புதிய தென்னாப்பிரிக்க அதிபரின் 6 திருமணங்கள், 4 மனைவிகள், 22 பிள்ளைகள்.. போதுமடா சாமி..!

09-06-09

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

சென்ற ஏப்ரல் மாதம் 25-ம் தேதி தென்னாப்பிரிக்காவில் நடந்த பொதுத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு தென்னாப்பிரிக்க பத்திரிகைகள் எழுதித் தள்ளியிருக்கும் தலையாய விஷயம்.. “யார் இந்த நாட்டின் வருங்கால முதல் பெண்மணி..?”

தேர்தலில் 66 சதவிகித ஓட்டுக்களைப் பெற்று வெற்றி பெற்றிருக்கும் ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸின் தற்போதைய தலைவரும் ஜூலு இனத்தவரின் வசீகரமான புயலுமான ஜேக்கப் ஜூமாதான் தென்னாப்பிரிக்க நாட்டின் அடுத்த அதிபர் என்பதில் யாருக்கும் எந்தச் சந்தேகமும் இல்லை. ஆனால் அதிபரின் மனைவி என்கிற அந்தஸ்து யாருக்குக் கிடைக்கும் என்பதில்தான் பத்திரிகைகளுக்கும், நாட்டு மக்களுக்கும் குழப்பம்.


இதிலென்ன குழப்பம் என்கிறீர்களா..? மனிதருக்கு தற்போது மூன்று மனைவிகள் இருக்கிறார்கள். அதனால்தான் இந்தப் பரபரப்பு..

ஜேக்கப் ஜூமா இதுவரையில் ஆறு திருமணங்கள் செய்திருக்கிறார். இதில் ஒரு மனைவி இறந்துவிட்டார். இன்னொரு மனைவியை விவாகரத்து செய்துவிட்டார். இப்போது அன்னாருடைய அதிகாரப்பூர்வப் பட்டியலில் இருப்பது மூன்று மனைவிகள். கூடவே வெயிட்டிங் லிஸ்ட்டிலும் ஒரு மனைவி காத்திருக்கிறார்.

என்ன தலை சுற்றுகிறதா..? விஷயத்தைக் கேள்விப்பட்டவுடன் எனக்கும் இப்படித்தான் இருந்தது.

இவருடைய முதல் மனைவியின் பெயர் Sizakele Khumalo. 1959-ம் ஆண்டில் இருந்தே இவருடன் ‘பழகி' வந்த ஜூமா, 1973-ம் ஆண்டுதான் இவரைத் திருமணம் செய்துள்ளார். இவருக்குக் குழந்தைகள் இல்லை.

இவருடைய இரண்டாவது மனைவி Nkosazana Dlamini. இவர் மூலமாக ஜூமாவிற்கு நான்கு மகள்கள் உள்ளனர். இந்த மனைவியை கடந்த 1997-ம் ஆண்டிலேயே முறைப்படி டைவர்ஸ் செய்துவிட்டார் ஜூமா. இந்த மனைவி 1999ம் ஆண்டில் இருந்தே தென்னாப்பிரிக்கா அரசில் கேபினட் மினிஸ்டராக இருந்து வருகிறார். கடந்த அதிபரின் ஆட்சியின்போது வெளியுறவுத் துறை அமைச்சராகவும் இருந்திருக்கிறார்.

மூன்றாவது மனைவி Kate Zuma. அவர் தனது அருமைக் கணவரின் காதல் லீலைகளைப் பொறுக்கமாட்டாமல் 2000-வது ஆண்டு தற்கொலை செய்து கொண்டாராம். இவர் மூலமாகவும் ஜூமாவுக்கு ஐந்து குழந்தைகள்.

2008-ம் ஆண்டு, ஜனவரி மாதம் 8ம் தேதி Nompumelelo MaNtuli என்ற பெண்ணை நான்காவதாக திருமணம் முடித்துக் கொண்டார் ஜூமா. ஆனால் இவர்களது காதல் வாழ்க்கை இதற்கு முன்பே நடந்து கொண்டிருந்ததால் 2002-ம் ஆண்டு பிறந்த ஒரு மகளும், 2006-ம் ஆண்டு பிறந்த ஒரு மகனும் உள்ளனர். பிள்ளைகள் பிறந்த பின்புதான் ஊரார் பேச்சுக்காக திருமணம் செய்தாராம்.

ஐந்தாவதாக Thobeka Stacy Mabhija என்கிற பெண்ணிற்கு அவர்களுடைய ஜூலு வம்சத்தின் கலாச்சாரத்தின்படி வரதட்சணை என்றழைக்கப்படும் லபோலோவைக் கொடுத்து ‘முன்பதிவு' செய்துள்ளாராம். ஆனாலும் அதற்குள்ளாக இவர் மூலமாகவும் ஜூமாவுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். கடைசிக் குழந்தைக்கு மூன்று மாதங்கள்தான் ஆகிறது.

ஆறாவதாக Bongi Ngema என்கிற பெண்ணுக்கும் லபோலா கொடுத்த ‘புக்கிங்' செய்து வைத்துள்ளார் ஜூமா. இவர்களது திருமணம் அநேகமாக 2010-ல் நடக்கலாம் என்று தென்னாப்பிரிக்க பத்திரிகைகள் ஜோஸியம் சொல்லிக் கொண்டிருக்கின்றன. இவர் மூலமாகவும் ஜூமாவுக்கு ஏழு மாத ஆண் குழந்தை உண்டு.

இது இல்லாமல் 2002-ம் ஆண்டு சுவாசி நாட்டு இளவரசியான Sebentile Dlaminiக்கு 10 கோட்டை லபோலா கொடுத்து வைத்திருந்தாலும், ஜூமா அவரை இன்னமும் திருமணம் செய்யவில்லையாம். எதற்கோ காத்திருக்கிறார் போலிருக்கிறது..?

இது போன்ற முறைப்படியான திருமணங்கள் மூலமாக மட்டுமல்ல.. Minah Shongwe என்ற பெண்ணுடன் வாழ்ந்த வாழ்க்கையினால், எட்வர்ட் என்ற 30 வயதுள்ள ஒரு மகன் இருக்கிறார்.

இப்படி 4 திருமணங்கள், 2 காத்திருக்கும் திருமணங்கள், 1 காதல் வாழ்க்கை என்ற இவருடைய தனிப்பட்ட கேரியரின் மூலமாக இவருக்கு மொத்தம் 22 குழந்தைகளாம்.

67 வயதான ஜேக்கப் ஜூமா 2004-ம் ஆண்டு தென்னாப்பிரிக்காவின் துணை அதிபராக பதவி வகித்திருக்கிறார். அந்தக் காலக்கட்டத்தில் அவருடைய பைனான்ஸியல் அட்வைஸர் செய்த ஊழல் மற்றும் லஞ்சம் வாங்கிய குற்றங்களுக்காக துணை அதிபர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார். பின்பு இந்த ஊழல் வழக்குகளில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.

2005-ம் ஆண்டு 31 வயதான ஒரு பெண், ஜூமா தன்னை கற்பழித்ததாக புகார் கூறியது தென்னாப்பிரிக்காவை பரபரப்படையவைத்தது. பாதிக்கப்பட்ட அந்தப் பெண் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர். வழக்கு விசாரணையின்போது அந்தப் பெண்ணுடன் கட்டாய உடலுறவு கொண்டதை ஒப்புக் கொண்ட ஜூமா, ‘மேட்டர்' முடிந்தவுடன் உடனேயே தான் குளித்ததாகவும், அதனால் தனக்கு எய்ட்ஸ் நோய் தொற்றாது என்றும் தெம்பாகச் சொன்னார்.

அப்போது இதனை எதிர்த்து தொண்டு நிறுவனங்களும், மருத்துவர்களும், மருத்துவ அமைப்புகள் எதிர்க்குரல் கொடுத்தன. ‘இது ஆண்கள் உறை போடாமல் இருக்க ஆதரவு தருவது போல் உள்ளது..' என்று கண்டித்தனர். கோர்ட்டில் நீதிபதியும் கண்டித்தார். ஆனாலும், Minah Shongwe என்கிற தனது காதலி அளித்த சாட்சியத்தினால் இந்த வழக்கில் இருந்து ஜூமா பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளார்.

ஜூமாதான் அடுத்த அதிபர் என்பது உறுதியானவுடன் பத்திரிகைகள் “யார் நாட்டின் முதல் பெண்மணி..?” என்கிற கேள்வியை ஜூமாவிடம் கேட்டதற்கு “அது ஒரு பெரிய விஷயமே இல்லை.. பார்த்துக் கொள்வோம்..” என்று பட்டும் படாமல் பதில் சொல்லித் தட்டிக் கழித்து வந்தார்.


ஆனாலும் பத்திரிகைகள் படிக்காத முதல் மனைவியைவிட, கடைசியாகத் திருமணம் செய்து கொண்ட இருவரில் ஒருவரை அதிகாரப்பூர்வ மனைவியாக்கிக் கொண்டால் வெளிநாடுகளில் பெயரெடுக்க உதவும். ஆட்சி நிர்வாகத்தில் ஜேக்கப்பிற்கு அது நிச்சயம் பேருதவியாக இருக்கும் என்றெல்லாம் யோசனைகளையும், ஆரூடங்களையும் வழங்கியுள்ளனர்.

கடந்த மே 9-ம் ஜோகன்னஸ்பர்க்கில் நடந்த வண்ணமிகு விழாவில் தென்னாப்பிரிக்காவின் புதிய அதிபராக பதவியேற்றுக் கொண்டார் ஜேக்கப். அப்போது தனது முதல் மனைவி Sizakele Khumaloக்கு ‘அதிகாரப்பூர்வ நாட்டின் முதல் பெண்மணி' என்கிற அந்தஸ்தை கொடுத்து பிரச்சினைக்கு தற்போது முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.



ந்த விழாவிற்கு அவருடைய மற்ற இரண்டு மனைவிகளும், 22 பிள்ளைகளும் வந்திருக்கின்றனர். பிள்ளைகளின் குரூப் புகைப்படங்கள் கிடைக்காமல் பத்திரிகைகள் திண்டாட, கடைசி இரண்டு மனைவிகள் மட்டும் புகைப்படக்காரர்களுக்கு வஞ்சகமில்லாமல் தீனி போட்டுள்ளனர்.


ஜேக்கப்பின் ஜூலு வம்சத்தில் பல தார மணம் என்பது சாதாரணமானதுதான் என்கிறார்கள். நாடு, தலைவர், அதிபர் என்பதெல்லாம் இரண்டாம்பட்சமாகி தான் பிறந்த சமூகமே முக்கியம் என்கிறார்கள் தென்னாப்பிரிக்க ஜூலு வம்சத்தினர்.


இன்னமும் இந்த ஜூலுக்களிடையே பெருத்த செல்வாக்கு பெற்றவர் ஜேக்கப்தான். அதனால்தான் அவருடைய அரசியல் வாழ்க்கையையே அஸ்தமிக்க செய்வது போல் வந்த ஊழல் வழக்கு மற்றும் கற்பழிப்பு வழக்குகளையும் தாண்டி அவரால் அதிபர் நிலைமைக்கு வர முடிந்தது என்கிறார்கள்.

தன்னுடைய நான்காவது திருமணத்தன்று நான்காவது புது மனைவியுடன் ஜேக்கப் போட்ட ஆட்டம்தான் இது..!





வெற்றி அறிவிப்பு வெளியான பின்பு நான்காவது மனைவியின் வெற்றிப் புன்னகை


டைவர்ஸ் செய்த மனைவியும், ஒரு மகளும்..!






நான்காவது மனைவியும், முதல் மனைவியும்



அவனவன் ஒரு கல்யாணத்தை பண்ணிட்டே ராத்திரி வீட்டுக்குப் போறதா? இல்ல ஆபீஸ்லயே இருக்கிறதான்னு தவிச்சுக்கிட்டிருக்கான். இதுல பொழுது விடிஞ்சு பொழுது போனா வீட்டுக்காரம்மாக்களின் தொல்லைகள் என்கிற தலைப்பில் யாராவது ஒரு பதிவர் புலம்பித் தள்ளிக் கொண்டிருக்கிறார்.

ஆனால் நம்ம ஜேக்கப்பை பாருங்கள். மூச்சுவிட முடியாத சர்வதேச அரசியலில் செயலாற்றிக் கொண்டே ஒரு மனிதர் எவ்வளவு ஜாலியாக வாழ்க்கையை அனுபவித்திருக்கிறார். ம்.. இதுக்கெல்லாம் ஒரு கொடுப்பினை வேணும்..!

24 comments:

Unknown said...

//ம்.. இதுக்கெல்லாம் ஒரு கொடுப்பினை வேணும்..!//

தாங்கள் விட்ட பெரு மூச்சின் உஷ்ணம் இங்கு உணர முடிகிறது. பார்த்து, பத்திரம்

Jackiesekar said...

இக்கெல்லாம் ஒரு கொடுப்பினை வேனும்னு பெருமூச்சு விடாத..
அப்படி உனக்கு சான்ஸ் கெடச்சாலும் நீ செய்ய மாட்டே .ஏன்னா.. உன் மிடிள்கிளாஸ் மனசாட்சி உன்னை உறுத்தியே கொன்னுடும்...

அன்புடன்/ஜாக்கிசேகர்

குடுகுடுப்பை said...

அவனவன் ஒரு கல்யாணத்தை பண்ணிட்டே ராத்திரி வீட்டுக்குப் போறதா? இல்ல ஆபீஸ்லயே இருக்கிறதான்னு தவிச்சுக்கிட்டிருக்கான்

//

ஒருவேலை 4 5 இருந்தா சமாளிக்கலாம் போல.

நையாண்டி நைனா said...

அங்கே போய் பொறந்திருக்கலாம்னு தோணுதோ?

அஹோரி said...

கருணாநிதிக்கு சவால் . இந்த சாதனையை கருணாநிதி முறியடிக்க வேண்டும்.

Jackiesekar said...

பல்லு இருக்கறவன் பட்டானியும் பகோடாவும், சாப்பிடறான்

தீப்பெட்டி said...

//பல்லு இருக்கறவன் பட்டானியும் பகோடாவும், சாப்பிடறான்//

அதுக்காக பாறாங்கல்லவா சாப்பிடுவாங்க..
அதுசரி நமக்கு விதிச்சது பன்னும் பாயவும்தான்..
அதுவே செரிக்க மட்டுது..

(ஒரு பாதாம் அல்வா கிடைக்ககூடாதா.. பல்லில்லாம சாப்பிட)

உண்மைத்தமிழன் said...

[[[ananth said...

//ம்.. இதுக்கெல்லாம் ஒரு கொடுப்பினை வேணும்..!//

தாங்கள் விட்ட பெரு மூச்சின் உஷ்ணம் இங்கு உணர முடிகிறது. பார்த்து, பத்திரம்]]]

அவ்ளோ தூரம் வரைக்குமா வருது..?!!!

உண்மைத்தமிழன் said...

[[[jackiesekar said...

இக்கெல்லாம் ஒரு கொடுப்பினை வேனும்னு பெருமூச்சு விடாத..
அப்படி உனக்கு சான்ஸ் கெடச்சாலும் நீ செய்ய மாட்டே. ஏன்னா.. உன் மிடிள் கிளாஸ் மனசாட்சி உன்னை உறுத்தியே கொன்னுடும்...
அன்புடன்/ஜாக்கிசேகர்]]]

பல தார மணத்தை மிடில் கிளாஸ் பேமிலி அனுமதிக்காது என்கிறீர்களா ஜாக்கி..?

தவறான வாதமாச்சே..!

உண்மைத்தமிழன் said...

[[[குடுகுடுப்பை said...

அவனவன் ஒரு கல்யாணத்தை பண்ணிட்டே ராத்திரி வீட்டுக்குப் போறதா? இல்ல ஆபீஸ்லயே இருக்கிறதான்னு தவிச்சுக்கிட்டிருக்கான்//

ஒருவேலை 4 5 இருந்தா சமாளிக்கலாம் போல.]]]

4,5 இருந்தாலும்.. துட்டு உள்ள பார்ட்டியா இருந்தா எதுன்னாலும் சமாளிச்சுக்கலாம் குடுகுடுப்பை..!

உண்மைத்தமிழன் said...

[[[நையாண்டி நைனா said...
அங்கே போய் பொறந்திருக்கலாம்னு தோணுதோ?]]]

ஆமா நைனா..

நான் ஏன் இங்கன பொறந்து தொலைச்சேன்..?!!!!

உண்மைத்தமிழன் said...

[[[அஹோரி said...
கருணாநிதிக்கு சவால். இந்த சாதனையை கருணாநிதி முறியடிக்க வேண்டும்.]]]

இனிமேலா..?

அஹோரி உங்களுக்கே இது அடுக்குமா..?

பாவமில்ல.. அந்த பொம்பளைங்க..!

உண்மைத்தமிழன் said...

[[[jackiesekar said...
பல்லு இருக்கறவன் பட்டானியும் பகோடாவும், சாப்பிடறான்]]]

உனக்கெதுக்குடா பொறாமைங்குறீங்க. இல்லியா ஜாக்கி..!

சரிதான்..!

உண்மைத்தமிழன் said...

[[[தீப்பெட்டி said...

//பல்லு இருக்கறவன் பட்டானியும் பகோடாவும், சாப்பிடறான்//

அதுக்காக பாறாங்கல்லவா சாப்பிடுவாங்க.. அது சரி நமக்கு விதிச்சது பன்னும் பாயவும்தான்..
அதுவே செரிக்க மட்டுது..
(ஒரு பாதாம் அல்வா கிடைக்ககூடாதா.. பல்லில்லாம சாப்பிட)]]]

கிடைக்கும்.. தேடணும்.. அலையணும்.. கிடைச்ச பின்னாடியும் சட்டையைக் கிழிச்சுக்கிட்டு தெருத்தெருவா சுத்தணும்..

முடியுமா தீப்பெட்டி ஸார்..!

Hariharan # 03985177737685368452 said...

பல தார மணம் தவறு எனும் நம்ம ஊர்ல மனைவி, துணைவி, நொணைவின்னு ஊருக்கு ஒண்ணுன்னு தமிழகத்தை பிரிச்சு மேய்ஞ்சு பத்தாம ஈழத்தையும் ஈஸியா வாங்கித்தர்ற வாக்குறுதி வழியா கபளீகரம் செய்ய முனையும் தமிழீனத்தலைவர் போடும் கூழைக்கும்பிடு பகுத்தறிவு தமிழீனத்தலைமையின் ஆட்டத்துக்கு முன்னால் ஜூஜூபி ஜூலு ஜேக்கப் ஆடும் ஆட்டம் பிக்கப் ஆகுமா?

ஷண்முகப்ரியன் said...

லோக்கலில் இருந்து ஒரே தாவாகத் தென்னாஃப்ரிக்காவுக்கே போய் விட்டீர்களே,சரவணன்!
கல்யாண விஷ்யம் என்றதும் உங்கள் பார்வை எவ்வளவு விசாலமாகிறது பார்த்தீர்களா?
நம் இயக்குநர்களின் குத்துப் பாட்டுக்களுக்கு ஜேக்கப்பின் ஆடை,அணிகலன்களைப் பரிந்துரைக்கிறேன்!

உண்மைத்தமிழன் said...

[[[Hariharan # 03985177737685368452 said...

பல தார மணம் தவறு எனும் நம்ம ஊர்ல மனைவி, துணைவி, நொணைவின்னு ஊருக்கு ஒண்ணுன்னு தமிழகத்தை பிரிச்சு மேய்ஞ்சு பத்தாம, ஈழத்தையும் ஈஸியா வாங்கித் தர்ற வாக்குறுதி வழியா கபளீகரம் செய்ய முனையும் தமிழீனத் தலைவர் போடும் கூழைக்கும்பிடு பகுத்தறிவு தமிழீனத் தலைமையின் ஆட்டத்துக்கு முன்னால்... ஜூஜூபி ஜூலு ஜேக்கப் ஆடும் ஆட்டம் பிக்கப் ஆகுமா?]]]

ஒரே பிரச்சினை.. அங்க அது தப்புன்னு யாரும் சொல்லலை.. அதுனால செய்றாங்க..

இங்க வெளில தப்புன்னு சொல்லிட்டு உள்ளுக்குள்ள செஞ்சுக்குறாங்க..

அவ்ளோதான்..

மாற வேண்டியது சட்டமும், மனிதர்களும்தான்..

அதற்காக ஜேக்கப் ஜூமா செய்வது அவர்களுடைய கலாச்சாரத்தின்படி சரி என்ற வாதத்தை பொதுவாக நாம் ஏற்றுக் கொள்ள முடியாது..

உண்மைத்தமிழன் said...

[[[ஷண்முகப்ரியன் said...
லோக்கலில் இருந்து ஒரே தாவாகத் தென்னாஃப்ரிக்காவுக்கே போய் விட்டீர்களே, சரவணன்!
கல்யாண விஷ்யம் என்றதும் உங்கள் பார்வை எவ்வளவு விசாலமாகிறது பார்த்தீர்களா? நம் இயக்குநர்களின் குத்துப் பாட்டுக்களுக்கு ஜேக்கப்பின் ஆடை, அணிகலன்களைப் பரிந்துரைக்கிறேன்!]]]

நம்ம கேபிளார் இதனை காப்பி பண்ணுவார் என்று நானும் எதிர்பார்க்கிறேன்..!

benza said...

ஜாகோப் சூமா ஒரு தமாஸ் பேர்வழி -
அரசியல் கூட்டங்களில் மேடைகளில்
அவரது ''sudden'' பாட்டுகளும் தனி
ஆட்டங்களும் பிரபல்யமானவை ---
கடைசியாக நடந்தேறிய பதவி
பிரமாணத்தின் போது என்ன கூத்தை
கட்டவிழ்த்து விடப்போறார் என்று பலர்
ஆர்வத்துடனும் பொறுப்புணர்ச்சி உள்ள
சிலர் பயத்துடனும் காதிருந்தானர் -

வெளி நாட்டு பிரதிநிதிகள் சமூகம்
தந்திருந்த கூட்டத்தில் சூமா தனது
கோமாளித்தனத்தை காட்டவில்லை ---

பொறுப்புணர்ச்சி உள்ளவர் என்று
காட்டிவிட்டாராம் !

உண்மைத்தமிழன் said...

///bena said...

ஜாகோப் சூமா ஒரு தமாஸ் பேர்வழி -
அரசியல் கூட்டங்களில் மேடைகளில்
அவரது ''sudden'' பாட்டுகளும் தனி
ஆட்டங்களும் பிரபல்யமானவை ---
கடைசியாக நடந்தேறிய பதவி
பிரமாணத்தின் போது என்ன கூத்தை
கட்டவிழ்த்து விடப்போறார் என்று பலர் ஆர்வத்துடனும் பொறுப்புணர்ச்சி உள்ள சிலர் பயத்துடனும் காதிருந்தானர் -
வெளி நாட்டு பிரதிநிதிகள் சமூகம்
தந்திருந்த கூட்டத்தில் சூமா தனது
கோமாளித்தனத்தை காட்டவில்லை --
பொறுப்புணர்ச்சி உள்ளவர் என்று
காட்டிவிட்டாராம் !///

பரவாயில்லை..

இப்போதாவது அந்தப் பொறுப்புணர்வு வந்துச்சேன்னு சந்தோஷப்பட வேண்டியதுதான்..!

மங்களூர் சிவா said...

/
குடுகுடுப்பை said...

அவனவன் ஒரு கல்யாணத்தை பண்ணிட்டே ராத்திரி வீட்டுக்குப் போறதா? இல்ல ஆபீஸ்லயே இருக்கிறதான்னு தவிச்சுக்கிட்டிருக்கான்

//

ஒருவேலை 4 5 இருந்தா சமாளிக்கலாம் போல.
/

haa haa
ROTFL
:)))))))))

உண்மைத்தமிழன் said...

[[[மங்களூர் சிவா said...

/குடுகுடுப்பை said...
அவனவன் ஒரு கல்யாணத்தை பண்ணிட்டே ராத்திரி வீட்டுக்குப் போறதா? இல்ல ஆபீஸ்லயே இருக்கிறதான்னு தவிச்சுக்கிட்டிருக்கான்

//ஒருவேலை 4 5 இருந்தா சமாளிக்கலாம் போல./
haa haa
ROTFL
:)))))))))]]]

எப்படி சமாளிக்கிறது..?

ஓஹோ.. அப்படி வேற ஒரு நினைப்பு இருக்கா உனக்கு..?

செத்து சுண்ணாம்பா ஆகப் போறடா ராசா..!

ஜோசப் பால்ராஜ் said...

அந்தகாலத்துல மன்னர்களுக்கு எல்லாம் பல மனைவிகள் இருந்த மாதிரி, இவருக்கும் இருக்கு. பட்டத்து ராணி பிரச்சனைய ஒருவழியா முடிச்சுட்டாரு.

அவரு மனைவிங்க, புள்ளைங்க எல்லாரு பெயரையும் எழுதுனா அந்த லிஸ்டே உங்க பதிவ விட பெரிசா இருக்கும் போல இருக்கேண்ணே?

உண்மைத்தமிழன் said...

[[[ஜோசப் பால்ராஜ் said...
அந்த காலத்துல மன்னர்களுக்கு எல்லாம் பல மனைவிகள் இருந்த மாதிரி, இவருக்கும் இருக்கு. பட்டத்து ராணி பிரச்சனைய ஒரு வழியா முடிச்சுட்டாரு.]]]

அப்ப அந்த நாட்டு மக்களோட மனநிலையை நினைச்சுப் பாருங்க.. காமெடியா இல்லை..

[[[அவரு மனைவிங்க, புள்ளைங்க எல்லாரு பெயரையும் எழுதுனா அந்த லிஸ்டே உங்க பதிவவிட பெரிசா இருக்கும் போல இருக்கேண்ணே?]]]

ஒவ்வொருத்தருக்கும் மூணு வார்த்தைல பேர் இருக்கு.. எப்படியும் என் பதிவோட நீளம் வரும்னு நினைக்கிறேன்..!