முரட்டுக்காளை - சினிமா விமர்சனம்

16-06-2012


என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

முதலில் இது போன்ற பழைய மசாலா ஹிட் படங்களை ரீமேக் செய்வதைத் தடை செய்ய வேண்டும். பழைய திரைப்படங்களின் வெற்றிக்கு அக்காலத்திய சமூகச் சூழலும், ரசிகர்களின் மனப்பான்மையும் ஒரு காரணமாக இருக்கும். அதே போன்ற சூழல்தான் இப்போதும் இருக்கும் என்று நினைத்து அவலை நினைத்து உரலை இடித்த கதையாக இப்படத்தை எவ்வளவுக்கு எவ்வளவு சுமாராக எடுக்க முடியுமோ அவ்வளவுக்கு எடுத்துத் தள்ளியிருக்கிறார்கள்.

ரஜினியாக சுந்தர்.சி. ஜெய்சங்கர் வேடத்தில் சுமன். சுமலதா வேடத்தில் சிந்து துலானி. ரதி வேடத்தில் சிநேகா. சுருளிராஜன் கேரக்டரில் விவேக். அசோகன் வேடத்தில் தேவன்.. என்று ஆர்ட்டிஸ்ட்டுகளை ஷிப்ட் செய்திருக்கிறார்கள். 

ஐங்கிரன் நிறுவனம் சார்பாக பர்ஸ்ட் காப்பி தயாரிப்பாளராக தாத்தாவின் மருமகன் அமிர்தத்தின் மகன் குணாநிதி அமிர்தம் தனது சூர்யா புரொடெக்சன்ஸ் சார்பில் 2008 டிசம்பரில் டெல்லி செங்கோட்டையில் ஷூட்டிங்குடன் துவங்கப்பட்ட படத்திற்கு இப்போதுதான் விடிவு காலம் பிறந்திருக்கிறது..! இதன் ஆடியோ ரிலீஸ் பங்ஷனில்கூட தாத்தா தனது பரிவாரங்களோடு கலந்து கொண்டு படத்தைப் பார்க்க தான் ரொம்ப ஆவலாக இருப்பதாகவெல்லாம் சொல்லியிருந்தார். ஆனாலும் 4 ஆண்டுகள் கழித்துதான் வெளியாகியிருக்கிறது..! ஐங்கிரனில் இப்போது பல்வேறு குழப்பங்கள். அதுதான் முக்கியக் காரணம்..!


அதே கதைதான்.. கொஞ்சம், கொஞ்சம் மாற்றியிருக்கிறார்கள். தனது 4 தம்பிகளுடன் நிலபுலன்களுடன் வசதியாக வாழ்ந்துவரும் காளையன், பக்கத்து ஊரில் நடக்கும் ரேக்ளா ரேஸில் கலந்து கொண்டு ஜெயிக்கிறான். அந்த ஊரின் பெரும் பணக்காரரான சுமனின் தங்கை சிந்து துலானி காளையனை விரட்டி, விரட்டி காதலிக்கிறாள்.

சுமனின் தோட்டத்தில் வேலை செய்பவரின் கொழுந்தியாளான சிநேகாவை பார்த்த மாத்திரத்தில் திருமணம் செய்து கொள்ள நினைக்கிறார் சுமன்.  சிநேகா இதற்கு மறுப்புத் தெரிவிக்க.. சிநேகாவின் அக்கா கொல்லப்படுகிறாள். தன்னைத் தேடி வரும் சுமனின் அடியாட்களிடம் இருந்து தப்பிக்க காளையனின் வீட்டில் அடைக்கலமாகிறார் சிநேகா.

இதற்கிடையில் காளையன் சும்மாவே வைத்திருக்கும் நிலத்தில் கனிமம் இருப்பதை அறிந்து அதனை விலைக்கு கேட்கிறார் சுமன். காளையன் தர மறுக்கிறார். இடையில் தனது தங்கை காளையனை காதலிப்பதை அறிந்து, மச்சான் உறவுக்குள் வந்துவிட்டால் சொத்துக்களை ஆட்டைய போட்டுவிடலாம் என்று நினைத்து சிந்துவுக்கும், காளையனுக்கும் திருமண ஏற்பாடு செய்கிறார் சுமன். நிச்சயத்தார்த்த தினத்தன்று இந்த உண்மை தெரிந்து காளையன் திருமணத்திற்கு மறுத்துவிடுகிறார்.

சில, பல மோதல்கள், சவால்களுக்குப் பிறகு சிநேகாவை சுந்தர் திருமணம் நடக்கும் தினத்தன்று சுமனின் அடியாளை கொலை செய்த்தாகச் சொல்லி சுந்தரை கைது செய்கிறது போலீஸ். சுமனே கொலை செய்து தன்னை மாட்ட வைத்திருப்பது அறிந்து பாதி வழியிலேயே சுந்தர் போலீஸிடமிருந்து தப்பித்து ஓடுகிறார். அவரைத் தேடி மாவட்ட எஸ்.பி.யே காட்டுக்குள் வருகிறார். அங்கு எஸ்.பி.யை இன்ஸ்பெக்டர் சுட்டுவிட்டு சுந்தர் எஸ்.பி.யை போட்டுத் தள்ளிவிட்டதாகச் சொல்லி போலீஸ் படையை காட்டுக்குள் அனுப்புகிறார். காயமடைந்த எஸ்.பி.யை சுந்தர் காப்பாற்றி அழைத்துச் செல்ல.. சுமன் தனது அடியாட்களுடன் வந்து இவர்களைக் கொலை செய்ய முயல.. முடிவு முன்பே பார்த்ததுதான்..!

முதலில் இந்தப் படத்திற்கு யு சர்டிபிகேட் கொடுத்ததே தவறு.. ஏ சர்டிபிகேட்டுதான் கொடுத்திருக்க வேண்டும்..! அத்தனை டபுள், டிரிபுள் மீனிங் டயலாக்குகளை அள்ளித் தெளித்திருக்கிறார் விவேக். கொஞ்சம் உன்னிப்பாக கவனித்தால்தான் புரியும் என்றாலும், இதெல்லாம் பெரிசுகளுக்கு ஓகே.. சிறிசுகளுக்கு மனக்குழப்பத்தைத்தான் கொடுக்கும். அதுவும் விவேக் ஏற்றுள்ள திருநங்கை கேரக்டர் அவ்வப்போது அவர்களது கஷ்டங்களை வெளிப்படுத்தினாலும், திருநங்கைகள் என்றாலே இப்படித்தான் பேசுவார்களோ என்ற எண்ணத்தையும் தோற்றுவிக்கிறது. இது எதிர்மறை விபத்தாக போய்விட்டது என்பதை அண்ணன் விவேக் உணர வேண்டும்..!

சுந்தர் சி. வழக்கம்போலத்தான். அவர் ஒரு நல்ல இயக்குநர்.. நடிப்பு இனிமேல் வேண்டாம் என்பதை இந்தப் படத்திலும் நிரூபித்துவிட்டார்..! சிந்து துலானி பாவம்.. இந்தப் படம் 2009-லேயே வெளிவந்திருந்தால் ஒரு ரவுண்டு வந்திருக்கலாம்.. அந்த அளவுக்கு கவர்ச்சியை அள்ளித் தெளித்திருக்கிறார். இவருக்குச் சற்றும் குறைவில்லாமல் சிநேகாவும் அப்படியே. நல்லவேளை.. இந்தப் படத்திற்கு பிரஸ் மீட் எதையும் ஏற்பாடு செய்யாமல் விட்டுவிட்டார்கள். தப்பித்தார் சிநேகா. வந்திருந்தால் தர்மசங்கடமான கேள்விகளை எதிர்கொள்ள வேண்டியிருந்திருக்கும்..!


அப்படி, இப்படியெல்லாம் இல்லாமல் ஸ்ட்ரெயிட்டாக போல்டாக சரோஜா கேரக்டரில் சுருளிராஜன் வேடத்தில், வாய்ஸில் கலாய்த்திருக்கிறார் விவேக். தனது கமெண்ட்ஸ்களை கொஞ்சம் குறைத்து, காட்சியின் விரசங்களையும் நீக்கச் செய்திருந்தால் இன்னும் நன்றாகவே இருந்திருக்கும். இவருக்கும் செல் முருகனுக்கும் இடையில் நடக்கும் அந்த 16 வயதினிலே காதலும். அதைத் தொடர்ந்த காட்சிகளும் கலகலப்பு என்றாலும், ஆத்து சீன் ரொம்ப டூ மச்சுதான்..! அதேபோல் வைக்கோல்போரில் சிநேகா ஒழிந்திருக்கும் நிலையில் சுந்தரும், அவர் தம்பிகளும் செய்யும் லூட்டியும் கண்றாவி.. எப்படி சிநேகா இதற்கு ஒத்துக் கொண்டார் என்று தெரியவில்லை.. நல்ல இயக்குநர் செல்வபாரதி.. ஒரு கமர்ஷியல் வெற்றிக்காக இந்த அளவிற்கு இறங்கிப் போகணுமா என்ன..?


என்னதான் ஹீரோ, ஹீரோயின்களுக்கு மாற்று ஆட்கள் கிடைத்தாலும் இசைக்கு..???????????? ம்.. நோ சான்ஸ்.. ஒன்லி இசைஞானி  இசைஞானிதான்..! பொதுவாக எம் மனசு தங்கம் பாடலை மட்டும் ரீமிக்ஸ் செய்து கொலை செய்திருக்கிறார்கள். மற்றபடி சுந்தரபுருஷா பாடலும் கொஞ்சம் கேட்க வைக்கிறது. பாடல் காட்சியில் சிநேகா காட்டியிருக்கும் கவர்ச்சி பார்க்கவும் வைக்கிறது..! ஜோர்..!

ஏற்கெனவே பல முறை பார்த்து, பார்த்து திளைத்துப் போன படம் ரஜினியின் முரட்டுக்காளை என்பதால் இதனை ஒப்பீட்டு பார்ப்பதை தவிர்க்கவே முடியவில்லை. இதனாலேயே படத்தில் பெரும்பாலான நேரங்களில் ஒன்றியிருக்க முடியவில்லை..!

ரஜினி வேடத்தை ரஜினி மட்டுமே செய்ய முடியும் என்பதை எப்போதுதான் கோடம்பாக்கத்தின் சில்லுண்டுகள் புரிந்து கொள்வார்கள் என்று தெரியவில்லை..! இப்போது என்னுடைய கவலையெல்லாம், ரஜினி இந்தப் படத்தை பார்க்காமல் இருக்கணும் என்பதுதான்..!

சிநேகாவை பார்க்கணும்னா போயிட்டு வாங்க...!

18 comments:

ராம்ஜி_யாஹூ said...

நீங்களே சுமார் என்று சொன்னால், உண்மையில் மிகவும் சுமாராகவே இருக்கும்

unwanted so many advt in Kalaignar Tv

வருண் said...

அசோகன், பழைய (ரஜினி) முரட்டுக்காளையிலே நடிச்சு இருக்காரா!!! ஞாபத்துக்கு வர மாட்டேங்கிது.

ஆமா நீங்க இப்போ தினமும் ஒரு சினிமாப் பார்க்குறீங்க போல! நீங்க பிரபலப் பதிவர்னால ஃப்ரீ டிக்கட் கொடுக்கிறாங்களா என்ன? :)

bandhu said...

முரட்டு காளை ஒரு குப்பை படம். ரஜினிக்கு இருந்த மவுசை இது போன்ற ஒரு குப்பை பாண்டஸி மூலம் பணத்தை அள்ளினார்கள் அதன் தயாரிப்பாளர்கள்.

சகலகலா வல்லவன் மற்றும் முரட்டு காளை போன்ற கொடுமையான குப்பை படங்கள் மூலம் மகேந்திரன் / பாலு மகேந்திரா / துரை போன்றவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக நல்ல படங்கள் கொடுத்த நல்ல சூழ்நிலையை கொன்றே விட்டது எ வி எம்!

அந்த பாவத்துக்கே எ வி எம் காரர்களை கட்டி போட்டு இந்த படத்த பார்க்க வைக்க வேண்டும்!

salam nainar said...

அந்த காலத்திலேயே இந்த படம் மிகவும் போர் , எப்படித்தான் ஹிட் ஆனதோ தெரிய வில்லை
அதிலும் ரஜினியின் ஹேர் ஸ்டைல் (wig) மிக கொடுமை.

எல் கே said...

//ரஜினி வேடத்தை ரஜினி மட்டுமே செய்ய முடியும் என்பதை எப்போதுதான்

//


:))))

உண்மைத்தமிழன் said...

[[[ராம்ஜி_யாஹூ said...

நீங்களே சுமார் என்று சொன்னால், உண்மையில் மிகவும் சுமாராகவே இருக்கும். unwanted so many advt in Kalaignar Tv.]]]

சுந்தர்.சி நடிப்பு என்றால் எப்படியிருக்கும்ண்ணே..! ஹீரோத்தனமே டல்லடிக்குது என்றால் முழு படத்தையும் ரசிக்க முடியுமா..?

உண்மைத்தமிழன் said...

[[[வருண் said...

அசோகன், பழைய (ரஜினி) முரட்டுக்காளையிலே நடிச்சு இருக்காரா!!! ஞாபத்துக்கு வர மாட்டேங்கிது.]]]

போலீஸ் எஸ்.பி.யா வருவாருண்ணே..!

[[[ஆமா நீங்க இப்போ தினமும் ஒரு சினிமாப் பார்க்குறீங்க போல! நீங்க பிரபலப் பதிவர்னால ஃப்ரீ டிக்கட் கொடுக்கிறாங்களா என்ன? :)]]]

நோ.. சினிமா சம்பந்தமான தொழில்ல இருக்கிறதால பார்க்க வேண்டியிருக்கு..!

உண்மைத்தமிழன் said...

[[[bandhu said...

முரட்டு காளை ஒரு குப்பை படம். ரஜினிக்கு இருந்த மவுசை இது போன்ற ஒரு குப்பை பாண்டஸி மூலம் பணத்தை அள்ளினார்கள் அதன் தயாரிப்பாளர்கள். சகலகலா வல்லவன் மற்றும் முரட்டு காளை போன்ற கொடுமையான குப்பை படங்கள் மூலம் மகேந்திரன் / பாலு மகேந்திரா / துரை போன்றவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக நல்ல படங்கள் கொடுத்த நல்ல சூழ்நிலையை கொன்றே விட்டது எவி.எம்!]]]

ஆமான்னும் சொல்ல முடியலை.. இல்லைன்னும் சொல்ல முடியலை.. உண்மையும் இருக்கத்தான் செய்கிறது..!

உண்மைத்தமிழன் said...

[[[பலே வெள்ளைய தேவா said...

அந்த காலத்திலேயே இந்த படம் மிகவும் போர். எப்படித்தான் ஹிட் ஆனதோ தெரியவில்லை.. அதிலும் ரஜினியின் ஹேர் ஸ்டைல் (wig) மிக கொடுமை.]]]

ஆனால் நாங்கள் அப்போதே விரும்பிப் பார்த்தோம்.. ஏதோ ஒண்ணு எங்களைக் கவர்ந்தது.. என்னன்னு சொல்லத் தெரியலண்ணே..!

உண்மைத்தமிழன் said...

[[[எல் கே said...

//ரஜினி வேடத்தை ரஜினி மட்டுமே செய்ய முடியும் என்பதை எப்போதுதான்//

:))))]]]

உண்மையைத்தானே சொல்லுதேன்..!

Anonymous said...

// இப்போது என்னுடைய கவலையெல்லாம், ரஜினி இந்தப் படத்தை பார்க்காமல் இருக்கணும் என்பதுதான்..!//

இப்போது எங்களுடைய கவலை எல்லாம் நீங்கள் இதுபோன்ற ‘கலங்க’ வைக்கும் படங்களுக்கு முன்னோட்டம் மற்றும் விமர்சனம் போட்டு அடிக்கடி பீதியை கிளப்பாமல் இருக்க வேண்டும் என்பதுதான்!!

உண்மைத்தமிழன் said...

[[[! சிவகுமார் ! said...

// இப்போது என்னுடைய கவலையெல்லாம், ரஜினி இந்தப் படத்தை பார்க்காமல் இருக்கணும் என்பதுதான்..!//

இப்போது எங்களுடைய கவலை எல்லாம் நீங்கள் இது போன்ற ‘கலங்க’ வைக்கும் படங்களுக்கு முன்னோட்டம் மற்றும் விமர்சனம் போட்டு அடிக்கடி பீதியை கிளப்பாமல் இருக்க வேண்டும் என்பதுதான்!!]]]

இப்படியெல்லாம் நடக்கும்ன்னு நானென்ன கனவா கண்டேன்..? ஏதோ நம்ம தலைவர் படமாச்சேன்னு நினைச்சுப் போனா..? கொலை வெறியே வந்திருச்சு..!

MANO நாஞ்சில் மனோ said...

அண்ணே, இனியும் சினேகா நாயகியா நடிக்கனுமாக்கும்....!!!

JR Benedict II said...

சூப்பர் விமர்சனம் அண்ணா

JR Benedict II said...

எனக்கு பிடித்த வலையுலகின் பிளாக்குகள் - 01
http://ideasofharrypotter.blogspot.com/2012/06/01_18.html

உண்மைத்தமிழன் said...

[[[MANO நாஞ்சில் மனோ said...

அண்ணே, இனியும் சினேகா நாயகியா நடிக்கனுமாக்கும்....!!!]]]

அவர் விட்டுச் சென்ற சிரிப்பழகி இடம் அப்படியேதான இருக்கு. அது பில்லப் ஆகுறவரைக்கும் அவர் நடிக்கலாமே..?

உண்மைத்தமிழன் said...

[[[ஹாரி பாட்டர் said...

சூப்பர் விமர்சனம் அண்ணா..]]]

வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றிகள் ஹாரி..!

உண்மைத்தமிழன் said...

[[[ஹாரி பாட்டர் said...

எனக்கு பிடித்த வலையுலகின் பிளாக்குகள் - 01

http://ideasofharrypotter.blogspot.com/2012/06/01_18.html]]]

வலையுலகில் எத்தனையோ பெரியவர்கள் இருக்க, என்னைப் போன்ற சின்னவனின் பெயரையும் அறிமுகப்படுத்தியமைக்கு மிக்க நன்றிகள் தோழர்..!