபரத்தில் ராஜதந்திர வேலை செய்வதாகச் சொல்லி ஆதிவாசிகள் குடிலுக்குச் சென்று சிங்கம் செய்ததாக ஒரு கொலையை செட்டப்பாக செய்து வைக்கிறார்கள் கிழக்குக்கட்டையின் ஆட்கள். ப்பூ என்று ஊதியே உயிரை எடுக்கும் ஆதிவாசிகள் மிகச் சரியாக சிங்கத்தையும், அவன் தோஸ்த்துகளையும் தூக்கிக் கொண்டு வந்து பானையில் போட்டு கொதிக்க வைக்க..



இடையில் இசைஞானி இளையராஜாவின் உதவியால் தப்பிக்கும் லாரன்ஸ் ஆதிவாசி பெண்ணான சந்தியாவின் கடைக்கண்ணில் சிக்கி அவரால் காதலிக்கப்பட்டு ‘உன்னையே கல்யாணம் பண்ணிக்கிறேன்' என்று ஒரு பொய்யான உறுதிமொழியோடு தப்பித்து வர.

மெளலியைப் பிடித்து பிணைக்கைதியாக வைத்துக் கொண்டு வருடக்கணக்காக இந்த இரண்டு ஊர்க்கார தலைவர்களும் தேடி வரும் புதையலைத் தேடிக் கண்டுபிடிக்கும் வேலையைத் தந்திரமாக சிங்கத்தின் தலையில் கட்டும் கிழக்குக்கட்டை துணைக்கு அல்லக்கை உலக்கையையும், செட்டப்பையும் அனுப்பி வைத்துக் காத்திருக்க..

புதையல் வந்ததா..? லாரன்ஸ் கதி என்ன..? கிழக்குக்கட்டையும், அல்லக்கை உலக்கையும், உலக்கையின் அல்லக்கைகளும், செட்டப்பும் என்ன ஆனார்கள் என்பதுதான் மீதிக் கதை..

சிம்புதேவன் மிகச் சிறந்த கார்ட்டூனிஸ்ட் என்பதால் ஒவ்வொரு விஷயத்தையும் மிகக் கவனமாகக் கையாண்டிருக்கிறார். நிச்சயம் அவரைப் போன்ற கார்ட்டூன் வரைபவர்களால்தான் இது போன்று நுணுக்கமான அமைப்புகள் கொண்டதாக திரைக்கதையை வைக்க முடியும்..

உடை வடிவமைப்பாளர் சாய், கலை இயக்குநர் முத்துராஜ் இருவரும் முதலில் பாராட்டுக்குரியவர்கள்.

எத்தனையோ வருடங்களுக்கு முன்பு ‘தாய் மீது சத்தியம்' படத்தில் பார்த்த கெளபாய் தொப்பி. இன்றைக்கு மீண்டும் பார்த்தாகிவிட்டது.

ஒவ்வொரு வசனமும் கதையை நகர்த்துவதற்காக பயன்படுத்தப்பட்டிருக்கிறது. ‘கெளபாய்' கதையை வி.எஸ்.ராகவன் சொல்வதிலேயே அமர்க்களம் துவங்கிவிட்டது. மேஜர் சுந்தர்ராஜன் எப்படி ஆங்கிலத்தில் சொன்னதையே தமிழில் திருப்பிச் சொல்லி நடிப்பார் என்பதைக் கேட்கின்றபோது இயக்குநரின் சினிமா ஆர்வம் எந்த அளவுக்கு இருந்திருக்கிறது என்பது புரிகிறது.

அணு சக்தி ஒப்பந்தம்போல் ஒன்றை அல்லக்கை உலக்கை சொல்லும்போது, வி.எஸ்.ராகவன் அவ்வளவு தூரம் நடந்து போய் கேட்கின்ற அந்தக் கேள்விக்கு எந்த சிடுமூஞ்சியும் சிரிக்காமல் இருக்க முடியாது.

தான் ஒரு பயந்தாங்கோலி என்பதற்காக லாரன்ஸ் பிளாஷ்பேக்கில் சொல்கின்ற ‘நிழலைவிட வேகமாக சரண்டராயிருவேன்' என்கிற வசனமும், ‘நிழலைவிட வேகமாக சுட்டுட்டேன்' என்ற வசனமும் கச்சிதமான பொருத்தம்.

மொத்தமாக நம்மை சிரிக்க வைக்க குத்தகைக்கு எடுத்துக் கொண்டவர்கள் எம்.எஸ்.பாஸ்கரும், அவருடைய மொழி பெயர்ப்பாளருமாக வரும் சாம்ஸும்தான்.. மனிதர் என்னமாக கலக்குகிறார்..? பிரபல தமிழ் இயக்குநர் மகேந்திரன் ஒரு கூட்டத்தில் பேசும்போது, “இந்தியாவிலேயே தலை சிறந்த நகைச்சுவை நடிகர்கள் தமிழில்தான் இருக்கிறார்கள்” என்று சொன்னார். அது நிச்சயம் உண்மை என்றுதான் இவர்களையெல்லாம் பார்க்கின்றபோது தோன்றுகிறது.

அதிலும் புதையல் எடுக்கப் போன இடத்தில் கட்டிப் போடப்பட்ட நிலையிலும் மொழி பெயர்ப்பு வேலையைச் செய்யும்போது எம்.எஸ்.பாஸ்கர் போலவே நடித்துக் காட்டும் சாம்ஸின் நடிப்புக்கு ஒரு மாபெரும் சல்யூட்.. வெல்டன் சாம்ஸ்..

டஜன் கணக்கான நடிகர்கள் இருந்தும், அவரவர் போர்ஷனுக்கு ஏற்றாற்போல் பேசியிருக்கும் டயலாக்குகள் அட்டகாசம்.. முன் பின் காட்சிகளை ஒன்று சேர்த்தாற்போல் அமைத்திருக்கும் வசனங்களை பார்க்கின்றபோது ஸ்கிரிப்ட் ஒர்க்கில் ஒரு மகாபாரதமே நடத்தியிருக்கிறார் என்று நினைக்கிறேன்.

“மண்டை மட்டுமா உடைஞ்சது?” என்று பத்மப்பிரியா கேட்கின்ற கேள்விக்கு பிளாஷ்பேக்கில் பதில் சொல்கின்ற காட்சியில் எந்த அளவுக்கு யோசித்திருக்கிறார்கள் என்பதும் புரிகிறது.


படத்தில் யாருக்குமே நடிப்புக்கு ஸ்கோப் இல்லை என்பதால் படமே காமெடி என்பதாலும் நடிப்பைப் பற்றியே பேச முடியாத நிலை. பத்மப்பிரியா, சந்தியா, லஷ்மிராய் என்று கெளபாய் படங்களுக்கு ஏற்றாற்போல் மூன்று பெண்களை வைத்திருந்தும் பத்மப்பிரியாவுக்கு மட்டுமே கொஞ்சூண்டு நடிப்புக் காட்சிகள்.

சந்தியா வெறும் காலுடன் அந்த பாறை மணலில் நடனமாடியிருப்பதை பார்க்கின்றபோது காலுக்கு வைரத்தில் கொலுசு வாங்கிப் போட வேண்டும் போல் உள்ளது.. என்னே ஒரு கலையார்வம்..? பாவம்.. அந்தப் பொண்ணு.. இதுக்காச்சும் ஏதாவது வாய்ப்பு வருதான்னு பார்ப்போம்..

‘பெங்கால்' அழகி லஷ்மிராய் ஊறுகாயைப் போல கவர்ச்சிக்காக தொட்டுக் கொள்ள இருக்கிறார். அவர் ஆடுகின்ற நடனம் உவ்வே ரகம்.. இது ஒன்று மட்டுமே இந்தப் படத்தில் நெருடலான விஷயம். ஏனெனில் இது குடும்பத்துடன், குழந்தைகளுடன் பார்க்க வேண்டிய படம் என்று விளம்பரப்படுத்தப்படுகிறதே.. அதனால் சொல்லித்தான் ஆக வேண்டும்..


நீண்ட நாட்கள் கழித்து அண்ணன் செந்தில். தமிழில் பேச வழியில்லையென்றாலும் அந்த செவ்விந்திய மொழியை எங்கே கண்டுபிடித்தார்கள் என்று தெரியவில்லை. அதற்கேற்றாற்போல் அவர்களுடைய உடல் மொழியும் வளைந்து கொடுப்பதை நினைத்துத்தான் கலைஞர்கள் இவர்கள் என்று சொல்லத் தோன்றுகிறது.


படத்தில் இடம் பெறும் ஒவ்வொன்றுக்கும் காரணத்துடன் பெயர் வைத்து அதற்கேற்ற இடங்களில் பயன்படுத்தியிருக்கிறார் இயக்குநர். ஜெய்சங்கர்புரம், கிழக்குக்கட்டை, இரும்புக்கோட்டைக்கு யு.எஸ்.ஏ. புரம் என்ற பெயர் கூடிய போர்டு.. இன்னொரு இடத்தில் ஷோலேபுரம் என்கிற நேம் போர்டு.. கலக்கன் வில்லன் அசோகனின் சிலை.. அவருடைய நினைவுக்காக ஒரு பீடம்.. சிலைக்கு மாலை போடும் ஸ்டைல்.. டாஸ்மாக்கின் பெயரை பாஸ்மார்க் என்று மாற்றிக் காட்டியிருப்பது.. குடி குடியை ரேப் செய்யும் என்ற வாசகம்.. பஜனை கோயில் தெரு என்ற பெயர்.. தூக்கு மேடைக்கு அருகில் இங்கே குரல்வளை இலவசமாக நெறிக்கப்படும் என்று எழுதப்பட்டிருப்பது.. அணு சக்தி ஒப்பந்தத்தை நினைவுபடுத்துவது.. புதையல் எடுக்கப் போகுமிடத்தில் மிகக் கச்சிதமாக தமிழர்களின் இன்றைய யதார்த்த நிலைமையை ஈழ விஷயத்தோடு பொருத்திப் பார்ப்பது.. டீக்கடையில் தினம் பேசி, பேசி கலைவதுதான் தமிழனின் குணம் என்று தீர்ப்பு சொல்லியிருப்பது.. தலைவன் மறைந்தாலும் அதனை வெளியில் சொல்லாமல் போராட்டத்தை நடத்த வேண்டும் என்று பிரபாகரனின் பெயர் சொல்லாமல் போட்டுத் தாக்கியிருப்பது.. தீயைப் பார்த்து மனுஷக் கறி சாப்பிடும் ஆதிவாசிகள் பயப்படுவது.. செவ்விந்தியர்களின் கக்கூஸில் அரசியல் கட்சிகளின் தேர்தல் அறிக்கையை 'அதைத்' துடைப்பதற்காகப் பயன்படுத்துவது.. தமிழில் மொத்தம் எத்தனை எழுத்துக்கள் என்று மறைமுகமாக பொது அறிவை சினிமா தியேட்டரில் பயன்படுத்தியிருப்பது..

இன்னும் நிறைய.. முழுவதுமாக கவனிக்க இன்னொருமுறை படத்தை பார்த்தாக வேண்டும் போல் இருக்கிறது..

நகைச்சுவையை வசனத்தில் மட்டும்தான் சொல்ல வேண்டுமா என்ன? காட்சியிலேயே முடியும் என்பதை அல்லக்கை உலக்கையுடன் சீட்டுக் கட்டு விளையாடும் வித்தையின்போது காட்டியிருக்கிறார் இயக்குநர். தியேட்டரில் அத்தனை ரெஸ்பான்ஸ் அந்தக் காட்சிக்கு.. இன்னொரு காட்சி.. கரண்டியை வைத்து ஒருவனை குத்த முயன்று கொண்டிருக்க.. அவன் தரையில் படுத்தபடி உருண்டு போய்க் கொண்டேயிருக்க.. இப்படியே இவர்கள் வந்து, புதையல் காட்சியில் இணைகின்றபோது..? ம்.. எப்படி சாமி இதெல்லாம்..?

 
நீள, நீளமான வசனங்கள்தான் தொல்லை என்றொரு கமெண்ட் இருக்கிறது. நாசரும், சாய்குமாரும் பேசுகின்ற சில டயலாக்குகள் பலருக்கும் புரியவில்லை. ஒவ்வொருவரின் கேரக்டர் ஸ்கெட்ச்சையும் பார்த்து பார்த்து செய்திருக்கிறார். ஆனால் நாசரின் நடிப்பு.. ஒற்றைக் கண்ணாக இருந்தாலும் சிங்கம் சிங்கமாக இருக்கிறது. கிளைமாக்ஸில் லாரன்ஸை புரட்டி எடுக்கும்போது ஒரு நடை நடந்து வருவார் பாருங்கள்.. என்ன ஒரு தெனாவெட்டு..? தமிழ்ச் சினிமாவில் நாசரின் இடம் அவருக்கு மட்டுமே..

இரண்டாம் பாதியில் புதையல் எடுக்கக் கிளம்புகின்றபோது ஏற்படும் தொய்வு.. அப்படியே நீடிப்பதுதான் படத்திற்கு மைனஸ் பாயிண்ட்.. திரைக்கதையில் இன்னும் கொஞ்சம் செதுக்கியிருக்கலாம்.. புதையல் பாயிண்ட்டுகளை குறைத்திருக்கலாம்..

மீண்டும், மீண்டும் படம் முடியப் போகிறதோ என்றெல்லாம் ஞாபகப்படுத்தும் அளவுக்கு.. அவ்ளோ நீளமான கிளைமாக்ஸ் கொஞ்சம் சறுக்கலாகத்தான் இருக்கிறது.

இப்படி ஆங்காங்கே படம் முழுவதிலும் சில தடங்கல்கள் இருந்தாலும், தமிழ்ச் சினிமாவுலகத்துக்கு இந்த நேரத்தில் மிகத் தேவையான படங்களில் இதுவும் ஒன்று.

மிகப் பெரும் பட்ஜெட்டில்(18 கோடி செலவு என்கிறார்கள்) தயாரிக்கப்பட்டிருந்தாலும், படத்தின் லொகேஷன்கள் இதுவரையில் எங்குமே பார்த்திராதது. கடைசியில் அந்த ஜப்பான் பொம்மை சிலை கிராபிக்ஸ்தான் என்றாலும் அது தெரியாத அளவுக்கு எடுத்திருப்பதுதான் இயக்குநரின் திறமை. வாழ்க இயக்குநர் சிம்புத்தேவன்..

அவசியம் பார்க்க வேண்டிய திரைப்படம்தான்.. அதுவும் குடும்பத்துடன்..!

38 comments:

dunga maari said...

கண்டிப்பாக பார்க்கிறேன் குடும்பத்துடன். விமர்சனத்திற்கு நன்றி,

Unknown said...

கண்டிப்பா பாக்குறேன் ..
சிங்கப்பூரில் இன்னும் ரிலீஸ் ஆகலை தல ..

சென்ஷி said...

விர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ரிவான விமர்சனத்திற்கு நன்றி அண்ணே :))

(இங்க ரிலீஸ் ஆகியிருக்கான்னு தெரியலை. தியேட்டர்லதான் பார்க்கணும்னு முடிவு செஞ்சிருக்கேன்)

Nathan said...

thanks..

pls visit for any new tamil film watching free....

சுறா ரெட்டைச்சுழி என எல்லா புதுப் படங்களையும் இலவசமாக....

http://sagotharan.wordpress.com/2010/05/07/%e0%ae%9a%e0%af%81%e0%ae%b1%e0%ae%be/

Unknown said...

இரண்டாவது படம் இந்திர லோகத்தில் நா.அழகப்பன்!

பிரபாகர் said...

மிகவும் தெளிவான விமர்சனம்! கண்டிப்பா பாத்துடறேன் அண்ணே!

பிரபாகர்...

உண்மைத்தமிழன் said...

[[[gopi g said...
கண்டிப்பாக பார்க்கிறேன் குடும்பத்துடன். விமர்சனத்திற்கு நன்றி,]]]

அவசியம் பாருங்கள் கோபி..!

உண்மைத்தமிழன் said...

[[[கே.ஆர்.பி.செந்தில் said...

கண்டிப்பா பாக்குறேன் ..
சிங்கப்பூரில் இன்னும் ரிலீஸ் ஆகலை தல..]]]

சிங்கப்பூர்ல இன்னும் ரிலீஸ் ஆகலையா..?

ஏன் நீங்களே வாங்கி டிஸ்டிரிபியூட் செஞ்சிருக்கலாமே செந்திலு..?

உண்மைத்தமிழன் said...

[[[சென்ஷி said...

விர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ரிவான விமர்சனத்திற்கு நன்றி அண்ணே :))

(இங்க ரிலீஸ் ஆகியிருக்கான்னு தெரியலை. தியேட்டர்லதான் பார்க்கணும்னு முடிவு செஞ்சிருக்கேன்)]]]

விரிவா எழுதலை தம்பி.. ச்ச்ச்சுசுசுருக்கமாத்தான் எழுதியிருக்கேன்..!

ஊர்ல எந்தத் தியேட்டர்ல என்ன படம் ஓடுதுன்னு தெரிஞ்சு வைச்சுக்காம நீயெல்லாம் என்ன வயசுப் பையன்..?

உண்மைத்தமிழன் said...

[[[NathaN said...

thanks..

pls visit for any new tamil film watching free....

சுறா ரெட்டைச்சுழி என எல்லா புதுப் படங்களையும் இலவசமாக....

http://sagotharan.wordpress.com/2010/05/07/%e0%ae%9a%e0%af%81%e0%ae%b1%e0%ae%be/]]]]

நாதன் அண்ணே.. இதெல்லாம் நியாயமா..?

விஜய் அண்ணனுக்கு இது தெரிஞ்சா என்னாகும்..? வருத்தப்பட மாட்டாரு..!?

உண்மைத்தமிழன் said...

[[[Anonymous. said...

இரண்டாவது படம் இந்திர லோகத்தில் நா.அழகப்பன்!]]]

நன்றி அனானி.. திருத்தி விட்டேன்..!

அனானிக்கு போட்டோ மட்டும் ஜில்ஜில்ன்னு கிடைச்சிருக்கு பாருங்க.. பேரு கிடைக்கலியோ..?

உண்மைத்தமிழன் said...

[[[பிரபாகர் said...

மிகவும் தெளிவான விமர்சனம்! கண்டிப்பா பாத்துடறேன் அண்ணே!

பிரபாகர்.]]]

கண்டிப்பா பாருங்க பிரபாகர்..!

வினையூக்கி said...

// பணத்தையும் வாரிக் குவித்து, இரண்டாவது படமான ‘'இந்திரலோகத்தில் நா.அழகப்பனில்' //

The second movie of Chimbudevan is Arai Enn 305 l Kadavul.

வெட்டிப்பயல் said...

அண்ணே,
இரண்டாவது படம் அறை எண் 305ல் கடவுள் :-)

Durgairajan Kumanan said...

2nd movie of Simbudevan was "அறை எண் 305ல் கடவுள்"

Yaanaikum adi serukkum... athu ithu thaana.... just kidding... very good review...

T.V.ராதாகிருஷ்ணன் said...

தெளிவான விமர்சனம்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

இரண்டாவது படம் இந்திர லோகத்தில் நா.அழகப்பன்!//

illai arai en 305l kadavul

அவிய்ங்க ராசா said...

Anne..

There is no relation between simbudevan and "Inthiralogathil..". It was directed by thambi ramaiyah..Neengale ippadi ezhuthalamaaa???

Aveenga Raja

Philosophy Prabhakaran said...

அது என்னவோ தெரியலைண்ணே... நீங்க பாராட்டி எழுதினாலும் திட்டி எழுதினா மாதிரியே ஒரு பீலிங்...

ஜியா said...

Indiralohathil Na Azhagappan இயக்குனர் Thambi Ramiah சிம்புதேவன் இல்லை

உண்மைத்தமிழன் said...

[[[வினையூக்கி said...

// பணத்தையும் வாரிக் குவித்து, இரண்டாவது படமான ‘'இந்திரலோகத்தில் நா.அழகப்பனில்' //

The second movie of Chimbudevan is Arai Enn 305 l Kadavul.]]]

ம்.. என்னையவே அந்த அனானி குழப்பிட்டாரு.. நடுராத்திரில பதில் போட்டதால நானும் எதையும் யோசிக்காம திருத்திட்டேன்.

மொதல்ல அறை எண் 305-ன்னுதான் எழுதியிருந்தேன்..!

நன்றி தம்பி..!

உண்மைத்தமிழன் said...

[[[வெட்டிப்பயல் said...
அண்ணே, இரண்டாவது படம் அறை எண் 305ல் கடவுள் :-)]]]

வெட்டிப்பயல் அண்ணே..

இப்படி ஏதாச்சும் தப்பா எழுதினா மட்டும்தான் வருவீங்களோ..?

வந்ததுக்கு நன்றிங்கண்ணே..!

உண்மைத்தமிழன் said...

[[[Durgairajan Kumanan said...

2nd movie of Simbudevan was "அறை எண் 305ல் கடவுள்"

Yaanaikum adi serukkum... athu ithu thaana.... just kidding... very good review...]]]

ஹி.. ஹி.. ஹி.. ஒத்துக்குறேன்..!

உண்மைத்தமிழன் said...

[[[T.V.ராதாகிருஷ்ணன் said...
தெளிவான விமர்சனம்]]]

ரொம்ப நன்றிங்கய்யா..!

உண்மைத்தமிழன் said...

[[[ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

இரண்டாவது படம் இந்திர லோகத்தில் நா.அழகப்பன்!//

illai arai en 305l kadavul]]]

ரொம்ப நல்லவனான ரமேஷ் ஸார்..!

பேஜாரா பூடுச்சு.. ஒரு தப்பு எழுதினதுக்கு..!

வராதவங்கள்லாம் வந்து கும்முறாங்க..! நீங்களும்தான்..!

உண்மைத்தமிழன் said...

[[[அவிய்ங்க ராசா said...
Anne.. There is no relation between simbudevan and "Inthiralogathil..". It was directed by thambi ramaiyah..Neengale ippadi ezhuthalamaaa???

Aveenga Raja]]]

தப்புதான் ராசா.. மன்னிச்சுக்குங்க..!

ஆனாலும் நீங்க மட்டும் இப்படி தப்பைக் கண்டு பிடிக்க மட்டும் வந்து போகலாமா..? டெய்லி வர வேண்டாமா..?

உண்மைத்தமிழன் said...

[[[philosophy prabhakaran said...
அது என்னவோ தெரியலைண்ணே... நீங்க பாராட்டி எழுதினாலும் திட்டி எழுதினா மாதிரியே ஒரு பீலிங்.]]]

இருக்கும்ண்ணே.. இருக்கும்..!

தத்துவஞானி பிரபாகரன் அவர்களே..! தங்களது முதல் வருகைக்கு எனது நன்றி..!

உண்மைத்தமிழன் said...

[[[Ziya said...
Indiralohathil Na Azhagappan இயக்குனர் Thambi Ramiah சிம்புதேவன் இல்லை.]]]

ஓகே கூல்டவுன் ஜியா.. திருத்திட்டேன்..

வேற..?

சீனு said...

ரொம்ப பிடிச்சது லாரன்ஸின் ஸ்டைல். இந்த வேஷம் நிச்சயமாக லாரன்ஸுக்கு அப்படியே பொருந்துகிறது.

அப்புறம், அந்த ஐயருக்கு கௌபாய் தொப்பி, சூப்பர்.

பண்டிடாஸ் படத்தில் வரும் சல்மா ஹையிக் போல இருக்கிறார் பத்மபிரியா...

Lenin said...

director's 1st film is 'Album'

pichaikaaran said...

" அவசியம் பார்க்க வேண்டிய திரைப்படம்தான்."

ok boss.... superb review

உண்மைத்தமிழன் said...

[[[சீனு said...

ரொம்ப பிடிச்சது லாரன்ஸின் ஸ்டைல். இந்த வேஷம் நிச்சயமாக லாரன்ஸுக்கு அப்படியே பொருந்துகிறது. அப்புறம், அந்த ஐயருக்கு கௌபாய் தொப்பி, சூப்பர். பண்டிடாஸ் படத்தில் வரும் சல்மா ஹையிக் போல இருக்கிறார் பத்மபிரியா...]]]

சீனு ஸார் நன்றி..!

பத்மபிரியா கமெண்ட் நச்..!

உண்மைத்தமிழன் said...

[[[Lenin said...
director's 1st film is 'Album']]]

லெனின்..

ஆல்பம் படத்தை இயக்கியது வசந்தபாலன்..!

உண்மைத்தமிழன் said...

[[[பார்வையாளன் said...
"அவசியம் பார்க்க வேண்டிய திரைப்படம்தான்."
ok boss. superb review]]]

அவசியம் பாருங்க ஸார்..!

Lenin said...

sorry boss.My mistake

பா.ராஜாராம் said...

நல்ல விமர்சனம்.

உண்மைத்தமிழன் said...

[[[Lenin said...
sorry boss. My mistake]]]

It's Ok..

உண்மைத்தமிழன் said...

[[[பா.ராஜாராம் said...
நல்ல விமர்சனம்.]]]

மி்க்க நன்றிகள் ஸார்..!