கனகவேல் காக்க! – திரை விமர்சனம்..!

24-05-10

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

'ஜென்டில்மேன்', 'இந்தியன்', 'ரமணா' என்று ஏற்கெனவே பார்த்து, பார்த்துச் சலித்துப் போன விஷயத்தைத்தான் மீண்டும் சல்லடையில் சலிக்க வைத்துக் கொடுத்திருக்கிறார் இயக்குநர் கவின்பாலா. மிகுந்த வருத்தத்தோடுதான் எழுந்து வந்தேன்.
 
பணம், செல்வாக்கைக் கொண்டு இந்தியன் பீனல் கோடில் இருந்து தப்பித்துக் கொள்ளும் நிஜக் குற்றவாளிகள் சிலரை தேடிப் பிடித்துக் கொலை செய்கிறார் கரண். காரணம் கேட்டால் தனது குடும்பத்திற்கு நேர்ந்த கொடுமையை பிளாஷ்பேக்கில் விலாவாரியாக எடுத்துச் சொல்கிறார்.

பார்த்ததுதானே.. கேட்டதுதானே.. இதேதானா.. என்கிற முதல் உணர்வு மனதிற்குள் வரும்போதே ரசிகர்களுக்குள் ஒரு அயர்ச்சித் தன்மை ஏற்பட்டு விடுகிறது. பின்பு எதை ரசிப்புத் தன்மையோடு பார்ப்பது..?


கரண் சிற்சில இடங்களில் நடித்திருக்கிறார். இதுவே போதுமா..? அவரைச் சொல்லிக் குற்றமில்லை. சட்டியில் இருந்தால்தானே அகப்பையில் வரும். நான் பார்த்த ஒரு மலையாள பிட்டு படத்தில் இதைவிடவும் அற்புதமாக நடித்திருந்தார்.

இந்தக் கதையில் நடிக்க முன்னணி ஹீரோக்களைத் தேடிச் சென்று கதை சொல்லியிருந்தால், நிச்சயம் பலரும் மறுத்திருப்பார்கள். கடைசியாகத்தான் கரண் சிக்கியிருப்பார் என்று நினைக்கிறேன்..!

என்னதான் கதை, தற்போதைய நாட்டு நடப்பை தெள்ளத் தெளிவாகச் சொல்லிக் காட்டுகிறது என்றாலும், அதனை ரசிக்கும் அளவுக்கு சுவாரசியமான திரைக்கதை மூலம் சொன்னால்தான் உண்டு. 'ஜென்டில்மேன்', 'இந்தியன்', 'ரமணா'வில் இந்த மூன்றுமே இருந்தது. அதனால்தான் அந்தப் படங்கள் இன்றளவும் டிரெண்ட் செட்டர் படங்களாக பேசப்படுகின்றன.

உதாரணத்திற்கு ஹீரோயின் ஹரிப்பிரியா கரண் மீது காதல் கொள்கின்ற காட்சியைச் சொல்லலாம். 'அவதார்' படத்தில் மனிதர்களைத் தாண்டிய காதலையே அவ்வளவு அழகாக உணர்த்தியிருக்கும்போது இதில் கொஞ்சம் அழுத்தமாக சுவாரசியமாக சொல்லியிருக்கக் கூடாதா..?

இது மாதிரியான திரைப்படங்களில் ஹீரோயின்கள் காட்சிகளுக்கு கனெக்ஷன் கொடுக்கத்தான் பயன்படுத்தப்படுவார்கள். இதிலும் அப்படியே.. இவரை வைத்துத்தான் கரண் தனது பிளாஷ்பேக் கதையைச் சொல்கிறார்.  இரண்டு டூயட்டுகளில் ஆடிப் பாடிவிட்டு இறுதிக் காட்சியில் கண்ணீர் சிந்துகிறார். ஆனாலும் இவருக்கு எதுக்கு இவ்ளோ பெரிய பில்டப்பான அறிமுகம்.. நீச்சலுடையில் கடலில் இருந்து எழுந்து வருகிறாராம்..?!!!

 
திரைப்படத்தின் மேக்கிங் என்பது ஸ்கிரீனில் காட்டப்படும் அத்தனையும் பெர்பெக்ஷனாக இருந்தால்தான் சிறப்பு.. போலீஸ் இன்ஸ்பெக்டர், சப்.இன்ஸ்பெக்டர், ஏ.சி., டி.சி., கமிஷனர் என்று அத்தனை போலீஸாரையும் அவரவர் பேட்ஜோடு அடையாளப்படுத்தினார்கள். ஆனால் அவர்களுடைய உடையமைப்பு..!?

அதிலும் பாண்டுவும், ஆதித்யாவும் போட்டிருக்கும் காக்கி டிரெஸ்ஸை பார்க்கின்றபோது இயக்குநர் கொஞ்சம் மலையாள காக்கி படங்களை பார்த்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று சொல்லத் தோன்றுகிறது.  

படத்தின் நிஜமான ஹீரோ கோட்டா சீனிவாசராவ்தான்.. மனிதர் கலக்கியெடுத்திருக்கிறார். நிமிடத்திற்கு நிமிடம் தனது முகபாவனையை மாற்றி வசனங்களை ஏற்ற, இறக்கத்தோடு செய்யும் அவரது ஸ்டைல் மாடுலேஷனை இன்றைக்கும் தெலுங்குலகில் யாராலும் அடிக்க முடியவில்லை. அதனால்தான் 40 வருஷமா பீல்டு அவுட் ஆகாம இருக்காரு அண்ணாச்சி..!

முதல் காட்சியிலேயே கரண், கோட்டோவைக் கொல்ல முயற்சிப்பதைக் காட்டிவிட்டதால் இதற்குப் பின்னான கதையை ஊகிக்க தியேட்டருக்கு வந்திருக்கும் சொற்பக் கூட்டத்திற்கும் ரொம்ப நேரமாகியிருக்காது.. இதனால் அதிகம் பாதிக்கப்பட்டிருப்பது வசனகர்த்தா பா.ராகவன்தான்.

பல இடங்களில் சிறப்பான வசனங்களும், டைமிங்கான திருப்பியடித்தல்களும், அரசியல் குத்தல்களுமாக கொடுத்த காசுக்கு மேலேயே கூவியிருக்கிறார் நம்ம அண்ணாத்த..!(பா.ராகவன் போட்டோ கிடைக்கல.. அதுனால அவருக்குப் பதிலா பாப்பா போட்டோ..!)


ஆனால், சிறந்த ஒளிப்பதிவு அல்லது வசனங்கள் கவனிக்கப்படாத சில திரைப்படங்களில் அமைந்துவிடுவது தமிழ்ச் சினிமாவிற்கு புதிதல்ல. அதில் இதுவும் ஒன்று..!

அண்ணன் தனக்கிருந்த ஐ.நா. சபை செயலாளர் அளவுக்கான வேலைகளில் இதற்காகவும் நேரம் ஒதுக்கி செய்திருக்கிறார் என்றாலும், பருப்பு வேகாத கதையில் வசனங்கள் மாட்டிக் கொண்டதால் கொடுமையாகிவிட்டது.

இறுதிக் காட்சியில் கோர்ட்டில் கரணின் மூலம் "சாட்சிகளை வைத்து தண்டனை கொடுக்கும் முறையை மாற்றுங்கள்" என்று பா.ராகவன் எழுப்பியிருக்கும் புதிய கோஷம் நிச்சயம் நமது நாடாளுமன்றத்தை எட்ட வேண்டும் என்றே நானும் விரும்புகிறேன்..! சில பொய்ச் சாட்சிகளால் பல அப்பாவிகள் வீழ்த்தப்பட்டிருக்கிறார்கள். படத்தின் மையக் கருத்தாக இதையே கொண்டு போயிருந்தால் நன்றாக இருந்திருக்கும்..!

இனிமேலாவது அண்ணாச்சியின் எழுத்துத் திறமைக்கு ஏற்றாற்போல் சிறந்த கதையும், சிறந்த இயக்குநரும் கிடைக்க என் அப்பன் முருகப் பெருமானை வேண்டிக் கொள்கிறேன்..!

இசையமைப்பு விஜய் ஆண்ட்டனியாம்.. வழக்கம்போல தற்போது வெளிவரும் அனைத்துத் திரைப்படங்களின் இசை போலவே நமநமத்துப் போயிருக்கிறது. பாடல் காட்சியின்போது ரசிகர்கள் குடும்பத்தோடு எழுந்து வெளியே செல்வதைப் பார்க்கின்றபோது திரையுலகப் பிரமுகர்களை கண்டிப்பாக தியேட்டருக்கு இழுத்து வந்து இதையெல்லாம் காண்பிக்க வேண்டும்போல் தோன்றுகிறது.

 
படத்தின் திரைக்கதையை முடிப்பதற்காக இயக்குநர் ரொம்பவே சிரமப்பட்டிருக்கிறார் போலிருக்கிறது. இதற்காகவே கரணின் நண்பன் ஒருவரை போலீஸ் அதிகாரியாக அனுப்பி.. அவர் ஒரே வசனத்தில் கரணின் துப்பாக்கியைப் பார்த்து அடுத்த இரண்டாவது வசனத்திலேயே கரண்தான் நீங்க தேடும் குற்றவாளி என்று சொல்கின்ற ஜெட் வேகத்தைப் பார்க்கும்போது இதனை படத்தின் இரண்டாவது ரீலிலேயே காட்டியிருந்தால் சிறந்த குறும்படமாக இது மாறியிருக்கும்.

கரணின் குடும்பத்தின் சோகச் சம்பவத்திற்கு அடுத்தததான சட்டப்படியான காட்சிகள் எங்கே..? கோட்டா எப்படித் தப்பித்தார்..? அந்த ஊர் போலீஸ் என்ன செய்தது? என்பதை வசனத்தில்கூட சொல்லாமல் விட்ட பழியும், பாவமும் இயக்குநரையே சேரும்..!

ஒரு காட்சியில் வசந்த் டிவியும், வேறொரு காட்சியில் சன் டிவியுமாக காக்கா பிடித்தாலும், ஸ்பான்ஸர்ஷிப் வசந்த் டிவிதான் என்பதால் வெகுவிரைவில் உலகத் தொலைக்காட்சிகளில் முதல் முறையாக வசந்த் டிவியில் இந்தப் படத்தைப் பார்க்க வாய்ப்புண்டு..!

கற்பழிக்கப்பட்ட பெண்ணுக்கு தைரியம் சொல்லும் பெண் வக்கீல் வேடத்தில் நடித்து அட்வைஸ்களை வாரி வழங்கியிருக்கும் அந்த நடிகைக்கு ஒரு பூஸ்ட்டு கொடுத்திருக்கிறார் நம்ம வசனகர்த்தா. அந்த வசனங்களை மனப்பாடம் செய்யும் பாக்கியம் அவருக்குக் கிடைத்திருப்பதால் இனி அவரது சொந்த வழக்கையும், வாழ்க்கையையும் இந்த வசனங்களை வைத்தே அவர் காப்பாற்றிக் கொள்வார் என்று நினைக்கிறேன்.. வாழ்க பா.ரா.

தன்னைக் காப்பாற்றிக் கொடுத்ததற்காக எடைக்கு எடை பணம்.. அதனை வாங்க மறுத்து மறுபடியும் அந்தப் பெண்ணுக்கு விபச்சாரி பட்டம் கொடுக்க வைக்கும் வக்கீல் என்று ட்விட்ஸ்ட் காட்சிகள் செல்கின்ற வேகத்தில் மனதில் நிற்காமல் போகிறது. இது போலவே கிளைமாக்ஸ் காட்சியில் சம்பத் கரணை உள் நோக்கத்தோடு ஜாமீன் எடுக்கும் முயற்சியில் வாதிட்டுக் கொண்டிருக்க.. அதற்கு கரண் கொடுக்கும் ரியாக்ஷனும்.. பிற்பாடு கரண் சம்பத்தைத் தாக்கிப் பேசுகின்ற காட்சியில் சம்பத் ஏதோ ஒண்ணு என்கிற ரீதியில் முகத்தை வைத்துவிட்டு அமர.. சொதப்பலான திரைக்கதையாகி நல்ல வாய்ப்பு வீணாகிவிட்டதை உணர முடிகிறது.

பட்ஜெட் திரைப்படம் என்று சொன்னாலும், இந்த ஹீரோவுக்கு இவ்ளோதான் வசூலாகும் என்று விநியோகஸ்தர்கள் சங்கத்தின் நோட்டீஸ் போர்டில் ஒட்டி வைத்திருக்கிறார்களே.. அதனைப் பார்த்தாவது அதுக்கேற்றாற்போல் பிளானிங் செய்திருக்கலாம்..

இனிமேலும் தமிழ்ச் சினிமா ரசிகர்களை மேம்போக்காக ஏமாற்ற முடியாது என்பதை இப்போது வருகின்ற தமிழ்ப் படங்களின் ரிசல்ட்டுகள் தெளிவாகச் சொல்கின்றன. இந்தப் படத்தின் ரிசல்ட்டும் இதேதான்..!

தியேட்டரில் இருந்த 50 ரசிகர்களில் என் பின்னால் அமர்ந்திருந்த ஒரு பத்து பேர் கரணின் ரசிகர்களா அல்லது வசனகர்த்தா பா.ராகவனின் ரசிகர்களா என்று தெரியவில்லை.

நல்ல, நல்ல வசனங்கள் வருகின்றபோதெல்லாம் "ஓ" என்று கத்திக் கூப்பாடுபோட்டு சில நல்லவற்றையும் கேட்க முடியாமல் செய்துவிட்டார்கள்.

தியேட்டரில் டிக்கெட் கிழித்தவரிடம் அவர்களைப் பற்றிக் கேட்டபோது "ஒவ்வொரு ஷோவுக்கும் இப்படி ஒரு பத்து பேர் வர்றானுக ஸார்.. கடைசிவரைக்கும் கத்திக்கிட்டேதான் இருக்கானுக.." என்றார்..

இதை வைச்சே ஒரு திரைக்கதை எழுதலாம் போலிருக்கு..!

"படத்தில் ஒண்ணுமே இல்லையா?" என்றவர்களுக்கு என் கண்ணுக்குத் தெரிந்த அபாரமான ஒரு குறியீடு..!

கரண் வக்கீல் நோட்டீஸ் ஓரிடத்திற்கு கொடுக்க வருகிறார். அப்போது ஹீரோயின்கள் உட்பட மூவரை காரில் வைத்துக் கடத்தி வருகிறார்கள். இதனைப் பார்த்துவிடும் கரண் கதவைத் திறக்கச் சொல்கிறார்.

கோபத்தோடு கதவைத் திறக்கும் கூர்க்காவிடம் தன்னை உள்ளேவிட அனுமதிக்கக் கேட்க கூர்க்கா இந்தியில் மறுக்க..

"தமிழ் தெரியாதா..?" – இது கரண்..!

கூர்க்கா ஒற்றை வரியில் ஏதோ சொல்ல..

கரணின் முஷ்டி 'நச்' என்று கூர்க்காவின் முகத்தில் விழுகிறது..!

சூப்பர்.. நம்ம டயலாக் ரைட்டருக்கு இவ்வளவு கோபம்கூட வரலைன்னா எப்படி..?

போறவங்க போய்க்கலாம்..!

18 comments:

மாயாவி said...

இந்த மாதிரி படங்கள் இங்க தியேட்டர்ல ரிலீஸ் ஆகாது. இதை டிவிடியிலேயும் பார்க்கிற அளவுக்கு இருக்காது அப்படீன்னு உங்க விமர்சனம் சொல்லுது, நன்றி

Romeoboy said...

ஹி ஹி ஹி .. எப்படி அண்ணே மொக்கை படம்னாலும் ரெண்டு பக்கத்துக்கு விமர்சனம் எழுதுறிங்க ??

நேசமித்ரன் said...

போறவங்க போய்க்கலாம்..!

ரைட்டு :)

kanagu said...

/*அவர் ஒரே வசனத்தில் கரணின் துப்பாக்கியைப் பார்த்து அடுத்த இரண்டாவது வசனத்திலேயே கரண்தான் நீங்க தேடும் குற்றவாளி என்று சொல்கின்ற ஜெட் வேகத்தைப் பார்க்கும்போது இதனை படத்தின் இரண்டாவது ரீலிலேயே காட்டியிருந்தால் சிறந்த குறும்படமாக இது மாறியிருக்கும்.*/

he he he :) :)

nalla vimarsanam anna :) :) indha vaaram oru padam vidala pola irukke :) :)

உண்மைத்தமிழன் said...

[[[மாயாவி said...
இந்த மாதிரி படங்கள் இங்க தியேட்டர்ல ரிலீஸ் ஆகாது. இதை டிவிடியிலேயும் பார்க்கிற அளவுக்கு இருக்காது அப்படீன்னு உங்க விமர்சனம் சொல்லுது, நன்றி]]]

எந்த ஊர்லண்ணா இருக்கீங்க..?

உண்மைத்தமிழன் said...

[[[~~Romeo~~ said...
ஹி ஹி ஹி .. எப்படி அண்ணே மொக்கை படம்னாலும் ரெண்டு பக்கத்துக்கு விமர்சனம் எழுதுறிங்க??]]]

என்ன செய்யறது..? பழக்க தோஷம்ண்ணே..!

உண்மைத்தமிழன் said...

[[[kanagu said...

/*அவர் ஒரே வசனத்தில் கரணின் துப்பாக்கியைப் பார்த்து அடுத்த இரண்டாவது வசனத்திலேயே கரண்தான் நீங்க தேடும் குற்றவாளி என்று சொல்கின்ற ஜெட் வேகத்தைப் பார்க்கும்போது இதனை படத்தின் இரண்டாவது ரீலிலேயே காட்டியிருந்தால் சிறந்த குறும்படமாக இது மாறியிருக்கும்.*/

he he he :) :) nalla vimarsanam anna :) :) indha vaaram oru padam vidala pola irukke :) :)]]]

இனிமேல் விட மாட்டோம்ல..!

உண்மைத்தமிழன் said...

ஏம்ப்பா கிட்டத்தட்ட 500 பேர் படிச்சிட்டு ஒருத்தருக்குத்தான் ஓட்டுப் போடணும்னு தோணுச்சா..? மிச்சம் பேருக்கு..?

முருகா.. இவங்க கொடுமைக்கு உன் கொடுமையே பரவாயில்லை போலிருக்கே..!

Prathap Kumar S. said...

//நான் பார்த்த ஒரு மலையாள பிட்டு படத்தில் இதைவிடவும் அற்புதமாக நடித்திருந்தார்//

அப்படியா-??? எந்தப்படம்ணே...அது நான் பார்க்கவே இல்லயே....

உண்மைத்தமிழன் said...

[[[நாஞ்சில் பிரதாப் said...

//நான் பார்த்த ஒரு மலையாள பிட்டு படத்தில் இதை விடவும் அற்புதமாக நடித்திருந்தார்//

அப்படியா-??? எந்தப் படம்ணே. அது நான் பார்க்கவே இல்லயே.]]]

இப்ப எங்க போய் தேடுறதை அதை..? கூகிளாண்டவர்கிட்ட கேளுங்க. ஒரு வேளை கொடுத்தாலும் கொடுப்பார்..!

நவன் said...

//இந்தக் கதையில் நடிக்க முன்னணி ஹீரோக்களைத் தேடிச் சென்று கதை சொல்லியிருந்தால், நிச்சயம் பலரும் மறுத்திருப்பார்கள். கடைசியாகத்தான் கரண் சிக்கியிருப்பார் என்று நினைக்கிறேன்..!//

அண்ணே! விஜய் எப்படி கதை தெரிவு செய்யறாரு? இப்படி ஏத்திவுட்டு உடம்பை புண்ணாக்காதீங்க.. :)

பித்தன் said...

அண்ணே துவச்சி காயப் போட்டுடீங்க போல. பட்கேட் படம்னாலும் டிக்கெட் விலை ஒண்ணுதானே ஆகா கூடி நம்ம தலையிலதான் மசாலா அரைக்கிறாங்க.... ம்ம் நடக்கட்டும்.

உண்மைத்தமிழன் said...

[[[navan said...
//இந்தக் கதையில் நடிக்க முன்னணி ஹீரோக்களைத் தேடிச் சென்று கதை சொல்லியிருந்தால், நிச்சயம் பலரும் மறுத்திருப்பார்கள். கடைசியாகத்தான் கரண் சிக்கியிருப்பார் என்று நினைக்கிறேன்..!//

அண்ணே! விஜய் எப்படி கதை தெரிவு செய்யறாரு? இப்படி ஏத்திவுட்டு உடம்பை புண்ணாக்காதீங்க.. :)]]]

விஜய்யும் இதைத்தான் செய்றாரு.. ஆனா அவர் மாஸ் ஹீரோவாச்சே..? பட்ஜெட்டும் பெரிசு..

இவரு..?

உண்மைத்தமிழன் said...

[[[பித்தன் said...
அண்ணே துவச்சி காயப் போட்டுடீங்க போல. பட்கேட் படம்னாலும் டிக்கெட் விலை ஒண்ணுதானே ஆகா கூடி நம்ம தலையிலதான் மசாலா அரைக்கிறாங்க.... ம்ம் நடக்கட்டும்.]]]

நாமதான் புத்திசாலித்தனமா நடந்துக்கோணும் பித்தன்ஜி..!

butterfly Surya said...

:( :(

உண்மைத்தமிழன் said...

[[[butterfly Surya said...
:( :(]]]

இவ்ளோவ் பெரிய பின்னூட்டம் போடறதுக்கே ரெண்டு நாள் டைமா..?

இது உனக்கே ஓவரா இல்லையாண்ணே..!?

abeer ahmed said...

See who owns readabletype.com or any other website:
http://whois.domaintasks.com/readabletype.com

abeer ahmed said...

See who owns lapozz.hu or any other website.