கண்டதும் காணாததும் - சினிமா விமர்சனம்

04-06-2012



என் இனிய வலைத்தமிழ் மக்களே..!


முற்காலத்தில் பிட்டுப் படங்கள் ஓடும் தியேட்டர்களில் எதிர்பார்த்து வந்த பிட்டுகள் காட்டப்படவில்லையெனில், படம் முடிந்து வெளியேறும்போது தங்களது வெறுப்பைக் காட்ட தியேட்டரின் சீட்டுகளை 'ஒரு வழி' செய்துவிட்டு கிளம்புவது ரசிகர்களின் பழக்கம்.. விரைவில் இது போன்று பிட்டு அல்லாத சினிமாக்கள் ஓடும்போதும் நிகழும் சாத்தியங்கள் உண்டு என்பதை இந்தப் படம் நமக்கு உணர்த்துகிறது..!





ஹீரோவும், ஹீரோயினும் ஒரே காலேஜ்லதான் படிக்கிறாங்களாம். ஷேர் ஆட்டோல வரும்போது வம்பு பண்ணும் ஒருத்தனை ஹீரோ புரட்டி எடுத்தர்றாரு.. இதைப் பார்த்தவுடனேயே ஹீரோயினுக்கு வழக்கம்போல லவ்வு வந்திருது.. 2 டூயட்டை தேத்திட்டாங்க..! 


திடீர்ன்னு ஒரு நாள் ஒரு மேட்டர் புத்தகம் ஹீரோ கைல சிக்குது. வாழ்க்கைலேயே அன்னிக்குத்தான் அந்த மாதிரி புத்தகத்தை படிக்கிறார் போலிருக்கு.. படிச்சவுடனே கிக்கு ஏறிருது ஹீரோவுக்கு.. அந்த நேரத்துல ஹீரோயினும் அவரைப் பார்க்க வீட்டுக்கு வர்றாங்க.. சூடாகிப் போன காமத்துல ஹீரோயினை கட்டிப் பிடிச்சு உருள்றாரு.. தப்பிச்சுப் போகும் ஹீரோயின் ஹீரோ முகத்துல காரித் துப்பிட்டு போயிர்றாங்க.. அத்தோட லவ்வும் கட்டு..!


ஹீரோ வழக்கம்போல தாடி வளர்த்து, சோக கீதம் பாடுறாரு. ஹீரோயினுக்கு வேற இடத்துல நிச்சயமாகி கல்யாணமாகப் போற நேரத்துல இடைல புகுந்த ஒரு பிரெண்டு சேர்த்து வைக்க டிரை பண்றாரு.. இதுக்கு முன்னாடியே ஹீரோ சூஸைடு.. இதை ஹீரோயின்கிட்ட சொல்லாம விட்டுட்டு அவ வாழ்க்கையை காப்பாத்துறாரு பிரெண்டு.. இம்புட்டுத்தான் கதை..! இதுக்கு இடைல பரோட்ட சூரி, ஆர்.சுந்தர்ராஜனை வைச்சு ஏதோ ஒப்பேத்துற மாதிரி ஒரு காமெடி..!


இந்தப் படத்தோட தயாரிப்பாளர் அமெரிக்கால இருந்து வந்திருக்காரு. பேரு சங்கரநாராயணன். வருஷத்துக்கு 10 படம் பண்ணப் போறேன்னு உறுதியா சொன்னாரு.. இந்த ஒரு படத்தோட ஓடுவாருன்னு நான் உறுதியா நம்புறேன்..


பல ஊர்ல 3, 4-வது நாள்லேயே படத்தைத் தூக்கிட்டாங்க.. படத்தோட இயக்குநரோ யாருமே சொல்லத் துணியாத ஒரு காதலை இதுல சொல்லியிருக்கேன்னு மார் தட்டிப் பேசினாரு.. ஆனால் எடுத்தக் கொடுமையை நாங்க எங்க போய்ச் சொல்றதுன்னு தெரியலை..!


படத்துல ஒளிப்பதிவுன்னு ஒண்ணு இருக்கான்னே தெரியலை.. அவ்வளவு மட்டம்.. குறும்படங்கள்கூட அழகா எடுத்திருக்காங்க.. ஏதோ முன்ன பின்ன கேமிராவையே பார்த்திருக்காத ஒரு ஆள்கிட்ட கேமிராவை நீட்டியிருக்காங்கன்னு நினைக்கிறேன்..! திடீர்ன்னு லைட் வருது.. திடீர்ன்னு போகுது..! எப்போ ஸ்கிரீன் கும்மிருட்டாகும்னு யாருக்குமே தெரியலை.. அந்தளவுக்கு பெர்பெக்ட் ஒளிப்பதிவு.. வாழ்த்துகள்..!


இளையராஜாவின் பாடல்களையே மீண்டும் கேட்க வைத்திருக்கிறார் இசையமைப்பாளர். சந்தோஷம்.. இசைஞானிக்கு இப்படியொரு சீடனாவது இருக்காரேன்னு சந்தோஷப்பட வேண்டியதுதான்..! இது கெட்ட கேட்டுக்கு குத்துப் பாட்டு வேற.. அது எதுக்கு வருதுன்னுகூட லீடிங் இல்லை. பாட்டு வேணும்னு தியேட்டர்ல இருந்து யாரோ போன் அடிச்சு கேட்டாங்க போலிருக்கு..! 


இயக்கம்.. சுத்தம்.. ஹீரோ பார்க்க நல்லாத்தான் இருக்காரு. ஆனா நடிக்க வைக்கத்தான் முடியலை.. ஹீரோயின் சுவாசிகா.. இதுக்கு முன்னாடி 3 படத்துல நடிச்சதுனால அவுக பேரை காப்பாத்திட்டுப் போயிட்டாக.. ஏதோ அந்தப் பொண்ணோட கெட்ட நேரம் இங்க வந்து மாட்டிருச்சு போலிருக்கு..!


அவனவன் ஆஸ்திரேலியா, அண்டார்டிகான்னு கண்ணுல காட்டி அசர வைச்சுக்கிட்டிருக்காங்க. இந்த நேரத்துல 2 மப்ளரையும், ஸ்வெட்டரையும் போட்டுட்டு கண்ணாடி கதவுக்கு முன்னாடி நின்னுட்டா அது அமெரிக்காவாம்..! இத்தனைக் கொடுமையையும் பார்க்கணும்னு நமக்குத் தலையெழுத்து..!


“சினிமா துறைல நான் பார்க்காத வேலையே இல்லை.. அம்புட்டு வேலையையும் செஞ்சிட்டுத்தான் இப்போ இயக்குநராயிருக்கேன்”னு பேட்டி கொடுத்தாரு இயக்குநரு..!  அதுல இயக்குநர் வேலையைத் தவிர வேற ஏதாவது ஒரு வேலையை பார்த்து போயிட்டாருன்னு புண்ணியமா போகும்..!


கிளம்புங்கப்பா.. காத்து வரட்டும்..!

12 comments:

ராம்ஜி_யாஹூ said...

கதா நாயகி அழகாக இருக்கிறார்

பார்க்க வேண்டும் என்ற ஆசை வந்து விட்டது

கிருஷ்ண மூர்த்தி S said...

வச்சாக் குடுமி இல்லேன்னா மொட்டைன்னே விமரிசனம் எழுதறீங்களே உத! இதுக்கு முன்னால ஒரு சில படங்களுக்கு ஆஹா ஓஹோன்னு பில்டப் கொடுத்தீங்க! இப்ப இந்த பட விமரிசனத்துல எல்லாமே நொள்ளைன்னு சொல்றீங்க!

கதாநாயகன் கதாநாயகியை ரேப் பண்ண முயற்சிக்கிற அந்த ஒரு சீனுக்காகவே படம் பிச்சிக்கிட்டுப் போச்சுன்னா, அப்ப என்ன சொல்லுவீங்களாம்? என்னுடைய யோசனை, ஒரு லெவலுக்குக் கீழே இருக்கற படங்களைக் கண்டு கொள்ளாமல் விட்டு இடுவதே உத்தமமாக இருக்கும் என்பது தான்!


ஜனங்களுக்கு எந்த நேரத்துல என்ன பிடிக்கும்னே புரியாமத்தானே இந்த மாதிரிப்படமெல்லாம் எடுக்க வர்றாங்க!

ILA (a) இளா said...

உங்க விமர்சனத்தைப் படிச்சுட்டு அந்தப் படத்தைப் பார்த்தா "ஏன்டா படத்துக்கு வரீங்க" அப்படின்னு கேட்கிறா மாதிரியில்லை?

அமர பாரதி said...

நீங்களே இந்த அளவுக்கு பொங்கற அளவுக்கு படம் இருக்குதா? ரைட்டு.

உண்மைத்தமிழன் said...

[[[ராம்ஜி_யாஹூ said...

கதாநாயகி அழகாக இருக்கிறார்.
பார்க்க வேண்டும் என்ற ஆசை வந்து விட்டது.]]]

படத்துலதானே..? இந்தப் படம் வேண்டாம்.. அடுத்து நல்ல படத்துல நடிச்சாங்கன்னா சொல்றேன். அதுவரைக்கும் போட்டோலயே பார்த்துக்கண்ணே..!

உண்மைத்தமிழன் said...

[[[ILA(@)இளா said...

உங்க விமர்சனத்தைப் படிச்சுட்டு அந்தப் படத்தைப் பார்த்தா "ஏன்டா படத்துக்கு வரீங்க" அப்படின்னு கேட்கிறா மாதிரியில்லை?]]]

அப்படியில்லண்ணே... ஏண்டா அந்தப் படத்துக்கு போனீங்கன்னு கேட்பேன்..!

உண்மைத்தமிழன் said...

[[[அமர பாரதி said...

நீங்களே இந்த அளவுக்கு பொங்கற அளவுக்கு படம் இருக்குதா? ரைட்டு.]]]

அதுக்காக போயிராதீங்க..! வேற வேலை இருந்தா அதைப் போயி பாருங்க..!

Caricaturist Sugumarje said...

உங்களை கட்டிப்போட்டு படம் பார்க்க வைப்பாங்களோ?

வழக்கம் போலவே தமிழ் ரசிகர்களை கைகொடுத்து காப்பாற்றிய அண்ணன் வாழ்க.

Philosophy Prabhakaran said...

சூப்பர் தல... தொடர்ந்து இதேமாதிரி ஷார்ட் அண்ட் ஸ்வீட்டா எழுதுங்க...

உண்மைத்தமிழன் said...

[[[Caricaturist Sugumarje said...

உங்களை கட்டிப் போட்டு படம் பார்க்க வைப்பாங்களோ?]]]

பிரஸ் பிரிவியூ என்பதால் பாதியிலேயே கிளம்பிப் போக முடியாது. சங்கடமாக இருக்கும். அதனால்தான்..!

[[[வழக்கம் போலவே தமிழ் ரசிகர்களை கை கொடுத்து காப்பாற்றிய அண்ணன் வாழ்க.]]]

இதை இன்னும் கொஞ்சம் உரக்கச் சொல்லணும்..!

உண்மைத்தமிழன் said...

[[[Philosophy Prabhakaran said...

சூப்பர் தல... தொடர்ந்து இதே மாதிரி ஷார்ட் அண்ட் ஸ்வீட்டா எழுதுங்க.]]]

நன்றி தம்பி..!

bantlan with love said...
This comment has been removed by the author.