04-06-2007
என் இனிய வலைத்தமிழ் மக்களே..!
ஹெல்மெட் விஷயத்தில் ஆரம்பத்திலிருந்தே தினமும் ஒரு செய்தியை தெரிவித்து வரும் தமிழக அரசு இன்றைக்கு மேலும் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.
நேற்று தமிழக முதல்வர் வெளியிட்ட அறிக்கையின்படியே, "ஹெல்மெட் போடலாமா..? வேண்டாமா..?" என்றெல்லாம் சென்னையில் யாருக்கும் புரியாத நிலையில், இன்றைய செய்திக் குறிப்பில், "வாகனங்களில் பின்னால் அமர்ந்து செல்பவர்கள் ஹெல்மெட் அணிவதும், அணியாததும் அவர்களுடைய இஷ்டம்.." என்று சொல்லி முடித்திருக்கிறார்கள்.
தமிழக அரசு இன்றைக்கு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு :
"மத்திய அரசு உருவாக்கியுள்ள மோட்டார் வாகன சட்ட விதிகளின்படி ஹெல்மெட் அணிந்து செல்ல வேண்டுமென்பது கட்டாயம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன் தொடர்ச்சியாக 01.06.2007 முதல் இந்த விதி, சென்னை உள்ளிட்ட ஆறு மாநகராட்சிகளில் இரு சக்கர வாகனங்களை ஓட்டுபவர்களும், அந்த வாகனங்களின் பின்னே அமர்ந்து செல்பவர்களும் ஹெல்மெட் அணிந்து செல்வது கட்டாயமாக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.
இதற்கிடையே வாகனங்களின் பின்னே அமர்ந்து செல்லும் தாய்மார்கள், மற்றும் குழந்தைகள் ஹெல்மெட் அணிந்து செல்வதால் ஏற்படும் இடையூறுகளைப் பற்றி முறையீடுகள் அரசுக்குத் தொடர்ந்து வந்து கொண்டேயிருப்பதன் பேரில்,
வாகனங்களின் பின்னே அமர்ந்திருப்பவர்களுக்கும் அவ்வாறு அணிந்து செல்வதுதான் அவர்களுடைய உயிருக்குப் பாதுகாப்பாக அமையும் என்ற போதிலும்,
அதனை அணிந்து கொள்ள அவர்களில் பலர் எதிர்ப்புத் தெரிவிக்கின்ற நிலையில்,
இதனை அணிந்து கொள்ள வேண்டுமென்பதை வாகனங்களில் பின்னே அமர்ந்து செல்லும் பெண்கள், மற்றும் குழந்தைகளின் விருப்பத்திற்கே விட்டுவிடலாம் என்று தெரிவிக்கப்படுகிறது.."
இப்போதைக்கு இதுதான் ஹெல்மெட் விஷயத்தில் தமிழக அரசின் நிலைமை. நாளை எப்படியோ?
அது ஆண்டவனுக்குத்தான் தெரியும்..
|
Tweet |
23 comments:
ஊழலை விஞ்ஞானப்பூர்வமாக செய்து சாதனை செய்த ஒருவர் தலைமையில் பயிற்சி பெற்ற பெருந்தகையினர் செய்யும் ஆட்சி இது.
ரூ.250 பெறுமானமுள்ள ஒரு ஹெல்மெட் - ரூ.600 முதல் 800 வரை.
இதில் தலைவருக்கு கமிசன் இல்லாமலா இப்படி குழப்படி சட்டம் போடுவார்...
இதில் vat வந்ததா??
விற்பனை வரி காட்டப்பட்டதா??
ஸ்டாக் சரியானபடி கண்காணிக்கப் பட்டதா??
ISI சான்றிதழ் சரிபார்க்கப் பட்டதா!??
என் வீட்டருகிலிருந்த மளிகை கடையில் விற்கப்பட்ட அந்த ஹெல்மெட்டிற்க்கு மேற்ச்சொன்ன எதுவுமே இல்லை.
வெறுத்துப் போச்சுங்க இந்த சனநாயகம்.
ஆண்டவன் என்பவன் ஒருவன் உண்மையில் இருந்தால்.....
இவர்கள் எல்லாம் இப்படி ஆடுவார்களா!
அது சரி இவர்கள் தான் அய்யா வழி வந்தவர்களாயிற்றே!
இந்த ஆட்டுமந்தைக்கூட்டம் என்று தான் திருந்துமோ!
அடித்துக் கொல்லவேண்டும் அரசியல் வாதிகளினை........!!
நல்லா வருது வாயில. ஒழுங்கா ஒரு சட்டத்தைப் போட்டு நடைமுறைப் படுத்த திராணி இல்லையா?
கேட்டா கருணையுள்ளத்துடன் பரிசீலித்த முதல்வராமாம்? கலைஞர் சில சமயம் செய்யும் இது போன்ற நாடகங்கள் வெறுப்பை அளிக்கின்றன.
கமிஷனோ மே 30 வரைக்குந்தான் ஹெல்மெட் கம்பேனிகாரன் தரப்போரான்.கடைசி தேதி முடிஞ்சாச்சு, இனிமே எவன் வாங்கனாலும் அதுல நமக்கு கமிஷன் கிடையாது. விலக்கு அளித்து சில ஓட்டுகளையாவது வாங்க பாக்கலாம்.
என்னப்பா இரண்டு பேரும், அநியாய விலைக்கு, ஹெல்மெட் வாங்கி, நொந்த பீலிங் தெரியுது.
இவ்வளவு கோபம் வர்றது நந்தா உடம்புக்கு நல்லதில்லை.
///நேற்று தமிழக முதல்வர் வெளியிட்ட அறிக்கையின்படியே, "ஹெல்மெட் போடலாமா..? வேண்டாமா..?" என்றெல்லாம் சென்னையில் யாருக்கும் புரியாத நிலையில்,///
================================================================
>>பொதுமக்கள் கோரிக்கையை ஏற்று இந்த விஷயத்தில் போலீஸ் நெருக்கடி வேண்டாம் என அறிவித்தார் முதல்வர் கருணாநிதி. >>
>>""திட்டத்தை அதிதீவிரமாக நடைமுறைப்படுத்தி பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்திவிடக் கூடாது"" என்று முதல்வர் கருணாநிதி>>
>>தவிரவும், "ஹெல்மெட் நீக்கம்' என்று அரசாணையாக இந்த உத்தரவு வெளியிடப்படவில்லை.>>
================================================================
தமிழன் சார்,
இது கூட புரியலயா உங்களுக்கு??
இது "ஒவர் ட்டு காவல் துறை"
மாச கடைசில ருல்ச காட்டி காசு புடுங்க இன்னும் ஒரு வழி!!
இன்னும் என்னவெல்லாம் வரப்போகுதோ?...........ஆன்டவா!!!!
இந்த நாடும் நாட்டு மக்களும் நல்லா இருக்கட்டும்!!!!
விரக்தியுடன்,பாலு.
///கையாலாகாத ஒரு தமிழக வாக்காளான் said...
ஊழலை விஞ்ஞானப்பூர்வமாக செய்து சாதனை செய்த ஒருவர் தலைமையில் பயிற்சி பெற்ற பெருந்தகையினர் செய்யும் ஆட்சி இது.//
உண்மை.. உண்மை.. உண்மையைத் தவிர வேறில்லை..
//ரூ.250 பெறுமானமுள்ள ஒரு ஹெல்மெட் - ரூ.600 முதல் 800 வரை.//
கடைசி நிமிடத்தில் எவ்வளவுக்கு ஏற்றி விட்டாலும் வாங்குவார்கள். விற்கும் என்பது பேராசை வியாபாரிகளின் அவா. கடைசி நிமிடத்தில் சட்டம் அகற்றப்படும் என்று கடைசி சில மணி நேரங்கள் வரையிலும் காத்திருந்தது மக்களின் ஆசை.. இங்கே அரசியல்வாதிகளின் ஆசைதானே செல்லும்.
//இதில் தலைவருக்கு கமிசன் இல்லாமலா இப்படி குழப்படி சட்டம் போடுவார்...
இதில் vat வந்ததா?? விற்பனை வரி காட்டப்பட்டதா?? ஸ்டாக் சரியானபடி கண்காணிக்கப் பட்டதா??
ISI சான்றிதழ் சரிபார்க்கப் பட்டதா!?? என் வீட்டருகிலிருந்த மளிகை கடையில் விற்கப்பட்ட அந்த ஹெல்மெட்டிற்க்கு மேற்ச்சொன்ன எதுவுமே இல்லை. வெறுத்துப் போச்சுங்க இந்த சனநாயகம்.//
இல்லை.. இதுதான் ஜனநாயகம். நமது அரசியல்வாதிகளின் ஜனநாயகம். நீங்கள் ஜனநாயகம் என்று எதையாவது நினைத்துக் கொண்டால் அதற்கு அவர்கள் பொறுப்பாக முடியாது மிஸ்டர் வாக்காளன் ஸார்..
//ஆண்டவன் என்பவன் ஒருவன் உண்மையில் இருந்தால்..... இவர்கள் எல்லாம் இப்படி ஆடுவார்களா!//
இருப்பதால்தான் ஆடுகிறார்கள். ஆண்டவன் எப்பவும் நின்றுதான் கொல்வான்.. அவரவர் வினைப் பயனை அவரவர் அனுபவிக்காமல் உடல் நீக்க முடியாது.. கோபம் வேண்டாம்..
//அது சரி இவர்கள் தான் அய்யா வழி வந்தவர்களாயிற்றே! இந்த ஆட்டுமந்தைக்கூட்டம் என்று தான் திருந்துமோ! அடித்துக் கொல்லவேண்டும் அரசியல் வாதிகளினை........!!//
ஐயா வழி வந்ததாக யார் சொன்னது? ஐயா சொன்னாரா? எப்போது? இவர்களாகவே சொல்லிக் கொண்டு ஐயாவை நாம் இப்போது குற்றம் சாட்டக்கூடாது.. இது ஆட்டு மந்தைக் கூட்டம்தான்.. என்ன செய்ய வாக்காளர்களுக்கு எப்போது தங்களது சக்தி புரியுமோ அதுவரைக்கும் இந்த ஆட்டு மந்தைகள் சிங்கங்கள் போல் பாவனை செய்யத்தான் செய்யும். விழிப்புணர்வு நமக்குத்தான் வேண்டாம் வாக்காளர் ஸார்.. அரசியல்வாதிகளை அடித்துக் கொல்லும் பாவம் உங்களுக்கு வேண்டாம்.. அவர்களாகவே தொலைந்து போகட்டும்.. விட்டு விடுங்கள்..
//Nandha said...
நல்லா வருது வாயில. ஒழுங்கா ஒரு சட்டத்தைப் போட்டு நடைமுறைப் படுத்த திராணி இல்லையா?
கேட்டா கருணையுள்ளத்துடன் பரிசீலித்த முதல்வராமாம்? கலைஞர் சில சமயம் செய்யும் இது போன்ற நாடகங்கள் வெறுப்பை அளிக்கின்றன.//
நாடகமேதான்.. 450 கோடிக்கு கமிஷன் எவ்வளவு போயிருக்கும் என்று நினைக்கிறாய் நந்தா.. முடிந்தது.. இப்போது மக்கள் மீது கருணை காட்டுவது போல் ஒரு டிராமா அவ்ளோதான்.. வெறுப்பாகத்தான் இருக்கிறது.. ஆனால் என்ன செய்ய? நமக்குப் பழக்கமில்லாததா என்ன?
//ராஜ் டி.வி செதி said...
கமிஷனோ மே 30 வரைக்குந்தான் ஹெல்மெட் கம்பேனிகாரன் தரப்போரான்.கடைசி தேதி முடிஞ்சாச்சு, இனிமே எவன் வாங்கனாலும் அதுல நமக்கு கமிஷன் கிடையாது. விலக்கு அளித்து சில ஓட்டுகளையாவது வாங்க பாக்கலாம்//
நான் நந்தாவுக்குப் பதில் சொன்னதை பட்டுன்னு பிடிச்சிட்ட... சரி.. ராஜ் டிவில இப்படியாச்சும் ஒரு நல்ல நியூஸ் சொல்லுங்கப்பா..
//நொந்தகுமாரன் said...
என்னப்பா இரண்டு பேரும், அநியாய விலைக்கு, ஹெல்மெட் வாங்கி, நொந்த பீலிங் தெரியுது.
இவ்வளவு கோபம் வர்றது நந்தா உடம்புக்கு நல்லதில்லை//
அநியாயம்தான் நொந்தகுமாரன். 435 ரூபாய் ஹெல்மெட் 825 ரூபாய்க்கு விலை போனது தெரியுமா? எனக்கு அது ஒரு மாத சாப்பாட்டுக்கான காசு.. என் வயித்துல அடிச்சீட்டிங்களேடா பாவிகளா..? அதான் நந்தா தம்பிக்கு கோபம்.. பசித்தவனுக்குத்தான் உணவின் அருமை தெரியும்..
பாலு said...
///நேற்று தமிழக முதல்வர் வெளியிட்ட அறிக்கையின்படியே, "ஹெல்மெட் போடலாமா..? வேண்டாமா..?" என்றெல்லாம் சென்னையில் யாருக்கும் புரியாத நிலையில்,///
தமிழன் சார்,
இது கூட புரியலயா உங்களுக்கு??
இது "ஒவர் ட்டு காவல் துறை"
மாச கடைசில ருல்ச காட்டி காசு புடுங்க இன்னும் ஒரு வழி!!
இன்னும் என்னவெல்லாம் வரப்போகுதோ?...........ஆன்டவா!!!!
இந்த நாடும் நாட்டு மக்களும் நல்லா இருக்கட்டும்!!!!
விரக்தியுடன்,பாலு.//
இப்படி வேண்டிக் கொள்வதைவிட எனக்கும் வேறு வழியில்லை பாலு.. நன்றிகள்..
நான் ஒரு மேட்டரை சொல்லணும். நான் ஹெல்மெட் வாங்கி ஒரு வருஷம் ஆச்சு. வண்டி வாங்கினப்பவே நான் வாங்கிட்டேன்.
இது நான் ஏமாந்ததால வந்த கோபம் இல்லை. ஒரு நல்ல சட்டத்தை உருப்படியாக போட்டு நடைமுறைப் படுத்தத் தெரியாத ஒரு கையாலாகாத அரசின் மீது எழுந்த ஒரு தார்மீக கோபம் அவ்வளவே..
எல்லாவற்றையும் செய்து விட்டு செய்தி வாசிப்பின் போது அவர்கள் சொன்ன அந்த வார்த்தை "தாயுள்ளத்துடன் பரிசீலித்த முதல்வர்" துதி பாட சொல்வதில் அம்மாவையே மிஞ்சி வாடுவாரோ கலைஞர் என்று தோன்றுகிறது.
நாட்டில் பெருத்துக்கிட்டே போகும் 'கூட்டம்' கொஞ்சம் குறையட்டும் என்ற 'நல்ல' எண்ணத்துடன்,
சட்டம் பின்வாங்கப் பட்டுள்ளது என்று யாருமே நினைக்கமாட்டீங்களா? அடப் போப்பா............
'ஹெல்மெட்' பற்றி இன்றைய(04-06-2007) தமிழக அரசின் புதிய அறிக்கை.
என்று தலைப்பு வையுங்கள் அது தான் சரி.
ஏன்னா இன்னைக்கு(05-06-2007) ஏதோ புதுசா அறிவுப்பு வந்திருக்கோன்னு நினைச்சுட்டேன்.
//துளசி கோபால் said...
நாட்டில் பெருத்துக்கிட்டே போகும் 'கூட்டம்' கொஞ்சம் குறையட்டும் என்ற 'நல்ல' எண்ணத்துடன்,
சட்டம் பின்வாங்கப் பட்டுள்ளது என்று யாருமே நினைக்கமாட்டீங்களா? அடப் போப்பா............//
அப்படிப் போடுங்க.. நமக்கெல்லாம் இந்த பாயிண்ட் தோணலையே.. டீச்சர்ல்ல.. அதான் கூட்டல், கழித்தல்ல கரீட்க்ட்டா இருக்காக போலிருக்கு.. டீச்சரம்மா வாழ்க..
//வெங்கட்ராமன் said...
'ஹெல்மெட்' பற்றி இன்றைய(04-06-2007) தமிழக அரசின் புதிய அறிக்கை.
என்று தலைப்பு வையுங்கள் அது தான் சரி.
ஏன்னா இன்னைக்கு(05-06-2007) ஏதோ புதுசா அறிவுப்பு வந்திருக்கோன்னு நினைச்சுட்டேன்.//
நேத்துப் போட்ட பதிவு வெங்கட் ஸார்.. எப்பவும் தேதியையும் சேர்த்துத்தான் போடுவேன்.. நேத்து அவசரமாப் போட்டதுனால மிஸ்ஸாயிருச்சு.. ஸாரி ஸார்..
உங்களது ஹெல்மெட் பதிவுகள் அருமை. தமிழ்மண விவாதக்களம் ஹெல்மெட் விவாதத்தில் தருமி கொடுத்திருப்பதை போல உங்கள் ஹெல்மெட் விவாதங்களின் லிங்குகளை கொடுங்கள்.
Anna inga konjam poi parunga.
http://truetamilan.blogspot.com/
Yethavathu pannunga, ivan ippave velaya katta aarampichitan, unga perla pala idathula comment potutu irukan.
உண்மை தமிழன் சார் உங்க பேர்ல போலி பிண்ணூட்டங்கள் நிறைய வருது போல கொஞசம் கவனியுங்க.
http://amkworld.blogspot.com/2007/06/blog-post_05.html
என் பதிவுலயும் போலி பின்னூட்டம் வந்தது நீக்கி விட்டேன்
http://rajapattai.blogspot.com/2007/06/25.html
//Anonymous said...
உங்களது ஹெல்மெட் பதிவுகள் அருமை. தமிழ்மண விவாதக்களம் ஹெல்மெட் விவாதத்தில் தருமி கொடுத்திருப்பதை போல உங்கள் ஹெல்மெட் விவாதங்களின் லிங்குகளை கொடுங்கள்.//
அனானி.. எதற்காக இந்த அழைப்பு என்று போய் பார்த்த பிறகு தெரிகிறது.. நீங்களே போலியான பெயரில் போட்டுவிட்டு அதைப் பார்க்க அழைப்பு வேறு விடுக்கிறீர்கள்.. உங்களையெல்லாம்....
//Anonymous said...
Anna inga konjam poi parunga.
http://truetamilan.blogspot.com/
Yethavathu pannunga, ivan ippave velaya katta aarampichitan, unga perla pala idathula comment potutu irukan.//
என்ன செய்றது தம்பி? உனக்கு முன்னாடி இருக்குற அனானிதான் அந்தாளு.. ஏன் நீயாக்கூட இருக்கலாம்.. இங்கதான் 'அனானியிஸம்' நல்லா ஆலமரம் கணக்கா வளர்ந்திருக்கே.. நான் ஒத்த ஆளு.. என்னத்த செய்யறது? எப்படியோ போய்த் தொலைங்க..
//வெங்கட்ராமன் said...
உண்மை தமிழன் சார் உங்க பேர்ல போலி பிண்ணூட்டங்கள் நிறைய வருது போல கொஞசம் கவனியுங்க.
http://amkworld.blogspot.com/2007/06/blog-post_05.html
என் பதிவுலயும் போலி பின்னூட்டம் வந்தது நீக்கி விட்டேன்
http://rajapattai.blogspot.com/2007/06/25.html//
வெங்கட் ஸார்.. தகவலுக்கும், நீக்கியதற்கும் மனமார்ந்த நன்றிகள்.. இந்த விஷயத்தில் நான் என்ன செய்ய முடியும்? சொல்லுங்கள்..
almost all state govt did this.donot be a fool.
//Anonymous said...
almost all state govt did this.donot be a fool.//
உண்மைதான்.. அனைத்து மாநில அரசுகளும் செய்கின்ற அதே தட்டிக் கொடுக்கும் வேலைதான் இது.. என்ன செய்வது? உண்மை என்று தெரிந்தும் எதுவும் செய்ய முடியாத நிலையில் மக்கள் இருக்கிறார்கள்.
Post a Comment