சினிமா 360 டிகிரி-3

09-04-2012


என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

2 வாரங்களாக கடும் வேலைப் பளு. அதனால் எழுத முடியவில்லை. சரி சேர்த்து வைத்து எழுதிக் கொள்ளலாம் என்று நினைத்து கொஞ்சம் லேட் செய்துவிட்டேன்.. ஸாரி.. மன்னிக்கணும்..!

கந்தா - ரிலீஸ் ஆகவில்லை..!

பாவம் இயக்குநர் திருவாரூர் பாபு. 'கனகவேல் காக்க', 'தம்பி வெட்டோத்தி சுந்தரம்' படங்களுக்கு முன்பாக இவரது இயக்கத்தில் கரண் ஹீரோவாக நடிக்க பூஜை போட்டு எடுத்து முடிக்கப்பட்ட படம் 'கந்தா'. இன்றுவரையிலும் ரிலீஸாக விமோசனமில்லை..!


'தம்பி வெட்டோத்தி சுந்தரம்' படம் வெளியாகி பல மாதங்களான சூழலில் கரணுக்கு தற்போது இருக்கும் மார்க்கெட்டுக்கு ஏற்றாற்போல், கிடைத்த இடங்களில் தியேட்டர்கள் எல்லாம் புக் ஆகி, தயாரான நிலையில் ரிலீஸுக்கு முதல் நாள் படத்தின் தயாரிப்பாளர் சீட்டிங் கேஸில் கைது செய்யப்பட பட வெளியீடும் புஸ்ஸாகிவிட்டது..! 

புதிய இயக்குநர்களின் படம் வெளிவந்தால் அந்த இயக்குநருக்கு மட்டுமல்ல.. அதில் பணியாற்றியிருக்கும் பல புதியவர்களுக்கும் வாழ்க்கை கிடைக்கும். திருவாரூர் பாபு என்ற பெயரில் இவர் எழுதிய கதைகள் வெளியாகாத பத்திரிகைகளே இல்லை.. அந்த அளவுக்கு கதைச் சுரங்கமாக தோற்றமளிக்கும் பாபுவின் இந்தக் கதையும் சோகமாகத்தானிருக்கிறது..! எப்படியும் இந்த மாதம் ரிலீஸாகலாம் என்கிறார்கள் தயாரிப்புத் தரப்பு. ஆனால் சீட்டிங் கேஸ் பைசல் செய்யப்பட்டால்தான் முடியும் என்கிறது எதிர்த் தரப்பு..! நடுவில் இயக்குநரை கவனிக்கத்தான் ஆளே இல்லை..!

மனோ மகன் ஷாகிரின் அறிமுகம்..!

நாங்க படத்தின் ஹீரோக்களில் ஒருவராக பின்னணிப் பாடகர் மனோவின் மகன் ஷாகிரும் நடித்திருக்கிறார். நாங்க படம் படம் வெளியான மூன்றே நாட்களில் தியேட்டரில் இருந்து சுருட்டி அனுப்பப்பட்டது மிகப் பெரும் சோகக் கதை.. திருச்சி மாரீஸ் தியேட்டரில் முதல் நாள், முதல் காட்சிக்கு ஒற்றை இலக்கத்தில்தான் ஆள்கள் வந்திருக்கிறார்கள். ஷோ கேன்சல்.. பல இடங்களில் இரவுக் காட்சிகள் கேன்சல் செய்யப்பட்டது. இப்படியெல்லாம் நடக்கும் என்று தெரிந்துதான் அதிகப்பட்சமாக விளம்பரச் செலவுகளைச் செய்யாமல் சுருக்கிக் கொண்டு தப்பித்திருக்கிறார் தயாரிப்பாளர் செல்வா.


இதற்காக படித்தில் நடித்தவர்கள் அப்படியே விட முடியுமா..? மனோ ஒரு பிரஸ் மீட்டுக்கு ஏற்பாடு செய்து தனது மகனை அறிமுகப்படுத்தி வைத்து  பத்திரிகையாளர்களிடம் ஆசி வாங்க வைத்தார். கையோடு ஒரு பிளாஸ்டிக் பையை கொண்டு வந்தார். ஏதாவது பிரிண்ட்ட் பேப்பர்கள் இருக்கும் என்று நினைத்தேன். ஆனால் அதில் இருந்த்து இசைஞானி இளையராஜாவின் புகைப்படம். தனது பேச்சைத் துவக்குவதற்கு முன்பாக அந்தப் புகைப்படத்தை எடுத்து தனது கைகளில் தாங்கிப் பிடித்துக் கொண்டு, “நான் இந்த அளவுக்கு உயர்ந்து, உங்கள் முன்னால் நிற்பதற்குக் காரணம் இந்தத் தெய்வம்தான்..” என்றார்.. பத்திரிகையாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி..!   

பொழுது போக்கு புது பட பூஜை

வடசென்னை பக்கம் இருந்து வர்றேன் என்று சொன்னாலே ஒரு ஸ்டெப் பின்னாடி தள்ளி நின்னு பேசற அளவுக்கு வடசென்னையில் பெயர் பரவலாக தமிழகமெங்கும் பரவியிருக்கிறது..! அந்தப் பெயரை இந்தப் படத்தின் மூலமா மாத்தப் போறாங்களாம்..! வடசென்னையிலும் மக்கள்தான் வசிக்குறாங்க. அவங்கள்லேயும் நல்லவங்க இருக்காங்கன்றதுதான் படத்தோட இந்த பொழுது போக்கு படத்தோட கதையாம்..

"படத்தோட கதையைக் கேட்டவுடனேயே படம் தயாரிக்க ஒத்துக்கிட்டேன்" என்றார் தயாரிப்பாளர் சீனிவாசன்.. இப்படி தயாரிப்பாளர்களெல்லாம் இண்டஸ்ட்ரில இருக்கும்போது ஏன் ஆள் கிடைக்கலைன்னு இயக்குநர்கள் புலம்புறாங்கன்னு தெரியலை..!


ஹீரோயினை வளைச்சு வளைச்சு பேட்டியெடுத்தாச்சு.. கேமிராமேன், இசையமைப்பாளரையும் பேச வைச்சாச்சு.. படத்தோட இயக்குநர் எங்கப்பான்னு கேட்டுக் கேட்டு சலிச்சுப் போச்சு பத்திரிகையாளர்களுக்கு.. வெளியூர் போயிருக்கார். திரும்பி வர முடியலைன்னு ஒரு பதிலையே சொல்லி திருப்பியனுப்பினார்கள் தயாரிப்புத் தரப்பினர்.. ஆனாலும் நெருக்கி விசாரித்தபோது கிடைத்தத் தகவல் கொஞ்சம் ஷாக். 

இயக்குநர் நடமாட முடியாத அளவுக்கு உடல் ஊனமுற்றவராம். எங்கே சென்றாலும் அவரை யாராவது தூக்கிட்டுத்தான் போகணுமாம்..! கேட்டதும் அதிர்ச்சியாகிவிட்டது.. பின்ன எப்படி இயக்கம்..? என்று கேட்டால்.. “அதெல்லாம் செய்வாரு ஸார்..” என்று திடமாக பதில் வந்தது கேமிராமேனிடமிருந்து..! வாழ்த்துகள்..!

நான் ஈ - ஆடியோ ரிலீஸ்

சத்யம் திரையரங்க மேடையை நிரப்பிவிட்டார்கள் திரையுலகப் பிரபலங்கள். தமிழ்த் திரையுலகில் பல பெரிய தயாரிப்பாளர்களுக்கும் கற்பக விருட்சமாக இருக்கும் பிவிபி கம்பெனி தயாரிப்பு என்பதால் அழைக்கப்பட்ட அனைத்து விஐபிக்களும் தவறாமல் ஆஜர். அதிசயித்திலும் அதிசயம் கழுத்தில் ருத்திராட்ச மாலையோடு பாலாவும் வந்திருந்ததுதான்..! 

பார்த்திபன் பேசும்போது நான் ஈயை வைட்டமின் ஈயோடு ஒப்பிட்டவர் சட்டென டிராக் மாறி, ராமஜெயம்ன்னு பேர் வைச்சுக்கிட்டாலும் தப்பிக்க முடியாது போலிருக்கே என்று சிச்சுவேஷன் பன்ச் வைத்தார்..! படத்தின் ஹீரோ மிகவும் சிரமப்பட்டு தமிழிலேயே பேசிவிட்டுப் போனார்..! 


ஆனால் சமந்தா பொண்ணுதான் எதைப் பத்தியும் கவலைப்படாம, தமிழ் ஆங்கிலம் ரெண்டையும் ஒண்ணா கலந்து பேசிட்டுப் போச்சு.. பொண்ணு மேடைல உக்காந்த போஸ்ல பாவம்.. ரொம்ப டயர்டாயிருக்கும்னு நினைக்கிறேன். எதுக்கு இப்படி டிரெஸ் பண்ணிட்டு வரணும்.. இவ்ளோ கஷ்டப்படணும். ஆனாலும் நம்ம கேமிராமேன்கள் விடலையே.. ஜூம் பண்ணி எடுத்திருக்காங்க.. நெட்ல தேடிப் பாருங்க.. கிடைக்குது..!

சலவ்ப திரைப்பட விழா

சரண்யா லவ் பரத் இதுதான் படத்தோட கதை. இதைத்தான் சுருக்கமா இப்படி வைச்சிருக்காங்களாம்..! ஒரே நேரத்துல தமிழ், தெலுங்குல படம் தயாராகுது. 15 வருஷம் கழிச்சு இந்தப் படத்துல அமர்க்களமா ஒரு கேரக்டர் ரோல் செஞ்சிருக்காரு நடிகை பிந்துகோஷ். கொஞ்சம் எடையெல்லாம் குறைச்சிருக்காரு..! 15 கிலோ சதையை வெட்டி எடுத்தாங்களாம்.. 3 தடவை ஆபரேஷன் பண்ணிக்கிட்டாராம்.. இன்னும் நிறைய நடிக்கணும் ஸார் என்றார் ஆசையோடு..!


படத்தின் தயாரிப்பாளர், இயக்குநர், ஹீரோ, ஹீரோயின் யாருக்குமே தமிழ் தெரியாது.. அத்தனை பிரஸ்காரங்களும் தலையைப் பிய்ச்சுக்கிட்டாங்க. இதை எப்படி நாங்க டிவில போடுறது என்று அங்கலாய்த்தார்கள். அத்தனை பேருக்கும் சேர்த்து பி.ஆர்.ஓ. யூனியன் தலைவரும், தயாரிப்பாளருமான விஜயமுரளி மேடையில் தனது பேச்சில் அசத்திவிட்டார்..!

எந்த மேடையில் பேசினாலும் ஒரு கதை சொல்லாமல் முடிக்கமாட்டார்  அண்ணன் விஜயமுரளி. இங்கேயும் ஒரு கதையைச் சொன்னார். 

"பிரம்மன் ஒரு தடவை அடுத்த பிறவில என்னவாகப் பிறக்கப் போகிறீர்கள்ன்னு சொல்லுங்க.. அது மாதிரியே பிறக்க வைக்கிறேன்னு மக்கள்கிட்ட சொன்னாராம்.. ஒருத்தன் மட்டும் ஒரு வாரம் டைம் கேட்டு “பூகோளம் போயி நல்லா சுத்திப் பார்த்திட்டு வந்து சொல்றேன்”னு சொன்னானாம். பிரம்மாவும் சரின்னு சொல்ல ஒரு வாரம் கழிச்சு வந்து அந்த ஆளு, “நான் பூலோகத்துல தமிழ்நாட்டுல ஒரு சினிமா கதாநாயகனாத்தான் பொறக்கணும்”னு பிரம்மாகிட்ட கேட்டானாம்.. எதுக்குடான்னு பிரம்மன் கேட்டதுக்கு, “தமிழ்நாட்டுல சினிமா கதாநாயகன்கள்தான் ரொம்ப நிம்மதியா இருக்காங்க.. அவங்களுக்கு ஒரு பிரச்சினையும் இல்லை. எல்லா செலவும் தயாரிப்பாளர்களுடையதுதான்.. போடுற ஜட்டில இருந்து சாப்பாடு, கார்ன்னு எல்லாத்தையும் தயாரிப்பாளர்களே செஞ்சுர்றாங்க.. அவங்கதான் அங்க ஹேப்பியா இருக்காங்க. அதுனால அது மாதிரி என்னை பண்ணிடுங்க”ன்னு சொன்னானாம்..! அது மாதிரி சினிமா துறைல தயாரிப்பாளர்களைத் தவிர மத்தவங்க எல்லாம் நல்லாத்தான் இருக்காங்க.." என்றார்.

- இப்படி ஒரு கதையை பெரிய நடிகர்கள் இருக்குற மேடைல, அதுலேயும் தமிழ் நடிகர்கள் இருக்குற மேடைல சொன்னா என்ன ஆகும்..? 

பாட்ஷா ஹிந்திக்கு போகுதாம்..!

இத்தனை வருஷம் கழிச்சு இப்போ ஏன் பாட்ஷா படத்தை இந்திக்குக் கொண்டு போகணும்ன்னு தெரியலை..! சத்யா மூவிஸ் சும்மாவே இருக்கிறதாலே ஏதாவது காசாவது கிடைக்குதேன்னு ரைட்ஸை தூக்கிக் கொடுத்துட்டாங்களோன்னு தோணுது. இதுக்குப் பதிலா அவங்களே இந்த வேலையைச் செஞ்சிருக்கலாம்..!

கரெக்ட்டா பேட்டி எடுக்கத் துவங்கியபோது பிரசாத் ஸ்டூடியோ வாசலில் ரஜினி ரசிகர்கள் தெளஸண்ட் வாலா வெடியை போட்டு அமர்க்களப்படுத்திவிட்டார்கள். தயாரிப்பாளர் ரொம்ப விவரமாத்தான் இருக்காரு போலிருக்கு..! ஹிந்தியில் பாஷா என்ற பெயரில் ரிலீஸாகுதாம்..! 


இப்போ இருக்குற நிலைமைக்கேத்தாப்புல கலர் கரெக்ஷன் செஞ்சிருக்காங்க. தேவா திரும்பவும் புதுசா இசையமைச்சு அதனை ஸ்டீரியோபோனிக் மெத்தட்ல அமைச்சிருக்காங்களாம்..! நிறைய  செலவு பண்ணியிருக்கிறதா தயாரிப்பாளர் சொன்னாரு..! படத்தையும் போட்டுக் காட்டினாங்க.. ரஜினிக்கு டப்பிங் பேசினவரு வாய்ஸ்தான் கொஞ்சம் சரியில்லாத மாதிரியிருந்ததா முழு படத்தையும் பார்த்தவங்க சொன்னாங்க..! எனக்கு என்னமோ.. தமிழ்லேயே இந்தப் படத்தை பிடிக்கவே இல்லை. ஏன்னுதான் தெரியலை..!

11 comments:

G.Ganapathi said...

எனக்கு என்னமோ.. தமிழ்லேயே இந்தப் படத்தை பிடிக்கவே இல்லை. ஏன்னுதான் தெரியலை..!

அதேதான்னா ஆனா பொதுபுத்தி பெரிய மாயையை உண்டுபண்ணி வச்சு இருக்கே

ஸ்ரீராம். said...

'அழகே நீ பேரழகு' பாடலும் அப்படியே ஹிந்திக்குப் போகுதா....அது எழுபதுகளில் வெளியான 'கேரவன்' படத்திலிருந்து (தில்பர்...தில்பர்..) சுட்டதாச்சே....கேக்க மாட்டாங்களோ...! (என்னதான் ஆர் டி பர்மன் செத்துப் போயட்டாருன்னாலும் மத்தவங்க இருக்காங்களே!)

உண்மைத்தமிழன் said...

[[[G.Ganapathi said...

எனக்கு என்னமோ.. தமிழ்லேயே இந்தப் படத்தை பிடிக்கவே இல்லை. ஏன்னுதான் தெரியலை..!]]

அதேதான்னா ஆனா பொது புத்தி பெரிய மாயையை உண்டு பண்ணி வச்சு இருக்கே.]]]

எனக்குப் பிடிச்சது அண்ணாமலை.. படையப்பாதான்.. சந்திரமுகிகூட சுத்தமா பிடிக்கலை..! சிவாஜி ஓகே.. எந்திரன் டபுள் ஓகே.. ஆனா இதுதான் என்னவோ தெரியலை.. மனசுக்குள்ள நிக்கவே மாட்டேங்குது..! ஆனால் மத்த எல்லாருமே இதைத்தான் ஆஹா.. ஓஹோன்றாங்க..!

உண்மைத்தமிழன் said...

[[[ஸ்ரீராம். said...

'அழகே நீ பேரழகு' பாடலும் அப்படியே ஹிந்திக்குப் போகுதா. அது எழுபதுகளில் வெளியான 'கேரவன்' படத்திலிருந்து (தில்பர் தில்பர்) சுட்டதாச்சே. கேக்க மாட்டாங்களோ!

(என்னதான் ஆர் டி பர்மன் செத்துப் போயட்டாருன்னாலும் மத்தவங்க இருக்காங்களே!)]]]

ஓ.. இப்படியொரு கதை இருக்குதா..? இன்னிவரைக்கும் எனக்குத் தெரியாதே..?

ஸ்ரீகாந்த் said...

////எனக்கு என்னமோ.. தமிழ்லேயே இந்தப் படத்தை பிடிக்கவே இல்லை. ஏன்னுதான் தெரியலை..!///////
இது நீங்க சொன்னது....ஏன்னு தெரியாத ஒரு விஷயமா இருந்த "பிடிச்சிருக்கு" இல்ல " பிடிக்கல" என்று சொல்லவே முடியாது.....நீங்கதான் தெளிவா பிடிக்கவேஇல்ல சொல்றீங்க ...முரணே உன் பெயர் தான் "உண்மை தமிழனா?"

Krishnakumar said...

Baadsha is already a copy of Amitabh's Hum. The story line is the same but some changes were made in tamil. In Hum Rajini would have acted as the younger brother of amitabh.

உண்மைத்தமிழன் said...

[[[ஸ்ரீகாந்த் said...

//எனக்கு என்னமோ.. தமிழ்லேயே இந்தப் படத்தை பிடிக்கவே இல்லை. ஏன்னுதான் தெரியலை..!//

இது நீங்க சொன்னது.

ஏன்னு தெரியாத ஒரு விஷயமா இருந்த "பிடிச்சிருக்கு" இல்ல "பிடிக்கல" என்று சொல்லவே முடியாது. நீங்கதான் தெளிவா பிடிக்கவே இல்லன்னு சொல்றீங்களே.? முரணே உன் பெயர்தான் "உண்மைதமிழனா?"]]]

காரணம் தெரியாமலேயே சில படங்கள் பிடிக்காமல் போகக் கூடும். அதன் பாதிப்பு மனதில் ஒட்டவில்லை என்பதுதான் இதற்கான அர்த்தம்..!

உண்மைத்தமிழன் said...

[[[Krishnakumar said...

Baadsha is already a copy of Amitabh's Hum. The story line is the same but some changes were made in tamil. In Hum Rajini would have acted as the younger brother of amitabh.]]]

ம்.. தெரிந்து கொண்டேன் நண்பரே.. நன்றி..!

pichaikaaran said...

ஆனாலும் நம்ம கேமிராமேன்கள் விடலையே.. ஜூம் பண்ணி எடுத்திருக்காங்க.. "

லிங்க் கொடுங்கண்ணே

உண்மைத்தமிழன் said...

[[[பார்வையாளன் said...

ஆனாலும் நம்ம கேமிராமேன்கள் விடலையே.. ஜூம் பண்ணி எடுத்திருக்காங்க.. "

லிங்க் கொடுங்கண்ணே..]]]]

மனுஷ்யபுத்திரனை மட்டும் தோண்டு, தோண்டுன்னு தோண்டுறீல்ல..! இதையும் அப்படியே தோண்டி எடுத்து பார்த்துக்க..!

மஹா said...

மக்கள் உரிமை மையம் என்ற நமது இயக்கம் மக்களுக்காக, மக்களின் அடிப்படை உரிமைகளைக் காப்பதற்காக தோற்றுவிக்கப்பட்ட ஓர் இயக்கம். உணவு, உடை, உறைவிடம், கல்வி மற்றும் மருத்துவம் இவைகளே ஒரு மனிதனின் வாழ்வாதாரமாக, அடிப்படை உரிமைகளாக இன்று அனைத்து உலக நாடுகளாலும் ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறது.

மக்களின் வாழ்வாதாரமாக விளங்கும் இத்தகைய அடிப்படை உரிமைகள் இன்று அனைத்து தரப்பு மக்களுக்கும், அவர்கள் எந்த சாதி, மத, இன,மொழியினை சார்ந்தவர்களாயினும் மறுக்கப்படுகின்றது. மேலும் மக்களுக்கான அடிப்படை உரிமைகள் அனைத்தும் இன்று வர்த்தகமாக மாறி விட்ட சூழலில் அவை தரம் குன்றிய நிலையிலோ அல்லது பொருள் படைத்தவர்களுக்கு மட்டும் என்ற நிலையிலோ தான் அவர்களை சென்றடைகிறது.

கலப்படம் மிகுந்த உணவுப்பொருட்கள், சுகாதரமற்ற சுற்றுப்புறம், எதிர்கால வாழ்விற்கு உதவாத கல்விமுறை, புதிய நோய்களை உருவாக்கும் மருத்துவமுறை இவைகளாலும், இது தொடர்பான துறைகளில் ஈடுபட்டுப் பொருளீட்டுவதையே குறிக்கோளாகக் கொண்ட சுயநல கூட்டங்களாலும் மக்கள் இன்று பெரும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர்.

பல்வேறு வழிகளிலும், தங்களுக்குப் பாதிப்புகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் இத்தகைய சுயநலவாதிகளை எதிர்த்துப் போராட இயலாத வாழ்க்கைச் சூழ்நிலைகளிலும், போராட வேண்டும் என்ற எண்ணம் சிறிதும் இல்லாத நிலையிலும் தான் இன்று நம் மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.

மக்கள் தங்களுக்கு இருக்கும் அடிப்படை உரிமைகளைப் பற்றியும், அவற்றை தரமான வகையிலே பெறுவதற்கு வழிவகை செய்யும் சட்டங்கள் பற்றியும், அவற்றில் குறைகள் இருப்பின் அக்குறைகளைக் களைவதற்காக மேற்கொள்ளப்பட வேண்டிய சட்ட நடவடிக்கைகள் பற்றியும் அறியாமலிருப்பதே இந்நிலை தொடர்ந்து கொண்டிருப்பதற்கான காரணங்களாகும்.

மக்களுக்கான அனைத்து அடிப்படை வசதிகளையும், அடிப்படைத் தேவைகளையும் பூர்த்தி செய்து தர வேண்டிய கடமையை மேற்கொண்டிருக்கும் அரசு நிர்வாகமும், ஆட்சி நிர்வாகமும் இந்த அவல நிலையை மாற்றுவதற்குப் பதிலாக, தம்மை மக்களின் எசமானர்களாகக் கருதிக்கொண்டு, அவர்கள் மீது தம்முடைய அதிகார பலத்தைப் பிரயோகப்படுத்துவதும், எங்கும் விதிமீறல் எதிலும் லஞ்சம் என மக்களைப் பெரும் துன்பத்திற்கு ஆளாக்குகின்றனர்.

இவ்வாறாக பாதிக்கப்பட்டிருக்கும் மக்களுக்கு, தங்களின் நிலையினைப் பற்றியும், தம் நாட்டின் நிலையினைப் பற்றியும் விளக்க வேண்டிய, விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டிய செய்தித்துறையும், ஊடகத்துறையும் செயலிழந்த நிலையில் உள்ளன.

ஒவ்வொரு நாளும் நடக்கும் நிகழ்வுகளை, ஒரு செய்தியாக தருவதோடு செய்தித்துறை தன்னுடைய வேலையை நிறுத்திக் கொள்கின்றது. மேலும் தனிநபருக்கோ, ஒரு அமைப்பிற்கோ அல்லது ஒரு அரசியல் கட்சித் தலைமைக்கோ ஆதரவாக செய்திகளை வெளியிட்டு, நிகழ்வுகளின் உண்மைத் தன்மையை சீர்குலைத்து ஒருதலைப்பட்சமாக நடந்து கொள்கின்றது.

இது போன்றே திரைத்துறையும், நல்ல பல முற்போக்கு கருத்துகளையும்,நம் முன்னோர்களின் நாகரிகம் மிகுந்த, பண்பு மிகுந்த வாழ்க்கை முறைகளையும் நம் கண் முன்னே காட்சிகளாக கொடுத்துக் கொண்டிருந்த தன் உயர்ந்த நிலையினின்று மாறி, இன்று வெறும் காதல், வன்முறை, ஆபாசம் மற்றும் அர்த்தமற்ற நகைச்சுவை என இவற்றை மட்டும் கொண்டு, நம் இளைஞர் சமுதாயத்தை நல்ல சிந்தனைகளிலிருந்தும், நற் செயல்களிலிருந்தும் விலக்கி அவர்களுக்கு ஒரு தவறான பாதையைக் காட்டி கெடுத்துக் கொண்டிருக்கின்றது.

சீரழிவான நிலையை நோக்கிச் சென்று கொண்டிருக்கும் நம் நாட்டைச் சீர்படுத்தவும், பல்வேறு வகைகளில் பாதிக்கப்பட்டிருக்கும் நம் நாட்டு மக்களைப் பாதுகாக்கவும், அவர்களை அந்நிலையிலிருந்து மீட்டெடுக்கவும், அவர்களுக்குப் போதிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும் நாம் அனைவரும் சாதி, மத, இன, மொழி என எந்த விதமான பாகுபாடுகளுமின்றி ஓரணியில் திரண்டு, பாதிக்கப்பட்டவர்க்குத் தகுந்த நியாயம் கிடைக்கவும், பாதிப்பை ஏற்படுத்தும் கயவர்களுக்குத் தகுந்த தண்டனை கிடைக்கவும் சட்டத்தை துணையாகக் கொண்டு, நியாயமான வழியில் செயல்படவேண்டியது அவசியமாகின்றது.

இத்தகைய அவசியமான சூழ்நிலையில், இதனையே தன்னுடைய உயரிய நோக்கமாகக் கொண்டு, மக்கள் உரிமை மையமும் அதனுடைய தோழமை இயக்கமான உட்டோபியன் சட்ட மையமும் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன.

இவ்விரு இயக்கங்களிலும் மருத்துவர்கள்,வழக்கறிஞர்கள்,மாணவர்கள்,இளைஞர்கள்,அரசு மற்றும் தனியார் துறைகளில் பணிபுரிபவர்கள் என சமுதாயத்தின் அனைத்து தரப்பினரும், தங்களால் இயன்ற வகையில், இணைந்து பணியாற்றி வருகின்றனர்.

தோழமை இயக்கங்களான மக்கள் உரிமை மையமும், உட்டோபியன் சட்ட மையமும் தனித்துச் செயல்படுவதோடு நில்லாமல், மக்களுக்குத் தன்னலமற்ற வகையிலே சேவை செய்வதை மட்டுமே நோக்கமாகக் கொண்டு செயல்படும் தொண்டு நிறுவனங்கள், அறக்கட்டளைகள் மற்றும் இதர அமைப்புகள் இவற்றோடு இணைந்தும் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றது.
for readmore www.fcrights.in