கல்யாண சமையல் சாதம் - சினிமா விமர்சனம்

8-12-2013

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

ரொம்பத் தைரியந்தான் இந்த அய்யர்வாள்களுக்கு..! படத்தில் சம்பந்தப்பட்ட அத்தனை பேருமே அய்யர்வாள்கள்தான் என்பதால் இப்படிச் சொல்ல வேண்டியிருக்கிறது..! கத்தி மேல் நடப்பது போன்ற கதை..! கொஞ்சம் தடுமாறினாலும் பிட்டு படக் கதையாக மாறிவிடும்.. ஆனால் கொஞ்சமும் தடுமாற்றமில்லாமல், திரைக்கதையை நேர்த்தியாக நெய்து பட்டுத் துணி போல போர்த்தி எடுத்திருக்கிறார் இயக்குநர் ஆர்.எஸ்.பிரசன்னா..!


முதலில் இயக்குநர் பிரசன்னாவுக்கும், அவருக்கு வாய்ப்பளித்த தயாரிப்பாளர்களுக்கும் எனது நன்றி..! இப்படியொரு கதையை இது மாதிரியான கெட்டப்பில் எடுப்பதற்கு இந்தத் தயாரிப்பாளர்களுக்கு வந்திருக்கும் தைரியம் அசாத்தியமானது.. அடுத்தது நடிகர் பிரசன்னா..! கொஞ்சம்விட்டால் தனக்கென்று தனியாக பட்டப் பெயர் வைத்து பெயரை கெடுத்துவிடுவார்கள் என்பது தெரிந்திருந்தும் துணிந்து ஹீரோவாகியிருக்கிறார் என்றால் இவரது தைரியத்திற்கு ஒரு 'ஓ' போடுவோம்..!

ஹீரோ பிரசன்னாவுக்கும், ஹீரோயின் லேகாவுக்கும் திருமணம் நிச்சயமாகிறது.. ஆனால் கல்யாணம் 8 மாதங்கள் கழித்துதான்..! இடைப்பட்ட காலத்தில் பொண்ணும், மாப்பிள்ளையும் இணைய ஊடகங்கள் வழியாகவும், நேரிலும் சந்தித்து காதலை வளர்த்துக் கொண்டிருக்கிறார்கள். ஒரு நாள் ஹீரோயினின் பேர்த்டே பார்ட்டியில் இருவரும் சரக்கடித்து ஓவராகிப் போக.. நாளைய கணவர்தானே என்று நாயகியும்.. நாளைய மனைவிதானே என்று நாயகனும் விரும்பி இணைந்து கட்டிலுக்குப் போக.. திடீரென்று நாயகனுக்கு 'முடியாத' நிலை ஏற்படுகிறது.. அப்போதைக்கு அதனை ஈஸியாக எடுத்துக் கொள்ளும் நாயகி.. "டேக் இட் ஈஸி.. டாக்டர்கிட்ட செக்கப் பண்ணிக்க.. சரியாப் போயிரும்.." என்று நாயகனிடம் சொல்லிவிட்டுப் போகிறார்..!

'முதல் முயற்சி'யிலேயே 'வெற்றி' கண்ட கட்டுக் கதைகளை நிறைய கேட்டிருக்கும் ஹீரோ தனக்கு ஏதோ பிரச்சினை என்றெண்ணி சித்த மருத்துவர்கள், ஜோதிடர்கள்.. அலோபதி மருத்துவர்கள்.. கடைசியா மனநிலை மருத்துவர்வரைக்கும் முயல்கிறார்.. இடையில் 'இந்த' விஷயம் வருங்கால மாமனாருக்கே தெரியவந்து அவரும் வந்து அட்வைஸ் செய்கிறார்..! 

திருமண ஏற்பாடுகள் நடக்கும் நிலையில் இதன் கூடவே ஒரு சின்ன ஈகோ பிரச்சினையை பெரிசாக்கும் அளவுக்கு பிரச்சினைகளும் தொடர்கின்றன..! இதையெல்லாம் கடந்து எப்படி அவர்களது திருமணம் கல்யாணத்தில் முடிகிறது என்பதுதான் படம்..! 'கல்யாண சமையல் சாதம்' என்று டைட்டில் வைத்துக் கொண்டு கடைசிவரையிலும் ஒரு சோற்று பருக்கையைக்கூட கண்ணில் காட்டவில்லை என்பதும் இந்தப் படத்தின் இன்னொரு ஸ்பெஷல்..!

பிரசன்னாவின் வயதுக்கேற்ற கேரக்டர் என்பதால் பெண் பார்க்க வரும் முதல் காட்சியில் இருந்து இறுதிவரையிலும் அந்த ஸ்டைலிஸ் நடிப்பு மிகையில்லமல் பார்த்துக் கொள்கிறார். மருத்துவர்களைச் சந்திக்கும் அந்த நேரத்தில் ரிசல்ட் கேட்டு தவியாய் தவிக்கும் அந்த தவிப்பில் நம்மையும் சிரிக்க வைத்துவிடுகிறார்..!  பிரசன்னாவின் இடம் அப்படியேதான் இருக்கிறது என்பதை ஊகிக்க முடிகிறது..! 

லேகா வாஷிங்டன்.. ம்ஹூம்.. ஹீரோயினாக தேறாது என்று சிம்புவாலேயே கழட்டிவிடப்பட்டவர் எப்படி இங்கே என்றுதான் தெரியவில்லை..! சிம்பு சரியாகத்தான் சொல்லியிருக்கிறார்..! ஹீரோயின் முகம் இல்லையென்றாலும், சின்னச் சின்ன ஷாட்டுகளிலும், ரொமான்ஸ் காட்சிகளிலும் பிடிக்க வைத்திருக்கிறார்..! பெற்றோர்களுக்குத் தெரியாமல் பிரசன்னாவிடம் கண்ணாலேயே பேசுவது.. கெஞ்சுவது.. மிரட்டுவது என்று வரும்கால கணவர்களுக்குப் பிடித்தமான வகையில் இவரது நடிப்பு சூப்பர்..!

டெல்லிகணேஷ், உமா பத்மநாபன், கீதா ரவிசங்கர், உஷா, காத்தாடி ராமமூர்த்தி, நானு என்று படத்தில் ஒரு அன்னிய முகம்கூட தென்படவில்லை. அத்தனையும் அய்யர்கள்தான்..! குலதெய்வம் கோவிலில் திருமணம் என்று சென்ற பிறகும்கூட அங்கேயும் வேறாள் யாரையும் இவாள் காட்டவில்லை என்பதையும் குறிப்பிட்டாக வேண்டும்..!

உமா பத்மநாபனின் சிடுசிடு முகமும், அந்த வேக நடிப்பும்தான் ரொம்ப பேமஸ்.. இதிலும் அது போலவே சில இடங்களில் ரசிக்க வைத்திருக்கிறார். மகளிடமே அது பற்றி கேட்டுவிட்டு சாதாரணமாக செல்லும் காட்சியில் காமெடி இயல்பாகவே வந்திருக்கிறது..! டெல்லி கணேஷ் இன்னொரு பக்கம்.. ஹிண்டு பேப்பருக்கு நடுவில் நடிகைகளின் போட்டோவை வைத்து பார்த்து ரசித்துக் கொண்டிருக்கும் ஒண்ணும் தெரியாத அப்பாவி பிராமின் அப்பா..! இதையே கடைசிவரையிலும் மெயின்டெயின் செய்து கடைசியாக ஒரு நாய்க்குட்டியே இப்போதைக்கு துணை என்ற ரீதியில் இருப்பவராகக் காட்டியிருப்பது என்னவொரு குறியீடு..!? காபி ஷாப்பில் மருமகனுக்கு கிளாஸ் எடுக்கும் காட்சியில் மாமனாரையும் மறந்து ஒரு ஆம்படையானாக காட்சியளிக்கிறார் டெல்லிகணேஷ்..! 

இந்தப் படம் காமெடி படமல்ல.. ஆனாலும் காமெடிதான் பிரதானம்.. அப்படித்தான் இயக்கம் இருக்கிறது.. இயக்குநர் ஆர்.எஸ்.பிரசன்னா வெகு இயல்பான வகையில் நடிப்பிலேயே காமெடியை கொண்டு வந்திருக்கிறார். சீரியஸான காட்சிகளில்கூட 'அந்த' பிரச்சினையைத் திணித்து கடைசியில் அதனை ஹீரோயின்கூட யூஸ் பண்ணும் அளவுக்கு வைத்திருப்பது இயக்கத்தின் திறமையைக் காட்டுகிறது.. வெல்டன் இயக்குநர் ஸார்..!

ஒரு பாடல் காட்சியில் பேஸ்புக்கின் பக்கங்களை வைத்தும்.. புகைப்படங்களை வைத்தும் வித்தியாசப்படுத்தியிருப்பது பாராட்டுக்குரியது..! பின்னணி இசைதான் ரொம்பவே அகோரம்..! 

இரட்டை அர்த்த வசனங்களை நான் விரும்புபவனல்ல.. ஆனாலும் இந்தப் படத்தில் 'அந்தப்' பிரச்சினையைத் தொட்டுத் தொட்டு வரும் வசனங்கள்தான் படத்தை வெகுவாக ரசிக்க வைக்கிறது என்பதையும் சொல்லியாக வேண்டும்.. பல இடங்களில் வசனங்கள் குத்து மதிப்பாக 'அதனையே' சுற்றி சுற்றி வருவதால் தியேட்டரில் ஆண்கள் வாய் விட்டுச் சிரிக்கிறார்கள்.. பெண்கள்தான் பாவம்.. சிரிக்கவும் முடியவில்லை.. சிரிக்காமலும் இருக்க முடியவில்லை என்ற கதி..! எனக்கு முன்பான வரிசையில் இருந்த ஒரு குடும்பத்தில் பெண்கள் சிரிப்பதை தடுக்கப் பார்த்தும் முடியாமல் சிரிக்க.. ஆண்கள் சிரிக்கவே கூடாது என்ற வைராக்கியத்தில் இருந்தும் முடியாமல் வழிந்ததையும் பார்க்க நேர்ந்தது..! இதுதான் இந்தப் படத்தின் மிகப் பெரிய குறை..! 

குடும்பம், குடும்பமாகச் சென்று பார்க்க முடியாத வகையில் இந்தப் படம் இருந்தாலும்.. பரவாயில்லை தனித் தனியாகச் சென்றாவது பார்த்து விடுங்கள் என்று சொல்ல வைத்திருப்பதே இந்தப் படத்தின் தனிப்பட்ட வெற்றிக்கு அடையாளம்..! 

'கல்யாண சமையல் சாத'த்தை தனியா போய் சாப்பிட்டுப் பாருங்க ..!

16 comments:

Nondavan said...

இந்த படத்திற்கு ஆசைப்பட்டு போய் தான் ’தகராறு’வில் முடிந்தது....

நம்மூரு தயாரிப்பாளர்கள் எல்லாம், கங்கனம் கட்டிக்கிட்டு நல்ல படத்தை துபாயில் ரிலீஸ் செய்வதில்லை போல....

இல்லை, நமக்கு தான் கருமம் அந்த மாதிரியா தெரியவில்லை... ‘தகராறு’ பார்த்த கடுப்ஸ்... பனம் இருக்கு என்பதால் இப்படி எல்லாம் நடிக்கனும்ன்னு எவன் அழுதான்...

Nondavan said...

உங்க விமர்சனம் பார்த்தவுடன்,நிச்சயம் பார்த்தே ஆகவேண்டும்...

பார்ப்போம்.... எப்போ டிவிடி பிரண்ட் கிடைக்கும்ன்னு...

ரெண்டு பிரசன்னாவிற்கும் வாழ்த்துகள்...

Nondavan said...

ஆனாலும், இந்த அய்யர்கள் மேல் உங்களுக்கும் ஏன் இவ்வளவு கடுப்ஸ் அண்ணே....????


இதில் நடித்த நடிகர்களையும் சாதியோடு அடையாளப்படுத்துகிறீர்கள்.... எனக்கு இன்னிக்கு தான், இதில் இருக்கும் சிலர் அய்யர்கள் என்று....

kanavuthirutan said...

எனக்கும் இந்தப்படம் பிடித்திருந்தது... கணவன் மனைவி இருவரும் படம் பார்க்க செல்வதில் கூடப் பிரச்சனை இல்லை.. ஆனால் குழந்தைகளை கூட்டிச் சென்றால் அவர்கள் கேட்கும் கேள்விகளுக்குத்தான் பதில் சொல்ல முடியாமல் திணற வேண்டியிருக்கும்.. இருந்தாலும் குட் அட்டெம்ப்ட்...

கோவி.கண்ணன் said...

விமர்சனங்களையெல்லாம் பார்த்தால் (இது தமிழில் டப் செய்யப்பட்ட பழைய கன்னடப்படமான) முதலிரவே வா வா படத்தின் ரீமேக் போல தெரிகிறது. அந்தப்படம் (சென்னை மவுண்ட் சாலை, எல் ஐ சிக்கு பின் ஒரு திரையரங்கில்) பல நாட்கள் ஓடியது

Unknown said...

Nice review ji

வவ்வால் said...

கோவி

//விமர்சனங்களையெல்லாம் பார்த்தால் (இது தமிழில் டப் செய்யப்பட்ட பழைய கன்னடப்படமான) முதலிரவே வா வா படத்தின் ரீமேக் போல தெரிகிறது. அந்தப்படம் (சென்னை மவுண்ட் சாலை, எல் ஐ சிக்கு பின் ஒரு திரையரங்கில்) பல நாட்கள் ஓடியத//

"பாலியல் விழிப்புணர்வு" படம் எனச்சொல்லிக்கொண்டு வர பல பலான படங்களின் கதையே இதாங்க்ணா அவ்வ்!

---------------

சமீபத்தில ஏதொ ஒரு படம் கருணாஸ் அல்லது சந்தானம் கல்யாணத்தை நிறுத்த மாப்பிள்ளைக்கு ஆண்மை இல்லனு பொய் சொல்லிட்டு ஆள் ஆளுக்கு 'அது சரியாக" ஹீரோவுக்கு ஆலோசனை சொல்லி காமெடினு செய்வாங்க அதையே முழுசா சுட்டு படமா ஆக்கிட்டா போல இருக்கே அவ்வ்!

உண்மைத்தமிழன் said...

[[[Nondavan said...

இந்த படத்திற்கு ஆசைப்பட்டு போய்தான் ’தகராறு’வில் முடிந்தது.
நம்மூரு தயாரிப்பாளர்கள் எல்லாம், கங்கனம் கட்டிக்கிட்டு நல்ல படத்தை துபாயில் ரிலீஸ் செய்வதில்லை போல. இல்லை, நமக்குதான் கருமம் அந்த மாதிரியா தெரியவில்லை. ‘தகராறு’ பார்த்த கடுப்ஸ். பனம் இருக்கு என்பதால் இப்படி எல்லாம் நடிக்கனும்ன்னு எவன் அழுதான்.]]]

ரொம்ப நொந்து போயிருக்கீங்க போலிருக்கு நொந்தவன் ஸார்..! எனக்காக மன்னிச்சு விட்ருங்க..! இந்தப் படத்தை அவசியம் வாய்ப்பு கிடைச்சா பார்த்திருங்க..!

உண்மைத்தமிழன் said...

[[[Nondavan said...

உங்க விமர்சனம் பார்த்தவுடன், நிச்சயம் பார்த்தே ஆக வேண்டும்.
பார்ப்போம். எப்போ டிவிடி பிரண்ட் கிடைக்கும்ன்னு. ரெண்டு பிரசன்னாவிற்கும் வாழ்த்துகள்.]]]

டிவிடியா..? நிச்சயமா சீக்கிரமா உங்க ஊர் தியேட்டருக்கே இந்தப் படம் வருமாம்..! காத்திருங்க..!

உண்மைத்தமிழன் said...

[[[Nondavan said...

ஆனாலும், இந்த அய்யர்கள் மேல் உங்களுக்கும் ஏன் இவ்வளவு கடுப்ஸ் அண்ணே???? இதில் நடித்த நடிகர்களையும் சாதியோடு அடையாளப்படுத்துகிறீர்கள். எனக்கு இன்னிக்குதான், இதில் இருக்கும் சிலர் அய்யர்கள் என்று.]]]

படம் சம்பந்தப்பட்ட அனைவருமே ஐயர்கள்தான்.. அதனால்தான்..! அது படம் பார்க்கும்போது உங்களுக்கே தெரியும்..!

உண்மைத்தமிழன் said...

[[[kanavuthirutan said...

எனக்கும் இந்தப் படம் பிடித்திருந்தது. கணவன் மனைவி இருவரும் படம் பார்க்க செல்வதில் கூடப் பிரச்சனை இல்லை. ஆனால் குழந்தைகளை கூட்டிச் சென்றால் அவர்கள் கேட்கும் கேள்விகளுக்குத்தான் பதில் சொல்ல முடியாமல் திணற வேண்டியிருக்கும். இருந்தாலும் குட் அட்டெம்ப்ட்]]]

இதைத்தான் நானும் சொல்கிறேன் ஸார்..! வருகைக்கும், பின்னூட்டத்திற்கும் நன்றிகள்..!

உண்மைத்தமிழன் said...

[[[கோவி.கண்ணன் said...

விமர்சனங்களையெல்லாம் பார்த்தால் (இது தமிழில் டப் செய்யப்பட்ட பழைய கன்னடப் படமான) முதலிரவே வா வா படத்தின் ரீமேக் போல தெரிகிறது. அந்தப் படம் (சென்னை மவுண்ட் சாலை, எல்.ஐ.சி.க்கு பின் ஒரு திரையரங்கில்) பல நாட்கள் ஓடியது.]]]

அந்தப் படம் மட்டுமில்லை.. பல ஷகீலா படங்கள்.. மற்றும் பிரதீபா படங்களிலும் இதே கதைதான்..! நீங்கள் சொல்வது ஜெயபிரதா தியேட்டரை..! அங்குதான் இந்த மாதிரி கில்மா படங்களை ரிலீஸ் செய்வார்கள்..!

உண்மைத்தமிழன் said...

[[[Arul Vino said...

Nice reviewji ]]]

மிக்க நன்றி நண்பரே..!

உண்மைத்தமிழன் said...

[[[வவ்வால் said...

கோவி

//விமர்சனங்களையெல்லாம் பார்த்தால் (இது தமிழில் டப் செய்யப்பட்ட பழைய கன்னடப்படமான) முதலிரவே வா வா படத்தின் ரீமேக் போல தெரிகிறது. அந்தப்படம் (சென்னை மவுண்ட் சாலை, எல் ஐ சிக்கு பின் ஒரு திரையரங்கில்) பல நாட்கள் ஓடியத//

"பாலியல் விழிப்புணர்வு" படம் எனச் சொல்லிக் கொண்டு வர பல பலான படங்களின் கதையே இதாங்க்ணா அவ்வ்!]]]

அதையும் நானே சொல்லிட்டேங்கண்ணா..!

[[[சமீபத்தில ஏதொ ஒரு படம் கருணாஸ் அல்லது சந்தானம் கல்யாணத்தை நிறுத்த மாப்பிள்ளைக்கு ஆண்மை இல்லனு பொய் சொல்லிட்டு ஆள் ஆளுக்கு 'அது சரியாக" ஹீரோவுக்கு ஆலோசனை சொல்லி காமெடினு செய்வாங்க. அதையே முழுசா சுட்டு படமா ஆக்கிட்டா போல இருக்கே அவ்வ்!]]]

கருணாஸ்.. படம் ரகளபுரம்..!

Nondavan said...

//டிவிடியா..? நிச்சயமா சீக்கிரமா உங்க ஊர் தியேட்டருக்கே இந்தப் படம் வருமாம்..! காத்திருங்க..!// அப்படியா.. ??? சூப்பர்ப், இங்கயும் நல்ல படத்தை ரிலீஸ் பன்ண சொல்லுங்க... என்ன மாதிரி நிறைய கேஸ் இருக்கோம், தியேட்டர்ல பார்க்க... :) :) :)அதுவும் குடும்பத்தோட

உண்மைத்தமிழன் said...

[[[Nondavan said...

//டிவிடியா..? நிச்சயமா சீக்கிரமா உங்க ஊர் தியேட்டருக்கே இந்தப் படம் வருமாம்..! காத்திருங்க..!//

அப்படியா.. ??? சூப்பர்ப், இங்கயும் நல்ல படத்தை ரிலீஸ் பன்ண சொல்லுங்க... என்ன மாதிரி நிறைய கேஸ் இருக்கோம், தியேட்டர்ல பார்க்க... :) :) :)அதுவும் குடும்பத்தோட...]]]

குடும்பத்தோட பார்க்கவே முடியாது சாமி..! தனியா போய்ப் பாருங்க..!