இதிலுமா ‘சாதீ’யம்?

03-06-2007

'பிறப்பு' - சினிமா விமர்சனம்

என் இனிய வலைத்தமிழ் மக்களே..

ஊரோடு சேர்ந்து வாழ் என்பதை நாட்டு மக்களில் யார் உணர்ந்து கொண்டார்களோ இல்லையோ, சினிமா இயக்குநர்கள் மட்டுமே மிகச் சரியாக உணர்ந்து வைத்திருக்கிறார்கள். கலைப்படம், மக்களுக்கான சினிமா, யதார்த்தமான வாழ்க்கையைப் பிரதிபலிக்கும் சினிமா என்றெல்லாம் மக்களுக்குப் புரியாத பாணியில் படம் செய்வதை, அறவே வெறுக்கும் இயக்குநர்கள்தான் திரையுலகில் அதிகம் பேர் உள்ளனர்.


ஒரு கமர்ஷியல் படம் எடுத்தோமா? மகாபலிபுரம் ரோட்டுல இடத்தை வாங்கினோமா? சாலிகிராமத்துல வீட்டைக் கட்டினோமா? சொந்த ஊர்ல தென்னந்தோப்பை வாங்கி அப்பன், ஆத்தா கைல கொடுத்தோமான்னு இல்லாம என்னத்துக்கு போய் கலைப்படம்னு டயத்தை வேஸ்ட் பண்ணணும்? இது ஒரு வகை இயக்குநர்களின் கேள்வி.


இன்னொரு வகை.. "நிஜமா நடக்கிறதைத்தாண்டா காட்டணும். அதுதாண்டா சினிமா. நாளைக்கு நீ உன் குடும்பத்தோடு உக்காந்து பார்க்கும்போது பாத்ரூம் போகணும்னு சொல்லி நீ தப்பிச்சு போகக்கூடாது. அப்பத்தான் நீ மக்களோட இயக்குநர்.." - இப்படி ஒரு டீம் தனியா ஆனா குறைந்தபட்சமாத்தான் இருக்காங்க..


இந்த ரெண்டுக்கும் நடுவுல மாட்டிக்கிட்ட மூணாவது டீம் ஒண்ணு இருக்கு. இவுகளுக்கு என்ன நோக்கம்னா.. "எப்படியாவது ஒரு படம் பண்ணிரணும். அது நல்லாவும் போகணும்.. தயாரிப்பாளரும் நம்மை வாழ்த்தணும்.. மக்களுக்கும் பிடிக்கணும்.. பத்திரிகைகாரனும் பேனாவால கடிக்காம இருக்கணும்.. நாமளும் நாலு காசு பார்க்கணும்.." - இதுதான் அந்த ரெண்டாங்கெட்டான் இயக்குநர்களின் ஆசை.


இதில் ஜெயித்தவர்கள் அதிகம் இல்லை. ஆனால் ஆசைப்பட்டு உள்ளே கால் வைத்து பிலிம் ரோலில் தங்களது வாழ்க்கையையே எழுதிவைத்து நிஜ வாழ்வில் தங்கள் வாழ்க்கையைத் தொலைத்த இயக்குநர்கள் நிறைய பேர். இவர்கள்தான் படத்தின் Pre-Production-ன் போதே, "300-வது நாள் பங்ஷனுக்கு ஏற்பாடு எல்லாம் பண்ணிருங்க தலைவா.." என்று தயாரிப்பாளருக்கே பிலிம் காட்டுவார்கள். ஆனால் பிலிம் ரோலில் பதிவு செய்யும்போதுதான் கோட்டை விட்டு விடுவார்கள். அப்படியொரு திரைப்படம் ஒன்றை சமீபத்தில் பார்த்தேன்.


'பிறப்பு'. படத்தின் டைட்டிலைப் பார்த்தே கதை எதைப் பற்றியது என்று நீங்கள் ஊகித்துக் கொள்ளலாம். ஆனாலும் சினிமாக்காரர்களை நம்ப முடியாதே.. ‘வாலி’ என்ற தலைப்பில் என்ன படம் எடுத்தார்கள் என்பது நமக்குத்தான் தெரியுமே? ஆகவே, தொடர்ந்து படியுங்கள்..


இருபத்தைந்தாண்டுகளாக இரண்டு குடும்பத்தினர் நெருக்கமாகப் பழகி வருகிறார்கள். அதில் ஒரு குடும்பத்தினருக்கு மற்றொரு குடும்பத்தினர்தான் திருமணம் செய்து வைக்கின்றனர். பதிவுத் திருமணம். அதில் ஆணின் ஜாதி ஊருக்கே பஞ்சாயத்து சொல்லும் ஜாதி. பெண்ணோ ஊரில் யார் வீட்டில் எழவு விழுந்தாலும் வாசலில் நின்று உருமி அடிக்கும் ஜாதியைச் சேர்ந்தவள்.


இப்போது இருபத்தைந்தாண்டுகள் கழித்துதான் படம் துவங்குகிறது. கலப்புத் திருமணம் செய்து கொண்டவர்களின் வாலிபப் பையனை நீண்ட நாள் நண்பர்களாக இருந்துவரும் குடும்பத்தினர், அவர்களுக்கு குழந்தை இல்லாத குறைக்காக தத்து எடுத்துக் கொள்கிறார்கள்.


ஹீரோவான ‘புதிய தத்துப்பிள்ளை’ வீட்டிற்கு வரும்போது வழக்கமான ‘சோதனை’ அங்கே காத்திருக்கிறது. வழக்கம்போல சினிமாக்காரர்களுக்கே உரித்தான மாமன் மகள் மூலமாக. மொதல்ல அத்தை மகன், மாமா மகள்ன்னு இன்னும் ஒரு பத்து வருஷத்துக்கு படமே எடுக்கக்கூடாதுன்னு தடை பண்ணணும்டா சாமி.. எத்தனை தடவைதான் எடுப்பாங்கன்னே தெரியலை.. அலுத்துப் போச்சுய்யா..


அந்தப் பொண்ணு வழக்கம்போல ஸ்கூலுக்கு யூனிபார்மோட அலையற பொண்ணுதான்.. வழக்கம்போல தத்து எடுத்தது அந்தப் பொண்ணோட அப்பனுக்குப் பிடிக்கலை.. அவன் எப்படின்னா ‘திராவிட மக்கள் கட்சி’ என்கிற கட்சியின் மாவட்டச் செயலாளர். மாவட்டத்துல எங்க, எம்புட்டுக்கு காண்ட்ராக்ட் விட்டாலும் அது தனக்குத்தான் வரணும்.. வேற எவனாச்சும் குறைச்சுப் போட்டு காண்ட்ராக்ட் எடுத்தான்னா, அரிவாளோட போய் அவனை அடிச்சு உதைச்சு மிரட்டி வாபஸ் வைக்குற அளவுக்கு தற்போதைய ஒரு நல்ல அரசியல்வாதிக்கு எடுத்துக்காட்டாக இருப்பவர்.


அவர்கிட்ட வேலைக்கு மாமான்னு வயசான ஒரு ஆளும், அப்பப்ப அடி வாங்குறதுக்குன்னே ஒரு அடியாளும் கூடவே திரியறாங்க. இந்தப் பொண்ணு தத்துப் பையனை ‘லவக்க’ பார்க்குது. அதுக்குள்ள அதே ஊர்ல ஏதோ ஒரு பிராஜெக்ட் வொர்க்ன்னு சொல்லி, ஹேண்டிகேமராவும் கையுமா இருக்குற இன்னொரு ஹீரோயினோட பார்வை ஹீரோ மேல பட்டு, ரெண்டு பேருக்கும் ‘லவ்’வாயிருது..


மாமனுக்கு நம்ம ஹீரோ மேல கோபமான கோபம். என்னன்னா.. தத்தெடுத்தது தப்பில்லையாம்.. அவன் சாதில தத்தெடுக்காம அடுத்தவங்க சாதில.. அதுலேயும் தப்பு அடிக்கிற சாதில பிறந்தவனை தத்தெடுத்திருக்கீங்களேன்னு கோபம். அதுக்கு அவன் சொல்ற காரணம் திரும்பத் திரும்ப அதேதான்.. நம்மைவிட ‘கீழ் சாதி.. கீழ் சாதி.. கீழ் சாதி..’


சாதியெல்லாம் நிச்சயம் தமிழ்நாட்டைவிட்டுப் போகாதுங்க. அப்படியே நீங்க அதை விரட்ட நினைச்சாலும், நம்ம சினிமாக்காரங்க கண்டிப்பா போக விடமாட்டாங்க.. சத்தியமா இப்ப சமீபமா வந்த படங்கள்லேயே, இந்தப் படத்துலதான் ‘சாதி’ன்ற வார்த்தையை அதிகமா யூஸ் பண்ணிருப்பாங்கன்னு நினைக்கிறேன்.


தன் பொண்ணும் கீழ் சாதி தத்துப் பையனும் பழகுறாங்கன்னு தப்பா நினைச்சு கோபப்படுறாரு மாமா. கூட இருக்குற கைத்தடிகள் அவர் காதோரமா ஐடியா கொடுக்குறாக.. அது என்னன்னு, சரியா காது கேட்காத எனக்கே தெளிவாப் புரிஞ்சிருச்சு. நீங்களும் ஊகிச்ச ஐடியாதான்.. திடுதிப்புன்னு ஊரே வேடிக்கை பார்க்க.. ஒரு இருபது பொம்பளைங்க.. இருபது ஆம்பளைங்க தட்டைத் தூக்கிட்டு பரிசம் போட வந்து நிக்குறாக..


மாமனோட அக்காக்காரிக்கு சந்தோஷம். இருந்தாலும் தத்துப் பிள்ளைகிட்ட கேக்குறா.. பையன் அந்த பிராஜெக்ட் பொண்ணு மேல பிராக்கெட் போட்டிருக்குறதால, ‘எனக்குப் பிடிக்கலே’ன்றான்.. அம்மாவும் ‘என்னை மன்னிச்சிருங்க’ன்னு ஒத்த வார்த்தை சொல்லுது. மாமன்காரன், நான் நினைச்ச அதே டயலாக்கைத்தான் சொன்னான்.. ‘கூப்பிட்டு வச்சு கழுத்தை அறுக்குறியா?’ன்னு அக்காக்காரிகிட்ட கோபப்பட்டுட்டுப் போறான்..


அத்தை பொண்ணு ஹீரோவை, நடுரோட்டுல சட்டையைப் பிடிச்சு உலுக்குறா.. "என்னைப் பிடிக்கலைன்னு சொன்னியாடா?”ன்னே கேக்குறா.. அவளுக்குத்தான தெரியும் அவ கஷ்டம்.. ரெண்டு டூயட்டுல கஷ்டப்பட்டு இடுப்பு ஒடிச்சு டான்ஸ் ஆடிருக்கா.. பாட்டோட முடிவுல ரியலிஸமா இருக்கணுமேன்னு கட்டில்ல இருந்து தொப்புன்னு கீழே விழந்திருக்கா.. வலி மறந்து போயிருக்குமா என்ன?


நடுரோடா இருந்தா என்ன? அவன்தான் ஹீரோவாச்சே.. "ஆமாம்"ன்றான்.. பொண்ணு ஷாக்காகுற குளோஸ்அப் வைக்கும்போதே நினைச்சேன். அடுத்த சீன் ஆஸ்பத்திரிதான்னு.. அதேதான்.. மருந்தை குடிச்சிருது புள்ளை.. மாமன்காரன் அதே ‘மங்கம்மா சபதம்’ வசனத்தை எடுத்து விடுறான்... "என் பொண்ணுக்கு மட்டும் ஏதாவது ஒண்ணு ஆச்சு.. வக்காலிகளா.. உங்க குடும்பத்தையே கண்டதுண்டமா வெட்டிப் பொலி போட்டிருவேன்"ன்றான்..


ஹீரோ லவ் பண்ற பிராஜெக்ட் பொண்ணு ரொம்ப பிராக்டிக்கலா பேசுது.. "நீ போய் அந்தப் பொண்ணுகிட்ட பேசு.."ன்னு ஐடியா கொடுக்குறா.. சுடுகாட்டு பிசாசுகிட்ட இருந்து தப்பிக்கிறதுக்கு ஐடியா கேட்டா, சுடுகாட்டுலேயே வீடு கட்டி வாழுடான்னு சொன்ன மாதிரி ஐடியா கொடுத்தா ஹீரோ என்ன செய்வான்..? மலை மேல ஏறுறான்.. இறங்குறான்.. அதே ஹை பிட்ச்ல "என்னை என்ன செய்யச் சொல்றே"ன்னு வானத்தையும், பூமியையும் பார்த்து கத்துறான்..


சுகமாகி ரோட்ல வர்ற அத்தைப் பொண்ணுகிட்ட போய் பேசுறான்.. விதி.. மாமன் ஆளுகளும் அடிச்சிர்றானுக.. பத்தாததுக்கு மாமனே நேர்ல வந்து மாட்டடி அடிக்கிறான்.. தத்தெடுத்த அப்பனும், ஆத்தாளும் ஓடி வந்து தடுக்குறாக.. "மானம், மரியாதை போச்சே.."ன்னு அப்பன்காரன் குதிக்க.. ஹீரோ கோவிச்சுக்கிட்டு வெளில ஓடுறான்..


தொலைஞ்சது கதை.. இங்க வழக்கம்போல தத்து அம்மா "எனக்கு என் புள்ளை வேணும்"னு அழுகுது.. அப்பன் நொச்சு தாங்காம பிராஜெக்ட் பொண்ணு வீட்டுக்கு வந்து கேக்குறாரு.. ஹீரோவைத் தேடி போகும்போது மரத்துல ஆக்ஸிடெண்ட்டுன்னு சொல்லி அப்பனும், ஆத்தாளும் செத்துடறாங்க.. பிராஜெக்ட் பொண்ணு மட்டும் தப்பிச்சிருது.. இங்கன மட்டும் பாதி ரீலை எலி கடிச்சிருச்சுன்னு நினைக்கிறேன்.. சீனை அம்புட்டு பாஸ்ட்டா கொண்டு போய் சாகடிச்சிட்டானுகப்பா..


வழக்கம்போல ஒப்பாரி வைக்கிறதுக்குன்னு ஒரு பொம்பளை டீமை உக்கார வைச்சு பக்கத்துல ரெண்டு பொணத்தை வைச்சு(நல்ல வேளை.. ஈ மொய்க்க கஷ்டப்பட்டு படுத்திருக்க வைக்காம.. முகத்தை மூடி வைச்சு ஈஸியா எடுத்திருக்காங்க) மாமன்காரன், "பையன் ஓடிப் போயிட்டான். எங்கக்கா விரட்டி விட்ருச்சு.. அவன் நம்ம சாதிக்காரப் பய இல்லீல்ல. அதான் ஓடிட்டான்.. நான்தான் இனிமே இங்க வாரிசு.." அப்படீன்னு சொல்லி கொள்ளி வைக்கப் போறான்..


ஹீரோ ‘அப்பா’, ‘அம்மா’ன்னு ஓடி வர்றான்.. மாமன்காரன் புரட்டி புரட்டி எடுக்கிறான்.. "எச்சிக்கலை நாயே.. கீழ் சாதி நாயே.. உனக்கு எங்க வீட்டுச் சொத்து கேக்குதா ஓடுடா.."ன்னு அடிச்சு விரட்டுறான்.. பொணத்தைத் தூக்கிட்டு சுடுகாட்டுக்கு போறான் மாமன்..


பிராஜெக்ட் பொண்ணு பெட்ல இருந்து ஓடி வந்து உண்மையைச் சொல்லுது.. அத்தை பொண்ணுக்கும் அப்பத்தான் அதோட அப்பன்காரன் ஒரு நாள் கைத்தடிககிட்ட ‘யாரையோ போட்டுத் தள்ளுறதை’ பத்தி பேசினதை ஒட்டுக் கேட்டது ஞாபகத்துக்கு வருது..


ஹீரோ சுடுகாட்டு ஓடி வர, அங்கன பிராஜெக்ட் பொண்ணும், அத்தை பொண்ணும் உண்மையை ஒப்பாரியா வைக்க.. பையன் ‘மனோகரா சிவாஜியா’ மாறிர்றான்.. இப்ப அவன் சினிமா ஹீரோ மாதிரி(இந்த ஒரு சீன்லதான்யா அப்படி காட்டிருக்காங்க)மாமனை புரட்டி எடுக்கிறான்.. கடைசில அந்த மாமனோட பொண்ணுதான்(கவனமாக கவனிக்க..) தத்தெடுத்த அப்பன், ஆத்தாவுக்கு கொள்ளி வைக்கிறா..


அத்தோட ‘இது சாதி ஒழிப்புக்கும் சேர்த்து வைத்துள்ள கொள்ளி’ன்னு ஒரு டைட்டிலை போட்டு, ‘இதுவரைக்கும் சாதி ஒழிப்பை பத்தி என்னய்யா சொல்லிருக்கீங்க சாமிகளா?’ன்னு கேக்க வைச்சுப்புட்டாக..


இதுதாம்பா ‘பிறப்பு’ படத்தோட கதை.. படத்துல ஹீரோன்னு ஒரு பையன் நடிச்சிருக்காரு.. இல்ல டிரை பண்ணிருக்காரு.. இந்த அளவுக்குத்தான் உண்மையைச் சொல்லணும்..


படத்தோட இயக்குநர் நம்ம பாலாவோட சிஷ்யராம். அதுனால காட்சிக்கு காட்சி எதையாவது வித்தியாசமா வைக்கணுமேன்னு யோசிச்சிருக்கார். ஆனா அம்புட்டும் புஸ்வாணமாயிருச்சு.. ஒண்ணே ஒண்ணுதான் சக்ஸஸாயிருக்கு. அது கடைசில..


படத்துல வசனத்தை குறிப்பிட்டுச் சொல்லலாம்.. டயலாக் டெலிவரி, மாடுலேஷன் என்ற விஷயத்திலெல்லாம் அக்கறையாக முனைப்பெடுத்திருக்கும் இயக்குநர் கதை, திரைக்கதையில் கோட்டை விட்டுவிட்டார். எது சாமி முக்கியம்..?


தத்தெடுத்த பெற்றோருக்கும், ஒரிஜினல் பெற்றோருக்கும் இடையில் பாசப் போராட்டம்னாச்சும் எடுத்திருந்தா புது கதைன்னு சொல்லி ஒத்துக்கலாம். அதை விட்டுட்டு தத்தெடுப்பில் ‘சாதி’ன்னு ஒரு புது மேட்டரைத் திணிச்சு அதுக்கு ஒரு கை, கால் வைச்சு அதுக்குத் தானே சட்டை தைச்சுப் போடணும்னு நினைச்சா என்னாகும்?


ஹீரோவும் பாவம்.. அவரால முடிஞ்ச அளவுக்கு நடிச்சிருக்காரு.. "ஏண்டா சாதி சாதின்னு அலையுறீங்க.. நீ சாதிக்காக அலையலடா.. பணத்துக்காக அலைஞ்சிருக்க.. பணம்தானடா உனக்கு வேணும்.. இந்தா எடுத்துக்கடா.."ன்னு சுடுகாட்டுல மாமனை அடிச்சு கருவாடு பண்ணிப்போட்டு ஹீரோ பேசும்போது அவர் நடிப்பைப் பார்க்கணுமே, 'இனிமே நடிப்பைப் பத்தியே நாம பேசக்கூடாதுடா ராசா'ன்னு நினைச்சிட்டேன்.. செத்துப் போச்சு சாமி, வசனம்..


மாமன்காரன் பணம் வேணும்னுதான் பிளான் பண்ணி கொலை செஞ்சிருக்கான். ஓகே.. ‘நீ சாதிக்காக அலையலடா’ன்னு சொல்லும்போதே, ‘சாதின்னா என்னையில்ல வெட்டிருக்கணும்’னு கடைசில புதுசா ராமர் பாலம் ஸ்டைலுக்கு கதையைக் கொண்டு போய் விட்டுட்டாரு இயக்குநரு..


"பணமா-சாதியா? இல்லாட்டி.. மேல் சாதியா-கீழ் சாதியா? இல்லாட்டி.. சொந்தப் பிள்ளையா-தத்தெடுத்தப் பிள்ளையா?"ன்னு ஹைவேஸ் ரோட்டுல கொண்டு போயிருக்க வேண்டிய கதையை, கூவம் ஆத்துல இறக்கி நம்மளையும் சேத்துல ஒரு கால், சைதாப்பேட்டை பஸ்ஸ்டாண்ட்ல ஒரு கால்ன்னு நிக்க வைச்சு, மூக்கைப் பிடிக்க வைச்சுட்டாகப்பா..


இசை பரத்வாஜ். நன்றாகவே போட்டுள்ளார் மெட்டு.. அனைத்துப் பாடல்களும் மிக எளிமையாக உச்சரிக்கக் கூடிய நல்ல தமிழ் வார்த்தைகளாகவே அமைந்திருக்கின்றன. பாடல் வரிகளும் மிக எளிமை. இதற்கொரு பாராட்டுகள்.


எல்லா சினிமாக்காரர்களுக்கும் இருக்கும் ஒரு செண்டிமெண்ட் காட்சியைப் போல், கோவில் திருவிழாவில் கரகாட்டத்தைத் தூக்கிச் சாப்பிடும்விதமாக ஒரு குத்துப் பாட்டு டான்ஸ¤ம் உண்டு. அதிலும் சுத்தமான அட்சரத் தமிழில். ஆனா டான்ஸ¤..?


ஒரேயொரு விஷயத்தை மட்டும்தான் இயக்குநர் twist-ஆ செஞ்சிருக்காரு.. அது என்னன்னா..

அந்த அத்தைப் பொண்ணு அதாங்க மெயின் ஹீரோயின் அறிமுகமாகுறப்ப ஒரு பாட்டு இருக்குது சாமிகளா.. "உலக அழகி நான்தான்.." அப்படின்னு ஆரம்பிக்குற அந்தப் பாட்டின் துவக்கத்துல, முகத்துல வழியற எண்ணெய்யோட ஹீரோயின் பாடுறாங்க.. அதுவும் எப்படி? டைட் குளோஸப் ஷாட். யாருமே இப்படியொரு குளோஸப், அதுலேயும் இது மாதிரி புதிய ஹீரோயின்களுக்கு பாட்டு சீன்ல வைக்கவே மாட்டாங்க சாமிகளோவ்..


என்ன ஆச்சுன்னா.. தொடர்ந்து 30 செகண்ட்டுக்கு அந்தப் பாடலோட முதல் சரணம் முழுவதையும் அந்தப் பொண்ணு பாடுது.. அத்தனையும் டைட் குளோஸப் ஷாட். அதுல என்ன ஸ்பெஷலா தெரியுதுன்னா.. அந்தப் பொண்ணு நம்ம தமிழ்ல ‘ல’, ‘ழ’, ‘ள’ என்ற ‘ளகரங்களை’ நாக்கை மடித்து உச்சரிக்கின்ற அழகை, நிசமான அழகாகப் படம் பிடித்திருக்கிறார் இயக்குநர்.


சத்தியமாக படம் பார்த்த யாருமே அப்படியொரு ஷாட்டை எதிர்பார்க்கவில்லை. அத்தோடு அந்தப் பாடல் முழுக்கவே படமாக்கியிருக்கும் விதம் வித்தியாசமாக அமைந்திருந்தது. இந்தப் பாடல் காட்சி, தொலைக்காட்சிகளில் இந்த மாதம் முழுவதும் டாப் டென் வரிசையில் டாப் ஒன்னாக இருக்கும் என்று நான் நம்புகிறேன். வாய்ப்புக் கிடைத்தால் பார்க்காமல் விடாதீர்கள்.


இயக்குநருக்கு இது முதல் படம். எப்படியாச்சும் நல்ல பேர் வாங்கிரணும்னு நினைச்சுத்தான் முனைப்போட இருந்திருக்காரு. ஆனால்...


‘கலப்பு மணம் செய்றதுதான் ஜாதிகளை ஒழித்துக் கட்டுவதற்கு ஒரே வழி’ என்று நாடு முழுக்க சொல்லிக்கிட்டிருக்க.. ரெண்டு மணி நேரமா ‘கீழ் சாதி’.. ‘மேல் சாதி’ன்னு டயலாக்கை வைச்சு படம் எடுத்தா.. தியேட்டருக்கு வர்ற கலப்பு மணத் தம்பதிகளுக்கு எப்படியிருக்கும்? இல்ல.. அவுங்களைப் பெத்தவங்களுக்கு எப்படியிருக்கும்?


கேட்டா.. நாங்க சாதி ஒழிப்பை ஊக்குவித்துத்தான் படம் எடுத்திருக்கோம்பாங்க.. எப்படி? ரெண்டு மணி நேரமா ‘கீழ் சாதி’ன்னு சொல்லி அழுதுட்டு, கடைசி ஒரு செகண்ட்ல.. ஹீரோ அழுகுறாரா, சிரிக்கிறாரான்னே தெரியல.. அப்படியொரு ரேஞ்ச்ல முகத்தை வைச்சுக்கிட்டு, "எல்லாரும் மனுஷங்கதான்டா.. இதுல என்னடா மேல்சாதி.. கீழ்சாதி.." அப்படின்னு ஒரு டயலாக்கை விட்டுப்புட்டா, தமிழ்நாடு விழிப்புணர்வு பெற்றிடும்னு இயக்குநர் நினைச்சிட்டாரு போலிருக்கு..


அவர் பாவம்.. என்ன செய்வார்? எப்படியாவது ஜெயிக்கணும்.. தோத்தா அட்ரஸ் இல்லாம போயிருவோம்.. அதே மாதிரி நம்பி வந்த தயாரிப்பாளரும் முகத்தைச் சுழிக்காம பிரிவியூவுக்கு கூப்பிடணும். நமக்குத் தெரியாம படத்தை ரிலீஸ் பண்ணக்கூடாது.. அப்படி.. இப்படின்னு ஏகப்பட்ட வேண்டுதல்கள்..


அதான் எல்லா சாதியும் ஒண்ணா சேர்ந்தா எம்புட்டுக் குழப்பம் வருமோ, அப்படியொரு குழப்பமாகி இப்படி உண்மைத்தமிழன் ‘போஸ்ட்’ போடுற அளவுக்கு வந்திருச்சு..


கடைசிவரைக்கும் படிச்ச அத்தனை 'ஜாதிக்கார' தமிழர்களுக்கும் எனது நன்றிகள்..

34 comments:

தருமி said...

ஆனாலும் செம பொறுமை ஐயா உங்களுக்கு ..
இந்தப் படம் ரிலீசாகி 'ஓடிக்கிட்டு' இருக்கா?

Anonymous said...

திரைப்படத்தின் மொத்த கதை வசங்களையும் ஒரே பதிவில் எழுதிய எங்கள் அண்ணன் உண்மைத் தமிழன் வாழ்க!

Anonymous said...

அடப் பாவி!

நான் மொத்த படத்துக்குமே 3 பக்கம்தான் கதை எழுதினேன்!

யோவ் இது சினிமா விமர்சனமய்யா!

சீரியல் விமர்சனமில்லை!

Anonymous said...

இதை படிக்குறதுக்கு பதிலா நான் நடந்தே போய் பக்கத்தூரு கொட்டாயில படமே பார்த்துட்டு வந்திருப்பேன்!

பங்காளி... said...

விரைவில் நீங்கள் ஒரு புது படத்திற்கு இயக்குனராக வேண்டுமென சாபம் கொடுக்கிறேன்....

என் சாபம் சட்டுனு பலிக்கும்னு சொல்வாகப்பு...அதுனால இப்பவே ஒக்காந்து ஒரு நல்ல கதையா யோசிங்க....இல்லைன்னா நாளபின்ன இங்க சபையில உங்களயும் எவனாவது தோலுறிச்சுருவான் ஜாக்ரதை...ஹி..ஹி...

ACE !! said...

யப்பா.. படத்த எத்தனை தடவை பாத்தீங்க?? இந்த அலசு அலசி இருக்கீங்க :D

உண்மைத்தமிழன் said...

//தருமி said...
ஆனாலும் செம பொறுமை ஐயா உங்களுக்கு.. இந்தப் படம் ரிலீசாகி 'ஓடிக்கிட்டு' இருக்கா?//

ஐயா.. பேராசிரியரே.. போன வெள்ளிக்கிழமைதான் படம் ரிலீஸாயிருக்கு.. நாலு நாள்தான் சாமி ஆச்சு.. அதுக்குள்ள இப்படி ஒரு கேள்வியா?

உண்மைத்தமிழன் said...

//பங்காளி... said...
விரைவில் நீங்கள் ஒரு புது படத்திற்கு இயக்குனராக வேண்டுமென சாபம் கொடுக்கிறேன்....
என் சாபம் சட்டுனு பலிக்கும்னு சொல்வாகப்பு...அதுனால இப்பவே ஒக்காந்து ஒரு நல்ல கதையா யோசிங்க....இல்லைன்னா நாளபின்ன இங்க சபையில உங்களயும் எவனாவது தோலுறிச்சுருவான் ஜாக்ரதை...ஹி..ஹி...//

பங்காளி.. பேருக்கேத்தாப்புலதான் ஐடியா கொடுக்கீரு.. இப்ப என்ன யோசிக்கிறது? ஏற்கெனவே பண்ணி வைச்சிருக்கேன்.. தயாரிப்புதான் சிக்க மாட்டேங்குது.. நீங்க வர்றீங்களா பங்கு..?

ஆனாலும் ஒண்ணு உண்மை.. என்னையும் ஒருத்தன் கண்டிப்பா தோலுறிக்கத்தான் செய்வான்.. அதுதான் உலகம்..

உண்மைத்தமிழன் said...

//சிங்கம்லே ACE !! said...
யப்பா.. படத்த எத்தனை தடவை பாத்தீங்க?? இந்த அலசு அலசி இருக்கீங்க :D//

ஒரு வாட்டிதான் சிங்கம்.. அதுக்கே இப்படி ஆயிப் போச்சு.. நல்லாயிருந்துச்சுல்ல.. அந்த பாட்டு சீனை மட்டும் மறந்திராதீங்க.. பாருங்க.. பார்த்துட்டுச் சொல்லுங்க..

துளசி கோபால் said...

உண்மையைச் சொன்னா இந்தப் படம் இங்கே எனக்கு மொதல்லே வந்துருக்கணும்.

ஹைய்யா.........இந்த மாதிரிப் படங்களுக்கு விமரிசனம் எழுத இப்ப வேற
ஆள் கிடைச்சிருச்சு.

நான் நிதானமா என் சோலியைப் பார்க்கலாம், இனிமே:-)))))

உண்மைத்தமிழன் said...

//முழுதும் படித்தவன் said...
திரைப்படத்தின் மொத்த கதை வசங்களையும் ஒரே பதிவில் எழுதிய எங்கள் அண்ணன் உண்மைத் தமிழன் வாழ்க!//

அடப்பாவி படிச்சவனே.. நான் எங்கனய்யா மொத்த வசனத்தையும் எழுதிருக்கேன்..? கொஞ்சம்தான்.. கால்வாசிதான் எழுதியிருக்கேன்.. வேணும்னா படத்தைப் பார்த்திட்டு வந்து சொல்லுப்பா..

உண்மைத்தமிழன் said...

//படத்தின் இயக்குனர் said...
அடப் பாவி! நான் மொத்த படத்துக்குமே 3 பக்கம்தான் கதை எழுதினேன்! யோவ் இது சினிமா விமர்சனமய்யா!
சீரியல் விமர்சனமில்லை!//

இயக்குநர் ஸார்.. சினிமாவா? அப்போ நான்தான் சீரியல்ன்னு நினைச்சு எழுதிப்புட்டனா..? ஸோ ஸாரி ஸார்.. உங்களோட அடுத்தப் படத்தை நிச்சயம் நல்லபடியா எழுதிர்றேன்.. ஓகேவா ஸார்..

உண்மைத்தமிழன் said...

//மூச்சு வாங்க படித்தவன் said...
இதை படிக்குறதுக்கு பதிலா நான் நடந்தே போய் பக்கத்தூரு கொட்டாயில படமே பார்த்துட்டு வந்திருப்பேன்!//

இப்பவும் ஒண்ணும் மோசமில்ல.. அப்படியே நடந்து போய் படத்தைப் பார்த்துப்புட்டு நீங்களும் உங்க சோகத்தை ஒரு பதிவா போடுங்க.. 'நாட்ல' பதிவுகள் பஞ்சமாயிருச்சு படித்தவரே..

Anonymous said...

இங்கே கும்மிக்கு அனுமதி உண்டா?

ஆட்களை அனுப்பலாமா?

வருடாந்திர காண்ட்ராக்டில் மாபெரும் சலுகைகள்!

Anonymous said...

எது உம்மை அடைய வேண்டுமோ
அது உம்மை அடைந்துவிட்டது!

எதை நீ அடையவேண்டுமோ
அதை நீ விரைவில் அடைவாய்!

உண்மைத்தமிழன் said...

//துளசி கோபால் said...
உண்மையைச் சொன்னா இந்தப் படம் இங்கே எனக்கு மொதல்லே வந்துருக்கணும்.
ஹைய்யா.........இந்த மாதிரிப் படங்களுக்கு விமரிசனம் எழுத இப்ப வேற
ஆள் கிடைச்சிருச்சு.
நான் நிதானமா என் சோலியைப் பார்க்கலாம், இனிமே:-)))))//

ஐயையோ.. அப்ப டீச்சரோட வேலைல கை வைச்சிட்டனா..? இப்படி படத்தையெல்லாம் டீச்சர் விரும்பிப் பார்ப்பாங்கன்னு எனக்குத் தெரியாம போயிருச்சே....

டீச்சர் படத்தைப் பார்த்துட்டு மறுபடியும் உங்க கருத்தையும் போடுங்களேன்.. நானும் தெரிஞ்சுக்குறேன்..

ஏன்னா இது மாதிரி வரிசையா நிறைய படம் கியூல நிக்குது.. யார் அல்லாத்தையும் எழுதுறது..? உங்ககிட்ட கொஞ்சம் தள்ளி விடுறேன்..

உண்மைத்தமிழன் said...

//சீனியர் மேனேஜர், மேன்பவர் கன்சல்டன்ஸி said...
இங்கே கும்மிக்கு அனுமதி உண்டா? ஆட்களை அனுப்பலாமா? வருடாந்திர காண்ட்ராக்டில் மாபெரும் சலுகைகள்!//

மொதல்ல 'சலுகைகள்' என்னன்னு சொல்லுங்கப்பா.. அப்பால வருஷ காண்ட்ராக்ட்டா? மாச காண்ட்ராக்ட்டா பார்க்கலாம்?

சந்திப்பு said...

தமிழா உண்மைத் தமிழா ஒரு டாக்குமெண்டரி பார்த்தா மாதிரி இருந்துச்சு.............

உண்மைத்தமிழன் said...

//யாமிருக்க பயமேன் said...
எது உம்மை அடைய வேண்டுமோ
அது உம்மை அடைந்துவிட்டது!
எதை நீ அடையவேண்டுமோ
அதை நீ விரைவில் அடைவாய்!//

முருகா உன் வாக்கே வாக்கு.. நீ எப்போதும் என் உடன் இருந்தாலே போதும்.. 'எதை'யும் நான் அடைவேன்..

Anonymous said...

//முருகா உன் வாக்கே வாக்கு.. நீ எப்போதும் என் உடன் இருந்தாலே போதும்.. 'எதை'யும் நான் அடைவேன்..
//

அதெல்லாம் இருக்கட்டும்! முதலில் உம்மை நாடி வந்த பொருளை அடையாளம் கண்டு கொண்டீரா?

உண்மைத்தமிழன் said...

//சந்திப்பு said...
தமிழா உண்மைத் தமிழா ஒரு டாக்குமெண்டரி பார்த்தா மாதிரி இருந்துச்சு.............//

சந்தோஷம் சந்திப்பு ஸார்... அதுக்காக படத்தை பார்க்காம இருந்திராதீங்க.. படத்தையும் பார்த்திருங்க..

உண்மைத்தமிழன் said...

///யாமிருக்க பயமேன் said...
//முருகா உன் வாக்கே வாக்கு.. நீ எப்போதும் என் உடன் இருந்தாலே போதும்.. 'எதை'யும் நான் அடைவேன்..
//
அதெல்லாம் இருக்கட்டும்! முதலில் உம்மை நாடி வந்த பொருளை அடையாளம் கண்டு கொண்டீரா?///

'பொருள்'தானே.. பத்திரமா இன்னிக்கு வீட்ல வைச்சுட்டுத்தான் ஆபீஸ்க்கு வந்திருக்கேன்.. 'அதை'த்தான சொன்ன முருகா.?.

Anonymous said...

//பத்திரமா இன்னிக்கு வீட்ல வைச்சுட்டுத்தான் ஆபீஸ்க்கு வந்திருக்கேன்//

ம்ஹூம். கஷ்டம்!

அவ்ளோ சொல்லியும் ஹெல்மட்டை வீட்லயே வெச்சிட்டுத்தான் வந்திருக்கேன்னு பெருமையா சொல்றாரு பாரு முருகா!

கதிரவன் said...

விமரிசனம் நல்லாத்தான் இருக்கு..பங்காளியின் சாபத்தை நானும் வழிமொழிகிறேன்

ஆனாலும் ரொம்ப பொறுமைங்க உங்களுக்கு; எல்லாப்பதிவுமே ஒரு 3பக்கத்துக்கு குறைஞ்சு இருக்கக்கூடாதுன்னு முடிவோடத்தான் எழுதறீங்களா ?

அப்டி இல்லன்னா, துக்ளக் கார்ட்டூன் போட்டு சமாளிச்சடறீங்க..

உண்மைத்தமிழன் said...

//கதிரவன் said...
விமரிசனம் நல்லாத்தான் இருக்கு..பங்காளியின் சாபத்தை நானும் வழிமொழிகிறேன்
ஆனாலும் ரொம்ப பொறுமைங்க உங்களுக்கு; எல்லாப்பதிவுமே ஒரு 3பக்கத்துக்கு குறைஞ்சு இருக்கக்கூடாதுன்னு முடிவோடத்தான் எழுதறீங்களா ?
அப்டி இல்லன்னா, துக்ளக் கார்ட்டூன் போட்டு சமாளிச்சடறீங்க..//

கதிரவன் ஸார்.. நீங்கள் வழிமொழியும் அந்த சாபத்தை நான் மனப்பூர்வமாக ஏற்றுக் கொள்கிறேன். ஒருவேளை உங்கள் சாபம் பலித்தால் உங்களுடைய பதிவை அப்போது நான் ஆவலுடன் எதிர்பார்ப்பேன்.
எனக்கு எதுக்கு ஸார் பொறுமை? படிக்கிற உங்களுக்குத்தான் ஸார் நிறையவே இருக்கு. இல்லாட்டி 8 பக்க மேட்டரை கடைசிவரைக்கும் படிச்சிட்டு எனக்குப் பின்னூட்டமும் போடுவீங்களா? சாமிகளா இதுக்கே உங்களுக்கு காவடி தூக்கணும் நான்.. செய்ற நேரம் வந்தா அதையும் செய்றேன்..
துக்ளக் கார்ட்டூன் போடுறது நேரத்தை மிச்சப்படுத்த அல்ல.. அதில் சொல்லப்பட்டிருக்கும் விஷயம் எனக்குப் பிடித்திருந்தால் எடுத்துப் போடுவேன்.. அவ்வளவுதான்..

உண்மைத்தமிழன் said...

///இன்னொரு பக்தன் said...
//பத்திரமா இன்னிக்கு வீட்ல வைச்சுட்டுத்தான் ஆபீஸ்க்கு வந்திருக்கேன்//
ம்ஹூம். கஷ்டம்! அவ்ளோ சொல்லியும் ஹெல்மட்டை வீட்லயே வெச்சிட்டுத்தான் வந்திருக்கேன்னு பெருமையா சொல்றாரு பாரு முருகா!///

முருகா.. அதான் நீ எப்போதும் என்கூட இருக்கியே.. அது போதாதா? அப்பறம் எதுக்கு அந்தக் கருமாந்திரம்..?

மணிகண்டன் said...

இப்படி ஒரு அருமையான படம் வந்திருக்கறது உங்க பதிவை படிச்சு தான் தெரிஞ்சுகிட்டேன். இப்படிபட்ட மொக்கை படத்துக்கு பொறுமையா மூனு பக்கம் விமர்சனம் எழுதி எங்களையும் படிக்க வச்சு ...ஹும் என்னத்த சொல்ல :)

சிறில் அலெக்ஸ் said...

பிறப்பு பட விமர்சனத்த படிச்சா இறப்பு வந்திரும்போல.. அப்புறம டயம் இருந்தா வர்றேன்..

பி:கு: உங்க கோபத்த பாதி படிச்சே புரிஞ்சுகிட்டேன்.

:)

உண்மைத்தமிழன் said...

//மணிகண்டன் said...
இப்படி ஒரு அருமையான படம் வந்திருக்கறது உங்க பதிவை படிச்சு தான் தெரிஞ்சுகிட்டேன். இப்படிபட்ட மொக்கை படத்துக்கு பொறுமையா மூனு பக்கம் விமர்சனம் எழுதி எங்களையும் படிக்க வச்சு ...ஹும் என்னத்த சொல்ல :)//

மணிகண்டன் ஸார்.. படம் குப்பை என்று நான் சொல்ல வரவில்லை. எதையோ சொல்ல வந்த இயக்குநர் வேறு எதையோ சொல்லிவிட்டார். படத்தைப் பார்த்தீர்களானால் புரியும்.. காட்சியமைப்புகளில் வித்தியாசம் காட்ட நினைத்துள்ளார். ஆனால் அது பாதியிலேயே முடிந்துவிட்டது.. இது கண்டிப்பாக மொக்கை படம் அல்ல. பாருங்கள்..

அதென்ன மூணு பக்கம்? எட்டுப் பக்கம் சாமி.. கடைசில எடிட் செஞ்சு ஏழு பக்கமா குறைச்சேன். சிவாஜிக்கு இருக்கு இருபது பக்கத்துக்கு விமர்சனம்.. மறக்காம வந்திருங்க..

உண்மைத்தமிழன் said...

//சிறில் அலெக்ஸ் said...
பிறப்பு பட விமர்சனத்த படிச்சா இறப்பு வந்திரும்போல.. அப்புறம டயம் இருந்தா வர்றேன்..
பி:கு: உங்க கோபத்த பாதி படிச்சே புரிஞ்சுகிட்டேன்.//

தலீவா.. இப்படியெல்லாம் நடுவுல எஸ்கேப்பாகக் கூடாது தலைவா.. இங்க எனக்கு டென்ஷனாகுதுல்ல.. அப்படியே போனாலும் போனியே.. போயே ஒரு நாளாச்சு.. எப்ப வருவீக..?

கோபமெல்லாம் இல்ல ஸார்.. வெறும் ஆதங்கம் மட்டும்தான்..

Anonymous said...

உங்கள் பெயரில் ஆங்காங்கே போலி பின்னூட்டங்கள் போடப்படுகின்றன. உடனடியாக ஒரு சுயவிளக்க பதிவிட்டு உண்மையை சொல்லுங்கல்.

-ஒரு நலம் விரும்பி

Madhu Ramanujam said...

///
//சந்திப்பு said...
தமிழா உண்மைத் தமிழா ஒரு டாக்குமெண்டரி பார்த்தா மாதிரி இருந்துச்சு.............//

சந்தோஷம் சந்திப்பு ஸார்... அதுக்காக படத்தை பார்க்காம இருந்திராதீங்க.. படத்தையும் பார்த்திருங்க..
///

இவ்வளவும் பேசிட்டு எங்களை போய் படம் பார்க்க சொல்றீங்களே. உங்களுக்கு என்ன துணிச்சல் ?!?

உண்மைத்தமிழன் said...

//Anonymous said...
உங்கள் பெயரில் ஆங்காங்கே போலி பின்னூட்டங்கள் போடப்படுகின்றன. உடனடியாக ஒரு சுயவிளக்க பதிவிட்டு உண்மையை சொல்லுங்கல்.
-ஒரு நலம் விரும்பி//

அனானி தெய்வமே? நான் எத்தனை இடத்துக்குத்தான் ஓடுறது.. என்னால முடியலப்பா சாமி.. அவன் என்னமோ செஞ்சிப்புட்டுப் போறான்.. என்னிக்கோ ஒரு நாள் சிக்குவான்ல அன்னிக்கு வைச்சுக்குறேன்.. தகவலுக்கு ரொம்பத் தேங்க்ஸ் ஸார்..

உண்மைத்தமிழன் said...

மதுசூதனன் / Madhusudhanan said...
//சந்திப்பு said...
தமிழா உண்மைத் தமிழா ஒரு டாக்குமெண்டரி பார்த்தா மாதிரி இருந்துச்சு.............//
சந்தோஷம் சந்திப்பு ஸார்... அதுக்காக படத்தை பார்க்காம இருந்திராதீங்க.. படத்தையும் பார்த்திருங்க..///
இவ்வளவும் பேசிட்டு எங்களை போய் படம் பார்க்க சொல்றீங்களே. உங்களுக்கு என்ன துணிச்சல் ?!?

மது.. ஒவ்வொருவரின் பார்வையும் வேறு வேறு அல்லவா? ஒருவேளை நீங்கள் பின்னால் இதனைப் பார்க்க நேர்ந்து படம் பிடித்திருந்தால் என் மீது தானாகவே வருத்தம் வருமே.. அதனால்தான் சொன்னேன்.. நீங்களும் சென்று பார்த்துவிடுங்கள்.