பா,ஜ.க. கூட்டணிக்கு வாக்களிக்காதீர் - கலைஞர்கள், எழுத்தாளர்களின் கோரிக்கை..!

தமிழக வாக்காளர்களுக்கு தமிழ் எழுத்தாளர்கள், இதழாளர்கள், கலைஞர்கள் வேண்டுகோள்!

April 15, 2014 at 8:55pm

இன்று (15.04.2014) மாலை 3 மணி அளவில் சென்னை சேப்பாக்கம் செய்தியாளர் மன்றத்தில் வெளியிடப்பட்ட கூட்டறிக்கை: 

(தமிழக வரலாற்றில் 220 கலைஞர்கள்-எழுத்தாளர்கள் ஒன்று கூடி இப்படி ஒரே குரலில் ஒரு வேண்டுகோளை தமிழ் மக்கள் மத்தியில் ஒலித்தது சமீப காலங்களில் இதுவே முதல் முறை)

இந்து அரசு ஒன்றை அமைப்பதைக் குறிக்கோளாகக் கொண்டு இயங்கும் ஒரு இயக்கத்தின் முன்னணி அமைப்பாக உள்ள ஒரு கட்சி, வரும் நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றுவதற்கு, இந்திய வரலாற்றில் வேறெப்போதும் இல்லாத அளவிற்குத் தீவிர முயற்சியில் இறங்கியுள்ளது. 

2002ல் குஜராத்தில் முஸ்லிம்களைக் கொன்று குவித்த கொடுஞ்செயலுக்குத் தலைமை தாங்கியது மட்டுமின்றி, அதற்காக இதுவரை வருத்தம் தெரிவிக்காத நரேந்திர மோடிதான் இந்த முயற்சியிலும் தலைமை ஏற்றுள்ளார். 

இந்த நாட்டில் மிகவும் சக்தி வாய்ந்த கார்ப்பொரேட் நிறுவனங்கள் இதற்குப் பின்புலமாக உள்ளன. கார்போரேட் மூலதனமும், வகுப்புவாத சக்திகளும் அமைத்துள்ள இந்தக் கூட்டணி, நமது மதச்சார்பற்ற ஜனநாயகத்தின் எதிர்காலத்தைக் கேள்விக்குள்ளாக்கியுள்ளது. 

இந்த ஆபத்தை எதிர்த்து இன்று இந்தியத் துணைக் கண்டம் முழுவதிலுமுள்ள எழுத்தாளர்கள், சிந்தனையாளர்கள், இதழாளர்கள் மற்றும் கலைஞர்கள் களம் இறங்கியுள்ளனர், அவர்களின் குரலுடன் தமிழகத்தைச் சேர்ந்த எழுத்தாளர்களாகிய நாங்களும் இணைந்து கொள்கிறோம். 

தமிழகத்தைப் பொறுத்தமட்டில் ஆதிக்கச் சாதிகளின் கூட்டணியை உருவாக்கிச் செயல்படும் ஒரு கட்சியும் இக்கூட்டணியில் இணைந்திருப்பது இந்த ஆபத்தை இரட்டிப்பாக்கியுள்ளது. மதச்சார்பின்மையை முன் வைத்து உருவான திராவிட இயக்கத்தின் பெயரைத் தாங்கி நிற்கும், இரு கட்சிகள் மோடியை முன் நிறுத்துவதில் துணை போகின்றன. 

இந்த ஆபத்து குறித்துத் தீவிரமாகச் சிந்தித்து, இதைத் தடுப்பதற்கான எல்லவிதமான செயற்பாடுகளையும் மேற்கொண்டு, நமது மதச்சார்பற்ற ஜனநாயகத்தைக் காப்பாற்ற வேண்டுமென பொறுப்புள்ள குடிமக்களையும், அமைப்புக்களையும் நாங்கள் வற்புறுத்திக் கேட்டுக் கொள்கிறோம். 

பா.ஜ.கவால் தலைமை தாங்கப்படும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு எதிராக வாக்களித்து, ஆட்சியைக் கைப்பற்ற முனையும் இந்தக் கார்பொரேட் - மதவாத, - சாதிய சக்திகளின் முயற்சியை வீழ்த்துமாறு தமிழக வாக்காளர்களைக் கேட்டுக் கொள்கிறோம். மதச் சார்பற்ற, ஜனநாயக சக்திகளை ஆதரித்து வாக்களிக்க வேண்டுகிறோம். 

“Never before in post-independence India have witnessed political forces, which are a front for an organisation committed to create a Hindu Rashtra, strong  bid for power  in the coming elections. These forces are led by a person who presided over a pogrom against Muslims in Gujarat in 2002  and has never accepted  his role in that ghastly incident. And they continue to get support and the backing from the most powerful corporate houses in the country. The prospect of this alliance of corporate capital and communal forces coming to power constitutes a palpable threat to the future of our secular democracy.

"Writers, artists and intellectuals all over India are deeply concerned with this danger and are appealing to the electorate to take note of this danger. We, the Tamil writers and artists are also joining our hands with them.

" We are more concerned about the situation in Tamilnadu as the casteist forces have joined hands with these communalist forces. Two other parties which claim the secular legacy of the Dravidian parties are also in that coalition.“We urge all responsible individuals and political formations to ponder over the situation andurgently take necessary steps to defend our secular democracy. We appeal to the electorate to foil this corporate-communal alliance’s bid for power by voting against the BJP-led NDA."

(In total 220 writers and artistes have signed below)

1. கி.இராஜநாராயணன், மூத்த எழுத்தாளர், புதுவை. 

2. பிரபஞ்சன், சாகித்ய அகாதமி பரிசு பெற்ற எழுத்தாளர், சென்னை.

3. இந்திரா பார்த்தசாரதி, மூத்த தமிழ் எழுத்தாளர். டெல்லி.

4. முனைவர் தொ.பரமசிவன், எழுத்தாளர்/ வரலாற்றறிஞர், திருநெல்வேலி.

5. கவிக்கோ அப்துல் ரஹ்மான், மூத்த தமிழ்க் கவிஞர், சென்னை.

6. விஜய்சங்கர், ஆசிரியர், ஃப்ரன்ட்லைன், சென்னை.

7. வெங்கடேஷ் சக்கரவர்த்தி, திரைக் கோட்பாட்டாளர், ஹைதராபாத்.

8. கலாப்ரியா, மூத்த கவிஞர், திருநெல்வேலி.

9. அப்பண்ணசாமி, எழுத்தாளர் / இதழாளர், சென்னை.

10. வெளி ரங்கராஜன், எழுத்தாளர் / இதழாசிரியர், சென்னை.

11. ச. தமிழ்ச்செல்வன், எழுத்தாளர், த.மு.எ.க.ச, பத்தமடை.

12. எஸ்.வி.இராஜதுரை, மூத்த எழுத்தாளர், கரூர்.

13. மருத்துவர் ருத்ரன், எழுத்தாளர், சென்னை.

14. எஸ்,ராமகிருஷ்ணன், எழுத்தாளர், சென்னை.

15. வஹீதையா கான்ஸ்டான்டின், எழுத்தாளர், நாகர்கோவில்.

16. அம்பை, எழுத்தாளர், டெல்லி.

17. வண்ணதாசன் (கல்யாண்ஜி), எழுத்தாளர், திருநெல்வேலி.

18. வ.கீதா, எழுத்தாளர், சென்னை.

19. கோணங்கி, எழுத்தாளர், கோவில்பட்டி, 

20. முனைவர் ஆனந்தி, பேராசிரியர், சென்னை.

21. அ.மார்க்ஸ், எழுத்தாளர், சென்னை.

22. சந்திரா, எழுத்தாளர், சென்னை, 

23. கவின்மலர், எழுத்தாளர், சென்னை, 

24. கோ.சுகுமாரன், மனித உரிமைப் போராளி / எழுத்தாளர், புதுவை, 

25. ராமானுஜம், எழுத்தாளர்/ மொழிபெயர்ப்பாளர், சென்னை, 

26. தமிழச்சி தங்கபாண்டியன், கவிஞர், சென்னை,  

27. யூமா வாசுகி, எழுத்தாளர், சென்னை, 

28. முனைவர் சாதிக், கவிஞர் / முன்னாள் துணைவேந்தர், சென்னை, 

29. ஞாநி, எழுத்தாளர் / இதழாளர், சென்னை, 

30. துரைராஜ், மூத்த இதழாளர், திருச்சி.

31. வாசுதேவன், எழுத்தாளர் / விமர்சகர், சென்னை, 

32. முனைவர் ராஜன் குறை, எழுத்தாளர், டெல்லி, 

33. யமுனா ராஜேந்திரன், எழுத்தாளர், லண்டன், 

34. ஓவியர் விஸ்வம், சென்னை, 

35. ஓவியர் நடேஷ், சென்னை, 

36. பா.ரஞ்சித், திரைப்பட இயக்குனர், சென்னை, 

37. அமீர், திரைப்பட இயக்குனர், சென்னை, 

38. வெற்றிமாறன், தேசிய விருது பெற்ற திரைப்பட இயக்குனர், சென்னை.

39. பொ.வேல்சாமி, எழுத்தாளர் / தமிழறிஞர், நாமக்கல், 

40. வி.எம்.எஸ்.சுபகுணராஜன், எழுத்தாளர், திரை இதழாசிரியர், சென்னை, 

41. சு.வெங்கடேசன், சாகித்ய அகாதமி பரிசு பெற்ற தமிழ் எழுத்தளர், மதுரை, 

42. பாரதி தம்பி, எழுத்தாளர் / இதழாளர், சென்னை, 

43. கிராமியன், எழுத்தாளர் / விமர்சகர், திருச்சி, 

44. ஷோபாசக்தி, எழுத்தாளர், பாரிஸ், 

45. முகம்மது சிப்லி, இதழாளர், சென்னை, 

46. அஜயன் பாலா. எழுத்தாளர், சென்னை, 

47. அசதா, எழுத்தாளர், விழுப்புரம், 

48. முனைவர் வீ.அரசு, எழுத்தாளர் / பேராசிரியர், சென்னை, 

49. பாஸ்கர் சக்தி, எழுத்தாளர், சென்னை, 

50. முருகேச பாண்டியன், எழுத்தாளர் / விமர்சகர், மதுரை, 

51. முருக பூபதி, அரங்க இயக்குனர், கோவில்பட்டி, 

52. பிரளயன், அரங்க இயக்குநர், சென்னை, 

53. சுபா தேசிகன், இதழாளர் / எழுத்தாளர், சென்னை, 

54. சி.மோகன், எழுத்தாளர் / சிறு பத்திரிக்கை எழுத்தாளர், சென்னை, 

55. தளவாய் சுந்தரம், எழுத்தாளர், சென்னை,  

56. சங்கர ராம சுப்பிரமணியன், எழுத்தாளர் / இதழாளர், சென்னை,  

57. மீனா, எழுத்தாளர், திருவண்ணாமலை, 

58. பிருந்தா, எழுத்தாளர், சென்னை, 

59. நேசமித்திரன், கவிஞர் / இதழாசிரியர், நைஜீரியா, 

60. ச.கோபால கிருஷ்ணன், இதழாளர், சென்னை, 

61. ஜெயராணி, எழுத்தாளர் / இதழாளர், சென்னை, 

62. தீஸ்மாஸ் டீ சில்வா, எழுத்தாளர் / இதழாளர், சென்னை, 

63. லஷ்மி சரவணகுமார், எழுத்தாளர், சென்னை, 

64. சிபி செல்வன் எழுத்தாளர், சேலம், 

65. அழகிய பெரியவன் எழுத்தாளர், வேலூர், 

66. தேவிபாரதி, எழுத்தாளர், சென்னை, 

67. கவிதா சொர்ணவல்லி, எழுத்தாளர் / இதழாளர், சென்னை, 

68. மனுஷ்யபுத்திரன், கவிஞர், சென்னை, 

69. சுசீந்திரன் நடராசா, எழுத்தாளர், பெர்லின். 

70. ஏ.மெஹபூப் பாஷா, மனித உரிமைச் செய்தி இதழாசிரியர், மதுரை, 

71. ரியாஸ் குரானா, எழுத்தாளர் / விமர்சகர், இலங்கை, 

72. ஆர்.பி.அமுதன், திரைப்பட இயக்குநர், சென்னை, 

73. பிரகதீஸ்வரன், நாடகக் கலைஞர் / பதிப்பாளர், புதுகை, 

74. சுகுணா திவாகர், எழுத்தாளர் / கவிஞர், சென்னை,  

75. விஷ்ணுபுரம் சரவணன், கவிஞர், சென்னை, 

76. நீலகண்டன், பதிப்பாளர், சென்னை. 

77. பா.ம.மகிழ்நன், ஊடகவியலாளர், சென்னை, 

78. இரா.தெ.முத்து, எழுத்தாளர், சென்னை, 

79. ப,கு,ராஜன், நூலாசிரியர், சென்னை, 

80. அருள் எழிலன், எழுத்தாளர், சென்னை, 

81. ஜீவ சுந்தரி, எழுத்தாளர்,  சென்னை,

82. அபு சாலிஹ், இதழாசிரியர். சென்னை, 

83. ஷாஜஹான், எழுத்தாளர், டெல்லி, 

84. ஆர்.ஆர்.சீனிவாசன், ஆவணப்பட இயக்குநர், சென்னை, 

85. தி.கண்ணன், எழுத்தாளர், ஸ்ரீரங்கம், 

86. வினி சர்ப்பனா, இதழாளர், சென்னை, 

87. புதுஎழுத்து மனோன்மணி, இதழாசிரியர், வேரிப்பட்டிணம், 

88. ஜமாலன், எழுத்தாளர் / விமர்சகர், ஷார்ஜா, 

89. கமலக்கண்ணன், திரைப்பட இயக்குனர், கோவை, 

90. ஆத்மார்த்தி, கவிஞர், மதுரை, 

91. ஆதவன் தீட்சண்யா, எழுத்தாளர் / இதழாசிரியர், ஓசூர், 

92. தேனுகா, ஓவிய விமர்சகர், கும்பகோணம், 

93. பேரா. பா.கல்யாணி, கல்வியாளர், திண்டிவனம், 

94. பேரா. ப.சிவகுமார், கல்வியாளர், சென்னை, 

95. பேரா. மு.திருமாவளவன், கல்வியாளர், சென்னை, 

96. ஜாபர் சாதில் பாகவி, இதழாசிரியர், சென்னை,

97. ரஜினி, மனித உரிமைப் போராளி, மதுரை, 

98. குட்டி ரேவதி, கவிஞர், சென்னை,

99. அருண், திரைப்பட இயக்கம், சென்னை, 

100. இளங்கோ கிருஷ்ணன், கவிஞர், 

101. சுதிர் செந்தில், இதழாசிரியர், திருச்சி, 

102. ஐயப்ப மாதவன், கவிஞர், சென்னை, 

103. தாமிரா திரைப்பட இயக்குனர், 

104. வ.கீரா திரைப்பட இயக்குனர், 

105. நக்கீரன், கவிஞர், நன்னிலம், 

106. லிபி ஆரண்யா, கவிஞர், மதுரை, 

107. குமார செல்வா, எழுத்தாளர், மார்த்தாண்டம், 

108. ஜே.ஆர்.வி.எட்வர்ட், எழுத்தாளர், நாகர்கோவில், 

109. இசை, கவிஞர், கோவை 

110. மகுடேஸ்வரன், கவிஞர், திருப்பூர், 

111. மேகவண்ணன், எழுத்தாளர், இராமேஸ்வரம், 

112. றஞ்சி, எழுத்தாளர், ஸ்விட்சர்லாந்த், 

113. அன்புச் செல்வன், கவிஞர், மதுரை,

114. பவுத்த அய்யனார், எழுத்தாளர் / பதிப்பாளர், சென்னை, 

115. முத்துமீனாள், எழுத்தாளர், சென்னை, 

116. யாழன் ஆதி, கவிஞர், ஆம்பூர், 

117. தை.கந்தசாமி, கவிஞர், திருத்துறைப்பூண்டி,

118. முனைவர் ரவிச்சந்திரன்,

119. ஸ்ரீராமச்சந்திரன், எழுத்தாளர், கோவை,

120. நிஷா மன்சூர், கவிஞர், மேட்டுப்பாளையம்,

121. சே.கோச்சடை, எழுத்தாளர் / மொழிபெயர்ப்பாளர்,  காரைக்குடி, 

122. முனைவர் ஜீவரத்தினம், ஆய்வாளர், ரெட்டைவயல், 

123. சி. சரவண கார்த்திகேயன், எழுத்தாளர், பெங்களூரு,

124. போஸ் பிரபு(பிரேமா), கவிஞர், சிவகாசி, 

125. யுவ கிருஷ்ணா, பத்திரிகையாளர், மடிப்பாக்கம், 

126. லீனா மணிமேகலை, கவிஞர், சென்னை, 

127. சா.விஜயலக்ஷ்மி, கவிஞர், சென்னை, 

128. நந்தகுமார், எழுத்தாளர், கடார், 

129. பா.ரவீந்திரன், எழுத்தாளர், ஸ்விட்சர்லாந்த், 

130. பூ.இராமு, திரைக் கலைஞர், சென்னை, 

131. கருப்பு கருணா, குறும்பட இயக்குநர், திருவண்ணாமலை, 

132. சிவக்குமார், திரை ஆய்வு எழுத்தாளர், சென்னை, 

133. உமர் ஃபாரூக், எழுத்தாளர், கம்பம், 

134. தமிழ்நதி, கவிஞர், கனடா, 

135. சுகன் கனகசபை, கவிஞர், பாரிஸ், 

136. அ.வெற்றிவேல், எழுத்தாளர், சவூதி அரேபியா, 

137. கார்ட்டூனிஸ்ட் பாலா, சென்னை, 

138. அதிஷா, இதழாளர், சென்னை, 

139. வெய்யில், கவிஞர், காரைக்கால், 

140. நடராஜன் கிருஷ்ணன், எழுத்தாளர், குன்றத்தூர், 

141. நந்தகோபால், இதழ் ஆசிரியர், சென்னை, 

142. எஸ்.காமராஜ், எழுத்தாளர், சாத்தூர், 

143. ஜபருல்லா ரஹ்மானி, எழுத்தாளர், சிங்கப்பூர், 

144. நீரை மகேந்திரன், இதழாளர், சென்னை, 

145. கவுதம சக்திவேல், மனித உரிமைப் போராளி, பொள்ளாச்சி, 

146. நரன், கவிஞர், சென்னை,

147. கவிதா முரளீதரன், இதழாளர், சென்னை, 

148. முனைவர் பெருந்தேவி, எழுத்தாளர், நியூயார்க், 

149. விஷ்ணுராம், ஊடகவியலாளர், சென்னை, 

150. ராஜவேலு, லேபர் நியூஸ் நிர்வாகி, சென்னை, 

151. சிவகுமார், எழுத்தாளர் / பேராசிரியர், சென்னை, 

152. மாரிச்செல்வன், எழுத்தாளர், சென்னை,

153. முகம்மது ஆசிக், கவிஞர், வல்லம், 

154. இரா.ஜவஹர், மூத்த இதழாளர், சென்னை, 

155. டி.அஜீஸ் லுத்ஃபுல்லாஹ், எழுத்தாளர் / மொழிபெயர்ப்பாளர், சென்னை, 

156. ஃபைஸ் ஃபைசல், இதழாசிரியர், சென்னை, 

157. மு.சிவகுருநாதன், எழுத்தாளர், திருவாரூர், 

158. டாக்டர் ஹிமானா சையத், எழுத்தாளர், சென்னை, 

159. பாரதிநாதன், நாவலாசிரியர், சென்னை, 

160. இரா,வினோத், ஊடகவியலாளர், பெங்களூரு, 

161. இளவேனில், கவிஞர், பள்ளிப்பட்டி, 

162. சக்தி ஜோதி, கவிஞர், மதுரை, 

163. எஸ்.ஷங்கர். இதழாளர், மடிப்பாக்கம், 

164. ஸ்ரீகுமார், விமர்சகர், சென்னை, 

165. கார்த்திகைப் பாண்டியன், எழுத்தாளர், மதுரை. 

166. தேவரசிகன், கவிஞர், கும்பகோணம், 

167. ஜி.சரவணன், எழுத்தாளர், அம்மாசத்திரம், 

168. சிராஜுதீன், பதிப்பாளர், சென்னை, 

169. பிரேமா ரேவதி, எழுத்தாளர், சென்னை, 

170. கு.ப, விமர்சகர், மதுரை, 

171. ஜி.ஸ்ரீதரன், எழுத்தாளர், ஓசூர், 

172. அத்தாவுல்லா, எழுத்தாளர், நாகர்கோவில், 

173. ஆளூர் ஷாநவாஸ், எழுத்தாளர், சென்னை, 

174. ஆர்,முருகப்பன், நூலாசிரியர், திண்டிவனம், 

175. மா.ச.மதிவாணன், ஊடகத்துறை, சென்னை, 

176. சாம்ராஜ், கவிஞர், மதுரை,  

177. யவனிகா ஸ்ரீராம், கவிஞர், திண்டுக்கல்,  

178. செல்மா பிரியதர்ஷன், கவிஞர், திண்டுக்கல்,  

179. அ.கரீம், எழுத்தாளர், கோவை, 

180. அறிவழகன், எழுத்தாளர், சேலம்,  

181. ம.மதிவண்ணன், கவிஞர், பெருந்துறை,  

182. குமார் அம்பாயிரம், எழுத்தாளர், திருவண்ணாமலை,  

183. பிரியாபாபு, எழுத்தாளர், சென்னை,

184. முனைவர் தி.பரமேஸ்வரி, கவிஞர் / பதிப்பாசிரியர், காஞ்சீபுரம், 

185. பவா செல்லத்துரை, எழுத்தாளர், திருவண்ணாமலை, 

186. கே.வி.சைலஜா, எழுத்தாளர் / பதிப்பாளர், திருவண்ணாமலை, 

187. கே.வி. ஜெயஸ்ரீ, எழுத்தாளர், திருவண்ணாமலை, 

188. அ.முத்துகிருஷ்ணன், எழுத்தாளர், மதுரை, 

189. கடற்கரை, கவிஞர் / பதிப்பாளர், சென்னை,  

190. ஃபிர்தௌஸ் ராஜகுமாரன், எழுத்தாளர், கோவை, 

191. தமயந்தி, எழுத்தாளர், சென்னை, 

192. நவீன், திரைப்பட இடக்குனர், சென்னை,  

193. பிரின்ஸ் என்னாரெசு பெரியார், திரைப்பட இயக்குனர், சென்னை, 

194. பாலசுப்பிரமணியம் பொன்ராஜ், எழுத்தாளர், சென்னை, 

195. நிழல் திருநாவுக்கரசு, எழுத்தாளர் / இதழாசிரியர், சென்னை,

196. ராஜ்முருகன், திரைப்பட இயக்குனர், சென்னை,  

197. புகழேந்தி, ஓவியர், சென்னை, 

198. ட்ராட்ஸ்கி மருது, ஓவியர், சென்னை, 

199. ரோகிணி, நடிகை, சென்னை,

200. ஸ்டாலின் ராஜாங்கம், எழுத்தாளர், மதுரை, 

201. கரிகாலன், கவிஞர், விருதாசலம்,

202. தமிழ்ச்செல்வி, எழுத்தாளர், விருத்தாசலம், 

203. அ,வெண்ணிலா, கவிஞர், வந்தவாசி, 

204. பாரதி கிருஷ்ணகுமார், இயக்குனர், சென்னை,  

205. யாழினி முனுசாமி, எழுத்தாளர், சென்னை, 

206. பி.ஜி. சரவணன், கவிஞர், மதுரை, 

207. மீனா கந்தசாமி,  எழுத்தாளர், சென்னை, 

208. கோவி லெனின், பத்திரிகையாளர் , சென்னை,  

209. புதிய மாதவி, எழுத்தாளர்   மும்பை, 

210. கண்மணி ராஜா முகமது, திரைத்துறை, சென்னை,

211. காலபைரவன், எழுத்தாளர், விழுப்புரம்,  

212. சீனு இராமசாமி, திரைப்பட இயக்குனர், சென்னை, 

213. நாச்சியாள் காந்தி, ஊடகவியலாளர், சென்னை,  

214. வெற்றிவேல், ஆவணப்பட இயக்குநர், சென்னை, 

215. நறுமுகை தேவி, கவிஞர், கோவை,

216. ஏகாதேசி, பாடலாசிரியர், சென்னை, 

218. ஸ்ரீஜித், அரங்கக் கலைஞர், சென்னை. 

219. லிவிங்ஸ்மைல் வித்யா, அரங்கக் கலைஞர், சென்னை, 

220. மு.வி.நந்தினி, இதழாளர், சென்னை.

41 comments:

சூனிய விகடன் said...
This comment has been removed by the author.
சூனிய விகடன் said...

மொத்தத்தில் தமிழகத்தில் பாஜக கூட்டணிக்கு 221 ஓட்டுக்கள் கிடைக்கும் வாய்ப்பு நழுவி விட்டதென்று உறுதி ஆகி விட்டது ( அந்த ஒரு ஓட்டு உங்களுதுதான் )_

சூனிய விகடன் said...

இந்திய ஜனநாயகம் இந்த அறிக்கைவார்த்தைகளையும் தாண்டிப்புனிதமானது அய்யா. அதை இவர்கள், நீங்கள் விரைவில் புரிந்து கொள்வீர்கள்

சூனிய விகடன் said...

ஹிந்து மதத்தையும், பெரும்பான்மை மக்களின் உணர்வுகளையும் கேவலம் செய்வதே முற்போக்கு எழுத்தாளன் மற்றும் கலைஞன் ஆவதற்கு முதல் அடிப்படைத் தகுதி என்று அடையாளப்படுத்தியிருக்கிற இந்த மாதிரி லிஸ்ட்டுகளை நிறைய பார்த்தாகி விட்டது உண்மைத்தமிழன். இந்த மாதிரி போலி புதுமைவாதிகளின் முகங்களை விட சத்தியம் நிறைந்த முகங்கள் இந்த நாட்டில் கணக்கற்று இருக்கின்றன. பாரதி எழுதினானே " எந்தன் பாட்டுத்திறத்தாலே இவ்வையத்தைப் பாலித்திட வேணும்" என்று...அந்த சத்தியம் இந்த லிஸ்டுபார்ட்டிகளிடம் இல்லை.. அந்த சத்தியம் இருந்தால் பாஜகவினை ஆதரிக்கும் வாய்ப்புள்ள, பாஜக விடம் ஏற்கனவே கூட்டு சேர்ந்திருந்த கட்சிகள் எதற்க்கும் வாக்களிக்காதீர்கள் என்று அறிக்கை வந்திருக்கும்....

நானும் அவந்தாம்லேன்னுட்டு வண்டியிலேறும் வடிவேலு கணக்காக இந்த மாதிரி இன்னும் ஊருக்குள் இருக்கும் சில பேரையும் லிஸ்டுல சேர்த்திருக்கலாம்.

எப்படியோ....இந்த 220 பேரின் மனசாந்திக்கு இறைவனைப்பிரார்த்திக்கிறேன்.

ஊர்சுற்றி said...

அன்புள்ள உண்மைத்தமிழன்,

இந்தப் பட்டியலில் இருப்போரில் அனேகமானோர் பற்றி எனக்குத்தெரியாது. ஆனால்
சுவிஸ் றஞ்சி
சோபா சக்தி
சுசீந்திரன்
சுகன் கனகசபை போன்றோர் ஸ்ரீலங்கா அரச ஆதரவாளர்கள்.
இதில் சுகன் கடைந்தெடுத்த பொறுக்கித்தனமான ஆதரவாளர். இணையத்தில் தேடுங்கள் கிடைப்பார்கள். அல்லது ஈழ ஆதரவாளர்களிடம் கேளுங்கள் இவர்கள் பற்றிச் சொல்வார்கள்.
மத எதிர்ப்பு எனும் போர்வைக்குள் பதுங்கி இருக்கும் இவர்கள் பெளத்த மதவாதம் பற்றி எப்போதாவது வாயைத்திறந்தார்களா?

சூனிய விகடன் said...

இந்த சிந்தனாவாதிகளின் கூற்றுப்படியே பாஜக ஒட்டுப்போடக்க்கூடாத கட்சி லிஸ்டில் இருப்பதாக வைத்துக்கொள்வோம். வேறு யாருக்கு ஓட்டு போடுவது ?..இவர்களின் செம்மைச் சிந்தனைய இன்னும் இழுத்துப் பார்த்தா எந்தக்கட்சிக்குமே ஓட்டுப் போட முடியாதே...ரொம்ப சிந்தித்துப் பாத்தா இவர்கள் நோட்டாவுக்கு போடச்சொல்லித்தான் அறிக்கை விட்டா மாதிரி படுது.அடுத்து நம் இந்தியாவை ஆளப்போவது நோட்டாதானா ...அபாரம் போங்கள்...மாணவர்களுக்குத்தான் ரொம்ப சுலபம்..

யாருப்பா பிரதமரு....நோட்டா..
யாருப்பா ஜனாதிபதி...நோட்டா சார்
யாருப்பா மத்திய சென்னை எம்.பி... நோட்டா சார்

சூனிய விகடன் said...

இந்த பட்டியலில் உள்ள சிலரைத் தவிர மற்ற அனைவரின் உள்நோக்கங்கள் பற்றி தனி பிளாக்கே எழுதலாம். கிரிக்கெட் மேட்சுகளில் டெண்டுல்கரின் முகமூடிகளைப் போட்டுக்கொண்டு கைதட்றாமாதிரி இவர்கள் பாஜக எதிர்ப்பு முகமூடிகளைப் போட்டுக்கொண்டு ..... உள்ளிருக்கும் நோக்கங்களைப்பற்றி என்ன கவலை?

அது சரி ,...குரூப் போட்டோ தானே..பரவாயில்லைன்னு விட்டுட்டாங்க போலிருக்கு.

சூனிய விகடன் said...

சத்தியம் இல்லாத எந்த நோக்கமும் சாத்தியமாவதில்லை. இவர்களின் நோக்கத்தில் சத்தியமில்லை என்பது அவரவர் மனதுக்கே தெரியும்.

சூனிய விகடன் said...

கலைஞர்கள்னு சொல்லிட்டு கலைஞர் கருணாநிதி அய்யாகிட்டே வாங்காம விட்டுட்டாங்களே...அவரும் பாஜகவுக்கு ஓட்டு போடாதீங்கன்னு தானே பொலம்ம்பறாரு.

கவிஞர்னா கனிமொழிகிட்டேயும் கையெழுத்து வாங்கியிருக்கலாம்..அப்பா சொல்றதெத்தானே மகளும் சொல்றாங்க...

சூனிய விகடன் said...

கண்களை மூடிக்கொண்டு கேட்டால் ஏதோ ஜமாத்துக்கூட்டத்துக்குப் போன மாதிரியும், சர்ச்சுக்கூட்டத்தில் இருப்பது மாதிரியும் ஒரு உணர்வு..


யூர்கன் க்ருகியர் said...

இவர்களின் நோக்கம் பி ஜெ பி ஆட்சி அமைக்க கூடாது என்பதா இல்லை காங்க்ரெஸ் தான் மறுபடியும் வரவேண்டும் என்பதா ?
பி ஜெ பி வேணாம்னா காங்க்ரெஸ் வேணும்னு தானே அர்த்தம் ...


பி ஜெ பி கூடாது என்பதற்கு ஆயிரக்கணக்கான காரணங்களை சொல்லிட்டு போகலாம் . என்னை பொருத்தவரை காங்க்ரெஸ் கூடாதென்பதற்கு இரண்டு முக்கிய காரணங்களுண்டு. அது எல்லாருக்குமே தெரிந்த விசயம்தான்..

பட்டாத்தான் திருந்துவார்கள் என்பார்கள் .. சுட்டாலும் திருந்தாத இனம் நாம்தான்.

sriram said...

I was amused to see the "Mootha" word in the list. :D can somebody tell me the qualification for that tag? A writer/artist, at any age, after any number of books/work IS a writer/Artist.
After this "Mootha", do they retire??

சூனிய விகடன் said...

இவர்கள் கூற்றுப்படி பாஜக கூட்டணி என்பது வேட்டையாடும் கொடிய விலங்கு கூட்டம் போலத்தான் என்று வைத்துக்கொண்டால் நல்ல இரையை வீழ்த்திவிட்டால் அவைகள் தின்றது போக மீதி நமக்குக் கிடைக்குமே என்று ஒநாய்கள் போலவும் கழுகுகள் போலவும் எட்ட நின்று வேடிக்கை பார்க்கும் அதிமுக, திமுகவுக்கு ஓட்டு போடலாமா.....


....இல்லை...வேட்டையாடும் விலங்குகளை விட எய்ட்ஸ் கிருமி போல ஊரை அழிக்கும் காங்கிரசுக்கு ஓட்டு போடலாம்..ஏன்னா எய்ட்ஸுக்கு கூட எதிர்ப்பு சக்திக்கு இப்போ புதுப்புது மருந்துகள் வந்திருச்சு என்பது முற்போக்கு வாதிகளின் வாதமா..

சூனிய விகடன் said...

உண்மைத்தமிழன் அவர்களே...மதவாதத்தை விடக்கொடியது விதண்டாவாதம், முடவாதம், அடவாதம்..இவர்கள் செய்வது அதைத்தான்

சூனிய விகடன் said...

மதச்சார்பற்ற கட்சிக்குத்தான் ஓட்டுப்போடனும்னா நம்ம அண்ணன் தேவேகவுடாவின் மதச்சார்பற்ற ஜனதா தளத்துக்குத்தான் போடனும்..அவர்தான் கம்பெனி பெயரிலேயே மதச்சார்பற்ற என்று வைத்துள்ளார்.

சூனிய விகடன் said...

மதச்சார்பற்ற, ஜனநாயக சக்திகள் யார் என்று அடையாளம் காட்டும் ஆண்மைத்திறம் இல்லையேல் சும்மாவே இருந்திருக்கலாம்...

சூனிய விகடன் said...

இறைவா , இவர்களை மன்னியும், தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாமல் இருக்கிறார்கள் என்றுதான் எண்ணதோன்றுகிறது

சூனிய விகடன் said...

இப்போது கூட இருக்கும் மதிமுக தேமுதிக எல்லாம் மோசம்...முன்பு கூட இருந்த திமுக அதிமுக எல்லாம் மதச்சார்பற்ற ஜனநாயக சக்திகள்...வெளங்கிடும்.

சூனிய விகடன் said...

//2002ல் குஜராத்தில் முஸ்லிம்களைக் கொன்று குவித்த கொடுஞ்செயலுக்குத் தலைமை தாங்கியது மட்டுமின்றி, அதற்காக இதுவரை வருத்தம் தெரிவிக்காத நரேந்திர மோடிதான் இந்த முயற்சியிலும் தலைமை ஏற்றுள்ளார்//.

இந்த வரிகளுக்காக மோடி அவர்கள் இந்த 220 பேரின் மீது மான நஷ்ட வழக்கே போடலாம்..

இது வரை எந்த ஒரு நீதி மன்றத்திலும் நிருபிக்கப்படாத குற்றங்களை திருப்பி திருப்பி சாட்டுவதன் மூலம் தங்களது நேர்மையின்மையைத்தான் பறைசாற்றுகிறார்கள்.

நேர்மை இருந்தால் " தலைமை தாங்கியதாகக் குற்றம் சாட்டப்படும் நரேந்திர மோடி " என்று அறிக்கையைத் திருத்தச்சொல்லுங்கள்

சூனிய விகடன் said...

காங்கிரசுக்கு ஓட்டு போடுங்கள் என்று சொல்ல ரொம்ப வெட்கப்படுறாங்க போலிருக்கு..

சூனிய விகடன் said...

ஆத்தா கொடுமையைப் பற்றி பிளாக் எழுதினீர்கள்....அய்யன் பரம்பரை அடித்த கொள்ளையை லிஸ்டே போட்டீர்கள்...தமிழனை வஞ்சிக்கும் காங்கிரஸைக் காய்ச்சி எடுத்தீர்கள்...இப்போ பாஜக என்னும் அழிவு சக்திக்கு ஓட்டு போடவேணாம்னு பரப்புரை செய்கிறீர்கள்..

உண்மைத்தமிழன் மனதைத் தொட்டுச் சொல்லுங்கள்...உங்கள் லிஸ்டில் யார் தான் மீதி...சுயேச்சைகள் தானா ?

சூனிய விகடன் said...

இந்த 220 பேருக்கும் ஒன்று சொல்லிக்கொள்ள விழைகிறேன்.

தேர்தலுக்குப் பிறகு, உங்கள் நிலைப்படி மதச்சார்பற்ற ஜனநாயக சக்திகளான அதிமுகவும், திமுகவும் ஒன்றிணைந்து ஆதரவு தரும் ( உள்ளே வெளியே சப்ஜெக்ட் தனி ) பாஜக அரசு மத்தியில் அமையத்தான் போகிறது.

நீங்களெல்லாம் பார்க்கத்தான் போகிறீர்கள்

வருண் said...

சூனிய விகடன்னு ஒரு மெண்டல் ஏர்வாடில் இருந்து தப்பிச்சு வந்துருச்சாம். உள்ள விடாதீங்கனு சொல்றதுக்குள்ள வந்து நாறடிச்சுட்டான்!

எல் கே said...

அட இம்புட்டு பேருங்களா... இந்த இணையத்தை தாண்டி இதில் எத்தனை பேரை தமிழக மக்களுக்குத் தெரியும்..

சூனிய விகடன் said...
This comment has been removed by the author.
சூனிய விகடன் said...

வருணின் தரம் அவரின் கமெண்ட்டில் தெரிகிறது. சட்டியில் இருப்பதுதானே அகப்பையில் வரும்

வருண் said...

சூனிய விகடி: வருணின் தரம் இருக்கட்டும். ஒரு 220 பேரு ஒட்டு மொத்தமாக "பி ஜெ பி, ஒரு மதவாதக் கச்சி, இந்தியாவை இந்துக்கள்தான் ஆளணும்னு நம்புறவா" னு எதிர்ப்பதில் என்ன பிரச்சினை உமக்கு?

சும்மா போட்டுக்கிட்டு ஒரு ஃபேக் ஐ டியை வச்சுக்கிட்டு லூசு மாரி சுத்தி சுத்தி பின்னூட்டுக்கிட்டு..

ஏர்வாடி பஸ்ஸைப் பிடிச்சு போய் அங்கே திண்ணையில் படுங்க!

சூனிய விகடன் said...

வருணின் டெஸ்டோஸ்டிரான் அதற்குள் விகடி தேடுது போல. சாரி...வந்து ஏமாற வேண்டாம்...நான் விகடன் தான்.

ஏர்வாடி போறதுக்கு முன்னாடி ஒரு சின்ன கமெண்ட்டோட பஸ் ஏறிடறேன்.

பாஜக கூட்டணிக்கு மொத்தம் 222 ஓட்டு போயிடுச்சி..கன்ஃபர்ம்டு

Vetrivendan said...

கருத்தை விடுத்து கருத்து கூறியவரை தரக் குறைவாக விமர்சிப்பது தன் தோல்வியை தானே ஒத்துக் கொண்டதாகும்.

SANKAR said...

நாட்டில் எல்லோருக்கும் சோறு கொடுத்துவிட்டு பின் மதவாதம் பேசலாம்.பிஜேபியில் உள்ள முசுலிம் தலைவர்கள் எம்மேலேக்கள் வேட்பாளர்களுக்கு இதுவெல்லாம் தெரியாமல் ஆதரிக்கிறார்களா?

ராஜரத்தினம் said...

இதில உண்மைத்தமிழன் பேரு இல்லையே! அவர் பெரிய எழுத்தாளராச்சே!
நீங்க சொன்ன ஆட்கள்லாம் எழுத்தாளர்கள்னா நான் கூட பெரிய எழுத்தாளர்தான் சார்
இவங்க எல்லாருக்கும் ஃபோர்டு பவுண்டேஷன் பணம் நேரிடையாகவோ மறைமுகமாகவே பெற்று சேவை செய்பவர்கள்! இவர்கள் இப்படி கூவலனாதான் ஆச்சர்யம்

kicha said...

If you don't want to vote for BJP, then you can't vote for ADMK and DMK. Its a open secret that the ADMK will align with BJP. DMK has to align with whoever come to power to save Kanimozhi and Raja. If BJP comes to power, Kalaignar will say that to provide stable government we are supporting them! Thus, the writers are telling us to vote for Congress.

பொன் மாலை பொழுது said...

இந்த 220 பேர்களும்தான் 7 கோடி மக்களுக்கு பிரதிநிதிகளா...???? BJP வேண்டாம் என்றால், " இன்னாருக்கு " போடுங்கள் என்று சொல்லியிருந்தால் கொஞ்சமாவது நேர்மை இருந்திருக்கும்.
........

வருண் said...

***Vetrivendan said...

கருத்தை விடுத்து கருத்து கூறியவரை தரக் குறைவாக விமர்சிப்பது தன் தோல்வியை தானே ஒத்துக் கொண்டதாகும்.***

நீங்க வெற்றி வ்ந்ந்தரா? என்னத்தை வெட்டி முறிச்சீங்க, இப்படி ஒரு பேரை வச்சுக்கிட்டு?

சரி இந்தப் பதிவில் உண்மைத்தமிழன் கருத்துனு எதுவுமே இல்லை. அப்படி இருக்கும்போது. இந்த சூனிய விகடியா உருவெடுத்து வந்து நிக்கும் யோக்கியனுடைய பிதற்றலில் என்ன உண்மையைக் கண்டீர்?

சும்மா எவனுக்காவது கொடுக்குப் பிடிக்கிறது. உணமைங்கிறது. 220 பேரு பா ஜ க க்கு ஓட்டுப் போட வேணாம்னு சொல்றாங்க. ஏன் என்றால் இந்நாடு மதசார்பற்றது என்பதால். அதுக்காக் காங்கிரஸ்க்குத்தான் போடணும்னு ஒண்ணும் இல்லை. குப்பையில்கூட் போடலாம்.

G Gowtham said...

ஜனநாயகம் மதிக்கப்பட வேண்டும். எல்லோருக்கும் தத்தம் கருத்துக்களைச் சொல்ல உரிமை உண்டு. ஆனால், '220 கலைஞர்கள், எழுத்தாளர்கள் மற்றும் இதழாளர்களின் கோரிக்கை'யை ஏதோ ஒட்டுமொத்த கலைஞர்களும் எழுத்தாளர்களும் இதழாளர்களும் சேர்ந்து குரல் கொடுப்பது போன்ற தொணியில் தலைப்பிட்டு கட்டுரையாக்குவது கண்டிக்கத்தக்கது!


G Gowtham said...
This comment has been removed by the author.
G Gowtham said...
This comment has been removed by the author.
G Gowtham said...
This comment has been removed by the author.
G Gowtham said...

முந்தைய மூன்று கமெண்ட்டுகளிலும் நான் ஏடாகூடமாக எதையேனும் எழுதிவிட்டுப் பின்னர் அதை டெலிட் பண்ணியது போல ஒரு தோற்றம் உணரப்படலாம்! :-)
உண்மை அது இல்லைங்க.. முதல் கமெண்ட்டையே அது போஸ்ட் ஆனது தெரியாம மூணு வாட்டி பப்ளிஷ் பண்ணிட்டேன்.. டாட்!

k.rahman said...
This comment has been removed by the author.
puduvaisiva said...

தல, எனக்கு இதில் உடன்பாடு இல்லை, நிய தராசு தாறுமாறா ஒரு சைடாவே அடிக்கிது.