25-05-2010
என் இனிய வலைத்தமிழ் மக்களே..!
சின்ன வயதில் அர்த்தமே புரியாமல் பாடித் திரிந்த பாடலை மறுபடியும் நினைக்க வைத்திருக்கிறார்கள் என்பதைத் தவிர வேறொன்றும் இந்தப் படத்தில் இல்லை..
"கொல கொலையா முந்திரிக்கா..!
நரிய நரிய சுத்தி வா..!
கொள்ளையடிச்சவன் எங்க இருக்கான்..?
கூட்டத்தில் இருந்தா கண்டுபிடி..!"
இப்படித்தான் பாழாய்ப் போன வைரங்கள் அடங்கிய நாற்காலிகள் நான்கைத் தேடி நான்கு குழுக்கள் தேடி அலைவதுதான் கதை..
செட்டிநாட்டரசரின் கானாடுகாத்தான் அரண்மனையைக் காட்டி சென்னை-1989 என்று கார்டு போடும்போது துவங்குகிற பூச்சூற்றல் கடைசிவரையிலும் தொடர்கிறது..
அருகில் நின்றபடியே நம் காதில் பூச்சுற்றுவது ஒரு வகை.. இதில் நம் தோளில் மீது ஹாயாக ஏறி அமர்ந்து கொண்டு நிதானமாக நம் காதில் பூச்சுற்றுகிறார்கள். கிரேஸி மோகனின் நாடகம் எப்படி இருக்குமோ அதுவேதான் இது.
நொடிந்து போன ஜமீன் குடும்பம் மிச்சமிருக்கும் வைர நகைகளை பாதுகாக்க நினைத்து அதனை நான்கு நாற்காலிகளுக்குள் மறைத்து வைக்கிறார் தற்போதைய ஜமீன். ஜெயிலில் இருந்து வெற்றிப் புன்னகையோடு விடுதலையாகி திரும்பும் பங்காளி வைரத்தில் பங்கு கேட்க வந்த இடத்தில் ஜமீன்தாரையும், ஜமீன்தாரிணியையும் போட்டுத் தள்ளிவிட.. ஒரே பெண்ணான வாரிசு தப்பியோடி விடுகிறது.
ஜமீன்தாரை போட்டுத் தள்ளிய பங்காளி தனது அல்லக்கைகளுடன் சேர்ந்து இத்தனை ஆண்டுகளாக அந்த நாற்காலியைத் தேடிக் கொண்டிருக்கிறார்.
டெல்லி கணேஷ்தான் ஜமீனின் மேனேஜர். இவர்தான் அந்த நாற்காலிகளைக் கொண்டு போகிறவர். கடைசியில் கோமாவில் இருக்கும்போது தனது வளர்ப்பு மகன் கார்த்திக்கிடம் சொல்லி நாற்காலியைத் தேடச் சொல்கிறார்.

இப்போது சீரியஸ் திருடனான கார்த்திக்கும், சீரியஸ் திருட்டுக் குடும்பத்தின் அப்பா எம்.எஸ்.பாஸ்கரும், மகள் ஷிகாவும் ஒரு கட்டத்தில் ஒன்று சேர்ந்த இந்த வைரத்தைத் தேடத் துவங்க..
இன்னொரு பக்கம் சிரிப்பு இன்ஸ்பெக்டரான ஜெயராம் ஒரு சிப்பைத் தேடி அலைவதைப் போல் நாற்காலியைத் தேடிக் கொண்டிருக்க..
நாற்காலிகள் யாருக்குக் கிடைத்தது..? ஒரிஜினல் ஜமீன்தாரின் வாரிசு என்னவானார் என்பதுதான் மிச்சக் கதை.. கிளைமாக்ஸில் ஒரு ட்விஸ்ட் இருக்கிறது. அதனை சொல்லிவிட்டால் போக விரும்புவர்களுக்கு சுவாரசியம் இருக்காது என்பதால் சொல்ல மாட்டனே..
பக்கம் பக்கமான வசனங்கள், ஒரு வசனத்தின் முடிவில் நூல் பிடித்து அடுத்தாள் வசனம் பேசுவது என்று கிரேஸியாரின் துணுக்குத் தோரணங்கள் தொங்க விடப்பட்டிருக்கின்றன என்றாலும் சமயத்தில் மெகா பிளேடு போட்டுத் தாக்குகிறது. அதிலும் குயிலு, நீலு சம்பந்தப்பட்ட காட்சியில் நமது பொறுமையை ரொம்பவே சோதிக்கிறார்கள்.
நகைச்சுவை படம் என்றாலே போதும்.. வசனத்திற்கு வசனம் வேகமாக பேசினாலே சிரித்துவிடுவார்கள் என்று நினைத்துவிட்டார் போலும்.. ஸாரி கிரேஸி ஸார்.. இதில் சிரிப்பு தானாக வராமல் வலுக்கட்டாயமாகத்தான் வரவழைக்கப்படுகிறது..

ஹீரோ கார்த்திக்குமார்.. ஏதோ லவ்வர் பாய் கணக்காக ஹேண்ட்ஸம்மாகத் தோன்றினாலும் காதல் காட்சியில் ஒட்ட மறுக்கிறது. எங்கேயிருந்து பிடித்தார்கள் அந்த ஹீரோயினை.. புதுமுகம் மாதிரியே தெரியவில்லை. டைமிங் வசனத்தில் பின்னியிருக்கிறார். நிச்சயம் பாராட்ட வேண்டும்.. வழக்கம்போல மூன்று டூயட்டுகளில் டான்ஸூம் ஆடி தனது கணக்கை முடித்துக் கொண்டுவிட்டார்.
காட்சிகள் அனைத்துமே பரபரவென வேகமாக அடுத்தடுத்து நகர்வதால் எதுவும் ஒட்டவில்லை.. ஆனால் ட்விஸ்ட்டுகள் ஆங்காங்கே திகைக்க வைக்கின்றன. திருவனந்தபுரத்தில் நடக்கும் இரண்யகசிபு நாடகத்தில் ஒவ்வொரு தூணில் இருந்தும் ஒரு ஆள் வெளியே வந்து எட்டிப் பார்ப்பது செம கலகலப்பு..
ஜெயராமுக்கு கேணத்தனமான இன்ஸ்பெக்டர் வேடம். கச்சிதமாகப் பொருந்துவதுதான் ஆச்சரியம். மனிதர் அனாசயமாக தாண்டிக் குதிக்கிறார். நகைச்சுவையில் எப்போதும் டைமிங்தான் முக்கியம்.. இது மாதிரியான நடிகர்களை வைத்துத்தான் இதனையெல்லாம் ஸ்கோர் செய்ய வேண்டும். ஸ்கோப் செய்திருக்கிறார் ஜெயராம்.
எம்.எஸ்.பாஸ்கருக்கு அதிகம் வேலையில்லை. அவருடைய அதி பயங்கர டயலாக் டெலிவரி அவருக்கே ஆபத்தானதாகப் போய்விட்டது. வளர்ப்பு மகளை துணைக்கு வைத்துக் கொண்டு ஆங்காங்கே திருடுகின்ற பக்கா டீஸண்ட்டான திருடன்.

பங்காளியாக ரொம்ப நாள் கழித்து ஆனந்த்ராஜ்.. அவருக்கு அல்லக்கைகளில் ஒருவர் வாசுவிக்ரம்.. மற்றொருவர் பெயர் தெரியவில்லை. ஆனால் நல்ல நடிப்பு.. பல மேடை நாடகங்களில் நான் அவரைப் பார்த்திருக்கிறேன்.. புதிய நகைச்சுவை நடிகர் ஒருவர் திரையுலகத்திற்குக் கிடைத்திருக்கிறார் என்று நினைக்கிறேன்..!
இன்னொரு ஆச்சரியம் ராதாரவியின் கேரக்டர்.. பஞ்சாயத்து வருகின்றவர்களிடம் விசாரிக்கும் பாங்கு குபீர் சிரிப்பைக் கொட்டிவிட்டது. அதிலும் தனது மனைவி, துணைவி, வொய்ப், வைச்சுக்கிட்டது என்று ஒரு லிஸ்ட்டையே அறிமுகப்படுத்தும்போது மனிதர் என்னமாக நகைச்சுவையை அடக்கி வைத்திருக்கிறார் என்று யோசிக்கத் தோன்றுகிறது. நாடகத்திலேயே பிறந்து வளர்ந்தவர் என்பதால் சிரிப்புக்கேற்ற உடல்மொழியையும், பேச்சு மொழியையும் அட்டகாசமாக வெளிப்படுத்தியிருக்கிறார் மனிதர்.
அடுத்த ஆச்சரியம் சுப்ரீம் ஸ்டார் சரத்குமாரின் ஸ்மால் வேடம்.. ஜக்குபாயின் தோல்வி சரத்குமாரை யோசிக்க வைத்திருக்கிறது போலும். கிடைத்த வேடங்களைச் செய்வோம் என்று அவரும் களத்தில் குதித்திருக்கிறார். நாற்காலிகளை வாங்கி வைத்து அழகு பார்க்கும் ஆசைக்காரராக நடித்திருக்கிறார். படத்தை முடித்து வைப்பதும் சரத்குமார்தான்..
இவர்களுக்கு நடுவே உருட்டை முழி பாண்டியராஜனும் இருக்கிறார். வக்கீல் வேஷம். முதல் காட்சியில் வந்தவர் பின்பு கடைசிக் காட்சியில்தான் தலை காட்டுகிறார்.
எந்த இடத்திலும் தப்பித் தவறிக்கூட நீங்கள் லாஜிக் பார்த்துவிடக் கூடாது என்பதற்காக அத்தனையிலும் காமெடியான இணைப்புகள்தான்.. சுடுகாட்டில் ராதாரவின் பிணத்தை வெளியே எடுக்கும் காட்சியை ஒரு உதாரணமாகச் சொல்லலாம்.

யாரோ செல்வகணேஷ் என்பவர்தான் இசையாம். வழக்கம்போல அப்படியேதான் இருக்கிறது. பாடல் முடிந்தவுடன் எல்லாமே மறந்துபோய்விட்டது. கொல கொலயா முந்திரிக்கா வரிகளுக்கு மட்டும் தீம் மியூஸிக்கை போட்டுத் தாக்கியிருக்கிறார்.
பெண் இயக்குநர் என்பதால் ஹீரோயினை போர்த்திக் கொண்டுதான் நடிக்க வைத்திருப்பார் என்று நினைத்த என் நினைப்பில் மண்ணையள்ளி போட்டுவிட்டார் இயக்குநர் மதுமிதா. இரண்டு டூயட் காட்சிகளில் ஹீரோயின் தன்னால் முடிந்த அளவுக்கு கவர்ச்சி காட்டி தனது ரூட்டை காட்டியிருக்கிறார். ஆனால் நடிப்பு நன்கு வருகிறது.. இது யாருக்கு வேணும்கிறீங்களா..? அதுவும் சரிதான்.. ஒரு குத்துப் பாடலையும் வைத்து தானும் ஒரு சராசரி இயக்குநர்களில் ஒருவர்தான் என்பதை நிரூபித்திருக்கிறார் பெண் இயக்குநர் மதுமிதா.! கொஞ்சம் வருத்தம்தான்..!
காட்சியமைப்புகள் முழுவதுமே மேடை நாடகம் போன்றதுதான் என்பதால் இயக்கமும் அப்படியேதான்.. இன்னும் கொஞ்சம் நல்லபடியாக செய்திருக்கலாம் என்று நினைக்கத் தோன்றுகிறது.. வல்லமை தாராயோவில் முதல் முறையான இயக்குநர் என்பதே தெரியாமல் இருந்தது.. ஆனால் இதில் அப்படியில்லை.. ஏதோ ஒன்று இடிக்கிறது..
சிறையில் இருந்து கார்த்திக்கும், எம்.எஸ்.பாஸ்கரும் தப்பிக்கின்ற காட்சியில் மொத்த நகைச்சுவையையும் வாரிக் கொடுத்திருக்கிறார்கள். லாஜிக் பார்க்கக் கூடாதுன்னு அதான் முன்னாடியே சொல்லிட்டாங்கள்ல.. அப்புறமென்ன..?

எப்படியிருந்தாலும் நகைச்சுவைக்கு பங்கம் விளைவிக்காத நடிகர்களை வைத்திருந்தும், நகைச்சுவை கம்மியாக இருப்பதால் பல நேரங்களில் ரசிகர்கள் செல்போன்களில் மூழ்கி விடுவதைப் பார்க்க நேர்ந்தது. இறுதிக் காட்சியில் நீதிபதியாக வரும் கிரேஸி மோகனும் தனது காது கேட்கும் கருவியை சுத்தியலால் உடைத்துவிட்டு கேஸை விசாரிக்கின்ற காட்சியைப் போலத்தான் படமும் ஆகிவிட்டதாக உணர்கிறேன்..
ஒரு முறை பார்க்கலாம்.. நிச்சயம் குடும்பத்தோடு..!
புகைப்படங்கள் உதவிக்கு நன்றி : www.indiaglitz.com, chennai365.com
|
Tweet |
30 comments:
me first ..............
நெட்ல கெடச்சா பாக்கலாம்
selvaganesh - Vennila Kabadi kuzhu's music director - another one film wonder?
தமிழ் படங்கள் தொடர் தோல்வி ஏன்?
தமிழ் படங்கள் தொடர் தோல்வி ஏன்? http://cinema-gallary.blogspot.com/2010/05/blog-post_25.html
[[[shabi said...
நெட்ல கெடச்சா பாக்கலாம்]]]
கொஞ்சம் லேட்டாகும் ஷபி..! ஆனாலும் பார்த்திருங்க..! பொழுது போவும்..!
[[[முகிலன் said...
selvaganesh - Vennila Kabadi kuzhu's music director - another one film wonder?]]]
அவரா இவரு..? தகவலுக்கு நன்றி முகிலன்..!
[[[CINEMA GALLARY said...
தமிழ் படங்கள் தொடர் தோல்வி ஏன்?
தமிழ் படங்கள் தொடர் தோல்வி ஏன்? http://cinema-gallary.blogspot.com/2010/05/blog-post_25.html]]]
நன்றி..!
தெனாலி, காதலா காதலா, பஞ்சதந்திரம் மாதிரி படங்கள் எல்லாம் இப்ப ரொம்ப பஞ்சம் ஆயிடுச்சு.. :-(
right.. ok...
\\ஒரு முறை பார்க்கலாம்.. நிச்சயம் குடும்பத்தோடு..!//
கொஞ்சம் பாசிடிவ் விமர்சனமா இருக்கு எல்லோரிடனும். பார்த்துவிடுகிறேன்.
//பெண் இயக்குநர் என்பதால் ஹீரோயினை போர்த்திக் கொண்டுதான் நடிக்க வைத்திருப்பார் என்று நினைத்த என் நினைப்பில் மண்ணையள்ளி போட்டுவிட்டார் இயக்குநர் மதுமிதா. இரண்டு டூயட் காட்சிகளில் ஹீரோயின் தன்னால் முடிந்த அளவுக்கு கவர்ச்சி காட்டி தனது ரூட்டை காட்டியிருக்கிறார். ஆனால் நடிப்பு நன்கு வருகிறது.. இது யாருக்கு வேணும்கிறீங்களா..? அதுவும் சரிதான்.. ஒரு குத்துப் பாடலையும் வைத்து தானும் ஒரு சராசரி இயக்குநர்களில் ஒருவர்தான் என்பதை நிரூபித்திருக்கிறார் பெண் இயக்குநர் மதுமிதா.! கொஞ்சம் வருத்தம்தான்..!
//
இதுக்கும்
//ஒரு முறை பார்க்கலாம்.. நிச்சயம் குடும்பத்தோடு..!
//
இதுக்கும் முரண்பாடா இருக்கே?
//கிளைமாக்ஸில் ஒரு ட்விஸ்ட் இருக்கிறது. அதனை சொல்லிவிட்டால் போக விரும்புவர்களுக்கு சுவாரசியம் இருக்காது என்பதால் சொல்ல மாட்டனே//
ஹி ஹி எப்பொழுதில் இருந்து இந்த ஞானம்:)))
[[[ஜெய் said...
தெனாலி, காதலா காதலா, பஞ்சதந்திரம் மாதிரி படங்கள் எல்லாம் இப்ப ரொம்ப பஞ்சம் ஆயிடுச்சு..:-(]]]
நமக்குப் புரியுது.. தயாரிப்பாளர்களுக்கு புரியலை..!
இன்னைக்கு தமிழ்நாட்டுல சிரிப்பு படங்களை நல்லபடியா எடுத்தாலே போதும்.. போட்ட காசுக்கு மேலேயே வரும்..!
[[[எறும்பு said...
right.. ok...]]]
ok.. Thanks..!
[[[~~Romeo~~ said...
\\ஒரு முறை பார்க்கலாம்.. நிச்சயம் குடும்பத்தோடு..!//
கொஞ்சம் பாசிடிவ் விமர்சனமா இருக்கு எல்லோரிடனும். பார்த்து விடுகிறேன்.]]]
அவசியம் பாருங்கோ ரோமியோ ஸார்..!
\\கிளைமாக்ஸில் ஒரு ட்விஸ்ட் இருக்கிறது. அதனை சொல்லிவிட்டால் போக விரும்புவர்களுக்கு சுவாரசியம் இருக்காது என்பதால் சொல்ல மாட்டனே..\\
என்ன கொடுமை சரவணா! பொம்மலாட்டம் போன்ற பட விமர்சனத்தில் சொல்ல கூடாத கிளைமாக்ஸை விலாவாரியா புட்டு புட்டு வச்சுட்டு இந்த ஜாலியோ ஜிம்கானாவுக்கு சஸ்பென்ஸ் வைக்கிறியே......... ஓ இப்ப தெரியுதுய்யா அவரு பாரதிராசா இவரு கிரேசி மோஹன்... நுண்ணரசியலை மெச்சினேன் அய்யா:-))))))))))
மேலே உள்ள கமெண்ட்க்கு சிரிப்பான் போட்டிருக்கேன் என்பதை உறுதி செஞ்சுக்கறேன்!
/பக்கம் பக்கமான வசனங்கள், ஒரு வசனத்தின் முடிவில் நூல் பிடித்து அடுத்தாள் வசனம் பேசுவது//
யார் எதை சொல்றதுன்னு இல்லாம :-)))))))..
\\Blogger மணிஜீ...... said...
/பக்கம் பக்கமான வசனங்கள், ஒரு வசனத்தின் முடிவில் நூல் பிடித்து அடுத்தாள் வசனம் பேசுவது//
யார் எதை சொல்றதுன்னு இல்லாம :-)))))))..\\
ஆகா மணிஜி! நான் இதை கவனிக்கலையே:-))))
[[[Indian said...
//பெண் இயக்குநர் என்பதால் ஹீரோயினை போர்த்திக் கொண்டுதான் நடிக்க வைத்திருப்பார் என்று நினைத்த என் நினைப்பில் மண்ணையள்ளி போட்டுவிட்டார் இயக்குநர் மதுமிதா. இரண்டு டூயட் காட்சிகளில் ஹீரோயின் தன்னால் முடிந்த அளவுக்கு கவர்ச்சி காட்டி தனது ரூட்டை காட்டியிருக்கிறார். ஆனால் நடிப்பு நன்கு வருகிறது.. இது யாருக்கு வேணும்கிறீங்களா..? அதுவும் சரிதான்.. ஒரு குத்துப் பாடலையும் வைத்து தானும் ஒரு சராசரி இயக்குநர்களில் ஒருவர்தான் என்பதை நிரூபித்திருக்கிறார் பெண் இயக்குநர் மதுமிதா.! கொஞ்சம் வருத்தம்தான்..!//
இதுக்கும்
//ஒரு முறை பார்க்கலாம்.. நிச்சயம் குடும்பத்தோடு..!//
இதுக்கும் முரண்பாடா இருக்கே?]]]
கவர்ச்சின்னா நீங்க சிவாஜி, கந்தசாமி ஷ்ரேயா அளவுக்குன்னு நினைக்காதீங்க.. கொஞ்சமாத்தான்..
நோ பிராப்ளம்..!
[[[குசும்பன் said...
//கிளைமாக்ஸில் ஒரு ட்விஸ்ட் இருக்கிறது. அதனை சொல்லிவிட்டால் போக விரும்புவர்களுக்கு சுவாரசியம் இருக்காது என்பதால் சொல்ல மாட்டனே//
ஹி ஹி எப்பொழுதில் இருந்து இந்த ஞானம்:)))]]]
இப்போதான்.. கொஞ்ச நாளா.. முருகன் ஆப்படிக்க ஆரம்பிச்சதுல இருந்துதான்..!
[[[அபி அப்பா said...
\\கிளைமாக்ஸில் ஒரு ட்விஸ்ட் இருக்கிறது. அதனை சொல்லிவிட்டால் போக விரும்புவர்களுக்கு சுவாரசியம் இருக்காது என்பதால் சொல்ல மாட்டனே..\\
என்ன கொடுமை சரவணா! பொம்மலாட்டம் போன்ற பட விமர்சனத்தில் சொல்ல கூடாத கிளைமாக்ஸை விலாவாரியா புட்டு புட்டு வச்சுட்டு இந்த ஜாலியோ ஜிம்கானாவுக்கு சஸ்பென்ஸ் வைக்கிறியே. ஓ இப்ப தெரியுதுய்யா அவரு பாரதிராசா இவரு கிரேசி மோஹன். நுண்ணரசியலை மெச்சினேன் அய்யா:-))))))))))]]]
ஐயா முத்தமிழ் அறிஞரின் முத்தான தொண்டரே..!
இந்த சிண்டு முடியும் வேலை இங்கு வேண்டாம்..!
இனிமேற்கொண்டு என் மனதை ஏதோ ஒன்று செய்யாத படங்களை வெறுமனே 3 பக்கத்தோடு முடித்துக் கொள்வதாக உத்தேசித்துள்ளேன். ஆகவே கிரேஸி மோகனை கைவிட்டாச்சு.. அவ்ளோதான்..!
[[[அபி அப்பா said...
மேலே உள்ள கமெண்ட்க்கு சிரிப்பான் போட்டிருக்கேன் என்பதை உறுதி செஞ்சுக்கறேன்!]]]
கிழிஞ்சது..!
இப்படியொரு கமெண்ட் போட்டது அபி அப்பா என்ற பெயருக்கே கேவலமாயிருக்கு..!
[[[மணிஜீ...... said...
/பக்கம் பக்கமான வசனங்கள், ஒரு வசனத்தின் முடிவில் நூல் பிடித்து அடுத்தாள் வசனம் பேசுவது//
யார் எதை சொல்றதுன்னு இல்லாம :-))))))]]]
அண்ணே.. நீங்களுமா..?
இதெல்லாம் நல்லாயில்ல.. சொல்லிப்புட்டேன்..!
தம்பியைக் காப்பாத்துறதை விட்டு்ட்டு நீங்களே போட்டுக் கொடுக்குறீங்களே..!
[[[அபி அப்பா said...
\\Blogger மணிஜீ...... said...
/பக்கம் பக்கமான வசனங்கள், ஒரு வசனத்தின் முடிவில் நூல் பிடித்து அடுத்தாள் வசனம் பேசுவது//
யார் எதை சொல்றதுன்னு இல்லாம :-)))))))..\\
ஆகா மணிஜி! நான் இதை கவனிக்கலையே:-))))]]]
உங்க வேலைய மணிஜியே பார்த்துட்டாரு..!
பேசாம வேலைய ரிஸைன் பண்ணிருங்க..!
கிடைக்குதான்னு பார்க்கணும்.
ஒரு பாட்டு ஸீனை மட்டும் த்ரிசக்தி புத்தக வெளியீட்டு விழாவில் போட்டுக் காமிச்சாங்க.
[[[துளசி கோபால் said...
கிடைக்குதான்னு பார்க்கணும். ஒரு பாட்டு ஸீனை மட்டும் த்ரிசக்தி புத்தக வெளியீட்டு விழாவில் போட்டுக் காமிச்சாங்க.]]]
டோண்ட் வொர்ரி டீச்சர்..!
விரைவில் டிவிடி வந்துவிடும்..!
தயாரிப்பாளர் சந்தோஷப்படுவார்.
See who owns domcrawlr.com or any other website:
http://whois.domaintasks.com/domcrawlr.com
See who owns ipnet.hu or any other website.
Post a Comment