ஒன்றும் புரியவில்லை; தயவு செய்து யாராவது விளக்கவும்

11-03-2008

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

பல நேரங்களில் நாம் எதிர்பார்க்காத ஒன்று திடீரென்று நமக்குக் கையில் கிடைத்து நம்மை இன்ப அதிர்ச்சிக்குள்ளாக்கும்.

சில நேரங்களில் நாம் எதிர்பார்க்காத ஒன்று நடந்து நம்மை துக்க அதிர்ச்சிக்குள்ளாக்கும்.

வெற்றியா, தோல்வியா.. இன்பமா.. அதிர்ச்சியா.. என்றே சொல்ல முடியாத ஒருவகையான நிகழ்வுகள் எப்போதாவது ஒரு முறை யாருக்கேனும் கிடைத்திருக்கலாம்.

எனக்கு சமீபத்தில் கிடைத்தது.

வழக்கம்போல ICAF திரைப்பட விழாவின் Contemporary Film Festival-க்கு சென்றிருந்தேன்.

அங்கே, சமீபத்தில் ஆஸ்கர் விருது பெற்ற 'No country for old men' திரைப்படத்தைத்தான் இன்றைக்குத் திரையிடப் போகிறோம் என்று சொல்லி என்ன இனிய அதிர்ச்சிக்குள்ளாக்கினார்கள்.
இந்த இனிய அதிர்ச்சிக்குக் காரணம், 2007ம் ஆண்டுக்கான ஆஸ்கர் அவார்டுகளில் இப்படம் 4 பிரிவுகளில் விருதைத் தட்டிச் சென்றுள்ளதுதான்.

சிறந்த படம், சிறந்த சப்போர்ட்டிங் ஆக்டர், சிறந்த இயக்கம், சிறந்த திரைப்படத்திற்கான திரைக்கதை(Adapted Screenplay) என்ற நான்கு பிரிவுகளில் விருதை வாரிச் சுருட்டியிருக்கிறது இத்திரைப்படம்.

ஆனால் இந்த இனிய அதிர்ச்சி, துக்கம் கலந்த இனிய அதிர்ச்சியாகி என்ன எழுதுவது என்றே தெரியாத ஒரு சூழலுக்குக் கொண்டு போய்விடும் என்று நான் கனவிலும் நினைக்கவில்லை.

படம் இந்தியாவிற்கு இன்னமும் வரவில்லை என்றே நினைக்கிறேன். அதற்குள்ளாக படம் பார்க்கும் வாய்ப்பு நமக்குக் கிடைத்திருக்கிறதே என்ற அல்ப சந்தோஷத்துடன் அமர்ந்தேன்.

படம் 1980-ம் வருடத்தில், மேற்கு டெக்ஸாஸ் மாநிலத்தில் மெக்சிகோ நாட்டு எல்லைப்புறத்தில் நடைபெறுவதாக அமைந்துள்ளது.

சிகுர்த்(Chigurth) என்ற மனிதனை ஒரு கேஸ் சிலிண்டருடன், துணை ஷெரீப் கைது செய்து போலீஸ் ஸ்டேஷனுக்கு கொண்டு செல்வதோடு திரைப்படம் துவங்குகிறது.

அங்கே துணை ஷெரீப், யாரிடமோ டெலிபோனில் தன்னால் கைது செய்யப்பட்ட சிகுர்த் பற்றிச் சொல்லிக் கொண்டிருக்கும்போதே, சிகுர்த் அவன் பின்னால் வந்து விலங்கிடப்பட்ட தனது கைகளால் துணை ஷெரீப்பின் கழுத்தை நெறித்துக் கொலை செய்கிறான்.

தொடர்ந்து சாவகாசமாக கைவிலங்குகளை உடைத்துவிட்டு போலீஸ் காரிலேயே அங்கிருந்து கிளம்புவன் வழியில் ஒருவனின் காரை மறித்து அவனை தன் கையில் வைத்திருந்த துப்பாக்கி டிஸைன் செய்யப்பட்ட கேஸ் சிலிண்டரின் மூலம் அவனைக் கொலை செய்துவிட்டு அவனது காரில் ஏறிச் செல்கிறான்.

லீவ்லின் மோஸ் என்பவன் நாடோடியைப் போல் மொட்டை வெளியில் மேய்ச்சலுக்கு வந்திருக்கும் மான்களை வேட்டையாடுகிறான். அப்படி அவன் வேட்டையாடும்போது குண்டு காயத்துடன் தப்பியோடிய மானைத் தேடி அந்த பாலைவனம் போன்ற பகுதியில் வரும்போது மற்றொரு இடத்தில் கார்களும், ஜீப்களும் நிற்பதைப் பார்த்து அங்கே வருகிறான்.

இறந்து போய் ஒரு நாளாவது இருக்கும் என்ற நிலைமையோடு ஒரு வேட்டை நாய் செத்துக் கிடக்க... தொடர்ந்து சில ஆண்கள் துப்பாக்கிகளோடு இறந்து போய் கிடக்கிறார்கள். அங்கே ஒரு துப்பாக்கிச் சண்டை நடந்திருப்பது கண்கூடாகத் தெரிகிறது.

மோஸ் ஒரு ஜீப்பின் கதவைத் திறந்து பார்க்க, அதில் வயிற்றில் குண்டு பாய்ந்த நிலையில் ஒருவன் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கிறான். “தண்ணீர் வேண்டும்..” என்கிறான். மோஸோ கண்டுகொள்ளாமல் அவனிடமிருந்த துப்பாக்கிகளை பிடுங்கிக் கொண்டு ஜீப்பின் பின்னால் வந்து பெட்ஷீட்டை விலக்கிப் பார்க்க பார்சல், பார்சலாக போதைப் பொருள் இருக்கிறது.

அங்கிருந்து தூரத்தில் பார்க்க அங்கே ஒரு மரத்தடியில் ஒருவன் இறந்து கிடப்பதைப் பார்க்கிறான் மோஸ். அவனிடம் வந்து துழாவுகிறான் மோஸ். ஒரு பெட்டி நிறைய டாலர் நோட்டுக்கள்.. சாதாரண மனிதனொருவன் என்ன செய்வானோ அதையே செய்கிறான் மோஸ். பெட்டியைத் தூக்கிக் கொண்டு வீட்டிற்கு வருகிறான்.

இரவில் தூக்கம் வராமல் படுத்திருக்கும் மோஸிற்கு ‘தண்ணீர்’.. ‘தண்ணீர்’ என்று கேட்டவனின் குரல் மீண்டும், மீண்டும் ஒலிக்க தூக்கம் வராமல் போகிறது. சட்டென்று ஒரு கேன் நிறைய தண்ணீர் பிடித்துக் கொண்டு நள்ளிரவில் அந்தப் பாலைவனம் நோக்கிச் செல்கிறான் மோஸ்.

நடு இரவில் மேப் வைத்து ஆராய்ந்து அந்த இடத்திற்கு வருகிறான் மோஸ். தண்ணீர் கேட்டவனை பார்க்க.. அவன் இறந்து போய் கிடக்கிறான்.

அதே நேரம் அவனது கார் நின்றிருக்கும் இடத்தில் இன்னொரு ஜீப் வந்து நிற்க.. தொலைந்தால் மாட்டினோம் என்றெண்ணி தப்பியோட பார்க்கிறான்.

லைட் பொருத்துவதற்கு இதற்குமேல் இடமே இல்லை என்ற கணக்கில் அவ்வளவு லைட்களைப் பொருத்தி வைத்திருக்கும் ஜீப் அவனைத் துரத்துகிறது.. ஓடுகிறான்.. ஜீப் துரத்துகிறது. ஓடுகிறான்.. துரத்துகிறது ஜீப். அவர்களுடைய துப்பாக்கிச் சூட்டில் அவனது உடம்பில் காயம் ஏற்படுகிறது.

வழியில் ஓடும் ஆற்றில் குதித்துத் தப்புகிறான் மோஸ். ஆனால் வந்தவர்களின் வேட்டை நாய், தனக்கு சலசலக்கும் தண்ணீர் ஒரு பொருட்டல்ல என்று கூறி அவனைப் பிடிக்க பின் தொடர்கிறது. மறுகரையில் ஏறியவுடன் பாய்ந்து வரும் நாயை தனது துப்பாக்கியால் சுட்டுக் கொல்கிறான் மோஸ்.

இங்கே ஜீப்பில் வந்த மூன்று பேரில் சிகுர்த்தும் ஒருவனாக இருக்கிறான். ரிமோட் போன்ற ஒன்றைத் தேடி எடுத்தவுடன் அவர்களது தயவு இனி தேவையில்லை என்பதைப் போல் அவர்கள் இருவரையும் சுட்டுக் கொல்கிறான் சிகுர்த்.

இங்கே தப்பியோடிய மோஸ் வீட்டிற்கு வந்து தனது மனைவிைய தனது அம்மாவிடம் வலுக்கட்டாயமாக அனுப்பி வைக்கிறான். அங்கே அவனது அம்மாவிற்கு உடல் நலமில்லாமல் இருப்பதாக மனைவி சொல்லியும், தான் வரவில்லை. விரைவில் வருகிறேன் என்று சொல்லி அனுப்பி வைக்கிறான்.

கரன்ஸிகள் அடங்கிய பெட்டியுடன், தான் மட்டும் தனியே பிரிந்து செல்கிறான்.

மோஸின் கார் தனியே ஓரிடத்தில் எரிந்து கொண்டிருக்கிறது. அந்த ஊரின் ஷெரீப் வந்து பார்க்கிறார். எப்படியும் பெரிய அளவுக்குப் பிரச்சினை இருக்கும் என்று நினைத்தாரோ என்னவோ பாலைவனத்துக்குள் போவதற்கு ஏதுவாக கையோடு குதிரைகளையும் அழைத்து வருகிறார்.

குதிரை ஏறி பாலைவனத்துக்குள் செல்ல.. அங்கே இறந்து போனவர்களைக் காண்கிறார் ஷெரீப். அந்த திறந்த ஜீப்பில் பின்புறம் இருந்த போதைப்பொருள்கள் இப்போது காணவில்லை. ஆனாலும் தனது சர்வீஸினால் கிடைத்த அனுபவத்தால் இது இரண்டு போதைக் கடத்தல் கும்பல்களுக்குள் ஏற்பட்ட சண்டை என்பதை உணர்ந்து கொள்கிறார் ஷெரீப்.

சிகுர்த் மோஸின் வீட்டைக் கண்டுபிடித்து அங்கே வருகிறான். வழக்கம்போல் அதே கேஸ் சிலிண்டரை பயன்படுத்தி வீட்டுக் கதவை உடைத்து உள்ளே வந்து தேடுகிறான். அங்கே யாருமில்லாது இருக்க.. பிரிட்ஜ் கதவைத் திறந்து பாலை எடுத்துக் குடித்துவிட்டுச் செல்கிறான்.

அந்த ஊரே சின்னதுதான் என்பதால் அந்த கார் யாருடையது என்பதைக் கண்டுபிடிக்க ஷெரீப்புக்கும் நெடுநேரம் ஆகவில்லை. மோஸின் வீட்டிற்குத் தொடர்ந்து அவரும் வருகிறார். அப்போதுதான் சிகுர்த் அங்கிருந்து சென்றிருந்ததால், அவன் குடித்து பாதி வைத்திருந்த பாலை அவரும் குடித்துவிட்டு 'தேடுவோம்' என்று சொல்லிவிட்டுச் செல்கிறார்.

தான் வாழ்நாள் முழுவதும் உழைத்தால்கூட கிடைக்காத தொகை தற்போது தன் கையில் கிடைத்துள்ளதால் அதனை தக்க வைத்துக் கொள்ள மோஸ் முடிவெடுக்கிறான்.

மோஸ், மெக்சிகோ பார்டரில் இருக்கும் 'ரீகல் மோட்டல்' என்ற தங்கும் விடுதியில் ரூம் எடுக்கிறான். அந்த மோட்டலின் எல்லா அறைகளுக்கும் தொடர்பாக இருக்கும் ஒரு தனியிடத்தில் கரன்ஸி இருக்கும் பெட்டியை மறைத்து வைக்கிறான் மோஸ்.

கூடவே தனக்கு அந்த அறை பிடிக்கவில்லை. வேறு ஒரு அறை கொடுங்கள் என்று கேட்டு அந்த கரன்ஸி பேக்கை எடுக்கக்கூடிய அளவுக்கு வசதியுள்ள வேறு ஒரு அறையைக் கேட்டுப் பெறுகிறான் மோஸ்.

அப்பெட்டியினுள் இருக்கும் ஒரு சங்கேத கருவியைக் கண்டு பிடிக்கும் ரிமோட் இப்போது சிகுர்த்தின் கையில் உள்ளது. அவன் மோஸைத் தேடி வருகையில் அந்த ரிமோட் அவனுக்கு உடன்பிறப்பாக உதவி செய்கிறது.

அக்கருவியின் உதவியால் கரன்ஸி நோட்டுக்கள் அங்கேதான் இருக்கின்றன என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளும் சிகுர்த் தானும் அங்கேயே அறை எடுக்கிறான்.

புதியவகைத் துப்பாக்கிகளை வாங்கிய மோஸ் அதனைப் பயன்படுத்தி தனது புதிய அறையின் வழியாக அந்தப் பையை எடுக்க முயலும்போது, சிகுர்த் மோஸின் பக்கத்து அறைக்குள் வந்து அங்குதான் பெட்டி இருப்பதாக நினைத்து அங்கே இருப்பவர்களை தயவு தாட்சண்யமே இல்லாமல் சுடுகிறான். இந்த துப்பாக்கிச் சூட்டில் இரண்டு பேர் மரித்துப் போக.. ஒருவர் மட்டும் காயத்துடன் தப்பிக்கிறார்.

பக்கத்து அறையில் நடந்த துப்பாக்கிச் சூட்டைக் கேட்டவுடனேயே விதி மீட்டர் தொலைவில்தான் இருக்கிறது என்பதைப் புரிந்து கொண்ட மோஸ் அவசரம், அவசரமாக கரன்ஸி இருக்கும் பேக்கைக் கைப்பற்றிக் கொண்டு தப்பிக்கிறான்.

இரவு நேரம். கையில் கரன்சியோடு ரோட்டில் காத்திருப்பது தற்கொலைக்குச் சமம் என்பதாக நினைத்து வேறொரு ஹோட்டலுக்கு வருகிறான் மோஸ். அங்கேதான் அவனுக்குள் ஒரு சந்தேகம் வருகிறது. எப்படி காலன் நம்மைத் துரத்துகிறான் என்று..

உடனே கரன்ஸி வைத்திருந்த பேக்கைத் துழாவ அவன் கைக்கு அந்த சிக்னல் பாக்ஸ் கிடைக்கிறது. அதை எடுத்து டேபிளில் வைத்துவிட்டு காலனை வரவேற்பதற்காக துப்பாக்கியுடன் தயாராக இருக்க..

காலனான சிகுர்த் அங்கும் படையெடுத்து வந்து வழக்கம்போல் சிலிண்டரின் உதவியால் கதவு லாக்கரை உடைக்க.. அது மோஸின் வயிற்றைப் பதம் பார்க்கிறது.

மோஸ் தன் துப்பாக்கியால் கதவை நோக்கிச் சுட்டுவிட்டு பேக்கைத் தூக்கிக் கொண்டு பின்புற ஜன்னல் வழியாகக் கீழிறங்கி தப்பித்து ஓட.. சிகுர்த் அவனைத் துப்பாக்கியால் சுட்டுத் துரத்துகிறான்.

வயிற்றில் அடிபட்டு ரத்தம் வடிய.. வடிய.. மறைவிடம் தேடி ஓடுகிறான் மோஸ். வழியில் வரும் ஒரு காரை தடுத்து நிறுத்தி அதில் ஏறி எவ்வளவு பணம்னாலும் தரேன்.. ஓட்டு என்கிறான். ஆனால் சிகுர்த்தின் குறிதவறாத குண்டுவீச்சில் கார் டிரைவர் பொட்டென்று உயிரைவிட.. அடுத்த நொடி அந்தக் காரை பதம் பார்க்கிறது சிகுர்த்தின் துப்பாக்கிக் குண்டுகள்.

எப்படியோ சாய்ந்து படுத்துக் கொண்டு காரை ஓட்டும் மோஸினால் ஓரளவுக்கு மேல் முடியவில்லை. வழியில் அனாமத்தாக நிற்கும் ஒரு காரின் மீது மோதி படுத்து விடுகிறது கார். கையில் இணைப் பிரியாத் தோழனாக இருக்கும் கரன்ஸி பேக்கோடு தரையில் உருண்டு, புரண்டு தப்பிக்கிறான் மோஸ்.

சிகுர்த் அவனைத் தேடி வர.. கணப்பொழுதில் இருவருடைய துப்பாக்கிகளும் ஒரே நேரத்தில் வெடிக்கின்றன.. இதில் தொடையில் குண்டு பாய்ந்து சிகுர்த் பதுங்கிவிட.. வயிற்றில் அடிபட்டு தாங்க முடியாத வலியுடன் தப்பிக்கிறான் மோஸ்.

இந்தத் தோற்றத்தில் சென்றால் எல்லைப் பகுதியைத் தாண்ட முடியாது என்பதால் எதிரில் வரும் ஒரு இளைஞனிடம் 500 டாலருக்கு அவனுடைய Coat-ஐ வாங்கி அணிந்து கொண்டு பாலத்தின் கீழிருக்கும் புதருக்குள் கரன்ஸி பேக்கை வீசிவிட்டு குடிகாரனைப் போல் அப்போதைக்கு மெக்சிகோவுக்குள் நுழைகிறான்.

விடிகிறது. தொடையில் பாய்ந்திருக்கும் குண்டு வலிக்கிறதோ இல்லையோ.. எதைச் செய்தாவது வைத்தியம் பார்த்தே தீர வேண்டும் என்ற கட்டாயம் சிகுர்த்திற்கு..

ஒரு பார்மஸியின் வாசலில் நிற்கும் காரின் பெட்ரோல் டேங்கிற்கு தீ வைத்து காரை வெடிக்கச் செய்து அந்தக் கவனஈர்ப்பில் தனக்குத் தேவையான மருந்துகளையும், ஊசிகளையும் அள்ளிக் கொண்டு செல்கிறான் சிகுர்த்.

முன்பு மோஸ் தங்கியிருந்த அதே அறைக்கு வரும் சிகுர்த் தனக்குத்தானே மருத்துவம் செய்து கொள்கிறான். குண்டை எடுத்துவிட்டு கட்டுப் போட்டுவிட்டு நடக்கிறான்.

இதற்குப் பின்னர்தான்.. என்ன நடக்கிறது? யார் இவர்கள்? என்பதெல்லாம் அரைகுறை ஆங்கிலத்தில் சப்-டைட்டிலாக காட்டப்பட குழப்பத்தின் உச்சிக்கே போய்விட்டோம் படம் பார்த்த ரசிகர்களாகிய நாங்கள்.

திடீர், திடீரென்று டைட்டிலில் புதிய புதிய வசனங்கள் காட்டப்பட்டு அந்த வசனத்திற்கு சம்பந்தமே இல்லாமல் காட்சிகளும் ஓடிக் கொண்டிருக்க தலையைப் பிய்த்துக் கொள்ள வேண்டியதாயிற்று.

இது யார் பேசிய வசனம் என்று யாராலும் கண்டுபிடிக்க முடியாத அளவுக்குப் போய்விட்டது சப்-டைட்டில்.

மேலும் ஷெரீப் மோஸின் மனைவியை அழைத்துப் பேசும் போது சப்-டைட்டில் சுத்தமாக ஆ·பாகிவிட நான் சுத்தமாக டாஸ்மாக் சரக்கடித்த நிலைக்குப் போய்விட்டேன்..

திடீரென்று மோஸ் மோட்டல் ஒன்றிற்கு வர அங்கே நீச்சல் குளத்தில் ஒய்யாரமாக சாய்ந்திருந்த ஒரு பெண்ணிடம் ஏதோ பேசினான். தொடர்ந்து ஷெரீப் அங்கே காரில் வரும்போது கும்பல் ஒன்று வெற்றி பெற்றதைப் போல் ஆரவாரம் செய்து கொண்டு போவதைப் பார்த்து என்னவோ, ஏதோ என்று நினைத்து அங்கே ஓட..

நீச்சல் குளத்தில் அந்தப் பெண் ரத்தச்கதியில் மூழ்கியிருக்க.. தொடர்ந்து மோட்டலின் வெளிப்புறத்தில் ஒரு சடலமும், அறையினுள் ஒரு சடலமும் கிடக்கிறது.

இது ஒருவேளை மோஸின் தாயாக இருக்கலாமோ என்ற சந்தேகம் மட்டுமே எனக்கு இருக்கிறது.

ஏனெனில் அடுத்தக் காட்சியில் மோஸின் மனைவி காரில் வந்திறங்க.. ஷெரீப்பின் மெளனமான தலையாட்டலை பார்த்து அழுகையைத் துவக்க.. அடுத்த காட்சியில் கல்லறையில் புதிதாக ஒரு இடம் அமைக்கப்பட்டு மனைவி கருப்பு டிரெஸ்ஸில் இருப்பதைப் பார்க்கும்போது அதுதான் நடந்திருக்கும் என்று நினைக்கிறேன்.

அடுத்த இரவு நேர காட்சியில் ஷெரீப் அந்த மோட்டலுக்கு வருகிறார்.

போலீஸ் மஞ்சள் ரிப்பன் போட்டு தடுத்திருக்கும் அந்த மோட்டலின் அறைக் கதவு வழக்கம்போல சிலிண்டரால் தாக்கப்பட்டு உடைக்கப்பட்ட நிலையில் இருப்பதைப் பார்க்கிறார் ஷெரீப். கதவைத் திறந்து உள்ளே வருகிறார். உள்ளே இருக்கும் சிகுர்த் யாரோ வருகிறார்கள் என்றவுடன் வேறு ஒரு வழியில் தப்பிச் செல்கிறான்.

மோஸின் மனைவி தன் வீட்டிற்குச் சாதாரணமாக வந்து அமர்ந்தவளின் பார்வை வீட்டின் உள் அறைக்குச் செல்கிறது. அங்கே சிகுர்த் கனஜோராக அமர்ந்திருக்கிறான். அங்கே அவர்களுக்குள் வெளிப்படும் வசனங்கள் புரியாத புதிராகவே என்னைப் போன்ற சாமான்யர்களுக்குப் பட்டது.

‘வெளியேறுகிறேன்’ என்று சொல்லி வெளியில் வந்து காரில் ஏறிச் செல்கிறான் சிகுர்த். செல்கின்ற வழியில் சில விடலைப் பசங்கள் சைக்கிளில் வலம் வந்து கொண்டிருக்கிறார்கள். அக்காட்சியைப் பார்த்தபடியே செல்லும் சிகுர்த் திடீரென்று வேறு ஒரு காரோடு மோதி காயம்படுகிறான்.

இடது கை உடைந்து தொங்கிய நிலையில் ரத்தம் வடிய காரிலிருந்து இறங்குகிறான் சிகுர்த். அந்த சைக்கிள் ஓட்டி வரும் பையன்களிடம் பணத்தைக் கொடுத்து அவனுடைய டீஷர்ட்டை வாங்கி கழுத்தில் ஒரு தொட்டிலைப் போல் கட்டிக் கொண்டு தனது இடது கையைத் தூக்கி அதில் வைக்க..

போலீஸ் சைரன் தூரத்தில்.. அருகில்.. மிக அருகில்.. என்று கேட்க ஆரம்பிக்க..

சிகுர்த் ஒரு காலை நொண்டியபடியே, தெருவில் சாதாரணமாக நடக்கத் துவங்குகிறான்.

அவ்வளவுதான்.. படம் கருமையாகி மங்களம் போட்டுவிட்டார்கள்.

ஒன்றும் புரியவில்லை மக்களே..

அந்த மோஸ் என்ன ஆனான்? கரன்ஸி என்ன ஆனது..? இவனால் ஏன் கைப்பற்றப்பட முடியவில்லை என்பதையெல்லாம் என்னைப் போன்ற சாமான்யர்களால் புரிந்து கொள்ள முடியாத அளவுக்கு நுணுக்கமான வசனத்தால் நிரப்பியிருக்கிறார்கள் என்று நினைக்கிறேன்.

இந்த அமைப்பு திரையிடும் திரைப்படங்களை கடந்த 6 வருடங்களாக நான் தொடர்ந்து பார்த்து வருகிறேன்.

ஆனால் அன்றைய ஒரு நாள்தான் திரைப்படம் முடிந்தவுடன் ஒருவரும் கை தட்டவில்லை. காரணம்.. படம் முடிந்துவிட்டது என்பதையே யாரும் நம்பவில்லை.

வெளியில் வரும்போது ஒருவருக்கொருவர் கேட்டுக் கொண்ட முதல் கேள்வியே “என்ன கதை..?” என்பதுதான்.

இத்திரைப்படத்திற்கு எதற்காக சிறந்த படம் என ஆஸ்கர் விருது கொடுத்தார்கள் என்பது எனக்குப் புரியவில்லை.

மொத்தத்தில் இந்த வருட ஆஸ்கார் விருதுக்காக அதிகப் பிரிவுகளில் பரிந்துரை செய்யப்பட்டத் திரைப்படமும் இதுதான்.

சிறந்த படம், சிறந்த இயக்கம், சிறந்த துணை நடிகர், சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த படத்தொகுப்பு, சிறந்த ஒலிவடிவமைப்பு, சிறந்த ஒலித் தொகுப்பு, சிறந்த படத்திற்கான திரைக்கதை என மொத்தம் எட்டு பிரிவுகளில் இத்திரைப்படம் ஆஸ்கார் விருதுகளுக்குப் பரிந்துரை செய்யப்பட்டிருந்தது. அதில் நான்கு பிரிவுகளில் விருதுகளைத் தட்டிச் சென்றுள்ளது.

இதற்கு முன் சமீப காலமாக ஆஸ்கர் பரிசு வாங்கியத் திரைப்படங்களை நான் பார்த்திருக்கிறேன். அத்திரைப்படங்களின் கால்வாசி அளவுகூட இப்படம் என்னைக் கவரவில்லை. என்ன இருக்கிறது..? என்ன சொல்ல வந்தார்கள்..? என்பதுகூட தெரியவில்லை.

அதிலும் இன்னொரு காமெடியாக ‘சிறந்த திரைக்கதை’க்கான ஆஸ்கார் விருதையும் கொடுத்திருக்கிறார்கள். இது மிகப் பெரிய ஆச்சரியம் எனக்கு. கொஞ்சமும் எந்தவிதத்திலும் நம் கவனத்தைக் கவராத அளவுக்குத்தான் திரைக்கதையை அமைத்திருக்கிறார்கள்.


படத்தில் ‘சிகுர்த்’ என்ற கேரக்டரில் நடித்த Javier Bardem என்பவருக்கு சிறந்த சப்போர்ட்டிங் ஆக்ட்ருக்கான விருதைக் கொடுத்துள்ளார்கள். இது ஒன்று மட்டுமே நியாயமான ஒன்று என்றே சொல்லலாம். ஏனெனில் இயல்பு நிலை மாறியிருப்பவரைப் போன்ற இவருடைய நடிப்பு பிரமாதம்தான்.. இல்லை என்று மறுக்க முடியாது.

போலீஸ் ஸ்டேஷனில் துணை ஷெரீப்பை கொலை செய்கின்ற காட்சியில் சிகுர்த் காட்டுகின்ற வெறியைப் பார்க்கவே பயமாக இருக்கிறது.

அதே போல் அவருடைய குரல், மாடுலேஷன் இவை இரண்டும் இவருடைய கேரக்டருக்கு கனகச்சிதமாக பொருத்தமாகவே அமைந்திருந்தன.

இத்திரைப்படத்தை Joel Coen, Ethan Coen என்ற இரண்டு சகோதரர்கள் இயக்கியிருக்கிறார்கள். இவர்களுக்கும் ஆஸ்கர் பரிசு கிடைத்துள்ளது.

சிறந்த படமெனில் கதை சிறப்பானதாக இருக்க வேண்டும். இதனுடைய கதையை ஊகித்துச் சொல்ல வேண்டுமெனில் முற்றிலும் சினிமா என்பதை கலை என்கிற அமைப்பில் கரைத்துக் குடித்தவர்களால்தான் அது முடியுமென்று நினைக்கிறேன்.

கதையே இப்படியிருக்க நடிப்பு என்று பார்த்தால் நடிப்பிற்கு பெரிய அளவிற்கு இதில் ஸ்கோப் எதுவும் இல்லை.. நான் முன்பே சொன்ன சிகுர்த் என்பவரைத் தவிர..

பொதுவாக ஆஸ்கார் விருதுகள் என்பதே படங்களுக்குக் கிடைக்கும் ஒருவகையான பப்ளிசிட்டி என்பது போலத்தான் எனக்கு கருத்து உண்டு. சில வருடங்களாகவே ஆஸ்கார் விருது கிடைத்த படங்களைத் தொடர்ந்து பார்த்து வந்திருக்கிறேன்.

அதில் வருடாவருடம் திரைப்படங்கள் பற்றிய கூடுதல் கவனம் எனக்குள் அதிகரித்துக் கொண்டேயிருக்க..

இந்தத் திரைப்படம் மட்டும்தான் குழப்பத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

ஒருவேளை போட்டிக்கு வந்த மற்றத் திரைப்படங்கள் இதனைவிடவும் தரம் குறைவாக இருந்து, அதனால்தான் இத்திரைப்படம் அதிர்ஷ்டத்தில் விருதைப் பெறறுவிட்டதோ என்ற ஐயமும் எனக்கு எழுந்துள்ளது.

ஒருவேளை எனது அரைகுறை ஆங்கில அறிவால் புரிந்து கொள்ள முடியாத அளவுக்கு போனது, எனது குறைதானோ என்ற எண்ணமும் எனக்கு உண்டு. இல்லையென்று மறுக்கவில்லை.

எப்படியிருப்பினும் நமது வலையுலக கண்மணிகள் யாராவது, இத்திரைப்படத்தை பார்த்துவிட்டு முழுக் கதையையும், எனக்கு ஏற்பட்ட சந்தேகத்தையும் தீர்த்து வைக்க வேண்டுமாய் பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

25 comments:

Mohandoss said...

இதுக்கு மேல நான் என்ன ரிவ்யூ எழுதுறது இந்தப் படத்திற்கு.

TBCD said...

நீங்க மட்டும் தான் பிநவா..

மற்ற பிநாவைப் பார்த்தால் மிரட்சியா இருக்கா.. :P

கூகிளாண்டவரைக் கேட்டு, ஆங்கில விமர்சனங்களையும் ஒரு முறை படிங்க..

ரொமப் சிலாகிக்கிறாய்ங்க..

கிடைச்சா நானும் பார்த்து மண்டையப் பிச்சிக்கிறேன்..

Mohandoss said...

அண்ணே இதைப்பற்றி விமர்சனம் என்ற பெயரில் இனிமேல் எழுத முடியாது கதையத்தான் எழுதிட்டியளே!

புரிஞ்சதை எழுதலாம் ஏன் ஆஸ்கர் பரிந்துரைக்குப் போனது ஏன் கொடுத்திருப்பார்கள் என்ற ஊகங்களை எழுதலாம்.

பார்க்கலாம்.

உண்மைத்தமிழன் said...

//மோகன்தாஸ் said...
இதுக்கு மேல நான் என்ன ரிவ்யூ எழுதுறது இந்தப் படத்திற்கு.
அண்ணே இதைப்பற்றி விமர்சனம் என்ற பெயரில் இனிமேல் எழுத முடியாது கதையத்தான் எழுதிட்டியளே!
புரிஞ்சதை எழுதலாம் ஏன் ஆஸ்கர் பரிந்துரைக்குப் போனது ஏன் கொடுத்திருப்பார்கள் என்ற ஊகங்களை எழுதலாம். பார்க்கலாம்.//

தம்பீபீபீபீ.. ராசா.. உன்னைத்தான் மலை போல நம்பியிருக்கேன்.. கை விட்ராதடா கண்ணு..

கதை முழுசா தெரியாம சரியாத் தூக்கம்கூட வர மாட்டேங்குது.. ஒரு வேளையும் ஓட மாட்டேங்குது..

நான் எழுதினதால என்ன? நானே அரைகுறையாத்தானே எழுதியிருக்கேன்.. கொஞ்சம் உன் ஸ்டைல்ல எழுதிவிடு.. கதை தெரிஞ்சே ஆகணும்ப்பூ..

உண்மைத்தமிழன் said...

//TBCD said...
நீங்க மட்டும் தான் பிநவா.. மற்ற பிநாவைப் பார்த்தால் மிரட்சியா இருக்கா.. :P கூகிளாண்டவரைக் கேட்டு, ஆங்கில விமர்சனங்களையும் ஒரு முறை படிங்க.. ரொமப் சிலாகிக்கிறாய்ங்க.. கிடைச்சா நானும் பார்த்து மண்டையப் பிச்சிக்கிறேன்..//

'பி.நவா.' -- அப்படீன்னா என்ன ஸார்..?

கூகிளாண்டவர் மூலமா ஆங்கில விமர்சனத்தைத் தேடிப் படிச்சேன். அப்படியும் புரியல.. அதுல ஏதாவது ஒண்ணைப் படிச்சு நீங்களாச்சும் தமிழ்ல சொல்லலாம்ல..

அரை பிளேடு said...

//என்ன இருக்கிறது..? என்ன சொல்ல வந்தார்கள்..? என்பதுகூட தெரியவில்லை.
//

அண்ணாத்த. படத்தோட கதைன்னு நீங்க எழுதியிருக்கிறத படிக்கலை. செம நீளம்.


என்ன சொல்ல வந்தாங்கன்னு தெரிலைன்னு கடைசில சொல்லறீங்க. அது தெரியாமலேயே இம்புட்டு பெரிய பதிவா.

அது என்னன்னு தெரிஞ்சுச்சுன்னா இன்னும் எம்புட்டு பெரிய்ய்ய பதிவு எழுதியிருப்பீங்க :)

படம் ஒன்றரை மணிநேரம் இருக்குமா. உங்க பதிவை படிச்சுமுடிக்கறதுக்குள்ள படத்தையே ரெண்டு தடவை பார்த்துடலாம் போல இருக்கே. :)

உண்மைத்தமிழன் said...

///அரை பிளேடு said...
//என்ன இருக்கிறது..? என்ன சொல்ல வந்தார்கள்..? என்பதுகூட தெரியவில்லை.//
அண்ணாத்த. படத்தோட கதைன்னு நீங்க எழுதியிருக்கிறத படிக்கலை. செம நீளம்.
என்ன சொல்ல வந்தாங்கன்னு தெரிலைன்னு கடைசில சொல்லறீங்க. அது தெரியாமலேயே இம்புட்டு பெரிய பதிவா?//

அதுக்கப்புறம் என்னாச்சுன்னு தெரியாமத்தான் புரியலன்னு எழுதியிருக்கேன் அரை பிளேடு ஸார்..

நான் நார்மலா எழுதறது 16 பக்கம். இது 11 பக்கம்தான்.. அதுலேயும் 5 பக்கம் குறைச்சுத்தான் எழுதியிருக்கேன். இது பெரிசா?

//அது என்னன்னு தெரிஞ்சுச்சுன்னா இன்னும் எம்புட்டு பெரிய்ய்ய பதிவு எழுதியிருப்பீங்க:)//

நிச்சயமா இன்னொரு பத்து பக்கம் எழுதியிருப்பேன். புரியாம போயி மிஸ்ஸாயிருச்சு. அதான் ரொம்ப வருத்தமாயிருக்கு அரைபிளேடு..

//படம் ஒன்றரை மணி நேரம் இருக்குமா. உங்க பதிவை படிச்சு முடிக்கறதுக்குள்ள படத்தையே ரெண்டு தடவை பார்த்துடலாம் போல இருக்கே. :)//

ஏம்ப்பா அப்படியென்ன எல்லாரும் எழுத்துக் கூட்டியா படிக்கிறீங்க..? எனக்கு முழுசும் படிச்சு பைனல் செய்ய ஆறு நிமிஷம்தாம்பா ஆச்சு..

வடுவூர் குமார் said...

நானும் பார்த்தேன் இந்த படத்தை,கணிணியில் - இது ஆஸ்கார் படம் என்பது தெரியாமலேயே!!
இப்போது தான் தெரிந்தது.
சவுண்டை குறைத்து வைத்து தான் கேட்டேன்,முழு வசனம் புரியாமலேயே ஆங்கில படங்கள் பார்க்கமுடியும் என்ற நம்பிக்கை தான்.
அந்த பணம் எடுத்த ஆள் இறந்து கிடப்பதை தான் காட்டினார்களே,நீச்சல் குளம் அருகில்.
இந்த மாதிரி விமர்சனம் எழுதனும் என்று படம் பார்த்தால் இப்படித்தான். :-))

உண்மைத்தமிழன் said...

//வடுவூர் குமார் said
நானும் பார்த்தேன் இந்த படத்தை, கணிணியில் - இது ஆஸ்கார் படம் என்பது தெரியாமலேயே!!
இப்போதுதான் தெரிந்தது. சவுண்டை குறைத்து வைத்துதான் கேட்டேன், முழு வசனம் புரியாமலேயே ஆங்கில படங்கள் பார்க்க முடியும் என்ற நம்பிக்கைதான்.//

அது சரி வடுவூராரே.. வசனங்கள் புரிந்தனவா..? நீங்கள் பார்த்ததில் சப்-டைட்டில் இருந்ததா..? நானும் அந்த நம்பிக்கையில்தான் ஆங்கிலப் படங்களுக்குச் செல்கிறேன்.

//அந்த பணம் எடுத்த ஆள் இறந்து கிடப்பதை தான் காட்டினார்களே,நீச்சல் குளம் அருகில்.
இந்த மாதிரி விமர்சனம் எழுதனும் என்று படம் பார்த்தால் இப்படித்தான்.:-))//

ஐயோ மோஸ் கொலையா..? யார் செய்தது சிகுர்த்துதானா..? அப்படியானால் அந்தப் பணம்..? மோஸின் தங்கையிடம் வந்து என்ன சொல்கிறான் சிகுர்த்..?

கொஞ்சம் இதையும் சொல்லுங்களேன் வடுவூரார்..

Anonymous said...

கதையைத் தெரிந்துகொள்ள விரும்பாததால், நீங்கள் எழுதியதை வேகவேகமாக ஒற்றைக்கண்ணால் பார்த்தபடி கடைசிப்பகுதிக்கு வந்து உங்களின் சந்தேகத்தைப் படித்தேன்.

மோகன்தாஸ் படம் பார்த்துவிட்டதாக எழுதி இருந்தார். நீங்க அவரிடம் கேளுங்களேன். எங்களுடைய ஊரில் நாளைதான் டிவிடி வெளியாகிறது. வரும் வாரத்தில் பார்த்துவிடுவேனென்று நினைக்கிறேன். பார்த்துவிட்டால் சொல்கிறேன்.

ஆனால், பொதுவாக நீங்கள் கோஹென் சகோதரர்களின் படங்களைப்பார்த்தால் வித்தியாசமாகத்தான் இருக்கும். கதையமைப்பும் வசனங்களும் கோஹென் சகோதரர்க்ளின் விசிறிகள் பல வருடங்களுக்கு சிலாகிக்கும்படி இருக்கும்.

எதுக்கும் பார்த்துவிட்டே சொல்கிறேன்.

-மதி

உண்மைத்தமிழன் said...

மதி கந்தசாமி said
கதையைத் தெரிந்துகொள்ள விரும்பாததால், நீங்கள் எழுதியதை வேகவேகமாக ஒற்றைக்கண்ணால் பார்த்தபடி கடைசிப்பகுதிக்கு வந்து உங்களின் சந்தேகத்தைப் படித்தேன்.
மோகன்தாஸ் படம் பார்த்துவிட்டதாக எழுதி இருந்தார். நீங்க அவரிடம் கேளுங்களேன்.//

மோகன்தாஸ் தம்பியும் 'எழுதுகிறேன்' என்று சொல்லியிருக்கிறான்..

//எங்களுடைய ஊரில் நாளைதான் டிவிடி வெளியாகிறது. வரும் வாரத்தில் பார்த்துவிடுவேனென்று நினைக்கிறேன். பார்த்துவிட்டால் சொல்கிறேன்.//

நன்றி..

//ஆனால், பொதுவாக நீங்கள் கோஹென் சகோதரர்களின் படங்களைப்பார்த்தால் வித்தியாசமாகத்தான் இருக்கும். கதையமைப்பும் வசனங்களும் கோஹென் சகோதரர்க்ளின் விசிறிகள் பல வருடங்களுக்கு சிலாகிக்கும்படி இருக்கும். எதுக்கும் பார்த்துவிட்டே சொல்கிறேன்.
-மதி//

எனக்கு இந்தச் சகோதரர்களின் திரைப்படங்கள் பரிச்சயமே இல்லை. நான் இப்போதுதான் இவர்களைப் பற்றிக் கேள்விப்படுகிறேன்.

இவர்களுக்கென்றே தனி ரசிகர்கள் இருக்கிறார்களெனில் மிக முக்கியமான இயக்குநர்களாகத்தான் இவர்கள் இருக்க வேண்டும். வாழ்த்துகிறேன்.

ஆனால் என்னைப் போன்ற சாதாரண ரசிகர்களால் புரிந்து கொள்ள முடியவில்லை..

தங்களுடைய முதல் வருகைக்கும், அன்பான பின்னூட்டத்திற்கும் நன்றிகள் ஸார்..

Anonymous said...

உண்மை(?)தமிழன்,

புரிஞ்ச படமா இருந்தா 16 பக்கம்.. புரியாத படமா இருந்தா 11 பக்கம்.

ஆக புரிஞ்சதுக்கும், புரியாததுக்கும் இடைல வித்தியாசம் வெறும் 5 பக்கம்தான்..

இது எப்படி..?

குசும்பன் said...

நானும் பார்த்தேன் ஒழுங்காக போய் கொண்டு இருந்தது கடைசி முடிவால் குழம்பி போனேன், சரி மக்கு மூட்டையான எனக்கு தான் படம் புரியவில்லை என்று நினைச்சேன் பரவாயில்லை.

//அன்றைய ஒரு நாள்தான் திரைப்படம் முடிந்தவுடன் ஒருவரும் கை தட்டவில்லை. காரணம்.. படம் முடிந்துவிட்டது என்பதையே யாரும் நம்பவில்லை.///

லக்கிலுக் said...

//தங்களுடைய முதல் வருகைக்கும், அன்பான பின்னூட்டத்திற்கும் நன்றிகள் ஸார்..//

அண்ணே! மதிகந்தசாமி “ஸார்” இல்லை. ”மேடம்”. ஏற்கனவே ஒருமுறை பொன்ஸை “சார்” என்று கூப்பிட்டு வாங்கிக் கட்டிக் கொண்டது நினைவில்லையா? ஒருவேளை உங்களுக்கு இன்னிக்கு நேரம் சரியில்லையோ? அப்பன் முருகன் தான் உங்களை காப்பாத்தணும் :-(

யாராவது HDFCலேயிருந்து உங்க மொபைலுக்கு லோன் கொடுக்குறேன்னு கூப்பிட்டு “மேடம்” “மேடம்”னு கூப்பிட்டா 'காண்டு' ஆயிடுவீங்க தானே?

பதிவை இன்னமும் படிக்கவில்லை. படித்துமுடிக்க அரை நாளாகும் என்பதால் நேரம் கிடைக்கும்போது படிக்கிறேன். யாரோ 'சில நேரங்களில்' விமர்சனம் எழுதியிருக்கிறார்கள். அதை தேடிப் படிக்க வேண்டும்.

உண்மைத்தமிழன் said...

///லக்கிலுக் said...
//தங்களுடைய முதல் வருகைக்கும், அன்பான பின்னூட்டத்திற்கும் நன்றிகள் ஸார்..//
அண்ணே! மதிகந்தசாமி “ஸார்” இல்லை. ”மேடம்”.///

அடப்பாவி தம்பி..

ரெண்டு மணி நேரமா எல்லாரையும் பாக்க வைச்சுப்புட்டு கடைசில வந்து சொல்றியா..?

//ஏற்கனவே ஒருமுறை பொன்ஸை “சார்” என்று கூப்பிட்டு வாங்கிக் கட்டிக் கொண்டது நினைவில்லையா?//

அடப்பாவி தம்பி..

எப்பவோ நடந்ததை இன்னிக்கு திரும்பவும் சொல்லி மானத்தை வாங்குறியேடா..!

//ஒருவேளை உங்களுக்கு இன்னிக்கு நேரம் சரியில்லையோ? அப்பன் முருகன் தான் உங்களை காப்பாத்தணும்:-(//

அடப்பாவி தம்பி.. மொதல்ல உன்கிட்டியிருந்துதான்டா அந்த முருகன் என்னைக் காப்பாத்தணும்.. எப்பேர்ப்பட்ட தம்பீபீபீபீபீபீ..

//யாராவது HDFCலேயிருந்து உங்க மொபைலுக்கு லோன் கொடுக்குறேன்னு கூப்பிட்டு “மேடம்” “மேடம்”னு கூப்பிட்டா 'காண்டு' ஆயிடுவீங்கதானே?//

அடப்பாவி தம்பி.. அந்த பேங்க்ல பிட் போட்ட ஆளும் நீதானா.. டெய்லி காலைல எனக்கு போன் மேல போன் வருது.. கிரெடிட் கார்டு வாங்குக்குறீங்களா.. வாங்குக்குறீங்களான்னு..

//பதிவை இன்னமும் படிக்கவில்லை. படித்து முடிக்க அரை நாளாகும் என்பதால் நேரம் கிடைக்கும்போது படிக்கிறேன். யாரோ 'சில நேரங்களில்' விமர்சனம் எழுதியிருக்கிறார்கள். அதை தேடிப் படிக்க வேண்டும்.//

அடப்பாவி தம்பி..

6 நிமிஷம்தான்பா ஆகும்.. நான் படிச்சுப் பாத்துட்டேன்..

இப்படிச் சொல்லிச் சொல்லியே எனக்கு நல்ல பேர் வாங்கிக் குடுத்திட்டீங்க..

நல்லா இருங்கடே..

உண்மைத்தமிழன் said...

//Anonymous said...
உண்மை(?)தமிழன்,
புரிஞ்ச படமா இருந்தா 16 பக்கம்.. புரியாத படமா இருந்தா 11 பக்கம். ஆக புரிஞ்சதுக்கும், புரியாததுக்கும் இடைல வித்தியாசம் வெறும் 5 பக்கம்தான்.. இது எப்படி..?//

அதில்ல அனானி..

இந்தப் படத்துல 10 பக்கம் வரைக்கும் எனக்குப் புரிஞ்சது.. அதை எழுதிட்டேன்.. புரியலைன்னு 1 பக்கத்துல எழுதியிருக்கேன்..

மொத்தப் படமும் புரிஞ்சிருந்தா மீது 5 பக்கத்தையும் எழுதி fill செஞ்சிருப்பேன்.

அவ்ளோதான்..

mouli said...

இதே போன்று பல படங்கள் என்ன நடக்கிறது ஏன் நடக்கிரது என்பதை விளக்கமாக காட்டாமல் பார்வையாளனின் எண்ணத்திற்கு விட்டுவிடுவார்கள், Dr.Zhivago என்ற படத்தை பாருங்கள் இதைவிட சற்று அதிகமாக குழப்பும் படம்!, ஆனால் தாங்கள் கூறும் கதைக்கும் ,திரைப்படத்தின் கதை என wikipedia -வில் சொல்லும் கதைக்கும் முடிவில் சற்று வித்தியாசம் இருக்கிறது, படித்துப் பாருங்கள், http://en.wikipedia.org/wiki/No_Country_for_Old_Men_%28film%29

Anonymous said...

இவர்கள் எடுத்த fargo படம் பாருங்கள்.

இதைவிட எளிமையான அருமையான படம்!

படம் பார்த்த மகிழ்ச்சி இருக்காது.

மூட் அவுட் ஆகி விடும். இருந்தாலும் படம் முழுக்க பார்க்க வைத்து விடுவார்கள். இதுதான் இவர்களின்

சிறப்பு. இவர்களின் கொலையாளிகளை

எந்தப் பிறவியிலும் சந்திக்கக்கூடாது:-)

உண்மைத்தமிழன் said...

//mouli said...
இதே போன்று பல படங்கள் என்ன நடக்கிறது ஏன் நடக்கிரது என்பதை விளக்கமாக காட்டாமல் பார்வையாளனின் எண்ணத்திற்கு விட்டுவிடுவார்கள், Dr.Zhivago என்ற படத்தை பாருங்கள் இதைவிட சற்று அதிகமாக குழப்பும் படம்!, ஆனால் தாங்கள் கூறும் கதைக்கும் ,திரைப்படத்தின் கதை என wikipedia -வில் சொல்லும் கதைக்கும் முடிவில் சற்று வித்தியாசம் இருக்கிறது, படித்துப் பாருங்கள், http://en.wikipedia.org/wiki/No_Country_for_Old_Men_%28film%29//

நானும் படித்தேன் மெளலி ஸார்..

நகர ஷெரீப் தனது வீட்டில் மனைவியுடன் பேசுகின்ற காட்சியில் சப்-டைட்டில் சுத்தமாக இல்லை. அதனால் அவர்களது பேச்சு விவரங்கள் சுத்தமாகப் புரியவில்லை. சவுண்ட் வேறு சில இடங்களில் அவுட். நான் பார்த்தது டிவிடி திரையில்.

மேலும் இக்காட்சிக்குப் பிறகுதான் சிகுர்த் நடந்து செல்லும் காட்சியா அல்லது இக்காட்சிதான் இறுதிக் காட்சியா என்பதில் எனக்கு இப்போது சிறிது குழப்பம்.

இந்த ஒன்றினால்தான் உங்களுக்கும் குழப்பம் வந்திருக்கும்.

தவறு என்னுடையதுதான்.. அந்த சீனை குறிப்பிட மறந்துவிட்டேன்.. ஸாரி..

உண்மைத்தமிழன் said...

//Anonymous said...
இவர்கள் எடுத்த fargo படம் பாருங்கள். இதைவிட எளிமையான அருமையான படம்! படம் பார்த்த மகிழ்ச்சி இருக்காது. மூட் அவுட் ஆகி விடும். இருந்தாலும் படம் முழுக்க பார்க்க வைத்து விடுவார்கள். இதுதான் இவர்களின் சிறப்பு. இவர்களின் கொலையாளிகளை எந்தப் பிறவியிலும் சந்திக்கக்கூடாது:-)//

தகவலுக்கு நன்றி அனானி..

நானும் இப்போதுதான் இந்தச் சகோதரர்கள் பற்றி கூகிலாண்டவரின் துணையோடு படித்தேன்.. கொஞ்சம் பின்னவீனத்தனமானவர்கள் என்று தெரிகிறது.

நீங்கள் சொன்ன படத்தையும் கண்டிப்பாக பார்த்துவிடுகிறேன்..

வவ்வால் said...

உண்மைத்தமிழர்,
இன்னும் இந்த படத்தை பார்க்கவில்லை, பார்க்கலாம்னு எண்ணத்தில் இருந்தேன் ஒரு லாரி மண்ணை அள்ளிப்போட்டிங்களே :-))

இந்த படம் கொஞ்சம்(முழுக்கவேவா?) non linear வகையறா கதை சொல்லும் பாணியில் எடுக்கப்பட்டது என நினைக்கிறேன், இப்போதெல்லாம் இப்படிப்பட்ட படங்கள் வெகு ஜனங்களாலும்(main stream and parallal) ரசிக்கப்பட ஆரம்பித்துள்ளது போல.

உண்மைத்தமிழன் said...

//வவ்வால் said...
உண்மைத்தமிழர்,
இன்னும் இந்த படத்தை பார்க்கவில்லை, பார்க்கலாம்னு எண்ணத்தில் இருந்தேன் ஒரு லாரி மண்ணை அள்ளிப்போட்டிங்களே :-))//

வவ்ஸ்.. இதெல்லாம் நல்லாயில்ல.. பத்து லாரின்னு சொன்னா என்ன குறைஞ்சா போயிருவீங்க..

//இந்த படம் கொஞ்சம்(முழுக்கவேவா?) non linear வகையறா கதை சொல்லும் பாணியில் எடுக்கப்பட்டது என நினைக்கிறேன், இப்போதெல்லாம் இப்படிப்பட்ட படங்கள் வெகு ஜனங்களாலும்(main stream and parallal) ரசிக்கப்பட ஆரம்பித்துள்ளது போல.//

என்ன லீனரோ எனக்குத் தெரியல.. ஆனா தண்டச் செலவுன்னு மட்டும் நல்லாத் தெரியுது.. எதுக்கும் நீங்களும் போய் பார்த்துட்டு வந்து ஒரு பதிவு போடுங்களேன்.. உங்க ரசனை என்னன்னு புரிஞ்சுக்குறேன்..

geethappriyan said...

அண்ணே,
மிகச்சிற்ப்பாக உங்களுக்கு புரிந்தவரை சரியாக எழுதியிருக்கிறீர்கள்,புரியாததை வெளியே சொன்னீர்கள் பாருங்கள்,அது யாருக்கும் வராத பாங்கு,இதை போன ஆகஸ்டே எழுதினேன்,அதில் சில தகவல்கள் சேர்த்து மீள் பதிவிட்டேன் அண்ணே.
===
கோயன் பிரதர்ஸ் எடுக்கும் படங்கள் டார்க்ஹ்யுமர்,த்ரில்லர்,வகையே அதிகம் இருக்கும்.இவர்களின் எல்லா 15 படங்களும் பார்த்து விட்டேன். இவர்கள் எடுத்த 15 படங்களில் 10 நல்ல படம் தேறும் அண்ணே,சீரியஸ் மேன் பார்த்திருப்பீர்களே!!
அது பிடித்ததா?
அதையும் எழுதியிருக்கிறேன்.
வருகைக்கும் சுட்டிக்கும் மிக்க நன்றி அண்ணே

PARAYAN said...

Saw the movie yesterday in Quincy!
Thalayum puriyala, Vaalum puriyala!

abeer ahmed said...

See who owns internetpromotiontool.com or any other website:
http://whois.domaintasks.com/internetpromotiontool.com