30-04-2010
என் இனிய வலைத்தமிழ் மக்களே..!
நேற்று முன்தினம் நடிகை குஷ்புவுக்கு எதிரான வழக்குகளை தள்ளுபடி செய்த சுப்ரீம் கோர்ட்டு, “திருமணத்துக்கு முந்தைய `செக்ஸ்' உறவு சட்டபூர்வக் குற்றம் அல்ல” என்று வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பு ஒன்றை வழங்கி உள்ளது.
திருமணத்துக்கு முன்பு பெண்கள் பாதுகாப்பான `செக்ஸ்' உறவு கொள்வது தவறு இல்லை என்று, பிரபல நடிகை குஷ்பு கருத்து தெரிவித்து இருந்தார். கடந்த 2005-ம் ஆண்டில் வெளியான குஷ்புவின் இந்த கருத்து தமிழ்நாட்டில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.
அவருக்கு எதிராக தமிழகத்தின் பல்வேறு கோர்ட்டுகளில் 22 வழக்குகள் தொடரப்பட்டு இருந்தன. அந்த வழக்குகள் அனைத்தையும் தள்ளுபடி செய்யவேண்டும் என்ற குஷ்புவின் கோரிக்கையை சென்னை ஐகோர்ட்டு நிராகரித்துவிட்டது. அதை எதிர்த்து குஷ்புவின் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் செய்யப்பட்டது.
தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் தலைமையில் நீதிபதிகள் தீபக்வர்மா, பி.எஸ்.சவுகான் ஆகியோரைக்கொண்ட சுப்ரீம் கோர்ட்டு பெஞ்ச் இந்த வழக்கை விசாரித்து நேற்று முன் தினம் தீர்ப்பு கூறியது. குஷ்புவுக்கு எதிராக தொடரப்பட்ட 22 வழக்குகளையும் தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
"பேட்டி ஒன்றில் குஷ்பு தெரிவித்த சொந்த கருத்துக்கு எதிராக கோர்ட்டில் கிரிமினல் வழக்கு தொடருவதற்கு யாருக்கும் உரிமை இல்லை. தனிப்பட்ட முறையில் யாருக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் குஷ்புவின் கருத்து அமையவில்லை. இந்த வழக்குகள் உள்நோக்கம் கொண்டவை'' என்று, நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் குறிப்பிட்டு இருந்தனர்.
3 நீதிபதிகள் கொண்ட `சுப்ரீம் கோர்ட்டு பெஞ்ச்'சுக்காக நீதிபதி சவுகான் தீர்ப்பை எழுதி இருந்தார். தீர்ப்பின் முழு விவரம் இது..
"திருமணத்துக்கு பிறகே `செக்ஸ்' உறவு என்பது நமது சமுதாயத்தின் பிரதான கருத்தாகும். அதே நேரத்தில், திருமணம் ஆகாமலேயே பரஸ்பரம் சம்மதத்துடன் உறவு வைத்துக்கொள்வது சட்டப்படி கிரிமினல் குற்றம் அல்ல என்று, இந்திய தண்டனை சட்டம் 497-வது பிரிவில் தெளிவாக குறிப்பிடப்பட்டு உள்ளது.
சாதாரணமாக தனது கருத்துக்களை வெளியிடும் ஒருவரை தண்டிப்பது குற்றவியல் சட்டத்தின் பணி அல்ல. அது பேச்சு மற்றும் கருத்து சுதந்திரத்துக்கு எதிரானதாகும். சட்டபூர்வமான குற்றம் இழைத்ததற்கான ஆதாரங்களை புகார்தாரர்கள் தாக்கல் செய்தால் மட்டுமே, வழக்கு தொடர்வதற்கான நடைமுறைகளை மாஜிஸ்திரேட்டுகள் தொடங்க வேண்டும்.
தவறான, சாரமற்ற புகார்கள் மீது நடவடிக்கை எடுத்தால் அது குற்றம் சாட்டப்பட்டவருக்கு கொடுமை இழைப்பதாகிவிடும். நடிகை குஷ்புவுக்கு எதிரான புகார்கள், உள்நோக்கத்துடன் அரசியல் கட்சி நிர்வாகிகள் சார்பில் கூறப்பட்டு இருப்பதால், குற்றவியல் நடைமுறை சட்ட அமைப்பை தவறாக பயன்படுத்துவதை தடுக்கும் வகையில், அனைத்து வழக்குகளும் தள்ளுபடி செய்யப்பட வேண்டும்.
ஆங்கில பத்திரிகைக்கு குஷ்பு அளித்த பேட்டியில் தெரிவித்த கருத்துகள் ஆபாசமானவையோ நற்பண்புகளுக்கு களங்கம் ஏற்படுத்துவதாகவோ இல்லை. திருமணத்துக்கு முந்தைய செக்ஸ் உறவுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து இருக்கிறார், அவ்வளவுதான்.
எந்த ஒரு தனி மனிதருக்கோ, கூட்டாக பலருக்கோ அல்லது ஒரு அமைப்புக்கோ அந்த கருத்தை பின்பற்ற வேண்டும் என்று உத்தரவிடும் நோக்கில் அதை அவர் தெரிவிக்கவில்லை. அவதூறு வழக்கு சட்ட பிரிவின் கீழும் அவருடைய கருத்துக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியாது.
அதே நேரத்தில் குஷ்புவின் கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்தியது உண்மைதான். திருமணத்துக்கு முந்தைய உறவு, சேர்ந்து வாழ்வது போன்ற சர்ச்சைகள் எழும்போது அதுபற்றி வெளிப்படையாக விவாதிக்கும் கலாசாரம் வேண்டும்.
திருமண பந்தம் என்பது இந்தியாவில் முக்கியமான சமூக சம்பிரதாயம் என்பதில் மாற்று கருத்து இருக்க முடியாது. அதேபோல் சில தனி நபர்கள் மற்றும் அமைப்பினர் அதற்கு எதிரான கருத்துக்களையும் கொண்டு இருக்கிறார்கள் என்பதையும் நாம் ஒப்புக்கொள்ள வேண்டும். தனிநபர் சுதந்திரத்தில் குற்றவியல் சட்டத்தை அவசியமின்றி பயன்படுத்த முடியாது.
குஷ்புவின் கருத்தில் புகார்தாரர்களுக்கு ஆட்சேபனை இருந்தால், அதே வழியில் அவர்களும் பத்திரிகை மற்றும் ஊடகங்கள் மூலம் தங்கள் பதில் கருத்துக்களை தெரிவித்து இருக்கலாம். அதற்காக கிரிமினல் வழக்கு மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டிய தேவை இல்லை. குஷ்புவின் கருத்து இளைஞர்களுக்கு தவறான வழிகாட்டிவிடும் என்ற வாதத்தை ஏற்க முடியாது.
"திருமணத்துக்கு முந்தைய உறவுகள் அதிகரித்து வருவதால், இருவருடைய சம்மதத்துடன் நடைபெறும் அத்தகைய உறவுகளை சமூகரீதியாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதுதான் குஷ்புவின் கருத்தே தவிர, எல்லா வகையான `செக்ஸ்' தொடர்புகளுக்கும் அவர் பகிரங்கமாக ஆதரவு தெரிவிப்பதாக அர்த்தம் அல்ல.
குஷ்புவின் கருத்தை அப்படி தவறாக கருத வேண்டும் என்றால், `செக்ஸ்' தொடர்பாக வெளியிடப்படும் பல்வேறு செய்தி, கட்டுரைகளுக்காக எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள் போன்றவர்களையெல்லாம் கிரிமினல் குற்ற நடவடிக்கைகளுக்கு உட்படுத்த வேண்டும். இதை அமல்படுத்தவது நடைமுறைக்கு சாத்தியமானது அல்ல.
ஒரு வாதத்திற்காக, குஷ்புவின் கருத்து, திருமணத்துக்கு முன்பு உறவு கொள்ள சில இளைஞர்களை தூண்டுவதாக கருதினாலும், அந்த செயல் கிரிமினல் குற்றம் அல்ல என்பதால் சட்டப்படி எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது''.
இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டு உள்ளது.
இந்த வழக்கு விசாரணையின்போது, திருமணத்திற்கு முன்பு சேர்ந்து வாழ்வது குறித்து நீதிபதிகள் சில கருத்துக்களை தெரிவித்து இருந்தனர்.
அந்த கருத்துக்களை நீதிபதிகளின் உத்தரவு என்று கருதி, அதற்கு எதிராக ஏராளமான பொதுமக்கள் சுப்ரீம் கோர்ட்டிற்கு கடிதங்களை அனுப்பினார்கள். சிலர் அந்த உத்தரவை மறுபரிசீலனை செய்யும்படி கோரி இருந்தனர். சில கடிதங்களில், “பாரதத்தின் புராண இலக்கியங்கள் பற்றி உங்களுக்கு தெரியுமா?” என்றும் நீதிபதிகளிடம் கேள்வி எழுப்பப்பட்டு இருந்தனவாம்.
தீர்ப்பில் இந்தத் தகவலையும் வெளியிட்ட நீதிபதிகள், பத்திரிகை மற்றும் டி.வி. ஊடகங்களில் திரித்து வெளியான செய்திகளை பார்த்து இந்தக் கடிதங்களை பொதுமக்கள் எழுதி இருப்பதாக தெரிவித்தனர். எனவே, “இது போன்ற செய்திகளை வெளியிடும்போது பத்திரிகை மற்றும் ஊடகங்கள், மேலும் கவனமாகவும், பொறுப்பு - எச்சரிக்கை உணர்வோடும் வெளியிட வேண்டும்” என்றும் நீதிபதிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
தன் மனதுக்கு சரியென்று பட்டதை வெளிப்படையாகச் சொன்ன குஷ்புவின் கருத்து, தமிழ்க் கலாச்சாரத்திற்கு எதிரானது என்று சொல்லி அவரை எதிர்த்து உள் நோக்கத்துடன் பழைய பகையை மனதில் வைத்துக் கொண்டு விடுதலைச்சிறுத்தைகளும், பாட்டாளி மக்கள் கட்சியும் நடத்திய அராஜகங்களை சுலபத்தில் மறந்துவிட முடியாது..!
இவர்கள்தான் தமிழ்நாட்டின் கலாச்சாரக் காவலர்களைப் போல தங்களைக் காட்டிக் கொண்டு தமிழ்ப் பண்பாட்டை நாங்கள்தான் காப்பாற்றப் போகிறோம் என்று மேடைக்கு மேடை வாய் கிழிய பேசிவிட்டு ஒண்டியாய் இருந்த ஒரு பெண்ணிடம் தங்களது எதிர்ப்பைக் காட்டுவதற்கு தங்களிடம் இருந்த பெண்கள் படையினரையே அனுப்பி வைத்தார்கள்.
பண்பாடு, கலாச்சாரம் என்று கூவிய இவர்கள் எதிர்க்கக் கிளம்பிய தங்களது அமைப்பின் பெண்களிடம் விளக்குமாற்றையும், செருப்பையும் கொடுத்து குஷ்பு வீட்டின் எதிரே போராட்டம் நடத்த தூண்டினார்கள்.
“எதிர்க் கருத்தைத் தெரிவிக்க செருப்பையும், விளக்குமாற்றையும் காண்பிப்பதுதான் தமிழ்ப் பண்பாடா? தமிழ்க் கலாச்சாரமா?” என்று நடுநிலையாளர்கள் கேட்ட கேள்விக்கு மட்டும், இன்றுவரையிலும் இந்தக் கலாச்சாரக் காவலர்களும், பண்பாளர்களும் பதிலே சொல்லவில்லை. வாழ்க இவர்களது ஜனநாயகம்..!
ஆனாலும் தனி ஒரு மனுஷியாய், தான் எடுத்த முடிவில் இறுதிவரை உறுதியாய் நின்று, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தோல்வியடைந்தாலும் மனதைரியத்துடன் உச்சநீதிமன்றம் வரையிலும் சென்று தனது கருத்துரிமையை நிலைநாட்டி, பேச்சுரிமை, எழுத்துரிமை, தனி மனித உரிமைகளுக்காக இனி வரும் காலங்களில் மேற்கோள் காட்ட உச்சநீதிமன்றத்தில் ஒரு குறிப்பிடத்தக்கத் தீர்ப்பைப் பெற்றுக் கொடுத்தமைக்காக குஷ்புவிற்கு எனது சல்யூட்..!
|
Tweet |
52 comments:
நானும் ஒரு சல்யூட் போட்டுகிறேன்!
அனுபவம், அரசியல், கலாச்சாரம், குஷ்பூ, சுப்ரீம் கோர்ட், பண்பாடு
இந்த லேபிள் வரிசை நல்லாருக்குண்ணே
:)
உண்மையிலேயே வரலாற்று சிறப்பு மிக்க ஒரு நல்ல தீர்ப்புதான்.ஆனால் இதனை எல்லோரும் நல்ல கண்ணோட்டத்தில் அணுக வேண்டும் இதனை மேற்கோளாக எடுத்துக்கொண்டு தவறான வழிகளில் செல்லாமல் இருக்க வேண்டும்.
எனக்கு ஒரு சின்ன சந்தேகம். இப்படி ஒரு சரியான தீர்ப்பு கிடைக்க உச்சநீதிமன்றம் வரை செல்ல வேண்டுமா அப்போ உயர்நீதிமன்றத்தில் இருப்பவர்கள் எல்லாம் எதற்கு(சட்ட நுணுக்கங்கள் சரிவர தெரியாத நீதிபதிகளா. அப்படியானால் தவறான தீர்ப்பு தந்து குஷ்புவை உச்சநீதிமன்றம் வரை செல்லவைத்து மன உளைச்சலுக்கு ஆளாக்கியதற்கு அவர்களுக்கு தண்டனை கிடைக்குமா?) அல்லது வேறு ஏதேனும் காரணம் இருக்கிறதா.
நானும் வச்சிக்கிறேன் ஒரு சல்யூட்ட்ட்ட்ட்
மிதமான புகழும் குறைவான செல்வாக்கும் உள்ளவர்களை சீண்டி அரசியல் வளர்க்கும் தாக்கரேயின் தமிழாக்க தொடர்களான
ராமதாஸ் திருமாவின் இந்த செயலுக்கு குஷ்புவின் போராட்ட பாதையும் அவர் எய்திய வெற்றியும் சரியான சவுக்கடி என்ற போதும்
அதை எல்லாம் புறந்தள்ளிவிட்டு அடுத்த கட்ட அரசியலுக்கு தயாராகிவிடுவார்கள் அவர்கள்.
குஷ்பு என்பதால் சமாளித்தார். அதுவே பண பலம் இல்லாத ஒரு எழுத்தாளனாய் இருந்திருந்தால்
நாடு கடத்தல் மாநிலம் கடத்தல் கடத்தலோ கடத்தல்.
vaalga poali jananayagam!!!
//(சட்ட நுணுக்கங்கள் சரிவர தெரியாத நீதிபதிகளா. அப்படியானால் தவறான தீர்ப்பு தந்து குஷ்புவை உச்சநீதிமன்றம் வரை செல்லவைத்து மன உளைச்சலுக்கு ஆளாக்கியதற்கு அவர்களுக்கு தண்டனை கிடைக்குமா?) //
itha thaan naan rompa naala keatukitu irukean NO ANSWER.
ரண்டு சல்யூட். குஷ்பூக்கு ஒன்னு. கோர்ட்டுக்கு ஒன்னு
....புபுபுபுபுபுபுபுபுபுபுபுபுபுபூபூபூபூபூபூபூபூபூபூபூபூபூபூபூபூபூபூ..!
பதிவில் தான் ரொம்பவுமே உணர்ச்சி வசப்படறீங்கன்னு பார்த்தாக்க, தலைப்பிலுமா?
ஹா ஹா! நல்ல நாடு, நம்ம நாடு. எது எதுக்கு சட்டம் எல்லாம் தேவைப்படுது. ஒன்னு பேச முடியல! பிரபலமானவங்க பேசினாலே பிரச்சினைதான்.
கிரிமினல் குற்றங்கள் செய்கிறவர்களை எல்லாம் விட்டுவிட்டு... சும்மா இருக்கிறவங்கள குடையிறதே நம்மாளுங்களுக்கு பொழப்பா போச்சு.
//நேசமித்ரன் said...
அனுபவம், அரசியல், கலாச்சாரம், குஷ்பூ, சுப்ரீம் கோர்ட், பண்பாடு
இந்த லேபிள் வரிசை நல்லாருக்குண்ணே
:)//
லேபிள்கள் அகர வரிசைப்படி தான் பாஸ் வகைப்படுத்தப்படும். ப்ளாக்கர் அப்பிடி அமையிற மாதிரி தான் வச்சிருக்காக
உண்மை தமிழன் அவர்களே,, நீங்கள் அதீதமாக உணர்ச்சி வச பட வேண்டியதில்லை ... இது ஒன்றும் திருப்பு முனை வழக்கு இல்லை... திசை மாறிய வழக்கு...
நடந்தது என்ன என மறந்து விட்டு, ஆளாளுக்கு கருத்து சொல்லி வருகிறீர்கள்... சிலர், இதுவரை திருமணத்திற்கு முன் செக்ஸ் என்பது சட்டப்படி குற்றம் என இருந்தது போலவும், குஷ்பு அதை மாற்றி நீதி வாங்கி தந்து இருப்பது போலவும் நினைக்கிறாகள்...
அப்போது என்ன நடந்தது... திருமணத்துக்கு முன் இந்திய பெண்கள் செக்ஸ் வைத்து கொள்கிறார்களா, என ஒரு பத்திரிக்கை சர்வே எடுத்தது.. அதன் ஒரு பகுதியாக குஷ்புவிடம் பேட்டி எடுத்தார்கள்... " நான் திருமணத்துக்கு முன் பலருடன் அப்படி இருந்து இருக்கிறேன்..இதெல்லாம் தவறு இல்லை " என்று அவர் சொல்லி இருந்தால், எந்த பிரச்சினையும் வந்து இருக்காது...
அனால், அவர் என்ன சொன்னார்.. தமிழ் நாட்டு பெண்கள் இப்போது புதுமை பெண்கள் ஆகி விட்டார்கள்.... திருமணத்துக்கு முன்பே செக்ஸ் வைத்து கொள்வது தமிழ் நாட்டு பெண்களுக்கு இயபாகி விட்டது... இதை பெட்ரோ ததுப்பதை விட, அவர்கள் பாது காப்பாக செக்ஸ் வைத்து கொள்ள அறிவுரை சொல்ல வேண்டும் " என பேட்டி கொடுத்தார் ( அல்லது அப்படி பேட்டி கொடுத்தார் என செய்தி பரவியது )
இது சாமான்ய பெண்களை கோப படுதித்யது.... எல்லோரையும் அவர் அப்படி சொல்லி இருக்க கூடாது என கோப பட்டனர்... அந்த கோபத்தின் வெளிபாடுதான் செருப்படி...
அவர் அழுதவாறு பேட்டி எல்லாம் கொடுத்தார்.. மன்னிப்பு கேட்டார்..
பிறகு சொன்னதை மாற்றி , இருவர் செக்ஸ் கொண்டால் அது தவறில்லை என்றுதான் சொன்னேன் என்று வழக்காடி வெற்றி பெற்று இருக்கறார் ( இது தவறு என்று யாரும் சொல்லவில்லையே..தமிழ் நாடு பெண்கள் இப்படி இருக்கிறார்கள் என அவர் சொன்னார் என நினைத்துதான் கோப பட்டனர் )... இவர் இப்படி முன்பே சொல்லி இருந்தால், செருப்படி வாங்கி இருக்க வேண்டி இருந்திரக்கது....
நானும் ஒரு சல்யூட் போட்டுகிறேன்!
[[[வால்பையன் said...
நானும் ஒரு சல்யூட் போட்டுகிறேன்!]]]
இதுக்கு நானும் ஒரு நன்றி சொல்லிக்கிறேன்..!
[[[நேசமித்ரன் said...
அனுபவம், அரசியல், கலாச்சாரம், குஷ்பூ, சுப்ரீம் கோர்ட், பண்பாடு
இந்த லேபிள் வரிசை நல்லாருக்குண்ணே
:)]]]
நான் மாத்திதாண்ணே அடிச்சேன். அது ஆட்டோமேட்டிக்கா இப்படி அகர வரிசைக்கு மாறிக்கிச்சு..!
[[[selvakumar said...
உண்மையிலேயே வரலாற்று சிறப்புமிக்க ஒரு நல்ல தீர்ப்புதான்.ஆனால் இதனை எல்லோரும் நல்ல கண்ணோட்டத்தில் அணுக வேண்டும் இதனை மேற்கோளாக எடுத்துக்கொண்டு தவறான வழிகளில் செல்லாமல் இருக்க வேண்டும்.]]]
கரெக்ட்.. அவர் என்ன நோக்கத்திற்காக, எந்தக் கண்ணோட்டத்தில் சொன்னார் என்பது எனக்குப் புரிகிறது..!
மற்றவர்களுக்கும் புரிய வேண்டுமே..!
[[[எனக்கு ஒரு சின்ன சந்தேகம். இப்படி ஒரு சரியான தீர்ப்பு கிடைக்க உச்சநீதிமன்றம்வரை செல்ல வேண்டுமா? அப்போ உயர்நீதிமன்றத்தில் இருப்பவர்கள் எல்லாம் எதற்கு(சட்ட நுணுக்கங்கள் சரிவர தெரியாத நீதிபதிகளா. அப்படியானால் தவறான தீர்ப்பு தந்து குஷ்புவை உச்சநீதிமன்றம்வரை செல்ல வைத்து மன உளைச்சலுக்கு ஆளாக்கியதற்கு அவர்களுக்கு தண்டனை கிடைக்குமா?) அல்லது வேறு ஏதேனும் காரணம் இருக்கிறதா.]]]
ச்சூ.. கோர்ட்டு அவமதிப்பு வழக்கில் மாட்டிக் கொள்ளப் போகிறீர்கள்..!
இதெல்லாம் நீதித்துறையில் சகஜமான விஷயம்தான்..!
நீதிபதிகளுக்குள் சட்டத்தை அணுகுகின்ற விஷயத்தில் நிறைய பாகுபாடுகள் இருக்கின்றன..! அதில் இதுவும் ஒன்று..!
அதனால்தான் உயர்நீதிமன்றத் தீர்ப்பை விமர்சித்தோ, அல்லது எடுத்துக்காட்டாகவோ உச்சநீதிமன்ற நீதிபதிகள் குறிப்பிடவில்லை என்று நினைக்கிறேன்..!
[[[முகிலன் said...
நானும் வச்சிக்கிறேன் ஒரு சல்யூட்ட்ட்ட்ட்]]]
குஷ்பூ சார்பா நானும் நன்றி சொல்லிக்கிறேன்..!
[[[VISA said...
மிதமான புகழும் குறைவான செல்வாக்கும் உள்ளவர்களை சீண்டி அரசியல் வளர்க்கும் தாக்கரேயின் தமிழாக்க தொடர்களான
ராமதாஸ் திருமாவின் இந்த செயலுக்கு குஷ்புவின் போராட்ட பாதையும் அவர் எய்திய வெற்றியும் சரியான சவுக்கடி என்ற போதும்
அதை எல்லாம் புறந்தள்ளிவிட்டு அடுத்த கட்ட அரசியலுக்கு தயாராகிவிடுவார்கள் அவர்கள்.
குஷ்பு என்பதால் சமாளித்தார். அதுவே பண பலம் இல்லாத ஒரு எழுத்தாளனாய் இருந்திருந்தால்
நாடு கடத்தல் மாநிலம் கடத்தல் கடத்தலோ கடத்தல்.
vaalga poali jananayagam!!!]]]
உண்மைதான் விஸா..!
குஷ்பூக்கு மன தைரியமும், செல்வாக்கும் இருந்தது.. இறுதிவரையில் போராடியிருக்கிறார்..!
[[[VISA said...
//(சட்ட நுணுக்கங்கள் சரிவர தெரியாத நீதிபதிகளா. அப்படியானால் தவறான தீர்ப்பு தந்து குஷ்புவை உச்சநீதிமன்றம் வரை செல்லவைத்து மன உளைச்சலுக்கு ஆளாக்கியதற்கு அவர்களுக்கு தண்டனை கிடைக்குமா?)//
itha thaan naan rompa naala keatukitu irukean NO ANSWER.]]]
நீதிபதிகளுக்குள் சட்டத்தை அணுகுகின்ற விஷயத்தில் நிறைய பாகுபாடுகள் இருக்கின்றன..! அதில் இதுவும் ஒன்று..!
அதனால்தான் உயர்நீதிமன்றத் தீர்ப்பை விமர்சித்தோ, அல்லது எடுத்துக்காட்டாகவோ உச்சநீதிமன்ற நீதிபதிகள் குறிப்பிடவில்லை என்று நினைக்கிறேன்..!
[[[வானம்பாடிகள் said...
ரண்டு சல்யூட். குஷ்பூக்கு ஒன்னு. கோர்ட்டுக்கு ஒன்னு.]]]
ஆஹா.. நான் கோர்ட்டுக்கு சல்யூட் பண்ண மறந்திட்டேன் ஸார்..!
நல்லவேளை ஞாபகப்படுத்துனீங்க..
ஒரு சல்யூட்டை சுப்ரீம் கோர்ட்டுக்கும், ஒரு நன்றியை உங்களுக்கும் செலுத்திக்கிறேன்..!
[[[கிருஷ்ணமூர்த்தி said...
....புபுபுபுபுபுபுபுபுபுபுபுபுபுபூபூபூபூபூபூபூபூபூபூபூபூபூபூபூபூபூபூ..!
பதிவில்தான் ரொம்பவுமே உணர்ச்சிவசப்படறீங்கன்னு பார்த்தாக்க, தலைப்பிலுமா?]]]
ச்சும்மா ஒரு ஜாலிக்குத்தான் ஸார்..!
[[[V.Radhakrishnan said...
ஹா ஹா! நல்ல நாடு, நம்ம நாடு. எது எதுக்கு சட்டம் எல்லாம் தேவைப்படுது. ஒன்னு பேச முடியல! பிரபலமானவங்க பேசினாலே பிரச்சினைதான்.]]]
இல்லை.. அரசியல்வியாதிகள் சல்லித்தனமான அரசியல் செய்தால் இப்படித்தான் ஸார்..!
[[[எட்வின் said...
கிரிமினல் குற்றங்கள் செய்கிறவர்களை எல்லாம் விட்டுவிட்டு... சும்மா இருக்கிறவங்கள குடையிறதே நம்மாளுங்களுக்கு பொழப்பா போச்சு.]]]
இந்தக் குடையற வேலையை செய்றவங்களே கிரிமினல்கள்தான்..!
பார்வையாளன் ஸார்..
குஷ்பூ சொன்ன வார்த்தைகளில் சித்து விளையாடியது திருமாவும், ராமதாஸூம்தான்..!
பாதுகாப்பான உடலுறவை வைத்துக் கொள்ளும்படி சொல்வதே இங்கு ஒன்றும் தவறாகிவிடாது..! அது அறிவுரைதான்..!
ஏன் இதைச் சொல்கிறீர்கள் என்ற கேள்விக்குத்தான் அது போல் இருப்பவர்களும் இங்கே நிறைய பேர் இருக்கிறார்களே என்ற அர்த்தத்தில் சொன்னார்.. அது இங்கே அர்த்தம் மாறி அனர்த்தமாகிவிட்டது..!
அப்படியே அது உங்களுக்குப் புரியாமல் உங்களது புரிந்த அர்த்தத்திலேயே இருந்திருந்தாலும், அவரை வீட்டில் முடக்கி வைத்து, தெருவில் நின்று போராட்டம் நடத்தி, செருப்பு, விளக்குமாற்றை காண்பித்து...
இதுவெல்லாம் ஜனநாயகமல்ல.. கோர்ட்டில் வழக்குத் தொடுத்தார்களே அது நியாயமானது..
இப்போ முடிஞ்சு போச்சுல்ல..! விடுங்க..!
நீங்கள் சொல்வதைப் போல் இது குற்றமெனில் முதல் குற்றவாளியாக கூண்டில் நிறுத்தப்பட்டிருப்பவர் இந்தியா டுடே பத்திரிகைதான்.. ஆனால் அவர்களைத் தொடவே இல்லை இந்த அரசியல்வியாதிகள்..!
இது தனிப்பட்ட முறையிலான பழி வாங்கும் நடவடிக்கைதான். அதற்காக தங்களது கட்சிக்காரர்களை இவர்கள் பயன்படுத்திக் கொண்டார்கள்.. அவ்வளவுதான் விஷயம்..!
[[[மங்களூர் சிவா said...
நானும் ஒரு சல்யூட் போட்டுகிறேன்!]]]
தம்பீ.. வா.. வா..
ஆடிக்கொரு தடவை.. அமாவாசைக்கு ஒரு தடவைன்னு வர்றியே..
இது நல்லாவா இருக்கு..?
குஷ்பு மீது வழக்கு வந்த வுடன் ஒரு தேங்காய் மூடி வைக்கோலுக்கு பதிலாக ஒரு நல்ல படித்த வக்கீலை வாதாட வைத்து இருக்க வேண்டும். குஷ்பு கோர்ட்டில் இதை மட்டும் சொல்லியிருந்தால் போதும்:
நான் நடிக்க வந்த பொழுது எனக்கு வயது பதினாறு. இப்பொழுது ஒரு இந்துவை திருமணம் செய்து நான் ஒரு இந்து வாக ஆகி எல்லா புராணம்களையும் படித்தேன். எவ்வளவு உண்ணதமான் கருத்துக்கள். எவ்வளவு தீர்க்க தரிசனம் நமது முன்னோர்க்கு என்று வியந்து இருக்கிறேன். இப்ப நடப்பதை அன்றே எழுதி வைத்துள்ளார்கள்: உதாரணமாக…ஓரின சேர்க்கை; திருமணத்திற்கு முன்பும் பெண்களுடன் ஜல்சா! திருமணத்திற்கு பிறகும் பிற பெண்களுடன் ஜல்சா! இது எல்லாம் இப்ப சகஜம். அதை அன்றே நமது முன்னோர்கள் புராணத்தில் எழுதியுள்ளார்கள். என்னே தீர்க்க தரிசனம் அவர்களுக்கு.
உதாரணமாக…
ஒரு சிவன் (ஆண்) + விஷ்ணு (ஆண்) = ஐய்யப்பன், ஒரு கடவுள். (ஓரின சேர்க்கை)
ஒரு நாரதர் (ஆண்) + விஷ்ணு (ஆண்) = அறுபது தமிழ் வருடங்கள். அதுவும் சம்ஸ்கிருத பெயரில்! (ஓரின சேர்க்கை). இந்த கண்ணராவி தான் தமிழ் வருடங்களின் பெயர்கள்!
கிருஷ்ணன் + ராதா அடித்த கூத்துக்கள். அப்புறம் ஆண்டாள்! அப்புறம் குந்தி! ஐவரைததாண்டி ஆறாவது! (திருமணத்திற்கு முன்பும் பெண்களுடன் ஜல்சா! திருமணத்திற்கு பிறகும் பிற பெண்களுடன் ஜல்சா! குந்தி எல்லா ஆண்களுடன் ஜல்சா! ).
ஜட்ஜ் ஐயா அவர்களே, இந்த புராணங்களைப் படித்த பின் நான் முழு இந்துவாக மாறிவிட்டேன். இந்த புராணங்கள் முழுவதும் உண்மை என்று உளமார நம்பி இந்த கருத்துக்களை கூறினேன். இது தப்பா ஜட்ஜ் ஐயா? நீங்களே கிருஷ்ணனும் ராதாவும் திருமணத்திற்கு முன்னால் ஜல்சா செய்தார்கள் என்று கோர்ட்டில் கூறினீர்களே? நான் சொன்னால் தப்பா?
தப்பு என் மீது இல்லை ஜட்ஜ் ஐயா அவர்களே. என்னை ஆட் கொண்ட புராணங்களில் மீது தான் தப்பு ஜட்ஜ் ஐயா அவர்களே.
எய்தவன் இருக்க அம்பை நோவதேன் ? நீங்களே சொல்லுங்கள் ஜட்ஜ் ஐயா அவர்களே?
[[[♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...
பதிவர்கள் கவனத்திற்கு - (எல் நீனோ EL NINO) !!! http://wwwrasigancom.blogspot.com/2010/04/16-el-nino.html]]]
தம்பீ..
இதுதான் அந்த நினோ மேட்டரா..?
உங்க அளவுக்கெல்லாம் எனக்கு இந்த மாதிரி விஷயத்துல வொர்த் இல்லப்பா.. அதுனாலதான் எழுத முடியலை.. மன்னிச்சுக்க..!
சிறந்த கட்டுரை..!
ஆட்டையாம்பட்டி அம்பி..!
உமக்கு ரொம்பவே லொள்ளுதான்..!
கோர்ட் சொல்லுறது சரி.. உங்க மனச்சாட்சி என்ன சொல்லுது. அத முதல்ல சொல்லுங்க சார்.
ரண்டு சல்யூட். குஷ்பூக்கு ஒன்னு. கோர்ட்டுக்கு ஒன்னு
இதெல்லாம் ஒரு விஷயமா?
நான் தவறான எண்ணத்தில் இந்த கருத்தை சொல்ல வில்லை.
நீங்கள் சுருக்குமாக எழுதப் பழகுங்களேன், சுருக்கமாக பதிவு இருந்தால் முழு கருத்துக்களும் இன்னும் அதிகப் பேரை சென்று அடையும்,
தன்னிகரில்லாத உழைப்பாளிக்கு மேதின வாழ்த்துகள்!
[[[ஜெய்லானி said...
கோர்ட் சொல்லுறது சரி.. உங்க மனச்சாட்சி என்ன சொல்லுது. அத முதல்ல சொல்லுங்க சார்.]]]
என் மனசாட்சி குஷ்பூவின் பேச்சு சுதந்திரத்தை ஆதரிக்கிறது..!
[[[செந்தில்குமார் said...
ரண்டு சல்யூட். குஷ்பூக்கு ஒன்னு. கோர்ட்டுக்கு ஒன்னு.]]]
அந்த இருவர் சார்பாகவும் நான் உங்களுக்கு இரண்டு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்..!
[[[அஹமது இர்ஷாத் said...
இதெல்லாம் ஒரு விஷயமா?]]]
இப்படின்னு நினைச்சு தமிழினக் காவலர்களும் அன்னிக்கு அமைதியா போயிருந்தா இவ்ளோ பிரச்சினை வந்திருக்காதே..!
[[[ராம்ஜி_யாஹூ said...
நான் தவறான எண்ணத்தில் இந்த கருத்தை சொல்ல வில்லை.
நீங்கள் சுருக்குமாக எழுதப் பழகுங்களேன், சுருக்கமாக பதிவு இருந்தால் முழு கருத்துக்களும் இன்னும் அதிகப் பேரை சென்று அடையும்.]]]
அண்ணே..
முழுத் தகவல்களும் இல்லாமல் பாதிப் பேருக்கு இங்கு புரியாதே..! நான் என்ன வேணும்னேவா எழுதுறேன்..! எனக்கும் கை வலிக்கத்தான செய்யுது..!
இந்தப் பதவிலேயே நான் பத்து பத்திகள்தான் எழுதியிருக்கிறேன்..
மீதியிருப்பவைகள் எல்லாம் சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்புகள்தான்..!
சுப்ரீம் கோர்ட்டின் முழு தீர்ப்பையும் அளிக்காமல் நான் இதில் என்ன எழுத முடியும்..? எப்படி எழுத முடியும்..? எனது கருத்துக்கு வலு வேண்டாமா..?
சூழ்நிலைக்கேற்றாற்போல்தான் எழுதணும்ண்ணே..!
[[[♫ஷங்கர்..】 ™║▌│█│║││█║▌║ said...
தன்னிகரில்லாத உழைப்பாளிக்கு மே தின வாழ்த்துகள்!]]]
தன்னிகரில்லாத பாசக்கார தம்பிக்கு மே தின வாழ்த்துக்கள்..!
"திருமணத்துக்கு முந்தைய `செக்ஸ்' உறவு சட்டபூர்வக் குற்றம் அல்ல” என்று வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பு ஒன்றை வழங்கி உள்ளது"
ஓஹோ.... இதுக்கு முன்னாடி , சட்ட விரோதம்னு இருந்துச்சா... குஷ்பூ இந்த சட்டத்தை மாத்திட்டங்களா.. ?
தமிழ்பொண்ணுங்க யாருமே கற்போட இல்லை என்று குஷ்பூ சொன்னதாக செய்திகள் வந்தன. இது மிகத்தவறான எண்ணம். மற்றப்டி திருமணத்திற்கு முன்பு செக்ஸ் வைத்துக் கொள்வதெல்லாம் சம்பந்தப் பட்டவர்கள் விருப்பம். சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு வரவேற்கப் படவேண்டியது.
//குஷ்புவிற்கு எனது சல்யூட்..!//
நானும் ஒரு சல்யூட் ப்ளீஸ்...
//SanjaiGandhi™ said...
தமிழ்பொண்ணுங்க யாருமே கற்போட இல்லை என்று குஷ்பூ சொன்னதாக செய்திகள் வந்தன. இது மிகத்தவறான எண்ணம். மற்றப்டி//
ஸ்ஸ்ஸபா... இன்னுமா சஞ்சய்...
யக்கா கொலகொலப் ப்ரியா, உங்களுக்கு வேணும்னா கற்பு என்பது மனசு சம்பந்தப் பட்டதா இருக்கலாம்.. ஆனால் குஷ்பூ சொன்னது அந்த அர்த்தத்தில் தானா? அவர் உடல் ரீதியான உறவை குறிப்பிடாமல் தான் அவ்வாறு சொன்னாரா? அப்டின்னா நானும் எதிர்க்கலை.
ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு கருத்து... அதுக்கு நம்ம ஆளுங்க நல்லாவே ஓவர் ரியக்ட் பண்ணாங்க... குஷ்பூ சொல்லிட்டதால எல்லாரும், எல்லாமும் மாறிட போறதில்ல...
தேவை இல்லாத வழக்குல இதுவும் ஒண்ணு...
//SanjaiGandhi™ said...
யக்கா கொலகொலப் ப்ரியா, உங்களுக்கு வேணும்னா கற்பு என்பது மனசு சம்பந்தப் பட்டதா இருக்கலாம்.. ஆனால் குஷ்பூ சொன்னது அந்த அர்த்தத்தில் தானா? அவர் உடல் ரீதியான உறவை குறிப்பிடாமல் தான் அவ்வாறு சொன்னாரா? அப்டின்னா நானும் எதிர்க்கலை//
சரிங்.. காந்தித்தம்பி...
[[[பார்வையாளன் said...
"திருமணத்துக்கு முந்தைய `செக்ஸ்' உறவு சட்டபூர்வக் குற்றம் அல்ல” என்று வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பு ஒன்றை வழங்கி உள்ளது"
ஓஹோ இதுக்கு முன்னாடி , சட்ட விரோதம்னு இருந்துச்சா. குஷ்பூ இந்த சட்டத்தை மாத்திட்டங்களா.. ?]]]
இல்லை.. இருந்ததைத்தான் சொன்னாங்க.. அதெப்படி மூடி, மறைச்சு வைச்சிருக்கிறதை நீ வெளில சொல்லலாம்னு குஷ்பு மேல பாய்ஞ்சுட்டாங்க..!
[[[SanjaiGandhi™ said...
தமிழ் பொண்ணுங்க யாருமே கற்போட இல்லை என்று குஷ்பூ சொன்னதாக செய்திகள் வந்தன. இது மிகத் தவறான எண்ணம். மற்றப்டி திருமணத்திற்கு முன்பு செக்ஸ் வைத்துக் கொள்வதெல்லாம் சம்பந்தப்பட்டவர்கள் விருப்பம். சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு வரவேற்கப்பட வேண்டியது.]]]
நன்றி தம்பி..!
[[[கலகலப்ரியா said...
//குஷ்புவிற்கு எனது சல்யூட்..!//
நானும் ஒரு சல்யூட் ப்ளீஸ்...
//SanjaiGandhi™ said...
தமிழ்பொண்ணுங்க யாருமே கற்போட இல்லை என்று குஷ்பூ சொன்னதாக செய்திகள் வந்தன. இது மிகத் தவறான எண்ணம். மற்றப்டி//
ஸ்ஸ்ஸபா இன்னுமா சஞ்சய்]]]
கலகலப்பான ப்ரியா.. ரொம்ப நாள் கழிச்சு வந்ததுக்கு தேங்க்ஸ்..!
தமிழ் மொழில ஒரு வார்த்தைக்குத்தான் எத்தனை அர்த்தம் இருக்கு..? மாட்டினாரு குஷ்பூ..!
[[[SanjaiGandhi™ said...
யக்கா கொலகொலப் ப்ரியா, உங்களுக்கு வேணும்னா கற்பு என்பது மனசு சம்பந்தப்பட்டதா இருக்கலாம்.. ஆனால் குஷ்பூ சொன்னது அந்த அர்த்தத்தில்தானா? அவர் உடல் ரீதியான உறவை குறிப்பிடாமல்தான் அவ்வாறு சொன்னாரா? அப்டின்னா நானும் எதிர்க்கலை.]]]
குஷ்பூ உடல் ரீதியான உறவைத்தான் பட்டவர்த்தனமா சொன்னாரு தம்பீ...!
[[[kanagu said...
ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு கருத்து. அதுக்கு நம்ம ஆளுங்க நல்லாவே ஓவர் ரியக்ட் பண்ணாங்க. குஷ்பூ சொல்லிட்டதால எல்லாரும், எல்லாமும் மாறிட போறதில்ல.
தேவை இல்லாத வழக்குல இதுவும் ஒண்ணு.]]]
கனகு.. எங்க ஆளையே காணோம்..! வெக்கேசன் டிரிப்பா..?
[[[கலகலப்ரியா said...
//SanjaiGandhi™ said...
யக்கா கொலகொலப் ப்ரியா, உங்களுக்கு வேணும்னா கற்பு என்பது மனசு சம்பந்தப் பட்டதா இருக்கலாம்.. ஆனால் குஷ்பூ சொன்னது அந்த அர்த்தத்தில் தானா? அவர் உடல் ரீதியான உறவை குறிப்பிடாமல் தான் அவ்வாறு சொன்னாரா? அப்டின்னா நானும் எதிர்க்கலை//
சரிங்.. காந்தித் தம்பி.]]]
ஓ.. சஞ்சயே உங்களுக்குத் தம்பின்னா நீங்க எனக்கு பாட்டியால்ல இருக்கணும்..!
முருகா..!
Well said nanbaa!
Ram
See who owns 1001fonts.co.nl or any other website:
http://whois.domaintasks.com/1001fonts.co.nl
See who owns webdoor.hu or any other website.
Post a Comment