ஆல் இன் ஆல் அழகுராஜா - சினிமா விமர்சனம்

06-11-2013

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

தொடர் வெற்றிகளைக் கொண்டவர்கள் அடுத்த வெற்றிக்கு இதுவரையிலும் காட்டிய முனைப்பையும், உழைப்பையும் காட்டத் தவறினால் அப்போதும் வெற்றி தொடராது என்பதற்கு இந்தப் படமும் ஒரு சான்று..!



கார்த்தியின் தொடர் தோல்விகளை தடுத்து நிறுத்த தொடர் வெற்றிகளைக் கொடுத்த இயக்குநர்தான் தேவை என்பதையறிந்து அவருடைய நெருங்கிய தயாரிப்பாளர் திட்டமிட்டுத்தான் இதனை ஒருங்கிணைத்துள்ளார். தவறுகள் முழுவதும் இயக்குநருடையதுதான்..!

சந்தானம் என்கிற ஒற்றை மனிதனின் தலையில் அனைத்தையும் தூக்கிச் சுமக்க வைத்துவிட்டதால் அந்த காமெடியனையே சீனுக்கு சீன் பார்க்க வேண்டிய கொடுமையிலும், பேசுவதையெல்லாம் காமெடி என்று நினைத்து அவர் பேசியிருப்பதைக் கேட்டு சிரிக்கக்கூட முடியாமல் போனதால் படம் காமெடி படமா அல்லது.. சீரியஸ் படமா என்கிற பீலிங்கைக்கூட தொட்டுவிட்டது..!

எப்போதும் ராஜேஷின் கதை தேர்வும், சீன்கள்  அமைப்பதிலுமே நகைச்சுவை இருக்கும். இதில் கதையில் நகைச்சுவை இருந்தும், சீன்களில் நகைச்சுவை காணாமல் போய்விட்டது.. வெறுமனே இயக்கத்தை மட்டும் வைத்துக் கொண்டு என்ன செய்ய..?

சிற்சில காட்சிகளில் மட்டுமே சிறிது நகைக்க முடிகிறது.. அதிலும் குறிப்பாக காஜல் அகர்வால் ஆண்ட்டி நடனம் கற்றுக் கொள்ளும் காட்சி.. எம்.எஸ்.பாஸ்கர் மாட்டிக் கொள்ளும் காட்சி.. என்று சிலவற்றை மட்டுமே வைத்துக் கொண்டு முழு படத்தையும் 2 மணி 54 நிமிடங்கள் பார்க்க வேண்டுமெனில் மனுஷன் எப்படிய்யா உக்காந்திருக்கிறது..!?

லோக்கல் சேனல் செட்டப்பெல்லாம் நல்லாத்தான் இருந்தது..! அதில் சந்தானத்தை திணித்து கரீனா கபூராக மாற்றி.. கோட்டி சீனிவாசராவை சபலத்தில் ஆழ்த்துவதும்.. அது தொடர்பான காட்சிகள் கடைசிவரையிலும் தொடர்வது உவ்வே ரகம்..!  இதுவே படத்திற்கு மிகப் பெரிய மைனஸ் பாயிண்ட் என்று நினைக்கிறேன்..!

சந்தானத்தின் இழுவை கமெண்ட்டுகளை இனிமேலும் மக்கள் நம்பி பார்ப்பார்கள் என்று யாரும் நினைக்க வேண்டாம்.. இந்த 'ஆல் இன் ஆல் அழகுராஜா' அதனை பொய்யாக்கியிருக்கிறது..!  சந்தானம் பேசி பேசி பேசியே கொல்கிறார்.. இத்தனை பக்கம், பக்கமான டயலாக்குகள் கிடைத்துவிட்டால் ரீலை ஓட்டிவிடலாம்.. ஆனா சிரிக்க வைக்கணுமே..? யாரிடம் சரக்கு தீர்ந்துச்சுன்னு தெரியலை..?

காஜல் ஆண்ட்டி எப்போதும்போல் ஜில்லென்றே இருக்கிறார்.. கலைத்துறையில் சாதனை படைக்க நினைத்து அவர் எடுக்கும் முயற்சிகள் நகைப்புக்குரியதாக இருந்தாலும் இது போன்ற ஹீரோ சப்ஜெக்ட் படங்களில் இந்த அளவுக்காச்சும் நடிப்புக்கு ஸ்கோப் கொடுத்தாங்களேன்னு சந்தோஷப்பட்டுக்கலாம்..!

ராதிகா ஆப்தேவின் வருகை மட்டுமே ரசிகர்களுக்கு கொஞ்சம் ரிலீப் கொடுத்தது..  'ஓ மானே மானே' ஸ்டைலில் இருக்கும் 'உன்னைப் பார்த்த' பாடல் காட்சியை ரம்மியமாக படமாக்கியிருக்கிறார் இயக்குநர். தமனின் இசையும், பாடல் தேர்வும், லொகேஷனும் அருமை.. நடனமும் அசத்தல்தான்..! இங்கேதான் ராதிகாவை ரொம்பவே பிடிச்சுப் போகிறது..!

சென்டிமெண்ட் காட்சிகளில் ராஜேஷ் குறை வைக்க மாட்டார்.. நல்லா பாடுறேனாப்பா என்று சந்தேகத்துடன் காஜல் கேட்கும் கேள்விக்கு குடும்பமே பதில் சொல்லி அழுகும் காட்சி.. கார்த்தியை கல்யாணம் செய்ய சம்மதிக்க வைக்க பிரபு செய்யும் செட்டப்பு..  முதலாளி செத்துட்டாருன்னு தெரிஞ்சு அவசரத்தனமா அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வைக்கும் காட்சி.. என்று எதிலும் குறையில்லை. ஆனால் மனதில் நிற்கவில்லை..! பிரபு-சரண்யா காட்சிகளுக்கு டிவி சீரியல்களே பெட்டர் போலத்தான் தோன்றுகிறது..!

கார்த்திக்கு சண்டை காட்சிகள் இல்லாததால் ஹாயாக நடித்திருக்கிறார்.. மற்றபடி நடிப்பில் எந்த வித்தியாசமும் இல்லை.. மேக்கப்பும் இதே மாதிரிதான்.. முன்னெல்லாம் ஒரு ஹீரோவின் மேக்கப்பை வைச்சே அது என்ன படம்ன்னு சொல்லுவோம்.. இப்போவெல்லாம்.. அது அந்தக் காலம்..? 

படம் வெளியாகி 3 நாட்கள் கழித்து படத்தின் பிற்பாதியில் 20 நிமிட காட்சிகளை குறைத்திருக்கிறார்களாம். அதனை முன்பேயே செய்திருக்கலாம்.. எடுத்ததையெல்லாம் மக்கள் பார்த்துவிடுவார்கள் என்கிற குருட்டு நம்பிக்கையில் செய்த பிழை இது..! 

எல்லாம் முடிஞ்சு வீட்டுக்குக் கிளம்பலாம்ன்னு எந்திரிக்கும்போது திரும்பவும் ஒரு கிளைமாக்ஸை வைச்சு கொன்னுட்டாங்க..! அந்த கடைசி டிரெயின் டிராக்  சீனும், கரீனா சோப்ரா என்ட்ரியும் தேவைதானா..? படத்தோட முடிவுல ஒலிக்கிற 'நிலா காயுது' பாடலின் 'ச்சீ' என்கிற இந்த வார்த்தைதான், இந்தப் படத்துக்கு கிடைச்ச கடைசி டிரேட் மார்க் கமெண்ட்டு..! அண்ணன் ராஜேஸுக்கு தேவையா இது..? 

இந்தப் படத்துக்கு இவ்ளோ விமர்சனம் போதும்ன்னு நினைக்கிறேன்..!

15 comments:

ஜோதிஜி said...

காஜல் ஆண்ட்டி

இந்த வார்த்தைக்கு என் கடுமையான கண்டனம்.

யோசிப்பவர் said...

காஜல் ஆண்ட்டி என்ற வார்த்தைக்கு, எங்கள் அகில உலக அமிஞ்சிக்கரை பேரவை சார்பாக கடும் கடும் கடும் கடும் கடும் கடும் கடும் கடும் கடும் கடும் கண்டனங்கள்ணே!!

மத்தபடி ரொம்ப ஷார்ட்டா முடிச்சிட்டீங்க! படமே இவ்வளவு ஷார்ட் இல்லையாமே!?!

:)))

ஒரு வாசகன் said...

இதற்க்கு பதில் பிரியாணியையாவது ரிலீஸ் பண்ணியிருக்கலாம்

Ganesh kumar said...

காஜல் ஆண்ட்டி

இந்த வார்த்தைக்கு என் கடுமையான கண்டனம்.

Ganesh

Jayaseelan said...

காஜல் வரும் காட்சிகளில் மட்டும் கொஞ்சம் ரசிக்க முடிகிறது... பிளாஷ்பேக்கில் வரும் சந்தானம் ரொம்ப அறுக்கிறார்... கவுண்டமணி பாணியிலிருந்து விவேக்கின் பாணிக்கு மாறி சந்தானம் வெறுப்பேற்றுகிறார்....

உண்மைத்தமிழன் said...

[[[ஜோதிஜி திருப்பூர் said...

காஜல் ஆண்ட்டி

இந்த வார்த்தைக்கு என் கடுமையான கண்டனம்.]]]

நீங்களுமாண்ணே..????????

உண்மைத்தமிழன் said...

[[[யோசிப்பவர் said...

காஜல் ஆண்ட்டி என்ற வார்த்தைக்கு, எங்கள் அகில உலக அமிஞ்சிக்கரை பேரவை சார்பாக கடும் கடும் கடும் கடும் கடும் கடும் கடும் கடும் கடும் கடும் கண்டனங்கள்ணே!!]]]

நல்லாயிருங்கப்பூ..! காஜலுக்கு இத்தனை ரசிகர்களா..?

[[[மத்தபடி ரொம்ப ஷார்ட்டா முடிச்சிட்டீங்க! படமே இவ்வளவு ஷார்ட் இல்லையாமே!?!

:)))]]]

இந்தப் படத்துக்கு இது போதும்ன்னு நினைச்சேன்.அவ்ளோதான்..!

உண்மைத்தமிழன் said...

[[[ஒரு வாசகன் said...

இதற்கு பதில் பிரியாணியையாவது ரிலீஸ் பண்ணியிருக்கலாம்.]]]

பிரியாணி படத்திற்காக இதில் ஏகப்பட்ட விளம்பரம் செஞ்சிருக்காங்க..! நல்லா உத்துப் பார்த்தீங்கன்னா தெரியும்..!

உண்மைத்தமிழன் said...

[[[ganesh kumar said...

காஜல் ஆண்ட்டி

இந்த வார்த்தைக்கு என் கடுமையான கண்டனம்.

Ganesh]]]

ஓகே.. கண்டனங்களை மனப்பூர்வமாக ஏற்றுக் கொள்கிறேன்..!

உண்மைத்தமிழன் said...

[[[Jayaseelan Arumugam said...

காஜல் வரும் காட்சிகளில் மட்டும் கொஞ்சம் ரசிக்க முடிகிறது... பிளாஷ்பேக்கில் வரும் சந்தானம் ரொம்ப அறுக்கிறார். கவுண்டமணி பாணியிலிருந்து விவேக்கின் பாணிக்கு மாறி சந்தானம் வெறுப்பேற்றுகிறார்.]]]

சந்தானம் ஸார்.. நோட் திஸ் பாயிண்ட்.. புரிஞ்சுக்கிட்டா சரி..!

Nondavan said...

ஆயுரம் இருந்தாலும், காஜலை எப்படி ஆண்ட்டின்னு சொல்லலாம் அண்ணே... மனசு வலிக்குது... :) :) :) நானும் கண்ணாபின்னான்னு கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன்

buvan said...

Indha padathuku vimarsanam ezhudhina unga mana dairiyatha parati, ungalukaga indha padathuke 'ssr pangajam' theatre-la 10 ticket free-a eduthukodukuren anna.

buvan said...

Indha padathuku vimarsanam ezhudhina unga mana dairiyatha parati, ungalukaga indha padathuke 'ssr pangajam' theatre-la 10 ticket free-a eduthukodukuren anna.

உண்மைத்தமிழன் said...

[[[Nondavan said...
ஆயுரம் இருந்தாலும், காஜலை எப்படி ஆண்ட்டின்னு சொல்லலாம் அண்ணே... மனசு வலிக்குது... :) :) :) நானும் கண்ணாபின்னான்னு கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.]]]

ஓகே.. அடுத்தப் படத்துல பாருங்க. நான் சொன்னது நச்சுன்னு புரியும்..!

உண்மைத்தமிழன் said...

[[[buvan said...

Indha padathuku vimarsanam ezhudhina unga mana dairiyatha parati, ungalukaga indha padathuke 'ssr pangajam' theatre-la 10 ticket free-a eduthukodukuren anna.]]]

இந்த வார்த்தையை அப்படியே வைச்சிருங்க.. அடுத்து இரண்டாம் உலகம் வரப் போவுது.. அதுக்கு 10 டிக்கெட் எடுத்துக் கொடுத்திருங்க..!