தமிழ்மணத்திற்கு பல நன்றிகளும்..! சில திட்டுக்களும்..!

03-06-2009

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

தமிழ்மணம் நடத்திய சென்ற ஆண்டுக்கான சிறந்த பதிவுகள் போட்டியில் ஒரு பிரிவில் முதல் பரிசும், இன்னொரு பிரிவில் இரண்டாம் பரிசுமாக கிடைத்து, ஏதோ நான் எழுதியதில் இரண்டாவது உருப்படியாய் இருக்கிறது என்று நிம்மதிப் பெருமூச்சுவிட்டேன்.

தமிழக அரசுக்குப் போட்டியாக எப்போதுமே தமிழ்மணத்தை சோம்பலாக நிர்வகித்து வரும் அதன் நிர்வாகிகள் எப்போதோ ஜெயித்த ஜெயிப்புக்கு கடந்த 1-ம் தேதிதான் பரிசுப் பொருளை நீட்டியிருக்கிறார்கள்.

வழக்கம்போல புத்தகங்கள்தான்.. முதல் பரிசுக்கு 500. இரண்டாவது பரிசுக்கு 250. ஆக மொத்தம் 750 ரூபாய்க்கு நியூ புக்லேண்ட்ஸில் புத்தகங்களை வாங்கிக் கொள்ளலாம் என்று ஈமெயில் செய்திருந்தார்கள்.

கடந்த இரண்டு நாட்களாக உடல் வலியும், மன வலியும் பின்னி எடுத்ததால் வீட்டைவிட்டு நகர முடியவில்லை. இன்றைக்குத்தான் முடிந்தது.

இப்போதெல்லாம் வெளியில் ரவுண்ட்ஸ் வரும்போது தப்பித் தவறிக்கூட புத்தகக் கடைகள் இருக்கும் பக்கம் போகாமல் நழுவிக் கொண்டிருந்தேன். ஷகிலாவின் படத்தில் வரும் பிட்டு படம் போல கடைக்குள்ளே இருக்கும் பல பிட்டுகளால் வீடு முழுக்க பிட்டுகள் முற்றுகையிட்டுள்ளன. இதனால் ஆனா செலவால் பர்ஸ் இளைத்துப் போய், கூடுதலாக நானும் இளைத்துப் போய் ஓமக்குச்சி நரசிம்மனுக்கு தம்பிபோல ஆகிவிட்டேன்..

இதற்குப் பதிலாக ஷகிலாவின் பின்னவீனத்துவ திரைப்படங்களையே பார்த்துத் தொலைத்துவிடலாம். அல்லது அந்த டிவிடிக்களையே வாங்கிக் குவித்துவிடலாம் போல இருக்கிறது. அவ்வளவு போதையைத் தருகிறது இந்த பிட்டு புத்தகங்கள்.

தமிழ்மணத்தின் புண்ணியத்தால் இன்றைய மாலைப் பொழுதில் நீண்ட சில மாதங்கள் கழித்து நியூ புக்லேண்ட்ஸில் அடைக்கலமானேன். கடையின் மேனேஜர் சீனிவாசனிடம் முன்பே போனில் தெரிவித்து உறுதிப்படுத்திய பின்புதான் சென்றிருந்தேன். அவர் சொன்னது போலவே தமிழ்மணத்தின் கடுதாசியை பிரிண்ட் அவுட் எடுத்துக் கையோடு கொண்டு சென்றிருந்தேன்.

என்னைப் பார்த்தவுடன் “உங்களை நிறைய தடவை இங்க பார்த்திருக்கிறனே..?” என்று ஏதோ கொள்ளையடிக்க வந்தவனிடம் கேட்பதைப் போல் கேட்டார். “உண்மையா என்னோட பணத்தைக் கொள்ளையடிச்சது நீங்கதான்.. இத நான் கேக்க வேண்டிய கேள்வி..” என்றேன்.

புதிய புதிய புத்தகங்கள் பலவும் வந்து கொண்டுதான் இருக்கின்றன. யார்தான் வாங்குகிறார்கள் என்று தெரியவில்லை. புதிய புதிய பதிப்பகங்களும் உருவாகிக் கொண்டுதான் இருக்கின்றன. விற்பனை வியாபாரம் எப்படித்தான் நடக்கிறதோ தெரியவில்லை.. ஆனாலும் உலகம் முழுவதும் ‘லே-ஆப்பு'களும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. என்னமோ நடக்குதுங்கய்யா..

நாய்க்கு வேலையில்லைன்னா மோப்பம் பிடிச்சுக்கிட்டே அலையும்பாங்க பாருங்க.. அது மாதிரி உள்ள நுழையறதுக்கே குட்டிக்கரணம் போடணும்னு இருந்தாலும், சினிமா புத்தகங்களே என்னை வெகுவாக ஈர்த்தது.

பொறுக்கியெடுத்த புத்தகங்களின் பட்டியல்

சிவாஜி வென்ற சினிமா ராஜ்ஜியம் - ஆரூர்தாஸ்

நாற்பது திரைப்பட இயக்குநர்களும் நானும் - ஆரூர்தாஸ்

நெஞ்சில் நிற்கும் நாயகர்கள் - வி.ராமமூர்த்தி

‘சித்திரம் பேசுதடி' படத்தின் திரைக்கதை வடிவம்

நெஞ்சைத் தொட்ட நிழல் மனுஷிகள் - சுரேஷ்-பாலா

உலக சினிமா பாகம்-1 - செழியன்

உலக சினிமா பாகம்-2 - செழியன்

பட உலக அடிமை - வேம்பத்தூர் கிருஷ்ணன்

2009 ஜூன் மாதத்திய உயிர்மை

2009 ஜூன் மாதத்திய காலச்சுவடு

இந்த பில் தொகையே 760 ரூபாயாகிவிட்டது. கூடுதலான பத்து ரூபாய் என் கண்ணை சிமிட்டவே, அத்துடன் தேடுதலை நிறுத்திக் கொண்டேன். விதி விடவில்லையே..

இந்தப் புத்தகங்களுடன் திரு.இளங்கோ எழுதிய நாடற்றவனின் குறிப்புகள் கவிதைப் புத்தகம் இலவசமாகக் கிடைத்தது. இனிமேல்தான் படிக்க வேண்டும்.

“கூடுதலாக ஒரு போனஸும் உண்டு..” என்றார் மேனேஜர் சீனிவாசன். “இன்னுமொரு அறுபது ரூபாய்க்கு புத்தகங்களை எடுத்துக் கொள்ளுங்கள். இது நியூ புக்லேண்ட்ஸின் பரிசு..” என்றார்.

“ஆஹா.. கூத்தாட வந்தவனுக்கு பூசாரியே மாமனாரான கதையா இன்னும் ஒண்ணா..? முருகா.. நீ வாழ்க..” என்று சொல்லிக் கொண்டே மீண்டும் 60 ரூபாய் விலையும் புத்தகம் ஒன்றைத் தேடோ, தேடு என்று தேடி கண்டெடுத்தேன்.

ஏற்கெனவே என் கையில் இருந்தவைகளை பில் போட அனுப்பிவிட்டதால், அந்தப் புத்தகத்தை ஏற்கெனவே எடுத்துத் தொலைத்திருக்கிறேன் என்பதை வழக்கம்போல என் அப்பன் முருகன் எனது மண்டையில் இருப்பதாகச் சொல்லப்படும் மூளையின் ஹைப்போதலாமஸ் பகுதிக்கு அனுப்ப மறுத்துவிட்டான்.

முருகன்தான் விட்டான். கடை ஊழியர்கள்.. அப்பன் முருகனின் மாமன் திருநாமத்தை உடைய அந்த மேனேஜர் சீனிவாசனாவது கவனித்திருக்க வேண்டாமா..? அவரும் விட்டுவிட்டார். “கடைசியாக நீ எடுத்து செக் பண்ணிருக்கணும்ல முண்டம்..?” என்று நீங்கள் திட்டுவது எனக்குக் கேட்கிறது. அதுக்கும் ஒரு ஆப்பு வைச்சானே முருகன்..?

பக்கத்துல இல்ல.. ரொம்ப பக்கத்துல இருந்து ஒரு பதிவுலக முருகனை கடைக்குள்ளாற கொண்டு வந்து நிறுத்தி, அவரோட பேச வைச்சு..(தனிப் பதிவா வரும்ல..) கடைசியா அப்படி செக் பண்றதையும் மறக்க வைச்சு வீட்டுக்கே கொண்டு வந்துவிட்டுட்டான். பாவிப் பய மகன்..

நாளைக்கு போய் அதை மாத்திரலாம்.. ஆனா வெட்டி அலைச்சல்தான எனக்கு..? மிக, மிகத் தேவையான சமயத்தில் இது போன்ற சின்ன ஞாபக சக்திகூட ஏன் எனக்குக் கிடைக்க மாட்டேங்குது..

நல்லாயிருப்பானா அந்த முருகன்..? நாசமாப் போக.. கட்டைல போக..

முருகன் இல்லைன்னு சொல்ல மனசு வர மாட்டேங்குது.. அதனாலதான் திட்டுறேன்.

கிடைத்துள்ள புத்தகங்கள் எனக்கு மிகத் தேவையானவைதான். பணப்பற்றாக்குறையால் வாங்காமல் இருந்தேன். இப்போது இந்தப் பரிசின் மூலமாகக் கிடைக்கின்ற வாசிப்பு அனுபவம் தமிழ்மணத்தையே சேரும்.

தமிழ்மணத்திற்கு நன்றி.. நன்றி.. நன்றி..!

இப்போது திட்டுக்கள் துவங்குகின்றன..!

முதல் திட்டு.. இந்த பரிசுடன் கூடுதலாக இருபத்தைந்து ரூபாய் செலவு செய்ய வைத்ததற்காக தமிழ்மணத்தை முதற்கண் வன்மையாகக் கண்டித்துக் கொள்கிறேன்..

அடுத்த விஷயம்... நான் பதிவுலகில் நுழைந்தபோது கண்ணுக்குத் தெரிந்த திரட்டிகள் இரண்டுதான். ஒன்று தமிழ்மணம். இன்னொன்று தேன்கூடு. இப்போது தேன்கூடு சிதைந்து போனது. தமிழ்மணத்தை ஒரு நாளாவது திறக்கவில்லையெனில் அது என்னவோ வேறு ஒரு வேலையும் ஓட மாட்டேங்குது என்று சித்தப்பிரமை பிடித்தாற்போல் ஆனது அந்தக் காலக்கட்டம்.

இப்போது நிறைய திரட்டிகள் வந்துவிட்டாலும், தமிழ்த் தினசரி பத்திரிகைகளில் ‘தினத்தந்தி'க்கு என்ன இடமோ, அதே போன்று வலைப்பதிவர்களின் உள்ளத்தில் தனி இடம் பிடித்திருக்கிறது தமிழ்மணம். என்ன காரணம், அல்லது எவ்வளவு காரணங்கள் என்று தெரியவில்லை. ஆனால் பிடித்திருக்கிறது. இதில் இன்றுவரையில் மாற்றமில்லை.

சமீபத்தில் கருவிப்பட்டையில் வாக்குகளை குத்துகின்ற முறையில் பெரும் மாற்றம் செய்து வாக்குச்சீட்டில் இருந்து ஓட்டுப் பதிவு இயந்திரத்திற்கு இந்தியத் தேர்தல் கமிஷன் மாறியதைப் போல் ஒரே ஜம்ப்பில் நான்கைந்து பெஞ்சுகளைத் தாண்டியிருக்கிறது தமிழ்மணம்.

சிற்சில பதிவுகளுக்கு விழுந்த ஆதரவுக் குத்துக்களையும், எதிர்ப்புக் குத்துக்களையும் பார்க்கப் போனால் பல்வேறு யூகங்களுக்குத்தான் வழி வகுத்தது. உண்மையா? பொய்யா என்பது தெரியவில்லை. ஆனால் சராமரியாக சிலர் மட்டுமே வாக்குகளை வாங்கிக் குவித்த பின்பு, பதிவர்களுக்குள் ஒரு உள்வட்டம் எழும்பியிருந்ததை காண முடிந்தது.
அதே போல் எனக்குத் தெரிந்து அதிக முறை அதிக வாக்குகளைப் பெற்றவர் பதிவர் வினவாகத்தான் இருக்க முடியும். ஒரு கட்டத்தில் அவருடைய ஒவ்வொரு பதிவும் 20க்கு மேல் போய்க் கொண்டிருந்ததை பார்க்க முடிந்தது. அவருக்கு அடுத்து நம்ம அறிவின் சிகரம்(இதெல்லாம் நான் மட்டும் செல்லமா கூப்பிட்டுக்குறது..? வேற யாராவது கூப்பிட்டீங்க கைல கத்திரிக்கோலோட வீடு தேடி வந்திருவாரு டாக்டரு.. ஆமா சொல்லிப்புட்டேன்..) டாக்டர் புருனோவின் பதிவுகள்தான்.. அத்தனையும் அருமை.. பொது அறிவுப் பொக்கிஷங்கள்.. கொடுக்கப்பட வேண்டியவைகள்தான்.. சந்தேகமில்லை.

ஆனாலும் மிக நன்றாக இருந்தும் அதனை முறைப்படியாக பதிவர்களிடம் கொண்டு சென்று சேர்க்காத காரணத்தினால் பல நல்ல பதிவுகள் பதிவர்களின் கவனத்துக்கு வராமலேயே போய்விட்டது. தெரிந்தால்தானே ஓட்டுப் போடுவதற்கு..? பதிவு போட்டதும் வேலை முடிந்தது என்று பாதிப் பேர் நினைத்து அப்பீட்டு ஆகிவிட்டார்கள். அதனை சரியான சமயத்தில் வெளியிடுவது என்கிற அம்சமும் இங்கே இருக்கிறது என்பதைத்தான் பல புதிய பதிவர்கள் அறிந்து கொள்வதில்லை.

தமிழ்மணத்தின் வாசகர்களில் அதிகம்பேர் வெளிநாட்டில் வசிக்கும் தமிழர்களாகத்தான் இருப்பார்கள் என்று நினைக்கிறேன். அவர்கள் நம்முடைய இரவு நேரத்தில்தான் பதிவு எழுதவும், படிக்கவும் அலுவலகத்திற்கு விஜயம் செய்கிறார்கள். நாமும் அதற்கேற்றாற்போல் இரவு நேரங்களில் புதிய பதிவுகளைப் போட்டுவிட்டால், அவர்கள் படித்து முடித்து, முடிந்தால் பின்னூட்டம் போட்டு உங்களை சூடான பதிவுகளுக்கு உடனடியாகக் கொண்டு சேர்ப்பார்கள். சேர்த்தார்கள்.

முன்பிருந்த சூடான இடுகைகளில் இடம் பிடித்த முக்கால்வாசி பதிவுகள் இந்திய நேரப்படி இரவு நேரத்தில் போடப்பட்டவைதான். அடுத்த நாள் காலையில் கமெண்ட்டுகளை வெளியிட்டோ அல்லது அதற்கு பதில் இட்டுவிட்டோ அலுவலகத்திற்குச் சென்றுவிட்டால், இந்திய நேரப்படி அலுவலகத்தில் தூங்க வரும் நமது இந்தியப் பதிவர்களுக்கு இது வசதியாக இருக்கும்.

இவர்கள் இடம் பின்னூட்டங்களுக்கு இரவில் நாம் வீடு திரும்பியவுடன் மீண்டும் பதில் பின்னூட்டம் போட்டு வெளியிட்டால் குறைந்தபட்சம் 2 நாட்களாவது பதிவுகள் தமிழ்மணத்தில் ஏதாவது ஒரு ரூபத்தில் தென்பட்டுக் கொண்டேதான் இருக்கும். இதையெல்லாம் கச்சிதமாகச் செயலாக்கியவன் நான் என்பதையும் மிக்க வருத்தத்துடன், ரொம்ப சந்தோஷத்துடனும் தெரிவித்துக் கொள்கிறேன். இதனை பல முன்னணி பதிவர்களே செய்யவில்லை. அதனால் பல நல்ல பதிவுகள் நமது கண்களுக்கு படாமலேயே போய்விட்டதுதான் நமது சோகம்.

முன்பிருந்த தமிழ்மணத்தின் வாக்குப் பதிவுக்கு கிளிக் செய்து பின்பு ஜிமெயிலின் லாகின், பாஸ்வேர்டை கொடுத்து செய்ய வேண்டியிருந்தது. அப்போது சம்பந்தப்பட்ட கணினியின் ஐ.பி. எண்ணை அது சரி பார்த்ததா என்று எனக்குத் தெரியவில்லை. இதற்கே எனக்கு எல்லையில்லா சோம்பேறித்தனம்.. “இப்படி ஒண்ணைத் தட்டறதுக்கு யாருக்காச்சும் ரெண்டு கமெண்ட்டு போட்டிருவனே முருகா..” என்று தமிழ்மணத்தைத் திட்டிக் கொண்டுதான் இருந்தேன்.

தமிழ்மணத்தாற் இப்போதும் ஏதோ திருகு வேலையைச் செய்திருக்கிறார்கள். ஒவ்வொரு நாளும் விடிந்தவுடன் எனது பதிவினை ஓப்பன் செய்தவுடன் நான் செய்யும் முதல் வேலை ஓட்டுப் போடுவதுதான்.. ஆனால் கடந்த 3 நாட்களாக அப்படிச் செய்தால் “மன்னிக்கவும்.. உங்களது ஓட்டு போட்டாகிவிட்டது.. கள்ள ஓட்டுப் போடாதடா கபோதி..” என்று எனது கணினியே என்னைத் திட்டுகிறது.

கஷ்டப்பட்டு அங்கே, இங்கே என்று செய்திகளைத் தேடிப் பிடித்து பதிவுகளைப் போட்டுவிட்டு முதலிரவிற்குக் காத்திருக்கும் பையனைப் போல யாராச்சும் கமெண்ட்டு போட வர மாட்டாங்களாப்பா என்று வாயில் ஈ நுழைவதுகூடத் தெரியாமல் விழிமேல் விழி வைத்து காத்துக் கொண்டிருக்கும் இன்றையச் சூழலில்..

பத்து பக்க பதிவு ஒரு ஓட்டுதான் வாங்கியிருக்கிறது என்பது வெளியே தெரிந்தால் எவ்ளோ பெரிய கேவலம் என்பது தமிழ்மணத்தாருக்குத் தெரியுமா..? அவர்கள் வேண்டுமானால் மானம், ரோஷத்தை பார்க்காதவர்களாக இருக்கலாம். ஆனால் நான் அப்படியில்லையே.. மானம், ரோஷம், வெட்கம், சூடு, சொரணை இப்படி எல்லாத்தையும் அர்ச்சனைத் தட்டுல வைச்சு திருப்பரங்குன்றம் முருகன் கோவில்ல முருகன்கிட்ட ஒப்படைச்சிட்டுல்ல அன்னிக்கு ராத்திரி திருவள்ளுவர் பஸ்ல ஏறுனேன்.. எவ்ளோ டென்ஷனா இருக்குது பாருங்க..

சரி அதை விடுங்க.. ராத்திரியோட ராத்திரியா பதிவைப் போட்டு விடிஞ்சதும் கைலி இடுப்புல இல்லைன்றதுகூட தெரியாம கம்ப்யூட்டரை ஆன் பண்ணிட்டு சூடான இடுகைல என் பதிவைத் தேடின காலம் எப்பேர்ப்பட்ட பொற்காலம். இப்போ அதுக்கும் வைச்சுட்டாங்கய்யா ஆப்பு..

சூடான இடுகையே தேவையில்லைன்னு ஒரே போடா போட்டு.. பரிந்துரை செய்யப்பட்ட பதிவுகளை மட்டுமே கண்ணுல காட்டி கொல்றாங்க.. சூடான இடுகைல இடம் பிடிச்சது முக்கால்வாசி யூத் என்று தங்களைத் தாங்களே சொல்லிக் கொண்ட வயதான பதிவர்களின் பதிவுகளும், சில நல்ல தமிழ் வார்த்தைகளைத் தலைப்புகளாகக் கொண்ட பதிவுகளும்தான்.

நான் தமிழ்மணத்தை திறந்தவுடன் முதலில் பார்ப்பது சூடான இடுகைகள்தான். ஏனெனில் தினந்தோறும் 1000 பதிவுகள் போடப்படும் சூழலில் நல்ல பதிவுகள் எல்லாம் திடீர், திடீரென்று காணாமல் போய்விடுகின்றன. ஒரு கட்டத்தில் என்னைத் திட்டி எழுதப்பட்ட சில பதிவுகளையே நான் பதினைந்து நாட்கள் கழித்துத்தான் படிக்க முடிந்தது.

“ஒருவேளை யாரும், யாரையும் திட்டக்கூடாது. நல்ல தமிழ்ல எழுதக் கூடாது”ன்னு சொல்லித்தான் சூடான இடுகையைத் தூக்கிட்டாங்களோ..? சரி சாந்தி தியேட்டர் எதுத்தாப்புல உக்காந்திருக்குற கிளி ஜோஸியக்காரன்கிட்ட நாளைக்கு இதுக்கு விளக்கம் கேட்டிருவோம்.

இதையெல்லாம் யார் கேக்குறா..? யாரோட ஆலோசனைன்னே தெரிய மாட்டேங்குது.. போயஸ் கார்டன் கிச்சன் காபினெட்டைவிடவும் தமிழ்மணத்தின் கிச்சன் கேபினட் பரம ரகசியமா இருக்கு. ஒவ்வொரு மாற்றத்திற்குப் பின்னும் “பதிவர்கள் பலரின் வேண்டுகோளுக்கிணங்க..” என்று இங்கே இருக்குறவன் தலைல கல்லைத் தூக்கிப் போட்டு மேட்டரை முடிச்சர்றாங்க..

சில சமயத்துல அவிய்ங்க சும்மா இருந்தாலும் கட்டுன கோவணத்தையே உருவுற இங்க இருக்குற நம்மாளுக விட மாட்டேங்குறாங்க.. எதையாவது அவங்களுக்கு எதுக்க பேசி, உசுப்பேத்தி இப்படி நம்ம மானம், மரியாதையையெல்லாம் கப்பலேத்தி விட்டுறாங்க.

சரி.. இப்படி எதையாவது செய்றவங்க..

“தமிழ்மணத்துல கலாட்டா..

உட்கட்சிப் பூசல்..

பதவிப் போராட்டம்..

சசிக்கும், சங்கரபாண்டிக்கும் சண்டை..

டல்லாஸ்ல வாய்க்கா வரப்பு மேல மம்மட்டியை வைச்சு தொடையைத் தட்டி சசி பாண்டிக்குச் சவால் விட்டுட்டாரு.. முடிஞ்சா தாண்டி வாடான்னு பாண்டியாடிட்டாரு..

நியூயார்க் எம்ப்பயர் ஸ்டேட் பில்டிங் முன்னாடி சசியும், பாண்டியும் ஒருத்தரையொருத்தர் விளையாட்டுத் துப்பாக்கியால சுட்டுக்கிட்டாங்க.. போலீஸ் அவங்களை வலைவீசித் தேடுதாம்..

இப்ப செல்வராஜுன்னு ஒருத்தர் புத்சா உள்ள கீந்து விளையாடுறாரு.. அவர்தான் ஈமெயில் லெட்டருக்கு அத்தாரிட்டியாம்.. அப்ப மத்தவங்க எல்லாரும் என்ன பபூன்களா அப்படீன்னு பொதுக்குழுவுல காரசாரமா சேரைத் தூக்கிப் போட்டு பெரிய கலாட்டாவாம். இது சி.ஐ.ஏ. தகவல்....

தமிழ்மணத்து மேல பெல்ஜியம் சர்வதேசக் கோர்ட்ல விசாரணை நடக்கப் போகுதாம்.. சசி பாண்டியைக் கை காட்டுறாராம்.. பாண்டி முன்னாடி இருந்த காசியைக் கை காட்டுறாராம்.. பாவம் காசி ஸார்.. இதுனாலேயே தமிழ்மணத்துக்காரங்களே போன் பண்ணாலும் போனை எடுக்க மாட்டேங்குறாராம்..

ஆக மொத்தத்துல தமிழ்மணம் குழுவுல யாரோ ஒருத்தர் இந்த வருஷத்துக்குள்ள பிரஸ்ஸல்ஸ்ல ராஜபக்சே அண்ணனுக இருக்கப் போற செல்லுக்குப் பக்கத்து செல்லுல குடிபோகப் போறாங்க..”

இப்படி எதையாவது எழுதுங்கய்யா..

தமிழ்மணத்துக்காரங்க ஆரம்பத்துல இருந்தே ரொம்ப, ரொம்ப நல்லவங்க.. எவ்ளோ அடிச்சாலும் தாங்கினாங்க.. தாங்குறாங்க.. தாங்குவாங்க.. என் இம்புட்டு வருஷ சர்வீஸ்ல அடிச்சுச் சொல்றேன்.. என்னை மாதிரி.. இது மாதிரி அள்ளி விடுங்க.. ஒண்ணுமே செய்ய மாட்டாங்க.. எதுவுமே சொல்ல மாட்டாங்க..

இதையெல்லாம் விட்டுப்புட்டு ஆலோசனை சொல்றேன்னு நினைச்சு என்னை மாதிரி கிறுக்கி வைக்குறவங்க வயித்துல அடிக்கிறீங்களேய்யா.. இது உங்களுக்கே நியாயமா..? அடுக்குமா..? நான் இனிமே என்னத்தை எழுதறது..? எப்படி எல்லார்கிட்டேயும் நானும் ஒரு பதிவு போட்டிருக்கேன்னு சொல்றது..? எத்தனை பேர் வந்து படிக்கப் போறாங்க.. எத்தனை நல்ல ஓட்டும், எத்தினி கள்ள ஓட்டும் எனக்கு விழுகப் போகுது..? நமக்கு நாமே திட்டப்படி எனக்கு இனிமே ஒண்ணே ஒண்ணுதானா..? அழுகை, அழுகையா வருதுடா சாமி..

“யாருமே இல்லாத கடைல யாருக்குடா டீ ஆத்துற..? உன் கடமை உணர்ச்சிக்கு அளவே இல்லையா?”ன்னு நம்ம விவேக் அண்ணன் சொன்ன டயலாக்குதான் இந்தச் சமயத்துல எனக்கு பொருத்தமா இருக்கு. அதனாலதான் இவ்வளவு பொறுமலும், கோபமும்.. ஒண்ணும் தப்பு இல்லையே..? தப்பா இருந்தா இவனுக்கு முருகன் கொடுக்குற ஆப்பே போதும்னு நினைச்சு பெரிய மனசு பண்ணி மன்னிச்சு விட்ருங்க.. கரெக்ட்டா இருந்தா ஒரு ஓட்டு.. ஒரே ஒரு ஓட்டு மறக்காம குத்திருங்க.. போதும்..

இவ்ளோ கிறுக்கல்களையும் பொறுமையா படிச்சதுக்கு ரொம்ப நன்றிங்கோ..

எதையும் தாங்கும் இதயம் கொண்ட தமிழ்மணம் அண்ணன்கள், இதையும் தாங்கிக் கொள்வார்கள் என்கிற நம்பிக்கையுடன் எனது சிற்றுரையை இத்துடன் முடித்துக் கொள்கிறேன்.

நன்றி

வணக்கம்.

47 comments:

malar said...

ஐயா!!

பெரிய பெரிய பதிவா போட்டு கொலாதீங்க .

shabi said...

ரொம்ப நாள் கோவமா எவ்ளோ.........................பெரிய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய் பதிவு முடியல

இராகவன் நைஜிரியா said...

தமிழ் மணத்தில் ஓட்டு போடவே முடியலைங்க.

அது என்ன எழவோ... open id.. நானும் raghavannigeria.blogspot.com அப்படின்னு கொடுத்துப் பார்த்தேன்.. bad signature அப்படின்னு வருது. சரி raghavannigeria@gmail.com அப்படின்னு கொடுத்துப் பார்த்தேன்.. அதுவும் தப்புன்னு வருது... சரி www.raghavannigeria.blogspot.com - அப்படின்னு கொடுத்தேன் - அதுக்கு Are you member of the blogspot - ங்கொய்யால ப்ளாக்கே என்னோடுதுதான் இதுல என்னோடதான்னு கேட்கிறாயா அப்படின்னு வெளியே வந்துட்டேன்.

இதனாலத்தான் தமிழ் மணத்தில் கடந்து சில நாட்களாக ஓட்டு போடவில்லை.

உங்களுக்கு தமிழிஷில் ஓட்டுப் போட்டுகிட்டு இருக்கேங்க.. (என்னால முடிஞ்சது..)

அது சரி(18185106603874041862) said...

ஏங்கப்பா....ஒரு வாரத்துக்கு ஒக்காந்து படிக்கலாம் போலருக்கே...

ஓட்டு போட்டாச்சீங்கோ!

இராகவன் நைஜிரியா said...

அப்படி இப்படின்னு ஒரு வழியா படிச்சு என்னா பண்ணனும் அப்படின்னு புரிஞ்சுகிட்டேங்க.

ஓட்டும் போட்டுட்டேன்.

ஒரு yahoo அக்கௌண்ட் இதுக்காகவே ஒப்பன் பண்ணி அதைக் கொடுத்தேங்க.. ஒத்துகிச்சு..

யப்பா யாருப்பா இது மாதிரி எல்லாம் கத்துக் கொடுத்தாங்கன்னு புரியலை..

யாரா இருந்தாலும் வாழ்க அவர் தம் கொற்றம்

gulf-tamilan said...

ஓட்டு போட்டாச்சீங்கோ !!!

தமிழ் சசி | Tamil SASI said...

உ.த,

வயிறு குலுங்க சிரிக்க வைச்சிட்டீங்க :)))

பதி said...

//கடந்த இரண்டு நாட்களாக உடல் வலியும், மன வலியும் பின்னி எடுத்ததால் வீட்டைவிட்டு நகர முடியவில்லை. இன்றைக்குத்தான் முடிந்தது.//

அய்யய்யோ.. அது தான் பதிவு ரெம்ப சின்னதா இருக்கா???

உடம்ப கொஞ்சம் பாத்துக்குங்கண்ணே...

//பத்து பக்க பதிவு ஒரு ஓட்டுதான் வாங்கியிருக்கிறது என்பது வெளியே தெரிந்தால் எவ்ளோ பெரிய கேவலம் என்பது தமிழ்மணத்தாருக்குத் தெரியுமா..?//

:)))))

இதுக்கெல்லாம் கவலைப் பட்ட முடியுமா?? பிரபலம்னு சொல்லிகிட்டு திரியுறவங்களே - ஓட்டு வாங்கி குவிக்குறாங்க !!!!!

என் பங்குக்கு ஒரு ஓட்டு போட்டாச்சு...

Unknown said...

எனக்கு ஞாபக சக்தி மிகவும் குறைவு. பாதி படிக்கும்போதே ஆரம்பத்தில் என்ன படித்தேன் என்று மறந்து விட்டது. கடைசி பகுதியைப் படிக்கும் போது ஆரம்பதிலும் நடுவிலும் என்ன படித்தேன் என்று ஞாபகமில்லை. பின்னூட்டம் இடும்போது எதுவுமே ஞாபகமில்லை. ஆமாம் என்ன பதிவிட்டீகள். உங்கள் பதிவுகள் வச்சா குடுமி அடிச்சா மொட்டை என்பது போல் இருக்கிறது.

தீப்பெட்டி said...

//சிற்றுரையை இத்துடன் முடித்துக் கொள்கிறேன்//

ரொம்ப குறும்புதான்....

இளைய கவி said...

தல் தமிழ்மணம் எப்போதுமே இப்படித்தான் தமிழ்வெளி வந்து பாருங்க.. அப்புறம் சொலுங்க .. http://tamilveli.com

இளைய கவி said...

தல் தமிழ்மணம் எப்போதுமே இப்படித்தான் தமிழ்வெளி வந்து பாருங்க.. அப்புறம் சொலுங்க .. http://tamilveli.com

வால்பையன் said...

ஆரம்பத்தில் தமிழ்மணத்தில் தான் பதிவுகளை படித்து கொண்டிருந்தேன்!
பதிவர்கள் அதிகமான பின் பதிவுகள் அரைமணி நேரம் கூட முகப்பில் நிற்பதில்லை!

ஓட்டு விசயத்தில் நான் 49ஓ!
எனக்கும் கேட்பதில்லை, நானும் போடுவதில்லை!

எனக்கு பின்னூட்டம் இருபவர்களுக்கு நான் பின்னூட்டம் இட மறப்பதில்லை!

எல்லாம் ரீடரின் உபயம்!

(உங்க பின்னூட்டத்தை கொஞ்சநாளா காணோமே)

Bhuvanesh said...

என்ன அண்ணே Back to Form ௮ ??

உண்மைத்தமிழன் said...

///malar said...

ஐயா!!

பெரிய பெரிய பதிவா போட்டு கொலாதீங்க .///

மலரு..

இதுவா பெரிய பதிவு..? சின்னதுதாம்மா.. இதைவிட பெரிசெல்லாம் இப்பக்கூட தமிழ்மணத்துல ஓடிக்கிட்டிருக்கு..

என்னயவே குத்தம் சொல்லுங்க..!

உண்மைத்தமிழன் said...

[[[shabi said...

ரொம்ப நாள் கோவமா எவ்ளோ பெரிய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்
ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய் பதிவு]]]

முடியலய்யா.. முடியல..

உண்மைத்தமிழன் said...

[[[Suresh said...

வாழ்த்துகள்]]]

நன்றிங்கண்ணே..!

உண்மைத்தமிழன் said...

[[[இராகவன் நைஜிரியா said...

தமிழ்மணத்தில் ஓட்டு போடவே முடியலைங்க. அது என்ன எழவோ... open id.. நானும் raghavannigeria.blogspot.com அப்படின்னு கொடுத்துப் பார்த்தேன்.. bad signature அப்படின்னு வருது. சரி raghavannigeria@gmail.com அப்படின்னு கொடுத்துப் பார்த்தேன்.. அதுவும் தப்புன்னு வருது... சரி www.raghavannigeria.blogspot.com - அப்படின்னு கொடுத்தேன் - அதுக்கு Are you member of the blogspot - ங்கொய்யால ப்ளாக்கே என்னோடுதுதான் இதுல என்னோடதான்னு கேட்கிறாயா அப்படின்னு வெளியே வந்துட்டேன்.

இதனாலத்தான் தமிழ் மணத்தில் கடந்து சில நாட்களாக ஓட்டு போடவில்லை. உங்களுக்கு தமிழிஷில் ஓட்டுப் போட்டுகிட்டு இருக்கேங்க.. (என்னால முடிஞ்சது..)]]]

மிக்க நன்றிங்கோ இராகவன் ஸார்..

நைஜீரியால எனக்கு ஏதாவது வேலை கிடைக்குமான்னு பார்த்து சொல்லுங்களேன்..

ஆனா சம்பளமா மாசம் வெறும் அம்பதாயிரம் டாலர் கிடைச்சா போதும்..!

உண்மைத்தமிழன் said...

[[[அது சரி said...

ஏங்கப்பா....ஒரு வாரத்துக்கு ஒக்காந்து படிக்கலாம் போலருக்கே...

ஓட்டு போட்டாச்சீங்கோ!]]]

அடிங்கொய்யால.. கொழுப்பா..?

எல்லாம் சின்னதுதான்.. பொறுமையா ஆற, அமர படிக்கணும் சாமியோவ்..!

உண்மைத்தமிழன் said...

[[[இராகவன் நைஜிரியா said...

அப்படி இப்படின்னு ஒரு வழியா படிச்சு என்னா பண்ணனும் அப்படின்னு புரிஞ்சுகிட்டேங்க.

ஓட்டும் போட்டுட்டேன்.

ஒரு yahoo அக்கௌண்ட் இதுக்காகவே ஒப்பன் பண்ணி அதைக் கொடுத்தேங்க.. ஒத்துகிச்சு..

யப்பா யாருப்பா இது மாதிரி எல்லாம் கத்துக் கொடுத்தாங்கன்னு புரியலை.. யாரா இருந்தாலும் வாழ்க அவர் தம் கொற்றம்.]]]

ஆஹா போட்டுட்டீங்களா..?

அப்ப யாஹூல ஒண்ணு, பிளாக்ஸ்பாட்ல ஒண்ணு, ஜிமெயில்ல ஒண்ணுன்னு மூணு ஓட்டு இருக்கு.. ஜமாயுங்கோ..!

உண்மைத்தமிழன் said...

[[[gulf-tamilan said...
ஓட்டு போட்டாச்சீங்கோ !!!]]]

நன்றிங்கோ கல்ப் தமிழன் ஸார்..!

ரொம்ப ஸாரி.. உங்களை நேரில் சந்திக்க முடியாமல் போனதுக்காக..!

அடுத்த முறை என் வீட்டுக்கு வாங்க.. ஜமாய்ச்சுடலாம்..!

உண்மைத்தமிழன் said...

[[[தமிழ் சசி / Tamil SASI said...
உ.த, வயிறு குலுங்க சிரிக்க வைச்சிட்டீங்க :)))]]]

புரிந்து கொண்டமைக்கு நன்றிகள் சசி ஸார்..!

உண்மைத்தமிழன் said...

[[[பதி said...

//கடந்த இரண்டு நாட்களாக உடல் வலியும், மன வலியும் பின்னி எடுத்ததால் வீட்டைவிட்டு நகர முடியவில்லை. இன்றைக்குத்தான் முடிந்தது.//

அய்யய்யோ.. அதுதான் பதிவு ரெம்ப சின்னதா இருக்கா???]]]

இது 1001-வது புலம்பல்..

[[[உடம்ப கொஞ்சம் பாத்துக்குங்கண்ணே...]]]

கரிசனத்துக்கு நன்றிங்கண்ணே..!

//பத்து பக்க பதிவு ஒரு ஓட்டுதான் வாங்கியிருக்கிறது என்பது வெளியே தெரிந்தால் எவ்ளோ பெரிய கேவலம் என்பது தமிழ்மணத்தாருக்குத் தெரியுமா..?//
:)))))]]]

பின்ன.. பார்க்கிறவனும், படிக்கிறவனும் என்னைப் பத்தி என்ன நினைப்பான்.. கேவலமா இருக்காது..?

[[இதுக்கெல்லாம் கவலைப்பட முடியுமா?? பிரபலம்னு சொல்லிகிட்டு திரியுறவங்களே - ஓட்டு வாங்கி குவிக்குறாங்க !!!!! என் பங்குக்கு ஒரு ஓட்டு போட்டாச்சு...]]]

மிக்க நன்றி பதி..!

வாழ்க வளமுடன்..

இது மாதிரி என்னோட ஒவ்வொரு பதிவுக்கும் வந்து உங்களுடைய பொன்னான ஓட்டுக்களை குத்தும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்..

உண்மைத்தமிழன் said...

[[[ananth said...
எனக்கு ஞாபக சக்தி மிகவும் குறைவு. பாதி படிக்கும்போதே ஆரம்பத்தில் என்ன படித்தேன் என்று மறந்து விட்டது. கடைசி பகுதியைப் படிக்கும் போது ஆரம்பதிலும் நடுவிலும் என்ன படித்தேன் என்று ஞாபகமில்லை. பின்னூட்டம் இடும்போது எதுவுமே ஞாபகமில்லை. ஆமாம் என்ன பதிவிட்டீகள். உங்கள் பதிவுகள் வச்சா குடுமி அடிச்சா மொட்டை என்பது போல் இருக்கிறது.]]]

ஆஹா..

அருமையான பி்ன்னூட்டம் ஆனந்த்..

மிக்க நன்றி..!

உண்மைத்தமிழன் said...

[[[தீப்பெட்டி said...

//சிற்றுரையை இத்துடன் முடித்துக் கொள்கிறேன்//

ரொம்ப குறும்புதான்....]]]

நீங்களே ஒத்துக்கிட்டீங்களே தீப்பெட்டி.. இதுவே போதும்..!

உண்மைத்தமிழன் said...

[[[இளைய கவி said...
தல் தமிழ்மணம் எப்போதுமே இப்படித்தான் தமிழ்வெளி வந்து பாருங்க.. அப்புறம் சொலுங்க .. http://tamilveli.com ]]]

தமிழ்வெளியின் ஆரம்பக் காலந்தொட்டே நான் அதில் அங்கத்தினர்தான்..

அதில் மாற்றமில்லை..

உண்மைத்தமிழன் said...

[[[வால்பையன் said...

ரம்பத்தில் தமிழ்மணத்தில்தான் பதிவுகளை படித்து கொண்டிருந்தேன்!
பதிவர்கள் அதிகமான பின் பதிவுகள் அரைமணி நேரம்கூட முகப்பில் நிற்பதில்லை!]]]

அப்ப நிறைய வேலை வெட்டி இல்லாத பெருமக்கள் நாட்டில் இருக்கிறார்கள் என்று அர்த்தம்..

[[[ஓட்டு விசயத்தில் நான் 49ஓ!
எனக்கும் கேட்பதில்லை, நானும் போடுவதில்லை!]]]

இது பதிவுலக சட்டப்படி குற்றம். கண்டிப்பா ஓட்டுப் போட்டுத்தான் ஆக வேண்டும்..

[[[எனக்கு பின்னூட்டம் இருபவர்களுக்கு நான் பின்னூட்டம் இட மறப்பதில்லை! எல்லாம் ரீடரின் உபயம்!]]]

நானும் கவனித்தேன்.. இதில் நீங்கள் சம்பந்தி வீட்டுக்காரங்க மாதிரி.. சம பாதி மரியாதையை யாரா இருந்தாலும் கொடுத்திட்டுத்தான் இருக்கீங்க..

[[[(உங்க பின்னூட்டத்தை கொஞ்சநாளா காணோமே)]]]

வேலை பெண்டை கழட்டுது வாலு..!

உண்மைத்தமிழன் said...

[[[Bhuvanesh said...
என்ன அண்ணே Back to Form௮??]]]

அப்புறம்.. வந்துதான ஆகணும்..

நம்ம பேரைக் காப்பாத்தணும்ல..

புருனோ Bruno said...

//அதே போல் எனக்குத் தெரிந்து அதிக முறை அதிக வாக்குகளைப் பெற்றவர் பதிவர் வினவாகத்தான் இருக்க முடியும். ஒரு கட்டத்தில் அவருடைய ஒவ்வொரு பதிவும் 20க்கு மேல் போய்க் கொண்டிருந்ததை பார்க்க முடிந்தது. அவருக்கு அடுத்து நம்ம அறிவின் சிகரம்(இதெல்லாம் நான் மட்டும் செல்லமா கூப்பிட்டுக்குறது..? வேற யாராவது கூப்பிட்டீங்க கைல கத்திரிக்கோலோட வீடு தேடி வந்திருவாரு டாக்டரு.. ஆமா சொல்லிப்புட்டேன்..) டாக்டர் புருனோவின் பதிவுகள்தான்.. அத்தனையும் அருமை.. பொது அறிவுப் பொக்கிஷங்கள்.. கொடுக்கப்பட வேண்டியவைகள்தான்.. சந்தேகமில்லை.//

பொதுவாக அனைவரும் கருவிப்பட்டையை பதிவின் ஆரம்பத்தில் அல்லது மறுமொழிகளுக்கு பிறகே சேர்த்திருந்தார்கள்

வினவு தளத்தில் தான் பதிவு முடிந்தது வாக்களிக்க சுட்டி தந்தார்கள். அதை பார்த்து நானும் அங்கு தனி சுட்டி வைத்தேன்

நல்ல பலன் இருந்தது :) :) :) !!

சோதனைக்கு ஒரு இடுகையில் சுட்டி சேர்க்க வில்லை. என்ன நடந்தது என்று பாருங்கள்

புருனோ Bruno said...

//முன்பிருந்த சூடான இடுகைகளில் இடம் பிடித்த முக்கால்வாசி பதிவுகள் இந்திய நேரப்படி இரவு நேரத்தில் போடப்பட்டவைதான்//

நீங்க ஒரு சூட்சுமம் கண்டுபிடித்தது மாதிரி நாங்களும் ஒன்று கண்டுபிடித்தோம் (பதிவு முடிந்தவுடன் வாக்களிக்கும் சுட்டி அளித்தது)

அதனால் தான் தமிழ் மணத்திலும் தமிழிஷிலும் முன்னால் வர முடிந்தது

அவ்வளவு தான்

ஜே கே | J K said...

எவ்ளோஓ பெரிய பதிவு.

Unknown said...

///ஆஹா..

அருமையான பி்ன்னூட்டம் ஆனந்த்..

மிக்க நன்றி..!///

வஞ்சப் புகழ்ச்சியில் தங்களை மிஞ்ச ஆள் இல்லை. Keep it up.

அடுத்த இரண்டு நாள் விடுமுறை எனக்கு. அந்த மூடில் இருப்பதால் அதிகம் எழுத ஆர்வமில்லை. திங்கட் கிழமை மீண்டும் சந்திப்போம்.

Raju said...

:))))

உண்மைத்தமிழன் said...

[[[புருனோ Bruno said...
பொதுவாக அனைவரும் கருவிப்பட்டையை பதிவின் ஆரம்பத்தில் அல்லது மறுமொழிகளுக்கு பிறகே சேர்த்திருந்தார்கள். வினவு தளத்தில்தான் பதிவு முடிந்தது வாக்களிக்க சுட்டி தந்தார்கள். அதை பார்த்து நானும் அங்கு தனி சுட்டி வைத்தேன்.
நல்ல பலன் இருந்தது:):):)!!
சோதனைக்கு ஒரு இடுகையில் சுட்டி சேர்க்கவில்லை. என்ன நடந்தது என்று பாருங்கள்]]]

புருனோ ஸார்..

கருவிப் பட்டையை கீழே பதிவிற்குப் பின்னர் அமைப்பது எப்படி என்பதையும் கொஞ்சம் சொல்லுங்களேன்..

நானும் வைத்துக் கொள்கிறேன்..

உண்மைத்தமிழன் said...

[[[புருனோ Bruno said...

//முன்பிருந்த சூடான இடுகைகளில் இடம் பிடித்த முக்கால்வாசி பதிவுகள் இந்திய நேரப்படி இரவு நேரத்தில் போடப்பட்டவைதான்//

நீங்க ஒரு சூட்சுமம் கண்டுபிடித்தது மாதிரி நாங்களும் ஒன்று கண்டுபிடித்தோம் (பதிவு முடிந்தவுடன் வாக்களிக்கும் சுட்டி அளித்தது) அதனால்தான் தமிழ்மணத்திலும் தமிழிஷிலும் முன்னால் வர முடிந்தது. அவ்வளவுதான்.]]

ஓ.. பதிலுக்குப் பதிலா..? இட்ஸ் ஓகே.. ஒத்துக்குறேன்..

இப்ப அதை எப்படி செய்யறதுன்னு கொஞ்சம் சொல்லிக் கொடுங்க..!

உண்மைத்தமிழன் said...

[[[ஜே கே | J K said...
எவ்ளோஓ பெரிய பதிவு.]]]

இதுவா..? ரொம்பச் சின்னப் பதிவு ஜேகே..!

உண்மைத்தமிழன் said...

[[[ananth said...
///ஆஹா..
அருமையான பி்ன்னூட்டம் ஆனந்த்..
மிக்க நன்றி..!///

வஞ்சப் புகழ்ச்சியில் தங்களை மிஞ்ச ஆள் இல்லை. Keep it up.]]]

நானா..? நான் வஞ்சப்புகழ்ச்சி செய்கிறேனா..?

இது அபாண்டமான குற்றச்சாட்டு ஆனந்த்..

இதுக்கு இப்படி ஒரு பேர் இருக்கிறது என்பதே எனக்கு இன்றைககுத்தான் தெரியும்..)))))))))))))))))

உண்மைத்தமிழன் said...

[[[டக்ளஸ்....... said...
:))))]]]

டக்ளஸு.. மதுரை எப்படி கீது..? சூதானமான இருந்துக்க கண்ணு..

வில்லங்கம் விக்னேஷ் said...

புரூனோ அய்யா சொல்றது
/நீங்க ஒரு சூட்சுமம் கண்டுபிடித்தது மாதிரி நாங்களும் ஒன்று கண்டுபிடித்தோம் (பதிவு முடிந்தவுடன் வாக்களிக்கும் சுட்டி அளித்தது)/

அட போங்க அய்யா ஒரே போஸ்ட ரெண்டு பிலாக்குல பிலாக்கருக்கு ஒன்னு வேர்ட்பிரசுக்கு ஒன்னுன்னு போட்டுருவீங்கலே அத சொல்ல வர்றீங்கன்னு நெனைச்சேன். ஏமாத்தீட்டீங்க

Unknown said...

//நானா..? நான் வஞ்சப்புகழ்ச்சி செய்கிறேனா..?

இது அபாண்டமான குற்றச்சாட்டு ஆனந்த்..

இதுக்கு இப்படி ஒரு பேர் இருக்கிறது என்பதே எனக்கு இன்றைககுத்தான் தெரியும்..//

வஞ்சப் புகழ்ச்சி என்றால் புகழ்வது போல் இகழ்வது அல்லது இகழ்வது போல் புகழ்வது. தாங்கள் இப்படி செய்வதாக எனக்கு தோன்றியது. அதனால் சொன்னேன். இல்லாவிட்டால் விடுங்கள். அபாண்டம் என்று எதற்கு பெரிய பெரிய வார்த்தையெல்லாம். நாம் ஒரு தாய் மக்கள் போல். நமக்குள் எதற்கு.....

Anonymous said...

Add your Blog to Top Tamil Blogs - Powered by Tamilers.
It has enhanced ranking system. It displays all stas like Hits Today, Rank, Average hits, Daily status, Weekly status & more.

This Ranking starts from Today.So everyone has the same start line. Join Today.

Top Tamil Blogs

"சிறந்த தமிழ் வலைப்பூக்கள்" தளத்தில் உங்கள் பிளாக்கையும் இணைத்து வலைப்பூவிற்கான வருகையை அறிந்து கொள்வதுடன், உங்கள் வலைப்பூவின் ரேங்கையும் தெரிந்து கொள்ளுங்கள்.

இன்று தான் இந்த ரேங்கிங் தொடங்கியது, எனவே எல்லா பிளாக்கும் ஒரே கோட்டில் இருந்து ஆரம்பம் ஆகிறது. உடனே இணையுங்கள்

சிறந்த வலைப்பூக்கள்

நன்றி.
தமிழர்ஸ் டாட் காம்.

உண்மைத்தமிழன் said...

[[[வில்லங்கம் விக்னேஷ் said...

புரூனோ அய்யா சொல்றது
/நீங்க ஒரு சூட்சுமம் கண்டுபிடித்தது மாதிரி நாங்களும் ஒன்று கண்டுபிடித்தோம் (பதிவு முடிந்தவுடன் வாக்களிக்கும் சுட்டி அளித்தது)/
அட போங்க அய்யா ஒரே போஸ்ட ரெண்டு பிலாக்குல பிலாக்கருக்கு ஒன்னு வேர்ட்பிரசுக்கு ஒன்னுன்னு போட்டுருவீங்கலே அத சொல்ல வர்றீங்கன்னு நெனைச்சேன். ஏமாத்தீட்டீங்க.]]]

இதென்ன புதுக் கதையா இருக்கு..?

ஒண்ணும் பிரியலே..!

உண்மைத்தமிழன் said...

[[[ananth said...

//நானா..? நான் வஞ்சப்புகழ்ச்சி செய்கிறேனா..? இது அபாண்டமான குற்றச்சாட்டு ஆனந்த்.. இதுக்கு இப்படி ஒரு பேர் இருக்கிறது என்பதே எனக்கு இன்றைககுத்தான் தெரியும்..//

வஞ்சப் புகழ்ச்சி என்றால் புகழ்வது போல் இகழ்வது அல்லது இகழ்வது போல் புகழ்வது. தாங்கள் இப்படி செய்வதாக எனக்கு தோன்றியது. அதனால் சொன்னேன். இல்லாவிட்டால் விடுங்கள். அபாண்டம் என்று எதற்கு பெரிய பெரிய வார்த்தையெல்லாம். நாம் ஒரு தாய் மக்கள் போல். நமக்குள் எதற்கு.....]]]

ஓகே.. ஓகே.. கூல் ஆனதற்கு மிக்க நன்றிங்கோ..!

உண்மைத்தமிழன் said...

[[[தமிழர்ஸ் - Tamilers said...
Add your Blog to Top Tamil Blogs - Powered by Tamilers. It has enhanced ranking system. It displays all stas like Hits Today, Rank, Average hits, Daily status, Weekly status & more. This Ranking starts from Today.So everyone has the same start line. Join Today.
Top Tamil Blogs
"சிறந்த தமிழ் வலைப்பூக்கள்" தளத்தில் உங்கள் பிளாக்கையும் இணைத்து வலைப்பூவிற்கான வருகையை அறிந்து கொள்வதுடன், உங்கள் வலைப்பூவின் ரேங்கையும் தெரிந்து கொள்ளுங்கள். இன்றுதான் இந்த ரேங்கிங் தொடங்கியது, எனவே எல்லா பிளாக்கும் ஒரே கோட்டில் இருந்து ஆரம்பம் ஆகிறது. உடனே இணையுங்கள்
சிறந்த வலைப்பூக்கள்
நன்றி.
தமிழர்ஸ் டாட் காம்.]]]

மிக்க நன்றி தமிழர்ஸ்..

உங்களுடன் இணைந்த பிறகு எனது பதிவு மிகத் தாமதமாக ஓப்பன் ஆகிறதே.. என்ன விஷயம்..?

ஏதாவது தகவல் தெரிந்தால் சொல்ல முடியுமா..?

மங்களூர் சிவா said...

/
சரி அதை விடுங்க.. ராத்திரியோட ராத்திரியா பதிவைப் போட்டு விடிஞ்சதும் கைலி இடுப்புல இல்லைன்றதுகூட தெரியாம கம்ப்யூட்டரை ஆன் பண்ணிட்டு சூடான இடுகைல என் பதிவைத் தேடின காலம் எப்பேர்ப்பட்ட பொற்காலம். இப்போ அதுக்கும் வைச்சுட்டாங்கய்யா ஆப்பு..

/

முருகாஆஆஆஆஆஆ காப்பாத்துய்யா எங்களை எல்லாரையும்
:))

உண்மைத்தமிழன் said...

[[[மங்களூர் சிவா said...

/சரி அதை விடுங்க.. ராத்திரியோட ராத்திரியா பதிவைப் போட்டு விடிஞ்சதும் கைலி இடுப்புல இல்லைன்றதுகூட தெரியாம கம்ப்யூட்டரை ஆன் பண்ணிட்டு சூடான இடுகைல என் பதிவைத் தேடின காலம் எப்பேர்ப்பட்ட பொற்காலம். இப்போ அதுக்கும் வைச்சுட்டாங்கய்யா ஆப்பு../

முருகாஆஆஆஆஆஆ காப்பாத்துய்யா எங்களை எல்லாரையும்:))]]]

இம்மாம் பெரிய பதிவுல எம்புட்டு மேட்டரு எழுதிருக்கேன்.. அத்தையெல்லாம் விட்டுப்போட்டு இத்த மட்டும் நோண்டி தனியா எடுத்துப் போடுறான் பார்த்தீங்களா..?

பயபுள்ளை கண்ணுல கொள்ளியை வைச்சுத் தேய்க்க..!

Thamira said...

பத்து பக்க பதிவு ஒரு ஓட்டுதான் வாங்கியிருக்கிறது என்பது வெளியே தெரிந்தால் எவ்ளோ பெரிய கேவலம் என்பது தமிழ்மணத்தாருக்குத் தெரியுமா..? அவர்கள் வேண்டுமானால் மானம், ரோஷத்தை பார்க்காதவர்களாக இருக்கலாம். ஆனால் நான் அப்படியில்லையே.. மானம், ரோஷம், வெட்கம், சூடு, சொரணை இப்படி எல்லாத்தையும் அர்ச்சனைத் தட்டுல வைச்சு திருப்பரங்குன்றம் முருகன் கோவில்ல முருகன்கிட்ட ஒப்படைச்சிட்டுல்ல அன்னிக்கு ராத்திரி திருவள்ளுவர் பஸ்ல ஏறுனேன்..
//

சிரித்து மகிழ்ந்தேன்.

என்ன பண்றதுண்ணே.. நீங்க இப்படிச்சொல்றீங்களே.! என்னால் என் பதிவுக்கு ஓட்டுபோடமுடியவில்லை. இந்த சிஸ்டம் வந்ததிலிருந்து என் எல்லா பதிவுகளும் 1 ஓட்டு மட்டுமே வாங்கிக்கொண்டிருக்கிறது. (அது யாருன்னு தெரியலை)