23-06-2012
என் இனிய வலைத்தமிழ் மக்களே..!
மிகுந்த எதிர்பார்ப்புடன் திரையங்கத்திற்கு வருபவர்களை ஏமாற்றியனுப்புவது தமிழ்ச் சினிமாவுக்கு புதிதல்ல.. ஆனால் தோல்வியடையக் கூடாது என்று நினைக்கும் ரசிகர்கள் கூட்டத்தைக் கையில் வைத்திருக்கும் ஸ்டார் நடிகர் இப்படிச் செய்யலாமா என்று புலம்புகிறார்கள் சினிமா புள்ளிகள்..!
ரொம்பச் சின்னக் கதை. லாஜிக்படி பார்த்தா அதுவே மிகப் பெரிய ஓட்டை.. நாட்டரசன்கோட்டை செட்டி நாட்டு அரண்மனையை தனது பூர்வீக வீடாகக் காட்டும் கார்த்தி, அது ரயில்வே மேம்பாலத்துக்காக இடிபடப் போகிறது என்பதை அறிந்து முதல் அமைச்சரிடம் மனு கொடுத்து தனது வீட்டை காப்பாற்ற வேண்டி சென்னைக்கு வருகிறார். வந்த இடத்தில் சி.எம். அவரை அவமானப்படுத்திவிட பல சகுனித்தனங்கள் செய்து அவரை எப்படி பழி வாங்குகிறார் என்பதுதான் கதை. படத்தின் பிற்பாதி கதை 2 மாதங்களுக்கு முன்பு வெளிவந்த “மை” படத்தின் கதைதான்..! ஆனால் அதில் இருந்த அழுத்தம்கூட அதைவிட அதிக பட்ஜெட்டில் தயாராயிருக்கும் இப்படத்தில் இல்லை என்பது வருத்தத்திற்குரியது..!
“முடிச்சை அவுக்குறதே சுவாரஸ்யம்ன்னா அவிழ்க்க முடியாத முடிச்சு போடுறது அதைவிட சுவாரஸ்யம்”ன்னு இடைவேளை பிளாக்ல கார்த்தி சொல்லிட்டு நம்மளை டீ சாப்பிட வெளில தள்ளினாரு.. ஆனால் அந்த சுவாரஸ்யம் இதுதானா என்னும்போது நமக்குள்ளேயே அசுவாரஸ்யம்தான் ஏற்படுகிறது.. எதுக்கு இவ்வளவு பில்டப்பு..?
முதலில் கதையின் அடிப்படை லாஜிக்கே தப்பா இருக்கு..! ஊருக்கே சோறு போட்டு தன் சொத்துக்களை அழிச்ச குடும்பம்னா, அதே ஊருக்கு ரயில்வே பாலம் வரணும்னு தானாவே முன் வந்து வீட்டை கொடுத்திருக்க வேண்டாமா..? பின்ன எதுக்கு எங்களோட ஒரே சொத்து அதுதான். அதையும் இழந்திரக் கூடாதுன்னு சொல்லி சென்னைக்கு ஓடணும்..!
இன்னொரு லாஜிக் ஓட்டை..! இப்போது எந்த மாநகராட்சியில் மேயரை, கவுன்சிலர்கள் தேர்ந்தெடுக்கிறார்கள். மேயர் பதவிக்கும் தனியாக தேர்தல் நடக்கிறதே..! நகராட்சித் தலைவர் பதவிக்குக் கூட தேர்தல்தான். கவுன்சிலர்கள் மாநகராட்சிகளில், நகராட்சிகளில் துணைத் தலைவரை மட்டுமே தேர்வு செய்கிறார்கள்..! இந்தக் கூத்தை என்னன்னு சொல்றது..? என்ன கொடுமை சரவணா இது..?
இன்னொரு லாஜிக் ஓட்டை..! இப்போது எந்த மாநகராட்சியில் மேயரை, கவுன்சிலர்கள் தேர்ந்தெடுக்கிறார்கள். மேயர் பதவிக்கும் தனியாக தேர்தல் நடக்கிறதே..! நகராட்சித் தலைவர் பதவிக்குக் கூட தேர்தல்தான். கவுன்சிலர்கள் மாநகராட்சிகளில், நகராட்சிகளில் துணைத் தலைவரை மட்டுமே தேர்வு செய்கிறார்கள்..! இந்தக் கூத்தை என்னன்னு சொல்றது..? என்ன கொடுமை சரவணா இது..?
முதல் பாதியில் சந்தானம் இல்லையெனில் நமக்கு நாமே சூஸையிடிங் பார்ட்டாகத்தான் இருந்திருக்கும். கமல், ரஜினி, தேவி என்ற ஆரம்பக்கட்ட அறிமுகங்கள் ஜோராக இருந்தாலும், போகப் போக அவர்களின் அலும்பு அலுப்புத் தட்டி, நிஜமாகவே கமல், ரஜினியை கிண்டல் செய்கிறார்களோ என்று எண்ணவும் தோன்றுகிறது..! இந்த சலம்பலையும் சமாளிக்க வேண்டி அதற்காக சந்தானத்தை டயலாக் பேச வைத்து ஏதோ சமாளித்திருக்கிறார் இயக்குநர். இந்தக் கூத்தின் துவக்கத்தில் கார்த்தியின் அறிமுகமும், அதைத் தொடர்ந்த பாடலுமே படத்தின் கதியை நிர்ணயித்துவிட்டது எனலாம்.. என்னே ஒரு கிரியேட்டிவிட்டி..?
படத்தின் பிற்பாதியில் சகுனித்தனமான ஆட்டம் என்று சொல்லி சப்பையான காட்சியமைப்புகளை வைத்து ரொம்பவே வெறுப்பேற்றியிருக்கிறார்கள். நம்ப முடியாத சப்பைகளுக்கு சகுனியாட்டம் என்று எவன் சொன்னான் என்று தெரியவில்லை..! பார்த்த மாத்திரத்தில் ராதிகா கார்த்தியின் பேச்சைக் கேட்பதும், ராதிகாவை போலவே கோட்டா சீனிவாசராவும், நாசரும் நடந்து கொள்கிறார்கள் என்பதும் திரைக்கதை எவ்வளவு சொத்தை என்பதைத்தான் காட்டுகிறது.. இயக்குநர் இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டிருக்கலாம்..!
கொஞ்சம் கலைஞர், கொஞ்சம் வைகோ, கொஞ்சம் ஜெயலலிதா என்று மூவரையுமே படத்தின் பல இடங்களில் மறைமுகமாக சுட்டிக் காட்டிருக்கிறார் இயக்குநர். இந்த மறைமுகம் என்றைக்கு தமிழ்ச் சினிமாவில் மறைந்து, தைரியமாக முகம் காட்டி குற்றம்சாட்டப் போகிறார்களோ தெரியவில்லை.. அந்தத் தைரியமிக்க ஒரு இயக்குநரை நான் சாவதற்குள்ளாகவாவது பார்க்க விரும்புகிறேன்..!
கார்த்திக்கு இது 6-வது படம். ஆனால் பருத்தி வீரனில் பார்த்த அதே கார்த்திதான். இதுலேயும். நடிகர்கள் தங்களுக்கென்று தனியாக ஒரு நடிப்புப் பாதையை ஏற்படுத்திக் கொண்டால்தான், சினிமாவுலகில் நீடித்து நிலைக்க முடியும். இதை கார்த்தியண்ணேகிட்ட யார் போய்ச் சொல்றது..? இப்படியே நடிச்சாருண்ணா இன்னும் 2 படம்தான் அண்ணன் தாங்குவாருன்னு உறுதியா சொல்லிரலாம்..!
படத்தின் ஹீரோயினை போகிற போக்கில் அறிமுகப்படுத்தியிருக்கிறார்கள். கண்ணு மட்டும்தான் பெரிசா இருக்கு..! இருந்தும் பிரயோசனமில்லை.. லவ் கெமிஸ்ட்ரி ஒட்டவேயில்லை என்பதுதான் உண்மை. காதலுக்கான ஒரு சின்ன பீலிங்கைகூட காட்ட முடியாமல் என்னவொரு காதல் காட்சிகள்..? பாடல்கள்..! வேஸ்ட்டு..
இன்னுமொரு மொக்கை வேஸ்ட்டு அனுஷ்கா.. இதே படத்தில் ஜோடியாகக்கூட நடிக்க வைத்திருக்கலாம். ஜூனியர் ஆர்ட்டிஸ்ட்டைவிடவும் கேவலமாக காட்டி முடித்திருக்கிறார்கள். ஒரு சின்ன ஷாட்டில் ஆண்ட்ரியாவும் வந்து போகிறார். பணம், செல்வாக்கை வைத்து இப்படியெல்லாம் செய்வதினால் எந்தப் படமும் ஜெயிக்கப் போவதில்லை..!
சந்தானம், பிரகாஷ்ராஜ், ராதிகா ஆகிய மூவர்தான் சகுனியை சனியாக்காமல் கொஞ்சம் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். ஏற்கெனவே நடிகர் சலீம் கெளஸை, பிரகாஷ்ராஜின் கேரக்டரில் நடிக்க வைத்து முழு படத்தையும் எடுத்து ரஷ் போட்டு பார்த்திருக்கிறார்கள். படத்தில் சுத்தமாக ஈர்ப்பே இல்லை என்று விநியோகஸ்தர்கள் பேஸ்த்தடித்து விலகிய பின்பு, மீண்டும் ஒரு யோசனை வந்து அண்ணன் பிரகாஷ்ராஜை தேடிப் பிடித்து அழைத்து வந்து சலீம் கேரக்டரில் அவரை நடிக்க வைத்து மீண்டும் படத்தை எடுத்திருக்கிறார்கள். இதிலும் ஒரு வில்லங்கமாம்..!
ஏற்கெனவே இப்படத்தின் ஒரிஜினல் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா ஒரு கோடி ரூபாயை பிரகாஷ்ராஜுக்கு கடனாகக் கொடுத்திருந்தாராம். இந்தப் படத்தில் நடித்ததற்காக 50 லட்சத்தை வைத்துக் கொண்டு மீதி 50-ஐ வெட்டுங்கள் என்று ஞானவேல்ராஜா கேட்டதற்கு, கூடுதலாக நீங்கள் 50 லட்சம் கொடுத்தால்தான் டப்பிங் என்று அடித்துச் சொல்லியிருக்கிறது செல்லம்..! பாவம்.. கடைசி நிமிடத்தில் தகராறு வேண்டாமே என்பதால் பணத்தை பைசல் செய்திருக்கிறார் ஞானவேல் என்பது சினிமாவுலகச் செய்தி.
பிரகாஷ்ராஜ் வாங்கிய காசுக்கு வஞ்சகமில்லாமல் நடித்துவிட்டுப் போயிருக்கிறார். அவர் வருகின்ற காட்சிகளிலெல்லாம் கார்த்தியே டம்மியாக இருப்பது இயல்பாகவே தெரிகிறது..! ரமணி ஆச்சியாக வரும் ராதிகாவின் அறிமுகக் காட்சியில் இருக்கும் அவரது கம்பீரம் அடு்ததடுத்த காட்சிகளில் அடங்கி, ஒடுங்கிப் போய்விட்டது..! எப்போதுமே சித்திக்கு கம்பீரம்தான் ஷூட்..! நல்ல கேரக்டர்.. பிற்பாதியில் சித்தியையும், பிரகாஷையும் மோத வைத்திருந்தால் திரைக்கதை நன்றாக இருந்திருக்கும்.
ரோஜா சரி.. ரோஜாவின் கணவராக வருபவர் யார் என்றே தெரியவில்லை. இப்படித்தான் கேஸ்டிங் செய்வதா..? கார்த்தியின் அத்தையாக அவர் பேசும் வசனங்களும், தனது மகளின் காதலை ஏற்க மாட்டேன் என்று சட்டென்று பேசி கார்த்தியை கட் செய்யும் காட்சியும் ரன் வேகத்தில் போக.. நமக்குத்தான் மண்டையில் ஏறவில்லை..!
சந்தானம் வழக்கம்போல அதேதான்.. நீள, நீள வசனங்களை கொஞ்சம் குறைத்துக் கொண்டு தனது உடல் மொழியை வைத்து இனிமேல் காமெடி நடிப்பைக் காண்பித்தால் நன்றாக இருக்கும்..! ஆனாலும் கதையைக் குழப்புறியே என்று அவர் கார்த்தியை கலாய்க்கும் இடத்தில்தான் அவரோடு சேர்ந்து நாமளும் காப்பாற்றப்படுகிறோம் என்பதையும் சொல்லித்தான் ஆக வேண்டும்..!
படத்திற்கு இசையமைத்த ஜி.வி.பிரகாஷுக்கு எது மாதிரி கதை சொல்லி பாட்டு வாங்கினார்கள் என்று தெரியவில்லை. இத்தனைக்கும் இப்போதைய ஹாட்டான இயக்குநர்களின் முதல் பார்வையே இவர் மீதுதான் இருக்கிறது. அப்படியிருந்தும் இப்படியா..?
இப்படம் 36 கோடிக்கு விற்பனையாகியிருக்கிறது என்று 1 மாதமாக செய்தி பரப்பி பெப் ஏற்றியவர்கள், இந்தப் படத்தின் துவக்கத்தின்போதே இன்னும் கொஞ்சம் கூடுதலாக 36 நாட்கள் ஸ்டோரி டிஸ்கஷன் செய்திருந்தால் ஒருவேளை உருப்படியான கதை கிடைத்திருக்கலாம்..!
இப்படத்தின் இயக்குநர் ஷங்கர் தயாள் பிரமிட் சாய்மீராவில் பல நாட்கள் கதை சொல்லி ஒரு வழியாக ஓகே பெற்று ஒரு திரைப்படத்தைத் துவக்கினார். அதுவும் புஸ்வானமாகி பாதியிலேயே நின்றுவிட, கடந்த சில வருடங்களாகவே முயற்சி மேல் முயற்சிகளை செய்து தனது முதல் படத்தையே மிகப் பெரிய ஹீரோவுடன் ஆரம்பித்திருக்கிறார். இந்த நல்ல வாய்ப்பை அவர் பயன்படுத்திக் கொள்ளவில்லையே என்பதுதான் வருத்தமாக இருக்கிறது. அடுத்த முறை ஜெயிக்கட்டும்..!
இப்படத்தின் ரிசல்ட் கேட்டு சினிமா துறையினர் வருத்தப்பட்டாலும், அஜீத் ரசிகர்கள் உள்ளுக்குள் சந்தோஷத்தில் இருக்கிறார்கள். பில்லா-2 படத்துடன் போட்டி போட்டே தீருவது என்ற நோக்கத்தில் தியேட்டர்களை புக் செய்யும் சண்டையில் ஈடுபட்டு அது பெரிய சச்சரவு ஆன நேரத்தில்தான் சகுனியின் சில ஏரியாக்களை விலைக்கு வாங்கியிருக்கும் பில்லா-2-வின் தயாரிப்பாளர் ஆஸ்கர் ரவிச்சந்திரன் தன்னைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டி வேறு வழியில்லாமல் பில்லா-2-வை தள்ளிப் போடும் நிலைமைக்குப் போனார். இதனாலேயே அஜீத் ரசிகர்களின் கோபத்திற்குள்ளாகிவிட்டார் மிஸ்டர் சகுனியார்..!
இந்த ரிலீஸ் நேர யுத்தத்திற்கு இன்னொரு காரணத்தையும் சொல்கிறார்கள் சினிமாக்காரர்கள். மங்காத்தா ரிலீஸின்போது அதன் ஒட்டு மொத்த விநியோகத்தையும் ஒரு நாளில் ஞானவேல்ராஜாவின் ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் ஏற்றது. மறுநாளே மங்காத்தா விளம்பரப் போஸ்டர் மாற்றப்பட்டு ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் வழங்கும் மங்காத்தா என்று பெயருடன் புதிய ஸ்டில்கள் அனைத்து பத்திரிகைகளுக்கும் அனுப்பப்பட்டது. இந்த ஸ்டில்கள் பத்திரிகைகளுக்கு அனுப்பப்பட்ட 4 மணி நேரத்தில் தல அஜீத்தின் உத்தரவால் மங்காத்தாவின் விநியோக உரிமை ஞானவேல்ராஜாவிடமிருந்து அதே நாளில் திரும்பப் பெறப்பட்டது. இந்தத் திடீர் திருப்பத்தை எதிர்பார்க்காத ஞானவேல்ராஜா இப்போது சமயம் பார்த்து இதற்கு பதிலடி கொடுக்கத்தான் பில்லா 2 வெளியாகும் அதே நாளில் சகுனியையும் வெளியிட வேண்டும் என்று அடம் பிடித்ததாகச் சொல்கிறார்கள். அதுக்குத்தான் இப்போ ஆப்பு கிடைச்சிரு்ககு என்று சொல்லி சிரிக்கிறார்கள் அஜீத் ரசிகர்கள்..!
எது எப்படியோ ஒரு நல்ல எண்ட்டெர்டெயின்மெண்ட்டாக வந்திருக்க வேண்டிய படம் பாதி டெயின்மெண்ட்டாக வந்திருப்பதுதான் சோகம்..!
|
Tweet |
39 comments:
முதலில் கதையின் அடிப்படை லாஜிக்கே தப்பா இருக்கு..! ஊருக்கே சோறு போட்டு தன் சொத்துக்களை அழிச்ச குடும்பம்னா, அதே ஊருக்கு ரயில்வே பாலம் வரணும்னு தானாவே முன் வந்து வீட்டை கொடுத்திருக்க வேண்டாமா..? பின்ன எதுக்கு எங்களோட ஒரே சொத்து அதுதான். அதையும் இழந்திரக் கூடாதுன்னு சொல்லி சென்னைக்கு ஓடணும்..! என்ன கொடுமை சரவணா இது..?////
அண்ணே... சரியான கேள்வி...
neengale mookainu solliteenga... appa kandippa mokkaithan
//படத்தின் ஹீரோயினை... கண்ணு மட்டும்தான் பெரிசா இருக்கு..! பிரயோசனமில்லை..//
இதுல தெரியுது, தம்பி, உங்க வருத்தத்தின் உச்சம்! இத்தனை சுடர்கள் (stars) பங்குபெற்று என்ன பிரயாஜனம், ஒரு தெங்குசெட்டுக் கிட்டவில்லை என்றால்?
நன்றி, தம்பி, ஒரு நூறோ நூற்றிச்சொச்சமோ ரூபாய் மிச்சம்.
ஏற்கெனவே ஆசீஷ் வித்யார்த்தியை பிரகாஷ்ராஜின் கேரக்டரில்//// saleem ghouse illaya (vitri vizha villan jindha)
[[[தமிழ்வாசி பிரகாஷ் said...
முதலில் கதையின் அடிப்படை லாஜிக்கே தப்பா இருக்கு..!
ஊருக்கே சோறு போட்டு தன் சொத்துக்களை அழிச்ச குடும்பம்னா, அதே ஊருக்கு ரயில்வே பாலம் வரணும்னு தானாவே முன் வந்து வீட்டை கொடுத்திருக்க வேண்டாமா..? பின்ன எதுக்கு எங்களோட ஒரே சொத்து அதுதான். அதையும் இழந்திரக் கூடாதுன்னு சொல்லி சென்னைக்கு ஓடணும்..! என்ன கொடுமை சரவணா இது..?////
அண்ணே... சரியான கேள்வி...]]]
இதுதான் மெயின் தப்பு.. இதை சரி செஞ்சிருந்தாலே மத்ததெல்லாம் சரியாயிருக்கும்..!
[[[எல் கே said...
neengale mookainu solliteenga... appa kandippa mokkaithan.]]]
ஓகே.. காசு மிச்சமா..?
[[[rajasundararajan said...
//படத்தின் ஹீரோயினை... கண்ணு மட்டும்தான் பெரிசா இருக்கு..! பிரயோசனமில்லை..//
இதுல தெரியுது, தம்பி, உங்க வருத்தத்தின் உச்சம்! இத்தனை சுடர்கள் (stars) பங்கு பெற்று என்ன பிரயாஜனம், ஒரு தெங்கு செட்டுக் கிட்டவில்லை என்றால்?]]]
ஹி.. ஹி.. நாமெல்லாம் யூத்துண்ணே.. அதான் கொஞ்சம் இப்படி..!!!
[[[நன்றி, தம்பி, ஒரு நூறோ நூற்றிச் சொச்சமோ ரூபாய் மிச்சம்.]]]
நேர்ல பார்க்கும்போது கொடுத்திட்டா நல்லது..!
[[[பிரியமுடன் பிரபு said...
:)]]]
இந்த ஸ்மைலியை மொதல்ல தூக்கணும்..
6 பக்கத்துக்கு டைப் அடிச்சு போட்டிருக்கேன். ஒரு வரி எழுதக் கூடவா நேரமில்லை.. அடப் போங்கப்பா..!
[[[shabi said...
ஏற்கெனவே ஆசீஷ் வித்யார்த்தியை பிரகாஷ்ராஜின் கேரக்டரில்//
//saleem ghouse illaya (vitri vizha villan jindha)]]]
ஸாரி.. ஸாரி.. யூ ஆர் கரெக்ட் ஷபி.. அது சலீம் கெளஸ்தான்..!
விடுனே, எல்லறோம் நல்ல படம் எடுத்துட, நம்ப எப்பூடி விமர்சனம் பண்ணுறது.... :)
// முதலில் கதையின் அடிப்படை லாஜிக்கே தப்பா இருக்கு..! ஊருக்கே சோறு போட்டு தன் சொத்துக்களை அழிச்ச குடும்பம்னா, அதே ஊருக்கு ரயில்வே பாலம் வரணும்னு தானாவே முன் வந்து வீட்டை கொடுத்திருக்க வேண்டாமா..? பின்ன எதுக்கு எங்களோட ஒரே சொத்து அதுதான். அதையும் இழந்திரக் கூடாதுன்னு சொல்லி சென்னைக்கு ஓடணும்..! என்ன கொடுமை சரவணா இது..? //
முக்கியமான லாஜிக்... இதை யாரும் யோசிக்கலை... அதேமாதிரி ரயில்வே துறை மத்தியில் இருக்கும்போது ஹீரோ அபத்தமாக மாநிலத்தில் காய் நகர்த்துகிறார்...
உங்களுடைய பதிவின் ஏழாவது பத்தி என்னுடயதுடன் ஒத்துப்போகிறது :)
சினிமா உள்ளடி விவகாரங்களை இந்த விமர்சனத்துடன் சேர்த்து எழுதாமல் நீளத்தை குறைத்திருக்கலாமே...
சகுனி....சனி...என்பதை தெளிவாய் சொல்லிட்டீங்க....
//இதை கார்த்தியண்ணேகிட்ட யார் போய்ச் சொல்றது..? இப்படியே நடிச்சாருண்ணா இன்னும் 2 படம்தான் அண்ணன் தாங்குவாருன்னு உறுதியா சொல்லிரலாம்..!//
கார்த்தியும் உங்க அண்ணனா, அப்ப உங்க தம்பிதான் யாரு, சூப்பர் ஸ்டாரா, இல்ல உலக நாயகனா....????
படம் மிகவும் போர்....சூப்பர் விமர்சனம்....
இந்தப்படம் ஆனால் வெகுஜன ரசிகர்களுக்கு பிடிக்குமோ? அதாவது விசிலடிச்சான் குஞ்சுகளுக்கு. என் நண்பன் இதை சூப்பர் என்கிறான்.ஓகே ஓகே வை விட அருமையான படம்.கண்டிப்பா சூப்பர் ஹிட் என்கிறான்...கேட்டால் சிறுத்தை ஓடிச்சில்ல அதை மாதிரிதான் என்ற பதில் வேறு. நான் இன்னும் பார்க்கலை.பார்த்துட்டுதான் முடிவு பண்ணனுமா?
மொக்க படம், எப்படியோ எல்லோரும் ஒரு தடவை பார்ப்பார்கள் - போட்ட பணத்தை அவர்கள் எடுப்பார்கள்.
@ kavi
// கார்த்தியும் உங்க அண்ணனா, அப்ப உங்க தம்பிதான் யாரு, சூப்பர் ஸ்டாரா, இல்ல உலக நாயகனா....???? //
கவி... இப்ப நீங்க இந்த கமெண்டை படிச்சிட்டு இருக்கும்போது பிறக்கும் குழந்தைகூட என் தம்பி சரவணனுக்கு அண்ணன் தான்...
பில்லாவும் இதே மாதிரி ஊத்திக்கும் என்று நினைக்கிறன்.
பில்லாவிலும் எதுவும் இருக்காது என்று தோன்றுகிறது.சகுனி நான் நினைத்ததுபோல் ஆகிவிட்டது.
பில்லாவும் அப்படியே ஆகிவிடும் என்று நம்புவோம்.கேபிள் சங்கர் தன் சகுனி விமர்சனத்தில் "கார்த்திக்கு சகுனி ஒரு ராஜபாட்டை "என்று சொல்லியுள்ளார்.அதேபோல் அஜித்தின் ராஜபாட்டையாக பில்லா ஆகிவிடும்.
[[[Vijayakumar Ramdoss said...
விடுனே, எல்லறோம் நல்ல படம் எடுத்துட, நம்ப எப்பூடி விமர்சனம் பண்ணுறது.... :)]]]
அப்படீன்றீங்க..? இதுவும் கேக்குறதுக்கு நல்லாத்தான் இருக்கு..!
[[[Philosophy Prabhakaran said...
//முதலில் கதையின் அடிப்படை லாஜிக்கே தப்பா இருக்கு..! ஊருக்கே சோறு போட்டு தன் சொத்துக்களை அழிச்ச குடும்பம்னா, அதே ஊருக்கு ரயில்வே பாலம் வரணும்னு தானாவே முன் வந்து வீட்டை கொடுத்திருக்க வேண்டாமா..? பின்ன எதுக்கு எங்களோட ஒரே சொத்து அதுதான். அதையும் இழந்திரக் கூடாதுன்னு சொல்லி சென்னைக்கு ஓடணும்..! என்ன கொடுமை சரவணா இது..? //
முக்கியமான லாஜிக்... இதை யாரும் யோசிக்கலை... அதேமாதிரி ரயில்வே துறை மத்தியில் இருக்கும்போது ஹீரோ அபத்தமாக மாநிலத்தில் காய் நகர்த்துகிறார்...]]]
கரெக்ட்டு..! ஏதோ அவசரத்துல தினத்தந்தியை படிச்சிட்டு திரைக்கதை எழுதியிருக்கிற மாதிரி தோணுது..!
[[[சினிமா உள்ளடி விவகாரங்களை இந்த விமர்சனத்துடன் சேர்த்து எழுதாமல் நீளத்தை குறைத்திருக்கலாமே...]]]
குறைக்கலாம்தான். ஆனால் தனியாக எழுதினால் சுவாரஸ்யம் இருக்காதே..?
[[[கோவை நேரம் said...
சகுனி.... சனி...என்பதை தெளிவாய் சொல்லிட்டீங்க....]]]
ஹி.. ஹி.. சத்தமாய்ச் சொல்லிராதீங்க. அடிக்க வந்திருவாங்க..!
[[[kavi said...
//இதை கார்த்தியண்ணேகிட்ட யார் போய்ச் சொல்றது..? இப்படியே நடிச்சாருண்ணா இன்னும் 2 படம்தான் அண்ணன் தாங்குவாருன்னு உறுதியா சொல்லிரலாம்..!//
கார்த்தியும் உங்க அண்ணனா, அப்ப உங்க தம்பிதான் யாரு, சூப்பர் ஸ்டாரா, இல்ல உலக நாயகனா....????]]]
சூப்பர் ஸ்டார்ண்ணே..!
[[[Muruganandam Ramasamy said...
படம் மிகவும் போர்.... சூப்பர் விமர்சனம்....]]]
எதையாவது புதிதாகச் சொல்ல வேண்டாமா..? எப்படி 2 மணி நேரம் பார்த்த காட்சிகளையே திரும்ப பார்ப்பது..?
[[[Chilled Beers said...
இந்தப் படம் ஆனால் வெகுஜன ரசிகர்களுக்கு பிடிக்குமோ? அதாவது விசிலடிச்சான் குஞ்சுகளுக்கு. என் நண்பன் இதை சூப்பர் என்கிறான்.ஓகே ஓகேவைவிட அருமையான படம். கண்டிப்பா சூப்பர் ஹிட் என்கிறான். கேட்டால் சிறுத்தை ஓடிச்சில்ல அதை மாதிரிதான் என்ற பதில் வேறு. நான் இன்னும் பார்க்கலை. பார்த்துட்டுதான் முடிவு பண்ணனுமா?]]]
பாவம் நீங்க.. ஊசியைக் குத்திட்டுத்தான் ஊசியோட வலியை உணரணும்னு உங்க தலையெழுத்து..!
[[[மனசாட்சி™ said...
மொக்க படம், எப்படியோ எல்லோரும் ஒரு தடவை பார்ப்பார்கள் - போட்ட பணத்தை அவர்கள் எடுப்பார்கள்.]]]
அவ்வளவு வராது.. பாதி கிடைக்கலாம்..
[[[Philosophy Prabhakaran said...
@ kavi
//கார்த்தியும் உங்க அண்ணனா, அப்ப உங்க தம்பிதான் யாரு, சூப்பர் ஸ்டாரா, இல்ல உலகநாயகனா?//
கவி... இப்ப நீங்க இந்த கமெண்டை படிச்சிட்டு இருக்கும்போது பிறக்கும் குழந்தைகூட என் தம்பி சரவணனுக்கு அண்ணன்தான்...]]]
ஆமாண்ணே.. பிரபா அண்ணே சரியாத்தான் சொல்றாரு..!
[[[scenecreator said...
பில்லாவும் இதே மாதிரி ஊத்திக்கும் என்று நினைக்கிறன்.
பில்லாவிலும் எதுவும் இருக்காது என்று தோன்றுகிறது. சகுனி நான் நினைத்ததுபோல் ஆகிவிட்டது.
பில்லாவும் அப்படியே ஆகிவிடும் என்று நம்புவோம். கேபிள் சங்கர் தன் சகுனி விமர்சனத்தில் "கார்த்திக்கு சகுனி ஒரு ராஜபாட்டை "என்று சொல்லியுள்ளார்.அதேபோல் அஜித்தின் ராஜபாட்டையாக பில்லா ஆகிவிடும்.]]]
ஓவர் அலம்பல் உடம்புக்கு ஆவாது..!
//அந்தத் தைரியமிக்க ஒரு இயக்குநரை நான் சாவதற்குள்ளாகவாவது பார்க்க விரும்புகிறேன்..!//
மணிரத்னத்தின் இருவர்....?
அந்தத் தைரியமிக்க ஒரு இயக்குநரை நான் சாவதற்குள்ளாகவாவது பார்க்க விரும்புகிறேன்..!//
அண்ணே போகும்போது என்னையும் கூட கூட்டிட்டு போங்க, ஆபீசர் பெல்ட் என்கிட்டதான் இருக்கு...!
பந்தா பண்ணி வரும் படங்கள் இப்படித்தான் சொதப்புகின்றன!
[[[! சிவகுமார் ! said...
//அந்தத் தைரியமிக்க ஒரு இயக்குநரை நான் சாவதற்குள்ளாகவாவது பார்க்க விரும்புகிறேன்..!//
மணிரத்னத்தின் இருவர்....?]]]
எடுத்தது சரி. ஆனால் படம் வெளிவந்த பின்பு அது "இருவரின் கதை இல்லை" என்று பேட்டியளித்தாரே.. அதற்கென்ன செய்யச் சொல்கிறீர்கள்..?
[[[MANO நாஞ்சில் மனோ said...
அந்தத் தைரியமிக்க ஒரு இயக்குநரை நான் சாவதற்குள்ளாகவாவது பார்க்க விரும்புகிறேன்..!//
அண்ணே போகும்போது என்னையும் கூட கூட்டிட்டு போங்க, ஆபீசர் பெல்ட் என்கிட்டதான் இருக்கு...!]]]
கண்டிப்பா.. நீ இல்லாம போக மாட்டேன் மனோ.. அப்புறம்.. மெயில்ல உங்க பதிவோட லின்க்கெல்லாம் தொடர்ந்து வருது..! படித்துக் கொண்டுதான் இருக்கிறேன். நன்றி.. பாராட்டுக்கள்..!
[[[s suresh said...
பந்தா பண்ணி வரும் படங்கள் இப்படித்தான் சொதப்புகின்றன!]]]
இனிமேல் ரொம்ப சுதாரிப்பாத்தான் இருக்கோணும்..!
#முதலில் கதையின் அடிப்படை லாஜிக்கே தப்பா இருக்கு..! ஊருக்கே சோறு போட்டு தன் சொத்துக்களை அழிச்ச குடும்பம்னா, அதே ஊருக்கு ரயில்வே பாலம் வரணும்னு தானாவே முன் வந்து வீட்டை கொடுத்திருக்க வேண்டாமா..?#
முழு விமர்சனத்தையும் சில வரிகளிலேயே முடித்து விட்டீர்கள் ... அருமை !
[[[ananthu said...
#முதலில் கதையின் அடிப்படை லாஜிக்கே தப்பா இருக்கு..! ஊருக்கே சோறு போட்டு தன் சொத்துக்களை அழிச்ச குடும்பம்னா, அதே ஊருக்கு ரயில்வே பாலம் வரணும்னு தானாவே முன் வந்து வீட்டை கொடுத்திருக்க வேண்டாமா..?#
முழு விமர்சனத்தையும் சில வரிகளிலேயே முடித்து விட்டீர்கள். அருமை!]]]
கதை டீம், இதை மட்டும் கொஞ்சம் யோசித்து கதையை மாற்றியிருக்கலாம்..!
நன்றி அனந்து ஸார்..!
Dear UT, thanks for posting a honest review. all the portals dont want to say anything bad about this ordinary movie.even if they try to protect the film its weakness is already out in the open.
[[[Subramanian said...
Dear UT, thanks for posting a honest review. all the portals dont want to say anything bad about this ordinary movie. even if they try to protect the film its weakness is already out in the open.]]]
முதல் வாரத்துலேயே போட்ட காசை எடுத்திட்டதால இனி அவங்க கவலைப்படப் போறதில்லை..! காசுதான் முக்கியம்.. தரமில்லைன்னு அவங்களே முடிவு செஞ்ச பின்னாடி நாம என்ன செய்யறது..?
உங்களால மட்டும்தான் உண்மைய இப்படிச் சொல்லமுடியும்... விகடன் குரூப் க்கு ஒரு காப்பி அனுப்பனும்.... வாழ்த்துக்கள் சரவணன் சார்... நல்லவேளை அப்பன் முருகன நீங்க பயன்படுத்தல... அதனால விமர்சனத்தில் ஓரளவு நீங்க டென்ஷன் ஆகலனு நினைக்கிறேன்...
[[[சித்ரவேல் - சித்திரன் said...
உங்களால மட்டும்தான் உண்மைய இப்படிச் சொல்ல முடியும்... விகடன் குரூப்க்கு ஒரு காப்பி அனுப்பனும்.... வாழ்த்துக்கள் சரவணன் சார்... நல்லவேளை அப்பன் முருகன நீங்க பயன்படுத்தல... அதனால விமர்சனத்தில் ஓரளவு நீங்க டென்ஷன் ஆகலனு நினைக்கிறேன்...]]]
நிசம்தான்.. லாஜிக் தவறுகள் நிறைய இருந்தாலும், தப்பா ஏதும் சொல்லலையேன்றதால எனக்கு வேறெந்த கோபமும் வரலை..! பை தி பை சித்ரவேல் ஸார்.. என் பக்கமெல்லாம் வர்ற அளவுக்கு டைம் ப்ரீயா இருக்கா..?
Post a Comment